முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இது ஒரு வகை. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012 14:55

 

உலகம் ஒரு நாடகமேடை, நாம் அனைவரும் அதில் நடிகர்கள் என்று சொன்னார் ஷேக்ஸ்பியர்.    அது எந்தவிதத்தில் சரியோ இல்லையோ, தமிழக அரசைப் பொறுத்தவரை சரியாகவே இருக்கிறது.

திமுக ஆட்சியில் மக்கள் அடைந்த வேதனை வார்த்தைகளால் சொல்லி மாளாது.  அத்தனை வேதனைகளிலும் இருந்து வெளியேற வேண்டுமே என்ற ஒரே நோக்கத்தில் மக்கள் வேறு வழியே இல்லாமல்தான் அதிமுகவுக்கு வாக்களித்தார்கள்.   மக்கள் அதிமுக அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் வாக்களிக்கையில், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்தையும், சசிகலா வகையறா செய்யப்போகும் அட்டூழியங்களையும் அறியாமல் வாக்களிக்கவில்லை.  எப்படியாவது நமக்கு விமோசனம் வராதா என்ற ஆதங்கத்திலேயே வாக்களித்தார்கள்.

avd

ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றதும் எடுக்கப் பட்ட சில நடவடிக்கைகள் தவறு செய்து விட்டோமா என்று பொதுமக்கள் வருந்தும் விதத்திலேயே அமைந்தன.   சமச்சீர் கல்வி, நூலகத்தை மூடும் திட்டம், மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம், பால் பேருந்துக் கட்டண உயர்வு என்று பல திட்டங்கள் பொதுமக்களை வேதனையடைய வைத்தன.

ஊழல் ஆட்சிக்கு எதிராக வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஒரு கட்சி, முந்தைய ஆட்சியே பரவாயில்லை என்கிற அளவுக்கு ஒரு கொள்ளைக் கூட்டத்தை பக்கத்திலேயே வைத்திருந்தது.   இன்று அந்த மன்னார்குடி மாபியாவை அதிமுக அரசு விரட்டி விரட்டி அடிக்கிறது.   மன்னார்குடி கும்பலில் முக்கிய பொறுப்பு வகித்த ராவணன் மற்றும் திவாகரன் மீது, பல்வேறு வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கஸ்தூரி,  திவாகரன் தூண்டுதலின் பேரில் தனது வீடு இடிக்கப்பட்டதாக எழுப்பிய புகாரில்,  திவாகரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.

திவாகரன், ரிஷியூர் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ண மேனன், வீட்டை இடிக்க பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி., இயந்திர உரிமையாளர் சிவசங்கரன், கணேசன், வைத்திய நாதன், தமிழ்ச்செல்வம், குணசேகரன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திவாகரன் மீது கலவரம் ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல், தகாத வார்த்தையில் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், குற்ற சதி மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இவ்வழக்கில் சிவசங்கரன், ஜே.சி.பி., டிரைவர் சக்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Divakgaran_2

அடுத்த முக்கியப் புள்ளியான ராவணன் மீது ரவிக்குமார் என்ற கான்ட்ராக்டர் கொடுத்த புகாரில், வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.   பணத்துக்காக கடத்திச் செல்லுதல், அடைத்து வைத்தல், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் சதி ஆகிய புகார்களின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு மே மாத கடைசியில் ராவணனின் உதவியாளர் மோகன், ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்று அவரை ராவணன் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். உடனே ரவிக்குமார் தனது நண்பர் பரமேஷ்குமாருடன் கோவை-திருச்சி சாலையில் உள்ள ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு மதியம் சென்றனர்.

அங்கு இருந்த ராவணன், தொடர்ந்து பஞ்சாயத்து காண்டிராக்ட் வேலை கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ரவிக்குமாரை மிரட்டி உள்ளார். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, ராவணனும் அவரது ஆட்களும் அவரை மிரட்டி இருக்கிறார்கள். அந்த சம்பவத்துக்கு பின்னர் ராவணன் மற்றும் அவரது அடியாட்கள் பலமுறை ரவிக்குமாரை போனில் தொடர்பு கொண்டு தாமதம் இன்றி பணத்தை கொடுக்குமாறு மிரட்டினார்கள்.

Tamil-Daily-News-Paper_5957758427

இந்த நிலையில் 9.10.2011 அன்று காலை 10 மணி அளவில் ராவணனின் உதவியாளர் மோகன் மற்றும் சிலரும் ரவிக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து, ராவணனை வந்து சந்திக்குமாறு கூறி இருக்கிறார்கள். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் ரவிக்குமாரை கத்தி முனையில் மிரட்டி காரில் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு கொண்டு சென்று அவரது முன்பு நிறுத்தி இருக்கிறார்கள்.

அங்கு ரவிக்குமார் ராவணனால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டு இருக்கிறார். பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியதோடு அந்த குடோனில் அவரை அடைத்து வைத்தனர். ரூ.10 லட்சம் தந்தால் மட்டுமே அவரை விடுவிப்பதாக மிரட்டினார்கள்.

அன்று மாலை 5 மணி அளவில் ரவிக்குமாரின் நண்பர் பரமேஷ்குமார் ரூ.10 லட்சம் கொண்டு சென்று ராவணனிடம் கொடுத்த பின்னரே ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். அப்போது, நடந்த இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டி உள்ளனர்.  இதன் அடிப்படையில் ராவணன் கைது செய்யப் பட்டுள்ளார்.

