|
திமுக தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கையைப் படித்தால் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
“உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட தற்கு பிறகு ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 437ன்படி கனிமொழி போன்றவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கின்றனர். சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரைகளையும் சிந்தித்துப் பார்க்கும்போது, கருத்தியல் அடிப்படையிலானதும், நிலை நிறுத்த முடியாததுமான அனுமானங்கள் ஆழமாய் பதிந்து விட்டனவோ என்ற அய்யப்பாடும், நீதி தாமதிக்கப்படுகிறதோ என்ற வேதனையும் நமக்கு நெருடலை ஏற்படுத்தத் தான் செய்கிறது.

இந்தியத் திருநாட்டின் ஜனநாயகம் இற்றுப் போய் விடாமல் தாங்கி நிற்கும் மிக முக்கிய தூணாகவும், இந்திய மக்களின் இறுதி நம்பிக்கையாகவும் விளங்கும் நீதிமன்றங்கள் சட்ட ரீதியான உரிமையை வழங்கிடவும், சட்டத்தின் அடிப்படை அம்சங்களைக் காப்பாற்றிடவும், தயக்கம் காட்டுமானால் இந்திய ஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்ற வினாவும் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையும் எல்லோரது உள்ளங்களிலும் எழுவது தவிர்த்திட இயலாத ஒன்றாகும்.” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய ஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறதாம்…. என்ன ஒரு கவலை.
கருணாநிதி ஆட்சி காலத்தில், 2010ல் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை முன் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் என்ன சொல்லப் பட்டிருந்தது தெரியுமா ?
நளினி விடுதலை பெற்றபின், ராயப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்குவார். அந்தப் பகுதி, அமெரிக்க தூதரகம் மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி. ஆகையால் நளினி அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதால், நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சொல்லப் பட்டிருந்தது.
நளினியை விடுதலை செய்தால் ‘தியாகத் திருவிளக்கின்’ மனம் நோகும் என்பதற்காகத் தான் கருணாநிதி நளினியை விடுதலை செய்யவில்லை என்பது பச்சிளம் குழந்தைக்குக் கூட தெரியும். 21 ஆண்டுகளான ஒரு பெண் தன் குழந்தையிடமிருந்து பிரிந்து சிறையில் இருக்கிறார்.
நேற்றைய தனது அறிக்கையில் கருணாநிதி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவருவதற்கான உரிமை உள்ளது என்று ஒரு வழக்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அளித்துள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டி, அந்த நடை முறையை நீதித் துறை கவனத்திலே கொள்ள வேண்டும் என்ற திக்விஜய் சிங் சொன்னதாகச் சொல்லியிருக்கிறார்.
இதே கிருஷ்ணய்யர் தானே மாருராம் என்ற வழக்கில் ஒரு சிறை வாசி, ஆயுள் தண்டனையில் 14 ஆண்டுகளை கழித்தால் விடுதலை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். ஐந்து மாதங்கள் தன் மகள் சிறையில் இருப்பது பொறுக்காமல் புலம்பும் கருணாநிதி 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பெண்ணைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டாமா ?
1997ம் ஆண்டு ஒரு வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப் பட்ட அப்துல் ரஹீம், குணங்குடி ஹனீபா, முபாரக் அலி உள்ளிட்டோரை ஜாமீனே கொடுக்காமல் 12 ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது இதே கருணாநிதி அரசு தானே…. அவர்கள் மீது போதுமான ஆதாரங்கள் இல்லாததால், வழக்கையும் நடத்தாமல் இழுத்தடித்தது கருணாநிதியின் காவல்துறைதானே…..
இன்று கனிமொழி சிறையில் இருப்பதற்கு யார் காரணம் ? கருணாநிதிதானே… தன் இரண்டாம் தாரத்து மகன்களுக்குப் போட்டியாக, மூன்றாம் தாரத்து வாரிசான கனிமொழியை போட்டி போட்டுக் கொண்டு அரசியலில் இறக்கியது நாங்களா ?

நானும் கவிதை எழுதுகிறேன் என்று, இலக்கிய வியாபாரம் செய்து கொண்டிருந்தவரை, அரசியலில் இறக்கி விட்டது யார் தவறு ?
2008 அக்டோபர் மாதத்தில் கனிமொழி மந்திரி பதவிக்காக காத்திருக்கிறார் என்று ஒரு விமர்சனக் கட்டுரை வந்தது. அந்தக் கட்டுரையில் கருணாநிதி கவிதை எழுதுவதையும் விமர்சித்திருந்தனர்.
கருப்பாயி; கருப்பாயி; நீ சிவப்பாகிக்
கட்டுரை யொன்று தீட்டியதைக் கண்டேன் ஜன சக்தியிலே
கவிதை நான் எழுதுவதைக் கிண்டல் கேலி செய்துள்ளாய்-
"காலுக்கு செருப்புமில்லை; கால் வயிற்றுக் கூழுமில்லை
வீணுக்குழைத்தோமடா எந்தன் தோழா'' என்று அண்ணன் ஜீவா
எழுதியதும் கவிதை தானே!
"சொத்துரிமை இல்லாத மக்கள்
சொறி நாய்போல் எரி நெருப்பின்
பெரு நாக்கில் சிக்கிவிட்ட சீரழிவை
ஒரு நாக்கால் சொல்வதற்கா முடியுமய்யா?''
இப்படி நான் எழுதியது மட்டும் கவிதையல்ல; கத்தும் "கழுதை'' என்று!
