முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
உயிர்களுக்கு விலைமதிப்பில்லை… …. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 23
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 26 பிப்ரவரி 2012 14:20

ஐந்து மனித உயிர்களின் விலை, 14 லட்சம் ரூபாய் தானா ? என்ற தலைப்பில் இன்றைய தினமலரில் கட்டுரை ஒன்றை “குயிக் கன் முருகன்”  எழுதியுள்ளார். குயிக் கன் முருகன் “நமது சிறப்பு நிருபர்“ என்ற பெயரில் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.     

DSC_5118

இனி தினமலர் கட்டுரையும், சவுக்கின் பதிலும்.

ஐந்து மனித உயிர்களின் விலை, 14 லட்சம் ரூபாய் தானா? எல்லாருக்கும் இந்தக் கேள்வி தான். "அதற்காக கொன்றுவிடுவதா? இவர்கள் தான் கொள்ளைகாரர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படியானால் சட்டம் எதற்கு?' என, துணைக் கேள்விகள் வேறு.

மனித உரிமைச் சங்கங்கள் அமைத்து, நேற்று வரை, முனைந்து செயல்பட வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, வாழைப் பழத்தைக்கொடுத்து, அதை உரித்தும் கொடுத்தது மாதிரி ஆகிவிட்டது வேளச்சேரி, "என்கவுன்டர்' சம்பவம். "என்கவுன்டர்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, "எதிர்பாரா முறையில் பகைமையோடு எதிர்த்து நிற்றல்' என அர்த்தம் சொல்கிறது அகராதி. ஆனால், 10 ஆண்டுகளாக, "என்கவுன்டர்' என்ற சொல்லே போய், "போலி என்கவுன்டர்' என்பது தான் பிரபலமாகிவிட்டது.

26_02_2012_003_002

மனித உரிமைக் சங்கங்கள் அமைத்து செயல்பட வழியில்லாமல் இருப்பவர்கள் என்கவுன்டர்களைப் பற்றி பேசுவதில்லை.  தொடர்ச்சியாக எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ, அதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர்களே இந்த என்கவுன்டர்களுக்கு எதிராக பேசுகிறார்கள்.   கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சிக்கி, நீதிபதியோடு பேரம் பேசிய “திருட்டுச் சாமியார்” ஜெயேந்திரரின் மனித உரிமைகள் மீறப்பட்டால் அவருக்காகவும் இந்த மனித உரிமைச் சங்கங்கள் அமைத்துச் செயல்படுபவர்கள் குரல் கொடுப்பார்கள். நடிகைகள் அத்தனைபேரும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டு விட்டு, திரைத்துறையினர் வெகுண்டெழுந்து குரல் கொடுத்ததும், அது தொடர்பாக தாக்கல் செய்த வழக்கை நேரடியாக சந்திக்க துணிச்சல் இல்லாமல் ஓடி ஒளிந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் லட்சுமிபதி கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களின் கைது சட்டபூர்வமாக செய்யப்பட வேண்டும் என்றும் இந்த மனித உரிமைச் சங்கங்கள் குரல் கொடுத்திருக்கும். 

Dina_Malar_8

Tamil-Daily-News-Paper_30359613896

397897_311662045552899_100001273177250_968865_1103401357_n1

விகடன் அலுவலகத்தை அடித்து நொறுக்குவோம் என்ற அவதூறான விளம்பரத்தை பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிட்ட  கிருஷ்ணமூர்த்தி மற்றும் லட்சுமிபதியின் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் இந்த மனித உரிமைச் சங்கங்கள் குரல் கொடுத்திருக்கும்.   மனித உரிமைகள் என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொது, அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றே இந்த மனித உரிமைச் சங்கங்கள் போராடுகின்றன.   மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் என்று கருதும் தினமலர் நிர்வாகம் போல இந்த மனித உரிமைச் சங்கங்கள் செயல்படுவதில்லை.

என்கவுன்டர் என்ற சொல்லே போலி என்கவுன்டர் என்று மாறிப்போனதற்கு காவல்துறையினரே காரணம்.   1998 முதல் 2012 வரை காவல்துறை நடத்திய என்கவுன்டர்களில் 118 பேர் இறந்துள்ளனர்.  இந்த அத்தனை என்கவுன்டர்களும் போலி என்கவுன்டர்களாக இருக்கும் போது,  என்கவுன்டர் என்பது போலி என்கவுன்டராகத்தானே இருக்க முடியும் ?

இந்த, "போலி என்கவுன்டரில்' இரண்டு வகை உண்டு. ஒன்று, எந்தத் தப்பும் செய்யாத அப்பாவிகளை சுட்டுக் கொல்வது; இரண்டாவது, உண்மையான குற்றவாளிகளைக் கொன்றுவிட்டு, தற்காப்புக்காக சுட்டோம் எனக் கூறுவது. வேளச்சேரி என்கவுன்டரைப் பொறுத்தவரை, முதல் குற்றச்சாட்டுக்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், கொல்லப்பட்ட ஐந்து பேரும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. நேரடி சாட்சிகள் இருக்கின்றன. பணத்தை இழந்த வங்கி மேலாளர்கள் மற்றும் வீடியோ வழங்கிய மேலாளர்களின் வாக்குமூலங்கள் இருக்கின்றன.

வழக்கமாகவே தினமலர் பொய்யையும் புரட்டையும், இஷ்டத்துக்கு அள்ளி விடும் என்றாலும், இந்தக் கட்டுரையில் உள்ளது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும். “ஏனெனில், கொல்லப்பட்ட ஐந்து பேரும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன.” கொல்லப்பட்ட ஐந்து பேரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதற்காக வீடியோ ஆதாரங்கள் இருந்தால், அதை குயிக் கன் முருகனிடம் கொடுத்திருக்கலாமே… எதற்காக இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று மழுப்புகிறார் ? நாளை ஒரு வேளை சிபிஐ விசாரணைக்கு உத்தவிடப்பட்டால், இந்தக் கட்டுரையின் நகலை இணைத்து, அந்த “நமது சிறப்பு நிருபரை” “சிறப்பாக” விசாரிக்கச் சொல்லி சவுக்கு மனு கொடுக்கும்.

இவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்பதற்கு நேரடி சாட்சிகளான வங்கி ஊழியர்களை யாருடனும் பேசக்கூடாது என்று காவல்துறையினர் தடை போடுவது ஏன் ?  காவல்துறையினர் வழங்கும் வாக்குமூலங்களைப் பற்றி நமக்குத் தெரியாதா ? நாளை ஜெயலலிதா உத்தரவிட்டால், தினமலர் உரிமையாளர் லட்சுமிபதி 50 கோடி ரூபாய் நிலமோசடியில் ஈடுபட்டார் என்று நூறு வாக்குமூலங்களை காவல்துறையினர் தயார் செய்வார்கள்.

இந்தப் பிரச்னையில், இரண்டாவது வகையான குற்றச்சாட்டுக்குத் தான் வாய்ப்பிருக்கிறது. குற்றவாளி என நன்றாகத் தெரிந்த பின், அவர்களை என்கவுன்டர் செய்து விடுவது, உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ள முறை தான். இதற்கு காரணம், கொலை வெறி இல்லை. மாறாக, பழைய குற்றவாளிகளுக்கு மட்டுமின்றி, அடுத்து குற்றம் செய்யப்போகிறவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.

உலகம் முழுவதும் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது வழக்கத்தில் இருக்கிறதா ?  அப்படியே இருப்பதாக வைத்துக் கொள்ளலாம்.   இனி குற்றம் செய்யப் போகிறவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக சுட்டுக் கொன்றோம் என்று குயிக் கன் முருகன் சொல்லட்டுமே… எதற்காக தற்காப்பு தங்கக் காப்பு என்று புளுகிக் கொண்டு இருக்கிறார்.  கடந்த பத்தாண்டுகளில் நடந்த நூற்றுக்கும் மேலான என்கவுன்டர்கள் குற்றவாளிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்றால், தமிழகத்தில் குற்றங்களே நடக்கக் கூடாதே… ஏன் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன ?

மேலும், முன்பெல்லாம் என்கவுன்டர் என்பது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் வீரதீர பிரதாபப் பட்டியலில் சேர்ந்து வந்தது. பதவி உயர்வும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இப்போது, அதெல்லாம் இல்லை. வழக்கும், விசாரணையும் தான் போலீஸ் அதிகாரிகளுக்குப் பரிசாகக் கிடைக்கின்றன. இது நன்கு தெரிந்தும், ஒரு என்கவுன்டருக்கு போலீசார் துணிவரா என்பது தான் அடிப்படைக் கேள்வி.

துணிவார்கள் என்பதே இதற்கு பதில்.   கடந்த பத்தாண்டுகளில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட என்கவுன்டர்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.   பல போலி என்கவுன்டர்களை நிகழ்த்திய குயிக் கன் முருகன், சென்னை மாநகர கமிஷனராக்கப்பட்டு கவுரவிக்கப் பட்டிருக்கிறார்.   வெங்கடேச பண்ணையாரை அதிகாலை வேளையில் சுட்டுக்  கொன்ற எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்ற அதிகாரியை, அவர் மனைவி ராதிகா செல்வியே முயற்சித்தும் தண்டிக்க முடியவில்லை. தற்போது வீரதீர பிரதாபப் பட்டியலில் இந்த கொலைகாரர்களை சேர்க்காமல் இருப்பதற்கான காரணம், என்கவுன்டரில் சந்தேகம் இருந்தால், விருதுகள் வழங்கக் கூடாது என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலே.     ஒரே ஒரு ஐபிஎஸ் அதிகாரியை, குஜராத்தில் சிறையில் அடைத்தது போல கைது செய்து சிறையிலடைத்தால், எப்படி போலி என்கவுன்டர்கள் நடக்கிறது என்று பார்ப்போம்.  ஆட்சியாளர்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் வரை,  இந்தக் கொலைகாரர்களின் கொலைக்களம் பரவிக்கொண்டேதான் இருக்கும்.