ராவணம் மீது பாய்ந்துள்ள அடுத்த வழக்கு சென்னை மாநகர காவல்துறையினரால் பதிவு செய்யப் பட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ராவணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கு திருச்சியில் இருந்து கரூர் வரை உள்ள பகுதிகளில் மணல் குவாரிக்கான உரிமம் பெற்றுத்தருவதாக கூறி ராவணன், சத்யா, ராஜா ஆகியோர் ரூ.1 கோடி பெற்றுக்கொண்டனர்.  ஆனால் குறிப்பிட்டவாறு லைசென்ஸ் பெற்றுத் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுபற்றி கேட்டபோது ராவணன் கொலைமிரட்டல் விடுத்தார். எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.  இதன்படி,  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ராவணன், சத்யா, ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பேர் மீதும் மிரட்டல், ஏமாற்றுதல், மோசடி ஆகிய  3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது சிறையில் உள்ள ராவணனை இந்த இரண்டாவது வழக்கிலும் கைது செய்ய, சென்னைக் காவல்துறையினர், கோவை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

திவாகரன் இன்னும் காவல்துறையினரின் பிடியில் சிக்காமல், தலைமறைவாக உள்ளார்.    திவாகரனைப் பிடிப்பதற்கு பதிலாக, பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விட்டவர், அதன் ஓட்டுனர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

திவாகரனும் ராவணனும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  ஆனால், நியாயமாக சட்டத்தின்பாற்பட்டு நடக்கவேண்டிய காவல்துறையினர் எப்படியெல்லாம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் பார்த்தீர்களா ?  மணல் குவாரி வேண்டும் என்று ஒரு கோடி ரூபாயை ராவணனுக்கு கொடுத்த கிருஷ்ணமூர்த்தி அரசு காண்ட்ராக்டை பிடிப்பதற்காக லஞ்சம் கொடுத்ததன் மூலம், லஞ்ச ஒழிப்புச் சட்டம் பிரிவு 12ன் கீழ் தண்டிக்கப் படக்கூடிய குற்றத்தை புரிந்துள்ளார்.    ஆனால், அவர் புகாரில், ராவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சி வந்தால் காவல்துறை அதிகாரிகளுக்குத்தான் கொண்டாட்டம் என்று சவுக்கு சொன்னது, மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது.

 

தமிழகம் கொலைக்களமாக மாறிவிட்டதோ என்று சந்தேகிக்கும் வகையில் நாள்தோறும் தமிழகமெங்கும் கொலைகள் அரங்கேறி வருகின்றன.  பொம்மைத் துப்பாக்கியை வைத்து, வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்.   தமிழகமெங்கும் குற்றச் செயல்கள் பெருகி வருகின்றன. ஆனால் அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர், சட்ட விரோதமாக, ராவணனும், திவாகரனும், வசூல் செய்த பணத்தை அவர்களிடமிருந்து மீட்டு அம்மாவிடம் ஒப்படைக்கும் பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

 

வழக்கமாக அரசியல் கட்சிகள், தேர்தல் சமயங்களிலும், மாநாடுகள் சமயங்களிலும்தான் நிதி வசூலில் ஈடுபடுவார்கள்.  ஆனால், அதிமுகவில் மட்டும் திடீரென்று, சம்பந்தமே இல்லாமல், அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும், அம்மாவின் புதிய ராசி எண்ணான ஏழில் கூட்டுத்தொகை வரும் வகையில் நிதியை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

MC-Samath

கடந்த 26ம் தேதி மட்டும், ஆறு கோடியே 82 லட்ச ரூபாயை அதிமுக நிர்வாகிகள் கொடுத்திருக்கின்றனர்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் ஒரு கோடியே ஆறு லட்சம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஒரு கோடியே ஆறு லட்சம், கோவை அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஒரு கோடியே ஆறு லட்சம், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு கோடியே ஆறு லட்சம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சம்பத் 52 லட்சம் வழங்கியுள்ளனர்.

 

இவர்களுக்கு இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, எதற்காக இப்போது இந்த வசூல் என்பது புரியவில்லை.     ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டை ஒழிப்பேன் என்று சபதமிட்ட ஜெயலலிதா ஏழு மாதங்களாக தமிழகத்தை இருளிலேயே வைத்துள்ளார்.  தானே புயலில் பாதிக்கப் பட்ட கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

 

அரசு நிர்வாகத்தில் அதிகாரிகள் எப்போது மாறுதல் உத்தரவு வருமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.   அமைச்சர்களும் அடுத்த மாற்றம் எப்போது என்று ஜெயா டிவியைப் பார்த்தபடி உள்ளனர்.  ஆறு மாதத்தில் ஆறு முறை மந்திரி சபையை மாற்றி அமைத்துள்ளார் ஜெயலலிதா.

 

ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள மக்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்த போக்குவரத்துக் காவல்துறையை முடுக்கி விட்டு, கண்மூடித்தனமாக வசூல் செய்ய உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.  போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அபராதம் செலுத்தத்தான் வேண்டும் என்றாலும், போக்குவரத்து காவல்துறைக்கு டார்கெட் வைத்து, வசூல் செய்வது, அரசின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

 

பத்தே நாட்களில் பாழ்பட்ட சாலைகளை சரிசெய்வேன் என்று உறுதியளித்த மேயர் இரண்டு மாதங்களாகியும் இன்னும் சாலைகளை சரிசெய்யாமல் உள்ளார். இத்தனை பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மன்னார்குடி மாபியவைக் கைது செய்வதில் தீவிரம் காட்டி, வாரமிருமுறை புலனாய்வு இதழ்களுக்கு தீனி போடும் வேலையில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது.

