முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இன்னும் எவ்வளவுதான் வேண்டும் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 21
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 03 ஜனவரி 2012 12:59

There is enough for everyone’s need, but not enough for everyone’s greed என்றார் மகாத்மா காந்தி.  இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.  ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நன்கு பொருந்தும்.   திமுக ஆட்சி காலத்தில் சென்னை, நெற்குன்றத்தில் “Own your house” என்ற பெயரில் உயர் உயர் அதிகாரிகளுக்கான வீட்டு வசதித் திட்டத்தை கொடை வள்ளல் கருணாநிதி உருவாக்கினார்.   இந்தத் திட்டத்தின் படி ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மற்றும், க்ரூப் 1 அதிகாரிகள் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டிக் கொடுப்பதுதான் திட்டம்.

Adarsh_Housing

மஹாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை பறித்த ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு

இந்தத் திட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தில் கட்டப் படுகிறது.  இந்த வாளாகத்தில் மொத்தம் 1016 வீடுகள் கட்டப்  படுகின்றன.  இந்த 1016 வீடுகளில் 608 வீடுகள் உயர் உயர் அதிகாரிகளுக்காக (ஐஏஎஸ், ஐபிஎஸ்) என்றும், 120 வீடுகள் க்ரூப் 1 அதிகாரிகளுக்காக என்றும், 288 வீடுகள் இதர அரசு ஊழியர்களுக்காகவென்றும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.   மொத்தம் உள்ள வீடுகளில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளை உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் இருந்தே இந்தத் திட்டம் யாருக்காகவென்பது புரிந்திருக்கும்.

உயர் உயர் அதிகாரிகளுக்கு 2458 சதுர அடி கொண்ட நான்கு படுக்கையறை வசதி கொண்ட வீடுகள் மற்றும் 1923 சதுர அடியில் மூன்று படுக்கையறை வசதி கொண்ட வீடுகளும் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இதில் விசித்திரம் என்னவென்றால், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள வீடுகளின் விலை ஒரு சதுர அடி ரூபாய் 2442/-.  க்ரூப் 1 அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள வீட்டின் விலை ஒரு சதுர அடி ரூபாய் 2894/-.  இதர அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள வீட்டின் விலை ஒரு சதுர அடி ரூபாய் 2690/-/  எப்படி இருக்கிறது விலை நிர்ணயம் ?

இது மட்டுமல்லாமல், அந்த இடத்தில் தற்போதைய சந்தை விலை ஒரு சதுர அடி ரூபாய் 3800 முதல் 5000 வரை போகிறது.   தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், 300 முதல் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் வகையில் எதற்காக இப்படி ஒரு வீட்டு வசதித் திட்டத்தை உயர் உயர் அதிகாரிகளுக்காக வழங்க வேண்டும் ?

Untitled-2

நெற்குன்றத்தில் அடுக்கு மாடி விற்பனைக்காக டிசம்பம் மாதம் இணையத்தில் வெளி வந்த விளம்பரம்

இந்த வீட்டு வசதித் திட்டத்திற்காக விதிமுறைகள் மற்றும் நெறிகள் அறிவிக்கப் பட்டது 28.02.2011 அன்று. இந்த அறிவிப்பே மோசடியான அறிவிப்பு என்று தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாடு வீட்டு வசதித் வாரியத்தின் மேலாண் இயக்குநரிடமிருந்து உயர் உயர் அதிகாரிகளுக்கு 28.10.2010 அன்று ஒரு கடிதம் அனுப்பப் படுகிறது. அந்தக் கடிதத்தின் படி தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்காக “Own your housing scheme” என்ற திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   இந்தத் திட்டத்திற்கான விதிமுறைகள் “Own your housing scheme” என்ற திட்டத்திற்கு வகுக்கப் பட்டுள்ள விதிமுறைகளின் படி பொருந்தும்.  உங்களுக்கு “சின்ன வீடு வேணுமா… பெரிய வீடு வேணுமா…” என்பதை 5 நவம்பர் 2010க்குள் தெரியப்படுத்தவும் என்று அந்தக் கடிதம் தெரிவிக்கிறது.

tnhb_nerkundram_letter__1_4_Page_1

“Own your housing scheme” என்ற அந்தத் திட்டத்திற்கான விதிமுறைகள் என்று வகுக்கப் படுகின்றன தெரியுமா ? 28.02.2011 அன்று.   அதாவது சரியாக தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப் படுகிறது.   அதுவும் அந்த அரசாணை வெளியிடப்படும் நேரத்தைப் பார்த்தீர்களேயானால், 1 மார்ச் 2011 விடியற்காலை 00.59 மணிக்கு பொதுத்துறைச் செயலாளர் பெயரில் பதிவாகியுள்ள தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பப் பட்டிருக்கிறது.   எந்த அரசு அலுவலகத்திலாவது இரவு 1 மணிக்கு இப்படி வேலை செய்து பார்த்திருக்கிறீர்களா ?

