|
இந்த கடிதத்தை உங்களுக்கும் காமராஜுக்கும் சேர்த்தே எழுதலாம் என்றுதான் முதலில் தோன்றியது. நீங்கள் உழைப்பால் இந்தப் பத்திரிக்கையை வளர்த்தீர்கள். வலம்புரி ஜானின் உதவியாளராக உங்கள் வாழ்க்கையை தொடங்கி இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் தளபதி காமராஜ் ஒரு ஆண் நீரா ராடியாவாக இன்று உருவெடுத்திருக்கிறார். அவரை எந்த வகையிலும் ஒரு பத்திரிக்கையாளராக ஒப்புக் கொள்ள முடியாது என்ற காரணத்தாலேயே, இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் எழுதப் படுகிறது.
நக்கீரன் பத்திரிக்கை இன்று ஒரு அசாதாரணமான நெருக்கடியில் உள்ளது. நெருக்கடி நக்கீரன் பத்திரிக்கைக்கு புதிதல்ல என்றாலும், இது ஒரு அசாதாரணமான நெருக்கடி.
மற்ற பத்திரிக்கைகளை விட, நக்கீரனுக்கு ஒரு தனி இடம் உண்டு. பெரும்பாலான பாரம்பரிய ஊடகங்கள் பார்ப்பன தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் சூழலில், நக்கீரன் இதழ் தொடங்கப் பட்டு, பெரிய பின்புலம் இல்லாமல் உருவாகியது. நக்கீரன் இதழ் தொடங்கப் பட்ட போது, இது இன்னும் ஆறு மாதமோ, அல்லது ஒரு வருடமோ என்று ஆருடம் கூறியவர்கள் பலர். ஆனாலும் நக்கீரனின் வளர்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது, நக்கீரன் மீது தொடுக்கப் பட்ட ஒடுக்குமுறைதான். 1991 அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, 2001 அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, நக்கீரனை அதிமுக ஆட்சி படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
1991 ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஜெயலலிதா அரசுக்கு எதிராக நக்கீரன் இதழ் வெளிக் கொண்டு வந்த பல்வேறு ஊழல் குறித்த செய்திகளும், அதிமுக அரசின் அடக்குமுறைகள் குறித்த செய்திகளும், பொதுமக்கள் மத்தியில் நக்கீரனுக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. 1996ல் திமுக ஆட்சி வந்ததும், உங்களுக்கு மிகுந்த நற்பெயரும், கருணாநிதியின் நெருக்கமும் கிடைத்தது. ஆனாலும் கூட, 1996-2001 திமுக ஆட்சியையும் நீங்கள் விமர்சித்தே வந்தீர்கள். இப்போது அடிப்பது போல அப்போது ஜால்ரா அடிக்கவில்லை. ஆனால், திமுக ஆட்சியை விமர்சிப்பதை விட, ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளை வெளியிடுவதிலேயே நீங்கள் மிகுந்த அக்கறை செலுத்தினீர்கள்.
2001ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் அடைந்த வேதனைகள் சொல்லி மாளாது. 11 ஏப்ரல் 2003ல் உங்களை ஜெயலலிதா அரசு, போடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.
சத்தியமங்கலம் காவல்துறையினர் உங்களை கைது செய்து உங்களை சோதனையிட்டதில், நீங்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், தமிழ்நாடு விடுதலைப் படையின் துண்டுப் பிரசுரத்தை வைத்திருந்ததாகவும், உங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. கீழ் நீதிமன்றத்தில் உங்கள் ஜாமீன் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், ஆறு மாதங்கள் கழித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணையின் போது, ஜெயலலிதா அரசு உங்கள் மீது பொய்யாக வழக்கு புனைந்தது அம்பலமானது.
உங்களை கைது செய்ததாக நக்கீரன் இதழ் அலுவலக மேலாளருக்கு தந்தி அனுப்பிய ஆய்வாளர், “லைசென்ஸ் இல்லாத ஒரு ரிவால்வரை வைத்திருந்தார்” என்று தெரிவித்திருந்தார். அதன் பிறகு, தாக்கல் செய்யப் பட்ட எப்ஐஆரில் “கோபாலை சோதனையிட்ட போது ”ஒரு கன்ட்ரி மேட் பிஸ்டல், குண்டுகள் மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை துண்டுப் பிரசுரங்கள் வைத்திருந்தார்” என்று இருந்தது. 12 ஏப்ரல் 2003 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த டிஎஸ்பி, ”ஒரு நாட்டுத் துப்பாக்கி, 410 மஸ்கட் குண்டுகள் இரண்டு மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை துண்டுப் பிரசுரங்கள் வைத்திருந்தார்” என்று அறிக்கை தாக்கல் செய்தார்.