 

காவல்துறை அதிகாரிகளோ, மன்னார்குடி மாபியாவைச் சேர்ந்தவர்களை மேலும் பல்வேறு வழக்குகளில் கைது செய்து, அம்மாவிடம் எப்படி நல்ல பெயர் எடுப்பது என்பதில் அதி தீவிரமாக இறங்கி வருகின்றனர்.

 

ஒரு ஜனநாயக நாட்டில், சட்டத்தையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?   கருணாநிதியும் தனக்கு எதிராக குரல் எழுப்பியவர்களை இப்படித்தானே பொய் வழக்கில் சிக்க வைத்தார் ? அது ஒரு வகை என்றால் இது ஒரு வகை.

 

Comments  

 
+2 #32 bengali sweet 2012-02-06 21:03
ச் வுக்குகு பைத்தியம்
Quote
 
 
+1 #31 vennai 2012-02-04 20:08
DMK aatchyil arasa thirudiyadhu. RAJA innum Jayilil, DMK MP Kani spent jail in 6 months , NO 1 enquried by CBI, number 2 anytime ready to go Jai, Dayannithi Cable thirudan. avanga annan ulaga thirudan, innononnu Madurrai thirudan... appadiy illaya intha aatchi. :lol: :lol: :lol: Quoting புதியவன் ராஜ்:
இங்கு அதிமுகவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஆதரவாளர்கள், வங்கி கொள்ளை நடந்ததற்கு காரணம் CCTV இல்லாதது தானாம். அப்படியானால் வீடுகளில் புகுந்து கொலை கொள்ளை நடப்பதை தடுக்க வீட்டுக்கு வீடு CCTV வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களா? ஜெ. ஆட்சிக்கு வந்ததும் கொள்ளையர்கள் ஆந்திராவிற்கு ஓடி விட்டார்கள் என்று ஏளனப்புன்னகையுட ன் காமடி செய்தாரே முதல்வர். அவர் முகத்தில் கரி பூசுவது போல, அவர் கட்சி ஜால்ரா எம்.எல்.ஏ. பழ. கருப்பையா வீட்டிற்குள்ளேய ே புகுந்து தங்க சங்கிலி பறித்து சென்றானே ஒரு கொள்ளையன். முன்பு தனது ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தான் தமிழ் நாட்டிற்கு கொள்ளையர்களை அனுப்புகிறார் என்றெல்லாம் அடி முட்டாள்தனமாக பேசியது யார் என்பதை அதிமுக ஜால்ராக்களும் சவுக்கும் நினைத்து பார்க்க வேண்டும். தன்னுடன் ஒரே வீட்டில் வசிப்பவரின் தில்லுமுல்லுகளை 25 வருடங்களாக தெரிந்து கொள்ளும் சக்தி இல்லாத "மாமேதை"யா முதல்வர்? வீட்டை விட்டு கட்சியை விட்டு துரத்தியவர்கள் பெயரில் உள்ள அரண்மனை மாளிகையில் இனிமேலாவது சென்று வசிக்காமல் இருப்பாரா? போன வாரம் கூட சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், "குற்றம் சாட்டப்பட்டவர்க ள் (ஜெ.) சிறிதளவாவது நியாயமாக நடந்து கொள்ள கூடாதா?" என்று வேதனைப்பட்டிருக ்கிறார்கள். இந்த சூட்டையும் சேர்த்தால் அவர் உடலில் வரிக்குதிரை போல சூடுகள் இருக்கும். ஆனால் ஜெ. செய்யும் எல்லா தவறுகளையும் பூசி மெழுக தான் சில வாசகர்கள் முயல்கிறார்கள்.
Quote
 
 
+5 #30 புதியவன் ராஜ் 2012-02-03 13:42
இங்கு அதிமுகவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஆதரவாளர்கள், வங்கி கொள்ளை நடந்ததற்கு காரணம் CCTV இல்லாதது தானாம். அப்படியானால் வீடுகளில் புகுந்து கொலை கொள்ளை நடப்பதை தடுக்க வீட்டுக்கு வீடு CCTV வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களா? ஜெ. ஆட்சிக்கு வந்ததும் கொள்ளையர்கள் ஆந்திராவிற்கு ஓடி விட்டார்கள் என்று ஏளனப்புன்னகையுட ன் காமடி செய்தாரே முதல்வர். அவர் முகத்தில் கரி பூசுவது போல, அவர் கட்சி ஜால்ரா எம்.எல்.ஏ. பழ. கருப்பையா வீட்டிற்குள்ளேய ே புகுந்து தங்க சங்கிலி பறித்து சென்றானே ஒரு கொள்ளையன். முன்பு தனது ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தான் தமிழ் நாட்டிற்கு கொள்ளையர்களை அனுப்புகிறார் என்றெல்லாம் அடி முட்டாள்தனமாக பேசியது யார் என்பதை அதிமுக ஜால்ராக்களும் சவுக்கும் நினைத்து பார்க்க வேண்டும். தன்னுடன் ஒரே வீட்டில் வசிப்பவரின் தில்லுமுல்லுகளை 25 வருடங்களாக தெரிந்து கொள்ளும் சக்தி இல்லாத "மாமேதை"யா முதல்வர்? வீட்டை விட்டு கட்சியை விட்டு துரத்தியவர்கள் பெயரில் உள்ள அரண்மனை மாளிகையில் இனிமேலாவது சென்று வசிக்காமல் இருப்பாரா? போன வாரம் கூட சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், "குற்றம் சாட்டப்பட்டவர்க ள் (ஜெ.) சிறிதளவாவது நியாயமாக நடந்து கொள்ள கூடாதா?" என்று வேதனைப்பட்டிருக ்கிறார்கள். இந்த சூட்டையும் சேர்த்தால் அவர் உடலில் வரிக்குதிரை போல சூடுகள் இருக்கும். ஆனால் ஜெ. செய்யும் எல்லா தவறுகளையும் பூசி மெழுக தான் சில வாசகர்கள் முயல்கிறார்கள்.
Quote
 
