|
எந்தச் செல்லமுத்து ? தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்து தன் பதவியை ராஜினாமா செய்த செல்லமுத்து அவர்களைத்தான் நல்லவர் என்று சவுக்கு சொல்கிறது. வீட்டு வசதித்துறையின் செயலராக இருந்தபோது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பல்வேறு வீட்டு மனைகளை, திமுக அடிவருடிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்து, தேர்வாணையத்தின் தலைவரானதும் பல்வேறு முறைகேடுகளில், தேர்வாணைய உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உறுதுணையாக இருந்த செல்லமுத்துவை எப்படி நல்லவர் என்று சொல்லலாம் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ?

நடுவில் இருப்பவர் செல்லமுத்து
செல்லமுத்து நல்லவர்தான். தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதியோடு ஒப்பிடுகையில் செல்லமுத்து நல்லவரே. ஏன் என்பதைப் பார்ப்போம்.. ….
ஸ்ரீபதி 1 செப்டம்பர் 2010 அன்று தமிழக தகவல் அணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 1975ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த ஸ்ரீபதி கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதியின் கைப்பாவையாக செயல்பட்டார் என்றால் அது மிகையல்ல. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விழிப்புப் பணி ஆணையராக இருந்தார் ஸ்ரீபதி. அப்போது, ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகிய இரு ஐபிஎஸ் அதிகாரிகள் மீது, அவர்கள் இருவரும் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய போது, முறைகேடுகளில் ஈடுபட்டு, அந்த முறைகேடுகளுக்கு பிரதிபலனாக, தங்கள் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் அரசு கோட்டாவில் சீட் பெற்றனர் என்று புகார் வந்தது. இந்தப் புகார், உள்துறைச் செயலாளரிடம் சென்று, அவர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கேட்கிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இந்த விசாரணை ஒப்படைக்கப் பட்டதும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த முத்து என்ற ஆய்வாளரிடம் இதை விசாரித்து அறிக்கை அனுப்பும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது. அந்த ஆய்வாளர், அண்ணா பல்கலைகழகத்துக்குச் சென்று, இந்தப் புகார் குறித்த ஆவணங்களை பார்வையிட வேண்டும் என்று சொல்கிறார். அண்ணா பல்கலைகழகத்தில் இருந்த அதிகாரி, எந்த ஆவணத்தையும் தர முடியாது, காண்பிக்கவும் முடியாது, ஆவணங்களைப் பார்வையிட வேண்டுமென்றால், எழுத்துபூர்வமான கடிதத்தோடு வாருங்கள் என்று கூறுகிறார். உடனே, முத்து அங்கேயே அமர்ந்து கீழ்கண்ட ஆவணங்கள் வேண்டும் என்று எழுத்துபூர்வமான கடிதத்தை அளிக்கிறார். அண்ணா பல்கலைகழகத்தில் இரண்டு நாள் கழித்து வாருங்கள், ஆவணங்களை தருகிறோம் என்று கூறுகிறார்கள்.
அன்று மதியமே, விழிப்புப் பணி ஆணையராக இருந்த ஸ்ரீபதியிடமிருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய்க்கு போன் வருகிறது. அந்த போனில், ஸ்ரீபதி உபாத்யாயிடம், உங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த முத்து என்ற ஆய்வாளர், அண்ணா பல்கலைகழகம் சென்று, ராதாகிருஷ்ணன் மற்றும் என்.பி.சிங் ஆகிய அதிகாரிகளைப் பற்றி விசாரிக்கிறாராமே… …. .. இது குறித்து ஏதாவது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதா ? என்று கேட்கிறார். உபாத்யாய், விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை, உள்துறை செயலாளர் அந்த மனு மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் கருத்தைக் கேட்கிறார்… அதனால்தான் விசாரிக்க உத்தரவிட்டேன் என்கிறார். ஸ்ரீபதி, நீங்கள் என்னோடு முதலில் விவாதியுங்கள்… விவாதித்து விட்டு பிறகு முடிவெடுங்கள். அந்த ஆய்வாளர் ஒரு கடிதம் வேறு எழுதியிருக்கிறாராம்… அந்தக் கடிதம் என்னிடம் வந்துள்ளது…. என்னோடு விவாதித்து விட்டு பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிடுகிறார்.

