முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மக்கள் போராட்டம் தோல்வியுறாது.. .. பணிந்தது அரசு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012 20:01

 

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் பெரும்பாலானவை பணம் கொடுத்து, பல்வேறு தகாத காரியங்களைச் செய்வதால் வெற்றி பெறுவதாக அறிவிக்கப் படுகின்றன.

அவ்வாறு நடைபெறாத போராட்டமாக இருந்தாலும், இரண்டு மணி நேரமோ, அல்லது மூன்று மணி நேரமோ, போராட்டத்தை நடத்தி அதை முடித்து விட்டு அறிக்கை விடும் போராட்டங்களையே தமிழக அரசியல் கட்சிகள் நடத்தி வந்துள்ளன.

இடதுசாரிக் கட்சிகள் கூட, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவதற்கு தயாராக இல்லை.   ஒரு மணி நேர ஆர்ப்பாட்டமோ, அல்லது, இரண்டு மணி நேர தர்ணாவோ நடத்தினால், போதும் என்ற மனநிலைக்கு அக்கட்சிகளின் தொண்டர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.

இந்நிலையில், ஏழு மாதங்களாக தொடர்ந்து ஒரு போராட்டத்தை நடத்தி, அந்தப் போராட்டத்தை காவல்துறையின் உதவியோடு முறியடிக்க அரசு திட்டமிட்ட நிலையில், அதைக் கண்டு அஞ்சாது, தொடர்ந்து போராட்டம் நடத்தி, இறுமாப்போடு திரிந்து தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வைத்து, இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்று, இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும், அன்புத் தோழர் உதயக்குமார் மற்றும், அவரோடு இருக்கும் அத்துணை தோழர்களுக்கும் சவுக்கின் வாழ்த்துக்கள்.

உள்ளார்ந்த உணர்வுகளோடு, போராட்டங்களை முன்னெடுக்கும் மக்களின் முன், எத்தகைய அரசாங்கமாக இருந்தாலும், மண்டியிடத்தான் வேண்டும்.  அது, இறுமாப்பின் உச்சத்தில் இருக்கும் ஜெயலலிதா அரசாங்கமாக இருந்தாலும் சரி.

 

Comments  

 
0 #42 P.Iruthayaraj ,Erode 2012-04-04 12:39
தமிழகத்த ில் பல பகுதிகளில் தொழில் பாதுகாப்பு குழு என அமைத்து கூடங்குளத்தை திறக்க கோரி போராடினார்கள்.அவர்களுக்கெல்லா ம் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.தொழிலை பாதுகாக்க மின்சாரம் வேண்டும் என கேளுங்கள் அதை விடுத்து கூடங்குளத்தை திறக்க சொல்வது யார் வீட்டில் எழவு விழுந்தாலும் நான் சொகுசாக வாழவேண்டும் என்பதற்குத்தானே . சரி கூடங்குளத்தை திறந்து விடுவோம்!!!!!!! அதில் கிடைக்கும் அணுக்கழிவுகளை,ட ெல்லி அக்பர் சாலையில் ஒரு தொட்டி,சென்னை அண்ணாசாலையில் ஒரு தொட்டி,கோவை காந்திபுரத்தில் ஒரு தொட்டி,திருப்பூ ரில் , ஈரோடில் , எங்கும் சேமிப்போமே ஏனென்றால் அணூலை தான் பாதுகாப்பானதே?????/////////////////////////////////////////////////////////////இத இத தான் நானும ,,,கும்பிடறேன் சாமி 20120401 12:43
]உண்மை தான் பத்மன்.god bless you my dear,,,,,,
Quote
 
 
0 #41 பின்னை.சங்கர் 2012-04-04 10:11
அய்யா கும்புடுறேன் சாமி அனுக்கழிவுல இருந்துதான் அணு குண்டு தயாரிக்கிறதுன்ன ு எங்களுக்கு தெரியும்பா?????????? நீ தொட்டின்னா ஒங்க வீட்டுல தண்ணி ஊத்தி வக்கிறதுன்னு நெனச்சியா? பூமிக்கு கீழ நல்லா கான்க்ரீட் போட்டு கட்டித்தான் சேமிக்க சொல்றோம் புத்திசாலி!!!!! !!!!!!!
Quote
 
 
0 #40 M RAMASWAMY 2012-04-02 16:21
Dear friend, You dont have Tolerance power. There is a proverb - Barking seldom bite.
Quote
 
 
+2 #39 idaimaruthuraan 2012-04-02 13:05
அன்புள்ள சவுக்கு, தமிழில் ஒரு சொலவடை உண்டு. "குப்புற விழுந்தாலும் மீசையில் மண்ணோட்டவில்லை" என்பார்கள்.உங்கள் இந்த பதிவை பார்த்து அதுதான் ஞாபகம் வந்தது. சு நா பா நா (வடிவேல்) போய்கிட்டே இரு.
Quote
 
