|
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை இன்று சேனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படுத்தி இரண்டு பாகங்களாக வெளியிட்டு, அது உலகெங்கும் மனசாட்சி உள்ளவர்களை உலுக்கியிருக்கிறது. ஈழத்தில் போரை நிறுத்து என்ற முழக்கத்தோடு, 2008 அக்டோபர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதம் முதற்கொண்டு, மே 19ல் அனைத்தும் முடிந்து விட்டது என்று ஈழ ஆதரவாளர்கள் மனம் வெதும்பி, கையறு நிலை குறித்த வேதனையில் மவுனமாக அழுது கொண்டு இருந்த அத்தனை பேருக்கும், இந்தப் போர் குற்றங்கள் அப்போதே தெரியும்.

சேனல் 4ன் ஆவணப்படம், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் அனைவரும் அப்போதே வைத்த கோரிக்கை உலக நாடுகளே தலையிடுங்கள்… இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்துங்கள் என்பதுதானே… ? அப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், இந்த ஐக்கிய நாடுகள் அவையும், இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து நடத்திய இந்த இனப்படுகொலையை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருந்தன ?
2011 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் குழுவின் விசாரணை அறிக்கை இலங்கை களத்தை ஆய்வு செய்த பின்னர் வெளியிட்ட அறிக்கையில் சொல்லியிருந்தவை என்ன ?
இலங்கை அரசு கூறியது உண்மையல்ல. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க மனிதாபிமான நடவடிக்கையைத் தான் அரசு மேற்கொண்டது என்றும், அதனை ஒரு அப்பாவி கூட கொல்லப்படாத நிலையில் நிறைவேற்றுவதுதான் நோக்கம் என்றும் இலங்கை அரசு கூறியதற்கு நேர் மாறாகவே உண்மை இருக்கிறது என்பதையே எங்களிடம் உள்ள ஆதாரங்கள் தெளிவாக்குகின்றன. இந்த ஆதாரங்கள் உண்மையானவை என்று நிரூபிக்கப் பட்டால், அங்கு மிகப் பெரிய அளவிலான போர்க் குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளது உறுதி யாகும். இதனை இலங்கை அரசு படைகள் செய்துள்ளன. போர்க் காலத்திலும் மனித கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்ககோடு உருவாக்கப்பட்ட பன்னாட்டுச் சட்டங்கள் அனைத்துக்கும் எதிரான இந்தப் போரில் நடத்தப்பட்ட பெரியத் தாக்குதல் நிரூபிக்கிறது.
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை நடந்த இறுதி கட்ட யுத்தத்தில் பெருமளவில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3,30,000 மக்கள் நாளுக்கு நாள் சுருங்கி வரும் நிலப் பகுதியில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கடுமை யான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போரில் மக்கள் பெருமளவிற்கு கொல்லப் பட்டதை வெளியே கொண்டு செல்ல முயன்ற ஊடகங்களை இலங்கை அரசு மிரட்டி அடக்கி யுள்ளது. அப்படிப்பட்ட மிரட்டல்களுக்கு வெள்ளை வேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அரசு அறிவித்த 3 மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்கு வருமாறு போர் நடந்த பகுதியில் இருந்த மக்களை அழைத்துவிட்டு, அப்பகுதியின் மீதே இலங்கை அரசு படைகள் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளன. கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு, அப்படிப்பட்ட ஆயதங்களை பெருமளவிற்கு இலங்கை அரசு பயன்படுத்தியுள்ளது. ஐ.நா. அமைத்திருந்த உணவு வழங்குமிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமுற்றவர் களை அழைத்துச் செல்ல வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பலுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை யாவும், முன்னறிவிப்பு அளிக்கப்பட்ட பகுதிகளாகும். இறுதிக் கட்ட போரில் இலங்கை அரசு படைகளின் பீரங்கித் தாக்குதலிலேயே பெருமளவிற்கு மக்கள் கொல்லப்பட்டனர்.
வன்னிப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவ மனைகள் அரசு படைகளால் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளின் இருப்பிடங்கள் அனைத் தும் அரசுக்கு தெரிந்தவையே அவ்வாறிருந்தும் அவைகள் தொடர் தாக்குதலிற்கு உட்படுத்தப் பட்டுள்ளன. போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் எதுவும் சென்று சேராமல் திட்டமிட்டு தடுத்துள்ளது இலங்கை அரசு. உணவு, மருந்துப் பொருள்கள், அவசர அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் என்று எதையும் அனுமதிக்கவில்லை. போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியே இப்படிப்பட்ட உதவிகளை இலங்கை அரசு மறுத்துள்ளது. இதனால் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை பல பத்தாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக கடைசி இரண்டு நாட்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
போர் முடிந்த பிறகு தங்களுடைய கட்டுப்பாட் டிற்கு வந்த மக்களை மேலும் துன்புறுத்தலுக்கு இலங்கை அரசு ஆளாக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் என்ற ஐயத்திற்குள்ளானவர்கள் எவ்வித வெளி பார்வையாளர் கண்காணிப்பும் இன்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். விடுதலைப் புலிகள் என்ற அடையாளம் காணப்பட்டவர்கள் அப்போதே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட் டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். இவையாவும் இலங்கை அரசு அமைத்த ஆணையத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் இடம் பெயர்ந்த மக்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் நெருக்கமாக அமைக்கப்பட்ட முகாம்களில் சிறை வைக்கப் பட்டனர். குறைவான நிலப் பகுதியில் பல இலட்சக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப் பட்டதால் அங்கு மோசமான சூழல் உருவானது. அவர்களின் சமூக, பொருளாதார உரிமைகள் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதனால் பல உயிர்கள் பலியாயின. இந்த முகாம்களில் இருந்த பலர் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் என்ற ஐயப்பாட்டிற்குட் பட்டவர்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருப்பிடங்கள் தெரிவிக்கப்படவில்லை. அங்கு அவர்கள் மேலும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
எனவே, இலங்கை அரசு கீழ்கண்ட அத்து மீறல்களை செய்துள்ளதாக நம்பத் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நிபுணர் குழு முடிவு செய்கிறது:
பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பொது மக்களை கொன்று குவித்துள்ளது.
மருத்துவமனைகள் உள்ளிட்ட மனிதாபிமான பகுதிகளை குறி வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. மனிதாபிமான உதவிகளை மறுத்துள்ளது.
இடம் பெயர்ந்த மக்களிடமும், புலிகள் என்று ஐயப்பட்டவர்களிடமும் மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளது.
போர் நடந்த பகுதிக்கு வெளியே, ஊடகங்கள் மீதும், அரசை விமர்சித்தவர்கள் மீதும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளது.
மேற்கூறிய முடிவுகளுக்கு வந்த அந்த விசாரணை ஆணையம், கீழ்கண்ட பரிந்துரைகளை, வழங்கியிருந்தது.
போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித நல மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் குறித்து, பன்னாட்டு, மனிதாபிமான மனித உரிமை சட்டங்களின்படி நியாயமான விசாரணையை அரசு உடனடியாக துவக்க வேண்டும்.
வன்னி போரில் பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்கள் ஆகியோருக்கான குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். அரசு மற்றும் துணை ராணுவப் படையினரின் அத்து மீறல்களை நிறுத்துவது, போரில் இறந்த போனவர்களின் உடல்கள், அஸ்தி உள்ளிட்ட வற்றை உறவினர்களிடம் ஒப்படைப்பது, இறந்து போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களை உரிய மரியாதையுடன் எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்குவது, போரில் பிழைத்தவர் களுக்குத் தேவையான மனநல ஆலோசனை களைத் தருவது, முகாம்களில் வசிப்பவர்களை உடனடியாக விடுவிப்பது, மறுகுடியமர்வுப் பணிகளை மேற்கொள்வது, இடைக்கால நிவாரண உதவிகளைச் செய்வது போன்றவை இதில் அடக்கம்.
கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.
அவசர நிலையைத் திரும்பப் பெற வேண்டும், சர்வதேச சட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் மீது சட்ட ரீதியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் வழக்குத் தொடுப்பதற்கு குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும். கொடிய குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாதவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அரசே நிகழ்த்தும் வன்முறைகளை நிறுத்த வேண்டும். மக்கள் கூடுவதற்கும், இடம் பெயர் வதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
அய்.நா. மனித உரிமைக் குழு இலங்கையின் போர்க் குற்றங்களை மறைத்து, ‘உள்நாட்டுப் பிரச்சினையில் பிற நாடுகள் தலையிடக் கூடாது’ என்று நிறைவேற்றிய தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இனப் பிரச்னை, பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்த கடுமையான போர் உள்ளிட் டவை தொடர்பாக அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
இறுதி கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தனது பொறுப்பையேற்று, அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் சிறப்பு கவனம் அளிக்கப்பட வேண்டும்
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு, உலகெங்கும் இலங்கையின் மீது போர்க்குற்றம் புரிந்ததற்கான குற்றச்சாட்டுகள் பெருகத் தொடங்கியதும் இலங்கை அரசே கண்துடைப்பு நடவடிக்கையாக (Lessons Learnt and Reconcialiation Commission) கற்ற படிப்பினைகள் மற்றும் சமரசத்துக்கான குழு என்ற ஒரு குழுவை ஏற்படுத்துகிறது. அந்த ஆணையம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவால் ஏற்படுத்தப் பட்ட குழு என்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை காட்சிகளாகப் பார்த்தவர்கள், இப்படிப்பட்ட ஒரு கொடுமைகளை அரங்கேற்றிய ஒரு அரசு, அதன் மீதே நியாயமான விசாரணை நடத்துமா என்பதை நன்றாகவே புரிந்திருப்பார்கள். அந்தக் குழு போரில் நடந்த மனித உரிமை, போர்க் குற்ற அத்துமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நோக்குடனோ அல்லது இப்போருக்கு அடிப்படையான காரணங்களை ஆராயவோ இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை. மாறாக, நடந்தது நடந்து விட்டது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தொனியிலேயே அந்த ஆணையம் நடைபெற்றது.
இந்தச் சூழலில்தான் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தைப் பார்க்க வேண்டும். அந்தத் தீர்மானம் சொல்வது என்ன ?


Taking note of the report of the Lessons Learnt and Reconciliation Commission of Sri Lanka and its findings and recommendations, and acknowledging its possible contribution to the process of national reconciliation in Sri Lanka,
படிப்பினைகள் மற்றும் சமரசத்துக்கான குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்று, இலங்கையில் தேசிய அளவிலான சமரசத்துக்கான திட்டங்களை ஏற்று,
Welcoming the constructive recommendations contained in the Commission’s report, including the need to credibly investigate widespread allegations of extra-judicial killings and enforced disappearances, demilitarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, re-evaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement on the devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all and enact rule of law reforms,
அந்த சட்டவிரோதமான படுகொலைகளை விசாரிக்கவும், காணாமல் போனவர்களைப் பற்றி விசாரிக்கவும், வடக்குப் பகுதியில் ராணுவத்தைக் குறைக்கவும், சமரசம் செய்வதற்கான அமைப்புகளை ஏற்படுத்தவும், தடுப்புக் காவலில் வைக்கப்படுவது தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்யவும், ஏற்கனவே இருந்த சுதந்திரமான அமைப்புகளை சீரமைக்கவும், அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலவும், ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆரோக்கியமான பரிந்துரைகள் வரவேற்கப் படுகின்றன.
Noting with concern that the report does not adequately address serious allegations of violations of international law,
இந்த அறிக்கை இலங்கை சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது குறித்து சரியாக ஆராயாத காரணத்தால்,
Calls upon the Government of Sri Lanka to implement the constructive recommendations made in the report of the Lessons Learnt and Reconciliation Commission and to take all necessary additional steps to fulfil its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans;
இலங்கை அரசாங்கம் படிப்பினைகள் மற்றும் சமரசத்துக்கான குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தவும், அனைவருக்கும் நீதி, சமத்துவம், மற்றும் சமரசம் ஏற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை அரசை கேட்டுக் கொள்கிறது.
Requests the Government of Sri Lanka to present, as expeditiously as possible, a comprehensive action plan detailing the steps that the Government has taken and will take to implement the recommendations made in the Commission’s report, and also to address alleged violations of international law;
மேலும் இது போன்ற நடவக்கைகளை எடுப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கவும், அந்தக் குழுவின் அறிக்கை அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தேவையானவற்றை செய்யவும் இலங்கை அரசை வலியுறுத்துகிறது.
Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical assistance on implementing the above-mentioned steps, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்புப் பிரிவு அலுவலகம், இது தொடர்பாக இலங்கை அரசை வலியுறுத்தவும், இலங்கை அரசுக்கு தேவையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கவும், இது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் தொடர்பாக 22வது கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவும் வலியுறுத்தப் படுகிறது.
இதுதான் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம். இதில், இலங்கை அரசு மீதான போர்க்குற்றங்களுக்கான கண்டனமோ, சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்கான வலியுறுத்தலோ எங்கே இருக்கிறது ?
ஐக்கிய நாடுகள் அவை அமைத்த மூன்று நபர் விசாரணைக் குழு, இலங்கை அரசு, நடத்திய இன அழிப்புப் போர் குறித்து தயாரித்து வெளியிட்ட விரிவான அறிக்கையை அடிப்படையாக வைத்து, இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தால், அதை உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால், அனைவரின் கண் முன்பாக ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்த ஓநாயே ஆடுகளுககாக விசாரணை நடத்த வேண்டும், ஆடுகளின் புணர்வாழ்வுக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று எடுத்து வரப்படும் ஒரு தீர்மானம், இலங்கையைப் பாதுகாப்பதற்காகவே அமெரிக்கா இந்த வேலைகளைச் செய்கிறதோ என்ற சந்தேகத்தை வலுவாக ஏற்படுத்துகிறது.
