|
அன்பார்ந்த நண்பர்களே…

வாழ்த்துக்கள். புஷ்பராயன், நான் மற்றும் இதர 12 நண்பர்கள் பலவீனமாகியிருக்கிறோம். ஆனால், எழுந்து உட்கார்ந்து எங்களால் மக்களோடு பேச முடிகிறது. காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி இன்றோடு ஏழாவது நாள்.
மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ யாரும் எங்களை வந்து பார்த்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பார்க்கவும் வரவில்லை. நேற்று முன்தினம் (மார்ச் 23) எங்கள் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு மருத்துவர் குழு வந்தது, ஆனால் அரசு சுகாதாரத்துறையிலிருந்து யாரும் வரவில்லை. ஆனாலும், மார்ச் 19 அன்று போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எங்களோடு சேர்ந்து இடிந்தகரையில் குழுமியவண்ணம் உள்ளனர். 144 தடை உத்தரவின் காரணமாக, எங்களோடு இருக்கும் மக்கள் தங்களால் இயன்ற எளிமையான உணவை சமைத்துச் சாப்பிட்டடு இங்கேயே தங்கி உள்ளனர். புனித லூர்து ஆலயத்தின் எதிரே இருக்கும் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு இருக்கும் இந்த இடத்தை விட்டு வெளியேற அஞ்சியவண்ணம் உள்ளனர். வெளியே சென்றால், மீண்டும் உள்ளே வர முடியாதே என்ற அச்சத்தின் காரணமாக வெளியேறாமல் உள்ளனர்.
நானும் தோழர் புஷ்பராயனும், எப்போது மயக்கமடைவோம் என்று காவல்துறையினர் காத்திருக்கின்றனர். மயக்கமடைந்து மருத்துவ மனையில் அனுமதித்தால் அங்கே எங்களை கைது செய்யலாம் என்ற எண்ணத்தின் காரணமாகவே காவல்துறையினர் காத்திருக்கின்றனர். மக்கள் விரோத அரசுகள் எத்தனை கொடுமையாகிவிட்டன !!!
இதற்கிடையில் அணு உலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக 13 பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது. காவல்துறையின் அடக்குமுறைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கூடங்குளம் பகுதியில் இயல்பு நிலை இருப்பது போலக் காட்டுவதற்காக காவல்துறையினர் சில கடற்கரையோர கிராமங்களுக்குச் சென்று, மீன் பிடிக்கச் செல்லுமாறு வற்புறுத்துக்கின்றனர். இடிந்தகரை பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், மீறினால் வழக்குகள் பாயும் என்றும் தொடர்ந்து மிரட்டியவண்ணம் உள்ளனர். ஆனால், மக்கள் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல், தொடர்ந்து போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.
இது ஒரு போராட்டம். (ஆனால் அணு உலை ஆதரவாளர்கள் இதை “போர்” என்கின்றனர்) செல்வந்தர்கள், அதிகாரம் படைத்தவர்கள், மேட்டுக்குடி மக்கள், உயர்சாதியினர், ஆடம்பரவாசிகள், மெகா வளர்ச்சியை விரும்புபவர்களுக்கு இடையேயும், விளிம்புநிலை உழைப்பாளி மக்களுக்கு இடையேயும் நடக்கும் போராட்டம். அரசுகள் ரஷ்யாவின் லாபத்துக்காக போராடுகின்றனவே தவிர, மக்களுக்காக அல்ல. கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்துக்கு எதிரான ஒரு உணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த சில மாதங்களாக தொடர்ந்த மின்வெட்டை அமல்படுத்தி வருகின்றனர்.
இப்போது கூடங்குளத்தில் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மின் உற்பத்தி எப்போது தொடங்கும் என்பது தெரியாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கூடங்குளம் அணு உலை, தமிழக மின்வெட்டுக்கு தீர்வல்ல என்பதை இப்போதாவது மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அணு உலைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழக மக்கள், பேச்சிப்பாறை அணை நீர், கூடங்குளம் மறுசீராக்கும் நிலையம், ஆயுத வசதிகள், அணு ஆயுதங்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பற்றிய உண்மைகளை புரிந்து கொள்ளப் போகிறார்கள்.
