முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மகிழ்ச்சி மகிழ்ச்சி.... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 11
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012 23:14

திடீரென்று இப்படி மகிழக் காரணம் என்ன ?   இன்று சென்னை உயர்நிதிமனறத்தில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பே அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

vta

கடந்த டிசம்பர் 2011ல் சவுக்கு வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அந்தக் கட்டுரையில், கல்வித் தந்தை (?????) ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி எப்படி மோசடியாக அனுமதி பெற்றது என்பதையும், அந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மீது சிபிஐ வழக்கு தொடுத்து, அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகியதும், அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்கு அதை விசாரித்த நீதியரசர் ஆறுமுகசாமி முனைந்ததையும் பார்த்தோம். அன்று விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

விசாரணை முடிவடைந்த நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஆறுமுகசாமிதான் வழங்கியிருக்க வேண்டும்.   ஆனால், ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும் அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவேயில்லை. நீதிமன்ற வட்டாரங்களில் விசாரித்ததில், அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதியரசர் ஆறுமுகசாமி விலகிக் கொண்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.   லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியின் சார்பில் ஆஜரான அதே யு.யு.லலித் இன்றும் ஆஜரானார்.

வழக்கு விசாரணை தொடங்கியதும், லலித் எழுந்து நான் இந்த வழக்கில் ஏற்கனவே விரிவாக வாதத்தை எடுத்து வைத்துள்ளேன்.   இப்போதும் விரிவான வாதத்தை எடுத்து வைக்கிறேன் என்றார். உடனே நீதிபதி, சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரனைப் பார்த்து, வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று கேட்டார். சந்திரசேகரன், இது மிகப்பெரிய ஊழல் வழக்கு. இதில் முக்கிய நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றார்.   நீதிபதி, எல்லா ஊழல் வழக்குகளிலும் முக்கிய நபர்கள் சம்பந்தப்படத்தான் செய்வார்கள். விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்று கூறுங்கள் என்று கூறினார்.

இது வரை 125 சாட்சிகளை விசாரித்துள்ளது சிபிஐ. 750 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றார். குற்றப்பத்திரிக்கை எப்போது தாக்கல் செய்வீர்கள் என்று கேட்டதற்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது, விரைவில் தாக்கல் செய்து விடுவோம் என்றார்.   எவ்வளவு விரைவாக தாக்கல் செய்வீர்கள் என்றதற்கு 2 மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம் என்றார்.

உடனே நீதிபதி, லலித்தைப் பார்த்து, விசாரணை முடியப்போகிறது.   இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய இயலாது, ஆகையால், நீங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து முடிந்ததும் அதை ரத்து செய்ய மனுத் தாக்கல் செய்யுங்கள் என்றார்.

galilawyers04

உடனே, லலித், மை லார்ட், எப்ஐஆரை ஒரே ஒரு முறை பாருங்கள். விசாரணை நடத்துவதற்கு இந்த வழக்கில் அவசியமே இல்லை.   இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் கொடுத்தும் சிபிஐ விசாரணையை முடிக்கவில்லை என்றார். அதற்கு நீதிபதி, விசாரணைக்கு ஆறு மாதம் தடை இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள் என்று சுட்டிக் காட்டினார்.

லலித் "அதற்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவில்லை" என்றார்.

நீதிபதி இது குறித்து சிபிஐ வழக்கறிஞரிடம் கேட்டதற்கு, தற்போது இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுத்தால் அனைத்தும் முடிந்து விடும். சிபிஐ வேலை செய்யும் முறையில் இருக்கும் நடைமுறை சிக்கல்களால் தாமதமாகிறது என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, என்ன சொல்கிறீர்கள் என்று லலித்திடம் வினவினார்.

லலித் "ஒரே ஒரு முறை எப்ஐஆரை பாருங்கள்" என்றார்.

நீதிபதி "இந்த வழக்கில் மார்ச் 2011ல் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவில், சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது.   சிபிஐ புலன் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம்.   விரைவாக குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்றார்.

