|
தோழர் கானகன் கூடங்குளம் போராட்டம் தொடர்பாக எழுதியிருந்த கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள். ஆதரவாகவும், எதிராகவும். இரு தரப்பு வாதங்களும், கடுமையாகவே இருக்கின்றன.

தோழர் கானகனின் கட்டுரையிலிருந்து தெரிய வந்த விஷயங்களில் முக்கியமானது, இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அவருக்கு இருந்த அக்கறை, கவலை, ஆதங்கம். மேலும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்ற ஆற்றாமை, சரியான நேரத்தில் முடிக்கவில்லையே என்ற மனக்குறை. அந்தக் கட்டுரையின் சராமாக புரிந்து கொண்ட விஷயங்கள்… …
1) இந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
2) போராட்டம் மோசமான பின்னடைவைச் சந்தித்த நிலையில் ஒரு விதமான Self denialல் இருக்கிறார்கள்.
3) போராட்டம் தோல்வியைத் தழுவிய பிறகும், அதை ஒப்புக் கொள்ள மறுத்து ஏதோ வெற்றி அடைந்தது போலப் பேசி வருகிறார்கள்.
4) கூடங்குளம் போராட்டம், அணு உலை குறித்த ஆபத்துக்களை விவாதப்பொருளாக்கியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.
5) அரசாங்கத்துக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் போராட்டம் முடிவடைந்திருப்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவு.
6) ஜெயலலிதாவை நம்பி போராட்டம் மோசம் போனது. ஜெயலலிதாவை நம்பியிருக்கக் கூடாது.
7) அப்துல் கலாம் 200 கோடி சலுகைகளை அறிவித்த போது, அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதை தவற விட்டு விட்டார்கள்.
கூடங்குளம் போராட்டம் என்பது, இந்தியாவில் இது வரை நடைபெற்ற போராட்டங்களிலேயே ஒரு முக்கியமான, குறிப்பிடத்தக்க போராட்டம் என்பதை யாரும் மறுக்கவியலாது. இன்றைய, தாராளமயமாக்க, நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் ஒரு சாதாரண அரங்கக் கூட்டத்திற்கு 50 பேரை திரட்டுவது என்பதே ஒரு சாகசமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில், சில ஆயிரம் மக்களை தொடர்ச்சியாக 7 மாதங்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபட வைத்தது ஒரு மிகப்பெரிய சாதனை.
மற்ற போராட்டங்களை விட இந்தப் போராட்டம் சிறந்ததாக இருப்பதற்கான காரணம், இந்தியாவையே சமீபத்தில் உலுக்கிப் போட்ட அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்குக் கிடைத்த மீடியா ஆதரவை பார்க்க வேண்டும். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த 11 நாட்களும், தேசிய ஊடகங்கள் 24 மணி நேரமும், இந்தியாவே ஸ்தம்பித்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கின. இந்த ஊடக முக்கியத்துவத்தைப் பார்த்து, அனைத்து அரசியல் கட்சிகளும் நடு நடுங்கிப் போயின என்றால் அது மிகையாகாது. அத்தனை கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. நாடெங்கும் இருந்து நிதி வந்து குவிந்தது. காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளர்கள், அன்னா ஹசாரேவைப் பற்றியும், அவர்கள் குழுவினரைப் பற்றியும் அவதூறு பேசினாலும், பிரதமர் அவர்கள் போராட்டத்தை மதிக்கிறேன் என்றே பேசினார்.
ஆனால் கூடங்குளம் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். போராட்டம் தொடங்கிய நாள் முதல் அவதூறுதான். கிறித்துவர்கள் நடத்தும் போராட்டம் என்றார்கள். வெளிநாட்டுச் சதி என்றார்கள். உதயக்குமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்றார்கள். உதயக்குமார் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருக்கிறார் என்றார்கள். நாராயணசாமி மத்திய அரசு விசாரணை நடத்துகிறது என்றார். பல கோடி வாங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றார். உதயக்குமார் பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் வாயை மூடிக்கொண்டார். இது வரை ஆதாரங்களை தெரிவிக்கவில்லை. உச்சகட்ட அயோக்கியத்தனமாக, பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா மற்றும் ஸ்கான்டிநேவிய நாடுகளில் இருந்து கூடங்குளம் போராட்டத்துக்கு பணம் வருகிறது என்றார். மன்மோகன் சிங்குக்கு உதயக்குமார் அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை.