 
0 #29 Sethumathavan 2012-02-02 21:47
"தேவர் காலடி மண்ணைச்' சரணடையுமா பெரியார்பூமி?
பசும்பொன் முத்துராமலிங்கம ் என்னும் மக்கள்விரோதியின ் நூற்றாண்டுவிழாக ் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்க ின்றன. தமிழக அரசு முத்துராமலிங்கத ்தின் நூற்றாண்டுவிழாவ ையொட்டி தபால்தலை வெளியிட்டுக் கவுரவித்திருக்க ிறது. நான்குநாட்களுக் கு அப்பகுதியில் அரசுவிடுமுறையும ் அறிவித்திருக்கி றது. இதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோர் விடுதலைமுன்னணி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்க ிறது. இதைவிடக் கொடுமை, குண்டர்சட்டத்தி ல் அதிகம் தலித்துகளே கைதுசெய்யப்படுவ தால் குண்டர்சட்டத்தை நீக்கவேண்டும் என்று தலித் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளுக்கு ச் செவிமடுக்காத தமிழக அரசு முத்துராமலிங்கத ்தின் பிறந்த நாளையொட்டி தென்மாவட்டச் சாதிமோதல்கள் தொடர்பான வழக்குகளை (கொலை, பாலியல்பலாத்கார ம் தவிர்த்து) திரும்பப்பெற்றி ருக்கிறது.-- http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_09.html
Quote
 
 
0 #28 suresh krishna 2012-02-02 20:23
Savukku
Kindly do not attempt to equate this regime with KK regime.KK was following MM singh being a mute spectator.For that we jumped and cried over it.Now a regime is using police to nail the betrayers who attempted to stage a coup.Regarding Bank robbery the bank had no security system in place and it was not equipped with CCTV also.When technology has developed better make use of it.Crime ratio has incresed because previous regime everyone was looting so petty theft/crimes were not flared up by media.Enough explanation has been given for Milk and Bus fare increase iam baffled with your reporting,you are simply opposing for heck of it.
Quote
 
 
-2 #27 ஷாலி 2012-02-01 23:08
சவுக்கு சார்! .....என்ன சார், “ வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானட” என்பதுபோல் உங்கள் எழுத்து உளளது.

மன்னார்குடி மாபியா....என்று கட்டுரைதோறும் சசி கும்பலை குற்றவாளியாக ஆக்குகிறீர்கள். யார் செய்த புண்ணியமோ
‘ஆத்தா மனசு இரங்கி” உயிர்த்தோழியை உதறியெறிந்து..

அவரது எடுபிடிகளை போலிசைவைத்து வழக்குப்போடுகிற ார்.
இது ஒரு தனி விஷயம் நல்ல விசயம்தான்.

ஆனால் இந்த விஷயத்தோடு,தமிழ ்நாடே கொலைக்களமாக மாறிவிட்டதோ...தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த போலிசும் மன்னார்குடியிலே மையம் கொண்டதுபோல் எழுதுவது.
மொட்டைத்தலைக்கு ம் முழங்காலுக்கும் முடுச்சுப்போடுவ து போல் உளளது. இன்னுங்கொஞ்சம் நிதானமாக எழுதலாம்.

அதேசமயம்,நல்ல கருத்துக்களை கூறி பின்ணுட்டம் இடும் திரு. சிவகுமார் போன்றவர்களின் ‘ போங்கடா அறிவு கெட்ட பத்திரிகைகளா ...” ஈனப்பிறவிகள் ..என்ற விமர்சனங்கள் அவர்களின் நல்ல கருத்துக்களை மதிப்பிழக்க வைத்துவிடும்.
எனபது என் தாழ்மையான கருத்து.

வள்ளுவனின் ..கனியிருக்க காய் கவர்ந்தற்று.
Quote
 
 
+13 #26 வாசகன் 2012-02-01 22:22
யோவ், உன்னை மாதிரி எத்தனையோ பதிவர்கள் இணையத்தில் போராடி கடந்த ஆட்சியை தூக்கி எறிய, மறைமுகமாக இந்த அம்மா வெற்றி பெற உதவினீர்கள்.. அதிலும் நீ வெளிப்படையாகவே இந்த அம்மாவுக்கு ஓட்டு போட சொன்னே, நிறைய பேரு அந்த கோரிக்கையின் நியாயத்தை ஏற்று இந்த அம்மாவுக்கு ஓட்டு போட்டோம்......
அந்த மை காயுறதுக்குள்ளே நாங்க செய்தது தவறு என்று யோசிக்க வைக்கிறது இந்த அம்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையும்... சர்வாதிகாரத்தின ் மொத்த உருவமா மாறிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

இன்னைக்கு பாரு, அந்த ஆளு விஜயகாந்த் என்ன பண்ணினாரு.. சும்மானாலும் வம்பிழுத்து அந்த ஆளை வெளிய தூக்கி போடணுமா... இதிலே அந்த ஆளுக்கு தான் ஒரு விளம்பரம் லாபம்... கண்ணாடி பார்ட்டி வேற அறிக்கை விட்டு ஒரு விளம்பரம் தேடிக்கிட்டாறு... நாங்க தனியா நின்னிருந்தே இதை விட அதிகம் ஜெயிப்போம்னு ஜம்பம் வேற... அப்புறம் ஏன் விடிய விடிய மீட்டிங் போட்டு கெஞ்சிநீங்க... உண்மை நமக்கு தெரியாதா...

