முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சிறு வெற்றி.... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 19
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 05 ஜனவரி 2012 07:25

இன்னும் எவ்வளவுதான் வேண்டும் என்ற கட்டுரையில் சவுக்கு அரசு விருப்புரிமைக் கோட்டாவில் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்ற உயர் உயர் அதிகாரிகள் நெற்குன்றம் வீட்டு வசதி வாரிய “Own your house” என்ற திட்டத்தின் கீழ் மீண்டும் மோசடியாக ஒதுக்கீடு பெற்றுள்ளனர் என்று விரிவாக எழுதப் பட்டிருந்தது.   இவ்வாறு மோசடி ஒதுக்கீடு பெற்ற 11 ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒதுக்கீடுகளை ரத்து செய்யுமாறு புகார் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.

இது குறித்து நேற்றைய டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், காவல்துறை அதிகாரிகள் எப்படி வீட்டு வசதி வாரிய வீடுகளை கபளீகரம் செய்கிறார்கள் என்று விரிவான செய்தி வெளியிடப் பட்டிருந்தது.

04_01_2012_001_030

04_01_2012_006_032

அந்த செய்தி தொடர்பாக ஸ்னேக் பாபுவை தொடர்பு கொண்டு கேட்ட போது, “நாங்கள் முகப்பேரில் வீட்டு வசதி வாரிய மனையைப் பெறும் போது, அது சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இல்லை.   அதனால் அந்த விதி எங்களுக்குப் பொருந்தாது” என்று விளக்கம் அளித்தார்.   சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் திரிபாதியிடம் கேட்கப் பட்ட போது “நாங்கள் விண்ணப்பித்தோம்.  வீட்டு வசதி வாரியத்தை யார் ஒதுக்கீடு செய்யச் சொன்னது ?” என்று கூறியிருக்கிறார்.  (நல்லா இருக்கு சார் உங்கள் நியாயம்)

மோசடியாக ஒதுக்கீடு பெற்ற 11 ஐபிஎஸ் அதிகாரிகளின் நெற்குன்றம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று 28.12.2011 அன்று அளிக்கப் பட்ட புகாரின் எதிரொலியாக, வீட்டு வசதி வாரியம், நெற்குன்றத்தில் ஒதுக்கீடு பெற்ற அனைவருக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.    அந்தக் கடிதத்தில் விரிவாக்கப் பட்ட சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு பெற்றிருந்தாலும், அவர்களுக்கு நெற்குன்றத்தில் ஒதுக்கீடு செய்யப் பட மாட்டாது.  இது குறித்த விபரங்களை பொங்கலுக்குள் வழங்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளது என்ற செய்தியை சவுக்கு தனது வாசகர்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.

05_01_2012_001_010

05_01_2012_004_006

டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ், தமிழ்நாட்டின் ஆதர்ஷ் ஊழல் என்று நெற்குன்றம் திட்டத்தை வர்ணித்துள்ளது.  வீட்டு வசதி வாரியத்தில் ஏற்கனவே ஒதுக்கீடு பெற்றவர்கள் மட்டுமல்ல, சென்னை நகரம் மற்றும் புறநகரில் வீட்டு மனையோ, வீடோ, அடுக்கு மாடிக் குடியிருப்போ, தனது பெயரிலோ, தன் குடும்பத்தினரின் பெயரிலோ வைத்திருக்கும் எந்த அதிகாரிக்கும் நெற்குன்றத்தில் ஒதுக்கீடு செய்யப் படக் கூடாது என்பதே நியாயமான செயலாக இருக்கும். இருப்பினும், அநியாயத்துக்கு போங்கு ஆட்டம் ஆடிய 40 சதவிகித ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடு அம்பேல் என்பது ஒரு சிறு வெற்றி.   இந்த வெற்றியை தனது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே நேரத்தில் இந்தச் செய்தியை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கும், இச்செய்தியை சிரத்தையோடு வெளியிட்ட அன்புத் தோழர்கள் கார்த்திகேயன் மற்றும் ரகு ஆகியோருக்கும், சவுக்கு தனது மனமார்ந்த நன்றியை தனது வாசர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளது.

சிறிய வெற்றியாக இருந்தாலும், அது அளிக்கும் மகிழ்ச்சி பெரிதாகத்தான் இருக்கிறது.  அதே நேரத்தில் ஸ்நேக் பாபுவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது... அய்யோ வடை போச்சே !!!!!!!