 
0 #38 P.Iruthayaraj ,Erode 2012-04-01 21:59
To

cnsmiis.edu


some six months ago we sent this mail to cnsmiis.edu.with the following content/////////
we in Tamil Nadu (India) is afraid of a atomic power station installed by Russia . help us by emailing how far it is safe, or visite this place kindly mail us whether you can help us in this matter, The place of installation is Kudan kulam,The whole people in this area are living with fear, hope you can help us. This area is identified as vulnerable to earth quake.
with thanks waiting for your mail,
p.iruthayaraj
Quote
 
 
-1 #37 கும்பிடறேன் சாமி 2012-04-01 12:43
]உண்மை தான் பத்மன்,தமிழகத்த ில் பல பகுதிகளில் தொழில் பாதுகாப்பு குழு என அமைத்து கூடங்குளத்தை திறக்க கோரி போராடினார்கள்.அவர்களுக்கெல்லா ம் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.தொழிலை பாதுகாக்க மின்சாரம் வேண்டும் என கேளுங்கள் அதை விடுத்து கூடங்குளத்தை திறக்க சொல்வது யார் வீட்டில் எழவு விழுந்தாலும் நான் சொகுசாக வாழவேண்டும் என்பதற்குத்தானே . சரி கூடங்குளத்தை திறந்து விடுவோம்!!!!!!! அதில் கிடைக்கும் அணுக்கழிவுகளை,ட ெல்லி அக்பர் சாலையில் ஒரு தொட்டி,சென்னை அண்ணாசாலையில் ஒரு தொட்டி,கோவை காந்திபுரத்தில் ஒரு தொட்டி,திருப்பூ ரில் , ஈரோடில் , எங்கும் சேமிப்போமே ஏனென்றால் அணூலை தான் பாதுகாப்பானதே????? அப்போது அணு கழிவும் பாதுகாப்பானது தானே எல்லோரும் தயாரா?//[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
அணு கழிவு அப்பிடியெல்லாமா தொட்டியில் கொட்டி வைக்கபடும்... உங்களுக்கு வாய்த்த அடிமைகள் அவ்வளவு முட்டாள்களா... ஐய்யொ அது அணு ஆயுதம் செய்ய உபயோகிக்க பயன்படும் என்று அந்த உதயகுமாரனுக்கு தெரியுமே.. அதை வெட்ட வெளிசமாக்க வெளி நாடடில் காசு வாங்கியது அந்த அடிமைகளுக்கும் தெரியுமே... இன்னும் முட்டாக்கு போட்டுகிட்டு கூவாதே..
Quote
 
 
-1 #36 கும்பிடறேன் சாமி 2012-04-01 12:35
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]இரண்டு வருடம் முன்னால் நேர்ந்த அழிவுக்கு? ஏன் எல்லா முஸ்லீம் நாடுகளும் , கம்யூனிச நாடுகளும் இலங்கை அரசு தமிழர்களைக் கொன்றதில், பேரழிவில் குற்றமில்லை என வாக்களித்தன? அதை ஏன் கட்டுரையாக சவுக்கு எழுதக்கூடாது?

கம்யூனிசமும் இஸ்லாமும் தமிழரைக் குறிவைப்பதில் உள் நோக்கமென்ன?
இந்தியா இலங்கையில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யபோவதாக அறிவுத்துள்ளது. நீங்கள் இனி பலூன் வாஙகாதீர்கள். ஆணுறை அணியாதீர்... மோட்டார் வாகனதிற்க்கு ட்யர் வாங்காதீர்.... தமிழ்...தமிழ்ழ்ழ்... பீழம்...சொர்ர்ய்....ஏழம் ....ஈழம்ம்ம்ம்... ஐயோ...ஐயோஒ
Quote
 
 
0 #35 கும்பிடறேன் சாமி 2012-04-01 12:28
உலகில் உள்ள உண்மையை மறைக்கும் தமிழ் உணர்வாளர்களுக்க ு,,,, Nuclear
Japan currently has 54 operating nuclear reactors with a total installed generating capacity of
around 49 GW, making it the third-largest nuclear power generator in the world behind the United
States and France. EIA preliminary data shows that Japan produced 266 BKwh of nucleargenerate d electricity in 2009. The government stated plans to increase nuclear's share of total
electricity generation from 24 percent in 2008 to 40 percent by 2017 and to 50 percent by 2030,
according to the Ministry of Economy, Trade and Industry. Though, the March 11 earthquake
could impact the growth of nuclear energy at least in the short and medium term. Over 12,000 MW
of nuclear capacity at the Fukushima, Onagawa, and Tokai facilities ceased operations after the
earthquake and tsunami, and some of the reactors could be permanently damaged after
emergency seawater pumping efforts. Below is a snapshot of Japan’s key nuclear facilities
including those affected by the earthquake.
Japan has a full fuel cycle setup, including enrichment and reprocessing of used fuel for recycling.
Japan has promoted nuclear electricity over the years as a means of diversifying its energy
sources and reducing carbon emissions, emphasizing safety and reliability. The World Nuclear
Association reports there are currently 2 nuclear plants under construction and another 12 in
planning stages. According to the Federation of Electric Power Companies in Japan, nuclear
power makes a great contribution to Japan's energy security by reducing its energy imports
requirement by approximately 440 MMbbl/d per year and, because nuclear energy emits no CO2,
it reduces Japan's CO2 emissions by about 14 percent per year
Quote
 
 
+1 #34 sivaji 2012-03-31 14:27
குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை.
Quote
 
 
+2 #33 ரப்பர் ஸ்டாம்ப் 2012-03-31 12:26
தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவ ும் இன்று ஜெ.,அறிவித்தார்.

