|
மாற்றத்தைத் தவிர மாறாதது எதுவுமில்லை என்பது இயக்கவியல் விதி. ஆனால், அந்த விதியை மாற்றுவேனே ஒழிய, நான் மாற மாட்டேன் என்பதை ஜெயலலிதா மீண்டும் நிரூபித்து உள்ளார்.

நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பணியாற்றி வந்த 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள், ஒரே அரசாணையில் வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
இந்த மக்கள் நலப் பணியாளர்கள் முதன் முறையாக 1990ம் ஆண்டில் திமுக அரசால் நியமிக்கப் பட்டனர். ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், பணியாற்றும் இந்த அரசு ஊழியர்கள், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தக் கூடிய வேலை வாய்ப்புத் திட்டங்கள், மற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகளுக்கு உதவியாக செயல்படும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். 1990ல் இவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாய் ஊதியமாக கொடுக்கப் பட்டு வந்தது.
1991ல் அதிமுக ஆட்சி வந்ததும், கருணாநிதியால் வேலை கொடுக்கப் பட்டவர்களை எப்படி வேலையில் வைக்கலாம் என்று அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா. 1996ல் திமுக ஆட்சி வந்ததும், வேலையிழந்த அத்தனை பேருக்கும் மீண்டும் வேலை கொடுக்கப் பட்டது. 2001ல் அதிமுக ஆட்சி வந்தது. விடுவாரா ஜெயலலிதா…. ? மீண்டும் அத்தனை பேரும் நீக்கப் பட்டனர்.
2006ல் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள் நலப் பணியாளர்கள் அமர்த்தப் பட்டனர். அவ்வாறு அமர்த்தப் பட்டவர்களைத் தான் ஜெயலலிதா தற்போது பணி நீக்கம் செய்திருக்கிறார். தற்போது பணி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் ஊதியமாக கொடுக்கப் பட்டு வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களான தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் களப்பணியாளர்களாக இவர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 12 ஆயிரம் பேர் ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

‘எளிதல்ல’ என்ற பதிவுக்கு பின்னூட்டமாக மின்னஞ்சலில் சவுக்கு வாசகர், அருள் விக்டர் சுரேஷ் என்பவர் “திமுக அரசின் இறுதி நாட்களில், அதிமுக அரசு அமையும் பட்சத்தில் தமிழக நிர்வாகம் பெரிய அளவில் மாற்றம் பெறும் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கினீர்கள். நீங்களே உண்மையில் அப்படி நம்பினீர்கள் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால், புதிய அரசிற்கு ஆலோசனைகள் வழங்குங்கள் என்றெல்லாம் முயற்சிகள் எடுத்திருக்க மாட்டீர்கள்.
2006 - 2011 திமுக அரசின் மேலுள்ள கடுமையான விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டு நோக்கும் போது, சுதந்தரமான கருத்துக்களை முடக்குவதில் அதிமுக, திமுகவை விட ஆயிரம் மடங்கு மோசமானது என்பது வரலாறு. எனவே, தங்களது தற்போதைய நிலைமை எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஏன் இதை நீங்கள் முன்னமே எதிர்பார்க்கவில்லை என்ற வியப்பைத்தான் அளிக்கிறது.” என்று எழுதியிருந்தார்.
தற்போது மிக முக்கியமான நபராக இருக்கும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் 1993ம் ஆண்டில் எழுதிய கட்டுரையில், கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு சொல்லுகையில் “கருணாநிதியைப் பார்க்கும் போதெல்லாம் புடவை கட்டிய ஜெயலலிதாவாகவும், ஜெயலலிதாவைப் பார்க்கும் போதெல்லாம் வேட்டி கட்டிய கருணாநிதியுமாகவே எனக்குத் தெரிகிறது” என்று எழுதியிருந்தார்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது ஊரறிந்த விஷயம். நயமான வார்த்தைகளைப் பேசி, இனிப்பு தடவி விஷத்தை ஊட்டும் கலையில் கருணாநிதி வல்லவர். ஜெயலலிதாவுக்கு அந்தக் கலை தெரியாது. தடாலடியாக நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் எதிர்ப்பை நேரடியாக சந்தித்துக் கொள்பவர் ஜெயலலிதா. அதே நடவடிக்கைகளை நாசூக்காக எடுத்து, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல செய்பவர் கருணாநிதி.
