|
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சொக்கனுக்கு விழுந்த அடி போல மக்களுக்கு அடி விழுந்திருக்கிறது. 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அப்போதும் சொன்னது “கஜானா காலி” என்பதுதான். உடனே தமிழினத் தலைவர் நான் கஜானாவை காலியாக வைத்திருந்தாலும், அரிசியாக கிடங்குகளை நிரப்பியிருக்கிறேன் என்றார். ஜெயலலிதா உடனே, அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்றார். விழுப்புரம் உணவுக் கிடங்கில் நுழைந்த திமுக எம்எல்ஏ பொன்முடி, நிருபர்களை அழைத்துச் சென்று, இது புழுத்த அரிசி அல்ல…. என்று கூறினார். உடனே, ஜெயலலிதா, லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு, அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்று நிரூபிக்க கட்டளையிட்டார்.
கஜானா காலி என்பதை மீண்டும் வலியுறுத்திய ஜெயலலிதா அப்போது தன் கவனத்தை திருப்பியது, அரசு ஊழியர்கள் மீது. அரசு ஊழியர்களின் சலுகைகள் அத்தனையையும் பறித்தார். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கிய உடன், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார். அப்போது ஜெயலலிதா அடித்த அடி, அரசு ஊழியர்கள் மீது மட்டும் விழுந்தது. இப்போது மக்கள் அத்தனை பேர் மீதும் விழுந்துள்ளது.

இன்று காலை முதல் பேருந்தில் பயணம் செய்தவர்கள் “கருணாநிதி எவ்வளவோ தேவலாம்” என்ற வார்த்தையைக் கேட்டிருக்க முடியும். மக்களின் புலம்பல் கொஞ்ச நஞ்சம் இல்லை. நேற்று பால்விலை, பேருந்துக் கட்டணம் மற்றும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான காரணங்களை தெரிவித்த, ஜெயலலிதா மனம் உருகும் வகையில் தொலைக் காட்சியில் பேசினார்.
போக்குவரத்துக் கழகங்கள் குறித்து பேசிய ஜெயலலிதா, “அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன. எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. 2001 ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்” என்று கூறினார்.
புதிய அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யப் பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், போக்குவரத்து என்ற தலைப்பில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை என்னவென்று பார்ப்போம்.
போக்குவரத்து
119. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. தற்போது 21,169 மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாயை ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
ஆகஸ்ட் 4 அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப் படும், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்கப் படும் என்று, ஆடம்பரமாக அறிவித்து விட்டு, நான்கு மாதங்களில் அப்படியென்ன நெருக்கடி முற்றி விட்டது ?
நிதி நிலைமை மோசமாகி விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம்தான் என்றாலும், மன்னார்குடி மாபியா சார்பில், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்காக 450 கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டு கடந்த வாரம் கொடுக்கப் பட்டுள்ளது என்று நம்பகமாக வட்டாரங்களிடமிருந்து வரும் தகவல்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை. மே மாதமே பொறுப்பேற்ற அதிமுக அரசு, ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறை சார்பாக ஏராளமான அறிவிப்புகளைச் செய்து விட்டு, இன்று போக்குவரத்துக கழகங்களே திவாலாகி விட்டன என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் இயக்கப் படும் வெளியூர் பேருந்துகள், தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் வகையில் இயக்கப் படுகின்றன. சென்னையிலிருந்து பெங்களுருக்கு விடப்படும் ராஜஹம்ஸா என்ற வகைப் பேருந்துகள், மிகச் சிறப்பாக செயல்படுவதால், பெங்களுர் செல்வதற்கு பயணிகள் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இப்போது கட்டணத்தை உயர்த்திய பிறகு, தனியார் பேருந்துகளின் ஆதிக்கத்தை குறைத்து அரசுத் துறை பேருந்துகள், தனியார் பேருந்துக்கு இணையாக போட்டி போடும் அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. தமிழகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் அரசியல் பலத்தோடு உள்ளனர். அரசின் அனுமதி இன்றி, ரகசியமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு, கடந்த ஆட்சியில் ஜாபர் சேட் மற்றும் போலிப் பாதிரி ஜெகத் கஸ்பர் தலைமையில் நடந்த வசூல் வேட்டையைப் பற்றி சவுக்கில் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளது.
