முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஈழத் தமிழருக்காக விடுதலைச் சிறுத்தைகள் போராடுவதை விரும்பாத சக்திகள் - திருமா பேட்டி இரண்டாம் பாகம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 23
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 09:56
 

 

சவுக்கு : தலித் ஒருங்கிணைப்பு தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதை சாத்தியப் படுத்துமா, அல்லது தமிழ் தேசிய அரசியல் சாத்தியப் படுத்துமா ?

 DSC_6640

தமிழ்தேசிய அரசியல் என்பது தலித் வளையத்தை தாண்டியுள்ள ஜனநாயக சக்திகளையும் வென்றெடுப்பதற்கான அரசியலாகும். தலித்துகள் தலித்துகளுக்காக மட்டுமே குரல் கொடுத்தால், தலித்துகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுகிற போக்கு வலுவடைந்து விடும்.  ஏற்கனவே தலித்துகள் தனிமைப் பட்டுள்ளார்கள்.  இந்நிலையில் தலித்துகள், தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான போராட்டங்கள் என பரந்த அளவில் போராட்டங்களை நடத்தவில்லை என்றால் ஜனநாயக சக்திகளை அணி திரட்டவும் முடியாது; வென்றெடுக்கவும் முடியாது.  அதாவது, தலித் அரசியலை புரிந்து அதனை ஏற்றுக் கொள்கிற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து முன் செல்ல வேண்டும்.   ஆகவேதான், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் தேசிய அரசியலையும், சாதி ஒழிப்பையும் இணையாக முன்னெடுத்துச் செல்கிறது.

 

சவுக்கு : புதிதாக தொடங்கிய கட்சிகள் தங்களின் வளர்ச்சியில் சந்திக்கும் பிரச்சினைகளை விட, உங்களைப் போன்ற தலித் கட்சிகள் சந்திக்கும் பிரச்சினைகள் சற்று அதிகமாகவே இருப்பதாக தோன்றுகிறது.   தலித் கட்சிகள் வலுவான அரசியல் சக்தியாக காலூன்ற முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள் ?

 

திருமா :   தலித் அடையாளமுள்ள கட்சிகள், தலித்துகளுக்காகவும் போராடுகிறது. பிற பிரச்சினைகளுக்காகவும் போராடுகிறது. மற்ற கட்சிகள் தலித் பிரச்சினைகளுக்காக போராட வேண்டியதில்லை என்று நினைக்கின்றன. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தலித்துகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.  அது பிஜேபியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, திராவிடக் கட்சிகளாக இருந்தாலும் சரி, அதிலிருந்து உடைந்து சிதறி உருவான கட்சிகளாக இருந்தாலும் சரி, நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவாக இருந்தாலும் சரி.  அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், தலித் மக்களின் பிரச்சினைகளைப் பேசி சாதி இந்துக்களின் பகையை ஏன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு என்ன நிலைமை என்றால், நாங்கள் பரமக்குடிக்காகவும் போராடுகிறோம், ஈழத் தமிழர்க ளுக்காகவும் போராடுகிறோம், முஸ்லீம்களுக்காகவும் போராடுகிறோம், கிறித்துவர்களுக்காகவும்   போராடுகிறோம், மூவர் தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் போராடுகிறோம்.  இப்படி எல்லா களங்களிலும் நிற்கும் எமக்கு, கூடுதல் சுமை ஏற்படுகிறது.

 

மேலும், தலித் அல்லாதவர்கள் யார் கட்சி தொடங்கினாலும் அவர்கள் எங்கே எப்போது வேண்டுமானாலும் கிளை தொடங்க முடியும், சுதந்திரமாக சென்று பிரச்சாரம் செய்ய முடியும். எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் கருத்து சொல்ல முடியும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு சாதாரணமாக ஒரு ஊருக்குச் சென்று கொடியேற்றுவதே கூட யுத்தம் தான். பொதுப் பிரச்சினைகளை கையில் எடுத்தால் கூட அதுவும் பிரச்சினை தான். அண்மையில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நாங்கள் வத்தலகுண்டிலிருந்து கம்பம் வரை ஊர்திப் பயணம் மேற்கொண்டோம். கம்பத்தில் எங்கள் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு சாதியவாதிகள் கல்லால் அடித்தார்கள். அவர்களுக்காவும்தான் நாங்கள் முல்லைப் பெரியாறுக்காக போராடுகிறோம் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல.  நீ யார் இந்தப் பிரச்சினைக்காக குரல் கொடுக்க  என்பதுதான் அவர்களின் பார்வையாக இருக்கிறது. அதேபோல, அண்மையில் மன்னார்குடி அருகே, ஒரு தலித் பகுதியில் கொடியேற்றச் சென்றோம். கொடியேற்ற இருந்தது தலித் பகுதியாக இருந்தாலும், தலித் அல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு எங்கள் மீது கல்லெறிந்தனர். நாங்கள் திமுக கூட்டணியில் இருந்த போதும் அன்று எங்கள் மீது கல்லெறிந்தது திமுகவைச் சார்ந்த சாதியவாதிகள்தான்.

