|
கடந்த ஒரு மாதமாக சென்னை மாநகர காவல்துறையினரை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வங்கிக் கொள்ளை வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப் பட்ட 5 இளைஞர்களை சென்னை மாநகர காவல்துறை இரவோடு இரவாக சுட்டுக் கொன்றிருக்கிறது. அடிக்கடி சொல்லிக்கொள்வார்களே…. ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையான காவல்துறை என்று… அந்த ஸ்காட்லாண்டு யார்டு போலீசையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது சென்னை மாநகர காவல்துறை.

சென்னையில் பட்டப்பகலில் இரண்டு வங்கிகள் கொள்ளையடிக்கப் பட்டபோதே, சென்னை காவல்துறை ஆடித்தான் போனது. இது ஏற்கனவே ஆடிப்போயிருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரிபாதியின் நாற்காலியை மேலும் ஆடச் செய்தது. சென்னை மாநகர ஆணையாளர் பதவியை பிடிக்க எப்போதுமே இருந்து வரும் போட்டியை எப்படியாவது சமாளித்து, தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடியும் திரிபாதிக்கு இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் இந்த என்கவுண்டரை பார்க்க வேண்டும். வேளச்சேரியில் உள்ள வண்டிக்காரன் தெரு என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. இரவு 1 மணிக்கு இந்த என்கவுண்டர் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய திரிபாதி “நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறையினருக்கு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தப்பகுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் இரவு ஒரு மணிக்கு அந்த இடத்திற்கு சென்றனர். போலீசார் அந்த வீட்டை வெளியிலிருந்து பூட்டி விட்டு, உள்ளே இருந்தவர்களை சரணடையச் சொல்லியிருக்கிறார்கள். அனால் உள்ளே இருந்தவர்கள் சராமாரியாக காவல்துறையினரைப் பார்த்து சுடத் தொடங்கி விட்டனர். சுற்றியிருந்த மக்களின் பாதுகாப்புக்காகவும், காவல்துறையினர் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் வேறு வழியில்லாமல் சுட்டனர். கொள்ளையர்கள் சுட்டதில், காவல்துறை ஆய்வாளர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. சுடப்பட்டதில் ஐந்து நபர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அவசரமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றபோது, அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போனவர்களை புகைப்படம் எடுத்து கொள்ளை போன வங்கிப் பணியாளர்களிடம் காண்பித்ததில், அவர்கள் வங்கியை கொள்ளையடித்தவர்கள்தான் என்று அவர்கள் அடையாளம் காண்பித்தனர். அந்த வீட்டிலிருந்து 5 பிஸ்டல், 2 ரிவால்வர் மற்றும் மொபைல் போன்கள் மற்றும் 14 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப் பட்டன” என்று தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் படி, “நீதித்துறை நடுவரின் விசாரணை நடைபெற்று வருவதால், மேற்கொண்டு இந்த விவகாரம் குறித்து பேச முடியாது” என்றும் தெரிவித்தார்.
இறந்து போன, வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத், சசிகரே, அபேகுமார் ஆகியோரில் நான்கு பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர். திரிபாதி சொல்வதை வைத்துப் பார்த்தால், வேளச்சேரி வீட்டுக்கு விசாரணைக்காக சென்ற இடத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால், வேறு வழியின்றி காவல்துறையினர் திருப்பிச் சுட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள மக்கள், காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் இரவு 10 மணி முதலே அந்த இடத்தைச் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பத்து மணி முதல் அந்த இடத்தில் குவிந்த போலீசார், அருகாமையில் உள்ள வீட்டில் இருந்தவர்களை வீட்டினுள் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இரவு 12.30 முதல் 1 மணிக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திரிபாதி சொல்வது போல வெறும் விசாரணைக்காக அந்த வீட்டுக்கு சென்றவர்கள் இது போல பெருமளவில் ஆயுதங்களோடு சென்றது ஏன் என்பது இயல்பான கேள்வி. கொள்ளையர்கள் வங்கிகளை கொள்ளையடித்தபோது ஆயுதங்கள் வைத்திருந்ததால் காவல்துறையினரும் ஆயுதங்களை எடுத்துச் சென்றனர் என்று சொல்லும் திரிபாதி இத்தனை போலீசார் அங்கே ஏன் சென்றனர் என்பதை விளக்கவில்லை. சாதாரண விசாரணைக்காகத்தான் காவல்துறையினர் அங்கே சென்றார்கள் என்றால், “ஆபரேஷன் டீமின் ஹெட்” என்று அடையாறு துணை ஆணையரை குறிப்பிடுவது ஏன் ? சாதாரண விசாரணையைத்தான் “ஆபரேஷன்” என்று அழைப்பார்களா ? மேலும் சாதாரண விசாரணைக்கு துணை ஆணையரை நள்ளிரவில் அனுப்ப வேண்டிய காரணம் என்ன ?

