முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இப்படியும் நடக்கும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 45
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 02 டிசம்பர் 2011 13:49

முதல் காட்சி : ஜெயலலிதா தனது அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்துகிறார்.

 Jun-22-d

(கூட்டம் தொடங்குகிறது.  முதலமைச்சர் வருவதற்கு முன்பாகவே, சீப் செக்ரட்டரி தேபேந்திரநாத் சாரங்கி, உளவுத் துறை தலைவர் ராமானுஜம், அரசு தலைமை வழக்கறிஞர் நவனீதகிருஷ்ணன்  முதலமைச்சரின் செயலாளர் ஷீலா ப்ரியா,  உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஷ்ரா, கமிஷனர் திரிபாதி மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஆகியோர் உள்ளனர்.)

 

முதல்வர் உள்ளே நுழைகிறார்.  அனைவரும் எழுந்து நிற்கின்றனர்.

 

ஜெயலலிதா    :     எவ்ரிபடி சிட்டவுன்.  சொல்லுங்க மிஸ்டர் ராமானுஜம்.   லைப்ரரியை சைல்ட் ஹாஸ்பிடலா மாத்துனதுக்கு என்ன ரியக்ஷன்.

 

ராமானுஜம்     :     மேடம்.  பப்ளிக் ஒன்னும் வருத்தப் படல.  பட், பொலிடிக்கல் ரியாக்ஷன் நெறய்ய இருக்கு.   இன்டெர்நெட்டுல ப்ளாக்கர்ஸ் நெறய்ய தப்பா எழுதிருக்காங்க. அப்போது நவநீதகிருஷ்ணன் இடைமறித்து…

 

நவனீதகிருஷ்ணன்:  நோ மேடம்.   நெறய்ய பேர் எனக்கு போன் பண்ணி, என் குழந்தைய எந்த ப்ளோர்ல அட்மிட் பண்ணணும்னு கேட்டுருக்காங்க.   இன் பேக்ட், எனக்கு ஈவ்னிங்லேர்ந்து நெறய்ய சைல்ட் ஷ்பெஷலிஸ்ட் கிட்டேர்ந்து போன்.  எனக்கு அந்த ஹாஸ்பிட்டல்ல வேலை வாங்கிக் குடுங்கன்னு.  உண்மையச் சொல்லனும்னா, அடுத்த வாரம் கல்யாணம் பண்ணப்போற ஒரு கப்புள் எங்களுக்கு குழந்தை பொறந்ததும் அந்த ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட் பண்ணனும்னு சொல்றாங்க…

 

ஜெயலலிதா    :     குட்.. வெரி குட்.  இதுக்காகத்தான் இந்த ஸ்கீமை நான் அனவுன்ஸ் பண்ணேன்.  வாட் ஷீலா வாட் டூ யூ சே.

 

ஷீலா ப்ரியா   :     மேடம். ஆல் புக்ஸ் ஆர் வேஸ்ட் ஆப் மணி.  இப்போ டாக்டர்ஸ் போஸ்டிங் போட்ற பைல்ஸ் என்கிட்ட வர்றதில்ல.  நீங்க ஆர்டர் போட்டு டாக்டர்ஸ் போஸ்டிங் பைல் என்கிட்ட வர்ற மாதிரி பண்ணிங்கன்னா….

 

ஜெயலலிதா    :     தட் வில் பி டிசைடட் லேட்டர்.  ராம் மோகன் ராவ்… வாட் ஈஸ் யுவர் ஒபினியன்.

 

ராம் மோகன் ராவ் :  மேடம்.   யுவர் ஒபினியன் ஈஸ் மை ஒபினியன்.   (மனதுக்குள்.  நம்பள மாதிரி யாருமே பதில் சொல்லிருக்க முடியாது.)

 

ஜெயலலிதா    : ஓகே. ராமானுஜம்.. இந்த முடிவ நம்ப மாத்தணுமா ?  லைப்ரரிய க்ளோஸ் பண்ணணுமா ?

