|
இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் சுப்ரமணியன் சுவாமியை டிசம்பர் 17 அன்று 2ஜி வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சி சொல்ல உத்தரவிட்டிருக்கிறது. சுப்ரமணியன் சுவாமி 17 அன்று சொல்லும் சாட்சியின் அடிப்படையில், சிபிஐ இணை இயக்குநர் ஒருவரும் நிதி அமைச்சக அதிகாரி ஒருவரையும் விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பது டிசம்பர் 17 அன்று முடிவு செய்யப் படும். அதன் அடிப்படையிலேயே ப.சிதம்பரத்தை 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப் படும்.

இந்த முடிவு டெல்லி நீதிமன்றத்தால் வெளியிடப் பட்ட அதே நாளில், ஆண்டுதோறும் சுப்ரமணியன் சுவாமி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கும் லெக்சர்களை ரத்து செய்யும் முடிவும் வெளி வந்திருக்கிறது. டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் மத விரோதத்தைத் தூண்டும், நிற வெறித் தன்மை படைத்த டிஎன்ஏ நாளேட்டில் வெளி வந்த அந்தக் கட்டுரையின் அடிப்படையிலேயே, இந்த முடிவை ஹார்வர்ட் பல்கலைகழகம் எடுத்திருக்கிறது. சுப்ரமணியன் சுவாமியின் அந்தக் கட்டுரையை கண்டித்து முதன் முதலில் எழுதிய தமிழ் ஊடகம் (சுப்ரமணியன் சுவாமி என்கிற பாசிஸ்ட்) சவுக்கு மட்டுமே.
ஜுலை மாதத்தில் அந்தக் கட்டுரை வெளி வந்த போது ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பிஎச்டி மாணவர்களான உமாங் குமார் மற்றும் சஞ்சய் பின்டோ ஆகிய இரு மாணவர்கள் சுவாமியின் விரிவுரையை தடை செய்ய வேண்டும் என்று ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்கள். ஆனால் அப்போது ஹார்வர்ட் பல்கலைகழகம் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தது. தற்போது அதே விவகாரத்தை மீண்டும் விவாதித்த ஹார்வர்ட் பல்கலைகழக ஆசிரியர் நிர்வாகக் குழு, சுவாமியின் கட்டுரை, நாகரீக எல்லைகளை தாண்டி, வகுப்பு வாதத்தையும் வன்முறையையும் தூண்டுவதாக உள்ளது என்று முடிவெடுத்து, ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆண்டு விரிவுரை பட்டியலில் இருந்து சுவாமியின் ‘Quantitative Methods in Economics and Business’ and ‘Economic Development in India and East Asia’ என்ற இரண்டு விரிவுரைகளை ரத்து செய்துள்ளது.
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் டிஎன்ஏ நாளிதழின் கட்டுரை, அவருடைய நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகவே தெரிகிறது. டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு பிஜேபியின் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் ஆக வேண்டும் என்பது நீண்ட நாளைய கனவு. அந்தக் கனவை செயல்படுத்தும் ஒரு உத்தியாகவே சுவாமியின் அந்தக் கட்டுரை பார்க்கப் படுகிறது.
“சுவாமியின் பிரதமர் கனவு” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில இணைய தளத்தில் வெளியான ஒரு கட்டுரையின் இணைப்பு சுவாமியின் ட்விட்டர் தளத்தில் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால் சுவாமி அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. டாக்டர் சுவாமி பிரதமர் பதவிக்கான தனது வேட்கையின் வெளிப்பாடாகவே டிஎன்ஏ கட்டுரையை எழுதியிருக்கிறார் என்று அந்த இணைய தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
சுவாமிக்கு பிரதமர் கனவு உண்டா, அதன் அடிப்படையில்தான் அவர் தன்னுடைய ஊழல் எதிர்ப்புப் பணிகளில் ஈடுபடுகிறாரா என்பதை சுவாமிதான் விளக்கவேண்டும். ஆனால் ட்விட்டர் பேஸ் புக் போன்ற இணைய தளங்களில், “டாக்டர் சுவாமி இல்லையென்றால் இந்தியா என்ன ஆகியிருக்கும், சுவாமி நீங்கள் தான் இந்தியாவின் விடிவெள்ளி, இந்தியாவை ஊழல் முதலைகளிடமிருந்து காக்க வந்த ஆபத்பாந்தவன்” என்றெல்லாம் ஏராளமான கருத்துக்கள் தொடர்ந்து வெளியிடப் பட்டு வருகின்றன.
