முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
மிகப் பெரிய சமூகவிரோதி யார் – சன் குழுமமே! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012 10:58

நல்லவேளையாக சுனாமிப் பேரழிவிலிருந்து தமிழகம் தப்பிவிட்டது. ஆனால் சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வானுயர்ந்த அலைகள் இந்தோனேசியாவோடு நின்றுபோனது பெரும் ஏமாற்றமாயிருந்திருக்கும். அந்த அளவு களேபரப்படுத்தின் இவ்விரண்டு தொலைக்காட்சிகளும்.

Sun_TV_Network_0

பொதுவாக தமிழர்களை உசுப்பேற்றுவதை ஒரு கடமையாகவே செய்துவரும் ஓர் இணைய தளம் கூட, தொலைக்காட்சி நிறுவனங்கள் அன்றைய செய்திகளை ஒளிபரப்பியது பீதியை உருவாக்கும் வகையில் அமைந்திருந்ததா என ஒரு கருத்துக்கணிப்பே நடத்தியது.

குறிப்பாக கலைஞர் மற்றும் சன் டிவிக்களின் திகில் கவரேஜ் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கே ஒருவித கலவரத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில் கலைஞர் டிவி தொகுப்பாளினி நிருபரிடம் கேட்கிறார்: வாபஸ் பெறப்பட்டது சரி, இருந்தாலும் மக்களின் பீதி அகன்றிருக்குமென்று நினைக்கிறீர்களா? வீடு திரும்பிவிடுவார்களா? சாலையில் போக்குவ்ரத்து இன்னமும் ஸ்தம்பித்துப்போய்தானே இருக்கிறது?

இனி பயமில்லை என்று அவரவர் வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரம் சன் 2004 காட்சிகளை திரும்பத் திரும்பப் போட்டுக்கொண்டிருந்தது.

எச்சரிக்கை தேவைதான். முன்னெச்செரிக்கையும் கூட. ஆனால் பீதியைக்கிளப்புவதால் உளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி சன்னோ கலைஞரோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கான அளவுகோலான டிஆர்பியே, எவ்விதக் காட்சிகள் ஒளிபரப்பாகின்றன என்பதைத் தீர்மானிக்கிறது என்பது உண்மையே.. டிஆர்பி வரிசைப் போட்டியில் எவ்விதத் தாக்கத்தினை ஏற்படுத்துகிறோம் என்ற பிரக்ஞை எத்தொலைக்காட்சிக்கும் இருப்பதாக்வே தெரியவில்லைதான்.

ஸ்டார், ஜீ போன்ற இந்தி சானல்களின் வழிதானே சன்னோ, கலைஞரோ?. ஜெ மட்டும் என்ன வாழ்கிறது? அப்படி இருக்கையில் சன்னை மட்டும் ஒரு கொடிய விரோதியாக நான் ஏன் சித்தரிக்கமுயலவேண்டும்?.

இன்று ஜெ ஆட்சியின் நெருக்கடியில், சன் குழும மற்றும் கலைஞர் குழுமச் சானல்களெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். அவற்றின் செய்திகளுக்கான டி.ஆர்.பி வீழ்ந்திருக்கலாம். ஆனால் அவை தமிழரின் சிந்தனையினை சீரழிக்கும் பணியினை நிறுத்தப்போவதில்லை.

திராவிடப் பாரம்பரியத்தில் வந்த தாங்கள், இன்றும் அறிவாலயத்தில் அலுவலகம் வைத்திருக்கும் நீங்கள், 24 மணி நேர ஒளிபரப்பில் ஐந்து நிமிடங்கள் கூட திராவிடக் கொள்கைகளைப் பரப்பவென ஒதுக்காமலிருப்பது நியாயமா என்று கேட்டபோது,, 90களில், அலட்சியமாக கலாநிதி மாறன் கூறியது: ”திராவிடக் கொள்கைகளைப் பற்றிக் கல்லூரிகளில் பேச அழையுங்கள். இரண்டு மணி நேரம் பேசுவேன். அது வேறு. இது பிசினஸ்…”

