|
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தைத் தனிமைப்படுத்த தீவிரவாதப் பூச்சாண்டி காட்டுவதில் காவல்துறை மூலம் இந்திய, தமிழக அரசுகள் ஈடுபட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மார்ச்- 19 தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டமும்., மார்ச் - 23 பகத்சிங் தூக்குமேடை நாளில் நெல்லை - பாளை சவகர் திடலில் நடைபெற்ற இடிந்தகரைப் பயணப் போராட்டம் ஆயிரம் பேருக்கு மேல் கைதானது மக்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கி வருகிறது. தமிழக அரசின் கியூ பிரிவு காவல் துறை போராட்டத்தை தீவிரவாதத் தொடர்பு எனச் சித்தரிக்க 8 மாதங்களாக அறவழியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புரட்சிகர இளைஞர் முன்னணியின் ஈரோடு - சென்னிமலை தோழர் முகிலனை கைது செய்தனர்.
மார்ச் - 23 பாளை - இடிந்தகரை பயணத்தில் கலந்து கொண்டு தடையை மீறி வைகோ, சீமான், கொளத்தூர் மணி மற்றும் பலர் தலைமையில் கைதான சதீஷ் என்பவரை அன்று மாலையே கைது செய்தனர். பாளை - தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமைச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு நள்ளிரவில் இராஜபாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புரட்சிகர இளைஞர் முன்னணி - முகிலன், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை - சதீஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - வன்னி அரசு மூவரும் நக்சல்கள் என காவல்துறை ஊடகங்கள் மூலம் தொடர்ந்து பரப்புவதன் மூலம் 8 மாதங்களாக நடைபெற்று வரும் அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழக அரசு. முதலில் கைது செய்யப்பட்ட முகிலனிடம் ஒரு கடிதம் இருந்ததாகவும், அக்கடிதம் சதீஷால் முகிலனுக்கு எழுதப்பட்டதாகவும், அக்கடிதத்தில் உதயகுமார் லாயக்கில்லை போராட்டத்தை தீவிரமாக்குவோம், வன்னி அரசு உதவி செய்வார் என இருந்ததாகவும் சம்பந்தமில்லாதவர்களைச் சம்பந்தப்படுத்திக் கற்பனைக் கதையைப் புனையவதன் மூலம் காவல்துறை போராட்டக் குழுவிற்கும் நக்சல்களுக்கும் தொடர்பிருப்பதாக கதைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர், தாய்மண் இதழ் பொறுப்பாளரான வன்னி அரசை சம்பந்தப்படுத்திக் காவல்துறையும், தமிழக அரசும் தங்களது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை ஒருபுறமும், போராட்டக் குழுவை ஒடுக்குவதற்கு தீவிரவாதத் தொடர்பு என சித்தரிப்பது மறுபுறமும் என முயற்சிக்கிறது. மத்திய அரசின் காங்கிரஸ் அமைச்சர்களின் கிறித்தவர்கள் போராட்டம் எனற மதவாதப் பிரிவினைப் பிரச்சாரத்தை முறியடித்து, அந்நியத் தொடர்பு எனும் பழியை முறியடித்து, தொண்டு நிறுவனங்களின் உதவி எனும் பிரதமரின் குற்றச்சாட்டை முறியடித்து தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தை தமிழக அரசின் காவல்துறை நக்சலைட் தொடர்பு, தீவிரவாதத் தொடர்பு எனச் சொல்வதும் முறியடிக்கப்படும்.
உழைக்கும் மக்களின் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் பல்வேறு அரசியல் சக்திகளின் ஆதரவுடன் வெற்றி பெறும். சர்வதேச அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தின் அங்கமாக நடைபெறும் மராட்டியம் செய்தாபூர் அணுஉலை எதிர்ப்புப் போராட்டமும், கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும். * கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். குவிக்கப்பட்டுள்ள காவல்துறை, துணை இராணுவப் படைகள் திரும்பப் பெற வேண்டும். * மின்சார உற்பத்தி எனும் பெயரால் அணுகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள் உற்பத்திக்கான அணுஉலைகளை எதிர்த்துப் போராடும் மக்களுக்குத் துணை நிற்போம்! * தமிழகத்தின் மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்கப் போராடுவோம்! * அணுகுண்டு, அணு எதிர்ப்புப் போராட்டங்களை கீழ்த்தரமான அணுகுமுறைகள் மூலம் அணுகும் இந்திய, தமிழக அரசுகளுக்கு எதிராகப் போராடுவோம்! * அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வீரமிக்க மக்கள் போராட்டத்திற்கும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் தன்னலமற்ற அரசியல் போராட்டங்களுக்கும் தமிழக மக்கள், அணு சக்தி எதிர்ப்பாளர்கள், சனநாயக சக்திகள், ஊடக நண்பர்கள் துணை நிற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ) மக்கள் விடுதலை அறைகூவல் விடுக்கின்றது.