அருகாமையில் குடியிருந்த பொதுமக்கள் அத்தனை பேரையும் வீட்டுக்குள் செல்லுமாறு இரவு 10 மணியிலிருந்தே காவல்துறையினர் மிரட்டியதிலிருந்தே இது எப்படிப்பட்ட ஒரு மோசமான படுகொலை என்பது தெரிகிறது. என்கவுண்டர் நடந்த உடனே ஒரு பத்திரிக்கையாளரிடம் பேசிய இணை ஆணையர் ஒருவர், இரண்டு காவல் அதிகாரிகளுக்கும் எப்படிக் காயம் ஏற்பட்டது என்று கேட்டதற்கு, அவர்கள் இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, உள்ளே இருந்தவர்கள் அரிவாளால் வெட்டியதால் காயம் ஏற்பட்டது என்றார். ஆனால் திரிபாதியோ, காயமடைந்த இரண்டு ஆய்வாளர்களும், கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயம் ஏற்பட்டது என்றார். இது போன்ற போலி என்கவுண்டர்களில் காவல் துறையினருக்கு ஏற்படும் காயம் அத்தனையுமே, வயிற்றிலோ, தோள்பட்டையிலோ தான் ஏற்படுகிறது. இந்தச் சம்பவத்திலும் காயம் ஏற்பட்ட இரண்டு ஆய்வாளர்களுக்கும் தோள்பட்டையிலும், வயிற்றிலும், நெற்றியிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இறந்து போன ஐந்து இளைஞர்களுக்கு மட்டும் நெஞ்சில் குண்டு பாய்ந்திருக்கிறது. இந்த மர்மத்திற்கு காரணம் என்ன என்பதற்கு திரிபாதி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.


இந்த இளைஞர்களை இப்படி துணிச்சலாக கொன்றதற்கு மற்றொரு முக்கிய காரணம், இவர்கள் அத்தனை பேரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்காக வழக்கு போடவோ, மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கவோ யாரும் வர மாட்டார்கள் என்ற துணிச்சலே காரணம். இது போன்ற போலி மோதல் படுகொலைகளை நீதிமன்றங்களும் உரிய தீவிரத்தோடு அணுகுவதில்லை என்பதும், காவல்துறையினரின் துணிச்சலுக்கு மற்றொரு காரணம். சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் போலி என்கவுண்டர்கள் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கிறது.
இறந்து போன ஐந்து பேரும் கொள்ளையர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். அவர்கள் கொள்ளையடிக்கும் போது, எந்தவிதமான வன்முறைச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்பதை பார்க்க வேண்டும். ஆளில்லாத வங்கிகளாகப் பார்த்து 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்திருக்கிறார்கள். இவர்கள் செய்தது இவ்வளவு பெரிய தவறென்றால், பல கோடி ரூபாய்களை கொள்ளையடித் தவர்கள்தானே நமக்கு ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் ? 66.5 கோடியோடு ஒப்பிடும்போது 30 லட்ச ரூபாய் ஒன்றும் பெரிய தொகை இல்லையே….