குங்குமம் தன் கட்டுப்பாட்டில் இருந்தபோது பெரிசுகளின் தலையீடு அதிகமாக இருந்ததாலேயே தான் அதிகம் எதையும் சாதிக்கமுடியவில்லை என்றும், டிவியைப் பொறுத்தவரை எவ்விதக் குறுக்கீடும் இருக்காது என்ற உறுதியின்பேரிலேயே தான் அதில் இறங்கியதாகவும் கூறினார் அவர், மேலும், அப்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டதால் நிறுவனம் செழிக்கிறதென்றார். அடுத்து அப்பேட்டியில் அவர் கூறியதுதான் உச்சகட்டம்:

”நாங்கள் இப்போது மலையாளத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறோம். உங்களுக்கு அது சரிப்பட்டு வராது, கேரளத்தில் படித்தவர்கள் அதிகம், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளால் ஆடியன்சைக் கட்டிப்போடும் உங்கள் தந்திரம் அவர்களிடம் செல்லாது என்றனர். ஆனால் இப்போது என்னாயிற்று? வென்று விட்டோமே…….இவர்கள் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வார்கள்?”

ஆம், நாம்தான் முகத்தை எங்காவதுவைத்துக்கொள்ளவேண்டும். நமது ரசனையை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்துவிட்டார்கள்.மாறன் சகோதரர்கள்..

திருவாளர் கருணாநிதி ஒன்றும் யோக்கியரல்ல, நமக்குத் தெரியும். ஆனால் வேடம் போடவாவது அவர் திராவிடம் பேசுவார். ஆனால் மாறன்களுடன் பிரச்சினை வந்து கலைஞர் டிவி வந்தபோது, அதிலும் மருந்துக்கும் கொள்கைப் பிரச்சாரம் இல்லையென்றால், காரணம் சன் டிவி அளவு நாமும் காசு பார்த்துவிடவேண்டுமென்ற எண்ணம்தான்.

புதிய டிவி என்ற அறிவிப்பு வெளியானவுடன், வாரிசு ஒருவரிடம் இது ஏதாவது வித்தியாசமாக இருக்குமா என்று ஒருவர் கேட்டபோது, அவர் உதட்டைப் பிதுக்கியவண்ணம், “நோ சான்ஸ்…எல்லாம் அதே குப்பைதான்..எங்களுக்கு ஆட் ரெவின்யூவேண்டாமா?” என்றார்.

அதாவது வழி காண்பித்துவிட்டார் கலாநிதி. அதிலிருந்து மாறினால் எங்களுக்கு நஷ்டம். அதை எதிர்கொள்ளத்தயாரில்லை என்பதுதான் பொருள்.

மாறன்களின் வெற்றி ஃபார்முலா என்ன? சினிமா, சினிமா, சினிமா. முடிவில்லாமல்.சினிமா. அப்புறம் பெண்களை அழவைக்கும் சீரியல்கள். அச் சீரியல்களில் மந்திரம், பூசை, இறைவனை வழிபட்டால் தீர்வு உண்டு என்பன போன்ற செய்திகள், அப்புறம் அபத்தக் களஞ்சியமான லியோனி டைப் பட்டி மன்றங்கள்….எவ்விதத்திலும் மக்கள் சிந்தித்துவிடக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் இதுதான் அவர்கள் ஃபார்முலா.

இப்படி ஈர்க்கப்படுபவர்களை திமுக சார்பு செய்திகளில் மூழ்கவைப்பது,ம் அவர்களிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம். நல்லவேளையாக அதில் அவர்கள் எப்போதும் வெற்றிபெற்றுவிடுவதில்லை.

திமுக ஆட்சியைப் பயன்படுத்தி தங்கள் கேபிள் நெட்வொர்க்கை வலுப்படுத்திக்கொண்டனர் மாறன்கள்.. மதுரை தினகரன் பிரச்சினைக்குப் பிறகு அரசு கேபிள் உருவானாலும், தாத்தாவை சரிக்கட்டி, அரசை ஓரங்கட்டினார்கள்.