ஒரே சம்பவத்தில் மூன்று வெவ்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதிலிருந்தே, இந்த வழக்கின் உண்மைத் தன்மை விளங்குகிறது, அதனால் நக்கீரன் கோபாலை ஜாமீனில் விடுதலை செய்கிறோம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு, உச்சநீதிமன்றம் சென்று, உங்கள் ஜாமீனை ரத்து செய்தது. அதன் பிறகு நீங்களும், நக்கீரன் பத்திரிக்கையும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அடைந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அத்தனை நெருக்கடிகளுக்கிடையிலும், நீங்கள் தொடர்ந்து பத்திரிக்கையை நடத்தினீர்கள்.
அப்போது ஜெயலலிதா அரசு உங்கள் மீதும், நக்கீரன் மீதும் தொடுத்த அடக்குமுறைக்கு எதிராக ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமும் ஒன்றுபட்டு குரல் கொடுத்ததை நீங்கள் மறந்து விட மாட்டீர்கள். எழுத்தாளர் சுஜாதா கூட தனது கற்றதும் பெற்றதும் பகுதியில் உங்கள் கைதைக் கண்டித்து எழுதியிருந்ததாக நினைவு.
ஆனால், இன்று நீங்களும், நக்கீரனும் தனிமைப் பட்டு நிற்கிறீர்கள். உங்கள் மீது, அரசின் துணையோடு, வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை நேரடியாக பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் கூட, வெளிப்படையாக கண்டிக்க முன்வர மறுக்கிறார்கள். சம்பவம் நடந்த அன்று ஒரு பத்திரிக்கையாளர் சவுக்கிடம் சொன்னது. “எந்த ஒரு பத்திரிக்கை அலுவலகம் இப்படித் தாக்கப் படுதை நான் நேரில் பார்த்திருந்தாலும் என் ரத்தம் கொதித்திருக்கும். ஆனால் இன்று வாய்மூடி மவுனமாக இருக்கிறேன். இந்த நிலைமை மிகுந்த வேதனையை அளிக்கிறது. இப்படி ஒரு நிலைமை வருவதற்கு கோபாலும், காமராஜுமே காரணம்” என்றார். இந்தப் பத்திரிக்கையாளர் சொன்னதுதான் அனைவரது நிலையும்.
நீங்கள் இன்று அந்நியப்பட்டு நிற்பதற்கு காரணம், ஜெயலலிதாவைப் பற்றி நீங்கள் வெளியிட்ட செய்தி மட்டுமல்ல. 2006 முதல் 2011 வரையிலான உங்கள் நடவடிக்கைகளே. 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நக்கீரனின் நடவடிக்கைகளை நீங்களே பரிசீலித்துப் பாருங்கள். ஜெயலலிதா உங்கள் மீது எடுத்த பழிவாங்கும் நடவடிக்கைகளினால் உங்களுக்கு கோபம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதற்காக, திமுக ஆட்சியின் அராஜகங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அவற்றை ஆதரித்தல்லவா எழுதினீர்கள் ?
திமுக ஆட்சியில் கருணாநிதி பத்திரிக்கையாளர்களை படுத்திய பாடு கொஞ்சமான நஞ்சமா ?
ஜாபர் சேட்டை வைத்து பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகட்டும், அழகிரிக்கு எதிராக செய்தி வெளியிட்ட தினபூமி நாளிதழின் ஆசிரியரையும் அவர் மகனையும் கைது செய்ததாகட்டும், சீமான் கைது செய்யப் பட்ட போது பேட்டியெடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை அடக்கி ஒடுக்கியதாகட்டும், பெரும்பாலான ஊடகங்களை விளம்பரம் தர மாட்டேன் என்று மிரட்டியதாகட்டும், இத்தனையையும் நீங்கள் வாய் மூடி மவுனமாக ஆதரித்துக் கொண்டல்லவா இருந்தீர்கள் ?
இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று கதறும் நீங்கள், கடந்த திமுக ஆட்சியில் நெற்றிக்கண் மணியை ஜாங்கிட் படாத பாடு படுத்திய போது என்ன செய்தீர்கள் ? மற்ற விவகாரங்கள் தொடர்பாக கருணாநிதியை அப்போது சந்தித்த பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் நெற்றிக்கண் மணி விவகாரத்தை குறிப்பிட்ட போது, “அவன் அப்படி எழுதுவது மட்டும் சரியா ?” என்று கேட்டார் கருணாநிதி. கருணாநிதியின் கண்ணசைவோடுதான், ஜாங்கிட், நெற்றிக்கண் மணியின் குடும்பத்தையே பழிவாங்கினார். அப்போது எங்கே போனீர்கள் கோபால் ?
