முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
சாபக்கேடு.. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 44
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 21 மார்ச் 2012 21:34

தமிழகம் போல சாபக்கேடு பிடித்த மாநிலத்தை எங்குமே பார்க்க முடியாது ஒரு தனியான தீவு போல, நெருக்கடி அறிவிக்கப்பட்ட நிலையைப் போல ஒரு தாலுகாவில் உள்ள அத்தனை பேரின் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது….  ஆயிரக்கணக்கில் பெண்களும், குழந்தைகளும் வேறு எங்கும் நகர முடியாமல் முடக்கப்பட்டுள்ளனர்…..   குடிநீர், பால், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டுள்ளது….  பத்திரிக்கையாளர்களைக் கூட உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்துள்ளனர்….

koodamkulam4

ஆனால் எந்த எதிர்க்கட்சியும் இது குறித்து கவலை தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதை விட ஒரு சாபக்கேடு இருக்க முடியுமா ?

கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்காதே, என்று ஏழு மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.  இந்தப் போராட்டத்தில் அம்மக்களின் மன உறுதியைக் குலைக்க வேண்டும் என்று, தொடர்ந்து மத்திய அரசு முயன்று வந்தது.  போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றனர்.   போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வெளிநாட்டு ஏஜென்ட் என்றனர்.    போராட்டக்காரர்கள் நக்சலைட்டுகள் என்றனர்.   அமெரிக்க கைக்கூலிகள் நடத்தும் போராட்டம் என்றனர்.  மத்திய உளவுத்துறையை பயன்படுத்தி, போராட்டத்துக்குள் ஊடுருவி, போராட்டக்காரர்களுக்குள் குழப்பம் என்றனர்.

ஆனால், எந்த முயற்சிகளும் வெற்றிபெறவில்லை.  அந்த மக்கள் உறுதியாக அணு உலையை இழுத்து மூடு என்ற தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.   ஜெயலலிதா சொன்னபடியெல்லாம் தலையாட்டுவதற்கு அவர்கள் என்ன அதிமுகவின் எம்.எல்.ஏவா எம்.பியா ?

கூடங்குளம் மக்களின் இந்தப் போராட்டத்தை முதலில் ஆதரிப்பது போல வேடமிட்டார் ஜெயலலிதா.  கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.   பிறகு இவராக ஒரு வல்லுனர் குழுவை நியமித்தார்.  அந்த வல்லுனர் குழுவில் பேராசிரியர் இனியன் என்பவரைத் தவிர, மற்ற அனைவரும், அணு உலைக்கு ஆதரவானவர்களாக நியமித்தார்.  அந்தக் குழு அறிக்கை அளித்ததும் அந்த அறிக்கையைப் பற்றி ஒரு வார்த்தையும் வெளியில் சொல்லாமல் இருந்து விட்டு, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், இரவோடு இரவாக கூடங்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கில் போலீசாரை இறக்கி, அந்தப்பகுதியையை தனித் தீவாக ஆக்கினார்.

koodamkulam1

இது ஒரே நாளில் நடந்த சம்பவம் அல்ல.   இதற்கு முன் இரண்டு முறை இடிந்தகரை பகுதிக்கு சென்று அந்த இடத்தில் எப்படி போராட்டத்தை ஒடுக்கலாம் என்று பார்வையிட்டு வந்தார் கூடுதல் டிஜிபி ஜார்ஜ்.   மாநில அரசு சார்பில் நிபுணர் குழு அறிக்கை அளிப்பதற்கு முன்பாகவே ஜார்ஜ் அந்த இடத்தை பார்வையிட்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இதன் தொடர்ச்சியாகவே தற்போதைய அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டுள்ளன.

18 மார்ச் அன்று மாலை முதல் இடிந்தகரை பகுதியில் காவல்துறையினர் குவியத் தொடங்கினர்.  சங்கரன் கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த காவல்துறையினர் அவ்வளவு பேரும், இடிந்தகரைக்கு அனுப்பப்பட்டனர்.  முதல் கட்டமாக இடிந்தகரையை இணைக்கும் அத்தனை சாலைகளிலும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்தனர்.   காவல்துறையினர் குவிக்கப்பட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அங்கிருந்த மாதா கோவில் மணியை அடித்து, சுற்று வட்டார மக்களை வரவழைத்தனர்.   காவல்துறையினர் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

அன்று இரவு போராட்டப் பந்தலுக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பு துண்டிக்கப் படுகிறது.   மறுநாள் 19 மார்ச் அன்று, போராட்டக் குழுவின் முக்கிய உறுப்பினரான வழக்கறிஞர் சிவசுப்ரமணியன் கைது செய்யப்படுகிறார். அவரோடு மேலும் ஏழு பேர் கைது செய்யப்படுகின்றனர். பிறகு மேலும் 195 பேர் கைது செய்யப்படுகின்றனர்.  கைது செய்யப்பட்டவர்களுள் முக்கியமான 11 பேர் மீது இந்தியாவுக்கு எதிராக போர் தொடுப்பது, தேசத் துரோகம், இரு பிரிவினருக்கு இடையே வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்படுகிறது.

மற்றவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுவது போன் பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்படுகிறது.  முதலில் கைது செய்யப்பட்ட சிவசுப்ரமணியன், ராஜலிங்கம் உள்ளிட்டோர், இடிந்தகரையில் உள்ள காமராஜ் சிலைக்கு எதிரே நின்று கொண்டிருந்தபோது கைது செய்யப்படுகின்றனர்.

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனேயே, போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயக்குமாரை தொலைபேசியில் அழைத்த மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், போராட்டக்குழுவினர் எழுப்பிய கோரிக்கையில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அதனால் உடனடியாக அவரை உதயக்குமார் மற்றும் புஷ்பராயன் ஆகிய இருவர் மட்டும் சந்திக்க வருமாறும் கேட்டிருக்கிறார்.   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிலாக, ராதாபுரம் பயணியர் விடுதியில் சந்திக்கலாமே என்றதற்கு, இல்லை நீங்கள் இங்கேதான் வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.    அங்கே எங்களை வரவைத்து கைது செய்து விடுவீர்கள் என்று சந்தேகமாக இருக்கிறது என்று அங்கு செல்ல மறுத்திருக்கிறார் உதயக்குமார்.

koodamkulam3

18.03.2012 அன்று மாலை மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், ராதாபுரம் தாலுகா முழுவதிலும் 144 தடைச்சட்டம் பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.  இதனால் அப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு செல்லக் கூடாது என்றும் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

மறுநாள் (20.03.2012) முதல் கூடங்குளத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.   இடிந்தகரையை நோக்கி வரும் அத்தனை வாகனங்களும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டன.   தேசியத் தொலைக்காட்சிளின் ஓ.பி. வேன்கள் எனப்படும் நேரலைக் கருவிகள் வழியிலேயே தடுக்கப்பட்டன.   இடிந்தகரையில் இருந்த பத்திரிக்கையாளர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.   வருகை தந்து கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திங்களன்று காலை முதலே இடிந்தகரையில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அத்தனை வழிகளும் தடுக்கப்பட்டன.  போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் என்பதால், அவர்கள் கடல் வழியாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  காவல்துறையினர் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கே திரண்டனர்.  குடும்பத்தோடு பெண்களும், குழந்தைகளும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு நேர்ந்த ஆபத்துக்கு எதிராக சிறை செல்லத் தயார் என்ற உறுதியோடு இருந்தனர்.

இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதால், அந்த போராட்டப் பந்தலில் இருந்த பெண்களும் குழந்தைகளும், உணவுக்கே அல்லாடும் சூழல் ஏற்பட்டது.

உண்ணாவிரதப் பந்தலில் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டருக்கு வழக்கமாக அருகாமையில் இருந்த பெட்ரோல் பங்கிலிருந்து டீசல் வாங்கப்படும்.  காவல்துறையினர் மிரட்டி அந்த பெட்ரோல் பங்க்கையும் மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்படும் செய்தி அறிந்ததும், உடனடியாக பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, இதற்கெதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது.    சற்று நேரத்தில், பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்படவில்லை என்று, காவல்துறையில் உயர் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அறிவித்தனர்.

இதன் நடுவே, காவல்துறை ஐஜி ராஜேஷ் தாஸ், (பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும், முல்லைப்பெரியாறு தடியடிக்கும் காரணமான அதே ஒரிஸ்ஸாக்காரர்தான்) உதயக்குமார் சரணடைய வேண்டும் இல்லையென்றால் மக்களே அவரை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உள்ளே புகுந்து கைது செய்ய வேண்டிய தேவை ஏற்படும் என்று அறிவித்தார்.

