முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஒன்று கூடுங்கள்… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 15 பிப்ரவரி 2012 18:11

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் மற்ற இடைத்தேர்தல்களை விட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவையில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்த இடைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

உங்களுக்கு உண்மையிலேயே திராணி இருந்தால், சங்கரன் கோவில் இடைத்தேர்தலை தனியாக நின்று சந்தித்துப் பாருங்கள் என்று விஜயகாந்தைப் பார்த்து சவால் விட்டார்.   இந்தச் சூழலில்தான் சங்கரன் கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

avd

எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியினர் அரசு அதிகாரத்தை முழு அளவில் பயன்படுத்துவார்கள்.  ஒட்டு மொத்த அரசு நிர்வாகமுமே அந்த இடைத்தேர்தலை கவனத்தில் கொண்டு செயல்படும்.  இடைத்தேர்தல் வெற்றி என்பதை எல்லா ஆளுங்கட்சிகளுமே தங்களுடைய தனிப்பட்ட கௌரவப் பிரச்சினையாக பார்ப்பதால், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவது வழக்கம்.    வாக்களிக்கும் மக்களும் கூட, இந்த ஒரு தொகுதியில் எதிர்க்கட்சியினருக்கு வாக்களிப்பதால் என்ன ஆகி விடப் போகிறது, ஆளுங்கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைத்தாலாவது, தொகுதிக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற எண்ணத்திலேயே வாக்களிப்பார்கள். இதனால் ஆளுங்கட்சி வேட்பாளர் எளிதாக வென்று விடுவார்.

இது சங்கரன் கோவில் இடைத்தேர்தலிலும் நடக்கப்போகிறது என்றாலும், இந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி சந்திக்க வேண்டியது அவசியம்.  2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அனைத்துக் கட்சி கூட்டணிக்காக விழுந்த திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை, அதிமுகவுக்கா விழுந்த ஓட்டுக்கள் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார் ஜெயலலிதா. கூட்டணி இல்லாமலேயே  சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று அறிவித்தார்.

நல்ல எதிர்க்கட்சியாக செயல்படவேண்டிய திமுக, இன்று தன்னுடைய உட்கட்சி பூசல்களாலும், கட்சியை யார் கைப்பற்றுவது என்ற வாரிசு மோதல்களாலும், கட்சிப் பிரமுகர்கள் மீது தொடர்ச்சியாக வரும் வழக்குகளாலும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கு துணிவில்லாமல், கலகலத்துக் கொண்டிருக்கும் கட்சியை எப்படி ஒன்று சேர்த்து வைப்பது என்ற போராட்டத்தில் இருக்கிறது.

விஜயகாந்தின் தேமுதிக இப்போதுதான் தான் எதிர்க்கட்சி என்பதையே, அதுவும், சட்டமன்றத்தில் ஜெயலலிதா நேரடியாக அவமரியாதை செய்த பிறகு உணர்ந்திருக்கிறது.  

VIJAYAKANTH

ஜெயலலிதா விடுத்து இந்த சவாலை விஜயகாந்த் சீரியசாக எடுத்துக் கொள்கிறாரோ இல்லையோ, ஜெயலலிதா மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பது அவர் அமைத்துள்ள தேர்தல் பணிக்குழுவிலேயே தெரிகிறது.   சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களில் 36 பேரில் 26 பேர் அமைச்சர்கள் !!!! ஒரு இடைத்தேர்தலுக்கு இத்தனை அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்தது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதன் முறையாக இருக்கக் கூடும். தானே புயலால் வரலாறு காணாத அளவில் பாதிப்புக்குள்ளான கடலூர் விழுப்புரம் மாவட்டங்களுக்கான நிவாரணப் பணிகளைப் பார்ப்பதற்கு, ஜெயலலிதா இதே போல 26 அமைச்சர்களை அனுப்பியிருப்பாரேயானால், அவரைப் பாராட்டலாம்.  ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்படரில் பார்வையிட்டு விட்டு, 850 கோடியை நிவாரணத் தொகையாக “எனது” அரசு வழங்கியது என்பதையே சாதனையாக பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக இருக்கும் முத்துச்செல்வியை வேட்​பாளராக அ.தி.மு.க. அறிவித்துவிட்டது. முன்னாள் எம்.எல்.ஏ-வான சங்கரலிங்கத்தின் மகளான இவர், இப்போதே வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிக்கத் தொடங்கி விட்டார்.  தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது எந்த வகையில் சேரும் என்பது ஜெயலலிதாவுக்கே வெளிச்சம்.

muthuselvi

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் நடக்கும் பிரச்சாரத்துக்கு ஆகும் செலவு எந்தக் கணக்கில் வைக்கப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.   வேட்பாளர்கள் தேர்தலில் உண்மையில் செய்யும் செலவு எப்போதுமே கணக்கில் காட்டப்படுவதில்லை என்றாலும், தற்போது அதிமுக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை அந்த போலியான கணக்குக் காட்டும் நடவடிக்கையையும் கேலிக்கூத்தாக்குகிறது.