 

ராமானுஜம்     :     க்ளோஸ் பண்ணிடலாம் மேடம்.

 

ஜெயலலிதா    :     லைப்ரரிய ஓபன் பண்ணணும்னு நோட் போட்டுருக்கீங்க ?

 

ராமானுஜம்     :     ஓபன் பண்ணிடலாம் மேடம்.

 
DSC_0421

ஜெயலலிதா    :     வாட் நான்சென்ஸ் ?

 

ராமானுஜம்     :     மேடம் மார்னிங் ஓபன் பண்ணிட்டு, ஈவ்னிங் க்ளோஸ் பண்ணிடலாம்.

 

ஜெயலலிதா    :     பன்னீர்செல்வம், நீங்க என்ன சொல்றீங்க….

(உடனே எழுந்து படீரென்று காலில் விழுகிறார்.)   நோ… நோ… கெட் அப். பன்னீர்.. எமோஷன் ஆகாதீங்க… என்ன பண்ணலாம்னு சொல்லுங்க…

 

பன்னீர்செல்வம் :     அம்மா… இந்த லைப்ரரி மட்டுமில்லாம, தமிழ்நாட்டுல இருக்கற எல்லா லைப்ரரியையும் க்ளோஸ் பண்ணிடலாம்மா..

 

ஜெயலலிதா    :     க்ளோஸ் பண்ணிட்டு… ?

 

பன்னீர் செல்வம்:    எல்லா லைப்ரரிலயும் டீக்கடை ஓபன் பண்ணலாம்மா.  சாதாரண டீக்கடை வச்சிருந்த என்னை முதலமைச்சர் பதவியில உக்கார வைச்சதே அந்த டீக்கடைதான்.   அதனால….

 

ஜெயலலிதா    :     குட் ஐடியா.. பட் பேட் ஐடியா….  செங்கோட்டையன்…  நீங்க என்ன சொல்றீங்க…

 

செங்கோட்டையன்   அம்மா…..  எல்லா புத்தகத்தையும் எடுத்து ஊறவைச்சு பேப்பர் கூழா செஞ்சு, அந்த கூழை வச்சு குழந்தைகளுக்கு பொம்மை செஞ்சு அந்த ஹாஸ்பிட்டலுக்கு வர்ற குழந்தைகளுக்கு வெளையாட குடுக்கலாம்மா………

 

ஜெயலலிதா    :     வெரி குட்…. ஐ லைக் இட்…..  சீப் செக்ரட்டரி… நீங்க என்ன சொல்றீங்க…..

 

சீப் செக்ரட்டரி  :     மேடம். வி வில் க்ளோஸ் ஆல் லைப்ரரிஸ் மேடம்.   வாட் மேடம் சேஸ் ஈஸ் ரைட் மேடம்…

 

ஜெயலலிதா    :     நவனீதகிருஷ்ணன்….   நீங்க என்ன சொல்றீங்க….

 

நவனீதகிருஷ்ணன்  மேடம்.. அந்த லைப்ரரி மொத்தத்தையும் அட்வகேட் ஜெனரல் க்வார்டர்ஸ் ஆக்கிடலாம்மா..

 

ஜெயலலிதா    :     வாட் நான்சென்ஸ்…..  (அப்போது சசிகலாக உள்ளே நுழைகிறார்)  சசி.. நீ என்ன சொல்ற ?

 

சசிகலா        :     அக்கா.. அந்த கட்டிடத்த பெங்களுர் கோர்ட் ஆக்கிடலாம்கா.. அப்பப்போ பெங்களுர் போறது கஷ்டமா இருக்கு.

 

ஜெயலலிதா    :     ஓ.கே….  நெக்ஸ்ட்.  சீப் செக்ரட்டரி…  நிதி நெலமை எப்படி இருக்கு ?

 

சாரங்கி        :     மேடம்.. ஒரு லட்சம் கோடி கடன் மேடம்…

 

ஜெயலலிதா    :     வாட் ஒரு லட்சம் கோடி கடனா…  மை காட்… எப்படி இவ்வளவு கடன் வந்துச்சு ?