உங்களோடு இருக்கும் காமராஜ் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடினார் ? ஜாபர் சேட்டோடு அவர் செய்த தில்லுமுல்லுகள் அனைத்தையும் பொறுமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள் ? ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா சிக்கிய போது, அவரை ஆதரித்து நீங்கள் என்னவெல்லாம் எழுதினீர்கள் என்று நினைத்துப் பாருங்கள் கோபால் அவர்களே…. எவ்வளவோ முயன்றும், உங்களால் கடைசி வரை ராசாவை காப்பாற்ற முடியவில்லையே…. இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று குரல் கொடுக்கிறீர்களே…. உங்கள் தளபதி காமராஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்ட போது, காமராஜின் மனைவி ஜெயசுதா நீரா ராடியாவின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றுகிறார் என்று என்டிடிவி இந்துவில் ஒரு செய்தி வெளியாகியது. அந்தச் செய்தியை, என்டிடிவி இந்து தவிர்த்து, தேசிய நாளிதழ்கள் உட்பட பல்வேறு இதழ்களும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டன. ஆனால், என்டிடிவி இந்துவில் பணியாற்றும் ஒரு இளம் பத்திரிக்கையாளரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே காமராஜ் அவதூறு வழக்கு தொடர்ந்தாரே…. இன்று பத்திரிகை சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் நீங்கள் அந்தக் காரியத்தை தடுத்தீர்களா ? எப்படி அதை அனுமதித்தீர்கள்.
பத்திரிக்கையாளர்கள் ஊழலை வெளிக் கொணர வேண்டும். ஆனால் பத்திரிக்கையாளரே மத்திய மந்திரியோடு ஊழலில் ஈடுபட்டு, அந்த மத்திய மந்திரியைப் பாதுகாப்பதற்காகவே செய்திகளை வெளியிடுவது பத்திரிக்கை தர்மமா கோபால் அவர்களே… உங்கள் தளபதி காமராஜ் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல கோடி ரூபாயை சுருட்டியிருப்பதை மறைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கட்டுரைகள் எழுதி கவர்ஸ்டோரியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் ? மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராசா சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, மக்கள் பெருமளவில் திரண்டு அவருக்கு ஆதரவு அளித்தார்கள், தலித்துகளுக்கு எதிரான பார்ப்பன அரசியலின் பலிகடா ஆ.ராசா என்று செய்தி வெளியிட்டது எந்த ஊடக தர்மம் ?
போலிப் பாதிரியை வைத்து ஈழப் போராட்டத்தில் என்னென்ன துரோகங்கள் செய்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் கோபால். கேணல் ராம் என்பவரோடு பேட்டி என்று நீங்கள் வெளியிட்ட செய்தி எத்தனை மோசடி என்பது உங்களுக்குத் தெரியாதா ?
நக்கீரன் பத்திரிக்கை வளர்ந்ததே அதிமுக ஆட்சியில்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் தனிப்பட்ட பழிவாங்கும் போக்கால், நக்கீரன் மீது தொடுத்த நடவடிக்கைகள், அப்பத்திரிக்கையை உரம் போட்டு வளர்கவே செய்தன. ஆனால் அப்படி உரம் போட்டு வளர்ந்த நக்கீரன் பத்திரிக்கை 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், தன் வேர்களை இழந்தது என்றால் அது மிகையாகாது.
கருணாநிதி என்ன நினைக்கிறாரோ அதுவே நக்கீரனில் செய்தியானது. ஜாபர் சேட் மனதில் தோன்றுபவையே கவர் ஸ்டோரிகளாகின. பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கும் நக்கீரன் பயன்படுத்தப் பட்டது. ஒவ்வொரு தேர்தலின் போதும், நக்கீரன் வெளியிடும் சர்வேக்களை மக்கள் ஆர்வமாக வாங்கிப் படிப்பது வழக்கம். ஆனால், அந்த நம்பிக்கையை சட்டமன்றத் தேர்தலின் போது நக்கீரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பொய்யாக்கியது. ஊர் உலகமே, அதிமுக கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று எழுதிக் கொண்டிருந்த போது, நக்கீரன் மட்டும், பிரத்யேக சர்வே என்று திமுக கூட்டணிக்கு 120 இடங்களை வாரி வழங்கியது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று காலை கூட, நீங்கள் கலைஞர் டிவியில் அமர்ந்து கொண்டு, திமுக கூட்டணி பெருவாரியான வெற்றி பெறும் என்று மார்தட்டிக் கொண்டிருந்தீர்கள். இவையெல்லாம் உங்கள் மீதும், உங்கள் பத்திரிக்கை மீதும் நம்பிக்கையை குறைத்தன.
உங்கள் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய போது நீங்கள் வாசகர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நக்கீரன் எத்தனையோ சோதனைகளை தாங்கியிருக்கிறது. இதையும் தாங்கும்” என்றீர்கள். பத்திரிக்கை சுதந்திரத்துக்காக பிரச்சினைகளை சந்திப்பதும், ஊழலில் ஈடுபட்டு பிரச்சினைகளை சந்திப்பதும் ஒன்றா ? சமீபத்தில் நடந்த பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன ? இது தமிழக மக்களின் வாழ்வை பாதிக்கும் அதிமுக்கிய பிரச்சினையா ? மேலும், உங்கள் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ?
