முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
ஒழிந்ததா மன்னார்குடி மாஃபியா ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 40
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011 09:42

வாழ்த்துக்கள் ஜெயலலிதா என்றுதான் இந்தக் கட்டுரையை தொடங்க வேண்டும் என்று விருப்பம்.  ஆனால் அப்படித் தொடங்குவதற்கு பெரும் தயக்கம் வருவதற்கு காரணம், கடந்த கால வரலாறு.  நடராஜன் நீக்கம், தினகரன் நீக்கம் என்று போயஸ் தோட்டத்திலிருந்து பல அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அவை நீர்த்துப் போய் வெறும் அறிவிப்புகளாகவே நின்று விட்டது வரலாறு.  காலப்போக்கில், நடராஜன் போன்றவர்கள் மீண்டும் அதிகார மையங்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

 sasi1

சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்குமான நட்பு 1982ம் ஆண்டில் தொடங்கியது.   சசிகலாவின் கணவர் நடராஜன் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.  அப்போது அவருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சந்திரலேகாவோடு இருந்த நட்பின் அடிப்படையில் தனது மனைவியையும் அறிமுகப் படுத்துகிறார்.    ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, எம்ஜிஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.   அதிமுகவில் எம்ஜிஆரால் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கப் பட்டிருந்தாலும், தற்போது இருப்பது போல ஜெயலலிதாவுக்கு பிசியான வாழ்க்கை இல்லை என்பதால், வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் கடையை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவிடம் தனது வீட்டுக்கு தினமும் வீடியோ கேசட்டுகளை வழங்கச் சொல்கிறார்.

 

தினந்தோறும் வீடியோ கேசட்டுகளை சசிகலாக வழங்கி வரும்போது, ஜெயலலிதாவுடனான நட்பு சசிகலாவுக்கு நெருக்கமாகிறது. எம்.ஜி.ஆர் மறைவை ஒட்டி, ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பன் மற்றும், எம்.ஜி.ஆர் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்ட நேரத்தில் சசிகலா, ஜெயலலிதாவுக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.

 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்த போதுதான், ஜெயலலிதாவுக்கு உண்மையான அரசியல் என்றால் என்ன என்பது புரிகிறது.    அப்போதைய சூழ்நிலையில், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தன்னுடைய அணிக்காக சேவல் சின்னத்தில் போட்டியிடும் அணிகளுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது சசிகலா ஜெயலலிதா கூடவே இருந்து பல உதவிகளைச் செய்கிறார்.  இதையடுத்து இவர்களின் நட்பு பலப்படுகிறது.

 

1991ல் ராஜீவ் காந்தி மரணத்தை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி மிகப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கிறது.  அது வரை தனது கணவர் நடராஜனோடு, பெசன்ட் நகர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டு அவ்வப்போது போயஸ் தோட்டத்துக்கு வந்து செல்லும் சசிகலா, ஒரேயடியாக போயஸ் தோட்டத்துக்கு வந்து விடுகிறார்.    அப்போதெல்லாம் நடராஜன், அதிமுகவில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது, தான் வைத்ததே சட்டம் என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா, சசிகலாவின்  சம்மதத்தோடு, நடராஜன் கட்சியிலிருந்து நீக்கப் படுகிறார், அவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டார்.

 thirumalaisamy

சசிகலாவின் குடும்பத்தை எடுத்துக் கொண்டால், அது கருணாநிதியை விட மிகப் பெரிய ஆக்டோபஸ் குடும்பம்.

 

சசிகலாவோடு பிறந்தவர்களில் முதலாமவர் சுந்தரவதனம்.  இவரது மனைவி பெயர் சந்தானலட்சுமி. இவர்களது மகள் அனுராதாதான் தற்போது ஜெயாடிவியை நிர்வகித்து வருகிறார். இவர்களின் மற்றொரு மகன் தான் டாக்டர்.வெங்கடேஷ்.

 

சுந்தவரதனத்துக்கு  அடுத்தவர் சமீபத்தில் காலமான வனிதாமணி.  இவரது கணவர் விவேகானந்தன்.  இந்தத் தம்பதிக்குப் பிறந்தவர்கள்தான் டிடிவி.தினகரன், வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் டிடிவி.பாஸ்கரன்.  இவர்கள் கரன் சகோதரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.   வளர்ப்பு மகன் சுதாகரனை ஜெயலலிதா விலக்கி வைத்து, அவர் மீது ஹெராயின் வழக்கு போட்ட போது, இந்த வனிதாமணி சென்னை வந்து ஜெயலலிதாவிடம் கடுமையான சண்டையிட்டிருக்கிறார்.  நீங்கள்  கேட்டீர்கள் என்றுதான் சுதாகரனை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்ள சம்மதித்தேன், இப்போது இப்படிச்  செய்தால் என்ன அர்த்தம் என்று கடுமையாக சண்டையிட்டிருக்கிறார். கோபமடைந்த ஜெயலலிதா, இனி என் முகத்தில் விழிக்காதீர்கள் என்று சொல்லி வனிதாமணியை அனுப்பி விட்டார்.  இதனால்தான் ஜெயலலிதா, வனிதாமணி மரணத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.  இவர்களது மற்றொரு மகனான டிடிவி.தினகரன், இவர்களது தாய் மாமன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துள்ளார்.

 

வனிதாமணிக்கு அடுத்த சகோதரர் வினோதகன்.  மகாதேவன் என்பவர் இவரது வாரிசு என்று கூறப்படுகிறது.

 

இந்த வினோதகனுக்கு அடுத்த சகோதரர் ஜெயராமன்.  இவரது மனைவிதான் இளவரசி.   இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு.

 

இவர்களுக்கு அடுத்தவர்தான் சசிகலா. இவரது கணவர் நடராஜன்.  நடராஜனின் தம்பி ராமச்சந்திரன்.

 

சசிகலாவுக்கும் அடுத்த சகோதரர் திவாகரன்.  இவர் மன்னார்குடியிலேயே இருக்கிறார்.

 

இது சசிகலாவோடு பிறந்தவர்களைப் பற்றிய விபரம்.  (இதைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விட்டது) இது போக, மன்னார்குடியைச் சேர்ந்த, சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் சசிகலாவின் உறவினர்கள் என்று சொல்லிக் கொள்வது, அதிமுக ஆட்சியின்  சோகங்களில் ஒன்று.

 

1991ல் போயஸ் தோட்டத்துக்கு குடிபெயர்ந்த சசிகலா மற்றும் அவர் உறவினர்களின் அராஜகத்தை அன்றைய தமிழகம் வேதனையோடு பார்த்தது. 1991-1996 ஆட்சி காலத்தில் சசிகலாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.  அப்போதுதான் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி ரவுடிகளை விட்டு அடிக்கும் கலாச்சாரம் வளர்ந்தது.   இந்த ஆட்டோ கலாச்சாரத்தையும் ரவுடிகளின் கூட்டத்தையும் பராமரித்துப் பேணிக் காத்தவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் மற்றும் மதுசூதனன்.   சசிகலா குடும்பத்தின் பேராசை எப்படி இருந்தது என்றால், சென்னை நகரில் அழகாக இருக்கும் கட்டிடங்களை பார்த்துப் பார்த்து, அதன் உரிமையாளர்களை மிரட்டி விலைக்கு வாங்குவார்கள்.  இந்த மிரட்டலுக்கு பிரபல இயக்குநர் பாரதிராஜாவும் தப்பவில்லை.  பாரதிராஜாவும், அமிர்தாஞ்சன் நிறுவன உரிமையாளர் பந்துலுவின் குடும்பமும் சசிகலாவால் மிரட்டப் பட்டனர்.

 

தனக்கென்று சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஜெயலலிதா, எனக்கென்று குடும்பமும், அதற்கு ஒரு வாரிசும் இருந்தால், அந்த வாரிசின் திருமணத்தை இப்படித்தான் நடத்துவேன் என்று இந்த சமூகத்துக்கு பறைசாற்றும் விதமாக வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார்.   நடிகர் திலகம் சிவாஜியின் மகளை பெண் கேட்டு, அந்தத் திருமணம் வெகு தடபுடலாக நடைபெற்றது.  அந்த காலத்திலேயே 100 கோடி ரூபாய் திருமணம் என்று இந்தத் திருமணம் அழைக்கப் பட்டது.

 jaya_sasi_weddig_jp_868559g

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தால், அப்போது அதிமுகவிலிருந்து ராஜாராம், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற எம்ஜிஆர் காலத்து அதிமுகவினர் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தனர்.  சசிகலா குடும்பத்தின் இந்த அராஜகம் தலைவிரித்து ஆடத் தொடங்கி வெகுஜன மக்கள் மத்தியில் அதிமுக ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி ஏற்பட்டது.  ஆனாலும், இது எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படாமல், தனது உடன்பிறவா சகோதரியோடு உற்ற துணையாக நின்றார்.

 1991 முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போதுதான் சசிகலாவின் ஆதிக்கம் எத்தகையது என்பதை தமிழகம் உணர்ந்தது.  முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அந்த சபாநாயகரின் இருக்கையில், சசிகலாவை அமர வைத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.   ஜெயலலிதா, சசிகலா முன்னிலையில் சேடப்பட்டி முத்தையா சாஷ்டாங்கமாக காலில் விழுந்து தனது விசுவாசத்தைப் பறைசாற்றினார்.