 

கடந்த 10,15 ஆண்டுகளில் பல கல்வீச்சு நிகழ்வுகள் நடந்துள்ளன. திட்டக்குடியில் கொடியேற்றச் சென்ற போது கல்லெறிந்ததோடு மட்டுமல்லாமல் இரண்டுபேரை படுகொலையும் செய்து விட்டனர். சேத்தியாத்தோப்பு, வந்தவாசி, உசிலம்பட்டி, கம்பம் போன்ற பல பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு சென்றபோதெல்லாம் கல்வீச்சு நடந்திருக்கிறது. மற்றும் அண்மையில் திருச்செந்தூர் அருகே முத்துக்குமார் சிலை திறக்கச் சென்ற போதும் இது போன்ற வன்முறைகளில் சாதியவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நெருக்கடி, தமிழகத்தில் தலித் அல்லாத தலைவர்கள் யாருக்கும் கிடையாது. ஆனால், தலித் தலைவராக இருப்பதனால் இந்தச் சிக்கல்களை நேரடியாக சந்திக்க வேண்டியிருக்கிறது. அரசியல் ரீதியான வேறுபாடுகள் மற்ற கட்சிகளுக்கிடையே இருந்தாலும், இது போன்ற அடிப்படையான சிக்கல்களை அவர்கள் சந்திப்பதில்லை. எல்லா கட்சிக் கொடிகளும் ஒரு இடத்தில் இருந்தாலும், தலித்துகளின் கட்சிக் கொடியை அதே இடத்தில் ஏற்றுவதற்கு சில நேரங்களில் பெரிய யுத்தமே நடத்த வேண்டியிருக்கிறது. பல இடங்களில், விடுதலைச் சிறுத்தைகள் கொடி ஏற்றக் கூடாது என்பதற்காக, தங்கள் கட்சிக் கொடிகளைக் கூட அகற்றும் அளவுக்கு சாதி வெறி பரவிக் கிடக்கிறது. இது போன்ற சாதியச் சிக்கல்களையெல்லாம் எதிர் கொண்டுதான் நாங்கள் எல்லா தரப்பினருக்குமான போராட்டங்களையும் நடத்த வேண்டியிருக்கிறது.

 

சவுக்கு :  பொதுமக்கள் மத்தியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரில் பலர் கட்டப் பஞ்சாயத்து செய்வதில் ஈடுபடுகிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றாலே அது கட்டப்பஞ்சாயத்து கட்சி என்பதான ஒரு குற்றச்சாட்டு உள்ளது.  இதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

 

திருமா :  இது முழுக்க முழுக்க உள்நோக்கத்துடன் கூடிய எங்களுக்கு எதிரான பிரச்சாரமாகும்.  தங்களுக்கிடையில்  ஏற்படும் சின்னச் சின்ன சிக்கல்களை தீர்த்து வைக்கும் பொருட்டு பொதுமக்கள் அரசியல் கட்சித் தலைவர்களை அணுகுவது இயல்பு.  இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். வீட்டு வாடகை பிரச்சினை, கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாத பிரச்சினை. வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறோம் என்று ஏமாற்றும் பிரச்சினை  இவை போன்ற பல பிரச்சினைகள் உள்ளன.  இவற்றுக்காக காவல்துறையையும், பிற அதிகாரிகளையும் அணுகும் மக்கள், அங்கு தீர்வு கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் காரணத்தாலேயே அரசியல் கட்சியினரிடத்தில் புகார் தெரிவிக்கின்றனர்.  அவ்வாறு தங்களின் குறைகளை எடுத்து வரும் மக்களுக்குத் துணையாக செயல்படவேண்டியுள்ளது. இப்படி பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனாலேயே இதை கட்டப்பஞ்சாயத்து என்று சொல்லுகின்றனர்.  விடுதலைச்சிறுத்தைகள் கட்டப் பஞ்சாயத்துப்பேசி இத்தனை லட்சம் கொடு; இத்தனை கோடி கொடு என்று மிரட்டியதாக எங்காவது புகார் உண்டா ?  குற்றச் சாட்டு உண்டா ? இதற்கான சான்று உண்டா ?  கிடையவே கிடையாது! இவையெல்லாம் ஆதாரமில்லாத அவதூறுகள்!

