|
நாளைய திமுகவின் தவிர்க்க முடியாத சக்தி - கனிமொழி. இப்படி நாம் சொல்லவில்லை. ஜுனியர் விகடன் சொல்கிறது.
இன்று ஜுனியர் விகடனில் வெளி வந்துள்ள கட்டுரையைப் படித்தால் படித்தோர் நெஞ்சம் உருகும். மனமிரங்கும். கண்கள் இரண்டும் குளமாகும்.
அப்படிப்பட்ட கட்டுரையை எழுதியவர் ஜுனியர் விகடனில் பணியாற்றும் இரா.சரவணன் என்கிற தலைமை நிருபர்.
இந்த இரா.சரவணனைப் பற்றி சவுக்கில் “எட்டு ரூபாய்க்கு எண்பது பொய்கள்” என்றும், “பட்டுக்கோட்டையிலிருந்து இரா.சரவணன்” என்றும் இரண்டு கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறது.
23.10.2011 ஜுனியர் விகடன் இதழில், “திகார் திகில் வாழ்க்கை” டெல்லியிலிருந்து ஜுவி நேரடி ரிப்போர்ட் என்ற தலைப்பில், கனிமொழியின் கண்ணீர் கதை இரண்டு வாரத் தொடராக வெளி வந்தது. இரண்டாவது பகுதியின் முடிவில்,
“சிறை வேதனைகளைத் தாண்டி சீக்கிரமே வெளியே வர இருப்பவர், அரசியலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்? 'இனி எதுவுமே வேண்டாம்; ஒதுங்கி இருத்தலே நலம்’ என முடங்கப்போகிறாரா? எதையும் கடந்துவிட்ட நெஞ்சுரத்தோடு அரசியலில் நீடிப்பாரா? - தி.மு.க. வட்டாரத்தை மட்டும் அல்லாது, தமிழக அரசியல் அரங்கையும் எதிர்நோக்கி இருக்கும் கேள்விகள் இவை.
இதற்கு கனிமொழியின் பதில் என்ன?
''எவ்வளவோ தாங்கிட்டேன். இனி என்னைக் கஷ்டப்படுத்த என்ன இருக்கு? கட்சியில் தொடர்ந்து என் கடமைகளைச் செய்துட்டு இருப்பேன். அரசியல்னா என்னன்னே தெரியாத எனக்கு ,எதிரிகளே எல்லா விதமான அரசியலையும் கற்றுக்கொடுத்துட்டாங்க. எல்லோரும் புறந்தள்ளிய இந்த நேரத்திலும் எனக்காக சிலர் நிற்கிறாங்க. அவங்களுக்காகவாவது நான் அரசியலில் நின்னு தான் ஆகணும்; நிச்சயம் நிற்பேன்!''
இதை எழுதியதும் இரா.சரவணன். சிறை வேதனைகளைத் தாண்டி சீக்கிரம் வெளியே வர இருக்கிறாராம். ஓ.பி.சைனிக்கு தமிழ் தெரிந்திருந்தால், நிச்சயம் இந்தக் கட்டுரைகளைப் படித்து விட்டு, கனிமொழியை ஜாமீனில் விட்டிருப்பார். கனிமொழியே கூட, இந்தக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, ஓ.பி.சைனியிடம் ஒரு அபிடவிட்டாகத் தாக்கல் செய்திருக்கலாம்.
இப்போது இந்த வார கவர் ஸ்டோரியைப் பாருங்கள்.
என் வாழ்க்கை திகாரிலேயே முடியட்டும்
கனிமொழி மட்டுமல்ல தி.மு.க-வினரே பெரிதும் நம்பி இருந்தது நவம்பர் 3-ம் தேதியைத்தான்!
கருணாநிதி டெல்லி வந்து சோனியா காந்தியை சந்தித்துப் பேசியதும், 'கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர்களின் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் எண்ணம் இல்லை’ என சி.பி.ஐ. அறிவித்ததும் கனிமொழிக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. தி.மு.க-வின் சட்ட ஆலோசகர்களும் 'ஜாமீன் உறுதி’ என்றே, கனிமொழிக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்.
அதனால், வழக்கத்திற்கு மீறி புன்னகையுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார், கனிமொழி. திரண்டிருந்த கட்சிக்காரர்களைப் பார்த்து வணக்கம் சொன்னபடியே வந்தார். அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி ஷைனியும் அறைக்குள் நுழைந்தார். அடுத்த இரண்டாவது நிமிடம்... 'ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்’ என்று நீதிபதி ஷைனி அறிவிக்க, அந்த அறையே கண்ணீர் மயமானது.