ஜெ ஆட்சியில் அப்படிச் செய்யமுடியாமல் தங்கள் சாம்ராஜ்யத்தின் முக்கியமான தூணை இழந்து அவர்கள் தவிக்கின்றனர். அரசின் கட்டுப்பாட்டில் கேபிள் நெட்வொர்க் வருவது எவ்வளவு நல்லது என்பது வேறு பிரச்சினை. இந்த நேரத்தில் சன் பலவீனப்பட்டிருக்கிறது. அந்த அளவில் மகிழ்ச்சியே.

ஆனாலுங்கூட சன், கலைஞர் குழுமங்கள் மிக மோசமான முன்னுதாரணங்கள். தமிழ்ச் சமூக மதிப்பீடுகள் மலினமாவதற்கு முக்கிய காரணங்கள்.

ஜெயா டிவி பிராமணப் பண்பாட்டினை முன்நிலைப்படுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால் குறைந்த பட்சம் சினிமாவைத் தாண்டி ஏதோ சில விஷயங்களை அவர்கள் தொடுகின்றனர்.

சன்னோ, கலைஞரோ, பிராமணரல்லாதாரின் பண்பாட்டடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனரா என்றாலில்லை. மானாட மயிலாட ரகத்தில் சிறுவர், சிறுமியரை ஆடவிட்டு அவர்களை சிந்தனைகளை வக்கரிக்கவைத்து விளம்பரம் ஈர்க்கிறார்கள்,.

மார்கழி சீசனில் கலைஞரும் கர்நாடக இசை ஜோதியில் கலந்துவிடும். அப்போது கூட அவர்கள் தமிழிசைக்கு ஒன்றும் தனியிடம் அளிப்பதில்லை.

ஜெ, கலைஞர் மற்றும் சன் அனைத்துமே தங்களுக்கு வசதியாகத்தான் செய்திகள் வெளியிடும். நடுநிலையெல்லாம் இல்லை. ஓரளவு சன் மாற்று தரப்பு செய்திகளை ஒளிபரப்புவார்கள். ஆனால் ஸ்பெக்ட்ரத்தின் அனைத்து பரிமாணங்களை மக்களை உணரவைக்காது அது. தயாநிதி பற்றி ஏதாவது வெளியாகுமா என்ன?

ஆனால் செய்தி ஒளிபரப்பில் நடுநிலை என்பதைவிட நமக்கு கவலையளிக்கவேண்டிய விஷயம் இச் சானல்கள் மக்களின் சிந்தனையினை மழுங்கடிக்கின்றன,  இளைஞர்கள் மனதில் பாலியல் வெறியையே தூண்டிவிடுகின்றன என்பதும்தான்,.

அந்த அளவில் சன், மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் மிகப் பெரிய சமூக விரோதிகளாக அடையாளங்காணப்பட்டு அவற்றிற்கெதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும்.

கலைஞர் டிவி கூட தள்ளாடுவதாகவே தகவல். ஆனால் மாறன்கள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுவிட்டனர். சீரழிக்கும் பணியைத் துவக்கியது என்பது மட்டுமல்லாமல் வெகுகாலம் அப்பணியை ஈவிரக்கமின்றை நிறைவேற்றுவார்கள் என்பதாலேயே அவர்களை மிகப் பெரும் சமூக விரோதியாக நாம் பார்க்கவேண்டும், வெற்றிபெற முடியாமல் போகலாம். ஆனால் ஏதோ ஒரு மட்டத்தில் நம்மை அருவருப்புடன் பார்க்கின்றனர் என்ற செய்தியாவது அந்நிர்வாகங்களை சென்றடையவேண்டும்.

இந்திய ஊடகங்கள் பற்றி மேலும் கூறவேண்டும். அது இன்னொரு கட்டுரையில்.

 

கானகன்

 

Comments  

 
0 #22 Puthiyavan1 2012-04-20 14:02
சபாஷ் !
Quote
 
 
0 #21 Sethumathavan 2012-04-18 12:49
From my small knowledge, RAW was a hand of Congress party and it's bureaucratic servants rather than an intellegent part of Indian nation.
Punjabis, Sikhs(near Pakistan), Bengalis(near Bangladesh) sacrificed much for the nation India. So they must speak than people of TN(near Srilanka) say opinions !.