தோழமையுடன்,மீ.த.பாண்டியன்
தமிழ் மாநிலச் செயலாளர்
இ.க.க ( மா - லெ ) மக்கள் விடுதலை
|
Comments
Abdul kalaam is one such product. These people know how to execute what Russians teach them.
If Abdul kalaam is so much super duper scientist, why Indian government is the largest importer of weapons - with the second in the world far behind India?
this guy is a cheat. Sorry - I'm not ready to give into his innocent talks.
Sir I was the first person to send mails to all social organisations of the world and MLA, MPS, stating that """INDIA AND TAMILNADU JOINTLY KILL KUDANKULAM AREA PEOPLE A MASS GENOCIDE""' we should always note the point of VAIKO SIR russian technolgy is useless.Today Doctor Kalainger , Chief Manister , all tamil nadu people even communist parties all in dileema joined together to put ""HEAVY WEIGHT ON THE HEAD OF INNOCENT SOUTH PEOPL"",. if anything happens like bursting of Chrnopil, Kalainger sir will write a beautyful poem crying that we lost &700000people who are tamil blood. Chief minister madam will donate money generously to the affected people.we should note onething what VIJAYAKANTH SIR told "" Local people have not been consulted before starting the project!!!!!!!! !"'what is the strong point of Mr.P udayakumar is ,"" WestBengal & Kerala rejected the project what is the secret Tamilnadu accepting this?????????????The way both Tamilnadu Government and Indian Government handled the issue is Ridiculous.I sent many to many in the world so many videos of Russian disaster and copies of P.udayakumar letters all over the world but nobody areested me,I donot know why?? we need Electricity I never say No to this, But means to achieve it, consult the area people ..,,consider them ,because they are affected or going to be affected of if anything happens tomorrow directly or indirectly, Rest of the area people will get only the benifits not the FEAR , CANCER, Psychological problems, death,Eye sight loss,,,.etc,,.....all this will going to become wealth of Kudankulam areapeople very soon!!!!!
If anybody call him as scientist again - my foot.
Abdul kalam grew up right where the interaction between Srilanka and India happens - thangacchimadam . Where was he when SLA executed ethnic cleansing? Even a kid who grew up in the place where he grew up knew how cruel was SLA. Why he kept his mouth shut? Because it would offend his backers - the Mylapore Mafia? Where was he when the villager women in Sathyamangalam forest abused and raped by the official thugs of this country - the police? This guy Abdul Kalam is no friend to ordinary. He loves the powerful and he will do anything they ask them to do!!
Now stop talking about Abdul kalam. I will go mad left and right.
you are absolutely perfectly right. I told my friends and my workers about Abdul kalam and Indian so called Scientists.They are not invent any new invention and they never receive any international honors. they carry ball for politician and bureaucrats in order to receive power full jobs and useless badma busan and and other nonsense. Until end of life this disgrace characters are sit in any posts and do all bullshit to public.
If anybody call him as scientist again - my foot.
Abdul kalam grew up right where the interaction between Srilanka and India happens - thangacchimadam . Where was he when SLA executed ethnic cleansing? Even a kid who grew up in the place where he grew up knew how cruel was SLA. Why he kept his mouth shut? Because it would offend his backers - the Mylapore Mafia? Where was he when the villager women in Sathyamangalam forest abused and raped by the official thugs of this country - the police? This guy Abdul Kalam is no friend to ordinary. He loves the powerful and he will do anything they ask them to do!!
Now stop talking about Abdul kalam. I will go mad left and right.