 

நாங்கள் நன்கொடை கேட்கப் போனால் கூட அதிக பட்சம் 5 ஆயிரத்திற்கு மேல் கொடுத்ததில்லை.  ஆனால் பெரிய அரசியல் கட்சிகள் ஒரு தொலைபேசி மூலமே பல கோடிகளை எளிதாக வசூல் செய்து விட முடிகிறது. நாங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நன்கொடை கேட்டு துண்டறிக்கை கொடுத்தாலே, விடுதலை சிறுத்தைகள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள், பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என்று அவதூறு பரப்புகிறார்கள்.  இதை நான் வன்மையாக மறுக்கிறேன்.

 

சவுக்கு  : சென்னையில் 25 வயது இளைஞர் திருநாவுக்கரசை சுட்டுக் கொன்று, காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு தற்போது இலங்கையில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவோடு விருந்துண்டதை உலகத் தமிழர்கள் ரசிக்கவில்லை.  இதற்கு என்ன கூறுகிறீர்கள்.

 

திருமா : (கோபத்துடன்) இது முட்டாள் தனமான கேள்வி மட்டுமல்ல.  விஷமத்தனமான கேள்வியும் கூட. இந்த அவதூறுகளை திட்டமிட்டே சிலர் பரப்புகின்றனர். டக்ளஸ் தேவானந்தோவோடு அப்படி யாருமே விருந்து சாப்பிடவில்லை. நாங்கள் அங்கே தங்கியிருந்த 3 நாட்களும், எங்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்தது அமைச்சர் ஆறுமுகத் தொண்டைமான் தான். அவர் மலையகத்தமிழர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு கட்சியின் தலைவர்.

 Thol.Thirumavalavan_-_9

நாங்கள் வன்னியில் முள்வேலி முகாமை பார்வையிட்ட பின்னர், ”நமக்கு யாழ்பாணத்தில் தான் மதிய உணவு. அங்கே டக்ளஸ் தேவானந்தா உணவு ஏற்பாடு செய்துள்ளார்” என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.  நான் உடனே எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு அங்கே இருந்த அத்தனை பேரும் சாட்சி. டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்திருக்கும் உணவு நமக்கு தேவையில்லை. நாம் கொழும்பு திரும்பியதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்தேன். அதற்கு டி.ஆர்.பாலுவும் உடனே ஒப்புக்கொண்டார்.

 Indian-MPs4_1

நாங்கள் யாழ்ப்பாணம் சென்று இறங்கியதும் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்களும் எங்களை வரவேற்றனர். தந்தை செல்வநாயகத்தின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் வரவேற்க காத்திருந்த மக்களைச் சந்தித்தோம். அங்கிருந்து யாழ் நூலகம் சென்றோம். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, மேடையில் டி.ஆர்.பாலுவின் வலது பக்கத்தில் கனிமொழியும், கனிமொழியின் வலது பக்கத்தில் நானும் அமர்ந்தோம். டி.ஆர்.பாலுவுக்கு இடது பக்கத்தில் டக்ளஸ் தேவானந்தா அமர்ந்திருந்தார். அப்போது நான் அவரை பார்க்கக் கூட இல்லை. சிறிது நேரத்திற்கு பின் டி.ஆர்.பாலு ஒரு அறிவிப்பு செய்வதற்காக எழுந்து ஓரமாக இருந்த ஒலி பெருக்கியின் முன்பு சென்று விட்டார். உடனே, டி.ஆர்.பாலு அமர்ந்திருந்த நாற்காலியில் டக்ளஸ் தேவானந்தா வந்து அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் கனிமொழியும் எழுந்து ஒலி பெருக்கியின் அருகே போனதும் அவர் அமர்ந்திருந்த இடத்தில் டக்ளஸ் தள்ளி வந்து அமர்ந்து கொண்டார். அப்படித்தான் அவர் என் அருகில் வந்து அமர நேர்ந்தது.  என் அருகே உட்கார்ந்ததும் என்னிடம் அவர் சொன்ன வார்த்தைகள் என்னவென்றால் “என் மேல் உங்களுக்கு வருத்தம் இருக்கலாம், கோபம் இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் தீவிர புலி ஆதரவாளர்.” என்பதே. அதற்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. மேலும், “இன்று மாலை நான் கொழும்பு வந்தால் உங்களை சந்திக்க முடியுமா ?”   என்றும் கேட்டார்.  நான் கொழும்பில் என்ன நிகழ்ச்சிகள் உள்ளன என்பது எனக்கு தெரியாது; நீங்கள் டி.ஆர்.பாலுவிடம் கேளுங்கள்  என்று சொன்னேன் பிறகு அவர் அவருடைய இடத்துக்கு சென்று விட்டார். டி.ஆர்.பாலுவும் கனிமொழியும் அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டார்கள். இதுதான் நடந்தது. தேவானந்தாவோடு நாங்கள் தேநீரும் குடிக்கவில்லை, உணவும் உண்ணவில்லை. ஆனால் இந்த உண்மை தெரிந்திருந்தும் சில விஷமிகள், வேண்டுமென்றே, அவதூறு பரப்புகிறார்கள்.