 

பன்னீர்செல்வம் :     அம்மா மைனாரிட்டி திமுக அரசோட தலைவர் வாங்கி வச்சுட்டு போயிட்டாரும்மா…   என்ன பண்றதுன்னே தெரியலம்மா….

 Augu---04-b

ஜெயலலிதா    :     திஸ் ஈஸ் வெரி பேட்…. எப்படி சரி  பண்றது ?

 

ஷீலா ப்ரியா   :     மேடம்..  பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், ட்ரெயின் டிக்கெட், பார்க்கிங் டிக்கெட், எலெக்ட்ரிசிட்டி சார்ஜஸ், டெலிபோன் சார்ஜஸ், எல்லாத்தையும் 3 டைம்ஸ் ஏத்திடலாம். நெறய்ய ரெவின்யூ வரும்.

 

ராமானுஜம்     :     மேடம்.. மக்கள் கஷ்டப்படுவாங்க…..

 

பன்னீர்செல்வம் :    அம்மா போன ஆட்சியில மக்கள் கஷ்டப்பட்டாங்கதான்.   ஐஞ்சு வருஷமா கஷ்டப் பட்டவங்களுக்கு இந்நேரம் பழகியிருக்காது ?

 

ஜெயலலிதா    :     யெஸ்.  இந்நேரம் பழகியிருக்கனும்.  இல்லேன்னா பழக்குவோம்.    வாட் டூ யு சே சாரங்கி.

 

சாரங்கி        :   யெஸ் மேடம்.  ஜனங்கள எப்படி ட்ரெயின் பண்றதுன்னு நானும் சில ஐஏஎஸ் ஆபீசர்சும் வேர்ல்ட் டூர் போயி பாத்துட்டு எப்பிடி ட்ரெயின் பண்றதுன்னு கத்துகிட்டு வர்றோம்.

 

ஷீலா ப்ரியா   :     யெஸ் தட்ஸ் ய குட் ஐடியா.   சிஎம் செக்ரட்ரி கூட போகலாம்.

 

ஜெயலலிதா    :     அத அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல ஷீலா சொன்ன எல்லா ஐட்டம் விலையையும் ஏத்துங்க.   இம்மிடியெட்டா.

 

சாரங்கி        :     மேடம்.  டெலிபோன் ட்ரெயின் டிக்கெட்டல்லாம் நம்ப ஏத்த முடியாது.   அது சென்ட்ரல் கவர்ன்மென்ட்.

 2011051759790101

ஜெயலலிதா    :     ஓ.கே… மீதி ஐட்டமெல்லாம் உடனே ஏத்துங்க. மிஸ்டர்.திரிபாதி நில அபகரிப்பு வழக்கெல்லாம் எப்படி இருக்கு ?

 

திரிபாதி        :     மேடம் ப்யூடிபுல்லா போயிட்டு இருக்கு மேடம்.   இன்னைக்கு கூட ஃபார்மர் டெபுடி சிஎம் ஸ்டாலின் மேல கம்ப்ளெயின்ட் வந்துருக்கு மேடம்.

 

ஜெயலலிதா    :     ஏன் இன்னும் ரிஜிஸ்டர் பண்ணல ?

 

திரிபாதி        :     மேடம் கம்ப்ளெயின்ட் குடுத்த அதே ஆள், ஸ்டாலின் வைஃப் துர்கா, ஸ்டாலின் சிஸ்டர் செல்வி, ஸ்டாலின் வீட்டு வேலைக்காரர், அவங்க பக்கத்து வீட்டு நாய் மேல கூட கம்ப்ளெயின்ட் குடுக்கறதா சொன்னார்.  அதான் சேத்து ரிஜிஸ்டர் பண்ணலாம்னு வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம் மேடம்.

 DSC_0874

ஜெயலலிதா    :     வேற ஏதாவது கம்ப்ளெயின்ட் இருக்கா ?