ஸ்ரீபதி உபாத்யாயோடு பேசிய இந்த உரையாடல், 2008ம் ஆண்டில் ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலைகழகத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் எழுதிய கடிதம், ஸ்ரீபதி கைக்கு எப்படிச் சென்றது, அதில் விசாரணை நடத்தாதே என்று ஸ்ரீபதி உத்தரவிட்டது அம்பலமாகியும் கூட, கருணாநிதி ஸ்ரீபதியை தலைமைச் செயலாளராக்கினார்.
விசாரணை நடத்தாதே என்று சட்டவிரோதமாக உத்தரவிட்ட ஸ்ரீபதிக்கு தலைமைச் செயலாளர் பதவி… அந்த உரையாடலை பதிவு செய்து வைத்தற்காக உபாத்யாய் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். அப்படிப்பட்ட ‘நேர்மையான’ அதிகாரிதான் ஸ்ரீபதி.
இந்த ஸ்ரீபதியின் நேர்மைக்கு மற்றொரு உதாரணம் தன்னுடைய பிறந்த நாள் தொடர்பாக அவர் தொடுத்த வழக்கு. ஐஏஎஸ் தேர்ச்சியடைந்து நான்கு ஆண்டுகள் கழித்து, தன்னுடைய பிறந்த நாள் தான் ஐஏஎஸ் சேரும்போது கொடுத்த 28.04.1950 அல்ல. சரியான பிறந்த தேதி, 09.10.1951 என்று விண்ணப்பிக்கிறார். இதை இவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்றால், இவர் திருமணத்துக்காக ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்த போது, ஜாதகத்தில் சரியான பிறந்த தேதி இருந்ததாம். தவறுதலாக இவர் பிறந்த தேதி 28.04.1950 என்று பதிவாகி விட்டது. இந்தத் தவறை செய்தவர் இவர் தாய்மாமா என்றும், இதனால் இவர் பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இந்த விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டு, இவர் சிவில் நீதிமன்றத்தில் பிறகு வழக்கு தொடர்ந்து, அதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டது.
இறுதியாக நிர்வாகத் தீர்ப்பாயத்தில் 2004ல் வழக்கு தொடுக்கிறார் ஸ்ரீபதி. அந்த வழக்கில் தீர்ப்பாயம் பிறந்த தேதியை மாற்றுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று இவர் மனுவை தள்ளுபடி செய்கிறது.
ஆனால் அப்போதும் அடங்கவில்லை ஸ்ரீபதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் கீழ்கண்டவாறு தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறது
“It is to be pointed out that even as per the affidavit of the petitioner, his father was a Central Government employee and not a layman. Such being the case, his father is well aware of the importance attached to the entry of date of birth in the school records. Even if it is believed that by 'inadvertence,' the maternal grand-father of the petitioner has furnished the wrong date of birth of the petitioner and the same has been carried out in his school records, subsequently, at different stages of education and pursuing the employment, the father of the petitioner might have noticed the same. But, till the petitioner joined the IAS, there was no attempt made on the part of the petitioner or his father to get the date of birth corrected. Therefore, the plea of the petitioner that he came to know of his 'actual date of birth', only when there was marriage proposal for him, does not seem to be a convincing one.”
“மனுதாரர் தாக்கல் செய்த மனுவிலேயே தனது தந்தை ஒரு மத்திய அரசு ஊழியர், அவர் படிப்பறிவில்லாதவர் கிடையாது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கையில் அவர் தந்தைக்கு பிறந்தநாள் குறித்தும், பள்ளி ஆவணங்களில் அதன் முக்கியத்துவம் குறித்தும் நன்கு தெரிந்திருக்கும். ஒரு வேளை ஸ்ரீபதியின் தாய்மாமன் பிறந்த நாளை தவறாகக் குறிப்பிட்டிருந்தால் கூட ஸ்ரீபதியின் படிக்கும் போது, பள்ளிக்காலத்திலோ, பின்னாளிலோ இந்தத் தவறை அவர் தந்தை சரி செய்திருக்க முடியும். ஆனால், மனுதாரர் ஐஏஎஸ்-சில் சேரும்வரை பிறந்த நாளை மாற்றுவதற்கு மனுதாரரோ, அவர் தந்தையோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆகையால், திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கும் போதுதான் பிறந்தநாளில் இருந்த தவறு தெரியவந்தது என்ற கூற்று நம்பும்படி இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. எவ்வளவு பேராசை பார்த்தீர்களா….

