முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
எல்லா சாலைகளும் லோக்பாலை நோக்கி…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011 13:55

அந்தப் போராட்டத்துக்குப் பிறகு, பாராளுமன்றத்தின் அன்னா ஹசாரே போராட்டம் குறித்து நடந்த விவாதத்தை அன்னா ஹசாரே குழுவினர் ஆழமாக பரிசீலித்து, அரசியல்வாதிகள் துணையின்றி, லோக்பால், சட்டமாக உருவாகாது என்பதை புரிந்து கொண்டனர்.   கடந்த முறை பாராளுமன்ற விவாதத்திற்கு முன்பாக, பாரதீய ஜனதா மற்றும் இடது சாரிக் கட்சித் தலைவர்களை அன்னா ஹசாரே குழுவினர் சந்தித்து பேசியது குறிப்பிடத் தக்கது.

2011_8largeimg203_Aug_2011_050101467

இந்த முறை போராட்டத்தின் வடிவமே மிகச் சிறப்பாக இருந்தது.  வெறும் உண்ணாவிரதம் என்று இருக்காமல், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்புக் கொடுத்து, லோக்பால் குறித்த அவர்களின் கருத்தை அந்த மேடையில் வந்து பரிமாறிக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தது சிறப்பான ஒன்று.  மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தவர்களை, அங்கே குழுமியிருந்தவர்கள், கோஷம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்தது வேறு விஷயம்.  ஆனால், இந்த வடிவம் சிறப்பானதாக அமைந்தது.  காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தும், நாங்கள் பாராளுமன்றத்தில் மட்டும் தான் பேசுவோம் (பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம்) என்று அந்தக் கூட்டத்தை தவிர்த்தது, அன்னா ஹசாரே குழுவினரைப் பார்த்து, கல்லால் அடி வாங்கிய நாய், தனது கால்களுக்கிடையே வாலை ஒளித்துக் கொண்டு ஓடுவதைப் போல இருந்தது.

தொலைக்காட்சிச் சேனல்களின் விவாதங்களில் பங்கேற்று, வாய் கிழிய பேசும், அபிஷேக் மனு சிங்வி, மனீஷ் திவாரி போன்றவர்களை ஆளையே காணவில்லை.   வந்தால் ஜந்தர் மந்தரில் இருந்தக் கூட்டம் அவர்களை ஓட விட்டிருக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

இது போல அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு நாடெங்கும் எழுந்த பெரும் ஆதரவுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு பெரும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.  காங்கிரஸ் கட்சி அன்னா ஹசாரேவின் போராட்டத்தைக் கையாண்ட விதம் இருக்கிறதே… அரசியல் சாதுர்யத்தின் உச்சம்.     ஆயிரம் ரூபாய் நோட்டை ரத்து செய்து விட்டால் கருப்புப் பணம் ஒழிந்து விடும் என்று தத்துவங்களை உதிர்க்கும் பாபா ராம்தேவ் என்ற ஒரு சாமியாரின் போராட்ட அறிவிப்பைப் பார்த்து பயந்து, அவரை வரவேற்க விமான நிலையம் சென்றதே காங்கிரஸ் கட்சியின் திறமைக்கு ஒரு சான்று.   அந்த நபர் போராட்டமெல்லாம் நடத்திய பிறகு, வெளிநாட்டிலிருந்து அவரின் ஆசிரமத்திற்கு ஏராளமான நிதி வருகிறது என்று அமலாக்கப் பிரிவை வைத்து கண்டுபிடிக்கத் தெரிந்த காங்கிரஸ் கட்சிக்கு, அந்த நபர் போராட்டம் நடத்துவேன் என்று அறிவிப்புக் கொடுத்த போது, அவர் காலை நக்கத்தான் தெரிந்தது.

 

அந்த நபர் டெல்லியிலே உண்ணாவிரதம் தொடங்கியவுடன், எங்கே இந்தப் போராட்டம் பெரிய அளவிலே வளர்ந்து விடுமோ என்று பயந்து, டெல்லி போலீசாரை வைத்து, இரவோடு இரவாக அந்த சாமியாரை கைது செய்தது காங்கிரஸ் அரசு.   ஒரு மோசமான பேர்விழியின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தாமல், அந்த போராட்டத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்களின் மீது தடியடி நடத்தியதன் மூலம், தான் ஒரு கையாகாலாத அரசு மட்டுமல்ல, ஒரு அயோக்கியத்தனமாக அரசு என்பதையும் நிரூபித்தது மன்மோகன் அரசு.