லலித் "அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியைப் பாருங்கள். ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது.   இதிலிருந்தே வழக்கை இழுத்தடிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது" என்றார்

நீதிபதி "அந்த ஆணையில் சிபிஐ விசாரணையை நடத்தலாம் என்று உள்ளது.   அப்படி ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தபின், எப்ஐஆரை எப்படி ரத்து செய்ய முடியும் என்று சொல்லுங்கள்" என்றார்.

லலித் "நீதிமன்றம் அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்து விட்டதாலேயே, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் எனது உரிமை பறிக்கப்பட்டதாக ஆகாது" என்றார்.

நீதிபதி "சரி அப்படியே வைத்துக் கொள்ளலாம்.   தற்போது புலன் விசாரணை முடியும் தருவாயை எட்டியுள்ளது.   இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியும் என்று சிபிஐ தெரிவிக்கிறது. மேலும் தாமதமானாலும் அவர்கள் கால நீட்டிப்புப் பெற முடியும்.   இப்போது எப்ஐஆரை ரத்து செய்யலாமா என்ற கேள்வியே எழவில்லை. மேலும் சிபிஐ விசாரணையை தொடரலாம் என்ற இடைக்கால உத்தரவு வேறு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் எப்படி எப்ஐஆரை ரத்து செய்ய முடியும்" என்று கேட்டார்.  

லலித் "அந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இந்த மனுவை தள்ளுபடி செய்யாமல் இருப்பதே, எப்ஐஆரை ரத்து செய்யக் கோரும் மனுதாரரது உரிமை பறிக்கப்படவில்லை என்ப நிரூபிக்கிறது. இதற்காகத்தான் சொல்கிறேன்...   தயவு செய்து எப்ஐஆரை ஒரு முறை பாருங்கள்" (எத்தனை வாட்டியா சொல்லுவ...........) என்றார்.

இதையடுத்து நீதிபதி சுருக்கெழுத்தரை அழைத்து தீர்ப்பை படிக்கத் தொடங்கினார்.  

சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரன் மற்றும் மருத்துவக் கல்லூரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு.லலித் ஆகிய இருவரது வாதமும் கேட்கப்பட்டது. புலன் விசாரணை முழுமையடைந்து வழக்கு குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யும் நிலையை எட்டி விட்டது. சிபிஐ வழக்கறிஞர் வழக்கு தொடர்வதற்கான அனுமதி கேட்கும் நிலையை (Sanction for prosecution) எட்டி விட்டது என்று தெரிவிக்கிறார். இந்த இடத்தில் சிபிஐ வழக்கறிஞர் எழுந்து ஒரு திருத்தம் சொன்னார்.... உடனே நீதிபதி, "நீங்கள் சொன்னதைத்தான் பதிவு செய்திருக்கிறேன்... புதிதாக ஒன்றும் எழுதவில்லை" என்றார்.

தொடர்ந்து நீதிபதி "வழக்கு இப்படி ஒரு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை.   ஆகையால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்" என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு முடிந்ததும் யு.யு.லலித் எழுந்து, "நான் சொன்ன வாதங்கள் எதையுமே தீர்ப்பில் பதிவு செய்யவில்லை" என்றார்

நீதிபதி "முக்கியமான வாதங்களை பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் என்ன சொல்ல முயன்றீர்களோ, அது பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

லலித் "இதற்கு முன் இவ்வழக்கை விசாரித்த நீதிபதியிடம், அனைத்து விபரங்களையும் விரிவாக எடுத்துரைத்தேன்.   அது எதுவுமே இதில் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.

நீதிபதி "ஒரு வழக்கின் தீர்ப்பில், எந்தப் பகுதியை பதிவு செய்ய வேண்டும், எந்தப் பகுதியை பதிவு செய்ய வேண்டாம் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது" என்றார்.

லலித் "முக்கியமான வாதங்களை ஏற்கனவே எடுத்துரைத்துள்ளேன். அவை தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை" என்றார்.

நீதிபதி "நீங்கள் எடுத்துரைத்த வாதங்கள் அனைத்தும் ஏற்னவே பதிவு செய்யப்பட்டுள்ளன.   ஆகவே இன்று நீங்கள் சொல்லியவற்றை பதிவு செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறேன். ஏற்கனவே நீங்கள் எடுத்துரைத்த வாதங்கள் அனைத்தையும் இந்தத் தீர்ப்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தீர்ப்புக்கு தேவையான வாதங்களை மட்டும் தீர்ப்பில் குறிப்பிட்டால் போதும்" என்றார்.