இன்றைய தினமணி தலையங்கத்தை எடுத்தாளுவது பொருத்தமாக இருக்கும்.
“அரசின் கொள்கை முடிவுகளை, செயல்திட்டங்களை, முறைகேடான நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்காக, விமர்சனம் செய்வதற்காக, இடித்துரைப்பதற்காகச் சுதந்திரம் பயன்படுத்தப்படும்போது அது அரசியல் சட்டத்தின் ஆதார சுருதியைச் சார்ந்ததாக இருக்கும். அதே சுதந்திரத்தை இழிவான முறையில் தனிநபர் தாக்குதலில் ஈடுபடப் பயன்படுத்தும்போது அதைவிடக் கீழ்த்தரமான கயமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.
அரசியல்வாதிகளுக்கு, அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, நீதித்துறையினருக்கு இல்லாத கடமையுணர்வும் பொறுப்புணர்வும் பத்திரிகையாளர்களுக்கு உண்டு. இவர்கள் சிந்தனாவாதிகள். சமுதாயம் இவர்களை வழிகாட்டிகளாகப் பார்க்கிறது. மேலே சொன்ன மூன்று பிரிவினரின் முடிவுகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி வழிநடத்தும் பொறுப்பைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்டவர்கள் இவர்கள். அதனால்தான் "படித்தவன் தவறு செய்தால் அய்யோ அய்யோவென்று போவான்' என்று மகாகவி பாரதி சொன்னார்.
இறந்துபோன இருவரிடம் காலம்சென்ற ஒருவர் எப்போதோ சொன்னதாக ஓர் ஆதாரமற்ற அவதூறுச் செய்தியை அட்டைப்படச் செய்தியாக்கித் தனது பத்திரிகை விற்பனையை அதிகரித்துக்கொள்ள நினைப்பது என்பதே தவறு. அதைவிடப் பெரிய தவறு, பொறுப்பான பதவியில் இருப்பவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி அவரது பெயருக்குக் களங்கம் கற்பிக்க விரும்புவது. இப்படிச் செய்பவர்களைப் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக்கொள்வதே அவமானம்.
"சீ, இதுவும் ஒரு பிழைப்பா?' என்று ஏனைய பிரிவினர் கேட்கிறார்களோ இல்லையோ நிச்சயமாகப் பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். அதுபோன்ற பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் தனிமைப்படுத்தி அகற்றி நிறுத்த வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.”
இன்று மற்ற பத்திரிக்கையாளர்களின் ஆதரவு கூட இல்லாமல், நீங்கள் தனிமைப் பட்டுப் போயிருப்பதற்கு இதுதான் காரணம் கோபால் அவர்களே. இந்த அட்டைப்படச் செய்தி, பத்திரிக்கை விற்பனையை அதிகரிப்பதற்கான மலிவான வியாபாரத் தந்திரம் என்பதை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் காமராஜின் செயல்பாடுகளால் நக்கீரன் மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு, இன்னும் தீரவில்லை. பெரும் செல்வந்தராக உருவாகியுள்ள காமராஜ் இந்த அட்டைப்படச் செய்தியின் பின்னணியில் உள்ளார் என்பது பத்திரிக்கை உலகில் அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இத்தகைய சூழலில், உங்களுக்காக யார் போராட்டம் நடத்த முன்வருவார்கள்.
இருப்பதிலேயே மிகுந்த வேதனையை அளிக்கும், மோசமான சூழல் எது தெரியுமா ? நல்லவர்களின் ஆதரவை இழந்து நிராதரவாக நிற்பதுதான். உங்களுக்கு திமுக தலைவரும், அவரின் தொண்டர் அடிப்பொடிகளும் ஆதரவாக குரல் கொடுக்கலாம். ஆனால் நல்ல பத்திரிக்கையாளர்கள் குரல் கொடுக்க வர மாட்டார்கள்.