செப்பிடுவீர்; இந்த ஜெகம் சிரிக்கட்டும் உமைப்பார்த்து
கனிமொழி என் கண்மணி நான் பெற்றெடுத்த பொன்மணி-
கம்யூனிஸ்ட் விழாக்களில் எல்லாம் அவர் கலந்து கொள்ள வேண்டுமென்று
கனிவுடனே அழைத்துச் சென்றீர்-இன்று அவர்
கழக நாடாளுமன்ற உறுப்பினர்-களைப்பின்றி அலுப்பின்றி
கடமை ஆற்றுகின்றார் சமூக சேவையில்-
கலை, இலக்கியம், கல்வித்துறைகளிலே
கடுமையாய் உழைக்கின்றார் மகளிர் சிறந்திடவே
கம்யூனிஸ்டு ஏடு ஜனசக்திக்கு அதேன் கசக்கிறதோ?
கனிமொழி காத்திருப்பது மந்திரி பதவிக்காக என்று
கம்யூனிஸ்ட் ஜனசக்தியில் கருப்பாயி கட்டுரை தீட்டுகிறார்-
அண்டை நாடு ஈழத்தில் இனச் சண்டை இன்னும்
அடங்காத காரணத்தால் - இங்குள்ள கட்சிகளிடை
அரசியல் மோதல் வேண்டாமென்று
அடக்கமாக இருப்போம் என்றால்
அம்மாவின் அடியொற்றி
ஆரம்பம் செய்கின்றார் அமளிக்கென்றால்;
பூகம்பம் ஒன்றும் வந்துவிடாது;-நாம்
பொறுமையாகத் தொடர்ந்து இருப்பதாலே;
ஆனாலும் அமைச்சர் பதவி குறித்து
அவதூறு கூறுவோர்க்கு அவர் வாய் மூட
அவர்கள் வரலாறே சான்று கூற வந்து நிற்குமய்யா!
குமாரமங்கலம் ஜமீன்தார் சுப்பராயன்
அமைச்சராக இருந்ததும்-பின்னர்
அவர் மகன் மோகன் குமாரமங்கலம்
அமைச்சராகப் பதவி பெற்றதும்-பிறகு
அவர் மகன் ரெங்கராஜன் குமாரமங்கலம்
அமைச்சராகப் பொறுப்பு வகித்ததும் அவரவர் திறமையினாலா?
அல்லால்; அவர் குடும்பப் பெருமையினாலா?
"ஜனசக்தியில் சமுத்திரம் கட்டுரை;''
"ச முத்திரத்தில் நெடில் மிகுந்து"
"நெடியேறும் விதமாக;'' எமைத் தாக்கி
வந்தது தான் அவலம், அவலம்!
இதுதான் அந்தக் கவிதை. மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரத்தைப் பற்றிய கருணாநிதியின் விமர்சனத்தைப் பாருங்கள். இந்தக் கவிதை வரிகளில் கருணாநிதி
கனிமொழி என் கண்மணி நான் பெற்றெடுத்த பொன்மணி-
கம்யூனிஸ்ட் விழாக்களில் எல்லாம் அவர் கலந்து கொள்ள வேண்டுமென்று
கனிவுடனே அழைத்துச் சென்றீர்-இன்று அவர்
கழக நாடாளுமன்ற உறுப்பினர்-களைப்பின்றி அலுப்பின்றி
கடமை ஆற்றுகின்றார் சமூக சேவையில்-
கலை, இலக்கியம், கல்வித்துறைகளிலே
கடுமையாய் உழைக்கின்றார் மகளிர் சிறந்திடவே
எப்படி உழைக்கிறாராம்….. களைப்பின்றி…. அலுப்பின்றி….. மகளிர் சிறந்திட உழைக்கிறாராம்….. இப்படி கனிமொழியை கட்சியின் மீதும், தமிழக மக்களின் மீதும் திணித்த காரணமே இன்று கனிமொழிக்கு துளியும் அனுதாபம் இல்லாமல் செய்து உள்ளது.
கனிமொழியை பெரிய சுதந்திரப் போராட்ட தியாகி போல சித்தரிக்க வேண்டும் என்பதற்காக மீனவர்கள் கொல்லப் பட்ட போது, இலங்கைத் தூதரகத்தை கனிமொழி முற்றுகை இடுவது போலவும், கருணாநிதியின் காவல்துறை அவரை கைது செய்தது போலவும், அதைத் தொடர்ந்து “கனிமொழி கைது.. கனிமொழி கைது..” என்று பத்திரிக்கைகளில் இவர்களாகவே செய்தியை வரவைத்தது, மக்களிடையே கனிமொழியின் மீது வெறுப்பைத் தான் உண்டாக்கியது.

சென்னை சங்கமம் என்ற பெயரில், போலிப் பாதிரியோடு கனிமொழி சேர்ந்து கொண்டு நடத்திய கூத்தும், போலிப் பாதிரியின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதும், அதன்பிறகு நடந்த விழாவுக்கு தனது சொந்தப் பணம் ஒரு கோடி ரூபாயை கருணாநிதி கொடுத்ததும், கனிமொழியின் மீது மக்களின் வெறுப்பை கோபமாக மாற வைத்தது.

அறுபதுகளில் காவல்துறையில் சேர்ந்த அதிகாரிகளிடம் பேசியபோது அவர்கள் அனைவரும் தவறாமல் சொன்ன ஒரே கருத்து, கருணாநிதியைப் போன்ற சிறந்த நிர்வாகியை பார்க்க முடியாது என்பதுதான். ஸ்ரீபால் என்ற ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் சொன்னது, கருணாநிதியைப் போல அறிவுடைய ஒரு அரசியல் தலைவரைப் பார்க்கவே முடியாது என்பதுதான்.