நெருங்கிய, அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், ஒரு சிறு விபத்து கூட கோடிக்கணக்கான சகோதர சகோதரிகளின் வாழ்வையும், ஆரோக்கியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும். நாங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. அந்த வளர்ச்சியானது, தலைமுறை தலைமுறைக்கும் நன்மை பயக்கும்படி இருக்க வேண்டும் என்றே கோருகிறோம். நாம் வாழப்போகும் 40 ஆண்டுகளுக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக, வரப்போகும் தலைமுறைகளுக்கான இயற்கை வளங்களை விஷமாக்குவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. மிக மிக முற்போக்கான திட்டங்களையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, உலகின் தலைவனாக இந்தியா உருவாக வேண்டுமே தவிர, அமெரிக்க, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் அடிமையாக இருக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.
தற்போது அரசு எங்களைத் தாக்க மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்பு உள்ளது என்ற புதிய ஆயுதத்தை எடுத்திருக்கிறது. மாவோயிஸ்டுகளோடு தொடர்பு இருக்கிறது என்றும், நாங்கள் வன்முறையாளர்கள் என்றும் சித்தரிப்பதற்காக, போலியான ஆதாரங்களையும், சான்றுகளையும் உருவாக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த எட்டு மாதங்களாக, எவ்வித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம் என்பதை இந்த உலகமே அறியும்.
கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, இப்போராட்டத்தின் பின்னால் வெளிநாட்டு தூண்டுகோல் உள்ளது என்ற குற்றச்சாட்டு எப்படி பொய்யாகப் போனதோ, அதே போல இந்தக் குற்றச்சாட்டிலும் தோல்வியுறுவார்கள்.
சாமான்ய, விளிம்புநிலை மக்களுக்கு சுயசிந்தனை கிடையாது, அவர்களுக்கென்று சொந்தமான அறிவு கிடையாது, அவர்களால் தங்களுக்கென்று சிந்திக்க முடியாது, அவர்களால் தங்கள் உரிமைக்காக போராட முடியாது, அறவழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்த முடியாது, குறிப்பாக நாடார்கள், தலித்துகள், இசுலாமியர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துப் பிரிவினரும், சென்னை மற்றும் டெல்லியில் உள்ள கோடீஸ்வரர்களின் நலனுக்காக காவுகொடுக்கப்படக் கூடியவர்கள் என்றே அரசு கருதுகிறது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் அடிநாதமே இதுதான். இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
மக்கள் சக்தியா அணு சக்தியா ? மக்கள் சக்தியா அரசின் வலிமையா ? இந்திய மக்களே… தமிழக மக்களே நீங்கள் யார் பக்கம் என்பதை சிந்திப்பீர்…
இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினாலோ, முதுமையினாலோ நானும் இந்த மக்களும் இறந்து போகலாம். ஆனால், இந்த மாநிலம், இந்த நாடு, இந்த உலகம் உங்கள் சந்ததியினர் ஆகியோப் பற்றிச் சிந்தியுங்கள். இதுதான் மக்களுக்கான அரசியல். மார்ட்டின் நியோமாலர் என்ற ஜெர்மன் சித்தாந்தியின் தங்க வரிகளை உங்கள் சிந்தனைக்காக விட்டுச் செல்கிறேன்.
முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.
நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை.
பிறகு அவர்கள் தொழிற்சங்க வாதிகளுக்காக வந்தார்கள்.
நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி இல்லை.
அடுத்து அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.
நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் யூதன் இல்லை.
அடுத்து அவர்கள் எனக்காக வந்தார்கள்.
அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை.