Dr abdul Kalam, Central panel, State Panel everyone just published already published text by NPCIL. it is not possible in 2 days time to examine and analyse independently and come to a conclusion all is well. u are aware today's politicians are not like Gandhi, all are swallowing public money. this project is forcifully pushed on at the cost of fishermen life in the name of naattu nalan. nattu nalan means "the politician's nalan only...people like you, why dont give your thoght to real concerns of nuclear threat,that advanced countries learnt and stop using, there must be some sense.
முன்னாள் தலைமைச் செயலர் மாலதி,IAS, இன்று காலை மரணமடைந்தார் என்பதை தெரிவித்துக்கொள ்கிறேன்
அதைத்தான் "சத்தியத்தின் வாழ்வுதனை சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும்" என்று கீதை சொல்லுகிறது, இராவணுவம், பொலீஸ், பிரதமர், முதல்வர், இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாற்றம் கண்டு "மண் கவ்வக்கூடியவை" சத்தியம் அப்படிப்பட்டதல் ல சத்தியம் சத்தியமே! வாழ்க ஜனநாயகம்.......... வாழ்க மனிதாபிமானம்............ வாழ்க நீதி............................
போராட்டகாரர்கள் தீவிரமாக இதை செய்ய அனுமதிக்கவே முடியாது என்று திடமாக இருப்பின் போராட்டத்தை ஏன் ஆரம்பத்திலேயே செய்யவில்லை. அப்படி செய்திருப்பின் முதலீடுகள் தடுக்கப்பட்டிரு க்கும் அல்லவா? அன்றுகூட போராடினார்கள் என்பார்கள் சிலர், அதன் தீவிரம் இது போன்று இருந்ததா? கூடங்குளம் வேண்டாம் என்றால், இதைவிட பழைய டெக்னிக்குகள் கொண்ட கல்ப்பாக்கம், சென்னையின் மிக அருகிலேயே உள்ளது. ஏதாவது நடந்தால், சென்னையே இருக்காது. ஆறில் ஒரு பங்கு மக்கள் சென்னையில் வாழ்கிறார்கள். அதில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவும் அடங்குவர்.
அப்துல் கலாம் போன்ற தன்னலமில்லாத தலைவரையே சந்தேகப்பட்டால் , இதில் சுய நலம் தவிர்த்து வேறென்ன? இவர்கள் சொல்லும் நில நடுக்கம் 8 ரிக்டருகு மேல் வருமானால், அங்கு இருக்கும் அனைத்து வீடுகளும் தரை மட்டமாகிவிடும். யார் உயிரோடு இருப்பர்? இருந்த போதும், இந்த அணு மின் நிலையம் அதன் பணியை நிறுத்திவிடக்கூ டிய பாதுகாபப்புகள் செய்யப்படுள்ளது . அதே நிலநடுக்கம் மேட்டூர் அணையில் ஏற்பட்டால் அதனால் அணை உடையுமாயின் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் உயிரிழப்பர். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதால் பெரும் சுற்றுசூழல் சீர்கேடு நிகழ்கிறது. அதனால் சுவாசக்கோளாறு எற்பட்டு ஆயிரக்கணக்கானோர ௌயிரிழக்கின்றனர ். அதற்காக அதைவிட முடியுமா? நிறுத்தலாமா? போரட்டக்காரர்கள ் நிறுத்தலாம் என்றுகூட சொல்வார்கள், ஆனால் அரசாங்கம் அதை செய்யமுடியாது.
நம்மில் எத்தனைபேர் மின்சாரத்திற்கா க நாள்தோறும் அரசை திட்டுகிறோம். ஜெயலலிதாவின் முடிவு சரியானது, இன்னும் முன்னரே இந்த முடிவை எடுத்திருக்கவேண ்டும். தமிழகத்திற்கு அதிக மின்சாரம் கிடைக்க இந்த போராட்டத்தை பயன்படுத்திருக் கொண்டார். எதற்கும் ஒத்துவராமல் இதை எதிர்க்கும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் தவறில்லை. கூட்டம்சேர்ந்தா ல் எதைவேணாலும் சாதித்துவிடலாம் என்றால், அங்கு அரசாங்கத்தின் ஆளுமையே இல்லை என்பது அர்த்தம். தாமதமாயினும் நல்ல முடிவு. தொடரட்டும்!
RSS feed for comments to this post