67

phone

 

28.02.2011 அன்று வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப் பட்ட ஒரு திட்டத்திற்கு 5 நவம்பர் 2010 அன்று எப்படி விண்ணப்பிக்க முடியும் ?

சரி.  வெளியிடப்பட்ட இந்த விதிமுறைகளையாவது பின்பற்றியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  இந்த விதிமுறைகளில் விதி எண் 3 (xv) என்ன கூறுகிறது என்றால்

“3 (xv) The applicants who have already availed the benefit of allotment under GDQ from TNHB within the respective corporation limits, of the project will not be considered for allotment in this scheme.”

56_Page_2

அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்ற அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற பரிசீலிக்கப் பட மாட்டார்கள் என்பதே இந்த விதி முறை. இதையாவது பின்பற்றியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  ஒரு சாம்பிளுக்கு ஐபிஎஸ் வகையறாவை மட்டும் எடுத்து, ஒப்பீடு செய்து பார்த்ததில், கீழ் கண்ட அதிகாரிகள் அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.

Name                                        House / Plot / Flat under GDQ

1.  K.P.Maghendran IPS                        Housing Board Plot HIG-A-101,Nolambur Neibhourhood Scheme

2.  S.George,IPS                              HIG 108, Nolabmbur, Chennai

3.  T.K.Rajendran,IPS                          Plot No.946, 10th Street, Mogappair Eri Scheme Chennai 

4,  J.K.Tripathy IPS                            HIG C3/924, 10th Street Mogappair Eri Scheme Chennai

5.  C.K.Gandhirajan,IPS                          No.2, 10th Street Mogappair Eri Scheme Chennai

6.  Asuthosh Shukla,IPS                         Plot No. A.1-907. Mogappair Eri Scheme Chennai

7.  C.Sylendra Babu IPS                        Plot No.LIG 959/62 (4 plots) Mogappair Eri Scheme Chennai

8.  Karan Sinha IPS                           Plot No.2, Arignar Anna Nagar West Chennai

9.  S.Rajendran IPS                           HIG Flat No. H-80 F.1 type TNHB Valmiki Nagar Besant Nagar Extension Thiruvanmiyur 

10. T.V.Ravichandran IPS                       A1/6, Mogappair Eri Scheme Mogappair West, Chennai. 600 058

 11. R.C.Kudawla IPS                           Plot No.955 to 958 Mogappair Eri Scheme Chennai

 

இவர்கள் அத்தனை பேரும், நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்திலும் கீழ்கண்டவாறு ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

  1) K.P.MAGHENDHRAN IPS        Floor No. 11   Flat No. 3

 2) S.GEORGE IPS               Floor No. 19   Flat No. 3

 3) T.K.RAJENDRAN IPS           Floor No. 9    Flat No. 2

 4) J.K.TRIPATHY IPS             Floor No. 10   Flat No. 2

 5) C.K.GANDHIRAJAN IPS         Floor No. 18   Flat No. 1

 6) ASUTOSH SHUKLA IPS        Floor No. 15   Flat No. 1

 7) C.SYLENDRA BABU IPS        Floor No. 11   Flat No.  1

 8) KARAN SINGHA IPS          Floor No. 2    Flat No.  1

 9) S.RAJENDRAN IPS           Floor No. 3    Flat No.  1

 10) T.V.RAVICHANDRAN IPS      Floor No. 9    Flat No.  3

 11) R.C.KUDAWLA IPS          Floor No.10    Flat No.  1

இந்த உயர் அதிகாரிகளுக்கு அரசு வழங்கியுள்ள அதிகாரங்களின் படி, இவர்களின்  கீழ் பணியாற்றும், கீழ் நிலை அரசு ஊழியர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் இவர்கள்தான்.  ஒரு அரசு ஊழியர் பணியில் தவறு செய்தாலோ, ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ, அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் இவர்களிடம் வழங்கப் பட்டிருக்கிறது.    இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் கே.பி.மகேந்திரன் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர்.   டி.கே.ராஜேந்திரன் இன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர்.   திரிபாதி சென்னை மாநகர கமிஷனர்.   ஜார்ஜ் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி. ஸ்நேக் பாபு என்று அழைக்கப் படும் சைலந்திரபாபு வடக்கு மண்டல ஐஜி.  ஸ்நேக் பாபுவுக்கு மட்டும் இருக்கும் மொத்த சொத்துக்கள் என்னென்ன   தெரியுமா ?