நேற்று வரை அமெரிக்காவின் அடிமையாக, வல்லாதிக்க திமிர் பிடித்த ஜார்ஜ் புஷ்ஷின் அடிமையாக இருந்த இதே மன்மோகன்சிங் அமெரிக்காவிலிருந்து பணம் வருகிறது என்றார்.
ஊடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்…. குறிப்பாக தினமலர். உதயக்குமார் மற்றும் போராட்டம் நடத்தும் முன்னணித் தோழர்களின் தொலைபேசி எண்ணை முதல் பக்கத்தில் போட்டு அவர்களை மிரட்டியது. உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு, திருட்டுத்தனமாக உணவு உண்கிறார்கள் என்று எழுதினார்கள். இப்படி ஒரு பொய்யை முதல் பக்கத்தில் வெளியிடும் அளவுக்கு தினமலர் தரம் தாழ்ந்து போனது. சன் டிவி, தன் பங்குக்கு உதயக்குமாருக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு இருக்கிறது என்றது.
மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கம்யூனிச இயக்கங்கள், கூடங்குளம் மக்களுக்கு அறிவுரை கூறின. அணு உலையை ஏற்றுக் கொள்ளுமாறு இலவச ஆலோசனைகளை வழங்கின.
இத்தனை எதிர்ப்புக்களையும் தாண்டி, இந்தப் போராட்டம் இந்தக் கட்டத்துக்கு வந்திருப்பது ஒரு மிகப்பெரிய வெற்றி என்றே சவுக்கு கருதுகிறது.
போராட்டம் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்ட நிலையில் ஒரு விதமான சுய மறுப்பில் இருக்கிறார்கள் என்று தோழர் கானகன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைகளின் போது, நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்களைப் பார்த்து, கேட்கும் சில தர்மசங்கடமான கேள்விகள் ஒரு வித மகிழ்ச்சியை கொடுக்கும். அந்தக் கேள்விகளை பத்திரிக்கைகளில் செய்தியாக்கி, அது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துமாறு செய்வது வழக்கம். திமுக அரசின் அரசு வழக்கறிஞராக இருந்த ராஜா கலிபுல்லா, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை பத்திரிக்கைகளில் பேட்டி கொடுக்க வேண்டாம் அறிவுறுத்துமாறு நீதிபதிகளிடம் பல முறை, கேட்டிருக்கிறார். ஆனாலும் அந்த விஷயங்களை செய்தியாக்குவது வழக்கம்.
இது போல அரசு வழக்கறிஞரிடம் கேள்வி கேட்கும் இந்த நீதிபதிகள், எதுவும் செய்ய மாட்டார்கள்…. நியாயம் வழங்க மாட்டார்கள் இந்த வழக்கை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்வார்கள், அல்லது தள்ளுபடி செய்வார்கள் என்பது தெரியாதா ? 2008ம் ஆண்டு முதல் எத்தனை வழக்குகள் ஒன்றும் இல்லாமல் போயிருக்கின்றன தெரியுமா ? ஆனால், நீதிமன்றத்தில் வாதங்களின் போது நடக்கும் சிறு சம்பவங்களை செய்தியாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதில் ஒரு சிறு இன்பம் ஏற்படத்தான் செய்கிறது. இறுதியாக வெற்றி பெறப்போவது அரசுகளே என்பது நன்றாகத் தெரிந்தும் அந்த சிறு இன்பங்கள், தொடர்ந்து வேலை பார்ப்பதற்கான ஊக்கத்தை கொடுக்கின்றன. இது ஒரு வகையான சுய மறுப்பு என்பது நன்கு தெரிந்தும், இந்த ஊக்கம் இல்லாவிட்டால், தொடர்ந்து வழக்கு போடுவதற்கு அயற்சி ஏற்படும் என்பதை உணர்ந்தே இந்த சுயமறுப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டியதாக உள்ளது.
அந்த வகையில் கூடங்குளம் போராட்டத்தை ரத்தக் களறி இல்லாமல் ஒரு முடிவுக்கு கொண்டுவந்ததை வெற்றியாகக் கொண்டாடாவிட்டால் சோர்ந்து போக மாட்டோமா ?
