முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இந்தியா முழுவதற்கும் 144 தடை உத்தரவு ??? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012 11:18

இந்தியா முழுமைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க முடியுமா ?  அப்படித்தான் ஒரு தடை உத்தரவு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

19.03.2012 அன்று பிறப்பிக்கப் பட்ட உத்தரவில் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது.  அந்த ஆணையில், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று மத்தியக் குழு, மாநிலக்குழு ஆகியவை சான்று அளித்த விபரங்களையும், இதைத் தொடர்ந்து மாநில அரசு 19.03.2012 முதல் கூடங்குளம் பகுதியில் அணு உலைப் பணிகள் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.  இதை அடுத்து “இந்நிலையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு உதவுவதோடு, கூடங்குளம் பகுதி பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களைத் தடுப்பதற்கும், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சட்டப்படி பணிபுரிபவர்களைத் தடுக்காமல் இருப்பதற்காகவும், அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டும், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டும், எந்தவிதமான கலவரங்களும் ஏற்படாமல் தடுப்பதற்கும், பொது அமைதியை பாதுகாப்பதற்கும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு உதவி செய்தும், அவர்களை தூண்டி விடுவதுமான அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் நபர்கள் 19.03.2012 மாலை 3.00 மணி முதல் 02.04.2012 மாலை 3.00 மணி வரை இராதாபுரம் வட்ட எல்லைக்குள் நுழையத் தடை விதித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 (1)ன் கீழ் இந்தத் தடை ஆணை பிறப்பிக்கப்படுகிறது” என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் இரா.செல்வராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


koodankulam5

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 (1) என்ன சொல்கிறது ?

(1) In cases where, in the opinion of a District Magistrate, a Sub-divisional Magistrate or any other Executive Magistrate specially empowered by the State Government in this behalf, there is sufficient ground for proceeding under this section and immediate prevention or speedy remedy is desirable, such Magistrate may, by a written order stating the material fact of the case and served in the manner provided by section 134, direct any person to abstain from it certain act or to take certain order with respect to certain property in his possession or under his management, if such Magistrate considers that such direction is likely to prevent, or tends to prevent, obstruction, annoyance of injury to any person lawfully employed, or danger to human life, health or safety, or a disturbance of the public tranquility, or a riot, or an affray.

உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்று கருதும்போது, ஒரு மாவட்ட நீதிபதி (மாவட்ட ஆட்சியர்), இது போன்ற ஆணை வெளியிடுவதற்காக காரணங்களை குறிப்பிட்டு எழுத்துபூர்வமான ஆணையின் மூலம், சம்பந்தப்பட்ட நபர் ஒரு குறிப்பிட்ட காரியத்தையோ, அவர் வசம் உள்ள குறிப்பிட்ட சொத்து தொடர்பாகவோ, ஒரு காரியத்தை செய்யக்கூடாது என்பதை அந்த ஆணையின் மூலம், ஒரு ஆபத்தையோ, பொது அமைதிக்கு ஏற்படும் பங்கத்தையோ, உயிருக்கு ஏற்படும் ஆபத்தையோ, பாதுகாப்புக் குறைவையோ, பொது அமைதிக்கு ஏற்படும் குந்தகத்தையோ, கலவரத்தையோ பிரிவு 134ல் உள்ளபடி அதை வெளியிட்டு, தடுக்கலாம் என்று கூறுகிறது.

தற்போது நெல்லை மாவட்ட ஆட்சியரின் 144 தடையாணையின் சாராம்சத்தை ஆராய்வோம்.

IMG_0003

IMG_0002

ஒரு ஆபத்தையோ, பொது அமைதிக்கு ஏற்படும் பங்கத்தையோ, உயிருக்கு ஏற்படும் ஆபத்தையோ, பாதுகாப்புக் குறைவையோ, பொது அமைதிக்கு ஏற்படும் குந்தகத்தையோ, கலவரத்தையோ தடுக்கும் பொருட்டு, அது தொடர்பான காரணங்களை எழுத்துபூர்வமாக பதிவு செய்த பிறகு தடை உத்தரவு பிறப்பிக்கப் பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தடையாணையில் இது போன்ற சம்பவங்கள் – அதாவது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும், கலவரத்தை ஏற்படுத்தும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும், பாதுகாப்புக் குறைவு ஏற்படுத்தும் எந்தச் சம்பவங்களையும் குறிப்பிடவில்லை.   கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்ற போராட்டமானது, எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. அப்படி இருக்கையில் பொது அமைதிக்கு ஆபத்து என்று எந்த சம்பவத்தை மாவட்ட ஆட்சியர் குறிப்பிட முடியும் ?

“கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு உதவி செய்தும், அவர்களை தூண்டி விடுவதுமான அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் நபர்கள் 19.03.2012 மாலை 3.00 மணி முதல் 02.04.2012 மாலை 3.00 மணி வரை இராதாபுரம் வட்ட எல்லைக்குள் நுழையத் தடை விதித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 (1)ன் கீழ் இந்தத் தடை ஆணை பிறப்பிக்கப்படுகிறது” என்று நெல்லை மாவட்ட ஆட்சியரின் ஆணை குறிப்பிடுகிறது.

அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் நபர்கள் என்று பொத்தாம் பொதுவாக ஒரு ஜனநாயக நாட்டில் எப்படி தடை விதிக்க முடியும் ?   உதாரணத்திற்கு, டெல்லியில் உள்ள ஒருவர், அணு உலைக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்றால், அவர் ராதாபுரம் தாலுகாவில் நுழைய முடியாது.  இது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.    இந்தியாவின் அத்தனை குடிமக்களையும் ஒரு தாலுகாவில் நுழையக்கூடாது என்று உத்தரவிட எந்தக் கொம்பனுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.   நீதிமன்றங்கள் உட்பட.   நெருக்கடிகாலத்தில் கூட, இது போன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதில்லை.

அடுத்ததாக, ஒருவர் அணு உலைக்கு ஆதரவானவர் அல்லது எதிரானவர் என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும் ?   இது இந்தியக் குடிமக்கள் அனைவரையும் ராதாபுரம் தாலுகாவினுள் நுழைய தடை விதிக்கும் ஆணையே தவிர வேறு ஒன்றும் இல்லை.  தனி நபரைத் தடுப்பதை விடுங்கள்.  அரசியல் கட்சிகள் நுழையக்கூடாது என்று உத்தரவிடுவது எப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை என்பதை சிந்தித்துப் பாருங்கள் ?

 

மக்கள் வாக்களித்து முதலமைச்சராகி விட்டதனாலேயே, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தனக்கு அடிமை என்றும், தமிழ்நாடு தனக்கு மட்டுமே சொந்தம் என்றும் நினைக்கும் அகங்காரத்தின் விளைவே இது போன்ற ஆணைகள்.

சரி. பிரிபு 144 (1)ன் படி வெளியிடப்பட்ட ஆணை உரிய முறையில் வெளியிடப்பட்டதா என்பதைப் பார்ப்போம்.  இந்தப்பிரிவின் படி வெளியிடப்படும் தடையாணை, பிரிவு 134ல் உள்ளபடி வெளியிடப்பட வேண்டும் எனக் கூறுகிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம்.

பிரிவு 134  என்ன கூறுகிறது ?

(1) The order shall, if practicable, be served on the person against whom it is made, in the manner herein provided for service of a summons.

(2) If such order cannot be so served, it shall be notified by proclamation, published in such manner, is the State Government may, by rules, direct, and a copy thereof shall be stuck it up  at such place or places as may be fittest for conveying the information to such persons.

 (1) இந்த ஆணை சாத்தியமாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு சம்மன் வழங்குவதன் மூலம் கொடுக்கப்பட வேண்டும்.

(2)   அப்படி சாத்தியம் இல்லாத பட்சத்தில், இந்த ஆணை ஒரு வெளியீட்டின் மூலம், மாநில அரசு வெளியிடும் விதிகளின் படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியும் விதத்தில் பொது இடத்தில் ஒட்டப்படுவதன் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார் ? கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு உதவி செய்து, அவர்களைத் தூண்டி விடுவதுமான அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் நபர்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வெளியிட்டுள்ள அறிக்கையில் “எந்தவிதமான வன்முறைக்கும் இடம் இன்றி அவர்கள் போராடும்போது, அங்கே பத்தாயிரம் காவலர்களைக் கொண்டு போய்க் குவிக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த வட்டாரத்தையே, ஒரு இராணுவ முகாமைப் போல ஆக்கி, பொதுமக்களை பீதி அடையச் செய்து, எந்தச் சாலையிலும் மக்கள் போக முடியாத அளவுக்கு, அடக்குமுறையைத் தமிழக அரசு ஏவி உள்ளது.

koodankulam4

சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடும்போதுதான், இப்படிக் காவல்துறையைக் கொண்டு, பொதுமக்களை மிரட்டுகின்ற அக்கிரமம் நடக்கும். தங்கள் உயிர்களையும், தங்கள் சந்ததியினரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று, தரும யுத்தம் நடத்தி வருகின்ற அப்பகுதி வாழ் மக்கள் மீது, காவல்துறை அடக்குமுறையை ஏவுமானால், விபரீதமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்பும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவான நிலையையே வைகோ எடுத்துள்ளார்.  அப்படி இருக்கும் போது, இந்த தடையாணை வைகோவுக்கு பொருந்துமா என்றால் பொருந்தும்.  இந்த ஆணை வைகோவுக்கு வழங்கப்பட வேண்டுமா இல்லையா ?  நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.   எழுத்தாளர் அருந்ததி ராய், மேதாபட்கர், வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், பினாயக் சென், அருணா ராய், நீதிபதிகள் ராஜேந்தர் சச்சார், பி.பி.சாவந்த், போல எண்ணற்றவர்கள் இந்த நாசகார அணு உலைக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார்கள்.  ஆனால், இவர்களில் ஒருவருக்குக்  கூட இந்த தடையாணை வழங்கப் படவில்லை.   தடையாணையின் நகல்கள் யாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது தெரியுமா ?