 

சவுக்கு : இது போன்ற பிரச்சாரங்களை உங்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடுவதில் இலங்கைத் தூதரகத்தின் பங்கு இருப்பதாக நினைக்கிறீர்களா ?

 

திருமா : (கோபத்துடன்) தமிழ்நாட்டில் உள்ள தமிழனே இந்த அவதூறான பிரச்சாரத்தை செய்யும் போது, நம் எதிரிகளைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும் ? தமிழ் ஈழத்தைப் பற்றி பேசும் தமிழ்நாட்டு தமிழர்கள் இந்த பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டே பரப்புகிறார்கள். ஈழத் தமிழருக்காக நான் குரல் கொடுப்பதை விரும்பாத கும்பல் தான் இதைப் பேசுகிறது.

 

தொடரும்

 

Comments  

 
-2 #26 மாவீரன் 2011-11-07 20:11
ஏன்டா மதி நீ உன்மைய்லே நீ ஒரு தமிலனுக்கு பிரக்கவில்லனு உருதி பன்னிட்ட டா .... நீ தமில் நாட்டுலதான் இருக்கியா? உனக்கு ஏன்ட புத்தி இப்படி இருக்கு...........
Quote
 
 
+6 #25 Mathi 2011-11-05 11:19
[ஃஉஒடெ நமெ="பாமரன்"]ஐயோ... இவரது போலி வீர பேச்சை கேட்டால் பாயும் புலி கூட பதுங்கி பால் குடிக்க ஆரம்பித்துவிடும ். கொங்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி தாளாளர் மகளுக்கு ஒரு தலித் இளைஞர் கூட இருந்த காதலை உடைப்பதற்கு இவர் பஞ்சாயத்து செய்து எவளவு தொகை வாங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். இது மட்டும் உண்மை இல்லையென்று இவரை சொல்ல சொல்லுங்கள் பார்போம்........[/ஃஉஒடெ]
Quote
 
 
-2 #24 Mathi 2011-11-05 11:16
[ஃஉஒடெ நமெ="மாவீரன்"]ரஙரஜன். சரன் மதி தரனி ரமெஷ் .நீன்கல் ஒரு அப்பனுக்கு பிரந்து இருந்தியனா நீ இப்படி கேக்கமாட்ட[/ஃஉஒடெ]

பொட்ட நீ மாவீரனா? உன்னொட பெயரே உனக்கு தெரியலே. உன் அப்பாக்கலின் பெயர் உனக்கு கன்டிப்பா தெரியாது.
Quote
 
 
+1 #23 நடவரசு படையாட்சி 2011-11-05 10:18
திருமாவின் வளர்ச்சியும் எழுச்சியும் சாதி இந்துக்களை பயப்படுத்தி விஜயகாந்தையும் சீமானையும் பெரிய அளவில் பின்பற்றியதே அவர்களை வளரச்செய்தது, இவர் கட்சி தொண்டர்கள் செய்வது போன்று பெரிய விளம்பர பதாகைகள் வைக்கின்றனர், ஆனால் இவர் அளவு அறிவும் திறமையும் அவர்களுக்கு உண்டா என்பதை தமிழகம் சிந்திக்க வேண்டும்.முட்டாள்கள் களமான அரசியலில் அறிவுடையோர் சாதிக்க வாய்ப்பில்லை.
Quote
 