மக்களுக்கு ஒரு விடிவு கிடைத்தது, விமோசனம் கிடைத்தது என்று சந்தோசம் நீண்ட நாள் நீடிக்காமல் நிராசையாய் போனது. சென்ற வாரம் கூட அந்த கோஷ்டியோடு யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் மீறினால் தண்டிக்கபடுவர் என்றும் கூறிவிட்டு, இன்று கூடி குலாவியது ஏனோ. இது ஒரு மிக தவறான முடிவு, ஜெ பதில் சொல்ல கடமைபட்டுள்ளார் . இந்த கொள்ளை கோஷ்டியை கண்டிப்போடு வைத்திருந்தாலும ் யாருக்கும் இவர் மீது நம்ம்பிக்கை வராது. நாங்கள் மீண்டும் ஒரு நாள் வருவோம், அப்போது உங்களை பார்த்துக்கொள்வ ோம் என்று கொள்ளை கோஷ்டி சவால்விட்டது சரியாகிவிட்டதல் லவா. ஜெ ஏதாவது செய்வார் என்ற நம்ம்பிக்கை இன்ரோடு முடிட்துக்கொல்வ து நல்லது. இந்த அறிவிப்பை நாளை ஏப்ரல் 1 அன்று வெளியிட்டிருந்த ால் மிகவும் சரியாகியிருக்கு ம். இப்படிக்கு அட்வான்ஸ் டுதிருட்டு முனேற்ற கழகம்
Quote
 
 
+1 #32 vsu 2012-03-31 12:16
ஒரு கவளம் சோற்றை உண்ணுவதற்கு வாய் அருகே கொண்டு சேர்க்கும்போது அதில் நூறுபேரின் வியர்வை வாசம் இருக்கிறது என்று உணர்வதே வாழ்க்கை.''
Quote
 
 
-1 #31 mugil 2012-03-29 21:42
நல்ல கட்டுரை
Quote
 
 
+3 #30 Jagan T 2012-03-29 14:00
மே.வங்கம் போல் மிகப்பெரிய வன்முறைகள் எதுமில்லாமல் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியே. இந்த போராட்டத்தை கூடன்குளம் பகுதி மக்களின், மீனவ சமுதாயத்தினரின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தி இருக்கலாம். தவற விட்டுவிட்டார்க ள்.
Quote
 
 
+6 #29 பின்னை.சங்கர் 2012-03-29 11:41
நல்லவா நீ ரொம்ப நல்லவன்பா? திருடன குடி வைப்பது எப்படி!!!! நாம் இந்த நாட்டில் குடியிருப்பது அதிகம் திருடர்களுடன் தானே.புரியலையா???/ உழைப்பில்லாமல் ஊதியம் வாங்கும் அதிகாரிகள்,ஊரை அடித்து உலையில் போடும் அரசியல் வியாதிகள்,கடமைய ை செய்ய லஞ்சம் வாங்கும் நாய்கள் எல்லோரும் யார்? திருடர்கள் தானே?/ அந்த வகையில் ஐந்தோ, பத்தோ,திருடுபவர ்கள் என் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!!! அது சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம முத்தமிழை வித்தவன்!!! மாதிரி திசை திருப்புற.
Quote
 
 
+3 #28 vendum suthanthiram 2012-03-29 05:21
Substandard Contractor + Substandard Officials + Substandard Government + Substandard Preparation = Highly Secure Nuclear PowerPlants?

Where is that Abdul Kalaam who dishonestly selling to people by abusing people's respect and trust?
Quote
 
 
+5 #27 Hariharan-Chennai 2012-03-28 23:07
Hello Savukku I sincerely request you to apply lemon in your head. I could see the effect of summer on you. You have become the next Karunanidhi. That is telling puluku (lies). Where is the victory for Udhayakumar? Did the Tamilnadu govt. asked the central govt. to stop the plant activities? (The core demand by your friend?)
Quote
 
 
+10 #26 K.riaz Ahamed 2012-03-28 20:44
றவிசன்ட்ரன் சேனிவசன் - சென்னை,இந்தியா 201203௨8 11:28:06 ஈஸ்ட் 14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ? 15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்ப ில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
Quote
 
 
+12 #25 Joshuva Daniel 2012-03-28 20:43
9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டது ம், கல்பாக்கத்துக்க ருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ? 10. கூடங்குளத்திலும ் கல்பாக்கத்திலும ் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? 11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக் கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவ து உங்களுக்குத் தெரியுமா ? 12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெர ியுமா 13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
Quote
 