அருள் விக்டர் சுரேஷ் சொல்லியது போல, ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பரவாயில்லை என்பதையே ஏற்றுக் கொள்ளள முடியாது. பின் ஏன் 2011 தேர்தலில் வெளிப்படையாக அதிமுகவை ஆதரிக்க வேண்டும் ?
அப்போது இருந்த திமுக ஆட்சியை அகற்றுவதற்கு அதிமுகவை ஆதரிப்பதை விட வேறு ஏதாவது வழி இருந்ததா ? இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், வீரபாண்டி ஆறுமுகம், கேபிபி சாமி, கே.என்.நேரு, பொன்முடி, சக்சேனா என்று ஊரை அடித்து உலையில் போட்ட மக்கள் விரோதிகள் சிறிது காலமாவது சிறையில் இருக்கிறார்கள். ஒரு வேளை திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் ? குறைந்த பட்சம் கனிமொழி கூட சிறை சென்றிருக்க மாட்டார். இவர்களின் அடாவடிகள் இன்று வரை தொடர்ந்திருக்கும். சிறிது காலமாவது சிறையில் இருந்தால் தான் இவர்களுக்கு சாமான்ய மக்களின் வலி என்ன என்பது புரியும். மேலும் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தில், கொஞ்சமாவது கோர்ட்டு கேஸ் என்று செலவு செய்வார்கள்.
திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால், நீங்களும் நானும் சாலையில் நடமாடக் கூட முடிந்திருக்காது என்பதே உண்மை. இந்த ஒரே காரணத்துக்காகத் தான் அதிமுக ஆட்சி வர வேண்டும் என சவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகமும் விரும்பியது.
அதற்காக ஜெயலலிதா மிகச் சிறந்த ஆட்சியைத் தரப்போகிறார் என்று நம்பியதாக கருதக் கூடாது. மிகச் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என்ற ஆதங்கமே… இரண்டு முறை மிக மோசமான தேர்தல் தோல்விகளைச் சந்தித்த ஜெயலலிதா பாடம் கற்றுக் கொள்வார், ஓரளவாவது திருந்துவார் என்று எதிர்ப்பார்த்தது தவறா ?
இவர் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை என்பதை அவரது தொடர்ச்சியான நடவடிக்கைகள் காட்டுகின்றன.
சமச்சீர் கல்வி என்ற திட்டத்தை ரத்து செய்ததற்கு ஒரே காரணம் அது கருணாநிதியால் கொண்டு வரப் பட்டது என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. உயர்நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி, மாணவர்களின் வாழ்க்கையில் அரசியலைப் புகுத்தாதீர்கள் என்று உத்தரவிட்ட பின்னரும், ஏறக்குறைய இரண்டு மாத காலத்திற்கு பிள்ளைகள் பாடப்புத்தகங்களே இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தார் ஜெயலலிதா. இதற்கு ஒரு கமிட்டியைப் போட்டு, ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிப்பவர்களாகப் பார்த்து அந்த கமிட்டியின் உறுப்பினர்களாகப் போட்டு, அவர்களை வைத்து, சமச்சீர் கல்வி, மனித குலத்திற்கே விரோதமான ஒரு திட்டம் என்று அறிக்கை அளிக்க வைத்தார்.
அழகான ஒரு நூலகக் கட்டிடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுகிறேன் என்று, பெரும்பாலான மக்கள் விரோதத்தைச் சந்தித்திருக்கிறார் ஜெயலலிதா. அவரின் பிடிவாதமான மக்கள் விரோத நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இன்று 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.
