முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
என்ன ஒரு ஆண்டு !!!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011 15:04

2011 தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனை ஆண்டாகவே அமைந்தது.   2010 முடியும் போது, புதிய ஆண்டில் திமுக ஆட்சியிலிருந்து விடிவு காலம் பிறக்குமா  என்ற எதிர்ப்பார்ப்பு மிக மிக அதிகமாக இருந்தது. அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் 2011 பரபரப்புடனேதான் பிறந்தது.

 

தேர்தலுக்கான ஆயத்தங்களில் திமுக இறங்குவதற்கு முன்னரே, 2ஜி ஊழலில் இருந்து எப்படி கனிமொழியை காப்பாற்றுவது என்பதில் மிகத் தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருந்தது.  2010ல் ஆ.ராசா குற்றமற்றவர், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு எவ்வித இழப்பும் இல்லை என்று பிரச்சாரக் கூட்டங்களை நடத்திய திமுக, 2011 பிறந்ததும் எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று அந்த முயற்சிகளில் இறங்கியது.  ஆனால் தவிர்க்கவே முடியாத வகையில் ஜனவரி மாதத்திலேயே கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. அந்த சோதனைகளைப் பற்றி துளியும் கண்டு கொள்ளாமல் 2011 ஆண்டிலும் “சென்னை சங்கமம்” நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியது.  இதை எதிர்த்து தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாக ஜனவரி மாதத்திலேயே சிபிஐ சோதனையில் சிக்கிய ஜெகத் கஸ்பரை வைத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தொடர்ந்த பொது நல வழக்கில் “தமிழ் மையம்” வழங்கும் சென்னை சங்கமம் என்று குறிப்பிடக் கூடாது, தமிழக அரசின் சென்னை சங்கமம் என்று பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 A2

அடி மேல் அடியாக பிப்ரவரி மாதத்தில் நீரா ராடியாவின் டேப்புகள் வெளியாகி திமுக தலைவர் கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழியின் மறுபக்கத்தை வெளிப்படுத்தின.  இது ஒரு புறம் இருக்க, பிப்ரவரி மாதத்திலேயே ஆ.ராசா சிபிஐயால் கைது செய்யப் பட்டார். மார்ச் மாதம் முதல் தேதி அன்றே தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டன.   அதைத் தொடர்ந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது.  கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்தார். திமுக காங்கிரஸ் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முறியும் நிலையை எட்டியது.   63 கேட்கிறார்கள், நான் ஏன் கொடுக்க வேண்டும் என்று வீர வசனம் பேசி, கூட்டணியிலிருந்து விலகப் போகிறேன் என்றார் கருணாநிதி. ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்தர் பல்டி அடித்து காங்கிரசிடம் சரணடைந்தார் கருணாநிதி.

 TMC2

திமுகவில்தான் இப்படி குழப்படிகள் என்று நினைத்தால் அதிமுகவில் அதற்கு மேல் குழப்பங்கள் தென்பட்டன.  ஒரு பக்கம் ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, ஜெயா டிவியில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

 

தேர்தல் அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழக அரசின் பெரும்பான்மையான நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துக் கொண்டது.  மார்ச் இரண்டாவது வாரத்தில் ஜாபர் சேட்டை தேர்தல் ஆணையம் நேரில் அழைத்து, கொல்கத்தாவுக்கு தேர்தல் பார்வையாளராக செல்லவேண்டும் என்று உத்தரவிட்டது. அதை மறுத்து ஜாபர் சேட் விடுப்பில் சென்றார்.  லத்திக்கா சரண் மற்றும் ஜாங்கிட்டையும் அவர்கள் பதவியிலிருந்து மாற்றியது தேர்தல் ஆணையம்.   மேலும் சில அதிகாரிகளை மாற்றி, தமிழகத்தின் பெரும்பாலான நிர்வாகத்தை தன் கையில் எடுத்தது.

 LETIKA

கடந்த காலத் தேர்தல்களைப் போல வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் பெரும் வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த திமுக பெருந்தலைகளின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது தேர்தல் ஆணையம்.  ப்ரவீன் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் வளைத்து வளைத்து பணப்பட்டுவாடாவைத் தடுத்தனர்.    தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை தடுப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப் பட்டவர்கள் சார்பாக வழக்கு தொடுப்பது என்ற போர்வையில் வழக்கு தொடுத்து முடக்குவதற்கு திமுக முனைந்தது.  இந்த வழக்கிலும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் வழக்கு தொடுக்கப் பட்டு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது.  தேர்தல் பிரச்சாரம் சூடுடிபிடிக்கத் தொடங்கியது.

 

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அதிமுகவின் வெற்றியை பறைசாற்றின.   சவுக்கிலும் தொடர்ந்து திமுக ஆட்சி ஏன்  வீழ்த்தப் பட வேண்டும் என்று தொடர் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ஏப்ரல் மாதம் 13 அன்று  தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது.    தேர்தல் முடிவுகளுக்கு ஒரு மாத கால அவகாசம் இருந்தால், அந்த ஒரு மாத காலத்துக்குள் பல்வேறு வதந்திகளும் ஊகங்களும் வெளியாகின.   ஆனால் சவுக்கு தளத்தில் தீர்மானமாக அதிமுக வெற்றி என்றும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதப்பட்டது. தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே திமுக ஆட்சிமுடிய என்று கவுன்ட் டவுன் போடப்பட்டது சவுக்கு தளத்தில்தான்.