எஸ்.பி.உதயக்குமார்
இடிந்தகரை
25.03.2012
|
Comments
cns
some six months ago we sent this mail to cns
we in Tamil Nadu (India) is afraid of a atomic power station installed by Russia . help us by emailing how far it is safe, or visite this place kindly mail us whether you can help us in this matter, The place of installation is Kudan kulam,The whole people in this area are living with fear, hope you can help us. This area is identified as vulnerable to earth quake.
with thanks waiting for your mail,
p.iruthayaraj
உங்களுக்குத் தெரியுமா? 1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா? 2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெர ியுமா? 3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? 4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கு ம்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ? 5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாதுஅது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப் போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ? 6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? 7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான ் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
இவர்களுக்கு ஆதரவாக இருபது ஆயிரம் பேர் தொடர் உண்ணவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் காலையில் வந்து இரவில் ஊருக்கு திரும்பி மீண்டும் காலையில் வந்து விடுகின்றனர்.பகல் முழுவதும் ஆறு நாட்களாக 20000 பேரும் பட்டினி கிடக்கின்றனர்.பள்ளி மாணவ,மாணவியர் சீருடையுடன் பள்ளியை புறக்கணித்து வந்து முழக்கம் போடுகின்றனர்.
தமிழக வரலாற்றில் கண்டறியாத போராட்டம் இது என்று அங்கு சென்று பார்த்த பின் தான் உணர்ந்தேன்.வெளி உலகில் இப்போராட்டத்தின ் பிரம்மாண்டம் மூடி மறைக்கப்பட்டுள் ளது.ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துகொண்டு சரியாக செய்தி வெளியிட வில்லை.சமூக உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய போராட்டம் இது.இது குறித்து இணையதளம், கைபேசிகளிலும் போதுமான பிரச்சாரம் இல்லை.
உடன் இச் செய்தியை அனைவருக்கும் ஃபொர்நர்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிற ேன்.இது கூடன்குள மக்களின்வாழ்விய ல் பிரச்சனை மட்டுமல்ல,தமிழக மக்களின் உயிர் பிரச்சனை மட்டுமல்ல,மனித இனத்திற்கே சவாலான பிரச்சனை என்பதை கருத்தில் கொண்டு போராடும் மக்களுடன் உறுதியாக கை கோர்ப்போம்.அனைவரும் சென்று வருவோம்.தமிழகம் முழுவதையும் ஆதரவாக்குவோம்.
தொடர்புக்கு:உதய குமார் 9865683735 ,புஷ்ப ராயன் 9842154073 ,வைபா 9443962021
அமெரிக்கா சதி செய்யும் அளவுக்கு கூடங்குளம் வொர்த்த் இல்ல தம்பி .அவங்க நெனச்சா ஒரே நாள்ல வெள்ளயிடிச்சு விட்டு போய்டுவானுங்க .இப்படி காச குடுத்து மக்களை தூண்டிவிடனும் நு அவசியம் ம***** கிடையாது .சரி அத விடு ஒரு நாளைக்கு உனக்கு 1000ருபாய் நான் தரேன் .ஆனா உன் மேல தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் .அப்படி ஒரு போராட்டத்த நீ செய்யணும் .செய்வியா? மாட்ட .ஒரு ஆம்பள நீயே யோசிக்கிற அங்க குடும்பத்தோட உண்ணாவிரதத்துல உக்கந்துருக்கது பணத்துக்காக நு நீ நெனகிறையா தம்பி .
நீ என்ன பண்ற அண்ணனுக்கு ஒரு டீ சொல்லிட்டு சரித்திரத்த ஒழுங்கா படிச்சுட்டு வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா .இப்ப கெளம்பு காத்து வரட்டும்
இதுபோன்ற கருத்துக்களே இங்கே பகிரப்படுகின்றன . ஆனால்,
கண்ணெதிரே 12 உயிர்கள் ஊசலாடிக்கொன்டிர ுக்கிறது.
இந்த உயிர்களையும் போராட்டத்தில் உள்ள மக்களின் நலன்களையும் யார் காப்பாற்றுவது?
கொடிய கொலை செய்து ஜெயிலில் இருக்கும் ஒரு கைதியைக்கூட அவன் தானாக மரணமடைய விடாமல் அரசு காப்பாற்றும் .ஆனால்,
பொதுமக்களுக்காக போராடும் ஒரு எளிய மனிதனை மரண விளிம்புக்கு தள்ளுவது என்ன நியாயம்?
