முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆறு மாதங்கள்…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011 15:02

அதிமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகி விட்டன.   புதிதாக பொறுப்பேற்ற அரசை ஆறு மாதங்கள் கழித்தே விமர்சனம் செய்ய வேண்டும் என்று எடுத்திருந்த முடிவை, முதல் வாரத்திலேயே மாற்றியது ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக எடுத்த முடிவு.

 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஜெயலலிதா காட்டும் முனைப்பு பாராட்டத்தக்கது.    மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் சிறப்பான திட்டமாக இருந்தாலும், அடுத்த ஐந்தாண்டுகளில் 70 லட்சம் லேப்டாப்புகளை கொள்முதல் செய்யும் ஒரு அரசு, வைரஸ் தொந்தரவுகள் குறைவாக உள்ள இலவச மென்பாருளான லைனக்ஸ் மென்பொருளை பயன்படுத்தாமல், வின்டோஸ் மென்பொருள் உள்ள லேப்டாப்புகளை வாங்குவது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி க்ளின்டனின் வருகையோடு தொடர்புள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசு நிறுவனமான எல்காட்டின் செர்வர்களே லைனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் போது, மாணவர்களுக்கு மட்டும் எதற்காக விண்டோஸ். 


July---20-d

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை தொடர்ந்து பல்வேறு பொருட்களை வாங்குவதற்கும், தொடர்ந்து ஆன்டி வைரஸ் மென்பொருட்களை நம்பி இருப்பதற்கும் நிர்பந்திக்கும் ஒரு நிறுவனம் என்பது கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும்.

 

லேப்டாப் கொள்முதல் செய்வதற்காக முதலில் விடப்பட்ட டெண்டரில் 320 ஜிபி ஹார்ட் டிஸ்க், வைஃபை, வெப் கேம் வசதிகள் இருந்தன.  மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வாங்குவதற்காக, இரண்டாவதாக வெளியிடப்பட்ட டெண்டரில், வைஃபை, வெப்கேம் வசதிகள் நீக்கப் பட்டன.  ஹார்ட் டிஸ்க் 320 ஜிபியிலிருந்து 160 ஜிபியாக குறைக்கப் பட்டது.   வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று அறிவிக்கும் ஜெயலலிதா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு பணிந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  வைஃபை வசதி இல்லாத லேப்டாப் எதற்கு பயன்படும் ?  இணைய வசதியை மாணவர்களுக்கு எப்படிக் கொடுப்பார்கள் ? 

Microsoft_Sign_on_German_campus

மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதற்காக இந்தத் திட்டமா, அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக இந்தத் திட்டமா என்று சந்தேகமாக இருக்கிறது ?

 

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டை நீக்குவேன் என்று அறிவித்த அதிமுக அரசு, ஆறு மாதங்களைக் கடந்தும் இன்றும் மின்வெட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

 

சமச்சீர் கல்வியைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசு எடுத்த நடவடிக்கைகள் பல நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப் பட்டிருப்பது இந்த அரசுக்கு ஒரு கரும்புள்ளியாகவே இருக்கிறது.  அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தை மாற்றும் திட்டம் ஒரு சிறந்த உதாரணம்.  சென்னையில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான குழந்தைகள் மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தருவதை விட்டு விட்டு, ஒரு அழகான நூலகத்தை மாற்ற உத்தேசித்தது பொதுமக்களிடையே அதிமுக அரசின் மீது கடும் அதிருப்தியை உருவாக்கியது.

 May_16_a

சமச்சீர் கல்வியில் ஜெயலலிதா காட்டிய பிடிவாதமும் பொதுமக்களிடையே அதிருப்தி மட்டுமல்லாது கோபத்தை ஏற்படுத்தியது.   சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு விரிவான ஆழமான தீர்ப்பையும் சட்டை செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, இரண்டு மாத காலமாக குழந்தைகளை படிக்க விடாமல் தடுத்த செயலை யாரும் ரசிக்கவில்லை.

 

மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கமும் பரவலான எதிர்ப்பையே சந்தித்துள்ளது.  இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக ஜெயலலிதா திமுகவை வளர்ப்பதற்கே உதவி செய்கிறார்.  மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்திற்கு எதிராக இன்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினரை பார்க்கும் போது இந்தக் கருத்து வலுப்பெறுகிறது.   குடும்பச் சண்டையிலும், ஊழல் புகார்களிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு இப்படி வாழ்வளிப்பது எப்படிப்பட்ட அரசியல் என்பது புரியவில்லை.

 

மேலும், ஜெயலலிதா திமுக அரசின் வழக்கறிஞர் பிரிவை குறைத்து மதிப்பிடுகிறார்.   திமுக வழக்கறிஞர் பிரிவு, அதிமுக வழக்கறிஞர் பிரிவைப் போல மங்குணிப் பிரிவு அல்ல.  கடந்த திமுக ஆட்சியில் நடந்த அத்தனை அட்டூழியங்களுக்கும் எதிராக ஒரு வழக்கைக் கூட அதிமுக அணி போடவில்லை என்பது ஊரறிந்த உண்மை.  ஆனால் நில அபகரிப்பு வழக்குகள் உட்பட, அத்தனை வழக்குகளிலும், திமுக வழக்கறிஞர்கள் எப்படித் துடிப்பாக செயல்படுகிறார்கள் என்பதை ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மூன்று தமிழர்களை தூக்கிலிருந்து காப்பாற்றுவதற்கு மிகச் சிறப்பான ஒரு தீர்மானத்தை இயற்றி விட்டு, அவர்கள் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்கையில், சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தைப் பற்றி ஒரு வரி கூட சொல்லாமல், அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடுத்திருக்கக் கூடிய நிலைபாடு, சட்டமன்றத் தீர்மானத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

 

அதிமுக ஆட்சியில் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்த ஒரு விஷயம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.  ஜெயலலிதா அரசு என்றாலே, காவல்துறையினருக்கு கொண்டாட்டம் தான்.  மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதில் எப்போதுமே முன்னணியில் உள்ள காவல்துறை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த மீறல்களை சற்றே துணிச்சலோடு செய்யும்.  இந்தக் கருத்து, பரமக்குடி சம்பவத்திலும் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 

43

கண்துடைப்புக்காக ஒரு விசாரணைக் கமிஷனை போட்டு விட்டு, அந்த அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் அவர்களைக் காப்பாற்றுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கிறது அதிமுக அரசு.   பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மக்களை சந்திக்க மு.க.ஸ்டாலின் சென்ற போது அவருக்கு கிடைத்த மிகச் சிறப்பான வரவேற்பு இதற்கு ஒரு முக்கியச் சான்று.

