|
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை என்ற நியதி உண்மைதான் என்றாலும், இந்த வாரம், ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும், சட்டப்பேரவையில் நிகழ்ந்த மோதல் அரசியல் நாகரீகத்தையெல்லாம் குழிதோண்டிப் புதைத்து விட்டது.
விஜயகாந்தை அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றிய பின் ஜெயலலிதா, “எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய அருவருக்கத்தக்க கீழ்த்தரமான பேச்சுகளையெல்லாம் இங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனைவரும் பார்த்தார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதத்துக்கும், அவருடைய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்துக்கும் தண்டனை அளிக்க வேண்டுமென்றால் அவர்களை இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.
ஆனால், அதைத் தவிர்த்து குறைந்தபட்ச நடவடிக்கையாக இந்தப் பிரச்னையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக, எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் இதே வெற்றியைத்தான் நாங்கள் பெற்றிருப்போம்.
அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவது என தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அதன்படிதான் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் முடிவுகள் அமைந்தன.
தேமுதிகவின் அதிர்ஷ்டம், எங்களுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன; இத்தனை பேரவை உறுப்பினர்கள் இன்று இந்த அவையில் வந்து தேமுதிக சார்பில் அமர்ந்திருக்கின்றார்கள். இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.
எனது கட்சிக்காரர்களை திருப்திபடுத்துவதற்காகவே இந்தக் கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்தேன். கூட்டணி அமையாவிட்டாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. பேரவைத் தேர்தலில் எதைச் சாதித்துக் காட்டினோமோ, அதைவிடக் கூடுதல் இடங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கும்.
தேமுதிகவுக்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று இருக்கும். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தேமுதிகவுக்கு இத்தனை உறுப்பினர்கள் கிடைத்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தும் தகுதியும் கிடைத்தது. அதிமுகவுடன் கூட்டணி சேராவிட்டால் தேமுதிகவுக்கு கடந்த தேர்தலில் ஒரு இடம்கூடக் கிடைத்திருக்காது.
தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது, அவர்களுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தேர்தலைச் சந்தித்ததே என நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவரும் அவருடைய சட்டப் பேரவை உறுப்பினர் களும் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது ஒன்று சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு (தேமுதிக) வர வேண்டிய ஏற்றம், வரக்கூடிய ஏற்றம் எங்களால் வந்து முடிந்து விட்டது. இனிமேல் அவர்களுக்கு இறங்கு முகம்தான். அதைச் சரித்திரம் சொல்லும்” என்று ஜெயலலிதா பேசினார்.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்தது, தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் பேசிய பேச்சுதான். சந்திரக்குமார் தன் பேச்சில் பேருந்துக்கட்டண உயர்வு மக்களை பாதித்துள்ளது என்று பேசினார். அவரது பேச்சில் குறுகிட்ட அமைச்சர் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, புள்ளிவிபரங்களோடு, டீசல் விலை எத்தனை முறை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார். சந்திரக்குமார் தொடர்ந்து, பால்விலை உயர்வைப் பற்றிப் பேசினார். செங்கோட்டையன், எங்களைப்போல மாடு வைத்திருப் பவர்களுக்குத்தான் விவசாயிகளின் சிரமம் தெரியும் என்றார். சந்திரக்குமாரும் சளைக்காமல், நாங்களும் தொழிலாளியாக இருந்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து சந்திரக்குமார், “மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்த கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இந்த பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் இந்தப் பேரவையில் பேசினால் எங்களை எல்லோரும் சாடுகிறீர்கள்” என்றார்.
பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, சந்திரக்குமாருக்கு ஆதாரங்களோடு பதில் சொல்லாமல், நீங்களெல்லாம் சட்டசபைக்குள் நுழைந்ததே எங்களால்தான் என்றார். அதற்கு சந்திரக்குமார், எங்களால்தான் நீங்கள் ஜெயித்தீர்கள், உண்மையிலேயே துணிச்சல் இருந்திருந்தால், கட்டண உயர்வுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டியதுதானே என்றார்.
அப்போது எழுந்த ஜெயலலிதா, “ உறுப்பினர் சந்திரகுமார், விவரத்தின் அடிப்படையே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது மாநில அரசு அல்ல. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என ஒன்று இருக்கிறது. அதற்கு மின் கட்டணங்களைச் சீரமைப்பது குறித்து மின்சார வாரியம் தங்களது விண்ணப்பத்தை அளிக்கும்.

அதன்பின், அந்த ஆணையம் மாநிலம் முழுவதும் மக்கள் கருத்தை அறிய பல கூட்டங்களை நடத்தும். அது விதிகளில் உள்ள ஒரு நடைமுறை. ஏதோ தான்தோன்றித்தனமாக இந்தக் கருத்துக்கணிப்பு நடைபெறவில்லை. அப்படி நடத்தியாக வேண்டும் என்பது விதிமுறை. மக்களுடைய கருத்தை அறிந்து அதன்பின் அந்த ஒழுங்குமுறை ஆணையம்தான் மின் கட்டணங்களை நிர்ணயிக்கும்.
எனவே, சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மாநில அரசு மின் கட்டணங்களை உயர்த்தி விடும் எனச் சொல்வது பேரவை உறுப்பினரின் அறியாமையைக் காட்டுகிறது. பஸ் கட்டணங்கள், பால் விலையை உள்ளாட்சித் தேர்தலை முடித்து விட்டு உயர்த்தியதாகவும், முன்பே செய்திருந்தால் தெரிந்திருக்கும் என்று சவால் விடும் தொனியில் பேசினார்.
கட்டண உயர்வுகளை அறிவித்த போது, மிகுந்த வருத்தத்துடன் வேறு வழியின்றி இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக மக்களுக்கு விளக்கிச் சொன்னேன். இங்கு பேசிய சந்திரகுமார், ஒரு சவால் விட்டிருக்கிறார். அவருக்கு பதில் சவால் நான் விடுகிறேன்.
சங்கரன்கோவிலில் நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்கள் கட்சிக்கு (தேமுதிக) திராணி இருந்தால் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் உயர்த்திய பிறகு சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் தனித்து நின்று மகத்தான வெற்றியை நாங்கள் அடைவோம். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் (தேமுதிக) முடியுமா என்பதை யோசித்து விட்டுப் பேசுங்கள்.
