முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
3ஜி ஊழலில் கருணாநிதி மகளா ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 47
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011 21:53

 

தற்போது வெளி வர இருப்பது 2ஜி அல்ல.   3ஜி ஊழல். இந்த 3ஜி ஊழலில் சம்பந்தப் பட்டிருப்பது, மிகச் சிறந்த நெடுந்தொடர் நாயகியும், கருணாநிதியின் மற்றொரு மகளுமான செல்வி.   இந்தச் செல்வியைப் பற்றி சவுக்கு வாசகர்களுக்கு ஓரளவுக்கு தெரியும் என்றாலும், இந்தச் செல்விதான் கருணாநிதி குடும்பத்திலேயே மோசமான நபர்.   ஒரு நபர், கருணாநிதிக்கும் நண்பராக, மாறன் சகோதரர்களுக்கும் நண்பராக எப்படி இருக்க முடியும் ?  ஆனால் செல்வியால் முடியும்.    மாறன் சகோதரர்களுக்காக செல்வி அழுது ஆர்ப்பாட்டம் செய்வதை நேரில் பார்த்திருந்தால், பல நெடுந்தொடர்களின் நடித்திருக்கும் தேவயானி கூட, ‘இவரின் நடிப்புக்கு முன், நாம் வேஸ்ட்’ என்று நடிப்பதையே விட்டிருப்பார்.  அப்படிப்பட்ட ஒரு கைதேர்ந்த நடிகை தான் செல்வி.

 selvi334

இந்த செல்வி எப்படி 3ஜி ஊழலில் சிக்குகிறார் ?

 

3ஜி ஏலம் நடந்து முடிந்து இன்று ஐடியா, ஏர்டெல், வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் 3ஜி சேவைகளை வழங்குவதாக அறிவித்து வருகின்றன.  3ஜி என்றால் என்ன ?  3ஜி என்றால் வீடியோ அழைப்புகள், வீடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி போன்ற, அதி நவீன வசதிகளை வழங்குவதே 3ஜி சேவை.  ஆனால், இப்போது எந்த நிறுவனமாவது, வீடியோ அழைப்புகளைத் தருகின்றதா ?  பிறகு எதற்காக இந்த 3ஜி.  இன்டெர்நெட், மெயில் போன்ற வசதிகளை நாம் 2ஜியிலேயே பார்க்க முடியுமே… பிறகு எதற்கு 3ஜி…. ?

 

உண்மையான 3ஜி சேவைகள் வழங்கப் படாததற்கு காரணம், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமையே..

 

2008ல் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, பிஎஸ்என்எல் நிறுவனம், 2ஜி மற்றும் 3ஜிக்கான உள் கட்டமைப்பு வசதிகளைச் (டவர்கள் நிறுவுதல், பராமரித்தல், டீசல் ஜெனரேட்டர்களை நிறுவுதல், குளிர்சாதன வசதிகளைச் செய்தல்) செய்வதற்கான டெண்டர் அழைப்பு விடுக்கிறது.

  

இந்த நேரத்தில்தான், செல்வி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நிறைய சம்பாதித்து விட்டார்கள் என்றும், தான் பெங்களுரில் உள்ளதால், தனக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்றும் புலம்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து கருணாநிதி, ராசாவிடம் இது குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

 

செல்விக்கு பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்காகவே இரண்டு நிறுவனங்கள் களத்தில் குதிக்கிறன.   ஒன்று, பி.ஆர்.சாப்ட் டெக் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.  இதன் பதிவு செய்யப் பட்ட அலுவலகம் சென்னை, அண்ணா நகர் கிழக்கு, ஓ ப்ளாக், கணபதி காலனி, 30வது தெரு, எண் 6.   இந்தக் கம்பெனியின் மொத்த முதலீடு வெறும் 10 லட்ச ரூபாய் தான்.  சிம்பிளாகச் சொன்னால் இது ஒரு லெட்டர் பேட் கம்பேனி.  இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் எம்.கே.பாஸ்கர் மற்றும் வி.ராம்குமார் ஆகியோர்.  பாஸ்கருக்கு 9000 ஷேர்களும், ராம் குமாருக்கு 1000 ஷேர்களும் இருக்கின்றன.    இந்த நிறுவனம் தொடங்கப் படுகையில் தனது பிரதான தொழிலாக மென்பொருட்களை தயாரிப்பது, இணையதள வடிவமைப்பு என குறிப்பிட்டுள்ளது.