அடுத்ததாக, கூடங்குளம் போராட்டம் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், போராட்டம் முழுமையாக நின்று போகவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ? நீதிமன்றத்தில் அணு உலைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யக் கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் அணு உலையை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன, அதனால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அணு சக்தி அமைவிடம் (IAEA) மனு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அந்த தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அரசாங்கத்துக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பதில் உண்மை உள்ளது. அதே நேரத்தில், அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக சாமான்ய மக்களை, இந்த காட்டுமிராண்டிப் போலீசிடம் அடிவாங்க வைக்க முடியுமா ? உயிர்களை பலி கொடுக்க வைக்க முடியுமா ? பரமக்குடியில் நடைபெற்றது போல, கவலையே படாமல் மக்களை குருவிகளைப் போல சுட்டிருப்பார்கள். அதனால், இது நாடு தழுவிய அளவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்தான். அதற்காக உழைப்பாளி மக்களை, பெண்களை, குழந்தைகளை பலியாக்க முடியுமா ?
உண்ணாவிரதம் இருப்பவர்களை தேசத்திற்கு எதிராக போர் தொடுக்கிறார்கள் என்று வழக்கு தொடுக்கும் ஒரு காட்டுமிராண்டி அரசாங்கத்திடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு பின்வாங்குவதைத் தவிர வேறு என்ன வழி ?
ஈழத்தில் தந்தை செல்வாவின் அமைதிப் போராட்டத்தை அங்கீகரிக்காத சிங்கள அரசின் போக்குதானே ஆயுதப்போராட்டத்துக்கு வழி வகுத்தது ? இந்தியாவின் வனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடுவதை அமைதியாக எதிர்த்த பழங்குடியின மக்களை போலீசைக் கொண்டு ஒடுக்குவதால்தானே அவர்கள் நக்சலைட்டுகள் பக்கம் சாய்கிறார்கள் ? எழுத்தாளர் அருந்ததி ராய் சொல்வது போல, உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று பார்வையாளர்கள் இல்லாத போது, உண்ணாவிரதம் எப்படி சரியான போராட்ட வழிமுறையாக இருக்க முடியும் ?
ஜெயலலிதாவை நம்பி போராட்டம் மோசம் போனது என்ற குற்றச்சாட்டு தவறு. தோழர் கானகனே கூறியது போல, அது ஒரு போர்த்தந்திரமே. ஜெயலலிதா மக்களை நேசிக்கும் அரசியல்வாதி என்று யாருமே நம்பவில்லை. உள்ளாட்சித் தேர்தல்களுக்காகவும், சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்காகவும், மத்திய அரசை மிரட்டுவதற்காகவுமே கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பது போல நடித்தார் என்பதை இடிந்தகரையில் உள்ள அனைவருக்கும் தெரியும். உதயக்குமாருக்கும் தெரியும். போராட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா முனையும் போது, அந்த முடிவை போராட்டத்துக்கு சாதகமாக பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் ? ஜெயலலிதா எப்படி நடித்தாரோ, அதே போல போராட்டக் குழுவினரும் நடித்தார்கள் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது ?
அப்துல் கலாமையெல்லாம் ஒரு ஆள் என்று பேசுவதே தவறு. அப்துல் கலாமை ஒரு கடவுள் போல, அவர் கூடங்குளம் போனால் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து அவரை அனுப்பிய மத்திய அரசாங்கத்துக்கு கூடங்குளம் மக்கள் சரியான பதிலடி கொடுத்தார்கள். அவர் கொடுத்த 200 கோடி ரூபாய் லாபம் என்று நினைத்தால், தற்போது ஜெயலலிதா கொடுத்துள்ள 500 கோடி அதை விட லாபம் என்றல்லவா பார்க்க வேண்டும் ?
இத்தனை நாட்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் ஓரளவுக்கு, தற்காலிகமாகவாவது கூடங்குளம் அணு உலைப் பணிகளை நிறுத்தி வைத்ததோடு அல்லாமல், அணு உலைகளின் ஆபத்துக்களை விவாதப் பொருளாக்கியிருப்பது முதல் சாதனை. கல்பாக்கம் மக்களைப் போன்றவர்கள் நாங்கள் அல்ல. வரக்கூடிய ஆபத்தினை முன்னதாகவே எதிர்க்கிறோம் என்று முன்னெச்சரிக்கையாக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து, இறுமாப்பான அரசாங்கங்களை இறங்கி வந்து பேச வைத்தது இரண்டாவது சாதனை.இத்தனை ஊடக எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டு, பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து, மக்களின் உறுதியை குலைக்க மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் இணைந்து எடுத்த அத்தனை முயற்சிகளையும் சமாளித்து, ரத்தக்களறி இல்லாமல், இந்த அளவுக்கு இந்தப் போராட்டத்தை இன்னமும் உயிரோட்டத்தோடு வைத்திருப்பது மூன்றாவது சாதனை. கூடங்குளம் மக்களைப் பார்த்து, அணு உலை அமையவிருக்கும் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பது நான்காவது சாதனை. அணு உலை போன்ற நாசகார விவகாரங்களை மக்களிடத்தில் திணிப்பதில், காங்கிரஸ், பாஜக மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டுகளும் மக்கள் விரோதிகளே என்று அம்பலப்படுத்தியது ஐந்தாவது சாதனை.