இந்த நாட்டில் நீதி தர்மம் எல்லாம் செத்துவிட்டதா?
காட்டிலுள்ள மிருகங்கள் உணவு கிடைக்காமல் பசியால் மயங்கி விழும்போது,பிணம ்தின்னி கழுகுகள் அந்த மிருகத்தின் இறப்பை எதிபார்த்து வட்டமிடும்.
நம் நாட்டு கழுகுகளும் இதைத்தான் எதிபார்க்கின்றவ ா?
பேய் அரசான்றால் பிணம தின்னும் சாத்திரங்கள் என்று சொல்வார்கள்.இங்கு அரசே பிணம் தின்ன காத்திருக்கிறது .
நெஞ்சில் நேர்மை,பொதுவாழ் வில் தூய்மை உள்ளவர்கள்
என்றும் இறப்பதில்லை.அவர்கள் கோடனுகோடி காலம் வாழ்வார்கள்.ஆனால் இன்றைய அரசு நாளைக்கு தரிசு.
//குறிப்பாக நாடார்கள், தலித்துகள், இசுலாமியர்கள்//
நீங்க யூஸ் பண்ற வாக்கியத்தை பார்க்கும் போது நீங்கள் எதிர்காலத்தில் அரசியல்வியாதி ஆகிவிடுவீங்க போல.. ராமதாசு டாஸ்மாக் கடைக்கு
பூட்டு போடுவேன்னு சொல்ற மாதிரி நீங்களும் அணு உலைக்கு பூட்டு போடுவதுதான் எங்க கட்சியின் முக்கிய கொள்கைன்னு சொல்லலாம்.
அய்யா உதயகுமாரு நீங்கள் சொல்வது போல செயற்கையான மின் பற்றாக்குறையில் அவதிக்கு உள்ளாவது சாமான்ய மக்களே ,
பெரும் செல்வந்தர்கள் அல்ல. அதுசேரி MBC/SC/ST போன்ற நாம் தான் தமிழ்நாட்டின் 60% மக்கள் தொகை. நாமெல்லாம் ஆடம்பரமாக மின்சாரம் செலவு செய்வதில்லையா? கண்ட கண்ட வெளி நாட்டு குளிர் பானங்கள், அழகு சாதன பொருட்கள் , உணவு பழக்கம் என எல்லாவகையிலும் hereditary genes-ஐ சேதபடுத்தி விட்டார்கள். அணு உலைய விட மோசமான விசயங்களை உதயகுமார் உட்பட ஆதரித்து விட்டோம். இப்போது அதை எல்லாம் விட்டுடுங்களேன் பார்போம்.
சதிகாரர்கள். மக்கள் கோபம் கொண்டு இணந்திருக்கையி ல், நானும் உங்களோடுதான் என்பார்கள்.
நம்பி செல்லும் போதே நடுவழியில் திசைமாறி, எதிரியிடம் காட்டிக்கொடுத்த ு கூலிவாங்கிக் கொள்வார்கள். தேவை இனிப்பான விஷமா? கசப்பான மருந்தா? உலகை மாசுபடுத்தி நாட்டின் மண்,வின், நீர் ஆதரங்களை அழித்து அடுத்த தலைமுறையையே தலைமுழுக வேண்டிய நிலைக்கு மக்களைத் தள்ளும் அணு உலைகளா? அல்லது வருங்கால தலைமுறைகள் இந்த மண்ணில் " எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவ ி இருந்ததும் இந்நாடே அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே" என ஆடிப்பாடிக் கொண்டாட பூமியை புனிதமாய் அவர்களுக்கு நல்ல மண்,நீர், காற்று வளத்துடன் காத்து அவர்களை சுகமாய் வாழ்விடப் போகிறோமா? பதில்கள் மண்ணின் மந்தர்களிடம ்தான் இருக்க வேண்டும். நாடாள்பவர் நாடு கடந்ததாய் ஏன் கடத்தப்பட்ட தாய்க் கூட சரித்திரம் இருக்கிறது. தியாகங்கள் லாபம் தராமல் போகலாம் ஆனால் எப்போதும் வெற்றி பெறுவது அதுதான்.