It was Operation Blue Star against Bhindranwale in 1984 killed many innocents in Golden Temple. In May 2009, 40,000 innocent forest people of vavuniya district of srilanka were killed - compared to 30,000 in "Sikh holocaust" of 1762 by Mughal pashtun Ahamad ShahDurrani.

They were complicated, I am only highlight one part of that was hand of congress agenda against regional parties like shiromani Akali Dal and so called Dravidian(Rama-Ravana). New Delhi become a Sultanate and Bureaucracy become its household servants- north and south blocks become Fatehpur Sikri- Fateh(victory)p ur sikri- series of royal palaces, harem ect..

Regional parties are not holy one. They adopt their politics with more cunningness(con cede) than brinkmanship of what they really are- don't use their knowledge of intelligentsia, just clownish mimics . They also behave like little Sultans. (DMK is worst because, they say their experience of survival is only family nepotism and corruption)
Didi Mamata Banerjee and J.Jayalalitha represent that.
Quote
 
 
+5 #20 Sethumathavan 2012-04-18 12:48
கேரளாவின் "ஏசியா நெட்" தொலைக்காட்சி குழுமம் இந்திய உளவுத்தலைவர், தற்போதைய கேரளா கவர்னர் எம்.கே.நாராயணன் குடும்பத்துக்கு , மருமகனுக்கு சொந்தமானது. கலாநிதி மாறன் 1990 களில் மளையாள தொலைக்காட்சி உலகில் நுழைய இலங்கைத்தமிழர் பிரச்சனையை வைத்து நாராயணனை எவ்வளவோ மிரட்டிப் பார்த்தார். ஆனால், 1999 முள்ளியவாய்க்கா ல் வரை நாராயணன் செவிசாய்க்கவில் லை.
தற்போது எங்கே கதவை சாத்திக்கொண்டு நாராயணா என்று தாத்தாவைப்போல் காலில் மாறன் சகோ விழுந்தார்களோ தெரியவில்லை கேரள உலகில் நுழைய அனுமதி கிடைத்துவிட்டது .

"திராவிட நாடு, பிராமண எதிர்ப்பு" என்று அரைவாசி பிராமணனான தன்னையும் பிராமணனாக(மல்லி கா மாறன்) சேர்க்கச்சொல்லி முரசொலிமாறந்தான ் அந்தகாலத்தில் டெல்லியில் தாணவமாடினார். அப்பாவி தி.மு.கா. தொண்டர்களுக்கு இதில் ஒரு இழவும் தெரியாது- இவர்கள் பேசியதை கேட்டு ஜெயிலுக்கு சென்று உதை வாங்கினார்கள்.
Quote
 
 
+1 #19 manaa 2012-04-18 11:44
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]இராமர் லக்ஷ்மிதேவியை காட்டுக்கு அனுப்பியதற்கு இரு வேறு காரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ராமாயணத்தில் துளி கூடத் தெரியவில்லை.

தனுஷ்கோடியை கடல் கொண்ட போது ஆயிரக்கணக்கில் உற்றாரைத் தொலைத்த மக்கள் சாப்பிட மறுத்து, என்ன செய்தவ்தேன்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது , ற்ஸ்ஸ் வந்து ராமாயணம் நடத்தி அவர்களை உணவு சமைத்துக் கொடுத்து உண்ணச் செய்தது பத்திரிகைகளில் வெளியான வரலாறு.

அதே சமயத்தில் 2004 சுனாமியில் நாகப்பட்டினத்தி ல் ற்ஸ்ஸ் பல தொண்டுகளைச் செய்தபோது அவர்களைப் பற்றி எந்த டிவியிலும் காண்பிக்கவில்லை . சன் டிவியில் மட்டும் மீனவர் ஒருவர் "அலை வந்தப்ப நான் ஓடிவந்து மெட்டு மசூதியில பூந்திட்டேன்.. முஸ்லீம்க தான் என்ன காப்பாத்தினாங்க " என்று சொல்லி ஜாடையாக 'சரியா சொல்லிட்டேன் இல்லை?' என்று வீடியோ கிராபரிடம் கேப்பது போல் தலை ஆட்டினார். உண்மையிலேயே அருவருப்பானதுதா ன் இந்த டிவி குழுமங்கள்.