2011_12thumbimg111_Dec_2011_052210687

அதன் பிறகு, அன்னா ஹசாரேவை கைது செய்தது மட்டுமல்லாமல் அவர் போராட்டத்துக்கும் அனுமதி மறுத்தது.  அன்னா ஹசாரேவின் கைதுக்கு நாடெங்கும் எழுந்த எதிர்ப்பைப் பார்த்து பயந்த காங்கிரஸ் அரசு, அன்னா ஹசாரேவை சிறையிலிருந்து உடனடியாக விடுவித்தது.   இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய அன்னா ஹசாரே, போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தால்தான் சிறையில் இருந்து வெளியேறுவேன் என்று அறிவித்ததும், வேறு வழியின்றி போராட்டத்துக்கு அனுமதி அளித்தது.  போராட்டம் நடந்த அந்தப் பத்து நாட்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் கடைசியாக அன்ன ஹசாரே கேட்ட கோரிக்கைகள் அனைத்துக்கும் தலையாட்டியது என்பதே உண்மை.

 

அன்னா ஹசாரே குழுவினர் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்கள், சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை, அன்னா ஹசாரே ஒரு ஊழல் பேர்விழி என்று காங்கிரஸ் அரசு கையாண்ட எந்தத் தந்திரமும் பலிக்கவில்லை.

annafast1

பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், அன்னா ஹசாரேவின் கோரிக்கையான வலுவான லோக்பால் மசோதா என்பதற்கு ஆதரவாகவே குரல் கொடுத்திருந்ததை உணர்ந்த காங்கிரஸ் அரசு, அவையின் கருத்துக்கிணங்க செயல்படுவோம் என்று உறுதிமொழி அளித்தது.

 

அதன் பிறகு, ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் அரசு கையாண்ட அதே தந்திரத்தை மீண்டும் கையாளத் தொடங்கியது.  கிரண் பேடி மீது ஊழல் புகார், அர்விந்த் கேஜ்ரிவல் மீது ஊழல் புகார், அன்னா ஹசாரேவோடு நெருக்கமாக, அவருக்கு ப்ளாக் எழுதிக் கொண்டிருந்தவரை வைத்து அன்னா ஹசாரே மீது புகார் கொடுக்கச் சொல்வது, அன்னா ஹசாரேவோடு நெருக்கமாக இருந்த மற்றொருவரான சுவாமி அக்னிவேஷை வைத்து அன்னா ஹசாரே குழுவினர் மீது புகார் சொல்ல வைப்பது, அன்னா ஹசாரே போராட்டத்துக்கு வந்த நன்கொடையில் ஊழல், என்று பல்வேறு தந்திரங்களை கையாண்டது.  அன்னா ஹசாரே குழுவினர் இந்தப் புகார்களுக்கெல்லாம் இடம் கொடுத்திருக்கக் கூடாது என்பது உண்மைதான் என்றாலும், அதற்காக அவர்கள் எடுத்த போராட்டமே தவறு என்று எப்படிச் சொல்ல முடியும் ?

kejriwal__651981a

காங்கிரஸ் அரசு கருதியது என்னவென்றால், இது போல அன்னா ஹசாரே குழுவினர் மீது ஒவ்வொரு புகாராக சொல்லிக் கொண்டேயிருந்தால், லோக்பாலும் வேண்டாம், எருமைப் பாலும் வேண்டாம் என்று இந்திய மக்கள் முடிவெடுத்து விடுவார்கள், இத்தோடு இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்பதுதான்.

 

ஆனால் கிரண் பேடி உள்ளிட்ட அத்தனை பேர் மீது சொல்லப் பட்ட புகார்களை மக்கள் ரசிக்கவில்லைதான் என்றாலும், அதற்காக லோக்பால் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.  வலுவான லோக்பால் சட்டம் வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தி அதை ஒருங்கிணைப்பதில்  அன்னா ஹசாரேவும் அவர் குழுவினரும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள், இதை இத்தனை ஆண்டுகளாக யாருமே செய்யவில்லை என்பதால் எங்கள் ஆதரவு இவர்களுக்குத்தான் என்றே மக்கள், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் கருதினார்கள்.