இதுல பிரதமர் கனவு வேற... ஒரு சீட்டு கூட கிடைக்கபோரதில்ல ை இப்ப உள்ள நிலைமையிலே.. மீண்டும் அந்த கண்ணாடிக்கார குடும்பம் சென்ட்ரல்ல உக்கார்ந்தது இந்த அம்மாவ பழி வாங்க இவுங்களே வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அபத்தம்...

உமது வேண்டுகோளை ஏற்று இவருக்கு வாக்களித்த உரிமையில் கோருகிறோம்.. உன்னால் முடிந்த காய்களை நகர்த்தி அந்த அம்மாவை வெற்றி கனவிலிருந்து வெளியே வந்து உண்மையான நிலையை உணர வை....
Quote
 
 
+3 #25 rufus 2012-02-01 14:48
அன்புல்ல சவுக்கு readers,
pls read the truth behind the admk rule: http://www.indiatvnews.com/news/India/Was_Sasikala_Giving_Slow_Poison_To_Jayalalithaa_Tehelka_Report_Says_So-13994.html
Quote
 
 
+4 #24 ரப்பர் ஸ்டம்ப் 2012-02-01 14:41
தூணாக நின்ற தமிழன் துரும்பானது ஏன்? ஒரு பதவியோ, புகழோ நமக்கு கிடைக்காவிடில்க ூட நம்மை தேற்றிகொள்வோம், ஆனால் நம்மில் ஒருவர் அந்த தகுதிக்கு, பதவிக்கு வருவதை ஒருபோதும் சகித்து கொள்ளமாட்டோம். நல்லவைகளை அங்கீகரிக்கும் நல்லமனது நம்மிடம் இல்லை. மூப்பனாருக்கு பிரதமர் வாய்ப்பு வந்தபோது அதை தடுத்தவர் நம் தமிழின தலைவர் கலைஞர். காமராஜருக்கு அந்த வாய்ப்பு வந்தபோது, அதை ஏற்றுக்கொள்ளும் திறமை நம்மிடம் இல்லை. அப்போது அதை அவர் ஏற்றிருந்தால் இன்று இந்தியாவின் நிலையே வேறு. அதற்கு பதிலாக இந்திராகாந்திக் கு விசுவாசியாக காவடி தூக்கினார். இயற்கையாகவே நாம் விசுவாசமான அடிமைகள். அதனால்தான் உலகமே நம்மை ஒரு நல்ல வேலைக்காரர்களாக மட்டுமே பார்க்கிறார்கள் . நாமதிகமாக உணர்ச்சிவசபடும் மடையர்கள். அதனால்தான் அண்ணாவின் வாயாடி தம்பிகளின் வெற்றுபேச்சிற்க ு விலைபோனோம். எனக்கு பிடிக்காத தம்பி அதிமுகவில் இருந்தால் நான் திமுக, நாடு எப்படி கெட்டுபோனாலும் எனக்கு கவலையில்லை. என் தம்பி நல்லா இருக்ககூடாது என்ற பொறாமை, இந்த நிலைமை பெரும்பாலும் பெண்காளாலேயே உருவாக்கபடுகிறத ு. இப்படிப்பட்ட கேவலமான புத்தி நம்மை மேலும் தரம் தாழ்த்தி விட்டது. உற்றார் உறவினர்கள் கஷ்டப்படும்போது தோள்கொடுப்போம், ஆனால் அவன் நல்லா இருந்தால் காலை வாரும் நாம் கிணற்று நண்டுகள்! திராவிட பாரம்பரியம் (உபயம் மஞ்சதுண்டு) நீதி, நேர்மை போன்றவற்றை நாம் காசுக்காக, பதவிக்காக விற்பதற்கு தயங்குவதே இல்லை. ஒரு நல்ல கணவரால் ஒரு குடும்பம் வசதியாக வளரும், ஆனால் ஒரு நல்ல பெண்ணால்தான் நல்ல சமுதாயம் வளரும், அப்படிப்பட்ட பெண் சுயநலமிகளாக மாறிவிட்டதால், குழந்தைகளை அதுபோன்றே வளர்கிறார்கள், அது மேலும் நம் சமுதாயத்தை அதளபாதலத்திற்கே இட்டுசென்றுவிட் டது.
குறைகளை நமக்குள் வைத்துகொண்டு, மற்றவர்களை குறை கூறுவது நம்மை மேலும் உணர்ச்சிவசபடுத் தலாம், ஒருபோதும் நம்மை உயர்த்தாது, ஆனால் அந்த உணர்ச்சியையே முதலீடாக்கி மற்றவர்கள் உயர்ந்துவிடுவார ்கள். வழக்கம்போல் நாம் எலும்புத்துண்டி ற்கே சோரம் போய்விடுகிறோம். அது அவர்கள் தவறல்ல! நம் தவறை, குறையை ஒத்துக்கொள்ளும் மனபக்குவம் இன்னும் நமக்கில்லை. எனவே முதலில் நமக்கு தேவை, நம்மை நாம் அங்கீகறிக்க நல்ல மனபக்குவம். நல்ல குணவதிகள்,அப்போ துதான், மற்றவர்கள் நம்மை அங்கீகறிப்பார்க ள், அதுவரை நாம் நல்ல அடிமைகளே!நம் புலம்பல்கள் என்றும் தொடரும்!
Quote
 
