முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
போபால் .. ... ... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012 14:06

Bhopal_Gas_Tragedy

வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்களை வரலாறு மன்னிப்பதில்லை. வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்களே மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து வருகிறார்கள்.

இந்தியா என்றுமே மறக்கக் கூடாத வரலாறு போபால். இயற்கை பேரழிவுகளால் உயிர்கள் பலியாவதை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், மனிதன் தானாக தனக்கு விதைத்துக் கொண்ட வினையை மறக்கவே கூடாது. அது போல மனிதன் தானாக விதைத்துக் கொண்ட வினைகளில் ஒன்றுதான் போபால் விஷவாயு விபத்து. 25 ஆண்டுகள் கடந்து, இன்றும் அப்பகுதி மக்களை மீளாத்துயருக்கு ஆளாக்கியதுதான் போபால் விபத்து.

இன்று கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் பேசி வரும் நிலையில், போபால் விபத்து குறித்து, ஒரு விரிவான பார்வையை ஏற்படுத்துவது அவசியம் என்று தோன்றுகிறது. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது, 100 சதவிகிதம் ஆபத்தே இல்லாதது, விபத்து நிகழ வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள் வரிசையில் நின்று உத்தரவாதம் கொடுத்து வருகின்றனர்.

இதே போலத்தான் யூனியன் கார்பைடு நிறுவனமும் சொல்லியது. அமெரிக்காவில் தொழிற்சாலை நடத்தி வந்த யூனியன் கார்பைடு நிறுவனம், எங்கள் நிறுவனத்தைப் போல பாதுகாப்பான நிறுவனம் உலகிலேயே கிடையாது என்று மார்தட்டியது. அப்படிப்பட்ட நிறுவனத்தின் தொழிற்சாலைதான், 25 ஆயிரம் பேரைக் கொன்று குவித்தது.

100 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும் ஒரு நிறுவனத்தில் விபத்து எப்படி நடக்கும் ? எப்படி நடக்கும் என்றால், 100 சதவிகிதம் பாதுகாப்பான ஒரு தொழிற்சாலை உலகில் இருக்கவே முடியாது.

யூனியன் கார்பைடு தொழிற்சாலை எப்படி உருவானது, எந்தப் பின்னணியில் அது இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டது, விபத்து நடந்ததற்கான காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு விபரங்களை அறிந்து வைத்துக் கொண்டு, அதன் பின் நாம் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தருவதே நியாயமாக இருக்கும்.

இந்த அடிப்படையில், போபால் விபத்து குறித்து, தொடர் கட்டுரை வெளியிடலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. சவுக்கு வாசகர்களிடம், இத்தொடருக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்து தொடர் வெளியிடப்படுவது தொடரும்.

போபால் 1

ராணிகளின் நகரம்... ...

பதினோராம் நூற்றாண்டல் வாழ்ந்த போஜ மன்னரால் போபால் நகரம் உருவாக்கப்பட்டது என்று ஒரு கருத்து உள்ளது. போஜ் மன்னரின் பெயரால் போஜ்பால் என்று அழைக்கப்பட்ட நகரம், பின்னர் போபால் என்று மருவியது என்று ஒரு சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இல்லை இல்லை... பூபால் என்ற பெயிரிலிருந்து உருவானதுதான் போபால் என்று கூறுவோரும் உண்டு. பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் அச்சிடப்பட்ட ரயில் டிக்கெட்டுகளில் இந்நகரத்தின் பெயர் பூபார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

17 மற்றும் 18ம் நூற்றாண்டில்தான் போபால் நகரம் முழுமையாக உருவாகிறது. ஆப்கான் சாம்ராஜ்யத்தின் தளபதியாக இருந்த தோஸ்த் முகம்மது கான் அவுரங்கசீப் படையில் இருந்தார். அவுரங்கசீப் மறைந்த பிறகு, ஒரு குறுநில மன்னனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட தோஸ்த் முகம்மது கான், கோன்ட் மகாராணி கமலாபதியிடமிருந்து, அவருக்கு படை அனுப்பி உதவி செய்ததற்காக போபால் நகரத்தை கூலியாகப் பெறுகிறார்.