 

கடந்த முறை அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டப் பட்டது எஸ்எம்எஸ் மூலமாக என்பதை உணர்ந்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் எடுத்த ஒரு முட்டாள்த்தனமான நடவடிக்கை எஸ்எம்எஸ்களை 100க்கு மேல் அனுப்ப முடியாது என்ற கட்டுப்பாடு விதித்தது.  இதற்கு கபில் சிபல் சொன்ன காரணம், தேவையற்ற எஸ்எம்எஸ்கள் அனுப்பி வாடிக்கையாளர்களை தொல்லைக்குள்ளாக்குகிறார்கள் என்பதுதான்.   நாட்டு மக்களின் மேல் காங்கிரஸ் அரசுக்கு உள்ள அக்கறையை நன்கு உணர்ந்த மக்கள், இந்தக் கூற்றை நம்புவதற்கு துளியும் தயாராக இல்லை.

 

அடுத்ததாக அன்னா ஹசாரேவின் போராட்டங்களுக்கு பேஸ் புக், ட்விட்டர் ப்ளாக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஆதரவையும் நிறுத்த வேண்டும் என்று அந்த சமூக வலைத்தளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தோடு பல கருத்துக்கள் பதியப்படுகின்றன என்ற புதிய கதையைச் சொன்னார்.  இதன் மூலம் இந்த நிறுவனங்களின் வியாபாரத்தை முடக்கப் போகிறோம் என்று மிரட்டுவதன் மூலம் இந்த நிறுவனங்களை பணிய வைக்க முடியும் என்று நினைத்த கபில் சிபலுக்கு கூகிள், பேஸ் புக் போன்ற நிறுவனங்கள் அல்வாவை கொடுத்தன.  கபில் சிபல் இன்று இருப்பார், நாளை இல்லாமல் போவார். ஆனால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் ஆதரவை இந்த நிறுவனங்கள் இழக்க தயாராக இல்லை.

2011_7largeimg201_Jul_2011_051446107

இந்தச் சூழலில் தான் ஞாயிற்றுக்  கிழமை அன்னா ஹசாரேவின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது.  காங்கிரஸ் அரசு, இத்தனை நாள் மெனக்கெட்டு கையாண்ட தந்திரங்கள் எத்தகைய பலனைத் தருகிறது என்று பார்க்கலாம் என்று இருந்த போது அந்தப் போராட்டத்தின் வெற்றி, காங்கிரஸ் அரசை வாயடைக்கச் செய்துள்ளது.

 

லோக்பால் மசோதாவின் மற்ற அம்சங்கள் எல்லாவற்றையும் விட, காங்கிரஸ் கட்சியின் தூக்கத்தைக் கெடுப்பது இரண்டே இரண்டு அம்சங்கள் தான்.   சிபிஐ யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பது என்பதும், பிரதமர் லோக்பால் வரம்புக்குள் வர வேண்டுமா இல்லையா என்பதும்தான்.

 

சிபிஐ காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது, காங்கிரஸ் அரசுக்கு அரசியல் நடத்துவதற்கான ஆக்சிஜன் போல.   சிபிஐ தனது கட்டுப்பாட்டில் இல்லையென்றால், மாயாவதி, முலாயம்சிங், லல்லுபிரசாத் யாதவ் போன்றவர்களை எப்படி கூட்டணிக்கு சம்மதிக்க வைப்பது ?  ஜெயலலிதாவை எப்படி மிரட்டுவது ?   தங்களுடன் மோதிய ஜெகன் மோகன் ரெட்டி, பிஜேபி முதலமைச்சர்களை எப்படி பழி  வாங்குவது ?   இது போன்ற அடிப்படையான பிரச்சினைகளைக் கருதியே காங்கிரஸ் அரசு, சிபிஐ மீதுள்ள தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

 

பிரதமர் பதவி லோக்பால் வரம்புக்குள் வர வேண்டாம் என்பது, ஏதோ மன்மோகன் சிங்கை காப்பாற்றுவதற்காக இல்லை.  இன்னும் 30 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போகிறார் என்று காங்கிரஸ் கட்சி கனவு காணும், ராகுல் காந்தி பிரதமர் ஆகும் போது, அவருக்கு பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதாலேயே காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது என்று விரும்புகிறது.  மன்மோகன் சிங், தனக்கு தனிப்பட்ட முறையில் பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதில் ஆட்சேபணை இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

IMG_5618

நேற்றைய போராட்டத்தில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் பிஜேபி ஆகிய இரு கட்சிகளுமே சிபிஐயை அரசியல் காரணங்களுக்கான எதிரிகளை பழி வாங்குவதற்காக பயன்படுத்தின என்று குறிப்பிட்டார். மாயாவதியை வழிக்குக் கொண்டு வருவதற்காக 2005ம் ஆண்டில் தாஜ் காரிடார் வழக்கில் மாயாவதி மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, 2007ல் மாயாவதியின் ஆதரவு வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கவர்னர் ராஜேஸ்வர் ராவை வைத்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி மறுத்ததை குறிப்பிட்டார்.  இதற்கு கைமாறாக காங்கிரஸின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பாட்டீலுக்கு மாயாவதி ஆதரவு அளித்ததையும் 2010ல் சிபிஐ மாயாவதி மீதான வழக்கை மூடுவதாக அறிவித்ததையும், இந்த ஆண்டு செப்டம்பரில் மாயாவதி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் போவதாக அறிவித்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.