 

திரிபாதி        :     மேடம், திஹார் ஜெயில்ல இருந்தப்போ கனிமொழி கூட டெல்லியில நில அபகரிப்பு செஞ்சதா டெல்லியிலேர்ந்து என் பேட்ச் மேட் சொன்னார் மேடம்.  அத பாலோ பண்ணிக்கிட்டு இருக்கோம்.

 

ஜெயலலிதா    :     குட். வெரி குட்.    உங்களுக்கு பதிலா ஜார்ஜ போடலாம்னு நெனைச்சேன்.  பட் யு ஆர் குட்..

 

திரிபாதி        :     தேங்க்யூ மேடம்.  வேற யார் மேல கேஸ் போடனும்னு சொல்லுங்க..   உடனே போடறேன் மேடம்.

 

சசிகலா        :     அக்கா.  பெங்களுர் ஜட்ஜ் மேல கேஸ் போட சொல்லுங்கக்கா… அந்த ஆள் நம்பள ரொம்ப தொந்தரவு பண்றார்.

 

ஜெயலலிதா    :     வாட் டிஜிபி..  எப்போ போடப் போறீங்க.

 

ராமானுஜம்     :     நோ மேடம்.  நமக்கு அங்க ஜுரிஸ்டிக்ஷன் இல்ல.

 

ஜெயலலிதா    :     வாட் ஈஸ் திஸ்..   இதுக்காகத் தான் நான் நேஷனல் பாலிடிக்ஸ் போலாம்னு இருக்கேன்.   வெரி இர்ரிடேட்டிங்.

 

பன்னீர்செல்வம் :     அம்மா டெல்லி போனீங்கன்னா, ராகுல் காந்தி மேல கூட கேஸ் போடலாம்மா…  இத்தாலியிலேர்ந்து வந்து டெல்லியில நில அபகரிப்பு பண்ணாங்கன்னு சோனியா மேல கூட கேஸ் போடலாம்மா .. .... ...

 

ஜெயலலிதா    :     யா யா.. வெரி நைஸ்.

 

(கூட்டம் முடிவடைகிறது)

 

அறியாலயம்

 

(
ஸ்டாலின், அன்பழகன், கருணாநிதி, வடிவேலு, துரைமுருகன், குஷ்பூ ஆகியோர் இருக்கின்றனர்)

 

ஸ்டாலின்      :     அப்பா.. கட்சிக் காரங்க மேலேல்லாம் ஏகப்பட்ட கேஸ் போட்ருக்காங்க..  ஏதாவது பண்ணனும்.

 

கருணாநிதி     :     ப்ளைட் எத்தனை மணிக்கு வருது ?

 

ஸ்டாலின்      :     (மனதுக்குள் நான் என்ன கேக்கறேன்.  இந்த ஆள் என்ன சொல்றார்)  அருகில் இருந்த வடிவேலுவிடம்.   ஏன்யா… நான் சரியா பேசறேனா ?

 

வடிவேலு      :     அண்ணே.. பின்னுறீங்கன்ணே..

 

ஸ்டாலின்      :     அப்பா.   ஏதாவது போராட்டம் அறிவிக்கனும்.

 
Stalin_5555

கருணாநிதி     :     ஏர்போர்ட்டுக்கு நானும் போகவா ?

 

ஸ்டாலின்      :     வடிவேலுவிடம்… ஏன்யா  நான் சரியாத்தானே பேசறேன்..

 

வடிவேலு      :     அண்னே அருமையா பேசறீங்கன்ணே..

 photo-5309132

ஸ்டாலின்   :     அப்பா என் மேல கூட நில அபகரிப்பு வழக்கு போடப் போறாங்களாம்பா..

 

கருணாநிதி     :     ஜெட் ஏர்வேஸா….  கிங்பிஷரா ?

 

ஸ்டாலின்      :     எனக்கு வேணும்யா.. வேணும்…

 

குஷ்பூ         :     தலைவரே….  தளபதி என்னம்மோ சொல்றாரே..