 

மே மாதத்தில் அனைவரது எதிர்ப்பார்ப்புக்களையும் கடந்து அதிமுக கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்றது.  திமுக சட்டமன்றத்தில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்தது.  அடி மேல் அடியாக மே 21 அன்று கனிமொழி கைது செய்யப் பட்டார்.  தேர்தல் தோல்விகளால் துவண்டு போயிருந்த கருணாநிதிக்கு இது பெரும் அடியாக அமைந்தது.  புதிய அரசு பதவியேற்றதும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.   இத்தனை ஆண்டுகளாக ஊரை ஏமாற்றி வந்த கேடி சகோதரர்கள் மீது வழக்கு பாய்வதற்கான ஆயத்தங்கள் ஏற்பட்டன.   ஊடகங்களிலும், சவுக்கிலும், கேடி சகோதரர்களின் ஊழல்கள் குறித்த பல்வேறு ஆதாரங்கள் வெளியிடப்பட்டன.

 DSC_3881

புதிய ஆட்சி ஏற்பட்டதும் பல்வேறு மாற்றங்கள் தமிழக நிர்வாகத்தில் நடந்தன.  காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டாலும், திமுக ஆட்சியில் செல்வாக்காக இருந்த சில அதிகாரிகள் மீண்டும் நல்ல பதவிக்கு வந்தனர்.  ஆனால் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் நம்பிக்கை தரும் விதமாகவே இருந்தன.   கடந்த கால ஜெயலலிதா போல இல்லாமல், ஆட்சி நடத்தும் விதத்தில் நிதானம் தெரிந்தது.   ஆனால், சமச்சீர் கல்வியை கைவிடுவதாக ஜெயலலிதா அறிவித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.   இதை மற்ற ஊடகங்களைப் போலவே, சவுக்கும் கண்டித்தது.  ஜெயலலிதாவின் முடிவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் நீதிமன்றம் சென்று, அந்த முடிவு, இறுதியாக உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டது.

 

ஜுலை மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வாக, ஜாபர் சேட் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.  சவுக்கில் பல்வேறு சமயங்களில் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப் பட்ட வீட்டு வசதி வாரிய ஊழலில் ஜாபர் சேட் சிக்கி, அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. அவர் பணி இடைநீக்கம் செய்யப் பட்டார்.

 jaffer_sait_2

ஆகஸ்ட் மாதத்தில் பெரும் அதிர்ச்சியாக மூவரின் கருணை மனு நிராகரிக்கப் பட்ட செய்தி வெளியாகியது.   இந்தியாவெங்கும் இதற்கு எதிரான கருத்துக்கள் கிளம்பினாலும், தமிழகத்தில் பெரும் எழுச்சி காணப்பட்டது. இந்த எழுச்சியை மனதில் கொண்டு, முதலில், மாநில அரசிடம் எந்த அதிகாரமும் இல்லை என்று அறிவித்த ஜெயலலிதா, மறுநாளே சட்டமன்றத்தில் மூவரின் உயிர்காப்பதற்கான தீர்மானத்தை இயற்றினார்.    இதன் நடுவே, திமுக ஆட்சி காலத்தில் அப்பாவி பொதுமக்களின் உடைமைகளையும், சொத்துக்களையும் அபகரித்த திமுக பெரும்புள்ளிகள் வரிசையாக சிறை செல்லத் தொடங்கினர்.  அஞ்சா நெஞ்சன் என்று தன்னை அழைத்துக் கொண்ட அழகிரியின் மதுரை சாம்ராஜ்யம் கலகலத்தது.

 

செப்டம்பர் மாதம் பெரும் சோகத்துடனேயே அமைந்தது.  பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களின் மீது காவல்துறை நடத்திய கொடூரமான தாக்குதலிலும், துப்பாக்கிச் சூட்டிலும் 6 பேர் உயிரிழந்தனர்.   இன்று மன்னார்குடி மாபியாவை விலக்கி வைத்திருந்தாலும், அப்போது மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்தில் இருந்த ஜெயலலிதா, அந்தச் சம்பவத்தையும் துப்பாக்கிச் சூட்டையும் நியாயப் படுத்தி அறிக்கை வெளியிட்டார்.   அந்தச் சம்பவத்தில் உண்மை வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக விசாரணை கமிஷனையும் அறிவித்தார்.  ஆனால் இந்த சம்பவம், தலித் மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.    தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பிலும் பொது நல வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.  இது போல தாக்கல் செய்யப் பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணையின் முடிவில், இந்த ஆண்டு இறுதியில் இந்த வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

 THSHK_PARAMAKUDI_779817g

அக்டோபர் மாதத்தில், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் மிக அதிகமானது.   மே மாதம் புதிய ஆட்சி பதவியேற்றதிலிருந்தே தொடங்கிய இவர்கள் ஆதிக்கம், ஜெயலலிதா பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டால், எப்படியாவது ஆட்சியை கைப்பற்றுவது என்ற அளவுக்கு விரிந்தது. இந்தத் திட்டத்தை அறிந்த ஜெயலலிதா, முதல் கட்ட நடவடிக்கையாக கண்ணாயிரத்தை உளவுத் துறை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். அரசல் புரசலாக, மன்னார்குடி மாபியாவின் வசூல் வேட்டைகள் குறித்த செய்திகளும், ஜெயலலிதாவுக்கு எதிரான சதிச் செயல்கள் குறித்த செய்திகளும் வெளி வந்த வண்ணம் இருந்தன.   நீண்ட நாட்கள் கழித்து, சாவகாசமாக, அனைத்துத் தடயங்களும் அழிக்கப் பட்டு விட்டன என்பதை உறுதி செய்து கொண்ட பின்னால், சிபிஐ கேடி சகோதரர்கள் வீட்டில் அக்டோபர் மாதத்தில் சோதனைகள் நடத்தியது,  இந்த சோதனைகளின் போது, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலேல்லாம் இறங்கி சோதனை செய்தார்கள்.