 
+10 #24 k.nagaboobathy 2012-03-28 20:41
5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாதுஅது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப் போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ? 6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? 7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான ் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ? 8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும ் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? தெரியுமா ?
Quote
 
 
+8 #23 Babymoses,Erode-2 2012-03-28 20:40
றவிசன்ட்ரன் சேனிவசன் - சென்னை,இந்தியா 201203௨8 11:28:06 ஈஸ்ட் றெபொர்ட் ஆபுசெ
உங்களுக்குத் தெரியுமா? 1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா? 2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெர ியுமா? 3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? 4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கு ம்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?
Quote
 
 
+15 #22 deepu 2012-03-28 16:56
ஜெயா அர‌சு (ம‌க்க‌ளின் அச்சம் தீரும் வ‌ரை எனக் கூறிய‌போதும்) த‌ங்க‌ள‌து போர‌ட்ட‌த்திற்க ு ஆத‌ர‌வு த‌ரும் என உத‌ய‌குமார் முழுமையாய் ந‌ம்பினார்.
ம‌த்திய‌ அர‌சை அசைக்க‌ இதை க‌டிவாள‌மாக ப‌யன்ப‌டுத்த முடிவெடுத்த அவ‌ர், ச‌ங்க‌ர‌ன் கோவில் இடைத்தேர்த‌லுக் காக காத்திருந்த பின் உலைக் க‌த‌விக‌ளைத் திறக்க‌ ஒப்புத‌ல் அளித்து விட்டார். ம‌த்திய‌ அர‌சு அந்நிய‌ ப‌ண‌ம், மாவோஸ்டு தீவிர‌வாத‌ம் என ம‌ன‌தில் தோன்றிய‌ எல்லா‌ச்
ச‌(க)திக‌ளையும் அப்பாவி ம‌க்க‌ள் மீது திணிக்கிற‌து. இது ம‌த்திய‌ மாநில‌ அரசுக‌ள் அவ‌ர‌வ‌ர் பாணியில் ந‌ட‌த்தும்/ந‌ட‌த்திய‌ நாட‌க‌ங்க‌ள். ஆள்ப‌வ‌ர்க‌ளின் எண்ண‌ங்க‌ளே இறுதியில் நிறைவேறும். ம‌க்க‌ள் எல்லாம் வெறும் ப‌க‌டைக் காய்க‌ள் ம‌ட்டுமே, அதை வைத்து காய் ந‌க‌ர்த்தி ஆடு புலி ஆட்ட‌ம் ஆடுவது ம‌த்திய‌ மாநில‌ அர‌சுக‌ள். அவ‌ர்களின் கைக‌ளில் சில நேர‌ம் இருந்தாலும், நாம் வெறும் காய்க‌ள் தான்.
Quote
 
 
+13 #21 policial thondan 2012-03-28 15:56
ஓடிப்போய் பதுங்கிய் உதயகுமாருக்கு எதுக்கு சவுக்கு வாழ்த்து சொல்கிறது என்று புரியவில்லை. அணு உலை மூடப்பட்டால்தான ே போராட்டத்திற்கு வெற்றி? சவுக்கும் சரியில்லையே
Quote
 
 
+6 #20 bambino 2012-03-28 15:17
ஹாஃப் ஃபுல் இஸ் ஆல்ஸோ ஹாஃப் எம்டி. சவுக்கு அவர்களே, இனி எல்லாம் சுபம் என்று அவர் அவர் வீட்டிற்கு சென்று விடுவர்.
உண்ணாவிரதம் இருந்தவர்களே அங்கு கடை நடத்தினாலும் ஆச்சரியமில்லை. வாழ்க சுயராச்சியம்.
Quote
 
 
+1 #19 nallavan 2012-03-28 14:58
Thirudanai addipathu kooodathaan manitha urimai meeral (appdithanapaa sollareenga). adharkkaga ellam thirudaniyum unga veetukku pakauthula kudi vaipooma. urkku upedesam pannardhu romba easy raja....Quoting பின்னை.சங்கர்:
உண்மை தான் பத்மன்,தமிழகத்த ில் பல பகுதிகளில் தொழில் பாதுகாப்பு குழு என அமைத்து கூடங்குளத்தை திறக்க கோரி போராடினார்கள்.அவர்களுக்கெல்லா ம் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.தொழிலை பாதுகாக்க மின்சாரம் வேண்டும் என கேளுங்கள் அதை விடுத்து கூடங்குளத்தை திறக்க சொல்வது யார் வீட்டில் எழவு விழுந்தாலும் நான் சொகுசாக வாழவேண்டும் என்பதற்குத்தானே . சரி கூடங்குளத்தை திறந்து விடுவோம்!!!!!!! அதில் கிடைக்கும் அணுக்கழிவுகளை,ட ெல்லி அக்பர் சாலையில் ஒரு தொட்டி,சென்னை அண்ணாசாலையில் ஒரு தொட்டி,கோவை காந்திபுரத்தில் ஒரு தொட்டி,திருப்பூ ரில் , ஈரோடில் , எங்கும் சேமிப்போமே ஏனென்றால் அணுஉலை தான் பாதுகாப்பானதே????? அப்போது அணு கழிவும் பாதுகாப்பானது தானே எல்லோரும் தயாரா?//
Quote
 