Sylendra-Babu-Sathyamangalam-4

Sylendra-Babu-Sathyamangalam-6

1)  சென்னை முகப்பேரில் 2400 சதுர அடி நிலத்தில் வீடு

2)  சென்னை நொளம்பூரில் 4800 சதுர அடி நிலம் (வீரப்பனை சுட்டதுக்காம்)

3)  மதுராந்தகம் விளாங்காட்டில் 3 ஏக்கர் நிலம்

4)  கன்குளம், தம்போடு கிராமத்தில் மனைவி பெயரில் 1.795 ஹெக்டேர் நிலம்

5)  வளத்தோட்டம் கிராமத்தில் மனைவி பெயரில் நிலம்

6)  மனைவி பெயரில் முகப்பேர் ஏரித்திட்டத்தில் 1280 சதுர அடியில் வீடு

7)  திருவள்ளுர் மாவட்டத்தில் மனைவி பெயரில் 591 சதுர அடி நிலம்

8)  காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தில் மனைவி பெயரில் 50 சென்ட் நிலம்

9)  காஞ்சிபுரம் செய்யாறு தாலுகாவில் மனைவி பெயரில் 2 ஏக்கர் நிலம்.

 

மேற்கண்ட 11 அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள வீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வீட்டு வசதித் துறைச் செயலருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

tnhb-COMPLAINT.pdf_Page_1

tnhb_COMPLAINT.pdf_Page_2

tnhb-COMPLAINT.pdf_Page_3

இந்த விவகாரத்தில் மிகப் பெரிய அயோக்கியத்தனம் செய்யப் பட்டுள்ளது.  அது என்னவென்றால் 1979ம் ஆண்டில், யாருக்கு வீடு ஒதுக்கலாம் என்பதற்கான விதிமுறைகள் வகுக்கப் பட்டன.   அதன் படி, ஏற்கனவே வீடோ /வீட்டு மனையோ/ அடுக்குமாடிக் குடியிருப்போ/ தன் பெயரிலோ, தன் குடும்பத்தினர் பெயரிலோ, இந்தியாவின் எந்த மாநகராட்சி, முதல் நிலை பேரூராட்சியிலோ வைத்திருப்பவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் ஒதுக்கீடுகள் செய்யப் படக் கூடாது என்பது.

Picture_002

இந்த விதிமுறை இன்று வரை தளர்த்தப்படவில்லை.  ஆனால், இதில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ள 95 சதவிகிதமான உயர் உயர் அதிகாரிகள் அனைவரும் வீடோ, அல்லது வீட்டு மனையோ வைத்திருக்கிறார்கள் என்பதும், அவற்றை தங்கள் சொத்துக் கணக்கில் தெரிவித்திருக்கிறார்கள் என்பதுமே.

சரி இந்த அதிகாரிகளை விடுங்கள்.   இவர்களை விட பேராசைப் பிடித்த அதிகாரி ஒருவர் இருக்கிறார்.   அவர் யாரென்றால், தலைமைத் தகவல் ஆணையராக உள்ள ஸ்ரீபதிதான்.

Sep-01-l

இவரைப் பற்றி சவுக்கில் பல முறை கேவலமாக எழுதியும் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போவேனா என்கிறார்.  அது சரி.. இதெல்லாம் மான ரோஷம் உள்ளவர்கள் செய்வது அல்லவா ?

31_10_2009_002

இந்த ஸ்ரீபதி 30.04.2010ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.   நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்திற்கான அழைப்புக் கடிதம் முதன் முதலில் அனுப்பப் படுவதே 28 அக்டோபர் 2010ல்.  அப்படி இருக்கும் போது ஏப்ரல் 2010ல் ஓய்வு பெற்ற ஸ்ரீபதிக்கு எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும் ?   சென்னை அண்ணா நகர் ஆபீசர்ஸ் காலனியில் பிரம்மாண்டமான வீடு கட்டிக் குடியிருக்கும் ஸ்ரீபதிக்கு இன்னும் எவ்வளவுதான் வேண்டும் ? மனிதனின் பேராசைக்கு ஒரு அளவே இல்லையா ?

உயர் அதிகாரிகளே…  நீங்கள் அரசு வழங்கியுள்ள சொகுசுக் கார்களில் சென்னை நகரில் பவனி வரும் போது, சாலையோரங்களிலும், கூவம் நதிக்கரை ஓரத்திலும் வசிப்பவர்களைப் பாருங்கள்.  அவர்கள் கட்டும் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

 

Bel.Chennai.India.608_181

Bel.Chennai.India.608-185

Bel.Chennai.India.608-184

 

நபிகள் நாயகம் கூறுவதை சவுக்கு உங்களுக்கு நினைவுபடுத்தக் கடமைப் பட்டுள்ளது. “பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டு பண்ணி விடுமோ, அத்துனை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டு பண்ணிவிடும்”

 

Comments  

 
0 #40 SONAM CHOPRA 2012-12-23 07:53
other officials have done something for india . who is TV RAVICHANDRAN >??? CORRUPT
Quote
 
 
+1 #39 vasu devan 2012-07-17 15:07
pudichi thukula poduka sir
Quote
 
 
+1 #38 ARYAAN VAID 2012-07-12 17:46
snake babu has done something for the country . he was an encounter specialist . what about others ?nothing , nothing , nothing , who is tv ravichandran? corrupt , corrupt
Quote
 
