முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பொதுப் பணத் துறை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 38
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 23 அக்டோபர் 2010 20:11

 

இந்த வார தமிழக அரசியல் இதழில், “வழக்கில் சிக்க வைக்க சதி. ராமசுந்தரம் ஐஏஎஸ் ராஜினாமா ? “ என்ற தலைப்பில் அட்டைச் செய்தி வந்திருக்கிறது. படித்துப் பார்த்தால், நமது சுனில் குமார் பற்றியும் செய்தி இருக்கிறது. சுனில் குமாரைப் பற்றி வேறு யாரோ எழுதவும், அதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியுமா ?   சுனில் குமார் சவுக்கின் செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒருவர் சுனில் குமாரைப் பற்றி எழுதுகிறார்களே. சவுக்கு கம்மென்று பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று, நாக்கு மேலப் பல்லப் போட்டு நாலு சாதி சனம் கேள்வி கேட்டுட்டா அசிங்கமாப் போயிடாது… … ? அதனால், இந்தச் செய்தியைப் பற்றி சவுக்கு டீம் புலன் விசாரணையில் இறங்கியது.   நமது புலன் விசாரணையில் கிடைத்த செய்திகளுக்கு போவதற்கு முன், தமிழக அரசியலில் வந்த கட்டுரையை படியுங்கள்.

 

தான் வைத்த பொறியில் தானே சிக்கிக் கொள்வது என்பது எத்தனை வேதனையானது என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., சுனில்குமார் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வருகிறார்’ கடந்த சில நாட்களாக கோட்டை வட்டாரத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் இந்த வார்த்தைகள்தான் முணுமுணுக்கப்படுகிறது.


sunil_new ஏன் இப்படி பேசிக் கொள்கிறார்கள் என்று விசாரித்தால், யாரும் ‘மூச்’ விட-வில்லை. அப்படியென்ன சிதம்பர ரகசியம் இருக்கப் போகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கும் அதிகாரிகளையே வளைத்துப் பிடித்தோம். கேட்க, கேட்க பல திருப்பங்களுடன் கூடிய க்ரைம் திரில்லர் படம் பார்ப்பது போன்று இருந்தது.



எஸ்.ராமசுந்தரம். புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர், 1979-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக அரசின் பொதுப் பணித்துறை செயலராக பணியாற்றி வருகிறார். புதிய தலைமைச் செயலகத்தை கலைஞரின் விருப்பப்படி கட்டிக் காட்டியதன் மூலம் கலைஞரின் மனதில் இடம் பிடித்தவர். இவரது மனைவி அர்ச்சனா ஐ.பி.எஸ். இவர் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார்.

இந்த ராமசுந்தரத்துக்கு எதிராக ஓர் சதிவலை பின்னப்பட்டு, ஒருகட்டத்தில் அது அவரது கவனத்திற்கே போனதுதான் இத்தனை பரபரப்புக்கும் காரணம் என்று சொல்லி அதையும் விவரிக்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ராமசுந்தரத்துக்கு எதிராக சதி வலை ஏன் பின்னப்படுகிறது? அவரைப் பழிவாங்க துடிப்பவர்கள் யார்?

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோ, ஐ.பி.எஸ்.அதிகாரிகளோ இரு தரப்புமே, ஆட்சியாளர்களால் அல்லது அரசியல்வாதி களால் அவ்வப்போது பழி வாங்கப்படுவார்கள். அதுதான் வாடிக்கை(!). ஆனால், இந்த ஆட்சியில், ஆட்சியாளர்களால் எந்த அதிகாரிகளுக்குமே ஆபத்து வந்தது கிடையாது. பிறகு யார் என்று கேட்டால், அதிகாரிகளை அதிகாரிகளே பழிவாங்கிக் கொண்டு, ஆட்சிக்கு அவப்பெயரை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சரி! ராமசுந்தரம் விஷயத்துக்கு வருவோம். அவரைக் கடந்த பத்து நாட்களாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பின் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். தன்னை யாரோ சிலர் பின் தொடர்வதை குறித்து உணர்ந்த ராமசுந்தரம், தனது மனைவியிடம் விசாரிக்கும்படி சொல்லியிருக்கிறார். அவர் விசாரித்த போதுதான், லஞ்ச ஒழிப்புத் துறையினர் பின்தொடர்ந்து வருவது தெரிந்தது. அவர், உடனே லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., சுனில்குமாரிடம் விசாரித்து இருக்கிறார்.

 

‘எதற்காக, என் கணவர் ராமசுந்தரம் பின்னால் உங்கள் டீம் அலைகிறது? அவர் மீது ஏதாவது புகார் இருந்தால், முறைப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதை நான் தடுக்க மாட்டேன். ஆனால், அவரை ‘பாலோ’ செய்து வேண்டுமென்றே வழக்கில் சிக்க வைக்க முயற்சிகள் எடுத்தால், கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.

‘அவர் மீது எந்தப் புகாரும் வரவில்லை. அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பின் தொடரவுமில்லை’ என்று மறுத்திருக்கிறார் சுனில்குமார். 

2007030415170201
கூடுதல் டி.ஜி.பி., அர்ச்சனாவின் எச்சரிக்கைக்கு பிறகு சுனில்குமார் வேக, வேகமாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை சந்தித்திருக்கிறார். அவர் யாரென்றால், அர்ச்சனாவின் பேட்ச்மென்ட். அவரிடம் சென்ற சுனில்குமார், ‘சார்... மேடம் என் மேல் ரொம்ப கோபமா இருக்காங்க. அவங்க கணவர் மேல் எனக்கு எந்தவித விரோதமும் இல்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி, மேலிடத்து உத்தரவு. அதைத்தான் நான் செய்தேன். அவர் என்னைக் கோபித்துக் கொண்டால் எப்படி?’ என்று விளக்கமளித்துள்ளார்.