சுப்ரமணியன் சுவாமி என்ற நபரின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை வாய்ந்தன அல்ல. இவருக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது, இவருக்கு நன்கொடை கொடுப்பவர்கள் யார் என்பது போன்ற விபரங்கள் இது வரை பொதுத் தளத்தில் வரவில்லை. ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை டெல்லிக்கு விமானத்தில் முதல் வகுப்பில் செல்கிறார் சுவாமி. இவருக்கு இரண்டு உதவியாளர்கள் இருக்கிறார்கள். சென்னை, பட்டினப் பாக்கத்தில் உள்ள பாபனாசம் சிவன் சாலையில் இவருக்கு சொந்தமாக பெரிய பங்களா உள்ளது. இந்தப் பங்களாவில் பணியாற்றும் வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.
இது போகவும், சுவாமியின் அன்றாடச் செலவுகள், தொலைபேசிக் கட்டணங்கள், நீதிமன்றத்தில் சுவாமி தொடுக்கும் பல்வேறு வழக்குகளுக்கு ஆகும் செலவுகள் ஆகியவற்றுக்கு இவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது மர்மமாகவே உள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும், அது பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, டாக்டர் சுவாமியோ, அல்லது அவர் சார்பாகவோ யாராவது ஒருவர் போட்டியிடத்தான் செய்கிறார்கள். அவர் நடத்தும் ஜனதா கட்சியில், சுவாமியையும், சந்திரலேகாவையும் தவிர வேறு யாரும் உறுப்பினர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கும், கட்சி நடத்துவதற்கும் அவருக்கு யார் நன்கொடை கொடுக்கிறார்கள் என்ற விபரமும் வெளியிடப் படுவதில்லை. சுவாமியை தேசத்தின் மனசாட்சி என்கிறார்கள். மனசாட்சி என்றால் உண்மையைத் தானே பேச வேண்டும். ஆனால் சுவாமி இது குறித்த உண்மைகளை வெளியிடுவதில்லை. இதில் விசித்திரமான விவகாரம் என்னவென்றால் யாரும் இது குறித்த கேள்விகளையும் எழுப்புவது இல்லை. ஊரில் உள்ள ஊழல்கள் குறித்தெல்லாம் கேள்வி எழுப்பும் சுப்ரமணியன் சுவாமி தன்னைப் பற்றி எழுப்பப் படும் இந்த சந்தேகங்களுக்கு விடை சொல்வாரா என்பது சந்தேகமே…
பல நேரங்களில் சுப்ரமணியன் சுவாமி வெளியிடும் அறிக்கைகள் பெரும் நகைப்புக்கு இடம் கொடுக்கும் வகையில் அமைவது மட்டுமல்லாமல் விஷமத்தனமாகவும் இருப்பதுண்டு.
03.11.2010
The framing of the Kanchi Shankaracharya in the Sankaraman murder case was also on the instruction of Ms.Sonia Gandhi to Ms.Sasikala. Ms.Jayalalitha the then CM, being a performing ‘circus lion’ in front of the ‘ring master’ Ms.Sasikala, obliged and hence the Shankaracharya was arrested.

The foreign Christian missionary lobby has been against the Shankaracharya because he had tried to co-opt Scheduled Castes and Backward Classes into the Hindutva movement.
11/07/2010 I condemn the Income Tax raid carried out at the behest of Ms. Sonia Gandhi on the residences and institutions of His Holiness Mermattur Adigalar Swami. What ever money and wealth found in these premises during this illegal raid are willing donations of the public and cannot constitute a criminal offense for which I-T raids are provided for in I-T Act. There are no charges by any of his devotees of deceit or defrauding, and hence I demand to know how the Finance Minister sanctioned such an illegal raid unless Ms. Sonia Gandhi had ordered him to do so. Adigalar Swamiji has been working for a united Hindu society based on a Vedic concept of equality of all souls. He has millions of followers from the downtrodden people of India. But this was not to the liking of foreign Christian missionaries who felt the Adigalar Swamiji made it difficult for them to get Christian converts by financial inducement. Hence this raid has been carried in an attempt to defame him. But it will be a fiasco that will boomerang on the his detractors. I demand all Tamil Nadu MPs tender their resignation form Parliament in protest unless the Prime Minister makes a public apology to the Adigalar Swami, and returns the seized properties along with Rs.10 crores as compensation for the mental anguish caused to his fiollowers. Otherwise I will move the Hindu Dharma Acharya Sabha to take this matter to the level of agitation throughout the country. Targeting of Hindu sants and sadhus is a part of the Sonia Gandhi-directed and Vatican-ordered campaign against Hindu society to coerce Hindus to convert to Christianity.
21.05.2009
I demand that the Tamil Nadu Government withdraw the bogus murder case pending against the Shankaracharya of Kanchi. It is a waste of public funds to continue with this now defunct case. The Supreme Court while granting bail to the Shankaracharya has already observed that the case lacked prima facie evidence. No new evidence has been unearthed since then.