 

MOA_Page_1

MOA_Page_5

 

இதே போன்று மற்றொரு டுபாக்கூர் நிறுவனம் தேசி ஹோல்டிங்ஸ் மற்றும் கன்சல்டன்ட்ஸ். இந்த நிறுவனம் 2005ல் பங்குச் சந்தையில் தொழில் செய்வதற்காக தொடங்கப் படுகிறது.   இந்தக் கம்பெனியின் முதலீடும் வெறும் ஒரு லட்ச ரூபாய் தான்.   இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் எம்ஆர்டி.ராமானுஜம் மற்றும் எம்.வி.தாமோதரன் ஆகியோர்.  ராமானுஜம் 9900 ஷேர்களும், தாமோதரன் 100 ஷேர்களும் வைத்துள்ளனர்.  இந்நிறுவனம் தொடங்கப் படுகையில் தனது பிரதான தொழிலாக “பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை சொல்லுதல், கடன் ஏற்பாடு செய்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளது.

 MOA_Page_1

MOA_Page_5

1 மே 2008 அன்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெண்டர் வெளியிடப் படுகிறது.  அன்று அரசு விடுமுறை நாள் (உழைப்பாளர் தினம்) என்பது குறிப்பிடத் தக்கது.

 

டெண்டர்கள் மொத்தம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப் படுகின்றன. இந்த டெண்டர்களில் மேற்கு மண்டலத்துக்கு ஸ்பான்கோ டெலி சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் ஆர்டரை பெறுகிறது.   வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு ஆக்மி டெலி பவர் என்ற நிறுவனம் ஆர்டரைப் பெறுகிறது.  தென் மண்டலத்துக்கு டிவிஎஸ்-ஐசிஎஸ் என்ற நிறுவனம் ஆர்டரைப் பெறுகிறது.       இந்த ஆர்டரின் படி, நான்கு மண்டலங்களிலும், 3 ஆண்டுகளுக்குள், 60 ஆயிரம் மொபைல் டவர்களை அமைத்து 3ஜி இணைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  இது நடப்பது 2008ல்.

 

இதன் நடுவே நெடுந்தொடர் நாயகி செல்வியின் வேண்டுகோளுக்கிணங்க ராசா தனது காய் நகர்த்தலை தொடங்குகிறார்.

 

மேலே குறிப்பிட்ட இரண்டு டுபாக்கூர் நிறுவனங்களையும் களத்தில் இறக்க முடிவு செய்கிறார்.   ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் தொலைத் தொடர்புத் தொழிலில் சம்பந்தப் படாத நிறுவனங்களாயிற்றே….  அவை எப்படி தொலைத் தொடர்புத் தொழிலில் இறங்க முடியும் ?   உடனே ராசா, அந்த நிறுவனங்களை அழைத்து, தொலைத் தொடர்புத் தொழில் இருப்பது போல, உங்கள் நிறுவனங்களை மாற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார்.

 

மே மாதம் டெண்டர் வெளியிடப் படும் என்பது தெரிந்து முதலில் களம் இறங்குவது தேசி ஹோல்டிங்ஸ் நிறுவனம்.  இந்நிறுவனம், 7 ஏப்ரல் 2008 அன்று தனது நிறுவனத்தின் பெயரை தேசி ஹோல்டிங்ஸ் என்பதை மாற்றி “ஜெனெக்ஸ்ட் டெலிகாம் பிரைவட் லிமிட்டெட்” என்று மாற்றுகிறது.   அந்த நிறுவனத்தின் பிரதான தொழில்கள் என, தொலைத்தொடர்புச் சாதனங்கள் தயாரிப்பது, விற்பனை செய்வது, தொலைத்தொடர்புத் துறை தொடர்பான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொலைத்தொடர்புத் தொழிலில் ஈடுபடுவது என மாற்றப் படுகிறது. (வெறும் 10 லட்ச ரூபாயில்)

 Copy_of_board_resoultions

 

ஒரே வாரத்தில் மீண்டும் இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப் படுகிறது.  ஜெனெக்ஸ்ட் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயர், “ஐஸ் டெலிகாம்” என மாற்றப் படுகிறது.   இந்த மாற்றம் நிகழ்வது 10 ஜுன் 2008ல்.