 

ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள் சிறப்பாகவே இருக்கின்றன. குறிப்பாக டிஎன்பிஎஸ்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடத்தப் பட்ட சோதனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு எதிராக தொடரப்பட்டு வரும் சொத்துக் குவிப்பு வழக்குகளும் சிறப்பானவையே…..  ஆனால் இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் அமைத்து நீதிமன்ற விசாரணையை துரிதப் படுத்தினால் மட்டுமே இந்தத் தொடக்கம் சிறப்பாக அமையும்.    இன்னும் ஏராளமாக சொத்துக்களை குவித்திருக்கும் மற்ற திமுக பிரமுகர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தால், அது  மக்களிடையே வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

 DSC_0106

டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் நடந்த சோதனையின் போது

புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து விட்டு, அந்த ஆணையத்தின் தலைவராக ஒரு ஊழல் பெருச்சாளியை நீதிபதியாக நியமித்திருப்பது இந்த ஆணையத்தின் நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.  விசாரணை தொடங்கி இந்நேரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்க வேண்டிய விசாரணை, தங்கராஜ் என்ற ஒரு ஊழல் பெருச்சாளியை நீதிபதியாக நியமித்ததால் இன்று உயர்நீதிமன்ற வழக்கில் உழன்று கொண்டிருக்கிறது.

 

நில அபகரிப்புக்கென்று தனிப் பிரிவை அமைத்து, அந்தப் பிரிவு பொதுமக்களிடமிருந்து புகார்களை வாங்கி நடவடிக்கை எடுப்பது ஜெயலலிதா அரசின் மற்றொரு சிறப்பான நடவடிக்கை.  பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கூப்பாடு போட்டாலும், புகார் கொடுப்பவர்கள் யாரும் கட்சிக்காரர்கள் அல்லவே….. திமுக ரவுடிகளிடம் நிலத்தை இழந்து, காவல்துறையினரிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காததால் செய்வதறியாது திகைத்த பொதுமக்களே ஆயிரக்கணக்கில் புகார் கொடுத்து வருகிறார்கள்.  வழக்கறிஞர் புகழேந்தியிடம் வந்த ஒரு புகாரே இதற்கு உதாரணம்.   சென்யை, ஷெனாய் நகரில் 50 ஆண்டுகளாக குடியிருந்த ஒரு குடும்பத்தை மதுரையைச் சேர்ந்த தளபதி என்பவர், அந்த இடம் தங்களுக்குச் சொந்தம் என்று வந்து மிரட்டினார்.  அவருக்கு ஆதரவாக தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ப.ரங்கநாதனும், கவுரிசங்கரும் வந்து மிரட்டினார்கள்.   இவர்கள் கையாண்ட அடுத்த தந்திரம் என்ன தெரியுமா ?   அப்போது அண்ணா நகர் துணை ஆணையராக இருந்த பன்னீர் செல்வத்தை அணுகினார்.  பன்னீர் செல்வம், அந்த வீட்டில் குடியிருந்தவரை அழைத்து “வீட்டை விற்பனை செய் அல்லது அவர் கேட்கும் தொகையை கொடு.  இல்லையென்றால், வீட்டில் இருக்கும் பெண்களை அழைத்து வழக்கு போடுவேன்” என்று மிரட்டினார்.  இந்த நிலையில் நம்மிடம் வந்தார் அந்த வீட்டின் உரிமையாளர்.   அவர் வந்த அன்றே, சென்னை மாநகர ஆணையர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு, பன்னீர் செல்வத்தை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டது.  அதன் பிறகு பன்னீர் செல்வம் இருந்த இடம் தெரியாமல் பம்மி விட்டார்.  இந்த வீட்டு உரிமையாளரைப் போல பாதிக்கப் பட்டவர்களே இன்று நில அபகரிப்புப் புகார்கள் அளிக்கிறார்கள்.  ஆனால் இதிலும் ஒரு விசித்திரம் என்னவென்றால், இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மட்டுமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.  இவர்களுக்கு உதவி செய்த, காவல்துறை அதிகாரிகள், பத்திரப் பதிவு அதிகாரிகள் கவனமாக தப்பித்துக் கொள்கிறார்கள்.

 

இந்த வழக்குகளை மக்கள் திமுகவின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கவில்லை என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டின.

 

உள்ளாட்சித் தேர்தல்களை அமைதியாக நடத்தியதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியே ஆக வேண்டும்.   ஜெயலலிதா நினைத்திருந்தால், காவல்துறை உதவியோடு, அதிமுகவினரை அராஜகத்தில் இறங்க வைத்திருக்க முடியும்.  2006 உள்ளாட்சித் தேர்தலில், லத்திக்கா சரண் மற்றும் ஜாங்கிட் உதவியோடு, திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களை மீண்டும் அரங்கேற்றியிருக்க முடியும்.  ஆனால், எந்த வித வன்முறையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தலை நடத்தி முடித்தற்கு கிடைத்த பரிசுதான், உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி.

அடிக்கடி நடக்கும் மாற்றங்களால் அரசு நிர்வாகம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்த நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமைச்சர்கள் எப்போது மாறுவார்கள் என்ற நிலையற்ற தன்மையினால் தலைமைச் செயலகத்தில் உள்ள ப்யூன் கூட, அச்சமில்லாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.  ஐஏஎஸ் அதிகாரிகளும், எப்போது மாற்றம் வருமோ என்று, எந்த வேலையிலும் ஈடுபாடு காட்டுவதில்லை என்று சொல்கிறார்கள்.   அமைச்சர்களும் எந்த நேரத்தில் மாற்றம் வருமோ என்ற அச்சத்தோடே இருப்பதாக தெரிகிறது.    அவ்வப்போது வரும் மாற்றங்களால், எதைச் செய்தாலும் தப்பாகப் போய் விடுமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.

Augu---24-zd

தவறு செய்யதால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருப்பது நல்லதுதான் என்றாலும், தற்போது உள்ளது போன்ற நிலைமை நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்து விடும். அமைச்சர்களின் இந்த நிலையற்ற தன்மையால், காவல்துறை அதிகாரிகளின் கை ஓங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் செயலாளராக உள்ள ஷீலா ப்ரியாதான் அதிகபட்ச அதிகாரம் உள்ள அதிகாரியாக விளங்குவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

July---20-f

 

ஷீலா ப்ரியா

முதல்வர் கவனத்துக்கு செல்லும் எல்லா கோப்புகளும், ஷீலா ப்ரியாவைத் தாண்டியே செல்ல வேண்டும் என்பதால், ஷீலா ப்ரியா குறித்த புகார்கள் ஜெயலலிதா கவனத்துக்கு செல்வதில்லை என்றும் தெரிகிறது. ஏற்கனவே ஆளுனரின் செயலாளராக இருந்த ஷீலா ப்ரியா மீது அப்போதே ஏராளமான ஊழல் புகார்கள் இருந்தன.  ஆனால் இவற்றை கவனத்தில் கொள்ளாமல், ஷீலா ப்ரியாவை தனது செயலாளராக நியமித்து, ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசுவது நகைச்சுவையை வரவழைக்கிறது.