தெற்காசிய பிராந்தியத்தில் வலுவாக கால் ஊன்ற இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் இலங்கையில் கால் ஊன்றுவதன் மூலமாக, இந்தியாவையும், தெற்காசிய பிராந்தியத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வரவதற்கான அமெரிக்காவின் முயற்சியோ என்ற சந்தேகமும் எழுகிறது.
உலகெங்கும் அணு உலைகளுக்கு கடுமையான எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால், அமெரிக்காவில் உள்ள தனியார் அணு உலை அதிபர்கள் தங்கள் அணு உலைகளை விற்பனை செய்வதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர். இந்தியாவும், ரஷ்யாவோடு அணு உலை தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ளதால், இலங்கையோடு இணக்கமாக இருப்பதன் மூலம், இலங்கையை அணு உலை மற்றும் ஆயுதங்களுக்கான சந்தையாக மாற்ற அமெரிக்காவின் முயற்சியோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆண்டாண்டு காலமாக உலகெங்கும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு காரணியாக விளங்கும் அமெரிக்கா, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு மவுன சாட்சியாக விளங்கிய அமெரிக்கா, இனப்படுகொலைக்கு ஆயுதங்களை வழங்கி கூட்டாளியாக விளங்கிய இந்தியாவை கண்டிக்காத அமெரிக்கா, திடீரென்று தமிழர்கள் மீது கரிசனம் கொண்டு, இப்படி ஒரு தீர்மானத்தை எடுத்து வருவதே மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு அங்கமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதன் மூலம், இலங்கையையும் காப்பாற்றலாம், இந்தியாவையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம், தனக்கும் கால் ஊன்ற ஒரு இடம் கிடைத்து விடும் என்ற சதியாலோசனையின் ஒரு பகுதியோ இந்தத் தீர்மானம் என்றே தோன்றுகிறது.
தமிழர்களைக் கொல்ல ஆயுதங்களை இந்தியா வழங்கிக் கொண்டிருந்த போது, அதற்க ஆதரவளித்துப் பேசி வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறுவது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
உலகமே ஒன்று கூடி வஞ்சிக்கப் படும் இனமாக தமிழினம் மட்டும் மாறிப்போனது ஏன் என்ற கேள்விதான் விடை கிடைக்காமல் தடுமாறுகிறது.
|
Comments
அவருக்கு முஸ்லிம்கள் மீது கொண்ட வெறுப்பு ஒரு தகவலை சரிபார்க்கக்கூட முடியாமல் முடியாமல் கண்ணை மறைக்கின்றது.
ராஜீவ் காந்தியின் தந்தை பெரோஸ் கான் முஸ்லிமாம்.
இல்லை நண்பரே அவர் பார்சி மதத்தை சேர்ந்தவர்அவர் முழுப்பெயர் .
FEROZE JEHANGIR GHANDY.-Zoroastrianism
நண்பரே! உங்களின் வெறுப்பை புரிந்து கொள்கின்றேன். இஸ்லாம் இங்கு வந்ததால்தான் கணிசமானா மக்கள் சூத்திரபட்டத்தி லிருந்து தப்பிவிட்டார்கள ். இதுதானே உங்கள் கோபம்.
மேலும் நீங்கள் 3% இருப்பதாலே நாட்டில் ஒரு எள்ளலும்
கிள்ளளும்,குடும ியை இழுக்கும் நகுதல்.இதை மாற்றுவதற்கு எளிய வழி.தாழ்த்தப்பட்ட சேரிக்கு போய் அனைத்து மக்களையும் திரட்டி நேராக அக்கிரகாரத்திர் க்கு அழைத்து வாருங்கள்.அல்லது
ஆரிய சமாஜமாவது அழைத்து வாருங்கள்.அனைவருக்கும் சந்தியாவந்தனம் மூன்று வேளை செய்யச்சொல்லி பிரமாபதேசத்தை காதில் சொல்லிக்கொடுத்த ு,அப்படியே ஒரு பூணூலையும் போட்டு விட்டால் பிரச்சினை முடிந்துவிட்டது .
பிரமச்சாரிக்கு மூன்றுபுரி பூணூல்,கிரகஸ்தர ுக்கு ஆறுபுரி பூணூல்,வயதானவர் களுக்கு ஒன்பது புரி.அவ்வளவுதான்.
ஒரேஒரு சிக்கல்,அதாவது பிரமாபதேசம்,காய த்திரி மந்திரம்,பூணூல் போட்டபிறகு அவர்களை எந்த கோத்திரத்தில் சேர்ப்பது சப்தரிஷி அல்லது அஷ்டரிஷி பிறகு கானம் உளளது.அட்லீஸ்ட் சவுண்டி பார்ப்பான் கோத்திரத்திலாவத ு சேர்த்து எள்ளல் நகுதலை அந்நியன் தடுக்கலாம்.செய்வீர்களா?
ஸ்ரீ. பூபதி,
ராஜீவ் காந்தியின் தந்தையார் "ஃபெரோஸ் கான்" என்னும் இஸ்லாமியர். அன்னையார் இந்திரா பிரியதர்ஷனி. அதனால் ராஜீவ் காந்தி என்ற முஸ்லீம் தான் காரணம் என்று சொல்லலாமா? ராஜீவ் காந்தி அன்னை சோனியாவை சர்ச்சில் திருமணம் செய்தபோது கிறிஸ்தவராக மாற்றப்பட்டார். அதனால் கிறிஸ்தவர்தான் காரணம் என்று சொல்லலாமா?
கிறிஸ்தவன்தான் காரணம், முஸ்லீம்தான் காரணம், பார்ப்பன் தான் காரணம் என்பதைவிட, நாம் ஒற்றுமை இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்று சொல்லலாமா?
எல்லாம் பிராமண நாளிதழ்கள் என்று சொல்ல முடியாது. தினத்தந்தி, தினத்தூது முதலியவை கிறிஸ்தவர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா வாட்டிகனின் கைக்கூலி.
சரி, அதைவிட, விடுதலைப் புலிகள் நாதியற்றவர்கள், அது இது என்று இஸ்லாமியர் திட்டினாலும் ஏன் உங்கள்ளுக்கு உறைக்கவே செய்வதில்லை?
http://3.bp.blogspot.com/_WkHZDYl76MM/SQH9L3EYFMI/AAAAAAAAEQ4/6dFMSo_oux4/s1600/pseudo.JPG
பொறியியல் படித்த 160 பேரில் 121 பேர் பார்ப்பனர்கள்.1498 ஆசிரியர்களில் 1094 பேர் பார்ப்பனர்கள்.????///////////////////////////////////////////////அமெரிக்கவில் வேலை செஇஉம் முக்கவசிபெர் இந்தியர்கல் ஷலி இதர்க்கு என்ன உமது பதில்??//???