1)    அரசுச் செயலர் பொது (சட்டம் & ஒழுங்கு)

2)    காவல்துறை துணைத் தலைவர், திருநெல்வேலி சரகம்

3)    காவல்துறை கண்காணிப்பாளர், திருநெல்வேலி

4)    சார் ஆட்சியர், சேரன்மகாதேவி

5)    வருவாய் வட்டாட்சியர், ராதாபுரம்

6)    காவல் ஆய்வாளர், கூடங்குளம், உவரி, ராதாபுரம், திசையன்விளை, பழவூர்.

இவர்களா அணு உலை எதிர்ப்பாளர்கள்….  இவர்கள் அத்தனை பேரும், ஜெயலலிதா அரசின் அடிமைகளாயிற்றே… ?  இவர்களுக்கு இந்த நகலை வழங்கி மாவட்ட ஆட்சியர் என்ன செய்யப்   போகிறார் ?   நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி,  நேற்று, உதயக்குமாரை தொலைபேசியில் அழைத்து, நீங்கள் மட்டும் சரணடையுங்கள். தனியே சரணடைந்தால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.   (புத்திசாலித்தனமா பேசுறாராம்….) உதயக்குமார் அவரிடம், நான் சரணடையத் தயாராகத்தான் இருக்கிறேன்.    ஆனால் மக்கள் என்னைத் தனியே சரணடைய விட மாட்டேன்கிறார்கள். மக்கள் அனைவரும் கைதுக்கு தயாராக இருக்கிறார்கள்.  நீங்கள் அத்தனை மக்களையும் ஏற்றிச் செல்வதற்கு போதுமான பேருந்துகளையும், இரண்டே இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் அனுப்புங்கள். எந்தவிதமான தள்ளு முள்ளும் இல்லாமல், நாங்கள் அமைதியாக அந்தப் பேருந்துகளில் ஏறிச் செல்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.   ஆனால், விஜேயேந்திர பிதாரி கடும் கோபத்துடன், “நான் உங்களிடம் பேசுவது இதுதான் கடைசி முறை” என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். (இவுரு பேசலன்னு யாரு அழுதா ?   என்னமோ டெலிபோன்ல பேசி சன் ம்யூசிக்ல புது பாட்டு போட்ற மாதிரி பிகு பண்ணிக்கிறாரு ?  ஏடிஜிபி ஜார்ஜ் உதயக்குமார் கிட்ட பேசுன்னா பேச மாட்டாரா இவுரு ?)

koodankulam1

நெல்லை மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதாரி

இப்படி இந்த ஆணையை ரகசியமாக அரசு வைத்திருப்பதன் காரணம் என்ன ?  தடையாணையை வெளியிட்டால், அதை வைத்து, நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்று விடுவார்கள் என்ற காரணத்தாலேயே….. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சொல்லாமல் இப்படி ஒரு ஆணையை வெளியிட்ட காரணத்தாலேயே, இந்த ஆணை  செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.

இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று  தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி தொடுத்திருந்த பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது இது தொடர்பாக மேலும் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்து, மூத்த வழக்கறிஞர்கள் வைகை மற்றும் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆகியோர் வாதாடினார்கள்.

புகழேந்தி சார்பாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதடினார்.  அவர் பேசுகையில், இந்தியாவில் யாருமே நுழைய முடியாது என்று தடையுத்தரவு பிறப்பிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்தத் தடையாணையும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.   என்ன காரணத்துக்காக இந்தத் தடையாணை பிறப்பிக்கப்படுகிறது என்பதும் தெளிவுபடுத்தப் படவில்லை.  ஏழு மாதங்களாக அமைதியாக நடக்கும் ஒரு போராட்டம், வன்முறையை ஏற்படுத்தும் என்ற ஊகத்தின் அடிப்படையில் தடையாணை பிறப்பிக்க முடியாது என்றார்.

வழக்கறிஞர் வைகை மற்றும் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆகியோர், “கூடங்குளத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது போன்று உள்ளது.  அங்கே இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான தண்ணீர், பால், மின்சாரம் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.  ஒரு ஜனநாயக நாட்டில், ஒட்டுமொத்தமாக யாருமே ராதாபுரத்தில் நுழையக்கூடாது என்று தடையாணை பிறப்பிப்பது சட்டவிரோதம்” என்று வாதாடினார்.

அரசத் தரப்பில் அப்போது பேசிய, அரசுத் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை யாரும் தடுக்கவில்லை என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பை கொடுத்தார்.   அரசு நியாயமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.   தேவையில்லாமல் இந்த பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

மத்திய அரசின் சார்பாக ஆஜரான ரவீந்திரன், நியாயமான முறையில்தான் இந்த தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு சிறு பகுதி.   அணு உலை ஆதரவாளர்கள் பெரும் பகுதி உள்ளனர்.  அவர்கள் ராதாபுரத்தில் நுழைந்தால், இரு தரப்புக்கும் கலவரம் ஏற்படும்.  அதனால்தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.   (என்ன ஒரு கண்டுபிடிப்பு ?) சரி…. இதை சொல்ல வேண்டியது மாநில அரசு அல்லவா ?   இவர் எதற்காக சொல்கிறார் ?