Moreover, in a recent judgment [(2009) 4 SCC 437], the Supreme Court has held that “arrest is not a must” in all murder cases. The Apex Court held that principle guiding the arrest laid down in its earlier 1994 judgment, is that to require arrest, the suspect could disappear or melt into a crowd, and hence become unavailable. Therefore such accused have to be held in custody for purpose of investigation. This principle does not apply to the Shankaracharya even in the wildest of imagination, and hence the Jayalalitha-led Tamil Nadu Government broke the law laid down by the Supreme Court, by throwing the Shankaracharya into Vellore Jail along with criminals and killers of Rajiv Gandhi. She must now express public regret for this illegal action.
இதெல்லாம் சாம்பிள்கள். இப்போது முக்கியமாக எழுந்துள்ள கேள்வி. சுப்ரமணியன் சுவாமிக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டு வருகிறது. இந்தப் பாதுகாப்புக்கு சொல்லப் பட்ட காரணம் சுப்ரமணியன் சுவாமிக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருக்கிறது என்பதுதான். இஸட் ப்ளஸ் என்றால் இரண்டு குண்டு துளைக்காத வாகனங்களோடு, 24 மணி நேரமும் 36 தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு கமாண்டோவுக்கும் ஒரு மாதத்துக்கு ஏறக்குறைய எல்லா அலவன்சுகளையும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் வரும். இது போக வாகனங்களுக்கு ஆகும் செலவையும் அரசே ஏற்கிறது.
சுப்ரமணிய சுவாமி, பிரதமரோ, மத்திய அமைச்சரோ அல்ல. அவருக்கு இருக்கும் வாழும் உரிமை, இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் உண்டு. அப்படி இருக்கையில் இவருக்கு மட்டும் மக்கள் வரிப்பணத்தில் மாதத்துக்கு 50 லட்சம் செலவில் எதற்காக பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், சுப்ரமணியன் சுவாமியின் கூற்றுப் படியே, விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப் பட்டு விட்டது. அப்படி இருக்கும் போது, இன்னும் எதற்காக இவருக்கு இந்தப் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப் பட வேண்டும் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஊழல் குற்றச் சாட்டுக்களை வெளிப்படுத்துபவர்கள், முதலில் தங்கள் கணக்கு வழக்குகளை பொதுப்படையாக தெரிவிக்க வேண்டும். அது போலவே சுப்ரமணியன் சுவாமியும், தனக்கு வரும் வருமானம் குறித்த விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
|
Comments
"உஙகளுக்கு ஊட்க தர்மம் என்று எதாவது இருக்கிறதா?"
"மன்னிக்கவும். என்ன கேட்டீர்கள்?"
"உங்களிடம் ஊட்க தர்மம் என்று எதாவது இருக்கிறதா என்று கேட்டேன்?"
"அது இருப்பதால் தான் அனைவரையும் அழைத்துள்ளோம்?"
"அப்படியா? ராஜிவ் கொலை சம்பந்தமாக ஜெயின் கமிசனால் குற்றம் சாட்டப் பட்டுள்ள சுப்ரமணீய சாமியை, அந்த வழக்கில் ஆஜராகாமல் விலகி ஓடும் சு.சாமியை இங்கு பேச அழைத்தது நீங்கள் செய்த முதல் தவறு? சரி. அவரை அழைத்தது நியாயம் என்றால் 'பேரறிவாளனையொ, முருகனையொ' ஏன் இங்கு பேச நீங்கள் அழைக்கவில்லை? அல்லது அவர்களது கருத்தை பதிவு செய்யவில்லை? இப்பொது சொல்லுங்கள்... உங்களுக்கு ஊடக தர்மம் இருக்கிறதா?... அது இல்லாமல் வெறும் கண் துடைப்புக்காக நடத்தப்படும் இந்த சம்பிராதாய நிகழ்வில் என் கருத்தை பதிவு செய்யவே வந்தேன். நன்றி வருகிறேன்"....!!
really disappointed. Even Sonia's son in law is having the Z+ security.
He is the only person who brought scam out of the bag but you are behaving like the kid in this issue.
உண்மையில், சு.சுவாமியீன் இந்த "இஸ்லாமியர் ஹிந்து பாரம்பர்யத்தை உணருதல் வேண்டும்" என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேனே தவிர, அவர் இதை சொல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். தற்போதைய சூழ்நிலையில் இந்தக் கருத்து குழப்பம் விளைவிக்கக் கூடியது. அந்தக் காலத்தில் அம்பேத்கருக்கு இருந்த சட்ட, வரலாற்று அறிவினாலும் அப்போது பலலட்சம் பேர் "நம்மை இந்தியர்களே ஜின்னா சொன்னதற்காக கொன்றார்களா?" என்ற அதிர்ச்சியில் இருந்ததனாலும் அம்பேத்கர், தாழ்த்தப்பட்டோர ுக்கு பாதுக்காப்புக் கிடைக்க இஸ்லாமியர் பாகிஸ்தானுக்கு புலம்பெயர வேண்டும் என்று சொல்லிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பவில்லை. a. ஷியா, b. சுன்னி என்ற தீவிர இஸ்லாம் தவிர c. அகமதியா, d. ஸுபி இஸ்லாம்களும் இருக்கின்றன. இதில் ஸுபி பாரத பண்பாட்டைக் கொண்டது. ஜிகாதிக்கு இடம் கொடாதது. அன்பை சொல்வது. இதைத்தான் சு.சுவாமி சொல்லி இருக்கிறார் என நினைக்கிறேன். இதில் a,b இரண்டும் c க்கு மரண தண்டனை பத்வாவும், a,b,c மூன்றும் சேர்த்து dக்கு மரண தண்டனை பத்வாவும் விதித்துள்ளன. காரணம் : அவர்கள் பாரத ஞான மரபை வரித்துள்ளனர் என்று.