18 மாலை முதல் இந்த அடக்குமுறைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன.   ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி கூட, ஜெயலிலதா அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.  நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் மட்டுமே இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்து நாளேட்டைத் தவிர்த்து வேறு எந்த ஊடகமும் இந்தப் போராட்டம் குறித்து நியாயமான செய்திகளை வெளியிடவில்லை.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால் அதை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தியின் சார்பில், நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும், தலைமைச் செயலாளுருக்கும் புகார் மனு, பேக்ஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும், விரைவுத் தபால் மூலமாகவும் அனுப்பப் பட்டது.

Koodankulam_notice_Page_1

Koodankulam_notice_Page_2

இன்று காலை இந்தத் தடை உத்தரவை நீக்க உத்தரவிடும்படி கோரி, ஒரு பொதுநல வழக்கு, தாக்கல் செய்யப்பட்டது.  வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், இன்று அவசரமாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக விரைவாக விசாரிக்க வேண்டும் என்று காலையில் கோரிக்கை வைத்ததை ஏற்று, தலைமை நீதிபதி நாளை இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள  உத்தரவிட்டார்.

வியாழனன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.    தமிழகத்தில் திமுக, மதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் என்று எத்தனையோ கட்சிகள் இருந்தும், அத்தனை பேரும் ஜெயலலிதா விரித்த வலையில் விழுந்து விட்டனர் என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.

விஜயகாந்த் தான் அணு உலைக்கு ஆதரவானவன் என்று அறிவித்து விட்டார்.    திமுக தலைவர் கருணாநிதியோ, ஏன் இன்னும் அணு உலை திறக்காமல் இருக்கிறது என்று ஜெயலலிதாவின் நோக்கத்தையே சந்தேகத்திற்குள்ளாக்கினார்.    இடது சாரிகளோ, ரஷ்யாவிலிருந்து கழுதை மூத்திரத்தை எடுத்து வந்தால் கூட, சிறப்பாக இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள்.

ஜுலை 2011ல் ஜெய்தாப்பூர் பகுதிக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத்  பூக்குஷிமாவுக்குப் பிறகு அணு சக்தி மின்சாரமே தேவையில்லை. மேலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் அதிக விலையில் உள்ளது. சிபிஎம் எப்போதும் அணு ஒப்பந்தத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. ஜெய்தாப்பூரையும் எதிர்ப்போம் என்று பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.

ஆனால் அதே மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு, கூடங்குளம் அணு உலையை திறப்பதென தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது.  ஏற்கனவே விஞ்ஞானிகள் கூடங்குளத்தை ஆராய்ந்து பாதுகாப்பானது என்று அறிக்கை அளித்தள்ளார்களாம்.  இதே போல ஜெய்தாப்பூர் அணு உலையையும் ஆராய்ந்து அறிக்கை அளித்தால், ஏற்றுக் கொள்ளுமா சிபிஎம்.

CPIM_Press_News_on_20.3.2012_1

ஒரு மாநிலத்தில் ஒரு பகுதி மக்களை, தீண்டத்தகாதவர்கள் போல பாவித்து, 8000 காவல்துறையினரை அந்த இடத்தில் குவித்து  மக்களை நடமாட விடாமல் செய்து, நெருக்கடி நிலை அறிவித்தது போன்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ள ஜெயலலிதாவை எந்தக் கட்சியும் கண்டிக்காதது தமிழ்நாட்டின் சாபக்கேடு.

பொதுநல வழக்கு தொடர்ந்ததன் விளைவாக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் உண்ணாவிரதப் பந்தலுக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.  இரவு 8 மணி அளவில், தமிழக டிஜிபி ராமானுஜம், “இடிந்தகரை கிராமத்திற்கு குடிதண்ணீர், பால், காய்கறி, முதலியவற்றை செல்லவிடாமல் காவல்துறையினர் தடை செய்து வைத்திருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது.  அந்த கிராமத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை காவல்துறை நிறுத்தவோ அல்லது தடுக்கவோ இல்லை.

கூடங்குளத்தில் அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு மட்டுமே காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனரே தவிர, இடிந்தகரைக்கோ  அல்லது வேறு எந்த கிராமத்திற்கோ அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்வதை தடுப்பதற்காக அல்ல” என்று அந்த செய்திக் குறிப்பில் ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

DGP_office_press_note_on_21.03.12

ஜெயலலிதா சமீபத்தில் இலங்கைத் தீர்மானம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியை கபடவேடதாரி என்று வர்ணித்திருந்தார்.  இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, ராமானுஜத்திற்கு நன்றாகவே பொருந்தும்.   கடந்த 11 மாதங்களாக, தமிழகத்தில் நடந்த போலி என்கவுன்டர்களையும், பரமக்குடியில் நடந்தது போன்ற வன்முறைச் சம்பவங்களையும், இடிந்தகரையில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும், மவுன சாட்சியாக இருந்து வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவைகளுக்கு நேரடி ஆதரவையும் வழங்கி வரும் ராமானுஜம் காவல்துறையின் கபடவேடதாரிகளுக்கெல்லாம் தலைவராக இருந்து வருகிறார். உளவுத்துறை மற்றும் சட்டம் ஒழுங்குக்கான டிஜிபியாக இருக்கும் ராமானுஜம், இந்த அத்தனை சம்பவங்களுக்கும் நேரடியாக பொறுப்பானவர் ஆவார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படவில்லையென்றால் நந்திகிராம் மற்றும் சிங்கூரில் ஏற்பட்டது போன்ற பெரிய வன்முறை நடந்திருக்கும்.

“கூடங்குளத்தில் வன்முறை. போலீஸ் வேன்களுக்கு தீ வைப்பு”.

கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூடி, கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அறிவித்தது.   இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.  நேற்று இரவு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேனுக்கு தீ வைத்தனர்.  தீயை அணைக்க வந்த போலீசார் மீது கம்புகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கினர்.

கலவரக்காரர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.   ஆனால் கலவரக் காரர்கள் தொடர்ந்து காவல் துறையினர் மீது தாக்குதல் தொடுத்த வண்ணம் இருந்தனர்.  தங்களை தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியின்றி காவல்துறையினர் முதலில் தடியடி நடத்தினர்.   அப்போதும் கலவரக்காரர்கள் தொடர்ந்து தாக்கவே, வேறு வழியின்றி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 5 பேர் இறந்தனர்.  இறந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்தவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.”

என்று தினமலரில் செய்தி வரும் சூழல் ஏற்பட்டிருக்கும்.   காவல்துறையினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.   இறுதியில் உயிரிழப்பது, அப்பாவி பொதுமக்களாகவே இருந்திருப்பார்கள்.

 

Comments  

 
-4 #52 thilagam 2012-03-25 12:26
This savukku dont want Tamil Nadu people to be happy with electricity.
Quote
 
 
+2 #51 vendum suthanthiram 2012-03-24 20:56
[ஃஉஒடெ நமெ="மிசஎல்"]தயவு செய்து தினமலர் படிக்காதீர்[/ஃஉஒடெ]

அதர்க்கு பெயர் தினமலம். மிகக்கெவலமான மன்ஞல் பட்திரிக்கை.. இலஙை பிரச்ஷினயில் அழுவது போலே இப்பொழுது நடிக்கும் தினமலம் போர்க்காலட்தில் சிஙலவனுக்கு விசிரிவிட்டது.. எப்பொழுதும் யார் ஆட்ச்ஷீயில் இருந்தாலும் அவர்கலுக்கு கால் அமுக்குவது அவர்கல் பொலைப்பு. இந்த கூட்டம் திருந்தாது. இவர்கலிடம் பொருமயாக இருந்து நிரய்ய இலந்துவிட்டொம்
Quote
 
 
+12 #50 Michael 2012-03-24 15:59
தயவு செய்து தினமலர் படிக்காதீர்
Quote
 
 
+3 #49 GOPALASAMY 2012-03-24 14:13
DEAR SAVUKKU.
PLEASE CLARIFY WHETHER YOU DONT WANT ANY NUCLEAR PLANT OR ONLY YOU OPPOSE KOODAMKULAM PLANT? WHY NO AGITATION AGAINST KALPAKKAM?
IN 1978, WHEN I WAS WORKING IN TUTICORIN THERMAL POWER PLANT, IN THE RECEPTION ROOM, VERY BIG MAP WAS THERE SHOWING KOODANKULAM AS FUTURE NUCLEAR PLANT.
WHY THIS AGITATION STARTED NOW ONLY?
IF YOU ARE HAVING RIGHT TO SAY AGAINST SOMEBODY, SAME RIGHT OTHER PEOPLE ARE HAVING TO DOUBT ABOUT UDAYAKUMAR?

YOU HAVE TO ACCEPT THERE IS ADIFFERENCE OF OPINION ABOUT UDAYAKUMAR'S INTENTIONS AND ACTIONS.