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று எழுத்தாளர் ஞாநி ஓ பக்கங்களில் எழுதினார். அவ்வளவுதான்…. பார்ப்பனன் திராவிடனைத் திட்டி எழுதி விட்டான் என்று அதற்காக திமுக காகங்களின் கூட்டத்தைக் கூட்டி, தலைவர் கலைஞர் இன்னும் 100 ஆண்டுகளுக்கு முதல்வராக இருப்பார் என்று ஞாநியை ஆசை தீர திட்டித் தீர்த்தார்கள். அன்று ஞாநி சொன்னதைச் செய்திருந்தால் இன்று கருணாநிதிக்கு இந்த நிலைமை வந்திருக்காது. வயதுக்கு ஏற்றார் போல நடந்து கொள்ள வேண்டும். நமது வீட்டிலேயே 70 வயது முதியவர்கள் சொல்வதை நாம் அப்படியே கேட்டு விடுகிறோமா என்ன…. ? இதுதானே 87 வயது முதியவரின் வீட்டிலும் நடக்கும்… ?
கருணாநிதியின் அறிவுடைமை மழுங்கி விட்டது என்பதை 2006ல் அவர் பதவியேற்றவுடனேயே தெரிந்து விட்டது. கருணாநிதி எப்படிப் பட்ட அதிகாரி என்றால், ஒரு அதிகாரி, அதிமுக அனுதாபி, ஜெயலலிதா நலம் விரும்பி என்று தெரிந்தாலும், அவர் திறமையான அதிகாரி என்றால், அவரை முக்கிய பொறுப்பு கொடுத்து அவரிடம் வேலை வாங்குவார். இதுதான் கருணாநிதி. ரமணி, ஆர்.கே.ராகவன் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவோடு நெருக்கம் என்பது தெரிந்தும், அவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தி வேலை வாங்கியவர் கருணாநிதி.
கருணாநிதியின் திறமைக்கு முக்கிய சான்று, நடிகர் ராஜ்குமார் கடத்தப் பட்ட விவகாரத்தை அவர் கையாண்டது. தற்போது டிஜிபியாக இருக்கும் ராமானுஜம் அப்போது உளவுத்துறையின் தலைவராக இருந்தார். அவர் கீழே மிக திறமையான அதிகாரிகள் பணியாற்றினார்கள். அந்த அதிகாரிகளின் ஒட்டு மொத்த உழைப்பு தான் ராஜ்குமாரை மீட்டெடுக்க வைத்தது. அந்த விவகாரம் சரிவர கையாளப் படவில்லை என்றால், பெங்களுரு தமிழர்களின் கதி அதோகதிதான். அந்த விவகாரத்தையும், மற்ற விவகாரங்களையும், உளவுத்துறையும், அதன் தலைவர் ராமானுஜமும் எப்படிக் கையாண்டார்கள் என்பதை கருணாநிதி மறந்திருக்க மாட்டார்.
உளவுத்துறை அதிகாரிகள் கருணாநிதியைப் பற்றி எப்போதும் சொல்வது என்னவென்றால், உளவுத்துறையிலிருந்து வரும் அறிக்கையை கருணாநிதி முழுமையாக நம்பமாட்டார் என்பதுதான். உளவுத்துறையிலிருந்து வரும் அறிக்கையையும், கட்சியினரிடம் விசாரித்து அறிந்தவைகளையும் ஒப்பிட்டு, அதன் பிறகே ஒரு முடிவெடுப்பார் என்பது கருணாநிதியைப் பற்றி காவல்துறை அதிகாரிகள் வியந்து சொன்ன விஷயம்.
ஆனால், இதே கருணாநிதி 2006ல், ஜாபர் சேட் என்ற ஒரே அதிகாரியை நம்பி சீரழிந்தார் என்பதுதான் வேதனையான விஷயம். கருணாநிதி ஜாபர் சேட்டை முழுமையாக நம்பியதற்கு காரணம், அவரது முதுமையே தவிர வேறில்லை. இதே 96ல் இருந்த கருணாநிதியாக இருந்திருந்தால், ஜாபர் சேட்டை பட்டாபட்டி அண்டர்வேரோடு உட்கார வைத்திருப்பார். மிகச் சிக்கலான அரசியல் போராட்டங்களையெல்லாம் வென்று வந்த கருணாநிதி, தன்னுடைய தலையெழுத்தையும், தன் கட்சியின் தலையெழுத்தையும், தன் குடும்பத்தின் தலையெழுத்தையும், ஜாபர் சேட்டை நம்பி ஒப்படைத்ததே அவரது படு பாதாள வீழ்ச்சிக்கு காரணம்.

உலகத்தில் யாராவது தன் மகனின் தொலைபேசியையும், மனைவியின் தொலைபேசியையும் ஒட்டுக் கேட்கச் சொல்வார்களா ? கருணாநிதி அதைச் செய்தார். அழகிரியின் தொலைபேசியையும், ராசாத்தி அம்மாளின் தொலைபேசியையும் ஒட்டுக் கேட்கச் சொல்லி ஜாபர் சேட்டுக்கு உத்தரவிட்டார் கருணாநிதி. இத்தனை ரகசியங்களையும் ஒரே ஒரு நபரிடம், அதுவும் ஒரு காவல்துறை அதிகாரியை நம்பி ஒப்படைக்கும் அளவுக்கு கருணாநிதி நிதானம் இழந்ததற்கு காரணமும், அவரது முதுமைதான்.
ஜாபர் சேட்டைப் பற்றி கருணாநிதிக்கு தொடர்ந்து எச்சரிக்கைகள் விடப்பட்டுத்தான் வந்தது. உபாத்யாயா மற்றும் திரிபாதி இடையே நடந்த உரையாடல் வெளி வந்த போது, அது உளவுத்துறை மீதுதான் குற்றச்சாட்டாக வெளி வந்தது. ஆனால் கருணாநிதி ஜாபர்சேட்டைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தாரே ஒழிய ஜாபர் சேட் செய்யும் அயோக்கியத்தனங்களை கவனிக்க மறந்தார்.