பேருந்து போலவே, தனியார் பால் உற்பத்தியாளர்களிடமும், மன்னார்க்குடி கும்பல் வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களுமே வசூல் வேட்டையில் இறங்கி மன்னார்குடி மாபியாவுக்கு வசூலித்துத் தர வேண்டும் என்ற உத்தரவு வழங்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கோவையில் உள்ளாட்சித் துறையின் கீழ் பாதாள சாக்கடை தொடர்பான பணியில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது திமுக அரசில். அப்போது கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த அன்சுல் மிஷ்ரா என்ற இளம் அதிகாரி, ஒப்பந்தக் காரர்களை அழைத்து, யாருக்கும் ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டாம், கொடுக்கவும் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
புதிய அரசு பொறுப்பற்றதும், மூன்று மாதங்களுக்கு முன், டி.கே.பொன்னுச்சாமி என்ற ஐஏஎஸ் அதிகாரி கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் படுகிறார். ஒப்பந்தக்காரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முடிந்தவுடன் ரன்னிங் அக்கவுண்ட் என்ற முறையில் பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பணம் கொடுப்பதற்கு முன்பாக, வேலைகள் எப்படி நிறைவேற்றப் பட்டுள்ளன என்பதை பொறியாளர்கள் சான்றளிக்க வேண்டும். பொன்னுச்சாமி கோவை மாநகராட்சி ஆணையராக ஆனதும், மாதந்தோறும் கொடுக்கப் படும் பணம் நிறுத்தப் படுகிறது. ஒவ்வொரு மாதமும் காண்ட்ராக்டருக்கு வழங்கப் படும் பணம் 2 கோடி ரூபாய்.
மாநகராட்சி அலுவலகத்தை அணுகியதும், அந்த அலுவலகத்தில் இருந்த லட்சுமணன் என்ற உதவிப் பொறியாளர், நீங்கள் கோவை மாவட்ட அமைச்சரான எஸ்.பி.வேலுமணியை பார்த்து விட்டு வாருங்கள். பிறகுதான் உங்கள் பணம் பட்டுவாடா செய்யப் படும் என்று கூறுகிறார். அமைச்சரை நேரடியாக சந்திக்க முடியுமா ? மூலவரைப் பார்த்த பிறகுதானே உற்சவரை பார்க்க வேண்டும்….. மூலவர் யாரென்றால், அமைச்சரின் தம்பி சங்கர் என்பவர். அவரை சந்தித்ததும், கட்சி நிதியாக 40 லட்ச ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். 40 லட்ச ரூபாயைக் கொஞ்சம் குறைத்து 37 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் பங்குக்கு 5 லட்சம் கறக்கிறார்கள். அந்த மாதத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அடுத்த மாதமும் பணம் நிறுத்தப் பட்டதும் மீண்டும் உதவிப் பொறியாளர் லட்சுமணனை சந்திக்கின்றனர். அவர், “சார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியையும் பார்த்து விடுங்கள். அவர்தான் இந்தத் துறைக்கு பொறுப்பு” என்கிறார். அமைச்சர் முனுசாமியை கிருஷ்ணகிரி சுற்றுலாத் துறை பங்களாவில் வைத்துப் பார்க்கிறார்கள். பார்த்ததும், ஏற்கனவே வேலுமணிக்கு பணம் கொடுக்கப் பட்ட விபரத்தை சொல்லுகிறார்கள். வேலுமணி ஏன், என்னுடைய துறையில் பணம் வாங்கினார் என்று ஆச்சர்யப்பட்ட முனுசாமி, சரி எனக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், நீங்கள் செல்லலாம். பணம் கொடுக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார். முனுசாமியின் பி.ஏ சேகர் என்பவர், கோவை மாநகராட்சி கமிஷனரிடம் தொலைபேசியில் பணத்தை வழங்குமாறு தெரிவித்ததும் அந்த மாதத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.