 
+1 #37 aanchal 2012-07-09 13:06
why don't you guys publish it newspapers . file RTI and cancel all the 11 allotments .who is tv ravichandran ? by the way ??//[-corrupt corrupt
Quote
 
 
+2 #36 aanchal rongta 2012-06-15 18:52
please file a RTI AND CANCEL ALL THE ALLOTMENTS .
Quote
 
 
0 #35 SUNITHA CHOPRA 2012-05-20 12:59
why can't you publish this article in times of indaia . let people know about them . ban them for life
Quote
 
 
0 #34 Rathinam 2012-01-09 14:14
Sorry ! They are all very good actors because
They are act in in very perfect person in department
In department one constable get 50 rs they
Jumbed through earth to heaven
Quote
 
 
0 #33 Rathinam 2012-01-09 14:09
ஸ்!
Quote
 
 
0 #32 RAJKUMARPANDIAN 2012-01-05 19:17
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]இனி தெருவில் பேப்பர் பொறுக்கும் எந்த சிறுவனிடமும் "தம்பி. நீ மட்டும் நன்றாக படித்து வளர்ந்தால், நாளைக்கு ஒரு ஐ.ஏ.எஸ் ஆகலாம்" என்று சொல்லமுடியாது.... 'அந்த ஈன பொழப்புக்கு, பேப்பர் பொறுக்குவதே மேல்' என்று காரி முகத்தில் துப்பிடுவான்....!!![/ஃஉஒடெ]



நம்முடைய உமாசங்கர்.IAS போன்று எத்தனையோ நேர்மையான, திறமையான அதிகாரிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் ...நமக்கு உரிமை இல்லாத ,அடுத்தவர், அல்லது அரசு பணத்தை அபகரிக்க நினைக்கும் எண்ணம் அவரவர் உள்ளத்திலும், எண்ணத்திலும் தான் உள்ளது..வகிக்கும் பதவிக்கு கிடையாது.
IAS,IPS,பதவிக்க ு வந்த பின்பும் ,கற்ற கல்விக்கும் ,பெற்ற பதவிக்கும் பெருமை சேர்ப்பவர்கள் IAS,IPS அதிகாரிகள் இந்திய முழுக்க இருப்பதை இப்போதும் நாம் காண முடியும் ...மற்ற வகையில் சுருட்டும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் ,அவர்கள் பெற்றோரின் வளர்ப்பில் தான் குற்றம் இருக்க முடியும்..
Quote
 
 
+4 #31 ஷாலி 2012-01-05 14:28
காக்கி சட்டை போட்ட கள்ளப்பயளுக அள்ளித்திங்க அலையுரான்கள்.IPS என்றால் இந்தியா பொறுக்கி சர்விஸ் என்று ஆக்கிவிட்டார்கள ்.இவன்கள் வெளங்க மாட்டாங்கள்.இவங்களுக்கு பொரக்கிற பபுள்ளையும் பொ ரம்போக்கபோயிடும ்.ஏழைகளின் விண்ணப்பம் ஏழு வானத்தையும் தாண்டிச்செல்லும ்.அதிகாரகக் கிரிமினல்களின் அட்டுழியம் ஒழியும்.
Quote
 
 
0 #30 MEITHEDI 2012-01-04 21:00
சவுக்கு,
நல்ல கட்டுரை வாழ்த்து.
எப்படிதான்,யோசி ப்பதோ தெரியவில்லை.நல்ல கலகம் .
மெய்தேடி..................
Quote
 
 
+3 #29 karthikPrabhakaran 2012-01-04 20:23
நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால ், ........

உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தான்டா பணம் பதவி பட்டம் வேணும். எத்தனை கோடியை சேர்த்து வெச்சாலும் நிம்மதியா இருக்க முடியுமா உங்கனால. நீங்க எல்லாம் இப்படி ஊரை அடிச்சு உலையில் போடறதுனால மேல படத்துல பாரு ரோட்டுல குடி இருக்கறதை. இதை எல்லாம் பாத்துட்டு உங்களுக்கு எல்லாம் எப்படி சோறு உள்ள போகுது. எத்தனை வீடு இருந்தாலும் ஒரு வீட்டுலதான தூங்க முடியும்.உங்களுக்கு கார் ஓட்ட ஒரு ஆள் . கார் கதவை தொறக்க ஆள். வீட்டு வேலை செய்ய ஒரு ஆள். ஷு லேஸ் அவுந்தா அதை கட்ட ஒரு ஆள்.