[ஃஉஒடெ நமெ="னான் கடவுல்"]இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரிய சாக்கடையில் மூழ்கி அடிமைகளாக வாழும் தமிழன் இந்த சாக்கடையை கண்டு கொள்வானா சந்தேகமே. மன நோய் பிடித்து தன் மனைவியையே இரு முறை காட்டுக்கு துரத்தி கொலை செய்ய திட்டமிட்ட இராமன், பொய்யான அந்தக் கதையின்படி, இறுதியில் தானும் தற்கொலை செய்து கொண்டதையே இன்னமும் கிரகித்துக் கொள்ளாது இன்றும் இராமனையும் அனுமனையும் கடவுளாக்கி,கோயி ல் கட்டி கூடவே ஆப்கான் இராணி குஸ்புவுக்கும் கோயில் கட்டிய தமிழன் இவற்றை எல்லாம் கண்டு கொள்வான் என்பது சந்தேகமே. எப்போது விழித்தெழப் போகிறான்?[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
குஜராத்தில் பச்சை குழந்தைகளை கருவறுத்து கொன்ற பிறகு நாகபட்டினத்தில் சுனாமி நிவாரண பணிகளில் ஈடுபட்டால் R S S ந் அயோகியதனங்கள், கொலைவேRikaL மாய்ந்து போகுமா ?
Quote
 
 
-3 #18 kabeer 2012-04-18 11:00
i also agree this points"சவுக்கும் சன் டிவி மாதிரி தான், There are lot of issues happening in TN which affecting people, But you are writing about sun tv. I think you hit rate alos go down if you are lose your trust"
Quote
 
 
-2 #17 நான் கடவுள் 2012-04-17 15:52
ஐயா சூரியநாராயணன் அவர்களே,கடவுளை வணங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இராமன் அனுமான் குஸ்பு என மனிதனை வணங்க வேண்டாம்,கடவுளை வணங்குங்கள் என்பதே என் கருத்தின் வடிவம்.
Quote
 
 
-2 #16 chennairajan 2012-04-16 20:23
:cry: Why you have not written anything about Makkal TV which is doing some good programming.
Quote
 
 
0 #15 mkaliyap 2012-04-16 14:44
Hi Savukku,

Why Savukku is always cornering DMK and it its family,you can write about Sasikala entry in to JJ House and the pain tamilnadu people facing on the present Government.

We all knew DMK and family are the greatest Frauds,but writing articles about them does not make any sense,so please concentarte on the ruling party atrocities else viewers will get an impression that Savukku is favouring ADMK
Quote
 
 
0 #14 sowmi 2012-04-16 10:51
சவுக்கும் சன் டிவி மாதிரி தான், There are lot of issues happening in TN which affecting people, But you are writing about sun tv. I think you hit rate alos go down if you are lose your trust .
Quote
 
 
0 #13 sooriyanarayanan 2012-04-16 10:32
அப்பா நான் கடவுல் அப்ப மக்கல்ல் வுன்னைஏ சாமி யா கும்பிடவேன்ன்டி யது தான். சாமி கும்பிடுவது ஒர் தப்பா. வுன்னொட வேலையை நீ பாரு
Quote
 