இதுதான் தொடக்கப்புள்ளி. ஜெயலலிதாவுக்கு பதிலளிக்கும் வகையில், விஜயகாந்த், “கடந்த 2006 முதல் 2011 வரைக்கும் இடைத்தேர்தல்கள் எவ்வளவோ நடைபெற்றன. அந்த தேர்தல்களில் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இன்றைக்கு வந்து சங்கரன்கோவிலில் ஜெயிப்பேன் என்று சவால் விடுகிறீர்கள். ஆளுங்கட்சியாக இருந்தால் இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெறுவார்கள் என்பது கடந்த காலங்களிலும் தெரியும். இப்போது நீங்கள் எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் என்பதும் தெரியும்.
உடனே ஜெயலலிதா, “தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார்.”
விஜயகாந்த், “நாங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் தாருங்கள். சங்கரன்கோவில் என்று சொன்னால், பெண்ணாகரத்தில் ஏன் தோற்றீர்கள் என்பதைச் சொல்லுங்கள். அங்கு நடந்த இடைத் தேர்தலில் உங்களுக்கு டெபாசிட் காலி ஆயிற்றே அப்போது என்ன ஆனது ?” என்றார்.
பன்னீர்செல்வம் எழுந்து, “திமுக ஆட்சியில் இடைத் தேர்தல்களில் நாங்கள் (அதிமுக) வெற்றி பெறவில்லை. திமுக எந்த மாதிரியான வெற்றியைப் பெற்றது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடந்தது. சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 3-ல் 2 பங்கு இடங்களில் கிடைத்த வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வன்முறை நடந்ததா? முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மகத்தான வெற்றியைப் பெற்று இருக்கிறோம்.”
விஜயகாந்த், “உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடந்ததா எனக் கேட்கிறார். தேர்தலின் போது எனது தொகுதிக்குச் சென்றிருந்தேன். அதிகாரிகளை வைத்து தேர்தலை எப்படி நடத்தினார்கள் எனப் பார்த்தேன். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு நிகழ வாய்ப்பு இருக்கிறது என நீங்களே கூறினீர்கள். அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தோம். நீதிமன்றத்துக்குச் சென்றோம்.”

விஜயகாந்துக்குப் பதிலளிக்க செங்கோட்டையன் எழுந்தார். சபாநாயகர் ஜெயக்குமார், “அமைச்சர் பதில் சொல்கிறார். அமருங்கள். அமைச்சர் பேசுகையில் பேசுவது மரபல்ல” என்றார். உடனே விஜயகாந்த் அமர்ந்தார்.
இதன்பிறகுதான் ரசக்குறைவான சம்பவங்கள் அரங்கேறின. சட்டசபையில் அன்று என்னதான் நடந்தது என்று, அங்கே இருந்த பத்திரிக்கையாளர்களை விசாரித்த போது, விஜயகாந்த் அமர்ந்ததும், அவரை நோக்கி, எம்எல்ஏக்கள், சின்னசாமி மற்றும் கலைராஜன் ஆகியோர் ஆபாசமாக சைகை செய்து, தகாத வார்த்தைகளை தொடர்ந்து பேசியிருக்கின்றனர். நத்தம் விஸ்வநாதன் எழுந்து, “இது சினிமா இல்ல. பத்து பேர நீ அடிக்க முடியாது. உட்காரு…” என்று பேசியிருக்கிறார். இவர்கள் பயன்படுத்தியதில், எழுதக்கூடிய வார்த்தை, “டேய் குடிகாரா உட்கார்றா” என்பது மட்டுமே. மற்றவற்றை யூகித்துக் கொள்ளுங்கள். இதைப்பார்த்துதான் விஜயகாந்த் கடும் கோபம் அடைந்து எழுந்து கையை நீட்டி கடும் கோபத்துடன் நாக்கைக் கடித்துக் கொண்டு, கத்தியிருக்கிறார். கத்துகையில், விஜயகாந்த்தும், தகாத வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

இதன் பிறகே அவரும், அவர் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும், வெளியேற்றப்பட்டனர்.
ஜெயலலிதா இப்படிப் பேசுவது புதிதல்ல. 1991ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், தற்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவுக்கும், ஏராளமான வேறுபாடுகள் இருந்தது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். இந்த ஆட்சி பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைப் பார்வையிடுபவர்கள், ஜெயலலிதா பக்குபப்பட்டிருக்கிறார் என்றே கருதினார்கள். ஆனால், சட்டசபை சம்பவங்கள், அது பொய் என்பதை நிரூபித்துள்ளது.
கருணாநிதி ஒரு பிறவி அரசியல்வாதி. அவருக்கு பேச்சு, மூச்சு, உணவு, உடை, நீர், அனைத்துமே அரசியல்தான். தன்னுடைய மனைவிகளுக்கிடையிலும், பிள்ளைகளுக்கு இடையிலுமே அரசியல் செய்யக்கூடியவர் கருணாநிதி.
ஆனால் ஜெயலலிதா அரசியல்வாதியாக சூழல் காரணமாக உருவாக்கப் பட்டவர். ஜெயலலிதாவை ஆங்கிலத்தில் A reluctant politician என்பார்கள். 1989ல் திமுக ஆட்சியின்போதே, ஜெயலலிதா தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்தக் கடிதம், அப்போது டிஜிபியாக இருந்த துரையிடம் கிடைத்ததும், அதை எடுத்துப் போய் சபாநாயகரிடம் அளித்து, ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க முயற்சித்தார்கள். ராஜினாமா செய்து விட்டு, அரசியலை விட்டே ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதா, இதன் காரணமாகவே, நான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று அறிவித்தார். அப்போதெல்லாம் ஜெயலலிதா, ஆறு மாதத்துக்கு ஒரு முறை, தன்னுடைய வீட்டு பால்கனியிலிருந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்து விட்டுப் போய்விடுவார். வெளியில் வரவே மாட்டார்.