WHEN SMALL CHIDREN AND HOUSEWIVES AND FISHERMEN CAN TALK ABOUT SAFETY OF THE PLANT WHY OTHERS LIKE Dr. KALAM SHOUD NOT TALK?

PEOPLE LIKE ME WILL ACCEPT ENGINEER / SCEINTIST'S VIEW ONLY.
Quote
 
 
+3 #48 vendum suthanthiram 2012-03-24 09:37
[ஃஉஒடெ நமெ="ல௯மன்"]இபொலுது எல்லொருகும் தேவை மின்சரம்....இதை தாடுக யாருகும் உரிமை இல்லை...[/ஃஉஒடெ]
மின்சாரம் எடுத்துக்கொல் - உன் இரத்ததில் இருந்து. அடுத்தவன் கஷத்தில் இருந்து அல்ல. உன் பெயர் காட்டு கிரது நீ யாரென்ட்ரு.. உஙல மாதிரி அட்கலிடம் நியாயம் எதிர் பார்க்க முடியாது.
Quote
 
 
+8 #47 Eleventh Sense 2012-03-24 01:39
Quoting kurt:
//இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதால ், அந்த போராட்டப் பந்தலில் இருந்த பெண்களும் குழந்தைகளும், உணவுக்கே அல்லாடும் சூழல் ஏற்பட்டது.//I dont mean to sound to sound inhuman but I had this confusion for a long time..If the demonstration is based on fasting then why should they worry about food ...

HELLO Mr. Kuruttu ka--thi..........
Don't you have a common sense about the people who stand apart and help infants and small children? Won't they need food and water to survive?
If in an agitation, there are people standing around and watching, would you people think they are also a part of agitation? porattam veru, unaviratham veru endru yaarume ungalukku sollavillaiya?
Quote
 
 
-11 #46 laxman 2012-03-23 18:57
இபொலுது எல்லொருகும் தேவை மின்சரம்....இதை தாடுக யாருகும் உரிமை இல்லை...
Quote
 
 
-2 #45 rgk 2012-03-23 16:47
Mr.Eleventh sense - Few Southern districts like Tuticorin, Rameswaram, Ramanathapuram are totally deprived of development for one reason or other. Also they do not have agricultural lands. They have to migrate to towns & cities (see in Coimbatore & Tirupur districts). Since the plant is completed & the electricity is No:1 necessity ,let us not oppose at this juncture. Let the people especially Udayakumar & Co focus on Risk Mitigation, Disaster Management System, Compulsory Safety audits, Mock drills etc. They should demand 3 phase continous, stabilised power supply, high quality water for all their villages. They should demand multispeciality hospitals, Cancer Research insitiutes, Marine research institutes.. (Even they can ask a Military Air Base) Good roads, hotels, education institutions can come up & people from other parts of the state would move there. Employment opportunities become more. Let the people monitor the happenings of the 500C package assured by TN govt etc..Let all the people get trained. No matter where I live, If job opportunities, education, medical facilities are there, everyone will be ready to go to Kudankulam. The y can definitely make this happen. Kerala is diff. As an Indian we need to maintain/protect our environment whether it is kerala or TN. But we smuggle & sell our sand to them. Can V stop doing that. They are bold & also ready to leave/move their family & go out for earning which we do not mostly prefer & also TN is better industrialised state (Industries cheat & not follow pollution control procedures-are there ie diff). In Tuticorin no safety, pollution norms are not followed & that is the problem. Luckily people like Udayakumar can monitor & protest if anything is not proper here, but not oppose at a crucial juncture. This as an opportunity for the kudankulam people to be grabbed & let them focus to improve their livingstandards . @உண்மைவிளும்பி- we shd take bold decision to close NP if we get electricity from other sources
Quote
 
 
+6 #44 amutharasan 2012-03-23 16:13
போராட்டத்திற்க் கு வெளி நாட்டு பணம் வருதுதன்னு சொல்லுரானுகளே.. இவனுக ஒழுங்கா விசயத்தை தெரிஞ்சுக்கிறாங ்களா இல்லையா.. நேத்து பாரளுமண்றத்தில நாரவாய சாமி என்ன பதில் சொன்னானு கொஞம் கேட்டு/படிச்சு தெரிஞசுக்குங்கள ேன்..
Quote
 
 
+3 #43 Jagan T 2012-03-23 14:11
மன்னிக்கவும் சவுக்கு.
அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, மின் தடையால் பாதிக்கப்ட்ட பிற தமிழக மக்களிடையெம் அணு உலை போராட்டம் ஆதரவு இழந்துவிட்டது. உதயகுமார் முடிந்தால் அந்த பகுதி மக்களுக்கு அரசு உதவிகள் சரியான முறையில் போய்ச்சேர முன்வர வேண்டும்.
இல்லையென்றால் ஜெ. வின் பிடிவாதமும், அரச பயஙகரவாதத்தை அவர் செலுத்தும் விதமும் எல்லொரும் அறிந்ததெ.
Quote
 
 
+2 #42 I Luv Nature 2012-03-23 12:54
I believe the people shouting here about the need for nuclear energy were selfish coolies working on some IT company and worrying about their sleepless nights without Air Conditioner. But the people who fighting sleeplessly against the project is the welfare of their future generations.

A quick question to the people support koodankulam project, if offered a job at the nuclear project, will you be interested to work for rest of your life? i dont think so, also the news papers like dinamalar and others were incorrectly projecting this people's union like a terrorist act, they are the ones needs to be thrown out of this state.
Quote
 
 
+13 #41 MDMK 2012-03-23 08:50
கடற்கரையோர மக்களின் அச்சம் தீர்ந்தால் அன்றி அணுமின் நிலையம் இயங்க அனுமதிக்கமாட்டே ன் என்று பசப்பு வார்த்தை பேசிய முதலமைச்சர், மக்களின் நியாயமான அச்சத்தைப் போக்காமல் அணுமின் நிலையத்தை இயக்குவோம் என்று ஆணவத்தோடு அறிவித்தார். இங்கு வாழும் மக்களை காவல்துறையைக் கொண்டு அச்சுறுத்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். தென் தமிழகத்தை பாதுகாக்கப் போராடும் இந்த மீனவ மக்களையும், அணு உலையை எதிர்க்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் தனிமைப்படுத்தி விட அண்ணா.திமு.க. அரசு திட்டமிட்டு அடக்குமுறையை ஏவ முயன்றால் அதனை எதிர்த்து அற வழியில் போராட மனித உரிமை ஆர்வலர்களும் அணு உலை எதிர்ப்பாளர்களு ம் அணி திரள்வோம்.



மத்திய மாநில அரசுகளின் அராஜகப்போக்கைக் கண்டிக்கவும், இடிந்தகரை வட்டார மக்களுக்கு தோள் கொடுக்கவும், அணு உலை எதிர்ப்புணர்வை நிலைநாட்டவும் மார்ச் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் அறப்போர் நடத்திட அனைவரும் திரண்டு வாரீர். இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்ட அறப்போரில் நானும் கலந்து கொள்கிறேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்மணிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் அணு உலை எதிர்ப்பாளர்களு ம் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.



வைகோ

பொதுச் செயலாளர்

‘தாயகம்’ மறுமலர்ச்சி தி.மு.க.

சென்னை௮

22.03.2012

வைகோ
Quote
 
 
+7 #40 MDMK 2012-03-23 08:31
சவுக்கு, இந்த அறிக்கை 22 ஆம் தேதி அதிகாலையில் வெளியானது. இன்று திருநெல்வேலியில ் போராட்டம்
*************** *************** *******
பகை நாட்டு இராணுவம் எல்லை தாண்டி ஆக்கிரமிக்க குவிதல் போல, பல்லாயிரக்கணக்க ில் காவல்துறையினர் இடிந்தகரை வட்டாரத்தில் முற்றுகையிட்டுள ்ளனர். கூடங்குளம், கூட்டப்புளி, ஊத்தங்குளி, உவரி உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் காவல்துறை எல்லாச் சாலைகளிலும் எவரும் நடமாட முடியாத அளவுக்கு மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளது. எனினும் பதினைந்தாயிரத்த ிற்கும் மேற்பட்ட மீனவ மக்களும், அணுமின் நிலையத்தை எதிர்க்கும் மக்களும் எந்த அடக்குமுறைக்கும ் அஞ்சாது தங்களை வருத்திக் கொண்டு அறப்போர் நடத்தி வருகின்றனர். சூறைக்காற்றிற்க ும், சுறா மீனுக்கும், திமிங்கலத்திற்க ும் அஞ்சாது கடல் மேல் படகுகள் செலுத்தும் உடலில் உரமும், நெஞ்சில் திறனும் கொண்ட மீனவ மக்கள், அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்றால் அவர்களுக்காக அல்ல. தென் தமிழ்நாட்டை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அழிவிலிருந்து பாதுகாக்கவே போராடுகிறார்கள் .