 
0 #12 naan kadavuL 2012-04-15 17:26
....................அன்னியன் சொல்வது போல் அறிமுகமாகாத ஒருவருக்கு எதுவும் தெரியவில்லை என்று சொல்வது பொருந்தாது.ஒரு சமயம் அன்னியன் அன்னியனாக இருப்பதால் எதுவும் தெரியவில்லையோ என்னவோ. முஸ்லிம்களில் மத தீவிரவாதிகள் இருப்பது உண்மை என்பதும், அது கண்டிக்கப்பட வேண்டியதும் தான். ஆனாலும் நாம் செய்யாத தவறா? குள்ளனை மூன்று வயதில் தேவாரம் பாடியதாக(குள்ளன ் =உயரத்தில் குள்ளமானவன்) ரீல் விட்டதும்,ஆயிரக ் கணக்கான தமிழ் நூல்களை எரித்து அழித்ததையும், வாதிட்டவர்களை கழு ஏற்றிக் கொன்றதையும் எப்படி மறப்பது?இந்த ஆரிய பார்ப்பண தேவாரம் பாடிய இந்துக்கள் (சைவர்கள்-தமிழர்கள், தமிழர்கள் இந்துக்கள் அல்ல) செய்த கொடுமைகளை மறக்க முடியுமா?
இப்படியானவற்றுக ்கு தீனி போட்டு போதையில் வைத்திருக்கும் இந்த தொலைக்காட்சிகளி ன் போலித்தனத்தை எப்படி மக்கள் முன் வைப்பது என்பது பெரிய கேள்வியே.
Quote
 
 
+7 #11 naan kadavuL 2012-04-15 17:25
இது கருத்து சொல்லும் பகுதி.அதனால் வாதிட வரவில்லை.வாதிடவும் அனுமதி கிடையாது.ஆனாலும் சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன். பல நூறு ஆண்டுகளாக போதையில் வைத்திருப்பது போல் தமிழர்களை ஆரியமும் அதற்கு துணை போனவர்களும், இராமாயணம் முன் சென்மம்,சோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளில் முழுகடித்து வருவதை, இன்றைய ஊடகங்களும் தொடர்ந்து செய்து வருகிறது.இலவசங்களைக் கொடுத்து அரசியலில் போதை ஏற்றியது போல் இவை தொடருகின்றது,
ஈழத்தில் சிங்களமும் இராணுவமும் தமிழ் இளைஞர்களுக்கு போதை வஸ்துக்களையும் பாலியல் வீடியோக்களையும் கொடுத்தும் விற்பனையும் செய்தும்,அந்தப் போதையில் அவர்களை வைத்து இன உணர்வை அழித்து விட முயற்சி செய்து வருவது போல், நம் நாட்டில் தொலைக்காட்சியின ரும் இதே வேலையை செய்து வருகின்றனர். இந்தப் போதையில் மூழ்கி பலரும் உண்மையை உணராது சிந்தித்து பார்க்காது திசை திருப்பப்பட்டு ஆரிய மாயையில் ஆழ்ந்து போயிருக்கின்றனர ். ஆதாரங்களுடன் பலவற்றை சவுக்கு போன்ற சில ஊடகங்கள் வெளியே கொண்டு வந்தாலும் கூட அவை அடித்தட்டு மக்களுக்கு சென்றடைவதில்லை.
சினிமாவும் தொலைக்காட்சியும ் மிக சிறந்த ஊடகங்களாக இருப்பதால் அவற்றை பயன் படுத்தி மூட நம்பிக்கைகள்,இர ாமாயண கட்டுக்கதைகள் போன்றவற்றை ஜிங்கு ஜிங்கென்று தலைவிரித்தாட வைத்து, அரசியல் போலித்தனம் போக்கிரித்தனம் போன்றவற்றை மறைத்து கருணானிதி போன்ற நடிகர்கள் புனிதர்களாக நடித்து நடமாடி வருகிறார்கள். இவ்ற்றை எதிர்கொள்ள ஒரே ஒரு உண்மையை நடு நிலையுடன் வெளிப்படுத்தும் தொலைக்காட்சி உருவாக்கப்படுமா யின்...? ஆனால் அதை உருவாக்க உணர்வாளர்களிடம் வசதிகள் இல்லை. அப்படி உருவாக்கப்பட்டா லும்,பாதுகாப்பு சட்டம் என்ற சில சட்டங்களை நிறுத்தி அழித்து ஒடுக்கி விட தயாராகாவே சிலர் உள்ளனர். .........................
Quote
 
 
-2 #10 namma aalu 2012-04-15 07:04
Not a very good article. Content is not organised or there is no clarity in your thoughts while writing. I like your other articles.
Quote
 
 
+14 #9 vendum suthanthiram 2012-04-15 01:03
அட.. அதுவும் பிசினச் இதுவும் பிசினச்..ஆனா அது தாத்தவொட பிசினச் இது பேரனொட பிசினச்.. மொத்தத்திலெ ஒரு பிசினச் குடும்பம்...னாம தான் தலைவா தலைவான்னு புத்தி இல்லாம திரியிரொம்.