Quoting சோழன்:
ஆனால் இங்கு கருத்து வெலியிட்டுள்ள அனைவரும் கண்ணை மூடி சுனா சானாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்க ிறார்கள்! சுனா சானாவின் குறைகளையும் ஏற்க வேண்டும் என்பதே என் கருத்து! இன்றைய சுனா சானா வின் நடவடிக்கைகளுக்க ு அனைவரின் முழு ஆதரவும் உண்டு! ஆனால் நாளை அவர் எப்படி மாறுவார் என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது!
What acomedy... are u talking about the Khilafat aka Khila Faart movement!
http://en.wikipedia.org/wiki/Khilafat_Movement
Shame on you. It's enough if I know something about cricket to comment on Sachin. As long as politicians are fearing about someone or something.. let it be. Don't forget PC was exposed in 2G issue only because of SS. Ok.. why don't you let Seeman and Vaiko do everything right from regional to national level politics (as what Vijaykant does in movies) and project themselves as heroes. Of late, I find these two occupy most of the pages in all vernacular dailies and are projected as active politicians but the truth is they haven't achieved anything.
While everyone seems to be either against your views support SS or supporting your views due to their opinions about religion, caste here.
We all appreciate the good work done or initiated by SS in bringing limelight to the various scandals in this and past central and state governments. But he has been selective and targeted only what he chooses to investigate or bring to notice to the public.
It is not correct to bring the religion comments regarding SS for requesting him to come clean about this source of funds. Everyone is innocent until proven guilty.
The point that is very important that every reader should understand here is what is wrong in asking about the source of income SS? Every person who is involved in the public life whether they are politician or not should be prepared to disclose and come out of the closet. This is the most important point that Savuku is trying to bring out. But sadly it has been mixed with incidents and comments about SS's religious views. Harvard's decision has nothing to do with what SS is doing about 2G, PC.
Your articles on Dr Subramaniam Swamy has some hidden agenda. Dr Swamy is not the person who is loser when Harvard university cancelled his professorship. The day is not too far when Harvard comes calling on Dr Swamy to take up the professorship once again. As far as his credentials are concerned, we have no one to doubt his integrity and noone in the power is able to corner him. Hence, by all means he is honest than savukku himself. Can we know what is your source of income to do the investigative journalism which you have been doing credibly. Even though you were in Intelligence wing, you very well know that nobody parts with any info unless you crease their hands. You may not agree openly but if you have consciencem will agree with me in silence. Hence, please do not spit venom on Dr Swamy and in fact, you should be joining hands with him in fighting corruption as you youself have suffered a lot. Please keep it going with your investigative journalism for which I am a fan of yours
அன்புள்ள சோழன்,
உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.
எனக்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது அதீத பற்றோ, அவர் பரமாத்மா,புனிதர ் என்ற என்னமோ கிடையாது. தொண்ணூறாம் வருடத்துக்குப் பின் நான் அவரை நமஸ்கரித்ததும் கிடையாது. அவர் மீது சாற்றப்பட்ட குற்றங்களையும் நான் நம்பவில்லை. இருந்தாலும் நக்கீரனின் நிஜாரை அவுத்து சவுக்கு காண்பித்தார். அம்மாதிரிப் பத்திரிகைகளை ரொம்பவும் நம்பவேண்டாமே. இருந்தாலும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேல் ரமண மகரிஷி , நாராயண குரு (இவர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்பதை நினைவுறுத்துகிற ேன்) மேல் இருப்பது போன்ற பெருமதிப்பு ஏற்படவில்லை.