ஆனால், சுனில்குமார், ‘மேலிடம்’ என்கிற அந்த ‘சூப்பர் பவர்’ யார் என்பதை கூறவில்லை. இந்த விஷயங்கள் குறித்து அறிந்த ராமசுந்தரம், கடும் அதிர்ச்சிக்குள் மூழ்கியிருக்கிறார். ‘என்னை ஏதோ ஒரு வழக்கில் சிக்கவைக்கவும் அல்லது என்னை அவமானப்படுத்தும் வகையில் சில காரியங்களைச் செய்யவும் முயற்சித்தது ஏன் என்பது எனக்கே தெரியவில்லை’ என்று குடும்ப உறுப்பினர்களிடமும், நண்பர்களிடமும் சொல்லி-இருக்கிறார். 

இதற்கிடையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பெரும் குழப்பம் வெடித்துவிட்டது. ராமசுந்தரத்தை ரகசியமாக பின் தொடர்ந்த விஷயம், எப்படி அவருக்கு தெரிந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், ராமசுந்தரம் தொடர்பான பணியில் இருந்த நடராஜன் என்ற டி.எஸ்.பி., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையின் சென்னை மண்டல டி.எஸ்.பி.யாக இருந்த இக்பால் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் நம்மிடம் பேசிய சுனில் குமார் தரப்பினர் இந்த சம்பவங்களை ஒட்டு மொத்தமாக மறுத்தனர்.

இது தொடர்பாக உண்மை நிலையை அறிய பொதுப்பணித் துறை செயலர் ராமசுந்தரத்தை தொடர்பு கொண்டோம். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சொல்லி செல்போன் இணைப்பை துண்டித்துக் கொண்டார். 

ஆனால் நமக்கு கிடைத்த தகவல்களின்படி தனக்கு எதிராக நடக்கும் சதிப் பின்னணிகள் பற்றிய விவரங்களை ராமசுந்தரம் சேகரித்திருப்பதுடன் அதற்கு காரணமான ‘சூப்பர் பவர்’ யார் என்பதயும் தெரிந்துகொண்டிருக்கிறார். இந்த விஷயங்களை எல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். சதி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்து ராஜினாமா செய்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

ராமசுந்தரம் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் அதிகாரி-களிடம் கேட்டபோது, ‘முதல்வருக்கு நெருக்க-மான அதிகாரிகளையே, முதல்வரின் அனுமதி-யின்றி கண்காணிப்பதும், அந்த அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதும் முறையானது அல்ல. இதுபோன்று பல உயர் அதிகாரிகள் பலமுறை சிக்கலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். முதல்வரிடம் நெருங்கிப் பழகும் அதிகாரிகளை குறி வைத்து அவமானப்படுத்தும் செயல்கள் ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. இப்படிச் செய்யும்படி தூண்டிவிடும் அதிகாரிகள் மீதும், அவர்களின் பேச்சைக் கேட்டு ஆடும் அதிகாரிகள் மீதும் முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல அதிகாரிகள் ஏதோ காரணங்களுக்காக அமைதியாக போய்விட்டார்கள். ஆனால் ராமசுந்தரம் துணிந்து-விட்டார். அவரது முயற்சியாவது இதுபோன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா என்று பார்ப்போம்’ என்கிறார்கள் எதிர்பார்ப்புடன்.


 அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல், ஆட்சிக்கு அவப்பெயரை தேடித்தரும் என்பதை கலைஞர் அறியாதவர் அல்ல. அவர் எடுக்கும் நடவடிக்கையால், ராமசுந்தரத்துக்கு நெருக்கடி கொடுத்த ‘சூப்பர் பவர்’ யார் என்பது அம்பலமாகும். அதன் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகளும் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில்!



இதுதான் தமிழக அரசியலில் வந்த கட்டுரை. இப்போது சவுக்கின் புலனாய்வுக்கு வருவோம்.

 

கருணாநிதியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த துரை முருகன் தான் பொதுப் பணித் துறையை பார்த்துக் கொண்டு இருந்தார். 2006 முதல் பொதுப் பணித் துறையை துரை முருகன் ஒரு மன்னர் போல ஆண்டு கொண்டிருந்தார். வழக்கமாக, பணியிட மாறுதல், காண்ட்ராக்ட் போன்ற விஷயங்களில், கருணாநிதியோ அல்லது அவரது குடும்பத்தாரின் பேரைச் சொல்லிக் கொண்டு வேறு யாராவதோ வந்தால், “நான் தலைவரிடம் பேசிக் கொள்கிறேன்“ என்று அந்தப் பேப்பரை எடுத்து ஓரமாகப் போட்டு விடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

13 ஜுலை 2009 அன்று, துரைமுருகனிடம் இருந்து பொதுப் பணித்துறை பறிக்கப் பட்டு, கருணாநிதி தன் வசமே அதை வைத்துக் கொண்டார்.

 durai_murugan

அது முதல், முதல்வரின் செயலாளராக இருக்கும் ராஜரத்தினத்துக்கு கொண்டாட்டம் தான்.   ராஜரத்தினமே பொதுப் பணித்துறை அமைச்சர் போல செயல்படத் தொடங்கினார். கருணாநிதியின் பெயரைச் சொல்லி பணியிட மாறுதல்களும், காண்ட்ராக்டுகளும் வழங்கினால் யார் போய் கருணாநிதியிடம் சரிபார்க்கப் போகிறார். ராஜரத்தினத்துக்கு சுக்கிர திசைதான்.

