|
சென்னையில் அடுத்தடுத்து நடந்த இரண்டு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் ஐந்து நபர்களை சென்னை மாநகரக் காவல்துறையினர், சென்னை வேளச்சேரியில் எஸ்.என்.முதலித் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கொலை செய்தனர். இந்த என்கவுண்டர் சம்பவத்தை விவரிக்கும் காவல்துறையினர், ஐந்து நபர்களை விசாரிப்பதற்காக சென்ற காவல்துறையினரை நோக்கி அந்த ஐந்து நபர்களும் சராமாரியாகச் சுட்டதால், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்கள் அனைவரும் இறந்து போனார்கள் என்ற தகவலை வெளியிட்டது.

மேலும், தொலைக்காட்சியிலும், மற்ற ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபருடைய புகைப்படத்தைப் பார்த்து, வேளச்சேரிப் பகுதியில் குடியிருக்கும் ஒருவர் ரகசியமாக கொடுத்த தகவல்களை வைத்து, காவல்துறையினர் அந்த இடத்தை சோதனையிட்டதாக தகவல்கள் காவல்துறையால் தெரிவிக்கப் பட்டது.
தற்போது, சவுக்குக்கு வந்துள்ள தகவலின் படி, காவல்துறையினர், இந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 5 நபர்களை வேளச்சேரியிலேயே பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்டவர்களை விசாரிக்கையில், அவர்களோடு தங்கியிருந்தவர்களை காட்டுமாறு போலீசார் கூறியதையடுத்து, மற்ற ஐந்து நபர்கள் தங்கியிருந்த 335, எஸ்.என்.முதலி தெரு வீட்டை பிடிபட்ட நபர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர். காவல்துறையினர் அந்த வீட்டுக்குள் நுழைந்ததும், வீட்டினுள் இருந்த அனைவருமே சரண்டர் ஆகியிருக்கின்றனர். சரணடைந்தவர்களை, அருகே இருந்த துணியை எடுத்து, கைகளை பின்புறம் கட்டி, போலீஸ் வேனில் ஏற்றியுள்ளனர்.
அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி, கொண்டு செல்லுகையில், ஒரு 100 மீட்டர் தூரத்தை கடந்த பிறகு, பிடிபட்டவர்களை என்கவுண்டரில் கொல்லுமாறு உத்தரவு வருகிறது. இந்த உத்தரவை வழங்கியது திரிபாதிதான் என்றும் கிடைத்த தகவல் கூறுகிறது. வேன் மீண்டும் எஸ்.என்.முதலி தெருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 5 பேரை வேனிலேயே வைத்து விட்டு, 5 பேரை அந்த அறைக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொன்று விட்டதாகத் தெரிகிறது.
சவுக்குக்கு தகவல் சொன்ன நபர், மீதம் உள்ள அந்த 5 நபர்களின் உயிரையாவது காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இந்தத் தகவல், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப் பட்டுள்ளது. 5 பேரை கொலை செய்து தங்கள் கரங்களில் ரத்தத்தோடு இருக்கும் சென்னை மாநகர காவல்துறையினர், மீதம் உள்ள 5 நபர்களையாவது கொலை செய்யாமல் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்பதே, நியாயமானவர்கள் விடும் கோரிக்கை.
|
Comments
எல்லாம் சரிதான். அந்த அவர்கள் யாரு? அந்த அவர்களை போட்டு தள்ளினால் சரிதான். இவர்களும் அவர்களும் ஒன்னு தானா? வீரமணியை போட்டு தள்ளும்போது யாரும் சப்போர்ட் பண்ணலியே. அது வேறு. இது வேறு.
செத்தவங்க தான் திருடுனாங்களா?
[/ஃஉஒடெ]
அய்யோடா எப்படிபட்ட கருத்து... செத்தவங்க என்ன அவங்க அப்பா அம்மா கிட்டயா திருடுனாங்க...
மே 2009 க்குப் பிறகு பெரும் வேலைவாய்ப்பை வழங்கிய இலங்கை இராணுவத்திற்கு வேலையில்லை. தமிழர் எதிர்ப்பு வேலைவாய்ப்பு இல்லையென்றால் இராணுவம் மகிந்த குடும்பத்திற்கு எதிராக திரும்பும்.
இலங்கை சிறையில் உள்ள முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர்களுக் கும் இதே நிலைதான். இதற்காக இலங்கைத் தமிழர் மிக அதிகமாக வசிக்கும் "கனடாவிலா" சண்டையிட முடியும். கிடைத்தது தமிழகம்- டாலர்களை ரூபாயாக தூக்கிப் போட்டால் தற்கொலைப்படைக்க ு "பீகாரிகள்". ஏற்கனவே உல்ஃபா மற்றும் மாவோயிஸ்டுகளை "உறிஞ்சும்" இலங்கையை மையமாக கொண்ட "சீன" அமைப்புகள்.
மாவோயிஸ்டுகளின் தலைவர்கள் பலர்(ஆந்திராவை சேர்ந்த) பலர் சென்னையிலும்,ஹை த்ராபாத்திலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,கன டாவிலும்,இலங்கை த்தமிழருடன் கூட்டாக ரெஸ்டாரண்டுகளும ், தொழில்களும் நடத்துகின்றனர்.
இதற்கு இலங்கை அரசாங்கம் தன்னுடைய கோணத்திலிருந்து ஆதரவு தருகிறது !.