 

நேற்றைய போராட்டத்தில் பேசிய ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் அன்னா ஹசாரேவின் குழுவினர் குறிப்பிடும் லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்களில் உடன்படுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.   குறிப்பாக, அன்னா ஹசாரேவின் விருப்பங்களுக்கு எதிராக ஏதாவது செய்தால், 2014 தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டி வருமோ என்று அஞ்சும் பிஜேபி, எல்லாவற்றுக்கும் உடன் படுகிறோம் என்றது.  சிபிஎம் மற்றும் சிபிஐ சற்றும் சளைக்காமல் நாங்களும்தான் என்று கோரஸ் ராகம் பாடின.  சரத் யாதவ் தனது பங்குக்கு பாராளுமன்றத்தின் விருப்பமே தனது விருப்பம் என்றார்.

annafast8

ஒட்டுமொத்தமாக, யாருமே அன்னா ஹசாரே குழுவினரை பகைத்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.  எதிர்க்கட்சிகள் அத்தனையும், குறிப்பாக பிஜேபி மற்றும் இடது சாரிகள் இணைந்து அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்ற செய்தி, காங்கிரஸின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போலவே இருந்தது.

இந்தப் போராட்டத்தால் என்ன வந்து விடப் போகிறது, லோக்பால் நாட்டில் ஊழலே இல்லாமல் செய்து விடுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில், லோக்பால் ஊழலை முற்றிலும் ஒழித்து விடாதுதான்.  சரி பிறகு எதற்கு லோக்பால் என்றால், கண்ணுக்குத் தெரிந்து ஊழலின் மூலம் சம்பாதித்த சொத்துக்களை பெருமையாக பறைசாற்றிக் கொண்டு பவனி வரும் உயர் உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், கடந்த 60 ஆண்டுகளாக எதுவுமே செய்ய முடியவில்லையே…. இது வரை இருந்த லஞ்ச ஒழிப்புச் சட்டம், கான்ஸ்டபிள்களையும், விஏஓக்களையும் தண்டிக்கப் பயன்பட்டதே ஒழிய, திராவிடக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு கோடிகளில் திளைத்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதர்களை எதுவும் செய்ய முடியவில்லையே ?

 

இந்த லோக்பால் சட்டத்தின் மூலம் ஊழல் செய்யும் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தண்டிக்கப் படுவதற்கான வாய்ப்பு பெருகியுள்ளது.    லோக்பால் சட்டத்தில் குறைகளே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. குறைகள் இருக்கலாம். அந்தக் குறைகளை காலப்போக்கில் சரி செய்து கொள்ள முடியும்.   குறைகளை மட்டுமே பேசிக் கொண்டு இருந்தால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா போல இது என்றுமே வராது.

annafast5

இந்த நேரத்தில் சிபிஎம் கட்சியின் பிருந்தா காரத் சொன்ன விவகாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.   ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை மட்டுமல்லாமல், அந்த ஊழலுக்கு துணை போகும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் தண்டிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.   மேலும் பிருந்தா காரத், ஊழல் செய்வதன் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்ட டெண்டர்களையும் ரத்து செய்வதற்கு லோக்பால் சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்று சொன்னதும்  முக்கியத்துவம் வாய்ந்தது.

