முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
நாம்தான் முட்டாள்கள்…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 16 ஜனவரி 2012 14:12

நக்கீரன் இதழில் ஜெயலலிதாவைப் பற்றி வெளியான செய்தியும், அதன் பிறகு நடந்த சம்பவங்களும் அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து ஒரு நாள் முழுக்க நக்கீரன் அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு தாக்கியதும், காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்ததும் தெரிந்ததே.

IMG_5378

“அம்மாவின்” மனதை குளிர்விக்க வேண்டும் என்று இந்த அரசு அதிகாரிகளும், தொண்டர்களும் நடத்திய நாடகங்கள் இருக்கிறதே…. அப்பப்பா…. முதலில் நக்கீரன் அலுவலகத்துக்கு மின் இணைப்பு நிறுத்தப் பட்டது.  பிறகு, குடிநீர் இணைப்பை நிறுத்த முயற்சி எடுக்கப் பட்டது.

அதிமுக தொண்டர்களும், தலைவர்களும், நக்கீரன் மீது எப்படிப் புகார் தொடுக்கலாம் என்று அலைபாய்ந்தார்கள்.  முதல் நாள் நக்கீரன் அலுவலகத்தில் தாக்குதல் நடந்த அன்று, சென்னை, ஜாம்பஜார் காவல்நிலையத்தில் நக்கீரன் மீது அளிக்கப் பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டது. அதாவது நக்கீரன் கோபாலும், காமராஜும், ஜெயலலிதாவைப் பற்றி வெளியான அவதூறு செய்தி குறித்து கேள்வி கேட்கச் சென்ற அதிமுக தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக. எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டது.  நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் தொடுத்ததாக அதிமுக எம்எல்ஏ அசோகன்  மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டது.

ஆனால், நக்கீரன் அலுவலகம் மீது காலை முதல் மாலை வரை வன்முறையை ஏவிவிட்ட அதிமுக தொண்டர்கள், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் போல, மாலையில் விடுவிக்கப் பட்டார்கள். நக்கீரன் அலுவலகத்தை அடித்து துவம்சம் செய்ய முயன்ற அதிமுக தொண்டர்கள் மாலையில் விடுதலை செய்த காவல்துறை, முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக மலையாளிகளின் கடைகளை அடித்த தமிழ் அமைப்பினரை கைது செய்து, ஜட்டியோடு நிற்கவைத்து, பத்திரிக்கையாளர்களை படமெடுக்கச் சொல்லி வேடிக்கைப் பார்த்தது.

இரண்டு வன்முறைச் சம்பவங்களுமே கண்டிக்கப் படவேண்டியவை என்பதில் சந்தேகம் இல்லை.   முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்காக பிழைப்புக்காக டீக்கடை நடத்துபவர்களை அடிப்பதும், தங்கள் தலைவியைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்காக பத்திரிக்கை அலுவலகத்தை அடித்து நொறுக்குவதும் கண்டிக்கத்தக்கவைகளே…  ஆனால், முதல் சம்பவத்தில் சம்பந்தப் பட்டவர்களை ஜட்டியோடு நிற்கவைப்பதும், இரண்டாவது சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை, அரசு மரியாதையோடு வீட்டுக்கு அனுப்பி வைப்பதையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

அடுத்த நாள் நக்கீரன் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  நக்கீரன் சார்பில், பாதுகாப்பு வழங்க வேண்டி தொடுக்கப் பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்தது.  நக்கீரன் வழக்கறிஞர் பெருமாள், குடிநீர் இணைப்பு துண்டிக்கப் பட்டது என்று கூறினார்.

தலைமை நீதிபதி, எதற்காக குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்தீர்கள் என்றார்.  இது குறித்து எனக்கு துறை ரீதியான அறிவுரை இல்லை. நாளை விசாரித்து விட்டு சொல்கிறேன் என்றார் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன்.   எரிச்சலடைந்த நீதிபதி, “நான் 15 ஆண்டுகள் அரசு வழக்கறிஞராக இருந்திருக்கிறேன்.  இது போல தயாரிப்பு இல்லாமல் நான் நீதிமன்றத்துக்கு சென்றதே இல்லை.  ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றனவே.  இது குறித்து தயாரிப்போடு வரக்கூடாதா ?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது நக்கீரன் சார்பாக, நக்கீரனுக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பில் மாசு ஏற்பட்டுள்ளதால் சரி செய்ய வேண்டி, குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்திருப்பதாக மெட்ரோ வாட்டர் சார்பில் வழங்கப் பட்ட நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