இடைக்கால உத்தரவாக, அரசுத் தரப்பு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது தடுக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சொல்வதை அரசு உறுதி செய்யும் என்று நம்புகிறோம்.  அதன் அடிப்படையில் இடைக்காலத் தடை வழங்கப்படவில்லை, என்று உத்தரவிட்டு, திங்களன்று இறுதித் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஒரு கருத்தை வலியுறுத்தி அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதற்குக் கூட உரிமையில்லாத வகையில் நெருக்கடி நிலையா பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ?

உதயக்குமார் உள்ளிட்ட கிராமத்தினர், நியாயமற்ற காரணத்துக்காகவே போராடுவதாக வைத்துக் கொண்டாலும், அவர்களுக்கு போராடுவதற்கான அந்த உரிமையை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்றதே ?

அணு உலை செயல்படுவதால் எங்களின் வாழ்வாதாரம் மற்றும் எங்கள் சந்ததிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும என்று நம்பும் அந்த மக்களை போராடவிடாமல் காவல்துறையினரைக் கொண்டு ஒடுக்குவது எந்தவிதத்தில் சரியாக இருக்க முடியும் ?

கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கும் வரை அணு உலை வேலைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்த ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக் குவித்து, கூடங்குளம் மக்களை ஒடுக்க நினைப்பதன் பின்னணியில் உள்ள ரகசிய ஒப்பந்தம் பெங்களுரில் போடப்பட்டதா ?

கைது செய்யப்பட்டவர்களுக்கு வழக்கறிஞரைச் சந்தித்து சட்ட உதவி பெறும் உரிமை, கொலைக்களமான இலங்கையில் கூட உறுதி செய்யப்பட்டிருக்கும் போது, கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மட்டும் அது மறுக்கப்படுவது ஏன் ?

இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது என்ற இறுமாப்பில் மக்கள் போராட்டங்களை காவல்துறையினரைக் கொண்டு ஒடுக்கி விடலாம் என்று ஜெயலலிதா நினைப்பாரேயானால், அது பகற்கனவே….  எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க, ஜனநாயக சக்திகளும், உழைப்பாளி மக்களும், நிச்சயம் உறுதுணையாக நிற்பார்கள்.  இந்தியத் தலைநகர் டெல்லி உள்ளிட்ட நான்கு இடங்களில் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக நடைபெறும், உண்ணாவிரதப்போராட்டமே இதற்குச் சான்று.

koodamkulam1

ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்குத்தான் இழப்பதற்கு ஏராளமாக இருக்கிறது.    இடிந்தகரை மக்களிடம், தங்கள் உயிரைத் தவிர வேறு இல்லை.  அதையும் இழப்பதற்கு அந்த மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

 

Comments  

 
0 #27 mannin maindan 2012-03-27 03:06
அரசின் அடாவடித்தனங்கள் நிருத்தப்பட வேண்டும்.
Quote
 
 
-2 #26 Chennai Star 2012-03-25 19:34
Hope you are a supporter of AIADMK and felt happy till last may. Savukku seems to be very judicius. But you cannot digest, what he write against the present govt.
Quote
 
 
-2 #25 anandds 2012-03-25 12:15
i dont care about any other peoples comments. kudankulam should be closed because of the following reasons:

1.For peoples life in idinthakarai. current pona parava illaya...anga uyir poidum..also whoever says that "plant is safe" pls live there with ur family for few years and then tell.

2.kalpakkam is also not safe. so many peoples died due cancer due to radiation ..and media dont publlish it .

3. Neyvelli supplies power for whole india. Let it supply for tamilnadu's needs then we will think about supplying it to central govt.
Quote
 
 
+4 #24 ரப்பர் ஸ்டாம்ப் 2012-03-25 11:19
சிலர் இதன் பயம் சொற்ப மெகாவாட் மின்சாரம் மட்டுமே, எதற்கு இந்த மின் உலை. இதைவிட காற்று அல்லது சூரிய ஒளியை கொண்டு மின்சாரம் தயாரிக்கலாமே என்பது தான்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் கட்டமாக ஒரு ஆண்டுக்கு 150 மெகா வாட்டில் தொடங்கி, சிறிது சிறிதாக உயர்த்தி 3 ஆண்டுகளில் 950 மெகா வாட் உற்பத்தி நிச்சயம் நடைபெறும். இதற்காக செலவிட வெளியிலிருந்து பெறப்படும் மின்சாரம் 85 மெகா வாட். மொத்த மின் உற்பத்தியில் 60 சதவீதம் அணு உலை அமைந்து உள்ள மாநிலத்துக்கு வழங்கப்படும். ஒருவேளை 3 ஆண்டுகள் கழித்து ( அதற்குள் எந்த அரசியல், புவியியல் விபத்துகளால் குழப்பம் ஏற்படாமல் இருந்து ) ஆண்டுக்கு 950 மெ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் அதில் மத்திய தொகுப்புக்கு போக தமிழகத்துக்கு கிடக்கக் கூடிய மின்சாரம் 625 மெ. வாட். அதற்காக தமிழக அரசு செலவிடும் 85 மெ வாட் போக மீதம் உள்ளது 540 மெ. வாட்.

