முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அத்தனை பேரும் உத்தமர்தானா ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 18
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 11 பிப்ரவரி 2012 01:02


கருணாநிதி எது பேசினாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அப்படி இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புவார். லாட்டரி அதிபர் மார்ட்டின் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது கருணாநிதி பேசியது, “பேசா படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.

 

‘அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்’ என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான்.

 DSC_3886_2

‘பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்’ -என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் ‘பல்லுக்குப் பல் இருகாதம்’ என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா-பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு மட்டும் கேட்கிறார்களா என்ன?

 

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை-ஒரு தாளிலே எழுதிக் காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம்-அன்றைக்கு “பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்” என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தை பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.

 

படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும்.”

 

கருணாநிதியின் பேச்சின் சாரம் என்ன என்றால் ஒருவரே ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலைச் செய்திருக்க   முடியுமா என்பதுதான்.     அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை.   இத்தனை ஆயிரம் கோடியை ராசா மட்டுமே சுருட்டி எடுத்துச்செல்வதை காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால் ராசா மட்டுமே இந்த ஊழலை செய்தார் என்று காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், நீதிமன்றங்களும் சொல்லி வருவதுதான் வேதனையிலும் வேதனை.


l2011013133431

கடந்த வாரம் டெல்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே எடுத்துக் கொள்வோம். சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பில்,

“However, there is no material on record to show that Mr. P. Chidambaram was acting malafide in fixing the price of spectrum at the 2001 level or in permitting dilution of equity by the two companies. These two acts are not per se illegal and there is no further material on record to show any other incriminating act on the part of Mr. P. Chidambaram. A decision taken by a public servant does not become criminal for simple reason that it has caused loss to the public exchequer or resulted in pecuniary advantage to others. Merely attending meetings and taking decisions therein is not a criminal act. It must have the taint of use of corrupt or illegal means or abuse of his official position by public servant for obtaining pecuniary advantage by him for himself or for any other person or obtaining of pecuniary advantage by him without any public interest. There is no material on record to suggest that Mr. Chidambaram was acting with such corrupt or illegal motives or was in abuse of his official position, while consenting to the two decisions. There is no evidence that he obtained any pecuniary advantage without any public interest. I may add that there is such incriminating material against other accused persons, who stand charged and are facing trial.

 

68. There is no evidence on record to suggest that there was an agreement between him and Mr. A. Raja to subvert telecom policy and obtain pecuniary advantage for himself or for any other person. There is no evidence of any substantive act being committed by him. A bit of evidence here and a bit there does not constitute prima facie evidence for showing prima facie existence of a criminal conspiracy. Anybody and everybody associated with a decision in any degree cannot be roped as an accused. The role played by the decision maker, circumstances in which the decision was taken and the intention of the decision maker are the relevant facts. Intention is to be inferred from the facts and circumstances of the case. One cannot be held guilty merely by association with a decision and a decision by itself does not indicate criminality. There must be something more than mere association. Innocent and innocuous acts done in association with others do not make one a partner in crime, unless there is material to indicate otherwise, which is lacking in this case.

 

69. In the end, Mr. P. Chidambaram was party to only two decisions, that is, keeping the spectrum prices at 2001 level and dilution of equity by the two companies. These two acts are not per se criminal. In the absence of any other incriminating act on his part, it cannot be said that he was prima facie party to the criminal conspiracy. There is no evidence on record that he was acting in pursuit to the criminal conspiracy, while being party to the two decisions regarding non-revision of the spectrum pricing and dilution of equity by the two companies.”

 

ஓ.பி.சைனியின் தீர்ப்பை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

However, there is no material on record to show that Mr. P. Chidambaram was acting malafide in fixing the price of spectrum at the 2001 level or in permitting dilution of equity by the two companies. These two acts are not per se illegal and there is no further material on record to show any other incriminating act on the part of Mr. P. Chidambaram.

2001 விலையில் 2008ல் ஸ்பெக்ட்ரம் வழங்கியதிலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றதும் சட்டவிரோதமானது அல்ல. மேலும் இதில் சிதம்பரத்துக்கு பங்கு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

 AndimuthuRaja_285982a

இதில் முதல் பகுதியை கவனமாக பார்க்க வேண்டும்.   2001 விலையில் ஸ்பெக்ட்ரத்தை வழங்கியது சட்டவிரோதமானது அல்ல என்றால், ராசா எதற்காக சிறையில் இருக்க வேண்டும் ?  ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிதித்துறை என்பது மிக மிக முக்கியமானது.  நிதித்துறையின் பொறுப்பு, அரசாங்கத்தின் நிதி சரியான முறையில் வரவு வைக்கப் படுகிறதா, சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்வது.   ஒவ்வொரு அரசாணையிலும் பார்த்தீர்கள் என்றால், This order is issued with the concurrence of the Finance Department என்ற வாசகம் தவறாமல் இருக்கும்.  அரசு நிதி சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும், நிதித்துறை அரசின் நலனை பாதுகாக்கும் வகையில் முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவே இருப்பதுதான் நிதித்துறை.  அப்படிப்பட்ட நிதித்துறையின் அமைச்சராக இருப்பவர், ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பை ஏற்படுத்தும் ஆ.ராசாவின் முடிவுக்கு ஏன் மௌன சாட்சியாக இருந்தார் ?  லைசென்சுகள் வழங்கப்பட்ட பிறகு, நிதி அமைச்சகம் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. “2001ல் முடிவு செய்யப் பட்ட விலையான 1600 கோடி எப்படி 2007ல் பொருந்தும் என்பது புதிராக உள்ளது.   இத்தனை பெரிய நிதி விவகாரம் இதில் சம்பந்தப் பட்டிருப்பதால், நிதி அமைச்சகத்தை கலந்தாலோசித்திருக்க வேண்டும்.  அதனால் உடனடியாக இந்த விஷயத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.  அது வரை கொடுக்கப் பட்ட லைசென்சுகளை நிறுத்தி வைக்கவும்.” என்று நிதி அமைச்சகம் எழுதுகிறது.