 

Comments  

 
0 #32 செல்லம் 2012-01-16 22:16
அசத்து அசத்து கலக்கு கலக்கு
Quote
 
 
0 #31 princemoney 2012-01-09 22:56
sir i want to know that the Maran's 2G CBI Case. What is the present position now.
Quote
 
 
0 #30 princemoney 2012-01-09 22:52
Dear Savukku

I want to know about the Maran's 2G Scam case. I want to know more about it.
Quote
 
 
+7 #29 கொலவெறி கோவாலு 2012-01-07 14:42
சென்னை காவல்துறை கமிஷனருக்கு மாசம் மாமூலா கிடைக்கிற பணமே சில பல கோடிகள் இருக்கும்...அத வச்சு நெற்குன்றம் என்ன பிஸ்கோத்து..அந்த நெலாவுலேயே இடம் வாங்குவாங்க தொரமாருங்க..ஆ..ரைட் ரைட் போயிகிட்டே இரு..
Quote
 
 
+2 #28 Gundu Malli 2012-01-07 14:03
என்ன பாஸ்


நல்ல செய்தி, பாராட்டுக்கள்


நல்லாதான் எழுதுறீங்க பாஸ்..


கலக்கு கலக்கு
Quote
 
 
-4 #27 sebastian 2012-01-07 13:57
'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி இந்த வார நக்கீரன் புலனாய்வு இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி வருகின்றனர்.

With the help of NARENDRA MODI's "deadly attack group- which killed muslims in Gujarat before, and RSS support in Tamilnadu ADMK cadres(now,Hind u salafists or Vishwa Hindu Parishad-VHP) rampaged and terrorized the streets of Tamilnadu- which was once called "peace park".-- http://tamil.oneindia.in/news/2012/01/07/tamilnadu-admk-cadres-attack-nakkheeran-office-aid0136.html
Quote
 
 
+1 #26 P.R.Rajendran 2012-01-06 22:53
Dear Savukku,Really good.Be careful.Please take care of yourself.
Quote
 
 
+1 #25 satheesh 2012-01-06 22:13
இல்லாதவர்கலுக்க கு வீடு கிடைத்தால் நன்ரு :-)
Quote
 
 
0 #24 UYUIIYIYI 2012-01-06 15:59
:sigh: :roll: :P :zzz :eek: :-? :D :lol: :-) ;-) 8) :-| :-* :sad: :oops:
Quote
 
 
+7 #23 கருவாவாவாவா யா 2012-01-06 08:46
சிறு வெற்றி தான்



இன்னும் எவ்வல்லவோ இருக்கு

சவுக்கு சார்
Quote
 
 
+6 #22 Padman 2012-01-06 02:48
அது என்ன பாஸ்... முன்னாடி பாம்பாட்டி சித்தர்... இப்பொழுது சினேக் பாபு? பதவி உயர்வா... இல்ல படுகுழியா?

ஐ.பி.எஸ் பயிற்சியில் பயிற்சி எடுத்துகிட்ட நண்பர் இவரைப் பற்றி ஆகா ஓகோ அப்படின்னு புகழ்ந்து தள்ளிட்டார்... ரோல் மாடல்... அப்படி இப்படின்னு...

ஆனா நீங்க இப்படி எழுதுறீங்க...

நீங்க எப்பவும் நேர்மையாகத்தான் எழுதுறீங்க... அது எங்களுக்கு நல்லாவே தெரியும்.

பதினைந்துக்கும் அதிகமான அதிகாரிகள் இதிலிருந்தாலும் எதுக்கு பாபு... பாபுவுக்கு மட்டும் கட்டம்?

ஒய் திஸ் கொலவெரி பாபு?
Quote
 
 
+4 #21 Suresh nellai 2012-01-06 01:12
Congrats mr. savukku sankar.
Quote
 
 
+10 #20 k.anbu 2012-01-06 00:21
ஸ்நேக் பாபு திண்டுகல் மாவட்டத்தில் வேளை பார்தபோது பழனியில் விபூதி கடை வைத்துஇருப்பவரி ன் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூரி எல்லாம் முடிந்ததும் ஏமாட்ட்ரியதாக பழனியில் பேசபடுவது பற்றி கூறுங்கள். பின்னர் இது சமந்தமாக ஜு.வி-யில் ஏதோ செய்தி வந்தது.
Quote
 
 
+6 #19 Avinash 2012-01-05 22:51
ஜாஃபர் சேட் இல்லாமலே சவுக்கு இந்த போடு போடுது நா.. இருந்திருந்தா??? :P
Quote
 