 

நவம்பர் மாதம் முழுவதுமே அதிரடிதான். முதலில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று அறிவித்த ஜெயலலிதா, மக்கள் நலப் பணியாளர்களை தெருவில் நிறுத்தினார். தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் நூலக மாற்றம் குறித்த அறிவிப்பு வந்த மறு தினமே, அதை எதிர்த்துபொது நல வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.   அந்த வழக்கில் அரசின் முடிவுக்கு தடை விதிக்கப் பட்டது.    இதே போல, பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் மக்கள் நலப் பணியாளர்கள் நீக்க உத்தரவும் தடை செய்யப் பட்டது. அக்டோபர் முதலாகவே தொடர்ந்து நடைபெற்று வந்த கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து, இந்தியாவின் மொத்த கவனமும் கூடங்குளத்தின் மேல் கவிந்தது.  ஆனாலும், அந்தப் பகுதி மக்களின் அச்சத்தையும், எதிர்ப்பையும் மத்திய அரசு துளியும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. நவம்பர் மாதம், கடைசி வாரத்தில் டேம் 999 என்ற திரைப்படம் குறித்து தினமணி வெளியிட்ட செய்தி முதலில் நாடாளுமன்றத்தை உலுக்கியது. அதன் பின்னர் மெல்ல மெல்ல உருவெடுத்த முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஒரு பூதாகரமான பிரச்சினையாக, இரு மாநில மக்களும் எதிரும் புதிருமாக நிற்கும் வகையில் உருவெடுத்தது.   இந்த ஆண்டு முடியும் வரை இந்தப் பிரச்சினை தீர்வதாக இல்லை.

 

டிசம்பர் மாதம் தமிழக மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய மற்றொரு விவகாரம், மன்னார்கடி மாபியாவின் வீழ்ச்சி.   எத்தனையோ முறைகேடுகளில் சம்பந்தப் பட்டு தமிழ்நாட்டையே குட்டிச் சுவராக்கிய மன்னார்குடி மாபியா ஆண்டு இறுதியில்  அடியோடு ஒழிக்கப் பட்டதாகவே தெரிகிறது.   இன்னும் சில மூத்த அமைச்சர்கள், மீண்டும் மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் மேலோங்கும் என்ற அச்சத்தை தெரிவித்தாலும், அதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.

 3

இந்தியாவை உலுக்கிய மற்றொரு மிக முக்கியமான விஷயம், அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான, வலுவான லோக்பால் அமைப்பு வேண்டி நடத்திய போராட்டம்.  ஊழலை ஒழிக்க ஒரு வலுவான அமைப்பு தேவை என்ற நோக்கில் நடத்தப் பட்ட அந்த போராட்டம், ஆண்டு இறுதியில் தந்திரக்கார அரசியல்வாதிகளால் தோற்கடிக்கப் பட்டது போன்ற சூழலில் வந்து நின்றது.   இந்தப் போராட்டம், வரும் ஆண்டில் தொடர்ந்து நடைபெறும் என்றே தோன்றுகிறது.

 

2ஜி வழக்கின் விசாரணை எந்த திசையில் செல்லும் என்பது, வரும் ஆண்டில் தெரிய வரும்.   மேலும், தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, வரும் ஆண்டில் இதை சரி செய்ய என்ன விதமான நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

தமிழக அரசின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  அரசு வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் ஒரு முறை ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்றும், அதைத் தொடர்ந்து அடிக்கடி மாற்றுவது இருக்காது என்றும் தகவல்கள் வருகின்றன.   நேற்றைய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் பேச்சு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.  நேற்று பேசிய ஜெயலலிதா, “ஒருவன் நேர்மையான அதிகாரி.  தன் பணிகளில் கண்ணும் கருத்துமாக செயல்படக் கூடியவன். லஞ்ச லாவண்யங்களில் துளியும் ஈடுபடாதவன்.  ஒரு நாள் அவனை சிலர் அணுகி தவறான செயலுக்கு தூபமிட்டார்கள். ஒரே ஒரு காரியம் தான். சின்ன தவறு தான். அதை செய்தால் போதும் வாழ்நாளெல்லாம் வளமாக வாழுகிற அளவுக்கு பணம் கிடைக்கும். சிக்கிக்கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது... என்றெல்லாம் மூளைச் சலவை செய்து ஆசை வலை விரித்தார்கள்.

"எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் யோசித்துச் சொல்கிறேன்"" என்றவன் வீட்டிற்கு வந்தான். விதிமுறைகளை மீறி இதுவரை எதையும் செய்ததில்லை.

ஒரே ஒரு முறை தானே? தவறு செய்யலாமா? கூடாதா? இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் இல்லை. யாரிடம் கேட்பது? தவறு செய்வதற்கு ஆலோசனையை பிறரிடம் கேட்பது அவமானம் இல்லையா? குழம்பியது அவன் மூளை.  முடிவெடுக்கவும் முடியாமல் உறக்கமும் கொள்ளாமல் அவன் யோசித்துக் கொண்டே இருக்க பொழுதும் விடிந்தது.  காபி எடுத்துக்கொண்டு அவனது தாய் அறைக்குள் வந்தார். இரவெல்லாம் தூங்காததை மகனின் கண்கள் காட்டிக் கொடுத்தன. அவள் விளக்கம் கேட்பதற்குள் அவனே முந்திக்கொண்டான்.  சரி, இதற்கான விடையை அம்மாவிடமே கேட்டுவிடுவோம்

என்ற முடிவுக்கு வந்தவாறே அலுவலகத்தில் நடந்த விஷயத்தை அப்படியே விவரித்தான். "இதை செய்வது சரியா அம்மா?"" என்று கேட்டான்.  "வேண்டாமப்பா.  எப்போதும் அதிகாலையில் உன்னை எழுப்பி காபி கொடுப்பதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆகும். நீ அவ்வளவு ஆழ்ந்து தூங்குவாய். ஆனால் இன்றோ இரவெல்லாம் தூங்காமல் உன் கண்கள் இரண்டும் சிவந்து முகம் சோர்வடைந்து இருக்கிறது.