1728ல் இறக்கும் தோஸ்த் முகம்மது கானுக்குப் பிறகு, போபால் நகரம் நிஜாம்மின் ஆட்சியின் கீழ் வருகிறது.

1819 முதல் 1926 வரை, போபால் நகரம் நான்கு ராணிகளால் ஆளப்படுகிறது. பெண்கள் ஆட்சி புரிய வாய்ப்பு அளிக்கப்டுவது அபூர்வமான அந்தக் காலகட்டத்தில் நான்கு பெண்கள் போபாலை தொடர்ந்து ஆண்டது, சிறப்பான ஒரு விஷயமாகும். குத்சியா பேகம் என்பவர்தான் முதல் மகாராணி. அவரைத் தொடர்ந்து அவர் மகள் சிக்கந்தர் பேகம் ஆட்சி செய்தார். அவரது மகளான ஷாஜகான் பேகத்தின் ஆட்சிக்குப் பின் அவரது மகள் சுல்தான் ஜஹான் பேகம் ஆட்சி செய்தார்.

இசுலாமியப் பெண்கள் பர்கா அணியும் கட்டாயம் இருந்ததால், அப்பெண்கள் பர்கா அணியாமல் சுதந்திரமாக கடைவீதிக்குச் சென்று வர வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கென்று பிரத்யேகமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றைக் கட்டினார் சுல்தான் ஜஹான் பேகம். அவர் பெண்களுக்கென்று நிறுவிய ஒரு அமைப்புதான் போபால் பெண்கள் அமைப்பு (Bhopa; Ladies Club). பெண்களுக்கான பிரத்யேகமான வணிக வளாகத்திற்கு, சுல்தான் ஜஹான் பேகமும், அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சுல்தான் ஜஹான் பேகத்தின் மீது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இங்கிலாந்தில் நடைபெற்ற விழாவுக்கு சுல்தான் ஜஹான் பேகத்தை சிறப்பு விருந்தினராக அழைத்ததும், போபால் நகர அரசு விழாவுக்கு , வேல்ஸ் இளவரசர் வருகை தந்ததும், இதற்கு முக்கிய சான்று.

சுல்தான் ஜஹான் பேகத்தின் அரசவைக்கு பெர்சியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து புலவர்களும், அறிஞர்களும் வருகை தருவார்கள். இவரது ஆட்சிக் காலத்தில், மாலை நேரத்தில் முஷைரா எனப்படும் கவி பாடும் அரங்கங்கள் மிகப் பிரசித்தம்.

இந்த நான்கு மகாராணிகளின் ஆட்சிக் காலத்தில் போபால் நகரத்துக்கு குடிநீர் வசதி, தபால் மற்றும் ரயில் வசதித்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. போபால் உள்ளாட்சி அமைப்பும் இவர்கள் காலத்தில்தான் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஐதராபாத் நிஜாமின் சாம்ராஜ்யத்தை அடுத்து, இந்தியாவில் பெரிய முஸ்லீம் சாம்ராஜ்யமாக விளங்கியது போபால் நகரம்தான்.

கடைசி ராணி சுல்தான் ஜஹான் பேகத்தைத் தொடர்ந்து போபால் நகரின் ஆட்சிப் பொறுப்பு அவரது மகன் ஹமீதுல்லா கானிடம் வருகிறது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து கடைசி நவாப் ஹமீதுல்லா கான், போபால் நகரத்தை மட்டும், தனி நாடாக இந்திய ஆளுகையின் கீழ் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதி வேண்டும் என்று மார்ச் 1948ல் கோருகிறார்.

434px-Nawab_hmidulla_khan

போபாலின் கடைசி நவாப் ஹமீதுல்லா கான்

இவரது கோரிக்கையைத் தொடர்ந்து போபால் நகரம் முழுக்க கலவரம் வெடிக்கிறது. மக்கள், நவாப்பின் ஆட்சியை எதிர்த்து போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர், முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா. மக்கள் போராட்டத்துக்கு மரியாதை கொடுத்த இந்திய அரசு, 30 ஏப்ரல் 1949 அன்று, போபால் நகரத்தை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தத்தில், நவாப்போடு கையெழுத்து போடுகிறது.

