|
கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றமே என்சிஇஆர்டி பாடப்புத்தகக்தில் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் உள்ள ஒரு கார்ட்டூன் காரணமாக ஸ்தம்பித்தது. இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்களும், இந்தக் கார்ட்டூனை உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இந்தக் கார்டூன் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தனர்.

மத்திய அரசும் உடனடியாக பணிந்தது. பிரணாப் முகர்ஜி, மற்றும் கபில் சிபல் ஆகியோர், இந்தக் கார்டூன் வெளி வந்ததற்காக மன்னிப்புக் கேட்டனர்.
அப்படி என்னதான் இருந்தது அந்தக் கார்டூனில் ?
1949ம் ஆண்டு, சங்கர்ஸ் வீக்லி என்ற பத்திரிக்கையில் வெளி வந்த கார்டூன்தான் அது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது அமர்ந்திருக்கும் அம்பேத்கரை, நேரு சாட்டையால் அடித்து விரைவாக அரசியல் அமைப்புச் சட்டத்தை தயார் செய்யுமாறு சொல்வது போன்ற கார்டூன் அது. அரசியல் அமைப்புச் சட்டம் தயார் செய்யப்பட்ட சூழல், அப்போது இருந்த அரசியல் சூழல், அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழுவுக்கு இருந்த நெருக்கடிகள், அம்பேத்கருக்கும் நேருவுக்கும் இடையே இருந்த உறவு ஆகியவற்றை தற்கால மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?
அந்த அடிப்படையில்தானே அந்தக் கார்டூன் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது ? இன்று பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரை மாவீரர்கள் என்று கொண்டாடுகிறோம். மஹாத்மா காந்தியை தேசப்பிதா என்று புகழ்கிறோம். இதே தேசப்பிதா தானே, அவர்கள் மூவரையும், காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்பாக தூக்கிலிடுங்கள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார் ? இந்த உண்மையை மறைத்து விட முடியுமா ? சுபாஷ் சந்திர போசையும், காங்கிரஸ் மற்றும் காந்தி தொடர்ந்து எதிர்த்துத்தானே வந்தனர். இன்று சுபாஷ் சந்திரபோஸை நாம் கொண்டாடவில்லையா ? இதே போல வெளிவந்ததுதானே அந்தக் கார்டூனும் ?
அந்தக் கார்டூன் ஒன்றும் தடை செய்யப்பட்ட கார்டூன் இல்லையே ? பிறகு எதற்காக இத்தனை கூப்பாடுகள். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதன் யாராவது இருக்க முடியுமா ? அம்பேத்கரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்தானே ? புத்த மதம், தலித்துகளை சாதீயத் தளையிலிருந்து விடுவிக்கும் என்று அம்பேத்கர் போட்ட கணக்கு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கிறதே ….
இந்தப் பாடப்புத்தகங்களைத் தயார் செய்த யோகேந்திர யாதவ் மற்றும் சுகாஸ் பல்சிகர் ஆகியோர் மிகச் சிறந்த அறிஞர்கள். நம் மாணவர்கள், அனைத்து துறையிலும் கற்றுத் தேர்ந்து மிகச் சிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

யோகேந்திர யாதவ்
யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை தத்துவம் பயின்று விட்டு, பஞ்சாப் பல்கலைகழகத்தில் எம்.பில் பயின்றவர். சிஎன்என் ஐபிஎன் போன்ற தொலைக் காட்சிகளில், தொடர்ந்து தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருபவர்.
சுகாஸ் பல்சிகர் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர். பூனே பல்கலைகழகத்தில், சமூகவியல், அரசியல், அரசியல்பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் தொடர்ந்து பாடம் எடுத்து வருபவர்.
இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், இவர்கள் இருவருமே, கடுமையான தலித் ஆதரவாளர்கள். இந்திய சமூக அமைப்பை நன்கு புரிந்து, தலித்துகளுக்கும் பிற்பட்டவர்களுக்கும், அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்கள்.