 

துரைமுருகன் பொறுப்பிலிருந்து விலகிய கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மூத்த பொறியாளர்கள் பணியிட மாறுதல் செய்யப் பட்டுள்ளார்கள். பணியிட மாறுதல் என்றால் சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதீர்கள். பாலாறு டிவிஷனுக்கு தலைமைப் பொறியாளராக நியமிக்கப் படுவதற்கான தொகை 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை.   ஏனெனில் பாலாறு டிவிஷனில் தான் மணல் கொள்ளை அமோகமாக நடைபெறுகிறது. மேலும், பொதுப் பணித்துறை செயலாளர் ராமசுந்தரத்தின் புண்ணியத்தில் தேவர் சாதியினரின் ஆதிக்கமும் அத்துறையில் பெருகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

நல்ல போஸ்டிங் வேண்டுமென்றால், பணம் இருந்தால் மட்டும் பத்தாது. அவர் தேவர் சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால்தான் நல்ல பணியிடம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

 

இந்த மாறுதல் மாபியாவில் மொத்தம் மூன்று பேர் உறுப்பினர்கள். ஒன்று கருணாநிதியின் செயலாளர் ராஜரத்தினம். அடுத்தவர் ராமசுந்தரம். அடுத்தவர் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் ஜெயராமன். இந்த ஜெயராமன் தான் மற்ற பொறியாளர்களுக்கு பிரோக்கராக இருந்து பணத்தை வசூல் செய்து தருகிறார் என்று கூறுகிறார்கள்.

 Sep_30_b_1

இந்நிலையில், இந்த மாறுதல் மாபியாவுக்கு நடுவே கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்படுகிறது.   இந்தத் தகராறில், ஜெயராமனும் ராமசுந்தரமும் ஒரு அணி. ராஜரத்தினம் தனி அணி.

 

தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் எந்த அளவுக்கு நாறிப்போய் கிடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் மட்டும் குறித்த நேரத்தில் எப்படி முடிந்தது.   இரண்டு காரணங்கள். பொதுப் பணித்துறையை தன் வசம் வைத்திருந்தாலும், குஷ்பூவை வைத்து திராவிடக் கொள்கையை வளர்ப்பதற்கே கருணநிதிக்கு நேரம் பத்தவில்லை என்பதால் பொதுப்பணித் துறை வேலைகளை கவனிக்க முடியவில்லை. அதனால் நூலகக் கட்டுமானப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கிறார்.   அந்தப் பணிக்கு பொறுப்பாக இருந்தது, பொதுப் பணித்துறையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு கண்காணிப்புப் பொறியாளர்.   மிகத் திறம்பட வேலை செய்து குறித்த நேரத்தில் அந்தப் பணியை செய்து முடிக்கிறார்.

 

இதே கோபாலகிருஷ்ணன் தான் தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளுக்கும் பொறுப்பாக இருந்தார். ஆனால், இந்த மாறுதல் மாபியா கும்பலால், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டார்.   தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் ராஜாராம் என்ற ஒரு மங்குணி கண்காணிப்புப் பொறியாளரிடம் ஒப்படைக்கப் படுகிறது.   அதனால்தான் இவ்வளவு குளறுபடி என்கிறார்கள்.

 

இந்நிலையில், முதல்வர் அலுவலகம் நவம்பர் 1ம் தேதி புதிய சட்டமன்ற வளாகத்துக்கு மாறும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. சட்டமன்றக் கூட்டமும் நவம்பர் 8ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. ஆனால், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் 60 சதவிகித பணிகள் கூட முடியவில்லை. இதனால், மீண்டும் தங்கம் தென்னரசுவை அழைத்து, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளையும் அவரிடம் ஒப்படைக்கிறார் கருணாநிதி. தென்னரசு தனக்கு கோபாலகிருஷ்ணன் என்ற கண்காணிப்புப் பொறியாளர் வேண்டும் என்கிறார். யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள் என்று, உத்தரவிட்டதை அடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 4 கண்காணிப்புப் பொறியாளர்கள் இந்த வேலையை கவனித்து வருகிறார்கள்.

 

இதன் நடுவே, கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற கோபாலகிருஷ்ணன், 2000 சிமென்ட் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிப் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். மேலும், தரைகள் தயாராகாமல், 4 அடிக்கு சேறும் சகதியும் நிரம்பிக் கிடப்பதைப் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைகிறார்.

 Tamilnadu-Secretariat-Assembly-New-Building

இந்த நேரத்தில், கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டது போல, ஒரு திறப்பு விழா நடத்தி, கட்டுமானப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து, அந்த விழாவில், திமுகவின் பார்ப்பனப் பிரிவு தலைவர் இந்து ராமும் கலந்து கொண்டதை நினைவுக் படுத்திப் பாருங்கள்.