நீங்கள்,
1 ) முஸ்லீம்கள் புலிகளுக்கு பத்து வருடம் முன்பு உயிர்பிச்சை, சோற்று பிச்சை கொடுத்ததாக எழுதினாலும்,
2) பத்து நிமிடம் முன்பு பங்களாதேஷ், இந்தோனேஷியா, கத்தார், சவுதி ஆகிய எல்லா முஸ்லீம் நாடுகளும் இலங்கை தமிழர்களைக் கொன்றது சரியே என வாக்களித்தாலும் ,
3) இலங்கை முஸ்லீம்கள், தமிழர்களைக் கொல்ல பாகிஸ்தான், பங்களாதேஷிடம் உதவி கேட்டதற்கு காரணம் புலிகள் முஸ்லீம்களைக் கொன்றதுதான் என்றாலும்
தமிழர்களுக்கு சொரணை இருக்காது. ஆனால் நீங்கள் பார்பனரைத் திட்டுகிறீர்கள் பாருங்கள், இது ஒன்றே போதும். அவர்களுக்கு உங்களைப் பிடித்துப் போய்விடும். நீங்கள் எவ்வளவு கேவலப் படுத்தினாலும் முஸ்லீம் என்பதனால், பெரியார் ஜின்னாவை நக்கியது போல் தமிழர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள். வியந்து பாராட்டுவார்கள் .
காரணம்: "நகுதலும் இலமே; வியத்தலும் இலமே" என்பதை அவர்கள் மறந்துவிட்டார்க ள்.
நான் சொல்ல வந்ததை தெளிவாக நிரூபித்ததற்கு நன்றி.
-----
Unmail wrote:
//புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிரு ந்தும் இலங்கை இராணுவத்திடமிரு ந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.
புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில் , தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.//
Quoting ஷாலி:
நான் மூன்று பார்ப்பனர்கள் என்று எழுதினேன்.நீங்கள் அதை
பிராமணர்கள் என்று எழுதி உங்களுக்கு நீங்களே ததாஸ்து செய்து கொள்கிறீர்களா?
நீங்கள் படித்த சங்க இலக்கியத்தில் பார்ப்பன பதமே இல்லையா?
உங்கள் பாரதிகூட “பேராசைக்காரனடா பார்ப்பான்,..பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே” என்று எழுதியிருப்பதை படித்ததில்லையா?
பார்ப்பான் என்று தமிழ் நீச பாஷையில் சொல்வது அன்னியவாளுக்கு ஆகாதோ,
பிராமணர் என்று தேவ பாஷையில் சொன்னால்தான் இனிக்குமோ!
உங்கள் இரட்டை வேடத்தை பாவேந்தர் அழகாக சொல்வார்.
‘வீட்டிலே துத்தம் என்பார்,வெளியில ே தண்ணீர் என்பார் பிழைப்புக்காக, உன் போல் கிள்ளாய்!...
அவருக்குப்பிடித ்தது ராமனும்,கண்ணனும ்.
தெய்வபிறவிகளை மனிதர்களோடு ஒப்பிடவேண்டாம் என்று நாம் சொல்வதை.அவர் மறுத்து,ராமனை சக மனிதராகப் பார்க்கச்சொன்னா ல்,அப்படியே பார்ப்போம்.
“குகனோடு ஐவரானோம்” என்று “நான் அரசன்”,நீ படகோட்டி “
என்று சாதி வித்தியாசம் பார்க்காமல் அனைத்துக்கொள்கி றார் ராமன்”....சரிதான்.நாம் கேட்பது.
படகோட்டியை அணைத்துக்கொள்ளு ம் ராமன்,சூத்திரன் சம்பூகனை அடித்துக்கொன்றத ு ஏன்? அவாள் சாதியை தவிர்த்து வேறு எந்தசாதி படித்தாலும் ராமன் அனைத்து கொல்லுவார்.
அந்நியனுக்கு பெரியாரும் அண்ணாவும் கசப்பதற்க்கு காரணம் உண்டு.ஒரு சின்ன புள்ளி விபரம்.
1911 ம் ஆண்டில் சென்னை பல்கலை கழகத்தில் இளம்கலை பட்டம் பெற்ற 15,209 பேர்களில் 10,269 பேர் பார்ப்பனர்கள்.முதுகலை பட்டம் பெற்ற 511 பேர்களில் 389 பேர் பார்ப்பனர்கள்.சட்டம் படித்த 54 பேர்களில் 48 பேர் பார்ப்பனர்கள்.
பொறியியல் படித்த 160 பேரில் 121 பேர் பார்ப்பனர்கள்.1498 ஆசிரியர்களில் 1094 பேர் பார்ப்பனர்கள்.
இந்தப்பின்னணியி ல் தோன்றி வளர்ந்து இடஒதுக்கீடு பெற்று தந்த திராவிட பெரியாரும் அண்ணாவும் அந்நியனுக்கு தீண்டத்தகா தவர்களே!......இன்னும் வரும்.
ஷாலி,
நீங்களும், என்ற பெயரில் எழுதியவரும் எல்.டி.டி.யினர் முஸ்லீமளுக்கு செய்த அராஜகங்களாக பெரிய லிஸ்ட் போட்டு அதில் "ஆதரங்களுடன் நிரூபிப்போம்" என்று எழுதினீர்கள். கொன்றவன் தாடிக்கும் இளைச்சவன் குடுமிக்கும் முடிச்சு போட்டு, இப்போது இதற்கெல்லாம் காரணம் மூன்று பிராமணர்கள் என்கிறீர்கள். யார் அந்த மூவர்? அல்லது தமிழர்களைக் கொன்றவர்கலான ராஜபக்சே, சீனா கம்யூனிச தலைவர் ஹு ஜிண்டாவோ, பங்களாதேஷ் ஷேக் ஹசீனா ஆகியோருக்கும் பூணூல் மாட்டி விட்டீர்களா?.
ஷாலி,
நான் தமிழன். சங்கத் தமிழைப் படிப்பேன். உங்களுக்கு தமிழ் பிடிக்கவில்லை என்றால் உருது பாஷையில் எழுதுங்கள்.
உங்களிடம் எதனால் முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் ஏன் சண்டையிட்டார்கள ் என்று கேட்டிருந்தேன். அதற்கு என்னைப் போல் தமிழாவது சொல்லிக் கொடுக்க வேண்டாம், கொஞ்சம் உருது, அரேபிய மொழிகளை வைத்தாவது பதில் சொல்லுங்களேன்.