அந்த விசாரணையும் கூட, போலீசாரால் நடத்தப்படுவதில்லை. மாஜிஸ்திரேட் மூலம் தான் நடத்தப்படுகிறது. "நீதித்துறை மீது நம்பிக்கையில்லாமல் சுட்டுக் கொல்கின்றனர்' என புகார் கூறுபவர்களுக்கு, அதே நீதித்துறையின் அங்கமான மாஜிஸ்திரேட்கள் மீது நம்பிக்கை இல்லையா?

நீதித்துறையின் அங்கமான மாஜிஸ்திரேட்டுகள் மீது நம்பிக்கை இல்லைதான்.   இந்த மாஜிஸ்திரேட்டுகளில் 95 சதவிகிதம் காவல் துறையினரின் அடிமைகள்.   தங்கள் வீட்டுக்கு காய்கறி வாங்கிக் கொடுப்பதிலிருந்து சினிமா டிக்கெட்டுகள் வாங்கித் தரும் வரை காவல்துறையினரை நம்பி இருப்பவர்கள்.   மாஜிஸ்திரேட்டுகள் சட்டபூர்வமாக உண்மையில் நடப்பார்களேயானால், காவல்துறையின் கட்டுப்பாட்டில் அடி வாங்கி கை கால் உடைந்து ரிமாண்டுக்கு அழைத்து வருபவர்களை ரிமாண்ட் செய்யவே மாட்டர்கள்.   முதலில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றே உத்தரவிடுவார்கள்.   கை கால் உடைந்து ரிமாண்டுக்கு வருபவரிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்ற சம்பிரதாயமான கேள்விகளை கேட்டு, அவர் கீழே விழுந்து விட்டேன் என்று பயத்தில் சொல்லும் பொய்யை அப்படியே பதிவு செய்பவர்கள்தான் 95 சதவிகித மாஜிஸ்திரேட்டுகள்.   காவல்துறையினர் அத்தனை பேரையும் வெளியில் அனுப்பி விட்டு, தனியே அந்தக் குற்றவாளிகளிடம் கேள்வி கேட்பார்களேயானால், அடி வாங்கியவர்கள் உண்மையைச் சொல்லுவார்கள். இதைச் செய்யாத மாஜிஸ்திரேட்டுகள் விசாரணை நடத்தினால், அது குயிக் கன் முருகன் நடத்தும் விசாரைணையே...

கொள்ளையர்களைப் பற்றி கவலைப்படும் மனித உரிமை ஆர்வலர்கள் யாரும், அந்தப் பணத்தை இழந்த பொதுமக்களைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

பணத்தை இழந்த பொதுமக்களைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லுவது தவறு.   வங்கிகளில் சென்று கொள்ளையடிக்கும் இந்தக் கொள்ளையர்களை விட மோசமான கொள்ளையர்கள் யார் தெரியுமா ?  கொள்ளையர்களிடமிருந்து மீட்ட நகையையும் பணத்தையும் அவர்களிடமிருந்து பறிக்கும் இந்த காவல்துறையினர்தான்.   வீட்டிலிருந்து நகையையோ, பணத்தையோ பறிகொடுத்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.   90 சதவிகித நிகழ்வுகளில் காவல்துறையினர் முழுமையான நகைகளை பறிகொடுத்தவர்களிடம் சேர்ப்பதே இல்லை.    சவுக்கு சிறையில் இருந்த 2008 ஜுலை மாதத்தில் நடந்த ஒரு குற்றம், கோயம்பேட்டில் தக்காளி வியாபாரி ஒருவரிடமிருந்து 60 லட்ச ரூபாயை கொள்ளையடித்த வழக்கு.   அவர் தக்காளி வியாபாரி இல்லை.  அது ஹவாலா பணம்.  ஹவாலா பணம் என்று தெரிந்தே கொள்ளையடித்தாக்ள்.    இந்தக் குற்றம் உடனடியாக கண்டுபிடிக்கப் பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து 60 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.    போலீசார் கணக்கு காண்பித்த தொகை எவ்வளவு தெரியுமா ?   17 லட்சம்.  இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.  அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞன் சவுக்கோடு ஒரே அறையில் புழல் சிறையில் இருந்தான்.  அப்போது அண்ணா நகர் துணை ஆணையராக இருந்த அதிகாரி, இவன் காவல்நிலையத்தில் இருக்கும் போதே, கைப்பற்றப்பட்ட பணத்திலிருந்து, பணத்தை எடுத்துச் சென்றதை இவன் பார்த்திருக்கிறான். இதில் யார் பெரிய கொள்ளைக்காரர்கள் ?

மனித உரிமை என்பதே, கிரிமினல்களுக்குத் தான் சொந்தம்; சிவிலியன்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம் போல பேசுகின்றனர்.

மனித உரிமை சிவிலியன்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் என்று பேசவில்லை.   சிவிலியன்களின் மனித உரிமைகளுக்கு பாதிப்பு வருவதில்லை.  காவல்துறையால் கைது செய்யப்படுபவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாலேயே அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம்.  குற்றவாளிகளை தண்டியுங்கள். ஆனால் சட்டத்தின் பாற்பட்டு தண்டியுங்கள்.  சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளை மதியுங்கள்.     குற்றம்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தை மீறுவதால், நீங்களும் சட்டத்தை மீறாதீர்கள் என்றே கூறுகிறோம்.

இந்த என்கவுன்டரில் எழுப்பப்படும் சந்தேகங்களும், அவற்றுக்கான பதில்களும்:

* குற்றத்தை புலன்விசாரணை செய்ய போலீசார் விரும்பவில்லை. சந்தேகப்படும் நபர்களை கொல்லத்தான் நினைக்கின்றனர். அப்படியானால், போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவாவதே இல்லையா?  கோர்ட்கள் காற்றாடுகின்றனவா?

எல்லா குற்றங்களையும் போலீசார் புலன் விசாரணை செய்ய விரும்பவில்லை என்பது உண்மைதான்.    எதற்கு  கைது செய்து, நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி, வழக்கு நடத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும் ? இது எளிதான வழி ஆயிற்றே என்றுதான் சில காவல்துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள். பெரும்பாலானோர் அவ்வாறு நினைப்பதில்லை.   என்கவுன்டர்கள் நடந்தால், கூப்பாடு போட்டு, வழக்கு போடும் இந்த மனித உரிமைக்காரர்களினால்தான் என்கவுன்டர்கள் தொடர்ந்து நடைபெறுவதில்லை.  இதை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருந்தால், நிச்சயமாக என்கவுன்டர்கள் தங்கு தடையில்லாமல் நடைபெறுகின்றன.

* கொலையைச் செய்துவிட்டு, தற்காத்துக் கொள்வதற்காக இதைச் செய்ததாகக் கூறுகின்றனர். தற்காப்புக்காக நடந்தது தான் என எப்போது நம்புவர்? போலீசாரிலும் ஐந்து பேர் இறந்த பிறகா? எனில், கொள்ளையர்களின் உயிர் முக்கியம்; போலீசாரின் உயிர் துச்சமா?

தற்காப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுப்பதே காவல்துறையினருக்கு சிக்கல்.  தற்காப்பு என்றாலே அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.   மேலும், இவர்கள் தற்காப்புக்காக சுட்டோம் என்பதை நீதிமன்ற விசாரணையின் மூலமாகவே முடிவு செய்ய வேண்டும்.    குயிக் கன் முருகன் சொல்வதை வைத்து முடிவு செய்ய முடியாது.   போலீசாரின் உயிர் துச்சம் என்று யாருமே சொல்லவில்லையே.   போலீசாரின் உயிரைப் போல கொள்ளையர்களின் உயிரும் முக்கியம்தானே...  அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 அனைவருக்கும்தானே “வாழும் உரிமையை” வழங்குகிறது.   தண்டனையாக ஒருவர் உயிரைப் பறிக்க வேண்டும் என்றால் அது சட்டத்தின் பாற்பட்டல்லவா நடக்க வேண்டும் ?   கீழமை நீதிமன்றம், அதன் பிறகு உயர் நீதிமன்றம், அதன் பிறகு உச்சநீதிமன்றம், அதன் பிறகு உச்சநீதிமன்றத்தின் மறு ஆய்வு, அதன் பிறகு ஆளுனரின் கருணை மனு, அதன் பிறகு குடியரசுத் தலைவரின் கருணை மனு என்று இத்தனை வரையறைகளை வைத்திருப்பது, ஒருவர் உயிரை பறிக்கும் முன், சந்தேகத்திற்கு இடமற அவர் குற்றம் நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத் தானே… ?   துப்பாக்கியை வைத்திருப்பதால் சுட்டு விட்டால் பிறகு இந்த நீதிமன்றங்கள் எதற்காக ?   குயிக் கன் முருகனே எப்படி நீதிபதியாக முடியும் ?

* "வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிந்த மொழியில் எச்சரிக்கை செய்யப்பட்டதா?' எனத் தெளிவாகக் கூறப்படவில்லை. போலீசார், ஆங்கிலத்தில் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரி. கொள்ளையர்கள் வட மாநிலத்தவர்கள். காவல் துறையில் சிலருக்கு இந்தி, ஆங்கிலம் தெரிந்திருக்கலாம். ஆனால், அதே கொள்ளையர்கள் உகாண்டாவையோ, ருவாண்டாவையோ சேர்ந்தவர்களாக இருந்தால், "துபாஷி' வரும் வரை காத்திருக்க வேண்டுமா?

சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஒரு ஏடிஎம் காவலாளி கொல்லப்பட்டார்.   அவரைக் கொன்றவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.  அவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.   அவர் ஒரு நாள் நள்ளிரவு 12 மணிக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றபோது, அவர் கார்டு மாட்டிக் கொண்டது. அதை எப்படியாவது எடுக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சிக்கும் போது, ஏடிஎம் காவலாளி திருடன் என்று நினைத்து அவரோடு சண்டையிடுகிறார்.   வார்த்தை முற்றி காவலாளி அந்த மணிப்பூர்வாசியை அடித்து விடுகிறார்.  மணிப்பூர் வாசி கத்தியை எடுத்து குத்தி விடுகிறார்.  இதில் காவலாளி இறந்து விடுகிறார்.  இந்தக் கொலை நடந்ததற்கான ஒரே காரணம் மொழி.  மணிப்பூர்வாசிக்கு இந்தி ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழி தெரியாது.  காவலாளிக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது.    என்னுடைய கார்டு மாட்டிக்கொண்டது, எடுக்கிறேன் என்பதை காவலாளி புரிந்து கொள்ளாமல் நடந்த சண்டையே மரணத்தில் முடிந்தது.

மாஜிஸ்திரேட்டுகள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று எழுதும் தினமலர், இந்த மணிப்பூர் காரரின் வழக்கு நீதிமன்றத்தில் எந்த முறையில் விசாரணை நடந்தது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.   இவர் மாஜிஸ்திரேட் கூட இல்லை.   மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள செஷன்ஸ் நீதிபதி.    தமிழ் ஒரு வார்த்தை கூட தெரியாத அந்த மணிப்பூர்காரருக்கு எதிரான வழக்கில் 22 சாட்சிகளின் வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்திருந்தார்.  வழக்கு முடிவடையும் கட்டத்தை வந்தடைந்தபோதுதான் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் கவனத்துக்கு இந்த வழக்கு வந்தது.  இதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அத்தனை சாட்சிகளையும், மொழிபெயர்ப்பாளரை வைத்து, மறு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவும் போட்டது.   இதுதான் மாஜிஸ்திரேட்டுகளின் லட்சணம்.

காவல்துறையினர் வேளச்சேரிப் பகுதிக்கு சென்றது விசாரணைக்கு.  விசாரிக்கப்படும் நபர் உகாண்டாவையோ, ருவாண்டாவையோ சேர்ந்தவர்களாக இருந்தால் விசாரணைக்கு செல்லும் போது, உகாண்டா மொழியோ, ருவாண்டா மொழியோ தெரிந்தவர்களை அழைத்துச் செல்லத்தான் வேண்டும்.  ருவாண்டா நாட்டுக்காரன் என்பதால் துப்பாக்கியை மட்டும் எடுத்துக் கொண்டு போய் சுடக்கூடாது.

* மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் போலீசார் நுழைந்து, ஐந்து இளைஞர்களை கொன்றுள்ளனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியைத் தேர்ந்தெடுத்தது கொள்ளையர்கள் தானே தவிர, போலீசார் இல்லை. அவர்கள், அங்கு தங்கினர்; இவர்கள் அங்கு சென்றனர்.

DSC_6550

மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நுழைந்து போலீசார் ஐந்து இளைஞர்களைக் கொன்றார்களா, இல்லை வேறு பகுதியில் கொன்று விட்டு, மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் உடலைப் போட்டார்களா என்பதை சிபிஐ விசாரணைதான் முடிவு செய்ய வேண்டும்.

* வீட்டில் இருந்த "டிவி' மற்றும் வாஷிங் மிஷினில் தோட்டா துளைத்ததற்கான தடயம் எதுவும் இல்லை. வேறு எங்கெங்கு எல்லாம் தோட்டா துளைத்திருந்தால், இதை ஒரிஜினல் என்கவுன்டர் என ஒப்புக்கொள்வர்? என்கவுன்டரில், கொள்ளையர்களின் உயிர் தான் குறியாக இருக்க முடியுமே தவிர, சுவரோ, "டிவி' மற்றும் வாஷிங் மிஷினோ அல்ல.

அடே முட்டாள் தினமலரே....  ஒரிஜினல் என்கவுன்டராக இருந்தால் இயல்பாக டிவியிலும், வாஷிங் மிஷினிலும் குண்டுகள் பாய்ந்திருக்கும்.   உட்கார வைத்து சுட்டால்தான் எங்கும் குண்டு பாயாது.   குயிக் கன் முருகன் காவல்துறையினர் தற்காப்புக்காக சுட்டனர் என்ற வாதத்தை எடுத்துள்ளார்.   தற்காப்புக்காக தாக்குவதை பற்றி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 96 முதல் 106 வரை கூறுகிறது.  இந்தப் பிரிவுகளுக்கான கட்டுப்பாடு பிரிவு 99ல் இருக்கிறது. பிரிவு 99ல் The right to private defence in no case extends to the inflicting of more harm that it is necessary to inflict for the purpose of defence.

இதன் பொருள் என்னவென்றால் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு எந்த அளவு எதிரியைத் தாக்க முடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே தாக்க வேண்டும்.  இதன்படி, தங்களைத் துப்பாக்கியால் கொள்ளையர்கள் தாக்கினால், அவர்கள் செயலிழக்கும் அளவுக்கு தாக்க வேண்டும்.   கொல்வதற்கான தாக்கக் கூடாது.  செயலிழக்கும் வகையில் தாக்கினாலும் சரி, கொல்வதற்காக தாக்கினாலும் சரி, நிச்சயமாக வாஷிங் மிஷினிலோ, டிவியிலோ, குறைந்தபட்சம் சுவற்றிலோ குண்டு பாய்ந்ததற்கான தடயங்கள் இருக்கும்.  கொள்ளையரின் உயிரை பறிக்கவேண்டும் என்று சுட்டால், அது தற்காப்பு அல்ல கொலை.  மேலும், தற்காப்பு என்ற வாதமே, நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.  குயிக் கன் முருகன் அல்ல.

* சட்டத்தை போலீசார் கையில் எடுத்துக்கொண்டுவிட்டனர். அந்தச் சட்டம் தானே போலீசாருக்கு துப்பாக்கியைக் கொடுத்திருக்கிறது; அவர்கள் ஒன்றும், அதை சட்ட விரோதமாக வைத்திருக்கவில்லையே.

போலீசார் துப்பாக்கியை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று யாரும் சொல்லவில்லை.  அந்தத் துப்பாக்கியால் இப்படி சகட்டுமேனிக்கு கொலை செய்யக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள். கோட்டையின் உள்ளே இருக்கும் ராணுவத்தினரிடம் கூடத்தான் துப்பாக்கியும், பீரங்கிகளும் இருக்கிறது.. அதற்காக அவர்கள் தலைமைச் செயலகம் வருபவர்களை சுடலாமா ?

*அருகில் வசிக்கும் பொதுமக்களில் சிலர், தங்களுக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த முறை என்கவுன்டர் செய்யும் முன், அக்கம் பக்கத்து வீட்டினர் அனைவரையும் எழுப்பிய பின் மேற்கொள்ளும்படி சொல்லலாமா? பஞ்சமாபாதகத்தையும் செய்ய அஞ்சாதவர்களிடம் கூட, போலீசார் கெஞ்சிக் கதறி தான் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, காலத்தின் கோலம்.

இந்த வாதமே கிறுக்குத்தனமாக இருப்பதால் இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.  இதையெல்லாம் ஒரு வாதமாக அச்சிட்டு, விற்பனை வேறு செய்யும் இவர்கள்…… வேறு என்ன தொழில் செய்யலாம் என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருதலைக் கொள்ளி எறும்புகள்: என்கவுன்டரால் போலீசார் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்போதெல்லாம், என்கவுன்டரில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, தொடர்ந்து பிரச்னைகளும் நெருக்கடிகளும் தான் வருகின்றன. அவர்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அந்த உயர் அதிகாரி யார் என்று குறிப்பிடவில்லை.  அந்த உயர் அதிகாரியிடம் சவுக்கு கேட்க விரும்புவது...   மிஸ்டர் பச்சிலை புடுங்கி....  என்கவுன்டர் என்ற பெயரில் கொலை செய்தால் வழக்கு வராமல் வாழைக்காயா வரும் ?   பிரச்சினைகளும் நெருக்கடிகளும் மட்டுமல்ல, சிறையும் காத்திருக்கிறது.

தவறான நோக்கத்துக்காகவோ, தவறாகவோ நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், "சஸ்பெண்ட்' கூட செய்யப்படலாம்; கைதாக நேரலாம். கொள்ளையர்கள் தப்பிவிட்டால், சமூகத்திடம் கெட்ட பெயர் வாங்க நேரிடுகிறது. கொல்லப்பட்டால், சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில், இருதலைக் கொள்ளி எறும்பு போல தவிக்கின்றனர் போலீசார்.

தவறான நோக்கமா, சரியான நோக்கமா என்பதையெல்லாம், சிபிஐ விசாரணை முடிவு செய்யட்டும். அவர்களிடம் போய்ச் சொல்லுங்கள் உங்கள் நியாயங்களை.  சொராபுதீன் ஷேக்கும், இஷ்ரத் ஜஹானையும் சுட்டுக் கொன்ற குஜராத் போலீசார் இரண்டு பேரும், நரேந்திர மோடியை கொல்ல வந்த தீவிரவாதிகள் என்றுதானே சொல்லி வந்தார்கள்.... ?    சிபிஐ விசாரணைக்கு பிறகு, தற்போது உண்மை வெளிவரவில்லையா....  சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் கம்பி எண்ணவில்லையா ?   சமூகத்திடம் கெட்ட பெயர் வாங்கினால் அப்பிடியே நாண்டுகிட்டு சாவது போல பேசுகிறீர்கள்... ?   சென்னை மாநகரில் உள்ள அத்தனை குற்றங்களையும் கண்டுபிடித்து விட்டீர்களா ?   துப்பு துலங்காத வழக்கே இல்லையா ?   சட்டச்சிக்கலில் சிக்கித் தவிக்கும்போதே இவ்வளவு கொலைகளைச் செய்கிறீர்களே...  மனித உரிமை ஆர்வலர்கள் வழக்கு போடாவிட்டால் ? தமிழக காவல்துறையினர் சொன்னது உண்மையில் நடந்திருந்தால், சிபிஐ விசாரணைக்கு தயார் என்று அரசை பதில் மனு தாக்கல் செய்யச் சொல்லுங்கள்.  எதற்காக இந்த பயம் ?