 

கடந்த ஆட்சியில் இருந்தது போல குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆதிக்கம் இல்லையென்றாலும், நடராஜன், ராவணன், வெங்கடேஷ், போன்ற பெயர்கள் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.   அரசு அலுவலகங்களில் விசாரித்தால், மணற்கொள்ளை தங்கு தடையின்றி நடைபெறுவதாகவும், அதிகாரிகள் நியமனத்தில், மன்னார்குடி ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதாகவும் தெரிவிக்ககிறார்கள்.  இது போக பெசன்ட் நகரில் நடராஜன் தனியாக ஒரு தலைமைச் செயலகத்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

 DSC_4879

இவையெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு வருகிறதா இல்லையா என்பது தெரியவில்லை.   ஆறுமாதங்களின் முடிவில், அதிமுக ஆட்சியை அலசிப் பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

 

Comments  

 
+1 #42 GANESH2 2011-11-22 06:23
when J took charge she told after 6month power will not go because power will buy from Gujarat, but she not did this and she increased MLA salary and gave LAPTOP to all.MLA are poor peoples?? Finny...THINK!!!
In this 6month can u say any good news she(JAYALALITHA ) did??
I agree DMK did wrong but they not play with poor peoples.
So better any other new good person will lead us!!!(???)
Quote
 
 
+9 #41 RAJKUMARPANDIAN 2011-11-20 06:17
[ஃஉஒடெ நமெ="ஆர்.தியாகு"]தோழர்களே.!!!

5.குடித்துவிட்டு வன்முறையில் இறங்கி காவல்துறை உயர் அதிகாரியை தாக்கி அரசு வாகனங்களை எரித்து முற்றிலும் அழித்து..வெற்றிக்கரமாக சாலை மறியல் செய்தால்... அதுவும்
சவுக்கு இருந்தால் தங்க மெடல் குடுத்திருப்பார ்.... பாவம் செந்தில் வேலன் அரசியல்வாதி அல்ல உண்மையான போலீஸ்க்காரன்.


மற்றவர்கள் சாவில் மகிழும் நண்பரே ..உங்கள் அண்ணனோ தம்பியோ காவல் துறையின் துப்பாக்கி சூட்டில் அல்லது சாலை விபத்தில் செத்தால் குடித்து விட்டு செத்தான் என்று தான் சொல்லுவீர்களோ ..உடனிருந்து ஊற்றி கொடுத்தவர் போலவே பேசுகிறீர்களே ....அண்ணே ..பரமக்குடி டாஸ்மாக்ல ஒண்ணும் வேலை செய்யலையே..!!!ஏன் கேட்கிறேன்னா இங்க நீங்க கமெண்ட் எழுதும் போதெல்லாம்... குடிபோதையில் மற்றவர்களை திட்டும் குடிகாரப்பயல் போலவே ..இங்கே ..நீங்கள் பயன்படுத்தும் சொற்கள் ..அட பயித்தியக்கார முட்டாளே ..அட மூடனே ..அட அறிவு கெட்டவனே ..அட குடிகாரனே இதையும் சேர்த்துக்கோங்க ...நான் உம்மை திட்டவில்லை ..நீர் மற்றவர்களை வசை பாடுவது தான் இதெல்லாம்..இதெல்லாம் நீர் எப்படி பட்ட நபர் என்பதை காட்டுகிறது..உள்ளே உள்ளது வெளிய வருது.. ம்..ம்..மன்னிக்க..!!! உள்ளே போனது தானங்க வரும் !!ultimately you can give only what you have!!!
Quote
 
 
+6 #40 கலை ராஜா 2011-11-18 17:12
////திமுக வழக்கறிஞர் பிரிவு, அதிமுக வழக்கறிஞர் பிரிவைப் போல மங்குணிப் பிரிவு அல்ல. கடந்த திமுக ஆட்சியில் நடந்த அத்தனை அட்டூழியங்களுக் கும் எதிராக ஒரு வழக்கைக் கூட அதிமுக அணி போடவில்லை என்பது ஊரறிந்த உண்மை./////// அதிமுக வின் வழக்கறிஞர் பிரிவு மட்டுமல்ல.....ஒட்டுமொத்த அதிமுக காரனுங்களும் மங்க்குணிகள் தான்.
Quote
 
 
+3 #39 Nellai Kumaran 2011-11-18 11:52
தமிழகத்தில் பேருந்தை விட தொடர்வண்டி கட்டணம் குறைவு.
சென்னை - கன்யாகுமரி இரட்டை பாதை எப்பொழுது நிறைவேறும் ???

சென்னை மெட்ரோ திட்டம் 14 ,500 கோடி ரூபாய். முதல்வரின் கனவுத் திட்டம் மோனோ ரயில் 11,000 கோடி ரூபாய் திட்டம்.

சென்னை - கன்யாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்கு மாநில அரசு ஒரு தொகை ஒதுக்க முடியாதா ? அல்லது மத்திய அரசை போராடி பெற முடியாதா ?

தனியார் பேருந்து முதலாளிகளிடம் பொருக்கி தின்னும் ஆட்சியாளர்கள் உள்ளவரை இது நடக்காது. எல்லாவற்றிற்கும ் மக்கள் தெருவிற்கு வந்து தான் போராட வேண்டுமா ?? என்ன கொடுமை ?

நாம் (மக்கள்), கட்சி , தலைவர் என்று யாரும் இன்றி தாமாக முன்வந்து போராடத வரை எதுவும் நடக்க போவதில்லை.

தோழர்களே உங்கள் கருத்து என்ன ?
Quote
 
 
-2 #38 kamala 2011-11-18 08:53
சவுக்கு அருமை
வாழ்க வாழ்க வாழ்க
அம்மா ஆசியுடன்
Quote
 
 
+1 #37 பஞ்சர் பலராமன் 2011-11-18 07:00
ஏமாற்றும் அதிமுக அரசும் ஏமாளியான மக்களும்
http://velichathil.wordpress.com/
Quote
 
 
+6 #36 பொது ஜனம் 2011-11-18 02:15
Quote:
வைஃபை, வெப்கேம் வசதிகள் நீக்கப் பட்டன. ஹார்ட் டிஸ்க் 320 ஜிபியிலிருந்து 160 ஜிபியாக குறைக்கப் பட்டது. வைஃபை வசதி இல்லாத லேப்டாப் எதற்கு பயன்படும் ? இணைய வசதியை மாணவர்களுக்கு எப்படிக் கொடுப்பார்கள் ?


Wi-Fi, Web Cam மற்றும் 320GB Hard Disk போன்றவை பள்ளி சிறுவர்களுக்குத ் அவசியம் தேவையில்லாத வசதிகள்.