அரசு ஊழியர்களோடு, 18 ஆண்டு காலம் பழகியதால், அவர்களின் மனநிலை சவுக்குக்கு அத்துப் படி. அரசு ஊழியனுக்கு, வேலைதான் உலகம், உயிர், எல்லாமும். சாதாரணமாக ப்யூன் வேலைப் பார்ப்பவன் கூட, ‘கவர்மென்ட் வேலை’ என்று பெருமையாக கூறிக்கொள்வான். அந்த அரசு வேலைக்கு ஏதாவது ஒரு சிறு ஆபத்து என்றால் கூட அரசு ஊழியர்களுக்கு உயிரே போய் விடும். ஒரு சாதாரண மெமோ கொடுத்தற்கே ராத்திரி பகலாக தூங்காமல், அதிகாரிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்கள்.
அரசு ஊழியர்கள் அனைவருமே கடுமையான உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் என்று சொல்லவில்லை. 80 சதவிகித அரசு ஊழியர்கள் நிச்சயமாக கடினமாக வேலை செய்யக் கூடியவர்கள் தான். மீதம் உள்ள 20 சதவிகிதத்தினர் எங்கே லஞ்சம் கிடைக்கும் என்று, அரசுப் பணியை லஞ்சத்துக்காகவே பயன்படுத்துபவர்கள். இப்படி அரசுப் பணியை உயிராக நினைக்கும் அரசு ஊழியர்களில் ஒன்றரை லட்சம் பேரை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா. அரசு ஊழியர் என்றால் அவர்களின் பின்னால் ஒரு குடும்பம் உண்டு என்பதை ஜெயலலிதா அன்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒன்றரை லட்சம் பேரை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல், அவர்கள் குடியிருந்த அரசுக் குடியிருப்பிலிருந்து அவர்களை இரவோடு இரவாக காலி செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது ஜெயலலிதா அரசு. ஆயிரக்கணக்கானோர் ரவுடிகளையும் திருடர்களையும் போல, இரவோடு இரவாக வேட்டையாடி கைது செய்யப் பட்டனர். இதற்கு காரணம் அவர்கள் ஒன்றும் பெரிய தேசத் துரோகத்தை செய்து விடவில்லை. ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த, பஞ்சப்படி, விடுப்பு காலச் சலுகை, பண்டிகை முன்பணம், சரண் விடுப்பு போன்ற சலுகைகளை நிறுத்தியதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
அந்தச் சலுகைகளை நிறுத்தி விட்டு அரசு ஊழியர்களை சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்றார் ஜெயலலிதா. 94 சதவிகித அரசு வருவாயை 2 சதவிகிதம் இருக்கும் அரசு ஊழியர்கள் பறித்துக் கொள்கிறார்கள் என்றார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா, அதே 2 சதவிகித அரசு ஊழியர்களுக்கு அந்தச் சலுகைகளை மீண்டும் வழங்கினார். அரசு ஊழியர்கள் சரியாக பணியைச் செய்யவில்லை, அவர்களை சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று சொன்ன ஜெயலலிதா, முதலமைச்சராக கோப்புகளைப் பார்க்கும் தனது பணியை எப்படிச் செய்தார் என்பதை 2006ல் முதலமைச்சராக வந்த கருணாநிதி வருடக் கணக்கில் ஜெயலலிதா கோப்புகளை எப்படி கட்டி வைத்திருந்தார் என்பதை பட்டியலிட்டார்.
அந்தத் தேர்தலில் கிடைத்த படிப்பினைகள், ஜெயலலிதாவை பக்குவப் படுத்தியிருக்க வேண்டும். திருத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தோல்விகளும், அதற்குப் பிறகு கிடைத்த தோல்விகளும் கொடுத்த பாடத்தை விட, 2011 தேர்தலில் கிடைத்த வெற்றி ஜெயலலிதாவுக்கு அகந்தையை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது.
12 ஆயிரம் ஊழியர்களுக்கு மாதந்தோறும் தலா 2500 ரூபாய் கொடுக்கப் படுவது என்பது ஒன்றும் அரசுக்கு பெரிய செலவினம் இல்லை. அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்பது ஜெயலலிதாவுக்கு பெரிய குறையாக இருக்குமேயானால், அவர்களிடம் சரி வர வேலை வாங்காத அதிகாரிகள் மீதல்லவா ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் ?