சு. சுவாமி , சோ இரண்டு பேர்களின் புலி வெறுப்புக் கருத்துக்கள் எனக்கு சற்றும் பிடிப்பதில்லை."மனுஷங்களா இவங்க?" என்று தோனுகிறது. அவர்களைக் கேட்டால், பல தமிழர்களை, பத்மநாப உட்பட பல தமிழ்த் தலைவர்கள் பெயர் சொல்லி, அவர்கள் அனைவரையும் புலிகள் கொன்றதாகவும், தமிழர்களின் மீதுள்ள அக்கறையினாலேயே புலிகளை வெறுப்பதாகத் தெரிவிக்கின்றனர ். சு. சுவாமி , சோ இவர்களை சாடிய , புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து புத்தகம் எழுதிய தமிழ் எழுத்தாளர்கள், கருணாநிதி கைவிரித்தவுடன் பெட்டிப்பாம்பாக அடங்கி, அவரை ஒரு வார்த்தை சாடாதபோது, ஒண்ணுமே நடக்காதமாதிரி அமைதியாய் இருக்கும்போது எனக்கே அதிரிச்சியாக உள்ளது. அடுத்து தமிழ்ப் பற்றுள்ள, இலங்கைத் தமிழரான மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றோரின் கருத்துக்களும் சில தாக்கங்களை உருவாக்குகின்றன . இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவுப் போராட்டங்களில் நான் 2009 மே மாதம் வரை கலந்து கொண்டேன்...
{continued...]
See this video : http://www.youtube.com/watch?v=wFSUP8Y6vjU&feature=related
[.....continuation]
நான் 2009 மே மாதம் வரை கலந்து கொண்டேன். கண்ணீர் விட்டேன். ஆனால் இனி நம் இனத்தின் வாழ்வே நம்மை உயர்த்தும், வேற்று இனத்தின் தாழ்வு அல்ல என உணர்ந்துவிட்டேன ். ஜப்பான் தோல்விக்குப் பின் அமெரிக்காவை நோக்கி போர்க்கப்பல்களை அனுப்பவில்லை. கார்க்கப்பல்களை அனுப்பி வென்றது . கோடிக்கணக்கில் கார்களைவிற்று உயர்ந்தது. இனி ஆகவேண்டியதைக் கவனிக்க வேண்டாமா? ஆக இப்போது நாம் தெரிவிக்க வேண்டியது சு.சுவாமிக்கு ஆதரவே.
அதென்ன "எங்கள் எதிரியும், உங்கள் எதிரியும்" என்கிறீர்கள்? நான் வேறா? நான் சிங்களவனா? கண்முன்னே லட்சக்கணக்கில் நம் தமிழ் ரத்தங்களை கொன்று குவித்தவர்களும் , சற்றே கல்விச் செருக்குடன், பல தலைமுறைக்கு முன் மாயையில் விழுந்த பிராமணர்களும் ஒன்றேவா? மற்ற சாதியினர் எல்லாம் அன்புடன் இருக்கிறார்களா? சிங்களவன் மேல் உள்ள வெறுப்புக்கு இணையாக பிராமண வெறுப்பு உண்டாக பிராமணர்கள் என்ன இரண்டு வருடத்துக்கு முன் நாப்பது லட்சம் பேரைக் கொன்றார்களா? போய் சேன்னல் 4 வீடியோவைக் காண்பியுங்கள். எந்த பிராமண வெறியனும் தமிழனுக்காக கண்ணீர் சிந்துவான். அந்த வீடியோவை தமிழ்நாடு முழுவதும் அல்ல, இந்தியா முழுவதும் காண்பிக்க வேண்டும்.
இந்திய வெளிநாட்டு கொள்கைகளில் "தமிழக தமிழர்கள்" செல்வாக்கு செலுத்துவதில்லை என்பதை இவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இதற்கு நீண்டகால, ஆழமான காரணங்கள் உண்டு. திரு.சுப்பிரமணியன் சுவாமி போன்ற "பிராமணர்களே" "தமிழ்நாட்டை" புதுதில்லி மட்டத்தில் 20% பிரதிநிதித்துவப ் படுத்துகிறார்கள ், மிகுதி 80% தங்கள் பணப்பையை நிறப்புவதாக உள்ளது.
இதற்கு காரணம் "திராவிட இனவெறி" கட்சிகளாகும். தமிழ்நாடு "இடஒதுக்கீடு" என்பது வரலாறுபடி காலனித்துவ ஆதரவாகும். மலேஷிய "பூமிபுத்திரா" என்பது காலனித்துவ எதிர்ப்பு மூலமாகும். இலங்கை "தரப்படுதல்" என்பது ஒப்பீட்டளவில் காலனித்துவ எதிர்ப்பும், அடிப்படையில் "அனாகரிக்கா தர்மபாலாவின்" சிங்கள-பெளத்த தேசியவாதத்தின் பரிணாமம் ஆகும்.
தற்போதுள்ள "புதிய உலக ஒழுங்கமைப்பின்ப டி", திரு.சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் தமிழகத்தின் "ஆதங்கத்தை" பகிர்ந்துக் கொள்கிறார் ஆனால்.. கல்விதகமையிலும் , சர்வதேச அளவிலும் தமிழக அரசியல் உணர்வுகளை பிரதிநித்துவப் படுத்துவதை இந்திய சூழல் பாரம்பரியமாக அனுமதிக்கவில்லை !.