அட.. நீன்க்க என்ன ஜெயா டிவிய சொல்ரீன்க? சன் டிவியும் கலைஞர் டிவியும் கூட பிராமன கலாச்சாரத்தை தானெ முன்னிருத்துகிர து?

நம்மோரிலெ மக்கல் டிவி மக்கல் டிவின்னு ஒன்னு எவ்வலொ நல்ல செய்திகல த்ருது.. எவ்வலொ பெரு பாக்குரொம்?
Quote
 
 
+15 #8 Ravi 2012-04-14 22:09
சுமார் மூன்றுதலைமுறைகள ாக ஒரு குடும்பம் தொடர்ந்து வக்கணையாக தமிழனை திசை திருப்பி சுரண்டி வருகிறது எமக்கு ஆச்சரியத்தையே அளிக்கிறது. சொல்வது ஒன்று செய்வது ஓன்றாக வாழ்வதே நியாயமாக்கிய கருணாநிதி மாறன் போன்றவர்களின் வாரிசுகளும் தம் பெற்றோரின் பணியை செவ்வனே செய்து இப்போது அடுத்த தலைமுறையான உதயநிதி வரை வந்துள்ளது. தமிழன் இத்தனை முட்டாளா? ஆச்சரியமாக உள்ளது. 1967ல் சிறுவனாக இருந்து இந்த வீழ்ச்சியை கண்டுவரும் எனக்கு இந்த இருண்ட காண்டத்திலிருந் து விடிவு வராதா என்று ஏக்கம் உள்ளது. தமிழகத்தின் இருண்ட காலத்து சரித்திரம் எழுதும் போது இந்த குடும்பத்தின் பங்கு நிச்சய்ம அதில் எழுதப்படும். சுயமரியாதைப் பேசிப்பேசியே தமிழனின் சுயமரியாதை மட்டுமல்லாது தங்களின் சுயமரியாதையையும ் சேர்த்து விற்று பணம் செய்த இவர்களை சரித்திரம் ஒரு நாளும் மறக்காது. இத்தனை அசிங்கங்களின் இடையிலும் புதிய தலைமுறை ஒரு நம்பிக்கை ஒளியாக தோன்றியுள்ளது. நம்புவோம். குருட்டு தமிழனின் கண்கள் திறக்கும் என்று நம்புவோம்.
Quote
 
 
+4 #7 ANBUTHIL 2012-04-14 21:19
இந்த இரு டிவி சானல்களுக்கும் சரியான சவுக்கடி கொடுத்திர்கள்
Quote
 
 
-11 #6 anniyan 2012-04-14 19:28
இராமர் லக்ஷ்மிதேவியை காட்டுக்கு அனுப்பியதற்கு இரு வேறு காரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ராமாயணத்தில் துளி கூடத் தெரியவில்லை.

தனுஷ்கோடியை கடல் கொண்ட போது ஆயிரக்கணக்கில் உற்றாரைத் தொலைத்த மக்கள் சாப்பிட மறுத்து, என்ன செய்தவ்தேன்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது , RSS வந்து ராமாயணம் நடத்தி அவர்களை உணவு சமைத்துக் கொடுத்து உண்ணச் செய்தது பத்திரிகைகளில் வெளியான வரலாறு.

அதே சமயத்தில் 2004 சுனாமியில் நாகப்பட்டினத்தி ல் RSS பல தொண்டுகளைச் செய்தபோது அவர்களைப் பற்றி எந்த டிவியிலும் காண்பிக்கவில்லை . சன் டிவியில் மட்டும் மீனவர் ஒருவர் "அலை வந்தப்ப நான் ஓடிவந்து மெட்டு மசூதியில பூந்திட்டேன்.. முஸ்லீம்க தான் என்ன காப்பாத்தினாங்க " என்று சொல்லி ஜாடையாக 'சரியா சொல்லிட்டேன் இல்லை?' என்று வீடியோ கிராபரிடம் கேப்பது போல் தலை ஆட்டினார். உண்மையிலேயே அருவருப்பானதுதா ன் இந்த டிவி குழுமங்கள்.