எந்த ஒரு மின் திட்டமும் உடனே முழு கொள்ளலவை எட்டாது, ஏனெனில் அது பாதுகாப்பனது அல்ல. குறைந்த அளவில் ஆரம்பித்து அதன் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டபின் தான் அடுத்த கட்டம் செல்வார்கள். இதிலிருந்து பாதுகாப்பிற்காக அரசாங்கம் எல்லா நடவடிக்கைகள் எடுக்கிறது எனப்துபுலன். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகபட்ச உற்பத்தி திறன் 8000 மெகா வாட். அது படிபடியாகவே உயர்த்தப்படும். மேலும் அணு மின்சாரம் கூடுதல்செலவு என்று சொல்கிறார்கள். உலகிலேயே ஹைடல் போன்ற இயற்கையைத்தவிர பெறப்படும் மின்சாரத்தில் அணு மின்சாரம்தான் விலை குறைவானது. யார் வேண்டுபொஎனில் கூகுள் செய்து இதன் விபரத்தை பெற முடியும்.

காற்ரினைகொண்டு எல்லாபருவங்களில ும் மின்சாரம் தயாரிக்க முடியாது என்பது தெரியாதவரல்ல இந்த போரட்டக்காரர்கள ். அதை ஏற்க மறுக்கிறார்கள் என்பதே உண்மை. சூரிய ஒளியைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம், ஆனால் இன்னும் அதற்கான தொழில் நுட்பங்கள் என்னும் குறைவான விலையில் கிடைக்கவில்லை.

ஆனால் ஒன்று, அப்துல் கலாம் சொல்லியே கேட்காதவர்கள், நாம் சொல்லியா கேட்கப்போகிறார் கள். இது கேட்க விருப்பாதவ்ர்கள ுய்க்கல்ல, விபரம் தெரிய விரும்பும் நடுனிலை வாசகர்களுக்கு.
Quote
 
 
-3 #23 gkramesh2002 2012-03-25 00:45
i was a regular visitor to your site for the past 2 years, i liked ur articles. Till now i didn't write comments. But last 3 months most of your articles are wrong.Especialy your view regarding kudangulam is totally wrong. In the past i suggested your website to my friends. Today i feel shameful for that. This is my first and last comment here. savukku wont be my fav website anymore. I guess there are so many peoples leaving you without saying anything. try to change yourself.
Thanks, K.Ramesh
Quote
 
 
0 #22 Soma 2012-03-25 00:18
In a democratic country, it is the duty of the population to rise up and protest when the governing folks commit mistakes. That is the reason the constitution is guaranteeing us free speech and the right to protest peacefully. Dereliction of that duty will only result in autocratic governments. What is surprising to me is that people believe the government and the bureacrats in this day with the level of corruption and cronyism. I cannot help it but think patriotism is a sure fire way to get the population to fall in line. Stalin, Mao, George Bush, Netanyahu are some of the examples of leaders who exploit the gullibility of their population. I have absolute belief that the flock of sheep, aka population, will continue to put their trust on the wolf, aka people in power. Go on, continue your blissful sleep while the matrix continues to use you as a battery.
:P
Quote
 
 
+1 #21 Soma 2012-03-25 00:18
In any democratic country, people can not be stopped from protesting for any reason, however insane the reason could be. Those who oppose the protest and justify the suppression by government should look around the world and see what is happening around. We have a tendency to copy/mimic US for everything. The US Supreme Court recently declined to stop protest by rightwing Christian groups in funerals of US solders killed in foreign wars. The reason – US government’s decision to strike down “Don’t ask, Don’t tell” policy that prevents gay and lesbian solders from serving openly. The reason sighted by the US Supreme Court – Free Speech. Polls showed majority of US population was and is against these protest, and disgusted at the level a rightwing group stooped to.

Even for an argument if we accept that majority of people around KKNP are for the project, the so called “monitory” voice cannot be suppressed with force. How many of us really understand that this is blatant violation of our constitution?

My friends, patriotism is not believing your government blindly. If you don’t agree with me, then it is unpatriotic to challenge
1. The 2G spectrum contract
2. Mr. Motek Singh Ahluwalia’s definition of poverty line
3. The central government’s assertion that it can not guarantee food safety, or distribute grains in it’s granary when it is about to rot
4. The Bofors cannon contract
5. IAF’s bombing of Mizo villages during 1966 uprising
6. Indo-Sri Lankan accord and deployment of IPKF
Or any other undemocratic decisions taken by our government.
Quote
 
 
-1 #20 harihar 2012-03-24 22:48
Dont miss this link
http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE
Quote
 
 
+1 #19 Mangalyam 2012-03-24 17:07
Savukku is a useless website. Go to hell guys.People who like this article must definitely be uneducated.