 

சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்க இருப்பதை ஒட்டி, செய்ய வேண்டிய பணிகளை ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவைச் செயலர் செல்வராஜ் கட்டுமானப் பணிகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்று ஆய்வு செய்ய ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். இந்தக் கூட்டத்துக்கு வந்த பதிலளிக்க வேண்டிய ப்ராக்கர் மற்றும் தலைமைப் பொறியாளர் ஜெயராமனும், மற்றொரு தலைமைப் பொறியாளர் கருணாகரனும் வராமல் டபாய்க்கிறார்கள். சட்டமன்ற வளாகத்துக்குள் சாலைகள் கூடத் தயாராகாமல் சேறும் சகதியுமாக கிடப்பதைப் பார்த்தால், நாளை சட்டப் பேரவை நடக்கையில் பெரும் பிரச்சினையாகுமே என்று பணிகள் நிறைவடையவில்லை என்ற தகவலை கருணாநிதியின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறார்.   கருணாநிதியும் தங்கம் தென்னரசுவை அழைத்து பணிகளை விரைவு படுத்தச் சொல்கிறார்.

 

இந்நிலையில், பொதுப் பணித்துறையில் நடந்த மாறுதல்களில் நடந்த ஊழல்கள், தலைமைச் செயலக கட்டுமானப் பணியில் ஏற்பட்ட சுணக்கங்கள் அதற்கான காரணங்கள் இவையெல்லாம் ஆதாரத்தோடு, புகாராக முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

 

இந்தப் புகார் ராஜரத்தினத்திடமே வருகிறது. (இதுதான் திருடனுக்கு தேள் கொட்டியதா) ராஜரத்தினம் ஏற்கனவே மாறுதல் மாபியாவில் ஏற்பட்ட பிணக்குக்கு கணக்கு தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். வந்த புகாரில் தன்னுடைய பெயரை மட்டும் நீக்கி விட்டு உளவுத் துறை அறிக்கை போல இதைத் தயார் செய்து அனுப்புமாறும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்து அனுப்புமாறும் ஜாபர் சேட்டிடம் கூறுகிறார். (வந்துட்டான்யா வந்துட்டான்யா)

 

ஜாபர் சேட்டுக்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் ராமசுந்தரத்தின் மனைவி அர்ச்சனாவோடு கணக்கு தீர்க்க வேண்டி உள்ளது.

 archana_ramasundaram

2008ல் அர்ச்சனா ராமசுந்தரம் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ளார்.   டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்களை மாறுதல் செய்ய ஒரு மாறுதல் கமிட்டி டிஜிபி அலுவலகத்தில் உண்டு.   இந்தக் கமிட்டியில் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மற்றும் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆகியோர் உறுப்பினர்கள்.

 

இந்த ட்ரான்ஸ்பர் கமிட்டியின் கூட்டம் நடைபெறுகையில் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி சார்பில் உளவுப் பிரிவு ஐஜியான ஜாபர் சேட் கலந்து கொள்கிறார். ஜாபர் சேட்டைக் கண்ட அர்ச்சனா, நீங்கள் எதற்கு வந்தீர்கள் என்று கேட்கவும், நான் உளவுத் துறை கூடுதல் டிஜிபி பதவியின் பொறுப்பு வகிக்கிறேன், அந்தத் தகுதியில் வந்தேன் என்று கூறவும், இந்தக் கமிட்டியில் கூடுதல் டிஜிபிக்கள் மட்டும் தான் இருக்க முடியும், நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறுகிறார். கூட்டத்தை ரத்து செய்து விட்டு, டிஜிபி கே.பி.ஜெயினை சந்தித்து, உளவுத் துறை கூடுதல் டிஜிபிக்கு பதில், தலைமைய கூடுதல் டிஜிபியை இந்தக் கமிட்டியில் போடுங்கள் என்று பரிந்துரைக்கிறார். இந்தப் பரிந்துரையை ஏற்று, ஜெயினும் உத்தரவு பிறப்பிக்கிறார்.

 

இந்த விவகாரத்தை கடும் அவமானமாக எடுத்துக் கொண்ட ஜாபர் (சார் உங்களுக்கு மானமெல்லாம் இருக்கா ?) உடனடியாக பாண்டியனிடம் சொல்லி, கருணாநிதியின் கவனத்துக்கு இதை எடுத்துச் செல்கிறார். அடுத்த வாரமே அர்ச்சனா குற்றப் பிரிவுக்கு மாற்றப் பட்டு, லத்திக்கா சரண் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் படுகிறார்.

 

அடுத்த விவகாரம், சவுக்கு தொடர்பானது.   தனக்கு தெரிந்த உயர் அதிகாரி மூலம், சிபி.சிஐடியின் சைபர் க்ரைம் செல்லை வைத்து, சவுக்கின் மீது பிணையில் வெளி வரமுடியாத வழக்கு ஒன்றை போடச் சொல்கிறார்.   இந்தக் கோரிக்கையை அர்ச்சனா மறுத்தது மட்டுமல்ல, ஜாபர் ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார் என்று ஜாபர் சேட்டை கேவலமாக திட்டிய விஷயமும் ஜாபரின் காதுக்கு போகிறது.

