முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
விடுதலைப்புலி போட்ட அதிரடி மனு! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 9
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 01 நவம்பர் 2010 11:28

 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இப்போது உயிருடன் இல்லை...புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துக்கொண்டிருக்க... இந்தியாவில் புலிகள் இயக்கத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தத் தடையை நீக்கக் கோரும் வழக்கு விசாரணையால் இந்த தீர்ப்பாயங்கள் களைகட்டியிருக்கின்றன.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது முன்னாள் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே புலிகள் இயக்கத்துக்கான தடையை எதிர்த்து வழக்குப் போட முடியும் என்று ஏற்கெனவே தீர்பாயம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,தமிழக மக்கள் உரிமைக்கழக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விஜயரத்தினம் சிவநேசன் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கில் திடீர்த் திருப்பம் ஏற்பட்டது.


விஜயரத்தினம் சிவநேசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் சாராம்சம் இதுதான்.

‘‘1983 முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருக்கிறேன்.

போட்டோகிராபராகவும் பணியாற்றுகிறேன்.கடந்த 1988-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 80பேரில் நானும் ஒருவன்.கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் இருந்த இந்திய ராணுவ முகாமுக்கு என்னை அனுப்பினர்.

1990-ம் ஆண்டுஇந்திய ராணுவம் என்னை விடுதலை செய்தது. அதே ஆண்டு சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் புகுந்தேன்.அங்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கேமராமேனாக பணியாற்றினேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போரின் போது இறந்து விட்டதாகவும், அந்த இயக்கத்தை தோல்வியடையச் செய்துவிட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

இந்நிலையில்,கடந்த 2010மே 14-ம் தேதி இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்துள்ளது.

இது சரியல்ல.புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாக இலங்கையே கூறும்போது, இதுபோன்ற தடையை இந்தியா விதிக்க முடியாது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இலங்கையில்தான் தனி ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் போராடினார்கள்.இந்தியாவில் அத்தகைய கோரிக்கையை வைத்துப் போராடவில்லை.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி முதல் 2010-ம் ஆண்டு மே 14-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

இலங்கை அகதிகள் போர்வையில் விடுதலைப்புலிகள் இந்தியாவிற்குள் ஊடுருவலாம் என்ற காரணத்தை மத்திய அரசு விளக்கமாகக் கூறியுள்ளது.

தமிழக அரசு பலத்த சோதனை செய்த பிறகே இலங்கை அகதிகளை தமிழகத்துக்குள் அனுமதிக்கிறது.இப்படி இருக்க... விடுதலைப்புலிகள் ஊடுருவல் என்ற பேச்சுக்கே இடமில்லை’’என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார் விஜயரத்தினம் சிவநேசன்.

அதோடு, விஜயரத்தினம் சிவநேசன் இறுதியாக ‘அணுகுண்டு ரேஞ்சுக்கு’ ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

‘‘இந்த தீர்ப்பாயத்தில் தமிழக அரசின் சார்பிலும், மத்திய அரசின் சார்பிலும் 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இரு சாட்சியங்களின் அடிப்படையில் தான் புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு தடை விதித்துள்ளது.

உண்மையான நீதி கிடைக்க இரு அரசு சாட்சிகளையும் நான் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.இரு சாட்சிகளிடம் நடத்திய விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எனக்குத் தர, இந்த தீர்ப்பாயம் மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும்.நான் விசாரிக்க வேண்டிய இரு சாட்சிகளையும் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட வேண்டும்!’’


இது தான் விஜயரத்தினம் சிவநேசனின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த மனு மீதான விசாரணையை ஏற்பதா அல்லது வேண்டாமா..? என்ற முடிவை டெல்லி தீர்ப்பாயம் நவம்பர் 1-ம் தேதி அறிவிக்கும் என்றார் நீதிபதி விக்ரம்ஜித்.

அரசுத் தரப்பு சாட்சிகளை தானும் விசாரிக்க வேண்டும் என்ற விஜயரத்தினம் சிவநேசனின் கோரிக்கை அரசுத் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.‘புலி வாலைப் பிடித்த கதை’யாகிவிட்டதாக பலரை இந்த மனு புலம்ப வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

தீர்ப்பாய நீதிபதி விக்ரம்ஜித் முன்பு வியாழனன்று நடந்த விசாரணையில் தடையை நீக்கக் கோரும் வாதத்தில் பங்கேற்க வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் வாதாடினர்.இந்த வழக்கில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ஆஜரானார்.