IN19_JAYA_SASI_OPS_868555g

1992ம் ஆண்டு நடந்த மகாமகத் திருவிழாவில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வருகையால் நடந்த நெறிசலில் 48 அப்பாவி மக்கள் பலியானார்கள்.  ஆனால் இது எதுவுமே ஜெயலலிதா-சசிகலா நட்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 magamagam-1

magamagam01

1996ல் நடந்த தேர்தலில், மிக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது அதிமுக.  அந்தத் தேர்தல் தோல்வி, ஜெயலலிதாவுக்கு முதன் முறையாக, தன் உடன் பிறவா சகோதரியால் இந்தத் தோல்வி என்பதை உணர வைத்தது.  போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து சசிகலாவை வெளியேற்றினார் ஜெயலலிதா.  இது குறித்த வெளிப்படையான அறிவிப்பையும் வெளியிட்டார்.

 

ஒரே மாதத்தில் சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு வந்தார்.  சசிகலா போயஸ் தோட்டத்துக்கு வருகை தரும் போது, ஜெயலலிதா வாசலில் வந்து நின்று, கேசரி கொடுத்து சசிகலாவை வரவேற்றார்.  வெளியேற்றி விட்டு, மீண்டும் சசிகலாவை ஜெயலலிதா இணைத்துக் கொண்டது, சசிகலாவுக்கு, நாம் இல்லாவிட்டால், ஜெயலலிதா இல்லை என்ற ஆணவத்தைக் கொடுத்தது.

 19VBG_SASIKALA_868561g

2001ல் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. அப்போது ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் கிடைத்திருந்த தண்டனையால், அவர் நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.  ஜெயலலிதாவுக்கு பதிலாக வேறு யாரை முதல்வராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது, மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் மற்றும் லால்குடி தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் எம்எல்ஏ (பெயர் நினைவில்லை) ஆகிய இருவர் பெயர் ஜெயலலிதாவால் இறுதி செய்யப் பட்டது.  ஆனால் மன்னார்குடி மாபியாவின் யோசனைப்படி, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வரானார்.  பன்னீர்செல்வம், தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மன்னார்குடி குடும்பத்துக்கு விசுவாசமான அடிமையாக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

 Augu---24-f

அந்த காலகட்டத்திலும், மன்னார்குடி ராஜ்யம் கோலோச்சிக் கொண்டிருந்த போதுதான், அந்த மாபியாவுக்குள்ளாகவே உள்மோதல்கள் துவங்கின.  தினகரனுக்கும் மகாதேவனுக்கும் மோதல். டாக்டர்.வெங்கடேஷ் என்ற புதிய நபர் தலைதூக்கினார்.  இப்படியான உள்மோதல்களுடன், அந்த ஆட்சியும், அப்போது எடுக்கப் பட்ட தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளால் 2006 தேர்தலில் மண்ணைக் கவ்வியது.

 

சரி ஆட்சியில்தான் இப்படி.  கட்சியில் மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் உள்ளதா என்றால், மன்னார்குடி மாபியாதான் கட்சியையே நடத்தும்.   மன்னார்குடி மாபியா தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக முடியும்.  அதிமுகவில் பல ஆண்டுகாலம் இருக்கும் தலைவர்களையெல்லாம் விட்டு விட்டு, 2007ல் தொடங்கப் பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு, நேற்றைக்கு முளைத்த காளானான டாக்டர்.வெங்கடேஷை தலைவராக்கியதே, மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு நல்ல உதாரணம்.

 DSC02875

டாக்டர் வெங்கடேஷ்

2011 தேர்தல் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.  இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, ஜெயா டிவியில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப் பட்டது.   அப்படி அறிவிக்கப் பட்ட பட்டியலில், கூட்டணிக் கட்சிகள் பல ஆண்டுகளாக வென்று வந்த தொகுதிகளும் அடக்கம்.   கட்சியில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு உதாரணம் இது.   பட்டியல் வெளியானதும், கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி, மூன்றாவது அணி அமைக்கலாமா என்ற முடிவுக்கு சென்றன.

2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறாமல் போயிருந்தால், அவரது அரசியல் எதிர்காலமே முடிவுக்கு வந்திருக்கும்.   அப்படி இருந்தும், அந்தத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில், பணத்தை வாங்கிக் கொண்டு, இப்படி ஒரு குளறுபடியைச் செய்யத் துணிந்தது மன்னார்குடி மாபியா. ஆனாலும் ஜெயலலிதா பொறுமையாகவே இருந்தார்.

2011ல், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் எல்லை மீறியது.  பதவிக்கு வந்த நாள் முதலாகவே வசூல் வேட்டை கொடி கட்டிப் பறந்தது.  அமைச்சர்கள் நியமனமாகட்டும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனமாகட்டும்… மன்னார்குடி மாபியா வைத்ததே சட்டம் என்று ஆனது.

 IN19_JAYA_SASI_868554g

பூ ஒன்று புயலானதே !!!

திமுக ஆட்சியில் நடைபெற்று வந்த மணற்கொள்ளை அதிமுக ஆட்சியில் அப்படியே தொடர்ந்து நடைபெற்றது.   சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, கடந்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்குக்கு 5 சதவிகித மதுபானங்களை சப்ளை செய்து வந்தது.  இந்த சதவிகிதம், தற்போது 35 சதவிகிதமாக அதிகரித்தது.   சசிகலாவின் கட்டளைகளை கச்சிதமாக நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் துறை என்று ஒரு துறை உருவாக்கப் பட்டு, அந்தத் துறைக்கு பன்னீர்செல்வம் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப் பட்டார்.  இந்த பன்னீர்செல்வம், தற்போது பணியில் உள்ள தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்களை விட, அதிக அதிகாரம பொருந்தியவராக மாறினார்.  அமைச்சர்கள் நாள்தோறும், இவர் அறைக்குச் சென்று இவரது ஆசியைப் பெறுவது வழக்கமான ஒன்றாக மாறியது. ஜெயலலிதாவிடம் 15 ஆண்டுகளாக இருந்த பாதுகாப்பு அதிகாரி திருமலைச் சாமி, சசிகலாவின் ஏவலாளாக மாறி, அவர்கள் சார்பாக கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

 

கடந்த ஆட்சி காலத்தில் மிக முக்கிய பதவியான சென்னை மாநகர கமிஷனராக இருந்த கண்ணாயிரம், மாநிலத்தின் மிக முக்கியப் பதவியான உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக்கப் பட்டார்.

 

தற்போது ஜெயலலிதா பதவியேற்றதும் ஏற்பட்ட ஒரு பிரத்யேகமான பிரச்சினை, பெங்களுரு வழக்கு. இந்த பெங்களுரு வழக்கு சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கேள்வி கேட்கும் நிலையை அடைந்துள்ளது.  இனி இந்த வழக்கை காலம் தாழ்த்த முடியாத ஒரு நிலையில், ஜெயலலிதா ஒரு இக்கட்டான நிலையில் உள்ளார்.

 

இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சசிகலாவின் கணவர் நடராஜன் தான் முதல்வராக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.   சவுக்கு இது குறித்த கட்டுரையை, ஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் என்ற தலைப்பில் அக்டோபர் 16 அன்று வெளியிட்டிருந்தது.  அப்போது அந்தக் கட்டுரைக்கு பின்னூட்டம் இட்ட பல அன்பர்கள், இதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

 DSC_4882

ஆனால், சட்டமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சி அமைக்கும் போது சிக்கல்கல்கள் ஏற்படும் சூழலில், எம்.எல்.ஏக்கள் எப்படி கட்சி மாறுவார்கள் என்பது, கோவா, பெங்களுரு, உத்தரப்பிரதேசம், எம்ஜிஆர் இறந்த பிறகு, தமிழ்நாட்டில் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்களை கூர்ந்து நோக்குபவர்களுக்கு நன்கு தெரியும். ஜெயலலிதாவுக்கு ஒரு வேளை பெங்களுரு வழக்கில் தண்டனை கிடைத்து விட்டால், அவர் மேல்முறையீடு செய்து, விடுதலை பெற்று வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். மீதம் உள்ள நான்கரை ஆண்டுகளுக்கு பதவியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதில்தான் எம்எல்ஏக்கள் கவனம் செலுத்துவார்களே ஒழிய, ஜெயலலிதாவுக்கு நிச்சயம் விசுவாசமாக இருக்க மாட்டார்கள்.  ஒவ்வொரு எம்எல்ஏவும், பல கோடிகளை செலவழித்து எம்எல்ஏக்கள் ஆகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

 

இந்த வழக்கின் முடிவை எதிர்நோக்கி, நடராஜன் வகுத்த சதித்திட்டத்திற்கு சசிகலா பக்கபலமாக இருந்ததாகத் தெரிகிறது.  கடந்த வாரத்தில் பெங்களுரில், ஒரு ரகசியக் கூட்டம் நடந்ததாகவும், அந்தக் கூட்டத்தில், சசிகலா விலக்கி வைக்கப் பட்ட வளர்ப்பு மகன் சுதாகரனும், நடராஜனும், வேறு சில முக்கியப் புள்ளிகளும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.   இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவால் பழிவாங்கப் பட்ட சுதாகரன், எப்படியாவது, முதலமைச்சர் பதவியில் நடராஜனை அமர வைக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.   இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இளவரசி, இந்தத் தகவல்களை ஜெயலலிதாவிடம் சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.