 

அடுத்த விவகாரம், ராமசுந்தரம் தொடர்பானது. ராமசுந்தரம், ஏப்ரல் 2009ல் பொதுப் பணித் துறை செயலாளராக நியமிக்கப் பட்டதிலிருந்தே, கருணாநிதியோடு நல்ல உறவை பேணி வருபவர். கருணாநிதியோடே நெருக்கமாக இருக்கும் அதிகாரிக்கு ஜாபரின் தயவு எதற்கு ? அதனால், ஜாபரை அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார் ராமசுந்தரம்.   50 டன் ஈகோவை தலையில் வைத்திருக்கும் ஜாபருக்கு, இதுவும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 

Jaffar_Sait_2

மேலும், ராமசுந்தரம் மாதந்தோறும், தேவர் மற்றும் தேவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு ஒரு “ரேவ்“ பார்ட்டி கொடுப்பது வழக்கம். உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், மற்றும் நம்ப கண்ணாயிரம், இந்த ரேவ் பார்ட்டியின் பரம விசிறி.   ஜாபர் ஒரு நாள் ராமசுந்தரத்தைப் பார்த்து, என்ன சார் என்னையெல்லாம் ரேவ் பார்ட்டிக்கு கூப்பிட மாட்டீர்களா என்று கேட்டுள்ளார். ராமசுந்தரம் கண்ணாயிரத்திடம், இந்த ரேவ் பார்ட்டிக்கு ஜாபரை அழைக்கலாமா என்று ஆலோசனை கேட்டுள்ளார். கண்ணாயிரம், ஜாபரை கூப்பிடாதீர்கள் நமக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். ரேவ் பார்ட்டிக்கு அழைக்காததும் ஜாபருக்கு ஒரு கோபம். (ஜாபர் சார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு சார்)

இந்தச் சூழலில், ராஜரத்தினம் ஜாபரிடம் பொதுப் பணித் துறை ஊழல் தொடர்பாக ஒரு அறிக்கையை கேட்கவும், இதுதான் சாக்கு என்று ராமசுந்தரத்தை வலையில் சிக்க வைப்பது போன்ற ஒரு அறிக்கையை தயார் செய்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை அனுப்புகிறார்.

 அதிகாரம் இல்லாத அதிகாரி என்றால், ஒரே நாளில் விசாரணைக்கு உத்தரவிடலாம். ஏ.கே.விஸ்வநாதன் போல.   ராமசுந்தரம் கருணாநிதிக்கு நெருக்கமானவர் ஆயிற்றே. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல், இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் எந்த வகையிலும் சேர்த்தியில்லாத ஒரு விசாரணையை நடத்துமாறு, ராஜரத்தினம், ஜாபரின் அறிக்கை அடிப்படையில் ஒரு கடிதத்தை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் போலா நாத்துக்கு அனுப்புகிறார்.   அந்தக் கடிதம் சுனில் குமார் வசம் ஒப்படைக்கப் படுகிறது.

 

இதற்கு நடுவே, சுனில் குமாரை அழைத்த ஜாபர் சேட், ஜாங்கிட் புறநகர் கமிஷனராக இருக்கிறார். அவருக்கு கூடுதல் டிஜிபி பதவி உயர்வு வந்தவுடன் மாற்றப் படுவார். உன்னை புறநகர் கமிஷனராக ஆக்குகிறேன். ராமசுந்தரத்தை மட்டும் வலையில் சிக்க வை என்று கூறுகிறார்.

 sunil33

சுனில் குமார், லஞ்ச ஒழிப்புத் துறையில் நகரப் பிரிவு 1ல் பணியாற்றும் எம்.பி.நடராஜனிடம் இந்தப் பணியை ஒப்படைக்கிறார். நடராஜன் பொதுப் பணித் துறையில் பல தொடர்புகளை பல காலமாக மெயின்டெயின் செய்து வருபவர். மேலும் ராமசுந்தரத்துக்கும் மிகவும் நெருக்கமானவர்.   விசாரணையை தொடங்குவதற்கு முன்பே, நடராஜன் ராமசுந்தரத்திடம் விஷயத்தை சொல்லுகிறார்.

 

ராமசுந்தரம் தனது மனைவியிடம் விஷயத்தை சொன்னவுடன், அர்ச்சனா விசாரித்து விட்டு, முறையான விசாரணை எதற்கும் அரசு உத்தரவு வரவில்லை என்பதை அறிந்து கொண்டு, சுனில் குமாரை போனில் பிடித்து, லெப்ட் அன்ட் ரைட் வாங்குகிறார்.   சுனில் குமார், “மேடம் என் கடமையைத் தானே நான் செய்கிறேன்“ என்று விட்ட கதையெல்லாம் எடுபடவில்லை. முறையான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருந்தால் விசாரியுங்கள், உத்தரவு இல்லாமல் ஏதாவது விசாரித்தீர்கள் என்று தெரிந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

 

எம்.பி.நடராஜன் டிஎஸ்பி தான் நம்மை போட்டுக் கொடுத்தது என்பதை அறிந்த சுனில் குமார், உடனடியாக நடராஜனை நகரம் 1 பிரிவிலிருந்து நகரம் 3 பிரிவுக்கு மாற்றுகிறார்.   கன்னியாக்குமரியிலிருந்து மாறுதலில் கண்ணன் என்ற டிஎஸ்பியை நகரம் 1 பிரிவுக்கு நியமிக்கிறார்.

 

ஆனாலும், சுனிலுக்கு பயம் போகவில்லை. கடும் அச்சத்தில் இருக்கிறார்.   புறநகர் கமிஷனர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. சஸ்பெண்ட் ஆகாமல் பணியில் இருப்போமா இருக்க மாட்டோமா, நம் மீதே ஊழல் புகார் வந்துள்ளதே, என்ன செய்வதென்று, தனக்கு நெருக்கமானவர்களிடம், ஜாபர் சேட்டை நம்பி மோசம் போனதைக் கூறி, “அவனுக்கென்ன.. தூங்கி விட்டான்.. அகப்பட்டவன் நானல்லவா“ என்று புலம்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதுதான் சவுக்கின் புலனாய்வில் கிடைத்த தகவல். ஒரு கொசுறு தகவல்.   செல்வி ஜெயலலிதா, மதுரை கூட்டத்திற்கு ஜாபர் சேட் ஏகப் பட்ட தொந்தரவுகளைக் கொடுத்தார் என்று அறிக்கை வெளியிட்டதும், அதிமுகவினர், சேட்டை செட் தோசை ஆக்குகிறோம் பாருங்கள் என்று, சேட் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.