WHAT THE HELL YOUR DOING?WE HAVE ENOUGH PEOPLES IN TAMILNADU TO SEPARATE MUSLIMS AND HINDUS...
I WAS TALKING ABOUT ANNIYAN COMMENTS.WE DON'T HAVE ANY PROBLEMS TOGETHER BUT YOUR THE RESPONSE FOR IT.YOU HAVE TO THINK TWICE BEFORE ALLOW THE COMMENTS TO PUBLISH TO PUBLIC.
OR YOU TOO STARTED TO DO THAT WORK?IF YOU HATE MUSLIMS AND COMMUNISTS ???
ANSWER ME IF YOUR REAL MAN...OR I KNEW LOTS OF HINDU BAD PERSONS HISTORY YOU CAN POST IT TOO...WAITING FOR YOUR ANSWER
இவர் விமர்சனம் செய்யும் பெரியார்,அண்ணா, ஜின்னா அனைவரும் மானிட பிண்டங்களே, இவர்களோடு அவரது
இஷ்ட தெய்வம் பகவான் ஸ்ரீ ராமனை ஒப்பிடுவது அறிவீனம்.
கருத்தை திசை திருப்புவதில் மனு மக்கள் கில்லாடிகள்.
ஒரிஜினல் தமிழராக நடிக்க முயற்சி செய்தாலும் அவரது
பூணுல் வெளியே தலைகாட்டிவிடுகி றது.
சங்க கால தமிழ் பண்பாட்டை ராமர் பாலத்தின் மூலம் இணைக்க
முயற்சி செய்கிறார்.
ஈழத்தமிழர்களின் இன்றைய துயரங்களுக்கு முழு முதல் காரணம்
மூன்று பார்ப்பனர்களே! இந்திய அரசுப்பார்ப்பனர ்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக தமிழ் இயக்கங்கள் மாறியதன் இறுதி முடிவே இன்றய அவலம்.
“நான் எப்போதும் ஹிந்துக்களும் தமிழர்களும் ஒன்றுதான்”
என்று பொய்யுரைக்கும் அந்நிய ராமனை அடையாளம் கண்டு கொள்வோம்.
நான் எப்போதும் ஹிந்துக்களும் தமிழர்களும் ஒன்றுதான்... வெவ்வேற கிடையாது; கம்யூனிஸ்டுகளும ், இசுலாமியர்களும் பலம் வந்துவிட்டால் தமிழர்களைக் கொள்ள ஆரம்பித்துவிடுவ ார்கள் என்று சொன்னேன். இதோ பெரியாரல் பாராட்டப்பட்ட இசுலாமியரும், கம்யூனிஸ்டுகளும ் அடிக்கும் கூத்து . அமெரிக்கா இலங்கையின் மீதான போர்க்குற்ற தீர்மானங்களுக்க ு வாக்களித்த பட்டியல் இதோ. ஏன் கம்யூனிச, இஸ்லாமிய நாடுகள் மட்டும் தமிழர்களுக்கு எதிராக, சிங்கள வெறியர்களுக்கு ஆதரவாக வோட்டுப் போட்டிருக்கின்ற ன? (இதைத் தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் மறைத்துவிடும். சவுக்குக்கு மட்டுமே இதை வெளியிடும் நேர்மை உண்டு. சவுக்கு இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவீர்களா?)
24 - YES -- Action should be taken against Srilanka
Austria
Belgium
Benin
Cameroon
Chile
Costa Rica
Czech Republic
Guatemala
Hungary
India
Italy
Libya
Mauritius
Mexico
Nigeria
Norway
Peru
Poland
Republic Moldova
Romania
Spain
Switzerland
United States of America
Uruguay
8 - Abstained:
Angola
Botsswana
Burkina Faso
Djibouti
Jordan
Kyrgzystan
Malaysia
Senegal
15 - No: -- Srilanka did not do anything wrong:
Bangladesh
China
Congo
Cuba
Ecuador
Indonesia
Kuwait
Maldives
Mauritania
Philippines
Qatar
Russia
Saudi Arabia
Thailand
Uganda
ஈழம் தமிழர் நம் திருநாடு,,
விடிய விழிப்போம் எப்போதும்,,
யார் பூண் பழி— என் தமிழா ..
என் தாய் தந்தயரையும்,,
எங்கேய் தொலைத்தாய்
நெஞ்சு வெடிக்குது கண்கள் நோவுது
கைகள் பதறுது,,
பிஞ்சு மழலையும் கற்கள் குடிசையும்
காணக் கிடைகலியெய்,,,
ஈழம் யார் நாடு
-என் தம்பி தங்கையர் என் ரத்தமும்
எங்கேய் என் தமிழா ?
எப்போது பிறப்பார் நம் தாய் தந்தையர்
மீண்டும்?
ஈழம் தமிழர் நம் திருநாடு
விடிய விழிப்போம் எப்போதும்,,,..////????///
"வியத்தலும் இலமே" என்று சொல்லி, தமிழர்களின் மிகப்பெரிய பலஹீனத்தை, குஷ்பூவுக்கு கோவில் கட்டுமளவுக்கு நம் பகுத்தறிவு வேலை செய்வதை, நம்முடைய ஆட்சியாளர்கள் கேவலமானவர்கள் என்று தேர்ந்தும் அவர்களின் ஒரு சில திறமைகளைப் பார்த்து வியந்து அவர்கள் என்ன செய்தாலும் சொரணை இல்லாமல் கைதட்ட, ஆபாசங்களை சகிக்க முடிகிறது என்று எழுதினேன். அடுத்து நாம் திரும்பிப் பார்க்க வேண்டியது "எவ்வழி நல்லவர் ஆடவர் , அவ்வழி நல்லை வாழிய நிலனே" ( ஆடவர் = ஆள்பவர் . எந்த அளவுக்கு நல்லவனாக ஆட்சியாளர் இருக்கிறானோ அதே அளவு நன்றாக அவன் நிலத்தில் வாழும் மக்கள் இருப்பர்).
பெரியார், முகம்மது அலி ஜின்னாவைப் பாராட்டிப் அறிக்கை வெளியிட்டார். புரட்சியாளர் என்று விடுதலையில் எழுதினார். சென்னை மாகாணமும் இந்தியாவிலிருந் து பிரிய வேண்டும் என்று எழுதினார். இதெல்லாம் ஜின்னா பலலட்சம் ஹிந்துக்கள் கற்பழித்துக் கொல்லப்பட நேரடி உத்தரவு கொடுத்த முஸ்லீம் தலைவர் என்று தெரிந்தும். பதிலுக்கு ஜின்னாவும் நேரடியாக பத்திரிகையில் எழுதினார் : "காஃபீர்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை. முஸ்லீமாக மாறினால் மட்டுமே ஆதரவு". உடனே சுயமரியாதை சிங்கம் பெரியார் பொங்கி எழவில்லை. பொத்திக்கொண்டு, ஒன்னுக்கு போக பாத்ரூம் போய்விட்டார். அங்கே தெலுங்கர்களான கருணாநிதியும், சி.ஏன். அண்ணாத்துரையும் இருந்தனர். அவர்களும் பொத்திக்கொண்டுத ான் இருந்தனர். அப்பொழுதும் சரி, இப்பொழுது இலங்கையிலும் சரி இவர்களுக்கு இலட்சக் கணக்கில் படுகொலைகள் பெரிதாகத் தெரியவில்லை. "மக்களுக்கு துன்பம் நேரக்கூடாது" என்று வானரப் படைக்கு உத்தரவிட்ட ராமர் எங்கே? இவர்கள் எங்கே?