லலித் மீண்டும் ஏதோ சொல்ல முயன்ற போது, அடுத்த வழக்கை அழையுங்கள் என்று நீதிமன்ற ஊழியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு சில வினாடிகள் நீதிபதியை விரக்தியோடு பார்த்து விட்டு, யு.யு.லலித், ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு கிளம்பினார்.   புது தில்லியின் பிரபலமான வழக்கறிஞர். உச்ச நீதிமன்றத்தில் பேர் சொன்னால் தெரியும் வழக்கறிஞர். 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜராக உச்ச நீதிமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நம்மைப் போய் இப்படிப் பேச விடாமல் செய்து விட்டார்களே............. நாம் ஆஜராகியும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதே என்ற "வேகாத பருப்பின் வேதனை" லலித் முகத்தில் தெரிந்தது.   வேதனையோடு வெளியேறினார்

கடந்த முறையைப் போல  இந்த முறை யு.யு.லலித்துக்கு சிகப்பு விளக்கு பொருத்தி காரோ, அரசு பாதுகாப்பு அதிகாரியோ வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  .

22ADVOCATE1_jpg_crop_display

இப்படிப்பட்ட ஒரு மூத்த வழக்கறிஞருக்கு எதிராக இந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறோமே என்ற மகிழ்ச்சி சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரனிடம் துளியும் காணப்படவில்லை.   லலித்துக்கு மேல் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சந்திரசேகரனும் வெளியேறினார்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தோழர்களே....   மருத்துவக் கல்லூரி அனுமதி பெறுவதற்காக, மருத்துவக் கவுன்சில் ஆய்வுக் குழு வருகை தரும் அன்று மட்டும் பக்கத்து கிராமங்களில் இருந்து பொதுமக்களை வரவழைத்து, ஒரு நாள் மட்டும் நோயாளியாக நடிக்கச் சொல்லி அவர்களுக்கு தலா 100 ரூபாய் கொடுத்து, சென்னையில் உள்ள பிரபல மருத்துவர்களை வரச் சொல்லி, ஒரு நாள் மருத்துவப் பேராசிரியராக நடிப்பதற்கு அவர்களுக்கு தலா 20 ஆயிரம் கொடுத்து, எவ்வித உட்கட்டமைப்பு வசதியும் இல்லாத ஒரு மருத்துவக் கல்லூரியில் படித்து வெளிவரும் மருத்துவர்களிடம் நமது தாயாரையோ, தந்தையையோ, நமது பிள்ளைகளையோ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் நமது கதி என்ன ஆவது என்பதை மட்டும் சிந்தியுங்கள்.

ஜெகதரட்சகன் போன்ற பிரபலமான, பலம் பொருந்திய முதலைகள் ஊழல் வழக்கில் சிக்குவதே அரிதிலும் அரிது.   அந்த முதலையையும் காப்பாற்ற நீதிமன்றங்கள் முனைந்தால் இதை விட வேதனையான விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா தோழர்களே....  

 l2012021839356

ஜெகதரட்சகனிடம் புழங்கும் பணத்துக்கு ஒரு உதாரணம். ஒரு பிரபலமான தொலைக்காட்சியின் ஒரு ஆண்டு நிறைவின் போது, இந்தத் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள். அது சிறப்பாக பணியாற்றுகிறது என்று பிரபலங்களிடம் ஒரு நிமிடத்திற்கு பேட்டி எடுக்க ஒரு தொலைக்காட்சியின் குழு ஜெகதரட்சகனைப் பார்க்கச் சென்றிருக்கிறது.   இவர்கள் அந்தச் செய்தியை எடுப்பது, அந்தத் தொலைக்காட்சிக்குத்தான் பெருமை மற்றும் தேவை.   ஆனால் பேட்டியளித்து விட்டு, ஜெகதரட்சகன் அந்த நிருபருக்கு 5 ஆயிரம், கேமராமேனுக்கு 3 ஆயிரம், உதவியாளர்கள் மூவருக்கு தலா 2 ஆயிரம் கொடுத்துள்ளாராம்.  