எவ்வளவு பணம் இருந்தாலும் காலைல நாலு இட்லிக்கு மேல திங்க முடியுமா உன்னால. எத்தனை வீடு , ஏக்கர் கணக்குல நெலம் வாங்கி போட்டாலும் செத்தா ஆறடி தான் . இப்ப எல்லாம் அதுவும் இல்ல . மூணு மணி நேரம் கழிச்சு ஒரு சொம்புல தருவாங்க . அதுக்குள்ள எவ்வளவு தான் ஆடுவீங்க.ஒத்த பைசா செலவு உண்டா உங்களுக்கு. எல்லாம் ஓசி . ஓசில கெடைச்சா எதை வேணா வாங்கிகிவீங்களா . நேர்மை . நியாயம் , எளிமை எல்லாம் ஆபீஸ் வாசல்லயே விட்ருவீங்களா. இப்படி அடுத்தவன் காசுல திங்கும் போது அருவெறுப்பா இருக்காது.???????? இது வரைக்கும் காசு குடுத்து ஒரு டீ வாங்கி குடிச்சிருகின்க ளா ?????
எத்தனை சைபர்னு என்ன முடியாத அளவுக்கு கொள்ளை அடிச்சான் ஒருத்தன் .நீங்க எல்லாம் வரிசைல நின்னு சல்யுட் அடிச்சிங்க .இப்ப ஆறு மாசமா கம்பி என்றான். வாழ்க்கை ஒரு வட்டம் . ஒரு நாள் எல்லாம் வந்த வேகத்தில போயிரும்.
Quote
 
 
+1 #28 Federich 2012-01-04 19:15
பெரியார் ஈ.வே.ரா. செய்தது ஒன்று, அதை நடைமுறை சுயநலமாக கலைஞ்சர் மு கருணாநிதி மாற்றிவிட்டார்.
ஆனால், தமிழுக்கு இந்துத்துவ(பிரா மண அமைப்புமுறை) எதிர்ப்பை தவிர வேறு ஒரு “காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவ” முகமும் உள்ளது. இதற்கு மகாக்கவி சுப்பிரமணிய பாரதியே உதாரணம்!.
சுப்பிரமணிய சுவாமியும், சோவும், கர்நாடகா விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை புகழ்ந்து (சோழனையும், மராட்டிய சிவாஜியையும் புறம்தள்ளி) இந்த சுயநல வெளிநாட்டு(வி.ஹெ ச்பி) போக்கை ஆதரிப்பது,தற்போ து உள்ள சுழலில் ஏதோ ஒரு அடையாளம் தேவை என்பதை காட்டுகிறது. அதற்காக இதிலும் “பாக்கெட்டை” நிரப்பும் அதே சுயநலமா?.
“தமிழ் அடையாளத்தை” போட்டுத்தள்ளுவத ன் மூலம் மட்டும் வட மற்றும் தென்னிந்தியா “இந்துத்துவத்தி ன் அடிப்படையில்” ஒருமித்து விடுமா??.

ஜாதி அமைப்புமுறை என்பது இனம், பழங்குடி, அமைப்பு முறையிலிருந்து ஐரோப்பாவில் உருவான “சிட்டிசன்ஷிப்” தேசிய நாட்டுருவாக்கம் போன்றது என்கிறார்கள். இது ஹிந்தியில் “நாடு” என்பதற்கு “ஜாதி” என்று கூறுவதால், ஏற்ப்பட்ட மேற்குலக புரிதலால் இருக்கலாம்.
இதனால் ஜாதியை ஒரு தேசிய முரண்பாடு அளவுக்கு மிக இறுக்கமான புரிதலாக, 19 ஆம் நுற்றாண்டின் ஐரோப்பிய தேசங்களின் “போர்முறை தீர்வு” யதார்த்த நிலையுடன் ஒப்பிட்டு மேற்குலகம் தற்போது அணுகுவதாகவே உள்ளது.

மத்திய கிழக்கு தேசங்களில் ஏற்ப்பட்டுள்ள “ஸ்பிரிங்” இந்துத்துவ, புத்தமத உலகிற்கு காப்பியடிக்க முடியாது. ஆனால், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளி ல் இருக்கும் மத்தியதர இந்தியர்கள் (குறிப்பாக தென்னிந்தியர்), இதை தங்களின் சுயநல ஆட்சிப்பிடிப்பி ற்கு பி.ஜே.பி. பின்னால் நிற்கிறார்கள்.

http://www.youtube.com/watch?v=b2v8Fnuv2ps

http://www.youtube.com/watch?v=P7Xgc4ljHKM

http://inioru.com/?p=3443
Quote
 
 
+2 #27 Federich 2012-01-04 19:13
பிராமண அமைப்புமுறை பிராமணர்களை மட்டும் குறிப்பதல்ல. விஞ்ஞான ரீதியான மேற்குலகம் “பிராமண” அமைப்புமுறையை உடைத்து கிறிஸ்தவ மதத்தை பரப்புவதன் மூலமே தங்களுக்கு கட்டுபாடு ஆசியாவில் வரும் என்பது நிர்வாக முடிவு. இஸ்லாமிய மதத்தை அவர்கள் அப்படி நினைப்பதில்லை. ஒரு கலாச்சார ஊடறுப்பு உள்ளது.