தவறான ஒரு காரியத்தை செய்யலாமா என நினைக்கிற போதே நமக்கு தூக்கம் போய்விடுகிறதே! அதுவே தவறை நாம் செய்துவிட்டால், ஆயுளெல்லாம் நமக்கு தூக்கம் வராதே! நான் அதிகம் படிக்காதவள். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்..." என்று சொல்லிச் சென்றாள் அவனது தாய்.  அன்று முதல் அவன் முறைகேடான எந்தக் காரியத்தையும் ஏறெடுத்துப் பார்ப்பதையே தவிர்த்தான். அனைவரிடமும் நற்பெயரை ஈட்டினான். தன் வாழ்வுக்குத் தேவையான அளவுக்கு செல்வங்கள் தானாகவே அவனிடம் நேர்மையான வழியில் வந்து சேர்ந்தன.

இந்தக் கதை போலத் தான் நாம் செய்யும் தவறு நாம் செய்யும் துரோகம், அது தூக்கத்தை தொலைத்துவிடும். மனச்சாட்சி நம்மை தினம் பிடித்து உலுக்கும்.  ஆக, அத்தகைய அமைதியைக் கெடுக்கும் எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நம் பொதுவாழ்வை அமைத்துக் கொண்டோம் என்றால், நாமும் சரி, நாம் சார்ந்திருக்கும் இயக்கமும் சரி இவ்வுலகமே உற்று நோக்கும் அதிசய பீடமாய் உயர்ந்து நிற்கும் என்பது நிச்சயம்.

எனவே, ஒரு பரிசுத்தமான நிர்வாகத்திற்கு உரியவர்களான நம்மிடம் நமது பணிகளும், செயல்களும் பக்கத் துணையாகி நிற்க வேண்டும்.” என்று பேசியிருக்கிறார் ஜெயலலிதா.

 

இது அதிமுக கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல், அதிகாரிகளுக்கும் சேர்த்தே சொல்லப் பட்டதாகத்தான் தெரிகிறது. இதன் படி அதிகாரிகள் நடந்துகொள்வார்களா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.  ஆனாலும், ஜெயலலிதா எப்படி நிர்வாகத்தை நடத்துகிறார் என்பதை 2012 சொல்லும்.

 jaya2_20110614

தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, 2011ம் ஆண்டில்,  சென்னை சங்கமத்துக்கு எதிராக, கைதிகளை முன் விடுதலை செய்வது தொடர்பாக, உயர்நீதிமன்றத்துக்கு ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் இருந்த குறைகளை நீக்க, பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, திண்டிவனம் அருகே பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக, பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக, புழல் சிறையில் கைதிகளை நிர்வாணப் படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, என்று பல்வேறு பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன.

வரும் ஆண்டில் இதை விடச் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.

 

நீ விரும்பும் மாற்றமாக நீ இரு என்றார் மகாத்மா காந்தி.  நாம் விரும்பும் மாற்றத்தை அடைவதற்கு, தொடர்ந்து வரும் ஆண்டிலும் உழைப்போம் என்ற உறுதி மொழியோடு, புதிய ஆண்டை வரவேற்போம்.   தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்.

 

புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே…

 

Comments  

 
0 #38 வால்டர் வணங்காமுடி 2012-01-11 10:40
Another evidence to prove RAJAPAKSHE's defeat in the year 2012.

http://tamil.oneindia.in/news/2012/01/10/srilanka-vijay-tv-programme-upsets-rajapakse-aid0128.html
Quote
 
 
0 #37 வால்டர் வணங்காமுடி 2012-01-10 16:03
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]ஜோசியம் சொன்னால் அது மூடநம்பிக்கை ... ஜோதிடத்தையே திருட்டுத்தனம் எடிட் செய்து போட்டால்? அது திராவிடர் கழக உண்மை.

பொய்யான, ஒலி மாற்றம் செய்யப்பட்ட காணோளிகளைப் போடுகிறீர்களே, உங்களுக்கு நா கூச்சமாகவே இல்லையா? பொய் சொல்லி, பொய் சொல்பவரை நம்பி பிறரை ஏமாற்றும் கூட்டமே உங்கள் புரட்டுக் கூட்டம்.

[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]ஜோசியம் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் இதை சற்று வாசிக்கவும்:
கடந்த வாரம் விஜய் டீவி "நீயா நானாவில்" ஒரு பிரபல ஜோதிடர்கள் கொடுங்கோலன் ராஜபக்ஷேவின் ஜாதகத்தை கணித்து 2012 ஆண்டு அவருக்கு எப்படி இருக்கும் என்று கூறினார்கள். "இந்த ஆண்டில் ராஜபக்ஷேவின் அரசியல் ஆட்சிக்கும் முடிவுகட்டப் பட்டு, அவர் பத்வியில் இருந்து தூக்கி எறியப் பட்டு, அரசியலில் இருந்து காணாமல் போவார். இது நடக்கும். குறித்து வைத்துகொள்ளுங்க ள்" -- இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வீடியோ லின்க்:
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.டுபெடமில்.சொம்/விஎந்_விடெஒ.ப்ஹ்ப்?விஎந்கெய்=008480063அஎஃப்57ப்7ஃப்92 1[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]


ஒலிஒளி அமைப்பில் எடிட் செய்து போட்டுள்ளார்களா ? யார் ? விஜய் டீவி நிறுவனமா? இல்லை உங்கள் காதா? 'கார்பன் வயது கணிப்பு' என்ற அறிவியலை கூட பொய்யாக்கி,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமன் இந்த இடத்தில் தான் பிறந்தான் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்த நீதிபதி(?) சொன்னால் நம்புவீர்களோ? ... ஒரு பேச்சுக்கு அது பொய்யாகவே இருக்கட்டுமே. 'ராஜபக்சேவுக்கு' ஒன்று என்றால் உங்கள் சதை ஏன் துடிக்க வேண்டும்?

NOW I CAN UNDERSTAND THE MEANING OF YOUR NAME 'ANNIYAN'...!!! :lol: :lol: ;-)
Quote
 
 
-1 #36 anniyan 2012-01-07 18:52
ஜோசியம் சொன்னால் அது மூடநம்பிக்கை ... ஜோதிடத்தையே திருட்டுத்தனம் edit செய்து போட்டால்? அது திராவிடர் கழக உண்மை.