இதைச் சற்றும் எதிர்பார்த்திராத கனிமொழி, தனது வழக்கறிஞர்களிடம் ஷைனியின் உத்தரவு குறித்து தெளிவாகக் கேட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னை சகஜமாக்கிக் கொண்டார். மகளிரணி நிர்வாகி ஒருவர் கனிமொழியின் கைகளைப் பற்றியபடி கதற, ''இது கோர்ட். இங்கே அழக்கூடாது'' என்றார் கனிமொழி. அப்போது தாங்கமாட்டாத கண்ணீருடன் ராஜாத்தி அம்மாள் அவரது அருகில் வர, கனிமொழிக்கே ஒரு மாதிரியாகி விட்டது.
''நீங்க அழுவுறதால என்னம்மா நடக்கப்போகுது... தைரியம் சொல்ல வேண்டிய இடத்துல இருந்துகிட்டு நீங்களே அழலாமா?'' என கனிமொழி தேற்றினாலும் ராஜாத்தியின் கண்ணீர் குறையவில்லை. ஒரு கட்டத்தில் சிறுபிள்ளை போல் தேம்பத் தொடங்கிவிட்ட ராஜாத்தியை தோளோடு சாய்த்து கனிமொழி தேற்ற... அங்கே இருந்த கட்சிக்காரர்கள் அனைவரும் கலங்கிப் போனார்கள்.
அந்த துயரச் சூழலிலும் டெல்லி நிருபர்கள் சிலர் கனிமொழியிடம் சில கேள்விகளைக் கேட்க, ''நான் எதுவும் பேசக்கூடாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க!'' என்றார் கனிமொழி.
அதை சட்டை செய்து கொள்ளாமல் சில பெண் நிருபர்கள் கனிமொழியை சூழ்ந்து கொள்ள, ''குடும்ப ரீதியாக நான் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. இங்கே வந்தும் தொந்தரவு பண்றீங்களே...'' என கனிமொழி டென்ஷனாக, அடுத்த கணமே நிருபர்களை அப்புறப்படுத்தும் படலம் அரங்கேறியது.
குடும்ப உறவுகளும் முக்கிய கட்சிக்காரர்களும் மட்டுமே இருந்த அந்த அறையில் கனிமொழி பேசிய விஷயங்கள் ரொம்பவே உருக்கமானவை. முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ், ''இப்படி ஆயிடிச்சேம்மா...'' எனக் கண்ணீரோடு சொல்ல ''ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தானே ஆகுது. எல்லா கஷ்டமும் எனக்குப் பழகிப் போயிடுச்சு. நீங்க கவலைப்படாதீங்க!'' என்றார் கனிமொழி.
''ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் என் பெயர் அடிபட ஆரம்பிச்சப்போ எனக்கு ஆச்சர்யமா இருந்தது. காரணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தப்போ நான் தீவிர அரசியலுக்கே வரலை. எம்.பி-யாகவும் ஆகலை. எதுக்கு இதில நம்ம பேரை இழுக்கிறாங்கன்னு கோபப்பட்டேன். அதிகாரிகளுக்கும் இதுபற்றி புரியும்னு நினைச்சேன். ஆனா, சாதாரண சர்ச்சையில் தொடங்கிய விஷயம் கைது, விசாரணை, ஜெயில்னு நீண்டுக்கிட்டே இருக்குது. சி.பி.ஐ. ஆட்சேபனை தெரிவிக்காத நிலையிலும் ஜாமீன் மறுக்கப்படுது. இதுக்காக யார் மேல நான் வருத்தப்பட முடியும்? என் வாழ்க்கையில நல்லது ஏதும் நடந்தாத்தான் ஆச்சர்யம். கெட்டதுதான் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கே!'' எனச் சொல்லி கனிமொழி வழக்கம் போல் சிரிக்க, அங்கிருந்த பலருக்கு கண்ணில் நீர் கோத்துக் கொண்டது.