இதைப்பார்த்த நீதிபதி நொய்யல் ஆற்றில் மாசு ஏற்படுகிறது, சாயப்பட்டறை கழிவுகளால் மாசு ஏற்படுகிறது, அரசுக்கு நக்கீரனுக்கு செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து ஏற்பட்டுள்ள அக்கறை ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி விட்டு, வழக்கை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார்.

மறுநாள் வழக்கு விசாரணைக்கு வந்த போது, நக்கீரன் வழக்கறிஞர் பெருமாள், எழுந்து, நக்கீரன் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளது. அந்த கட்டுரையை வாபஸ் பெறுவதற்கும் தயாராக உள்ளது  என்று கூறினார். உடனே நவனீதகிருஷ்ணன், அவர்கள் அட்டைப்படத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.  பெருமாள், அட்டைப்படத்தில் மன்னிப்பு கேட்க முடியாது.  முக்கியமான இடத்தில் மன்னிப்பு வெளியிடப்படும் என்றார்.  உடனே தலைமை நீதிபதி இக்பால், அவதூறு செய்தியை அட்டைப் படத்தில் வெளியிடுவீர்கள், மன்னிப்பை மட்டும் உள்ளே வெளியிடுவீர்களா என்று கேட்டார்.

அதற்கு பெருமாள், இதழ் அச்சாகி முடிந்து விட்டது.  அதனால் அடுத்த இதழில் மன்னிப்பு வெளியிடப்படும் என்றார்.  அத்தோடு, மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது, உடனடியாக மின் இணைப்பு வழங்க உத்தரவிடுமாறு கேட்டார்.

நவனீதகிருஷ்ணன், இப்படிப்பட்ட அவதூறு செய்தியை வெளியிட்டு விட்டு, மின் இணைப்பை உரிமையோடு கேட்க முடியாது என்று கூறினார். (????)  மேலும், மின் இணைப்பு துண்டிக்கப் படவில்லை. அது ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என்றும் கூறினார்.

தலைமை நீதிபதி இக்பால், “நக்கீரனின் வழக்கறிஞர் நியாயமான முறையில், அட்டையில் (கவர்) மன்னிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.  இதை ஏற்றுக் கொண்டு, அடுத்த இதழில் நக்கீரன் இதழில் மன்னிப்பு வெளியிடப்படும் என்பதை பதிவு செய்து விட்டு, வழக்கை 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். மேலும் வரும் 14ம் தேதிக்குள், மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளும் வழங்கப் படும் என்று எதிர்ப்பார்க்கிறோம்” என்று உத்தரவிட்டார்.

மின் இணைப்பு துண்டிக்கப் பட்டது என்று நக்கீரன் இதழ் தெரிவித்தும், நீதிபதிகள் 14க்குள் இணைப்பு வழங்கும் என்று உத்தரவிடாமல், எதிர்ப்பார்க்கிறோம் என்று சொல்லியது மிகுந்த வருத்தத்தை அளித்தது.   அவதூறான செய்தியை ஒரு பத்திரிக்கை வெளியிட்டாலும், மின் இணைப்பை துண்டிக்க அரசுக்கு என்ன உரிமை, இதை ஏன்  நீதிமன்றம் கண்டிக்கவில்லை என்று வருத்தம் ஏற்பட்டது.

ஆனால், நக்கீரனின் நடவடிக்கைகளைப் பார்த்தால், அரசும், நக்கீரனும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது.  இந்த இதழில் நக்கீரன் வருத்தம் தெரிவித்திருக்கிறது. அந்த வருத்தத்துக்கு மேலே, நக்கீரனுக்கு ஓபாமா பாராட்டு என்று ஒரு செய்தி வேறு....  ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட செய்தியை பார்த்தால் ஓபாமா வாந்தியெடுத்திருப்பார். கடந்த இதழில் நக்கீரன் வெளியிட்டுள்ள வருத்தத்தை பாருங்கள்.