பாராளுமன்றத்தில், இந்தக் கார்டூன் பற்றிய சர்ச்சை எழுந்ததால், இவர்கள் இருவருமே, என்சிஇஆர்டி பாடக்குழுவிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
சனிக்கிழமை அன்று மதியம், சுகாஸ் பல்சிகரின் பூனே அலுவலகம், குடியரசுக் கட்சித் தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த யோகேந்திர யாதவ், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அம்பேத்கரின் ஆழமான கருத்துக்களை நான் சுகாஸ் பல்சிகரிடமே பயின்று வந்தேன். அப்படிப்பட்டவரின் அலுவலகத்தை அம்பேத்கர் பெயரால் தாக்கியுள்ளது, வருந்தத்தக்கது, வேதனை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அம்பேத்கரைப் பற்றிய இந்தக் கார்டூனை தடை செய்ய வேண்டும் என்றால், இந்தியாவில் அத்தனை கார்டூன்களையும் தடை செய்ய வேண்டும். எந்த அரசியல்வாதியைப் பற்றியும் கார்டூன் வரையவே முடியாது.
சங்கர் என்று அழைக்கப்படும் சங்கர் பிள்ளை, கேரள மாவட்டம் காயாம்குளம் என்ற பகுதியில் பிறந்தவர். சிறிய வயதில், இவரது ஆசிரியர் படுத்திருப்பது போல ஒரு கார்டூன் வரைந்ததற்காக தலைமை ஆசிரியரால் கண்டிக்கப்பட்டார். ஆனால் இவரது மாமா, இவரது திறமையை ஊக்குவித்து, தொடர்ந்து கார்டூன் வரைய உற்சாகப்படுத்தினார். மாவேலிக்கராவில் ஓவியம் பயின்ற சங்கர், திருவனந்தபுரம் மஹராஜா கல்லூரியில் பட்டம் பயின்றார். பிறகு மும்பைக்குச் சென்ற சங்கர், இந்துஸ்தான் டைம்ஸ், தி ப்ரீ ப்ரெஸ் ஜர்னல் போன்ற பத்திரிக்கைகளில் தொடர்ந்து கார்டூன் வரைந்தார்.

சங்கர் பிள்ளை
மற்ற பத்திரிக்கைகளில் பணியாற்றி விட்டு, சுதந்திரத்துக்குப் பிறகு, சங்கர்ஸ் வீக்லி என்ற பத்திரிக்கையை தொடங்குகிறார். அந்தப் பத்திரிக்கையை தொடங்கி வைத்தது யார் தெரியுமா ? ஜவஹர்லால் நேருதான். ஆனால், நேருவைப் பற்றி சராமாரியாக கார்டூன்களை வரைந்து தள்ளியவர் சங்கர் பிள்ளை.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பிறகு, கார்டூனிஸ்டுகளை அரசு கைது செய்யும் என்று அறிந்து, இவராகவே முன் வந்து சங்கர்ஸ் வீக்லி பத்திரிக்கையை நிறுத்தினார். இந்திரா காந்தி, இவரது பத்திரிக்கையை நிறுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து சங்கருக்கு கடிதம் எழுதினார்.

இப்படிப்பட்ட சிறப்பான பின்புலம் உள்ளவர்தான் கார்டூனிஸ்ட் சங்கர். அந்தக்கால அரசியல் சூழலை வைத்து, வரைந்த கார்டூனை இன்றைய அரசியல்வாதிகள் அத்தனை பேரும் சேர்ந்து அவதூறு செய்வது, இறந்த கார்டூனிஸ்ட் சங்கருக்கு செய்யும் அவமரியாதையே ஆகும். இந்திய அரசாங்கம், அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என்று வழங்கிய பல்வேறு பட்டங்கள் அனைத்தையும், பாராளுமன்றத்தில் நடந்த சம்பவங்கள், சாக்கடையில் எரிந்து விட்டன.
இந்தியாவில் தொடர்ந்து கார்டூன்களையும், கார்டூனிஸ்டுகளையும் சாடும் போக்கு இருந்து வருகிறது. ஆனந்த விகடனில் அட்டைப்படத்தில் வந்த ஒரு நகைச்சுவை துணுக்குக்காக, ஆனந்த விகடன் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை விதித்தார் “வானளாவிய அதிகாரம்” படைத்த அன்றைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன்.
சமீபத்தில், ஒரு கார்டூன் வரைந்து அதை இணையத்தில் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டதற்காக, ஒரு பேராசிரியரையும், அவர் நண்பரையும் சிறையிலடைத்தார் மம்தா பானர்ஜி.