பத்திரிக்கையின் விற்பனை சரிவடைந்து விட்டது என்பதற்காக விற்பனையை தூக்கி நிறுத்த அட்டைப் படத்தில் செக்ஸ் செய்திகளும், அவதூறு செய்திகளும் வெளியிடுவது வேசித்தனம். சவுக்கு தளம் இலவசமாக நடத்தப் படுவது. இத்தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் எவ்வித கட்டணமும் செலுத்துவதில்லை. ஆனாலும், சவுக்கு தளத்தில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறது சவுக்கு. இலவசமாகத்தானே தருகிறோம் என்று இஷ்டத்திற்கு பொய்யையும் புனைவையில் எழுதினால், ஒரே நாளில் சவுக்கு தனது வாசகர்களின் நம்பிக்கையை இழந்து விடும். ஒரு முறை நம்பிக்கையை இழந்தால், மீண்டும் அந்த நம்பிக்கையை பெறவே முடியாது. ஒரு இலவச தளத்திற்கே இப்படி கவனமாக இருக்கும் போது, 10 ரூபாய் கொடுத்து உங்கள் புத்தகத்தை வாங்கும் வாசகனிடம் பொய்யைத் திணிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
ஜெயலலிதா குறித்த கவர் ஸ்டோரி வெளிவந்த பிறகு இன்று நக்கீரன் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. நல்லவர்கள் நக்கீரனைக் கண்டு இன்று அறுவெறுப்படைந்து நிற்கிறார்கள் என்பதே உண்மை. இது நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம், கோபால் அவர்களே.. செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
அன்புடன்
சவுக்கு
|
Comments
Quoting புதியவன் ராஜ்:
உங்கள் பின்னூட்டங்கள் சுவாரசியமாக உள்ளன. ஆனால் நீங்கள் சொல்லவந்த செய்தி புரியவில்லை. என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்றும், அதன் 'மூலம்' எவை என்றும் பகிர்ந்துகொள்ளு மாறு வேண்டுகிறேன்.
It is the time, nakkeeran to die and gopal & co to run away from journalism..
அதாவது புலம்பெயர்ந்த தமிழர்களும், பிராமணர்களும், யூதர்களும் ஒரே இன அடிப்படையே , ஆனால் சிங்களாவர்களும் “கிழக்கு கரையோர” இந்தியர்களும், சீனாவிலிருந்து – India was repopulated through an eastern branch during 65,000 to 52,000 years ago என்று கூறுகிறார்கள்!.
அதாவது துக்ளக் சோ, சுப்பிரமணிய சுவாமி மூலம் “இந்துத்துவத்தை ” DNA ஆதரிக்க வேண்டும் !
சிங்களவர்களுடன் வாழ்ந்த எல்லைப்புர வன்னி, மட்டகளப்பு, கொழும்பு போன்றவற்றில் சிறிது பிரச்சனையிருந்த து. அந்த பிரச்சனையை “கோஷமாக” வைக்காமல், “தமிழுக்கு பிரச்சனை” என்று கோஷம் வைத்தது அயோக்கியத்தனம். இன்று TNA உட்பட கொழும்பில் யாருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார்க ள்?.
தமிழக அரசியல் தலைமைகளும், ஈழத்தமிழ் அரசியல்தளைமைகளு ம் தற்போது இலங்கைப்பற்றி அக்கறையில்லை, “புலம்பெயர் அரசியலிலேயே” அக்கறை.
சில தொலைக்காட்சிகளி ல் தற்போது “தமிழர்களின்” மரபணு(DNA) பற்றி கவலைப்படுகிறார் கள்.– Analysis: How to wipe out Islamic terror- DNA / Subramanian Swamy / Saturday, July 16, 2011- http://thefire.org/public/pdfs/6e0cda48154d74f6cf97b0f73d058de1.pdf?direct
India, China well on the path to strengthening ties: Yan – Friday 27 Nov 2009. Janata Party president Subramanian Swamy (left) and the Chancellor of the Vellore Institute of Technology University, G. Viswanathan, are also admiring the exhibits- http://www.hindu.com/2009/11/28/stories/2009112861301100.htm
அதாவது Haplogroups Y chromozome group என்ற ஆதிமனிதர்கள் ஆப்பிரிக்காவிலி ருந்து 80,000 ஆண்டுகளுக்கு முன்பு prehistory homosepiens என்ற முதல் migration ஏற்பட்டது. அதற்கு அடுத்ததாக 40,000 வருடங்களுக்கு முன்பு ‘Y-Adam’ > M168 > M89 > > M9 என்ற Eurasian Clan (தற்போதைய அரேபிய,யூத,ஐரோப ்பியர்). பிறகு, 30,000 year முன்பு, ‘Y-Adam’ > M168 > M89 > > M9 > M70
(தற்போதைய இந்திய ஆரியர் பிராமணர்). பிறகு 30,00 year முன்பு, ‘Y-Adam’ > M168 > M89 > > M9 > M20 (தற்போதைய தமிழர், கேரளா, கன்னடியர்) போன்றவர் தோன்றினார்கள் என்றும். தற்போது…
இந்தியாவை, இந்துத்துவத்தை தற்போது தற்காலிகமாக ஆதரிக்கத் துவங்கியிருக்கு ம் ENDLF போன்ற “இந்திய தேசிய வாதிகளுக்கும்?” சில விளக்கங்கள்.
தூக்கத்தில்கூட “தமிழ் தேசியம்” என்று அரற்றிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களுக் கு, அது எட்டிக்காயாக கசப்பது லேட்டஸ் TREND. அதற்கொப்பவே லேட்டஸ்ட் அயோக்கிய அரசியல்.