 Copy_of_resolutions_board_meeting.-3

மற்றொரு டுபாக்கூர் நிறுவனமான பிஆர் டெக் சாப்ட்வேர் நிறுவனமும் தனது பெயரை மாற்றுகிறது.  27 மே 2009 அன்று இந்நிறுவனத்தின் பெயர் “ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்று மாற்றம் செய்யப் பட்டு, இந்த விபரம் கம்பெனிப் பதிவாளரிடம் அனுப்பப் படுகிறது. இந்த நிறுவனம் ஈடுபடும் தொழில்கள் என 3ஜி தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு தொடர்பான வேலைகள் என திருத்தம் செய்யப் படுகிறது.

 Copy_of_board_of_directors_mintiues

ஏற்கனவே, ஐஸ் டெலிகாம் என்ற பெயரில் ஒரு நிறுவனம், தொலைத் தொடர்புத் துறையிலேயே இருப்பதால், எப்படி இன்னொரு நிறுவனம் ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் என்ற பெயரில் தொடங்க முடியும் என கம்பெனி பதிவாளர் ஒரு கடிதம் அனுப்புகிறார்.  அந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பிய ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் தாமோதரன், “பி.ஆர்.சாப்ட் டெக் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப் படுவதாக அறிகிறோம்.   அந்த நிறுவனம் எங்கள் குழுமத்தைச் சேர்ந்தது. அதனால் பெயர் மாற்றம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று தெரிவிக்கிறார்.

 Change_of_company_name_intimation_letters

இந்த நேரத்தில் பிஎஸ்என்எல்லின் டெண்டர்கள் வழங்கப் பட்டு முடிந்து விடுகின்றன.  உடனே ராசா, இந்த இரண்டு டுபாக்கூர் ஐஸ் நிறுவனங்களையும் அழைத்து, தென் மண்டலத்துக்கு ஆர்டரைப் பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தோடு பங்குதாரராக சேரும்படியும், டிவிஎஸ் நிறுவனத்திடம் தான் பேசுவதாகவும் தெரிவிக்கிறார்.   தொலைத் தொடர்புத் துறை அமைச்சரை பகைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்த டிவிஎஸ், இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு, டிவிஎஸ் – ஐசிஎஸ் என்று ஒப்பந்தம் போடுகிறது.   இந்த ஒப்பந்தத்தின் படி, ஐஸ் நிறுவனத்துக்கு 50 சதவிகிதப் பங்கும், டிவிஎஸ் நிறுவனத்துக்கு 50 சதவிகிதப் பங்கும் என்று ஒப்பந்தம் போடப் படுகிறது.   டிவிஎஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம், ஐஸ் டெலிகாம் போன்ற டுபாக்கூர் நிறுவனத்தோடு பாதிக்குப் பாதி என்று பங்கு பிரித்தது, ஆ.ராசாவின் மிரட்டல் இல்லாமல் நடந்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை.

 Slide2

Slide3

Slide4

Slide5

Slide6

ஆனாலும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்ட டிவிஎஸ் நிறுவனம், இந்த ஆர்டரை செயல்படுத்த முதலீடு செய்வதற்கு முன்வரவில்லை.  டிவிஎஸ் நிறுவனத்துக்கும், ஆர்டர் கிடைத்தவுடன், அதை சர்வதேசச் சந்தையில் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்துக்கு அதை விற்று விட்டு 10 சதவிகித கமிஷனை எடுத்துக் கொள்ளலாம் என்றே முயல்கிறது.