தமிழகத்திலும், கார்டூன்களை ரசிக்காமல் கோபப்படும் போக்குக்கு, கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருமே விலக்கல்ல. உதயநிதி ப்ரொடக்ஷன்ஸ், துரை தயாநிதி தயாரிப்பு, கலைஞர் கதை வசனம், அருள் நிதி ஹீரோ என்று ஒரு கார்டூன் போட்டதற்காக, தினமணி பத்திரிக்கையை ஒரு பொதுக்கூட்டத்தில் வறுத்து எடுத்தார் கருணாநிதி. அப்போது அரசு விளம்பரத்தையும் நிறுத்தச் சொன்னதாகத் தகவல்.
இப்படி சகிப்புத்தன்மையை சுத்தமாக இழந்து கொண்டே வந்தால், நாளை இந்தச் சமுதாயம் மிருகங்களின் சமுதாயமாகவே மாறி விடும். நகைச்சுவை உணர்ச்சி இல்லாத நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வேறுபாடு ?
சங்கரின் சில கார்டூன்கள்




|
Comments
அப்படிபட்ட பிரிவில் வந்த ஒருவர், மெத்தப் படித்து, ஒரு மிகப்பெரிய மக்களாட்சி நாட்டிற்கு சட்டத்தை வடிவமைத்தவரை பற்றி மட்டும் வரலாற்றுப்பதிவு என்பதாக பாடப் புத்தகத்தில் கொண்டுவந்தது கண்டிப்பாக அவரை இழிவு செய்வதாகவே இருக்கும். யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை தத்துவம் பயின்றார் என்பதற்காக, மிகபிரபலமான கார்ட்டூனிஸ்ட் சங்கர் பிள்ளை என்பதற்காக இப்போது அந்தக் கார்ட்டூன் பாடப்புத்தகத்தி ல் வந்தது சரி என்று சொல்வது ஏற்புடையது அல்ல.
கார்டூனை தடை செய்யவேண்டும் என்பது முட்டாள்தனம். ஆனால் அது பாடபுத்தகத்தில் வந்தது ஏற்புடையது அல்ல. இன்னும் சொல்லபோனால் நமது பாடபுத்தகங்கள் பலவிசயங்களை திரித்து கற்பிக்கும் இந்த காலகட்டத்தில் 'சட்டம் அமைக்கும் நெருக்கடியை விலாவரியாக விளக்குகிறேன்' பேர்வழி என்று இப்படி ஒரு கார்டூன் புத்தகத்தில் தேவை இல்லை.
Your quote is a perfect exmaple to show where this country is going. You may be able to prove that Prabhakaran is a terrorist but do you really think it is OK to say kannagi is prostitute?
Yes, Pillai, a casteist's imaginary catoon that depicts false histtory has got into history book, shame of Indian historians...
The Right to Equality;The Right to Freedom;The Right against Exploitation;Th e Right to Freedom of Religion;Cultur al and Educational Rights;The Right to Constitutional Remedies….
எஸ்.ஏ.இபுறாஹிம். சௌதி....
Dear Ben,
மனு தர்மம் எனபதும் அந்த நாளைய நியாயம். இப்போது காலாவதியான ஒரு வரலாற்று ஆவணம். அவ்வளவுதான். அதுவும் இந்த கார்ட்டூன் போன்று காலாவதியாகிவிட் டது.
மேலும், மனுதர்மத்தின் படி சூத்திரன் கொலை செய்தால் அவனுக்கு மிதமான தண்டனையும் , பிராமணன் கொலை செய்தால், அது "உணர்ச்சி வசப்படாமல் முடிவு செய்யப்பட்ட கொலை" என்று பிராமணனுக்கு மரண தண்டனையே கொடுக்க சொல்கிறது. கன்றை தேரேற்றிக் கொன்ற இளவரசனுக்கே மரணதண்டனை என்றவர் மனு. பிறிதெல்லாம் திராவிட கட்சிகளினால் சொல்லப்பட்ட பொய்கள்.
ஆரியன் என சொல்லப்படும் சுப்பிரமணியன் சுவாமி, "ஜீனியஸ் அம்பேத்காரின்" அரசியல் சாசனச் சட்டமே தனக்கு பெரும் உதவியாக இந்த 2 -G வழக்கில் உதவியது என்று நேரடியாகப் புகழ்கிறார். ஆனால் இந்த திராவிட கட்சிகளின் பிரச்சாரத்தால், மனு தர்மத்தை எல்லோரும் எள்ளுகின்றனர். யாருக்கு யார்மேல் துவேஷம் என்று சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.