 

aaaaa

 

nakk

வருத்தம்

நக்கீரன்  Vol.24 No.76 2012   ஜனவரி 7-10 தேதியிட்ட இதழின் அட்டைப்படக்கட்டுரையாக வெளியான செய்தி, எந்தவித உள்நோக்கமும் இன்றி வெளியிடப்பட்டதாகும்.  ஆளுங்கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கொள்கை சார்ந்தும் அரசியல்ரீதியாகவும், சாதகமாக உள்ள தகவல் என்ற வெள்ளந்தி நோக்கத்தில்தான் நாம் இச்செய்தியை வெளியிட்டிருந்தோம். எந்த வகையிலும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழுக்கோ, இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கோ களங்கம் கற்பிக்கும் எண்ணம் நக்கீரனுக்கு சிறிதளவும் இல்லை.   இச்செய்தி வெளியானபின், நக்கீரன் எதிர்கொண்டவைகள் அனைத்தையும் வாசகர்களும் பொதுமக்களும் அறிவார்கள். எப்போதும் சட்ட உரிமைகளை பாதுகாக்கும் நீதிமன்றங்களையும், நீதியையுமே நம்பும் நக்கீரன் இப்போதும் அவற்றின் மீது நம்பிக்கை வைத்தே செயல்பட்டு வருகிறது.  நக்கீரனின் அட்டைப்படச் செய்தியை தவிர்த்திருக்கலாம் என நம் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர்களும், வழக்கறிஞர்களும், அரசியல் இயக்கத்தினரும் நலன் விரும்பிகளும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.  எவ்வித உள்நோக்கமுமின்றி வெளியிடப்பட்ட அந்த அட்டைப்படச் செய்தியால் தமிழக முதல்வர் ஜெயலலிதா – அவரைச் சார்ந்தவர்கள் – ஆளுங்கட்சி உறுப்பினர்கள் – மற்றும் எவர் ஒருவரேனும்   மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நக்கீரன் தனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.”

இதுதான் அந்த வருத்தம்.  நக்கீரனின் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள். “ஆளுங்கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கொள்கை சார்ந்தும் அரசியல்ரீதியாகவும், சாதகமாக உள்ள தகவல் என்ற வெள்ளந்தி நோக்கத்தில்தான் நாம் இச்செய்தியை வெளியிட்டிருந்தோம்.”   “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என்ற தலைப்பிட்ட கட்டுரை, அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் கொள்கை சார்ந்தும், அரசியல்ரீதியாகவும் சாதகமாக உள்ள தகவலாம்.   (அதிமுகவுக்கு கொள்கை இருக்கிறது என்பது நக்கீரனின் அபார கண்டுபிடிப்பு)  அதுவும் வெள்ளந்தி நோக்கமாம்.

இந்த வருத்தமே அயோக்கியத்தனமான வருத்தம் இல்லையா ?  நக்கீரன் அலுவலத்துக்கு அரசு மின் இணைப்பை துண்டித்தது ஏற்படுத்திய வருத்தத்தை விட, தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல் பூசி மெழுகி, அதை நியாயப் படுத்த முயலும், நக்கீரனின் செயல், அதை விட வருத்தத்தை ஏற்படுத்துகிறது.  அதிமுக அரசு, நக்கீரன்,  இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல….  இவர்களைப் பற்றி எழுதியும், பேசியும் வரும் நாம்தான் முட்டாள்கள்.

 

Comments  

 
+5 #27 obama 2012-01-23 02:50
i checked with US consulate, Obama never congratulated Nakeeran. it's fabricated, even us embassy can sue nakeeran.
Quote
 