1. WiFi -> இணைய தளத்தை உபயோகப் படுத்த கேபிள்ஸ் போதுமானது . பள்ளி சிறுவர்கள் எப்போது On-lineல் இருக்கப் போவதில்லை. வேண்டுகிறபோது இணைய தள அறைக்குச் சென்று இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. Web-Cam -> உமக்கேத் தெரிந்திருக்கிற து இது தேவை இல்லை என்று.
3. 160 GB storage space -> 1 GB என்பது 10,24 MB. ஒரு சினிமா பாடல் 5 MB வீதம் சுமார் 32,000 பாடல்களை சேமிக்கலாம். ஒரு Word document 1 MB வீதம் 160,000 Documents-ஐ சேமிக்கலாம். இது தேவைக்கும் அதிகம் தான்.
Quote
 
 
+4 #35 பொது ஜனம் 2011-11-18 02:15
எனக்கு எப்போது சவுக்கின் மேல் ஒரு நல்ல மரியாதை உண்டு. ஆனால் ஜெ. அரசு லேப்டாப் விசயத்தில் மிகவும் சரியான முறையில், மாணவர்களின் நலன் கருதி நடப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

நீர் குறிப்பிட்டுள்ள மற்ற கருத்துக்களை, நான் ஆதரிக்கிறேன்.

Quote:
அரசு நிறுவனமான எல்காட்டின் செர்வர்களே லைனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் போது, மாணவர்களுக்கு மட்டும் எதற்காக விண்டோஸ்.


லைனக்ஸ் OS, Serversக்கு சரியாக இருக்கலாம், சாதாரண கணிப்பொறி பயன்பாட்டாளருக் கு உகந்தது அல்ல. அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.. லைனக்ஸின் CEOவும் அமெரிக்கர் தான். இதை அமெரிக்காவுடன் தொடர்பு படுத்துவது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. லைனக்ஸ் OSஐ விட விண்டோஸ் OSஐ பயன்படுத்துவது மிக சுலபம்.

எத்தனை MNC கம்பெனிகள் Microsoft Servers-ஐ பயன்படுத்துகின் றன என்பது உமக்குத் தெரியுமா?

Quote:
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வாடிக்கையாளர்கள ை தொடர்ந்து பல்வேறு பொருட்களை வாங்குவதற்கும், தொடர்ந்து ஆன்டி வைரஸ் மென்பொருட்களை நம்பி இருப்பதற்கும் நிர்பந்திக்கும் ஒரு நிறுவனம் என்பது கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும்.


இது மறுக்க முடியாத உண்மை. அதற்காக சிறு பிள்ளைகளுக்கு லைனக்ஸ் OS குடுத்து அவர்களுக்கு கணிப்பொறி மேல் சலிப்பை ஏற்படுத்துவதை விட , Windows கொடுப்பது ஒரு நல்ல விசயம் தான்.
Quote
 
 
-2 #34 aswin bala madurai6+ 2011-11-17 21:42
jeyalitha had not change our charectors.always plame to other political party.
Quote
 
 
-1 #33 kadarkkaraivaasi 2011-11-17 19:07
Ooh boy, again & again, she hiked the prices of milk, bus fare & electricity...

I guess she expects the poor & lower middle, who voted her to commit suicide...

She does it repeatedly, last time she got 0 out of 40, and she can expect the same... she thinks, people will forget in two years.... she is paving way for DMK, again...

Can we have another option other than burglar DMK and blood sucking ADMK?
Quote
 
 
+1 #32 டயாப்பர் டக் 2011-11-17 11:06
சென்னை, ஸ்ரீபெரும்புதூர ் அடுத்த பாப்பாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சாமிகண்ணு. ஏழுமலை, கடந்த 1990 மற்றும் 91ம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரிடமிருந்த ு 1.33 ஏக்கர் நிலம், ஆறுமுகம் என்பவரிடமிருந்த ு 1.04 ஏக்கர் நிலம் வாங்கினார். அவரது பூர்வீக நிலம் 20 சென்ட் இருந்தது. கடந்த 2008ம் ஆண்டு, ஐய்யனார் என்ற நில புரோக்கர், சாமிகண்ணுவின் உறவினர்களான ஜானகிராமன், கமலக்கண்ணன் ஆகியோரை அணுகி, அவர்கள் மூலமாக சாமிகண்ணுவிற்கு சொந்தமான நிலத்தை பேரம் பேசி, தி.மு.க., எம்.பி.,யும், நடிகருமான ரித்தீஷுக்கு விற்க ஏற்பாடு செய்தார். சாமிகண்ணு தனது நிலத்தை 40 சென்ட், 30 சென்ட், 37 சென்ட், என மூன்று பிரிவுகளாக நடிகர் ரித்தீஷுக்கு விற்பனை செய்தார். கடந்த 2009ம் ஆண்டு ரித்தீஷ் தரப்பினர், மீதமுள்ள நிலத்தையும் தரக்கோரி சாமிகண்ணுவிடம் கேட்டனர். அவர் மறுத்துவிட்டார் .

அதைத் தொடர்ந்து ரித்தீஷ், ஏற்கனவே சாமிகண்ணு நிலத்தை வாங்கியபோது, அவர் வழங்கிய புகைப்படத்தின் உதவியுடன், ஆள் மாறாட்டம் செய்து, சாமிகண்ணு பவர் கொடுத்ததுபோல், போலி ஆவணங்கள் தயார் செய்தார். அதன்பின், சாமிகண்ணு நிலத்தை, அவருக்கே தெரியாமல், டில்லியை சேர்ந்த ஹதார் ரியல்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், என்ற நிறுவனத்தை சேர்ந்த லட்சுமணன், பாலசுப்பிரமணியம ் ஆகியோருக்கு ரித்தீஷ் விற்பனை செய்துள்ளார்.