மனித சமுதாயம் தோன்றி பல்வேறு கட்டங்களில் வளர்ந்து, இன்று மனித உரிமைகளை மதிக்க வேண்டும், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு சிறப்பான வளர்ச்சிக்கட்டத்தில் இருக்கிறது. நமது குற்றவியல் சட்டத்தின் அடிநாதமே, குற்றவாளிகளை திருத்தி சமுதாய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய வேண்டும் என்பதுதான். இசுலாமிய நாடுகளிலும், சீனாவிலும் இருப்பது போல, துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை சீவியும் மரணதண்டனை வழங்கும் கொடிய வழக்கம் இந்தியாவில் இல்லை. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாகரீக நாடாகவே நாம் இதுவரை அறியப்பட்டிருக்கிறோம். அப்படித்தான் அறியப்படவும் வேண்டும்.
நேற்று இரவு நடந்தது போன்ற போலி மோதல் படுகொலைகள் நமது சமுதாயத்தை காட்டுமிராண்டிக்காலத்துக்கே இட்டுச் செல்லும். அந்த அறையில் தங்கியிருந்த ஐந்து இளைஞர்களில் ஒரே ஒருவர் அந்தக் கொள்ளையில் சம்பந்தப்படாமல் இருந்திருந்தால், பறிக்கப்பட்ட உயிருக்கு என்ன பதில் சொல்வார் திரிபாதி ?

இந்தத் திரிபாதி என்கவுண்டருக்கு பெயர் போனவர். அவர் 2001 அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகரத்தின் இணை ஆணையராக இருந்தபோது, ராஜாராம், வீரமணி போன்றவர்களின் என்கவுண்டர்களை நேரடியாக முன்னின்று நடத்தியவர். தற்போது தனது கமிஷனர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இந்த என்கவுண்டரை நடத்தியிருக்கிறார் என்ற சந்தேகமே மேலோங்குகிறது. மேலும், இன்று பெங்களுரில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா இன்று இரண்டாவது நாளாக சாட்சியம் அளிக்கும் நிலையில், அந்தச் செய்தியை பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் இந்த என்கவுண்டர் நடந்துள்ளதோ என்ற சந்தேகத்தையும் வலுவாக எழுப்புகிறார்கள் சில பத்திரிக்கையாளர்கள்.


இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக வேடமிட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் இரண்டு காவல்துறை ஆய்வாளர்களையும், நேரில் சென்று பார்த்து இந்த போலி என்கவுண்டருக்கு ஜெயலலிதா வலு சேர்ப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. மோரில் விஷம் வைத்து வீரப்பனைக் கொன்றவர்களுக்கு இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு க்ரவுண்டு நிலமும், ஒரு படி பதவி உயர்வும் வழங்கியவர்தானே இந்த ஜெயலலிதா.
நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் இன்றைய சமுதாயத்தில் குறுக்கு வழியில் பணக்காரராக வேண்டும் என்ற உந்துதலில் தவறு செய்த இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றால், தனக்கு பிடிக்காத ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் வீசச் சொன்னவருக்கும், ஒரு சர்வே வெளியிட்டதற்காக மூன்று இளைஞர்களை உயிரோடு கொளுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை தர வேண்டும் ?