 
+2 #22 பாமரன் 2011-11-04 23:41
ஐயோ... இவரது போலி வீர பேச்சை கேட்டால் பாயும் புலி கூட பதுங்கி பால் குடிக்க ஆரம்பித்துவிடும ். கொங்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி தாளாளர் மகளுக்கு ஒரு தலித் இளைஞர் கூட இருந்த காதலை உடைப்பதற்கு இவர் பஞ்சாயத்து செய்து எவளவு தொகை வாங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். இது மட்டும் உண்மை இல்லையென்று இவரை சொல்ல சொல்லுங்கள் பார்போம்........
Quote
 
 
0 #21 மாவீரன் 2011-11-04 19:56
கும்புடுரென் சாமி நீ ஒரு தமிலர்கலின் இன துரொகி.....ன்
பட்டமரம் என்ரும் காய்க்கது
வீல்தது மரம் அல்ல விதைடா....
தமில் ஈழம் அமையும் அது தலைவர் பிரபாகரன் தலமையிலே அமையும் என்பது அனைத்து தமிலர்கலுகும் தெரியும்.
உன்னை போன்ர மாமா பயல்கலுக்கு தெரியாது........மாவீரன் கேட்பதர்க்கு பதில் வேன்டும்.....உன்மையான தமிலனுக்குத்தான ் பிரந்தியாடா?
Quote
 
 
-7 #20 கும்பிட்றேன் சாமி 2011-11-04 10:20
யாழ். அரியாலை பகுதியில் யுத்ததினால் மிகவும் வறுமை கோட்டிற்குள் உள்ள ஐந்து பெண் பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு சுமார் 4 லட்சம் பெறுமதியான வீடு ஒன்றை இராணுவத்தினர் இன்று கையளித்தனர். 51 வது படைப்பிரிவு இராணுவத் தளபதி ஏ.பி. விக்கிரம ரட்ணவினால் கணவனை இழந்த சிவகுமார் ரஞ்சிதமலர் என்ற குடும்ப தலைவியிடமே இவ்வீடு ஒப்படைக்கப்பட்ட து. இந்த நிகழ்வுக்கு 511 வது படைத்தளபதி லெப்ரினல் கேணல் ரணசிங்க, 512 வது படைத்தளபதி கேணல் வீரசூரிய, மற்றும் இராணுவ உயர்நிலை அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலர் எஸ். செந்தில் நந்தனன் மற்றும் மதத்தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சவுக்கு நீங்களும் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் , விரும்பினாலும் விரும்பாவிட்டால ும், மனித சமூகம் தனது வாழ்வியல் காரணிகளை தானே அமைத்துக்கொண்டு செயல்படும். முடிந்து போன, பிரபாகரனால் அழிக்கப்பட்ட ஈழ கனவு மீண்டும் துளிர் விடாது. அது பட்டமரம்.
அஙகு மீண்டும் மக்கள் சூழ்னிலைகேற்ப வாழ்கிறார்கள் சென்ற உண்மையை நீங்கள் வெளியிட வேண்டும்.
Quote
 
 
-1 #19 கும்பிட்றேன் சாமி 2011-11-04 10:12
Savukku you are a coward to face the other side of the opinion, if the point of discussion comes to the fascism of the Tigers. I have mentioned this Thirumavalavan's interview is a good one to know his side of the story, even if the Srilankan Tamils are responsible for the Mullivaaikkal.
Quote
 
 
+3 #18 vetry chin 2011-11-03 16:38
கேப்பைல நெய் வடியுதுடோய்!
Quote
 
 
+1 #17 RangarajanPG 2011-11-03 12:18
[ஃஉஒடெ நமெ="மாவீரன்"]ரஙரஜன். சரன் மதி தரனி ரமெஷ் .நீன்கல் ஒரு அப்பனுக்கு பிரந்து இருந்தியனா நீ இப்படி கேக்கமாட்ட[/ஃஉஒடெ]


Mr.MAAVEERAN. WHO ARE YOU TO TALK LIKE THIS. EVERYBODY HAS RIGHT TO VOICE THEIR VIEWS. TAKE BACK YOUR UGLY COMMENTS. MOREOVER, I AM PUTTING COMMENTS ON MY TRUE NAME WITH MY INITIAL. NOT LIKE YOU, HIDING BEHIND WITH A FAKE NAME.
Quote
 