 

டிவிஎஸ்  - ஐசிஎஸ் நிறுவனத்தின் இந்த டெண்டரை சர்வதேசச் சந்தையில் விற்பதற்கு முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. இந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மூவர். ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் ஷ்யாம் சுந்தர்.   ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பிவி.சஞ்சீவ் குமார் மற்றும் டிவிஎஸ்  - ஐசிஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம்சன் மேனுவேல்.  இவர்கள் மூவரும் சர்வதேசச் சந்தையில் இந்த ஒப்பந்தத்தை விற்பதற்கு முயல்கிறார்கள்.  ஆனால் 2009 ஜுன் வாக்கில், 2ஜி விவகாரத்தில் நடைபெற்றிருந்த ஊழல் ஊடகங்களில் பெரும் அளவில் கசியத் தொடங்கி விட்டன.  இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இல்லை.

 

இதனால் இந்த மூவர் குழு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்காக ஒரு கன்சல்டன்டை நியமிக்கின்றனர். அந்த கன்சல்டன்டின் பெயர் சஞ்சீவ் குமார் திவிவேதி.   அவருக்கு மொத்த முதலீட்டில் 1.5 சதவிகிதம் கமிஷன் என்று பேசப் படுகிறது.

 Mandate

 

இவர் வெளிநாட்டில் முதலீட்டாளர்களைத் தேடும்போது, கலிபோர்னியாவைச் சேர்ந்த செல்வராஷ் என்ற என்ஆர்ஐ இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டுகிறார்.   இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே இவர் மொரீஷியஸ் நாட்டில் வீனஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார்.   அக்டோபர் 14 2009 அன்று செல்வராஜோடு நடந்த மீட்டிங்கில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதம் நடந்ததோடு, ஐஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு அட்வான்ஸாக ஒரு பெரும் தொகை மொரீஷியஸ் நாட்டில் ஒரு வங்கியில் போடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே, 21 அக்டோபர் 2009 அன்று 2ஜி ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்கிறது.  சிபிஐ வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்த 11 மாதங்கள் ஆனது என்பது வேறு விஷயம்.  ஆனால் சிபிஐ வழக்கு பதிவு செய்த விவகாரம் தெரிந்த உடனேயே, சம்பந்தப் பட்ட அனைவரும், தலைமறைவானார்கள்.

 

இதில் கன்சல்டன்டாக நியமிக்கப் பட்ட திவிவேதி என்பவர் ஏராளமான பணத்தைக் கொடுத்து, ஏமாந்து தற்போது ரவுடிகளால் மிரட்டப் பட்டு வருவதாக சென்னை கமிஷனரிடத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

 

சரி… இதில் செல்வி எங்கே வருகிறார் ?

 

ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் முகவரி எண் 19/21, ரஞ்சித் ரோடு, கோட்டூர்புரம், சென்னை.  இந்த முகவரியில்தான் பல்வேறு மீட்டிங்குகள் நடந்தது என்றும், இந்த கட்டிடமே கருணாநிதியின் மகள் செல்வியுடையது என்றும் தெரிவிக்கிறார் திவிவேதி.

 

தற்போது இந்த திவிவேதி, பிஎஸ்என்எல் டெண்டரில் தனக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்று நம்பி தான் செலவு செய்த 7 கோடி ரூபாயை பெற்றுத் தர வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.  இந்தப் புகாரில், செல்வி பெயரைச் சொல்லித்தான் ஷ்யாம் என்பவர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கிறார். ஐஸ் டெலிவென்ச்சர்ஸ், ஐஸ் டெலிகாம் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே, செல்வியுடவை என்பது இவருடைய குற்றச் சாட்டு.

 DSC_1631

மாநிலப் போலீசார் விசாரணை நடத்துவதை விட, இதில் சிபிஐ விசாரணை நடத்தினால், கனிமொழியோடு செல்வியும் திஹாரில் இருப்பாரா என்பது தெரிய வரும்.

அண்மைச் செய்தி : இந்தக் கட்டுரை பதிப்பிக்கப் பட்ட பின்னர் வந்த செய்தி.  இந்த ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ஷ்யாம் என்ற நபர், 1996ம் ஆண்டில் கோபாலபுரத்தில் கருணாநிதி குடும்பத்தில் வந்து சேர்கிறார். சேர்ந்த முதலே செல்வியோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்.   செல்வியின் மகள் செந்தாமரையின் கணவர் டாக்டர் ஜோதிமணியும், ஷ்யாமும், ஒரிஸ்ஸாவில் பாக்சைட் மற்றும் இரும்புத் தாது எடுக்கும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.  மேலும், இவர்களோடு சேர்ந்து தொழில் செய்யும் மற்றொருவர், முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதியின் மகன் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பு :  இந்த ஊழலை மற்ற எந்த ஊடகத்துக்கும் முன்பாக, சவுக்கு வாசகர்களுக்காக பிரத்யேகமாக வழங்குவதில் சவுக்கு பெருமகிழ்ச்சி கொள்கிறது.