இதன் பிறகு ராசாவும் சிதம்பரமும் சந்திக்கிறார்கள்.   அந்தச் சந்திப்புக்குப் பிறகு, சிதம்பரம், 2001 விலையில் ராசா லைசென்சுகள் வழங்கிய விவகாரம் ஒரு முடிந்த விவகாரம் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.  இத்தனை ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய விவகாரம் முடிந்து போன விவகாரம் என்று சிதம்பரம் ஏன் சொல்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது அல்லவா ?  இது ஏன்  ஓ.பி.சைனிக்கு தோன்றவில்லை ?

4-9e876e7426

அடுத்த விவகாரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கி கொள்ளை லாபம் பார்த்த விவகாரம்.

ஜனவரி 2008ல் டாடா நிறுவத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்த ராசா, 2001ல் உள்ள விலையில் ஒதுக்கீடு செய்கிறார்.  அதாவது டாடா நிறுவனம் ஸ்பெக்ட்ரத்துக்காக செலுத்திய தொகை, 1658 கோடி.  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்ட 7 மாதங்களில் டாடா நிறுவனம், அதன் 26 சதவிகித பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறது.  எவ்வளவு தெரியுமா ?  14,000 கோடி.   வெறும் 26 சதவிகித பங்குகள் 13 ஆயிரம் கோடியை பெற்றுத் தந்திருக்கிறது என்றால், டாடா பெற்ற ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு எவ்வளவு என்று பாருங்கள்.

ஸ்வான் டெலிகாம் ஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு அரசுக்கு செலுத்திய தொகை, 12 ஆயிரத்து, முன்னூற்று எண்பத்து ஆறு கோடி.  தங்களின் 50 சதவிகித  பங்குகளை, துபாயைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்துக்கு விற்ற விலை, 58 ஆயிரத்து நாற்பத்து ஒன்பது கோடி.     யூனிடெக்  நிறுவனத்துக்கு, ஸ்பெக்ட்ரம் அரசால், 12 ஆயிரத்து, முன்னூற்று எண்பத்து ஆறு கோடிக்கு வழங்கப் பட்டது. நார்வேயைச் சேர்ந்த, டெலிநார் நிறுவனத்துக்கு 67.25 சதவிகித பங்குகளை விற்ற வகையில், யூனிடெக் நிறுவனத்துக்கு கிடைத்த வருவாய், 67 ஆயிரத்து, தொள்ளாயிரத்து, அறுபது கோடி.

கண்முன்பாகவே இப்படிப்பட்ட கொள்ளை நடைபெறுவதை வேடிக்கை பார்த்த சிதம்பரம் தவறு செய்யவில்லை என்று எப்படி சொல்கிறார் ஓ.பி.சைனி…   லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்காமல் தடைசெய்வது நிதி அமைச்சகத்தின் பணி அல்லவா ?

மேலும், சுப்ரமணியன் சுவாமி தொடுத்த வழக்கின் மற்றொரு அம்சம், உள்துறை அமைச்சகம் தடை செய்திருந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு - எடிசலாட் மற்றும் டெலிநார் தங்கள் பங்குகளை விற்க அனுமதித்ததன் மூலம் நம்பிக்கை மோசடிக் குற்றத்தை (Criminal Breach of Trust) சிதம்பரம் புரிந்துள்ளார் என்பதுதான். இந்த இரண்டாவது பாகத்தை ஓ.பி.சைனி கண்டுகொள்ளவே இல்லை என்பது வினோதம்.

ஆ.ராசா தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்தது போல, இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மன்மோகன் சிங்குக்கு தெரிந்தே அத்தனை முடிவுகளும் எடுக்கப் பட்டுள்ளன.   இத்தனை விவகாரங்களும் தன் கண் முன்னே நடைபெறுவதைப் பார்த்துக்  கொண்டு தடுக்கத் தவறிய மன்மோகன் சிங்கை சிபிஐ சாட்சியாகக் கூட விசாரிக்கவில்லை என்பது விநோதத்திலும் விநோதம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் மன்மோகன் சிங்கின் பங்கு குறித்து, “ஊமை ஊரைக் கெடுக்கும்” என்ற கட்டுரையை படிக்கவும்.

ஸ்பெக்ட்ரம் விசாரணையில் சிக்காமல் தப்பித்த மற்றொரு முக்கிய நபர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குலாம் வானாவதி. வானாவதியின் ஒப்புதலுடனேயே லைசென்சுகள் பெறுவதற்கான கடைசித் தேதி மாற்றியமைக்கப் பட்டது என்றார்.