|
Comments
சட்டத்திற்கு புறம்பாக சுட்டுக்கொல்லப் பட்டதை பற்றி கேள்வி எழுப்பும் சவுக்கையும் மற்ற மனித உரிமை ஆர்வலர்களையும் இங்கு கேள்வி கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒன்றை நினைத்து பாருங்கள், அங்கு சட்டத்திற்கு புறம்பாக, எந்த விசாரணையும் இன்றி, இருட்டில், முகம் கூட தெரியாமல், கண்மூடி தனமாக கொல்லப்பட்ட ஐந்த மனிதர்களும் வேறு யாரோ என்பதால் நமெக்கெல்லாம் இது ஒரு செய்தி மட்டுமே, எந்த வலியும் இன்றி கருத்தை அள்ளி வீசுகிறோம், இதுவே இப்படி அநியாயமாக கொல்லப்பட்டது நாமாகவோ, அல்லது நமக்கு வேண்டியவர்களாகவ ோ இருந்தால் ....? நினைத்துப்பாருங ்கள் !!!? யாரோ ஐந்து பேர்கள் மீது சுட்ட துப்பாக்கி, நாமும் எத்தனயோ ஊர்களில் வேலை பார்க்கிறோம், வீடு வாடகைக்கு எடுத்து நம் நண்பர்களும், சொந்தங்களும் தங்கி உள்ளார்கள், அங்கேயும் வங்கி கொள்ளை ஒரு நாள் நடக்கலாம், அந்த நகரிலும் ஒரு திரிபாதி கொலைகாரன் இருப்பான் , அவன் கேள்வியில்லாமல் சுடுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா ? சிந்தித்துப்பார ுங்கள் !!, இந்த கொலைகள் ஒரு கொள்ளையை முறையாக விசாரிக்க துப்பில்லாத, ஒரு கயலாகத காவல் துறையின், விசாரிக்கும் வரை பொறுமை இல்லாத, அல்லது தனது ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க முயலும், ஒரு கையால் ஆகாத அரசாங்கத்தின் குற்றங்கள் என்பதை நாம் மறக்க கூடாது. அடுத்தவன் செத்தால் அது உனக்கு ஒரு நியூஸ், நீ செத்தால் மட்டுமே அது உனக்கு துக்கம், மறந்துவிடாதே!! , ஆகவே அடுத்தவன் அநியாயமாக கொல்லப்பட்டதை என்றும் நியாப்படுத்ததே !! ஏனெனில் நீயும் ஒருநாள் பாதிக்கப்படலாம் அதே காரணத்திற்காக !!!!
மத தீவிரவாதிகளுக்க ு ஜெயிலில் பிரியாணி
கவனிப்பு எப்பொழுதும் உண்டு.
போலீஸ் சொல்வதைவைத்து எல்லோரும் ஆதரிக்கிறார்கள் .
நம்ம தமிழ்நாட்டு கஞ்சா போலிசைப்பற்றி நன்கு தெரிந்தும் அவர்கள் சொல்வதை நம்பும் அப்பாவிகள் இன்னும் இருக்கின்றார்கள ே!
குற்றவாளிகளிடமி ருந்து தங்களை காத்துக்கொள்ளத் தான் என்கவுன்ட்டர். ஆனால் தங்கள் பதவி நாற்காலிகளை பாதுகாக்க இங்கு என்கவுன்ட்டர் நடக்கிறது. உலகிற்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஒருவரைக் கூட விடாது கொண்டிருக்கிறார ்கள்.
என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஐந்து பேர் மட்டுமல்ல ஆறாவதாக சட்டமும் நீதிமன்றமும் சேர்த்துத்தான்.
செத்தவன் எவனும் இனி சாட்சி சொல்ல வரமாட்டான்.தமிழக காவல்துறையின் கையாலாகாத தனம் தான் இந்த திட்டமிட்ட படுகொலை. வெறும் முப்பது நாற்பது லட்சத்துக்காக ஐந்து பேர் படுகொலை மன்னிக்க முடியாதது. தவறு செய்யாத மனிதன் யாரிங்கே....தவறின் அளவு வேண்டுமாயின் வேறுபடும்.
ஒரு நொடியில் உடலை விட்டு பிரிக்கும் உயிரை கோடி முறை அழுது வேண்டினாலும் திரும்ப கொண்டு வந்து சேர்க்க முடியுமா?
தண்டனைகள் எதுவாயினும் மனிதனை வேரோடு திருத்துவதாய் இருக்கவேண்டுமே தவிர அவனை வேரோடு அழிப்பதாய் இருக்க கூடாது.அதிலும் இந்த திருட்டுல வெறும் ஐந்து பேர் தான் கூட்டு என்பது இவங்களுக்கு எப்படி தெரியும்?
எல்லா உயிரும் விலைமதிப்பில்லா தது என்பது மிக மிக முக்கியம்.அது அரசியல்வாதியானா லும் சரி இல்லை அயோக்கியனாலும் சரி என்பதை நீதிமன்றம் உறுதிசெய்யவென்ட ும்
Do u support this 5 guys .If you angry with politicians & police don't play in this case b'coz if our state police not like to do north indians will come to all town then Tamilnadu become Bihar .Human rights have to keep quit in this case .