 

Comments  

 
+1 #48 satheesh 2011-12-04 19:51
எவ்வலவு கொல்லை அடிச்சாலும் வரவெர்பு பலமா இருக்கு சவுக்கு சாரு. இவங்கலால எப்படி மறுபடியும் பேட்டீ குடுக்க முடியுதொ தூக்குல தொஙகலாம்.
Quote
 
 
+9 #47 Swetha 2011-11-29 06:10
சிபிஐ வச்சி விசாரிச்சாலும், Supreme court ல வச்சி விசாரிச்சாலும், கவுண்டமணி, வடக்கம்பட்டி ராமசாமிக்கு குடுத்த காசும், கருணாநிதி குடும்பம் அடிச்சா காசும் ஊ ஊ தான்
Quote
 
 
+1 #46 Swetha 2011-11-29 06:08
[ஃஉஒடெ நமெ="க்.க்.ணடர்"]திமுகவிற்கு அடி மேல் அடி ... கொள்ளை போன பணம் திரும்ப கிடைக்குமா?...[/ஃஉஒடெ]

சிபிஐ வச்சி விசாரிச்சாலும், ஸுப்ரெமெ சொஉர்ட் ல வச்சி விசாரிச்சாலும், கவுண்டமணி, வடக்கம்பட்டி ராமசாமிக்கு குடுத்த காசும், கருணாநிதி குடும்பம் அடிச்சா காசும் ஊ ஊ தான்
Quote
 
 
+8 #45 Anbuchelian 2011-11-26 20:56
இவஙக குடும்பத்துல ஒருத்தன் கூட நல்ல்வன் கிடயாது போல இருக்கு
Quote
 
 
+1 #44 Veerapandiayan 2011-11-24 19:38
சவுக்கு ஒரு திருத்தம் செல்வியின் மகள் பெயர் எழிலரசி . செந்தாமரை அல்ல.
Quote
 
 
+4 #43 tamilselvi 2011-11-24 12:50
இவங்க குடும்பம் பணத்தை கொள்ளை அடிக்க யெப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...
Quote
 
 
+3 #42 Sambasivam 2011-11-23 15:37
எப்படிங்னா... இந்த டாகுமென்ட் எல்லாம் உங்கலுக்கு கிடைக்குது.. கொன்னுட்டிங்னா...
Quote
 
 
0 #41 mbabu 2011-11-23 10:27
சவுக்கு you are really great & god selvi
Quote
 
 
+14 #40 USV 2011-11-22 17:52
இந்த ஊழலை மற்ற எந்த கட்சிக்கும் முன்பாக, நாட்டு மக்களுக்காக பிரத்யேகமாக வழங்குவதில் திமுக மீண்டும் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
Quote
 
 
+6 #39 Ramesh Tendulkar 2011-11-22 17:29
நல்ல கட்டுரை. இது உடணே ஜெயா டி வி யில் வருமா? ரபி பெர்னாட்டை பார்த்து நாள் ஆகிவிட்டது.
Quote
 
 
+6 #38 சுருதி 2011-11-22 14:40
திகார் அத்தியாயம் இரண்டு--- இது ஒரு உன்மை சம்பவம்.....
Quote
 