Absolute stupid article. Iam surprised to see there are many fools who still exist in TN.
Quote
 
 
+3 #18 Jeeva M.S 2012-03-24 10:55
Dr. Kalam has told that apparently this power station is safe and sound. I dont think any further proof needs to be given more than Dr.Kalam's certification... So I doubt Mr.Udaykumar who is against opening of this staion...
Quote
 
 
+8 #17 vendum suthanthiram 2012-03-24 09:35
இந்திய காவல் துரை ஒரு காக்கி சட்டை அனிந்த கூலிப்படை. இவர்கலுக்கும் ரவுடிகலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரன்டு கூட்டமும் அரசியல் வாதிகல் அதிகார வர்க்கத்தினர் கை அசைவிர்க்கு ஆடுவார்கல். இந்த செல்வராஜ் மாதிரி ஆட்கல் காசு அடித்து தான் பதவிக்கு வந்து இருப்பார்கல். சுய சிந்தனை இல்லாத கூட்டம்.
Quote
 
 
-7 #16 Abisheik 2012-03-24 08:33
Dear Savukku,

Please stop your damn irresponsible comments and articles with respect to the kudankulam issue. From your above article it is very clear that, you are against the government move and you don't damn care about future. Please better study the complete situation before making any more articles. Being a regular visitor to the site I am very disappointed with this article and I doubt my regular visit hereafter. I am from a village near kudankulam and I support This nuclear project and most of the people in and around kudankulam support the project. Guys Udhayakumar does these stunts for cheap publicity and money. We don't care about him and we want the nuclear plant to operate ASAP
Quote
 
 
-14 #15 badri 2012-03-24 01:26
dei naaye,unn mela vachhurindha mariyadhai poiyuruchu da saavu giraaki,unn thiruma enna pudunginaan da SankaranKoil la pathhe illa,inniki dhaan da unn website ah paakara last day poramboku
Quote
 
 
+10 #14 ஊர்க்குருவி. 2012-03-23 23:20
ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்கு த்தான் இழப்பதற்கு ஏராளமாக இருக்கிறது. இடிந்தகரை மக்களிடம், தங்கள் உயிரைத் தவிர வேறு இல்லை. உரிமைக்கான போராடும் உரிமைகூட பறிக்கப்பப்பிரு க்கிறது.
Quote
 
 
-4 #13 fejjj 2012-03-23 22:21
Useless article and all useless comments for this
Quote
 
 
0 #12 manasu 2012-03-23 22:17
Why Kodankulam people are fighting for long time? You think because of following factor
Nuclear energy – Will kill people living around.
No not at all they are in the hand of “BAYAM”
Quote
 
 
+4 #11 இனாயத் 2012-03-23 21:17
ஒரு தனி மனிதன் வாழ்க்கையில் ஓரளவு ரிஸ்க் எடுக்கவேண்டும். கண்டிப்பாக ஆனால் தன்னலமில்லாத தலைவர்ககள், நேர்மையான அரசுகள், ஊழல், லஞ்சம் இல்லாத அரசு அதிகாரிகள் இருப்பின் ரிஸ்க் எடுக்கலாம். கருணாநிதி ஆட்சிக்காக, குடும்பத்திற்கா க எதையும் செய்வார். உதாரணம் தேவை இல்லை. தற்பொதைய உதாரணம் வேண்டுமெனில் ஈழத்திற்காக அவர் வடிக்கும் கண்ணிரை சொல்லலாம். ஜெயலலிதாவை பற்றீ சொல்லவே வேண்டாம். சேலை கட்டின கருணாநிதிதான் ஜெயலலிதா. தமிழ் நாடு அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கை கொடுத்தவுடன் இந்த நடவடிக்கை எடுத்திருந்தால் நம்பலாம். தேர்தல் முடிந்த இரவு ஆரம்பித்த நடவடிக்கைதான் உருத்துகின்ற்து .. அதனால்தான் அப்துல் கலாம் சொன்னாலும் பயமாய் இருக்கின்றது நண்பர்களே...வெளி நாட்டு சதி என்றூ ஒரு மத்திய அமைச்சர் எவ்வளவு நாட்களா\க சொல்கிறார் இது வரை ஒரு சின்ன ஆதாரத்தையாவது காட்டினாரா. மின்வெட்டு அல்லது ஏற்றூக்கொள்ள கூடிய எந்த காரணம் இருந்தாலும் ஒரு ஜனனாயக நாட்டில் அமைதியாக போராடுபவ்ர்களுக ்கு எதிராக ஒரு அரசாங்கம் இப்படி செய்வது, அதை ஆதரிப்பது ஜனனாயகத்திற்கு கேடு நண்பர்களே.
Quote
 
 
+19 #10 ஷாலி 2012-03-23 18:36
அன்பு தமிழ் நெஞ்சங்களே! சற்று கேளுங்கள்,
அணு ஆதரவாளர்கள் குரலுக்கு இனி வேலையில்லை.மத்திய மாநில அரசுகள் அவ்வூர் மக்கள் எதிர்ப்பையும் மீறி அணு உலையை தொடங்கிவிட்டது.
ஆனால் எதிர்ப்பவர்கள் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் அறவழியில் போராடுவதை எவரும் கொச் சைபடுத்தக்கூடாத ு.
போராடும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மறுப்பது,சர்வாத ிகாரத்தனம்.மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் அரசு மக்களை மதிக்கவில்லைஎன் றால்,விளைவு விபரீதமாக மாறும்.
உதயகுமாருக்கும் அம்மக்களுக்கும் போராட்டத்தை அஹிம்சை வழியில் தொடர முழு உரிமை உளளது.அதை ஆயுதத்தைக்கொண்ட ு அடக்க நினைப்பது மூடத்தனம்.இப்படி அடக்கியவர்களை வரலாறு காரி உமிழ்ந்துஉள்ளது .

போராடும் மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதே அறிவுடைமை.