பன்னி வாயன் PMO அமைச்சர், இவனெல்லாம் புல் புடுங்க கூட வழி இல்லாமல், அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு, ஆட்டம் போடுகின்றான்.. இது தெரியமல் ஒரு கூட்டம், சொந்த காசில் சூனியம் வைப்பதை , பெருமை பேசி, தன் தலையில் அணு கழிவை இல்லை இல்லை தன் வாயில், அணு கழிவை எடுத்து வைக்கிறது.. அடே, அற்ப பதர்களே, உங்களுக்கும் சேதுதான் நாங்க போராடுகின்றோம், மானம் கேட்ட மண்ணின் மைந்தர்களே..
இங்க சில பன்னாடைகள், நெகடிவெ ச்லிச்க் பேசிகிறது.. அடே மாங்கா... நீயெல்லாம் திருந்தவே மட்டே...
Ningal ondurm mattum kavanikka vendum entha idinthakarai makkalukkuthan pattippu varum entru makkal poradukirarkal mindum mindum ondru solkiren ningal manasatch padi entha kadalora kirammangalil enppothum orrumayaka than irupparkal poduvakave chrishtain makkal entral ondru thanudaya panathil Trust arambithu piraku velinadukalukku photo anuppi avarkalidam uthavi ketparkal. entha hindu trust velinattilirunt hu panam vankiyathundo melum pathippu entha idinthakarai makkalukku mattumalla entha kudankulathai surri irukkum oorkallukkum pathipputhan piraku Een motham 4 ayiram pear mattum unnaviratham irukkirarkal. Ivarkal yarume kallvi arivu illatha makkal avarkalukku entha uthayakumar payathai katti avarkalodu poradukirar melum entha oor makkal Pishop Enna sollkiraro appatiye kettu nadapparkal. itharkku mel enna solla
entha Vaiko, Ramdoss, Siman, thirumalavan Ean Ippothu kural kodukkanum 7 mathama poradi varukirrarkale appothu kural kodukkamal ippo pesi payan enna?
Athodu entha thittam nirutha mudiyatha sulnilayil porattakararkal Ean poradikirarkal?
Thanks
A. Kalidasan, mumbai
thats true you are an animal!!
read carefullly idiot.
1. this country has more water soruce than any other countries in this world.
2. this country has more natural source than any other country,
3.this country has wind source for free
now,
Do karnataka wants to give water to tamilnadu?
do kerala wants to give water to Tamilnadu?
do Karnataka wants to give water to Andhra?
do Maharastra wants to give water to Andhra?
your answar will be "NO"
so called states blocking their water source, why you people not blocking electricity from neyveli to be distrubuted to other states? anyone can start to protest?
what happened to Anderson? what happened to Bohpal accident? and those people suffered got the justice?
see how this govt blamed these people? first called them chirstian missionary, then foregin money, then now terrorists. actually Koodankulam people are 80% Hindu Nadars. Idindakarai people are as many Christian fernandos. but why they are calling Christian names not Hindus? why they are making minority issues? so the message is clear to divide people by name of God/Religion? this region is fast grown region, educated now. unlike late 70s and 80s. more than 90% people are educated now. comparing to other districts in tamilnadu,
My point is to you people, Respect people, do not insult like DINAMALAM news paper. DINAMALAM needs electricity coz they can run their Tirunelveli office without power cut. shoulder threat bastards always selfish, sorry for my language, sorry my few shoulder threat friends, i curse you because of your community caused me to do so.
அணூலை போராட்டம் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியாமல் இங்கு மட்டுமல்ல, எங்கும் பின்னுட்டம் எழுதுதே..
STATE GOVT COMMITTEE CAME AND TALKED.
NOW UDAYAKUMAR IS SAYING NOBODY CAME TO TALK.
SAVUKKU, YOU PLEASE UNDERSTAND THAT THERE ARE MORE NUMBER OF PEOPLE NOT SUPPORTING UDAYAKUMAR. HIS INTENTIONS AND ACTIONS ARE DOUBTFUL.