இங்கேயாவது கொள்ளை அடித்தவனை கொன்றார்கள்.. ஆனால் செப்டெம்பர் 11ல்
ஆறு பேரக் காரணமே இல்லாம சுட்டுக் கொன்னாங்களே அப்பா நீங்க எல்லாம்
எங்க இருந்தீங்கனு தெரிஞ்சுக்கலாமா .... வந்துட்டனுக... நியாயம் அநியாயம்...னு
தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்
Will you accept this encounter if the
victims belong to tamilnadu?
Do you think encounter is the only way
to stop bank robbery?
Do we have a sepaerate law for a
common man for the same crime?
இது தான் நம் தவறு, தமிழர்கள் மற்றவரை முன்னுக்குத் தள்ளி, பின்னிருந்து வேலைகாரர்களாகவே இருப்பது இதனால் தான்.
எதனால்?
இந்த இரக்க குணத்தால் தான். இரக்கம் இருக்கத்தான் வேண்டும், ஆனால் இடம் அறிந்து இருக்கவேண்டும்.
'கொள்ளை அடிக்கறவன நிக்க வெச்சு சுடனும்' என்று இதே வாய் தானே பேசுகிறது?
ஒரு விடயம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான், இதுவே இந்த ஐந்து பேர் தவிர்த்து, இதே கொள்ளையை ஒரு நடிகரோ, ஒரு அரசியல்வாதியோ செய்திருந்தால், இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்காது! !!
ஒன்று புரிகிறது, ஏதோ எதிர்பார்த்தது ஜெ-ஆட்சியில் கிடைக்கவில்லை என்ற வெறுப்பு தெரிகிறது.
ஆட்சி ஆரம்பித்ததிலிரு ந்தே ஜெ வின் புகழை குலைக்கும் விதத்திலேயே சவுக்கின் நடுநிலை மாறுவது வெளிப்படையாக தெரிகிறது!!!
சவுக்கின் நடுநிலையை எதிர்பார்க்கும் , சவுக்கு வாசகன்!
போலீஸ் சுடாமலே பிடித்து இருக்கலாமே. நெட் வொர்க்கையும் கண்டு பிடித்து இருக்கலாமே. இந்த என்கவுண்டர் யாரை திருப்தி படுத்த.
ஆந்த தவரின் வீரியம் மீஹா அதிகம் ஆதநால் மரண தண்டனை சரி என்று படுகின்றது
ஆனால் இந்த வங்கி கொள்ளை சம்பவத்திற்கு - மரண தண்டனை மிக மிக மிக
ஆதிகம் அவர்கள் நாக்ஸால் நடவடிக்கைக்கு பணம் திரட்டுவது என்றாலும்
மரண தண்டனை - ஆதுவும் காவல் துறையால் நடத்த படும் போலி மோதல்
கொடிது - சட்டத்தின் முன் நிறுத்தி - தண்டனை வாங்கி தந்து இருக்கவேண்டும்,
இந்த நடவடிக்கை பார்த்தால் நமது காவல் துறையை மதிக்க தோன்ற வில்லை.
பதிலுக்கு வெறுப்பும் ஒரு வித தவறான பயமும் தான் தோன்றுகிறது.
- திருவாசகம்!!!!! !!!!!!
TOlerence is the first sense of civilization any society would have incubated before evolving as human. This is a stone age cannibalism.
WHile we are pleading for 3 tamil lives to be freed from the hands of capital punishment on the road to peace we have comfortably stepped on the corpses of paramakudi and now velachery.
Life is not so cheap and people would realise that only when they are put in such situation.
Article was good.