“பிராமணர்கள்” இதில் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களைமட்டும் பாதுகாத்துக்கொள ்ளும் சுயநலவாதிகளாக மாற்றிக் கொண்டார்கள். “ஆரியம்” என்பது இந்த சுயநலத்திற்காகத ்தான் இவர்களால் பிடிக்கப்பட்டது .
இதே “சுயநலத்திற்காக ்தான்” பக்தி இயக்க பரிணாமமான வெள்ளாள,முதலியா ர்கள் “தமிழை” பிடித்துக் கொண்டார்கள். யாழ்ப்பாண “வெள்ளாளர்களும் ” தமிழை பிடித்தது இப்படிதான்.
அனைவருக்கும் பொதுவான விஷயம் “வேலைவாய்ப்பு”.
“இலங்கைத் தமிழர்” மத்தியில் பிராமண அமைப்புமுறையை காக்க வேண்டிய “பொறுப்பு” கிடையாது, வெறும் வேலைவாய்ப்பு பிரச்சனைதான்.

இதே போன்ற சுயநல நோக்கோடுதான் “சசிகலா” கும்பலும் செயல்பட்டது. இவர்களிடம் பிராமண அமைப்புமுறையை பாதுகாக்கும் பொறுப்பை எதிபார்த்தால் எப்படி?.

1970 களில் கர்நாடகா சுயநிதி கல்லூரிகள் மூலம் அப்போது வெளிநாட்டு பல்கலைகழகங்களில ் படித்த இந்திய மாணவர்களில் 40 % பெங்களுரிலிருந் து சென்றவர்கள். கேரளா கம்யுனிஸ்ட் ஆட்சியால் டிரைவர்,குழாய் ரிப்பேர், கட்டிட வேலை போன்ற சான்றிதழ்கள் மினிமம் பாஸ் முறையில் வழங்கப்பட்டு மத்திய கிழக்கு வேலைவாய்ப்பில் சென்றவர்கள் 90 % மலையாளிகள்.

ஆகையால் தற்போது இவர்களின் தலைமுறைகள் அனைவரும் தங்கள் அடையாளத்திற்காக “விஷ்வ இந்து பரிஷத்தை” பிடித்துள்ளனர். ராஜ ராஜ சோழனையும், தமிழையும் பிடித்த இலங்கைத்தமிழர்க ளும் தற்போது இதில் சேர்ந்துள்ளனர்.
திருப்பூர் கவுண்டர்களும் சண்முகம்(மலேஷிய ா ஹிண்ட்ராப்) மூலம் தங்கள் ஆடை ஏற்றுமதிக்காக இலங்கைத்தமிழர் பக்கம் சாய்ந்துள்ளனர்( யமுனா ராஜேந்திரன்).
இது மிகப்பெரிய செல்வாக்கை பி.ஜே.பி. மற்றும் நரேந்திர மோடி நடவடிக்கைகளில் செலுத்துகிறது.
இவர்களால் பிராமண அமைப்புமுறையை காப்பாற்ற முடியுமா அல்லது இன்னொரு ஆப்கானிஸ்தானை உருவாக்குகிறார் களா?
Quote
 
 
+3 #26 vignaani 2012-01-04 16:41
சவுக்கு வாசர்களில் ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்
இந்த விவரங்களை அரசிடமிருந்தே பெற்றுக் கொண்டு
பொது நல வழக்கு போடலாமே. இதற்கும் சுப்பு சாமி தான் வர வேண்டுமா?
Quote
 
 
+2 #25 tamil middle class 2012-01-04 16:08
எல்லாம் சரி. வரி கட்டறது அவங்க இல்லையே. இளிச்சவாய் நடுத்தர வகுப்புதானே. :cry:
Quote
 
 
0 #24 Panagudiyan 2012-01-04 15:05
கந்தசாமி கதாபாத்திரம் மாதிரி நிஜபாத்திரம் ஒரு ஆளு வேணும் இவன்களை எல்லாம் சுட்டு கொல்ல...
Quote
 
 
+2 #23 Fraud and antisocial 2012-01-04 14:05
what are going to do next? are going to move to court? nothing will happen, most judge have link with All India Services (AIS) officers. judges will take any action against AIS and the person who allotted flat to them. This situation prevailing in India's courts. India wouldn't develop in full form till judges take necessary against offender, criminals with maximum penalty and imprisonment. judges after retirement holding government posting like CAT, district court forum, head of enquiry commission then how will judges take action against the Government(AIS officer). judges need support of AIS officer.
Quote
 