 

கருணாநிதி     :     என்னம்மா… என்ன சொன்ன… ?

 actress-khushboo-stills-15

குஷ்பூ         :     தளபதி.. ஏதோ சொல்ல வர்றாரு..

 

கருணாநிதி     :     என்னப்பா சொல்லு..

 

ஸ்டாலின்      :     60 வருஷமா உங்களுக்கு புள்ளையா இருந்ததுக்கு சொவத்துல போயி முட்டிக்கலாம்.

 

கருணாநிதி     :     முட்டுறதுன்னா ஏர்போர்ட்ல போயி முட்டிட்டு அப்படியே தங்கச்சிய கூட்டிட்டு வா.

 DSC_3812

குஷ்பூ         :     தலைவரே…   தளபதி போராட்டம் பன்னணும்கிறார்.

 

கருணாநிதி     :     பண்ணச் சொல்லு..  என் மக 6 மாசமா ஜெயில்ல வாடிக் கிடந்தப்போ ஏன் யாருமே போராட்டம் பண்ணல ?

 

ஸ்டாலின்      :     அப்பா… இப்போ நானும் ஜெயிலுக்கு போகப் போறேன்…

 

துரைமுருகன்   :     தலைவரே… மின் கட்டண உயரவ எதுத்து போராட்டம் பண்ணலாம் தலைவரே.

 

கருணாநிதி     :     பொதுச் செயலாளர் ரொம்ப நாளா அந்தப் பதவியில இருக்கறாரே.. அந்தப் பதவிய கொடுத்துடலாமா ?

 

அன்பழகன்          :     என்கிட்ட இருக்கறது அது ஒன்னுதான். அதயும் புடுங்கிடுங்க.

 

ஸ்டாலின்      :     குஷ்பூவைப் பார்த்து.  நீங்களே சொல்லுங்க… என் மேல கேஸ் போட்ருக்காங்க..  என்ன பண்றது..

 

குஷ்பு          :     நீங்க பதிலுக்கு ஜெயலலிதா மேல லேண்ட் க்ராபிங் கம்ப்ளெயின்ட் குடுங்க.. சிம்பிள்.

 

ஸ்டாலின்      :     அருமையான ஐடியா.. இதுக்குத்தான் தலைவர் உங்கள பக்கத்துல வச்சுருக்காரு.

 

குஷ்பூ         :     ஒரு வேளை உங்கள அரெஸ்ட் பண்ணிட்டா கவலைப் படாதீங்க.  நீங்க ஜெயில்லேர்ந்து வர்ற வரைக்கும் நான் பொருளாரா இருக்கேன்.

 DSC_0235

கருணாநிதி     :     அதுக்கு எதுக்கும்மா ஸ்டாலின் ஜெயிலுக்கு போற வரைக்கும் வெயிட் பண்ற…   நாளைக்கே பொதுக்குழுவை கூட்டிடலாமா …. ?  என்னய்யா துரை முருகன்.

 

துரைமுருகன்   :     அருமையான யோசனை தலைவரே… கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுன மாதிரி இருக்கும்.

 

(ஸ்டாலின் முறைக்கிறார்.)

 stalin_3

ஸ்டாலின்      :     நீங்க யாருமே வேணாம்.  நானே போயி ஜெயலலிதா மேல கம்ப்ளெயின்ட் குடுக்க போறேன்…  என்னை அரெஸ்ட் பண்ணுங்கன்னு கேக்கப் போறேன்.   எல்லாரும் கனிமொழி பின்னாலயே போங்க.

 

துரைமுருகன்   :     தலைவரே.. தளபதி போறார் தலைவரே…  அவரை தடுங்க.

 

கருணாநிதி     :     யோவ் விடுய்யா…  இவன யாருய்யா அரெஸ்ட் பண்ணப் போறது..  இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்னு எனக்கே தெரியுதே.. போலீசுக்கு தெரியாதா ?