இந்த மாதிரி ஆட்சியாளர்களைத் தான் தமிழரான காமாரஜரை பதவியை விட்டு இறக்கி தேர்ந்தெடுத்தோம ். நம் ஆட்சியாளர்கள் போலவே நம் விதியும் ஆயிற்று. "அவ்வழி நல்லை வாழிய நிலனே" .
ஆகவே தமிழர்களின் சாபத்துக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களே, திராவிடத் தலைவர்களே, நம் மக்கள் சங்க கால தமிழ்ப் பண்பாட்டை மறந்ததே காரணம்.
-*-*-
"குகனோடு ஐவரானோம்" என்று "நான் அரசன், நீ படகோட்டி" என்று சாதி வித்தியாசம் பார்க்காமல் அணைத்துக் கொள்கிறார் ராமர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளது போலவே இலங்கைத் தமிழருக்குள்ளேய ே பல வித்தியாசம், இவன் கிழக்கத்திக் காரன் என்றெல்லாம் பிரிவு உள்ளது. இதுவா "யாதும் ஊரே; யாவரும் கேளிர்"?
கிருஷ்ணாவதாரத்த ில் வீட்டிலிருந்த வெண்ணையை அத்தனையையும் காலி பண்ணி குரங்குகளுக்கு கொடுத்துவிடுவான ் பாலகன் கண்ணன். யசோதை உரலில் கட்டிப் போட்டு கண்ணனை "யார் குரங்குகளுக்கு வெண்ணை கொடுத்தது?" என்று அதட்டுகிறாள். "குரங்குகளைப் படைத்தவனே கொடுத்தான்" என்கிறான் கண்ணன். புராணம் சொல்கிறது: இராமர் சீதையை மீட்டபின், வானரப்படை கனிகள் நிறைந்த அசோக வனத்தில் புகுந்து துவம்சம் செய்ய, இராமர் உத்தரவிடுகிறார் : "வீரர்களே, இந்நாட்டு அரசன் மட்டுமே நமக்கெதிரி. மக்களுக்கோ, அவர்களின் உடைமைகளுக்கோ எந்த சேதமும் நேரக்கூடாது, உங்களுக்கு பிறகு விருந்து வைக்கிறேன்" என்றாராம். ஒரு யுகமே நடந்த பின்தான் வானரங்களுக்கு வெண்ணை விருந்து கிடைத்ததாம். இதன் மூலம் இராமர் சொல்ல வந்தது : 'சிவிலியன்களுக்க ு, தோல்வி அடைந்த நாட்டின் மக்களுக்கு, அவர்கள் எந்த இனம், சாதியாக இருந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது வென்ற நாட்டின் தலைவன் கடமை' என்பது.
இதனால்தானோ என்னவோ, இராமரையே செருப்பு மாலை போட்டு அவமத்தித்து ஊர்வலம் கொண்டுபோனவர் ஈ.வெ. ரா. பெரியார். இராமரைப் போல் இல்லாமல் அரசியலுக்காக செய்யப்பட பிரிவினையில் லட்சம் சிவிலியன் குடும்பங்கள் சின்னா பின்னமானாலும் சொரனையே இருக்காது. நம் திராவிட ஆட்சியாளர்களுக் கோ சாதி பற்றிப் பேசினால்தான் சாப்பாடே ஜீரணமாகும். நம் மக்களுக்கு அதிக பட்ச தேவையே நம் ஆட்சியாளர்கள் பேச்சில் நாலு கிண்டல், நாலு எள்ளல் இருக்க வேண்டும் என்பதுதான். ஆக கடவுளையும் நகுதல் செய்தோம். இப்போது தொடர்ச்சியில் அடுத்த தவறை சொல்கிறேன் .
புலித் தலைவர் பிராபாரனின் நேரடி உத்தரவின் பேரில்தானே இந்த இன சுத்திகரிப்பு நடத்தப்பட்டது? பின் எதற்காக 'சில மதவெறி பிடித்தவர்' என்கிறீர்கள்?
நான் கேட்ட முதல் சந்தேகத்தையும் புரிய வையுங்களேன்.
Quoting ஷாலி:
தமிழரை அழிக்க உதவி கேட்கவில்லையா? //
13##.Anniyan. அறிந்துகொள்ளவேண ்டிய பதில்கள்.
இலங்கை தமிழ் முஸ்லிம்கள் ஏன் புலிகளுக்கெதிரா க இருந்தார்கள்?
1.கடந்த 1990 ம் வருடம் அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்த 78 ஆயிரம் முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினார்க ள்.தம் மாவட்டங்களை விட்டு வெளியேற 48 மணி நேரமே அவகாசம் கொடுத்தனர்.குறிப்பாக,யாழ் நகர மக்களுக்கு வெறும் இரண்டு மணி நேரமே மட்டுமே.
உடுத்திய ஆடைகளுடன் ருபாய் 500 க்கு மேற்படாத பணம் மட்டுமே எடுத்துச்செல்லல ாம் என்ற நிபந்தனை.
2. 1990. ஆகஸ்ட் 3ல் காத்தான்குடி பள்ளி வாசலில் இரவுத் தொழுகையில் இருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையில் 140 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
3. ஆகஸ்ட் 12ல் ஏறாவூர்,பிச்சிந கர்,புகுந்த ஆயுததாரிகள் நடத்திய வன்கொலையில் 116 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
4. பிறந்த ஒரு வாரக்குழந்தை முதல் ஒரு வயது குழந்தைகள் ஏழு பேர். இரண்டு வயதிலிருந்து பதினைந்து வயதுவரையுள்ள ஆண்,பெண் சிறுவர் சிறுமிகள் மொத்தம் 56 பேர் அநியாயமாக கொலைசெய்யப்பட்ட னர்.
5. 1992 ஏப்ரல் 29ல் அழிஞ்சிபொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். முஸ்லிம் இனச்சுத்திகரிப் புக்கு நடத்திய கொலைகள் இன்னும் ஏராளம் உண்டு.