2008ல் திமுக கூட்டணியை விட்டுப் பிரிந்த ராமதாஸ், ஜாபர் சேட் மீது நேரடியாக குற்றம் சாட்டினார். என்னுடைய தொலைபேசிகளும், என் உறவினர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக கேட்கப் படுகிறது என்றார். ஓட்டுக்களையும், எம்எல்ஏ சீட்டுகளையும் பெற்றுத் தரும் ஒரு அரசியல் கட்சித் தலைவரை உதாசீனப் படுத்தி விட்டு, ஒரு காவல்துறை அதிகாரியை கருணாநிதி ஆதரித்தற்கு ஒரே காரணம் அவரது முதுமையே.
இன்று ஒரு 200 கோடிக்காக அவர் மகள் கனிமொழி ஐந்து மாதமாக சிறையில் இருக்கிறார். ஆனால், இந்த 2ஜி ஊழலில் ஜாபர் சேட் சம்பாதித்தது மட்டும் 500 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். அனைவரையும் மாட்டி விட்டு விட்டு, ஜாபர் சேட், சஸ்பென்ஷனில் இருந்தாலும் ஆனந்தமாக இருக்கிறார். 2ஜி ஊழலில் ஊறித் திளைத்த, அந்தப் பணத்தை பதுக்கி வைத்துள்ள அத்தனை பேரும் இன்று வெளியில் இருக்கிறார்கள். சிக்கியது கனிமொழி மட்டுமே.

இந்த விஷயமும் கருணாநிதிக்கு தெரிந்ததால்தான் அவரது வேதனை பல மடங்கு அதிகமாகிறது.
1993ல் வைகோ பிரிந்த போதே, நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பசப்பியவர் கருணாநிதி. அப்போதே விலகியிருந்தால், இன்று அவரின் பிள்ளைகளில் யாரோ ஒருவர் கையில் கட்சியை ஒப்படைத்து விட்டு பின்னால் இருந்து வழிகாட்டியிருக்கலாம்.
இன்று நீதித்துறையை குற்றம் சாட்டும் அளவுக்கு கருணாநிதி நிதானம் இழந்து விட்டிருக்கிறார். அவரின் இந்த அறிக்கைகள் தேசிய ஊடகங்களில் செய்தியாகி, நீதிபதிகளின் கண்களுக்கும் செல்லும். இந்தச் செய்திகள், அவர் மகள் மேலும் பல நாட்கள் சிறையில் இருப்பதை உறுதி செய்யுமே தவிர, கனிமொழியை வெளியில் கொண்டு வருவதற்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை.
|
Comments
அபத்தம், சுத்தம், பற்றி எமக்குள் தனித்தனியாக வேறுபட்ட கருத்து இருக்கலாம். அவை தனிப்பட்ட இருவரின் கருத்து மட்டுமே. அதற்காக அவை பொதுவான மக்கள் அரங்கில் சரியென்று ஆகிவிடப்போவதில் லை.
அரசியல்வாதிகள் அனைவரும் தமது நடவடிக்கைதான் சரி என வாதாடுகின்றனர். அதனால் அனைவரும் வெற்றி பெற்றுவிடுவதுமி ல்லை.
தேர்தலுக்கு முன்பு கருணாநிதியை விமர்சித்தவர்கள ் இன்றைக்கு முதல்வர் ஜெயலலிதாவையும் விமர்சிக்கின்றன ர். வாழ்க்கையில் சங்கடங்களை சந்திக்கும்போது அரசுக்கு எதிரான நிலையை காட்டுவதுதான் மனித இயல்பு, அதுதான் ஜனநாயகமும்.
2009 மேயில் கருணாநிதி ஈழத்தமிழர் விவகாரத்தில் நடந்துகொண்டமுறை யை,, மிருகங்களுக்கு உணர்ந்துகொள்ளும ் சக்தி இருந்தால் மிருகங்களால்க்க ூட ஜீரணிக்கமுடியாத வை. மகள் கனிமொழிக்காக கருணாநிதி கவலைப்படுவதை எவரும் குறைத்து மதிப்பிடவோ சிறுமைப்பௌத்தவோ முடியாது. அது பாச உணர்வு சார்ந்தவை.
ஆனால், தன்னை தமிழினத்தின் மனுநீதிச்சோழன் என தானே வர்ணித்துக்கொள் ளுபவர் நடைமுறையிலும் அவற்றில் சிறுதளவாவது பின்பற்றவேண்டும ்.
நீங்கள் கருணாநிதியை முன்னிலைப்படுத் தி கரு,தேவாரம். கரு,திருவாசகம் கருணாநிதி கவசம் எது வேண்டுமானாலும் வானளாவ வாழ்த்தி புகழலாம். மற்றவர்களை பின்பற்றும்படி வற்புறுத்தக்கூட ாது.
விமர்சனத்தை எழுதுங்கள் நாமும் எமது மனநிலை பொறுத்து விமர்சனத்தை எழுதுகிறோம். மற்றும்படி நீங்கள் வீவாதம் புரிந்ததால் நான் உங்களை குறித்து எழுதவேண்டியிருந ்தது. தவறாக இருப்பின் வருந்துகிறேன்.
வணக்கம் திரு புதியவன்!
என்னுடைய வார்த்தைகள் புண்படுத்தியிரு ந்தால் மன்னிக்கவும்!... புத்தி படைத்த தமிழனின் தலை எழுத்து.
[/ஃஉஒடெ]
சோழன், உங்கள் தன்மையான பதிலுக்கு நன்றி. நான் என்றுமே கலைஞர் தவறே செய்யாத தலைவர் என்று அபத்தமாக உளறியது இல்லை. தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை. ஆனால் கலைஞர் விசயத்தில் மட்டும அவருடைய தவறுகளை பூதக்கண்ணாடி, மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து குரோதமாக விமர்சிப்பதை தான் கண்டித்து இருக்கிறேன். ஜன நாயக நாட்டில் ஒருவர் விரும்பும் கட்சியை அல்லது தலவரை ஆதரித்து பேச எல்லாருக்கும் உரிமை உள்ளது. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுக்கொன்று மாற்றாகதான் உள்ளது. எனவே கலைஞரை எதிர்ப்பு ஓட்டு என்றால் அது ஜெ.க்கு ஆதரவான வாக்கு தான்.