 

அன்பழகன்          :     ஏங்க… அம்மையார் ஆட்சியில விலைவாசி உயர்வால மக்கள் ரொம்ப கஷ்டப் பட்றாங்க. நாம ஏதாவது பண்ணனும்.  பாரம்பரியம் மிக்க திராவிட இயக்க கட்சியா இருந்துக்கிட்டு இந்த நேரத்துல மவுனமா இருந்தா நல்லா இருக்காது.   ஏதாவது போராட்டம் அறிவிங்க.

 

கருணாநிதி     :     ப்ளைட் எத்தனை மணிக்கு ?

 

Comments  

 
-1 #27 pattu 2011-12-05 21:12
waste of time savukku
Quote
 
 
+2 #26 யாரோ ஒருத்தி 2011-12-05 19:16
இரண்டு் கட்சிகளும்தான் மாத்தி மாத்தி மக்களை முட்டாளா :-? ஆக்கிட்டு இருக்காங்கனா நீங்க வேற ஏன் சார் ?
Quote
 
 
+1 #25 DAYARAI 2011-12-03 22:33
:lol: :-* :D :-* :lol:
Quote
 
 
+3 #24 santhosh thala fan 2011-12-03 20:28
திஹார் கண்ட திருட்டு ராணி"

SUN pics can distribute it
Quote
 
 
+4 #23 Lakshman 2011-12-03 17:43
உலக தொலைக் காட்சி வரலாற்றில் முதல் முறையாக, "திஹார் கண்ட திருட்டு ராணி" நேரடி ஒளிபரப்பு. சுயமரியாதை பிலிமின் உன்னத தயாரிப்பு. தமிழகத்துக்கு காவேரி, முல்லை பெரியார், பாலாறு இன்ன பிற பிரச்சினைகளில் போராடி வெற்றி கண்ட திஹார் ராணி வெளியே வருகிறார். படத்தின் வசூல் 214 கோடி தாண்டும் அளவுக்கு அல்லகைகள் ஆதரவு தாரீர். அவ்வ்வ்வ்.... காயாக இருந்தது.கனியவில்லை. வாடி வதந்கி விட்டது. பிஞ்சாகக் கீழே விழுந்தது எப்படிக் கனியாகும். ஊறுகாய் போடவும் உதவாது. பயனற்றது, பழுதானது. பழுக்க வைத்தாலும் பழுக்காது..இனி அதனால் பயன் இல்லை.... இன்று காலை உங்கள் கலைஞர் டிவி யில், "விடிந்ததும் சனி" - கனிமொழி வரவேற்ப்பு விமான நிலையத்தில் இருந்து நேரடி கொக்கரிப்பு. ஞாயிறு அன்று உங்கள் கலைஞர் டிவி யில், தித்திக்கும் திகார் - சிறப்பு நிகழ்ச்சி. திங்கள் அன்று, "ளெஅர்ன் ஹொந் டொ ச்பென்ட் 180 டய்ச் இன் ஜுச்ட் 180 மினுடெச்" புத்தக வெளியீட்டு விழா, இலவச இணைப்பாக பாச தலைவருக்கு பாராட்டு விழா. உடன் பிறப்பே, எங்களுக்கு தேவை உங்கள் உபசரிப்பே, ஈ ஓட்டுவதே எங்கள் சிறப்பே, அப்படியும் நாங்கள் செய்வது நடிப்பே, வந்தால் உங்களுக்கு கிடைக்கும் ஏ௯ட்ர பய், வராதவர்களுக்கு பெப்பரபே....
Quote
 