 
+11 #37 krb 2011-11-22 13:56
நமக்குத் தெரிந்த வரையில் இப்படியென்றால் தெரியாதது எவ்வளவு? அதென்ன ஒடிசாவில் சுரங்கம் பிசினஸ்? வேதாந்தா நிறுவனத்தோடா கூட்டு? இது போன்ற பெரும் வணிகங்கள் அரசியல்வாதிகளின ் குடும்பங்களைத் தாண்டி வேறு யாருக்கும் போகாதா? மன்னார்குடி கும்பல்களின் சேட்டை ஊர் அறிந்ததுதான். அதிமுக அதற்கான விலையையும் கொடுத்திருக்கிற து. பஸ் கட்டண உயர்வில் ஓரளவிற்குத்தான அவர்களால் தாக்கம் இருந்திருக்கக் கூடும். ஏனெனில் போர்டுகளை மாற்றி அரசு போக்குவரத்து மறைமுக கட்டண உயர்வைத் திணித்தப் போது தனியார் என்னப் பயன்பெற்றனர். பத்தாண்டுகள் கழித்து டீசல் உயர்வினால் தனியாரும் பயன் அடையலாம். அவ்வளவே. ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கடந்த பத்தாண்டுகளில் போக்குவரத்து கழகங்கள் எப்படி நஷ்டம்டைந்தன என்பதைத் தோண்டினால் விவகாரம் வெளியே வரும்.
Quote
 
 
+7 #36 rameez 2011-11-22 13:50
கருனானிதி குடும்பத்தை அழிக்கமால் விடமாட்டிர்கல் போல் இருக்கிரது
பனமும் பவரும் கிடைக்கும் ஒரெ இடம் அரசியல் தான்.எந்த் கட்சியிலும் உத்தமர்கல்
இல்லை. இது இந்தியாவின் சாபப கேடு.இஙுகு
வருமை நிலவ இவர்கல் தான் காரனம்
Quote
 
 
0 #35 உயர்மழையான் 2011-11-22 10:52
Hats off Savukku! Another excellent investigative journalism report filed by you. This is quality reporting when it comes to investigative journalism. Like in all english movies trilogy where part 2, part 3 are common when the first film is a hit we need to see this as Part 2 (3G) after part 1 (2G). So when is next part - 4G?
Keep up the work and be safe.
Quote
 
 
+10 #34 nanban 2011-11-22 08:47
தென்னகத்து அசாங்கே ................... உன் பணி தொடர வாழ்த்துக்கள்...............
Quote
 
 
0 #33 ஆகாயமனிதன் 2011-11-22 06:54
[ஃஉஒடெ நமெ="றய்ஜகுஅர்"]பட்த வசுடியஎ சவுக்கு!! :லொல்:[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="ஸ்ரேனிவசன்"]ஆயிரமாயிரம் ஆதாரத்தை காட்டினாலும் என்ன புண்ணியம் சவுக்கு ? எப்படியும் இந்த மொள்ளமாரிங்க ஒன்னு கேஸ ஒன்னும் இல்லாம பண்ணிடுவானுங்க சமீபத்திய உதாரணம் கேடி பிரதர்ஸ் அப்படி இல்லன்ன ஆட்சி மாறிடும். வேதனையா இருக்கு...[/ஃஉஒடெ]/
/KDபிரதர்ஸ்..அவனுக உள்ள போகக்கூடாது..வெளியிலேயே இருந்து சன் குழுமத்த வித்திட்டு தான் போகணும் அது 2014ல நடக்கும் !
Quote
 
 
+38 #32 Sriram Tanjai 2011-11-21 19:54
எங்கிருந்து தான் உங்களுக்கு இவ்வளவு ஆதாரங்கள் கிடைக்கின்றன என்றே புரியவில்லை. எது எப்படியோ தமிழ்நாட்டுக்கு ஒரு விக்கி லீக்ஸ் தேவை தான்.
Quote
 
 
+24 #31 பொது ஜனம் 2011-11-21 19:37
இந்தியாவுக்கு ஒரு அன்னை சோனியா, தமிழ்நாட்டுக்கு பல அன்னைகள் கனி, செல்வி.... ஜெயா....
இதுலயும் நாம தாண்டா கிங்கு..
Quote
 
 
+6 #30 SHARAN 2011-11-21 18:54
வாழ்த்துக்கள்
Quote
 
 
-25 #29 kalnaayak 2011-11-21 18:21
இது கட்டண உயர்வில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி சவுக்கு இது நியாயமா? மன்னார்குடி கும்பல் 450 கோடி தனியார் பேருந்து முதலாளீகலிடம் வாங்கியதாக சொன்னீர்களே அது பற்றி விரிவாக எழுதாமல் எப்போ பார்ட்தாலும் கருனானிதி குடும்பம் பற்றியே எழுத வென்டுமா ?
Quote
 