பொய்யான, ஒலி மாற்றம் செய்யப்பட்ட காணோளிகளைப் போடுகிறீர்களே, உங்களுக்கு நா கூச்சமாகவே இல்லையா? பொய் சொல்லி, பொய் சொல்பவரை நம்பி பிறரை ஏமாற்றும் கூட்டமே உங்கள் புரட்டுக் கூட்டம்.

Quoting வால்டர் வணங்காமுடி:
ஜோசியம் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் இதை சற்று வாசிக்கவும்:
கடந்த வாரம் விஜய் டீவி "நீயா நானாவில்" ஒரு பிரபல ஜோதிடர்கள் கொடுங்கோலன் ராஜபக்ஷேவின் ஜாதகத்தை கணித்து 2012 ஆண்டு அவருக்கு எப்படி இருக்கும் என்று கூறினார்கள். "இந்த ஆண்டில் ராஜபக்ஷேவின் அரசியல் ஆட்சிக்கும் முடிவுகட்டப் பட்டு, அவர் பத்வியில் இருந்து தூக்கி எறியப் பட்டு, அரசியலில் இருந்து காணாமல் போவார். இது நடக்கும். குறித்து வைத்துகொள்ளுங்க ள்" -- இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வீடியோ லின்க்:
http://www.tubetamil.com/view_video.php?viewkey=008480063aef57b7f921
Quote
 
 
0 #35 வால்டர் வணங்காமுடி 2012-01-04 14:12
ஜோசியம் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் இதை சற்று வாசிக்கவும்:
கடந்த வாரம் விஜய் டீவி "நீயா நானாவில்" ஒரு பிரபல ஜோதிடர்கள் கொடுங்கோலன் ராஜபக்ஷேவின் ஜாதகத்தை கணித்து 2012 ஆண்டு அவருக்கு எப்படி இருக்கும் என்று கூறினார்கள். "இந்த ஆண்டில் ராஜபக்ஷேவின் அரசியல் ஆட்சிக்கும் முடிவுகட்டப் பட்டு, அவர் பத்வியில் இருந்து தூக்கி எறியப் பட்டு, அரசியலில் இருந்து காணாமல் போவார். இது நடக்கும். குறித்து வைத்துகொள்ளுங்க ள்" -- இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வீடியோ லின்க்:
http://www.tubetamil.com/view_video.php?viewkey=008480063aef57b7f921
Quote
 
 
-4 #34 குறும்பன் 2012-01-03 04:00
நான் முதலில் அனுப்பிய பின்னூட்டம் வெளிவர வில்லை, அதனால் மீண்டும். அடாவடியாக மக்களை பற்றி சிறிதும் கவலையில்லாமல் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு. 2012 ல் உயர்த்தப்படப்போ கும் மின்கட்டண உயர்வு (இதற்கு பேருந்து, பால் விலையுடன் அச்சாரம் போடப்பட்டுவிட்ட து) மக்களின் மீது கரிசனம் வந்ததுபோல் தெரிவதின் காரணம் புரியவில்லை. சரியாக கமிசன் வரவில்லையா?? கனிமொழியின் பிணை. கிடைக்காதது கிடைத்தது போல் திமுக கொண்டாடியது மறக்கக்கூடியதா?
Quote
 
 
+1 #33 ஷாலி 2012-01-02 23:35
அந்தக்கால இந்து நேசனில் “ சவுக்கடி சந்திரகாந்தா” என்ற தலைப்பில் லட்சுமிகாந்தன் திரையுலக இருட்டுகளை அம்பலப்படுத்துவ ார்.

இந்தக்கால இணையவெளி ஊடகத்தில் சவுக்கு அயோக்கிய அரசியல்வாதிகளின ் சட்டையை கழட்டி அடிக்கிறது.

நாட்டில் நாம் நல்லவர்களாக இருப்பதுமட்டும் கடமையல்ல...
அயோக்கியனை அடையாளம் காட்டுவதும் கடமைதான்.

வாழ்க சவுக்கு தொடரட்டும் உம் நற்பணி.
Quote
 
 
+5 #32 சோழன் 2012-01-02 15:39
சவுக்கு மற்றும் அனைவருக்கும் வணக்கம்! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ்!

என்ன சவுக்கு சார்! வர வர கட்டுரைகளையே காணோம்? ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவை வந்து வந்து எட்டி பாத்துட்டு வெட்டியா திரும்பி போக வேண்டி இருக்கு! ஒரு வேலை நம் நாட்டு அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினர் திருந்தி நல்வாழ்வுக்கு திரும்பி விட்டனரோ?
சசி-அம்மா பிரிவில் இன்னும் நாங்கள் எதிர்பார்த்ததை சவுக்கு தரவில்லை!
லோக்பால் நாடகத்தில் பல சங்கதிகள் எங்களுக்கு சவுக்கு மூலம் வரவில்லை!
2 க் இன்னும் முடியவில்லை!
இப்படி பல எதிர்பார்ப்புகள ோடு தினமும் வந்து செல்கிறோம்! அதற்காக தங்களை வருத்திக்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்! நேரமிருக்கும்போ து பொறுமையாக புட்டு புட்டு வைக்கவும்!