 
0 #18 A. Kalidasan 2012-03-28 12:31
http://viruvirupu.com/koodankulam-hunger-strike-over/15678/

Intha website Podum Takavale Unnmai Mr. Savukku Intha Website Thani Napar Nadathum Website OK.
Quote
 
 
-5 #17 A. Kalidasan 2012-03-28 12:29
Enna sir Naan Muthalile sonnen intha idinnthakarai makkalai nammathirkal kadaisiaya kalai varividurarkal entru.

Porattam Natathiyathu 3000 makkal ivarkal solkirarkal 30 KM thurathil irukkum makkalukku iyarkai peridarar payarsi kodukka vendum entru Ean Ivarkal 9 natkalaka Soru ponki unnaviratham iruntharkle Ean ottumotha makkalum Unnaviratham Irukkavillai Ippavathu Purikiratha Intha Makkalai Nampathirkal Entru!

A, Kalidasan, Mumbai.
Quote
 
 
+14 #16 mahesh_new 2012-03-28 11:41
ஆதரவு தராத மற்ற தமிழ்நாட்டு மக்கள் சுயநலவாதிகள்ன்ன ு சொல்றீங்க.. ஆனால் இந்த அணு சக்தி எதிர்பாளர்கள் ஏன் கல்பாக்கதுக்கு எதிராக போராட்டம் நடத்த மாட்டேங்கறாங்க ? கேட்டா அவனவனுக்கு வலிச்சா அவனவந்தான் மருந்து போட்டுக்கணும்னு சொல்வீங்க.. அது மட்டும் சுயநலம் இல்லையா ?
கல்பாக்கத்தில் இருப்பவனக்கும் சேர்த்து இந்த உதயகுமார் போரடுறேன்னு என்னைக்காவது சொன்னாரா ?
தங்கள் பகுதியில் இருக்கும் அணு உலைக்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்துவது கூட ஒரு வகையில் சுயநலம்தான்..
அணு உலை இப்போதைக்கு தேவையான விஷயம். காரணம் மிக அத்தியாவசியமான மின் தேவை, இன்னொன்று அதற்காக செலவு செய்த மக்கள் பணம். 20000 கோடி செலவு செஞ்ச அப்புறம் வந்து இழுத்து மூடுன்னு சொன்னா இந்தியாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஒத்துக்க மாட்டங்க. நாம் ஒன்றும் பிரான்சில் வாழவில்லை. ப்ராக்டிகல்லாக யோசித்து பார்ப்பது நலம். காற்றாலை மின் உற்பத்தியில் உள்ள நிதி நிலைமையை சரி செய்யவும் சோலார் பேனல்களுக்கு மானியம் வழங்க போராடினால் எதிர்காலத்தில் புதிய அணு உலை திறக்காமல் பார்த்துக்கொள்ள லாம். குஜராத்தில் செயல்படுத்தப்பட ும் திட்டங்களை இங்கேயும் கொண்டுவர போராடினால் அர்த்தமுள்ளதாக இருக்கும்..[ஃஉஒடெ நமெ="பட்மன்"]சவுக்கு... இது வெற்றியென சொல்ல முடியாது.

கூடங்குளம் பகுதி தவிர்த்து மற்ற பகுதி மக்கள் சுயநலம் காராணமாக இந்த போராட்டத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்ல ை. வியாபார நோக்கம் கொண்ட இந்த திட்டம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் மற்றும் தமிழனுக்கு எதிராக செயல்படும் ரஷ்யாவிற்குத்தா ன் இலாபம்.

.

என்னை பொறுத்தவரை இந்த போராட்டம் கூடங்குளம் மக்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்குமிடை யே நடந்த போராட்டம் என்பதைவிட, கூடங்குளம் மக்களுக்கும் ஆதரவு தராத மற்ற தமிழ்நாட்டு மக்களுக்குமிடைய ே நடந்த போராட்டம். இதில் பெரும்பான்மையான சொகுசுவாழ்க்கைய ை விரும்பும், எதிர்கால சந்ததியைபற்றி கவலைப்படாத பெரும்பான்மையான தமிழக மக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வெற்றிபெற்றார்க ள் என்றால் அது மிகையல்ல.

கெட்டும் திருந்தாத மக்கள்தான் நம் தமிழ்நாட்டு மக்கள்.