‘தடையை நீக்கக் கோரி வழக்குத் தொடர புலிகள் இயக்க உறுப்பினர் அல்லது முன்னாள் உறுப்பினருக்கு மட்டுமே உரிமை உண்டு’ என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமி,‘வைகோவும்,நெடுமாறனும் புலிகள் இயக்க உறுப்பினர்களா...?’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘வைகோ, நெடுமாறன் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுவிட்டீர்களா..?’ என நீதிபதியைப் பார்த்து கேட்க, நீதிபதியோ, ‘இல்லையில்லை... விசாரணைக்கு ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்த வாதம்தான் இப்போது நடக்கிறது’ என்றார்.

‘இருவருக்கும் புலிகள் தரப்பில் வாதாட அனுமதி அளித்தால்...மத்திய அரசு தரப்பில் வாதாட என்னையும் இந்த தீர்ப்பாயம் அனுமதிக்க வேண்டும்’ என்று சுவாமி கூறியதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
 

Comments  

 
0 #15 Panivazhan 2010-11-29 17:08
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
0 #14 vaithees 2010-11-11 06:46
ungal karuthai naan ammothikiren... sirapaka eluthi irukiriigal
Quote
 
 
0 #13 ராஜேஷ் தேவேந்திரன் 2010-11-04 14:32
comments கொடுத்து இருக்கும் கோவிந்தராசு அவர்களுக்கு ;';';';;';';';';; நான் சொல்லுவது என்ன வென்றால் முன்பு தமிழின தலைவர் யார் என்று கேட்டால் அது உங்க கருணாவை தான் சொல்லுவார்கள் தமிழர்கள் ஈழதிலே ஒரு பெரிய இன அழிப்பே நடக்கும் போது இவர் நாடகம் ஆடி கொண்டு இருந்தார் முத்து குமார் என்ற தமிழின போராளி தன் உயிரை மாய்த்து கொண்டானே நீங்கள் ஆட்சியை விட்டு இறங்க வேண்டாமா அப்படி நீங்கள் ஆட்சியை விட்டு இறங்கினால் மறுபடியும் நீங்கள் இந்த காங்கிரஸ் தயவு இல்லாமல் ஆட்சி பிடித்து இருக்கலாம் டில்லி ஆட்சியும் கவுந்து இருக்கும் இப்போ வரலாறுல முத்து குமார் நிலைத்து விட்டான் உங்கள் தலைவர் எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் வரலாறு அவர் மூஞ்சில காரி துபபாதா? வரலாறு மிக முக்கியம்
Quote
 
 
0 #12 Thambi 2010-11-04 14:30
சுவிசில் இந்திய மதவாதியின் குறான் எரிப்பு
மேலும்... www.thambi.tk
Quote
 
 
-1 #11 ஈனமுல்லவன் 2010-11-04 12:01
(தலைவர் கருனாநிதியை குறைகூரும் முன் அடுத்தவர் குறைகளையும் சொல்லுங்கள் தமிழ்நாட்டில் இப்போதுள்ள அரசியல்தலைவர்கள ில் இவர்தான் அடித்தட்டு மக்களுக்கு ஏதோ அவரானதை செய்கிறார் வேறுஒருவர் செய்தாலும் இன்னும் மோசமாகத்தான் இருக்கும் அப்புறம் உள்ளது போச்சுடா...னு பெருமூச்சுதான் விடமுடியும்) ஏன்யா, காலை மற்றும் மதியான சாப்பாட்டுக்கும ் இடையில் உன்னாவிரதம் என்ற போர்வையில் ஒரு நாடகம் நடத்தினாரே. ஒரு இனமே கொடூரமாக கொலை
செய்யப்படும்போத ு, பதவிக்காகவும், குடும்பத்துக்கா கவும் சூனியாகாந்தியின ் காலை நக்கினானே, இவனெல்லாம் தமிழினத்தலைவர் என்று எவன் சொன்னாலும் அவனை செருப்பால அடிக்கனும், நீ ஏண்டா துரோகம் செய்தாய்? என்றால், ஏன் அவன்க மட்டும் ஓக்கியமா? எண்று கேட்பதை நிருத்து.
Quote
 