1956ல் மாநில மறுசீரமைப்பு மற்றும் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்படுகையில், போபால், மத்திய பிரதேசத்தின் தலைநகராக அறிவிக்கப் படுகிறது. இஸ்லாமியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய அடையாளமாக போபால் திகழ்கிறது.

கவிதையும், கலாச்சாரமும், பாரம்பரியச் செழுமையும் கொண்ட போபால் நகரம், உலகின் மோசமான தொழிற்சாலை விபத்தை சந்தித்தது காலத்தின் கோலமே... ...

தொடரும்.. ...

 

Comments  

 
0 #41 khadhi 2012-04-27 22:22
சவுக்கு
தொடரவும் ஆனால் எல்லா விமசகர்கலையும் நம்ப்ஃ== வேன்டாம்
மல்லி
Quote
 
 
0 #40 aienae 2012-04-26 16:22
[ஃஉஒடெ நமெ="ணரயன்"][ஃஉஒடெ நமெ="நல்லவன்"]லெமூரியா கடலில் உள்ளே பொய்விட்டது என்பதற்காக கடலை எல்லாம் மண்ணை வைத்து மூட வேண்டும் என்று எந்த அதி புத்திசாலியும் சொல்லவில்லை. அதுசரி போலீஸ் இருந்தும் திருட்டு கொலை கொள்ளை இருக்கின்றது , பேசாமல் போலீஸ் துறையை மூடிவிடலாமா??[/ஃஉஒடெ]

டெஅர் ணல்லவன்,

ஏ௯செல்லென்ட் விஎந்ச்.டொன்'ட் நொர்ர்ய் அபொஉட் நெகடிவெ வொடெச். ஈஃப் யொஉ சய் "ஸுபெர் ஸவுக்கு" , இட் நில்ல் கெட் புப்லிஷெட் அன்ட் தெரெ நில்ல் பெ பொசிடிவெ லிகெச். ஜுச்ட் சே ஹொந் மன்ய் டிச்லிகெச் நில்ல் பெ தெரெ ஃபொர் திச் சொம்மென்ட். ப்லெஅசெ அட்ட் தெ ஃபொல்லொநிங் ஹொந் மன்ய் ஃப்லிக்ஹ்ட் அச்சிடென்ட்ச் அரெ ஹப்பெனிங் . றெசென்ட் ஒனெ இன் பகிச்டன் கில்லெட் 126 பச்செஙெர்ச். நில்ல் ஸவுக்கு சய் தட் தெரெ ஷொஉல்ட் நொட் பெ அன்ய் ஐர்நய்ச். ட்ரைன் அச்சிடென்ட்ச் அரெ ஹப்பெனிங் எவெர்ய் ஒதெர் டய் , ஷொஉல்ட் நெ ச்டொப் றைல்நய்ச் அச் நெல்ல். ஆல்ல் ஒஃப் உச் ஷொஉல்ட் கொ இன் "மட்டு வன்டி" ஒன்ல்ய் . ஈ குஎச்ச் தட்'ச் ந்ஹட் ஸவுக்கு நில்ல் சுக்கெச்ட். பெ சொன்ச்ட்ருச்டிவ ெ , ந்ரிடெ தட் தெ டெவெலொப்மென்ட் ஷொஉல்ட் சொமெ உப் நித் ஃபோல் ப்ரோஃப் செசுரிட்ய் அச்பெச்ட்ச். நெ ஷொஉல்ட் ப்ரெச்சுரிசெ தெ கொவெர்ன்மென்ட் டொ கிவெ இம்பொர்டன்செ டொ சஃபெட்ய் ஒஃப் பெஒப்லெ சொஉப்லெட் நித் டெவெலொப்மென்ட்.[/ஃஉஒடெ]

அட மொன்ன நயஎ ... in road accidents the concerned ppl die... but if a power plant goes wrong.. the coming generations will be suffering.... don compare like this if u don know the fact...
Quote
 