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்திய சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. அவர்களோடு இருக்கும் மற்ற அதிகாரிகள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

இன்று ஆயிரக்கணக்கில் நில அபகரிப்புப் புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது எனது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பெருமையாக கூறிக் கொள்ளும் ஜெயலலிதா, இந்தப் புகார்கள் திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப் பட்ட போது, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் ? பத்திரப் பதிவுத் துறை மற்றும் காவல்துறையினர் உதவி இல்லாமல் இத்தனை நில அபகரிப்புகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா ?
தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லாத ஜெயலலிதா, 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது, அவர்கள் கிள்ளுக் கீரைகள் என்ற நினைப்புதானே ?
அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் எத்தனை பெரிய செல்வத்தையும் தேய்க்கும் படை.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும் என்கிறார் அய்யன் வள்ளுவர். உங்களுக்கு தமிழ் பிடிக்காது. அதனால் உங்களுக்காக ஆங்கிலத்திலும் இந்தக் குறள் வழங்கப் படுகிறது.
'Tis ruin if man do an unbefitting thing; Fit things to leave undone will equal ruin bring.
He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.
செய்யக் கூடாதவற்றைச் செய்தால் வரும் கேடு, எந்த வடிவிலும் வரும். பெங்களுரு நீதிமன்ற வடிவத்திலும் வரும்.
|
Comments
இந்த சினிமாவிர்க்கு வரி விலகை ரத்து பன்னுனா அரசுக்கு இன்னும் வருமானம் வருமே.....
நான் உங்கள் நலம் விரும்பி! ஒரு "மிடில் கிளாஸ் " நண்பன்!
இந்த விஷயத்தில் ஜெ. செய்தது மிகச் சரி!
எங்கள் கிராமத்தில் "இவர்கள்" வேலை செய்து கிழித்ததை நான் பார்த்து இருக்கிறேன்! தண்ட செலவு மிச்சம்!
"உழைத்து" சாப்பிட சொல்லுங்கள்!உடம ்பில் ஒட்டும்!
மேலும், அரசு ஊழியர்களில் "நல்லவர்:லஞ்சபேய ்கள்", "20 :80 " என்பதே என் தாழ்மையான கருத்து!
நன்றி!
முடிவை நீங்களே சொல்லுங்களேன்.... மதிமுக இல்லையா?
வைகோ இல்லையா??
Agreed!!!!! 100% truth.
What the hell பார்ப்பனியம் has got to with this current issue? That old man from DMK has constantly used this caste issue and has made the people of TN absolute fools. Even educated people like you still keep using this as a weapon to hurt a section of the population. Can't you write any thing with out bringing caste into that? Why cannot the real subject be discussed in a decent manner with out resorting to cheap politics? You are a disgusting fellow!
இப்போது நமது ஒரே நன்பிக்கை அண்ணா ஹசாரே தான். காலம் பதில் சொல்லும்.
Regards
www.iAvadana.com
சோதிட சாஸ்த்திரங்கள் எதை சொல்லுகின்றனவோ அதை பின்பற்றியே ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன. நீதிமன்றங்களுக் கு சமூகமளிப்பது விலத்தி வைப்பது எல்லாமே சோதிடர்களின் முடிவை பின்பற்றியே நடக்கின்றன.
ஆறு மணிநேரங்கள் அசையாமல் யாக புகை மூட்டத்துள் உட்கார்ந்து தவம் செய்த நிகழ்வுகளும் சமீபத்தில் நடந்திருக்கின்ற ன.
மக்களை நம்புவதைவிட அவர் சோதிட முடிவுகளையே உறுதியாக நம்புகிறார். ஜெயலலிதா செய்து வரும் ஒவ்வொரு கருமங்களையும் கூர்ந்து கவனித்தால் இந்த இரகசியம் நன்கு புலப்படும்.