இறந்த இந்த 5 நபர்கள் யார்?
என்னதான் நடக்கிறது இந்த ஜனநாயக நாட்டில்?
கொலை நடந்த அறையில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் காவல்துறையின் கைவேலைக்கு சாட்சி சொல்கின்றன.
ஐந்து பேர்களையும் அறையில் அமரவைத்து நெஞ்சில் சுட்டுள்ளர்கள். ஆகவேதான் இரத்தம் ஒரே இடத்தில் குளமாக தேங்கிக்கிடக்கி றது.
என்கவுண்டரில் போலீஸ் சுட்டிருந்தால்,
குண்டடி பட்டவர்களின் இரத்த சிதறல்கள் சுவர்களில் பட்டு
தெரித்திருக்கும ். ஆனால் சுவர் சுத்தமாக உளளது.
என்கவுண்டரில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் பரவலாக சீறிப் பாய்ந்து சுவர்களில் பட்டு அதன் தழும்புகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இங்கு குறி பார்த்து குருவியை சுடுவதுபோல்
சிக்கனமாக சுட்டுள்ளனர்.
எது எப்படியோ,ஒன்று நன்றாகத் தெரிகிறது அம்பாளின் அனுக்கிரகம் வேண்டியே வேட்டையாடியுள்ள ார்கள்
திருபாதிக்கு இரண்டு கிரவுண்டு அரசு நிலமும் ஐந்து லட்ச்சமும்.
அம்மாவின் ஆசியுடன் கிடைக்கலாம்.
நம்மைப்பொருத்தவ ரை, திருபாதியால் கொல்லப்பட்ட ஐவருக்கும் இறுதியில் கிடைத்த ஆறடி நிலம் தான்.கொன்றவருக்கும் நிரந்தரம்.
பாவம் அந்த அப்பாவிகள்.
ஜெ.க்கு கோர்ட்டில் இன்னொரு ஆப்பு உறுதி.
மனிதர்கள் ஒவ்வொரு விதத்திலும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தவறு செய்வது இயல்பு. அம்மா என்றழைக்க வேண்டுமென நினைப்பவர் இப்படி கருணையே இல்லாமல் இருப்பது நியாயமில்லை.
எல்லா உயிகளும் இந்த பூமியில் கடவுளுக்கே சொந்தம். நம் இந்திய அரசியல் சட்டத்திலேயே இருக்கிறது... தன் உயிரை தானே கூட மாய்த்துக் கொள்ளக்கூடாது என. தற்கொலையே குற்றமெனும் போது இது எப்பேற்பட்ட குற்றம்?
பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் ஒருவர் இது போல தவறுகளில் ஈடுபடுவது சரியல்ல. குற்ற செயல்களை தடுக்க இதுபோன்ற முடிவுகளும் சரியல்ல.
போலி என்கவுன்டரில் நரேந்திர மோடி பதவி எந்த அளவுக்கு ஆட்டம் கண்டது என்பது த.நா. முதல்வருக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம். இவருடைய பிரதமர் பதவி கனவில் இந்த செயல் எந்த அளவுக்கு பாதிப்பை ஏறபடுத்துமென்பத ை யாரவது எடுத்து சொல்லுங்கள். இவரை மத்தியில் போட்டியாக நினைப்பவர்கள் என்ன என்ன வேலைகள் இனி செய்வார்கள் என்பது போக போக தெரியும். தில்லி தமிழ்நாடு பவன் எதிரில் கூடிய விரைவில் இந்த போலி படுகொலைக்கு எதிராக போராட்டம் நடக்குமென்று நம்புகிறேன்.
பைத்தியக்காரத் தனமான ஒரு முடிவை த.நா. முதல்வர் எடுத்துவிட்டார் என்பதை அவர் நம்பும் அந்த கடவுளே விரைவில் உணர்த்துவார்.
காவல்துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள், நடந்த உண்மையான சம்பவத்தை வெளி உலக்குக்கு கொண்டுவர உதவி செய்யவேண்டும். இதன் மூலம் அந்த உயிர்கள் காப்பாற்ற படுவதோடு, இனிமேலும் இப்படியான அராஜகங்கள் நடப்பதை தடுக்க முடியும்.
நீதியுண்டு, ஆனால் அது எங்களுக்கில்லை!
கேள்வியுண்டு, ஆனால் எவரும் கேட்கக்கூடாது!
நாங்கள் எத்தனை கோடியும் கொள்ளையடிக்கலாம ், வேறு எவரும் கொள்ளையடிக்கக்க ூடாது!
நாங்கள் கொள்லையடிச்சா எங்களுக்கு உதவ மத்திய அரசுண்டு. மற்றவன் பிற்பொக்கற் அடித்தால் என்கௌண்டர் உண்டு!
நாங்க கோர்ட்டுக்கு போகாட்டி கிடைக்கும் வாய்தா. நீ புடிபட்டா கிடைக்கும் தோட்டா!
இந்த படுகொலையின் மூலம் அனைவர் மனதிலும் ஒரு பயத்தை உன்டு பன்னிவிட்டார்கள ்...
இவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்வார்கள்...
யாராலும் எந்த கேள்வியும் கேட்க முடியாது.
போலீஸ் அல்ல... அரசாங்க கூலிப்படையினர்..
RSS feed for comments to this post