GOVT WILL CLOSE ALL THE CHANNELS OF DONATIONS FROM FOREIGN COUNTRIES WITHOUT
MUCH NOISE.
WE ARE WAITING TO SEE THE OTHER SIDE OF THE FACE OF UDAYAKUMAR AT THAT TIME.
IF SAVUKKU AND SOME OTHERS BELIEVE UDAYAKUMAR IS A FIGHTER FOR FOR POOR PEOPLE'S CAUSE, THERE ARE SO MANY PEOPLE BELIEVING HE IS AN AGENT FOR FOREIGN COUNTRY.
A COLLEGE PROFESSOR'S INCOME MAY B LESS THAN WHAT UDAYA KUMAR NOW GETS.
SOMEBODY WRITES TAMIL NADU PRODUCES ELECTRICITY MORE THAN IT'S DEMAND.
IF THEY GIVE STATISTICS WE CAN APPRECIATE.
"THATTINAL THANGAM, VETTINAL VELLI"
CASE.
அணு உலைகள் உள்ள மாநிலங்கள்...மற்றும் மின்சார உற்பத்தி
தமிழ்நாடு - 2890 மெகாவாட் (ப்ரொபொசெட்..ஈன்ச்லுடிங் கோடஙுலம் ஈஃப் இட் ஃபுன்ச்டிஒன்ச்)
ராஜஸ்தான் - 2485 மெகாவாட்
மகாராஷ்டிரா - 1400 மெகாவாட்
குஜராத் - 1840 மெகாவாட்
கர்நாடகா - 880 மெகாவாட்
உத்திரபிரதேசம் - 440 மெகாவாட்
இது இல்லாம காற்றாலை மின்சாரம், நெய்வேலி அனல் மின்சாரம் என்று அதிகப்படியான மின்சாரம் உற்பத்தியாகும் தமிழகத்தில் மட்டும் வரலாறு காணாத மின்வெட்டு... அணு உலைகளே இல்லாத மாநிலத்தில் எல்லாம் மின்வெட்டு கிடையாது...
நீங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்தை பிடுங்கி... ஊர்ல இருக்குற புள்ளைங்களுக்கு குடுத்துட்டு.... உங்க புள்ளைய பட்டினி போட்டா நீங்க சும்மா இருப்பீங்களா... மக்களே....
பல நாடுகளில் அணு உலைகளே கிடையாது... ஆனால் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.... என்னத்த சொல்ல... ஒரு பக்கம் குளோபல் வார்மிங்( புவி வெப்பமயமாதல்)... ஒரு பக்கம் கதிர்வீச்சு... சுருக்கமா சொல்லப்போனா... இது சாப்பாட்டுல சேக்குற அஜினோ மோட்டோ போலதான்... இப்போதைக்கு ருசியா இருக்கும்... ஆனா... பின்னாளில் கேன்சர் வரும்...
காலையில 20லிட்டர்... சாயங்காலம் 20லிட்டர் பால்கறக்கும்ன்ன ு சொல்லி 2லிட்டர் பால் கறக்குற மாட்டை விற்கிற கதைதான்...
மொத்தம் 22 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் அணு உலை இல்லாத போது... இல்லாத இடத்தில் அணு உலை நிறுவாமல்... ஏற்கெனவே அணு உலை இருக்கும் ஆறு மாநிலங்களில்... தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணு உலை அமைப்பதிலிருந்த ு நாம் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள முடியும்... தமிழன் இளிச்சவாயன் என்று....
@samsudeen:just because you got to read some crappy newspaper like dinamalam for one day by begging tea kadai,it doesn't give you the right to vomit those crap you read.
visayam theriyaamal neengalellaam thinamalam pondra patthirikai parappum visatthirkku adimai aagaatheergal... 14,000 kodikku intha kelvi kekkum neengal arasiyal vaathigalidam kelunga pala letcham kodi enge endru.