சோதிட சாஸ்த்திரத்தின் விதிப்பயன்படி, தனது ஆட்சி அதிகாரத்திற்கு குறிப்பிட்ட காலம்வரை பங்கமில்லை என்று தெரிந்துகொண்டு தனது விரோதியான கருணாநிதியை கருவறுக்கிறேன் என்று மக்கள் விரோதத்தை சம்பாதித்துக்கொ ண்டிருக்கிறார்.
மக்களின் வயிற்றெரிச்சல் கிரகங்களின் பார்வைகளையே கட்டுப்படுத்தக் கூடியது. என்ற சோதிட உண்மையை அம்மா விரைவில் அறிந்துகொள்ளுவா ர்.
இச்செய்தியை நண்பர்கள் பலர் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டா லும் பரவாயில்லை. யதார்த்தம் அப்பட்டித்தான் இருக்கிறது.
ஜெயலலிதா எடுத்த முடிவு சரி. அண்ணா நூலக விசயத்தில் தவ்று. அண்ணா நூலக விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு ஐடியா கொடுத்தது செங்கோட்டையனுன் , ஓ. பன்னீர் செல்வமும் என்று கேள்வி.
ஆனால் நீங்க அந்தத் திருமாவளவனை தலையில் தூக்கி வைத்து ஆடுவது தான் கவலையாக உள்ளது..[/ஃஉஒடெ]
அவரும் காரியக்காரர் தான் சொனியாக்கு வாழ்க சொன்னவர்தானே
முதல்வர் ஜெயலலிதா.....
:உன் பிள்ளைக்கு பள்ளிப்போக சைக்கிள் கொடுத்தேன்.
:சாப்பிட மத்திய உணவு கொடுத்தேன்.
:உன் மகளுக்கு திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் கொடுத்தேன்.
:உன் அம்மாவுக்கு முதியோர் உதவி தொகை கொடுத்தேன்.
: உன் மனைவிக்கு மிக்சி,கிரண்டர் ,விசிறி மற்றும் ஆடுகள், மாடுகள் என வாரி வழக்கினேன்
என்ன நலனும் செய்தேன் ஆனால் "மக்கள் நல பணியாளர்கள்" என்ற பெயரில் லஞ்சம் வாங்கிக்கொடுக்க ும் புரோக்கராக வலம் வந்தாய்... அரசியல் செய்தாய்... ஆதனாலேயே உன்னை வீட்டுக்கு அனுப்பினேன்...!
Quote
க
நான் உங்கள் நலம் விரும்பி! ஒரு "மிடில் கிளாஸ் " நண்பன்!
இந்த விஷயத்தில் ஜெ. செய்தது மிகச் சரி!
எங்கள் கிராமத்தில் "இவர்கள்" வேலை செய்து கிழித்ததை நான் பார்த்து இருக்கிறேன்! தண்ட செலவு மிச்சம்!
"உழைத்து" சாப்பிட சொல்லுங்கள்!உடம ்பில் ஒட்டும்!
மேலும், அரசு ஊழியர்களில் "நல்லவர்:லஞ்சபேய ்கள்", "20 :80 " என்பதே என் தாழ்மையான கருத்து!
நன்றி!
இதன்படி, திமுக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துமாம். ஏன், எதற்கெடுத்தாலும ் வழக்கு தொடுக்கும் இவர்கள் இதற்கும் நீதிமன்றத்துக்க ுச் செல்ல வேண்டியது தானே? ஏனென்றால், அப்படி நீதிமன்றம் சென்றால் திமுக-வின் குட்டு வெளிவந்து விடும். அதனால் இதற்கு வெட்டி போராட்டம் செய்வது தான் சரி.
திமுக ஆட்சியிலேயே ஒரு அரசு அதிகாரி, இந்த திட்டத்தை ரத்து செய்து விடலாம் என்று கருணாநிதிக்கு அறிக்கை கொடுத்தால் இது எவ்வளவு பெரிய போங்கு திட்டமாக இருக்கவேண்டும்.
Wow.. கேட்கும் போதே கண்கள் கலங்குகின்றன..
ஜெ’வுக்கும் நூலிழையில் விபத்து நடக்கும்
தப்பிக்கவும் செய்வார்....