டி.கே.பொன்னுச்சாமி, ஐஏஎஸ்
அடுத்த மாதமும் பணம் நிறுத்தப் படுகிறது. மீண்டும் ப்ரோக்கர் லட்சுமணனை அணுகியதும், அவர் மேயர் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவரையும் பார்த்து விட்டு வாருங்கள் என்று உத்தரவிடுகிறார். இந்தச் சூழலில் பொறுமை இழந்த காண்ட்ராக்டர், “சார் நான் தொழில் நடத்துவதா இல்லையா… என்னுடைய வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாமா … என்று சத்தம் போடுகிறார். சத்தம் போட்டவுடன், பணப் பட்டுவாடா செய்ய வேண்டிய கோப்பை தலைமை கணக்கு அதிகாரிக்கு அனுப்பி விடுகிறார்கள் (சிஏஓ). அவரை சென்று சந்தித்ததும், நீங்கள் அனுப்பிய பட்டியலில் ஏராளமான பிழைகள் இருக்கிறது, அதனால் நிறைய தாமதம் ஆகும் என்று தெரிவித்து விடுகிறார்.
இதனால் விரக்தி அடைந்த காண்ட்ராக்டர், பேசாமல் வேலையையே நிறுத்தி விடலாமா என்று புலம்புகிறார்.
ஆட்சி நிர்வாகத்தை செம்மையாக நடத்த வேண்டும், கடனை அடைக்க வேண்டும் என்று தீவிரமாக இருப்பதாகக் கூறும் ஜெயலலிதா, இது போல நடக்கும் ஊழல்களை தடுத்து நிறுத்தினாலே, அரசுக்கு வர வேண்டிய வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுரை கூறும் ஜெயலலிதா, முதலில் அந்த அறிவுரையை தன்னுடைய உயிர்த் தோழிக்கு கூறினால், தமிழக மக்கள் இந்தப் பிரம்படியிலிருந்து தப்பிப் பிழைப்பார்கள்.
|
Comments
[ஃஉஒடெ நமெ="வென்கட் ரம்"]தெரியாம தான் கேட்கிறேன். ஒரு நாளைக்கு 100 ருபாவிற்க்கு குடிக்கும் ஒருவர் 2 ருபா அதிகம் கொடுக்க முடியாதா. எதற்கு இத்தனை சத்தம். குடி மாற்றும் சிகரெட் விஷயத்தை மக்கள் தவிர்தால் இது ஒரு பெரிய பாதிப்பு ஆக இருக்காது[/ஃஉஒடெ]
IT IS WRONG ARE U A APPATTAMANA JOLRA.
Mr.Vasul Raj Don't text like this. If you have some point, text it. Other wise don't point out anybody.
இவரு ஊரு ஊரா போயி கட்டங்களை அலசி பார்த்துட்டு வந்துக்காரு....இவ்வளவு தெளிவா சவுக்கு எழுதி இருக்காரு அதை படிச்சிட்டும் இப்படி லூசு மாதிரி பேசுற? உன்ன மாதிரி பைக்ல, கார்ல போறவங்களுக்கும் , ஃபோட் வேர்ல்ட்'ல பால் வாங்கறவங்களுக்க ு இந்த கஷ்டம் புரியாது.
மத்திய அரசு நிதி கொடுக்கலைன்னு யாரு சொன்னது? ஜூலை மாதம் மதிய அரசிடம் இருந்து கேட்டதை விட அதிகமா நிதி பெற்று விட்டேன் என்று அம்மாவே சொல்லி இருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் குடிகிரார்கள் என்பது போல் உள்ளது தங்களது கருத்து.