 

இந்தச் சூழலில் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா விரைவில் விவாதத்துக்கு வர உள்ளது.  அதற்கு முன்பு, வரும் 15 டிசம்பர் அன்று, காங்கிரஸ் அரசு, லோக்பால் மசோதா குறித்து விவாதிப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது.  பாராளுமன்றத்தில் தற்போது வரைவுச் சட்டமாக இருக்கும் லோக்பால், சட்டமாவதற்கான வாய்ப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக அன்னா ஹசாரே மற்றும் அவரின் குழுவினரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போலப் பேசினாலும், இவர்கள் உண்மையில் பாராளுமன்ற விவாதத்தின் போது என்ன நிலைபாடு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

லோக்பால் மசோதா குறித்து இது வரை எந்தவிதக் கருத்தையும் சொல்லாமல் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜியின் நிலைபாடு இந்த மசோதா சட்டமாவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

annafast9

இந்தப் போராட்டத்தை அன்னா ஹசாரே குழுவினர் கையாண்ட விதமும், மக்களைத் திரட்டிய விதமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும், இயக்கமும் கற்றுக் கொள்ள வேண்டியவை.   மிக மிக நேர்த்தியான வகையில் மக்களைத் திரட்டியதும், ஒழுங்கமைத்ததும், மீடியாக்களைக் கையாண்டதும், பொதுக் கருத்தை உருவாக்கியதும் பாராட்டத் தக்கவை.

 

தற்போதைய நிலைமையில், எல்லா சாலைகளும், லோக்பாலை நோக்கிச் செல்வதாகவே தோன்றுகிறது.

 

Comments  

 
+2 #29 anbu thamilan 2011-12-14 14:39
முல்லை பெரிய ஆறு ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
Quote
 
 
+3 #28 Mullai Peryaar 2011-12-14 10:13
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளா க, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள். வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான். மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று. பாராளுமன்றத்தில ் குரல் கொடுக்கிறார்கள் . பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள் . உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள் . இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழ் நாடு ஏமாந்தது போதும். உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல். தமிழகம் முழுவதும் சேர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும். ஒரே குரலில் பேச வேண்டும். உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். அகில இந்தியாவிற்கும் தெரியும்படி சொல்ல வேண்டும். நம் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும்படி – சுப்ரீம் கோர்ட்டுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் ! நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். கேரளாவிற்கு - எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும். எப்படிச் சொன்னால் புரியுமோ – அப்படிச் சொல்ல வேண்டும். நாடகமாடினால் இனியும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
Quote
 
 
+2 #27 Mullai Peryaar 2011-12-14 10:13
- பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ? அயோக்கியத்தனம். வடிகட்டிய அயோக்கியத்தனம். முதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந் து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் ! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார ்கள் என்கிற பேச்சே அபத்தமானது. இரண்டாவதாக - 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட் டது. கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது . மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது . 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது . வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது. கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும். இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது. விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ? மீண்டும் சதி
Quote
 
 
+2 #26 Mullai Peryaar 2011-12-14 10:10
செந்தில்குமார்.ச - தெனி,

இந்தியா முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்க ள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,ட ெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் ! “116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்த னம் ?” இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது . கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக் கும் அயோக்கியத்தனங்க ள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !
Quote
 
 
-10 #25 கும்பிடறேன் சாமி 2011-12-13 16:59
அதனிலும் மேலான அவலம், அவர் சரணடைந்ததும், மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்ட வகையில் பிரபாகரன் கொல்லப்பட்டதும் பேரின தேசியவாதிகளுக்க ும், தமிழ் தேசியத்திற்கும் தெரிந்த ஓர் உண்மை! ஆனால் இரு பகுதியினரும் உண்மைகளை மறைக்கின்றன! ஒரு பகுதி தமது மனித உரிமையை மீறிய குற்றச் செயல்களை மறைப்பதற்காக! தமிழ் தரப்பு ஒரு மனிதனின் இருப்புக்கான தன்னுணர்வையும் மீறி புறநாநூற்று வீரத்தை தக்கவைப்பதற்காக ! அல்லது அதன் மீதான பொய்ம்மையை மேலும் நிலை நிறுத்துவதற்காக ! அல்லது தலைவனின் தோல்வியில் துவண்டுபோன வெட்கத்தை மறைப்பதற்காக! எம்மைப் பொறுத்தவரை பிரபாகரனின் சரணடைவு முடிவு சாதாரண மனிதனின் இருப்புக்கான ஒரு முயற்சி! அவ்வளவுதான்! நாங்கள் அவரை தமிழ் குமரன் என்றோ, சூரியத் தேவன் என்றோ, சாகத் துணிந்தவன் என்றோ கற்பனையில்கூட நினைத்ததில்லை! தமிழ் தேசியத்தின் யதார்த்தத்தையும ் அவ்விதமே புரிந்துகொள்வோம ்! ...ஒரு அப்பட்டமான கட்டுரை...தேனீ இணைய தளத்தில்...
Quote
 