நன்றி,
வணக்கம்!
Quote
 
 
+2 #31 ரப்பர் ஸ்டாம்ப் 2012-01-02 14:40
2011 ஆண்டில் தமிழகம் ஒரு கொள்ளை கும்பலில் இருந்து மீண்டது என்றால் அது மிகையில்லை. எந்த ஒருவர் சொத்து வாங்கினாலும் திமுக மொல்லமாரிகளுக்க ு ஒரு கப்பம் கட்டவேண்டும் ஒரு மும்பை டான்களின் தலையீடு போன்றதொரு நிலை சென்னையில் இருந்தது. யாரும் ஒரு பெரிய சொத்து வைத்திருந்தால் அது அவர்களின் உயிருக்கேகூட ஆபத்தாக முடியும் நிலை ஏற்பட்டது என்றால் மிகையில்லை. திமுக கைக்கூலிகளின் அட்டகாசம் எங்கும் தலைவிரித்து ஆடியது. இடைத்தேர்தல்கள் எவன் நம்மை மீறி ஓட்டுபோட்டுவிடு வான் என்ற நிலை இருந்தது. முதல் நன்றி தேர்தல் கமிஷனுக்கே! அவர்கள் இல்லாவிடில், இது நிகழ்ந்திருக்கா து. பத்திரிக்கைகளும ், மீடியாக்களும் கோழிக்கரிக்கும் , குவாட்டருக்கும் விலைபோய்விட்ட நிலையில், யார் எதிர்த்து எழுதினாலும் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் நிலையில், விட்வெள்ளியாக சவக்கு வந்தது என்றால் மிகையில்லை. அவர் மூலம் ஆரம்பித்த தீ காட்டுதீயாகி திமுகவின் கூடராத்தை நிர்மூலமாக்கியத ு. கேடி பிரதர்ஸின் அசிங்கங்கள் வெளிக்கொண்டுவந் தார். கடைசியில் மக்கள் ஓட்டு என்னும் சம்மட்டியால், திமுகவிற்கு சமாதி கட்டினார்கள். ஜெவின் மிகச்சிறந்த நடவடிக்கை சட்டம் ஒழுங்கு சீரமைத்தது, இரண்டாவது பெரிய விஷயம், மன்னார்குடி மாபியா வெளியேற்றம். நல்ல தொடக்கம், தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேத்கதக்க நடவடிக்கை. ஒரு முதல்வர் ஒருவருக்கு தன வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லையெனி ல் அவர் எப்படி ஒரு மாநிலத்தை ஆள முடியும் என்பது நியாயமான கேள்வி. அவர் ஒரு சூழ்நிலை கைதியாகி இருந்திருக்கிறா ர். ஜெ ஒரு கட்சிக்காரரை புகழ்ந்து பேசினால் அவர் விரைவில் கட்டம் கட்டப்பட்டு வெளியற்றபட்டுள் ளார்கள். நோக்கமே நல்ல தலைவர்கள் வளர்ந்துவிடகூடா து, உண்மையான செய்திகள் அவர்கள் மூலமாக ஜெவுக்கு தெரியகூடாது. நல்ல வேலையாக ஜெ சுதரித்துகொண்டு ள்ளார். ஒரு மினிஸ்டரோ, அதிகாரியோ, நலம் விரும்பியோ நேராக கூட நிற்கும் சுதந்திரம் இல்லையெனில் அவர் எப்படி உணமையான தனது கருத்தை கூறுவார். ஆட்சி என்பது ஒருவர் செய்வதல்ல, அது ஒரு டீம் வொர்க். எனவே எல்லோருக்கும் உரிய மரியாதையை, சுதந்திரத்தை கொடுக்கவேண்டும் ,சொல்வதை கேட்கவேண்டும், முடிவை தான் எடுக்கலாம். ஜெ கருணாநிதியைவிட நல்ல தேர்வு என்று நம்பிக்கையோடு அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ுடனும் சவுக்கிற்கு நன்றிகள் கோடிகூறும் தமிழக் மக்கள்.
Quote
 
 
+2 #30 eleventh sense 2012-01-02 14:26
"தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் நான் என்னை இணைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?" .......... இது நான் உட்பட பல நண்பர்களின் வினா..... பதில் கிடைக்குமா சவுலக்கு?
Quote
 
 
-3 #29 P.R.Rajendran 2012-01-02 12:33
Dear Savukku,Happy new year.A Good sum up of the 2011 events.Let your job continue with our great support and with your great love on society and hard work.Convey our regards and wishes to Advocate Pugalendhi and others who take part in your struggle against injustice.
Quote
 
 
0 #28 anniyan 2012-01-02 05:15
அஞ்சாமல், துஞ்சாமல், சொலல் வன்மையுடன் மிகச்சிறப்பாக பணியாற்றி, பல உண்மைகளை எழுதி, மிகச்சிறந்த மன மாற்றங்களுக்கும ் பங்களித்த சவுக்கு சங்கருக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என் எழுத்துக்களையும ் மதித்து '+1' சொடுக்கிய, கருத்து வேறுபாடுகளை ஆரோக்கியமான முறையில் எதிர்கொண்ட வாசகர்களுக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Quote
 
 
0 #27 jagant 2012-01-01 19:38
தமிழக அரசியல் நிலை வெறுப்பும் கோபமுமாக இருந்த கடந்த வருடத்தில், எங்களுக்கு சோர்வில்லாது, பல இடையூறுகளுக்கு இடையிலும் நம்பிக்கை அளித்தது சவுக்கு மட்டுமே.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சவுக்கு.
Quote
 
 
+1 #26 Padman 2012-01-01 19:16
http://www.youtube.com/watch?v=sUGxCtw2uhw&

Wish you happy new year to Savukku and readers.

Please browse the above youtube video posted by nakkeeran (hope it is original!!!).

Where is manners?

1. Reporters/photographers are shouting infront of PM, CM and gov. They are using a word porambokku.

2. DMK people didn't wish CM. She is not just Jayalalitha. She is a chief of the state and representing the whole TN and elected by people.

3. Jayalalitha leaving that place without having a word with PM. This is a real shock. forget the DMK gundas. She should not behave like this.

I request Savukku to write an article on this. We should remind them on how to behave with others.