திராணி இருந்தால் தனித்துப் போட்டியிட்டுப்பாருங்கள் என்று விஜயகாந்துக்கு வீராவேசமாக சவால் விட்டு விட்டு, அதிமுகவினர் எடுக்கும் நடவடிக்கையைப் பார்த்தால், ஜெயலலிதாதான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று விடவேண்டுமே என்ற பயத்தில் இருப்பது போலத் தெரிகிறது.

ஒரு நல்ல ஜனநாயகத்துக்கு வலுவான எதிர்க்கட்சி என்பது மிக மிக அவசியம்.  வலுவான எதிர்க்கட்சி இல்லாமல், ஆளுங்கட்சி ஏகபோகமாக இருப்பது எந்த வகையிலும் நல்லதல்ல.    குறிப்பாக மக்கள் பிரச்சினையை பேச வேண்டிய சட்டப்பேரவையில், ஆளுங்கட்சியின் துதிபாடிகளை மட்டும் பேச அனுமதி கொடுத்து விட்டு, எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அவைக்காவலர்களை விட்டு வெளியேற்றுவதும், கோஷம் போட்டுத் தடுப்பதுமான போக்கு தமிழகத்தில் வேரூன்றிப் போயுள்ள சூழலில், ஆளுங்கட்சிக்கு கடிவாளம் போடும் விதமாக, இடைத்தேர்தலில் வலுவான போட்டி அமைவது மிக மிக அவசியம்.   எதிர்க்கட்சிகள் ஆளுக்கொரு வேட்பாளரை நிறுத்தி, மீண்டும் அதிமுகவை அமோக வெற்றி பெறச் செய்வார்களேயானால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு, அதிமுகவினர் வைத்ததே சட்டம் என்ற நிலை உருவாகி விடும்.

இந்தத்தேர்தலில் மதிமுக நிச்சயம் போட்டியிடும் என்று அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.   கடந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த மதிமுக, இந்த இடைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

2803005006_458d357ba9_b

அதிமுகவுக்கு ஒரு வலுவான போட்டியை உருவாக்க, மதிமுகவின் வேட்பாளரை பொதுவேட்பாளராக அங்கீகரித்து, திமுக, தேமுதிக, இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆதரிக்குமேயானால், சங்கரன் கோவிலில், அதிமுக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது.   திமுகவோ, தேமுதிகவோ தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்துவார்களே யானால், அது அதிமுகவின் வெற்றிக்கு உதவுவது மட்டுமல்லாமல், சமநிலையற்ற போட்டியாகவும் ஆகி விடும்.  இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்கும், அதிமுகவின் ஆட்சிக்கு ஒரு கடிவாளம் போடுவதற்கும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் மதிமுகவின் வேட்பாளரை பொது வேட்பாளராக அறிவித்து ஆதரிப்பது ஒன்றே வழி.   ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், இத்தேர்தலை சீரியசாக எடுத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பிரச்சாரத்திலும் ஈடுபடவேண்டும்.

இந்த நடவடிக்கை ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும்.   எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் ஈகோக்களை விட்டு விட்டு, இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க சம்மதிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Comments  

 
0 #43 kalidasan 2012-02-28 11:36
http://www.brookings.edu/opinions/2012/0224_tamil_nadu_antholis.aspx

" Star Wars III: Jayalalitha Strikes Back."
Super Super Super
Quote
 
 
0 #42 krishkmr 2012-02-24 11:46
[ஃஉஒடெ நமெ="செழிஅன்"]இது கனவிலும் நடக்காது. அம்மா என்ன திமுக போன்று ஊழல் ஆட்சியா நடத்துகிறார் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு. இவ்வளவு நாளாக ஒரு கூட்டணியை ஒழுங்காக அமைக்க தெரியாத வைகோ ஜெயித்து என்ன கிழித்துவிட போகிறார்.[/ஃஉஒடெ]