 
+8 #22 Lakshman 2011-12-03 17:40
ஒரு திருட்டு ராணிக்கு அதுவும் ஆறு மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதையை. தமிழகம் உருப்பட வழியே இல்லை. முட்டாள் தமிழர்கள், ஒரு போராளிக்கு குடுக்க வேண்டிய மரியாதை அனாவசியமாக நாட்டை கொள்ளையடித்த .போரில் வெற்றி வாகை சூடி வரும் வீர மங்கை... கண்டிப்பாக தாரை தப்பட்டையுடன் பலத்த வரவேற்பு அளிக்க வேண்டியது தான்.........!!!! அடுத்து .. பாராளுமன்ற கூட்ட தொடரில் கலந்து கொண்டு ஊழலை ஒழிப்போம் என்று பேச போகிறார்..!!!!, இது எல்லாம் இந்தியாவில் தான் நடக்கும் .....என்ன கொடுமை சரவணா..?சென்னைக்கு கனி வரும்போது திமுகவினரும் - தாரை தம்பட்ட கலைஞர்களும் ஒய்யார வரவேற்பு ..!! இருக்கட்டும் ...இருக்கட்டும் ....!! அப்ப திரும்ப டெல்லிக்கு போகும் போது "ஒப்பாரி" வச்சு வழி அனுப்புவாங்களா? ? !!
Quote
 
 
+3 #21 சோழன் 2011-12-03 17:01
\\கருணாநிதி : யோவ் விடுய்யா… இவன யாருய்யா அரெஸ்ட் பண்ணப் போறது.. இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்னு எனக்கே தெரியுதே.. போலீசுக்கு தெரியாதா ?\\

நல்ல நகைசுவை உணர்வு. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. ஆனாலும். கொல்லை அடிச்ச பல இலட்சம் கோடி இத்தாலிய ராணியும், திராவிட இளவரசியும் திண்ண போறாங்க :(

அன்னிய நேரடி முதலீடு பத்தி நீங்க எழுதுனா நல்லா இருக்கும்.... பாவி பசங்க... கடன வுடன வாங்கி கஷ்டபட்டு வியாபாரம் செஞ்சா அதுலையும் மண்ண் போராங்க நாசமா போனவனுங்க.....
Quote
 
 
+2 #20 chanddru 2011-12-03 15:58
soooper :lol:
Quote
 
 
+3 #19 subburaj.a 2011-12-03 09:55
நல்லதானே போயிகிட்டு இருக்கு
Quote
 
 
+1 #18 RayJaguar 2011-12-03 09:18
nice one :lol: :lol: :lol:
Quote
 
 
+3 #17 nsharma 2011-12-03 03:28
Savukku....so you were the fly on the wall, eh? Excellent!
Quote
 
 
+4 #16 USV 2011-12-03 00:54
ஒரு பக்கம் "அடே பேரிக்கா மண்டையா"ன்னு கவுண்டர் காமெடி.. இன்னொண்ணு "நண்பேண்டா" சந்தானம்.. முடியலடா (சுப்ரமணிய) சாமி
Quote
 
 
+3 #15 NVK Prakash 2011-12-03 00:35
நல்லா இருக்கு. சூப்பர்.
ஆனா, இப்போ வடிவெலு அம்மா காலில் விழுகிரார்ன்னு செய்தி!!
Quote
 
 
+14 #14 சி.ஐ.டி. காலனி சரா 2011-12-02 22:47
விட்டுப்போனவை:
டிஜிபி ஆபிஸ் ஏடு: நீ யாருய்யா...வேன்ல இருந்து இறங்கு.
ஸ்டாலின் : என்னைய பார்த்தா தெரியலை.. நான் மெட்ராசுல டெரரை கிளப்புற ரவுடி.
ஏடு: ஏய்... உன்னை இந்த மெட்ராசுல பாத்ததேயில்லை. நீ ரவுடியா.. வேனைவிட்டு இறங்குயா. இவங்க எல்லாம் புழல் ஜெயிலுக்கு போறாங்க..
ஸ்டாலின் : ஆமா... நானும் தான் ஜெயிலுக்கு போறேன்.. எல்லாரும் பாருங்க... நான் ஜெயிலுக்கு போறென்.நான் ஜெயிலுக்கு போறேன்.
ஏடு : ஏன்யா நீ ரவுடியா.... ஏன்யா ரவுஸ் பண்ற.
ஸ்டாலின் : யோவ் ஏட்டு. எனக்கு அவமானமா இருக்குயா. நான் கூட வேலை பார்த்த நேருவை கைது பண்றீங்க. பொன்முடியை கைது பண்றீங்க. வீரபாண்டியரை கைது பண்றீங்க. துரைமுருகனையும் உள்ளே தள்ளப்போறீங்களா ம். அவங்க என்ன கிண்டல் செய்யறாங்க. ‘தளபதி... உங்களை அந்தம்மா உள்ளே தள்ளவே மாட்டாங்க’ன்னு கிண்டல் பண்றாங்க...
ஏடு : அதுக்காக...
ஸ்டாலின் : உள்ளே இருந்தவங்களை நானே எத்தனை முறை ஜெயில் ஜெயிலா ஏறி பார்க்கற்து. என்னை பாக்க அவிங்க வரணும். என்னை பத்தி நியுஸ் தெனமும் வரணும். இதுல கனிமொழி நியுஸ் பிசுபிசுன்னு போவனும்.
ஏடு : சரி ஏறிக்குயா?
Quote
 