தன்னுடைய அசல் பிறந்த தேதியின் படி ஸ்ரீபதி 30.04.2010ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், கருணை வள்ளல் கருணாநிதியின் விசுவாசமான அடிமையாக இருந்த காரணத்தால், அவருக்கு ஆறு மாதம் பணி நீட்டிப்பு வழங்கப் பட்டது. இதன் படி ஸ்ரீபதி 31.10.2010 அன்று ஓய்வு பெற வேண்டும். ஆனால், தலைமைச் செயலாளர் பதவியை விட சிறப்பான, தலைமைத் தகவல் ஆணையாளர் பதவி கிடைக்கும் போது கசக்கவா செய்யும். அதுவும், தலைமைச் செயலாளராக இருந்து கொண்டு, தன்னை தலைமைத் தகவல் ஆணையாளராக நியமிக்கும் கோப்பை கண்கொத்திப்பாம்பாக பின்தொடர்ந்து 01.09.2010 அன்று அரசாணை வெளியிடப்படுவதை உறுதி செய்ததும், பெருந்தன்மையோடு ஸ்ரீபதி 31.08.2010 அன்றே பதவி ஓய்வு பெற்றார்.
31.08.2010 அன்று பதவி ஓய்வு பெற்றதும், மறுநாளே அதாவது 01.09.2010 அன்று தமிழக தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையாளராக ஸ்ரீபதி நியமிக்கப் படுகிறார்.

தமிழக தகவல் ஆணையம், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் மடமாக மாறி விட்டதுதான் என்றாலும், பணியில் இருந்தபோதே நேர்மையாக இல்லாத ஸ்ரீபதி போன்ற நபர்களை நியமித்தது, கருணாநிதி அரசின் மற்றொரு அயோக்கியத்தனம்.
இந்த ஸ்ரீபதியை தற்போது தலைமைத் தகவல் ஆணையாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி, மாநில ஆளுனருக்கு புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது. ஸ்ரீபதியை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் ?
சென்னை நெற்குன்றத்தில் உயர் உயர் அதிகாரிகளுக்காக வீட்டு வசதித் திட்டம் ஒன்று ஏற்படுத்தப் பட்டதும், அந்த வீட்டு வசதித் திட்டத்தில் பரம ஏழைகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு சந்தை விலையை விட பாதி விலைக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட்டதும், சவுக்கு வாசகர்கள் அறிந்ததே…. அந்த நெற்குன்றத்தில் ஸ்ரீபதிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் என்ன முறைகேடு உள்ளது ?
நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கானது. ஸ்ரீபதி 31.08.2010 அன்று ஐஏஎஸ் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். 01.09.2010 அன்று தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்த வீடுகட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 28.10.2010 அன்று வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநரால், உயர் அதிகாரிகளிடமிருந்து வரவேற்கப் படுகின்றன.

அப்படி இருக்கையில் 28.10.2010 அன்று ஸ்ரீபதி எப்படி இந்த வீட்டு வசதித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும் ? ஆக, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான ஒரு வீட்டு வசதித் திட்டத்தில், தலைமைத் தகவல் ஆணையாளராக இருந்து கொண்டு, ஸ்ரீபதி முறைகேடாக ஒதுக்கீடு பெற்றிருக்கிறார் அல்லவா ? இப்படி முறைகேட்டில் ஈடுபட்ட ஸ்ரீபதி, தலைமைத் தகவல் ஆணையாளராக தொடரக் கூடாது, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றுதான் புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது.

இது மட்டுமல்ல.. தற்போது ஸ்ரீபதி குடியிருக்கும் மனை எண் 1085, ஆபீசர்ஸ் காலனி, அண்ணா நகர், சென்னை என்ற வீட்டு மனையும், இவருக்கு அலெக்சாண்டர் கவர்னராக இருந்த காலத்தில் விருப்புரிமையில் ஒதுக்கீடு செய்யப் பட்ட வீட்டு மனை. ஸ்ரீபதியின் பேராசைக்கு அளவே இல்லையா ?