இடிந்தகரை வட்டார மக்களுக்கு அரிசி, காய்கறி, பால், குடிதண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக அரசின் காவல்துறை பொருளாதார முற்றுகை போட்டுள்ளது.
Quote
 
 
-8 #39 kurt 2012-03-22 23:54
//இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதால ், அந்த போராட்டப் பந்தலில் இருந்த பெண்களும் குழந்தைகளும், உணவுக்கே அல்லாடும் சூழல் ஏற்பட்டது.//I dont mean to sound to sound inhuman but I had this confusion for a long time..If the demonstration is based on fasting then why should they worry about food ...
Quote
 
 
+7 #38 Penn 2012-03-22 22:50
ஒரு குப்பைதொட்டியை கூட ஒழுங்கா பராமரிக்க தெரியாத நமக்கு அணு உலை தான் பாக்கி. கேரளாகாரன் அல்லது கல்கத்தாகாரன் கிட்ட கேளுங்க ஒரு அணுமின் நிலயம் அமைக்கட்டும்மான ு, அடிச்சே துரத்துவான். மெட்ராஸ்காரனுக் கு மின்சாரம் வந்தா போதும் , ஜாலியா டிவி பார்ப்பான், எவனுக்கு கதிரியக்கம் பாதிப்பு வந்தால் அவனுக்கு என்ன? சூரிய ஒளி அளவுக்கு அதிகமாவே இருக்கும் நாட்டில் , சூரியசக்தி கொண்டு மின்சாரம் தயாரிப்பதை விட்டு விட்டு, குளிரில் ஆடும் ரஷ்யாகாரன் சொல்லை கேட்டு அணுஅடுப்பு போடுவது அருவெருப்பு. மேலை நாட்டில் சூரியனையே பார்க்க முடியாது, ( நானும் வெளினாட்டில் தான் இருக்கிறேன்). இங்கேயே அணுமின்சாரம் வேண்டாம் என்ட்ரு மாற்று சக்தியை ஊக்குவிக்கின்றன ர். விற்க்காத எல்லாம் இந்தியாவுக்கு ..... இந்தியவில் யாருக்கும் வேண்டாத்து தமிழனுக்கு.....அதிலும் யாருக்கும் துன்பம் தராத கிராமத்தானுக்கு நோய் தரும் அணு உலை... மினசாரம் எல்லாருக்கும். துன்பம் சிலருக்கு மட்டும்.
Quote
 
 
-6 #37 senthil kumaran 2012-03-22 22:02
நேற்று ்வரை கூடங்குளம் ்வேண்டாம் என்று சொன்ன என்று சொன்ன உதயகுமார் ்இப்பொது அனல் ்்மின் நிலையமும் ்வேண்டாம் என்று சொல்கிறார்.நாளை சாலையில் விபத்து அதனால் ்லாரி வேண்டாம்,்எக்ஸா ம் எழுதினால் கை ்்வலிக்கும் அதனால் ்எக்ஸாம் வேண்டாம்,என்ற ரீதியில் எது ்வேண்டுமானாலும் பேசுவார்.்அதுக்கு ்சவுக்கும் ஜால்ரா அடிக்கும்.்ுநல்லா ்்உருப்படும் தமிழ்நாடு.வாழ்க தமிழினம்.இருட்டுக்குள்.
Quote
 
 
+7 #36 உண்மை விளும்பி 2012-03-22 21:56
//The Kudankulam people should not oppose this but use this opportunity and demand the Govt for better living like Infrastructure, Education, Health care, Lively hood improvement, Disaster Recovery management systems, Mock Drill practices, High class schools, etc//
When the life is at risk what is the use of these facilities?

//once India becomes surplus in Electricity generation AT THAT TIME LET US PLAN FOR CLOSURE OF NUCLEAR PLANTS ONE BY ONE//
Are you sure the plants can be easily closed without causing any issues?
Do you think we will certainly produce enough power by other means to close these Nuclear plants? Do you also think our politician really keep in mind the dangers of Nuclear power plant and find ways to close it as soon as possible, when they have n number of personal issues such as 2G scam, disproportionat e wealth case etc.?
Quote
 
 
0 #35 SRK 2012-03-22 18:54
Mr. Eleventh Sense, U don't have any SENSE about the use of Nuclear power! Jaya's decision might be based on politics but the decision to open the Nuclear plant is verrrrrrrrry correct. Mr. Eleventh Sense, U better not to write Non-sense thoughts about koodangulam plant. In life, always risks will be there...See kalpakkam plant which is verry near to our capital. So, Mr. eleventh sense, pls have some sense too.

சவுக்கு .........

மக்களை திசைதிருப்பி காரியம் சாதித்துக்கொள்வ தில் ஜெ கெட்டிக்காரி தான்...............

ச்டெர்லிஎடெ இன்று தூத்துக்குடியில ் பல உயிர்கள் வில்சன்'ஸ் டிசிஸ் மற்றும் கான்செர் நோயால் பாதிப்படைய காரணமாக இருப்பது.

கொண்டு வந்தது ஜெ.

அதி விரைவில் கூடங்குளம் முடிவு எடுப்பதற்கு காரணம் தன மீதுள்ள கர்நாடக சொத்து குவிப்பு கேஸ் தான்.

காவிரி, முல்லை பெரியார், நல்ல தார் ரோடுகள், மக்களுக்கு நல்ல குடிநீர், தட்டுப்பாடின்றி மணல், சிமெண்ட் விலை, சிறப்பான பஸ் வசதி, இன்னும் பிற எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கையில், இந்த கூடங்குளம் மட்டும் இவ்வளவு அவசரம் ஏன்?

ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதாரே கண்ணா ...........
இன்னைக்கு நைட் கரண்ட் கட் இல்லை பார்த்தாயா சவுக்கு !

தமிழன் இளிச்ச வாயன் தான்.........
இன்னும் எதனை உயிர் தரையில் வீழ போகிறதோ.............
அடாவடிகள் (ராஜேஷ் தாஸ் மாதிரி) திருந்தவே மாட்டார்கள்.
Quote
 
 
0 #34 SRK 2012-03-22 18:49
Exactly! Savukku is having ILLEGAL relationship with Udayakumar and others, itseems. Otherwise, he will not oppose the nuclear power blindly. After seeing several people against this savukku's biased article, still savukku is not changing it's stand and looking so adament! Shame..Shame Savukku is So shame! U should publish this savukku.

சவுக்கு உதயகுமாரின் அயல் நாட்டுத் தொடர்பு, தொண்டு நிருவனங்களுக்கு வரும் பணம் பற்றிய விளக்கங்கள், பிடிபட்டு நாடு கடத்தப்பட்டவரோட
உள்ள தொடர்பு ஆகியவை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளியிட வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கும் ஏதோ
ஒரு உள் நோக்கம் இருப்பதாகத்தான் கருத வேண்டியிருக்கும ்.
Quote
 
 
+3 #33 Eleventh Sense 2012-03-22 18:13
They do not have any facility in the state and have to migrate for better living which is done by them till now. Only govt employees live there).is not a good attitude. FORTUNE FAVOURS THE BRAVE. Pray Almighty and let us go ahead. Jai Hind."........
Mr. RGK, Think u shd be from chennai........
No one buys an artifact, by selling his eye......
If electricity is the grave necessicity at the moment, why cant u people plan well before a situation rises?
Thoothukudi people are facing water pollution and Cancer problems due to Copper ions from Sterlite....
Sweet and tiny Tomato from Tharuvaikulam village is extinct because of Coastal Energen........( a whole village of 5000 acres has been acquired for a tiny plant)
A lot more of infants of thoothukudi are facing primary complex, due to the minute ash particles of Thermal station......
Spic, Tac and DCW has joined their hands in evacuating the sea borne creatures, to faraway places, by leading their untreated effluents directly into the sea...........
Fortune should favour only the brave, such as the Keralites, who are bold enough to say no to their own river sand........ and yes to the sand, at any cost, from tamil nadu, making the desert out of our statein near future.They won't let any industries in their land, but knows ways and means to attract tourists stating their non-pollute atmosphere.
A coin has two faces. But try to understand, that even kerala gets its share of electricity, without any powerplants, or NE plants.
People like u are a curse to the Tamil race.......
Understand and follow the rule of Keralites, "No Industries, but plenty of Enjoyment, and fresh Air".
Join hands with fellowmen to make Tamil Nadu a Livable Place........Jai Hind.
Quote
 
 
+6 #32 Lakshmana Perumal 2012-03-22 17:57
இதுல ம.தி.மு.க வை விமர்சித்ததை வன்மையாக கன்டிக்கிரேன்
Quote
 