இதை தாமதமாக அறிந்த சாமிகண்ணு அதிர்ச்சி அடைந்தார். நடிகர் ரித்தீஷை சந்தித்து கேட்டபோது, மிரட்டப்பட்டார் . தி.மு.க., ஆட்சியிலிருந்தத ால், அமைதியாக இருந்த சாமிகண்ணு, கடந்த மாதம் 22ம் தேதி, காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., மனோகரனிடம் புகார் செய்தார். ஸ்ரீபெரும்புதூர ் சார்பதிவாளர் அலுவலகத்தில், நடிகர் ரித்தீஷ் பதிவு செய்திருந்த பவர் பத்திரத்தை வாங்கி போலீசார் சோதனை செய்தபோது, அதிலிருந்த கைரேகை, கையெழுத்து ஆகியவை, சாமிகண்ணுவுடையத ு அல்ல என்பது தெரிய வந்தது. அவரது புகைப்படத்தை ஒட்டி, வேறு நபரின் கைரேகையைப் பதிவு செய்து, போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருப ்பதும் தெரிந்தது.
ஹலோ.. சினங்கொண்ட சிங்கத்த சிறையில அடைச்சா...அது சிறைய செதச்சிடும்...தெரியும்ல!!! ஒரு ஹீரோவை காமெடியனா ஆக்கிட்டேங்களே பாஸ்!...
Quote
 
 
+3 #31 tiger siva 2011-11-17 10:52
அம்மா கருணாநிதியை இந்த விஷயத்தில் மட்டும் பின்பற்றாமல், ஒரு மாறுதலுக்கு ஸ்ம்ஸ் அல்லது ஈ-மெயில் அனுப்பலாம் ! இல்லை ஒரு பிரயோஜனமாக புறா மூலம் கடிதம் அனுப்பலாம் !! பிரதமருக்கு விரைவாக செய்யல பட முடியாத மூட்டு வலிக்கு புறா ரத்தம் நல்லது , தெம்பாக செயல்பட புறா சூப் உதவும் !
Quote
 
 
+2 #30 tiger siva 2011-11-17 10:51
நேத்து நீதி மன்றத்தில் இந்திய கடற்படை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன் பிடித்தால் பாதுகாப்பு தருவோம்,எல்லை தாண்டி போனால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது இன்னு வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறார்கள். இந்த வெட்க கேட்டை இவர் இன்னும் கண்டிக்க வில்லை. மஞ்ச கர்சீப் கூட்டணி "தர்மத்தால்"கடிதம் எழுதினார். ஆனால் இவர் பொங்கி எழ வேண்டாமா? ஒரே வழி மீனவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து கடலோர காவல் படையில் சேர்ப்பதுதான்.
Quote
 
 
+2 #29 V Karthikeyan 2011-11-17 10:17
சவுக்கு ஒரு நேர்மையான அலசல்,

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவே நடை பெற்றது. ஜெயலலிதாவை பாராட்டியே தீர வேண்டும். அதே போல், நில அபகரிப்பு வழக்குகளில் காழ்ப்புணர்ச்சி இல்லை. இதற்கு போலீஸை பாராட்ட வேண்டும்.

ஆனால், ஜெயலலிதா தடுமாறுவது சரியான மந்திரிகள் இல்லாமல். ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், விஸ்வ நாதன் எல்லாம் நல்ல கட்சி தொண்டர்கள். மூத்த மந்திரிகளுக்கு மத்திய அரசில் பேசி நிதி வாங்குவதோ, இங்கு இருக்கும் அதிகாரிகளை அடக்கி வைப்பதோ, கட்சிக்கு முன்னுரிமை கொடுப்பதோ, இல்லை முதலீடுகளை கவரும் அளவுக்கு திறமை இல்லை. முக்கிய மந்திரிகளே ஷீலா பிரியா போன்றவர்களிடம் பயப்படுகிறார்கள ். ஏன் என்றால், இவர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மடக்கும் அளவுக்கு விவரம் இல்லை. ஜெயலலிதாவால் முடியும், ஆனால் அவர் எவ்வளவு வேலையை செய்வார்.

இதன் விளைவே, ஷீலா பிரியா போன்றவர்கள் தன்னிகரில்லாத அதிகாரத்துடன் இருப்பது, நடராஜன் குடும்பத்தினர் அதிகார மையமாக செயல்படுவது.

இந்த ஆட்சி ஓரளவுக்கு பரவாயில்லை. அடுத்த நிலைக்கு போக வேண்டுமென்றால், நல்ல அமைச்சர்கள் ஜெயலலிதா அருகில் வேண்டும்.
Quote
 
 
0 #28 AUGASTIN 2011-11-17 04:58
[ஃஉஒடெ நமெ="ட்.ற்.செல்லதுரை"]டெஅர் சிர் ,சன் யொஉ ஹெல்ப் மெ சிர் ? ந்ஹட் இச் தெ சொஃப்ட் நரெ உசெட் இன் தெ சொம்மென்ட்ச் சொலும்ன்.( ஃபசிலிட்ய் டொ செலெச்ட் டொ ஏங்லிஷ் அன்ட் டமில்) ஈ நில்ல் பெ க்ரடெஃபுல் டொ யொஉ, இஃப் யொஉ இன்ஃபொர்ம் மெ தெ சொஃப்ட்நரெ நமெ.[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="ட்.ற்.செல்லதுரை"]டெஅர் சிர் ,சன் யொஉ ஹெல்ப் மெ சிர் ? ந்ஹட் இச் தெ சொஃப்ட் நரெ உசெட் இன் தெ சொம்மென்ட்ச் சொலும்ன்.( ஃபசிலிட்ய் டொ செலெச்ட் டொ ஏங்லிஷ் அன்ட் டமில்) ஈ நில்ல் பெ க்ரடெஃபுல் டொ யொஉ, இஃப் யொஉ இன்ஃபொர்ம் மெ தெ சொஃப்ட்நரெ நமெ.[/ஃஉஒடெ]


Quoting T.R.Chellathurai:
Dear sir ,Can you help me sir ? what is the soft ware used in the comments column.( facility to select to English and Tamil) I will be grateful to you, if you inform me the software name.

Quoting T.R.Chellathurai:
Dear sir ,Can you help me sir ? what is the soft ware used in the comments column.( facility to select to English and Tamil) I will be grateful to you, if you inform me the software name.



you can use google translitration!
Quote
 
 
+1 #27 selva100 2011-11-17 00:00
ஜெயலலிதா ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தை ‘முதன்மை மாநிலமாக’ மாற்றப் போவதாக பல முறை குறிப்பிட்டுள்ள ார்.
சில நாட்களுக்கு முன் கலெக்டர்கள் மாநாட்டில் பேசியபோதும் இந்த சொற்களை அவர் உபயோகித்துள்ளார ். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு, பல தரப்பிலிருந்தும ் முதலமைச்சருக்கு ஆலோசனைகள் தேவை.

தமது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முன்னணியினர், எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள்... என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றால் மட்டுமே ஜெயலலிதாவின் கூற்று எதிர்காலத்தில் சாத்தியமாகும். தமது நடவடிக்கைகள் எல்லாமே சரியென முதல்வர் கருதுகிறார் போலும். இது எவ்வளவு தூரம் நன்மையைப் பயக்கும் எனத் தெரியவில்லை.

இதற்கு முன்பு இருந்த ஆட்சிகளின் தொடர்ச்சியாக இந்த அரசு இருந்தால்தான் வரிப்பணம் வீணாகாது. அதை முழுமையாக நிராகரித்துவிட் டுச் செல்லும்போது பணமும், காலமும் விரயமாகும். தவிர, எந்தப் பணியும் நிறைவுபெற்று மக்களைச் சென்றடையாது.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சித் தலைவர்களையும், தமது கட்சியினரையும், அதிகாரிகளையும் புழுவைப் போலப் பார்க்காமல் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று, அந்த ஆலோசனைகளில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தினால ் இந்த அரசு மக்கள் அரசாகத் திகழும்.