கோவையில் அதிமுகவினர் அபார்ட்மெண்ட் முதலாளிகளிடம் சதுர அடிக்கு 100 ரூபாய் தர வேண்டுமென்று கேட்டு, பில்டர்ஸ்களும் அதன்படி சதுர அடிக்கு 100 ரூபாய் சேர்த்து அடுக்குமாடிகளை விற்கின்றார்கள் . திமுகவினர் 10 ரூபாய் தான் கேட்டார்கள். இவர்கள் 100 ரூபாய் கேட்கின்றார்கள் என்றார் ஒரு பில்டர். கோவையில் எத்தனையோ கோடிகளில் அடுக்குமாடிகள் கட்டப்படுகின்றன . சதுர அடிக்கு 100 ரூபாய் என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
சரியான சவுக்கடி, வாழ்த்துக்கள் சகோதரா!
என்ன ஒரு பைத்தியகாரத்தனம ான ஆட்சி செய்யும் முறை?
விலையேற்றத்திற் கு முதல் நாள் பயண கட்டணத்திற்கு தேவையான பணம் மட்டுமே வைத்துக்கொண்டு பயணம் செய்துவிட்டு திரும்பும் முன்பே கட்டணத்தை ஏற்றி விட்டால் அவர்களின் நிலையென்ன?
அதுக்கு தான் சொன்னேன்... திரும்ப 2016 -ல் திருடர்களின் கையில் ஆட்சி போகப்போகிறது என்று.
இந்த ஆட்சியாளர்களை அரசு பேருந்தில் பயணம் செய்ய சொல்ல வேண்டும்... ஜெயலலிதா ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்து கோட்டைக்கு போயிட்டு வரச்சொல்லுங்கள் ... அப்போது தெரியும் மக்களின் உண்மை நிலை.
http://tamil.oneindia.in/news/2011/11/19/poor-people-suffering-lot-due-bus-fare-hike-aid0136.html
I humbly request the lawyers here, to file case that in the future, if they hike the price, they should give at least one month notice to the people.
This is atrocious, outrageous and inhumane.
http://tamil.oneindia.in/news/2011/11/19/poor-people-suffering-lot-due-bus-fare-hike-aid0136.html
Before you teach us about the basic economy, you should think of the one working in the companies present in SEZ (Like Nokia, Samsung, Hyundai,etc) on contract basis, they hardly get 5000 rs per month or less, and the one who works under 100 days employment - 100 rs per day for 100 days in a year. My friend it’s not a big burden for because us we are earning in terms of thousands per day, but it’s not the same for the rest of 100 crore people in India.
Do the government ever think about making the law to enforce that SEZ companies to give permanent employment to all his workers and to make minimum pay scale as 10000 and above per month or according to the commodity prices. if yes then this price hike is nothing to do with us.. we will be glad to welcome the price hike as you said to prevent the govt from bankruptcy...please think about it….If you are in Chennai please go to Sriperumbudur and ask about the salaries of those employees working in the Said SEZ…
Dhanasekaran
மிக்ஸி, 20 கிலோ அரிசி, லேப்}டாப், ஆடு, மாடு என்று இலவசங்களை அடுக்கிக்கொண்டே போனால், இந்த அரசினால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை தானே ஏற்றுத் தாங்கிக்கொள்வது என்பது சாத்தியமில்லாதத ு.
அதைவிடக் கசப்பான புள்ளிவிவரம்: மது விற்பனை தமிழ்நாட்டில் மாதம்தோறும் அதிகரித்துக்கொண ்டே வருகிறது. ஏப்ரலில் ரூ.1555 கோடி, மே மாதம் ரூ.1736 கோடி, ஜூன் ரூ.1732 கோடி, ஜூலை ரூ.1796 கோடி, ஆகஸ்ட் ரூ.1800 கோடி, செப்டம்பர் ரூ.1824 கோடி, அக்டோபர் ரூ.1924 கோடி.