ஜயலலிதா உழல் செய்யவில்லயா.அவர் உழல் வாதிதான்
Quote
 
 
+2 #41 perumal m 2012-02-22 20:02
CPM HAS OPENLY APPEALED FOR OPENING KOODANKULAM. THAT SHOWS IT IS NO MORE A PARTY HAVING FAITH IN AS POOR PEOPLE' PARTY. IT SUPPORTED RAJABAKSHE AND WELCOMED THE GENOCIDE OF SL TAMILS. IT WAS SILENT ON PERIYAR DAM ISSUE. EVERY INCH CPM HAS BECOME AN ANTI-TAMILIAN PARTY. WITH ITS SUPPORT V.KANTH MUST MEET HIS WATER-LOO IN S.KOIL.
Quote
 
 
0 #40 kolaveri ram 2012-02-22 09:33
If the email is compulsory, please put required in the field. When I tried this name without id, it was not available. With the id, it was available. How????????? Really interesting !!!!!!!!!!
Quote
 
 
-2 #39 kolaveri ram 2012-02-22 09:26
இந்த மாதிரி காமெடி எல்லாம் பண்ணக் கூடாது.
Quote
 
 
-4 #38 suresh krishna 2012-02-20 15:18
Iam amazed reading Savukku off late.Karunanidi has put savukku behind bars for no fault under instigation of jaffer sait.Now it make me assume that Savukku has been a beneficiary from the scams of DMK and has been coerced to write against JJ.
There is nothing to gossip about JJ there is no sasikala now.Savukku we are sorry do not get confused and do not dangle between ideas and ideals.No one will buy your idea.If you continue to support KK you will be looked as another Shyam of Tharaasu.God Bless
Quote
 
 
+3 #37 Vijay123 2012-02-20 12:50
//ஆட்சில் ஸ்திரத்தன்மை உள்ளது, ஊழல் எதிராக நடவைக்கை எடுக்க பட்டுள்ளது, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நல்லதொரு முடிவு எடுத்தமைக்கு இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களித்து நன்றி செலுத்தவே விரும்புவார்கள் மக்கள்//ஹி ஹி...இவரு கன்டிப்பா தமிழ் நாட்டுல இல்ல போல :lol:
Quote
 
 
0 #36 kalidasan 2012-02-20 11:39
naan ungalin thivira vasakar savukku enakku pidithathu ungalanin pulan visaranai katurai than ningal entha mathiri katurai ezhuthinal padikka mudiyavillai thayavu seythu political katuraiyai ezhuthathirkal govt employe mattum ningal thodarnthu eazhi nalla payarai sampatingal ipadikku mumbai yelirunthu A. Kalidasan
Quote
 
 
+2 #35 siga 2012-02-19 16:03
அம்மா ஆட்சி ஆணவம் கொண்ட மனது முதலில் சுற்றி இருப்பவர்களை அழிக்கும் பின் கடைசியாக ஆணவம் கொண்டவரையே அழிக்கும்...
Quote
 
 
-3 #34 san 2012-02-19 12:20
hello ganesen...

Am accept one&only ur 4th point..
Other three not possible and dream factors..
i think mdmk wont get deposit there..
Quote
 
 
+13 #33 vennai 2012-02-19 09:46
idhu oru article indhukku indha alavu comment.... :lol: :lol: :lol: inga parungappa!!!!
சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி உறுதியில்லை என்பது தெரிந்தும் மதிமுகவை "தோற்கடிக்க' வேண்டும் என்பதற்காகவே திமுக போட்டியிட முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடாத மதிமுக, இந்த இடைத்தேர்தல் மூலம் "அரசியல் வாழ்வு' பெற்று விடக் கூடாது என்பதில் திமுக தலைமை தீவிரமாக இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Quote
 
 
+5 #32 danguvaaru andhurum 2012-02-17 22:40
Quoting sundarwipro:
ஊழல் எதிராக நடவைக்கை எடுக்க பட்டுள்ளது,

இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நல்லதொரு முடிவு எடுத்தமைக்கு



என்ன ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது?? (பெங்களூருக்கு சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரானதை தவிர)

ஈழத்தமிழரை இலங்கை தமிழர் என்று சொல்லும் அளவிற்கு நன்மை செய்துள்ளதா ஜெயலலிதா அரசு....