இந்த விஷயத்துல நிறைய சொல்ல வேண்டியது இருக்கு. அவங்கள வெறும் சந்தேகத்தின் பெயரில் தான் கைது செய்ய போனார்கள். அவர்கள் தான் குற்றவாளிகள் என்று உறுதியாக யாரும் சொல்லவில்லை. அப்படியே இருந்தாலும் வெறும் திருட்டு செஞ்சவங்களுக்கு இந்த தண்டனை ரொம்ப ...ஜாஸ்தி. வீடு புகுந்து ஆளை கொன்று விட்டு கொள்ளை அடிச்சிட்டு போறவங்க எல்லாம் வெளியதான் சுத்திட்டு இருக்காங்க. இதுல ஏதோ பெரிய சதி இருக்கு. அதுவும் சங்கரன் கோயில் எலெக்ஷன் வர நேரத்துல நடந்திருக்கு. பொதுவா கலைஞர் ஆட்சியில ரவுடியிசம் அதிகமா இருக்கும் ஆனா அம்மா ஆட்சியில போலீஸ் காரங்களே அந்த வேலைய செய்ய ஆரமிச்சுடுவாங்க . ஒரு அஞ்சு பசங்க இருக்க இடத்தை சுத்தி ரவுண்டு அப் பண்ணியாச்சு. அவங்களால கண்டிப்பா தப்பிச்சு போக முடியாது. இவங்க அதுல ஒரு ரெண்டு பேரை சுட்டு கொன்று இருந்தாலும், மத்தவங்க கண்டிப்பா வந்து சர்ரண்டர் ஆகி இருப்பாங்க. அஞ்சு பேரையும் சுட்டு கொன்றது நம்பும் படியா இல்லை. அதிலும் இந்த திருட்டுல வெறும் ஐந்து பேர் தான் கூட்டு என்பது இவங்களுக்கு எப்படி தெரியும்? நல்லா சம்பாரிச்சிட்டு இருக்க ஒரு இஞினியரிங் படிச்ச மாணவன் பேங்க் கொள்ளை அடிச்சான் என்பது நம்பும் படியா இல்லை. அதே அவன் நூதனமா ஏதாச்சும் ஃப்ரௌட் வேலை பண்ணான்னு சொன்னா நம்பலாம்.
வங்கில இவங்க அடிச்சது மக்கள் பணமாக இருந்தாலும் அதுக்கு பொறுப்பு வங்கியும் அரசும் தான். அரசியல் வாதீங்க கோடி கோடியா அடிக்கிறாங்க ஆனா இவங்க அடிச்ச இருபது லட்ச ரூபாய்க்கு மரண தண்டனையா? அதுவும் அவங்க தான் அடிச்சாங்கன்னு உறுதியா தெரியாது. செத்து... போனவங்களுக்கு நம்ம ஊரு சட்டத்தை பற்றி தெரியாதா? அத்தனை கொலை பண்ண கசாப் இன்னும் பிரியாணி சாப்பிட்டுகிட்ட ு சந்தோஷமா இருக்கான். நம்ம ஊருல பல பேர் போலீஸ் உதவியோட சீட்டு கம்பெனி நடத்தி கொள்ளை அடிக்கறாங்களே? அவங்க யாருக்கும் இந்த மாதிரி என்கவுண்டர் நடக்கவே நடக்காது.
இந்த என்கவுண்டருக்கு சப்போர்ட் பண்ணுற இதே மக்கள் தான் கோடி கணக்குல ஊழல் பண்ணுற அரசியல் கட்சிகளுக்கு மாத்தி மாத்தி ஓட்டு போடுறாங்க. ஈஈட் முடிச்சிட்டு அரசியலுக்கு வர முயற்சி பண்ணுற ஒரு சில மாணவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்க மாட்டேங்குது
I completely agree with you. Justice should not be given on emotions. OK
but WHAT ARE ALL THIS
Kill Kasab,
Kill Assamese Indian Army
Kill impotent Indian navy, Who failed to protect tamil fisherman.
Kill ALL corrupt politicians.
IS this out emotions or what?
வேதனை... முறையற்ற செயல்...
@சுன்டநிப்ரொ: அவங்க பாவிங்கன்னு இன்னும் நிரூபிக்கப்படவி ல்லை. அவன் அப்பாவியா இருக்க கூட வாய்ப்பு இருக்கு.