 
+5 #26 SRIRAM M 2012-01-20 20:36
சவுக்கு இந்த கட்டுரையிலும் தேவையில்லாமல் ஜெயலலிதா அரசை குற்றம் சொல்கிறது. ஜெயலலிதா சவுக்கின் அனுதாபத்தையோ அல்லது ஆதரவையோ நக்கீரன் விவகாரத்தில் எதிர்பார்க்கவில ்லை. இவராகவே ஏதோ எழுதிவிட்டு பிறகு அரசு இவரை முட்டாலாக்கிவிட ்டது என்று குறை சொல்வது எந்தவகையில் நியாயம்?.
நியாயமான முறையில் நக்கீரனின் கட்டுரையும், எதாவது செய்து ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்றிருக்கும் அதிமுக அடி பொடிகளின் பதில் தாக்குதலும் கண்டிபதுடன் விட்டிருந்தால் அது நியாயம். இதில், ஜெயலலிதாவின் நேரடி தலையிடு எங்கிருந்து வந்தது? சவுக்கு கண்ணால் பார்த்தாரா? மேலும் நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாகவும், அந்த பத்திரிக்கையில் வரும் எல்லா விஷயத்திற்கும் காமராஜும், பிரகாஷும் தான் காரணம்..கோபால் ஒரு அப்பாவி என்பது போல தொடர்ந்து சவுக்கு எழுதுவது, சவுக்கு எப்போதும் கோபால் மீது ஒரு ஸொஃப்ட் சொர்னெர் கொண்டு இருப்பதையும் இவரின் கோபம் நக்கீரன் என்ற தவறான தகவல் சொல்லும் பத்திரிக்கை மீதல்ல மாறாக காமராஜ் மற்றும் பிரகாஷ் மீது கொண்ட தனிப்பட்ட கோபம் தான் காரணமோ என்று யோசிக்க தோன்றுகிறது
மேலும் எப்பொழுதும் பிரிண்டிங் மீடியாவுக்கு பூணல் போட்டு விமர்சிக்கும் கருணா நிதியின் அடி பொடிகளே, தனக்கு ஜால்ரா வேண்டும் எனும்பொழுது இதே தினமணி, தினமலர், விகடன் பத்திரிக்கைகளை பாராட்டி, அவர்களை தன் பக்கத்தில் கருணாநிதி அமரவைத்த போழ்து நீங்கள் எங்கே சென்றீர்கள்? அவ்வளவு ஏன், இன்று உங்களால் அதிகமாக விமர்சிக்க படும் சோ தயவு இல்லாமல், கருணாநிதியால் 1996 இல் ஜெயலலிதாவை விரட்ட முடிந்திருக்கும ா? தன் குடும்பத்தை ஊழல் வழக்கிளிர்ந்து விடுவிக்க சுப்பிரமணிய சுவாமியிடம் பேரம் பேசினார் என்பதை மறுத்தாரா அவர்?

எல்லாவற்றிக்கும ் ஒட்டுமொத்த ப்ரஹமின் சமுதாயத்தையும் வசை பாடுவதை நிருந்துங்கள். ப்ரஹமான சமுதாயத்திலும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இடத்தில் பலர் இருக்கிறார்கள் என்பதை உணருங்கள்.
ஜெயலலிதா அரசு ப்ரஹமான சமுதாயதிற்கு என்று தனியாக எந்த சிறப்பு சலுகையையும் எப்போதும் செய்ததில்லை.. அவர் விலைவாசியை ஏற்றினால் கூட, எல்லாரையும் போல இந்த சமுதாய மக்களும் பாதிக்க படுகிறார்கள் என்று உணருங்கள்.
Quote
 
 
-3 #25 cvr 2012-01-20 15:35
[ஃஉஒடெ நமெ="டமிலமுதன்"]திருட்டுத்தனம் ரத்தத்திலேயே ஊறின ""மறவன்"" நக்கீரன் கோபால் இப்படித்தான் இருப்பான்....காலம் காலமாக "மறவன்" ஜாதியே திருட்டுதனமும் , அயோக்கியதனமும் கொண்ட சில்லரை கூட்டம் தான்...தமிழ் சமுதாயத்தின் அசிங்கம் " மறவன்" ... நக்கீரன் கோபால் அதை நிரூபிக்கிரான்...[மானம் கெட்டவாணே ஜ
Quote
 
 
-2 #24 vimarsagan 2012-01-20 11:17
//இவர்களைப் பற்றி எழுதியும், பேசியும் வரும் நாம்தான் முட்டாள்கள்.//

இப்பவாவது புரிஞ்சுகிடீன்க ளே நீங்க முட்டாள் என்று
Quote
 
 
0 #23 Gopisavukku 2012-01-19 21:00
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிரெயில் அடைபட்டு கொன்டு இருக்கும் தமிழன் பேரறீவாழன் எழுதிய புத்தகம் பெயர் என்ன? அது எங்கே கிடைக்கும்?
Quote
 
 
+1 #22 சாரே 2012-01-19 19:48
இந்த இதழ் நக்கீரன் பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்