1996 தேர்தல் தோல்விக்குப் பிறகும், ஜெயலலிதா அரசியலை விட்டு ஓய்வு பெற்று விடலாம் என்ற முடிவுக்கு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனக்கு இனி அரசியல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்ததாகத் தெரிகிறது. அந்தத் தேர்தலில், அதிமுக அடைந்த படுதோல்வியையும் தாண்டி, ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மன்னார்குடி வகையறா ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததுமே, ஜெயலலிதா அரசியலை விட்டு விலகலாம் என்ற முடிவுக்கு வந்ததாகவே தெரிகிறது.
ஜெயலலிதாவின் பேச்சும் நடவடிக்கைகளும், அவர் கடந்தகாலத்தில் நடந்த தவறுகளில் இருந்து எந்தப்பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.
“தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்” என்று ஜெயலலிதா சொன்னது நாகரீகமற்ற வார்த்தை மட்டுமல்ல ஆங்கிலத்தில் Hitting below the belt என்பார்களே.. அந்த வகையைச் சார்ந்தது. இந்த வார்த்தையை ஜெயலலிதாவைப் பார்த்தும் கேட்கலாம்தானே… “தேமுதிகவின் அதிர்ஷ்டம், எங்களுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.” என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகள் அவர் நேர்மையற்றவர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

2011 தேர்தலில் அல்ல, 2009 பாராளுமன்றத் தேர்தலிலேயே, அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும், கூட்டணி பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்தன என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது. 2011 தேர்தலில், தேமுதிக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, கூட்டணிக்காக தவம் கிடந்தன என்பதே உண்மை. அது வரை ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி என்று சொல்லி வந்தவர், ஏற்கனவே ஆண்டவரோடு கூட்டணி சேர சம்மதித்தன் மர்மம், சோர்வடைந்த தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்ட, வெற்றி ஒன்றே வழி என்பதுதான்.
2011 தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், தன்னுடைய அரசியல் எதிர்காலமே சூனியமாகி விடும் என்பதை ஜெயலலிதா நன்றாகவே உணர்ந்திருந்தார். மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேர்ந்தால், பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை உறுதி என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிந்திருந்தார். மேலும் அதிமுக கட்சியே கரைந்து போகும் சூழ்நிலை இருந்தது என்பதையும் ஜெயலலிதா உணர்ந்திருந்தார். இதைத்தவிரவும், விஜயகாந்த், தொடர்ந்து பெற்று வந்த 9 முதல் 10 சதவிகித வாக்குகள், அவசியம் என்பதை ஜெயலலிதா புரியாதவர் அல்ல. அது நன்கு புரிந்ததால்தான், 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் மூத்த தலைவர் வைகோவின் மதிமுகவுக்கு, 17 சீட்டுகளும், கட்சித் தொடங்கி 3 ஆண்டுகளே ஆன விஜயகாந்துக்கு 41 சீட்டுகளையும் ஒதுக்கினார் ஜெயலலிதா.
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, ஜெயா டிவியில், அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அதில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர். அதைத் தொடர்ந்து விஜயகாந்தை இடதுசாரி மற்றும் இதரக்கட்சித் தலைவர்கள், சந்தித்து, மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்தை முன்வைத்தனர். அப்படி மூன்றாவது அணி அமைந்திருந்தால், ஜெயலலிதா இப்படிப் பேசியிருப்பாரா ? உடனடியாக அதிமுகவின் மூத்த தலைவர்களை அனுப்பி, விஜயகாந்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது யார் என்பது ஜெயலலிதாவின் மனசாட்சிக்குத் தெரியும்.
“தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது, அவர்களுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தேர்தலைச் சந்தித்ததே என நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன்.” என்ற ஜெயலலிதாவின் பேச்சு, அவரது ஆணவத்தையும், அனுபவமின்மையையுமே காட்டுகிறது.
ஒரு அரசியல்வாதியாக, மூத்த தலைவராக இருப்பவர், யோசித்துப் பேச வேண்டும். மனதில் வந்ததையெல்லாம் பேசக்கூடாது. அதுவும், பதவியில் இருக்கையில், மேலும் கவனத்தோடு இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா கடந்த காலங்களிலும் கூட, வாய்க்கு வந்ததையே பேசியிருக்கிறார்.
1991-1996 அதிமுக ஆட்சியில், சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் என்று நினைவு. நெடுஞ்சாலைகளில் அடிக்கடி, கொள்ளைகள் நடப்பதாகக் கூறினார்கள். உடனே ஜெயலலிதா எழுந்து, “மத்திய அரசு எனது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக ஆட்களை அனுப்பி கொள்ளையடிக்க வைக்கிறது” என்றார். இதைவிட சிறுபிள்ளைத்தனமான பேச்சை எங்காவது கேட்டிருக்கிறீர்களா ?
2001ல், ஜெயலலிதா கஜானா காலி என்றார். கருணாநிதி அரிசி இருக்கிறது என்றார். அதற்கு ஏதாவது பதில் சொல்லவேண்டுமே என்பதற்காக சட்டசபையில் ஜெயலலிதா, அத்தனை அரிசியும் புழுத்துப் போன அரிசி என்றார். அதிமுக அடிமைகள், அரிசி நாற்றம் அடிக்கிறது, விலங்குகள் கூட உண்ணாது என்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதா புழுத்துப்போன அரிசி என்று சொன்ன அத்தனை அரிசியும், அதிக விலைக்கு கேரளாவிற்கு விற்கப்பட்டது. சட்டசபையில் முழங்கிய ஜெயலலிதா அரிசியைப் பற்றி பிறகு பேசவேயில்லை.
சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பற்றி சட்டசபையில் விவாதம் வந்தது. கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி தினகர் வீரப்பனுக்கு பல கோடி பணம் கொடுக்கப்பட்டது என்று புத்தகம் எழுதியிருக்கிறார் என்று ஜெயலலிதா சட்டசபையில் கூறினார். அந்தப் பணத்தில் கருணாநிதிக்கும் ஒரு பெரும் பங்கு போனது என்று கூறினார். திமுக உறுப்பினர்கள் நிரூபிக்க முடியுமா என்று கேட்டனர். உடனே ஜெயலலிதா இன்றே விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்று அவையில் அறிவித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் ரஜினிகாந்திடம் கூட வாக்குமூலம் வாங்கப்பட்டது. வீரப்பனுக்கு பணம் கொடுத்தது உண்மை என்றாலும் கூட, யாராவது பணம் கொடுத்தேன் என்று ஒப்புக்கொள்வார்களா ? ராஜ்குமாரின் மகன்கள் கூட பணம் கொடுக்கப்படவில்லை என்றனர். ரஜினிகாந்தும் மறுத்தார். இந்த விசாரணைக்காக ஒரு வருடம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நேரமும், உழைப்பும் வீணானது.