இதில் சிங்களவர்களுடனா ன முரண்பாட்டை அனுபவரீதியாகவும ், சர்வதேச கல்வி தகமை அடிப்படையிலும் "தமிழ் அதீத உணர்வு" என்பதன் கீழ் வெளிப்படுத்தும் "கட்டமைப்புகளை" இலங்கைத்தமிழர்க ள் ஒப்பீட்டளவில் தமிழகத்தமிழர்கள ை(இந்திய) காட்டிலும் பலமடங்கு கொண்டுள்ளனர்.
ஆனால் "தமிழநாட்டு" தமிழர்களின் "கோண விரிவிலிருந்து" பார்க்கும்போது "இலங்கைத்தமிழர்க ளின்" இத்தகைய தமிழுணர்வு ஆலோசனைகள் வெறும் "குப்பைகள்" என்பதை இலங்கைத்தமிழர்க ள் தயவுகூர்ந்து உணர்ந்துக் கொள்ளவேண்டும்!.
சோ ஐயர் வெறு துக்ளக் சோ வேறு
YOU SIMPLY SPIT VENOM ON S. SWAMY.
ANYBODY CAN SAY, SAVUKKU IS GETTING MONET FROM SOME ORGANIZATIONS TO WRITE AGAINST S. SWAMY.
YOU MAY NOT ACCEPT HIS VIEWS ON TERRORIST ATTACK.
IN SOME NEWSPAPERS, IF ANY TERRORIST ATTACK HAPPENS, IMMEDIATELY THEY WILL BLAME BJP/RSS.
WHY YOU ARE NOT WRITING AGAINST SUCH NEWSPAPERS? ARE YOU GETTING MONEY FROM THEM?
WHEN S. SWAMY WAS ATTACKED IN HIGH COURT
YOU DID NOT CONDEMN IT. BECAUSE YOU DONT LIKE HIMOR HIS CASTE.
S.SWAMY SINGLE HANDEDLY DOING SO MANY JOBS. BECAUSE OF HIM ONLY J. JAYALALITHA IS GOING TO BANGALORE COURT.
IF YOU WANT TO SUPPORT YOU CAN DIRECYLY SUPPORT HIM.
DONT THROW SHIT ON ANYBODY WHOM YOU DONT LIKE.
//// இந்த கேள்விக்கு பதில் சொல்லும் தகுதி உள்ள ஒரே யோக்கியர் சோ ////
புர்ர்ர்ரர்ர்ர் இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல.
ஆசாஞ்ஜ பட்ரி பக்கம் பக்கமாக எலுதிய சவுக்கு இன்ரு யாரோ சந்தோசதிர்காக இப்படி மாரிவிட்டது
சு சாமி இந்திய அர்சியல் வாதிகளிலேயே மிகவும் குழம்பிப்போன அர்சியல் வியாதி.
சுதந்திரத்திற்க ்காக இந்துக்கள் மட்டுமல்ல எல்லா மததவரும் இனத்தினரும் உயிர்தியாகம் செய்துள்ளார்கள் என்ற உண்மையை மறுக்கும் கூட்டத்தின் தலைவன்.
இந்த மர்ம நபருக்கு நமது அதிமுக மகளிர் அணியினர் செய்த மர்யாதை உலகறிந்ததே.
நாட்டில் அமைதி உண்டாகாமல் எப்போதும் நிலையற்ற தன்மை இருந்தால்ல்தான் அமெரிக்க போன்ற வல்லரசுகளுக்கு லாபம்.
அந்த லாபத்தை பெற்றுத்தந்து இந்தியாவை அடிமையாக்க துணை போகும் சு சாமியை நாட்டை விட்டே துரத்தவேண்டும்.
சு சாமி இந்திய அர்சியல் வாதிகளிலேயே மிகவும் குழம்பிப்போன அர்சியல் வியாதி.
சுதந்திரத்திற்க ்காக இந்துக்கள் மட்டுமல்ல எல்லா மததவரும் இனத்தினரும் உயிர்தியாகம் செய்துள்ளார்கள் என்ற உண்மையை மறுக்கும் கூட்டத்தின் தலைவன்.
இந்த மர்ம நபருக்கு நமது அதிமுக மகளிர் அணியினர் செய்த மர்யாதை உலகறிந்ததே.
நாட்டில் அமைதி உண்டாகாமல் எப்போதும் நிலையற்ற தன்மை இருந்தால்ல்தான் அமெரிக்க போன்ற வல்லரசுகளுக்கு லாபம்.
அந்த லாபத்தை பெற்றுத்தந்து இந்தியாவை அடிமையாக்க துணை போகும் சு சாமியை நாட்டை விட்டே துரத்தவேண்டும்.