இந்தப்போராட்டத் தை ஒரு சுயநல அரசியல்வாதி எவரேனும் கையில் எடுத்திருந்தால் இந்த ஏழு மாத காலத்தில் ஏராளமான பிணம விழுந்திருக்கும ்.அதைவைத்து ஆட்சியை பிடித்திருப்பார ்.

ஆனால் அரசியல் பண்ணத்தெரியாத அப்பாவி உதயகுமார்.
அணு ஆதரவாளர்களே! மாற்றுக்கருத்தி ற்க்கும் மதிப்பு கொடுங்கள்.
Quote
 
 
-23 #9 thanam 2012-03-23 17:32
மூளை சலவை செய்யப்பட கூட்டம் நல்ல தூங்கி எழுந்திருச்சு, நல்ல சாப்பிட்டு விட்டு, ஒரு வேலைக்கும் போகாம ஜாலியா உக்கார்ந்திருக் கு இவர்கலுக்கு ஆதரவாக பெசும் சவுக்கும் குட்றவாழியெ
Quote
 
 
-17 #8 MKrishna 2012-03-23 14:21
அப்துல் கலாம் போன்ற தன்னலமில்லாத தலைவரையே சந்தேகப்பட்டால் , இதில் சுய நலம் தவிர்த்து வேறென்ன? - காமெடி
Quote
 
 
+14 #7 vaaimai 2012-03-23 14:12
Quoting
"ரப்பர் ஸ்டாம்ப்,
போராட்டகாரர்கள் தீவிரமாக இதை செய்ய அனுமதிக்கவே முடியாது என்று திடமாக இருப்பின் போராட்டத்தை ஏன் ஆரம்பத்திலேயே செய்யவில்லை. அப்படி செய்திருப்பின் முதலீடுகள் தடுக்கப்பட்டிரு க்கும் அல்லவா?"

I think you are not aware of history of koodankulam struggle. I request you to read this.
http://www.dianuke.org/wp-content/uploads/2012/03/Koodankulam-Struggle-Chronology.pdf
Quote
 
 
+27 #6 v 2012-03-23 14:07
[ஃஉஒடெ நமெ="ரப்பர் ஸ்டாம்ப்"]ஒரு தனி மனிதன் வாழ்க்கையில் ஓரளவு ரிஸ்க் எடுக்கவேண்டும், அப்போதுதான் முன்னுக்கு வர முடியும். அதற்காக கண்மூடித்தனமான் ரிஸ்க் எடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை.[/ஃஉஒடெ]
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகபட்ச உற்பத்தி திறன் 950 மெகா வாட். முதல் கட்டமாக ஒரு ஆண்டுக்கு 150 மெகா வாட்டில் தொடங்கி, சிறிது சிறிதாக உயர்த்தி 3 ஆண்டுகளில் 950 மெகா வாட் உற்பத்தி நிச்சயம் நடைபெறும். இதற்காக செலவிட வெளியிலிருந்து பெறப்படும் மின்சாரம் 85 மெகா வாட். மொத்த மின் உற்பத்தியில் 60 சதவீதம் அணு உலை அமைந்து உள்ள மாநிலத்துக்கு வழங்கப்படும். ஆக முதல் ஆண்டு மின் உற்பத்தியில் 60 சதவீதமாக தமிழகத்துக்கு கிடைக்க உள்ள மின்சாரம் 90 மெகா வாட். இதற்காக தமிழக அரசு செலவிடும் மின்சாரம் ( 85 ) கழிக்கப்பட்டால் மீதமுள்ளது 5 மெ.வாட். ஒருவேளை 3 ஆண்டுகள் கழித்து ( அதற்குள் எந்த அரசியல், புவியியல் விபத்துகளால் குழப்பம் ஏற்படாமல் இருந்து ) ஆண்டுக்கு 950 மெ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் அதில் மத்திய தொகுப்புக்கு போக தமிழகத்துக்கு கிடக்கக் கூடிய மின்சாரம் 625 மெ. வாட். அதற்காக தமிழக அரசு செலவிடும் 85 மெ வாட் போக மீதம் உள்ளது 540 மெ. வாட். எவ்விதத்திலாவது அணு உலையால் மக்கள் பாதிக்கப்பட்டால ் 10 ஆண்டுகளுக்குள் ( சொந்தக்காரர்கள் உயிரோடு இருந்தால் ) காப்பீடாக ஒரு மனித உயிரிழப்புக்கு ( மத்த ஜீவராசிகளுக்கு காப்பீடு, தொழில் நுட்பம் பற்றி தெரியாததால் வழங்க வாய்ப்பில்லை ) தலா ரூபாய் 34 ஆயிரம் பெறலாம். இந்த நிதியில் 60 சதவீதம் மாநில அரசும், 40 சதவீதம் மத்திய அரசும் வழங்கும். அணு உலை அமைத்து, அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும ் வெளி நாட்டிடம் யாரும் பணம் கேட்கக் கூடாது. அணு உலை பாதிப்பு குறைந்த பட்சம் 250 ஆண்டுகள் நீடிக்கும் என்றாலும் 10 ஆண்டு கடந்த பிறகு யாரும் காப்பீடு கோர முடியாது.