இதுபோன்ற, முன்யோசனை இல்லாத, நிதானம் தவறிய பேச்சுதான் ஜெயலலிதா புதனன்று சட்டப்பேரவையில் பேசிய பேச்சும். விஜயகாந்த் சுட்டிக்காட்டியதில் உண்மை இல்லாமல் இல்லையே.. பென்னாகரத்தில் டெபாசிட்டை அதிமுக இழந்தது உண்மைதானே.. அதற்கு முன் நடந்த மூன்று தொகுதிக்கான இடைத்தேர்தல்களில், அதிமுக போட்டியிடவே இல்லையே… ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சி, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, எப்படியாவது இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்பது அப்பட்டமான உண்மையாயிற்றே… இப்படி ஒரு சவாலை விடுவது, ஜெயலலிதாவுக்கு அழகா ?

விலைவாசி உயர்வைப்பற்றிப் பேசுவது எதிர்க்கட்சியின் கடமை. அதற்காகத்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து சட்டசபைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதற்கு உரிய முறையில் விளக்கமளிக்க வேண்டியது அரசின் கடமை. யாருமே எதிர்த்துப் பேசக்கூடாது என்று ஜெயலலிதா எதிர்ப்பார்ப்பது அறிவீனம்.
கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில், அதிமுகவின் கூட்டணிக் கட்சித்தலைவர் சரத்குமார், ஜெயலலிதாவைப் பார்த்து, “நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற…” என்று பாடியபோது, சிரிப்பை அடக்கமுடியாமல் மகிழ்ச்சியை தெரிவித்த ஜெயலலிதா, எதிர்க்கட்சிகள் குறையை சுட்டிக்காட்டினாலும் அதே போல மகிழ்ச்சியோடு பதில் சொல்ல வேண்டும். அந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, தேமுதிகவின் மாஃபா பாண்டியராஜன் பட்ஜெட்டில் சில குறைகளை சொன்னதும், கடும் கோபமடைந்த ஜெயலலிதா, பாண்டியராஜன் விபரமறிந்து பேச வேண்டும் என்று எரிச்சலாக பதிலளித்து, பாண்டியராஜனை பேச விடாமல் தடுத்தார்.
இந்த கூட்டத்தொடரிலும், பண்ருட்டி ராமச்சந்திரன், தானே புயல்பாதிப்பு பற்றிப் பேசிய உடனேயே, எழுந்த ஜெயலலிதா, எனது அரசு போல, நடவடிக்கை எடுக்க உலகத்தில் அரசே இல்லை என்று கடும் கோபத்துடன் பதில் கூறினார். எதிர்த்து யாருமே கேள்வி கேட்காமல் இருக்க, மற்ற கட்சி உறுப்பினர்கள் செ.கு.தமிழரசன் போன்ற அடிமைகள் இல்லையே….
புதனன்று நடந்த விஜயகாந்த் மோதல் விவகாரத்திலும், ஜெயலலிதா நேர்மையில்லாமலேயே நடந்து கொள்கிறார். அரசு வெளியிட்ட படங்களிலும், ஜெயா டிவியில் வெளியான காட்சிகளிலும், விஜயகாந்த் நாக்கைக் கடித்துக் கொண்டு கோபப்படுவதை மட்டும் காட்டுகிறார்கள் ஆனால், அதிமுக அடிமைகள் செய்த கலவரத்தைக் காட்டவில்லை.
ஜெயலலிதா கண் முன்பாகவே, தரை டிக்கெட்டில் படம் பார்ப்பவர்கள் போல, ஏகவசனத்தில் விஜயகாந்தைப் பேசத் தொடங்கிய உடனேயே ஜெயலலிதா அதைக் கண்டித்திருக்க வேண்டாமா ? பால் விலை உயர்வைப் பற்றி பேசியதற்கு, பால்வளத்துறை அமைச்சர், எங்களால்தான் அவைக்கு வந்தீர்கள் என்று பேசிய உடனேயே ஜெயலலிதா அதைக் கண்டித்திருக்க வேண்டாமா ? ஏகவசனத்தில், அவனே, இவனே என்று கூக்குரலிடும் அதிமுகவினரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே ஜெயலலிதா ? இப்படி கூக்குரல் இட்டவர்களில், மன்னார்குடி மாபியாவுக்கு நெருக்கம் என்று அறியப்படும், கலைராஜன், சின்னசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரே முன்னணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்ற ஏக்கத்தில், அவர்கள் கொடுத்த காசுக்கு அதிகமாகவே கூவினர்.
விஜயகாந்த்தும், இன்னும் பக்குவப்பட வேண்டும். அவருக்கு அருகாமையில் அமர்ந்திருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு மூத்த அரசியல்வாதி. நிறைந்த அனுபவம் மிக்கவர். அவரின் வழிகாட்டுதலோடு, விஜயகாந்தும் பக்குவப்பட வேண்டும். இடதுசாரிகளோடு சேர்ந்து, விஜயகாந்த் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே, பெரும்பாலான மக்களின் எதிர்ப்பார்ப்பு.
தமிழக மக்கள் உள்ளாட்சித் தேர்தல்களில், அதிமுகவுக்கு அமோக வெற்றி கொடுத்ததற்கு காரணம், திமுக மீது அவர்களின் கோபம் தணியவில்லை என்பதே. இந்த உணர்வு இப்படியே இருக்குமா என்று சொல்ல முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்தது போலவே, பாராளுமன்றத் தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வென்று விடலாம் என்று ஜெயலலிதா நினைத்தாரேயானால், அது தப்புத்தாளங்கள் தான்.
|
Comments
Compare
1. Like Rajaji, CHO is now beating the drums for Jaya and this is the height of his senility
against
2. We need a caste free/communal free/visionary to leasd the nation. Rajinikanth and CHO should join hands to identify such a leader.
Best Comedy of the year? decade?? century???
What ever it may be....? Why the hell these two should identify (Perhaps then only it is CASTE FREE).....