@கொவை முருகன்: அவுங்க எங்க வீட்டுல புகுந்து கொள்ளை அடிச்சிருந்தாலு ம், அவங்க சாகனும்னு நினைக்க மாட்டேன். பணம் திரும்ப கிடைக்கணும், அப்படியே கிடைக்கலைன்னாலு ம் நம்ம கிட்ட இருந்து திருடுன பணம் அவங்களுக்கு உபயோகமா இருக்க கூடாதுன்னு தான் நினைப்பேன். சரி, நான் திரும்ப கேட்கிறேன், அந்த ஐந்து பேரில் உங்க தம்பியோ அண்ணனோ இருந்த இந்த மாதிரி தான் பேசுவீங்களா? என் தம்பி கண்டிப்பா தப்பு செஞ்சிருக்க மாட்டான். இதுல ஏதோ தப்பு நடந்திருக்கு. தீர விசாரிச்சா உண்மை தெரியும்னு சொல்லுவீங்க இல்ல? இவங்களுக்கு அதுக்கு கூட வழி இல்லாம பண்ணிட்டாங்களே?
ஒரு நொடியில் உடலை விட்டு பிரிக்கும் உயிரை கோடி முறை அழுது வேண்டினாலும் திரும்ப கொண்டு வந்து சேர்க்க முடியுமா?
தண்டனைகள் எதுவாயினும் மனிதனை வேரோடு திருத்துவதாய் இருக்கவேண்டுமே தவிர அவனை வேரோடு அழிப்பதாய் இருக்க கூடாது.
அய்யா ஒரு வேளை உங்க தம்பி டீ கொடுக்கறதுக்காக அந்த அறைக்குள்ள அப்போது போயிருந்தாலும் சுட்டுருப்பாய்ங ்களேயா! அப்போ அவருக்கு அங்க என்ன புடுங்கற வேலைன்னா கேப்பீங்க! அப்பறம் நம்ம தமிழ் நாட்டுக்காரர் கேரளத்துல ஒரு பெண்ணை ரயில்ல கற்பழிச்சதுக்கா க, தூக்கு தண்டணை கொடுத்தாங்கலே அப்போ அதுவும் நியாயம் தானா? அப்பவும் மலையாலி என்கவுன்டர் பன்னலையேய்யா! சரிய்யா அவங்க கொள்ளையடிச்ச 30 லட்சத்த நான் கொடுக்கற்ன்யா, நீங்க அந்த பயலுகல திருப்பி கொடுக்க முடியுமா? சரிய்யா அம்மா மேல பெங்களூர் கோர்ட்ல நடக்கற கேஸ்ல அம்மா பணம் கொள்ளையடிச்சுறு க்காங்கன்னு தீர்ப்பு வந்துச்சுன்னா இதே தண்டனைய அவங்களுக்கும் வாங்கி தருவீங்களா? ஏம்ப்பா அப்படின்னா செல்வாக்கு, புகழ் இருக்கறவனுக்கு ஒரு நியாயம்,இல்லாதவ னுக்கு ஒரு நியாயமா, சொல்லுங்க? இதுல கொடுமை என்னன்னா , இப்போ நீங்க இதை ஆதறிச்சீங்கன்னா , நாளைக்கு நீங்களும் விக்டிம் மா மாறுவதுக்கு வாய்ப்பு இருக்கு!!!! தம்பி கேஸ் நடக்கும் போதெ இப்படி! தீர்ப்பு சரியா வந்தா, தர்மபுரி சம்பவம் மறந்துருக்க மாட்டீங்க!!!!
போலீஸ் சொல்வதைவைத்து எல்லோரும் ஆதரிக்கிறார்கள் .
நம்ம தமிழ்நாட்டு கஞ்சா போலிசைப்பற்றி நன்கு தெரிந்தும் அவர்கள் சொல்வதை நம்பும் அப்பாவிகள் இன்னும் இருக்கின்றார்கள ே!
குற்றவாளிகளிடமி ருந்து தங்களை காத்துக்கொள்ளத் தான் என்கவுன்ட்டர். ஆனால் தங்கள் பதவி நாற்காலிகளை பாதுகாக்க இங்கு என்கவுன்ட்டர் நடக்கிறது. உலகிற்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஒருவரைக் கூட விடாது கொண்டிருக்கிறார ்கள்.