 
+22 #22 வால்டர் வணங்காமுடி 2012-01-04 13:57
இனி தெருவில் பேப்பர் பொறுக்கும் எந்த சிறுவனிடமும் "தம்பி. நீ மட்டும் நன்றாக படித்து வளர்ந்தால், நாளைக்கு ஒரு ஐ.ஏ.எஸ் ஆகலாம்" என்று சொல்லமுடியாது.... 'அந்த ஈன பொழப்புக்கு, பேப்பர் பொறுக்குவதே மேல்' என்று காரி முகத்தில் துப்பிடுவான்....!!!
Quote
 
 
+1 #21 Dubai Mathan 2012-01-04 13:44
ம்ப வாங்குவதெல்லாம் நடக்கக்கூடிய காரியமில்லை. கொடுக்கப்பட்ட பணமும் இப்போது மிடில்-ஈஸ்ட்டில் இல்லை. மன்னார்குடி குடும்ப வெளியேற்றமும் தற்காலிகம் என்பதாகவும் தெரியவில்லை. முதல்வர் எந்த நிமிடத்திலும் காவல்துறையில் மாற்றங்கள் செய்யலாம். ஏற்கனவே சசி குரூப்பின் கன்ட்ரோலில் உளவுத்துறை இல்லை.

ஜாபர் கேஸ் மீண்டும் கிளறப்பட்டால், அதிலிருந்து தப்புவதற்கு வேறு யாராவது ஒருவரின் தயவு தேவை! (மிடில்-ஈஸ்ட் நபர் தமிழகத்தில் தலையைக் காட்டாதவரை சேஃப்!)

-விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி
Quote
 
 
+2 #20 Dubai Mathan 2012-01-04 13:42
காவல்துறை வட்டாரங்களில் மீண்டும் ஜாபர் சேட்டின் பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது. கடந்த வருடத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகளிலேயே ராஜ்யத்திலிருந் து பூஜ்ஜியத்துக்கு சென்றவர்களில் நெம்பர் ஒன் அவர்தான். திடீரென ரெயிடு, சஸ்பென்ஷன் என்று அவரது விவகாரம் வேகம் எடுக்கத் தொடங்கியபோது, இனி ஜாபரின் கதை அவ்வளவுதான் என்று நினைத்தார்கள் பலர்.

ஆனால், ஜாபர் தனது உளவுத்துறை கனெக்ஷன்களை வைத்துக்கொண்டு மன்னார்குடி குடும்பத்தில் ஒருவருடன் டீல் ஒன்றைப் போட்டுத் தப்பித்துக் கொண்டார். ஜாபரின் வழக்குகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுவிட, அவரும் அடக்கி வாசித்துக்கொண்ட ு இருந்தார்.

இப்போது மீண்டும் சோதனையாக, அவரது காவல் தெய்வத்துக்கே கல்தா கொடுக்கப்பட்டுள ்ளது.

தி
Quote
 
 
0 #19 T G Ramamurthy 2012-01-04 13:06
[ஃஉஒடெ நமெ="ட் க் றமமுர்த்ய்"]நிறைய சாப்பிடுபவனுக்க ு நிறைய் ஆசை இருக்குமா்ம். ்்போறப்போ என்னத்தை ுஎடுத்துட்டு போவான்களோ
Quote
 
 
+1 #18 shareef 2012-01-04 12:52
சவுக்கு SUPER YA
WELDON MAN
Quote
 
 
+1 #17 naan vellore 2012-01-04 10:54
ஏதாவது செய்ய வேண்டும் பொலிருக்கிறது. வலிக்கிறது.
Quote
 
 
+3 #16 இராம இளங்கோ 2012-01-04 10:04
லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தியும் ICS படித்த நேத்தாஜியும் பிழைக்கத் தெரியாதவர்கள்.
Quote
 
 
+1 #15 cho 2012-01-04 09:48
Good investigation. Keep it up. Can you please file a PIL or RTI to follow up with your complaint to make sure all the 11 allotments are cancelled.
Quote
 
 
+17 #14 Padman 2012-01-04 07:18
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகத்தில் நேர்முக தேர்வுக்கு போகும்போது இந்த அதிகாரிகள் மனதில் இருந்த இலட்சியம் கொஞ்சம் கூடவா இப்பொழுது இல்லை. என்ன சாரே இப்படி இருக்கீங்க? உங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் மூன்றெழுத்திற்க ுமேல் வேறு என்ன சார் சொத்து வேண்டும்? அந்த மூன்று எழுத்தை நம்பிதான் உங்களின் பல பேரின் மனைவி உங்களை கரம்பிடித்திருப ்பார்கள். நேர்மையும் எளிமையும் மதிப்பிட முடியாத சொத்துக்கள் என்பதை எப்படி மறந்தீர்கள்?
Quote
 
 
+13 #13 g narayaNan 2012-01-04 06:49
இவர்கள் எச்சிலிலை நாய்களிலும் கேவலமானவர்கள். அவைகளவது பசி தீர்ந்த வுடன் போய்விடும்....... :eek:
Quote
 
 
+5 #12 kadarkkaraivaasi 2012-01-04 01:04
இந்த கூறு கெட்ட குறுமதியாளர்களா ல் வளம்மிக்க நம்நாடு வறண்டு கிடப்பதை கண்டு.... நெஞ்சு பொறுக்குதில்லைய ே...
இந்த ஜென்மங்கள் எல்லாம் எப்போது திருந்தும்?... பேராசையே இவர்களைக்கண்டு வெட்கப்படும்... இந்தப்பரதேசிகள் எப்போது பரலோகம் போவர்களோ...