Add On: அந்த கார்ட்டூனிஸ்ட் புத்திசாலியாக இருந்திருந்தால் நத்தை ஒட்டின்மேல் பாராளுமன்றம் போல் தூண்களும், சன்னல்களும் வரைந்திருக்கலாம ்.
But considering this issue is raised now, it is merely to create a scene, despite the fact the cartoon is too early for +2 students.
சகிப்புத்தன்மை என்பது எங்கே இருக்கவேண்டும் என்பது முக்கியம், நீ சொல்லும் சகிப்புத்தன்மை தான் - கருநாக நிதி, ஈழ மக்கள் உயிரிழக்கும்போத ு கொண்டிருந்தது. அது சகிப்புத்தன்மைய ல்ல, கையாலாகாத்தனம், கயவாளித்தனம்.
இந்த அதிமுக அரசில் சவுக்குக்கு வேண்டுமானால் அந்த நிலைக்கு வந்திருக்கலாம்.
அம்பேத்கரை, மக்களுக்கு அவரளித்த பங்களிப்பை - கேலி செய்யும், கொழுப்பெடுத்த கூட்டத்தை செருப்பாலடிக்கு ம் தோழர்களுக்கு அந்த கையாலாகாத்தனம் தேவையில்லை.
பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கஈரமித்து அங்கிருந்த ஹிந்துக்களை கொலையும் கற்பழிப்பும் ஆயிரக்கணக்கில் செய்து கொண்டிருந்தபோது , உடனடி நடவடிக்கை எடுக்காமல் நேரு நத்தையை விடக் கேவலமாக "இப்போது நாம் ராணுவத்தை அனுப்பினால், ஐ நா சபையில் என்ன சொல்லுவார்கள்?" என்று கேட்டு மனேக் ஷா வுக்கு கொடுக்காமல் இருந்தார். அதையெல்லாம் கார்டூனாகப் போடவேண்டிதுதானே ? அம்பேத்கார் எழுதிய அற்புதமான அரசியல் சாசனம் ஐம்பது வருடத்துக்குப் பின் மாறுதல் செய்யப்பட வேண்டியதே. ஆனால் விமானப் படைத் தளபதி, ராணுவ அமைச்சரிடம் "நம் விமானப் படை பலம் பாகிஸ்தானைவிட வலுவற்று இருக்கிறது" என்ற பதற வேண்டிய ரகஸ்யத்தை சொன்னால் அது அமைச்சகமே பத்திரிகையில் போடும் அளவில் அம்பேத்கரின் அரசியல் சாசனச் சட்டம் மீறப்பட்டுள்ளது . அதை கார்ட்டூனாகப் போட வேண்டியதுதானே? அதையெல்லாம் விட்டுவிட்டு தூங்காமல் உழைத்த அம்பேத்காரை கார்ட்டூனில் போடுவதா?
continued...
சரஸ்வதியை நிர்வாணமாகவும், சீதையுடன் அனுமன் நீண்ட வாலை விட்டு உடலுறவு கொள்வது போலும் சித்தரிக்கப்பட் டபோது இதே மாதிரி மக்களுக்கு சகிப்புத்தன்மை போதிக்கபடுவதேன் ?
இதே ஏதோ ஒரு டென்மார்க் பத்திரிக்கை முகம்மது நபியின் தலைக்குப் பின்னால் பிறைநிலவு இருப்பது கொம்பு முளைத்தது போன்றிருப்பதாக கார்ட்டூன் வரைந்தபோது அந்த பத்திரிகையையோ அல்லது கார்ட்டூனையோ ஒரு முறை கூட பார்த்திராத மக்கள் பொங்கி எழுந்தனர். ஹைதராபாத்திலும் , பெங்களூரிலும் மட்டுமே நூறு கோடிக்கு மேல் சேதம் விளைவித்தனர். பஸ்களையும், இஸ்லாமியர் அல்லாதோரின் கார்களையும் கொளுத்தினர். டென்மார்க் பத்திரிகைக்கும் ஹைதராபாத் காருக்கும் என்னங்க சம்பந்தம்? என்று கேட்டு எந்த பத்திரிகையும் ஏன் சகிப்புத் தன்மை போதிக்கவில்லை?