 
-8 #24 கும்பிடறேன் சாமி 2011-12-13 16:58
ஆனால் பிரபாகரனின் இறுதி முடிவில் பல்வேறு அவலங்கள் தேங்கி வழிகின்றன. 25 ஆண்டுகள் கோலோச்சிய ஒரு தலைவன்! இறுதி யுத்தத்தில் முடிவுகளை எடுப்பதற்கு திணறியமை! ஆயிரக்கணக்கில் இளந் தலைமுறை உறவுகளின் கழுத்தில் சையனைட்டைக் கட்டுவித்து, ~~செய் அல்லது செத்து மடி’’ என்று உணர்ச்சியூட்டி போர்க்களத்துக்க ு அனுப்பிவைத்த நம்பிக்கைக்குரி ய தலைவன், ஆயிரம் ஆயிரம் விடுதலை வித்துக்களின் ஆத்ம அமைதியைக் குலைக்கும் விதத்தில் தனது உயிரை முதன்மைப் படுத்தி எதிரியின் காலடியில் பணிந்தமை! 17 வயதில் தான் நம்பிய சித்தாந்தத்துக் காக, போராட முனைப்பட்டு, பல்வேறு பரிமாணங்களின் ஊடாக உயர் நிலையடைந்து இறுதியாக தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் ஓருசேர பலி கொடுத்தமை! இத்தனை அவலங்களைச் சுமந்த மனிதன் தானும் போராடி மரணித்திருந்தால ், தானே வகுத்த வழியில் சயனைட்டை உட்கொண்டிருந்தா ல் மிகவும் இலகுவான முடிவை தழுவியிருக்க முடியும் என்பதைக்கூட புரிந்திருக்கவி ல்லை என்பதே அவலத்தில்; அவலம்!
Quote
 
 
-7 #23 கும்பிடறேன் சாமி 2011-12-13 16:52
தேனீ இணைய தளத்தில் ....மதிவதனியை மணம் முடித்ததன் மூலம் சமூகத்தில் சமத்துவம் அடைந்ததாக எண்ணிக்கொண்டார் . 2009 போர் முடிந்த சில நாட்களில் ஓர் பேராசிரியர் தனது மனக்கவலையை தனது பழைய மாணவி ஒருவரிடம் இப்படி வெளிப்படுத்தினா ர்… „எடியே… பிள்ளை ~எங்களுக்கு’ ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுற உவங்கள் இனி ~எங்களுக்கு’ ஒண்டுமே தெரியாது எண்டு சொல்லப்போறாங்கள ்“ என்று. மாத்தையவைப் போட்டுத்தள்ளியத ை தவிர்த்துப் பார்த்தாலும், பொட்டம்மானுக்கு ம் கருணாம்மானுக்கு ம் இடையிலான பிரச்சனையில் இவரது அணுகுமுறையை நோக்கலாம். இலங்கை ராணுவத்தின் பல்வகைப் படையணிகளை தோற்கடிப்பதில் முன்னணித் தளபதியாக இருந்த ஒருவரை மட்டுமன்றி இதன் மூலம் ஒரு பிரதேசத்தையே இழந்துவிடுகிறோம ே எனும் பிரக்ஞை அற்றவராக இருந்தார் பிரபாகரன். பிரிந்து சென்ற கிழக்கிலங்கைப் பெண் போராளிகள் சரணடைந்து மீளவும் இயக்கத்தில் இணைய முற்பட்டபோது அவர்களைக் கொலைசெய்து (புலிப் போராளிகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ார் எனும் தகவலும் உண்டு) பழிவாங்கியதன் மூலம், கிழக்கு மக்களின் ஆண்டாண்டு காலப்பழிக்கு உள்ளானதும் பிரபாகரன் தனது இறுதிக் காலத்துக்கு முன்பு சுமந்துகொண்ட பேரவலம்! ....உண்மைகள்...
Quote
 
 
-2 #22 ramnath 2011-12-13 14:54
முல்லை பெரியாறு ஏன் நடிகர்கல் சைத்தம் இல்லமல் இருகிரர்கல்.....