உளைச்சலும் உருக்கமுமாக நகர்ந்த அந்த நிமிடங்களில் நாமும் கலந்திருந்தோம். நம்மை அடையாளம் கண்டு வணக்கம் தெரிவித்தவரிடம் '''ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி உயர் நீதிமன்றத்தை அணுகச் சொல்லி இருக்கிறார். ஆனால், அது சாத்தியப்படாத விஷயம் என வழக்கறிஞர்கள் சிலர் சொல்கிறார்களே?'' என நாம் வருத்தம் காட்ட, ''வழக்கு சம்பந்தமா நான் எதும் பேசக்கூடாது. அதெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும். நான் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை வரும்னு கற்பனை கூட பண்ணிப் பார்த்தது இல்லை. ஆனா, இன்னிக்கு அந்த ஜெயிலே உலகமாயிடுச்சு. எனக்குச் சாதகமாவோ பாதகமாவோ என்ன நடந்தாலும் நான் அதைச் சட்டை பண்ற நிலையில் இல்லை. இன்னிக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதற்காக நான் கவலைப்படவில்லை. இப்படி எல்லாம் ஆகலாம்னு மனசை அதுக்குத் தயாராத்தான் வைச்சிருந்தேன். ஆனால், எனக்கு ஜாமீன் கிடைக்கும்னு இத்தனைபேர் தமிழ்நாட்டுல இருந்து இங்க வந்திருக்காங்க. அவங்களோட எதிர்பார்ப்பு பொய்யாப் போனதை நினைச்சுதான் வருத்தமா இருக்கு. ஜாமீனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் என் மொத்த வாழ்க்கையும் திகாரிலேயே முடிஞ்சாலும், அதை இன்முகத்தோட ஏத்துக்க நான் தயாரா இருக்கேன். இத்தனை வருஷ வாழ்க்கையில இந்தக் கடைசி அஞ்சாறு மாதங்களை என்னால மறக்கவே முடியாது.

படவேண்டிய அடி எல்லாத்தையும் பட்டாச்சு. இனி எந்தக் கஷ்டத்தாலும் என்னை வருத்தப்படுத்த முடியாது. பரபரப்பு, குற்றச்சாட்டு, கைது, விமர்சனம், அவமானம், துரோகம், துயரம், எதிர்ப்பு, ஏமாற்றம்னு எல்லாத்தையும் கடந்தாச்சு. சாவைத் தவிர சகலத்தையும் பார்த்தாச்சு. எதையும் எதிர்கொள்கிற பக்குவத்தை ரொம்ப சீக்கிரமே கத்துக்கிட்டேன். ஆனா, அதுக்கு நான் கொடுத்த விலைதான் ரொம்பப் பெருசு!'' - விரக்தியாய் சிரிக்கிறார் கனிமொழி.
.jpg)
அம்மாவை ஆறுதல் படுத்தி, மகனுக்கு தைரியம் சொல்லி, கட்சிக்காரர்களை நம்பிக்கையூட்டி, வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி நிமிர்கிற கனிமொழியை ஆச்சரியமாகப் பார்க்கிறோம். வாட்சைக் காட்டி போலீஸ் அதிகாரிகள் ஏதோ சொல்ல, ''ஓ... தாராளமாகக் கிளம்பலாமே...'' என்றபடி கோர்ட்டுக்கு அருகே நிற்கும் வேனில் ஏறச் சென்றார். குழுமி இருந்த கட்சிக்காரர்களை வணங்கியபடி, மாறாத புன்னகையோடு திகாருக்கு கிளம்பினார் நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத, அந்த சக்தி!
- டெல்லியில் இருந்து
இரா.சரவணன்
படித்து விட்டீர்களா…. இதயம் உருகுகிறதா… கண்ணீரை துடைத்துக் கொண்டு மேலே படியுங்கள்.
ஜுனியர் விகடனுக்காக, டெல்லிக்கென்று பிரத்யேகமாக சரோஜ் கண்பத் என்ற நிருபர் இருக்கிறார். ஜுனியர் விகடனின் டெல்லி செய்தியாளர் இவர்தான். இவர் இருக்கும் போது, இரா.சரவணன் எதற்காக டெல்லி செல்கிறார் ? அங்கேதான் இருக்கிறது விஷயம்.
இரா.சரவணனை டெல்லிக்கு அழைத்துச் சென்று விருந்தளித்து உபசரிப்பவர் காகிதப்பூ கதாநாயகி ராசாத்தி அம்மாள் என்பதுதான் இதில் சிறப்பம்சம். சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்கு முதல் வகுப்பு விமான டிக்கட். டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதியில் அறை. டெல்லியில் பவனி வர, ஏ.சி கார் என ஏகத்துக்கும் இரா.சரவணனை கவனித்ததோடு, கணிசமான ஒரு தொகையையும் கொடுத்திருக்கிறார் என்கிறது பத்திரிக்கையாளர் வட்டாரங்கள்.
கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப் பட்டது சவுக்குக்கும் வருத்தமே. கனிமொழிக்கு ஜாமீன் கொடுக்கப் பட வேண்டும் என்பதை ஏற்கனவே சவுக்கில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தில், நம்மை நாமே திருப்தி செய்து கொண்டு, உளச்சுத்தியோடு எழுதுவது என்பது வேறு. பணம் வாங்கிக் கொண்டு எழுதுவது என்பது வேறு. இரண்டாவது விஷயம், வேசித்தனம்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், ப்ரதீப் கோனேரு என்ற ஒரு தொழில் அதிபரை பத்மா என்ற மாடல் அழகி தன்னோடு அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை படம் பிடித்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப் பட்டார். அந்த பத்மாவின் கதையை “மறைப்பதற்கு எதுவுமில்லை” என்ற தலைப்பில் ஐந்து வார தொடராக எழுதினார் இரா.சரவணன். அந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு, பத்மாவின் மீது பரிதாபம் வரும் வகையில் இருக்கும் அந்தத் தொடர். அந்தத் தொடர் முழுமையாக, சவுக்கு வாசகர்களின் உடனடி பார்வைக்காக, பிடித்தது பகுதியில் “மறைப்பதற்கு எதுவுமில்லை” என்ற தலைப்பிலேயே வெளியிடப் படுகிறது.
சரி, இப்போது உங்களுக்கு யார் இந்த சரவணன், யார் இந்த பத்மா என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்குமே….


இதோ… இவர்கள் தான் சரவணனும், பத்மாவும். இதற்கு பிறகு அந்தத் தொடரை மீண்டும் படித்தால், புதிய கோணத்தில் அந்தத் தொடர் தெரியும்.
|
Comments
இந்த வார ஜுவியில் உதவியாசிரியர்கள ்
பெயரில் இந்த எழுத்து விபச்சாரன் பெயர்
இல்லை , பின் புலம் விசாரித்து அப்டேட்
செய்யவும்
இது என்னால் முடிந்தது
தினமலர் பத்திரிகை பகிரங்கமாக மத்திய அரசின் கைபிள்ளையாக மாறிவிட்டதற்கு நன்றி. விசுவாசமாய் வாசகர்களை தூண்டி விட்டு தன்னை இனம் காட்டியிருக்கிற து. கூடங்குளம் அணு உலை பிரச்னையில் தினமலர் வாசகர் எல்லாரும் அணு உலை போராளிகளுக்கு எதிராகவும் இல்லை எழுதாதவர் எல்லாம் ஆதரவாகவும் இல்லை. இப்படி இந்த குண்டுச்சட்டிக் குள் குதிரை ஒட்டிக்கொண்டு முதன்மையான பத்திரிகை என்று ஒருபோதும் மார்தட்டமுடியாத ு. அதற்க்கு பல தரப்பட்ட மக்களின் ஏகோபித்த வரவேற்ப்பு இருக்க வேண்டும். இதே வாசர்கள் நினைத்தால் தினமலரையும் கருத்து கூற முன் வரும் நிலை வரலாம் !
விகடனின் விசுவாசமுள்ள ஊழியன்,
இரா. சரவணன்.[/ஃஉஒடெ]
அண்ணா சரவணா ..நீ உண்மையுள்ள ஊழியனா ??? சரி நீ எவ கூட வேணும்னா படுத்துக்கோ அத பத்தி கவலை இல்ல ..ஆனா உன்ன எல்லாம் நிருபர்னு நம்பி உன்னோட புக்க பத்து ரூபா குடுத்து வங்கி படிக்கிற எங்கள மாதிரி ஆளுங்களுக்கு உண்மையா இரு ..அத விட்டுட்டு அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்ச எடுத்து, எச்சஇலைய தின்னு, ஊழல்வதிகளோட மலத்தில படுத்து உறங்கி அந்த நாத்தத்த ஏன்டா சந்தனம்னு எழுதி எங்கள முட்டளாக்குற... அதுக்கு பேசாம இந்த தொழில விட்டுட்டு வேற தொழில் செய் அது உனக்கு நல்லா வரும்
லிப்ட் கேட்டு யாரும் பின்னால் அமர்ந்து
வருவது இல்லையா? சரவணன் பத்மாவை செய்யும் போது விளக்கு பிடித்து நேரில்
பார்த்தது போல எழுதுகிறாங்களே, ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தால் மட்டுமே
தவறு. விரும்பி வந்த பெண்ணிடம் போகலாம்.