மேலும், இதுவரை நடந்த என்கவுன்டர்கள் எதுவும், சொந்தப் பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக நடந்தவை அல்ல. அனைத்துமே, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை.

என்கவுன்டர்கள் சொந்தப் பகையை தீர்த்துக் கொள்வதற்கான நடத்தப்பட்டவை என்று யாரும் சொல்லவில்லை.  தற்போது சொந்தமாக உள்ள கமிஷனர் பதவியை காப்பாற்றிக் கொள்ள மேற்கொள்ளப்பட்டவை என்றே சொல்கிறோம்.     நல்ல பதவிக்காக காவல்துறை அதிகாரிகள் கொலையும் செய்வார்கள் என்பதற்கு இந்த என்கவுன்டர்களே உதாரணம்.

இந்தக் கொள்ளையர்கள் தண்டிக்கப்படாமல் இருந்தால், அவர்கள் மேலும் மேலும் கொள்ளையடித்து, மேலும் மேலும் நவீன ஆயுதங்கள், வாகனங்கள் வாங்கி, மேலும் மேலும் தொழில் விருத்தி செய்வர். அதைத் தான் இந்த மனித உரிமை ஆர்வலர்கள் விரும்புகின்றனரா?

1991-1996ல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 66.5 கோடி கொள்ளையடித்தார்.    அவரை அப்போதே சுட்டிருந்தால் 2001-2002ல் அவரும், மன்னார்குடி மாபியாவும் மீண்டும் கொள்ளைடித்திருக்க மாட்டார்கள்.  சரி அப்போதாவது சுட்டிருந்தால் 2011 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை கொள்ளையடித்திருக்க மாட்டார்கள்.  அவர்களையும் சுட்டு விடலாமா ? இந்தக் கொள்ளையர்களை பிடிப்பதற்குத்தான் உங்களுக்கு உரிமை உண்டு.  தண்டிப்பதற்கு அல்ல… கையில் துப்பாக்கி இருப்பதால் யாருக்கு வேண்டுமானாலும் தண்டனை கொடுத்து விடுவீர்களா ?   தண்டனை வழங்க நீதிமன்றங்கள் இருக்கின்றன.   உங்களுக்கு கொடுத்த வேலையை மட்டும் பாருங்கள்.

DSC_5599

கொள்ளையடித்தவர்கள் மேலும் நவீன வாகனங்களும், ஆயுதங்களும் வாங்கி தொழில் விருத்தி செய்வதை தடுக்கத்தான் உங்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம், சலுகைகள், வாகனங்கள், எடுபிடி வேலைக்கு காவலர்கள் என்று கொடுத்திருக்கிறார்கள்.   அவர்களை கைது செய்து, ஒழுங்கான முறையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.   இப்படி குறுக்கு வழியில் தண்டனை என்ற பெயரால் கொலை செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.

நல்லது செய்ய முயற்சிக்கும் போலீசார், இவ்வாறு தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளானால், மனதளவில் மிகவும் விரக்தியடைந்துவிடுவர். போலீசார் விரக்தியடைவது, ஒரு பாதுகாப்பான சமூகத்துக்கு நல்லதல்ல. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

ஆணியே புடுங்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.   நல்லது, நல்லது என்று இப்படி கொலை செய்யாதீர்கள்.    நீங்கள் மனதளவில் விரக்தியடைந்தால், வேலையை ராஜினாமா செய்து விட்டு கிளம்புங்கள்.    புதிய நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க அரசுக்கு தெரியும்.   போலீசார் விரக்தியடைவது பாதுகாப்பான சமூகத்துக்கு நல்லதல்ல என்பது சரியல்ல.  உங்களைப் போன்ற போலீசார்தான் சமூகத்தின் பாதுகாப்புக்கு நல்லதல்ல.   அதனால் வேலையை ராஜினாமா செய்து விட்டு, நரிக்குறவத் தோழர்களோடு சேர்ந்து காக்காய், குருவியை சுடுங்கள்.   அப்போதாவது உங்களின் கொலை வெறி அடங்குகிறதா என்று பார்ப்போம்.

ஐந்து மனித உயிர்களின் விலை, 14 லட்சம் ரூபாய் தானா ? என்று அக்கறையோடு எழுதுவது போல தலைப்பு வைத்து விட்டு, மனித உயிர்களை போலீசார் எடுத்தால் தப்பில்லை என்று எழுதும் தினமலருக்கு சவுக்கு சொல்லிக் கொள்வது... .... மனித உயிர்களை மதிப்பிடவே முடியாது.  அவை விலைமதிப்பற்றவை.

 

Comments  

 
0 #56 murugaeshan 2012-03-08 09:52
நீ எல்லாம் கட்டுரை எழுதவில்லை என்று யார் அழுதார்கள் ? நீ என்ன சொல்ல வருகிற என்பதே தெரியவில்லை என்பதற்கு வாசகர்கள் சிலரின் கருத்துக்களே சாட்சி..... நீ வேற ஊ .....தொழிலுக்கு போ ...உனது அம்மாவுக்கோ தங்கைக்கோ கழுத்த அறுத்து கொள்ளை அடிக்க முயன்றால் இப்படித்தான் எழுதுவியா கஸ்மாலம்
Quote
 
 
+6 #55 வால்டர் வணங்காமுடி 2012-03-06 10:54
[ஃஉஒடெ நமெ="ச்ப்ரிங்ஜனனி"]இவ்வளவு வரிந்து கட்டுவது சவுக்கு குற்றம் செய்ததால்தான்.
குற்றவாளிகளின் வக்கீல் சவுக்கு! வெறு எப்படி எழுதும்? ஏற்கனவே புழல் சென்றதால் குற்றவாளிகளின் புகல் பத்திரிக்கை சவுக்கு என்று புரிகிறது. ஆமாம்! கொலைகார
புலியின் படம் போட்ட பத்திரிகைதானே? அது மனித நேய
கொலைகாரனின் படம்![/ஃஉஒடெ]


கொலைகார புலி...மனித நேயகொலை காரன்...? சப்ரிங்ஜனனி அவர்களே...சவுக்கு தளத்தில் (6000 தமிழனை கொன்ற) ராஜிவ் படமோ, (2 லட்சம் தமிழனை கொன்ற) மன்மோகன்,சோனியா ,கருணாநிதி,ராஜப க்ஷே படமோ இல்லையே...!!! அப்புறம் யாரை சொல்றேள்? பாத்துண்ணா... இப்படி நொள்ளை கண்ணோட, மாமின்னு நெனச்சுண்டு வேற பொம்ணாட்டியை தொட்டுட போறேள்... அப்புறம் வாயும் காலி...!!! :lol: :lol:
Quote
 
 
+5 #54 வால்டர் வணங்காமுடி 2012-03-06 10:47
Quoting RAJKUMARPANDIAN :
Quoting tamilkaran:
Having prabhakaran's photo and talking about value of human life is the biggest comedy by savukku. Try Oscar next time

shall we put Rajiv's photo here (who sent the IPKF and killed,raped,ma ssacred many innocent tamils...)try oscar for labelling the Indian People Killing(killed) Force as the Indian Peace Keeping Force)and still maintaining the lie by putting up of IPKF Memorial in colombo.Ha..ha..ha..haa



Well said Pandiyan.
Quote
 
 
0 #53 brganesh 2012-03-06 05:33
Please don't consider this type of peoples. The issue is not Rs.14 lacs the way which they robbed. Today if we leave them definitely they will join politics and the same thing in white color (in a very decent manner) what the whole family did previously..
Quote
 
 
+1 #52 mmmmmmm 2012-03-05 16:30
ஆளூம் கட்சி ஊடகம் - வாழ்த்துவார்கள்

எதிர் கட்சி ஊடகம் - திட்டுவார்கள்

மக்கள் - புலம்புவார்கள்
Quote
 
 
-5 #51 manithan 2012-03-04 09:36
செங்கொடி மரணத்தின் மீதான தினமலரின் விமர்சனத்துக்கு பிறகு ஒரு சில புரட்சி கூட்டங்கள் தினமலரை எதிரியாக பாவிக்கின்றன... தினமலர் மீதான அவர்களின் கோபம் நியாயமே.. ஆனால் சவுக்கு ஏன் அந்த சாயத்தை பூச விழைகிறது, அக்கூட்டங்களை கவரவா? இல்லை கவரப்பட்டாதாலான ?

நடிகர்கள் விபசார செய்தி பொய் என்று சொல்வீர்களா ?
கே.டி பிரதர்ஸின் தூண்டுதல் தான் செக்ஸ் குற்றச்சாட்டு என்பதை மறுப்பீர்களா ?

"மாஜிஸ்திரேட்டுக ளில் 95 சதவிகிதம் காவல் துறையினரின் அடிமைகள்" - என்று சொல்லி இருப்பதன் மூலம் உங்களுக்கு இந்த நாட்டின் மீதுள்ள நம்பிக்கை தெளிவாகிறது...
சாவுக்கும் மூளை சலவை செய்யப்பட்டுள்ள து தெளிவாகிறது...