கவெரி ஈலம் வந்தால் பனம் வரும் - கெரலா எதிர்தல் பனம் வரது....

they have big market in kerala...eg : enthiran - 10CR mankatha / velayutham / collected 5 CR each and other starts movies doing good in kerala......
Quote
 
 
+1 #21 RG 2011-12-13 14:47
Thanks Savukku for your effort to bring awareness among public. Hats off to Anna and his Team! We support them! Jaihind!
Quote
 
 
+8 #20 SMHUSSAIN 2011-12-13 13:46
அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்ச நீதி மன்றம் கேரள சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி அணையின் நீர் மட்டம் 136 அடியாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றி அதை செயல்படுத்தியும ் உள்ளது.142 அடி நீர் தேக்க உத்தவிட்ட உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு என்னவாயிற்று அதைபற்றி உச்சநீதி மன்றம் ஏன் கேள்வி எழுப்பவில்லை.தீர்ப்பு வெளியான நாளிருந்து ஆட்சி அரியணையில் இருந்தது தி மு க அது சமயம் ஒன்றும் அவர்களால் செய்ய இயலவில்லை இதுநாள் வரையிலும் மத்திய அரசிலும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளனர் தன்மானம் காக்க தமிழக நலன் காக்க என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.தலை காவேரி தண்ணீரும் போச்சு கண்டலேறு தண்ணீரும் கானல் நீராச்சு முல்லை பெரியாறு தண்ணீரும் மூச்சு நிக்க போகுது வாழ்க ஜனநாயகம் வாழ்க தேசியம் வாழ்க தமிழகம் தண்ணீரின்றி
Quote
 
 
+6 #19 mathavanponnusamy 2011-12-13 12:22
கலாநிதிமாறனையும ், தயாநிதிமாறனையும ் கைது செய்யாத சிபிஐ, அதை என்னவென்று கேட்காத நீதிமன்றங்கள், இதுபற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் மீடியாக்கள் என்று இந்தியாவின் ஜன நாயகக் குரல்வளை நெறிக்கப்படுகிற து. இது தான் நமது இந்தியா
Quote
 
 
+3 #18 வேல் 2011-12-13 11:03
[இ][ப்]முல்லைப் பெரியாறு[/ப்][/இ] விவகாரம் பற்றிய பதிவு இடவும்.
Quote
 
 
+1 #17 vennai 2011-12-13 10:36
adhula swamy irrukkara. avaruthana 142 varikkum neer thekkanum enru poradi neethimanra theerpai kondu vandha TAMILAN. indh soothirangal etchu pulaikka thana layakku. inam alyium podha panni mathri thinna kootam thana idhu...Quoting leelakris:
அமா? முல்லைபெரியாருன ு ஒன்னு இருக்கரது தெரியுமா???? இல்ல அதபத்தி நமக்கு என்னனு இருக்கனுமா? சவுக்கு?????
Quote
 
 
+1 #16 thayir satham 2011-12-13 09:51
very good article
Quote
 
 
+2 #15 sathyshk 2011-12-13 04:24
Thank you very much for supporting lokpal. No matter there are some weakness in the lokpal.
If we get the law passed, it would, at least, check 5 per cent of corruption. Having a US $ one trillion economy in place, we can easily save US $ 100 billion per year. (A huge sum of Rupees 5 lakh crores). The amount we are expecting to borrow in order to bring down the budget deficit for the current fiscal.

Moreover and ultimate of all aspect, we can bring every public accountable.

Here is what Aristotle said:
///The most perfect political community is one in which the middle class is in control, and outnumbers both of the other classes.///
Quote
 
 
+1 #14 vandhiyadevan 2011-12-12 21:52
Way to go.. keeping my fingers crossed.. 8)
Quote
 
 
+28 #13 sbasenthil 2011-12-12 20:39
காங்கிரஸ் கட்சியே அழிந்து போனால்தான் இந்தியா உருப்படும்.

சவுக்கிடம் முல்லை பெரியாறு பற்றி பதிவு எதிர்பார்க்கிறே ன்.
Quote
 
 
+15 #12 leelakris 2011-12-12 20:28
அமா? முல்லைபெரியாருன ு ஒன்னு இருக்கரது தெரியுமா???? இல்ல அதபத்தி நமக்கு என்னனு இருக்கனுமா? சவுக்கு?????
Quote
 
 
+14 #11 Suresh Raja 2011-12-12 20:06
காங்கிரஸ் சொல்றதல்லாம் சும்மா நொண்டிச்சாக்கு...அவுங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டு தான் வேணும்னா மக்கள் இன்னும் கொஞ்ச நாள்ல "கூடை வச்சி இருக்கிறவுங்களு க்கு எல்லாம் லைட்டே தர மாட்டோம்னு சொல்லுவோம்"... அப்புறம் தீப்பந்தம் தான்.. :)

நல்லது நடந்தா சரி...