 
-7 #31 Karthikeyan.T 2012-03-22 17:43
Quoting chandrasekharan :
What ever you have written is wrong and thoughtless. What Udayakumar and the common folk assembled against Koodamkulam project know. Do you mean to say people like Kalam and other scientists do not know about affect of Nuclear power plants. Japan is still on going with Nuclear plants. Natural calamities like Tsunami will effect many things. The power plant was otherwise safe; has been running for long time. Udaykumar is a paid agent and wants to create problem in India just like they did in Srilanka. Ultimately who suffered in Srilanks? Not pribhakaran but common poor people. and they are still suffering
Just stop writing baseless stories

Well said, good reply to savukku
Quote
 
 
+3 #30 Alagesan 2012-03-22 16:54
மத்திய மாநில அரசுகளின் அராஜகப் போக்கைக் கண்டிக்கவும், இடிந்தகரை வட்டார மக்களுக்கு தோள் கொடுக்கவும், அணு உலை எதிர்ப்புணர்வை நிலை நாட்டவும் மார்ச் 23 ஆம் தேதி வெள்ளி காலை 10 மணி பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் அறப்போர் நடத்திட அனைவரும் திரண்டு வாரீர். இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்ட அறப்போரில் நானும் கலந்து கொள்கிறேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்மணிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் அணு உலை எதிர்ப்பாளர்களு ம் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.
Quote
 
 
+5 #29 அன்புடையான் 2012-03-22 16:51
தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு சவுக்கே ரொம்ப விரக்தியா எழுத ஆரம்பிச்சுட்டார ு. உதயகுமார் அமெரிக்காவின் கைக்கூலி என்கிறார்கள் சிலர், மன்மோகன் சிங்கையே நிரூபிக்க சொன்னார் முடிந்ததா அவரால் ? உதயகுமார் கேட்கும் சில கேள்விகளுக்கூட பதில் அளிக்க தெரியாத அல்லது முடியாது போன அறிவுஜீவிகள் அணூலை பாதுகாப்பானது என்கிறார்கள். அமெரிக்காவின் கைக்கூலி என்று சொல்லுகிறவர்களு க்கு மண்டைக்குள்ளே உதயகுமார் மதத்தின் மீதான வெறுப்புதான் இருக்கிறது, அது வார்த்தைகளாக விழுகிறது. அவர் யாருக்காக போராடுகிறார் என்ன நோக்கம் என்பத சற்றும் சிந்திக்காமல் கைக்கூலி என்று பெயர் வச்சாச்சு.

அதிமுகவிற்கு பாடம் புகட்ட திமுகவுக்கு, அப்பறம் திமுகவுக்கு பாடம் புகட்ட அதிமுகவிற்கு வாக்களிப்போம்...நமக்கு தான் யாரவுது பாடம் புகட்டனும் :)

//இடது சாரிகளோ, ரஷ்யாவிலிருந்து கழுதை மூத்திரத்தை எடுத்து வந்தால் கூட, சிறப்பாக இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள்.//
ஆமாம். தமிழகத்தில் மட்டும் தான்.

//“கூடங்குளத்தில் வன்முறை. போலீஸ் வேன்களுக்கு தீ வைப்பு”.//
//என்று தினமலரில் செய்தி வரும் சூழல் ஏற்பட்டிருக்கும ்//
உண்மைக்கு புறம்பான செய்தியை மிகைப்படுத்தி வெளியிடுவதில் தினமலம் தவிர வேறயாரும் இல்லை என்பது போல இருக்கிறது.சூப்பர்

புகழேந்தியும் சளைக்காமல் பொதுநல வழக்கை பதிவுசெய்கிறார் . நீண்ட பெருவாழ்வு வாழ்க !

நாடக நடிகர்கள், மேளம் அடிக்கிறவன் எல்லாம் தமிழ்நாட்டை ஆட்சிசெய்தால், "அவர்களுக்கு அந்த வாய்ப்பை தந்ததால் தமிழர்களுக்கு இந்த சாபக்கேடு".
Quote
 
 
-4 #28 rosgaz 2012-03-22 16:12
மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் அன்சாரி அவர்கள் தான் முதன் முதலில் கண்டனம் தெரிவித்தார்.
Quote
 
 
+15 #27 santhosham 2012-03-22 15:33
சவுக்கு கூடன்குளம் பற்றி சொல்லும்போது எந்த எதிர்கட்சியும் எதிர்கவில்லை என்று சொல்வது தவறு. திரு.வைகோ மட்டும்தான் இந்த பிரச்சினை பற்றி தொடர்ந்து தன் கருத்தை மாற்றாமல் அந்த ஆபத்தான அனு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆணால் சவுக்கு இந்த 2011 மே தேர்தல் சமயத்திலேயே அவர் பற்றி இருட்டடிப்பு செய்ய தொடஙகிவிட்டது. தமிழ் நாட்டின் நீஙகள் குறிப்பிட்ட குறிப்பிடாத எந்த தலைவரை விடவும் நேர்மை குறையாதவர் வைகோ.இந்த பிரச்சினையில் கூட அவர் வழக்கம் போல தொடர்ந்து போராடுவார். ஸ்டெர்லிட் பிரச்சினையில் கூட அப்படிதான்.அணால் சவுக்குகு தான் அது பற்றிய செலக்டிவ் அம்னீசியா...
Quote
 
 
-1 #26 ரப்பர் ஸ்டாம்ப் 2012-03-22 15:17
ஒரு தனி மனிதன் வாழ்க்கையில் ஓரளவு ரிஸ்க் எடுக்கவேண்டும், அப்போதுதான் முன்னுக்கு வர முடியும். அதற்காக கண்மூடித்தனமான் ரிஸ்க் எடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. கால்குலேடிவ் ரிஸ்க் என்பதுதான். இதைத்தான் அரசுகளும் செய்யும். அணுமின் விசையத்தில் அரசாங்கத்தின் முடிவு அப்படிபட்டதே!

போராட்டகாரர்கள் தீவிரமாக இதை செய்ய அனுமதிக்கவே முடியாது என்று திடமாக இருப்பின் போராட்டத்தை ஏன் ஆரம்பத்திலேயே செய்யவில்லை. அப்படி செய்திருப்பின் முதலீடுகள் தடுக்கப்பட்டிரு க்கும் அல்லவா? கூடங்குளம் வேண்டாம் என்றால், இதைவிட பழைய டெக்னிக்குகள் கொண்ட கல்ப்பாக்கம், சென்னையின் மிக அருகிலேயே உள்ளது. ஏதாவது நடந்தால், சென்னையே இருக்காது. ஆறில் ஒரு பங்கு மக்கள் சென்னையில் வாழ்கிறார்கள். அதில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவும் அடங்குவர்.
Quote
 
 
+2 #25 ரப்பர் ஸ்டாம்ப் 2012-03-22 15:16
அப்துல் கலாம் போன்ற தன்னலமில்லாத தலைவரையே சந்தேகப்பட்டால் , இதில் சுய நலம் தவிர்த்து வேறென்ன? இவர்கள் சொல்லும் நில நடுக்கம் 8 ரிக்டருகு மேல் வருமானால், அங்கு இருக்கும் அனைத்து வீடுகளும் தரை மட்டமாகிவிடும். யார் உயிரோடு இருப்பர்? இருந்த போதும், இந்த அணு மின் நிலையம் அதன் பணியை நிறுத்திவிடக்கூ டிய பாதுகாபப்புகள் செய்யப்படுள்ளது . அதே நிலநடுக்கம் மேட்டூர் அணையில் ஏற்பட்டால் அதனால் அணை உடையுமாயின் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் உயிரிழப்பர். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதால் பெரும் சுற்றுசூழல் சீர்கேடு நிகழ்கிறது. அதனால் சுவாசக்கோளாறு எற்பட்டு ஆயிரக்கணக்கானோர ் உயிரிழக்கின்றனர ். அதற்காக அதைவிட முடியுமா? நிறுத்தலாமா? போரட்டக்காரர்கள ் நிறுத்தலாம் என்றுகூட சொல்வார்கள், ஆனால் அரசாங்கம் அதை செய்யமுடியாது. ஏற்றுக்கொள்ளாதவ ர்களை எப்படி கையாள்வது?