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், “A Raja struck out the last para of the press release, at the same time he also inserted in his aforementioned note dated 07.02.2008 the words “press release appd as amended”.  This insertion in the note was done willfully by A.Raja after the then solicitor general had had already recorded his note dated 07.01.2008 after his note, on the running note sheet. By this dishonest act A.Raja in conspiracy with accused Siddarth Behura portrayed to the Department of Telecommunication that the amended draft had the consent of the then Learned Solicitor General.  In this manner he falsified the records in furtherance of his design to cheat the DoT by manipulating the draft in a manner wrongfully benefitting the accused private persons / companies.”

அதாவது அரசுத் தலைமை வழக்கறிஞர் ஒப்புதல் கொடுத்த வரைவு பத்திரிக்கைச் செய்தியை, தனி நபர்கள் சட்டவிரோதமாக பலனடையும் வகையில் ராசா திருத்தம் செய்துள்ளார்,   அரசு வழக்கறிஞரின் கருத்தை திரித்து ஏமாற்றியுள்ளார்.

அந்த பத்திரிக்கை செய்தியின் முதல் பாராவில் ட்ராய் 28.08.2007 அன்று ஸ்பெக்ட்ரம் வழங்குவதில், ஒரு வட்டத்துக்குள், வழங்கப்படும் லைசென்சுகளுக்கு வரையறை வேண்டியதில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 25.09.2007க்குள் விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு லைசென்சுகளுக்கான கடிதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.”

இதன்படி, ஏற்கனவே 01.10.2007 என்று முடிவெடுக்கப்பட்டிருந்த கடைசி தேதியை ராசா 25.09.2007 என மாற்றுகிறார்.  இப்படி மாற்றியதன் மூலமாகத்தான் 26.09.2007 முதல் 01.10.2007 வரை விண்ணப்பித்திருந்த 343 விண்ணப்பதாரர்களை தகுதியிழப்பு செய்து, யூனிடெக், மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்.

பத்தி இரண்டில் பல்வேறு தொழில்நுட்ப விபரங்கள் உள்ளன.  மூன்றாவது பத்தியில் ராசா, “தொலைத்தொடர்புத் துறை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கைளை கடைபிடித்து வருகிறது. அதன்படி முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு லைசென்சுகளுக்கான கடிதம் வழங்கப்பட்டு, அதில் உள்ள விதிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும்”

இது முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு எதிரானது.  “விதிமுறைகளை பூர்த்தி செய்வது” என்றால், பல கோடி ரூபாய்க்கு டெபாசிட்டுகளை டிமான்ட் ட்ராப்ட் மூலம் செலுத்துவது.   இப்படிப்பட்ட நிபந்தனையை ராசா விதித்ததால்தான், ஏற்கனவே இந்த விதிமுறையைப் பற்றி அறிந்திருந்த ஸ்வான், யூனிடெக், சிஸ்டெமா ஷ்யாம் போன்ற நிறுவனங்கள், குறிப்பிட்ட நேரத்தில் தயாராக வரைவோலையோடு காத்திருந்தன.

PAC_551354f

சிபிஐ இயக்குநர் மற்றும் வானாவதி

இதற்கு அடுத்து நான்காவதாக இருந்த ஒரு பத்தியை ராசா நீக்குகிகிறார். “ஒரே நாளில் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர் வருவாரேயானால், விண்ணப்பம் அளித்த நேரம் மற்றும் பதிவு செய்த நேரம் (Inter-se seniority) கணக்கிலெடுக்கப்படும்”

இந்த நான்காவது விதிமுறையைத்தான் ராசா வானாவதியின் ஒப்புதலுக்குப் பிறகு நீக்கி முறைகேட்டிலும் ஆவணத்திருத்தத்திலும் ஈடுபட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது சிபிஐ.

ஆனால், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையில், அடிப்படைத் திருத்தத்தைக் கொண்டுவருவதே மூன்றாவது பத்திதான்.   லைசென்சுக்கான கடிதத்தைப் பெற்று, நிபந்தனைகளை பூர்த்தி செய்பவருக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிபந்தனைதான்,

இந்த நிபந்தனை காரணமாகத்தான் 10.01.2008 அன்று மதியம் தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்தில் அடிதடியோடு ஸ்பெக்ட்ரம் விநியோகிக்கப் பட்டதற்கான காரணமே மூன்றாவது பத்திதான்.

ஆனால், நான்காவது பத்தியை நீக்கியதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே காரணம் என்று வாதிடுகிறது சிபிஐ.  ஆனால் மூன்றாவது பத்தியின் தொடர்ச்சியே நான்காவது பத்தி.  முதலில் வருபவர், “அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனையிலேயே அனைத்தும் அடிபட்டுப் போய் விடுகின்றன.