எப்படி இப்படியெல்லாம் டக்கால்ட்டி விட முடிகிறது???
Quote
 
 
+4 #31 sivaraj 2012-02-17 14:22
Before elction you have spoke about DMK & KARUNADHI as very bad person and how to you forgot the 2G scam very sortly , DMK & CONGRESS (AICC) have done more things which no one will forgot ever , you have forgot about yourself in jail life.i thing your also a normal person. vijaykanth is also not a right person. Please do not waste the time like this and kindly take the important subject like EB.
Quote
 
 
+3 #30 தமிழ் தேசியம் 2012-02-17 13:11
சங்கரன்கோவில் இடைத் தேர்தலை விட மிக முக்கியமானது, வரக்கூடிய இந்திய நாடாளுமன்றத் தேர்தல். இந்த தேர்தலில் தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் எல்லாம் ஒரு கூட்டணியின் கீழ் வர வேண்டும். மக்கள் வலிமையான மூன்றாவது அணியை ஆதரிக்க தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், தலைவர்கள் தான் தன்முனைப்பு பார்க்காமல் ஒன்று படவேண்டும்.

ம தி மு க, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி போன்றவை ஒரே அணியில் வர வேண்டும்.

அரசியல் சார்பற்ற இயக்கங்கள் சாந்த தோழர்களே, தயைகூர்ந்து இக்கருத்தினை வலியுறுத்துவோம் . ஒன்று படுவோம், வெற்றி பெறுவோம்.

இந்தியாவில் தேசிய இனங்களின் கூட்டாட்சியை ஏற்படுத்த முனைவோம்.
Quote
 
 
+13 #29 ganesangct 2012-02-17 12:17
##விஜயகாந்த்துட ன் சவால் விட்ட பிறகு தான் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் ஜெயலலிதா கவனம் செலுத்துவது போல் பலர் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல மதிமுக தேர்தல் ஆயத்த பணிகள் தொடங்கி ஒரு மாதம் கழித்து உளவுத் துறை, மதிமுக வெற்றிபெறுவதற்க ான வாய்ப்பு அதிகமுள்ளதாக தகவல் தெரிவித்தவுடன் தான் அதிரடி (போலி) நடவடிக்கையாக சசிகலா கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டார் (நாடகம்). ஏனெனில் சங்கரன் கோவிலில் வெற்றி பெற, பரமக்குடி படுகொலையைத் தாண்டி தாழ்த்தப்பட்ட ம்க்களின் ஆதரவை பெற இதுவே சரியென்று ஜெயலலிதா நம்பியதால்தான். ஆக ஜெயலலிதா என்றோ தன் கவனத்தை ஆரம்பித்துவிட்ட ார் அதனால் தான் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிப்பு விஜயகாந்த்தை தூண்டியது எல்லாமே.####

நண்பர் கூறிய கூற்று சரியானதேயாகும்.

மதிமுக வெற்றி பெருவதற்கான சாத்தியக் கூறுகள்.
1. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சொந்தத் தொகுதி மட்டுமல்லாது அனைவரிடமும் சாதி, மதம், அரசியல் பாகுபாடின்றி பழகக்கூடியவர். இதன் காரணமாக அவருக்கு பொதுவான வாக்குகள் அதிகம் பெற வாய்ப்பு உள்ளது.
2. பரமக்குடி சம்பவத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்கு மதிமுக பெற வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பைத் தடுக்கவே சசி நீக்கம் போன்ற நாடகங்கள் அரங்கேற்றம் நடைபெறுகிறது.
3. வைகோ அவர்களின் சொந்த பந்தங்கள் இத்தொகுதியில் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் வைகோ சொல்லுக்கு கட்டுப்பட்டவர்க ள். அதனால் அந்த வாக்கு அப்படியே மதிமுக விற்கு கிடைக்கும். இந்த வைகோவின் சொந்த பந்த வாக்குகளைப் பிரிக்கவே விஜயகாந்துக்கு சவால் விடப்பட்டுள்ளது .
4. பஸ் கட்டண உயர்வு,பால் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மேலும் இந்த சர்வாதிகார மற்றும் எதேச்ச ஆட்சிக்கு முடிவுகட்ட அனைத்துக் கட்சியினரும் இணைந்து மதிமுக வேட்பாளரை பொது வேட்பாளராக நிறுத்தி ஆதரிக்க வேண்டும்.

ஆகவே இவற்றை நங்கு உணர்ந்து சங்கரன் கோவில் தொகுதி மக்கள் மாற்றுக்கருத்து மற்றும் பிரிவினைகளுக்கு மதிப்பளிக்காமல் மதிமுகவிற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.