தமிழ் இன மொழி மீது பற்றுக்கொண்ட இயக்கத்தில் அதி தீவிர மதவெறி கொண்ட மனிதர்களும் இருந்ததுதான் புலிவீழ்ச்சிக்க ு முதல் காரணம்.
Quoting வால்டர் வணங்காமுடி:
மிக நன்றாக புதிய கோணத்தில் இருந்து எழுதுகிறீர்கள். புதிய தகவல்கள் உள்ளன. மாற்றுத்தரப்பைய ும் தெரிந்துகொண்டால ்தான் எதையும் முடிவு செய்ய இயலும். எனவே மேலும் எழுதுங்கள். விடுதலைப் புலிகள் ஏன் இசுலாமியரை கொல்லத் தொடங்கினார்கள்? எதற்காக முஸ்லீம் கர்ப்பிணித்தாயா ரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எறிந்து கொன்றார்கள்?
Quoting UNMAIKAL:
சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
இதுவரையிலும் ஊடகங்களில் கண்டிராதவை
அந்த போர்க்குற்றங்கள ை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!
விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளைய ும் வழங்கி வந்துள்ளார்கள்.
ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.
புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிரு ந்தும் இலங்கை இராணுவத்திடமிரு ந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.
புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில் , தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.
பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத, சில மாதங்களே ஆன, ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.
நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது
இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்
சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
இதுவரையிலும் ஊடகங்களில் கண்டிராதவை
அந்த போர்க்குற்றங்கள ை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!
விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளைய ும் வழங்கி வந்துள்ளார்கள்.
ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.
புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிரு ந்தும் இலங்கை இராணுவத்திடமிரு ந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.
புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில் , தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.
பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத, சில மாதங்களே ஆன, ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.
நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது
இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்
சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... கொலைவெறி புலிகளின் இனஒழிப்பு (படங்கள் = விடியோ) >> சிசுக்களின் கோரப் படுகொலை
நெத்தி அடி.அருமை. அருமை.
ஒரு இனத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும். ஆனால் தற்பெருமை கூடாது. ஆனால் தமிழனுக்கு இது நேரெதிராக அமைந்துவிட்டதே.
தன்னம்பிக்கையுட ன் இருப்பவன் தன் மேலும், இறை மேலும், இயற்கை மேலும் நம்பிக்கை வைப்பான். ஆனால் தமிழனின் நம்பிக்கை, அரசியல்வாதிகளின ் மேலானது. அது நம்பிக்கை அல்ல, உண்மையில் அதை பற்று அல்லது அடிமைத்தனம் என்றே சொல்ல முடியும்.
கண்ணகி கற்புக்கரசி என்று உளறியவர்கள், இரண்டு வீடு, நூறு இரத்த வாரிசுகள், இருநூறு ஆயிரம் கோடி பணம், அவரின் தலைவர் எழுவது வயதில் இருவது வயதை கட்டி, குஞ்சாமணி அனுபவிக்க கொடுத்தவர், பேராசிரியர் மகளின் தொழியையே பலாத்காரம் செய்தவர். (ஜெயகாந்தன் ஒரு கவிதையில் "பத்தினி கதையைப் படித்தீரே, மச்சினி கிடைத்தால் விடுவீரா?" என்று செருப்பால் அடித்தாமாதிரி கேட்டிருந்தார்.) பேரறிஞரோ செல்வந்தர்களுக் கு சொந்தக்கார பெண்ணை சப்ளை செய்தவர் (இதை பாரதிதாசன் குயில் பத்திரிகையில் எழுதிருக்கிறார் ), நடிகை ஒரு மைக்கூடு, நான் அதன் உள்ளே விட்டு எழுதும் பேனா என்று ஆபாசமாக பொதுக்கூட்டத்தி ல் பேசியவர். இதை அடிமைத்தனமில்லா த, சுதந்திரம் உள்ள மனது ஏற்குமா? வெட்கமில்லாமல் கைத்தட்டச் சொல்லுமா?
இந்தச் சிறையின் விரிவை சுதந்திரம், நம் எல்லையின் விரிவு, இந்த சிந்தனையின் அடிமைத்தனத்தை பகுத்தறிவு என எண்ணி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறோம ் நாம்.
காரணம் இதைச் செய்ய தவறிவிட்டோம்: "வியத்தலும் இலமே".
இந்தியாவின் ஐந்து நோபெல் பரிசு அறிவியலாளர்களில ் மூவர் தமிழர். மிகச்சிறந்த இரு கவிஞர்களில், தேச பக்தர்களில், சீர்திருத்த வாதிகளில் ஒருவர் தமிழர். தமிழுக்கு அதிக பங்களிப்பு செய்தவர்களில், நூற்றுக்கணக்கான ஓலை சுவடிகளை சேகரித்து காப்பற்றியவர்கள ில், அம்பத்தூர், கும்மிடிபூண்டி, திருப்பத்தூர் என்று பெரும் தொழிற்பேட்டைகளை அமைத்து பலலட்சம் "தமிழர்"களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிய தொழில் துறை அமைச்சர் இப்படி எத்தனையோ நல்லது செய்தும் அவர்களைப் பார்த்தால் அவர்கள் தமிழர்கள் இல்லை என்று நம் மக்களுக்கே ஒரு எள்ளல், ஒரு கிண்டல், அவர்கள் ஜாதியைச் சொல்லி "இந்த 3 % பேர்" என்று குடுமியை இழுக்கும் நகுதல். அவர்களில் யாரையும் நல்லது செய்தார்கள், அறிவாளிகள் என்று என்று வியக்க வேண்டாம். ஏற்கனேவே சொல்லிவிட்டேன் "வியத்தலும் இலமே". ஆனால், தவறே செய்திருந்தாலும ் எந்த சாதியினரையும் ஜாதியை சொல்லி மட்டம் தட்ட வேண்டாமே? இல்லாத இந்த பேதம் எப்படி நம் மனதில் வந்தது?
காரணம் இதைச் செய்ய தவறிவிட்டோம்: "நகுதலும் இலமே".
இப்போது நம்மவர்கள் லட்சக்கணக்கில் உடல் சிதறி துடிக்கும்போது, சிங்கள வெறியர்களை சின்னாபின்னப் படுத்த தேவையில்லை, குறைந்தபட்சம் இலங்கைத் தமிழர்களை திரும்பி தமிழ் நாட்டில் சேர்த்துக்கொள்ள , மருத்துவ உதவியாவது கொடுக்க வேண்டாமா? கொஞ்சம் கூட சொரணையில்லாமல் டிவி பார்த்துக்கொண்ட ு வெட்கமில்லாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கும் தமிழர்களை மாற்ற இயலாது. ஒரு ஆட்டோ டிரைவரைக் கூட தட்டிக்கேட்க தைரியமில்லாதவர் களாக ஐந்திலிருந்தே வளைக்கப்பட்டவர் கள் நம் மக்கள். இனிமேல் வரும்கால சந்ததியினரை மட்டுமே மாற்ற முடியும்.