இத்தனைக் கோடி ரூபாய்க்கு சாராயம் (ஐஎம்எப்எல் என்றும் நாகரிகமாக சொல்லலாம்தான்) குடிக்கிற தமிழன், பாலுக்கும் பஸ்ஸýக்கும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கட்டுமே என்று அரசு நினைத்தால், அதற்காக யாரைக் குறை சொல்வது?
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
@ mount road anand theatre signal allolaya peoples proposing pedestrians to convert christian. and they pay cash. Will hinduism will be there in future?
மொதல்லே பஸ் டிக்கெட் வெலபா!
அதாவது இனிமே டிக்கெட்க்கு காசுக்குபதிலா ஹால்ஃப் இல்லே ஃபுல் காலி பாட்டிலைக் கொடுக்கலாம்னு புது ஆர்டர் போட்டாக்கா அப்பொரம் பாரு மவ்னே பணம் கவர்ன்மெண்ட்டுக ்கு கொட்டும்.
அப்பொரம் பால் வெலபா:
டெய்லீ காலைலே டீ காபிக்கு பதிலா கண்டிப்பா டாஸ்மாக் சரக்குதான்னு வொரு ஆர்டர். அப்பொறம் பாரு வென்மெப்புரச்சி தான் போ!
அய்யோ அய்யோ!
எனக்கே காமடியா கீதுபா.
உங்களுக்கு வந்த தகவல் சரியில்லை. தமிழ் நாட்டில் உள்ள அரசாங்க பஸ் மொத்தம் 20,000 (இருவது ஆயிரம்). தனியார் பஸ் இதே அளவுக்கு என்றால் கூட (இவ்வளவு இருப்பது சந்தேகம் தான், இருந்தாலும் உங்கள் கணக்குக்கு) ஒவ்வொரு பஸ் உரிமையாளரும் 1 லட்சம் கொடுத்தால் கூட 200 கோடி தாண்டாது. கிட்டதட்ட பஸ் கட்டணம் வருடக்கணக்கில் ஏற்வில்லை. நிறைய பஸ் ஆபரேட்டர்கள் சிரமத்தில்தான் வண்டி ஓட்டுகிறார்கள். பணம் கொடுத்து இருக்க வாய்ப்பு உண்டு. 450 கோடி என்பது மிக அதிகம். அனேகமாக ஒரு பஸ் ரூபாய 10,000 முதல் 50,000 வரை கொடுத்து இருக்கலாம். தமிழ் நாட்டில் பிரைவேட் பஸ் மிக கம்ம்மியாகத்தான ் இருக்கும்.
The govenment should take steps that the even the last citizen enjoys equal economic benefits. After increasing his economic capability the governmet may step by step implement such economic reforms. Otherwise it will lead into a great hatred.
//Increasing the prise for all these items will definitely cost more to the common man. But if you compare the prise of the same items in the other states, it is too much high.//
Totally agree with all your points. Especially the above one, as every state has middle, lower middle and poor class people. They are not pampered like here in TN.
We have become whiners loosing pragmatic thinking.
பொதுவாகவே தமிழ்நாட்டு பொதுசனத்திற்கு சம்பளம் மட்டும் ஏறிகிட்டே போகனும், விலைவாசி ஏறவே கூடாது.இலவசங்களின் எண்ணிக்கை கூடிகிட்டே போகனும்,வரிகள் மாத்திரம் கூடவே கூடாது.. அரசியல்வாதி அதிகாரி ஒருத்தனும் லஞ்சம் வாங்கி சம்பாதிக்க கூடாது, ஆனா எல்லா எலெக்ஷனலையும் பொதுசனத்துக்கு ஒட்டுக்கு துட்டும் பிராயாணி,சேல வேஷ்டின்னு கொடுத்திட வேண்டும்.
வால்க தமில்நாடு! வளர்க தமில் கல்ச்சர்!