இது சுத்தம் சுயம்பிரகாசமான போலி என்கௌன்ட்டர் என்று எல்லோருக்கும் தெரியும்... அதற்காக குற்றவாளிகளை ஆதரிக்க முயலுவது அபத்தம்... குற்றவாளிகளை ஆதரிக்காமல் இந்த போலி என்கௌண்டரை புகழேந்தி போன்றவர்கள் கோர்டில் நிரூபிக்க முடியும்...
Quote
 
 
-1 #50 chandramohan 2012-03-04 08:27
கொள்ளையர்கள் ஒன்றும் கம்பனி வைத்து நடத்தவில்லை. எனவே அவர்கள் வீட்டில் அவர்களது அப்பாவி நண்பர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இது கொலை தான்.
Quote
 
 
0 #49 Sebastian 2012-03-03 09:52
இலங்கைத் தமிழர்கள் இத்தகைய கீழுள்ள "வஞ்சகப் புகழ்ச்சியில்" சிக்கிதான் அது, தற்போது பெரிய "புதைக் குழியாகவும்", தமிழ்நாட்டுக்கு ட் ஹலைவலியாகவும், யாழ்ப்பாண கனெக்ஷன் உள்ளவர்கள் மட்டுமே தமிழக முதலமைச்சராக ( வி.சி.குகநாதன், நடிகர் விஜய், ஸ்ருதி ஹாஸன், ....) நிதி உதவி செய்வோம் என்று அடம் பிடிக்கிறார்கள் ?..--- http://sundaytimes.lk/990801/plus6.html
Quote
 
 
0 #48 பெரிய குத்தூசி 2012-03-02 14:31
இந்திய வெளிவிவகார கொள்கைகள் என்பது “வெளி விவகார நிர்வாக அமைப்பினால்” மட்டும் வகுக்கப்படுகிறத ு. அவர்களிடம் எல்லாவற்றையும் விட்டு நாம்(ஆரியரோ!?, திராவிடரோ?!) சிந்திக்க மறந்து 60 ஆண்டுகள் ஆகின. ஏனென்றால், தமிழ்நாட்டின் எல்லையில் பிறநாடுகள் இல்லை.
தற்போது எழுந்துள்ள “சீன பூச்சாண்டியால் ” சிந்திக்க வேண்டியுள்ளது.
காலனித்துவ மரபால், இலங்கைத்தமிழரும ், இந்திய நிர்வாக அமைப்பினரும் ஒரேமாதிரியாகத்த ான் சிந்திக்கிறார்க ள்.
One story was told, that Tamil comedy actor N.S.Krishnan, in his last days gave away a silver Guja- the last valuble thing in his house to a visitor, respected him of his rich days.
Salafism is the rotten part of the Islam- or otherwise, The negative and SUCCESSFUL part of the western Capitalism. If any body concealed the above said Guja and chased away the visitor to save money that is Salafism.
Saudhi Oil money advocating this Salafism, in which China is the only competitor with such currency reserve.Now Europe realized the value of the Guja and try to save it through the mediation of Turkey- in which it incorporated “north African sunni world hard labour” into its cultural part, Also incorporating Shia world through paganism and Muslim brotherhood.-- http://thesamnet.co.uk/?p=34268
Quote
 
 
-1 #47 v.m.ganesan 2012-03-02 13:13
காவல்துரைனர் திருடன்கலுக்கும ் பஙுகு சன்டைபொல நினைத்துஎலுதும் உன்னினைப்பு தவரு உன் வீட்டில் நடந்தால் நினை
Quote
 
 
0 #46 JK 2012-03-02 03:56
[ஃஉஒடெ நமெ="சுச்ரில"]விவேக்கின் வசனம் போல "இல்லை கோழியைக்கேட்டு பெர்மிசன் வாங்கிட்டுத்தான ் அதை வெட்டினான்" என்பது போல எல்லாம் இந்த நூற்றாண்டில் நடக்காது என்பதும் உண்மை. மும்பையில் பலரை கொன்ற கசாப் இன்னும் சிறையில், இது போல இருந்தால் எப்படி நீதித்துறையின் மீதும் போலீஸ் மீதும் நம்பிக்கை வரும்? இந்த நாட்டில் என்ன செய்தாலும் தண்டனை என்பது கிடையாது கோர்ட் கேஸ் என்று சாகும் வரை இழுத்து அடிக்கலாம் என்ற ஒரு உறுதி எல்லாருக்கும் வந்துவிட்டது. நல்லவர்கள் தான் பயந்து பயந்து வாழ வேண்டி இருக்கிறது. இன்ஸ்டன்ட் காபி இன்ஸ்டன்ட் டீ போல இன்ஸ்டன்ட் தண்டனை என்பதும் (குறைந்த பட்சம் கடுமையான கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு மட்டுமாவது) சாத்தியமாவது வரை (அதுவும் குறிப்பிட்ட கால அளவுக்குள், உதாரணம் ஒரு ஆண்டுக்குள்), இது போன்ற என்கௌன்ட்டர் களுக்கு மக்கள் (மிடில் கிளாஸ்) மத்தியில் உள்ள ஒரு மௌனமான ஆதரவை மறுக்க முடியாது என்பதே உண்மை.[/ஃஉஒடெ]


இந்த கட்டுரையை வாசிக்கும்போது சவுக்கு என்ன சொல்ல வருதுனு புலப்படல...கசாப்-பத்தி பேசும் சவுக்கு ஒரு வேலை அவனை சுட்டாலும் இப்படித்தான் 'வியாக்கியானம்' பேசுமா?
"போலீசாரின் உயிரைப் போல கொள்ளையர்களின் உயிரும் முக்கியம்தானே..." - காமெடியா இல்ல?அப்படீனா கொள்ளயடிப்பவனுக ்கு ப்ரியானி வாங்கி கொடுத்து உபசரிக்கனுமா?..
Quote
 
 
+12 #45 RAJKUMARPANDIAN 2012-03-02 00:26
Quoting tamilkaran:
Having prabhakaran's photo and talking about value of human life is the biggest comedy by savukku. Try Oscar next time

shall we put Rajiv's photo here (who sent the IPKF and killed,raped,ma ssacred many innocent tamils...)try oscar for labelling the Indian People Killing(killed) Force as the Indian Peace Keeping Force)and still maintaining the lie by putting up of IPKF Memorial in colombo.Ha..ha..ha..haa
Quote
 
 
0 #44 springjanani 2012-03-01 18:25
இவ்வளவு வரிந்து கட்டுவது சவுக்கு குற்றம் செய்ததால்தான்.
குற்றவாளிகளின் வக்கீல் சவுக்கு! வெறு எப்படி எழுதும்? ஏற்கனவே புழல் சென்றதால் குற்றவாளிகளின் புகல் பத்திரிக்கை சவுக்கு என்று புரிகிறது. ஆமாம்! கொலைகார
புலியின் படம் போட்ட பத்திரிகைதானே? அது மனித நேய
கொலைகாரனின் படம்!
Quote
 
 
0 #43 vettipaiyan 2012-03-01 17:21
when Veerappan(body) encountered by police, muthulakshmi approch the HC demand repostmortam. but HC reject the muthulakshmi appeal. so in this case court never react
Quote
 
 
+4 #42 வால்டர் வணங்காமுடி 2012-03-01 13:40
[ஃஉஒடெ நமெ="சுன்டநிப்ரொ"]நாம் வேர்வை சிந்தி உழைத்து வங்கியில் பணத்தை சேமித்து வைத்தால் இந்த புண்ணியவான்கள் அதை கொள்ளைஅடித்து சுகபோகமாக வாழ்வார்கள்.அவர்களை சுட்டால் மனித உரிமை மகாத்மாக்கள் வரிந்து கட்டி கொண்டு வருவார்கள்.கொள்ளை அடிப்பது மனித உரிமையா ?ரவுடிகளுக்கும் கொள்ளைக்காரர்கள ுக்கும் பரிந்து பேசும், அதே நேரம் அவர்களால் பாதிக்க பட்டவர்களை பற்றி ஒரு கவலையும் படாமல் நடப்பது சரியா? மனசாட்சி என்று ஒன்று சவுக்குக்கு உள்ளதா![/ஃஉஒடெ]


வெறும் பதினாலு லட்சம் திருடினவனுக்கு என்கவுன்டர் தண்டனை சரி என்றால், பதினாலு லட்சம் கோடி என்று கோடிக் கணக்கில் நீங்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை ஆட்டையை போட்ட மாமாகார நாய்களுக்கு அதே போலிஸ் கார் கதவு திறந்துவிடும் மர்மம் என்ன திருவாளர்.சுந்தர் ஓனர் ஆப் விப்ரோ கம்பெனி அவர்களே?
Quote
 
 
+2 #41 Sureshsss 2012-02-29 11:28
http://tamil.oneindia.in/news/2012/02/29/tamilnadu-woman-hacks-robber-with-sickle-aid0091.html. savukku! reply this news.
Quote
 
 
-4 #40 tamilkaran 2012-02-29 10:05
Having prabhakaran's photo and talking about value of human life is the biggest comedy by savukku. Try Oscar next time :D
Quote
 
 
+8 #39 avid reader 2012-02-29 06:04
தினமலரொட புத்தி இன்ட்ரு நெட்ரு அல்ல... இது காலம் காலமாக இருக்கும் புட்தி. ஒருட்தனை பிடிக்க வில்லை என்ட்ரால் பொட்டு தாக்குவதும், பிடிட்த்து விட்டால் காலை நக்குவதும் தினமலருடய பரம்பரை பலக்கம். மிகவும் கிரிமினல் புட்தி உடயவர்கல். ஒன்னாம் நம்பர் மன்ஞல் பட்திரிகை.
Quote
 
 
-4 #38 niaz 2012-02-28 19:45
pls read about this fake encounters by RB.Sreekumar, former DGP of Gujrat Police
http://www.cjponline.org/gujaratTrials/sreekumar060212.htm
Quote
 
 
+16 #37 Dhanasekaran 2012-02-28 14:59
நீஙகள் ஏன் கொலைகார மற்றும் கொள்ளைகார மீட்பு குழு அமைக்க கூடாது?
இவர்களுக்கு அஞ்சி வாழும் நடுதர மக்களுக்குதான் தெரியும் அந்த வலி. 98% மக்கள் இந்த என்கவுன்டருக்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறார்க ள்.
Quote
 
 
+7 #36 Narayan 2012-02-28 11:08
Dear Savukku,

Please close this site and take goojaa for MK and Sasikala and Thieves.
Quote
 
 
+12 #35 Natpukku Naan 2012-02-28 10:02
தினமலர் நாளிதழ் ஒரு மேட்டுக்குடி என்றாலும், கூட்டுகுடி என்றாலும் .. அதை படிக்கும் மக்களுக்கு உண்மை புரியும் ... தமிழன் இன்னும் முட்டாளாக இல்லை ... என்பதும் மேட்டுக்குடி மக்களுக்கு தெரியும்... நடக்கும் சம்பவத்தை பற்றி அறியும் போது அதில் உண்மை பொய் ஆராய தெரிந்தவர்கள் தமிழ் மக்கள் ...