மு.கணேசன் சங்கரன் கோவில் தொகுதி
Quote
 
 
-1 #28 RAMADAS 2012-02-17 12:14
best of try
Quote
 
 
+6 #27 karunakaran 2012-02-16 23:57
ஆட்சி நன்றாக இருப்பதாக சொல்வது அபத்தமானது முல்லை பெரியார் பிரச்னையில் கூடன்குளம் பிரச்னையில் இலங்கை தமிழர் பிரச்னையில் எல்லாம் தண்ணியில் நழுவுற மீனகதான் இருக்கிறார் ஜெ ஓவர் நம்பிக்கை இருக்க கூடாது தான் என்ற ஆணவம் அகந்தை கூடவே கூடாது தனக்கு கீழ்தான் அனைவரும் என்ற கர்வம் கூடாது பால் விலை உயர்வு பஸ் கட்டண உயர்வு சென்ற ஆட்சியில் இல்லாத அளவுக்கு மின்கட்டண வெட்டு இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட இது எல்லாவற்றுக்கும ் தகுதியான ஒரே தலைவர் வைகோ மட்டுமே மக்கள் உணர வேண்டுமே
Quote
 
 
-7 #26 Rajeevkumar 2012-02-16 22:57
தற்போதைய தலைவர்களில் வைகோ ஊழல் கறைபடியாதவர், நல்ல்லவர். ஆனால் முடிவு எடுப்பதில் உறுதியின்மை மற்றும் வெகு எளிதில் உணர்ச்சி வசபடுதல் போன்றவற்றால் கட்சியை கட்டெறும்பு ரேஞ்சுக்கு கொண்டு வந்துவிட்டார். எப்பொதும் தப்பான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கும் ஒரே தலைவர் வைகோ. அவரை எப்படி மற்ற கட்சிகள் அவர்களின் கொள்கையை விட்டு ஆதரிக்க முடியும், சிந்தியுங்கள் சவுக்கு.
Quote
 
 
+7 #25 perumal m 2012-02-16 22:25
V KANTH HAS NO PRINCIPLES. TO HIM, POLITICS IS ALSO ANOTHER DIMENSION OF CINEMA.
KARUNA IS SELFISH. NO ONE WANTS HIS SUPPORT.
IT IS TESTING TIME FOR THE COMMUNISTS TO EXTEND OPEN SUPPORT TO MDMK. DMDK IS NO FORCE IN S.KOIL. V KANTH BETTER SHUT HIS MOUTH AND ALLOW HIS FANS TO CAST VOTES AS PER ONE'S CONSCIENCE. CADRES OF DMK SHOULD ALSO FOLLOW THIS AND GIVE A BEFITTING REBUFF TO THE OLD FOX KARUNA.
IT IS MEANINGLESS TO EXPECT A COMMON CANDIDATE. LET RIGHT THINKING VOTERS CAST THEIR FRANCHISE IN FAVOUR OF MDMK IRRESPECTIVE OF THE OUTCOME OF THE RESULT.
Quote
 
 
+2 #24 Ravi 2012-02-16 22:01
அதீத வெற்றி அகந்தைக்கு வழி வகுக்கும் என்பதை ஜெயலலிதா மீண்டும் மீண்டும் நீருபத்திருக்கு ம் வேளையில், எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு மாற்று வேட்பாளரை அறிவித்து இந்த அம்மாவின் மமதையை கொஞ்சம் குறைக்க வேண்டும். மக்களுக்காக மட்டுமே உழைக்கிறோம் என்று கூவும் இந்த கட்சிகள் தாங்களின் மற்ற சண்டைகளை ஓரம் கட்டி வைத்து இந்த ஒருங்கிணைந்த வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அந்த ஒருங்கிணைந்த வேட்பாளர் மதிமுக கட்சியை சேர்ந்தவராக இருத்தல் தமிழனுக்கு நல்லது. அப்படி அமையும் பட்சத்தில் இந்த அம்மாவுக்கு ஒரு "வேகத் தடை" உண்டாக்கியது போல ஆகும். இல்லை. நாங்கள் ஒருத்தருக்கொருத ்தர் அடித்துக் கொண்டு அந்தம்மாவின் ஆளை ஜெயிக்க வைத்தே தீருவேன் என்றால் வேறு வினையெ வேண்டாம். கள்ளு குடித்த குரங்கை தேளும் கொட்டியதைப் போல அந்தம்மா செய்வதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கனும்.
Quote
 
 
0 #23 pakkiyaraj340 2012-02-16 19:30
நடந்தா நல்லதுதான்.. பார்கலாம்..
Quote
 
 
+4 #22 Nayam 2012-02-16 15:28
எல்லாவற்றையும் தாண்டி மதிமுக வெற்றி பெற வேண்டும்
Quote
 