 
+1 #18 Fraud and antisocial 2012-01-05 22:35
in TNHB quota already for govt servant has 35%. so TNHB cannot do special project/quota for Govt servant. It is violations. And already two norms are there,
1. flat/plot/house to be allotted to persons who does own plot/flat/house in name or his family name.
2. Allottee should be Nativity of Tamilnadu.
3. (newly added) Previously allottee should get flat/plot/house under GDQ from the THNB. (this condition because some of them may got plot/flat and house under GDQ may be sold to some others). so they added this norms also.
Quote
 
 
+8 #17 kumaresan kumar 2012-01-05 21:57
கோவையில் சிறுதுளி செய்யும் அட்டகாசங்கள் உங்களுக்கு தெரியுமா? நண்டன்கரை என்ற இடத்தில் அணையை தோண்டி அந்த அணை அருகே சிறுதுளி அறங்காவலர் வனிதா மோகன் அருமையான ரிசார்ட்ஸை கட்டியிருக்கிறா ர்.அது பற்றி செய்தி வெளியிடுங்கள் என்றால் எந்த பத்திரிகையும் அதற்கு செவி சாய்க்கவில்லை.ஒரு முறை டைம்ஸ் நிருபரிடம் சொன்னேன்.அவர் சொன்னார் எங்கள் அலுவலகமே அவர்கள் கட்டிடத்தில்தான ் இயங்குகிறது என்றார் வாயையும்..... அதையும் பொத்திக் கொண்டு நடந்தேன்.
Quote
 
 
+7 #16 kumaresan kumar 2012-01-05 21:54
இந்த செய்தியை வெளியிட்ட சவுக்கை வாழ்த்துகிறேன்.தயவு செய்து இந்த பிரிண்டிங் மீடியாக்களை நம்பாதீர்கள்.உங்களிடம் ஒரு செய்தி இருந்தால் மட்டுமே வருவார்கள்.உங்களை நம்புங்கள் செய்தி வெளியிடுங்கள்.தயவு செய்து அந்த பத்திரிகை வெளியிட்டது.இந்த பத்திரிகை வெளியிட்டது என்று சொல்ல வேண்டாம்.ஏனென்றால் பத்திரிகைகளின் சுயரூபம் எனக்கு தெரியும்.காவல்துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்படும் அதிகாரம் இருந்தால் பிரின்டிங் மீடியாக்களின் சுயரூபம் வெளிப்படும்.அதுவும் இந்த ஸ்னேக் பாபு-வின் கையில் இருந்தால், உங்கள் செய்தி அம்போதான்...
Quote
 
 
+6 #15 kumaresan kumar 2012-01-05 21:42
தமிழகத்தில் சில பத்திரிகையாளர்க ள் அடிக்கடி அரசு மருத்துவமனையை பற்றி எழுதுவார்கள்.ஏனென்றால் அரசு மருத்துவமனை கேஸ் போடாது.அல்லது அந்த செய்தியை சீண்டவும் செய்யாது.அதுபோல்தான் இந்த செய்தியும், போலீஸ் துறையில் இருந்து யாரும் இந்த செய்தியை சீண்ட மாண்டார்கள்.கேஸ் போட மாட்டார்கள்.அதனால் போட்டிருக்கு.இந்த பத்திரிகைக்கு மட்டுமல்ல எந்த பத்திரிகைக்கும் தமிழகத்தில் சமுதாய கண்ணோட்டம் கிடையாது.செய்தியாளர்களுக ்கு ஒரு செய்தி வேண்டும்.அதற்காக சவுக்கை பார்த்து ஆங்கிலத்தில் எழுதி கொடுத்திருக்கிற ார்.டெக்கான் கிரானிக்கிள் பப்லீஸ் செய்திருக்கிறது . இன்னொரு விஷயம் இந்த டெக்கான் கிரானிக்கள் கறுப்பு பணத்தில்தான் இயங்குகிறதாம்.பொழுது போக்கிற்காக நடத்தப்படுகிறதா ம்.ஏனென்றால் நான் அந்த பத்திரிகையில் பணிபுரிந்திருக் கிறேன்.அடிமைத்தனத்தின் உண்மை முகவரி இந்த பத்திரிகை.
Quote
 