எங்களை போன்ற ஏழைகளால் கண்ணீர் மட்டும்தான் விட முடியும்.அந்த கண்ணீரை விட சக்தி வாய்ந்த ஆயுதம் உலகில் இல்லை.
உளைப்பாளிகளின் தினக்கூலியில் பாதியை "டாஸ்மாக்" மூலமும்,மீதியை பேருந்துக் கட்டணம் போன்ற விலையேற்றங்களால ் பிடிங்கி கொண்டு இலவசங்களை தந்து ஏமாற்ற வேண்டாம்.
உங்களை நம்பிய எஙகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டாம்.
மக்களை பற்றி 24மணி நேரமும் சிந்திக்க வேண்டாம் "ஒரே ஒரு நிமிடம்" சிந்தியுங்கள் போதும்.
- நம்பிக்கையுடன் அப்பாவி தமிழன்
வேற்று மாநிலங்களில் பேருந்து வசதி பிரமாதமாக உள்ளது என.....
ஏன் அங்கு மட்டும் அப்படி?
அங்கே பேருந்து கட்டணங்களை அலசி பாருங்கள், அலறி அடித்துக்கொண்டு இங்கேயே ஓடி வருவீர்கள் ....
அங்கே வசதியை பார்ப்பீர்கள், விலையை கண்டுகொள்ளமாடீர ்கள்.....
அனால் இங்கே வசதி வேண்டும், அனால் விலை கொடுக்கமாடீர்கள ்...
என்ன நீயாயம் சார் இது?
அங்கே எந்த ஆட்சியாளரும் இலவசமாக எதையும் வழங்கவில்லை, அதனால் நிதி பற்றாகுறை இல்லை.
இங்கே நம் மக்கள் இலவசத்திற்கு ஒருமுறை மயங்கிவிட்டார்க ள்..... கஜானா காலி..........
அடுத்தமுறை போட்டியாளர்கள் இலவசம் அறிவிக்கவில்லைய னில் மீண்டும் துரோகிகளே ஆட்சியை பிடித்திருப்பர் .
முந்தைய ஆட்சியாளர்கள் வாரிவழங்கி சுருட்டி சென்றுவிட்டனர்...... கஜானா காலி.......
புது ஆட்சி வந்தது..... மத்திய அரசு நம்மை ஒதுக்கி விட்டது......
மீனவர்கள் படுகொலை - அது உங்கள் பிரச்சனை என மத்திய அரசு ( காங்கிரஸ் ) கூறுகிறது ........
நிதி ஒதுக்கீடு - நீங்கள் யார் என காங்கிரஸ் அரசு கூறிகிறது.......
இங்குள்ள பணத்தயும் தின்றனர், பணம் வருவதுற்கும் வழி இல்லை........ என்ன தான் செய்ய முடியும் நம் அரசால்......
இதில் குறை கூறவேண்டுமானால் மத்திய அரசை தான் கூற முடியும்........ நாம் இப்போது அனாதைகள் போல் உள்ளோம். நம் பிரச்சனையை நாம் தான் தீர்த்து கொள்ள வேண்டும்.....
நம் சுமையை நாமே சுமக்க வேண்டும்....... வாருங்கள் சுமையை பகிர்ந்துகொள்வோ ம்.... நம் நலனிற்காக..... நம் நாட்டிற்காக.........
1. Fuel price hike
2. Electricity rate hike
3. Bus fare hike
4. Police firing
5. Action against rioter
It is important that writers should understand basic economics so that they can understand these kind of hikes.
If a govt. is not increasing prices of certain commodities to align with market, it will lead to demand supply imbalance resulting in high dept. govt. which eventually result in bankruptcy as it is happening in Greece now.
(திருடன் திருடன்) :(
பிரகு ஏன் 100 நாள் வேலை திட்டத்தை (எ.கா) மத்திய அரசு நடத்துகிரது... செல்வந்தர்கலுக் கு ஏன்(டா)ர்லிங் 100 நாள் வேலை...
RSS feed for comments to this post