 
+2 #21 allavudeenbasha32 2012-02-16 12:25
mariyathai kuriya savukku avargale neegal kadantha kala varalatari ninaithu parthu eluthungal ungaluku pitithirintahl atharaikavum pidikavillai entral ethirthi eluthave seithu varigirirgal ithu ungal pachanthothi thanathai kattukirathu innum avargal muthalamachiara ga amarnthu 1 varudam kuda neraivu aga villai atharkul neengal en avasarapadukiri gal appadi neegal ninaithal poi sangaran thogithiyil piracharam paanna vendiyathu thane en ungaluku intha kola veri. ungal meethu nalla mathipu mariyathai irrkirathu thangal athai keduthukavendam
Quote
 
 
+3 #20 Veerasekar 2012-02-16 10:44
மதிமுகவை பொது வேட்பாளராக நிறுதினால் மதிமுக வெல்லும்.
Quote
 
 
+3 #19 Vineeth 2012-02-16 10:42
ஆக தொல்வி, வெட்ரி எல்லாம் கருனானிதி. ஜயலலிதா இல்லை. இதெ விஜயகாந்த் ப்ரெமலதா, தம்பி எல்லாம் பன்சாயத் தெர்தலில் ஜெயலலிதாவை கெவலமாக பெசியபொது சவுக்கு வாயடைது இருந்தது என்ன ரகசியம்?
Quote
 
 
0 #18 Raju 2012-02-16 10:33
ஸவுக்கு! உனக்கு ஏன் இந்த கொலவெரி? தி மு க உன்னை சரி கட்டி விட்டதா?
Quote
 
 
0 #17 gopalasamy 2012-02-16 10:01
WHY ALL PARTIES SHOULD SUPPORT MDMK?

LET CONGRESS OR DMK CONTEST. ALL OTHER PARTIES SHOULD SUPPORT THEM.

IT APPEARTS SAVUKKU SUPPORTING DMK AND CONGRESS NOW. GOOD.
Quote
 
 
+3 #16 Narayan 2012-02-16 09:24
If Vijayakanth becomes the CM , he will do the same thing to Vadivelu.
Quote
 
 
0 #15 Bharath Arunachalam 2012-02-16 07:46
எதிர் கட்சி ஜெயிச்சி என்ன ஆக போகுது. அம்மா ஆட்சி நல்லா தான் இருக்கு.
Quote
 
 
+37 #14 sundarwipro 2012-02-16 02:06
ஆளும் கட்சியை எதிர்த்து ஏன் அணைத்து கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என்ற எந்த ஒரு முக்கியமான ஆதாரத்தையும் நீங்கள் வைக்கவில்லை. சட்டமன்ற பேச்சை வைத்து எதிர்க்க வேண்டும் என்பதை மக்கள் மன்றத்தில் ஒரு போதும் எடுபடாது!. ஆட்சில் ஸ்திரத்தன்மை உள்ளது, ஊழல் எதிராக நடவைக்கை எடுக்க பட்டுள்ளது, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நல்லதொரு முடிவு எடுத்தமைக்கு இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களித்து நன்றி செலுத்தவே விரும்புவார்கள் மக்கள். கடந்த திமுக ஆட்சியை ஒரு முறை நினைத்து பார்த்தாலே கை தானாக இரட்டை இலைக்கு தான் ஒட்டு பட்டனை அமுக்கும்.
Quote
 
 
+41 #13 ஷாலி 2012-02-16 00:59
சவுக்கின் யோசனை மிக நன்று,ஒரு ஆரோக்கிய அரசியல் சூழலுக்கு ஒட்டு மொத்த பொது வேட்பாளர் நிறுத்தவேண்டியத
அவசியமான ஒன்று.அதிலும் திராவிட பெயர்தாங்கிய கட்சிகளில்
ஊழலில்லா உணர்வு நிரம்பிய கட்சி இது ஒன்றுதான்.

ஆனாலும் நாம் இருப்பது தமிழ் நாடு ஆயிற்றே! தமிழன் ஒன்று படுவது என்பது ஒருக்காலும் நடக்காது.காலைப்பிடித்து கீழே இழுக்க ஆட்கள் அதிகம் உள்ளார்கள்.நல்லது நடந்தால் நாட்டுக்கு
நன்று.கருணாநிதி அப்படியெல்லாம் நடக்க விடமாட்டார்.
Quote
 
 
+38 #12 kali.krishna 2012-02-15 23:43
இத்தேர்தலில் மதிமுகவை பொதுவேட்பாளராக ஆதரிப்பது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால் திமுகவையே வைகோ கைபற்றிவிடுவாரோ என்று பயத்தில் இருக்கும் கருணாநிதி இதற்கு சம்மதிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்தும், கம்யுனிஸ்டுகளும ் இதற்கு ஆதரவழிக்க வேண்டும்.