இப்போது சொல்லுங்கள். இது பொதுப் பணித் துறையா…. ? பொதுப் பணத் துறையா … ?

 

Comments  

 
0 #56 nritamil 2011-03-08 14:23
Ippove kannai kattude!!! sshhh apppa.....
Quote
 
 
+1 #55 saran 2011-02-16 23:47
indha kevalamaana long history a confusion illaama clear ah solliyadharku parattukkal
Quote
 
 
+1 #54 nasar tiruppur 2011-01-07 18:52
காவல்த்துறை இல்லை, இது காலை வாறும் துறை
Quote
 
 
+2 #53 nsk 2010-12-01 15:31
enakku neraya sollanum
Quote
 
 
+6 #52 நேர்மைக்காக போராடும் 2010-11-26 22:56
ராமசுந்தரமும் சாதாரண ஆள் கிடையாது மலையையே முழுங்குற ஆள் தான் . அரசு அதிகாரிகளிடையே சாதிபிரிவினையை தூண்டுகிறவன். இவனுங்க எல்லாம் பேசாம அவனுகளோட சாதி சங்கத்துக்கு கக்கூசை கழுவ போகலாம் .
Quote
 
 
+1 #51 jayakumar 2010-11-09 13:34
:cry: :-x
ivangala vitta tamilnadu alindu pogum
Quote
 
 
+2 #50 Pradeep_P 2010-11-01 19:24
இந்த பன்னட பயலுகளா நம்பி தமிழ்நாடு .... :eek:
Quote
 
 
+3 #49 கிரி ....அனகை 2010-11-01 18:33
வீட்டுவசதி வாரியத்தில் வீட்டு மனை மற்றும் வீடு திருவான்மியூர்.முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம் மகன் துர்காசங்கர் மனை எண் 538 சமூக சேவகர்என்ற பெயரில் ஒதுக்கபட்டுள்ளத ு...
Quote
 
 
0 #48 கிரி ....அனகை 2010-11-01 18:26
முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம் மகன் துர்காசங்கர் மனை எண் 538 சமூக சேவகர்என்ற பெயரில் ஒதுக்கபட்டுள்ளத ு ..
Quote
 
 
+3 #47 தோழன் 2010-10-27 18:16
நாங்கதான் படிக்கலியே Tamilan so, நீங்களே கொஞ்சம் சொல்லுங்களேன் யாரெல்லாம் இந்த தேசத்துக்கு favour பண்றாங்கன்னு. சவுக்கு குழு வெறும் புகழுக்காகவோ, சமுக பரபரப்புக்காகவோ எழுதவில்லை, ஆக்கமாக செயல்படுகிறார்க ள்.... உங்களுக்கும் சேர்த்து தான்...
Quote
 
 
+1 #46 tamilan 2010-10-27 11:45
previous comment is for my friend thozhan.
Quote
 
 
-4 #45 tamilan 2010-10-27 11:44
arivali pol ezhuthuvathaga ninaikathae. if u r educated u will come to know who is really favouring for the nation. savukku is jus for his fame he is writing. don be stupid like this. think wisely.
Quote
 
 
+4 #44 தோழன் 2010-10-26 17:46
தமிழன் மற்றும் அனைத்து நடுநிலையாளர்களு க்கும் ஒரு சம்பவம், ஒரு நாள் தெருவில் இரண்டு பேருக்கிடையே அடிதடி நடந்து கொண்டு இருந்தது, அங்க கொஞ்ச பேரு நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க, ஒருத்தர் வந்து அடிதடி-ல புகுந்து தடுத்தாரு அவருக்கும் அடி விழுந்துருச்சு (நம்ம சவுக்கு நினைவுக்கு வந்த நான் பொறுப்பில்ல), வேடிக்கை பார்க்கற கும்பல்ல ஒருத்தர் சொன்னாரு யாருக்கும் ஆதரவு தராதீங்க நடுநிலையோட இருங்கன்னு, அதுக்கு நம்ம ஆளு சொன்னாரு "அட போய்யா நீங்கல்லாம் அடிக்கறவனுக்கு ஆதரவு தர்றீங்க நான் அடி வாங்கறவனுக்கு ஆதரவு தர்றேன், நடுநிலையாளர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்(ல் )பவர்கள் போட்டியில் பலமான பக்கம் உள்ளவர்கள் என்று". நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் நடுநிலையாளர்கள் அல்ல அவர்கள் தான் அத்தனை அக்கிரமத்திற்கு ம் துணை போகிறவர்கள்.