வணக்கம் திரு புதியவன்!
என்னுடைய வார்த்தைகள் புண்படுத்தியிரு ந்தால் மன்னிக்கவும்!... புத்தி படைத்த தமிழனின் தலை எழுத்து.
[/ஃஉஒடெ]
சோழன், உங்கள் தன்மையான பதிலுக்கு நன்றி. நான் என்றுமே கலைஞர் தவறே செய்யாத தலைவர் என்று அபத்தமாக உளறியது இல்லை. தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை. ஆனால் கலைஞர் விசயத்தில் மட்டும அவருடைய தவறுகளை பூதக்கண்ணாடி, மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து குரோதமாக விமர்சிப்பதை தான் கண்டித்து இருக்கிறேன். ஜன நாயக நாட்டில் ஒருவர் விரும்பும் கட்சியை அல்லது தலவரை ஆதரித்து பேச எல்லாருக்கும் உரிமை உள்ளது. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுக்கொன்று மாற்றாகதான் உள்ளது. எனவே கலைஞரை எதிர்ப்பு ஓட்டு என்றால் அது ஜெ.க்கு ஆதரவான வாக்கு தான்.
என்னுடைய கருத்துக்கு அதிக எதிர்மறை வாக்குகள் விழுவது பற்றி கவலை இல்லை. நான் என் கருத்தை பதிவு செய்கிறேன். பெரும்பான்மையின ர் விரும்பும் கருத்து என்றால்.. லட்சக்கணக்கான இளைஞருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து அவர்கள் இல்லங்களில் ஒளி விளக்கேற்றிய கலைஞர் கெட்டவர், லட்சக்கணக்கான ஊழியரை பணி நீக்கம் செய்து அவர்கள் இல்லங்களை இருள் கவிய செய்த, அவர்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக ்கிய ஒருவர் நல்லவர், திறமையானவர் என்று நானும் அபத்தமாக பேசினால் உங்களைப்போன்ற பெரும்பான்மையான வரின் கைதட்டலை வாங்கலாம். தென் சென்னையில் சிறந்த பாராளுமன்ற வாதியான இரா. செழியனும், நாட்டிய நடிகை வைஜயந்திமாலாவும ் போட்டியிட்ட போது நீங்கள் சொல்லும் பெரும்பாலானோர் வைஜயந்தி மாலாவுக்குதான் வாக்களித்தார்கள ்.
ya we know a few people here are Chottaiyan Cho's Fans. As many understood he is one among the worst ever brahministic villains that Tamil Nadu has ever had. Nothing is there to talk about him. Shit on him.
கருணாநிதிக்காக நீங்கள் அலகு குத்தி காவடி எடுத்தால் எவரும் குறுக்கே நிற்கப்போவதில்ல ை. உங்கள் கருத்துக்களை பல நடுநிலையானவர்கள ் இரசிக்கவில்லை உள்வாங்கவும் விரும்பவில்லை. காரணம் நீங்கள் விமர்சனம் எழுதவில்லை "துதி" பாடுகிறீர்கள். உங்கள் கருத்துக்குத்தா ன் அதிக மைனஸ் தாக்கியிருக்கிற து புரிந்துகொள்ளப் பாருங்கள்.
//கலைஞர் ஒருவர் தான் குற்றவாளி என்பது போலவும், மற்ற அரசியல் வாதிகள் எல்லாம் பரம யோக்கியர்கள் போலவும் அபத்தமாக இருக்கிறது.//
கலைஞரை மகா யோஓஓக்கியன் என்கிறீர்களா.
[ஃஉஒடெ நமெ="ரதக்ரிஷ்னன்"]நாற்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னாள், ஒரு பெண் குழந்தையை ஒரு பெண்மணி பெற்று எடுக்கிறாள். தகப்பனின் பெயரை மு. கருணாநிதி என்று பதிவும் செய்கிறாள். அதை ஒரு நிருபரும் நாளிதழ் ஆசிரியரும் விசாரித்து அது அப்போதைய பொதுப்பணி துறை அமைச்சரே அந்த பெண்மணியின் குழந்தைக்கு தகப்பன் என்றும் செய்தியாக வெளியிடுகிறார்க ள். அதை கண்டு கோபம் அடைந்த மு.கருணாநிதி அந்த செய்தியை மறுத்து, செய்தி ஆசிரியரின்மீது மான நட்ட வழக்கும் தொடர்கிறார். அதில் தனது செல்வாக்கால் வெற்றியும் பெறுகிறார். அந்த குழந்தையை அவர் தன் குழந்தை இல்லை என்று எந்த சட்டத்தின் மீது பொய் சத்தியம் செய்தாரோ இன்று அந்த சட்டத்தின் மீது தனது மகள் என்ற காரணத்தினாலேயே அவளுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்று கூறி புலம்புகிறார். புதியவன் ராஜ் போன்ற கூஜா தூக்கிகள் வரலாற்றை நன்கு படிக்கவும்.[/ஃஉஒடெ]
வணக்கம் திரு புதியவன்!
என்னுடைய வார்த்தைகள் புண்படுத்தியிரு ந்தால் மன்னிக்கவும்! திமுகவின் அடி'மட்ட' தொண்டனைத்தான் (ஆதிமுக தொண்டன் உட்பட. தொண்டன் என்றாலே முட்டாள் தானே?) முட்டாள் என்ற பொருள் படும்படி கூற வந்தேன்! நிச்சயம் தங்களை அப்படி சொல்ல வரவில்லை! அவர்களைப்போல் உங்கள் சிந்தனை உள்ளது என்பது தான் என் கருத்து! பல இணையங்களில் தங்கள் பெயரில் கருத்துக்களை படித்திருக்கிறே ன்! இதுவரை நீங்கள் திமுகவின், கருணாவின் தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொண்டதே இல்லை! பல தளங்களில் இதே போன்ற கருத்துக்கள் தங்கள் பெயரில் பதிவாகி உள்ளது! ஆகவே அது எல்லாம் தங்கள் கருத்து என்றே எண்ணுகிறேன்!