 
+1 #23 deepu 2012-02-01 14:15
ச‌சிக‌லா ஆதிக்க‌ம் க‌ழிந்த‌ ஜெயாவின் ஆட்சி நிச்ச‌ய‌ம் ம‌ற்ற‌ திராவிட‌ ஆட்சிக‌ளை (எம்ஜியார் ஆட்சியையும் சேர்த்து) நன்றாக‌வே இருக்கும். காவ‌ல்துறையின் குறுக்கு வ‌ழி, சுய‌லாப‌ங்க‌ளுக ்காக, "தமிழ‌க‌ காவ‌ல்துறை"யாக இருந்த‌ அமைப்பு, 'திமுக‌ போலிஸ்', 'அதிமுக‌ போலிஸ்' என முக‌மூடிக‌ளை மாட்டிக்கொண்ட‌ன . அதுவே ச‌சிக‌லா / ந‌ட‌ராஜ‌ன் / திவாக‌ர‌ன் / ராவ‌ண‌ன் போலிஸ் என ப‌ர‌ந்து விரிந்து த‌ங்க‌ள‌து ஆதாய‌ங்க‌ளுக்கா க அவர்க‌ளின் அடிவ‌ருடிக‌ளாக மாறிய‌ அவலம், கேவ‌ல‌ம் இப்போது பொதும‌க்க‌ளின் பார்வைக்கு வ‌ந்திருக்கிற‌த ு. அர‌சாங்க‌ நிறுவாகத்தின் அடிவேர்வ‌ரை ப‌ர‌வி இருக்கும் ம‌ன்னார்குடி கும்ப‌லின் ஆதிக்க‌த்தின் ஆணிவேரை துண்டிக்க‌ காவ‌ல்துறையை முழுவ‌துமாய் முடுக்கிவிட்ட‌த ில் த‌வ‌று ஒன்றுமில்லை என்ப‌தே ம‌க்க‌ளின் க‌ருத்து. சாக்க‌டை அடைப்பை சுத்த‌ம் செய்துவிட்டால், வீட்டு ச‌ம‌ய‌ல‌றையில் க‌ழிவுநீர் தேங்காது திரு ச‌வுக்கு சார். அதிகார‌ துஷ்பிர‌யோக‌ம் தான் ஊழ‌லின் ஊற்றுக‌ண்.
Quote
 
 
+7 #22 fraud & antisocial 2012-02-01 13:22
sand mafia Armugha samy giving monthly bribe to JAYA through his agent like unniy,prabhu using car like tata sumo, Qualis. these two perrsons were appointed for only for bribe giving..
above sand mafia given bribe to IAS, IPS, DMK MINISTER, chairman,pancha yat and also to kalaingar family members.
Quote
 
 
-2 #21 Narayan 2012-02-01 13:19
[ஃஉஒடெ நமெ="ஊர்க்குருவி."][ஃஉஒடெ நமெ="தமிழதன்"]எரியிர கொல்லியில் எது நல்ல கொல்லி[/ஃஉஒடெ] நண்பர் தமிழாதான் நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீங்க, உங்க தமிழ் புல்லரிக்குது.[/ஃஉஒடெ]

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று கூறுகிறார்.

Why are you jumping to pass sarcastic comment on other?
Quote
 
 
0 #20 maarrukaruthu 2012-02-01 11:39
ministers are looking into jaya tv for the ministry change...super comedy....nothing can change the fate of people.. :)
Quote
 
 
+2 #19 ஊர்க்குருவி. 2012-02-01 09:24
Quoting thamizhathan:
எரியிர கொல்லியில் எது நல்ல கொல்லி
நண்பர் தமிழாதான் நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீங்க, உங்க தமிழ் புல்லரிக்குது.
Quote
 
 
0 #18 SUTHIRAN 2012-02-01 08:58
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ! இப்போது கொள்ளிவாய்ப் பிசாசுவின் அரசல்லவோ நடக்கிறது ! தமிழ் நாட்டின் பாவம் ! கொதிக்கும் உலையில் இருந்து திகு திகு என்று எரியும் அடுப்பில் அல்லவோ விழுந்து விட்டனர் தமிழ் மக்கள்!
Quote
 
 
+9 #17 sam 2012-02-01 07:26
What kind of a conclusion is this? What is your point?
Quote
 
 
0 #16 Karthickkk 2012-02-01 05:47
good!!!
Quote
 
 
+40 #15 Valliappan 2012-02-01 05:44
25 முறை தமிழகத்தின் முதலமைச்சர் பதவி நிரப்பபட்டு இருந்தாலும்....1947 இல் இருந்து இன்றுவரை பல லட்சகணக்கான அரசு ஊழியர்கள் மக்கள் பணியில் இருந்தாலும்....இவ்வளவு மனித சக்தியை வைத்து இருந்தும் 65 ஆண்டு கால ஜனநாயக ஆட்சியில் என்ன சாதித்து விட்டோம்?....விண்ணையே புரட்டி போட்டு இருக்கவேண்டாம்?

ஒரு நாட்டின் 12.5% மக்கள் 8 நாடுகள் சேர்ந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிற ராணுவத்தை தலைவர் பிரபாகரன் தலைமையில் 20 ஆண்டு காலத்தில் அமைக்கவில்லையா?