இந்தப் புகார் மனுவின் நகல் ஊடகங்களுக்கு அனுப்பப் பட்டு, ஊடகங்கள் கேள்வி கேட்டதும், ஸ்ரீபதி முதலில் ஆணவமாக பதில் அளித்திருக்கிறார். “எல்லாம் சட்டபூர்வமாகத்தான் நடந்திருக்கிறது. இதில் தவறு எதுவும் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு சில விஷமிகள் இப்படி பிரச்சினையை எழுப்புகிறார்கள்” என்று கூறியிருக்கிறார். பிறகு மற்றொரு நிருபர் அவரைச் சென்று சந்திக்கையில், எங்களுக்கு ஒரு கட்ஆப் டேட் கொடுத்தார்கள்.. அந்த கட்ஆப் டேட்டுக்குள்தான் நான் விண்ணப்பித்தேன் என்று கூறியிருக்கிறார். எது சார் அந்த கட்ஆப் டேட் என்றால், ஏப்ரல் 2010 என்று கூறியிருக்கிறார். அவர் முன் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, இதில் அந்த கட் ஆப் டேட் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு, நான் விசாரணையை உரிய முறையில் சந்திப்பேன் என்று பதில் அளித்திருக்கிறார்.



ஆளுனருக்கு அனுப்பப் பட்ட புகார் மனு


புகார் தொடர்பாக டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் வந்த செய்தி
இவர் உரிய முறையிலோ, உரியாத முறையிலோ, விசாரணையை சந்தித்தே ஆக வேண்டும். ஆளுனரிடம் அளித்த புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லையென்றால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் படும் என்பதை சவுக்கு இந்த நேரத்தில் ஸ்ரீபதிக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறது.
இப்போது தலைப்புக்கு வருவோம். செல்லமுத்து ஏன் நல்லவர் என்றால், அவரும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியவுடன் அந்த விசாரணையை ரத்து செய்வதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகி என்னென்னவோ செய்து பார்த்தார். ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்றே வந்தது. இப்போது செல்லமுத்து பதவியை ராஜினாமா செய்யாவிட்டாலும், அரசால் உடனடியான எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அவருக்கு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.
ஆனாலும் தன்னுடைய மனசாட்சி உறுத்தியதன் காரணமாக செல்லமுத்து ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
ஆனால் சில பேர் இருக்கிறார்கள். தடித்த தோலுடையவர்கள். உடனே கருணாநிதி என்று கூறாதீர்கள். கருணாநிதிக்கு இருப்பது தோலே அல்ல.. இரும்புத் தகடு. துப்பாக்கிக் குண்டு கூட துளைக்காது.

கிட்டத்தட்ட ஸ்ரீபதியும் அதே வகையில்தான் வருவார் போலிருக்கிறது. ஸ்ரீபதி மீது அளிக்கப் ப்டட இந்தப் புகாரில் நியாயம் உள்ளது, இதிலிருந்து அவர் வெளிவருவது கடினம் என்பது மெத்தப் படித்த அவருக்கும் தெரியும். ஆனாலும் தன் மீது உள்ள தவறை உணராமல், இந்தப் புகார் குறித்த செய்தியை வெளிவரவிடாமல் செய்வதற்கு முயற்சி எடுத்ததிலிருந்தே ஸ்ரீபதிக்கு மனசாட்சி என்பதே இல்லை என்று தோன்றுகிறது.
ஸ்ரீபதியை ஒப்பிடும்போது செல்லமுத்து நல்லவர் தானே… ?
|
Comments
What does it mean? What kind of English is this? For this also there are 6 thumbs up?
வள்ளுவன் சொன்னதுபோல் “நல்லவர் போல் கள்வர்”
வேடம்போட்டு சுரண்டியவர்கள்.பேசாமல் கள்ளமுத்து என்றே இனி கூப்பிடலாம்.
ஸ்ரீ பதிக்கு பதவி ஆசை அவ்வளவு சீக்கிரம் விடாது.மனிதனுக்கு வாயில் மண் விழுகும்வரை ஆசை அடங்காது..சிவலோக பதவி கிடைக்கும்வரை.......
இதற்கு என்ன செய்யலாம் என்கிறீர்கள்?. இலங்கைத்தமிழர்க ளை நம்பி பிரயோசனம் கிடையாது.
இலங்கையில் தமிழர் என்பவர்களுக்கும ், சிங்களவர்களுக்க ும் உள்ள பிரச்சனை வேறு, இந்தியாவின் வெளி உறவு கொள்கை வேறு. “தமிழீழம்” கேட்க “ஆசைபடுபவர்களைத ான்” இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பயன்படுத்துகின் றனர்(நீங்கள் மேல் கூறிய பள்ளிக்கூடத்தில ் சொல்லிக்கொடுத்த விஷயத்தின்படி).
ஒரு பொது அறிவு, 95% தமிழர்கள் வாழும் வடக்கு இலங்கையில் எப்படி “சிங்களவர்களால் ” பிரச்சனை வரும்?. வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள் ள 85 % தமிழர்களுக்கு மேல் வட இலங்கையை சேர்ந்தவர்கள்.