 
-3 #39 கரியவன் 2012-04-23 15:57
[ஃஉஒடெ நமெ="நல்லவன்"]லெமூரியா கடலில் உள்ளே பொய்விட்டது என்பதற்காக கடலை எல்லாம் மண்ணை வைத்து மூட வேண்டும் என்று எந்த அதி புத்திசாலியும் சொல்லவில்லை. அதுசரி போலீஸ் இருந்தும் திருட்டு கொலை கொள்ளை இருக்கின்றது , பேசாமல் போலீஸ் துறையை மூடிவிடலாமா??[/ஃஉஒடெ]
சொரியும் போது கை விரலை விட பனைபட்டை வலுவாக இருக்கும். அதை எடுத்து சொரிந்து கொள்வது சரியா?
Quote
 
 
0 #38 Kannan Pothi 2012-04-23 10:25
Anandh, Not digvijay it is arjun singh.. happioy died.He let warren anderson to escape of so many deaths for just 1 crore.. donated to his son's charity. He received orders from Rajiv, dumbest PM we ever had to release warren.
Quote
 
 
0 #37 Narayan 2012-04-23 08:54
Quoting நல்லவன்:
லெமூரியா கடலில் உள்ளே பொய்விட்டது என்பதற்காக கடலை எல்லாம் மண்ணை வைத்து மூட வேண்டும் என்று எந்த அதி புத்திசாலியும் சொல்லவில்லை. அதுசரி போலீஸ் இருந்தும் திருட்டு கொலை கொள்ளை இருக்கின்றது , பேசாமல் போலீஸ் துறையை மூடிவிடலாமா??


Dear Nallavan,

Excellent views.Don't worry about negative votes. If you say "Super Savukku" , it will get published and there will be positive likes. Just see how many dislikes will be there for this comment. Please add the following how many flight accidents are happening . Recent one in Pakistan killed 126 passengers. Will Savukku say that there should not be any airways. Train accidents are happening every other day , should we stop Railways as well. All of us should go in "Mattu Vandi" only . I guess that's what Savukku will suggest. Be constructive , write that the development should come up with fool proof security aspects. We should pressurise the government to give importance to safety of people coupled with development.
Quote
 
 
-2 #36 M.S.Chagla 2012-04-22 09:53
I believe you should continue this series as this will benefit a lot of readers.
Quote
 
 
-2 #35 M.S.Chagla 2012-04-21 16:49
Really it is very very informative. You should continue without delay including the article on D.M.K. Hats off to you.
Quote
 
 
0 #34 unmai vilambi 2012-04-21 08:58
இப்போது உல்ல காங்ரெச் கொவெர்மெந்த் தான் அதர்க்க்கு காரனம்.
Quote
 
 
+2 #33 பின்னை சங்கர் 2012-04-20 12:41
நல்லவனுக்கு பதில் சொல்லியே என் ஆயுள் முடிஞ்சிரும் போல?//!!!! யப்பா நல்லவா நீ மனுசனா இல்ல மிருகமா? நீ வேணும்னா கூடங்குளத்துக்க ு குடி வந்துரே! எப்ப வாரன்னு சொல்லு வீடு பாத்து வக்கிறேன்.
Quote
 
 
+3 #32 USA Bala 2012-04-20 01:49
இந்த அருமைய கட்டுரை கன்டிப்பாக வர என் வால்துக்கல். இது கன்டிப்பக என் போன்ர வலரும் சமுதாயத்திருக்க ு உதவியாக இருக்கும். நான் யென் பில்லைக்கு வரலாரு தவரில்லமல் சொல்ல முடியும். ஆர்வமுடன் யெதிர்பர்க்கும் பாலா
Quote
 
 
0 #31 Dravidan 2012-04-20 00:15
ஆண்ணே, நல்லா இருக்கு !
கலக்குங்க ! !
வாழ்த்துக்கள் ! ! !
Quote
 