ஓவர் ஜால்ரா உடம்புக்கு ஆகாது சாரே
Quote
 
 
-1 #21 tamilamuthan 2012-01-19 13:03
திருட்டுத்தனம் ரத்தத்திலேயே ஊறின ""மறவன்"" நக்கீரன் கோபால் இப்படித்தான் இருப்பான்....காலம் காலமாக "மறவன்" ஜாதியே திருட்டுதனமும் , அயோக்கியதனமும் கொண்ட சில்லரை கூட்டம் தான்...தமிழ் சமுதாயத்தின் அசிங்கம் " மறவன்" ... நக்கீரன் கோபால் அதை நிரூபிக்கிரான்...
Quote
 
 
-14 #20 stupid 2012-01-18 16:18
என்ட புன்ட மொவன நேஎ பெரிய சுன்னிஅய .
Quote
 
 
-4 #19 செல்வமணி 2012-01-18 12:53
Indian journalist G.Pramod Kumar of “First Post” interviewed Gordon Weiss recently in Sydney, Australia- for The book “The Cage:The fight for Sri Lanka and the last days of the Tamil Tigers”has made huge waves.

G.Pramod Kumar: What do you think about the regrouping of the extreme Tamil elements, the LTTE in different forms? I could see some of that in poetry because there is some fantastic poetry indicating very strong sentiments out there. We can see this happening all the time in different parts of the world and in India, for instance in TAMIL NADU, we have very strong supporters of the LTTE(This is a Vishwa Hindu Parishad,VHP Propaganda supported by some expatriate srilankanTamils like sriLankaguardia n). What do you think is the possibility of this movement regrouping and assuming a different form? What do you think is the future of the whole ideology that was behind the LTTE?

Gordon Weiss: I think that one of the arguments that I make in the book is that a lot of the wind might have been taken out of the sails of this resurgence of activity of so called present LTTE controlled by Srilankan Army through KP(விநாயகத்தின் மனைவி, பிள்ளைகள் கொழும்பில் இராணுவத்தின் பாதுகாப்பில் இருக்கிறார்கள்) ect..., but if there had been an acknowledgement of what happened at the end of the war, if there had been a frank investigation that said: look this was a terrible war, very bloody, this is what happened, this is why it happened and this is our defence of that position, it would have helped the reconciliation considerably.- Until now there has been no discussions or revelations.
Quote
 
 
+5 #18 anand_s 2012-01-18 12:23
பொதுவாக உலகம் முழுவதும் ஆளப்படும் மக்கள் முட்டாள்களாகவே உள்ளார்கள்.
தமிழர்களுக்குப் பிடித்த தலைப்பு பர்ப்பன சதி....
கன்னடர்களுக்குப ்பிடித்த தலைப்பு தமிழர் சதி...

அகில இந்திய தலைப்பு வெளி நாட்டு சதி...

இப்படி வெறுக்க ஆள் தேடிக்கொண்டே மக்கள் முட்டாள்களாக உள்ளார்கள்
Quote
 
 
+1 #17 nadagapriyan 2012-01-18 09:05
பாவம் ஜட்ஜ்யையா !இந்த மாதிரி கேசுக்கெல்லாம் தீர்ப்பு சொல்றத விட , ஆலமரத்தடி பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ல போலாம்.
Quote
 
 
0 #16 ஷாலி 2012-01-18 00:14
எல்லாமே நாடகமாகத்தான் தெரிகிறது.மாட்டுக்கார மாமியும் வெள்ளந்தி கோபாலும் சொல்லிவச்சு நடிக்கிறார்கள்.

அரண்மனையைவிட்டு வெளியேறிய மன்னார் அன் கம்பெனி தமிழ்நாட்டில் அடித்த கொள்ளையை மக்கள் மறப்பதற்காக மாட்டை அவிழ்த்து விடுகிறார்கள்.நாங்கள் மறந்திட்டோம்...
Quote
 
 
+3 #15 right renga 2012-01-17 20:28
ஐயப்பபக்தர் சாந்தவேல் என்பவரை கேரளாவில் வெந்நீர் ஊற்றி கொல்லப்பட்டதற்க ு கண்டனம் Mr savukku help to tamil people pls Pls pls
Quote
 