 
+30 #28 G.K.Nadar 2011-11-21 18:11
திமுகவிற்கு அடி மேல் அடி ... கொள்ளை போன பணம் திரும்ப கிடைக்குமா?...
Quote
 
 
+15 #27 RayJaguar 2011-11-21 18:01
pattha vachutiyae savukku!! :lol:
Quote
 
 
+28 #26 RAJKUMARPANDIAN 2011-11-21 17:03
மாநிலப் போலீசார் விசாரணை நடத்துவதை விட, இதில் சிபிஐ விசாரணை நடத்தினால், கனிமொழியோடு செல்வியும் திஹாரில் இருப்பாரா என்பது தெரிய வரும்...

SBI(Savuku Investigation Bureau)புலன் விசாரித்து தகவல்கள் சேகரித்த பிறகு CBI கேஸ் File பண்ணி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது தான்.CBI க்கு வேலை மிச்சம்.. PROUD OF YOU THALA..
Quote
 
 
+22 #25 mani123 2011-11-21 16:24
ஏதோ சீரியல் ல வர்ர காமெடி நடிகை நு நெனச்சா...ஹாலிவுட் பட வில்லி ரேஞ் கு இருக்கும் போல இந்த ஆண்டி....!
Quote
 
 
+3 #24 conscience 2011-11-21 16:02
who will question this corruption ?
http://www.whispersintamilnadu.com/2011/11/tamil-nadu-ministers-kaun-banega.html
Quote
 
 
+23 #23 T.Karthikeyan 2011-11-21 16:00
Savukku your article with full of evidence is superb, non of the medias and magazine didn't do these kind of useful articles they always dependable to cinema news. We like you savukku do more articles like this. Our prayer to the God always to you.
God bless you Savukku.
Quote
 
 
+40 #22 Prabu 2011-11-21 14:38
ஒரு தனி மனிதனாக, இவ்வளவு துணிச்சலாக எழுதும் உங்கள் கட்டுரைகளை பார்க்க மிகவும் ஆச்சரியமாக உள்ளது. வாழ்த்துக்கள். உங்கள் பனி தொடரட்டும்.
Quote
 
 
+25 #21 nallavan 2011-11-21 14:02
Appo indha Amma kovil kovil yaa ponadhu kanimozli kku illaya!!!!!!!!! .. Ayyo Ayoo :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
-27 #20 Nellai Balaji 2011-11-21 13:39
சவுக்கு
சும்மா கருணா குடும்பத்தைய பற்றி எழுதிறியே, கொஞ்சம் ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கை பற்றியும், ஜெயாவின் வாய்தா வரலாறையும் பற்றி எழுதுங்கள். வினவில் இதைப்பற்றி கிழி கிழி என்று கிழிக்கப்படுகின ்றது....சும்மா சொம்பு அடிக்காதிங்க...
http://www.vinavu.com/2011/11/21/jaya-vaida/
Quote
 
 
+7 #19 Kamaludeen 2011-11-21 13:35
This is called upgrading 2G to 3G.
Quote
 
 
+3 #18 Badri 2011-11-21 13:26
Thala,savukku yet another article from ur stable.why cant u file a complaint in JJ rule,safe for u as well..
Quote
 
 
+5 #17 ss 2011-11-21 13:13
2ஜி இல் சு சுவாமி போல் 3ஜி ஊழலுக்கு யார் மணி கட்டப்போகிறார் ?
Quote
 
 
+56 #16 Balu Mahendran 2011-11-21 13:05
சங்கர், கஷ்டப்பட்டு இத்தனை விஷயங்கள் சேர்த்ததற்கு நன்றி!
முடிந்தால், சு. சுவாமிக்கும் ஒரு மெயில் தட்டிவிடவும்.
Quote
 
 
+29 #15 Anthony 2011-11-21 13:00
திராவிட வந்தேறிகளின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் சவுக்குக்கு தமிழனாய் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களின் வேட்டை மேலும் தொடர எனது வாழ்த்துக்களையு ம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Quote
 