1965 தமிழக ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திபோது , Robert Hardgrave Jr, professor of humanities, government and Asian studies, suggests that the elements contributing to the riots were not instigated by DMK or Leftists or even the industrialists, as the Congress government of the state suggested, but were genuine frustrations and discontentment which lay beneath the surface of the people of the state. இப்படி கூறப்பட்டது, அதாவது கலைஞ்சர் கருணாநிதி இதன்மேல் கட்டுமரமாக மிதந்தார்.
1974 யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்ததை
The foreign delegates who attended the conference had also confirmed that the Police had fired into the air.
The government response: “The irresistible conclusion we come to is that the police on this night (10 January 1974) was guilty of a violent and quite an unnecessary attack on unarmed citizens”. இப்படி கூறப்பட்டது.
இனியாவது நக்கீரன் போன்ற சில மூன்றாம் தர பத்திரிகைகளும் இவ்வாறு நடந்துக்கொல்லாம ல் இருப்பது அவர்கள் செய்யும் தொழிலுக்கு நல்லது.
IN 2009, YOU STARTED WRITING ABOUT VEERAPPAN.
YOU PROMISED THAT IT WOULD BE CONTINUED.
WHAT HAPOPENED TO THAT ARTICLE?
கேள்வி:- கோப்பால் செய்தது தவறுதானே?
நெல்லை பாலாஜி:- கோபாலுக்கு எதிராக குதிப்பவர்கள் எத்தனைபேர் தினமலருக்கு எதிராக குதித்தார்கள்?
கேள்வி:- நீரா ராடியாவும் கனிமொழியும் தொலைபேசியில் பெசிக்கொண்டார்க லாமே?
கருணாநிதி:- யாரோ ரெண்டு பொம்பளைங்க போன்ல பேசிக்கிட்டாங்க உனக்கு இன்னா?
கேள்வி:- டேய் நீ கையை புடிச்சு இழுத்தியா?
வடிவேலு:- இன்னா கையை புடிச்சு இழுத்தியா?
கடைசிவரைக்கும் பதிலே வராது...
ஆனா கேள்விய மட்டும் நால்லா கேப்பாங்க...
டேய் உங்க அப்படக்கர் வேலை எல்லாம் இனிமே வேலைக்காவது ...
இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நக்கீரன் தரப்பு வழக்கறிஞர் பி.டி. பெருமாள், முதல்வரைப் பற்றி வெளியான செய்தியை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், அதற்கான மன்னிப்பு அறிவிப்பை பத்திரிகையின் முக்கிய பகுதியில் வெளியிடுவதாகவும ் தெரிவித்தார்.
அதற்கு முதல்வர் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், முதல்வரைப் பற்றி நக்கீரன் பத்திரிகை முதல் பக்கத்தில் தான் செய்தி வெளியிட்டது. எனவே மன்னிப்பையும் முதல் பக்கத்தில்தான் வெளியிடவேண்டும் என்றார்.
அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, இந்த மன்னிப்பை வரும் நக்கீரன் இதழில் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றார்.
உடனே நக்கீரன் தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே வரும் இதழுக்கான அச்சடிக்கும் பணி முடிந்து விட்டது என்றார்.
குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மின்சார இணைப்பு இல்லை என்றீர்கள். எப்படி அச்சடித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட ு இருந்தாலும் அதை மாற்றி விட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதை முதல் பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
[ஃஉஒடெ நமெ="ஊஸ்வ்"]நம்ம கோவாலு இல்ல கொவாலு.. ஏதோ ஒரு நாளு நாலு மணிக்கு மேல துணிச்சலா செஞ்சு பாப்போமேனு செஞ்சானாம்.. அன்னிக்கினு பாத்து எல்லா சாமான் செட்டும் திடீர் திடீர்னு உடையுதாம் சாயுதாம்.. அன்னிலெருந்து கொவாலு 4 மணிக்கெல்லாம் எச்கேப் ஆயிடுவானாம்.. ஏன் மாப்பிள இவ்ளோ பயம் இருக்கிரவன் எதுக்கு.....[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
ஹா ஹா...சூப்பர் நன்பா.....
சபாஷ் ! அருமையான தலையங்கம்.தினமணி
அதேசமயம் பொறுப்பான பதவியில் இருப்பவர் அடுத்தவன் பொண்டாட்டியை மாட்டுப்பெண் போன்று கூட்டி வந்து தோழியாக்குவது அவருக்கு இழிவாக தெரியலையா?
தனது இச்சைக்காக தமிழ்நாட்டையே ம.மா கும்பலிடம் லீசிற்கு விட்டது களங்கமாக தெரியவில்லையா?
எல்லாம் ஆடி முடிந்து ஓய்தபின் கிழவனை திண்ணையில் போடுவதுபோல் சசியை விரட்டிவிட்டால் பொறுப்பான பதவிக்கு கௌரவம் வந்துவிடுமா?