மேலும் சிபிஐ செய்த மிகப் பெரிய அயோக்கியத்தனம், வானாவதியைக் காப்பாற்றியதுதான்.   ஸ்பெக்ட்ரம் வழங்கும் கோப்பின் முதல் பத்தியிலேயே, ஆ.ராசா அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்டுப் பெறலாம் என்று எழுதுகிறார். இந்தக் கோப்பு சட்ட அமைச்சகத்துக்குச் செல்லும்போது, அப்போதைய சட்ட அமைச்சர் பரத்வாஜ், இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, இதை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பலாம் என்று எழுதுகிறார்.  வானாவதியைப் பற்றி நன்கு தெரிந்ததால் இப்படி எழுதினாரா என்பது தெரியவில்லை.

first_zoom

வானாவதியை காப்பாற்றுவதற்கு சிபிஐ பகீரத பிரயத்தனம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.  தொலைத்தொடர்புத் துறை 25.09.2007 என்று கடைசித் தேதியை நிர்ணயித்து வெளியிட்ட பத்திரிக்கைக் குறிப்புக்கு ஒப்புதல் தந்த வானாவதி அந்தக் கோப்பில் கீழ் கண்டவாறு எழுதுகிறார்.

“I have seen the notes. The issue regarding new LoIs are not before any court. What is proposed is fair and reasonable. The press release makes for transperancy. This seems to be in order”

six_zoom

“நான் குறிப்புகளைப் பார்த்தேன்.    புதிய லைசென்சுகள் வழங்குவது தொடர்பான வழக்குகள் எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை.  எடுக்கப்படப்போகும் நடவடிக்கை நியாயமாக உள்ளது.   பத்திரிக்கைக் செய்தி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.  சரியாக உள்ளது” என்று எழுதியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு இந்தக் கோப்பை அனுப்பலாம் என்று சட்ட அமைச்சர் எழுதியுள்ளார் இது வானாவதியின் கண்ணுக்குப் படவில்லை. தொலைத்தொடர்புத் துறையின் நிதிக்கான உறுப்பினர் மஞ்சு மாதவன் அதே கோப்பில், “We are in receipt of a communication dated 22.11.2007 from the Department of Economic Affairs wherein they have expressed concern that we are offering the rates obtained in 2001 as entry fee even in 2007, without any indexation/current valuation… Since the rates have not been revised and the Finance Secretary has raised the issue, I’m of the view that this issue should be examined in depth before any further steps are taken.” என்று எழுதியுள்ளார். அதாவது, 2001 விலையில் 2007ல் லைசென்சுகளை வழங்குவது குறித்து பொருளாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.   விலைகள் மறுஆய்வு செய்யப்படாததாலும், நிதித்துறைச் செயலர் இது குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளதாலும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் முன்னர் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார்.  இதுவும் வானாவதியின் கண்ணுக்கு படவில்லை.

third_zoom

மேலும் அரசு வழக்கறிஞர் ஒரு பொருள் குறித்து கருத்து தெரிவிப்பதென்றால், சட்ட அமைச்சகத்தின் மூலமாகத்தான் அந்தக் கோப்பு அவரிடம் வர வேண்டும்.  சட்ட அமைச்சகத்தின் மூலம் வராமல், நேரடியாக தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து வந்த கோப்பில் வானாவதி கருத்து தெரிவித்தது ஏன் ?  மேலும் அதே கோப்பில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் (ஆ.ராசா) அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கலாம் என்று எழுதியுள்ளதை, சட்ட அமைச்சர் மறுத்துள்ள பிறகும், இப்படி நேரடியாக கருத்து தெரிவித்தது  ஏன் ?  பிரதமரின் முடிவை மீறி ராசா எடுத்த நடவடிக்கைகள் குற்றம் என்றால், சட்ட அமைச்சரின் கருத்துரையை மீறி, 2ஜி கோப்பில் கருத்துரை அளித்த வானாவதி செய்ததும் குற்றம் தானே.. ?

மேலும் வானாவதி கருத்துரை அளித்தபின், திருத்தப்பட்ட பத்திரிகை செய்தியை ராசா வெளியிட்டார் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.  இதே பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும், எஸ்.டெல் நிறுவனத்தின் சார்பாக வழக்கு தொடுக்கப் பட்டது.  அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வானாவதி, இதே பத்திரிக்கைச் செய்தியை சரி என்றுதானே வாதடினார் ? பின்னாளில், எஸ்.டெல் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி, அந்நிறுவனத்தை வழக்கை வாபஸ் பெற வைத்தார் ராசா.

தான் கருத்துரை அளித்தபிறகு, பத்திரிக்கைச் செய்தி திருத்தப்பட்டிருந்தால், அப்போதே வானாவதி எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டுமா இல்லையா ?   அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், இப்படி ஒரு நஷ்டம் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம் அல்லவா ?

10.01.2008 நாளிட்ட பத்திரிக்கைச் செய்தியின் அடிப்படையில்தான் சிபிஐயின் வழக்கே உள்ளது.  அந்தப் பத்திரிக்கைச் செய்தி வெளிப்படைத் தன்மையோடு உள்ளது என்று கருத்துரை அளித்த வானாவதியை குற்றவாளியாக சேர்க்காததன் காரணம் என்ன ?