மின்சார பிரச்சினை ஒரு அரசையே விழுங்க காரணமாகியது. நம்மில் எத்தனைபேர் மின்சாரத்திற்கா க நாள்தோறும் அரசை திட்டுகிறோம். ஜெயலலிதாவின் முடிவு சரியானது, இன்னும் முன்னரே இந்த முடிவை எடுத்திருக்கவேண ்டும். இந்த போராட்ட்டத்தை தமிழகத்திற்கு அதிக மின்சாரம் கிடைக்க இந்த போராட்டத்தை பயன்படுத்திருக் கொண்டார். எதற்கும் ஒத்துவராமல் இதை எதிர்க்கும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் தவறில்லை. கூட்டம்சேர்ந்தா ல் எதைவேணாலும் சாதித்துவிடலாம் என்றால், அங்கு அரசாங்கத்தின் ஆளுமையே இல்லை என்பது அர்த்தம். தாமதமாயினும் நல்ல முடிவு. தொடரட்டும்.
Quote
 
 
+4 #24 Manidhan 2012-03-22 14:24
இதெல்லாம் ஒரு நாடு. தமிழன் இந்தியன் என்ரு சொல்ல அவமானமாக உல்லது.
Quote
 
 
+11 #23 chandrasekharan 2012-03-22 14:14
What ever you have written is wrong and thoughtless. What Udayakumar and the common folk assembled against Koodamkulam project know. Do you mean to say people like Kalam and other scientists do not know about affect of Nuclear power plants. Japan is still on going with Nuclear plants. Natural calamities like Tsunami will effect many things. The power plant was otherwise safe; has been running for long time. Udaykumar is a paid agent and wants to create problem in India just like they did in Srilanka. Ultimately who suffered in Srilanks? Not pribhakaran but common poor people. and they are still suffering
Just stop writing baseless stories
Quote
 
 
-29 #22 mohan292 2012-03-22 14:03
ஆனால் எந்த எதிர்க்கட்சியும ் இது குறித்து கவலை தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதை விட ஒரு சாபக்கேடு இருக்க முடியுமா ?
தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி கூட, ஜெயலிலதா அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. ////////////////////
ஏண்டா ஜாள்ட்றா மூண்டம்
Quote
 
 
+10 #21 deepu 2012-03-22 13:52
அம்மா சொன்ன‌து போல், பொதும‌க்க‌ளிட‌ம ிருந்த‌ அணு உலை ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ங்க‌ள் தீர்ந்து விட்ட‌தா? நல்ல‌ பாம்பாய் இருந்த‌ அணு உலை திடீரென‌ ஆதிஷேச‌னாய் ஆகிவிட்ட‌தோ அம்மாவிற்கு? எட்டு மாத‌கால‌மாக‌ போராடிய‌ ம‌க்க‌ள் என்ன‌ ம‌டைய‌ர்க‌ளா? ச‌ங்க‌ர‌ன்கோயில ் தேர்த‌ல் முடிவும், ம‌த்திய‌ அர‌சுக்கொதிரான துருப்புச் சீட்டுமாய் அம்மையாருக்கு இந்த‌ பிர‌ச்னை ப‌ய‌ன்ப‌ட்டிருக ்க‌லாம், ஆனால் போர‌டும் ம‌க்க‌ளின் வாழ்வே இந்த‌ போர‌ட்ட‌த்தில்த ான் இருக்கிற‌து. ம‌க்க‌ளை ப‌க‌டைக் காய்க‌ளாக ஆட்சியாள‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தின ால், ஆட்சியாள‌ர்‌க‌ள ையே, ஆட்ட‌த்தில் இருந்து தூக்கி எறிந்துவிடும் வ‌லிமை ம‌க்க‌ளுக்கு உண்டு என்ப‌தை முந்தைய‌ முதல்வ‌ராய் நினைவு ப‌டுத்திக் கொள்ளுங்க‌ள். ம‌க்க‌ளாட்சியில ், அதிகார‌ம் ம‌க்க‌ளிட‌ம். காவ‌ல‌ர்க‌ளும் ம‌க்க‌ளின் ஏவ‌லாளிக‌ள் தான்.
Quote
 
 
+3 #20 ஊர்க்குருவி. 2012-03-22 13:40
வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக கூரையை எரிப்பாரோ?
வேதனை தன்னை விலைகொண்டு யாரும் வாங்கிட நினைப்பாரோ??

வற்றிய குளத்தில் பறவைகள் தேடி வருவது கிடையாது,
வாக்குக்கள் மாறிப்போய்விடும ் என்றால் "கட்சிகள் குரைக்காது",

கூடன் குளத்தின் மக்களின்மீது ஏனிந்த வெறியாட்டம்
கொஞ்சமும் சிந்தனை இல்லையே என்றால் தானது மரமாகும்.

வாக்குக்கு மட்டும் மக்களை தேடும் அரசியல் தொலையாதோ.
வென்றதன் பின்னே அம்புகள் எய்யும் சன்னதம் குறையாதோ.

பாலைவனமாய் ஆக்கிட வென்றே பாவியர் வந்தாரோ
பாவப்பட்ட மக்களின் எண்ண துயரங்கள் தொலையாதோ.
Quote
 
 
+10 #19 rgk 2012-03-22 12:54
This article is totally misleading. The whole world knows that Nuclear plants have more risk. Agreed. But at this juncture we need electricity. DO NOT COMPARE WITH GERMANY OR JAPAN. THEY ARE HEAVILY ADVANCED AND HAVE SURPLUS ELECTRICITY & PLANNED TO CLOSE DOWN IN FUTURE. Let us take the positive out of Kudankulam plant. Let it be open and generate electricity and TN get 1000MW which is a large percentage. Parallely Let us explore other options like solar or wind or tidal etc to produce electricity. The Kudankulam people should not oppose this but use this opportunity and demand the Govt for better living like Infrastructure, Education, Health care, Lively hood improvement, Disaster Recovery management systems, Mock Drill practices, High class schools, etc and once India becomes surplus in Electricity generation AT THAT TIME LET US PLAN FOR CLOSURE OF NUCLEAR PLANTS ONE BY ONE. Let the people in Kudankulam support now and use Udayakumar & Co to monitor the commitments given by State and Central Govt. Let them come out of this in positive state of mind. Electricity generation is the need of the hour. It is Shame that we have not attained the 100% coverage of electrification . Long way to go and let the anti-KKNPP people use this opportunity for the development of their community and villages. Lastly Abdul Kalamji is the biggest motivating factor. He is a genuine person who worked for the county. . They should insist the Govt to train all the people during emergency situations and do mock drills. Instead of taking this as positive and comparing Kerala (as it was opposed by them. Their style of living is diff. They do not have any facility in the state and have to migrate for better living which is done by them till now. Only govt employees live there).is not a good attitude. FORTUNE FAVOURS THE BRAVE. Pray Almighty and let us go ahead. Jai Hind
Quote
 
 
+8 #18 Dennis 2012-03-22 12:07
கடலுக்கு செல்லும் தன் கணவன் திரும்பி வருவரோ என்ற தவிப்பு மனைவிக்கு, போராட்டத்திற்கு செல்லும் தன் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் தான் திரும்பி செல்லும் பொது உயிருடன் இருப்பார்களோ என்ற ஏக்கம் கணவருக்கு. மத்திய அரசு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு. மாநில அரசோ கூட இருந்து கழுத்தறுப்பு.
நாட்டிற்கு நல்லது செய்ய கூடி விவாதிக்க வேண்டிய பாராளுமன்றம் இவர்களுக்கு பரம்பரை தொழில் செய்யும் நாடகமேடை.
இப்போதே ஒரு குண்டு போட்டால் எங்கள் மரணம் நிம்மதியான ஓன்று. இல்லை என்றால் இதிலிருந்து வரும் கதிரியக்கத்தால் மரணம் கூட நிம்மதி இல்லாத ஓன்று.
196 பேர் என்று பொய் சொல்லுகிறார்கள் . ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள ். இடிந்த கரை நோக்கி யார் சென்றாலும் கைது செய்யபடுகிறார்க ள். கடந்த ஆண்டு நான்கு லட்சம் பேர் காணமல் போன இந்தியாவில் இந்த ஆண்டு ஆறு லட்சம் பேர் காணமல் போவார்கள்.
அணூலைக்கு எதாவது நேர்ந்தால் மக்கள் தப்பி செல்ல பேரிடர் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அந்த பயிற்சி கூட அரசாங்கத்தால் கொடுக்கப்படவில் லை. கேட்டால் ஆபத்து ஒன்றும் வராது என்கிறார்கள். ஒருவேளை அணூலை செயல்படாது என்று அவர்களுக்கு தெரிந்திருக்கலா ம். நம்முடைய ஊர் சாலைகள் போல ஒரே வாரத்துக்குள் பழுது ஆனாலும் ஆச்சரியபடுவதிர் க்கு இல்லை.
Quote
 