உழைத்துச் சம்பாதித்த எவனாவது இப்படிப் பணத்தை வாரியிறைப்பானா ? இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்குத்தான் நீதிமன்றம் காவலாக இருக்கிறது. என்ன செய்வது ?

இவ்வளவு முயற்சி செய்தும் இந்த வழக்கில் ஜெகதரட்சகன் நினைத்தது வெற்றி பெறவில்லை.   அவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவார். அல்லது, இந்த வழக்கில் சாட்சி சொல்லியவர்களுக்கு லஞ்சம் கொடுப்பார். புலனாய்வு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பார்.   ஆனாலும், டிசம்பர் மாதத்திலேயே ஆழமாக குழி தோண்டிப் புதைக்கப்பட இருந்த ஒரு வழக்கை இன்று வரை உயிரோடு வைத்திருக்க நாமும் ஒரு சிறு கருவியாய் இருந்திருக்கிறோம்.

இதுதான் இன்றைய மகிழ்ச்சிக்குக் காரணம்.   மகிழ்ச்சி அடைய நமக்கு உரிமை உள்ளதுதானே தோழர்களே... ?

 

Comments  

 
0 #18 T S Lakshminarayanan 2012-04-24 06:20
Dear Savukku
My hearty congrats to you for bringing the real facts day 2 day happenings in TN. No doubt that Mr M Karnanidhi is a senior most politician in TN and only because of his deep interest in his family people he has seen the fall of DMK and rift between two sons has further complicated the entire issue. In future there wont be any alternative force to AIADMK. Congress has more leaders than cadres in TN. BJP cannot keep its foot in TN as people are
totally confused by these two dravidian parties. PMK is meant for dreaming.After
M Karnianidhi there are every chances that DMK will face severe problem to retain its position in TN. What we need is a politician who cares for people in TN. To this question no answer will be found by any one. IF any one find answer
they will be rewarded.
Quote
 
 
0 #17 Rangaraj Rajendran 2012-04-14 11:32
Dear Savukku,Sorry your role has not been mentioned.Please explain.Thank you
Quote
 
 
+5 #16 கோவை மக்கள் 2012-04-14 06:42
கோவை இருகூர் பவர்ஸ்டேஷனில் நடக்கும் அக்கிரமம்

கோவை ஒண்டிப்புதூர் மக்களின் சார்பாக அரசிடம் வைக்கும் கோரிக்கை. கோவை கள்ளிமடை பவர் ஸ்டேஷனில் இருந்து அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் ஒண்டிப்புதூர் ஏரியாவிற்கு கரண்ட் வந்த போது இரவு நேரத்தில் பனிரெண்டு மணிக்கு மேல் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. ஆனால் இருகூர் பவர் ஸ்டேஷனுக்கு திருப்பி விடப்பட்ட பிறகு, 7௮, 10௧1, 1௨, 4௫ என்று இரவுகளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை மின்வெட்டு செய்கிறார்கள்.
இருகூர் பவர் ஸ்டேஷனில் போன் (0422 2632294) செய்து விசாரித்தால் மேலிடத்து உத்தரவு, கரண்ட் இருக்கு, ஆனால் கட் செய்யச் சொல்கிறார்கள் எங்களால் எதுவும் செய்யமுடியாது என்கிறார்கள். அதாவது இருகூர் பவர் ஸ்டேஷன் பணம் பெற்றுக் கொண்டு அடித்தட்டு மக்கள் வாழும் ஒண்டிப்புதூர் பகுதிக்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை ஏதோ ஒரு பகுதிக்கு மாற்றி விடுகின்றார்கள் . தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இரவுகளில் மின்வெட்டு அதிகமில்லை. ஆனால் கோவை ஒண்டிப்புதூர் அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிக்கு மட்டும் இரவில் தொடர் மின்வெட்டினை இருகூர் பவர் ஸ்டேஷனில் செய்கிறார்கள். வேலைக்குச் சென்று பசிக்கு சம்பாதிக்க முயலுபவர்களுக்க ு, தற்போது தூக்கமும் இல்லாமல் போகின்றது. இப்படியான சூழ் நிலையில் வாழ்வது எப்படி? இருகூர் பவர் ஸ்டேஷனில் நடக்கும் அக்கிரமத்தைப் பார்த்தீர்களா? யாராவது கோவை இருகூர் பவர் ஸ்டேஷனில் நடக்கும் ஊழலை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, வாழவே முடியாமல் சாவோடு போராடிக் கொண்டிருக்கும் கோவை ஒண்டிப்புதூர் அடித்தட்டு மக்களாகிய எங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
Quote
 
 
+6 #15 anniyan 2012-04-13 23:18
அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்குத ் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சவுக்கு அவர்களின் சேவை மேலும் உயர ஒற்றுமையாய் செயல்படுவோம்.