சிபிஐ செய்த மற்றொரு மிகப்பெரிய அயோக்கியத்தனம், வானாவதிக்கும் ராசாவுக்கும் இடையே சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்பது.  சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் The investigation has not revealed any discussions with the then Learned Solicitor General என்று சொல்லியுள்ளது.

crucial_page

ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடிதத்தில் வானாவதியின் அலுவலகத்திலிருந்தே வந்த பதிலில், 2007 டிசம்பர் முதல் வாரத்தில்  அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியோடு ஒரு கூட்டம் நடந்ததாகவும், அதில் ஆ.ராசா உடன் இருந்ததாகவும், தொலைத் தொடர்புத் துறை குறித்து விவாதிக்கப் பட்டதாகவும், இந்தக் கூட்டம் குறித்து குறிப்புகள் தயாரிக்கப்படவில்லை என்றும் கடிதம் வழங்கப் பட்டுள்ளது. இந்தச் சந்திப்பை சிபிஐ ஏன் மறைத்தது ? 2007 டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகே, வானாவதி (07.01.2008) ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக குறிப்பு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

vahanvati-l

இது போல பல்வேறு கேள்விகள் இன்னும் விடை சொல்லப்படாமலேயே உள்ளன.  ஆனால், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2ஜி விசாரணை நடைபெறும் போக்கைப் பார்த்தால் அத்தனை ஊழல்களையும் செய்தது ராசா மட்டுமே என்ற தொனியிலேயே நடைபெற்று வருகிறது.  ராசா மட்டும்தான் குற்றவாளி என்றால் மற்றவர்கள் அனைவரும் உத்தமர்களா ?

135500

 

Comments  

 
0 #24 Dr.V.BALAMBAL 2012-02-23 22:32
good account with comments.
Bala
Quote
 
 
0 #23 MANOHAR 2012-02-23 17:44
Dear Savukku,

Your analysis about 2G scam is fantastic. Also how P.C. was left out, God only knows.
Try to find out the actual status of E.D. case against KD Brothers. Why these national looters are not arrested? No.1 KD already left for overseas. No.2 KD is planning to leave the country. Our all the investigating departments will spend some crores of our tax money to bring back these culprits to India. Who has to bell these Cats?

Did any body remember the BSNL 321 ILLEGAL connection case against
Dayanidhi Maran? Even though the case has been filed three years back, nothing has happened so far. But these people have enough time to go for appeal for the oldest Gift case of present CM.

That is the speciality of Congress Govt. If they don't like anybody all cases will come. Take the case of Jaganmohan Reddy. As long as he was supporting Gandhi fly. he was ok. No CBI cases. When he planned to start a new party all sorts of legal problems are coming. Are these people do not know the exact wealth of Reddy before?

I expect you to write about all these points in your forth coming issues without fail.

MANOHAR
Quote
 
 
0 #22 anniyan 2012-02-19 18:00
An Excellent article again by Savukku.. admirable.
Quote
 
 
+1 #21 shammu1663 2012-02-17 03:46
தயானிதி கலானிதி சகொதரர்கல் மெல் அமலாக்கப் பிரிவு எடுட்திருக்கும் நடவடிக்கைகல் பட்ட்ரியும், கலானிதி மனைவியோடு வெலினாட்டுக்கு ஓடியது பட்ட்ரியும் எலுதவும்.
Quote
 
 
+1 #20 முகமது இக்பால் 2012-02-15 14:30
இந்த சவுக்கு க்கு மட்டும் என்கிருந்துதான் இத்தனை தகவல்கலும்,அரும ையான படஙளும் கிடைக்கின்றதோ! கருத்துக்களும் - படங்களும் அருமை!

அன்புடன்
முகமது இக்பால்
Quote
 
 
0 #19 செல்வ மணி 2012-02-14 16:35
அத்தனை பேரும் உத்தமர்தானா ?

கிட்டு, கேபி, கப்பல்:
கிட்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டபோத ு, இலங்கையில் இருந்து புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூடவே அனுப்பி வைக்கப்பட்டவர் அஜித்.

கிட்டுவுடன் எப்போதும் கூடவே இருக்குமாறு அஜித்துக்கு புலிகளின் தலைவரால் உத்தரவிடப்பட்டு இருந்தது. (ஆனால், கிட்டு பிரிட்டனுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளுக்கு சென்றபோது, அஜித்தால் அவருடன் செல்ல முடியவில்லை. காரணம், பிரிட்டனில் அஜித்துக்கு அகதி அந்தஸ்தோ, வதிவிட விசாவோ கிடைக்கவில்லை)

அரசியல் காரணங்களால் கிட்டுவுக்கு பிரிட்டிஷ் அரசால் சிக்கல்கள் எழத் தொடங்கியபோது, ‘வெளிநாட்டுப் புலிகள்’ பலர் அவரை விட்டு விலகி நிற்கத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் தமது வீடுகளுக்கு கிட்டுவை அழைத்து பிலிம் காட்டிய சிலர் -தற்போது கன்யாகுமாரி அருள் எழிலன்(இனியொரு) , இயக்குனர் செபஸ்டியான் சீமான்,ப் ஆதிரி ஜெகஸ்த் கஸ்பார், உடகவியலாளர் ஆர்.பகவான்சிங்(டெக் கான் குரோனிகல்)ஆகியோ ரை லண்டன் மாளிகைக்கு அழைத்து பிரியாணி போட்டு, தங்கள் மகள்கள்,பேரப்பி ள்ளைகள் தமிழ்ப் பேசுகிறார்கள் என்று "பிலிம் காட்டும்" தமிழைக் காப்பாற்றுங்கள் எனும்,ஈழத்தமிழ் ? பிரமுகர்கள்-, பிரிட்டிஷ் ஹோம் ஆபிஸ் மற்றும் எம்.ஐ.5 ஆகியவை கிட்டுவில் கண் வைத்ததும், ஒதுங்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில், அவர்களது வீட்டுக்கு கிட்டு வருவதாக சொன்னாலும் சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழித்தனர்.-- http://viruvirupu.com/final-days-at-eelam-war-truth-10/14222/
Quote
 