 
-4 #16 மாவீரன் 2011-11-02 19:47
ரஙரஜன். சரன் மதி தரனி ரமெஷ் .நீன்கல் ஒரு அப்பனுக்கு பிரந்து இருந்தியனா நீ இப்படி கேக்கமாட்ட
Quote
 
 
+9 #15 sukave 2011-11-02 18:07
என்னைப் பொறுத்தவரை திருமா வெறும் குருமா தான். அவர் அடுத்த நகர்வுக்கு தயாராகாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட நினைக்கிறார். அது தவறு. தலித் அரசியல் செய்து, தலித்களுக்கு என்னத்தை கிளித்தார் திருமா எம்.பி?
Quote
 
 
-8 #14 sivaraj.p 2011-11-02 14:59
Quoting மெய்தேடி:
வினவு,

தன்னிலை விளக்கமாக ,திருமா பதில்கள் இருப்பதில் வியப்பில்லை .அரசியல் கட்சிகள் சிந்திக்கவேண்டு ம்.

தலித்(கற்பிக்கப ்பட்ட)ஒருவரின் அரசியலாளூமையை யெந்த மனித சமுதாயமும்
ஏற்க மறுத்திறுக்கும் கொடுமை ,அவரின் அரசியல் களத்தில் சந்தித்து யிருக்கிறார்.
உண்மையான தமிழர்கள் பாராட்டுவார்கள் .

"பொறுக்கி அரசியலில் பொதிசுமப்பதை விட
போராட்ட களத்தில் புழுதியாக இருப்பதே மேல்."
என்று நினைக்கிறேன்.

பாராளுமன்றத்தில ் அவரது ஈழ வுரையை வலை தளத்தில் பார்த்து வியந்தேன். 7 நிமிட நேரத்தில் ,காஙகிரசையும்,அ ரசையும் ,ராசபக்சேவையும் சாடிவிட்டார்.

சரியான் பதிவு.
---- மெய்தேடி

UNNAI POL SILAR ULLA THAAL THAAN NAM NAADU VEETHIYIL ULLATHU
Quote
 
 
+3 #13 sivaraj.p 2011-11-02 14:57
Quoting Harish:
சவுக்கு இப்படி சொல்லும் திருமா போர் முடிந்த பின்பு நடந்த தேர்தலில் காஂக்ரெஸ் தயவில் பெற்ற பதவியை என் ராஜீனமா செய்யவில்லை. அன்றே அவர் அப்படி செய்து இருந்தால் மக்கள் அவர் சொல்வதை இப்பொழுது ஏற்று கொள்வார்கள். ஈழம் என்ற வார்த்தையை கடந்த ஆட்சி காலத்தில் அவர்கள் அழித்த போது மௌனம் தானே சாதித்தார்?



AAMAAM POR NADANTHU KONDU IRRUNTHA POTHU EAN PATHAVIYAI RAJINAMA SEYYA VILLAI (NEENGAL RAJINAMA SEYYA VENDUM ENBATHU ENGAL ENNAM ILLAI) AANAL UNGAL ETHIRPPU VERUM NAADAGAM POL THAAN IRUNTHATHU
Quote
 
 
0 #12 sivaraj.p 2011-11-02 14:53
pechu vaarthai mp kkal kuluvil thirumaa iruntha pothu sri lanka's president raja bhakshe vidam poi sirithu konde pari porul petru vanthavan thaane thirumaa intha petty ellaam poli naadagam thaan itharkku maruppu therivikka mudiyathu ean endral video aatharam ullathu ivar thalith enbatharkkaga yaarum ethirkka villai :D
Quote
 
 
+4 #11 sonia gandhi 2011-11-02 11:25
How much share he got out of 2G from T.R.Balu and Sonia ? why is he not talking about that? selfish..
Quote
 
 
0 #10 tharani ramesh 2011-11-02 10:57
சவுக்கு இவரிடம் எதற்கு பேட்டி அந்தநேரத்தை வீனாக்காமல் நீ ஏதாவது சனலில் காமடி சீன் பார்திருக்கெல்ல ாம்ல
Quote
 
 
-1 #9 conscience 2011-11-01 16:32
http://www.whispersintamilnadu.com/2011/10/tamil-nadu-to-get-new-public-prosecutor.html
Quote
 
 
-3 #8 மெய்தேடி 2011-11-01 13:57
வினவு,

தன்னிலை விளக்கமாக ,திருமா பதில்கள் இருப்பதில் வியப்பில்லை .அரசியல் கட்சிகள் சிந்திக்கவேண்டு ம்.