 24

சசிகலாவுக்கு முன்னால் இருப்பவர்தான் இளவரசி

இதையடுத்தே, ஜெயலலிதா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

 

கண்ணாயிரம் உளவுத்துறையிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டதும், பொன்மாணிக்கவேலை அந்தப் பதவிக்கு கொண்டு வந்ததும் சசிகலாதான்.  பொன்.மாணிக்கவேல் அப்புறப்படுத்தப் பட்டதும், அந்தப் பதவிக்கு தாமரைக்கண்ணனை கொண்டு வந்ததும் சசிகலாதான்.  முக்கியமான பதவிகளில், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த, தங்களுக்கு விசுவாசமான அதிகாரிகளை தொடர்ந்து நியமித்து வருவது, தன்னைச் சுற்றிப் பின்னப்படும் சதிவலையின் வெளிப்பாடே என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்து கொண்டதாலேயே இந்த அதிரடி நடவடிக்கை என்று போயஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

 

பரவலாக கூறப்படும் ஒரு கருத்து, ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையும் ஒரு கண்துடைப்பு நாடகமே என்பது.  மேலும், பெங்களுரு வழக்கில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஜெயலலிதா இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்  என்றும் ஒரு தகவல் சொல்லப் படுகிறது.  பெங்களுரு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிலையில், தற்போது ஜெயலலிதா, சசிகலாவிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்வதால், சட்டரீதியாக எந்தப் பலனும் ஜெயலலிதாவுக்கு கிடைக்கப் போவதில்லை.

 sasi3

இதை நாடகம் என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும் கூட, சசிகலாவோடு சேர்த்து, எம். நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி. பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ். வெங்கடேஷ், எம். ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி. மகாதேவன், தங்கமணி ஆகியோரை ஜெயலலிதா நீக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

 

அப்படியே இதை நாடகமாக எடுத்துக் கொண்டாலும், இந்த மன்னார்குடி மாபியா, மீண்டும் இது போன்ற அராஜகத்தை ஏற்படுத்த அஞ்சுவார்கள்.  மேலும் ஜெயலலிதாவின் குணாதிசயத்தை அறிந்தவர்கள், ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கமாட்டார் என்பதை நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.  நம் எல்லாரையும் விட, ஜெயலலிதாவின் குணங்கள், மன்னார்குடி மாபியாவுக்கு நன்றாகவே தெரியும்.

 19IN_JAYA_SASI_868551g

IN19_JAYA_IN_SUCEND_868553g

மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்ப்பார்ப்பது, கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா எடுத்த இந்த நடவடிக்கைகளோடு நின்று விடாமல், இந்த மாபியா கும்பல் சம்பாதித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, இவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதே.  இந்த மன்னார்குடி கும்பலின் அராஜகத்தையும் பொறுத்துக் கொண்டு, மீண்டும், மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களித்த மக்களுக்கு ஜெயலலிதா நன்றிக் கடன் பட்டிருப்பாரேயானால், இதை அவர் செய்யத்தான் வேண்டும். 

 

Comments  

 
+9 #113 வால்டர் வணங்காமுடி 2012-01-03 12:29
[ஃஉஒடெ நமெ="டமில்மரவன்"][ஃஉஒடெ நமெ="சொம"]இவனுஙா " கள்ளர் " சாதிய சேர்தவன்க... சாதி வெரி பிடித்த மிருஙகல்...[/ஃஉஒடெ]


டேய் " சோமா " சொம்பு சாதியை இழுக்காதடா...[/ஃஉஒடெ]


அது என்னங்க "சொம்பு சாதி"? யாருக்கு சொம்பு தூக்குனீங்க? 'பாண்டியன்' அண்ணே... இங்க புட்டு புட்டு வச்சிருக்கிறதை பார்த்தா, அந்த 'சொம்பு சாதி' யாருன்னு சுலபமா கண்டுபிடிச்சிடல ாம் பொல...!!! :lol: :lol: :lol:
Quote
 
 
+1 #112 manithan 2012-01-03 07:27
சுப்பு எலுதிய திரவிட மாயை ஒரு பார்வை படிதுப் பாருன்கல். தமிலருக்கான விடிவு அதில் சொல்லப்பட்டிருக ்கிரது.
Quote
 
 
+16 #111 RAJKUMARPANDIAN 2011-12-31 17:06
நாளைக்கு இதே மன்னார்குடி கள்ள கூட்டம் ...சசிகலவையோ,நடராஜ னையோ ..இவர்களால் தான் தமிழ்நாடு நிர்வாகம் நடந்தது போலவும் ..நாடாள அறவே தகுதி இல்லாத சினிமாகாரியான , ஜெயலலிதாவின் கையில் தமிழ்நாடு சிக்கி சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக சசிகலா - நடராஜன் தங்கள் குடும்ப வாழ்க்கையையே தியாகம் செய்து தமிழ்நாட்டை அழிவிலிருந்து மீட்டதாகவும்..புருடா..விடுவார்கள்..கும்பலாக அதிகாரத்தை கைப்பற்றி அரசாங்க பணத்தை கொள்ளைஅடித்த கள்ள கூட்டம் நாளைக்கே சசிகலவையோ -நடராசனையோ தெய்வீக திருமகன் என்றும் தேசிய தலைவர் என்றும் சொல்லி அடுத்த கொள்ளைக்கு அச்சாரம் போடுவார்கள்.நிரந்தரமாக இந்த கும்பலுக்கு முடிவு கட்ட வேண்டும்.
Quote
 
 
+16 #110 RAJKUMARPANDIAN 2011-12-28 22:00
[ஃஉஒடெ நமெ="டமில்செரன்"]................................................

சாதி ரீதியிலான பின்னூட்டங்களை சவுக்கு நிறுத்து.

இது ஜெ - சசி இரு நபர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டது மட்டுமே.

இதில் சாதியை தினிக்காதே...

சாதி துவேசங்களை ஊக்குவிக்காதே..

இந்த சாக்கடை அரசியலில் எமது சமூகத்தை இழுப்பது
வன்மையாக கண்டிக்கத்தக்கத ு....

------முக்குலத்தோர் பாசறை--------[/ஃஉஒடெ]

ஆமாங்க சவுக்கு மானம் போவுதுங்க ..ஆண்டாண்டுகாலமாக நாங்கள் மற்றவர்களின் பயத்தின் மீது கட்டிய கட்டுக்கதைகள் எல்லாம் இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்படுகி றது..
Quote
 
 
+3 #109 கிராமத்தான் 2011-12-28 03:35
சாதியை நாங்கள் சொல்லவில்லை; உங்கள் சசி மாபியா கும்பல் தான் சாதியைச் சொல்லி தமிழகமெங்கும் மிரட்டி, வழிபறி செய்து, கள்ளத் தொழில் செய்து வருகிறது. அரசு அலுவலங்கள் கேவலமாகப் போய்கொண்டிருப்ப தற்கு இந்த கும்பலைச் சேர்ந்தவர்களும் ஒரு காரணம் - எவனுமே ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. அப்படியே சென்றாலும் என் 'பேக்ரவுண்ட் தெரியுமா? நான் சசி மாபியா கும்பல். எவனும் என்னை புடுங்க முடியாது' என்று திமிராக மக்கள் வரிப்பணத்தில் கேவலமாக சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்ளும் அநியாயம் எந்த நாட்டில் நடக்கிறது? கொள்ளைத் தொழிலில் தனி ராஜ்யம் நடத்தி வருவது நீங்கள் மட்டுமே. வெங்கடேச பண்ணையார்(நாடார ்), வெங்கடாசலம் & திருச்சி மாணிக்கம் (அம்பலக்காரர்), அயோத்தி குப்பம் வீரமணி போன்ற மற்ற சாதிக்காரர்களை வாழவிடாமல் காலி செய்தது - அதே நேரத்தில் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி தன் சாதிக்கார ரௌடிகளை மட்டும் ஊக்குவித்து, சரித்திர காலம் தொட்டு, சாமானிய மக்களை மிரட்டிப் பிழைக்கும் ஈனப் பிழைப்பை விட்டு, எப்போது திருந்தி, உண்மையாக உழைத்து மற்ற தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுவீர்கள்?
Quote
 
 
0 #108 TamilCheran 2011-12-27 20:32
................................................

சாதி ரீதியிலான பின்னூட்டங்களை சவுக்கு நிறுத்து.

இது ஜெ - சசி இரு நபர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டது மட்டுமே.

இதில் சாதியை தினிக்காதே...

சாதி துவேசங்களை ஊக்குவிக்காதே..

இந்த சாக்கடை அரசியலில் எமது சமூகத்தை இழுப்பது
வன்மையாக கண்டிக்கத்தக்கத ு....