வரும் ஆண்டின் டாஸ்மாக் இலக்கு இருபது ஆயிரம் கோடியாம். சூப்பர்! எவ்ளோ மயக்கத்தில் இருக்கிறோம் பாருங்கள்.[/ஃஉஒடெ]
Quote
 
 
+9 #15 arulmozhi 2012-03-28 11:03
உண்மையில் வெற்றி அடைந்தது அரசுதான்.உதயகுமார் என்ன காரணத்தினாலோ பயந்து பின்வாங்கிவிட்ட ார்.பொறுத்திருந்து பாருங்கள்.இன்னும் சில நாட்களில் எல்லா போராட்டங்களையும ் முடித்துக்கொள்வ ார்.ஏனென்றால் மக்கள் ஆதரவு குறைந்துகொண்டே வருகிறது.
Quote
 
 
+7 #14 rameshpriyan 2012-03-28 10:17
Idha parunga parunga parunga parhtukitta irunga;
மக்களுக்கு உதயக்குமார் திறந்த மடல். :-
இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினாலோ , முதுமையினாலோ நானும் இந்த மக்களும் இறந்து போகலாம். ஆனால், இந்த மாநிலம், இந்த நாடு, இந்த உலகம் உங்கள் சந்ததியினர் ஆகியோப் பற்றிச் சிந்தியுங்கள். இதுதான் மக்களுக்கான அரசியல்.
Quote
 
 
+15 #13 Louis 2012-03-28 10:06
கூடங்குளம் அணு உலையை நாம் காரண, காரியங்களுடந்தா ன் எதிர்த்து போராடி வருகிறோம். ஆனால் இந்திய மத்திய அரசும், இந்நாட்டின் அணு விஞ்ஞானிகளும் நாம் எழுப்பிய வினாக்களுக்கு நேரடியாக பதில் தராமல், மின்சாரத் தேவையை மட்டுமே முன்னிலைப்படுத் தி அணு உலைகளின் அவசியத்தை நியாயப்படுத்தி வருகின்றனர்.ஜனநாயக வழியில் நாம் மேற்கொண்டுவரும் அந்தப் போராட்டம் இறுதி வெற்றி பெறும் நாள் நிச்சயம் வரும்.கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய அணு சக்திக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களையு ம், அவர்களுக்கு ஆதரவாக வந்த ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ள கூட்டப்புளி மக்களையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலை தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதே அதற்கு எதிராக போராடிவரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இதனை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழக அரசு நியமித்த நிபுணர்கள் குழு கூட, மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு போன்று, அணு மின் நிலையத்திற்குச் சென்றுவிட்டு திரும்பி அறிக்கை அளித்ததே தவிர, மக்களைச் சந்தித்து அவர்களின் அச்சத்தைப் போக்கவில்லை. அதுமட்டுமின்றி, அணு மின் நிலையத்தில் விபத்து ஏதாவது ஏற்பட்டால் தங்களை காத்துக்கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்கிற பயிற்சியையும் அப்பகுதி மக்களுக்கு அளிக்கவில்லை. இவை இரண்டையும் செய்யாமல் அணு உலைகளை இயக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததுதான் இன்றைக்கு போராட்டம் தீவிரமடையக் காரணமாகிவிட்டது .
தங்களின் உயிருக்கும், வாழ்விற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிற அடிப்படையில் கூடங்குளம் பகுதி மக்கள் நடத்தும் போராட்டம் ஜனநாயகப்பூர்வமா னது.
Quote
 
 
+6 #12 jeyanthpeter 2012-03-28 09:56
கூடங்குளம் பகுதி தவிர்த்து மற்ற பகுதி மக்கள் சுயநலம் காராணமாக இந்த போராட்டத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்ல ை. வியாபார நோக்கம் கொண்ட இந்த திட்டம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் மற்றும் தமிழனுக்கு எதிராக செயல்படும் ரஷ்யாவிற்குத்தா ன் இலாபம்.

மம்தா பானர்ஜி போன்ற மக்கள் தலைவர் தமிழகத்தில் இல்லை. வைகோ போன்றவர்களுக்கு தேவையான பலமுமில்லை.

என்னை பொறுத்தவரை இந்த போராட்டம் கூடங்குளம் மக்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்குமிடை யே நடந்த போராட்டம் என்பதைவிட, கூடங்குளம் மக்களுக்கும் ஆதரவு தராத மற்ற தமிழ்நாட்டு மக்களுக்குமிடைய ே நடந்த போராட்டம். இதில் பெரும்பான்மையான சொகுசுவாழ்க்கைய ை விரும்பும், எதிர்கால சந்ததியைபற்றி கவலைப்படாத பெரும்பான்மையான தமிழக மக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வெற்றிபெற்றார்க ள் என்றால் அது மிகையல்ல.
Quote
 