இந்தப்பரதேசிகள் பரலோகம் போனால்தான் நம்தேசம் பாரில் பெரியதாகுமோ
Quote
 
 
+12 #11 kumaresan kumar 2012-01-03 21:43
ஸ்னேக் பாபு கண்னுல ஒரு பயம் தெரியுது கவனிச்சிங்களா? இவர்தான் என்கவுன்டர் வீரராம்.சும்மா துப்பாக்கி வச்சிட்டு ஒன்னும் இல்லாம வெறுங்கையோடு நிக்கிறவங்களா சுட்டாதான் என்கவுன்டர் வீரன் என்ற பெயர் கிடைக்கும்.
Quote
 
 
+8 #10 kumaresan kumar 2012-01-03 21:37
எங்க ஊர்ல ஸ்னேக் முருகன்னு ஒருத்தர் இருக்காரு.அவர்கிட்ட இந்த ஸ்னேக் பாபுவை பிடிச்சி கொடுத்திடுறேன்.
Quote
 
 
+1 #9 Satheesh 2012-01-03 21:37
என்ன கொடுமை இது......... :sad:
Quote
 
 
+4 #8 T G Ramamurthy 2012-01-03 21:35
நிறைய சாப்பிடுபவனுக்க ு நிறைய் ஆசை இருக்குமா்ம். ்்போறப்போ என்னத்தை ுஎடுத்துட்டு போவான்களோ
Quote
 
 
+6 #7 suresh nellai 2012-01-03 20:15
it would be appreciate if you could write about honest IAS and IPS officers
Quote
 
 
+23 #6 Lusty Leo 2012-01-03 20:05
வெளிநாட்டில் நாக்கு தள்ளும் அளவுக்கு வேலை பார்த்து, எத்தனையோ அசிங்கங்களையும் அவமானங்களையும் பொறுத்துக்கொண்ட ு, வயித்தக்கட்டி வாயைக்கட்டி சம்பாதிச்சா, மாசக் கடைசியில பர்சுல ஒன்னுமே மிஞ்சுறதில்ல. வீடு வாங்கணும்னு காணும் கனவு, கனவாவே இருக்கு. ஆனா இவனுங்களுக்கு, ஒயிட் காலர் ஜாப். டேபிளுக்கு மேல, கீழந்னு 2 சம்பளம், சொகுசு கார், வீடு... ம்ம்ம்ம்... என்ன சொல்லி என்ன பண்ண.. எல்லாம் அவங்கவங்க அப்பாரு கோ... அவுத்த நேரம்...
Quote
 
 
+12 #5 குட்டி 2012-01-03 19:46
அடேங்கப்பா!!!!! எனக்கு ஒன்று மட்டும்புரியவில ்லைசவுக்கு ச.. எப்படி இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃபெஸ் அதிகாரிகள் மட்டும் எல்லா ஆட்சிலும் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்....
Quote
 
 
+1 #4 rethinavelmorthy 2012-01-03 19:06
Good comedy savukku. you are telling Nabikal Nayagam's speech to these kind of people. ha ha.. if he knows already about the birth of these kind of people means definately he would not tell like this.
Quote
 
 
+11 #3 ARUTPERUNCHITHAN 2012-01-03 17:52
கூவம் நதிக்கரை ஓரத்தில் வசிப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் கட்டும் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்....இவனுங்க கட்டிக்கொள்கிற அந்த அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டுபவர்களும் பாதையோரத்தில் வசிக்கும் அவர்கள் தான்......இந்த பதிவை அந்த உயர் உயர் அதிகாரிகளை விட அவர்கள் மனைவிகளும் குழந்தைகளும் படிக்கவேண்டும்.அவர்கள் மனதில் மனிதம் முகிழவேண்டும்.
Quote
 
 
+14 #2 சோழன் 2012-01-03 15:54
கருத்து தெரிவிக்கவே மனது வலிக்கிறது! நாமும் எதாவது ஒரு விதத்தில் குற்றவாளியோ? என்று! என்ன மனிதர்களோ! மலம் திண்ணிகள்!
Quote
 
 
+34 #1 vino 2012-01-03 14:56
i came to know that snake babu owns 10 ground land @ nerkundram, with 100 coconut trees which was collected as dowry.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 70 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5515
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week75256
mod_vvisit_counterLast week78106
mod_vvisit_counterThis month197856
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12719975