 
+3 #14 Suresh Kannan 2012-01-05 20:50
HATS OFF TO SAVUKKU. AWESOME
Quote
 
 
+3 #13 springjanani 2012-01-05 20:16
அரசில் வேலை பார்க்கும் ஊழியர்கலுக்கு அரசு நிலம் ஒதுக்குவதில் அடிப்படை தவரு கிடையாது.சினிமா ஆட்களுக்கு ஒதுக்கும் போது
ஊழியர்களுக்கு ஒதுக்குவதில் சில நியதிகளுக்கு
உட்பட்டு ஒதுக்குவதில் தவறு இல்லை.ஒன்றுக்கு மேல் ஒதுக்குவது தவறு.
Quote
 
 
0 #12 Karunanidhi Jalsa 2012-01-05 20:09
புதுவருடத்தை வரவேற்கும் வகையில் கொழும்பு, ரமாடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந ்த களியாட்ட நிகழ்வில் இலங்கை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா, தனது பிரத்தியேக செயலாளருடன் ஜல்சா புரிவதை படங்களில் காணலாம் !

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1484
Quote
 
 
+23 #11 Padman 2012-01-05 18:13
நல்லாதான் எழுதுறீங்க பாஸ்...

எங்கு ஓட்டை இருந்தாலும் சிரமம் எடுத்து ஆப்படிக்கிறீங்க .

இதுதான் திரில்லான லைப்.

கொஞ்சம் பொறாமையாயிருந்த ாலும் வாழ்த்துக்கள்.
Quote
 
 
+16 #10 jagant 2012-01-05 17:19
நல்ல செய்தி, பாராட்டுக்கள் சவுக்கு.
"சிறு உளிதான் மலையையும் பெயர்க்கும்" என்று கூறப்படுவது மீண்டும் உண்மையாகியிருக் கிறது.
Quote
 
 
+3 #9 kandasamy 2012-01-05 16:10
மும்பை யில் எதெ உழலுக்கு ஆட்ஷியெ போனது அன நம்ம ஊர்ல எப்படி
Quote
 
 
+14 #8 சோழன் 2012-01-05 11:43
பிச்சையா டா எடுக்குறீங்க? ஊஙகளுக்கு எல்லாம் ஏன் டா இந்த நாய் பொழப்பு? அத விட வேற எதயாவது இன்னொருத்தன் கிட்ட விட்டு காசு வாங்குங்க டா நாய்களா!
Quote
 
 
+4 #7 savukku reader 2012-01-05 11:07
Well done, Savukku Sir. You are the only savior who is continously doing such good things.No words to express my feelings. Really great!
Quote
 
 
+14 #6 sbasenthil 2012-01-05 10:44
மற்ற பத்திரிக்கைகளுக ்கு இந்த அக்கறை இல்லையா? சவுக்கு புண்ணியத்தால் இந்த விஷயம் தெரிந்தது.

மாறன் சகோதரர்கள் எண்ண ஆனார்கள்? இது பற்றி ஒரு பதிவு வேண்டும்.
Quote
 
 
+29 #5 வால்டர் வணங்காமுடி 2012-01-05 10:33
என்னை மாதிரி ஆளுங்களால கமெண்டு மட்டும் தான் போட முடியும். ஆனா நீ தான்யா உண்மையான போராளி...!!! வாழ்த்துக்கள் சவுக்கு.
Quote
 
 
0 #4 kutti 2012-01-05 10:29
ஒபெனிங் லம் நல்லாயிருக்கு..ஆனா finishing சரியில்லைபா
Quote
 
 
+9 #3 mahesh_new 2012-01-05 10:21
Good reporting Savukku.. It demands a lot courage to mess with all top cops, that too in ADMK reign. Please keep the good work of denting wrong doings of wrong policemen, nevertheless of DMK/ADMK powered bureaucrats.
Quote
 
 
-1 #2 m.s.sivaghugan 2012-01-05 09:47
You are writing about Sanke babu.That is fine.IN the same way our Madras commisioner J K Thiripathy also got the house.So he is also not honest.Why you are not writing about hime too?Even Vijayakumar IPS,N>Nataraj also got the house as per the allocation of Gov
Quote
 
 
+48 #1 karthikPrabhakaran 2012-01-05 08:27
ஏழைகளின் வயித்தெரிச்சல் சும்மா விடுமா .

திரிபாதி சார்... கவலைப்படாதிங்க.. அவனுங்க குடுக்காட்டி என்ன.. இன்னும் ஒரு ஆறு மாசத்துல நாமலே கஷ்டப்பட்டு உழைச்சு(????) போட் கிளப்ல்லயோ இல்ல அடையாறுலயோ ஒரு வீடு வாங்கிரலாம் சார்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 426 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10335
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week80076
mod_vvisit_counterLast week78106
mod_vvisit_counterThis month202676
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12724795