------முக்குலத்தோர் பாசறை--------
Quote
 
 
+9 #107 danguvaaru andhurum 2011-12-27 12:45
திமுக பக்கத்தில் கருணாநிதி&கோ, மாறன்&கோ எப்படியோ அப்படியே,

அதிமுக பக்கத்தில் ஜெயலலிதா, சசிகலா, சொட்டையன் சோ...... மூவருமே கேடுகெட்ட அயோக்கியர்கள். இதில் ஒரு அயோக்கியரை வெளியேற்றியதால் புண்ணியமெல்லாம் கிடையாது. மொத்தத்தில் தமிழர் விரோத அதிமுக ஆட்சி கவிழ வேண்டும். இது விழுந்து கிடக்கும் திமுக என்னும் துரோக கும்பல் எழும்முன்னர் நடக்க வேண்டும்.

தமிழகம் பிழைக்க திமுக அதிமுக இரண்டும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

Complete Solution is the need of the Hour not the Bits and Pieces.

மேலும் நான் கேள்விப்பட்டது என்னவெனில் சங்கரன்கோவில் கிலியால் நிகழ்த்தப்பட்ட தற்காலிக ஏற்பாடாம். சவுக்கு அவர்கள் தெரிந்தால் பதில் சொல்லவும்.
Quote
 
 
+3 #106 rebel 2011-12-25 18:37
This a careful ploy to escape getting punished in the Bangaluru case. Till 1996,the buyer's signature or photo never appeared in the records.So she can say she was not at all awre of any property being registered in her name. Any way,her friend will go to jail but will come back in twoyears like a true martyr and the people will vote them back to power as usual.
Quote
 
 
0 #105 பாண்டியன் 2011-12-25 12:36
[ஃஉஒடெ நமெ="திரவியம்"]உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றன் . சசிகலாவே இல்லை ஜெயவ என்னவேனாலும் கமெண்ட் பண்ணுங்க , திட்டுங்க .
ஏன்டா எல்லாரும் சாதிய சொல்றிங்க , ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணையும் மக்களையும் கட்டி காப்பாற்றியவர்க ள் என் சமுகத்தினரே ,
நாட்டின் விடுதலைக்காக முதலில் ஆங்கிலையறை எதிர்த்தவர்கள் என் வீர மறவர்கள் . எதிரிகளை விரட்ட தம் என்னுயிரை அற்பணித்தவர்கள் எங்கள் வீர மறவர்கள் ,
அணைத்து சாதியினருக்கும் தனது நிலங்களை எல்லாம் பிரித்து கொடுத்த வள்ளல் பிறந்த சமுகம் .வீர மங்கை வேலு நாச்சியாரை அர்பணித்த சமுகம் எங்கள் சமுகம் .
நாட்டிற்காக போர்கலாத்திலே வீர மரணம் அடைந்தவர்கள் . அவர்கள் வழிவந்த எங்களை ஏனடா அவமரியதாக பேசுகிறிர்கல் .இன்றும் என்றும் என் சமுகம் எவனுக்கும் அஞ்சாது , அடிபணியாது . பிற சாதியினரை பேணிகாப்பதில் எம் சமூகத்தினருக்கு ஈடு இணை இல்லையட .[/ஃஉஒடெ]இராமநாதபு ரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி யென்ற ஊரில் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் தெலுங்கு பாளையக்காரர் செல்ல முத்து சேதுபதி(முத்து விஜயரகுநாதசெல்ல த்துரை சேதுபதி) – முத்தாத்தாள் நாச்சியாருக்கு ஒரே பெண் மகவாக வேலுநாச்சியார் பிறந்தார். இவர்கள் தெலுங்கர்கள். இதன்பிந்தான் மறவர்கள் ராமநாதபுரம் செதுபதியாகிரார் கள் வடுகர்களின் முதுகில் குத்தி. வேலுநாச்சியார் சிவகங்கை தெலுங்கு பாளையக்காரர் முத்துவடுக நாதாத்தேவருக்கு மனம் முடிக்கையில் இராமநாதபுரம் தெலுங்கு சேதுபதியின் வேலையாட்களான மருது சகோதரர்கள் வேலுநாச்சியாருக ்கு மெய்க்காப்பாளர் களாக அனுப்பப்படுகிறா ர்கள். அப்பொழுதுதான் மருது சகோதரர்கள் சிவகங்கைக்கே வருகிறார்கள். முத்துவடுக நாதாத்தேவர் ஆங்கிலேயர்களால் கொலை செய்யப்பட்டவுடன ் வேலுநாச்சியாரை மருதிருவர் காப்பாற்றி பின்னர் பெரிய மருது வேலுநாச்சியாரின ் நாயகன் ஆகிறார் முறையட்ட்ற முறையில். வரலாறு மறைத்து எழுதப்படலாம் ; ஆனால் மறைந்து போய்விடாது.
Quote
 
 
+31 #104 பாண்டியன் 2011-12-25 12:36
[ஃஉஒடெ நமெ="திரவியம்"]உங்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணையும் மக்களையும் கட்டி காப்பாற்றியவர்க ள் என் சமுகத்தினரே.[/ஃஉஒடெ]
என்ன ஆயிரம் ஆண்டுகளாக காத்த்தீர்கள!!! .... யாரை எதை என விவரமா சொல்லுங்க..? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நீங்கள் தமிழகத்திலேயே கிடையாது. மாலிக்காபூர் படையெடுப்பின் போது தமிழகத்திற்குள் புகுந்து கள்ளர்களோடு இணைந்து சுந்தர பாண்டிய மல்லனை 1310 இல் தோற்கடித்து மூவேந்தர்களின் வீழ்ச்சிக்கு துணை நின்றவர் மறவர்கள் தானே. அதன்பின் தெலுங்கு வடுகப் (நாயக்கர் ) படையெடுப்பின் போது அவர்களுக்கு கட்சி மாறி அடியாள் வேலைபார்த்தது கள்ளர்களும் மறவர்களும்தானே.வடுகர்கள் பாண்டியர்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் வரை உடனிருந்து தமிழர்களை ஒடுக்கியது உங்களின் குற்றப் பரம்பரை தானே. அதற்க்கு கைமாரகத்தானே உங்களுக்கு தமிழர்களின் நிலங்களும் உடைமைகளும் பட்டங்களும் வடுகர்களால் பிடுங்கிக்கொடுக ்கப்பட்டன. தொல்காப்பியத்தி ல் நால்வகை நிலம்தான் உண்டு. அதன்பின் பாலை என்ற நிலமும் கள்ளர்களும் என கூறப்பட்டது. அப்போதெல்லாம் மறவர் என்ற ஒரு சாதியே இல்லையே. சங்க காலத்திற்குப்பி ன் பாலை கள்ளர்கள் தான் உண்டு மறவர்கள் இல்லை. வேலு நாச்சியார் கணவர் பெயர் முத்துவடுக நாதாத்தேவர். இவர் பெயரிலேயே இவரின் சாதியான வடுகர் என்பது உள்ளது. இன்றும் நிறைய "வடுகப்பட்டி" கள் இதற்க்குச் சான்று.தேவர் என்பது பட்டம். அது பிற்கால பாண்டியர்களும் சோழர்களும்(மள்ள ர்கள்) கூட சூடிக்கொண்டனர்.வடுகர்களின் அடியாட்கள் தான் கள்ளர்-மறவர்கள்.
Quote
 
 
-20 #103 சிங்கப்புலி 2011-12-25 11:49
[ஃஉஒடெ நமெ="திரவியம்"]உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றன் . சசிகலாவே இல்லை ஜெயவ என்னவேனாலும் கமெண்ட் பண்ணுங்க , திட்டுங்க .
ஏன்டா எல்லாரும் சாதிய சொல்றிங்க , ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணையும் மக்களையும் கட்டி காப்பாற்றியவர்க ள் என் சமுகத்தினரே ,
நாட்டின் விடுதலைக்காக முதலில் ஆங்கிலையறை எதிர்த்தவர்கள் என் வீர மறவர்கள் . எதிரிகளை விரட்ட தம் என்னுயிரை அற்பணித்தவர்கள் எங்கள் வீர மறவர்கள் ,
அணைத்து சாதியினருக்கும் தனது நிலங்களை எல்லாம் பிரித்து கொடுத்த வள்ளல் பிறந்த சமுகம் .வீர மங்கை வேலு நாச்சியாரை அர்பணித்த சமுகம் எங்கள் சமுகம் .
நாட்டிற்காக போர்கலாத்திலே வீர மரணம் அடைந்தவர்கள் . அவர்கள் வழிவந்த எங்களை ஏனடா அவமரியதாக பேசுகிறிர்கல் .இன்றும் என்றும் என் சமுகம் எவனுக்கும் அஞ்சாது , அடிபணியாது . பிற சாதியினரை பேணிகாப்பதில் எம் சமூகத்தினருக்கு ஈடு இணை இல்லையட .[/ஃஉஒடெ]