பாதி நிறைந்த குடுவையை, பாதி காலியாக இருக்கிறது என்று பார்க்காமல், பாதி நிறைந்திருக்கிறது என்று பார்க்கும் அணுகுமுறையே பொதுவாழ்வில் இருப்பவர்களை, சோர்வடையாமல், மென்மேலும் உந்துதலோடு பணியாற்ற உதவும். தோற்று விட்டோம் என்று, தோல்வியிலேயே உழல்வோமானால், விரக்தியும், வேதனையும் மட்டுமே மிஞ்சும்.
|
Comments
what the agitation achieved?apart from getting media coverage nothing was achieved.this type of betrayal is not new.instead of demanding and getting free power,infrastru cture facilities,free education medical treatment to those villages which will be affected,the movement surrenders all the genuine demands it is the people living in the nearby areas will be affected . i pity on them.
மத்திய மாநில அரசுகள் அறிவிக்கமுற்பட் டபோது அப்பொழுது எந்தமாதிரி ஒரு கருத்துகளை முன் வைக்கவில்லை,பல கோடிகள் செலவழித்து ஆரம்பித்து பின் இத்த கேள்விகள்?
Savukku, you have to remember that these are the same people who are now engaging in a plea bargain with the Government for their release/bail in exchange of giving up the agitation (don’t say its not so). Do you really think that these people are capable of leading an agitation of this scale? Definitely not? They give up so easily, Chickened out just after an arrest, just when the Chief Minister (part of establishment, against whom they are said to be fighting) backed out, just at the sight of defeat.
Also, this very same guys have done very little to establish and convince the wider public that they are into a good cause. What will the public think about the intentions of the agitators, if the leader of the agitation Mr. Udaya Kumar asks for the “plans on weapons programme in Koodankulam and debt analysis with Russia”, which are irrelevant in the Safety angle They had given easy fodder to the state to discredit the Movement.
I’m supporter of nuclear energy, but I too wanted it to be ensured that the plant should be 100% safe and I support if somebody comes to the street forcing the state to ensure that. At the same time, I’m appalled by the attitude of the agitators and have some genuine doubts about the intentions of the agitators.
[ஃஉஒடெ நமெ="ஸ்ற்க்"]ஹி ஸவுக்கு, நெ அரெ ஹவிங் முச் மொரெ இன்டெரெச்டிங் & உனெ௯பெச்டெட் நெந்ச் ஒன் ஒஉர் சுர்ரென்ட் ட்ண் பொலிடிச்ச். ந்ஹ்ய் ர் உ சொன்டினுஒஉச்ல்ய ் ஹஙிங் ஒன் தெசெ ணொந்சென்செ கோடஙுலம் சுப்பொர்ட் அர்டிச்லெச்? ஈ அன்ட் ம்ய் ஃப்ரிஎன்ட்ச் ஃப்ரெஃஉஎன்ட்ல்ய ் உசெ டொ விசிட் உர் நெப்சிடெ ஃபொர் வெர்ய் இன்டெரெச்டிங் & முச் உசெஃபுல் அர்டிச்லெச் ஒன்செ உபொன் அ டிமெ. புட், நொந்-அ-டய்ச், ஸவுக்கு.னெட் இச் டொடல்ல்ய் லொசிங் இட்ச் பொபுலரிட்ய் ப்ய் ந்ரிடிங் சுச் இடிஒபதிச் அர்டிச்லெச். ணுச்லெஅர் பொநெர் ப்லன்ட் இச் ஹிக்ஹ்ல்ய் மன்டடொர்ய் ஃபொர் ஒஉர் பொநெர் நேட்ச். ஊன்டெர்ச்டன்ட். ஸவுக்கிஉ, இஃப் உ ர் டரெஃபுல் ரெப்ல்ய் டொ ம்ய் சொம்மென்ட் ப்ய் புப்லிஷிங். ஊ நெவெர் ந்ரொடெ அர்டிச்லெ ஒன் முல்லைபெரியர் இச்சுஎ. ணொந், ஸ்ரிலன்கன்ச் & கெரல பெஒப்லெ ர் ஒப்பொசிங் கோடஙுலம் ப்ரொஜெச்ட் இன் அ நொந்சென்செ மன்னெர். ஸொ, சவுக்கு உ டொன்'ட் நன்ட் ஒஉட் ச்டடெ/சொஉன்ட்ர்ய் டொ டெவெலொப் ஃபுர்தெர்? ப்ல்ச் டொன்'ட் நச்டெ யொஉர் டிமெ ப்ய் ச்பென்டிங் உர் ப்ரெசிஒஉச் டிமெ இன் திச் டொபிச் ஃபுர்தெர். ந்ரிடெ ஃபெந் வெர்ய் உசெஃபுல் அர்டிச்லெச் ஃபொர் எ௯: அபொஉட் ஸசி-ஜய மேடிங் ந்ஹொ ஃபோலெட் தெ ந்ஹொலெ ட்ண் பெஒப்லெ. ஓக்?[/ஃஉஒடெ]