சட்டம் தோற்கும் பார்ப்பனியம் வெல்லும்...
+7 #10 Anniyan 2011-11-09 14:56
Amma your good job this time.....this employees very worst in every V.A.O. office and other panchayath Office..//
திரு அந்நியன், திரு சோழன்,
உண்மையான சோழனும் நானும் வெகுகாலமாக கருத்துப் பதிவுகளைச் செய்து வருகிறோம். இடையில் ஒருமுறை "அந்நியன்" என்று பெயரிட்டு (நான் எழுதுவது போல் பாவித்து, என்மேல் பழி உண்டாக்கும் நோக்கோடு) ஒருவர் தலித்களையும், தமிழர்களையும் இழிவாகப் பேசியும் எழுதியிருந்தார் . இப்போது நீங்க இருவரும் புதுக் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்.
சவுக்கின் கட்டுரை நன்று. வேலையை விட்டு எடுத்தல் நியாயமன்று. இதை விட ஜெயலலிதா புத்திசாலித்தனம ாக 24 ,000 அதிமுக ஆதரவாளர்களை நியமிக்கலாம். அல்லது இந்த 12 000 பேரிடமும் பேசி நிரந்தரப்பணியாள ர் ஆக்குவதாகவும், அதற்கு ஊழல்களை அவர்கள் காட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் செய்யலாம். இதன் மூலம் ஜெயாவின் கெட்ட பெயர் மாறிவிட வாய்ப்புள்ளது.
ஆனால் நீங்க அந்தத் திருமாவளவனை தலையில் தூக்கி வைத்து ஆடுவது தான் கவலையாக உள்ளது..
இங்கு எல்லோரும் ஒன்றை கவனிக்க வேண்டும் !
//மக்கள் நல பணியாளர்கள் எல்லோரும் ஒன்றும் அரசு தேர்வானையத்தின் மூலமாகவோ அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ வந்தவர்கள் அல்லர். அத்தனையும் கருனாநிதியின் கட்சி காரர்கள் அனுதாபிகள்...//
# நண்பர் தியாகு அவர்கள் கூறியவை உண்மையாக இருந்தாலும், மக்கள் பணியாளர்களை ஒரு இரவில் வேலையை விட்டு தூக்க ஜெயலலிதா அவர்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட அதிகாரம்தான் பயன்பட்டிருக்கி றது.
அத்துடன் அத்தனைபேரும் கருனாநிதியின் கட்சி காரர்கள் மற்றும் அனுதாபிகள் என்றும் சொல்லியிருக்கிற ார். தமிழ்நாட்டில் கடைசியாக நடந்த தேர்தலில் திமுக பெற்ற எம்எல்ஏ களே முப்பதுக்கும் உட்பட்டவை. ஆரம்பத்தில் கருணாநிதியின் அனுதாபிகளாக இருந்த பல கோடி மக்கள் கருணாநிதியை புறக்கணித்து ஜெயலலிதாவை வெற்றி பெறவேண்டுமென்று வாக்களித்திருக் கின்றனர்.
நண்பர் குறிப்பிட்டதுபோ ல கருனாநிதியின் ஆதரவாளர்களாக இருந்தால் அவர்கள் (அதிமுக) அரசில் வேண்டத்தகாதவர்க ள் என்று கொள்ளவேண்டுமா. அது தர்மம் ஆகுமா?
வசதியானவர்கள் ஒரு சிலர் தவிர, வரலாற்றில் மத்திய வகுப்பினரும் ஏழைகளும் ஒரே கட்சிக்கு தொடர்ந்து வாக்களித்ததில்ல ை. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும்த ான் மாறி மாறித்தான் வாக்களித்து வருகின்றனர். ஆட்சி மாற்றங்கள் அதை உறுதி செய்கின்றன.
கட்சியின் மாசே, வசே. மந்திரி எம்எல்ஏ க்கள் தொடர்ந்து ஒரேகட்சியில் இருக்கலாம். அதில் கூட மாற்றம் நடந்திருக்கிறது .