Malformed children -
http://www.youtube.com/watch?v=rvAJ_u3Q0Hw
Seconds before the blast
http://www.youtube.com/watch?v=I7oDyuMssCY&feature=related
26 years on - Ghost Town Pirpyat (the town looks a disaster hit just yesterday - even after 26 years)
http://www.youtube.com/watch?v=vSUu1ccYBGQ&feature=related
Radio active reading in 2003
http://en.wikipedia.org/wiki/File:Chernobylpowerplantradioactivity.jpg
இந்தியாவை விட தொழில் நுட்ப வளர்ச்சி கொண்ட நாடுகளான, ஜெர்மனியிலும், சுவிச்லாந்திலும ் 2011 முதல் அணு உலைகளை படிப்படியாக நிறுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறா ர்கள். அங்கேயும் பல ஆயிரம் கோடி கொடுத்துதான் கட்டியிருப்பார் கள். ஆனால் காசகுடுத்து கட்டிபோட்டு நிறுத்தக்கூடாது என்று சொல்ல உங்களை போல அறிவாளிங்க இல்ல போல.
அங்க கழட்டுற அணுஉலைகளை எல்லாம் நல்ல விலைக்கு விற்க ஏதுவாகத்தான் இங்கே புதிது புதிதாக கட்டி கொண்டு வருகிறார்கள். அதில நம்ம அரசியல்வாதிகளுக ்கு நல்ல கமிஷனும் கிடைக்கும். இந்த முட்டாள்தனத்தைய ும், களவாணிதனத்தையும ் மறைக்கத்தான் வல்லரசு பம்மாத்தெல்லாம் .
பாதிப்பு வந்தால்தானே பிரச்சினை பலர் சொல்லுறாங்க. அணு உலை சாதாரணமாக இயங்கினாலே அதுசார்ந்த பகுதிகளில் கதிர் வீச்சு இருக்கும். 20 , 30 வருட அணு உலைகளின் பாதிப்பை வெளிநாடுகளில் இப்போதுதான் உணர ஆரம்பித்திருக்க ிறார்கள். பலநாடுகளில் பாதிப்பை வெளிப்படையாக்கி னால் மக்கள் குழம்புவார்கள் என்று இரகசியமாக நடவடிக்கை எடுக்கிறார்கள். கூடங்குளத்தில் இன்னும் 20 வருடங்களில் எல்லாம் கை மீறி போனபின்புதானா இதை உணருவார்கள் நமது மெத்த படித்த மர மண்டைகள்.
காசு, பணம், பெறுமதி எல்லாம் மனிதன் உருவாக்கியதுதான ். நமது பூமியும் அதன் சூழலும் எவ்வளவு காசு கொடுத்தாலும் மனிதனால் திரும்ப கொண்டு வர முடியாது. கதிர் வீச்சு என்பது ஒருநாள், இருநாள் பிரச்சினை அல்ல அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாதிப்பு செலுத்தகூடியது.
http://www.youtube.com/watch?v=Rrxmy6R3m90
An year from Fukushima
http://www.youtube.com/watch?v=PqQWpo_AsF8
Summary - It took a year to call the reactor is officially in cold shut-down state. Means - stopped operating.
It is yet for any human to go near the core. It may take years to make such venture.
All works are only involved in disaster recovery operations - even after a year.
Disaster zone is still prohibited for people to go back to their homes.
Japan still don't know what to do with nuclear debries. Have no nuclear waste management facility.
இடிந்தகரை உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ள காவல்துறை, அங்கிருந்து வெளியேற வேண்டும்.
போராட்டக்குழுவி ன் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோர், சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர்.
அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரின் அறப்போராட்டத்தை ஆதரித்தும், காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்தும் இந்த சோதனையான நேரத்தில் மனித உரிமை ஆர்வலர்களும் அணூலை எதிர்ப்பாளர்களு ம் குரல் கொடுக்க வேண்டுகிறேன்.
அதே போல் கூடங்குளம் என்னும் நாசக்கார அணுக்கூடத்துக்க ு எதிராக நீங்கள் மட்டும் இல்லை நண்பரே ....
எங்களில் பல பேர் இருக்கிறோம்......
அடுத்து அவர்கள் எனக்காக வந்தார்கள்.
அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை......என்று இனி ஒரு முறை சொல்லாதீர்கள் நண்பரே.
RSS feed for comments to this post