/Padmanaban
Quote
 
 
+2 #25 KarthikPrabhakaran 2012-01-01 17:52
அன்புள்ள சவுக்கிற்கும் , சவுக்கை போற்றுவோருக்கும ், தூற்றுவோருக்கும ் ,சவுக்கடி பட்டோருக்கும்,ப ட இருப்போருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ்.சவுக்கின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


ஆமா ....நீங்க இவ்வருட முக்கிய நிகழ்வுகளில் நம் தியாகத் திருவிளக்கு , மங்கையர் திலகம், கழகம் பெற்றெடுத்த முத்து,தமிழ்நாட ்டின் சொத்து கனிமொழி நாட்டிற்காக சிறை சென்று பல்வேறு கொடுமைகளை அனுபவித்து மீண்ட நாளை குறிப்பிடாததை கழகத்தின் சார்பாக கடுமையாக கண்டிக்கிறோம்.
Quote
 
 
+5 #24 இராம இளங்கோ 2012-01-01 15:46
அதிமுக ஆட்சி இதுவரை திமுக ஆட்சியை விட மோசமாகவே நடந்திருக்கிறது . வருகின்ற நாட்கள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பெரும்பாலானவர்க ளிடம் இருக்கின்றது. அந்த நம்பிக்கைக்கு பலமளிக்கும் நிறைய நிகழ்வுகள் சமீப காலமாக நடந்துவருகின்றன .நம்பினார் கெடுவதில்லை. புத்தாண்டில் நம்பிக்கையோடு இருப்போம்.
Quote
 
 
-2 #23 sathiyan 2012-01-01 13:27
விரும்பிய மாற்றம் நடந்தது. ஆனால் என்ன? பாமரனுக்கு சுமை ஏறியதுதான் மிச்சம். இவரை நம்பி அவரை நம்பி வேறு என்ன செய்வது?
Quote
 
 
0 #22 ji 2012-01-01 13:24
Dear Savukku,

Many More happy New yers for you and your service. We have been enjoyed a lot on almost all of your articles dispite our own conerns.

We pray GOD for you "atleast this year and future years would be greener and ever remebering wih joy".

Well done.
Quote
 
 
-2 #21 ஷாலி 2012-01-01 12:39
ஜாபர் சேட் விசயத்தில் சவுக்கு அதீத கவனம் செலுத்துகிறது எனபது நன்கு தெரிகிறது.பொதுவாக ஜாபர் சேட் தவறுகள் நிர்வாகம் சம்பத்தப்பட்டதா கவே தெரிகிறது.லஞ்ச ஊழல்,நில மோசடி,சொத்துக்க ுவிப்பு,பெண்களு டன் சல்லாபம் போன்ற மாமுலான போலீஸ் குற்றங்கள் அவரிடம் இருப்பதாக சவுக்கு கூறவில்லை எனபது குறிப்பிடத்தக்க து.
வீட்டுவசதி வாரியம் சம்பந்தமாக கேஸ் உள்ளது.தான் யோக்கியன் என்று நிருபித்து வரட்டும்.
Quote
 
 
0 #20 RayJaguar 2012-01-01 11:49
happy new year to savukku and all the followers....
Quote
 
 
+2 #19 vennai 2012-01-01 09:29
vai ko unarchi vasapattu aluthu avarukka ottu poda marandhu povvara ?? approam eppadi aduthavan ottu poduvan? seen podhuvadhu verru? aatchi enpathu verru enpthai unradha varai unnai ponra assamigalai thirutha mudiyadhu! :lol: Quoting asai siva:
தன் வாழ்நாளில் பாதி நாள் கழிந்த பிறகு தான் இப்படிப்பட்ட தீய சக்தியை உணர்ந்திருக்கிற ார் அம்மையார். அதுவும் சோ போன்ற ஆலோசகர்கள் சொன்னதால் தான். ஏனென்றால் சொந்த புத்தி கிடையாது. சொல் புத்தியும் கிடையாது ( பல நேரங்களில் ). நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது. தமிழனுக்கு கிடைத்த அவமானம் தான் இப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள்.
வைகொ மட்டும் வெல்லட்ம்
Quote
 
 
+1 #18 saah 2012-01-01 09:23
From police family,i welcome your website,For past 1 year I am a reading all your articles, you are doing a majestic social service especially for police force, savukku carry on your profession, new year wishes ….
Quote
 
 
+1 #17 gopal 2012-01-01 07:54
Dear Sir,

Happy new year.

This site is being viewed by all kinds of tamilians staying within tamilnadu and also out side tamilnadu and abroad.People from all communities do visit this site.
Quote
 
 
+2 #16 அழகன் 2012-01-01 07:31
அன்புள்ள சவுக்குக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்..இனியாவது தமிழகத்தில் ஊழல், முறைகேடு, அதிகாரதுஷ்பிரயோ கம் இல்லாத ஆட்சி நடக்கட்டும்.. இதனால் தமிழக மக்கள் வாழ்க்கை தரத்தில் உயர வாழ்த்துவோம்..
Quote
 
 
+1 #15 Arun B 2012-01-01 00:37
Dear Savukku,

I am sorry that I have forgotten to add one imp. word("picture") in my previous comment!!!

I wanted you to not publish that Tiffin-box headed man's picture and not about his misdeeds.

You pls. carry on with your great works, as usual, and continue publising his illegitimate activities, or anybody's for that matter, howsoever high they may be...!