1969 இல் இருந்து இன்றுவரை தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க தவிர வேறு கட்சிகளே இல்லையா?....எத்தனை ஏழ்மை கட்சிகளை மக்கள் ஆதரித்து விட்டனர்? எத்தனை சுயேட்சிகளை மக்கள் வெற்றிபெற செய்துவிட்டனர்....? வாக்களிக்கும் வேட்பாளர் பெயரை கூட பல பேர் தெரிந்து கொள்வதில்லை.

திவாகரன், ராவணன் போன்றோரெல்லாம் சங்கிலின் தொடர்ச்சியே...இது முடியபோவது கிடையாது.....காலங்காலமாக இது தொடரத்தான் போகிறது......

இந்த சங்கிலியின் தொடர்ச்சி அறுபட வேண்டிமென்றால்.......ஒரு வழி

"கடைகுடிமகனுக்கு ம் அடிப்படை அரசியல் அறிவு......நிகழ்வுகளை மறக்காத ஞாபக சக்தி.....ஈழதமிழன் போல் வீரம், 98% வாக்கு பதிவு......"
Quote
 
 
+2 #14 a 2012-02-01 04:51
apdi paatha nee koodathan suspend aanavan nee kudutha pugar la thana jaffewr sait ah suspend pannanga? nee enna pannalum correct mathavaga senja thappu.. adithana?
Quote
 
 
+4 #13 ஊர்க்குருவி. 2012-01-31 22:34
//உலகம் ஒரு நாடகமேடை, (நாம்) அனைவரும் அதில் நடிகர்கள்//

அவரவர் பாத்திரத்தை அனைவரும் சரியாக உணர்ந்து செய்துகொண்டிருக ்கின்றனர். மேடை இருக்கும்வரை நாடகம் தொடரும்.
Quote
 
 
+4 #12 குட்டி 2012-01-31 20:43
இப்போதைக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த ஒரு துரொகியும் இருக்க கூடாது..அதை ஒன்றே தலையாய கடமையாக கருதி அரசு ஊழியர்களை பயன் படுத்துகிரார்..இன்னும் 52 மாதங்கள் தமிழர்களுக்கு எப்படி கழிய போகின்றனவோ??
Quote
 
 
+7 #11 சவுக்கு தாசன் 2012-01-31 20:11
இருவரும் (கருனா/ஜெயா,ஜெயா/சசி) பகையாளி யாக இருந்தால் தான் அரசியல் நடத்த முடியும் என்று கூட்டு சேர்ந்து மக்களை மாக்கள் ஆக்குகிரார்களோ என்று ?
Quote
 
 
+10 #10 vivekparabha 2012-01-31 20:09
ஒருவர் தனது சொந்ததை வாழவைக்க பதவியை பன்படுதினார்

இவர் தன் சொந்த பகையை தீர்க்க பன்படுத்துகிறார ்.

மின்சார தட்டுபாடு,அயல் மாநிலத்தவரின் ஆதிக்கம்,கனிமவழ த்தை சுரன்டல், தண்ணீர் தட்டுபாடு,...................... எட்ச்ச்ச்ச்ச்

இதெல்லாம் ????????????????
Quote
 
 
+9 #9 சவுக்கு தாசன் 2012-01-31 20:04
சவுக்கு, ஜெயா கட்டுரை யில் கருனா வை ஒப்பிடும் நீங்கள். ஏன் கருனா கட்டுரை யில் ஜெயா வை ஒப்பிட தயங்கம் காட்டுகிரிர்?
Quote
 
 
+30 #8 Sivakumar.M 2012-01-31 18:56
Part-02
இந்திய அரசியல் சட்டம் சொல்வது என்ன? ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படகூட ாது. ஆனால் இங்கு இராவணன், திவாகரன் போன்ற குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படும் போது சவுக்கின் கட்டுரையில் நியாயம் இல்லை. சில குற்றவாளிகள் தப்பிக்கலாம் என்று சட்டமே சொல்கிறது. ராவணன், திவாகரன் மட்டும் தண்டிக்கபடுவது சவுக்கின் வேதனையாக உள்ளது. என்ன காரணம்? சவுக்கின் பத்திரிக்கை ஆசிரியர், நிருபர்கள், நிறுவனர்களின் பெயர் பின்புலத்தை அதாவது பயோடேட்டாவை ஒரு கட்டுரையாக வெளியிடுங்கள். சவுக்கின் நோக்கம் அதன் பயணம் என்ன என்பதை துல்லியமாக கணித்து சொல்கிறேன். இது ஜோசியம் அல்ல. நாட்டு நடப்பை விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கணிப்பு. நான் ஜெயாவின் ஆதரவாளனும் இல்லை. அதிமுக தொண்டனும் இல்லை. மாறாக அளவுக்கு அதிகமான நாட்டுபற்று உள்ளவன். அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்படவேண ்டும் என்று தனது ஆதங்கத்தை, கோரிக்கையை சூசகமாக வெளியிடவேண்டுமே தவிர நடவடிக்கை எடுத்த ஜெயா மீது இது பழி வாங்கும் நடவடிக்கை என்று கூப்பாடு போடுவது போல் உள்ளது. நடவடிக்கை எடுத்தாலும் தப்பு. எடுக்கவில்லை என்றாலும் தப்பு. நடவடிக்கை எடுத்தால் இது நொள்ளை, அது நொட்டை என்று கூறுவது. ஏன்டா திருந்தவே மாட்டீங்களா! அப்படிதான் TNPSC தலைவரா நடராசன் நியமிக்கப்பட்டத ற்கு நொள்ளை நொட்டை சொன்னீங்க. ஊழல் லஞ்சம் என்பதை இன்னைக்கு ஆரம்பித்து நாளைக்கு ஒழிக்கமுடியாது. நடராசன் போன்ற ஆட்களில் ஆரம்பித்து மக்களை மனம் மாற்றம் செய்து பின்னர் அவரை விட நல்லவர் ஒருவரை உருவாக்கி நடராசன் இடத்தில் உட்க்காரவைக்க வேண்டும். செல்லமுத்து ஒரு மோசமான ஊழல்வாதி. அவரை போன்ற ஆட்கள் இருந்த இடத்தில நடராசன் நியமிக்கப்பட்டத ு மிக அருமையான முடிவு. இதுபோலதான் "டீம் அண்ணா" குழுவினரிடம் உள்ள சில குறைகளை பெரிது படுத்தி "தீக்குளித்தால் சீதை, ராமன்" என்று கட்டுரை எழுதி அவர்களை முடக்கி விட்டீர்கள். காங்கிரஸ் காரன் இதை தான் எதிர்ப்பார்த்தா ன். அப்புறம் என்ன 3ஜி 4ஜி நீளப்போகிறது. போங்கடா அறிவு கெட்ட பத்திரிக்கைகளா! எவனோ போடும் எச்சை சோத்துக்கு பத்திரிக்கை நடத்தும் ஈன பிறவிகள். நீங்கள் நாட்டை திருத்த திருத்தபோகிறீர் களா!
Quote
 