நீதி துறை இன்னும் இருகிறதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது... இதுபோன்ற என்சௌண்டேர் சம்பவம் நடக்கும் போது போலீஸ் இருக்கிறது என்று தெரிகிறது...

It does not mean that... following to a encounter.. crime rates will fall down.. when a bus reaches it destination it will come in newspapaer.. when it stuck ups or got fatal accident it comes in paper even as a flash news ... similarly encounter creates a fear to theif on his past action and makes him to think twice before he does some think in future.. this will not been notified to public ... even to a journalist like savukku... because it is a action happening inside a mind of a person ... but there is not 2 opinion on this ...
Quote
 
 
+1 #34 HariharanChennai119 2012-02-27 22:37
Savukku is a typical example of hippocrate. He talks about value of life while supporting terrorist Prabakaran who ordered killing of his own tamils who opposed to him. I could see the typical DMK style in him
Quote
 
 
+18 #33 susrila 2012-02-27 22:20
விவேக்கின் வசனம் போல "இல்லை கோழியைக்கேட்டு பெர்மிசன் வாங்கிட்டுத்தான ் அதை வெட்டினான்" என்பது போல எல்லாம் இந்த நூற்றாண்டில் நடக்காது என்பதும் உண்மை. மும்பையில் பலரை கொன்ற கசாப் இன்னும் சிறையில், இது போல இருந்தால் எப்படி நீதித்துறையின் மீதும் போலீஸ் மீதும் நம்பிக்கை வரும்? இந்த நாட்டில் என்ன செய்தாலும் தண்டனை என்பது கிடையாது கோர்ட் கேஸ் என்று சாகும் வரை இழுத்து அடிக்கலாம் என்ற ஒரு உறுதி எல்லாருக்கும் வந்துவிட்டது. நல்லவர்கள் தான் பயந்து பயந்து வாழ வேண்டி இருக்கிறது. இன்ஸ்டன்ட் காபி இன்ஸ்டன்ட் டீ போல இன்ஸ்டன்ட் தண்டனை என்பதும் (குறைந்த பட்சம் கடுமையான கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு மட்டுமாவது) சாத்தியமாவது வரை (அதுவும் குறிப்பிட்ட கால அளவுக்குள், உதாரணம் ஒரு ஆண்டுக்குள்), இது போன்ற என்கௌன்ட்டர் களுக்கு மக்கள் (மிடில் கிளாஸ்) மத்தியில் உள்ள ஒரு மௌனமான ஆதரவை மறுக்க முடியாது என்பதே உண்மை.
Quote
 
 
+17 #32 நேர்நிறை 2012-02-27 21:39
முதலில் அவர்கள் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்க ாக தாமிரபரணிக்கு வந்தனர்.
அவர்கள் கொல்லும்போது நான் கவலை கொள்ளவில்லை.
ஏனெனில் நான் தோட்ட தொழிலாளி அல்ல


பிறகு வச்சாத்தி மலைவாழ் மக்களுக்காக வந்தனர்
அவர்கள் சொல் கேளாததற்காக கொலைகள் நடந்தபோது நான் நடந்து சென்றேன்
ஏனெனில் நான் மலை வாழ்பவன் அல்ல


பிறகு அவர்கள் சென்னை உயர் நீதி மன்றம் வந்தனர்
ஜன்மப்பகை தீர்க்கப்படும்ப ோது எனக்கு ஒன்றும் ஆகவில்லை
ஏனெனில் நான் வழக்கறிஞர் அல்ல

பிறகு அவர்கள் பரமக்குடிக்கு வந்தனர் மக்களின்
கொலையுண்ட மக்களின் உறவினர்கள் கதறியபோது நான் ஒன்றும் சொல்லவில்லை
ஏனெனில் நான் அவர்களின் உறவினர் அல்ல

பிறகு தானே நீதியை கையில் எடுத்து இவர்களை கொன்றபோது
நான் ஏதும் செய்யவில்லை
ஏனென்னில் நான் மற்றவர்களுக்காக வருத்தபடுபவன் இல்லை

பிறகு எனக்காக வந்தனர்.
அப்போது நான் தான் அவர்களது முதல் எதிரி என்று சொன்னபோது
நான் உதவிக்காக கூக்குரல் எழுப்பும்போது தான் பார்த்தேன்
யாரும் இல்லாத பரந்த மைதானத்தில் தனியாக கொலையுண்டதை.

-நேர்நிறை.
Quote
 
 
+13 #31 singam 2012-02-27 19:52
தினமலர் மன்னிக்கவும் தினமலம் ஒரு உயர் ஜாதி ( பாப்பான்) பத்திரிகை
அவர்களது வேலையே ஆதியில் இருந்து சுகந்திரத்திற்க ு முன்பு இருந்தே அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் இரண்டு தொழில்கள்
ஒன்று காட்டிகொடுப்பது
மற்றொன்று கூட்டிகொடுப்பது .
Quote
 
 
+10 #30 ரப்பர் ஸ்டாம்ப் 2012-02-27 19:27
இது திட்டமிட்ட என்கௌண்டர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கொல்லப்பட்டவர்க ள் அனைவரும் வீட்டை காலிசெய்ய முனைந்தது அவர்களின் குற்றசெயலுக்கு அதுவே சான்று. இதுபோன்ற ஒரு சில என்கௌண்டர் இல்லையெனில் திருடன் எவனுக்கும் பயமிருக்காது. கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சேமிக்கும் நகைகள் இதுபோன்ற திருடர்களால் பறிக்கபட்டு அல்லது பணத்திற்காக கொலை செய்ப்பட்டு வேதனையில் வாடும் குடும்பத்தினருக கு யார் பதில் சொல்வது. பெற்றோர்களும், குடும்பத்தினரும ் தன் மகனோ, மகளோ சம்பாதிக்கும் பணம் நல்ல வழியில் வருகிறாதா என்பதை உறுதி கொள்ளல் வேண்டும். அது தவறுமாயின் ஒரு நாள் இதுபோன்ற அசம்பாவிதத்தால் வாடவேண்டி வரும். கோவை குழந்தை கொலைகாரன் கொல்லப்பட்டபோது ஊரே தீபாவளியாக கொண்ட்டாடியது. அதற்கு பிறகுதான் குழந்தைகள் கடத்தல் குறைந்தது. எனவே இறந்த இந்த இளம் வாலிபர்களை பார்க்கும்போது பரிதாபமாக இருப்பினும், இது போன்ற என்கௌண்டர்கள் தேவையே! அது மற்ற திருடர்களை யோசிக்கவைக்கும் .குற்றவாளியாக கருதப்படும் வினோத் குமார் (எ) சுஜய் குமார் ரே, மும்பையில் நடந்த மூன்று சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ள்ளான். அடுத்ததாக, மும்பைசார்க்கோப ் பகுதியில், சரஸ்வத் வங்கியில் நடந்த 20.74 லட்ச ரூபாய் கொள்ளை சம்பவத்தில், 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு ள்ளனர். இந்த அபெய் குமார் சென்னையில் நடந்த கொள்ளையிலும் சுஜய் குமாருடன் இணைந்து செயல்பட்டு, தற்போது கொல்லப்பட்டுள்ள ான்.
அடுத்ததாக, மும்பை போரிவல்லி பகுதியில், எச்.டி.எப்.சி., வங்கியில் இருந்து 27.5 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்ப ட்ட சம்பவத்தில் சோனு குமாருடன் சேர்ந்து சுஜய் குமார் மற்றும் அபெய் குமார் ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.இதில், சுஜய் குமார் மற்றும் அபெய் குமார் உள்ளிட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்கள் இரண்டில், சையது ஜாபர் ஷா என்பவன் தலைவனாக செயல்பட்டு, துப்பாக்கி முனையில் அனைவரும் சேர்ந்து, 81 லட்ச ரூபாய் கொள்ளையடித்துள் ளனர். போலீஸ் ஒன்றும் சந்தேகத்தின் பேரிலோ, ஆபரேசனிலோ கொன்றது அல்ல, உள்ளே சென்று, உறுதி செய்தபின் சுட்டுக்கொன்றிர ுப்பர். என்வே அப்பாவிகள் என்ற சந்தேகம், இங்கே தேவையற்றது. இனிமேல் வட இந்தியர்களுக்கி வீடு கிடைப்பது மிகவும் கடினம்.
Quote
 