முதல்வரை வேறு எவரும் இழிவு படுத்த இனிமுடியாது,
இதில் மாட்டுக்கறியாவத ு ....புண்ணாக்காவது..
So it become akin to the American corporate strategy in south Asia- what was compared to the UNOCAL strategy in Afghanistan.
For Israel Semitic Hindus and Zoroastrianism was not the problem. In Iran Islam spread because of the Tyranny of Zoroastrian kings. In 19 th century German researchers wants to find the roots of "non semitic pagan religions" to escape Judo-christian identity- which lead them to Aryan and Vedic Hinduism. Adolf Hitler took this research along with Darwin theory to prosecute Jews.
Neo-con, Neo-libral and "semitic Hindus" say early semitic Jews were Pagans, but Islam and Christian were not Pagans or semits. ???
German research was rational and enlightened - lead to human origin but was abandoned because of WWs.
1979 Islamic revolution reversed to Iran's old traditional identity of forgotten Zoroastrianism along with abandoned German researches and modern European industrial successes and western values- they find it in Islam these values and in failed capitalist methods through "Muslim Brotherhood" now!.
This has been the problem for Israel now.
What is our problem now is, where is Hinduism?. The above said "semitic Hinduism" may help to satisfy Indian feelings against, past Muslim invasions and may give some tactical economic improvement for business communities,off icials and political parties- but strategically, if we follow a "mirage" we may land into great problems.
Hinduism was not a single religion, many forms of religious practice were assimilated. The forms of Saivism, Vaishnavism prevailed through arguments. Many Indian languages including Sanskrit and Tamil had this "Hindu thought precesses" before script form evolved. Old Tamil and Sanskrit were written in same script called "Devanagari script" only differed in scripts which reflected the geographical "accent"- which applies to all Indian languages.
Aryans means not God, but means Noble in Persian. The state of Taminadu in south of India was recent creation. The 1900 important for Tamil language was given mostly by British and Christian missionaries. Sankaracharya was born in present Kerala- but dont put him in Malayalee identity. After 1945 Kerala under influence of Communists, CIA (USA) used Tamilnadu and Karnataka in its favour in Cold war- there was conflicts based on this. After collapse of Soviet there was vaccuum in kerala, filled by Hindutva along with anti dravidian & Tamil. In Karnataka, VHP made inroad thru private college studied USA returns.
One part of Hinduism was "Zoroastrianism", has been represented in India by Arya Samaj, Ratan Naval TATA ect. Zoroastrianism was actually Hinduism, but slightly interpreted according to the understandings of Ancient Iran people- later this rational interpretation to vedic texts in sanskrit.
தினமலருக்கு எதிராக பொங்கி எழுந்து திட்டி கண்டனங்களை வெளியிட்டதை படிக்காமல் இப்படி சொல்லக்கூடாது. அதை எழுதிய நிருபருக்கு தரும அடி விழுந்ததை படிக்கவில்லையா???
[ஃஉஒடெ நமெ="ஆறுமுகம்"]இந்த உலகத்தில் இனி ஆளாளுக்கு நாட்டாமை பண்ண வேண்டி இருக்கும் ஏனா எல்லொருக்கும் தனித்தனி கருத்து இருக்கும் இப்படியே எழுதிகிட்டே இருக்க வேண்டியது தான். அதிகம் யோசித்தால் குழப்பம் தான். பல்லு உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான்... என்ன நான் சொல்றது...[/ஃஉஒடெ]
பக்கொடா உல்லவன் பல்ல சாப்பிட முடியாது.
******/
சூப்பர்... இந்த கேள்விக்கு எந்த பயலும் பதில் சொல்ல மாட்டனே??!!!.. ர.ரக்களே.... கொஞ்சம் மட்டைகுள்ள எதாவது இருக்கிறதா..தேவை நிதானம்.. மைலாபூர் மாபியா அவங்கே வேலைய காட்ட அரம்பிசுடனுவுக.. நீங்க கடைசிவரை அல்ல கைதான்...
Neenga solradha oru vivadhathuku vaichita, ipo adhu ullavan ellam vaelai seiya aarambicha oorla ulla pillaigaluku ena initial poduvaanga enna naan solradhu... Moolaya aandavan yosika matum koodukala bossu manasaatchiyoda oru thodarbu koduthu vishayangala seer thooki paarkavum thaan koduthirukaan
This is the View of Tuglak SO :Dravidian racists(DMK), lacking in pride, passion and patriotism, have joined hands with the Church and Christian establishments to alienate the Tamil region from the national mainstream. The situation is ominous, and we need to defeat the nefarious designs of vested interests at any cost. The present political climate in both Tamil Nadu and Sri Lanka is not encouraging and the political establishments are of no help in both regions. The onus lies on Tamils living in Tamil Nadu and Sri Lanka. They must re-Hinduise their identity and reiterate themselves with pride, passion and perseverance. They must understand that their language, music, art and architecture are all part and parcel of the Great Hindu culture inherited from the Vedic civilisation, which evolved along the sacred rivers Sindhu and Saraswati.