 
0 #7 Padman 2012-01-31 18:55
இந்த இலட்சனத்தில் பிரதமர் கனவு வேறு!!!

வாய்தா ராணி... வசூல் ராணி ... இன்னும் எத்தனை அவதாரம் மீதமிருக்கோ?
Quote
 
 
+33 #6 Sivakumar.M 2012-01-31 18:54
Part-01
"மணல் குவாரி வேண்டும் என்று ஒரு கோடி ரூபாயை ராவணனுக்கு கொடுத்த கிருஷ்ணமூர்த்தி அரசு காண்ட்ராக்டை பிடிப்பதற்காக லஞ்சம் கொடுத்ததன் மூலம், லஞ்ச ஒழிப்புச் சட்டம் பிரிவு 12ன் கீழ் தண்டிக்கப் படக்கூடிய குற்றத்தை புரிந்துள்ளார்" இந்த வாக்கியத்தின் மூலம் சவுக்கின் மூளை எள் அளவு கூட இல்லை என்பது புலனாகிறது. ராவணன் அரசு அதிகாரியும் இல்லை, அரசு அலுவலரும் இல்லை. சட்டப்படி அவரிடம் கொடுக்கும் பணம் லஞ்சமாக கருதமுடியாது. எனவே பணம் கொடுத்தவரை லஞ்ச வழக்கில் கைது செய்யமுடியாது. பணம் வாங்கி ஏமாற்றியவரையும் லஞ்ச வழக்கில் கைது செய்யமுடியாது. மாறாக பணம் வாங்கி ஏமாற்றியவரை மட்டும் பண மோசடி வழக்கில் கைது செய்யலாம். அதுதான் தற்போது நடந்துள்ளது. இதில் இருந்து என்ன தெரிகிறது. உண்மை என்ன என்பதை அலசி ஆராயாமல் கட்டுரை வெளியிடும் சவுக்கை புறக்கணிப்பதே நலம்.
Quote
 
 
+4 #5 thamizhathan 2012-01-31 18:30
எரியிர கொல்லியில் எது நல்ல கொல்லி
Quote
 
 
+4 #4 Eleventh Sense 2012-01-31 17:31
மன்னார்குடி போனால், இன்னொரு ...............குடி. எப்படியும் ஒரு கும்பல் சுற்றி இருகந்தாக வேண்டும் இந்த அம்மவுக்கு. குடுத்து வச்ச பணத்த திரும்ப வாஙக வேண்டாமா? சங்கராச்சாரியார ் கதை திரும்ப நடக்குது.
Quote
 
 
+1 #3 anniyan 2012-01-31 17:31
//அன்று மாலை 5 மணி அளவில் ரவிக்குமாரின் நண்பர் பரமேஷ்குமார் ரூ.10 லட்சம் கொண்டு சென்று ராவணனிடம் கொடுத்த பின்னரே ரவிக்குமார் விடுவிக்கப்பட்ட ார். அப்போது, நடந்த இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டி உள்ளனர். இதன் அடிப்படையில் ராவணன் கைது செய்யப் பட்டுள்ளார்.//
ஆம்.. இதெல்லாம் நம்பும்படியாகவு ம் இல்லை.. வீடியோ ஆதாரம் இல்லாமல் நிரூபிக்கவும் முடியாது.. எப்படி பின் காவல்துறை கைது செய்கிரது? Jayalalitha should focus on progress works rather.
Quote
 
 
+12 #2 Eleventh Sense 2012-01-31 17:27
இது ஒரு வகை தான். ஆனால், கருணாநிதி ஹெல்மெட் சட்டம், புகயிலை ஒழிப்பு சட்டம், மட்ரும் இன்ன பிற சட்டஙகளை, பாதியில் அவிழ்த்து விட்டது போல் இல்லாமல், அரசு கஜானா நிரம்ப இதுதான் வழி. அப்பொதுதான், வண்டியில் வேகமாக போய் பல விபத்துக்களுக்க ு கர்ரணமாக இருக்கும் பலவெட்டரை பசங்கள் திருந்துவான்கள் .
Quote
 
 
-4 #1 khaleel 2012-01-31 15:51
நல்ல அனுபவிங்க
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 42 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1861
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week24233
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month237052
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12759171