யார் ஜெய்கிறார்களோ? இல்லயோ? அதிமுக தோற்க வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதாவின் ஆணவம் அடங்கும்.மக்களின் மதிப்பு தெரியும்.
Quote
 
 
+7 #11 haneefm 2012-02-15 23:34
:D ;-) :-* Wait and sec
Quote
 
 
+63 #10 http://koothadivedd 2012-02-15 23:28
பொதுவாக ஜெயலலிதாவின் ஆணவத்துக்கும் தலைக்கனத்துக்கு ம் ஷெக் வைத்து பாடம் புகட்டவேண்டுமென ்ற பொதுவான நோக்கோடு மதிமுக வை மற்றய கட்சிகள் ஆதரிக்கலாம் என்ற வாதம் நியாயமானதாகப்பட ்டாலும். ஜெயலலிதாவை விட மோசமான காரியவாதி கருணாநிதி தனக்கு இலாபமில்லாமல் மற்றவர்களை நிச்சியம் ஆதரிக்க முன் வரமட்டார்.

அப்படி முன்வந்தாலும் தொடர்ச்சியாக தனது கட்சியை சரிவிலிருந்து தூக்கி நிறுத்துவதற்காக இத்தேர்தலை சாக்காக பயன்படுத்தி மதிமுக மற்றும் தேமுதிக உறுப்பினர்களை தன் வலையில் வீழ்த்தி தனது பிம்பத்தை முன்னிறுத்த முயலுவார். பழைய பகைமைகளை காட்டிக்கொள்ளாம ல் சினேகம் பாராட்டவும் அவர் தயங்கமாட்டார் இதன் மூலம் இப்போ மக்கள் மத்தியில் முன்னணிச்சக்திக ளாக இனங்காணப்பட்டு வரும் மதிமுக தேமுதிக கட்சிகளை கருணாநிதி காயடிக்க முயலும் பேர் அபாயம் இருக்கிறது.

திமுக பழைய கட்சியென்பதால் மக்கள் மத்தியில் ஒருவித மாயை இன்னும் இருந்து கொண்டிருக்கிறது . பத்திரிகை ஊடகங்களும் பல திமுகவின் கையில் இருப்பதால் திமுக தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிபோன ்ற மாயையை தக்க வைக்க முயலுவதையும் காண முடிகிறது.ஜெ யின் தலைக்கனத்தையும் இல்லாமல் செய்யவேண்டும் அதேநேரம் அதி தீய சக்தியான தாத்தாவின் சதியிலும் மதிமுக தேமுதிக அழிந்துவிடக்கூட ாது. வைகோ அவர்களும் விஜயகாந்தும் சிந்தித்து செயற்பட்டால் சரிதான்.
Quote
 
 
+15 #9 Eesan 2012-02-15 23:05
Hahahahaha! This article is funny. Does Savukku have any thoughts of his own? What happened to his articles which he wrote against DMK 9 months back? Has now DMK become a good party? Has now DMK come out of 2G scandal? If Vijaykanth now joins hands with Congress and DMK, does he accept that whatever he said during the election campaign was wrong? If Vaiko and communists join with DMK and COngress do they acknowledge what Maran brothers have done? People will throw away the alliance you are talking about. JJ can be thrown away only if people find a corruption charge against her. She did not give a chance for that in 2001-2006. That's why she lost in a thin margin to the mega DMK-Congress-PMK alliance. Now also there is no corruption charge against her and hence she will win. Without any alliance she won the Trichy by-poll. After that Milk and bus charges have been raised. But lot of people understand that it is unavoidable. So the margin may get reduced by JJ will win easily. Electricty will not be an issue in Sankarankovil as till the election is over, electricity will not be cut. So this will not be an issue. What other issues do you have against JJ? Nothing. That's why you are recommending a mega-mega alliance of all the opposition parties. But it will not work. You are also losing your respect by suggesting these type of ideas.
Quote
 
 
+6 #8 fraud& antisocial 2012-02-15 22:50
forelection canvassing candidate has get permission repective policestation. more than five permission gathering in public place is offence they can arrest by police. without permission of police election canvassing cannot be done. If they need permission they submit vechile pass issued by the Election commission. everyday candidate has to inform to respective police station, which area going to vist for for canvassing .
She can easily disqualify if we check her nomination paper thoughly. If there is any omission or incorrect she can disqualify.
Quote
 