http://cdn.theatlantic.com/static/infocus/iran010612/s_i32_RTR2MC86.jpg
http://www.theatlantic.com/infocus/2012/01/a-view-inside-iran/100219/
The presiding deity is formless (Atmanatar); there is no Shivalingam but only a pedestal {Avudayar} located in the sanctum, hence the name Avudayar Koil.[2] His consort is worshipped as Siva Yoga Nayaki in iconless form. There is no Nandi bull icon. There is deep spiritual significance in the queerness. Hinduism allows deity worship only for beginners in the initial stage. As the devotee and his devotion matures, he has to realise the truth of formless. To illustrate the theology, the temple has been designed. This is the only Saivite shrine in whole of India to portray the supreme truth symbolically. Since the soul(athma) has no form, the deity is called Athmanathar.
you have already started losing it. your position now is same that of anna hazare. opposition against congress only even though bjp is also a corrupt party. so far you have not replied to a single comment about ur soft stance towards jaya.
நக்கீரன் தவரு பன்னியது ,சரி அதர்கு ஜயா அரசு பன்ரது சரி மாதிரி சவுக்கு சொல்வது நல்லது இல்லை.
நக்கீரன் நலல பத்திரிக்கையா இல்லையா? என்பது வாசகர்கலுக்கு தெரியும்
சவுக்கு, அரசு சரியா செயல்படுதா? என்பதை வாசகர்கலுக்கு சொன்னால் பொதும்
நக்கீரன் மாதிரி உனக்கு 2016 இல் இதெ கட்டுரை பாடமாக அமையும்
ஆனால் இந்தப்பிரச்சினை யில் நக்கீரனின் கட்டுரையை சவுக்கில் வாசித்தேன். அட்டையில் போட்ட வாசகத்தைத்தைத் தவிர தினமணி போன்ற பத்திரிக்கைகள் குதிக்கும் அளவிற்கு கட்டுரையில் குறை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அட்டையில் போட்ட வாசகம் கீழ்த்தரமானது. "மாட்டுக்கறி சாப்பிட்டதாகச் சொன்ன ஜெ" என்று எழுதியிருக்கலாம ். நக்கீரன் தனது தரத்திற்கு ஏற்ப எழுதியுள்ளது, அவ்வளவுதான். இதில் பார்ப்பண அரசியலையே முன்னிறுத்தும் தினமணி போன்ற பத்திரிக்கைகளெல ்லாம் அறிவுரை சொல்வதில் என்ன யோக்கியதை இருக்கிறது என்று தெரியவில்லை. விளம்பரம் கொடுத்தால் செய்தி, காசைப் பெற்றுக்கொண்டு கட்டுரை என்று இன்றைய ஊடகச் சூழலில் எந்தப் பத்திரிக்கைக்கு ம் இத்தகைய யோக்கியங்கள் இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை.
ஈழப் பிரச்சினையாக இருக்கட்டும், பரமக்குடி தலித்துகள் மீது தாக்குதலாக இருக்கட்டும், கூடங்குளம் அணு உலையாக இருக்கட்டும் பாதிக்கபப்ட்டவர ்களை, போராடுபவர்களைச் சிறுமைபடுத்துவத ிலோ அல்லது உண்மை வெளியே தெரியாத வண்ணம் செயற்படுவதிலேயே தான் இந்தப் பத்திரிக்கைகள் செயற்பட்டு வந்திருக்கின்றன . மூவர் தூக்கு விசயத்தில் செங்கொடி தீக்குளித்ததை, காதற் தோல்வியால் தீக்குளித்தார் என்று தினமலர் எழுதியது. இது என்ன ஊடக தர்மம்? நக்கீரனுக்கு எதிராக குதிப்பவர்கள் எத்தனைபேர் தினமலருக்கு எதிராக குதித்தார்கள்? மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று சொல்வதைவிட காதற் தோல்வியால் தீக்குளித்தார் என்று சொல்வது எவ்வளவு இழிவானது? சாதாரணமானவர்களை இழிவுபடுத்தினால ் தவறில்லை பதவியில் இருப்பவர்களை இழிவுபடுத்தினால ் ஊடக தர்மம் கெட்டுப்போய்விட ்டதா?
நக்கீரன் திமுகவுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதால் இந்தச் செய்திக்கும் இணையத்தில் பதிபவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகி றார்கள். ஆனால் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர ்கள், மற்ற பத்திரிக்கைக்கள ைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பதற்கும் , குறை சொல்வதற்கும் எத்தகைய தகுதியும் இல்லை.
is very bad
RSS feed for comments to this post