 
+10 #29 boobathi 2012-02-27 18:34
அட்டா ? என்னே கொள்ளையர்களின் குறிபார்த்தல் திறம். வாய்ப்பிருந்தால ் போலீஸைக் கொல்லத் துணிவுடைய அவர்கள் சரியாக தோள்பட்டையைப் பார்த்த்துச் சுடுகிறார்கள். பூட்டிய வீட்டுக்குள்ளிர ுந்தும் இரவில் அவர்களுக்குத் தோள்பட்டை சரியாகத் தெரிகிறது. காலுக்கு கீழே சுட வேண்டிய போலீஸார் தான் குறி தவறி தலை , மார்பு என்று சுடுகின்றனர். போலீஸைக் கொஞ்சம் தீவிரவாதிகளிடம் அனுப்பி பயிற்றுவித்தால் நல்லது
Quote
 
 
+12 #28 crys 2012-02-27 18:08
சவுக்கின் தரம் தாழ்ந்து பல மாதன்கல் ஆகிவிட்டது. உதாரணத்திற்கு உனது குடும்பத்தில் உள்ள உனது உறவினர்கள் யாராவது பணத்தை திருட்டு கொடுத்தோ, அல்லது கற்பை பறிகொடுத்தோ இருக்கும் சமயத்தில் இதே போலிஸ் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொது அவர்களை தண்டிக்கலாமா என்று நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் இப்படி அனைத்திடமும் கேட்டு கொண்டு கற்பை பறிகொடுத்த உனது உறவினரிடம் எங்கே, எப்படி கற்பழித்தார் எங்கே தொட்டார். மெதுவாக தொட்டாரா. அழுத்தி தொட்டாரா, வலித்ததா? என்று அனைத்தையும் விலாவாரியாக விசாரித்து பின்னர் ஒவ்வொரு மக்களிடமும் ஒப்பினியன் கேட்டு அனைவரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே அவரை கைது செய்யும் படி செய்யலாம். என்ன மக்களே இப்படி செய்தால் அனைவருக்கும் ஓகே தானே. இப்படி செய்தால் கடைசியில் பணமும் திரும்ப கிடைக்காது, கற்பும் கிடைக்காது. குற்றவாளிக்கு தண்டனையும் கிடைக்காது. குற்றவாளியும் திருந்தமாட்டான் . எப்போ சசியும் நடராஜனும் அவர்களை சார்ந்த கும்பலும் அதிமுகவில் இருந்து நீக்கபட்டனரோ அப்போதே சவுக்கு தனது முகவரியை மக்களிடம் காட்டிவிட்டது. நடராஜனுக்கு, ராவணனுக்கு, திவாகரனுக்கு ஆதரவாக கட்டுரை வெளியிட்டதோ அப்போதே சவுக்கின் முகவரியும் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டது . சசி கும்பல் ஆதரவு அரசு அதிகாரிகள் அனைவரும் மாற்றப்பட்டுவிட ்டனர். எனவே இப்போதுள்ள அதிகாரிகள் அனைவரையும் சவுக்கு எதிரியாகத்தான் பார்க்கும். அதன் விளைவுதான் இந்த கட்டுரை.
Quote
 
 
+9 #27 Vijay123 2012-02-27 14:45
@Sundawipro: தயவு செய்து அந்த விப்ரோ பெயரை தவிர்க்கவும். அந்த கம்பெனிக்கு தான் அசிங்கம். கொள்ளை அடிப்பது சரி என்று யாரும் இங்கு சொல்லவில்லை. இது கூடவா புரியாது? கொள்ளை அடிச்சது செத்து போனவங்க தானான்னு உறுதியா யாருக்கும் தெரியாது. அவங்க கொள்ளை அடிக்கும் பொழுது அங்கு யாரையும் காய படுத்தவில்லை. வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறவனுங்கள ே இப்போவெல்லாம் குத்திட்டு தான் போறான். இப்படி தப்பு செய்றவங்களை எல்லாம் போட்டு தள்ளனும்னா காந்திய போட்டு தள்ளுனது கூட சரிதான்.
சரி, இப்படி பணம் பணம்னு அடிசிக்கிறீங்கள ே, வங்கி என்ன உங்கள கூப்பிட்டு திருட்டு போனதுல உங்க பணமும் இருந்துச்சு. அதனால உங்களுக்கு எதுவும் கிடையாதுன்னு சொல்லிடுவாங்களா ? யாருங்க இதுல பாதிக்க படுவா? தேசியமயமாக்கப்ப ட்ட வங்கியில் இருக்கும் பணத்திற்கு ஆர்பிஐ அல்லது அரசு உத்திரவாதம் அளிக்கும். இந்த முப்பது லட்சம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளான பேங்க் ஒப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியையும் ஒன்றும் செய்து விடாது.
Quote
 
 
+21 #26 crys 2012-02-27 13:35
கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களைத் தாக்கியபோது மனித உரிமை அமைப்புகள் வருவதில்லை. தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் கொடூரமாக கொன்றபோதும், தாக்கியபோதும் மனித உரிமை அமைப்புகள் வரவில்லை. இத்தாலியக் கப்பல் ஊழியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்கள் குறித்தும் மனித உரிமை அமைப்புகள் கவலைப்படவில்லை. ஆனால் கொள்ளையர்களை போலீஸார் சுட்டுக் கொன்றதும் வந்து விட்டார்கள்
Quote
 
 
+9 #25 ChilledBeers 2012-02-27 13:11
அதை நீதிமன்றம் சொல்லவேண்டும்.அதை நீதிமன்றம் சொல்லவேண்டும் என்று அடிக்கடி எழுதிவிட்டு நீங்களே இது போலீஸ் செய்த கொலை என்று எப்படி சொல்கிறீர்கள். அதை நீதிமன்றம் சொல்லவேண்டும்.விசாரணைக்கு காத்திருக்கவேண் டியதுதான். அதற்கு முன்பு கொள்ளைக்காரர்தா ன், அவர்களை சுட்டது சரி என்றும் சொல்லமுடியாது. போலீஸ்காரனுக்கு தன் உயிரை காப்பாற்றிக்கொள ்ள உரிமை இல்லை. செத்துதான் தன் கடமையை செய்யணுமென்றும் சொல்லமுடியாது. தேவை நீதி விசாரணை!
Quote
 
 
+2 #24 சோழன் 2012-02-27 12:45
தினமலம் கேவலாமாக நாறுகிறது! இவ்வளவு கேவலமாக கூட கட்டுரை எழுத முடியுமா? எப்பா! இதெல்லாம் ஒரு பொழப்பா? என்ன வகையான பொழப்பு இது? இப்படி எல்லாம் நீங்க பொழைக்கத்தான் வேணுமா? கேவலம்!
தினமலம் கருத்துக்கே வருவோம்! கிரிமினல் மடாதிபதி கைதிற்கு குடலைப்பிடுங்கு ம் அளவிற்கு நாரவாயால் கூவிநீர்களே அன்று அவனை என்கவுன்ட்டர் செய்து இருந்தாலும் மலத்தின் கருத்து இதுவாகவே இருந்திருக்குமா ?
தினமலம், கிரிமினல் மடாதிபதி, துக்ளக் சோ, இந்து ராம், இவர்களை பற்றி சவுக்கு செய்தி வெளியிட்டால், சவுக்குக்கு எத்தனை அர்ச்சனைகள்!
தெரியாம தான் கேக்குறேன்! இவனுங்களோட துர்நாற்றம் இவனுங்களுக்கு தெரிவதே இல்லையா? நாரப்பயளுங்க!
Quote
 
 
+3 #23 M.S.Chagla 2012-02-27 12:25
Dinamalam has always been anti-tamil, anti-reservation, anti-India and against minorities. They do not have even an iota of self-respect, vekkam, soodu, soranai, eenam. Ithallam avaalukku ethukku. But it has seen to it that whenever any party is in power, it does not hesitate to lick their ass. And they do not have any shame for doing it. Infact, they are proud of doing so. Even during the freedom struggle, they supported the Britishers only. All the attempt to form the INC is just an eye-wash to hoodwink the "Other" Indians (minus brahmin-banya-marvadi). Dinamalam's community gladly accepts to do the maama velai. Tiruchy dinamalam's officai parthal eppothum andha sori nai balaji thayoli collectorin mootharathai kudithu konde irupaan. This ass-hole will see to it that their community's lady "indira Gandhi College" Meena is always flashed across their newspaper. She will be in the news forever. This community had and is still doing many dangers to the Indian community at large from time immemorial. One such example is the sati, which is projected as if this evil system was a big blot on the landscape of West Bengal. The truth is not so. It was only a practice among the brahmins of bengal. So, a very minuscule minority incident had been blown out of proportions and projected that such a practice had been in existence among all bengalis and to which, Raja Rammohan Roy took the credit.
Dinamalathai nasukka vendum. Periyar's words only reinforces this view: Oru paappanaiyum, paambaiyum parthal, muthalil paappanai kola pannu. We should all do this in right spirit.
Quote
 
 
+5 #22 http://koothadivedda 2012-02-27 09:54
தினமலர் நிர்வாகம் என்கௌண்டர் கொலையை சரியென்று ஞாயப்படுத்த பெருத்த பிரயத்தனப்படுகி றது. இன்றைய தினமலர் ஒன்லைன் அதற்கு சான்று. திரிபாதிக்கும் தினமலருக்கும் ஏதாவது ரிலேஷன்ஷிப் இருக்குமோ என்று சந்தேகப்படும்பட ியாக. செய்தி தலைப்பு, ">உறுதி,, கொல்லப்பட்டவர்க ள் பிரபல கொள்ளையர்கள்தான ், பல மானிலங்களில் கைவரிசை காடியது அம்பலம்
Quote
 
 
-1 #21 Thamizhan 2012-02-27 09:51
Dear Mr. Savukku,

The people who have killed in the encounter are criminals. The punishment is required for them.