 
+3 #18 S,Kumar 2012-02-14 15:24
The Supreme Court cancellation of 2G licences is not definately good for India or to the people of India. If not Raja or PC, somebody from North India might have cleared 2G licenses by then. In India if the Corporates want something they know how to do it with somebody else. MK did lot of good things also to TN. I am not saying he is the best CM but he has done little for TN whether knowingly or unknowningly. He also might have benefitted by bringing projects to TN and by participating his family members in the Goverments, but we are also enjoying definately better life style than before. The lower and middle class empowerment and economic development is due to stable governments in Centre since 1995 and DMK is the prime reason for that. No one can forget what ADMK did for BJP and till today they are undependable ally to any party.
Quote
 
 
0 #17 Guruprasad V 2012-02-14 14:06
Nice Analysis. Good Work. I learned to analyse legal points from your work. Thanks for you to help me learn
Quote
 
 
-2 #16 தமிழன்123 2012-02-13 23:19
சவுக்கு, இன்னும் எத்தனை நாள் தான் திமுக காங்கிரசை மட்டுமே குறை சொல்லி காலத்தை ஒட்டுவாய்? எப்போது அதிகமுகவின் மின் வெட்டு அக்கிரமத்தை பட்ரி எழுதுவாய்? தினமலரில், அதிமுக அரசில் நடக்கின்ர வசூல் வேட்டை பற்றி எழுதுகிரார்கள். நீ என்ன கிழித்துக்கொண்ட ிருக்கிராய்? நானும் உன்போல் திமுக எதிர்ப்பாளன் தான். ஆனால் அதிமுக, இப்போது சசிகலா கும்பல் இல்லாமலேயே ஊழல் செய்துவருவதாக செய்திகள் வருகின்ரன. அதை பட்ரி நீ எப்போது எழுதுவாய்?? இல்லையேல் நீ ஒரு நடுநிலை தவறிய நாய்.
Quote
 
 
+2 #15 mahesh_new 2012-02-13 17:02
Why there is no article on TN Powercut, an important people facing problem ?
Quote
 
 
0 #14 ரப்பர் ஸ்டாம்ப் 2012-02-13 15:28
அடுத்ததொரு அல்லக்கை நீதிபதியை அந்த பதவிக்கு கொண்டுவந்து குழியில் தள்ளுவார்கள். கடைசியில் 2ஜி என்ற ஊழலே பத்திரிக்கைகளின ் கட்டுக்கதை என்று 10 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் சொல்லும், நாமும் வாயை பொளந்துகொண்டு ஆமாம் போடுவோம். இது ஊத்தி மூடப்பட்ட கேசு, முடியாவிட்டால் ராசாவை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டு, எல்லோரும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அதுவரை நாமும் ஏதாவது நடக்காதா என்ற நப்பாசையில் காலத்தை ஓட்டுவோம்.
Quote
 
 
+5 #13 ரப்பர் ஸ்டாம்ப் 2012-02-13 14:57
ராகுல்: உபி கடந்த பல ஆண்டுகளாக லஞ்சமும், ஊழலும்தான் ஆட்சி செய்து வருகின்றன.
இந்தியன்: அப்போ இந்தியாவில என்ன நடக்குது?

ராகுல்: பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் லஞ்சம், ஊழலின் மறு உருவமாகத் திகழ்கின்றன.
இந்தியன்: உங்களவிடவா?

ராகுல்: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது முலாயம் ஆட்சியில்தான்.
இந்தியன்: இந்தியாவில என்ன மனமனக்குது?

ராகுல்: இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் வேலைவாய்ப்பை உருவாக்க ஒரு சிறிய முயற்சியாவது எடுத்திருந்தால் , நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது. இதையெல்லாம் இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியன்: நாங்க சிந்தித்துப் பார்த்திருந்தால ் உங்க கதி?

ராகுல்:உத்தரப் பிரதேச விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தியது . அது ஏழை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இந்தியன்: ஸ்விஸ் பாங்கில தேடிப்பாருங்க?

ராகுல்: தொழிலாளர்களுக்க ும் நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவ ே நான் வந்துள்ளேன்.
இந்தியன்: நீங்க வரலீன்னாவே நாங்க நல்லா இருப்போம்?