உங்கள் கருத்தில் நியாயம் இருப்பது போல எள்ளளவும் தோணவில்லை! கருணாவை பற்றி எடுத்தால் நீர் ஏன் செயாவை இழுக்கிறீர்? இருவரையும் தலைவராய் ஏற்று இருப்பது கேவலமான புத்தி படைத்த தமிழனின் தலை எழுத்து.
வணக்கம் திரு புதியவன்!
என்னுடைய வார்த்தைகள் புண்படுத்தியிரு ந்தால் மன்னிக்கவும்! திமுகவின் அடி'மட்ட' தொண்டனைத்தான் (ஆதிமுக தொண்டன் உட்பட. தொண்டன் என்றாலே முட்டாள் தானே?) முட்டாள் என்ற பொருள் படும்படி கூற வந்தேன்! நிச்சயம் தங்களை அப்படி சொல்ல வரவில்லை! அவர்களைப்போல் உங்கள் சிந்தனை உள்ளது என்பது தான் என் கருத்து! பல இணையங்களில் தங்கள் பெயரில் கருத்துக்களை படித்திருக்கிறே ன்! இதுவரை நீங்கள் திமுகவின், கருணாவின் தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொண்டதே இல்லை! பல தளங்களில் இதே போன்ற கருத்துக்கள் தங்கள் பெயரில் பதிவாகி உள்ளது! ஆகவே அது எல்லாம் தங்கள் கருத்து என்றே எண்ணுகிறேன்!
உங்கள் கருத்தில் நியாயம் இருப்பது போல எள்ளளவும் தோணவில்லை! கருணாவை பற்றி எடுத்தால் நீர் ஏன் செயாவை இழுக்கிறீர்? இருவரையும் தலைவராய் ஏற்று இருப்பது கேவலமான புத்தி படைத்த தமிழனின் தலை எழுத்து.
”சோ-மாரி” அதாவது சோ-மாதிரி என்று கருணாநிதியைக் கூட ஒப்பிடுவது நியாயமற்றது. அப்படி இருக்கையில் சவுக்கு அவர்களை ஒப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கத ு......
குறைந்தபட்ச மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் சக மனிதனை ‘சோ-வுக்கோ’, ‘தின மலம்-க்கோ’ ஒப்பிடமாட்டான்.
இது கனிமொழியல்ல பழமொழி! பழையமொழியும் கூட!
கரு நாகம் கரிய நாகமல்ல,
இது காரிய நாகம் !
பதவிற்காகவும், பணத்திற்காகவும்
பல்லிலந்தபின் நாகத்திற்கு
வேகமிருந்தென்ன வீரியமில்லயே!
நாகத்தின் சோரம்போன கதகேட்டு
எலியே எட்டுமொழ வேட்டிகட்டும்போ து
கீரியிடம் கோபம்கொண்டென்னப யன்!
பாம்பின் கதை இது சோரம்போன
கரும்பாம்பின் கதை!
- கேக்கறதுக்கு ஆளிருந்தா கேனயங்கூட கதையுடறதென்ன கவிதையுமெழுதுவா னாம்![/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="டயாப்பர் டக்"]பாம்பைகண்டால் படையும் நடுங்கும்
இது கனிமொழியல்ல பழமொழி! பழையமொழியும் கூட!
கரு நாகம் கரிய நாகமல்ல,
இது காரிய நாகம் !
பதவிற்காகவும், பணத்திற்காகவும்
பல்லிலந்தபின் நாகத்திற்கு
வேகமிருந்தென்ன வீரியமில்லயே!
நாகத்தின் சோரம்போன கதகேட்டு
எலியே எட்டுமொழ வேட்டிகட்டும்போ து
கீரியிடம் கோபம்கொண்டென்னப யன்!
பாம்பின் கதை இது சோரம்போன
கரும்பாம்பின் கதை!
- கேக்கறதுக்கு ஆளிருந்தா கேனயங்கூட கதையுடறதென்ன கவிதையுமெழுதுவா னாம்!
அருமை,
அருமை,
அருமை............
இது கனிமொழியல்ல பழமொழி! பழையமொழியும் கூட!
கரு நாகம் கரிய நாகமல்ல,
இது காரிய நாகம் !
பதவிற்காகவும், பணத்திற்காகவும்
பல்லிலந்தபின் நாகத்திற்கு
வேகமிருந்தென்ன வீரியமில்லயே!
நாகத்தின் சோரம்போன கதகேட்டு
எலியே எட்டுமொழ வேட்டிகட்டும்போ து
கீரியிடம் கோபம்கொண்டென்னப யன்!
பாம்பின் கதை இது சோரம்போன
கரும்பாம்பின் கதை!
- கேக்கறதுக்கு ஆளிருந்தா கேனயங்கூட கதையுடறதென்ன கவிதையுமெழுதுவா னாம்!