ஆளும்கட்சித் தலைவர், முதலமைச்சர் ... இவற்றையெல்லாம் தாண்டி 7 கோடி மக்களுக்கும் தாம்தான் தலைவர் என்ற நினைப்புடன் அவர் பணியாற்ற வேண்டும் என்றே விரும்புகிறோம்.
Quote
 
 
+9 #26 Aravindhaan 2011-11-16 23:02
Guys are commenting here as if all the schools are equipped with Wifi.I bet they don't have even internet.I didn't see even in cybercafes.In Future if they want to use Wifi, let them get wireless adapters. Thats not a issue.
These laptops are given to the village students and giving them Linux would be a trouble if they have some issues during installation,fo rmatting etc.try to compare a school student with your parents not with yourself.How many of them can use Linux?
you can't expect a updated library in Villages.Whereas windows means they can get help from the near by cybercafe folks.The help provided by Windows is uncomparable with Ubuntu or Debian or Fedora core.
What is most important thing is the support and warranty period? Not many parents can't afford if something goes wrong.When they do mass distribution, problems are most common. I was involved these kind of free laptopn scheme in Malaysia during 2003-04.
Quote
 
 
+12 #25 BaluMahendran 2011-11-16 22:22
அதிமுக ஆட்சியை அலசிப் பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.மிக சரி. அவருக்கு ஆலொசனை சொல்ல ஆல் இல்லயா ,இல்ல இயல்பாவே இப்டிதானா நு தெரியல.சிறிய திருத்தங்களுடன் முடித்து இருக்க வேண்டிய சமச்சீர் கல்வி பிரச்சனைய. ஊதி பெருசாகிட்டங்க.யானை தன் தலையில தானே மண்ணை அள்ளி போட்ட கதை தான். நான் கேள்வி பட்ட வரை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இரண்டும் தருகிறார்கள் என்று.ஆகா இவங்களும் கொள்ளை அடிப்பதில் அவர்களுக்கு மிஞ்சியவர்கள் இல்லை போலும்.செய்ய வேண்டியது நிறைய இருக்கு. அதில் கவனம் செலுத்தலாம். அம்மா தேர்தல் அறிக்கையில் சூரியஒளி மின் பூங்கா அமைக்க படும் நு சொன்னங்க. முதல் பிரச்சனை மின்சாரம்.அதில் கவனம் செலுத்தலாம்.
Quote
 
 
+7 #24 suji 2011-11-16 20:29
உள்ளாட்சித் தேர்தல்களை அமைதியாக நடத்தியதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியே ஆக வேண்டும். ஜெயலலிதா நினைத்திருந்தால ், காவல்துறை உதவியோடு, அதிமுகவினரை அராஜகத்தில் இறங்க வைத்திருக்க முடியும். 2006 உள்ளாட்சித் தேர்தலில், லத்திக்கா சரண் மற்றும் ஜாங்கிட் உதவியோடு, திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களை மீண்டும் அரங்கேற்றியிருக ்க முடியும். ஆனால், எந்த வித வன்முறையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தலை நடத்தி முடித்தற்கு கிடைத்த பரிசுதான், உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி.//It was all because of interference of the HighCourt
Quote
 
 
+4 #23 vetry 2011-11-16 20:03
இந்தக் கட்டுரையில் கணினி பற்றிய எழுதியதுதான் சவுக்கின் முகப்புத்தகம் திசைமாற்றப் பட்டதற்கு காரணமாக இருக்கலாம்.

மைக்கிரோஸாவ்ட் பற்றி குறிப்பிட்டது சரியே. அதன் மென்பொருள் தேவையில்லாதது. லினக்சுக்கு பழகிவிட்டால் நல்லதே. மேலும் தற்போது லினக்ஸ் இன் மிகவும் கனதி குறைவான பதிப்புக்கள் கட்டணமின்றிக் கிடைக்கின்றன.
70 லட்சம் மடிக்கணினிகள் என்றால் சராசரியாக 50 டலர்கள் கணக்கிட்டால் 1500 கோடிகள் என்று வருகிறதே! மிகப்பெரிய ஊழலாக இருக்கும் போல இருக்கிறது. (எனக்குக் கணக்கு சரியாக வராது என்பது ஒருபுறம்) நன்றாகத் தோண்டித் துருவிப் பாருங்கள்.
Quote
 
 
+1 #22 புதியவன் ராஜ் 2011-11-16 18:45
Dear Mr. Chelladurai, I am not an expert but I tell what I have done. To type in Tamil, you can use Azhagi software (available free in www.azhagi.com ). Then you can select Tamil or English (above the line smileyes) and type. Hope this will will be helpful.
Quote
 
 
+2 #21 ஊர்க்குருவி. 2011-11-16 18:24
பாராட்டவேண்டியத ை நிச்சியம் பாராட்டலாம். அதேபோல விமர்சிப்பதை முகதாட்சண்யம் பார்க்காமல் விமர்சிப்பதே அரசுக்கும் நல்லது. அந்த ஊடகத்தால் சமூகத்துக்கும் நல்லது.
Quote
 
 
+4 #20 NanumThamizhan 2011-11-16 17:55
சவுக்கு, கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ் நாட்டு மக்களை எப்படி வஞ்சிக்கிறது என்பது பற்றி ஒரு கட்டுரை போடலாமே. பல மாதங்களாக போராட்டம் நடத்தும் மக்களை நீ இப்படி கண்டுக்காமல் இருப்பது சரியல்ல .....
Quote
 
 
+2 #19 RAJKUMARPANDIAN 2011-11-16 17:26
அளவெடுத்த வார்த்தைகளால் ..நறுக்கென்று விமர்சனம் ... காதில் விழவேண்டியவர்கள ுக்கு விழுந்தால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது...அசத்துறீங்க சவுக்கு sir
Quote
 
 
+3 #18 Sulagna 2011-11-16 16:27
[ஃஉஒடெ நமெ="தன"]ஜெ அவ்ர்கலுகு மக்கலை பட்ரி எப்பொடும் கவலை இல்லை கலைன்யர் அவர்கலை குரை சொல்ல வென்டும்[/ஃஉஒடெ]

நல்ல அழகான தமிழ் :)
Quote
 
 
0 #17 sharmili 2011-11-16 16:18
But all the enterprise users are using only Microsoft windows only. Because it is user friendly. Linux is not user friendly.
Have you ever worked with linux? For students its very difficult to work with linux. Servers its ok we can manage. but users using linux is very difficult.
Quote
 
 
+3 #16 ஆர்.தியாகு 2011-11-16 15:06
தோழர்களே.!!!
எனக்கு ஒரு சந்தேகம்.. இந்த சவுக்கு உண்மையில் காவல்துறையில்தா ன் இருந்தாரா.? ஏன்னென்றால்...