Quoting naan kadavul:
இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரிய சாக்கடையில் மூழ்கி அடிமைகளாக வாழும் தமிழன் இந்த சாக்கடையை கண்டு கொள்வானா சந்தேகமே. மன நோய் பிடித்து தன் மனைவியையே இரு முறை காட்டுக்கு துரத்தி கொலை செய்ய திட்டமிட்ட இராமன், பொய்யான அந்தக் கதையின்படி, இறுதியில் தானும் தற்கொலை செய்து கொண்டதையே இன்னமும் கிரகித்துக் கொள்ளாது இன்றும் இராமனையும் அனுமனையும் கடவுளாக்கி,கோயி ல் கட்டி கூடவே ஆப்கான் இராணி குஸ்புவுக்கும் கோயில் கட்டிய தமிழன் இவற்றை எல்லாம் கண்டு கொள்வான் என்பது சந்தேகமே. எப்போது விழித்தெழப் போகிறான்?
Quote
 
 
+4 #5 naan kadavul 2012-04-14 18:13
இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரிய சாக்கடையில் மூழ்கி அடிமைகளாக வாழும் தமிழன் இந்த சாக்கடையை கண்டு கொள்வானா சந்தேகமே. மன நோய் பிடித்து தன் மனைவியையே இரு முறை காட்டுக்கு துரத்தி கொலை செய்ய திட்டமிட்ட இராமன், பொய்யான அந்தக் கதையின்படி, இறுதியில் தானும் தற்கொலை செய்து கொண்டதையே இன்னமும் கிரகித்துக் கொள்ளாது இன்றும் இராமனையும் அனுமனையும் கடவுளாக்கி,கோயி ல் கட்டி கூடவே ஆப்கான் இராணி குஸ்புவுக்கும் கோயில் கட்டிய தமிழன் இவற்றை எல்லாம் கண்டு கொள்வான் என்பது சந்தேகமே. எப்போது விழித்தெழப் போகிறான்?
Quote
 
 
+14 #4 Eleventh Sense 2012-04-14 13:37
மாலை வரை, அனைத்து சேனல்களிலும் சுனாமி இல்லை என்று சொன்ன பின்னும் கூட கலைஞர் டிவி தனது எதிர் மறை பரப்புரையை நிறுத்தவில்லை....
எப்படியாவது சென்னையில் எல்லோரையும் குழப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சன் டிவி செய்த இழி செயலுக்கு கண்டனம் தெரிவித்தமைக்கு நன்றி சவுக்கு..........
இனியாவது அவர்கள் திருந்துவார்களா என்று பார்போம்.
Quote
 
 
+10 #3 T.N. Raghu 2012-04-14 13:22
The article has hit the nail on the head. Sun TV is keeping Tamils intellectually poor all the time. Money alone matters for the Marans. Culture and service to society be damned.
Quote
 
 
+18 #2 bambinoku 2012-04-14 13:21
பார்ப்பவரின் மூளையை மழுங்கடிக்கும் திறன் உள்ளவை சன் டிவி நிகழ்ச்சிகள். பெரிய வெண்ணை மாதிரி நேர்காணல் பேசுவான் ஒரு கருவாயன். பத்தினி தெய்வங்கள் குத்தாட்டதிற்கு மதிப்பளிப்பார்க ள். தொடர்களில் சைக்கோ மனிதர்கள் வருவார்கள். வக்கிரமனம் படைத்தவர்கள் உருவாக்கும் நிகழ்ச்சிகள்...
Quote
 
 
+19 #1 குட்டி 2012-04-14 11:26
இந்த கேடு கெட்டவர்களை பற்றிய கட்டுரையில் நான் தங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன் ...இது போதாது சவுக்கு..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 138 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10088
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week67665
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month289925
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13206292