எங்கள நாங்களே பாத்துக்குவோம்; ஸ்பீக்கர ஒஃப்ஃப் பண்ணு.
Quote
 
 
-15 #102 Thiraviyam 2011-12-24 15:22
உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றன் . சசிகலாவே இல்லை ஜெயவ என்னவேனாலும் கமெண்ட் பண்ணுங்க , திட்டுங்க .
ஏன்டா எல்லாரும் சாதிய சொல்றிங்க , ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணையும் மக்களையும் கட்டி காப்பாற்றியவர்க ள் என் சமுகத்தினரே ,
நாட்டின் விடுதலைக்காக முதலில் ஆங்கிலையறை எதிர்த்தவர்கள் என் வீர மறவர்கள் . எதிரிகளை விரட்ட தம் என்னுயிரை அற்பணித்தவர்கள் எங்கள் வீர மறவர்கள் ,
அணைத்து சாதியினருக்கும் தனது நிலங்களை எல்லாம் பிரித்து கொடுத்த வள்ளல் பிறந்த சமுகம் .வீர மங்கை வேலு நாச்சியாரை அர்பணித்த சமுகம் எங்கள் சமுகம் .
நாட்டிற்காக போர்கலாத்திலே வீர மரணம் அடைந்தவர்கள் . அவர்கள் வழிவந்த எங்களை ஏனடா அவமரியதாக பேசுகிறிர்கல் .இன்றும் என்றும் என் சமுகம் எவனுக்கும் அஞ்சாது , அடிபணியாது . பிற சாதியினரை பேணிகாப்பதில் எம் சமூகத்தினருக்கு ஈடு இணை இல்லையட .
Quote
 
 
+2 #101 soundar 2011-12-23 18:59
let us hope Jayalalitha will not change her mind and allow sasikala and her gang in to poes garden for the betterment of the tamilnadu
Quote
 
 
+5 #100 Vijay123 2011-12-23 14:42
அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது. வாயில விரல வச்சா கூட கடிக்க தெரியாது. அவங்க ஆட்சியில செய்த தப்பு எல்லாம் சசிகலா செஞ்சது. நல்லது எல்லாம் அம்மா செஞ்சது. நல்லா இருக்கு உங்க வாதம்.
Quote
 
 
+1 #99 JK ரசிகன் 2011-12-23 09:18
தமிழன் வெளியில் தன்னை அடையாளம் காட்டிகொள்ள மாட்டான் , யாரவது உதவி என்று வந்தால் செய்ய மாட்டான் ஏன் தமிழில் கூட பேசமாட்டான், தப்பித்தவறி உதவி செய்துவிட்டால் அதுவும் தன கூட பிறந்த அண்ணன் தம்பியாக இருந்தாலும் சரி, பட்டி தொட்டி எல்லாம் விளம்பரப்படுத்த ி விடுவான்....சூப்பர் பாஸ் அப்புறம் இன்னொன்னை விட்டுடீங்களே தனக்கு உதவி செஞ்சவனை உயிருள்ளவரை விடமாட்டான் எப்படியாவது போட்டுக்கொடுத்த ு காலி பண்ணிடுவான்.
Quote
 
 
+4 #98 Muthukumar_Trichy 2011-12-23 04:15
சசியின் சமுதாயத்தை சேர்ந்தவர்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படாதவர ையில் மற்றவர்களுக்கு அவர்களைப்பற்றி சரியாகத்தெரியாத ு. தனக்கு வந்தால்தான் தெரியும் வயிற்று வலியின் கொடுமை. இவ்வளவு அநியாயமும் பண்ணிட்டு நல்லாத்தான் இருக்குறானுங்க. இவிங்களை தண்டிக்க இனி எந்த காமராசரும் கக்கனும் வரப்போரதுல்ல. வள்ளுவரே சொல்லிட்டாரு அவ்விய நெஞ்சத்தான் நல்லாத்தான் இருக்குறானுங்க.
Quote
 
 
+5 #97 Kadarkkaraivaasi 2011-12-22 19:27
Quoting வால்டர் வணங்காமுடி:
[ஃஉஒடெ நமெ="றாஜ்கூமாற்பாண்ட ீஆண்"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]//பாரதிராஜாவும், அமிர்தாஞ்சன் நிறுவன உரிமையாளர் பந்துலுவின் குடும்பமும் சசிகலாவால் மிரட்டப் பட்டனர்//

இது என்னைய்யா கூத்து? அடுத்த சாதியிடம் இருந்து திருடி தின்பவர்களை பார்த்திருக்கிற ோம்... இது என்ன சொந்த சாதிக்குள்ளையே திருடித் தின்னும் பழக்கம்.... அது சரி... திருடுவது என்று வந்தபின் சொந்த
சாதியாவது...புடலங்காயாவது?[/ஃஉஒடெ]


அங்க தான் நீங்க தப்பு பண்ணுறீங்க அவர் பாரதிராஜா ..மறவர். இவர்கள் எல்லாம் கள்ளர் கூட்டத்தை சேர்ந்தவர்கள். .[/ஃஉஒடெ]


என்னையா திரும்ப திரும்ப கொழப்புறீங்க? கள்ளர்,மறவர்,அக முடையார் -- இந்த மூணு பேரும் சேர்ந்து தானே 'முக்குலம்'. அப்படி பார்த்தா நான் சொன்னது சரி தானே? குருபூஜைக்கு மட்டும் ஒன்னா இருந்துட்டு, அப்புறம் அந்த மூணு பேருக்குள்ளையே ஏமாத்திக்கிவீங் களோ? .... இது ஒரு கூத்து.. இன்னொரு கூத்து... தஞசை கள்ளர்கள்,கள்ளர ்களே கிடையாதுன்னு ஒரு குரூப் சொல்லுது... அவஙக 'காலபார்'கள் என்றும் அவர்களின் மூலம் 'வன்னியன்' என்றும் சொல்கிறார்கள்...!!! ஒரு எழவும் புரியல... என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது.....


Welcome to TamilNadu!!!
Quote
 
 
0 #96 அனானி 2011-12-22 19:21
நடராஜனிடம் அடி வாங்கிய யதுகுல திலகன் இப்போது எங்கே, எந்தப் பதவியில் உள்ளார்?
Quote
 
 
+10 #95 saran trichy 2011-12-22 17:12
சசிகலா கும்பல் அடித்த கொள்ளைக்கு அளவே இல்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தரத்துக்கு ஏற்ப
ரூபாய் 5 (ஐந்து) கோடி முதல் 2 இரண்டு கோடி வரை என
மொத்தம் முன்நூறு கோடி முதல் நாநூற்று ஐம்பது கோடி வரை வசூலிதுள்ளனர்.
இந்த தொகையை திருச்சியை சேர்ந்த பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு நிர்வாகிதான்
வசூலித்து கொடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சசிகலா கும்பல் கட்சிகாரர்கள், தனியார் கல்லூரி அதிபர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் கொள்ளை அடித்த சேரத்த பணத்தையும் மீட்க வேண்டும்.
Quote
 
 
0 #94 raghava raj 2011-12-22 16:50
ஜெயலலித,சசிகலா குட்டன்கலை பிரித்து பார்ப்பது எஅமாலித்தனம்
Quote
 
 
+8 #93 வால்டர் வணங்காமுடி 2011-12-22 13:51
[ஃஉஒடெ நமெ="றாஜ்கூமாற்பாண்ட ீஆண்"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]//பாரதிராஜாவும், அமிர்தாஞ்சன் நிறுவன உரிமையாளர் பந்துலுவின் குடும்பமும் சசிகலாவால் மிரட்டப் பட்டனர்//

இது என்னைய்யா கூத்து? அடுத்த சாதியிடம் இருந்து திருடி தின்பவர்களை பார்த்திருக்கிற ோம்... இது என்ன சொந்த சாதிக்குள்ளையே திருடித் தின்னும் பழக்கம்.... அது சரி... திருடுவது என்று வந்தபின் சொந்த
சாதியாவது...புடலங்காயாவது?[/ஃஉஒடெ]


அங்க தான் நீங்க தப்பு பண்ணுறீங்க அவர் பாரதிராஜா ..மறவர். இவர்கள் எல்லாம் கள்ளர் கூட்டத்தை சேர்ந்தவர்கள். .[/ஃஉஒடெ]


என்னையா திரும்ப திரும்ப கொழப்புறீங்க? கள்ளர்,மறவர்,அக முடையார் -- இந்த மூணு பேரும் சேர்ந்து தானே 'முக்குலம்'. அப்படி பார்த்தா நான் சொன்னது சரி தானே? குருபூஜைக்கு மட்டும் ஒன்னா இருந்துட்டு, அப்புறம் அந்த மூணு பேருக்குள்ளையே ஏமாத்திக்கிவீங் களோ? .... இது ஒரு கூத்து.. இன்னொரு கூத்து... தஞசை கள்ளர்கள்,கள்ளர ்களே கிடையாதுன்னு ஒரு குரூப் சொல்லுது... அவஙக 'காலபார்'கள் என்றும் அவர்களின் மூலம் 'வன்னியன்' என்றும் சொல்கிறார்கள்...!!! ஒரு எழவும் புரியல... என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது.....
Quote
 
 
+6 #92 வால்டர் வணங்காமுடி 2011-12-22 13:45
[ஃஉஒடெ நமெ="சரன் ட்ரிச்ய்"]தமிழகத்தின் 2-வது பெரிய திருட்டு குடும்பத்தை (கும்பலை ) யும் ஒழித்துக்கட்டிய ஜெயலலிதாவுக்கு நன்றி.