அப்புறம் சவுக்கு, இந்த ஊழல் விவகாரம் எவ்ளோ சூடு புடிக்கிதோ அத விட முல்லை பெரியார் விவகாரம் இருக்கு... ரொம்ப நாளா அத பத்தி நீங்க எழுதுவீங்கன்னு எதிர் பாத்துக்கிட்டு இருக்கேன்... பரமக்குடி சம்பவத்தை அவ்ளோ கவர் பண்ண தெரிஞ்ச நீங்க ஏன் இத பத்தி வாய்திறக்க மாட்டிங்கிறீங்க ? இதுவும் தமிழ் நாட்டுல தான் நடக்குது... உண்மை நிலையை எல்லாருக்கும் சொல்லுவதில் பத்திரிகை பங்கு பெருசு.... எல்லைகள்ள இருக்கிற பதட்டம் உங்களுக்கு தெரியாம இருக்காது. வேற எதுவும் சொல்றதுக்கு இல்ல.. :oops: :oops: :oops: :oops:
Quote
 
 
+11 #10 சோழன் 2011-12-12 18:33
வாழ்த்துக்கள்! சீக்கிரம் இந்தியாவை பிடித்த பீடைகள் ஒழிவதை நம் காலத்திலேயே பாத்துவிட்டால் நன்றாக இருக்கும்!
Quote
 
 
+5 #9 ss 2011-12-12 18:00
நாட்டு மக்களின் நிலைமை பிரசவத்துக்குத் தயாராகும் தாயாரைப் போல் உள்ளது. குழந்தை (லோக்பால் சட்டம்) சரியாகப் பிறக்குமா ? நன்றாக வளருமா ? என பல கேள்விகளுடன் கடவுளை வேன்டிக் கொண்டிருக்கிறார ்கள். நன்மை நடந்தால் சரி.
Quote
 
 
+1 #8 Rangaraj rajendran 2011-12-12 17:35
Savukku really I value the success of this hunger strike as poor.But your article made me to understand the significance of the struggle.
Quote
 
 
+2 #7 குட்டி 2011-12-12 17:10
இந்த லோக்பால் சட்டத்தின் மூலம் ஊழல் செய்யும் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும ் தண்டிக்கப் படுவதற்கான வாய்ப்பு பெருகியுள்ளது. லோக்பால் சட்டத்தில் குறைகளே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. குறைகள் இருக்கலாம். அந்தக் குறைகளை காலப்போக்கில் சரி செய்து கொள்ள முடியும். ஆம் சவுக்கு இதை ஒரு ஆரம்பமாக எடுத்துக் கொள்ளலாம்
Quote
 
 
+2 #6 perumal 2011-12-12 16:43
சபாஷ் சவக்கு செமயா எலுதிருக்கிஙக.ஜை ஹிந்த்
Quote
 
 
+5 #5 t.gunasekar 2011-12-12 16:36
தெளிவான கட்டுரை, கருத்துக்களை மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ள து. Photos are all very clear and very nice. Thank you , savukku.
Quote
 
 
+11 #4 force 2011-12-12 14:55
பிரதமரை இந்த வளையத்திற்குள் கொண்டு வரும் அவசியம் ராஜீவின் போபர்ஜும், இந்திராவின் நாகர்வாலா ஊழல்களால் நியாமாகிறது. சிபிஐ கையாண்ட குவாட்ரோச்சி வழக்கும், 2ஜி யில் ப.சி க்கு வக்காலத்து வாங்கும் அவசரமுமே போதும் அதையும் இதனுள் கொண்டுவர வேண்டிய ஆத்தியவசியத்தை நிருபிக்க.
Quote
 
 
+3 #3 Manidhan 2011-12-12 14:54
நடந்தால் நல்லது ..
Quote
 
 
+5 #2 SMHUSSAIN 2011-12-12 14:40
பொறுத்திருந்து பார்க்கலாம் நடப்பதை லோக்பால் சட்டமாகுமா அல்லது சமாதியாகுமா என்பதை?
Quote
 
 
+12 #1 manasu 2011-12-12 14:38
படித்து முடித்ததும் மனதில் மகிழ்ச்சி கண்ணில் ஈரம்....சவுக்கு உன்னுடைய வார்த்தை பலிக்கட்டும், நானும் லோக்பால் தேவை என விரும்பும் சாதாரண இந்தியந்தான். இந்த சட்டத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது என்பவர்கள் ஏன் இந்த சட்டத்தை பார்த்து பயப்பட வேண்டும்??
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 53 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1769
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week60934
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month273753
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12795872