As per "Bhagavat Gita" these two are the empowered people to choose who should rule Tamil Nadu?????
முற்றிலும் உண்மை...
ராமநாதபுரம்:தமி ழகத்தில் கல்வித் துறையில் பகுதி நேர சிறப்பாசிரியர் நியமனத்திற்கு அதிரடி வசூல் வேட்டை நடத்துவது குறித்து உளவு பிரிவு போலீசார் விசாரித்து அறிக்கை அனுப்பி வருகின்றனர்.பகுதி நேர சிறப்பாசிரியர்க ள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்டம் தோறும் விருப்பம் உள்ளவர்களிடமிரு ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் நியமனத்திற்காக அந்தந்த பகுதி ஆளும் கட்சி நிர்வாகிகள், வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாசிரியர் பணியிடங்கள் எத்தனை, யார் எவ்வளவு வசூல் செய்கின்றனர்? என்பது குறித்து உளவு பிரிவு போலீசார் விசாரித்து அறிக்கை அனுப்பும் பணியில் ஈடுபட்டூள்ளனர்.
//ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கர் அறிக்கையிலிருந் து:
எனக்கும் என் குடும்பத்திற்கு ம் இயேசு கிறிஸ்து தனது தேவ தூதர்கள் பட்டாளத்தைப் பாதுகாப்புக்கு நியமித்துள்ளார் . இது இந்திய பிரதமருக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பைவிட 100 மடங்கு உறுதியானது. போலீஸ் தரும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருக்கும் போதுதான் திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி போன்றோர் கொலை செய்யப்பட்டனர். அதுபோன்ற தவறுகள் கிறிஸ்து இயேசுவின் தேவ தூதர்கள் தரும் பாதுகாப்பில் நிகழ்வதில்லை……2 012ல் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் சுனாமி, பூகம்பம், பெரிய தொற்று வியாதிகள், கடும் புயல் போன்ற பெரும் அழிவுகள் நிகழவிருப்பதாக வெளிப்பாடுகள் இருப்பதால் நான் கிறிஸ்தவர்களை எச்சரிக்க வேண்டியது என் கடமை. இதற்காக எல்லா இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவர்களுக் கு அறிவுரை வழங்குகிறேன். கிறிஸ்தவர்கள் இந்த கோபாக்கினையிலிர ுந்து தப்ப வேண்டும் என்பது என்னுடைய ஆவல்…..
//[/ஃஉஒடெ]
“நான் ஏன் தமிழர்களை போட்டு தள்ளினேன்னு மக்கள்கிட்ட (இந்தியா,சீனா,ப ாகிஸ்தான்,ஈரான் ,இஸ்ரேல்) சொல்லிட்டேன். கூட்டமைப்புகெல் லாம் தனியா சொல்லிகிட்டு இருக்க முடியாது. உங்களுக்கு ஒரு ஓபன் சேலங்ஜ். இத்தனை லட்சம் பேரை கொன்னதுக்கு அப்புறமும், இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்களை தெருவில் அலையவிட்ட பிறகும்,பல ஆயிரம் முன்னாள் போராளிகளை சிறையில் அடைத்துவைத்து சித்திரவதை செய்துகொண்டிருந ்தாலும், நான் தில்லா சொல்றேன், ‘வன்னியில் வெற்றிலை சின்னம் தான் வெற்றிபெறும்’. இந்த சவாலை ஏற்றுகொள்ள கூட்டமைப்பு தயாரா?”. — நிற்க — ஜெயாவின் பேச்சுக்கும், ராஜபக்ஷேவின் பேச்சுக்கும் இடையே ஆறுவித்தியாசங்க ள் உள்ளன. அவற்றை கண்டுபிடிப்போரு க்கு ‘விஜய்ராஜுலு’ நடித்த ‘நாக்கு அவுட்’ படத்தின் டிக்கெட் இலவசம்…!!!
அடுத்து அது தான் அமையும்... ஆனால் அந்த பாழாய் போன திமுக திரும்பவும் வர கூடாது...!!!
http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2012/02/SBMIA2612a.jpg
http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2012/02/MMIA2612.jpg
”Flip the bird” is what they call the act of raising the middle finger as a rude,obscene gesture.Maya’s middle finger “uplift” and the ensuing blaze of negative publicity seems to have blacked out Madonna and um..um..,
MIA or Mathangi Arulpragasam known as “Maya” was born in Hounslow,London on July 18th 1975. Her father is Arulpragasam an engineer who was a founder member of the Eelam Revolutionary Organization of Students(EROS) which later evolved into the Eelam Revolutionary organization (EROS) He is called Arular and wrote the Tamil novel”Lanka Rani” based on the 1977 anti-Tamil violence. Her mother is Kala a housewife who became a seamstress.
ஆமா.....இவங்கள தனக்காக பேச அனுப்புன ம்ர். பொதுஜனம் எங்க...?
எங்கயாவது பாக்கலாம்.....னிக்ஹ்ட் ல.....சிலை பக்கம்......தன்னந்தனியா......"யங்...யங்...யங்...யங்...யங்...யங்...யங்...யங்...யங்..." இன்னுட்டு
//ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கர் அறிக்கையிலிருந் து:
எனக்கும் என் குடும்பத்திற்கு ம் இயேசு கிறிஸ்து தனது தேவ தூதர்கள் பட்டாளத்தைப் பாதுகாப்புக்கு நியமித்துள்ளார் . இது இந்திய பிரதமருக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பைவிட 100 மடங்கு உறுதியானது. போலீஸ் தரும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருக்கும் போதுதான் திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி போன்றோர் கொலை செய்யப்பட்டனர். அதுபோன்ற தவறுகள் கிறிஸ்து இயேசுவின் தேவ தூதர்கள் தரும் பாதுகாப்பில் நிகழ்வதில்லை……2 012ல் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் சுனாமி, பூகம்பம், பெரிய தொற்று வியாதிகள், கடும் புயல் போன்ற பெரும் அழிவுகள் நிகழவிருப்பதாக வெளிப்பாடுகள் இருப்பதால் நான் கிறிஸ்தவர்களை எச்சரிக்க வேண்டியது என் கடமை. இதற்காக எல்லா இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவர்களுக் கு அறிவுரை வழங்குகிறேன். கிறிஸ்தவர்கள் இந்த கோபாக்கினையிலிர ுந்து தப்ப வேண்டும் என்பது என்னுடைய ஆவல்…..