இதற்காக பணயம் வைக்கப்பட்டுள்ள உயிர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள், பணமோ பல ஆயிரம் கோடிகள்... இயற்கையும் மனித இனத்தையும் அழிக்கப்போகும் அணு உலைகள் தேவைதானா?

தொடர்ந்து முழங்குவோம்... "கூடங்குளம் அணு உலையை திறக்காதே... கல்பாக்கம் அணு உலையை மூடு... காவல்துறையின் பிடியில் இருக்கும் இடிந்தகரை மக்களை விடுவி..."
Quote
 
 
+19 #5 அன்பு 2012-03-23 13:32
அணூஉலை வந்தால் சைனாவுக்கு மிக வசதியகிவிடும்...

அவர்கள் இலங்கையிலுருந்த ு அதை தாக்கினால்! தமிழன் என்ற இனமே இல்லாமல் போய்விடும்.

இதையாவது இந்த பாழாய்போன மக்கள் சிந்திப்பார்களா ?
Quote
 
 
-8 #4 ரப்பர் ஸ்டாம்ப் 2012-03-23 13:14
ஒரு தனி மனிதன் வாழ்க்கையில் ஓரளவு ரிஸ்க் எடுக்கவேண்டும், அப்போதுதான் முன்னுக்கு வர முடியும். அதற்காக கண்மூடித்தனமான் ரிஸ்க் எடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. கால்குலேடிவ் ரிஸ்க் என்பதுதான். இதைத்தான் அரசுகளும் செய்யும். அணுமின் விசையத்தில் அரசாங்கத்தின் முடிவு அப்படிபட்டதே!

போராட்டகாரர்கள் தீவிரமாக இதை செய்ய அனுமதிக்கவே முடியாது என்று திடமாக இருப்பின் போராட்டத்தை ஏன் ஆரம்பத்திலேயே செய்யவில்லை. அப்படி செய்திருப்பின் முதலீடுகள் தடுக்கப்பட்டிரு க்கும் அல்லவா? கூடங்குளம் வேண்டாம் என்றால், இதைவிட பழைய டெக்னிக்குகள் கொண்ட கல்ப்பாக்கம், சென்னையின் மிக அருகிலேயே உள்ளது. ஏதாவது நடந்தால், சென்னையே இருக்காது. ஆறில் ஒரு பங்கு மக்கள் சென்னையில் வாழ்கிறார்கள். அதில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவும் அடங்குவர்.

அப்துல் கலாம் போன்ற தன்னலமில்லாத தலைவரையே சந்தேகப்பட்டால் , இதில் சுய நலம் தவிர்த்து வேறென்ன? இவர்கள் சொல்லும் நில நடுக்கம் 8 ரிக்டருகு மேல் வருமானால், அங்கு இருக்கும் அனைத்து வீடுகளும் தரை மட்டமாகிவிடும். யார் உயிரோடு இருப்பர்? இருந்த போதும், இந்த அணு மின் நிலையம் அதன் பணியை நிறுத்திவிடக்கூ டிய பாதுகாபப்புகள் செய்யப்படுள்ளது . அதே நிலநடுக்கம் மேட்டூர் அணையில் ஏற்பட்டால் அதனால் அணை உடையுமாயின் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் உயிரிழப்பர். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதால் பெரும் சுற்றுசூழல் சீர்கேடு நிகழ்கிறது. அதனால் சுவாசக்கோளாறு எற்பட்டு ஆயிரக்கணக்கானோர ௌயிரிழக்கின்றனர ். அதற்காக அதைவிட முடியுமா? நிறுத்தலாமா? போரட்டக்காரர்கள ் நிறுத்தலாம் என்றுகூட சொல்வார்கள், ஆனால் அரசாங்கம் அதை செய்யமுடியாது.

நம்மில் எத்தனைபேர் மின்சாரத்திற்கா க நாள்தோறும் அரசை திட்டுகிறோம். ஜெயலலிதாவின் முடிவு சரியானது, இன்னும் முன்னரே இந்த முடிவை எடுத்திருக்கவேண ்டும். தமிழகத்திற்கு அதிக மின்சாரம் கிடைக்க இந்த போராட்டத்தை பயன்படுத்திருக் கொண்டார். எதற்கும் ஒத்துவராமல் இதை எதிர்க்கும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் தவறில்லை. கூட்டம்சேர்ந்தா ல் எதைவேணாலும் சாதித்துவிடலாம் என்றால், அங்கு அரசாங்கத்தின் ஆளுமையே இல்லை என்பது அர்த்தம். தாமதமாயினும் நல்ல முடிவு. தொடரட்டும்!
Quote
 
 
+12 #3 vaaimai 2012-03-23 13:05
இதற்கு பெயர் தான் அரசு பயங்கரவாதம். :cry:
Quote
 
 
-17 #2 endhiran 2012-03-23 12:05
மூளை சலவை செய்யப்பட கூட்டம் நல்ல தூங்கி எழுந்திருச்சு, நல்ல சாப்பிட்டு விட்டு, ஒரு வேலைக்கும் போகாம ஜாலியா உக்கார்ந்திருக் கு
Quote
 
 
+4 #1 edward 2012-03-23 12:02
we support the people
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 194 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4585
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week37225
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month250044
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12772163