 
-4 #30 SRK 2012-04-19 19:54
Exactly asked! Savukku should answer this Question...Mr.Nallavan Nalla meaningfulla kaettenga! In our daily life, nobody can tell whether they will be live or die in the next/immediete moment. While it is the case, savukku should not oppose koodangulam power plant. If u show Bophal incident, I will show the Kalpakkam Nuclear powerplant which is (very near to Chennai) working, successfully for several years. I am from chennai too. Savukku, pls u mention few alternate sources for HUGE power generation. Don't shiver on seeing/thinking unnecessary incidents. For example, while u r riding a bike, if u see an accident, will u simply leave ur bike there-itself and walk?? Answer to this first of all Savukku.
Quote
 
 
-1 #29 desigan R 2012-04-19 16:05
A good start. but let me tell you somethuing. a month ago i saw a program in discovery channel about this Bhopal tragegy. the conslusion is, the plant have 3 fool proof layers to stop the gas leaking out, but the incident happended bcoz of our INDIAN engineers and workers carelesness only.
Quote
 
 
0 #28 vishnukskumar 2012-04-19 15:53
we r waiting ....

vishnu
Quote
 
 
+1 #27 KANNAN, COIMBATORE 2012-04-19 14:40
இது போன்ற விசயங்கலை வெளீயிடுங்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.
Quote
 
 
+5 #26 Lakshmanalal 2012-04-19 13:55
கண்டிப்பாக இந்த கட்டுரை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். இணையத்தில் வாசிப்பவர்கள் இதைப் போன்ற முக்கிய கட்டுரைகளைத் தாளில் பிரின்ட் செய்து அந்த வசதி இல்லாத நண்பர்களுக்கும் தர வேண்டும். அது பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தும். வருங்கால நம் சந்ததிகளுக்கு அவசியம் செய்ய வேண்டிய கடமை அது. பல தலைமுறையாய் உழைத்து சம்பாதித்து கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்த பணத்தால் வீடு நிலம் என்று நம் வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும் போது அணுக்கழிவால் சீரழிந்து போன ஒரு வாழ்விடம் தந்தால் நம் வாரிசுகள் நம் மீது காரி உமிழ மாட்டார்களா. அவசியம் உங்கள் பணி தொடரட்டும். நன்றி
Quote
 
 
+3 #25 Jamal 2012-04-19 13:38
கட்டுரையை தொடர்ந்து எழுதவும்....!!!
Quote
 
 
+5 #24 Raja N 2012-04-19 12:55
தொடருங்கள்....தொடர்கிரொம்
Quote
 
 
-3 #23 SALEM MANI 2012-04-19 12:27
சவக்கு நி என்ன கடவூலா உன்மயை அப்படி சொல்ட்ர வால்துக்கல்

by

SALEM MANI
Quote
 
 
+4 #22 vvthan 2012-04-19 12:01
இது நல்ல புரிதலை எர்படுதும் .Please continue
Quote
 
 
+2 #21 Karuna9 2012-04-19 11:40
Read article about jaya cases
Quote
 
 
+4 #20 Santhoshhhhhhh 2012-04-19 10:12
தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.
Quote
 
 
+3 #19 Xavier 2012-04-19 09:11
நல்ல முயற்சி...தொடருங்கள்.
Quote
 
 
+2 #18 nallooraan 2012-04-19 08:53
short & sweet... pls continue..
Quote
 
 
+20 #17 Anandth 2012-04-19 02:57
சவுக்கு நான் படித்த ஞாபகம் .போபாலில் அந்த விபத்து ஏற்பட்டபோது முதல்வராய் இருந்தவர் திக் விஜய் சிங்க் .அந்த விபத்து பற்றி கேள்வி பட்டவுடனே முதலில் ஊரை காலி செய்தவரும் அவர் தான் .மற்ற அரசு அதிகாரிகள் ஓரளவு மீட்ப்பு பணியில் ஈடுபட்டார்களாம் .சரி ஜெயா எப்படி ??? முதல் ஆளாய் ஓடுவாரா சவுக்கு .உமக்கு எப்படி தெரிகிறது கட்டாயம் பதில் தரவும் !!! ;-) ;-) ;-)
Quote
 
 
+4 #16 சீனி மோகன் 2012-04-18 22:59
தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்
Quote
 