P.S. This is my first sorry in this year and am glad that am apologizing to Savukku only :-) :-) :-)
Quote
 
 
+3 #14 Vaigaiselvan 2011-12-31 23:47
யார் தவறு செய்தாலும் சவுக்கை சுழற்ற வேண்டும். கடந்த சில வாரங்களாக தாங்கள் மவுனம் காப்பது ஏனோ..??
Quote
 
 
+2 #13 Vaigaiselvan 2011-12-31 23:44
புத்தாண்டு வாழ்த்துக்கள் சவுக்கு.. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோ ம்..
Quote
 
 
+18 #12 சவுக்கு 2011-12-31 21:18
அன்பார்ந்த, ஜெரோம், சவுக்கே... அல்ல.. சவுக்கு. சவுக்கு செய்யும் அனைத்துத் தவறுகளையும் வாசகர்கள் சுட்டிக் காட்ட முழு உரிமையும் உள்ளது. வாசகர்கள் இல்லாவிட்டால் சவுக்கு ஏது... குறைகளை மட்டும் சுட்டிக் காட்டாமல் நிறைகளையும் சொல்ல வேண்டியது, அனைத்து ஊடகங்களின் பணி. ஊடகங்கள் நிறைவுகளை மட்டும் சொல்வதல்ல... குறைகளை நிறைகளாய் மாற்ற தகிடுதத்தம் செய்யும்போதுதான ் சவுக்குக்கு வேலையே பிறக்கிறது. ஊடகங்கள் நேர்மையாக தங்கள் பணியை தொடர்ந்து செய்தால், சவுக்குக்கு அவசியம் என்ன ?
Quote
 
 
+2 #11 குறும்பன் 2011-12-31 21:16
மக்களின் அதிருப்திக்கு ஆளான அநியாய பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு பற்றி சொல்லலையே? :sigh:
2012ல் அதிரடி மின் கட்டண உயர்வு இருப்பதையும் சொல்லி இருக்கலாமே? :-|

கனிமொழிக்கு கிடைத்த பிணை பற்றியும் சொல்லி இருக்கலாம். கிடைக்காதது கிடைத்தது போல் அல்லவா திமுக அதை கொண்டாடியது. ;-)
Quote
 
 
+23 #10 சவுக்கு 2011-12-31 21:16
அன்பார்ந்த தோழர் அருண் பி, அவர்களே ஜாபர் சேட் மீது சவுக்குக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது ஜாபர் சேட்டின் பிடியில் கருணாநிதி இருந்த காரணத்தாலேயே அவர் நிதானத்தை இழந்தார். ஜாபர் சேட் தற்போதும் தவறுகளை செய்து கொண்டுதான் உள்ளார். அடுத்த ஆண்டு அவர் தவறு செய்தாலும் எழுதாமல் எப்படி இருப்பது தோழரே...
Quote
 
 
+5 #9 Visvanathan 2011-12-31 20:56
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ்........
Quote
 
 
+14 #8 ஜெரோம் டென்னிஸ். டோ 2011-12-31 20:51
ஆட்சியாளர்கள் செய்யும் குறைகளை மட்டும் அல்ல நிறைகளையும் சுட்டிகாட்டும் சவுக்கிற்கும்

சவுக்கே சில சமயம் செய்யும் தவறுகளை இடித்துரைக்கும் வாசகர்களுக்கும்

எனது அன்பு நன்றிகளும் பாராட்டுகளும்

இப்படியும் நடக்குமா !!!

இது தான் என்னை சுற்றியுள்ள உலகமா !!!

இவர்களா இப்படி !!!

என்று பல முறை என்னை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் ஆழ்த்தியுள்ளது உங்கள் கட்டுரைகள்

முதியவர்களும் என்னை போன்ற இளைஞர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய தளம் சவுக்கு என்றாள் அது மிகை அல்ல

'எட்டு ரூபாய்க்கு எண்பது பொய்கள்' என்ற தலைப்பு நான் மிகவும் ரசித்து சிரித்தது :லொல்:

சவுக்கில் வரும் கட்டுரைகள் மட்டுமல்ல அதன் தள அமைப்பும் மிக எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கின்றன !!!

சவுக்கிற்கும் அதன் வாசகர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!


கோவை ஜெரோம் டென்னிஸ். டோ,
திருவனந்தபுரம்
Quote
 
 
+8 #7 asai siva 2011-12-31 19:41
ஆறுமாத காலத்தில் சொல்லத்தக்க எந்த சாதனையும் இல்லை. திமுகவின் ஆட்சியின் நிலையே நீடிக்கிறது.எல்லாம் பேச்சாகத்தான் இருக்கிறது; செயல் ஒன்றும் இல்லை. இதில் நாட்டையே பிடித்து என்ன செய்ய போகிறார்கள் ? அவர்கள் மக்கள் கோபத்தை பெற நாலாண்டு காலம் தேவைப்பட்டது.இவர்களுக்கு ஆறு மாதமே போதும் என்றாகி விட்டது.
வைகொ பெச்ட்
Quote
 
 
+4 #6 கார்த்திக் வினோத் 2011-12-31 18:55
புத்தாண்டு வாழ்த்துக்கள்.....உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.....
Quote
 
 
+5 #5 asai siva 2011-12-31 18:34
தன் வாழ்நாளில் பாதி நாள் கழிந்த பிறகு தான் இப்படிப்பட்ட தீய சக்தியை உணர்ந்திருக்கிற ார் அம்மையார். அதுவும் சோ போன்ற ஆலோசகர்கள் சொன்னதால் தான். ஏனென்றால் சொந்த புத்தி கிடையாது. சொல் புத்தியும் கிடையாது ( பல நேரங்களில் ). நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது. தமிழனுக்கு கிடைத்த அவமானம் தான் இப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள்.
வைகொ மட்டும் வெல்லட்ம்
Quote
 
 
+3 #4 vilambi 2011-12-31 18:23
ஒவ்வொரு ஆண்டும் ஒரு நம்பிக்கை...இந்த ஆண்டு இது...புத்தாண்டு வாழ்த்துக்கள்...
Quote
 
 
+5 #3 Karikalancdm 2011-12-31 17:13
Well done Mr. Savukku, Wish u happy new year. Keep up your good work
Quote
 
 
+7 #2 செம்ம மேட்டர் மா 2011-12-31 16:30
நன்றி சவுக்கு..........இன்னும் எதிர்பாற்கிறோம் ....உன்னிடம்
Quote
 
 
+10 #1 Arun B 2011-12-31 16:11
New Year wishes to you too, Savukku ji...

But, one small humble request...At least in the next year, pls. try to NOT publish that Tiffin-box headed (so-called) IPS officer...Mr. Jaffer Sait...:lol: :lol: :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 169 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday12317
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week56317
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month278577
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13194944