தலித்(கற்பிக்கப ்பட்ட)ஒருவரின் அரசியலாளூமையை யெந்த மனித சமுதாயமும்
ஏற்க மறுத்திறுக்கும் கொடுமை ,அவரின் அரசியல் களத்தில் சந்தித்து யிருக்கிறார்.
உண்மையான தமிழர்கள் பாராட்டுவார்கள் .

"பொறுக்கி அரசியலில் பொதிசுமப்பதை விட
போராட்ட களத்தில் புழுதியாக இருப்பதே மேல்."
என்று நினைக்கிறேன்.

பாராளுமன்றத்தில ் அவரது ஈழ வுரையை வலை தளத்தில் பார்த்து வியந்தேன். 7 நிமிட நேரத்தில் ,காஙகிரசையும்,அ ரசையும் ,ராசபக்சேவையும் சாடிவிட்டார்.

சரியான் பதிவு.
---- மெய்தேடி
Quote
 
 
+8 #7 k krishnan 2011-11-01 13:54
இவர் சத்தம் பொடும் அளவிற்கு இவரது கட்சி வளரவில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம்.
Quote
 
 
+20 #6 RangarajanPG 2011-11-01 13:35
SAVUKKU, PLEASE STOP THIS NONSENSE INTERVIEW WITH THIS PERSON. YOU, ME AND EVERYONE KNOW THAT HE IS NOT A GOOD PERSON. WHY THIS MUCH IMPORTANCE TO HIM. ALL HE REVEAL WOULD BE UNDOUBTEDLY A LIE ONLY.
Quote
 
 
+23 #5 MATHI 2011-11-01 13:01
சவுக்குக்கு வேரு யாருமே கிடைக்கவில்லையா ? இந்த ஆலுக்கெல்லாம் பேட்டி ஒரு கேடா? சொல்வதெல்லாம் பொய் பொய் பொய்!
Quote
 
 
+18 #4 நாளையதமிழகம் செய்வோம 2011-11-01 12:55
உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்தே தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள ார் ஜெயலலிதா: தமிழருவி மணியன் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்தே பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது அம்பலமாகி இருப்பதாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். தற்போது அரசின் கபட நாடகம் வெளிவந்துவிட்டத ு ...என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஒட்டுமொத்த தமிழகத்து மக்களின் ஒற்றை உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த ஜெயலலிதா, இன்று அந்த மக்களுடைய உணர்வுகளுக்கு மாறாக, இவர்களுடைய மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்த ுக்கு போய் தன் அரசு மூலமாக வாதங்களை வைத்திருக்கிறார ே, இது எந்த வகையில் நியாயம். வரவிருக்கக்கூடி ய உள்ளாட்சித் தேர்தலில் மோசமான தோல்வியை நாம் சந்திக்க நேரும் என்று நினைத்து,. உள்ளாட்சித் தேர்தலை முன்வைத்து தான் இந்த இன உணர்வாளர்களை ஏமாற்றுவதற்கு ஜெயலலிதா ஒரு திட்டமிட்ட நாடகத்தை நடத்தி இருக்கிறார் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா எப்போதும் தமிழனின் எதிரி என தெலிவாக தெரிகிரது.
Quote
 
 
+25 #3 Harish 2011-11-01 12:23
சவுக்கு இப்படி சொல்லும் திருமா போர் முடிந்த பின்பு நடந்த தேர்தலில் காஂக்ரெஸ் தயவில் பெற்ற பதவியை என் ராஜீனமா செய்யவில்லை. அன்றே அவர் அப்படி செய்து இருந்தால் மக்கள் அவர் சொல்வதை இப்பொழுது ஏற்று கொள்வார்கள். ஈழம் என்ற வார்த்தையை கடந்த ஆட்சி காலத்தில் அவர்கள் அழித்த போது மௌனம் தானே சாதித்தார்?
Quote
 
 
0 #2 kadugon 2011-11-01 11:54
திருமாவலவனுக்கு தலிடித்த்க்கன வரயரை யென்ன?
Quote
 
 
+5 #1 Saran 2011-11-01 10:26
Waste of Time!! :@
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 39 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2200
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week44927
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month247659
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12769778