எது எப்படியிருப்பின ும் மாற்றுக்கட்சிக் கு வாக்களித்தவர்கள ் என்பதால் ஒரு வரையறைப்படுத்தா மல் ஒரு இரவில் கட்டளையிட்டு கடை நிலையில் உள்ள அவர்களின் வேலையை புடுங்கிக்குள்ள ுவது ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்.
உகண்டாவின் இடி அமீனும், ஜெ,ர்மானிய ஹிட்லரும் இந்த நடைமுறையைத்தான் தெரிவு செய்திருந்தனர்.
இப்படியே போனால் யாரோ கூறியதுபோல கடவுள் கர்நாடகா நீதிமன்ற வடிவத்தில் எடியூரப்பாவின் நிலை ஏற்பட்டாலும் வியப்பதற்கில்லை . அப்படி ஒருவேளை நடந்தாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் அமைதி காப்பார்களே தவிர. ஆதரவு எதையும் காட்டமாட்டார்கள ்.
குறிப்பு: கடைசி தேர்தலின்போது கருணாநிதி தோற்று ஜெ முதல்வராக வரவேண்டுமென மிகவிரும்பியவர் களில் நானும் ஒருவ
What karunanidhi did ? You should not compare Karuna with Jaya....... Jaya is always 100 times ahead of Karuna in all means even though she is so aggressive & adamant....
மக்கள் நல பணியாளர்கள் எல்லோரும் ஒன்றும் அரசு தேர்வானையத்தின் மூலமாகவோ அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ வந்தவர்கள் அல்லர். அத்தனையும் கருனாநிதியின் கட்சி காரர்கள் மற்றும் அனுதாபிகள்...
இந்த மக்கள் நல பணியாளார்கள் என்ன செய்தார்கள் தெரியுமா..?
வந்து போகும் ஏழைகளிடம் பறித்து அதிகாரிகளுக்கு கொடுக்கும் அற்புதபணியை செய்தார்கள்.
கமிஷன், கட்டிங் என எல்லாமும் கிடைக்கும்.
கலைஞர் டி.வி.யில் போராட்டம் பண்ணுகிறவர்களை பாருங்கள் 2500 சம்பளம் வாங்குகிறவர்களை ... எத்தனை மிடுக்கு என்று..!
பசை இல்லாமல் எந்த நோட்டு ஒட்டும்..![/ஃஉஒடெ]
பாப்பாத்திகளை காட்டியதால் கருணாவின் சக்கர நாற்காலிக்கும் ஜொள்ளு வடிந்தது என்று கவிதை விட்ட ஆளு ஜெயா காலை எப்படி முக்கி நக்குகிறார் பாருஙக சனங்களே.
தி முக ஆட்சி மீண்டும் வந்திருக்குமானா ல் அவர்களால் உருவாக்க பட்ட இன்ஃப்ரச்ட்ருச் டுரெ மேலும் உருதியடைதிருக்க ம்
ஒவ்வொரு மந்திரியும் நல்ல சினைப்பன்னி மாதிரி இருந்தானுன்க போய்யா போ வாய்ல கேவலமா வந்துரும்.
மக்கள் நல பணியாளர்கள் எல்லோரும் ஒன்றும் அரசு தேர்வானையத்தின் மூலமாகவோ அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ வந்தவர்கள் அல்லர். அத்தனையும் கருனாநிதியின் கட்சி காரர்கள் மற்றும் அனுதாபிகள்...
இந்த மக்கள் நல பணியாளார்கள் என்ன செய்தார்கள் தெரியுமா..?
வந்து போகும் ஏழைகளிடம் பறித்து அதிகாரிகளுக்கு கொடுக்கும் அற்புதபணியை செய்தார்கள்.
கமிஷன், கட்டிங் என எல்லாமும் கிடைக்கும்.
கலைஞர் டி.வி.யில் போராட்டம் பண்ணுகிறவர்களை பாருங்கள் 2500 சம்பளம் வாங்குகிறவர்களை ... எத்தனை மிடுக்கு என்று..!
பசை இல்லாமல் எந்த நோட்டு ஒட்டும்..!
RSS feed for comments to this post