 
+14 #17 கிராமத்தான் 2012-03-22 11:55
அணு மின்சாரத்தை விட ஆபத்தில்லாத அனல் மின்சாரம், புனல் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் இவைகளை செயல்படுத்த முனைப்பு காட்டலாமே? வட மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு 70% வரை மானியம் வழங்கப்படுகிறது . மின்சாரமே இல்லாத போது மிக்சி, கிரைண்டர், விசிறி வழங்கப்பட்டு வருகின்றது – இதை யாருமே விமர்சிப்பது இல்லை (ஏனெனில் ‘இலவசம்’ என்ற மாயை அல்லவா?).
மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தட்டுபாடின்றி வழங்குவது அரசின் கடமை. குடிதண்ணீரோ, மின்சாரமோ, பள்ளிக்கூடமோ, சாலைப் போக்குவரத்தோ இல்லாத கிராமங்களில் அரசின் சாரயக்கடைகள் மட்டும் இயங்கி வருகின்றதை எத்தனை ஆதரவாளர்கள் அறிவார்கள்? சென்னையில் மழை பெய்தால் (சாலைகளில் சாக்கடை நீரோடு இரண்டர கலந்து, துற்நாற்றத்தோடு ஓடும்) தண்ணீர் பிரச்சனை; மழை பெய்யாவிட்டாலும ் (குடி) தண்ணீர் பிரச்சனை! ஆனால் தண்ணீரே இல்லாத பாலைவன அரபு நாடுகளில் செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையில் தான் இயங்கி வருகிறது (தயாரிக்கும் செலவு லிட்டருக்கு ரூ 20 மட்டுமே!). தண்ணீர் மேலாண்மை சற்று ஆச்சரியமாகத் தான் உள்ளது…..
இதுவரை நடந்த ஜெ-சசி ஆளுமையில் ஒரு மின்திட்டம் கூட போட்டதில்லை; சாலைகள் செப்பனிடுவதில்ல ை. விவசாயிகளுக்கு தேவையான ஆற்றுத் தண்ணீர் பற்றி அக்கரை இல்லை. மாற்று ஆட்சியில் திட்டமிட்டு துவங்கிய அனல்மின் நிலையங்கள்: மேட்டூர் 600மெகாவாட், எண்ணூர் 2X500 மெகாவாட், தூத்துகுடி அனல்மின்நிலையங் கள் தான் இனி வரும் காலங்களில் செயல்பட இருக்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் இருந்த விளைநிலங்கள் எல்லாம் தென்னை மரத்தோப்பாக மாறியதற்கு காரணம், காவிரி தண்ணீர் ஒழுங்காக இவரது ஆட்சியில் வருவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காததது தான். உணவு பஞ்சம் தவிர்க்க முடியாதாகிக் கொண்டிருக்கிறது .
பள்ளிக்கு செல்லாமல் ஆடு மாடு மேய்த்து, இலவசங்களைப் பெற்று தேர்தல் அன்று மட்டும் ஓட்டு போடும் வேலையைச் செய்தால் போதும் என்று சோம்பேறிகளாக்கி , சுயமரியாதை, சிந்திக்கும் திறனை செயலிழக்கச் செய்வது தமிழன் அல்லாத ஆளும் அரசியல்வாதிகள் தான்.
Quote
 
 
+38 #16 mahesh_new 2012-03-22 11:54
ராஜீவ் கொலையாளிகள் என கூறப்பட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வாதிட்ட ராம்ஜெத் மலானியை கூட்டி வந்தது வைகோ தான். அணு உலை விசயத்திலும் எதிர்ப்பு குரல் கொடுக்கும் ஒரே அரசியல் தலைவர் வைகோ தான். ஆனால் இந்த தளத்தில் வைகோ வை தொடர்ந்து இருட்டடிப்பு செய்வது மாதிரியே இருக்கிறது. எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் எதாவது ஒரு ஆதரவு இருந்தால்தான் போராட்டங்களை முன்னெடுக்க எதுவாய் இருக்கும்.
சவுக்கும் நிறைய விசயங்களில் பயஸ்டு ஆக இருக்கிறது.
Quote
 
 
+3 #15 sivaji 2012-03-22 11:53
சவுக்கு உதயகுமாரின் அயல் நாட்டுத் தொடர்பு, தொண்டு நிருவனங்களுக்கு வரும் பணம் பற்றிய விளக்கங்கள், பிடிபட்டு நாடு கடத்தப்பட்டவரோட
உள்ள தொடர்பு ஆகியவை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளியிட வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கும் ஏதோ
ஒரு உள் நோக்கம் இருப்பதாகத்தான் கருத வேண்டியிருக்கும ்.
Quote
 
 
+21 #14 கிராமத்தான் 2012-03-22 11:53
பொதுவாக அணுமின்சாரத்திற ்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்
1) எவன் செத்தாலும் கவலை இல்லை – என் வீட்டிற்கு மின்சாரம் தேவை
2) என் ஊரில் அணுமின் நிலையம் இல்லை – எனவே எனக்கு ஆபத்து இல்லை; எங்கோ எந்த தமிழன் செத்தால் எனக்கென்ன?
இந்த மாதிரியான சுயநலம் மட்டுமே உள்ள, அடிமைகளால் தான் தமிழ்நாடு சுதந்திரம் பெற்றும் இன்னமும் அன்னியரின் ஆட்சி பிடியில் உள்ளது. தமிழகத்திற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை – தமிழகம் இன்னும் தமிழர்களில் கட்டுப்பாட்டில் (யாழ் போல) இல்லை. இதுதான் இன்றைய தலையாய பிரச்சனை.
(இதில் ‘இராமனோ இராவனோ ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லை’ என சாதி அடிப்படையில் சில கும்பல்கள் மற்ற மக்களை வஞ்சித்து வருகின்றன. அரசியல்வாதிகளால ் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகி பலி போய் கொண்டிருக்கிறோம ். ஊடகங்களோ கடமையிலிருந்து தவறி உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்தாம ல், வெளிப்படையாக பலநேரங்களில் மாமா வேலை செய்து மக்களை ஏமாற்றி பிழைப்பை நடத்தி வருகின்றன. மீறி தன்மானத்தோடு, கடமை உணர்வோடு செயல்படும் ஒன்றிரண்டு செய்தியாளர்களும ் அரசியல்வாதி / அதிகாரிகளின் கைக்கூலிகளால் மிரட்டப்பட்டு, முடக்கப்பட்டு வருகிறார்களும்.
இந்த கூடங்குளம் வந்தால், தமிழகத்திற்கு தேவையான 5000 மெகாவாட் மின்சாரம் கிடைத்துவிடுமா? தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த அணுமின் நிலையத்திலிருந் து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமா? அல்லது நிலையம் அமைக்க புத்திசாலித்தனம ாக தவிர்த்த கேரளம், தமிழ் இன எதிரி இலங்கை - இவர்களுக்கு மின்சாரம் கொடுக்க இருப்பதாகச் சொல்கிறார்களே இது உண்மையாக இருந்தால் இந்த ஆதரவாளர்களின் பதில் தான் என்னவோ?
Quote
 
 
-6 #13 A. Kalidasan 2012-03-22 11:34
Savukku sir Aavarkale vanakkam ningal nallavar than anal entha kudankulam makkal nallavarkal entru sollathirkal entha ooril 1988 eavanum padikka villaiya? entha pushparayan & uthayakumar vasai partha arampa stage vayasu 20 aha erukkum jaythapur thittam thirum munne vendam enrtu antha pakuthi makkal poradinarkal athanal thittam kaividappattath u melum entha kudankulam makkal 1988 aam Ande ooru vittai mathama 500 Rupayakku vadakai vitttu sampathithrukki rarkal melum entha oor varannda Poomi velaikku mumbai martrum velinadukalukku poy than sampathithu vanthulnar ennum pathi per veli manizhathil vasikkirarkal entha anu min nilayam thittam vanntha yudan thaan velaikkaka veliye sellamal eurrkirarkal koncham per than minpidikka selluvarkal athuvum Ilaingaral ippothu minpidikka selvathillai velinadukallukk u thaan selkirarkal ningal chennai yeliruthu vittu patthirikka karan entra muraiyil seyathi podukiriral nallathun aniyayam engu nakkukiratho angku savukku sir kannippaka iruppar Entha Kudankulam makkalai mattum nammpatiral kittathata ooru anumin thittam enpathu 10 varusathirkul katti mudikka ventum Annal entha anuminthittam thodanki 22 varudam akiirukkirathu kadaisi 7 matham than ivarkallukku theriyuthu anumin nilayam nammaku padhukappu illai entru japan nadu sunama nilanadukkam adikkadi varukira pakuthi japanaiyum entha kudankulathaiyu m sarikku samamaka parrka kudathu!! onturm mattum solkiren kudankulathil anuminthittam varavillai entrall anntha pakuthi makkal pizhaippu veli edangalukku sentrupparkal ningal ungal pulan visaranai nadathi parungal. entha thittam eni thavirakk mudiayatha nilayil muda solluvatharkku antha oor makkalukku urimai kidayathu?????

Savukku sir Thayaseythu ennai mannithuvingal ungal karuthukku eathirthu ezhuthiayathark ku

antha oor makkalai nammapatirkal

Thanks
A. Kalidasan
Quote
 
 
+12 #12 sbalasikk 2012-03-22 10:27
"In this article it is stated that including MDMK,no one has raised any opposition to the police actions.