19/2 அன்று வளக்கறிஞர்களை போலீஸ் தாக்குதல் குறித்து இவ்வளவு எழுதும் சவுக்கு தனது மனசாட்சியைத் தொட்டுப் பார்க்க வேண்டும். 17/2 அன்று நீதிமன்றத்து ஹாலுக்குள், இர்ஹண்டு நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறித்து சவுக்கு எழுதியது என்ன?
அதனை மறைக்கத்தானே 19/2 அன்று வழக்கறிஞர்கள் முன்னரை விடவும் பெரிய வன்முறையில் ஈடுபட்டனர்?
சவுக்குக்குப் பிடிக்காத சுப்பிரமணியம் சாமி மீது இதே வழக்கற்ஞர்கள் நடத்திய தாக்குதலைப் புறந்தள்ளி சவுக்கு வழக்கறிஞர் சார்பாக எழுதிய கட்டுரைகள் எத்தனை?
இப்போது ஆட்டைக் கடித்தி மாட்டைக் கடித்து வழக்கறிஞர்கள் தீக்கதிப் பத்திரிகையாளரை அடித்ததும் சவுக்கின் மன சாட்சி விழித்துக் கொண்டது.
வழக்கறிஞர்களில் சிலர் வன்முறையாளர்களா கக் காலம் காலமாக இருக்கிறார்கள். ரஜனிகாந்த் என்ற வழக்கறிஞர் அவர்களில் முன்னணியில் உள்ளார். அவருக்கு துரைசாமி என்ற வழக்கறிஞர் ஆதரவு. துரைசாமி என்ற மூத்த வழக்கறிஞர் திராவிடர் கழகத்தவர். அவர் ஈழப் போராளிகளுக்கு வாதாடுபவர். எல்லாவற்றாஇயும் வெளிப்படையாக எழுதும் சவுக்கு இதில் மவுனம் காப்பது ஏன்?
சவுக்குக்கு மன சாட்சி சில சமயம் வேலை செய்வதில்லையோ என்ற கேள்வி வருகிறது.
“சவுக்கு சுப்பிரமணிய சுவாமியின் கைகூலி. சுவாமிக்கும் சவுக்குக்கும் underground connection இருக்கின்றது. சுவாமி வெளியிட்ட பூங்கோதை சி.டி. சவுக்கு அளித்துதான். சவுக்கு ஒரு பார்ப்பன ஆதரவாளர் அதனால் சுவாமி பற்றி ஒன்றுமே எழுதவதில்லை”
போன்ற குற்றச்சாட்டுகள ் எண்ணங்கள் சவுக்கின் மீது அவரின் நட்பு வட்டாரத்தில் உண்டு.
அந்த குற்றச்சாட்டுகள ை தகர்க்க இப்படி ஒரு தத்து பித்து கட்டுரை. சவுக்கின் நேர்மையை இந்த மாதிரி கட்டுரையின் மூல்ம தான் நிரூபணம் செய்யவேண்டியுள் ளது என்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.
இந்த பதிவின் மூலம் நீங்கள் எண்ணியப்படி நடக்கவேண்டும் என விரும்புகிறேன்.
7) சவுக்கு அவர்கள், ஜனதா கட்சி மொத்தம் சுவாமியோடு சேர்த்து ரெண்டு பேர் என கிண்டல் செய்து இருக்கிறார். தாழ்த்தப்பட்டோர ை வாழவைக்க மண்டல் கமிஷனை உருவாக்கி பின் ஆட்சி (70s) இழந்து மீண்டும் மண்டல் கமிஷனை அமுல்படுத்த முயன்று ஆட்சி இழந்த(90s) ஒரே நேர்மையான கட்சி என்பதை மறந்துவிட்டாரா?
9) CIA ஏஜென்டாக சுவாமி இருந்தால், ஹார்வர்ட் பல்கலை இவருக்கு எதிராக முடிவேடுத்திருக ்குமா?
10) இந்நேரம் "50%-50%. கேஸ் எல்லாம் வாபஸ் வாங்கிடுவோம்" என்று திமுகவும், அதிமுகவும் முடிவு எடுத்திருக்கும் . இந்த திராவிட கட்சிகள் கோர்ட் ஏற சுவாமி போட்ட கேஸ்தான் காரணம் என்பதை சவுக்கு மறுக்கிறாரா?
11) ஜெயேந்திரர் கைது மற்றும் ஹார்வர்டின் செயல், சவுக்கு சங்கரை சிறையிலிட்ட திமுக போன்ற அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?