சங்கர் facebook ஆரம்பியுங்களேன் . நண்பர்கள் சேரட்டும்.
Quote
 
 
+1 #14 Metti 2012-04-13 21:24
சவுக்கு.......
...........அ.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
Quote
 
 
+5 #13 ஊர்க்குருவி. 2012-04-13 19:12
டீக்கடை ரட்சகனுக்கு இது தற்காலிக பின்னடைவாக இருக்கும் என்றுதான் கருத இடமிருக்கிறது. ஏனென்றால் சட்டத்தில் இருக்கும் கடுமைகளை விடவும், சட்டத்திலிருக்க ும் ஓட்டைகளைத்தானே அரசியல் வியாதிகள் தேடிப்பிடித்து தப்பித்துக்கொண் டிருக்கின்றனர். ஆனாலும் வல்லவனுக்கும் புல் தடுக்கி சாவு வருவதுமுண்டு!
Quote
 
 
+4 #12 dimond 2012-04-13 16:24
சார் சார் ஜெகத் இரட்சகனின் உதவியாளர் போல் செயல்படுபவர் துக்ளக் ரமேஷ் .இவரின் அடுத்த அமைச்சர் செங்கோட்டையன் .அவரது காரிலேயே தலைமை செயலகத்துக்கு வருமளவுக்கு எடுபிடி வேலை செய்வதில் கெட்டிக்காரர்.திமுக அதிமுக அமைச்சர்கள் இடையே புரோக்கராக செயல்படுவதில் கெட்டிகாரர்.இதற்க்கு சோவின் ஆசிர்வாதமும் இருப்பதாக சொல்லப்படுகிறது கைது செய்யப்பட்ட திமுக நபரை விடுதலை செய்யும் அளவுக்கு செல்வாக்கு .சசிகலா குடும்பத்தவரை எழுதும் நீங்கள் ஏன் ரமேஷ்சை பற்றி எழுதவில்லை
Quote
 
 
+1 #11 mahesh_new 2012-04-13 14:31
Dear Savukku,
After a long time your posting an article for which this site stands for and why we read you. As always our support is there for bringing limelight for such underpolitical and power misusing lobbies. Just like tax-paying it is a duty of citizen to be aware of such happenings. Even if can't fight it, we still be aware and knock the bad elements at right time.
Quote
 
 
+21 #10 Arun1 2012-04-13 10:09
சவுக்கு சும்மா சொல்ல கூடாது சூப்பர்.. அசதீடீங்க போங்க.. ஏன் இதுமாதிரியான செய்திகள் மற்ற பத்திரிகைகளில் வருவதில்லை? இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் நடக்கும்கிறது எனக்கு இப்பதான் தெரியுது.
லலித் சிபிஐக்காக வாதாடுவது வேடிக்கையிலும் வேடிக்கை.. ஆமா சந்திரசேகர் ஏன் சோகமா போனாரு?
எது எப்படியோ.. உங்களை இன்னும் ரொம்ப நாளுக்கு விட்டு வைக்க மாட்டானுங்கநு மட்டும் நல்லா தெரியுது..
எல்லாருக்கும் வாயுல சனிநா உனக்கு கைல சனி.. உண்மைய அப்படியே எளுதீர்ற.. போறதுக்குள்ள உன்னால என்னென்ன முடியுமோ அத இந்த சமுதாயத்துக்கு கொடுத்துட்டு போயிரு..
Quote
 
 
+15 #9 savukku reader 2012-04-13 09:21
No words to appreciate your fight for justice
Quote
 
 
+22 #8 Raghu 2012-04-13 08:52
சவுக்கு போல தினசரி நாள் இதழ்கள் உண்மையான சம்பவத்தை எடுத்துரைத்தாலே
தவறு செய்பவர்கள் பயப்படுவார்கள். நீதி துறையிலேயே கருப்பு ஆடுகள் இருக்கும் போது
ஊழல் இல்லா தமிழகம் உருவாக்குவது சிரமமே .....
ரகு
Quote
 
 
+19 #7 Padman 2012-04-13 08:25
எல்லா உயர்கல்வி நிறுவனங்களையும் அரசு கையக படுத்த வேண்டும். அரசியலில் கொள்ளையடித்து தொழிற்கல்வியை தொழிலாக நடத்துவது இன்னும் அயோக்கியத்தனம்.