 
+2 #7 shivaaa 2012-02-15 22:43
நடந்தா நல்லதுதான்.. பார்கலாம்..
Quote
 
 
+4 #6 danguvaaru andhurum 2012-02-15 22:37
http://www.youtube.com/watch?v=nWeJljB1pMg&feature=related

http://www.youtube.com/watch?v=04roYnDWF7Y&feature=related

http://www.youtube.com/watch?v=b3hHlT6vqpI&feature=related

மூன்று காணொளிகளையும் பார்த்து சொல்லுங்கள் எங்கு கல்வி முறையாக கற்பிக்கப் படுகின்றது என்று....
Quote
 
 
+8 #5 Rk.Guru 2012-02-15 20:58
நீங்கள் சொல்வதுபோல் மதிமுக வேட்பாளரை அனைத்து கட்சிகளும் சேர்ந்து பொது வேட்பாளராய் நிறுத்தினால் ஆளும் கட்சிக்கு சரியான சவாலாகத்தான் இருக்கும் ஆனால் இதில் தானே புயல் இன்னொருமுறை புரட்டிபோட்டாலு ம் நடக்காது தமிழக அரசியலில் நடக்காது. இப்போதே 36 இல் 26 இருக்கிறது இதில் பொது வேட்பாளரை நிறுத்தினால் முழுதாய் 36 ஆகிவிடும்.

பிறவி தீமிர்தனம் எப்போதும் இருக்கும்போது அது ஆட்சி அதிகாரத்துடன் சேரும்போது கேட்கவே வேண்டாம். ஆணவம் கொண்ட மனது முதலில் சுற்றி இருப்பவர்களை அழிக்கும் பின் கடைசியாக ஆணவம் கொண்டவரையே அழிக்கும்...
Quote
 
 
+34 #4 நெல்லை பாலாஜி 2012-02-15 20:43
இந்த தேர்தலில் ம தி மு க வின் சார்பில் அதன் பொது செயலாளர் அண்ணணன் வைகோ நின்று வெற்றி பெற்று, எவ்வாறு இந்திராவை பார்லிமெண்டில் கேள்வி கேட்டாரோ அவ்வாறு ஜெயாவையும் கேள்வி கேட்டு, ஜெயாவின் ஆணவத்தை அடக்கவேண்டும்...அது வைகோ ஒருவரால் தான் முடியும்..
Quote
 
 
+47 #3 danguvaaru andhurum 2012-02-15 19:45
விஜயகாந்த்துடன் சவால் விட்ட பிறகு தான் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் ஜெயலலிதா கவனம் செலுத்துவது போல் பலர் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல மதிமுக தேர்தல் ஆயத்த பணிகள் தொடங்கி ஒரு மாதம் கழித்து உளவுத் துறை, மதிமுக வெற்றிபெறுவதற்க ான வாய்ப்பு அதிகமுள்ளதாக தகவல் தெரிவித்தவுடன் தான் அதிரடி (போலி) நடவடிக்கையாக சசிகலா கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டார் (நாடகம்). ஏனெனில் சங்கரன் கோவிலில் வெற்றி பெற, பரமக்குடி படுகொலையைத் தாண்டி தாழ்த்தப்பட்ட ம்க்களின் ஆதரவை பெற இதுவே சரியென்று ஜெயலலிதா நம்பியதால்தான். ஆக ஜெயலலிதா என்றோ தன் கவனத்தை ஆரம்பித்துவிட்ட ார் அதனால் தான் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிப்பு விஜயகாந்த்தை தூண்டியது எல்லாமே. எல்லாவற்றையும் தாண்டி மதிமுக வெற்றி பெற வேண்டும்... பெறும் என்பது என் நம்பிக்கை.....


மருதூர் கோபால இராமச்சந்திரருக ்கு திண்டுக்கல் என்றால் வையாபுரி கோபாலசாமிக்கு சங்கரன்கோவில்
Quote
 
 
+7 #2 jsathish 2012-02-15 19:15
Sir, Good points. But this kind of co-operation will never happen here. Infact, DMK has already started distributing application forms for candidature. So, now it is only left to the people of Sankarankoil to take a conscious decision.
Quote
 
 
-32 #1 chezhian 2012-02-15 19:15
இது கனவிலும் நடக்காது. அம்மா என்ன திமுக போன்று ஊழல் ஆட்சியா நடத்துகிறார் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு. இவ்வளவு நாளாக ஒரு கூட்டணியை ஒழுங்காக அமைக்க தெரியாத வைகோ ஜெயித்து என்ன கிழித்துவிட போகிறார்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5164
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week74416
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month277148
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12799267