சிங்களவர்களுடன் எல்லைப்புறங்களி ல், கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு சில தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் இருந்தது உண்மைதான்(LIKE changing voting pattern by settling singhalese), ஆனால் அது 1971 பங்களாதேஷ் யுத்தத்தில் R.N.KAO and SHANKARAN NAIR (R &AW) போன்றோர் திறமையாக நடத்திய யுத்தத்தில், இலங்கை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பாக்கிஸ்த்தானுக ்கு விமான எரிபொருள் நிரப்ப உதவி செய்ததை “கண்டிக்கும்!” அளவுக்கு “கடுமையாக இல்லை. ஆகவேதான் தமிழீழ ஆசையை பயன்படுத்திக் கொண்டனர்.
ஆகவே தற்போது, இலங்கை தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதையும், இந்திய வெளியுறவு கொள்கையையும்(சீ னா) “DELINK” செய்யப்படவேண்டு ம்.
Illathu Pillai(Ezhavar) : The Ezhavas (Malayalam:Īḻav ar) are a community with origins in the region presently known as Kerala. They are also known as Ilhava, Irava, Izhava and Erava in the south of the region.
They were as well as being agricultural laborers, small cultivators, toddy tappers, and liquor businessmen, some Ezhavas were also involved in weaving and some practised ayurvedic medicine.
These people also have PILLAI Title: Chempakaraman Pillai, also Cemapakaraman Pilla(September 15, 1891 – May 26, 1934) was an Indian revolutionary during the Anti-British Movements in India.
“When the First World War began in 1914, Chempakaraman PILLAI, a Tamil from Thiruvananthapu ram(now Kerala), formed the Indian Independence Committee in Germany along with some revolutionaries from India. He joined Emden War Ship as an officer and masterminded the attack on Madras mainly aimed at the British navy.
Viluppuram Chinnaiah PILLAI Ganesan Manrayar commonly known by his stage name Sivaji Ganesan(1 October 1928 – 21 July 2001),was an Indian stage and film actor active during the latter half of the 20th century- particularly in Tamil.
IN TAMIL NADU: In Tamil Nadu, this title or surname is mostly used by people of the Vellalar caste among the population of Tamil descent (particularly in southern districts) , Illathu Pillaimar & Saiva Pillai, and the Nair caste population of the Malayalam-speaking immigrant population. The usage of the title is prevalent, though to a lesser extent, among Paraiyar(DALITS ), and Tamil Yadavas. The Elur Chetty community in South Tamil Nadu and Kerala also use this surname.
-http://www.youtube.com/watch?feature=player_embedded &v=7uMe7lUIFZU
Pillai, Pillay, Pulle , Pilli or Pillaimar is a popular title used by land owning caste of Tamil- and Malayalam-speaking people of India and others living in Sri Lanka, Singapore, Malaysia, South Africa and Fiji, mostly from Vellalar and Nair communities.
Though it started as a Hindu title, today Pillai is also found amongst Christians both as a surname and a given name.
South African Tamils use the spelling Pillay, whereas some Sri Lankan castes may also use Pulle or Pilli.
It is an Indian name, the name is a patronymic(mean ing obedient loyal Accountants,lik e ClellaPILLAI in Andhra pradesh), not a family(caste) name, and the person should be referred to by the given name. Sometimes newly granted by Jamindars and Colonial authorities to Loyal aides.
செல்லமுத்து நல்லவர் டா ந்
தமிழக கவர்னர் ரோசய்யா மீது நில மோசடி வழக்கு !
www.ullatchithagaval.com
Tamil Online Magazine
தற்போது கோயிந்தா, கோவிந்தா என்று "மஞசள் துண்டு அணிந்து மஞசள் பூ கொடுக்கப்படுகிற து".
இலங்கைத் தமிழர்களும் இவ்வாறே,/இவ்வேளையில், அண்மையில் தமிழ் நாட்டில் இந்து பாசிச குழு ஒன்றின் யாத்திரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டமை மட்டுமன்றி அவர் விஷ்வ இந்து பரிஷாத்தில்(VIS HWA HINDU PARISHAD VHP) இலங்கைப் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.