 
+29 #14 Golden Moon 2011-11-21 12:54
ஆஹா.....3ஜி -யிலும் ”நிதி” குடும்பத்துக்கு நிதி வந்திருக்கு போலிருக்கே !! ! சுப்பிரமணிய சுவாமிக்கு தகவல் தெரியுமா ???
Quote
 
 
+6 #13 lakshmanan 2011-11-21 12:44
SAVUKKU UNGALUKU ORU VENDUKOL SASIKALA & JEYA KODA NADU BANGLA & SIRUTHAVUR BANGALA & MIDAS PATHI KONJAM SOLREENGALA NAN DMK VUM ILLA AIADMK VUM ILLA COMMAN MAN SOLLUVEENGALA ILLA SOLLA MATTENGALA APPURAM IPPA ULLA MINISTER PATHI KONJAM SOLREENGALA DMK PATHI MATTUM SOLLI ENNA PAYAN ATHAN AVANGA ELECTION LA THOTHUTTANGALA ILLA IPPA JEYA PATHI SOLLUNGA
Quote
 
 
+14 #12 Jagan Prabu 2011-11-21 12:41
சவுக்குக்கு சல்யூட்....
Quote
 
 
+36 #11 Ji M 2011-11-21 12:35
ஆஹா அற்புதம்,பிரமாத ம் அசத்திட்டீங்க சவுக்கு! ஆனந்தம் ஆனந்தம் பரம ஆனந்தம்.போடுங்க போடுங்க செல்வியையும் உள்ளே போடுங்க.
Quote
 
 
+15 #10 moshi17 2011-11-21 12:26
Very Good Investigation Savuuku. Great!! Keep itUp!!!!!!
Quote
 
 
+25 #9 Sathiyaseelan 2011-11-21 12:10
உன்மையை வெலிகொன்டுவந்த சவுக்குக்கு பாராட்டுக்கல்..சம்மந்தபட்ட அதிகாரிகல் இவர்கல் மெல் நடவடிக்கை எடுத்து அனைத்தையும் பரிமுதல் செய்ய வேன்டும்..
Quote
 
 
+24 #8 dgp 2011-11-21 11:13
இந்த ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ஷ்யாம் என்ற நபர், 1996ம் ஆண்டில் கோபாலபுரத்தில் கருணாநிதி குடும்பத்தில் வந்து சேர்கிறார். சேர்ந்த முதலே செல்வியோடு நெருக்கமாக இருந்திருக்கிறா ர் :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+10 #7 tamilar eluchi 2011-11-21 11:02
nanri savukku
Quote
 
 
+36 #6 Sreenivasan 2011-11-21 10:32
ஆயிரமாயிரம் ஆதாரத்தை காட்டினாலும் என்ன புண்ணியம் சவுக்கு ? எப்படியும் இந்த மொள்ளமாரிங்க ஒன்னு கேஸ ஒன்னும் இல்லாம பண்ணிடுவானுங்க சமீபத்திய உதாரணம் கேடி பிரதர்ஸ் அப்படி இல்லன்ன ஆட்சி மாறிடும். வேதனையா இருக்கு...
Quote
 
 
+2 #5 Murali jana 2011-11-21 09:23
the company name you have shown here is ICE televentures..
but the BSNL gave order to TVS-ICS..

ICE & ICS are same or different ??
Quote
 
 
+6 #4 Puthiyavan Raja 2011-11-21 09:14
:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+19 #3 manithan 2011-11-21 08:31
நல்லதோரு குடும்பம் (ஊழல்)பல்கலைக்க ழகம்.
Quote
 
 
+57 #2 Developer 2011-11-20 23:50
I have no words to express my happiness. Karunanidhi should long live to see all the these things.

Well done savukku.. :)
Quote
 
 
+66 #1 zia 2011-11-20 23:37
என்னதான் ஜெயா ஒரு ரொஉடி என்ராலும் இந்த மு க வுக்கு ஜெயா தான் பொருத்தமான இடக்கட்டை.இல்லைன்னா மு க தமிழ் நாட்டையே மு க நாடாக்கிருப்பான ்..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 76 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2472
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week34685
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month268732
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13185099