என் கருத்தை +1 செய்து ஏற்றியவர்களுக்க ும், நல்ல கருத்துக்களைக் கூறிய இவர்களுக்கும் நன்றி:
#2 force , #3 ramadurais, #5 Sivadasan, #22 rajkumar77 , #24 ramsdr
செயேந்திரர் கூத்துக்கு வருவோம்! மடத்துலயே, ஒரு கொலை நடந்து இருக்கு! இவனுக்கு பல பெண்கள் தொடர்பு இருக்கு என்று ஊரே நாறுச்சி! இன்னுமா இவன புனித ஆத்துமா என்று எங்களை நம்ப வைக்க பார்க்கிறீர்கள் ? பதறுகளே! உங்கள் நாற நம்பிக்கையை உங்களிமே வைத்துக்கொள்ளுங ்கள்! தமிழனை பிரித்தாள நினைக்கும் எவனும் (அது கிறித்துவனாக இருந்தாலும், முசுலிமாக இருந்தாலும்) எங்களுக்கு வேண்டியதில்லை!
அந்நியன் அவர்களே!
இந்த கேசில் நிச்சயம் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? நிச்சயம் அப்படி நடந்தால், சுனா சானா ஒரு மிகப்பெரிய மனிதர் தான்! ஆனால் இந்த விசயத்தில் மட்டும் அந்த ஆளின் செயலுக்கு(எதனால ் செய்கிறார் என்று தெரியாது) எங்கள் ஆதரவு உள்ளது! ஏன் என்றால் இன்று எங்கள் எதிரியும் அவர்கள் தான்!
http://www.youtube.com/watch?v=wPiIvgJ4UAk&feature=player_embedded
Dr Commander Selvam Siddhar Swamiji aka Annamalai Annamalai runs a temple and a restaurant in Dayton OHio.
HERE IS ANOTHER "CHANAKYA BIRBAL" ?
THE RACIST "BJP(Bharatiya Janata Party)"s INDIAN FOREIGN POLICY? -
THE FRANKENSTEIN's(BENEVOLENT OCHLARCHY OF BRITAIN?) "MONSTER(person in this video)" !.
http://www.youtube.com/watch?v=QgejdNZ1uvU&feature=related
His father was a cabinet seceretary & hence they have a house in chennai.
His wife is a parsi & his daughter is married to a muslim. Like Nehru he did not want his son-in-law to change his name to gandhi!!
DMK & ADMK never tell their source of money?? Do u have the nerve to question them?? Even MGR was kicked our for asking that qn..
An ordinary policeman like u who find difficult to run a website , taking money from Kani & chidambaram is writing such article..
Be a patriotic Indian first!!
அவர் அரசியல் என்னும் சினிமாவில் எப்போதும் ஒரு ஜோக்கராகவே இருந்து வந்து இருக்கிறார்...
ஜோக்கருக்காக எப்பவாவது ஒரு படம் ஓடும் ..... அது போல தான் டூ ஜி விசயமும்...
புதிய தலைமுறை டிவி.இல் சு.பா. வீரபாண்டியனிடம் விடுதலை புலி பற்றி பேச தைரியம் இல்லாமல் பாதியில் ஓடி ஒளிந்தவர் தான் இவர்..
அசிங்கமே இவரை பார்த்து அசிங்க படும் ஒரு மனிதர்...
அசிங்க படுவதும் கேவல படுவதும் இவருக்கு பொழுது போக்கு....
ஹும்.... நம்ம நாட்டுக்கு யாரை தான் பிரதமர் பதவிக்கு முன்னிலை படுத்துவது என்று ஒரு விவஸ்தையே இல்லாம போச்சுங்க...
வி. பி. சிங் போன்ற உயர்ந்தவர்கள் ஆண்ட நாடு இது...
டு ஜி வருமானத்தை ஹீரோ (காங்கிரஸ்) ம் வில்லன் ப.ஜ.க.வும் பங்கு போட்டு கொண்ட பொது இந்த ஜோக்கருக்கு எந்த ஒரு சிறு பங்கும் வரவில்லை... பங்கு வராத ஏக்கத்தில் பர பறக்கிறது இந்த பதர்.....
வேற நாட்டு பற்று .... மொழி பற்று .. இன பற்று எல்லாம் இந்த ஆளுக்கு கிடையாதுங்க.....
சரி, சாமி பிரதமரா வந்தா என்ன தப்பு? மண் மோகன விட கேவலமா இருக்க மாட்டார் இல்ல?
A question for you to ponder: Swami is keep on accusing sonia about her russian roots and her italian connection. She had sued a guy who opposed her for such reasons in a NewYork court. But why she didn't sue swami nor replied him or not even made any open statements ?
I believe your being biased against Swami is not for personal gains but you believe it naturally.
Time will come for fighters like you to understand the selfless motives behind such men.
http://savetnfishermen.com/2011/12/07/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A/
படித்துவிட்டு காரித்துப்புங்க ள் சொட்டையன் சோ-வின் மேல்.
மன்னிக்கவும் சுனா பானாவிற்கு நிறைய கருப்பு பக்கங்கள் தான் இருக்கு.
RSS feed for comments to this post