 
-2 #14 help us 2012-01-17 20:13
sir
savukku pls help us to all people
B.Ed training teachers all train in 40 days work shop in all schools in TRICHY. If the order give to properly from education dept they ask to student dont give any money. but every school have collect a money from B.Ed., Student depends upon our premises like
SAMAYAPURAM SCHOOL HAVE COLLECT RS.5000/- PER STUDENT, SAIYADDU MUSTAFF SCHOOL TRICHY RS.500/-, SRIRANGAM GIRLS HIGHER SECONDARY SCHOOL SRIRANGAM RS.1000/-, WORIYUR SCHOOL (DONT KNOW THE NAME) RS.3000/- SOME OTHER SCHOOL HAVE THEY ASK THE STUDENT TO PURCHASE GIFTS LIKE STEET SHELF, FURNITURE AND FAN, STEEL RACK, ETC., Some B.Ed., students are very poor to learn his /her education, some school misuse her power. how to stable this people, I DONT KNOW HOW? I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. I ASK TO SAVUKKU. PLS HELP US TO FURTHER STUDENT .
TOMORROW NEVER DIES
Quote
 
 
-1 #13 மனோன்மணி 2012-01-17 16:10
LLRC அறிக்கை குறித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில் அறிக்கை: LLRC சர்வதேச நியமங்களை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு!! - Jan 15-2012.

With no constitutional amendment done, C.N.Annadurai declared 26 January 1965, the 15th Republic Day of India(May 18 2009) and also the day the Constitution, which in essence enshrined Hindi(LLRC report) as the official language of India(Srilanka) , came into practice, as a day of mourning. This move was opposed by the then Chief Minister of Madras State, Bhakthavatchala m(Mahinda Rajabakshe), as blasphemous. Hence Annadurai, who by then had been trying to shake off the secessionist image of his party, declared 24 January(May 18 2009) as a day of mourning. He also replaced the slogan of the protests to Down with Hindi(LLRC report); Long live the Republic(Srilan ka). :zzz :zzz
Quote
 
 
+1 #12 குட்டி 2012-01-17 15:30
நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு நக்கீரன் இணையத்தளத்தில் வெளியான செய்தி என்னவென்றால்.. நக்கீரன் ஊழியர்கள் அனைவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டதாம்..ஆனால் அவர்கள் அட்டைப்படத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் அவர்கள் அட்டைப்படத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் செய்தி இடம் பெறவே இல்லை... பார்த்தீர்களா நக்கீரன் நடத்தையை?????????
Quote
 
 
0 #11 arunyo 2012-01-17 11:43
நக்கீரன் கோபால் போன்ற எழுத்து விபச்சாரர்களுக் கு மக்கள் எந்த முக்கியத்துவமும ் கொடுக்ககூடாது.
Quote
 
 
-1 #10 வால்டர் வணங்காமுடி 2012-01-17 11:04
// நக்கீரனின் அட்டைப்படச் செய்தியை தவிர்த்திருக்கல ாம் என நம் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர ்களும், வழக்கறிஞர்களும் , அரசியல் இயக்கத்தினரும் நலன் விரும்பிகளும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.//

ஓகோ... நக்கீரன் கோவாலு "ஆவிங்க" கூட எல்லாம் பேசுவாரா?
Quote
 
 
-3 #9 Arun1986 2012-01-17 10:51
நாமெல்லாம் ஜனநாயக நாட்டில்தான் உள்ளோமா? ஒரு பத்திரிக்கைக்கே இந்த நிலமைனா என்னை போன்ற ஒரு சாதாரண மனிதன நெனச்சு பாருங்க.. இன்று அரசு என்பதின் பொருள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன் காக்கும் சங்கம் என்றாகிவிட்டது.. இவர்கள் எது நினைத்தாலும் நடக்கும்.. இதை நீதி மன்றமே கண்டிக்க தவறுவது நீதித்துறை மீது உள்ள நம்பிக்கையும் குறைக்கிறது.. எவ்வளவு பெரிய மோசமான பத்திரிக்கையாக இருந்தாலும் எப்படி மின் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்கலாம்? போன ஆட்சியில் இது போன்ற அட்டகாசங்கள் அதிகம் ஆனதால் தான் இந்த ஆட்சிக்கு மக்கள் அடிகோலினார்கள்.. இது மாதிரி அராஜகம் நீடித்தால் போன ஆட்சிக்கு நடந்த அதே நிலை ஏற்படும்..
Quote
 
 
+2 #8 nsharma 2012-01-17 06:59
அன்பார்ந்த சவுக்கு அவர்களெ, உஙகள் கட்டுரைக்கும் திரு செல்வராஜ் அவர்கள் எழுதி இருப்பதர்க்கும் என்ன சம்பந்தம்?