சின்ன திருத்தம், சுதாகரன் மணந்தது சிவாஜி மகளை அல்ல அவரது பேத்தியை.[/ஃஉஒடெ]



எப்படியோ... ஒரு கள்ளர், இன்னொரு கள்ளரை தானே மணந்துள்ளார்.
Quote
 
 
+3 #91 ஏமாளி தமிழன் 2011-12-22 13:39
ஜெயா சசிகலா கும்பல் என்பது ஜெயாவின் தலைமையில் இயங்கக்கூடிய ஒரு பாசிச கும்பல்தான். ஒட்டு மொத்தமாக இந்த கும்பலை தூக்கி ஏறிவதுதான் நமது கடமையாக இருக்க வேண்டுமே அன்றி நல்ல பாம்புகளுக்கிடை யே கெட்ட பாம்பு, ‘நல்ல பாம்பு’ என்று தேடுவது அறிவீனம். அப்படி தேடச்சொல்லி தமது நலனை நியாயப்படுத்தும ் பார்ப்பன ஊடகங்களை பலரும் புரிந்து கொள்ளவில்லை..////நன்றி வினவு....
Quote
 
 
-4 #90 TamilMaravan 2011-12-22 13:32
[ஃஉஒடெ நமெ="சொம"]இவனுஙா " கள்ளர் " சாதிய சேர்தவன்க... சாதி வெரி பிடித்த மிருஙகல்...[/ஃஉஒடெ]


டேய் " சோமா " சொம்பு சாதியை இழுக்காதடா...
Quote
 
 
+1 #89 E.Arunmozhidevan 2011-12-22 13:28
//ஜெயலலிதாவுக்கு பதிலாக வேறு யாரை முதல்வராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது, மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் மற்றும் லால்குடி தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் எமெலே (பெயர் நினைவில்லை) ஆகிய இருவர் பெயர் ஜெயலலிதாவால் இறுதி செய்யப் பட்டது.//

2001 - 2006 வரை லால்குடி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் எஸ்.எம்.பாலன். நானும் லால்குடி தொகுதியைச் சேர்ந்தவன்
Quote
 
 
+9 #88 ஆர்.தியாகு 2011-12-22 12:26
நண்பர் "தமிழ்" சொன்ன கருத்து...

"சசிகலா மோசமானவர்... மோசடியானவர் என்பதாகவே இருக்கட்டும்.... 25 ஆண்டுகள் அந்த மோசடிக்காரருடன் சேர்ந்திருந்ததா ல், சசிகலாவின் மோசடிகள் அனைத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவும் பொறுப்பாளர்தானே ? என்னமோ ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி போலவும், சசிகலா மற்றும் குடும்பத்தினரால ்தான் அவர் முழுமையாக மோசடி செய்யப்பட்டதாகவ ும் கூறுவது எத்தனை அபத்தம். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே ஒன்றுமே தெரியாதா?... சசிகலா தவறானவர் என்பது 25 வருடங்கள் கழித்துதானா முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்தது?. அப்படியெனில் 1991-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இருவரும் இணைந்தே செய்த தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பது? சொத்துக் குவிப்பு வழக்கு என்பது சசிகலா குடும்பத்தினர் மீது மட்டுமில்லையே... அதில் பிரதான குற்றவாளியே முதல்வர் ஜெயலலிதாதானே!."
Quote
 
 
+1 #87 JK 2011-12-22 10:04
ஐந்தாவது முறையாக ஆட்சி பொறுப்பிற்கு யானை பலத்துடன் வந்தவர்க்கு சரி எது தவறு எது என்று தெரியாதா? என்னமோ இவர்களுக்கு தான் மூளை (சிரிப்பு) உள்ளது போல் பட்டாசாம் இனிப்பாம், ஆக ஓசியில் பொழுது போக்கி, தின்பதற்கும், குடிபதற்கும், காசு பார்பதற்கும் ஏதாவது ஒரு காரணம் வேண்டும் இவர்களுக்கு.
Quote
 
 
+3 #86 JK 2011-12-22 10:03
தமிழக மக்கள் சினிமாவிற்கும், வாய் பேச்சு வீரர்களுக்கும், மதுவுக்கும் அடிமை, புத்தியை அடகுவைத்துவிட்ட ு கூட சினிமா பார்க்க துணிவார்கள் அல்லது வாய் பேச்சு வீரர்களின் வாயை பார்த்துகொண்டு நிற்பார்கள், முழு முதல் குறிக்கோள் நோகாமல் நோன்பு கும்பிடவேண்டும் , ரூபாய்க்கு மூணு படி அரிசி முதல் விலையில்லா சோறு வரை, இதனால் கைபுள்ளை கணக்காக மூளை இல்லாதவர்கள் ஆகிவிட்டனர், இந்த சசி நாடகம் எல்லாம் பெங்களூர் வழக்கை இழுத்து அடிக்கத்தான் கைபுள்ளைகளா? இடித்து சொன்னால் தமிழன் திராவிடன் என்று கொலை வெறி, இவர்கள் அஸ்திவாராம் போட்டு வீடு கட்டி பால் காய்ச்சி குடித்தனம் போக எவ்வளவு மெனகிடனும், அதுக்கு பதிலா யாரோ அஸ்திவாரம் தோண்டி வீடு கட்டின இடத்தில் கப்புன்னு போய் செட்டிலில் ஆகிடனும் என்கிற காமெடி இவர்களுக்க்காகவ ே எழுதப்பட்டது, இலவசம் என்றால் எதற்கும் ரெடி, ஏற்கனவே இணைப்புகள் இருந்தாலும் பரவாயில்லை, கொள்ளை அடித்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்தது கட்சியின் வருங்காலமாம், வாழ்த்து கின்றர்ர்கலாம், வணங்குகின்றார்க லாம், வழி நடத்தி செல்லவேண்டுமாம் , ஒரு வேளை நிரபராதி என்று தீர்ப்பு வந்தால் என்னவெல்லாம் செய்வார்களோ? மல்லு எந்தவூர் சென்றாலும் தன ஊர்காரனை (நாட்டுக்காரன் அப்படிதான் விளிப்பார்கள்) பார்த்தால் எவிடே நாட்ல என்று ஆரம்பித்து அந்தஸ்து பார்க்காமல், ஜாதி மதம் வித்தியாசம் பார்க்காமல், மலையாளத்தில் தான் பேசிகொள்வார்கள் , அதில் முதலில் பிரதானம் பணி என்கிற ஜோலி, கேட்பவர்களிடம் ஒரு வெட்கமோ அல்லது அதை செய்து கொடுபவரிடம் ஒரு கர்வமோ பார்க்க முடியாது, பரஸ்பரம் மொபைல் எங்களை பகிர்ந்து கொள்ளவர், கூலி வேலை செய்பவராக இருந்தாலும் சரி பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி, ஆனால் தமிழன் வெளியில் தன்னை அடையாளம் காட்டிகொள்ளமட்ட ான், அப்படியே அவனிடம் யாரவது உதவி என்று வந்தால் செய்ய மாட்டான் ஏன் தமிழில் கூட பேசமாட்டான், தப்பித்தவறி உதவி செய்துவிட்டால் அதுவும் தன கூட பிறந்த அண்ணன் தம்பியாக இருந்தாலும் சரி, பட்டி தொட்டி எல்லாம் விளம்பரபடுதிவிட ுவான், உதவி பெற்றவன் நாண்டுகொண்டு சாகிரமாதிரி, இதுதான் தமிழன்ன்களின் சென்றவிடமெல்லாம ் சிறப்பு, மானமா சோறா, சோறுதான் இந்த குடி மக்களுக்கு வெட்டி பேச்சு, ஜி பூம் பா மாதிரி சோறு, காசு, பிரியாணி அப்புறம் குவாட்டர் இருபத்திநாலு மணி நேரமும் வேண்டும் இலவசமாக.
Quote
 
 
0 #85 meharaj 2011-12-22 05:49
Savukku, you must know the latest step. Now the Nattar group wants to take over the position of Mannargudi group. They are taking all the steps to bring Mr.Deepak to CM chair who is nothing but the son of CM's brother. Having come to know about the intention of Sasi she was thrown out. Now the Nattar group who wants to dominate the Kallar group wants the head which will be liked by CM. Is there any truth in this?
Quote
 
 
+1 #84 Muthukumar, Trichy 2011-12-22 05:31
“அந்த மன்னார்குடி கூட்டமெல்லாம் முன்னேறும் அந்த மன்னார்குடி கூட்டமெல்லாம் முன்னேறும்“ (வாளை மீனுக்கும் வெலாங்கு மீனுக்கும் பாடல் ராகத்தில் பாடவும்)
Quote
 
 
0 #83 Muthukumar, Trichy 2011-12-22 05:16
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என வள்ளுவன் சொன்னது “ஆராயப்படும்” என்ற பொருளில் என்ற பரிமேழலகர் உரை வள்ளுவரே புலம்புவது போலுள்ளது.( ஓவியமான உரையை நான் படிக்கவில்லை). சசி, கொலைஞர் கும்பலின் ஆக்கமும் செங்கொடி முத்துக்குமார்க ளின் கேடும் நினைக்கப்படுமென ்றால் மனது வலிக்கிறது.
Quote
 