பழி வாங்கிவிடும் என்று நம்புவார்கள். அது அவர்களை நன்னரிபடுத்தும் . ஆனால் கலைஞர் அவர்களுக்கோ, அல்லக்கைகளுக்கோ அதில் நம்ம்பிக்கை இல்லை. அதனால் தான் அவர்கள் கண்மூடித்தனமாக திருடினார்கள் மாட்டிக்கொண்டார ்கள். அவர் என்று திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தாரோ அப்போதே அவர் தன் வளர்ச்சிக்காக எதயும் இழக்கதயாராகிவிட ்டார்,தன்மானத்த ை தாரை வார்த்து விட்டார். அவர் பதவி, பணம், பெண்னுக்காக எதையும் இழப்பார், எப்படியும் பேசுவார். அவர் எப்போது ஜோதிடத்தில் நம்பிக்கை
கொண்டு மாரகன் குருவுக்கு பயந்து (அவருடைய ஜாதகத்தில் குரு மாரகாதிபதி எனவே மாரகம் எட்படலாம் என்று ஜோதிடர்கள் கணித்தனர்) மஞ்சத்துண்டு
போட்டாரோ அப்போதே அவரது வறட்டு கௌரவமும் செத்துவிட்டது. வீராப்பு பேசியவர் டெல்லி சென்று சோனியா மைனோவின் காலில் விழுந்தபோது
மீதமிருந்த மானத்தையும் விற்றுவிட்டார். அப்போதே சட்டத்தை எரிப்பாதாக சவால் விட்டுவிட்டு கேஸ் கோர்ட்டுக்கு வந்தவுடன் வெறும் பேப்பரைதானே
கிழித்தேன் என்று பல்டி அடித்த பேப்பர் புலிகள்தானே. நாம் அன்றே அடையாளம் கண்டுகொள்ளதவரிய து அவர் தவறல்ல, நம் தவறு.
ஒரு மேடையில் அண்ணா அவர்கள் கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்தாராம், கோபப்பட்ட இரண்டாம் மட்ட தலைவர்கள் அவர் அப்படியென்ன செய்து விட்டார் அவருக்கு மோதிரம் அணிவித்தீர்கள் என்று கேட்டனராம். அதற்கு அண்ணா, நீங்களும் ஒரு மோதிரம் வாங்கி கொடுங்கள் அடுத்த மேடையில் உங்களுக்கும் மோதிரம்
அணிவிக்கிறேன் என்று சொன்னாராம். இதுபோல பல தில்லுமுல்ல்களை செய்துதான் இந்த நிலைக்கு வந்தார். இவருடைய கருத்தை எப்படிவேண்டுமான ாலும்
தேவையெனில் மாற்றிகொல்வார் வசதிக்கேற்றபடி, அதற்க்கு எத்தனையோ உதாரனங்களை பலர் அடிக்கடி நினைவு கூர்வதுண்டு.
எத்தனையோ கோடான கொடிகளை சம்பாதித்த பின்பாவது ஏதாவது நல்லவைகளை தமிழ் நாட்டிற்கு செய்திருக்கலாம் . 1996 ௨001 வரை ஒரே ஆட்சிமட்டும் கொஞ்சம் விதிவிலக்கு, மற்ற அனைத்து ஆட்சிகளும் தமிழ்நாட்டின் சாபக்கேடு. அவர் நீண்ட காலம் வாழ்ந்து அதன் பயனை அனுபவிக்கவேண்டு ம் என்று இறைவனை வேண்டுவோம். இது முடிவல்ல ஆரம்பம் !
நீங்க என்னாதான் கருநாகத்திற்கு வக்காலத்து வாங்கினாலும் அவன் செய்த பாவங்களும் அநியாயங்களும் அவனை விடப்போவதில்லை!
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
இனத்துரோகி!
சவுக்கு புதியவன் வாதத்தில் நியாமிருப்பது போன்று தோணவில்லை! நான் இவரின் பல கருத்துக்களை படித்துள்ளேன்! அனைத்தும் அடி மட்ட முட்டாள் திமுக தொண்டனின் புத்தி இந்த ஆளுக்கு! தயவு செய்து பதிலளிக்க வேண்டாம்!
கருனாநிதியை நீர் தந்தையாக நினைத்து அனுதாப படுவதும்..!
தலைவராக நினைத்து கோபபடுவதும்!
துரோகியாக நினைத்து துயரப்படுவதும்!
ஜாமீனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ஜாக்கிரதை செய்வதும்!
இதை எல்லம் பார்த்தால் .... என்னமோ "அன்னியான்" சவுக்கு மாதிரி தெரிகிறது.
எதாவது ஒரு உணர்வுக்கு வாங்க சவுக்கு சார்!
எல்லாவற்றையும் கற்றது அங்குதான்.
வீரமணியின் குருவும் அவரே..!
இவரும் எல்லாவற்றையும் கற்றது அங்குதான்.!
நெடுஞ்செழியன் இருந்தது பெரியாரிடம் கட்சியிடம் சம்பள்ம் பெற்ற முதல் பொதுச்செயளாலர் அவரே...
இன்னும் நிறைய திருடர்களின் பள்ளிக்கூடம் அதுதான்.
ரோட்டார பண்டத்தில் எந்து மொய்க்கிமோ.. அந்த ரோட்டில்தான்.. பல திருடர்களின் வள்ர்பிடம்...
நாட்டிற்கு மட்டுமே உபதேசம்....
தன் மக்களுக்கு அல்ல... நாட்டு மக்களுக்குதான் இவர்கள் வீனாப்போன வியாக்கணங்கள்.!
தன் குஞ்சுபொன்குஞ்ச ு..
கருனாநிதிக்கும் அப்படியே..
கவிதை என்ற பெயரில் கன்டதையும் எழுதுகிறார்....
இதெல்லாம் கவிதையா...? என கேட்ட வைரமுத்துவை தாழ்த்தவே பா.விஜய்-யின் 12 புத்தகங்களை கருனாநிதி தன் கையால் வெளியிட்டார். அதன் பிறகு கலைஞர் கவிரகுக்கேல்லாம ் கவிஞர்... என வைரமுத்து தேற்றிக்க்கொண்ட ார்.தான் என்ன செய்தாலும் அதை பாராட்ட ஒரு குழு வேண்டும் .கருனாநிதிக்கு..!