It is completely wrong. Immediately after the deployement of the Striking force there,first statement came from Vaiko saying that Police should be immediately withdrwan from Idintha karai.It is published in Thatstamil 19th morning,even today also any one can see that."
Quote
 
 
-4 #11 nambirajulu 2012-03-22 09:19
:lol: :-) ;-) ;-) :oops:
Quote
 
 
+16 #10 vaaimai 2012-03-22 09:03
கூடன்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி அதிக மக்கள் அணு உலைக்கு ஆதரவாக வாக்களித்தால் அணு உலையை தொடரலாம். அதுதான் மக்களாட்சியின் தன்மை. அதை விடுத்து துப்பாக்கி முனையில் மக்களை மிரட்டுவது கண்டிக்கதக்கது. உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகள் அணு உலையை மூடிவரும் வேளையில், நமக்கு அது தேவையில்லை. அதன் கழிவுகளை பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாப்பது இயலாத காரியம். இந்த அணு உலையால் தென் பகுதி மக்களுக்கு கதிரியக்க ஆபத்துகள் அதிகம். இந்த உலையினால் நமக்கு கிடைக்கும் மின்சாரம் 300 மெகாவாட்டுக்கு மேல் இருக்க போவது இல்லை. இதற்காக மக்களின் உயிரை பணயம் வைப்பது முறையல்ல. மின்வெட்டினால் அவதிப்படும் மக்கள் அந்த மின்வெட்டை செயற்கையாக உருவாக்கும் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடவேண்டுமே ஒழிய கூடன்குளம் மக்களை எதிர்க்க கூடாது.
Quote
 
 
-3 #9 vendum suthanthiram 2012-03-22 08:34
அதுதாம் முதலிலெயெ சொன்னென்..னம் மக்கலுக்கு சுதந்திரம் வேன்டும்
Quote
 
 
+11 #8 அன்பு 2012-03-22 08:22
பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும், அரசியல் கட்சிகள், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் , இதை கண்டுகொள்ளாமல் இருப்பதில் வியப்பேதுமில்லை .

தினமலத்தை போல எல்லா பத்திரிக்கைகளும ் மாறிவிடும் என்று அச்சமாக உள்ளது.
Quote
 
 
+10 #7 அன்பு 2012-03-22 08:20
தற்போது அங்கு நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சிடிசன் படத்தில் வரும் கற்பனையான அத்திபட்டி தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!

எங்கே அதே போல் நிகழ்ந்து விடுமோ என்று நெஞ்சம் பதபதைக்கிறது!

இன்று இடிந்தகரை.... நாளை??????
Quote
 
 
+15 #6 naan kadavul 2012-03-22 02:00
மத்திய மாநில அரசுகளின் பேரம்,காயை சரியானபடி நகர்த்தி மத்திய அரசு சாதித்தது.பலியானது அப்பாவி மக்களும் ஜனநாயகமும். மத்திய அரசிடம் ஏமாந்தது மாநில அரசும் தான். சில நாட்களில் தெரிய வரும்.
Quote
 
 
+32 #5 kali.krishna 2012-03-22 01:34
இந்த பிரச்சினையின் தீவிரம் உங்களின் கட்டுரையை வாசிக்கும் போதுதான் புரிகிறது. மற்ற பத்திரிகைகளில் எல்லாம் எதோ குழாயடி சண்டை மாதிரி முக்கியத்துவம் இல்லாமல் செய்தி போட்டிருக்கிறார ்கள்.

இதிலும் "தினமலம்" "உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்" என்று காமடி பண்ணியிருக்கிறத ு. சாப்பாடுக்காகதா ன் மக்கள் போராட்ட கூடாரத்துக்கு போவதாக செய்தி போட்டிருக்கிறான ுகள். இவர்களுக்கெல்லா ம் பத்திரிகைகாரர்க ள் என்று சொல்ல வெக்கமாயில்ல? முதுகெலும்பில்ல ாத பிறவிகள்.

தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கு பலகோடி நன்றிகள்.
Quote
 
 
+52 #4 Padman 2012-03-22 00:27
தமிழகத்தின் சாபக்கேடு என்பதை ஏற்க முடியாது. எல்லாம் சுயநலம். கூடங்குளம் பகுதி தவிர்த்து வேறு எங்காவது மக்கள் போராட்டம் நடக்குதா?

யார் பாழ்பட்டால் நமக்கென்ன... நம் வீட்டில் விளக்கு எரிந்தால் போதும். யார் எப்படி போனால் என்ன... நாம் குளு குளு வசதியோட இருந்தாப் போதும். இங்கிருக்கும் நீதிமன்றங்களும் அதுக்கு மேல்... அரசின் கொள்கை முடிவு என ஒதுங்கியிருக்கி றது. தமிழக கரையோர சுனாமி மற்றும் புகுஷிமா விபத்திற்க்குப் பிறகு நீதிமன்றங்கள் இதை அரசின் கொள்கை முடிவென ஒதுங்க முடியாது.

இன்னும் நிறைய அணுமின் திட்டங்கள் வரிசைகட்டி நிற்கிறது. அணுமின் திட்டம் பாதுகாப்பானது... சிக்கனமானது... அப்படியெனில் வரவிருக்கும் திட்டங்களை சென்னையில் தொடங்க வேண்டுமென கையொப்பமிடுங்கள ். அண்ணா மேம்பாலம் அருகில் ஒரு ரியாக்டர் மற்றும் அண்ணா அறிவாலயம் இருக்குமிடத்தில ் ஒரு ரியாக்டர் வைங்க. ஏன்னா இதுதான் பாதுகாப்பனதாச்ச ே!.

அட முட்டாப்பசங்களா ... இதுபோல சொல்லி சொல்லித்தான் எல்லா அணுமின் திட்டங்களும் தொடங்கப்பட்டது. அப்புறம் எதற்கு விபத்து நடக்குது? இயற்கைக்கு கட்டுப்பட்டவந்த ான் மனிதன். இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது. எங்கு எந்த நிகழ்வு நடக்குமென யாருக்கும் தெரியாது.

நம்ம ஊரிலிருந்து குடியரசு தலைவரா இருந்த மனிதர் உடம்பெல்லாம் மூளையை வைத்துகொண்டு இந்தத்திட்டம் வேண்டுமென குரல் கொடுப்பது படு மட்டம்.

மக்களின் அறியாமைக்கு காரணம் புகுஷிமா பற்றியோ, செர்நோபில் பற்றியோ, அமெரிக்காவின் முன்று மைல் தீவில் ஏற்பட்ட விபத்து பற்றியோ நம் பத்திரிகைகள் எதையும் எழுதவில்லை. மானாட மயிலாட குத்தாட்டம் போடும் தொலைகாட்சி இதையும் காட்டவேண்டும். அப்படி செய்தால் நீ மக்கள் மீது உண்மையிலே அக்கறை வைத்திருக்கிறாய ் என சொல்லலாம்.

சென்னையிலிருக்க ும் படித்த அதிமேதாவிகள் வீடுகட்ட வேண்டி எங்க பெண்ணையாற்று சுடுகாட்டு மணலை வாரி எடுத்து செல்லும் அவலம் வேறெந்த நாட்டிலையும் நடக்காது. சுடுகாட்டு மணலில் வீடுகட்டி வாழ நினைக்கும் இந்த பேய்களா கூடங்குளம் பற்றியெல்லாம் கவலைப்பட போகுது?

இன்னொரு பொதுநலன் வழக்கும் போடுங்கள் சவுக்கு... புகுஷிமா விபத்திற்கு பிறகு என்ன மாதிரி மாற்றங்களை இந்த கட்டமைப்பில் செய்திருக்கிறீர ்கள் என கேளுங்கள்.
Quote
 
 
-21 #3 sundarwipro 2012-03-22 00:23
ஒரு தனிப்பட்ட மனிதனின் அல்லது கிராமத்தின் சுயநலத்திற்காக ஒரு அணு உலையை முடக்கி வைப்பது எந்தவகையிலும் நியாயம் இல்லை. அமெரிக்காவின் கைக்கூலி இந்த உதயகுமார் மக்களை குழப்பிவிட்டு வாங்கின காசுக்கு வஞ்சமில்லாமல் வாலை ஆட்டுகிறார். இந்த ஒரு விஷயத்தில் அணைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருப்பது பொறுக்காமல் எதையாவது குட்டையை குழப்பமுடியுமா என்று ஒப்பரிவைக்கும் லெட்டர் பேடு சங்கங்கள். புல் தடுக்கி ஒருவன் விழுந்தாலும் அது மனித உரிமை மீறல் என்று பொதுநல வழக்கு தொடுத்து "நாங்களும் இருக்கோமில்ல" என்று சப்பை கட்டும் புகலேந்திகள் இந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 148 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4961
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week50751
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month284798
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13201165