 
+10 #13 Aravindakshan 2011-12-02 21:33
அட்டகாசமான பதிவு.
சிரிப்பை அடக்க முடியவில்லை.
நகைச்சுவைக்காக இப்படி போட்டிருந்தாலும ்,
நடப்பது தான் இது.......
Quote
 
 
+12 #12 nivash dhinakaran 2011-12-02 20:55
ப்ளைட் எத்தனை மணிக்கு ?
Quote
 
 
+4 #11 njpayyan 2011-12-02 20:18
A satire that truly reflects what is going on. It is very unfortunate that the change in the political situation has made the common man's plight even worse.
Quote
 
 
+6 #10 குட்டி 2011-12-02 20:07
இதெல்லாம் நெஜமா நடந்தால் .... ஐயோ !!!! இப்பவே கன்ன கட்டுதே....சவுக்கு என்ன ஆச்சு???ஏன் இப்படி பட்ட கட்டுரை......?
Quote
 
 
+18 #9 THAMBI 2011-12-02 19:06
தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் நிச்சயமாக இப்படி உரையாடல்கள் நடந்திருக்க நூறு சதவிகிதம் வாய்ப்பு உள்ளது.. நன்றி சவுக்கு...
Quote
 
 
+5 #8 சோழன் 2011-12-02 18:53
#1 soundar 2011-12-02 14:23
முட்டாள்தனமான கட்டுரை......"

முட்டாள் தனமான கட்டுரை தான்! முட்டாள்களுக்கு புரிவது கொஞ்சம் கடினம்தான்! (மன்னிக்கவும்). செம நக்கல் சவுக்கு! நன்றாக இருந்தது!
Quote
 
 
+9 #7 BaluMahendran 2011-12-02 18:03
ப்ளைட் எத்தனை மணிக்கு ?ha ha ha ha ha haha ha haha ha haha ha haha ha haha ha haha ha ha. after long days article like this in savukku....but unga nermai enakku piditchirukku.ha ha ha
Quote
 
 
+17 #6 santhosh thala fan 2011-12-02 16:54
முட்டுறதுன்னா ஏர்போர்ட்ல போயி முட்டிட்டு அப்படியே தங்கச்சிய கூட்டிட்டு வா.


செம்ம செம்ம டைமிங் அண்ணா - எப்புடி இப்படியெல்லாம்
Quote
 
 
-15 #5 Eesan 2011-12-02 16:19
Maybe if Savukku runs a party he will do it this way. Don't project as if Stalin is innocent.
Quote
 
 
+21 #4 gjjp 2011-12-02 15:19
soooper nakkkals
Quote
 
 
+15 #3 akm vetriyur kolkata 2011-12-02 14:46
:லொல்: :லொல்: :லொல்: :லொல்:

நடக்கும் நடக்கும்... யார் கன்டா...
Quote
 
 
+11 #2 mumbai arun 2011-12-02 14:42
சூப்பர்
Quote
 
 
-37 #1 soundar 2011-12-02 14:23
முட்டாள்தனமான கட்டுரை......
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 126 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6703
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week39162
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month241894
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12764013