 
+23 #11 பின்னை.சங்கர் 2012-03-28 09:56
உண்மை தான் பத்மன்,தமிழகத்த ில் பல பகுதிகளில் தொழில் பாதுகாப்பு குழு என அமைத்து கூடங்குளத்தை திறக்க கோரி போராடினார்கள்.அவர்களுக்கெல்லா ம் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.தொழிலை பாதுகாக்க மின்சாரம் வேண்டும் என கேளுங்கள் அதை விடுத்து கூடங்குளத்தை திறக்க சொல்வது யார் வீட்டில் எழவு விழுந்தாலும் நான் சொகுசாக வாழவேண்டும் என்பதற்குத்தானே . சரி கூடங்குளத்தை திறந்து விடுவோம்!!!!!!! அதில் கிடைக்கும் அணுக்கழிவுகளை,ட ெல்லி அக்பர் சாலையில் ஒரு தொட்டி,சென்னை அண்ணாசாலையில் ஒரு தொட்டி,கோவை காந்திபுரத்தில் ஒரு தொட்டி,திருப்பூ ரில் , ஈரோடில் , எங்கும் சேமிப்போமே ஏனென்றால் அணுஉலை தான் பாதுகாப்பானதே????? அப்போது அணு கழிவும் பாதுகாப்பானது தானே எல்லோரும் தயாரா?//
Quote
 
 
+4 #10 GOPALASAMY 2012-03-28 09:53
THE AGITATION ENDED SUCCESSFULLY!!! .

IT MEANS GOVT ACCEPTED TO CLOSE THE NUCLEAR POWER STATION!!!.

AM I CORRECT?
Quote
 
 
-8 #9 leelakris 2012-03-28 09:38
குப்பிர விலுந்தாலும் மீசைல மண் ஒட்டல... நல்ல கூத்து... அதுக்கு வாழ்து....சவுக்கு.. சருக்குது.....
Quote
 
 
+22 #8 Louis 2012-03-28 09:29
அணு உலைகள் உள்ள மாநிலங்கள்...மற்றும் மின்சார உற்பத்தி
தமிழ்நாடு - 2890 மெகாவாட் ராஜஸ்தான் - 2485 மெகாவாட்
மகாராஷ்டிரா - 1400 மெகாவாட்
குஜராத் - 1840 மெகாவாட்
கர்நாடகா - 880 மெகாவாட்
உத்திரபிரதேசம் - 440 மெகாவாட்
இது இல்லாம காற்றாலை மின்சாரம், நெய்வேலி அனல் மின்சாரம் என்று அதிகப்படியான மின்சாரம் உற்பத்தியாகும் தமிழகத்தில் மட்டும் வரலாறு காணாத மின்வெட்டு... அணு உலைகளே இல்லாத மாநிலத்தில் எல்லாம் மின்வெட்டு கிடையாது...
நீங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்தை பிடுங்கி... ஊர்ல இருக்குற புள்ளைங்களுக்கு குடுத்துட்டு.... உங்க புள்ளைய பட்டினி போட்டா நீங்க சும்மா இருப்பீங்களா... மக்களே....
பல நாடுகளில் அணு உலைகளே கிடையாது... ஆனால் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.... என்னத்த சொல்ல... ஒரு பக்கம் குளோபல் வார்மிங்( புவி வெப்பமயமாதல்)... ஒரு பக்கம் கதிர்வீச்சு... சுருக்கமா சொல்லப்போனா... இது சாப்பாட்டுல சேக்குற அஜினோ மோட்டோ போலதான்... இப்போதைக்கு ருசியா இருக்கும்... ஆனா... பின்னாளில் கேன்சர் வரும்...
Quote
 
 
+15 #7 Louis 2012-03-28 09:28
மொத்தம் 22 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் அணு உலை இல்லாத போது... இல்லாத இடத்தில் அணு உலை நிறுவாமல்... ஏற்கெனவே அணு உலை இருக்கும் ஆறு மாநிலங்களில்... தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணு உலை அமைப்பதிலிருந்த ு நாம் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள முடியும்... தமிழன் இளிச்சவாயன் என்று....
Quote
 
 
+12 #6 anniyan 2012-03-28 06:40
அணு உலையால் அழிவு பிற்காலத்தில் ஏற்படாமல் பாத்துக்கொள்வது சரி. இரண்டு வருடம் முன்னால் நேர்ந்த அழிவுக்கு? ஏன் எல்லா முஸ்லீம் நாடுகளும் , கம்யூனிச நாடுகளும் இலங்கை அரசு தமிழர்களைக் கொன்றதில், பேரழிவில் குற்றமில்லை என வாக்களித்தன? அதை ஏன் கட்டுரையாக சவுக்கு எழுதக்கூடாது?

கம்யூனிசமும் இஸ்லாமும் தமிழரைக் குறிவைப்பதில் உள் நோக்கமென்ன?