//
நாளைக்கு காங்கிரஸ், திமுக, தேமுதிக கூட்டணியை ஆதரிக்க காத்திருக்கும் சவுக்கு பிரபாகரன் படத்தை போடுமா, இல்லை சோனியா படத்தை போடுமா என்பதை பார்க்கலாம். நான் முன்னவே சொன்ன மாதிரி சவுக்கின் பாதை எதை நோக்கி செல்கிறது என்பதை நன்றாக ஊகிக்கமுடிகிறது . காகா உட்கார பணம் பழம் விழுந்ததாம். அதுபோலதான் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை சவுக்கு கவுன்டவுன் போட்டதால்தான் ஆட்சி மாற்றமாம். விஜயாகாந்தால்தா ன் அதிமுக வெற்றி பெற்றதாம். சன் டிவி, தினகரன், கலைஞர் டிவி, முரசொலி, நக்கீரன், மத்தியில் ஆட்சி, கூட்டணி பலம் இப்படி பத்திரிக்கை, மீடியா பலம், பண பலம், அதிகார பலம், கூட்டணி பலம், அதிகாரிகள் பலம், ரௌடிகள் பலம் இப்படி அனைத்தும் ஒரு சேர வைத்துகொண்டு பிரச்சாரம் செய்தும் திமுக மண்ணை கவ்வியது என்றால் விஜயகாந்தும் இல்லாமலும் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். சொல்லபோனால் விஜயகாந்தால் சில இடங்களில் அதிமுக தோற்றது என்றுதான் சொல்லமுடியும். காரணம் தேர்தல் பிரசாரத்தின் போது அநாகரீகமாக நடந்து கொண்ட விஜயகாந்தால், அந்த சமயம் சன் டிவி, கலைஞர் டிவி, நக்கீரனால் மிகவும் கேவலபடுத்தபட்ட விஜயகாந்தை பார்த்து சில தொகுதிகளில் மக்கள் முகம் சுளித்தனர் என்பது உண்மை. எனவே வெறும் இருநூறு, முன்னூறு வாசகர்களை கொண்டுள்ள சவுக்கால் என்னதான் கற்பனை கதைகளை அளந்தாலும் மாற்றம் நிகழ்த்த முடியாது.
பிரபாகரன் படத்தை வைத்து சவுக்கு என்ற இணையதள பத்திரிக்கை நடத்தும் பத்திரிக்கை அன்பர்களே! நீங்கள் எதிர்கால கூட்டணியான காங்கிரஸ், திமுக, தேமுதிகவை ஆதரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே சவுக்கின் சமீபகால கட்டுரைகள் மற்றும் கற்பனை கதைகள். சட்டசபையில் விஜயகாந்தை குடிகாரன் என்று அதிமுகவினர் திட்டியதாக அங்கலாயிதிருக்க ும் சவுக்கு என்னமோ சட்டசபையில் நேரடியாக அமர்ந்து பார்த்தது போல் கட்டுரை வெளியிட்டுள்ளது . அதாவது சட்ட சபையில் இருந்த சிபிம், சிபிஐ, திமுக, தேமுதிக போன்ற எம்எல்ஏக்களுக்க ு கேட்காத அந்த வார்த்தைகள் சவுகுக்கு எப்படி கேட்டது என்று தெரியவில்லை. அப்படி ஒரு வேலை அதிமுகவினர் கூறி இருந்தால் அதை கேட்டு எதிர் வரிசையில் அமர்ந்துள்ளவர்க ள் சும்மா இருப்பார்களா? அதிமுகவை வீழ்த்த காத்திருக்கும் இவர்கள் இந்நேரம் பிரச்சனையை பெரிதாக்கி இருப்பார்கள். அவர்களுக்கே வராத கற்பனை சவுக்கு வந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. அவ்வளவு ஏன் திமுக தேமுதிக கூட்டணி உறுதியாக போகும் இந்த நேரத்தில் திமுக ஆதரவு நக்கீரனுக்கே தோன்றாத கற்பனைகள் சவுகுக்கு தோன்றியுள்ளது.என்னய்யா கலர் கலரா கற்பனை அள்ளி விடுகிறீர்கள். இந்த வேகத்தில் போனால் நக்கீரனை முழிங்கி விடுவீர்கள் போல் உள்ளது. சமீபகாலமாக நாக்கீரனை ஆதரித்து கட்டுரை, விகடனில் ஒரு தலை பட்சமாக வரும் கட்டுரைகளை கண்டுகொள்ளவில்ல ை. முன்னர் சுட்டி காட்டியது போல் இப்போது சுட்டி காட்டவில்லை.காங்கிரஸ் காரன் பிரபாகரன் முதுகில் குத்தி கொன்றான். அவரை கொன்றும் நீங்கள் விடவில்லை. பிரபாகரன் படத்தை போட்டுகொண்டு எதிர்காலத்தில் காங்கிரஸ் திமுக தேமுதிக கூட்டணியை ஆதரிப்பதன் மூலம் பிரபாகரன் படத்தையும் அசிங்கபடுத்தபோக ிறீர்கள். எத்தனை முறைதான் அந்த தமிழ் மாவீரனை முதுகில் குத்தி கொள்வீர்கள். இது எல்லாம் தெரியாமல் வாசகர்கள் நடுநிலை பதிவு, கட்டுரை என்று கருத்து.................விளங்கிடும்.
பால்விலை,பஸ்வில ை உயர்த்தியதன் காரணத்தை அதிமுக தெளிவாக விளக்கி விட்டது... மீண்டும்,மீண்டு ம் குறை கூறினால், குறை கூறுபவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெளிவாக நிதி ஆதாரங்கள்,நிதி நிலைமை அறிக்கையை வாங்கி வந்து விட்டு, பொட்டில் அடித்தாற் போல், இன்ன இன்ன செய்திருந்தால் நீங்கள் விலையைக் குறைத்திருக்கலா ம் என்று கூறியிருந்தால் அது எதிர்க்கட்சி..அதை விட்டுவிட்டு, விலையேற்றி விட்டீர்கள்,வில ையேற்றி விட்டீர்கள் என்று குறை கூறிக் கொண்டே இருந்தால் பலன் என்ன??? இதை எதிர்க்கட்சி யோசிக்க வேண்டும்..ஏன் நாம் கவர்ண்மெண்ட் கணக்கைக் காந்திக் கணக்காகவே எண்ணிப் பழகியுள்ளோம்??/
இந்த சம்பவம் ஒன்றைத் தெளிவாகக் காட்டுகிறது.. ஜெ. கோபம் வந்தால், என்ன செய்கிறோம்,என்ன பேசுகிறோம் என்பதையே மறந்து விடுகிறார்...