நக்கீரன் கோபால், ,பிள்ளை வகுப்பை சேர்ந்தவர் ஆனால் தன்னை தேவர் என் கூறிக்கொண்டு தேவர் பேரவையில் உறுப்பினராகவும் இருந்தவர். தேவர் கூட்டங்களில் கலந்துக்கொண்டது ம் உண்டு ...(சவுக்கு இதை நன்றாக அறியும்)அந்த நக்கீரன் கோபால் தான் வீரப்பன் விடயத்தில் சிறப்பாக விளையாடி கட்டு கட்டாய் அள்ளியவர்...அவரை நியமித்தது கருனாநிதிதான். சரியான ஆளை கண்டு பிடிப்பது கலைஞர்க்கு நிகர் கருனாநிதிதான்.
அரசு பணத்தை திருடி தின்று....
பெரும் குடும்பமாய் பெருப்பவன் அய்யோ என போவான்!!!
சவுக்கு பகுதியில் "செருப்படி" அப்படின்னு ஒரு பகுதி தொடங்கி அங்க வெளியிடுங்க இது போல கட்டுரைகளை...
இந்த முத்தமிழ் அறிஞர் தினமணி பற்றி வெளியிட்ட முரசொலி கட்டுரையை இந்த தளத்தில் வெளியிடுங்கள்... இந்த ஜென்மமெல்லாம் இந்த தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியட்டும். வர வர நம் தமிழகத்தின் அரசியல்வாதிகளின ் தரம் கீழே சென்று கொண்டிருக்கிறது .
தமிழகத்தின் தலை சிறந்த அரசியல்வாதியாக வேண்டுமெனில் ஒழுக்கமின்மையே முதல் தகுதிபோல் தெரிகிறது. என்ன கருமமோ... நம் தமிழகத்தின் தலையெழுத்து இப்படி...
கருணாநிதி தன் மகள் கனிமொழிக்கு இப்படி ஒரு பிரகண்டம் வருமென கற்பனையில்க்கூட எதிர்பார்க்கவில ்லை. சூழல் இப்போ அவரை சுடுகாட்டு ----- ---- நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. மகள் மீண்டு வந்துவிடமாட்டாள ோ என்ற ஆதங்கம் சராசரி மனிதனுக்கு வருவதுபோல கருணாவுக்கும் வந்திருக்கிறது. இது இயல்பானதே. ஆனால் பழி பாவம் விடுவதாக இல்லை.
கட்டுரையில் குறிப்பிட்டதுபோ ல் //நளினி விடுதலை பெற்றபின், ராயப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்குவார்.அந்தப் பகுதி, அமெரிக்க தூதரகம் மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி. ஆகையால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதால், நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சொல்லப் பட்டிருந்தது.//
மனித இதயம் கரு-நிதியின் நெஞ்சாங்கூட்டுக ்குள் இருந்திருந்தால் இப்படி ஒரு மாயாஜாலத்தை கூறி தியாகத்திருவிளக ்குக்கு ஒதுக்கு கட்டியிருப்பாரா . அமெரிக்க தூதரகத்திற்கும் இத்,தாலி அறுந்தவளுக்கும் காட்டிய கரிசினையை நளினிக்கும். சீமானை சிறைப்படுத்தி சிறுமைப்படுத்தி யபோதும் கண்களுக்கு தெரியவில்லை பதவி அதிகாரம் ஐயன் கண்களை மறைத்தது இப்போ ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்துவிட்டதாக புள்ளிவிபரத்தை எடுத்து விட்டு புலம்புகிறார்
மற்றவர்கள் பழிப்பார்களே என்றுகூட ஐயனால் எதையும் கட்டுப்படுத்தமு டியவில்லை. இதைத்தானே நாங்கள் வேண்டி விரும்பி எதிர்பார்த்து காத்திருந்தோம்.
பேய் கொள்ளும் பிணியொடொரு பிரிவுஞ்சேரும்
பித்தொடு பிடாரிகளே துணையாய் ஆகும்
தாய் கண்டு சேய் என்று சொல்லாள் அன்று
தரித்திரமே உருத்திரமாய் கொள்வார் காண
பாய் இல்லை சதி இல்லை இல்லும் இல்லை
படுந்துயரம் இவன் செய்த பாவம்தானே.
இது கருணா அவர்களை சிறுமைப்படுத்து ம் நோக்கில் நான் சொல்லவில்லை. கருணா அவர்கள் தனது மறைவுக்குமுன் பாவமன்னிப்பு பெறவேண்டும். இனி எவரும் இவரைப்போல் பிறந்தாலும் நடக்கக்கூடாது என்பதே மனித குலத்தின் ஆவலாக இருக்கும்.
Enna Savukku sir oru 200 kodiyaAAA? enna sir andha 200 kodi irundha innaikki enthanai kuzhandhaigal padikkum theiryumaaaaa??????????????
"தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை"
http://www.whispersintamilnadu.com/2011/11/mistakes-of-karunanidhi-misfortune-of.html
Rate it: 63 22Share this comment
ஜெயலலிதா ஆணவத்தை ஒடுக்க வைகோவிற்கு கரம் கொடுங்கள் தமிழ் மக்களே.....
மே13' நிகழ இருப்பது
ஆண்டவன் கட்டளை..
ஈழத்து வேதனையின்
ஏக்க விளைச்சல்.
கோபப்படாமல் ஐயா
குறித்து வைத்துக்கொள்ளுங ்கள்
..............
நாசமாய் போவீர் என்று
நான் மட்டும் சொல்லவில்லை.
ஊரெல்லாம் சொல்லக்கண்டேன்
உலகமே திட்ட கண்டேன்.
இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர்
உணர்ந்திடும் நாளை காண்பீர்.
நல்லவை எல்லாம் உன்னை
நாடிடா தென்பேன் கொள்வீர்.
புத்திர சோகம் கொண்டு
புண்பட்ட எம்மைப் போலே
சத்தியமாக நீரும்
தண்டனை கொள்ள வேண்டும்
நிச்சியம் நடக்கும் நாளை
நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம்
RSS feed for comments to this post