 
+2 #15 moorthi 2012-04-18 22:59
சிரந்த கட்டுரை எலுதவென்டும்
Quote
 
 
+6 #14 சீனி மோகன் 2012-04-18 22:58
கண்டிப்பாகத் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.
Quote
 
 
+6 #13 ஊர்க்குருவி 2012-04-18 22:17
நல்ல முயற்சி. தொடரட்டும்,. இது ஒரு வரலாற்று வழித்தடத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவத ுடன் நல்ல புரிதலையும் உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை.
Quote
 
 
+10 #12 GK Nadar, Nellai 2012-04-18 22:05
இந்தியாவை 1947 வரை வெள்ளைகாரர்கள் ஆண்டு பின்னர் கொள்ளைகாரர்களிட ம் கொடுத்து விட்டார்கள்,
பணத்தால் எதையும் (சட்டம் உட்பட)வளைக்க முடியும் என்கின்ற நிலையில் மனித உயிர்களுக்கும் மனிதாபிமானத்திற ்க்கும் மதிப்பு இல்லை.
சவுக்கு என்னதான் கட்டுரைகள் எழுதி அபாய மணி அடித்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்....இருப்பினும் நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள்....
Quote
 
 
+1 #11 Raja N 2012-04-18 21:11
தொடருங்கள்....தொடர்கிரேன்
Quote
 
 
-7 #10 நல்லவன் 2012-04-18 21:07
லெமூரியா கடலில் உள்ளே பொய்விட்டது என்பதற்காக கடலை எல்லாம் மண்ணை வைத்து மூட வேண்டும் என்று எந்த அதி புத்திசாலியும் சொல்லவில்லை. அதுசரி போலீஸ் இருந்தும் திருட்டு கொலை கொள்ளை இருக்கின்றது , பேசாமல் போலீஸ் துறையை மூடிவிடலாமா??
Quote
 
 
+9 #9 nallavan 2012-04-18 19:30
கட்டுரை தொடருங்கல்,,
Quote
 
 
+7 #8 Chozan 2012-04-18 19:17
தயவு செயது தொடர்ந்து எழுதவும்
Quote
 
 
+4 #7 Rajak 2012-04-18 18:47
Excellent Article. Please continue.
Quote
 
 
+4 #6 Nellai Balaji 2012-04-18 17:31
Welcome Savukku.. Another aspect of reading savukku.. pls continue..
Quote
 
 
+5 #5 shavelsuresh 2012-04-18 16:53
நல்ல முயற்சி சவுக்கு, வாழ்த்துக்கள்.
Quote
 
 
+5 #4 Imthiaz 2012-04-18 16:48
very nice Article
but very useful .We need more info @ Bopal
Quote
 
 
+16 #3 naan kadavuL 2012-04-18 16:39
தங்கள் இஸ்டப்படி செயல்பட்டு போபால் மூலம் மக்களை அந்த நகரை அழித்தவர்கள் பாடம் படிக்கவில்லை. கூடங்குளத்தை உருவாக்கி இன்னொரு அழிவை ஏற்படுத்தினாலும ் இந்த அரசியல்வதிகள், பண முதலைகள் பாடம் படிக்கப் போவதில்லை. ஆனால் சென்ற நில நடுக்கத்தின் போது எதுவும் அந்தப் பகுதியில் நடக்கவில்லை என மூடி மறைத்ததும்,உள்ள ே இருந்தவர்களை அதிகாரிகளை உடனடியாக அப்புறப் படுத்தியதும் ஏன் என்ற கேள்விகளை நாம் முன் வைக்கலாமல்லவா?பாதுகாப்பானது என்றவர்கள் ஏன் ஓடி ஒழிந்தார்கள்?
Quote
 
 
+9 #2 murattubakdan 2012-04-18 16:27
தொடரட்டும் சவுக்கின் சேவை,, வாழ்துகல்..
Quote
 
 
+7 #1 gjjp 2012-04-18 15:28
Dear Savukku,
Weel begun is half done.
Please continue.hats off
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 91 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3574
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week36214
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month249033
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12771152