விஜயகாந்த், மீண்டும் ஒருமுறை தான் அதிரடிப்படை ஹெட் கான்ஸ்டபிள் ஆகத்தான் லாயக்கு என நிரூபித்து உள்ளார்..அவரை முதல்வர் பதவியில் அமர்த்த எண்ணுவது அளவு கடந்த முட்டாள்தனம்..
எனக்கு இந்தப் பிரச்சினை நடந்தபோது, ஸ்டாலின்,துரைமு ருகன் இருவரின் முக பாவனைகளைப் பார்த்துத்தான் அளவுக்கடங்காத சிரிப்பு வந்துவிட்டது...
ஜெ பதவிக்கு வந்தபின் எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடந்தன. அவற்றுள் முக்கியமானது, சட்டம் ஒழுங்கு, செத்துபோன நிர்வாகத்தை சீரணிக்கும் பணி, சசி குழுவின் நீக்கம், மக்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது. கெட்டுவிட்ட நிர்வாகத்தை சீரணிக்கும் பணி சாதரணமான விஷயமல்ல, ஆண்டுகள் உழைக்கவேண்டும். இது எல்லாம் எப்போது நடக்குமெனில், முதலில் ஜெ பொறுமையாக காதுகொடுத்து எதிர்கட்சி, மற்ற கட்சி, பத்திரிக்கை செய்திகளின் மூலம் மக்களின் குறைகளை கேட்கவேண்டும் அதுவே அரசியல் முதிர்வு. எதிர்கட்சி செய்யும் தவறுகள் மட்டுமே கண்ணுக்குத்தெரி கிறது, தன் கட்சியினரை ஏன் தண்டித்து ஒரு நல் உதாராண்த்தை ஏற்படுதக்கூடாது . நல்லவிஷயங்களை ஏற்றுகொண்டு, மற்றவற்றை விட்டுத்தள்ளவேண ்டும். அதில்லாமால் ஜால்ராக்களின் சத்தத்தில் மூழ்கினால் முன்னால் நடக்கும் அட்டூழியங்களைக் கூட பார்க்கமுடியாத குருடனாக்கிவிடு ம்.
ஆட்சி என்பது அது தனிமனித விஷயமல்ல ஒரு பெரும் அணி. ஆனால், ஜெவின் ஆணவமும், கோபமும் அதை செய்யவிடாதுபோல் தோன்றுகிறது. தன் கர்வத்தால் தன்னை தானே அழித்துக்கொண்டு மீண்டும் ஒரு வாய்ப்பை சுய நலம் மட்டுமே நோக்கமாக கொண்ட கருணானிதிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தாரைவார்க்க போகிறாரா? கோபத்தை குறையுங்கள் முதல்வரே நீங்கள் கோபுரத்தில் ஏரளாம், அது தவறின் குப்பையில் வீழலாம்.
தரையில் உட்கார்ந்து படம் பார்த்தல் கேவலமா
நாட்டிலேயே பின் தங்கிய பகுதிகளாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் இன்னும் உள்ளன. அரசியல்வாதிகளைத ் தவிர வேறு யாருமே சம்பாதிக்க முடியவில்லை- கோடீஸ்வர்களாக ஆக முடியவில்லையே ஏன்? சும்மா பெயருக்கு மக்களாட்சி என்று சொல்லிக் கொண்டு, இங்கே முடியாட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது . முதல்வராக இருப்பவர் மன்னர் போலவும், மற்றவர்கள் பிரபுக்கள் போலவும், கட்சிக்காரர்கள் மன்னரின் தூதர்கள் போலவும் செயல்படுகின்றனர ்.
காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்கிறார்களே... அவரோடு இருந்தவர்களும், அந்த ஆட்சியைப் பார்த்தவர்களும் இன்னும் பலர் உயிரோடுதான் இருக்கின்றனர். அவர்களைக் கூப்பிட்டுக் கேளுங்கள் ஐயா, இந்த மாநிலம் எப்படி இருந்த்து என்று. உண்மையான பசுமைப் புரட்சியையும், தொழில் புரட்சியையும் கொண்டு வந்தவர் காமராஜர். வாய் ஜாலங்களைக் காட்டவில்லை. மாறாக செயலில் காட்டினார். மக்கள் நலனைக் கணக்கில்தான் அவரோடு இருந்தவர்களின் முழு கவனமும், செயல்பாடுகளும் இருந்தன.
இன்று ஏன் இப்படி ஒரு நிலைமை? ஆட்சியாளர்களும் , எதிர்க்கட்சிகளு ம் சிந்திக்கட்டும் . இவர்களை சொல்லித் திருத்த முடியாது. அவர்களாகத் திருந்தினால்தான ் உண்டு.
அலசப்படும் விசயத்தை விட்டு பார்ப்பன எதிர்பில் முனைப்பாக உள்ளனர்....
இவ்வாறான மக்களுக்கு இப்படிப்பட்ட ஆட்சியாளர் தான் அமைவர்...
தமிழா - நீ பகுத்தாய்ந்து / பொதுமைப்படுத்தி சமுதாயத்தில் ஒரு சில சாரரை விமர்சிப்பதை எப்பொது நிருத்துகிறாயோ அப்போதுதான் உனக்கு விடிவுகாலம்,
கடந்த ஆட்சியில் துரைமுருகன் பேசாத பேச்சா! அதையெல்லாம் கருணாநிதி கேட்டும் கேட்காதது போல நடந்து கொண்டதை மறுக்க தான் முடியுமா.