ராகுல்: உத்தரப் பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை.
இந்தியன்: அது எதனாலீன்னு எப்பவாவது யோசிச்சதுண்டா?
Quote
 
 
0 #12 M.S.Chagla 2012-02-13 13:37
A.Raja has been and is still being made a scapegoat. The Congress is trying its best to wriggle out of the cases and puts the entire blame on the DMK as if to show the whole India that Tamils have looted the nation. What is the use of it? Even the north Indian Media is against us. Finally this 2G case will go the way the Bofors, Bhopal, Harshad Mehta, Tehlgi Scam, Housing Scam, Ayodhya case, Reliance, Tata, IPL-Lalit Modi, India Cements-Srinivasan, and all other cases went. It will be relegated to the dustbins and all these scoundrels starting from Mannumohan, pro-rich Montek, Sashi Tharoor, P.C, Kalmadi, Kedi brothers, Reddy brothers will go scottfree. Even now, the BJP government in Karnataka in order to protect Jaya Maami has pressurised Acharya to give up any post so that they can dilute the case and make her a martyr. In the final analysis, it is the rich brahmin-banya which is ultimately ruling and decides policies, for their vested interests alone.
Quote
 
 
-1 #11 SUTHIRAN 2012-02-12 23:35
இந்த தி(ருட்டு)மு க உத்தமர்கள் எல்லாம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தின்படி வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பவர்க ள் ! கற்பு என்ற வார்த்தைக்கே இலக்கணமாகத் திகழும் உத்தமர்கள் ! கையில் கொஞ்சம் சில ஆயிரம் கோடி கிடைத்தவுடனேயே மாற்றான் தோட்டத்து மல்லிகை மணம் வேண்டிய இவர்களுக்கு இன்னும் லக்ஷம் கோடிப் பணம் கையில் விளையாடுகிறதே ! மாற்றான் வீட்டுத் தோட்டமென்ன, உலகத்தில் உள்ள எல்லா மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகைக்கும் அல்லவா ஆபத்து !
Quote
 
 
+1 #10 Eesan 2012-02-12 22:45
When courts give judgements against JJ everybody say that the judgements are good. Why is Saini's judgement now considered bad? Judges are no saints. They can also make mistakes. There are many examples of judges involving in land grabbing and getting bribe. There are many corrupt judges. So henceforth don't be baised when judgements come against JJ. The criminal consipracy against Raja is only on pre-poning of dates. If that is not proved then what Raja has done is also not criminal. He also will come out. That's how it looks as of now. Why only Subramania Swami alone should find all these things and file a case. He is a brahmin and not liked by most of the people here including Savukku. Why do you beleive him.
Quote
 
 
0 #9 ramadurais 2012-02-12 11:34
கருணாநிதி கும்பல் PWD contact 20% வாங்கியது . RBI 300 பில்லியன் US$ வைத்துள்ளது . 300,000,000,000 X Rs 50
1500,000,00,00,0 00 அதாவது 15 லட்சம் கோடி
திரூடுவதில் பாதி rate தான் 1,70லட்சம் கோடி
Quote
 
 
+32 #8 Ravi 2012-02-11 16:54
சு.சுவாமி அத்தனை எளிதில் ப.சி.யை வீட்டுவிடுவார் என்று தோன்றவில்லை. இன்னும் வெகுதொலைவு போக வேண்டியிருக்கு. ஆனாலும் "சுத்ததின் சுத்தமான" ஒ.பி.சைனி ஏன் இப்படி சிதம்பரத்தை தப்பிக்க விட்டார் என்பது குழப்பமாகவே உள்ளது. நல்லவேளை இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இல்லை. பார்ப்போம். நல்லதிற்கும் கெட்டதற்கும் சண்டை அத்தனை எளிதில் முடிவுக்கு வராது. ஆனாலும் சிதம்பரம் இனி பேச வாய்கிடையாது.
Quote
 
 
+18 #7 http://koothadivedda 2012-02-11 14:33
ஒரு காதம் (காததூரம்) ஏழரை நாழிகை வழித் தொலைவு. 60 வினாடி ஒரு நாழிகை. இரண்டு காதம் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலம் இருபது நிமிடங்கள்.

கருணாநிதி ஒரு ஊழல் விஞ்ஞானி என்பதை பலரும் அறிவர். இன்று ஸ்பெக்ரம் மோசடியை இல்லாமல் துடைத்து சித்திரை வானம்போல ஆக்கிவிட ஆட்சியாளர்கள் அனைவரும் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) முயற்சிக்கின்றன ர்.
அதுவரை கட்சிக்குள் எவ்வளவு குளறுபடிகள் வந்தாலும் கருணாநிதி காங்கிரஸை விட்டு வெளியேறமாட்டார் , அடுத்த மக்களவை தேர்தலுடன் காங்கிரஸுக்கு சங்கு ஊதப்படும் என்பதையும் தாத்தா அறியாதவரல்ல.

மற்றய துறைகளைவிட ஸ்பெக்ரத்தில் ஊழல் செய்வது இலகுவானதும் இலாபகரமானதும் என்பதை கருணாநிதியின் குடும்பம் (தயாநிதி தொடக்கிவைத்த ஊழல்) அறிந்தளவு ஆரம்பத்தில் காங்கிரஸ் திருடர்கள் அறிந்திருக்கவில ்லை. இப்போ இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இறுதி தீர்ப்பு வராவிட்டாலும் யார் யார் திருடர்கள் என்பதை நாட்டு மக்கள் அனேகர் அறிந்துவிட்டனர் .