துரதிர்ஷ்டவசமாக திரும்பவும் அப்படி ஒருநிலை ஏற்படுமானால் கடற்கரைகளில் அமைக்கப்பட்ட அணு உலைகள் தகர்ந்துபோவதற்க ான வாய்ப்பும் அதிகம் உண்டு. ஆழிப்பேரலையின் அழிவு ஒருபக்கமும் அணுவின் தாக்கமும் மக்களுக்கும் இயற்கை வளத்திற்கும் பெரும் பிரளயத்தை உண்டாக்கலாம்.
இயற்கைச் சீற்றத்தின் அனுமானத்தை உணர்ந்து, கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்க ளின் கோரிக்கைகளை மறு பரிசீலனை செய்யும் காலத்தை இயறகை ஆட்சியாளர்களுக் கு உணர்த்தியிருக்க ிறது. அரசும் விஞ்ஞானிகளும் என்ன சொல்லப்போகின்றன ர்?!
Second thing he sees a continuity from this issue & can demand and argue for Mullai Periyar safety on the same line.
Hence in my point of view it is a typical malayalathan mind move. Now here, would ask me to believe Udayakumar does not know the background why Achudanandan is offering support. By that way it implies that despite TN farmers facing trouble/problems with Mullaiperiyar issue he(UK) wants supports for his protests. Which I see a selfishness.. Then why to simply boil our bloods while everybodies protest has some selfishness??
கூடங்குளம் - விகடனின் ஆதரவு, எதிர்ப்பு கோ(வே)ஷம்.
http://oosssai.blogspot.com/2012/03/blog-post_13.html
HATS OFF TO YOU
Now days whatever you are writing are not your own words. Even the abstract of your articles are not reflecting your mind. You are very much confused.
Any way it is a good time pass.
தமிழர்கள் சிந்தனை நீர்த்துப் போய்விட்டது. நெஞ்சில் உரமில்லை. மக்களை அரவணைத்துச் செல்லும் தலவர்களும் இங்கு இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என திசைமாறி சென்றுவிட்டோம்.
இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்த ை புரிந்துகொள்ளும ் அளவிற்கு மக்களுக்கு நேரமில்லை. விழிபிதுங்க வைக்கும் விலைவாசியால் நாள் முழுவதும் பொருள் தேடி அலைச்சல். வீடுவந்து சேர்ந்தால் தொலைகாட்சி தொடர், சூரியாவோடு ஒரு கோடி நிகழ்ச்சி... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...என்னத்த நினைக்க மக்களுக்கு நேரமிருக்கு?
எத்தனை குடும்பத்தில் பள்ளியிலிருந்து வரும் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுகிறார்கள ் பெற்றோர்கள்? பெற்ற பிள்ளைகளோடு நேரம் செலவிடவே போதவில்லை... இதிலெப்படி கூடங்குளத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது?
பொருளாதர தாராளமயத்தால் வந்த வினைதான் இது. நகர மக்கள் எல்லோர்க்கும் வேலையிருக்கு. வேலையை விட்டுட்டு இதுபோல போராட்டம் அது இதுன்னு திரிய முடியாது.
கிராமங்களிலும் நூறு நாட்களுக்கு வேலையே செய்யாமல் மரத்தடியில் படுத்திருந்தாலே கூலி.
இதுபோல் எல்லாரும் பிஸியோ பிஸி!!!
அப்துல் கலாம் மத்திய அரசின் ஏஜண்ட் என்பதை மக்களுக்கு உணரவைத்ததும் போராட்டக்காரர்க ளுக்கு கிடைத்த ஒரு வெற்றிதான்.
RSS feed for comments to this post