அப்படி பட்ட பேச்சுக்களை தான் வைக்கும் வாதங்கள் மூலமாக தான் பதிலடி கொடுக்கவேண்டுமே தவீர, நாக்கை மடித்து, கண்ணை உருட்டி, கையை காட்டி சினிமாதனமாக நடந்து கொண்டதை சவுக்கு நியாய படுத்த முயலவேண்டாம். சினிமா வசனம் வேறு சட்டமன்ற பேச்சு வேறு என்பதை விஜயகாந்துக்கு உணர்த்தியதை நான் வரவேற்கிறேன். ஆரோகியமான விவாதமாக இருப்பதில் அதிமுகவும் அக்கறை செலுத்த வேண்டும்.
What do u want to tell us through this article?. I suggest you should learn to be a logical writer rather than an emotional writer.
Every body understand that the price hike is inevitable and though it affects the common poor people. Both the leaders should shed their ego and work towards the improvement of state.
I agree that CM should behave in a matured way while facing criticism and Opposition leader should also understand that there is no instant solution for any problemlike movies. Due to the opposition leader's in experience, which is understandable, he should elevate people like Mr.Ponruti Ramachandran or Mofoi Pandiyarajan as Opposition leader.
ஜெ.வின் சமீப கால நடவடிக்கைகளை பார்க்கும்போது வயது முதிர்வின் குறைபாடு புலப்படுகிறது வேறொன்றுமில்லை...
விஜயகாந்த் கூட்டணியிலிருந் து வெளியேற்றம், கம்யுனிஸ்ட்ட்டு க்களை துரத்தியமை ஆகியன இந்த முட்டாள்தனமான முடிவுகளுக்கு வயது குறைபாடே காரணம்... நேற்று சபையிலே கூட தொடர்ந்து நின்று கொண்டு பேச இயலவில்லை, குறைபாடு தெரிகிறது...
சசிகலா நீக்கம் கூட அவ்வகை தான்... பல முறை தொண்டர்கள் சசிகலாவை நீக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் கோரிய போதெல்லாம் செய்யாத ஜெ இப்போது யாருமே அப்படி கோராதபோது சசிகலாவை சுய விருப்ப வெறுப்புக்களால் நீக்கியது தேவையற்ற ஒன்று... இதனால் அவர் அடையும் இலாபத்தை விட நட்டம் தான் அதிகம் என்று திரை மறைவு அரசியல் புரிந்தோர்க்கு தெரியும்...
தினகரன், இராவணன் மீதான நடவடிக்கைகள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஹெராயின் வழக்கை நினைவூட்டுவது போல உள்ளது... யாரும் இரசிக்கவில்லை...
தனித்து போட்டியிட்டால் ஆளும் கட்சி வெற்றி பெற வாய்ப்பு அதிகம், அத்தோடு 40 சீட்டும் இருந்தால்தான் பிரதமர் கனவு நினவேறும் என்ற எண்ணம்... அதனால் பாராளுமன்ற தேர்தலில் ஜெ தனித்து போட்டியிட முடிவு எடுத்திருக்கிறா ர்.. ஆனல் விஜயகாந்த், கம்யுனிஸ்ட், பா.ம.க,ம.தி.மு.க போன்ற மீடியம் ஓட்டு உள்ள இக்கட்சிகளில் ஒன்று அல்லது இரண்டு தி.மு.க வுடன் கூட்டு வைத்தாலோ அல்லது மூன்றாவது அணி அமைப்பின் அதிமுகவுக்கு முட்டைதான் கிடைக்கும்...
சரத்குமார், செ.கு தமிழரசன் போன்ற முதுகெலும்பற்ற ஜால்ராக்களை தனிப்பதிவெழுதி தோலுரிக்க வேண்டும்...
ஜெ ஜெ விற்கு ஆணவம் இன்னும் குறைய வில்லை
இது பற்றிய எனது கருத்து
http://karikalan-karuthu.blogspot.com/2012/02/blog-post.html
நேர்மையான, நடு நிலையான பதிவு. அதிமுக ஆட்சிக்கு வந்த காரணம் திமுக எதிர்ப்புதான். இதை மறந்து ஜெயலலிதா பேசுவது முட்டாள்தனம். இந்த ஆட்சி வந்தது முதல் எதுவும் சரியாக போகவில்லை. அரசு வழக்குகள் எல்லாம் தோல்வி அடைந்து ஜெயலலிதா முகத்தில் கரியை பூசி விட்டன (சமச்சீர் கல்வி, 13000 பேர் வேலை நீக்கம், அண்ணா நூலகம், தலைமைச்செயலகம்) . ஜெயலலிதாவின் சொந்த வழக்குகளில் கூட ஜெயலலிதாவை கோர்ட் கொட்டி வருகிறது. இதற்கு மேல், கண்ட மேனிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து, இப்ப நல்ல மந்திரிகளுக்கு பஞ்சம். நல்ல மந்திரிகள் இல்லாத காரணத்தினால், ஆட்சி சரியாக போகவில்லை. மின் வெட்டு தொடர்கிறது. தமிழ் நாடு பொருளாதார முடக்கத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு குறைந்த காரணத்தால் குற்றங்கள் அதிகமாகி விட்டன. ஜெயலலிதா ஆட்சியில் போலீஸ் நன்றாக இருக்கும். அப்படி இருந்தும், குற்றங்கள் குறையவில்லை. தமிழ் நாட்டுக்கு எந்த ஒரு முதலீடும், தொழில் துவக்கமும் இந்த ஆறு மாதத்தில் இல்லை. மந்திரிகள் ஆலோசகர்கள் சரியில்லாத காரணத்தினால், இந்த ஆட்சியே தடுமாறுகிறது. எவ்வளவு நாளுக்கு திமுக அமைச்சர்கள் வழக்கு, மத்திய அரசை குறை சொல்வது என்று ஜெயலலிதா காலம் ஓட்டுவார். ஜெயலலிதா அருகில் புதிய சிந்தனை வேண்டும். இல்லை என்றால், சீக்கிரம் இந்த ஆட்சி அதள பாதாளத்துக்கு போய் விடும். விஜய் காந்த் கேட்ட கேள்விகள் சரி. கேட்ட முறை சரியில்லை. மற்றபடி சவுக்கு உங்கள் அலசலில் நேர்மை உள்ளது. நீண்ட நாளுக்கு பின் ஒரு நல்ல கட்டுரை
RSS feed for comments to this post