அடிப்படையில் இந்தியாவில் சட்டம் எழுத்தளவில் நல்லாரோக்கியமாக த்தான் இருக்கிறது ஆனால் அச் சட்டத்தை கையாளும் மதிப்பு மிக்க நீதிமான்கள் சுற்றிவந்து வெளியேறும் வாசலாக அரசியல் மாற்றப்பட்டிருப ்பதால் ஓ.பி.சைனி யாருக்கோ விலை போயிருக்கிறார். ஆக முக்கிய குற்ரவாளிகளான மண்மோகன், பசி, ஆகியோர் வெளியில் புனிதர்களாக வேஷமிட்டு வழக்கை நடத்திக்கொண்டிர ுக்கின்றனர். அப்படியிருக்கும ்போது எப்படி நியாயம் வெளியில் வரமுடியும். வல்லமையில்லாத கறுப்பாடு ராசா பலியாவதை எவராலும் தடுக்கமுடியாது, . சூழ்நிலை அப்படி.


ஏற்கெனவே வசதிவாய்ந்த நாடுகளான ஜப்பான், டுபாய், நோர்வே, மேலும் செழிப்படைய ஸ்பெக்ரத்தை தானம் செய்திருக்கின்ற னர். பிரச்சினை சுப்பிரமணியன் சுவாமி போன்றோரால் மேலும் கிளறப்பட்டால்,. அப்படி ஏதாவது இடைஞ்சல் வந்தால் மண்ணும், பசியும், குலாம் வானாவதியும், ஷைனியும், இத்தாலியிலோ நோர்வேயிலோ அரசியல் தஞ்சம் பெற்று வாழமுடியும்,. இந்திய மக்களுக்கு கோவிந்தா என்ற கோஷத்துடன் நாமம் தொடரும்.
Quote
 
 
+9 #6 kk 2012-02-11 12:47
"ஊமை ஊரைக் கெடுக்கும்”-link not working
Quote
 
 
+19 #5 springjanani 2012-02-11 12:13
மிக நல்ல ஆய்வு கட்டுரை. காங் கட்சியின் ஊது குழலாகத்தான் சி பி ஐ இன்றுவரை உள்ளது என்று புரிகிறது. இதை மு க வும் குடும்ப நலன் கருதி ஒத்து வாத்தியமாக செயல் படுகிறார்.
Quote
 
 
+35 #4 kali.krishna 2012-02-11 10:34
உத்தமர் கருணாநிதிக்கு ஊரை அடிச்சு முழுங்கிறது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்ல, ஆனால் அடிச்ச காச கொஞ்சம் கூட்டி சொல்லிட்டாங்களா ம். அதுதான் இப்ப அவருக்கு பிரச்சினை.

அவர் ஆதங்க படுறதிலையும் ஒரு நியாயம் இருக்கு. இவர் குடும்பமாச்சும் ஊர அடிச்சுத்தான் தின்னாங்க, ஆனால் ஒரு நாட்டையே அடிச்சு தின்கிற குடும்பம் டெல்லியில சவுக்கியமா இருக்கு. இதிலையும், அந்த குடும்பத்தில ஒரு "அரை டிக்கட்டு" ஊழல் இல்லாத ஆட்சிதான் அவரோட லட்சியம் என்று பீலா உடுது. இதெல்லாம் யாருட்ட போய் சொல்லுறது?
Quote
 
 
+9 #3 குட்டி 2012-02-11 10:30
வேறு என்ன சொல்ல தமிழன்(சிதம்பரம ் தவிர்த்து) இளிச்சவாயன்...தினமணியின் கார்ட்டூன் நல்ல உதாரணம்....
Quote
 
 
+13 #2 Padman 2012-02-11 09:19
கட்டுரையை ஆரம்பத்தில் படிக்கும்போது இந்த கட்டுரையில் மதியின் பலி ஆடு கருத்துப்படம் இருந்தால் நல்லா இருக்கும்னு மனதில் தோன்றியது. அதே போல கடைசியில் அந்தப்படம் இருக்கு. எப்படின்னு புரியவில்லை. எழுத்தாளனுக்கும ் வாசகனுக்கும் இப்படியொரு எண்ண ஓட்டம் அமைவது எத்தனை எழுத்தாளர்களுக் கு அமையுமென தெரியவில்லை. வாழ்த்துக்கள்.

சரி கட்டுரைக்கு வருவோம்...

கனிமொழிக்கு எடுத்த முயற்சியில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு இராசா மீது காட்டியிருந்தால ் இந்த கருணா வை இராசா நம்பலாம். இதுக்கு மேலும் இராசாவுக்கு நீதி கிடைக்க வழியில்லை. இராசாவே முன்வந்து எல்லா உண்மைகளையும் சொல்வதே நல்லது. சுயநலவாதிகளுக்க ு அவர் உதவி செய்வதில் என்ன பலன் அவருக்கு? சுப்ரமணியன் சாமி போன்றவர்களோ... இல்லை இந்த கருத்துகளை படிக்கும் இராசவின் உயிர் நண்பன் காமராசு போன்ற ஆட்களோ இராசாவிடம் உண்மையை சொல்லி தமிழர்களை காக்க வேண்டும். கருணா குடும்பத்தின் முகத்திரை கிழிய வேண்டும். பா சி போன்ற அண்ணிய நிறுவனங்களின் தரகருக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதெல்லாம் நடக்க வேண்டுமென வேண்டுவோம்.
Quote
 
 
+16 #1 செல்வா 2012-02-11 07:18
ஐயா உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்புங்க.. நான் சின்ன்ன்ன பீசுங்க.. பெரிய்ய்ய பீசு எல்லாம் வெளியில இருக்குங்க..

By, Ras*..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 122 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5868
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week5868
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month287243
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12809362