 
0 #82 vilambi 2011-12-21 23:18
ஜெ வுக்கு ஆர்செனிக் என்ற slow poison கொடுக்கக் கூடிய அளவுக்கு மோசமான கும்பல் அது...எனவே அவரது உடல் நலம் முக்கியம்...ஓஷோவுக்கு இதுதான் நியூ ஓர்லியான் மாகாணத்தில் நடந்தது...எனவே அவர் ஒரு மருத்துவரை சந்திப்பது நல்லது
Quote
 
 
-1 #81 vilambi 2011-12-21 23:18
ஜெ வுக்கு ஆர்செனிக் என்ற slow poison கொடுக்கக் கூடிய அளவுக்கு மோசமான கும்பல் அது...எனவே அவரது உடல் நலம் முக்கியம்...ஓஷோவுக்கு இதுதான் நியூ ஓர்லியான் மாகாணத்தில் நடந்தது...எனவே அவர் ஒரு மருத்துவரை சந்திப்பது நல்லது
Quote
 
 
0 #80 கொலுசு 2011-12-21 22:08
அராஜாகம் நெடு நால் நீடிக்க்காது



இனி ஜெயலலிதா அம்மா தான் நிரந்தர முதல்வர்
Quote
 
 
+14 #79 anand_s 2011-12-21 22:01
சமுதாய சீர்க்கேட்டிற்க ்குப் போறுப்பேற்காமல் பார்பனரையும் அதை விட்டால் தேவரையும் கைகாட்டும் ஒரு கோழைச் சமுதாயமாகவே இன்றைய தமிழர்கள் திகழ்கிறோம்.

எல்லாத்துக்கும் அவனே காரணம் என்றால் மொத்த தமிழர்களும் விரல் சூப்பிக்கொண்டு இருந்தார்களா / இன்னும் சூப்பிக்கொண்டு இருக்கிறீர்களா?

யாரு ஓட்டு போட்டது ?
போலி 'பகுத்தறிவாளர்'களை யார் நம்பச்சொன்னது ?
தீர்க்க தரிசனமே இல்லாமல் தலைவர்களை யார் தேர்ந்து எடுத்தது ? (காமராஜரைத் தோற்கடித்தவர்கள ் அல்லவா நாம்).

ஒரு சில ஜாதிகள் மேல் பழி போட்டு விட்டு அவர் அவர் ஜாதிவேரியர்களாக வே உள்ளோம்.

குசுத்தொல்லை, பேதி முதல் கொசுத்தொல்லை வரை எல்லாவற்றுக்கும ் யாரையாவது பழி போடுவதே பெரும்பாலான 'படித்த?!?!?!' தமிழர்களின் (வே)வாடிக்கையாக ப் போய்விட்டது.

ஒரு தீர்கதரிசி சொன்னான்: 'இந்நாட்டு மக்கள் நாசமாகப் போகட்டும்'
Quote
 
 
-2 #78 anniyan 2011-12-21 19:54
// அப்போது எடுக்கப் பட்ட தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளால் 2006 தேர்தலில் *மண்ணைக் கவ்வியது*.//

Firstly, ADMK lost on close margin; not flooring as mentioned.

That loss is because the media were in the hands of DMK, Jeyalalitha's acts not listening to lower level officials and Christian mafia's control after she declared forced conversion is illegal.
Quote
 
 
+1 #77 ka.chinnathambi - ma 2011-12-21 19:35
நாடகமே உலகம். மூன்றாவது முறையாக அரங்கேற்றம் காணும் இந்த நாடகத்துக்கு நாமெல்லாம் ரசிகர்கள். அப்பத்தானே பஸ்சு கட்டணம் பால் கட்டணம் உயர்வைஎல்லாம் நாம கண்டுக மாட்டோம். ம்க்ர், ஜய & விஜய்காந்த் இவர்கள் சினிமாவை காட்டி நம்மை சீரழித்தார்கள். நாமும் தெரிந்தே சீரழிந்தோம். வாழ்க இந்த இறை தூதர்கள் தொண்டு.
Quote
 
 
+1 #76 niaz 2011-12-21 19:04
pls find out about the evil desising of CHO gang nad their criminal deeds
http://www.vinavu.com/2011/12/21/modis-gujarat/
Quote
 
 
-4 #75 joggo 2011-12-21 17:36
ஒரு கட்சியை நடத்துவது என்பது இங்கே பார்பனர் நினைப்பது போல இரண்டு பத்திரிக்கைகள் துணை இருந்தால் போதாது ..மகாராணி போல மாடியில் இருந்து கைகாட்டினால் கட்சி வளராது...திமுக வை போல ஒவ்வொரு மாவட்ட செயலாளர் , நகர செயலாளர் எல்லோரையும் அடிகடி சந்திக்க வேண்டும், ஸ்டாலின் , அழகிரி , திமுக அமைச்சர்கள் போல கட்சியினரோடு அடிகடி சந்திக்கவேண்டும ்...வெறுமனே கொடநாட்டில் உட்கார்ந்து இருந்தால் இந்நேரம் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது ...திமுக ஆட்களுக்கு நிகராக அதிமுக வை இத்தனை காலம் கொண்டு போனது சசி உறவினர்கள்..எம்ஜியார் இறந்த பிறகு இவர்கள் ஜானகி யோடு நின்றிதால் கதையே வேறு ...சேவல் சின்னம் எல்லாம் தெற்க்கே ஜெயித்ததின் காரணம் இவர்கள்...பாப்பன் எல்லாம் இறங்கி வேலை செய்யமாட்டான்....ஆட்சியில் இல்லாத போதும், முதல் முறை ஆண்டு அடிவாங்கிய ஒதுங்கி இருந்த போதும் ஒரு பாப்பானும் ஜேஜே வை சொந்தம் கொண்டாடவில்லை ....ஆட்சியில் இல்லாத பொது கவலைபடாத அதிகார மையம் பற்றி ஆட்சிக்கு வந்த வுடன் கவாலி படும் பார்பனர்கள்...ஜெயலலிதா தோற்றுவிட்டால் எங்கே ஓடி போவார்கள் என்று தெரியாது...சவுக்கு நடுநிலையோடு எழுதமால் தன சாதி கோவத்தை மட்டும் காட்டுகிறது ...நடுநிலையாக எழுது ..இத்தனை நாள் கட்சி நடத்த பணம் எங்கே இருந்து வந்தது ...அம்மா கை கொண்டு வாங்கிய பணமா ? இருவரும் கூட்டு களவாணிகள் என்று எழுது....நீங நல்ல பிறப்பாய் இருந்தால்
Quote
 
 
-1 #74 RVR 2011-12-21 17:07
சனி பெயர்ச்சி பலன்கள் மற்ற பத்திரிக்கைகள் வெளியிடுவதுபோல்
திஹார் ஜெயிலிலிருந்து "கனி" பெயர்ச்சி மற்றும் போயேஸ் கார்டனிலிருந்து "சசி" பெயர்ச்சி பலன்களை சவுக்கு வெளியிடுமா?
Quote
 
 
0 #73 sebastian 2011-12-21 16:40
Jayalilatha then approached her well wishers(SO.RAMASAMY) and help came in the form of a female doctor sent by "NARENDRA MODI CM of GUJARAT" to take care of Jayalalitha.

https://p.twimg.com/AhH__UmCIAA7qJa.jpg
Quote
 
 
+2 #72 sebastian 2011-12-21 16:13
Jayalalitha, a very shrewd and intelligent person developed suspicion whether she could have been drugged by Sasikala...as Sasikala was the only person who is taking care of her in terms of her medical treatment, etc. On the other hand Jayalilatha's suspicion grew stronger by the day as whenever she questioned Sasikala over an issue...the blame is squarely shifted on her saying she changed the decision last night. Jayalilatha then approached her well wishers and help came in the form of a female doctor sent by Narendra Modi to take care of Jayalalitha. The doctor has reportedly conducted thorough checks and following several tests it was found that Jayalalitha was administered sedatives through fruits which she takes daily. The doctor also found out that the same sedatives have been administered to maids who were brought in from Mannargudi to help in the house hold chores of Poes Garden.
When Jayalalitha was told about the results, her anger hit the roof. Immediately the entire staff in Poes Garden including the kitchen staff were replaced.--- http://2.bp.blogspot.com/-7tNUpE9V-gU/TvGr9py-EBI/AAAAAAAABDU/dzUA7mMVf8M/s640/tamil1.jpg
--------------------------------

Whispers doing the rounds is that Amma has decided to revamp the entire party and get closer to partymen. A huge cabinet re-shuffle is imminent say sources, as the entire cabinet appears to be filled with agents of the MM cartel. The heads which are likely to roll are O.Pannerselvam, Natham R.Viswanathan, Agri.SS.Krishnamoorthy, Sellur K.Raju, T.Pachamal, R.Kamaraj, V.Moorthy, MC.Sampath, KV.Ramalingam, SP.Velumani, Senthil balaji, Dr.Vijay and R.Thangamani.--- http://2.bp.blogspot.com/-X63kzzS5w14/TvGtEHo5ySI/AAAAAAAABD0/vZNXq6AWvfQ/s640/DSC_6775.JPG
Quote
 
 
0 #71 boomi 2011-12-21 16:07
இனியாவது பஸ் கட்டணம் குரையுமா? சூப்பர் டீலக்ஸ் பஸ்ஸில் அல்ட்ரா டீலக்ஸ் கட்டணம் வாங்குவதை விடுவார்களா? சென்னையில் பஸ்/தெருவில் குப்பை அள்ளுவார்களா? முல்லைப்பெரியாற ு பிரச்சினையில் கேரளாவிற்கு தக்க பதிலடி கொடுப்பார்களா? எங்கவலை எனக்கு.
அம்மாவிடம் நிறைய எதிர்பார்க்கிறோ ம்
Quote
 
 
0 #70 sebastian 2011-12-21 15:43
A comment in dbsjayraj.com : shankar says:
December 20, 2011 at 9:52 pm :

There is always a first time in everything.There is a limit on jaya’s patience too.You are right about the court case having an impact on the decision,but i feel that jaya split was to kill 2 birds with one stone,namely distance herself from sasikala on corruption charges as well as to distance herself from her politically as well.