போன வாரம் இலங்கை அரசின் மேல்
குற்றமில்லை என ஐ நா சபையில் வாக்களித்த நாடுகள் :
Bangladesh
China -- C
Congo
Cuba
Ecuador
Indonesia
Kuwait
Maldives
Mauritania
Philippines
Qatar
Russia -- C
Saudi Arabia
Thailand
Uganda
Quote
 
 
+3 #5 ஊர்க்குருவி. 2012-03-28 00:22
தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும்"

மன நிறைவுடன் போராட்டக்கார தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
-ஊர்க்குருவி-
Quote
 
 
+8 #4 Eleventh Sense 2012-03-28 00:09
எதிர்கால சந்ததியினரின் வாழ்வுக்காக போராடுகிற உன்னதம் எங்கே.............
இன்று மட்டும் நிம்மதியாக தூங்க மின்சாரத்திற்கா க போராடுகிற சுயநலமிக்க கயமைத்தனம் எங்கே.................
மின்சாரம் அனுமின்சாரமாக இல்லாமல் வேறு எந்த ரூபத்திலாவது ஏற்பாடு செய்யவேண்டியதுத ானே இந்த மானங்கெட்ட அரசு.........
அலைக்கற்றை 1 .7 லட்சம் கோடியை வைத்து தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையை தீர்த்திருக்க முடியாதா?........
ஆலைகள் திருடிய மின்சாரத்தை, கோவில் திருவிழாக்களில் கொக்கி போட்டு திருடிய மின்சாரத்தை, மற்றும் பகிர்மான சேதத்தையும் தடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது..........
மிகவும் மோசமான மின் தட்டுப்பாடு உள்ள கேரளாவில் சென்ற வரம் நாம் சென்ற பொது விடிய விடிய விளக்கு எரிந்தது.......
தமிழர்கள் ஏமாளிகள் .......
ஆகையால் தான் அரசியல் வாதிகளின் சூழ்ச்சிக்கு ஈசியாக பலியாகிவிடுகிறா ர்கள் ................
ச்டெர்லிடெ மற்றும் கூடங்குளம் இதற்கு சான்றாக உள்ளன..........
Quote
 
 
+5 #3 SARAVANAN AYYAVOO 2012-03-27 23:06
dear brother udayakumar we will be always with you for this kind of real things
Quote
 
 
+58 #2 Padman 2012-03-27 21:52
சவுக்கு... இது வெற்றியென சொல்ல முடியாது.

கூடங்குளம் பகுதி தவிர்த்து மற்ற பகுதி மக்கள் சுயநலம் காராணமாக இந்த போராட்டத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்ல ை. வியாபார நோக்கம் கொண்ட இந்த திட்டம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் மற்றும் தமிழனுக்கு எதிராக செயல்படும் ரஷ்யாவிற்குத்தா ன் இலாபம்.

மம்தா பானர்ஜி போன்ற மக்கள் தலைவர் தமிழகத்தில் இல்லை. வைகோ போன்றவர்களுக்கு தேவையான பலமுமில்லை.

என்னை பொறுத்தவரை இந்த போராட்டம் கூடங்குளம் மக்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்குமிடை யே நடந்த போராட்டம் என்பதைவிட, கூடங்குளம் மக்களுக்கும் ஆதரவு தராத மற்ற தமிழ்நாட்டு மக்களுக்குமிடைய ே நடந்த போராட்டம். இதில் பெரும்பான்மையான சொகுசுவாழ்க்கைய ை விரும்பும், எதிர்கால சந்ததியைபற்றி கவலைப்படாத பெரும்பான்மையான தமிழக மக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வெற்றிபெற்றார்க ள் என்றால் அது மிகையல்ல.

கெட்டும் திருந்தாத மக்கள்தான் நம் தமிழ்நாட்டு மக்கள்.

பாராளுமன்ற தேர்தல் நாள் அன்று ஓட்டுக்கு ஆயிரம் ருபாய் பணமும், சாப்பிட பிரியாணியும், குடிக்க சரக்கும் கொடுத்தால் போதுமென எதிர்பார்த்து காத்து கிடக்கும் இந்த மக்களை என்ன செய்வது?

வரும் ஆண்டின் டாஸ்மாக் இலக்கு இருபது ஆயிரம் கோடியாம். சூப்பர்! எவ்ளோ மயக்கத்தில் இருக்கிறோம் பாருங்கள்.
Quote
 
 
+24 #1 ஷாலி 2012-03-27 20:36
அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் பொதுவாக மக்கள்
வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதற் கு சலுகை பெறுவதற்காகவே நடத்தப்படுகிறது .

அரசின் கவனத்தை ஈர்க்க ஒருசில நாட்கள் அல்லது மணிகள் நடத்தும் போராட்டம்தான்.அதற்கும்மேல் அப்போராட்டத்தின ் அறுவடையாக ஆட்சியை கைப்பற்றுவது கட்சிகளின் நோக்கமாகவே இருக்கும்.

ஆனால் இடிந்தகரை மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்ததற்கு
அடிப்படை காரணம், உயிர்.... மனிதன் உயிரோடு இருந்தால் தான் மற்ற தேவைகள்.உயிர் வாழ்வதற்காக நடத்தப்பட்டநீண் ட போராட்டம் இது ஒன்றுதான்.

இதை உயிருரிமைப்போரா ட்டம் என்று அழைப்பதே பொருத்தம்.
வெற்றி பெற்றவர்கள் விளிம்பு நிலை மக்களும் தன்னல மற்ற தலைமையும்.இவர்களை சரித்திரம் பேசும்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 183 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1073
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week33532
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month236264
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12758383