அதைவிட அயோக்கியத்தனம் திமுக ஆட்சியில் மந்திரியா இருந்தவன் எல்லாரும் கல்லூரி நடத்துவது... இதை கூட மன்னிச்சிடலாம்...

ஆனால் அவனுங்க வைத்திருக்கும் வைப்பாட்டி... அதுக்கு பொறந்த நண்டு சிண்டுங்களுக்கெ ல்லாம் கல்லூரி நடத்துவது சகிச்சிக்க முடியல.

இவனுங்க வைச்சிருக்கிறவங ்க வைத்திருக்கிற கல்லூரியில் படிக்கிறது நம்ம மக்கள் தப்பு.

முதல்ல நம்ம மக்கள் திருந்தனும்.
Quote
 
 
+8 #6 Karikalan_cdm 2012-04-13 03:24
Good article. well done.
Quote
 
 
+18 #5 Eleventh Sense 2012-04-13 01:51
அடிச்சி வச்ச காசு இருக்கிற வரைக்கும் ஜெகத்ரட்சகண்கள் ஆட தன செய்வார்கள்.........
அதை நல்ல நீபதிகள் சி பி ஐ உதவியுடன் மீட்டு பரவலாக்குவர்கள் என்று நம்புவோம்......
மகிழ்ச்சி அடைய நமக்கு உரிமை உள்ளது சவுக்கு............
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..........
தொடரட்டும் உங்கள் சவுக்கின் வேகம்..........
மகிழட்டும் நம் நாடு அதன் தாக்கத்தில் .....
Quote
 
 
+8 #4 Shareef 2012-04-13 01:23
weldon savukku
Quote
 
 
+11 #3 kali.krishna 2012-04-13 01:01
நாட்டின் வளத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் ஆட்டைய போட்டவனுகள புடிச்சு தண்டனை வாங்கி கொடுத்து "நியாயத்தை" காப்பாத்த மக்கள் வரிப்பணத்தில சம்பளம் வாங்கிகொண்டு ஒரு கூட்டம் அலையுது. அதே வரிபணத்துல சம்பளம் வாங்கிகொண்டு ஆட்டைய போட்டவனுக காப்பாத்த ஒரு கூட்டம் இருக்கு. இப்படியே போன நாடு எங்கே முன்னேர்வது?

வாய்தா, இழுத்தடிப்பு, ரத்து, இடைகால தடை, இப்படிபட்ட வார்த்தை ஜாலங்களின் பின்னால் ஒளிந்திருக்கின் ற மக்களின் வரிப்பன விரயத்தை யார் தடுப்பது. நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் நீதிபதி முதல் அங்கே சுத்தபடுத்துகிற ஆயா வரைக்கும் சும்மா புண்ணியதுக்கா வேலை பார்கிறாங்க. இப்படிபட்ட விரயங்கள் தான் பால்விலை உயர்வாகவும், பஸ் கட்டான உயர்வாகவும் அடித்தட்டு மக்களின் கழுத்தை புடிக்குது.

இதெல்லாம் "வாய்தா ராணி" என்று பேர் எடுத்த அம்மாவின் ஆட்சியில் மாறும் என்று எதிர்பார்க்க கூடாது. எல்லாருமா சேர்ந்து நாட்டை சுரண்டி தர்மத்தையும் நீதியையும் காப்பதுறாங்க. நல்லா காப்பாத்தட்டும் .
Quote
 
 
+4 #2 Dravidan 2012-04-13 00:37
உள்ளது
Quote
 
 
+12 #1 Raja N 2012-04-12 23:40
You are the man savukku. no words to express my respect for ur you
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 141 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2924
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week25296
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month238115
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12760234