This time the split will be permanent unless she feels she needs sasikala politically,whi ch is at the moment not necessarry.Everything depends on how much influnce sasikala and her relatives wield in the mukkulathor community.The mukkulathor i believe number about 15 million in tamilnadu, which is substantial.Jaya must be feeling that if she provides good governance ,it is not necessary to overely on caste based politics.If that is her way of thinking then she is taking caste ridden tamilnadu in the correct direction,and it can end up as the second best state,next to "GUJARAT" one day,because of its hardworking and diciplined people and good location to "PORTS" and "SHIPPING" routes.
Quote
 
 
+1 #69 puthiaanniyan 2011-12-21 15:00
எது எப்படியிருந்தால ும் ஜெயலலிதா, தமிழக மக்களிடம், இத்தகைய கொள்ளைக் கூட்டத்திடம் தொடர்பு வைத்துக்கொண்டிர ுந்ததற்கு, மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இனிமேல் எப்படி இதுபோல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வார், என்பதையும் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்,,,,,,, ,,,,,,,,,
Quote
 
 
0 #68 puthiaanniyan 2011-12-21 14:55

[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"]போயஸ் கார்டன் நிர்வாகியாக பத்திரிகையாளர் சோ மகன் நியமிக்கப்பட்டு ள்ளார்.
முன்னதாக போயஸ் கார்டன் நிர்வாகியாக சசிகலா இருந்து வந்தார். அவரையும், அவரது குடும்பததினரையு ம் நேற்று அதிமுகவிலிருந்த ு அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
இதையடுத்து போயஸ் கார்டன் தலைமை நிர்வாகியாக சோவின் மகன் கார்த்திக் நியமிக்கப்பட்டு ள்ளார்.
மேலும் முன்பு போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவால் நீக்கப்பட்டு சிலரை மீண்டும் பணியில் நியமித்துள்ளதாக வும் கூறப்படுகிறது.

-
நன்றி தினமணி (சவுக்கு சார்பாக).[/ஃஉஒடெ]

சோவுக்கு கார்த்திக் என்றெல்லாம் மகன் கிடையாது,,,,,,
Quote
 
 
+12 #67 கிராமத்தான் 2011-12-21 12:53
ஆனால், ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து ஜெயல்லிதாவைக் கடிக்கும் போது தான் சோ, மோடி, சு. சாமி எல்லாம் ஆஜாராகி இருக்கிறார்கள். ஏனெனில் இவர்களுக்கும் இதுநாள் வரை எந்தவித பாதிப்பும் இல்லை; ஜெ போய்விட்டால் தமது ராஜ்யத்திற்கே ஆபத்து என்று உணர்ந்து, இப்போது தான் ‘விழித்து’ சசி கும்பலை விலக்கி வைத்துள்ளார்கள் . இது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் வேண்டினாலும், தற்காலிக ஏற்பாடா என்று இன்னும் பலருக்கு ஐயம் உள்ளது.
உண்மையாக மக்களைப் பற்றி, தான் அடி வாங்கிய பிறகு உணர்ந்தவராக இருப்பின், மாவட்டம் தோறும் ‘சசி கும்பல் மீட்பு நீதிமன்றம்’ அமைத்து, பாதிக்கப்பட்டவர ்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்து, கொள்ளை போனதை முறையிட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தாமதமில்லாமல் ரௌடிகளை அழித்திட வேண்டும்; கட்ட பஞ்சாயத்து கும்பலை நசுக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; உடமைகளை திரும்பக் கிடைத்திட சட்டப்பூர்வமாக செய்திடல் வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தில் மக்கள் சுதந்திரமாக இயங்க வழி செய்திடல் வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், ஜெயலலிதா புண்ணியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் மக்களின் சாபம், தூபம் சும்மா விடாது.
Quote
 
 
+7 #66 கிராமத்தான் 2011-12-21 12:53
ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி புரிந்த இத்தனை ஆண்டுகளும் சசி மாபியா கும்பல் மக்களை கொள்ளை அடித்தது, மிரட்டி, ஏமாற்றி அநியாயமாக அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரித்தது, கட்ட பஞ்சாயத்து மூலம் கபளீகரம் செய்தது, அரசாங்க இயந்திரத்தை தவறான வழிகளில் இயக்கி, எந்தவித முன்னேற்ற பணிகள் எதுவுமே நடைபெறாமல் கஜானவை மட்டும் காலி செய்தது, ரௌடி ராஜ்யம் செய்தது, நீதிக்காக போரடுபவர்களை மிரட்டுவது, மற்ற சாதியில் உள்ள ரௌடிகளை மட்டும் போட்டுத் தள்ளுவது (மொனொபொல்ய் இன் றொந்டிச்ம்), ரேட் நிர்ணயம் செய்து பட்டியலிட்டு அரசாங்க ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் மாறுதலுக்கு வசூல் செய்வது, மணல் கொள்ளை, காண்டிராக்ட் கொள்ளை, நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த தொழிலாக இருந்தாலும் மிரட்டியே அடைந்து கொள்வது, சாதிக்காரனுக்கு மட்டுமே சகல உரிமைகள் என ஆட்டம் போட்டது, ஏரியாவுக்கு அங்கீகரிக்கப்பட ்ட சொந்தக்காரன் மூலம் மாமுல் வசூல் செய்வது – மந்திரி, உயர் அதிகாரிகள் மாதம் தோறும் கப்பம் கட்ட சாதிக்கார ப்.ஆ மூலம் கறாராக வசூல் செய்வது, ஒத்துவராதவர்களு க்கு கல்தா கொடுப்பது, ஊடகங்களில் இவர்களின் அக்கிரமங்களைப் பற்றிய எந்தவிதமான செய்திகளும் வராதபடி சாதிக்காரர்களில ் ஆளுமையில் வைத்திருப்பது - இன்னும் இது போன்ற காரியங்களால் தமிழக மக்கள் கடும் தொல்லைகளுக்கும் , பாதிப்பிற்கும் ஆளாகி இருந்ததை ஜெயலலிதா தன் சுயநலத்தால் ‘எனது தோழி’ என்று மறைத்து, பாதுகாத்து துரோகம் செய்து வந்தார்.
Quote
 
 
+15 #65 http://koothadivedda 2011-12-21 12:19
ஒருகாலத்தில் சசிகலாவின் கண்ணில் தூசு விழுந்தால்க்கூட காற்றையே குற்றம்கண்டு எதிர் நடவடிக்கைக்கு உத்தரவிட்டவர் ஜெயலலிதா. 30 வருடங்களின் பின் இன்று சசியை தனிப்பட்ட ஏதோ காரணத்தினால் விரட்டியிருக்கி றார். (அதை ஆராயவேண்டிய தேவையுமில்லை). ஜே எப்போதும் தன்னை வானத்திலிருந்து குதித்து வந்த தாரகையாக நினைத்து மக்களை மற்றும் அதிகாரிகளை நேரடியாக சந்திக்க விரும்பவில்லை. தனது பிரதிநிதியல்ல, நிகர் பிரதியாக சசியை உயிரினும் மேலான சோதரியாக வெளிப்படுத்தி மக்களையும் அதிகாரிகளையும் சசியை நோக்கி தள்ளியது ஜே தான். முதலில் மக்களையும் நாட்டையும் குளப்பாமல் ஜே தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியுள்ளது. http://koothadiveddai.blogspot.com/
Quote
 
 
+1 #64 Majini 2011-12-21 10:28
[ஃஉஒடெ நமெ="வென்கெயன்பு"]ட்ம்க் - மரன் க்ரொஉப்ச், ஆட்ம்க் - மன்னார்குடி க்ரொஉப்ட், பாவம் டமில் ணடு மாக்காள்[/ஃஉஒடெ]
ஆம் இருவரும் வீடியோ துறை சம்பந்த பட்டவர்கள்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 46 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1841
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week59418
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month281678
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13198045