பின் குறிப்பு:
அடி வாங்கியவர் - வேற யாரு தமிழக மக்களான நாமதான்
அடி கொடுப்பவர் - சொல்லனுமா என்ன......?!!!
தடுத்தவர் - சவுக்கு தாங்க...
நடுநிலையாளர் - இத்தனை காலமாக நின்று வேடிக்கை பார்த்த நாமளேதான், நம்ம தமிழன் உட்பட....
Quote
 
 
-6 #43 tamilan 2010-10-26 13:33
U r totally one sided. u r cursing all leaders in dmk y cant u curse any of the admk members. so u r supporting them as per all your articles. u r a cheat. due to some revenge u r writing only about them. how people will believe u alone continously. one day all will question back y u r one sided. already many started asking only admk supporters will support your article but really a broad minded person will not aupport your articles. u r good in bringing all the hiding secrets of politicians of dmk but y not other leaders. they also do bribery they also do all illegal activities.no one is pure in politics except few(v can count it of). if u r supporting one sided u should say that. y u r hiding like a lady.
Quote
 
 
-1 #42 Utthaman 2010-10-25 23:04
எஸ்.ராமசுந்தரம். photo podave illaiye eenn??????
Quote
 
 
+4 #41 Utthaman 2010-10-25 23:02
அப்ப ஆட்சி பண்ணுறது ஜாபர் செட்டு ன்னு சொல்லுங்க ..... கலைஞர் அவருக்கு ஒத்து ஊதுரார நல்ல போள்ளப்புய்ய உமக்கு ......வயசனகாலதுல நல்ல வேலையத்தான் கொடுத்து இருக்கார் ஜாபர் செட்டு.... :lol: :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+1 #40 Deepak.S 2010-10-25 21:25
As per your article, TN new assembly construction is reminding us the Common wealth Game, especially, the opening ceremony for the unfinished buildings, roads etc.
Who are the Suresh Kalmadi, Ms. Sheila Dixit and M.S.Gill in this episode ?
Quote
 
 
+3 #39 கரிகாலன் 2010-10-25 21:11
நண்பர் சவுக்காரே,அருமை யான பதிவு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். விழிப்புடன் பணியாற்றவும். உச்சத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள் யாரும் மக்களை பற்றி கவலை படுவதே கிடையாது போலும். திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால ், இவர்கள் போன்ற திருடர்களை ஒழிக்க ஒருவன் வரவேண்டும் தோழரே.
Quote
 
 
+3 #38 Utthaman 2010-10-25 20:53
நாளைய முதலமைசர் ஜாபர் செட்டு வாழ்க.. வாழ்க வாழ்க.. :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+2 #37 Karthikeyan 2010-10-25 16:30
Please vote for a Tamilan. savuku will publish this kind of good thinks also,

http://itsmeena.wordpress.com/2010/10/19/2010-உலகின்-தலை-சிறந்த-ஹீரோ-ஒர/
Quote
 
 
+1 #36 Karthikeyan 2010-10-25 16:27
http://itsmeena.wordpress.com/2010/10/19/2010-உலகின்-தலை-சிறந்த-ஹீரோ-ஒர/
Quote
 
 
0 #35 மாற்றம் 2010-10-25 16:18
http://changesociety.org/frm/viewtopic.php?id=24
Quote
 
 
+1 #34 Karthikeyan 2010-10-25 15:27
http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sanchar net.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில ் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன

you can vote any number of votes......
Quote
 
 
0 #33 Karthikeyan 2010-10-25 15:27
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாம ல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,க லவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்ட ுள்ளது.
Quote
 
 
+2 #32 Karthikeyan 2010-10-25 15:26
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகி றேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப் படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவு ம் முடியாத கருணை செயல்.
Quote
 
 
0 #31 Karthikeyan 2010-10-25 15:22
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
எந்திரன் முகத்திரை கிழிகிறது என்ற பதிவில் நான் எழுதியது

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிரு ப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
Quote
 
 
0 #30 தோழன் 2010-10-25 11:16
ஒரு அடக்குமுறையை கண்டு சினம் கொள்ளும் மனம் உனக்கு உண்டென்றால், வா நாம் கரம் கோர்க்கலாம் நாமிருவரும் தோழர்கள் என்றான் சே, ரௌத்ரம் பழகு என்றான் பாரதி, கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்க்கு தக என்ற வள்ளுவன் வாக்கு போன்ற அனைத்தயும் மூச்சென எண்ணி செயல்படும் உன் பனி சிறக்க வாழ்த்துகிறேன் தோழா.... உன் கரத்தோடு இந்த இளைய சமுதாயமே கரம் கோர்க்கும்.
Quote
 
 
+2 #29 ஆர்வன்56 2010-10-25 10:08
மிக பெரிய ஊழல் மற்றும் ஒரு மட்டரகமான குடும்ப ரகசிய ஆதாரம் ஒன்று ஜாபர் கையில் உள்ளது.மேலும் நிலா பெயர் கொண்ட ஒரு தாதாவை தன பாதுகாப்பில் வைத்துள்ளதாக தெரிகிறது விசாரியுங்கள் சவுக்கு.
Quote
 
 
0 #28 saravanakumar 2010-10-24 21:20
Enna Kodumai Sir Edhu
Quote
 
 
0 #27 மாதவன் 2010-10-24 20:52
தன்னைச் சுற்றி ஏதோ நடக்கிறது என்பதை தெரிந்ததுமே, உஷாராகிவிட்டாரோ ராமசுந்தரம்.... லஞ்ச ஒழிப்புத்துறையி டம் சிக்கிக் கொண்டால்.. என்று பயந்து வி.ஆர்.எஸ். கொடுத்திருக்கலா ம்!
Quote
 
 
0 #26 தி.தீ-யை எதிர்ப்போர் 2010-10-24 20:32
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாகவே இந்த தேவர்சுந்தரம் விருப்ப ஓய்வுக்கு மனுச் செய்துவிட்டதகவு ம், தமிழக அரசும் இதை ஏற்றுக்கொண்டதாக வும் தினத்தந்தி இன்று செய்தி வெளியிட்டுள்ளது .
Quote
 