சவுக்கு, உங்கள் ஒருங்கிணைப்பை ஆரம்பியுங்கள். நூறு பேர் முதலில் சேரட்டும். அக்கினிக் குஞ்சு காட்டையே வெந்து தணிக்கும். ஆயிரமாகும், லட்சமாகும். இளைஞர்கள் மட்டுமே மாற முடியும், துருப்பிடித்த இந்த கட்சிகளின் வாசம் படாத லட்சிய வாதிகளை உருவாக்க வேண்டும் . அடிமைகளின் மத்தியில் சுபாஷ் சந்திர போஸ் பிறக்கவில்லையா? அதுபோல் இனி தமிழர் நீதி பெற, லட்சியம் கொண்ட இளைஞர்கள் உருவாவார்கள்.
அப்படியானால் பாகிஸ்தானும், பங்களா தேசும் என்ன செய்து கொண்டிருந்தார்க ள்? அவர்களும்தானே ராணுவ தளவாடங்களை, போர் விமானங்களை இலங்கைக்குக் கொடுத்தார்கள்? அதை ஏன் மறைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் , இலங்கை தமிழருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து பாகிஸ்தான், பங்களாதேஷிடம் தமிழரை அழிக்க உதவி கேட்க வில்லையா?
USA CANNOT GO THERE.
MAY BE THEY MIGHT DISTURB CHINESE DOMINANCE.
ask each tamilans to protest for one day at tamilnadu. i am ready.
சவுக்கின் "உலகமே ஒன்று கூடி வஞ்சிக்கப் படும் இனமாக தமிழினம் மட்டும் மாறிப்போனது ஏன் என்ற கேள்விதான் விடை கிடைக்காமல் தடுமாறுகிறது." என்ற இந்தக் கேள்விக்கு அனேகமாக பதில் இதுவாக இருக்கலாம்:
நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். கணியன் பூங்குன்றனார் ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னால் இவையெல்லாம் தமிழரின் பண்புகளாகச் சொன்னார்: "யாதும் ஊரே, யாவரும் கேளீர், தீதும் நன்றும் பிறர் தர வாரா... வியத்தலும் இலமே, நகுதலும் இலமே". இதில் ஒன்றையாவது பின்பற்றினார்கள ா தமிழர்கள்? எங்கே போனாலும் அங்கே ஒரு தகராறு, ஒற்றுமை இல்லை. "வியத்தலும் இலமே" என்பது குஷ்பூவுக்கு கோவில் கட்டும் தமிழனுக்கு, கலைஞர் என்ற தெலுங்கரை தமிழ்த் தலைவர் என்று கூசாமல் வியக்கும் தமிழனுக்கு எங்கனம் பொருந்தும்? நூறு வருடங்களுக்கு முன் கப்பலில் பம்பாய் வந்த இங்கிலாந்து இளவரசர் ஆறு மணி நேரம் தாமதமாக வந்ததால், பார்க்க வந்த மக்கள் சென்று விட்டார்களாம். ஆனால் தமிழர் மட்டும், மூன்றுநாள் தாமதமாகியும் சென்னை துறை முகத்தில் உட்கார்ந்து இருந்து இளவரசரைப் பார்த்துவிட்டுத ்தான் போனார்களாம். அப்போது அவன் சொன்னானாம் : "இந்தத் மதராசிகளை வடக்கில் இருப்பவர்கள் அடக்கி ஆள்வார்கள்"
எல்லா பிரச்சினைகளுக்க ும் நாம் தான் காரணம். குருட்டுத் தனமாய் சிலரை நம்புவது, வியப்பது, குருட்டுத்தனமாக சிலரை ஏளனம் செய்வது , எல்லா இடத்தில் சண்டை செய்வது. தனித் தமிழ்நாடு கிடைத்தாலும் இந்த முட்டாள்கள் தம்மை வெற்றிபெறப் போவதில்லை. தன்னை வெல்லாத இனம் அழியவே செய்யும்
http://puligal.blogspot.in/2010/05/what-is-project-beacon-timely-reminder.html
சமீபகாலமாக இலங்கையை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் சீனா வெற்றி பெற்றுள்ளது.இந்தியாவை கட்டுப்படுத்த சீனாவின் நட்பை இலங்கை நம்பியுள்ளது.
உலக போலீஸ்காரர் அமெரிக்காவிற்கு போட்டியாளராக சீனா வளர்ந்து வருவதால், தன் தாதா அந்தஸ்த்தை நினைவூட்ட இலங்கைக்கு செல்ல மிரட்டலே ஐநா தீர்மானம்.
மற்றபடி மனித உரிமைக்கும் அமெரிக்காவிற்கு ம் தூரத்து சொந்தம் கூட கிடையாது.இராக்கிலும் ஆப்கானிலும் அப்பாவி மக்களை கொன்று அந்த சடலத்தின் மீது சிறுநீர் பெய்து மனித உரிமையை நிலைநாட்டியவர்க ள்.
புலிகளுக்கும் சிங்கள படைகளுக்கும் உக்கிரமான போர் நடந்தபொழுது,புல ிகளின் படை நடமாட்டத்தினை தனது உளவு செயற்கைக்கோள் மூலம் அறிந்து அதை இலங்கைக்கு அனுப்பி கொலை களத்தை வழிநடத்தியவர்கள ் அமெரிக்காவும் இந்தியாவுமே.
தங்கள் பிராந்திய நலனை நிலைநிறுத்த இந்தியா,சீனா,அம ெரிக்கா
மூன்றும் முட்டி மோதுகின்றன.இதற்க்கு முதல் களப்பலியானவர்கள ் புலிகள் மற்றும் அப்பாவி தமிழர்கள்.இறுதியாக பழியாகப்போவதும் தமிழர்களே.
இனி ஒரு இந்தியா சீனா போர் மூண்டால்,இலங்கை வழியாக வரும் செங்கொடி, திறந்த மடம் தமிழகத்துள் நுழைந்து செயின்ட்
ஜார்ஜ் கோட்டையில் பறக்கும்.
இந்தியாவை உடைக்க உதவி செய்யும் அமெரிக்காவிற்கு கைமாறாக மிகப்பெரிய பொருளாதார சந்தையை சீனா வழங்கும்.
சீனாவால் ஒன்றாக்கப்பட்ட தமிழர்கள் என்றும் அகதிகளே!
Its no use Holding a Ghaddafi Poster and comparing it with Rajapakse in front of a US Embassy.They never give a shit to you rather would be happy that you are helping them to re write a black history which they want.
Its like when tamils were drenching in a fake honey bath of Hillary's personal visit to a CM in india, while surprisingly all the govt Laptops's Open Source OS were replaced with Money Ripping/Bug full MS OS.
RSS feed for comments to this post