போதனைகள் அம்பெத்காருக்கோ , இந்த புண்ய பூமிக்கோ தேவை இல்லை. அரசியல்வாதிகளுக ்கும் , பத்திரிகைகளுக்க ும்தான். உணர்சிகளுக்கு போதனைகள் தேவை இல்லை. வெறிக்குத்தான் தேவை.
நேருவை அல்லது காந்தியை அம்பேத்கர் சட்டையால் அடிப்பது போல் போட்டால் காங்கிரஸ் விட்டுவிடுமா?
பாடப்புத்தகத்தி ல் ஒரு தலைவரை போட்டு குழந்தைகளுக்கு ஏன் நஞ்சை விதைகிறர்கள்.
1979 !, அதற்குப்பிறகு 1989 வரை தி.மு.க. வால் பதவிக்கு வரமுடியவில்லை. அதுவும் இலங்கைப்பிரச்சன ையை வைத்து, "திராவிடனுக்கு ஒரு நாடு தமிழீழ நாடு" என்று நீயும் க.அன்பழகனும். இப்போது தயாநிதி,கலாநிதி பிராமணர், அன்பழகன் வெள்ளைக்காரர்(வ ெள்ளாளர்), இலங்கைத்தமிழங்க ளும், மலேஷியா சூதாட்ட பில்லிநேயர் டி. அனந்தகிருஷ்ணன் பெண்டாட்டி பிரஞ்ச்சுகாரி, லண்டன் பெருதுப்பிள்ளை மருமகள் வெள்ளைக்காரி நாங்கள் யாழ்ப்பாண "ஆரிய சக்கரவர்த்தி" வழிவந்தவர்கள் என்று பல அப்பாவி மக்களின் உயிரை பழிவாங்கி இலாபமடைந்தீர்கள .
1980 களில் எங்களைப்போன்றவர ்களையும் பிராடு இலங்கைத்தமிழர்க ளுக்காக ஊர்வலம் நடத்தவைத்து போலீசிடம் அடிவாங்க வைத்தீர்கள்.
ஏன்யா, நீ ஆட்சியில் இருந்தால் மற்றவர்களுடன் இணைவியா ?.
These people were above the problems to common men and ran the independence agitation sweetly enjoying with britishers also.
- Candor
http://www.hindustantimes.com/News-Feed/Books/Book-suggests-Gandhi-was-racist-bisexual/Article1-678805.aspx#disqus_thread
Ambedkar not womanizer like Nehru, Gandhi was humbug, he did not bring equality in Indian society, killed by a Hindu man. Ambekar was the most intelligent person in 20th Century India. If it is British today these guys (Yadave and Pillai) will be in Jail will be hanged.
வரைவுக் குழுவின் தலைவராக இருந்திருந்தால் அவ்ரது படத்தையல்லவா வரைந்திருப்பார் கள் ? இதைப் புரிந்து கொள்ளாமல் பாராளுமன்றத்தில ் அவர் பேசியதும் அதை அப்படியே ஒத்துக் கொண்டு கபில் சிபலும் பிரணாப் முகர்ஜி பேசியதும் வெட்கக் கேடு
அம்பேத்கர் மட்டுமல்லாமல் பல தலைவர்களை பற்றி கேலி சித்திரம் உண்டு. காந்தி, நேரு மற்றும் பலர். அந்த சித்திரங்கள் உண்டா அந்த பாட புத்தகத்தில்?
சாட்டை கொண்டு அடித்து அரசு ஊழியர்களை வேலை வாங்குவேன் என்று சொன்ன ஜெ. போல படிபவர்களின் மனதில் பதியாதா?
தனிப்பட முறையில் அம்பேத்கர் பற்றிய புத்தகம் எழுதி அதில் பலதரப்பட்ட கேலி சித்திரத்தோடு இதையும் போட்டால், யார் கேள்வி கேட்க போகிறார்கள்?
கேலி சித்திரத்திற்கு சட்டமன்றத்தில் வைத்து ஜெ அரசு தமிழக அரசாக இருந்து தண்டித்ததற்கும் , குடும்ப கார்டூனுக்கு அரசியல் ரீதியாக பொதுகூட்டத்தில் வறுத்தெடுத்ததிற ்கும் வேறுபாடு தெரியவில்லையா?
I've always wondered from where did/do you get so much information/materials/docu's...et al...
The way you grasp a matter, the way you analyse and put down in words the same to politically-naive people is simply amazing...!
RSS feed for comments to this post