1. நீதிமன்றத்தில் மூன்று பேரின் மீதும் வழக்கு போட்டது அவர்களை குற்றவாளிகள் என குற்றப்பத்திரிக ்கை தாக்கல் செய்தது எல்லாம் இந்த போலீஸ்தான்.

2. அதே போலீஸ் எப்படி தீடிர் என நாங்கள் போட்டது பொய் வழக்கு... அதனால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்ய முடியும்?

3. சட்டமன்ற தீர்மானத்தை எந்த முட்டாளும் போலிஸ் மனுவில் குறிப்பிடமட்டான ்.(சவுக்கு இது அறியாமையா... அல்லது அறிந்தும் பொய்யா..?)

4. சவுக்கு வாய்தா வக்கில்களோடு சுற்றிக்கொண்டிர ுப்பதால்...அறியவில்லலையோ என்னவோ.


5.குடித்துவிட்டு வன்முறையில் இறங்கி காவல்துறை உயர் அதிகாரியை தாக்கி அரசு வாகனங்களை எரித்து முற்றிலும் அழித்து..வெற்றிக்கரமாக சாலை மறியல் செய்தால்... அதுவும்
சவுக்கு இருந்தால் தங்க மெடல் குடுத்திருப்பார ்.... பாவம் செந்தில் வேலன் அரசியல்வாதி அல்ல உண்மையான போலீஸ்க்காரன்.


6. சவுக்கு கண்களில் கண்ணீர் சாரல்....வெப்கேம் இல்லையாம்.. இனையம் இல்லையாம்... எதற்கு இதுவெல்லாம்? விடிய விடிய வெப்கேம்மில் காதல் பேசவா..?
காலை பதினொருமணிக்காட ்சி படங்களை வகுப்பறையிலேயே...பார்பதற்கா..?

7. நீங்கள் அறியாதவரா சவுக்கு சங்கர்.... ஷீலா ப்ரியாவை போட்டுக்குடுக்க முடியாதா என்ன? அதற்குதான் பூங்கொன்றான் ஜெ-வின் தனி செயலாளராக இருக்கிறாரே..! உளவுத்துறை பொன்.மாணிக்கவேல் இருக்கிறாரே..!

8.சட்டமன்ற தேர்தலில் வேட்பாளார் பட்டியலை யார்க்கும் தெரியாமல் சசிகலா வெளிடிட்டுவிட்ட ார் என எழுதியது நீங்கள்தான். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் எனன ஆனது? ஆக நடராஜன், ராவணன், வெங்கடேஷ் யாரும் ஜெவின் கண் அசைவில்லாமல் எதும் செய்ய முடியாது...

ஜெ-க்கு "இரட்டை காதபாத்திரம் மாதிரி" அவருக்கு அவரே நல்லதும் செய்வார்! கேட்டதும் செய்வார்!

கருனாநிதி உயிர்ப்பிப்பதும ் ஊறுவதும் கருனாநிதி கையில்தான் இருக்கிறது...
Quote
 
 
-2 #15 vadezs 2011-11-16 14:31
//உள்ளாட்சித் தேர்தல்களை அமைதியாக நடத்தியதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியே ஆக வேண்டும். எந்த வித வன்முறையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தலை நடத்தி முடித்தற்கு கிடைத்த பரிசுதான், உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி.//
எதனால அமைதியா நடந்துச்சு? கள்ள வோட்டு போட்டு மத்த கட்சி ஆட்களோட சண்டை, அராஜகம் என்று போக வேண்டாம்னு தான், நேரடியா ஜெயிச்ச ஆளையே மாத்தி சொல்லிட்டாங்களே .
Quote
 
 
-7 #14 dhana 2011-11-16 13:18
ஜெ அவ்ர்கலுகு மக்கலை பட்ரி எப்பொடும் கவலை இல்லை கலைன்யர் அவர்கலை குரை சொல்ல வென்டும்
Quote
 
 
0 #13 T.R.Chellathurai 2011-11-16 12:56
Dear sir ,Can you help me sir ? what is the soft ware used in the comments column.( facility to select to English and Tamil) I will be grateful to you, if you inform me the software name.
Quote
 
 
+3 #12 razupro 2011-11-16 11:15
@Kamal
have you ever used linux (ubuntu) by urself.pls dont register baseless assumptions here. gimme the areas where you find linux is hard to mange than windows. for any new user both linux and windows will look the same.
but the advantage of linux is that ur not being restricted any anything. u can do what ever u want to with linux (be it application developement or playing with under lying hardware or tweaking the OS itself etc). linux demands every user to exlpore and learn and this attitude is very important for any student.

i agree that for any production work windows is better than linux as it has winodws office installed (again its not free). but for the students they should provide linux and let the students to explore
Quote
 
 
-4 #11 kalidas 2011-11-16 10:51
Linux is for advanced users(Experts). It too has its Bugs and problems.The advantage is open source and most secured Operating System.But cannot be recommended for Beginners.
Windows is an excellent platform for learning and understanding computer architecture.
Yes windows has its bugs and limitations, it is very rare for a beginner(or an intermediate user) even to find out there is a limitation.And Wifi is unnecessary until college infrastructure got developed(which i think not in the immediate future).
Sure the LAPTOP specifications are excellent for our Indian standards. Even though savuku sir , it is not going to hurt to think in your point of view, what if it is a favor for Microsoft?. But according to our current political climate i hope no one will be in their right mind(even though our mighty Mudalamaichar) will dare attempt to make a move towards corruption. Thank you for this article.
Quote
 
 
+1 #10 PremkumarSJ 2011-11-16 10:10
Its true that Microsoft windows is very easy to learn to use and linux is bit difficult to get used to . But Linux provides immense potential to understand computers / operating system/etc due to "open/free software". Students being quick learners will quickly grasp on to these gadets. Wifi is a must.
Think of 100 wires(for 100 laptops) going here and there in a class room. A wifi router costs(1500) less than these 100 wires .
Quote
 
 
+4 #9 Developer 2011-11-16 09:35
Quoting radhakrishnan:
Windows operating system is not that bad. The trouble comes when you surf some unwanted and third rated websites. Antivirus is not required as long as you dont go to pornography and free movie download websites. So it depends on how and for what we use our computers. Linux sucks. Mac is better than windows. But you need to spend a lot more for mac than windows which is not possible for students. Savukku shall think.

Quoting radhakrishnan:
Windows operating system is not that bad. The trouble comes when you surf some unwanted and third rated websites. Antivirus is not required as long as you dont go to pornography and free movie download websites. There are few free antivirus softwares which work very good. For an example avast free edition is really good. I have been using windows since 2004. Had no issues so for. Never crashed. I use it only for necessary work. I use firefox or chrome to surf. These browsers are safe. So it depends on how and for what we use our computers. Linux sucks. Mac is better than windows. But you need to spend a lot more for mac than windows which is not possible for students. Savukku shall think.