இலங்கைக் கொழும்பில் இந்தப்பிரச்சனைக ளுக்கு முன்பு, “தமிழர் தலைமை” என்ற சிலர் சொத்துக்களும் வியாபாரங்களும், வெளிநாடுகளுக்கு குடிபெயரும் வசதிகளும் உடையவாராக இருந்தனர். இவர்களுக்கு யாழ்ப்பாணம் என்றால் என்னவென்று தெரியாது ஆனால், அவற்றின் “MP” ஆக இவர்கள்தான் இருந்தனர்.
இவர்களின் சொத்துகளுக்கு ஆபத்து என்றவுடன் “தமிழை” பிடித்து வே.பிரபாகரனை பிடித்து 30 ஆண்டுகளாக மிரட்டிப்பார்த் தனர், பருப்பு வேகாது என்றவுடன், இவர்களின் “திருகுதாளங்கள் ” சிங்களவர்களிடன் வேகாது என்றவுடன், கூடாரத்தையும், சொத்துக்களையும் தற்போது “தமிழநாட்டுக்கு ள்” மாற்றிக் கொண்டார்கள்.
இவர்கள் கொடுத்த கயிற்றை விழுங்கி அழிந்த மக்களில் சிலர் தமிழ்நாட்டில் சில சலசலப்புகளை ஏற்படுத்த “இவர்கள்” தற்போது “மகிந்த ராஜபக்ஷே குடும்பத்தையும் ” இந்திய அரசாங்கத்தையும் பிடித்து “தமிழ்நாட்டிலுள ்ள(வெளிநாட்டிலு ள்ள சொத்துக்களின் மையம்)” சொத்துக்களை பாதுகாத்துக் கொண்டுள்ளனர்!.
இதில் ஒருவர்தான் தற்போது “கனடாவில் வசிக்கும்” DBS ஜெயராஜ் and Rajasingam Jeyadevan.The behave as front organization of Indian intelegent(KASH MIRI) RAW !.
/The military has informed that they will be vacating the property I own in Navatkuli by end of this month. This change of stance was said to be a result of the government attempting to implement the recommendations of the LLRC./- Jayadevan.-- http://dbsjeyaraj.com/dbsj/archives/3809#more-3809
http://dbsjeyaraj.com/dbsj/archives/3781#more-3781
சூபர்
பராட்டுக்க்ல்
இவருக்கு எல்லாம் மன சாட்சி என்பதும் கிடையாது ! இவர் வேறு என்னென்ன சொத்து விவரம் பற்றி பொய்யறிக்கைகள் கொடுத்துள்ளார் என்பதை சவுக்கு கண்டு பிடித்து வெளியிட்டால் இவரது தோல் முழுவதுமாக உரிக்கப் பட்டு முழு ரூபமும் வெளிப்படும்! செய்வீர்களா சவுக்கு அவர்களே! இது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய சேவையாக எண்ணப்பட்டு போற்றப் படுவீர்கள்!
அப்போது எந்த பணமும் வந்து இவர்களை காப்பாற்றது.
hats off to you savukku for bringing this நியூஸ் டு light
அதுசரி...இதை படித்தபிறகாவது இவருக்கு சொரணை வருகிறதா இல்லை எருமை மாட்டின்மீது அடிக்கும் சாரல்போல....
ஒன்று மட்டும் நிச்சயம் சவுக்கு... தவறு செய்த அதிகாரிகள் திருந்துவார்களோ இல்லையோ... இனி தவறு செய்தால் என்ன மாதிரியான விளைவுகள் வருமென்பதை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அறிவார்கள்? அந்த வகையில் சவுக்கின் சேவை இந்த சமுதாயத்திற்கு மிகவும் தேவை.
அரசுப்பணியில் இருப்பவர்கள் அனைவரும் சவுக்கை படிக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்யலாமா சவுக்கு?
வள்ளுவன் சொன்னதுபோல் “நல்லவர் போல் கள்வர்”
வேடம்போட்டு சுரண்டியவர்கள்.பேசாமல் கள்ளமுத்து என்றே இனி கூப்பிடலாம்.
ஸ்ரீ பதிக்கு பதவி ஆசை அவ்வளவு சீக்கிரம் விடாது.மனிதனுக்கு வாயில் மண் விழுகும்வரை ஆசை அடங்காது..சிவலோக பதவி கிடைக்கும்வரை.......
இப்படி எத்தனை பேரு அந்த மனுஷனை செருப்பால் அடித்திருப்பார் கள்!!
திருந்த கூடிய ஜென்மமா அது!!
MK allotted so many patta's to reporters as well. Can you write about that??
RSS feed for comments to this post