Do you monitor as to what goes into your blog and censor these unwanted and unruly interferences?
Quote
 
 
+1 #7 ஊர்க்குருவி. 2012-01-16 22:31
கோவாலுவுக்கு சனி மாற்றம் சரியில்லை ஏழரை ஆண்டு சனியன் பீடித்துவிட்டது அவ்வளவுதான்.
Quote
 
 
+3 #6 nallavan 2012-01-16 22:12
எங்கேயோ இடிக்குது. நாசாவில் பணிபுரியும் ஸ்ரீராமுக்கு நக்கீரன் செய்திகளை அதன் இணய தளத்திலேயே படிக்க வசதி இருக்கும் போது, எதற்காக அவரது தந்தை நக்கீரன் செய்திகளை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்? அதே போல் 'ச்763577@க்மைல்.சொம்' என்பதும் ஒரு போலி முகவரி போல்தான் தெரிகிறது. நக்கீரனின் இந்த செய்தியையும் நம்ப முடியவில்லை
Quote
 
 
-5 #5 செல்வராஜ் 2012-01-16 16:49
Reagan Doctrine(from the early 1980s until the end of the Cold War in 1991). The doctrine was designed to serve the dual purposes of diminishing Soviet influence in these regions, while also potentially opening the door for capitalism (and sometimes liberal democracy) in nations that were largely being governed by Soviet-supported socialist governments.
Dr. Winston Panchacharam(An Indian and supporter of DMK and its chief M.Karunanidhi), founded the "WORLD TAMIL CONVENTION" in 1980s ,in Newyork, favouring Reagan Doctrine against India, to lobby on behalf of Tamil civilians on Sri Lanka. Every year, he travels to India to discuss the situation, and holds talks and cultural programs in the United States.
The Reagan administration reassessed its policy toward India in 1980s and decided to expand areas of cooperation, particularly in the economic and scientific realms, as a means of counteracting Soviet influence in the region. In 1982 the two sides resolved their dispute concerning supplies of fuel and spare parts for the nuclear power plant at Tarapur. In 1984 the United States decided to expand technology transfers to India- Which made Indra Gandhi’s ambiguity towards Srilanka.
The International Tamil Centre, another front organization of the LTTE, was started by one Dr. Winston Panchacharam of New York; it celebrated its third anniversary in Chennai on 8 June 2009. Dr. Winston Panchacharam brought two Americans with him, Bruce Fein, US lawyer and specialist in international law, counsel for ‘Tamils against genocide’; and Francis Boyle, American expert on international law, to ‘lecture’ on the occasion.
Quote
 
 
+21 #4 m.perumal 2012-01-16 16:05
Nakkeeran Gopal is a notorious journalistic terrorist. HC should castigate the State Gov't for not booking him under Goondas Act for inciting communal hatred.
Quote
 
 
+54 #3 KarthikPrabhakaran 2012-01-16 16:03
மின் இணைப்பையும் குடிநீர் குழாய் இணைப்பையும் துண்டிப்பதற்கு பதில் ஒரு "முக்கியமான" இணைப்பைத் துண்டித்தால் போதும்.
Quote
 
 
+57 #2 KarthikPrabhakaran 2012-01-16 15:59
ஒரு வேளை ஒபாமா நித்தியானந்தா சி.டி. யைப் பார்த்திருப்பார ோ???

அடுத்த அதிபர் தேர்தல்ல கருத்துக்கணிப்ப ு எடுக்கணும்னு சொல்லி இந்த கோவாலை அமெரிக்காவுக்கு அனுப்புங்கப்பா.
அமெரிக்காவும் தொலைஞ்சது.கொசுத் தொல்லையும் ஒழிஞ்சது.
Quote
 
 
+4 #1 uskavuk 2012-01-16 15:24
பின்னூட்டங்களில ் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 133 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday12820
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week56820
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month279080
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13195447