முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் திடீர் ராஜிநாமா அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 19
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2010 10:48

justicegovindarajan

சென்னை, அக். 23: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.

 மேல்முறையீடு செய்துள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கும், நீதிபதி குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் ராஜிநாமா செய்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தனி நீதிபதி விதித்த இந்தத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற முதன்மை டிவிஷன் பெஞ்ச் அக்டோபர் 5-ம் தேதி உத்தரவிட்டது.

 அந்த உத்தரவில், கல்விக் கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகள் தொடர்பாக 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 தனியார் பள்ளிகளின் மேல்முறையீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்காக பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக் குழு கடந்த 2 வாரங்களில் பலமுறை கூடி விவாதித்தது. இந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்குவதற்கு முன்பே நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

 நீதிபதி கோவிந்தராஜனுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. எனவே, உடல் நலம் காரணமாகவும் அவர் பதவியிலிருந்து விலகியிருக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக மாநிலம் முழுவதும் பரவலாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பள்ளிக் கட்டண முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது.

 

இந்தச் சட்டத்தின் படி, பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் 2009 டிசம்பர் 7-ல் பதவியேற்றார்.

 மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் சம்பளம், பள்ளியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து 10,934 தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை மே 7-ம் தேதி நீதிபதி குழு அறிவித்தது.

 அதன்படி, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை  5 ஆயிரம் முதல்  11 ஆயிரம் வரை அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

 இந்தக் கட்டணத்தை எதிர்த்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்தன. மேல்முறையீடு செய்த அனைத்து பள்ளிகளும் ஏற்கெனவே நிர்ணயம் செய்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி குழு அறிவித்தது.

 அதுதொடர்பான வழக்கில், நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீக்கியது. அதன்பிறகு, நீதிபதி குழுவின் கட்டண நிர்ணயத்தை வெளியிடக் கோரி பெற்றோர்கள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதங்களை மாவட்ட வாரியாக இணையதளத்தில் தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி

 

Comments  

 
0 #7 Panivazhan 2010-11-29 17:12
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+3 #6 Akm 2010-10-25 19:46
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பயன் தருவது போல் ஒரு கட்டுரை வெளியிடுங்களேன் ..
Quote
 
 
+5 #5 பாமரன் 2010-10-25 19:22
அய்யா.. சவுக்கு, ஆட்சியில் இருப்பவரை பற்றி மக்கள் நிறையவே தெரிந்து கொண்டார்கள். இந்த தேர்தலில் அவருக்கு தகுந்த பாடம் புகுட்டுவார்கள் .. ஆட்சிக்கு வரப்போரவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா..? 4 1/2 ஆண்டுகள் யாரைபற்றிய சிந்தனையும் இல்லாமல் சிறுதாவூரில் பதுங்கி இருந்தவர் தேர்தல் நேரத்தில் மக்களுக்காக போராட வந்திருக்கிறார் . அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா..? கருணாநிதி ஆட்சி 3 மாதத்தில் முடிந்து விடும். அடுத்த 5 வருட ஆட்சியில் மக்களை காப்பாற்ற வேண்டியது சவுக்கின் கடமை அல்லவா.? களத்தில் இருக்கும் தலைவர்களை பற்றி தெரிந்து கொண்டால் தானே அவர்களின் லட்சனங்களின் அடிப்படையில் அவர்களை தேர்ந்தெடுக்க முடியும். கருணாநிதி சாக போகிற பாம்பு. ஜெயலலிதா உயித்தெழபோகிற பாம்பு. யாரைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நீங்களே சொல்லுங்கள் சவுக்கு. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பயன் தருவது போல் ஒரு கட்டுரை வெளியிடுங்களேன் ..
Quote
 
 
+1 #4 sundar 2010-10-25 19:00
:oops: :o :-x :zzz :sigh: :D :-) 8) :-| :-* :cry: :zzz :zzz :roll:
Quote
 
 
+2 #3 punnakku 2010-10-25 12:34
this committe has created an awareness among the public and parents. the private Schools are collecting exhorbitant fees from the parents. Moreover the qulaity of teaching is not much more than the govt. schools. The only benefit of the committe is it has created awareness among the public regarding the fees collected from the parents. the correspondents are becoming much richer than all the sectors. the school bussiness is not very easy of course. but the teaching is also becoming worse than the govt. schools. Overall results should not be taken into account. the individual studnts competency achievement should be taken into consideration while comparing the quality of teaching. the teachers are not trained. Old teaching methods are followed. students in privte schools are half baked.they are not having creatively. some exceptions should not be generalised.
Quote
 
 
+2 #2 Kumar.T 2010-10-24 17:06
சமீபத்தில் ஒரு அமைச்சரிடம் அரசு தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக செயல் படுகிறதே என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் அப்படி செயல்பட நினைத்தால் அரசு இந்த கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்தே இருக்காது என்று சொன்னார். உண்மை தான்..
ஆனால் கருணாநிதியிடம் தொன்று தொட்டு ஒரு பழக்கம் உள்ளது, இப்போது தனியார் பஸ் அதிபர்கலிடம் இருந்து ஒரு தொகை வேண்டும் என்றால் நேரடியாக கேட்க மாட்டார் பஸ் போக்குவரத்தை தேசியமயமாகுவது பற்றி அரசு யோசிக்கிறது என்று ஒரு பிட்டை போடுவார். உடனே பஸ் அதிபர்கள் கொடுக்கவேண்டியத தை கொடுப்பார்கள் அப்புறம் அந்த அறிவிப்பு அப்படியே கிடப்பில் போடப்படும்.
கிட்ட தட்ட அதே அணுகுமுறை தான் கோவிந்தராஜன் கமிட்டிலும் கடைப்பிடிக்க படுகிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் மக்களின் போராட்டம் காரணமாக இப்போது கட்டன விவரம் வெளியிடபட்டுவுள ்ளது.
Quote
 
 
+1 #1 appanmani 2010-10-24 15:10
It appears that Chief Minister coffers has been filled up by the private school managements with huge contribution to keep quiet in the matter of fees as fixed by govindarajan committee. hence, the govt did not show interest in the high court case. when parents went to the court, the govt woke up and just sent an ordy vakkil pattalam not the attorney general of the govt as an eyewash . karunanidhi is not interested to implement the committee recommendations or book cases against the erring pvt school managements.Seeing the situation, to facilitate the matter in favour of karunanidhi he has been asked to resign for the time being and let the new government decide after the elctions... this is the tactics by karunanidhi
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 167 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7536
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week51536
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month273796
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13190163