This article is not just for talking about Windows. As we all know, even if laptop is provided with Linux, students can easily download windows from torrent websites. Or those who want can go for buying a windows. But providing it along with laptop restricts the user. Viruses can affect even by pen dirves. Please understand that computer viruses are everywhere now. And please don't try to prove that you are an ideal person who don't watch porn,entertainm ent websites, etc.

And in today's IT industry using Linux is a must. Most of the enterprise servers are running on linux only. So students can get familiar with it. I don't see any reason for reducing the hardware capacity for damn windows OS.
Quote
 
 
+12 #8 Raghu 2011-11-16 07:55
Basically students don't need WiFi and web camera.160GB is more enough for their use during schooling and college.

PC can be connected to internet by LAN cable or by USB devices if required.
Quote
 
 
+9 #7 விஜே 2011-11-16 07:47
முதலில் நாம் எந்த இயங்குதளத்தில் பயில துவங்குகிரோமோ அதுதான் பெரும்பான்மையான நபர்களால் உபயோகிப்படும்...
உபயோகிப்பதற்கு கடினம் என்று சொல்ல முடியாது,ஒரு விதமான சோம்பேறித்தனம் என்று வைத்து கொள்ளலாம்.
வை-பை தொழில்நுட்பம் மிக மிக அவசியம் பள்ளிகளில் இணையம் அறிமுகப்படுத்தப ்பட்டால்... எல்லோரும் உபயோகிக்க ற்ஜ ௪5 பின் கொண்ட ஹுப் உருவாக்க முடியாது...
நெப்சமெர நிச்சயமாக தேவை இல்லை என்று சொல்லலாம்...
நமது பொருளாதார நிலையை பொறுத்தவரை இலவசமாக கிடைக்கும் இயங்குதளங்கள் ஒரு வர பிரசாதம். மேலை நாடுகள் போல மாணவர்கள் அனைவராலும் காசு கொடுத்து மென்பெருள் வாங்க இயலாது...

ஒரு சராசரி மாணவருக்கு 160க்ப் ஹார்ட் டிச்க் மொரெ தன் எனொஉக்ஹ்
Quote
 
 
+8 #6 K Sekar 2011-11-16 07:31
சவுக்கு,

ஜெயலலிதா சரியாகத்தான் முயற்சி செய்கிறார். அவருடைய சொந்த வழக்கு கணிசமாக அவர் கவனத்தை திருப்பும். நீங்கள் சொன்ன மாதிரி, அமைச்சர்களுக்கு விவரம் புரியாத காரணத்தால், அதிகாரிகள் ஆட்சிதான் நடக்கிறது. முக்கிய அமைச்சர்களான நிதி அமைச்சர், தொழில் அமைச்சர், மின் துறை அமைச்சர் ஆகியவர்கள் அதிகாரிகளை கேள்வி கேட்கும் சூழ் நிலையில் இல்லை. அமைச்சர்கள் அந்த அளவுக்கு கெட்டிக்காரத்தன மாக இல்லை. இதனால் அதிகாரிகளுக்கு ரொம்ப சவுகரியம். அம்மாவும், அதிகாரிகளை ரொம்ப நம்புவது நல்லது அல்ல. அதிகாரிகள் தன் தவறுகளை மறைப்பதில் வல்லவர்கள். அவர்களுக்குள் கூட்டணி போட்டுக்கொண்டு முதல்வர் காதுக்கு போகாமல் மறைக்க முயற்சிக்கலாம்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தவறு செய்தால், அது அதிகாரிகள், போலீஸ் வழியாக முதல்வருக்கு போய் சேரும். ஆனால் அதிகாரிகள் தவறு செய்தால், அமைச்சர்கள் கேட்கும் நிலையில் இல்லை. சரியான, திடமான அமைச்சர்கள் இல்லாத காரணத்தினால், சசிகலா குடும்பம் கை ஓங்கி இருக்க வாய்ப்பு உண்டு
Quote
 
 
+2 #5 radhakrishnan 2011-11-16 05:47
Windows operating system is not that bad. The trouble comes when you surf some unwanted and third rated websites. Antivirus is not required as long as you dont go to pornography and free movie download websites. There are few free antivirus softwares which work very good. For an example avast free edition is really good. I have been using windows since 2004. Had no issues so for. Never crashed. I use it only for necessary work. I use firefox or chrome to surf. These browsers are safe. So it depends on how and for what we use our computers. Linux sucks. Mac is better than windows. But you need to spend a lot more for mac than windows which is not possible for students. Savukku shall think.
Quote
 
 
0 #4 சவுக்கு 2011-11-16 05:02
கடைசியான போடப்பட்ட 10 பின்னூட்டங்கள் தவறுதலாக நீக்கப் பட்டு விட்டன. சிரமம் பாராமல் மீண்டும் பதிவு செய்யவும்.
Quote
 
 
+36 #3 kamalK 2011-11-15 17:15
சவுக்கு,

மைக்ரோசாப்ட் இயங்குதளம் தான் இன்றும் 70% மக்களால் உபயோகப்படுத்த படுகிறது...லினக்ஸ் ஒரு புழங்குவதற்கு கடினமான இயங்கதளமாகவே அறியப்படுகிறது...

நி-ஃபி என்பது கம்பி இல்லா இணைய இணைப்பை பெறுவதற்கு தானே ஒழிய..நி-ஃபி இல்லாவிட்டால் இணையத்தில் உலவ முடியாது என்பது மடத்தனமாகும்..இணைய இணைப்பு பெற மடிகணினியில் உள்ள ஊஸ்ப் போர்டுகள் வேலை செய்தாலே போதும்.

படிக்கும் பசங்களுக்கு வெப் கேமரா இல்லாத மடிக்கணினி கொடுத்ததும் தவறில்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் வர வர வினவு போல் மாரிகொண்டிருக்க ுறீர்கள்...:)

-கமல்
Quote
 
 
+27 #2 mubarak Hussain 2011-11-15 16:15
சசிகலா எப்பொதும் ஜயலலிதா உடன் இருக்கிரார் பின் நடராஜன் எப்படி சசிகல வின் கனவர் இவர்கல் எப்பொது குடும்பம் நடதுகிரார்கல் ஒன்ட்ரும் புரிய வில்லை
Quote
 
 
+20 #1 kutti 2011-11-15 15:36
இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக ஜெயலலிதா திமுகவை வளர்ப்பதற்கே உதவி செய்கிறார்.

அருமையான கட்டுரை சவுக்கு...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 77 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5912
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week75653
mod_vvisit_counterLast week78106
mod_vvisit_counterThis month198253
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12720372