Hereafter don't write such articles in supporting the criminals.
Quote
 
 
+7 #20 VethuVettu 2012-02-27 09:32
தினமலம் ஒரு கேவலமான பத்திரிக்கை. :P
Quote
 
 
+7 #19 Zafar Rahmani 2012-02-27 06:34
மிகச்சிறந்த பதிலுரை.
காவல்துறையின் ஈரல் கெட்டுப்போச்சுன ்னு அவ்வப்பொது கருணாநிதியின் டயலாக்கை ரிப்பீட் செய்வது ஊடகங்களின் வழக்கம். இந்த கொலைவெறி காவல்துறையின் முழு பகுதியே அழுகி சீழ்பிடித்து எந்த பயனும் இல்லாத நிலைக்கு போய்விட்டதைத்தா ன் காட்டுகிறது.
ஸவுக்குக்கு பாராட்டுக்கள்
தினமலர் " ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் " ஆயிடுச்சு.
Quote
 
 
+3 #18 Perumal.P 2012-02-27 05:41
Good
Quote
 
 
+20 #17 sundawipro 2012-02-27 01:23
நாம் வேர்வை சிந்தி உழைத்து வங்கியில் பணத்தை சேமித்து வைத்தால் இந்த புண்ணியவான்கள் அதை கொள்ளைஅடித்து சுகபோகமாக வாழ்வார்கள்.அவர்களை சுட்டால் மனித உரிமை மகாத்மாக்கள் வரிந்து கட்டி கொண்டு வருவார்கள்.கொள்ளை அடிப்பது மனித உரிமையா ?ரவுடிகளுக்கும் கொள்ளைக்காரர்கள ுக்கும் பரிந்து பேசும், அதே நேரம் அவர்களால் பாதிக்க பட்டவர்களை பற்றி ஒரு கவலையும் படாமல் நடப்பது சரியா? மனசாட்சி என்று ஒன்று சவுக்குக்கு உள்ளதா!
Quote
 
 
+2 #16 nilamagan 2012-02-27 00:37
while dinamalar article may be one sided but even savukku's reply was not that powerful. It should be noted that while most of our readers oppose death as a punishment we also support something as a severe punishment.

It is easy and convincing to change people emotionally however it is also the utmost duty of media like savukku to make sure that they give news without biased views.

While we support human rights in all form it essential to see how the society has accepted the facts. for many of us it is a tea bench news and for the killed ones family it may be a bloody thing to remember.

knowingly or unknowingly savukku has gone down to a level of supporting the accused. please change it.

human life are priceless and so is journalism. please be unbiased all time. I oppose the killing and your article even if there would be thousands thumbs down.
Quote
 
 
+5 #15 Jaishankar 2012-02-26 23:27
Savukku,
Now a days you are pointing in your recent article jayalalitha's 66.5 crore. How much you received from karunanidhi's 1760000000000 crore.why you are not writing about this huge amount?
Quote
 
 
+4 #14 ஷாலி 2012-02-26 23:22
அட சண்டாளப் பாவிகளா! சட்டத்தின் படி நடங்க என்று சொல்வதை, தப்பு என்று கட்டுரை எழுதுகிறார்கள். துப்பாக்கி
வைத்திருப்பவன் எல்லாம் நீதிபதி ஆகக்கூடாது என்று கூறுவதை
தினமலர் எதிர்க்கிறது.

வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டிய கழிவு மலத்தை இன்னும் காசு கொடுத்து வாங்கவேண்டுமா?திரிபாதி போன்ற பிணம தின்னி கழுகுகளுக்கு தினமலம் சந்தனமாக மணக்கவே செய்யும்.

போலீஸ் போலிசாக இருக்கசொல்கிறோம ் பொறுக்கி மாதிரி இருக்கக்கூடாது. ஜனநாயகத்தில் ஆளுவோரின் ஏவல் நாய்களாக
போலீசார் மாறியது அவலம்.சட்டத்தின் ஆட்சிக்கு போலீசார்தான்
இங்கு சங்கு ஊதுகிறார்கள்.தினமலம் சவுண்டி அடிக்கிறது.
Quote
 
 
+20 #13 ஊர்க்குருவி. 2012-02-26 22:41
தினமலர் படுகொலைகளை ஊக்கப்படுத்துவத ில் ஏன் குறியாயிருக்கிற து?

இப்படியே போனால் இனிவருங்காலங்கள ில் நீதிமன்றங்களுக் கு வேலையிருக்காது. அத்துடன் வருங்காலங்களில் அரசியல்வியாதிகள ் கொள்ளையடித்தாலு ம் உடனடியாக சுற்றி வளைத்து என்கௌண்டர் செய்துவிட்டால் நாடு வளமாகும். வழக்கு செலவு நாட்டுக்கு மிச்சமாகும்.
Quote
 
 
+13 #12 Eleventh Sense 2012-02-26 21:04
அவன் பத்திரிகை விற்க என்ன வேண்டுமானாலும் செய்வான். இரண்டு சதம் இருந்துகொண்டு மீதி தொன்னுத்தி எட்டு சதத்தை வசப்படுத்தும் வர்க்கம் அவன்................. என்ன எழுதினாலும் வாங்கி படிக்கிற மக்கள் இருக்கிற போது, நடிகைகளின் தேவிடியாத்தனம் பற்றி எழுதினாலும் பொது மக்கள் யாரும் கண்டுகொள்ள போவதில்லை - என்கௌன்ட்டர் பற்றி எழுதினாலும் - இப்பிடி கூட இருக்கும் போல ..... என்று தான் நினைப்பார்களே தவிர, தங்கள் சிந்தனை லட்சத்தில் ஒருவருக்காவது வந்திருக்குமா என்பது சந்தேகமே ........ ஹட்ச் ஒஃப்ஃப் சவுக்கு. ஃஉஇச்க் குன் முருகன் இச் அ ரெவெஙெர்...... பெ சரெஃபுல் அப்ட் ஹிம்.
Quote
 
 
+24 #11 varnan 2012-02-26 20:13
தினமலர் எப்போதுமே ஒடுக்கப்பட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு எதிராகவே செயல் பட்டு வருகிறது... ஆனால் இந்துத்துவா மற்றும் பார்ப்பன பின்னணியினரை பற்றிய செய்திகள் வரும்போது மட்டும் அதன் கரிசனமே தனி.. போலி மடாதிபதி காதல்மன்னன் சங்கராச்சாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது அந்த செய்திகளை திரித்து தினமலர் வெளியிட்டு வந்ததையடுத்து நான் தினமலர் வாங்குவதை நிறுத்தி விட்டேன் .. தமிழர்கள் அனைவரும் அக்கிரமத்திற்கு துணை நிற்கும் அக்கிரகாரத் தினமலரை புறக்கணிக்க வேண்டும்..
Quote
 
 
-15 #10 Vin 2012-02-26 19:22
You are really sick and I lost all the due respect. How many criminals are punished properly by Indian Penal system? If they were punished then they would have not involved in other crimes. Anyway after reading your article,i feel, its waste of time in visiting your website.
Quote
 
 
+28 #9 karikaalan 2012-02-26 19:15
தினமலரை சார்ந்துள்ள சாதி வெறியர்கள், தங்கள் இனத்தை தவிர மற்ற யாரையும் கொல்லப்படுவதை ஆதரிப்பார்கள் !, இந்த விடயத்திலும் அதை தான் நிரூபிக்கிறார்க ள். இந்திய நாட்டிலேய இவர்கள் மைனாரிட்டி மற்றும் வந்தேறிகள் ஆனால் இந்திய மண்ணின் மைந்தர்களான மற்ற இன மக்களையும், பிற மதத்தினரையும் முடிந்தவரை தட்டி வைக்க தொடர்ந்து தங்கள் கிரிமினல் மற்றும் குள்ள நரி தந்திரத்தை இவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த நாள் முதல் செய்து கொண்டுதான் உள்ளார்கள். எங்கே தங்கள் மைனாரிட்டி மற்றும் வந்தேறிகள் என்ற விடயம் இந்திய பூர்வ குடிகளுக்கு தெரிந்து விடுமோ அப்போது நம்மை நாட்டை விட்டு துரத்தினால் என்னாவது என்ற முன் எச்சரிக்கையில் எப்போது ஒரு தேசிய பிரச்சனையை திரை மறைவில் கிளப்பிவிட்டு, இந்தியி பூர்வ குடிகளை ஒருவரோடி ஒருவர் மோத விட்டு இவர்கள் பிழைப்பு நன்றாக நடக்கிறது. வந்தேறிகளான இவர்கள், இந்தியா ஏதோ இவர்கள் சொந்த நாடுபோல வாய் கிழிய பேசுவார்கள், ஆனால் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் உரிமைகளையோ, ஒடுக்கப்பட மக்களின் உரிமைகளையோ பற்றி வாய் திறக்க மாட்டார்கள், ஏனெனில் பெருவாரி மக்கள் ஒடுக்கப்படுவத்த ின் மூலமே இவர்கள்தானே , பின்னே எப்படி ஆதரிப்பார்கள்? ஆகவே தினமலர் கட்டுரையில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, இது இவர்கள் குள்ளநரி புத்தியின் மற்றொரு கட்டுரை, அவ்வளுவுதான்.
Quote
 
 
+17 #8 Jamal 2012-02-26 19:08
what a fantastic article with line-by-line comments...!!! You have triggered your bullets on Tripaathi and DINAMALAM...!! Well done savukku..!!!
May i know why were you on jail...?
Quote
 
 
-11 #7 kannansa 2012-02-26 19:02
Savukku Avargale
I frequently read your articles on your site. Ever since the AIADMK government took over, your reporting has been one sided in that everything is slanted against Jayalalitha and her government. You are showing as much bias in your article as you are blaming others like Dinamalar. On this particular article, you have rightly opposed the killing of the 5 men involved in the bank crime. Have you stopped to think about the lives they could have taken of the poor public during the bank heist if something had gone wrong? Remember, these guys had guns with them at the time of the crime...If that had happened what would have been your response? Please desist from writing articles when you are blinded by rage and bias...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 325 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7611
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week76863
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month279595
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12801714