சரவணனைப் பத்தி தப்பா எழுதுபவர்கள்
எல்லோரும் அவுங்க பொண்டாட்டிங்களை
பத்திரமா பாத்துகிடுங்க.விகடனை உடைப்பதற்கு நீங்கள் செய்யும் சதி எடுபடாது.சவுக்கு நீ ஒரு டுபுக்கு.
விகடனின் விசுவாசமுள்ள ஊழியன்,
இரா. சரவணன்.[/ஃஉஒடெ]
நீ தொடர்ந்து போட்டதை தொடரா போடணுமா
எப்பொழுடு தான் உன்ன்டைய மொல்லமரி தன்மெல்லம் தெரியுது.
பெரிய மன்மத குஞ்சு ..உன்னோட மூஞ்சிய நீ கண்ணாடியில பாக்கவே மாட்டியா தம்பி .....வடிவேலு அழும்போது எப்படி இருப்பாரோ அதவிட நீ கேவலமாதான் இருக்க ...தூத்தேரி ...(மலையாள படத்துல வேணா சான்ஸ் கெடைக்கும் கூடவே அந்த குண்டு பாப்பாவ கூட்டிகிட்டு போ கோடி கோடியா கெடைக்கும் )
"என்ன கொடுமை சரவனன் இது........"
டேய் காமெடி, கொஞம் வாயயேயும் அத்யும் மூடு...........உனக்கு ஆப்பு தான்.....
"கனிமொழி மாதிரி உங்கள் வீட்டில் ஒரு பெண் இருந்தால் இப்படி தான் பேசுவீர்களா?".
---
வேண்டாம் சரவணா. இதுபோன்ற எங்கள் வீட்டு பெண்களையும்,கனி மொழியையும் ஒன்றாக நினைக்க சொல்லும் அருவருப்பான சிந்தனையை நிறுத்திகொள். இல்லை எனில் 'உன்னை பார்த்த இடத்தில் எல்லாம் செருப்பால் அடிப்பேன்'.
--
இலவசமாக கட்டுரைகளை படிக்கத் தரும் சவுக்கு கூட இப்படி பட்ட வார்த்தைகளை உபயோகித்ததில்லை . ஆனால் காசு கொடுத்து படிக்கும் விகடன் இப்படி சொல்கிறது. உள்ளதை உள்ளபடியே எழுதத்தான் பத்திரிக்கை. யப்பா சரவணா.... உங்க விருப்பு வெறுப்பை கூட கொறச்சி எழுத நாங்க எதுக்குப்பா காசு கொடுக்கனும்? உங்க போதைக்கு நாங்க என்ன ஊறுகாயா?
டக்: நீயும், உங்கம்மாகாரியும ் நைனாவ வெச்சுக்கிட்டுச ெஞ்ச பாவங்களுக்கும், தமிழின் பேரில் செய்த மோசடிகளுக்கும் இது ரொம்பகுறைவே! லட்சகனக்கான இலங்கைதமிழரின் பாவத்தை நெனச்சாத்தான் கொஞ்ச பயமாயிருக்கு! உன்னால, உன்னோட பன்னாட குடும்பத்தால தமிழரும், இந்தியரும் கொடுத்த விலை என்னானு உனக்குதெரியாது, எங்களுக்குத்தான ் தெரியும். உன்னால எத்தனைபேரு தெருவுல கூட நிக்க முடியலன்னு உனெக்கெப்படி தெரியும்! நிக்கற எங்களுக்குத்தான ே தெரியும்!
சரவணன்:நான் எதை செய்தாலும், அவர்கள் அனுமதியோடுதான் செய்கிறேன்
டக்: இதுக்கெல்லாமலா ஆபீஸ்ல அனுமதிதாறாங்க!, அண்ணோ எனெக்கொரு வேலைவாங்கிகொடுங ்கண்ணா! நானும் ஜாலியா இருக்கனும்.
சரவணன்:ஆண்பிள்ள ை என்றால், அழகான பெண்ணைப் பார்த்ததும் ஆசை வர வேண்டும்!
டக்: யார்மேலவேணாலும் ஆசை வந்தா நாயிக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்காதுங்கண்ண ா! கட்டுப்டுண்ணுனு ஒன்னும் வேணுமுங்கன்னா!
சரவணன்:தவிர்க்க முடியாத சக்தி! அண்ணோ
டக்: ஆம்மாங்கண்ணா, டாய்லெட் வந்தா தவிர்க்க முடியாதுங்கண்ணோ ! அதுதானே நீங்க சொல்ற தவிர்க்க முடியாத சக்தி!
ஏமபா சவுக்கு நல்லா இருக்க்ரது உனக்கு புடிக்கலயா?
RSS feed for comments to this post