 
-1 #10 ஈனமுல்லவன் 2010-11-04 11:56
(தலைவர் கருனாநிதியை குறைகூரும் முன் அடுத்தவர் குறைகளையும் சொல்லுங்கள் தமிழ்நாட்டில் இப்போதுள்ள அரசியல்தலைவர்கள ில் இவர்தான் அடித்தட்டு மக்களுக்கு ஏதோ அவரானதை செய்கிறார் வேறுஒருவர் செய்தாலும் இன்னும் மோசமாகத்தான் இருக்கும் அப்புறம் உள்ளது போச்சுடா...னு பெருமூச்சுதான் விடமுடியும்) ஏன்யா, காலை மற்றும் மதியான சாப்பாட்டுக்கும ் இடையில் உன்னாவிரதம் என்ற போர்வையில் ஒரு நாடகம் நடத்தினாரே. ஒரு இனமே கொடூரமாக கொலை
செய்யப்படும்போத ு, பதவிக்காகவும், குடும்பத்துக்கா கவும் சூனியாகாந்தியின ் காலை நக்கினானே, இவனெல்லாம் தமிழினத்தலைவர் என்று எவன் சொன்னாலும் அவனை செருப்பால அடிக்கனும், நீ ஏண்டா துரோகம் செய்தாய்? என்றால், ஏன் அவன்க மட்டும் ஓக்கியமா? எண்று கேட்பதை நிருத்து.
Quote
 
 
-1 #9 Pradeep_P 2010-11-02 23:41
waiting for nov 1
Quote
 
 
-3 #8 கோவிந்தராஜூ.பெ 2010-11-02 23:40
தலைவர் கருனாநிதியை குறைகூரும் முன் அடுத்தவர் குறைகளையும் சொல்லுங்கள் தமிழ்நாட்டில் இப்போதுள்ள அரசியல்தலைவர்கள ில் இவர்தான் அடித்தட்டு மக்களுக்கு ஏதோ அவரானதை செய்கிறார் வேறுஒருவர் செய்தாலும் இன்னும் மோசமாகத்தான் இருக்கும் அப்புறம் உள்ளது போச்சுடா...னு பெருமூச்சுதான் விடமுடியும்......
Quote
 
 
-2 #7 கோவிந்தராஜூ.பெ 2010-11-02 22:27
அதிமுக பொதுச்செயலாளர் ஜெ அவர்களை முதலில் சொல்லச்சொல்லுங் கள் தடையை விலக்கச்சொல்லி வைகோதான் அந்த அம்மையாரோடு இருக்கிறாரே...தேர்தல் நேரத்தில் மட்டும் இலங்கையில் தமிழர்க்கு தனிநாடு வேண்டுமென்று சொன்னாரே இப்பொழுது சொல்லச்சொல்லுங் கள் பார்ப்போம்...இவர் (ஜெ) பாரளுமன்றத்தேர் தலில் ஜெயித்திருந்தால ் காங்கிரசோடு போயிருப்பார்....அண்ணன் எப்ப தின்னையை விட்டு போவார் நாம் போய்காரலாம் உட்காரலாம் எனறு அனுதினமும் திட்டம் போடும் ஜெ மக்களுக்கு தமிழர்களுக்கு நல்லது செய்துவிடப்போகி றாரா....?
Quote
 
 
-1 #6 The Thalaivan 2010-11-02 21:14
ஹலோ .இத எல்லாம் குமுதம் ரேபோர்ட்டர் லைய படிதுகிறோம்... எலெக்சன் வருது ...நீர் முதலில் கருணாநிதி காலி பண்ணுற வழிய பாரும்.
Quote
 
 
-1 #5 Thambi 2010-11-02 20:25
அதே விடுதலைப்புலிகள ் பண்ணிய செயலை இங்கே பாருங்கள்.
நான் விடுதலைப்புலிகள ை ஆதரிக்கிறேன். ஆனால் வெளுத்ததெலஇலாம் பால் ஆக முடியாது.

www.thambi.tk
Quote
 
 
0 #4 tamilrishi 2010-11-02 11:56
the dream will come true oneday,that day the tamil national flag will be the top of the world.....
valga tamil....
Quote
 
 
+1 #3 EELAM 2010-11-02 01:11
EELAM WILL COME ! VAIKO THE GREAT NEDUMARAN THE GREAT ! SUBRAMANIYAN SWAMI THE SHIT
Quote
 
 
+2 #2 MDMK 2010-11-01 22:26
Super AAAPU ...Karunanidhikum .. soniyavukum..
Quote
 
 
+1 #1 kovai law college 2010-11-01 16:06
suprme court neethipathikale matthiya arasin kaippavaiyaga irukkum pothu vikramajith sen athanai meeri seyalpaduvaaraa yendra santhekam ullathu.supreme court supreme chief judge soniyavai meeri theerppayam seyalpadumaaa........
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 97 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2854
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week49669
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month262488
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12784607