 
0 #25 Akm 2010-10-24 18:07
kalakkureenga savukku brtr...
Quote
 
 
+1 #24 premkumar 2010-10-24 15:39
english padathai ye minjividum polla irukirathe
Quote
 
 
0 #23 keerthi 2010-10-24 15:33
is mr.Rajarathinam or Rajamanickam
Quote
 
 
+3 #22 கினிமொழி கபடநிதி 2010-10-24 15:27
ஜாபர்சேட்டுக்கு கருணாநிதியே அடங்கி நடப்பதாக சொல்லொகிறார்கள் அதுபற்றி ஏதாவது தெரியுமா,
Quote
 
 
0 #21 Anandh 2010-10-24 13:47
சுவையான தகவல்கள்.
Quote
 
 
+2 #20 anaymous 2010-10-24 11:46
இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சும் அனைத்து வேலைகளையும் செய்யும் இதுபோன்ற அதிகாரிகளை நக்சலைட்கள்தான் கவனிக்க வேண்டும் !
Quote
 
 
+1 #19 Ravi, USA 2010-10-24 10:45
AyyayyO! Thalai suththuthu!
Quote
 
 
+2 #18 tamilan 2010-10-24 10:38
Quoting அப்பாவித் தமிழன்:
சவுக்கு சார்,
இந்த இன்ஸ்பெக்டர், எஸ்.பி, டி.எஸ்.பி, இதெல்லாம் என்ன போஸ்ட், யாருக்கு யார் மேலே, இந்த காவல் துறையின் கீழிருந்து மேலே உள்ள அத்தனை பதவிகளைப் பற்றியும் விளக்கி ஒரு பதிவு ஒண்ணு தயவுசெய்து போடவும்.

இதெல்லாம் படிக்கும் போது தலை சுற்றுகிறது.

ஆனாலும் இவங்கெல்லாம் ரொம்ப பாவம் சார். தங்கள் பதவிகளைக் காப்பாற்றுவதற்க ாகவும், பதவி உயர்வுக்காகவும் எவ்வளவு போராட வேண்டியுள்ளது.
To get detail ... http://www.tnpolice.gov.in/Organisation.html
Quote
 
 
0 #17 P.Maheswaran 2010-10-24 10:31
sabash sariyana potti...........
ithuthan intraiya athigarikal..........
Quote
 
 
0 #16 Saran 2010-10-24 10:03
பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் திடீர் ராஜிநாமா??!!
Quote
 
 
+2 #15 rukku 2010-10-24 10:00
காவல் துறை என்பது மக்களை காப்பதற்கென்று சிந்தித்து வெள்ளையரால் அன்று அறிமுகப்படுத்தப ்பட்ட துறை, இன்று மக்களைப்பயமுறுத ்தும் துறையாகி,, மக்களை பயமுறுத்தும் மற்றுமொரு துறையான அரசியல்த்துறையி ன் காவலனாகி, மக்களின் கலவரத்துறையாகி நிற்கிறது,
Quote
 
 
+1 #14 Julie 2010-10-24 06:01
இப்பவே கண்ண கட்டுதே
Quote
 
 
+1 #13 Prapakaran 2010-10-24 01:11
Any news about finance department? Bcz tamil nadu do nt knw much abt tamil nadu finance!!
Quote
 
 
+1 #12 யூர்கன் 2010-10-24 00:38
what a game ?? !!
Quote
 
 
+8 #11 சிங்கம் 2010-10-23 22:56
ஆமா,,, சவுக்கு! தூங்கவே மாட்டீங்களா? இந்த ஜாபர்.. சுனில் பின்னாடியே சுத்துவீங்களா? இவங்களுக்கு எப்படி இந்த தைரியம் வருது? அது பத்தி ஏதாவது டீடெய்ல் இருக்கா?
Quote
 
 
+18 #10 MDMK 2010-10-23 22:56
உண்மையான தமிழர்களின் தலைவன் வைகோ அவர்களின் கூட்டத்திலும் இந்த ஜாபர் சேட் சில வில்லங்க வேலைகள் செய்திருக்கிறான ்.. அவனுக்கு அழிவு காலம் சீக்கிரம் வரும் ..
Quote
 
 
+3 #9 அப்பாவித் தமிழன் 2010-10-23 22:53
சவுக்கு சார்,
இந்த இன்ஸ்பெக்டர், எஸ்.பி, டி.எஸ்.பி, இதெல்லாம் என்ன போஸ்ட், யாருக்கு யார் மேலே, இந்த காவல் துறையின் கீழிருந்து மேலே உள்ள அத்தனை பதவிகளைப் பற்றியும் விளக்கி ஒரு பதிவு ஒண்ணு தயவுசெய்து போடவும்.

இதெல்லாம் படிக்கும் போது தலை சுற்றுகிறது.

ஆனாலும் இவங்கெல்லாம் ரொம்ப பாவம் சார். தங்கள் பதவிகளைக் காப்பாற்றுவதற்க ாகவும், பதவி உயர்வுக்காகவும் எவ்வளவு போராட வேண்டியுள்ளது.
Quote
 
 
+3 #8 அனானி 2010-10-23 22:52
ராமசுந்தரம் வி,ஆர்.எஸ். வாங்கப் போவதாக படித்தேன். எது உண்மை சவுக்கு?
Quote
 
 
0 #7 அனானி 2010-10-23 22:50
அவர் வி.ஆர்.எஸ். வாங்கப் போவதாக ஒரு வாரப்பத்திரிகைய ில் படித்தேன். எது உண்மை?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 67 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9861
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week31060
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month233792
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12755911