என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஐந்து பேர் மட்டுமல்ல ஆறாவதாக சட்டமும் நீதிமன்றமும் சேர்த்துத்தான்.
செத்தவன் எவனும் இனி சாட்சி சொல்ல வரமாட்டான்.
இதுவரை இந்தியாவில் நடந்த போலீஸ் என்கவுன்டர்களில ்
கொல்லப்பட்டவர்க ள் அதிகமானோர் நிரபராதிகளே!
சவுக்கு கொள்ளையர்களை ஆதரிக்கவில்லை.ஆனால் நடந்த சம்பவத்தில் உள்ள முரண்பாடுகளை சொல்கிறது.
இந்தியன் பாங்குகளை கொள்ளை அடிப்பவர்களுக்க ு போலி(ஸ்)
என்கவுன்ட்டர். ஆனால் இந்தியாவையே கொள்ளை அடிக்கும் மந்திரிகளுக்கு போலீஸ் சல்யூட். வெல்டன் சவுக்கு.
..
#2. Government should control pricing & living expenses.
#3. If killing is the solution.,
Kill Kasab,
Kill Assamese Indian Army
Kill impotent Indian navy, Who failed to protect tamil fisherman.
Kill ALL corrupt politicians.
Justice should NOT given with emotion!
கொள்ளைக்காரர்கள ் என்கௌண்டர் செய்யப்படவேண்டி யவர்களாக இருந்தால் நாட்டில் ஒரு மந்திரிமாரும் நடமாடமுடியாது. வடமானிலத்தவர்கள ் என்றால் சுட்டுக்கொல்லலா ம் என்ற மனநிலையிருந்தால ் அப்புறம் ஒருமைப்பாட்டுக் கும் தேசியத்திற்கும் என்ன வேலையிருக்கிறது .
இதே வைராக்கியத்தை வீரத்தை பலகோடி ஊழல் கொள்ளையடித்தவர் களை ஏன் இந்தபொலிஸ் ஒன்றும் செய்ய முடியவில்லை
அரச இயந்திரம் சர்வாதிகாரத்தை நோக்கி சரிவதன் அடையாளம்தான் இப்படியான தொலைநோக்கற்ற தாந்தோன்றித்தனம ான (என்குண்டர்)படு கொலைகள். உணர்வு மயமாக பார்க்கும்போது சரிபோல தென்படலாம். ஆனால் இது மிக மிக தவறான உதாரணமாகும்.
இருகோணங்களில் பார்க்கலாம். பீகார் மாநிலம் வறுமை நிறைந்த ஹிந்தி இறுதயப்பகுதி, இந்தியா முழுவதுக்கும் சொந்தமான 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கொள்ளையடித்து தமிழ்நாட்டில் பதுக்கிவைத்து? இருப்பதால் பீகார் இளைஞர்கள் இங்கே கொள்ளையடிக்க வந்தார்களோ என்னமோ?.
அடுத்து, மிக நன்றாக திட்டமிட்டு இயங்கும் "மாவோயிஸ்டுகள்". எது எப்படியிருந்தால ும் இந்த இளைஞர்கள் அம்புகளாகவே தென்படுகிறது- எய்தவர்கள் பதுங்கிவிட்டார் கள், அல்லது மிகப்பெரிய வலையமைப்பிற்கான "துப்பை" தமிழக காவல்துறையினர் வேண்டுமென்றே கோட்டை விட்டுள்ளனர்.
அதாவது, ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக "சென்னை பாதாள உலகம்" மாறி வருகிறது?. கமிஷ்னர் திரிபாதியும் ஒரிசாவை பூர்விகமாக கொண்டவர்தான் - ஆந்திரா, ஒரிசா, சட்டிஷ்கர் கமிஷ்னர்களைப்போ ல், மாவோயிஸ்டுகளிடம ் கமிஷன் வாங்குகிறாரா?
Shootout in Chennai is relief for Jaya government- G Pramod Kumar Feb 23, 2012.
Anti-Bihari sentiment? - http://en.wikipedia.org/wiki/Anti-Bihari_sentiment
எங்கே செல்கிறது இந்திய ஜன நாயகம்?
RSS feed for comments to this post