முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
அடங்காத ஐஜி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 15 மே 2012 19:39

Pramodkumar_2 

 

பிரமோத் குமார்.    ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டாலும், ஐஜி என்ற கோதாவிலேயே இன்னும் பிரமோத் குமார் நடந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரின் தற்போதைய நிலை குறித்துப் பார்க்கும் முன், பிரமோத் கைது செய்யப்படுவதற்கான பின்புலத்தைப் பார்ப்போம்.  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் குமார் 1989ம் ஆண்டு நேரடியாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர். மேற்கு மண்டல ஐஜியாக இருந்தபோதுதான் இந்தச் சிக்கலில் மாட்டுகிறார்.

பேராசைப் பிடித்தவர்களுக்கென்றே உருவாக்கப்படும் பல்வேறு மோசடித் திட்டம் போலவே உருவானதுதான் பாசி பாரெக்ஸ் ட்ரேடிங் என்ற நிறுவனம்.  காந்தப்படுக்கை, ஆண்டுக்கு 24 சதவிகித வட்டி, ஒரே ஆண்டில் பணம் இரட்டிப்பு, கோல்டு க்வெஸ்ட் போன்ற திட்டங்களைப் போலவே உருவானதுதான் பாசி ட்ரேடிங்.

பாசி நிறுவனத்தார் கையாண்ட வழிமுறை எளிதானது.  50 ஆயிரத்தை எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் 1,40,944 திருப்பித் தரப்படும் என்பதுதான் பாசி நிறுவனத்தார் அறிவித்த திட்டம்.  உழைக்காமல், சீக்கிரம் பணக்காரன் ஆக வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசையில்லை ?  அறிவிப்பு வெளியானதும், அடித்துப் பிடித்துக் கொண்டு, பணத்தைக் கட்டினார்கள்.    தொடக்கத்தில் சொன்னபடி பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த பாசி நிர்வாகத்தினர், ஒரு கட்டத்தில் பணம் திருப்பிக் கொடுப்பதை நிறுத்துகின்றனர்.  பாசி நிறுவனம் கொடுத்த செக்குகள், பணமில்லாமல் திரும்புகின்றன.

DSP_Rajendran

டிஎஸ்பி ராஜேந்திரன்

இந்தச் சூழலில், பணத்தை இழந்த பொதுமக்கள், காவல்துறையிடம் புகார் தெரிவிக்கத் தொடங்குகின்றனர்.  அந்த நேரத்தில் மேற்கு மண்டல ஐஜியாக இருக்கிறார் பிரமோத் குமார்.

பாசி நிறுவனத்தை நடத்தி வந்த மோகன்ராஜ், கதிரவன் மற்றும் கமலவள்ளி ஆகியோர் மீது வழக்கு திருப்பூர் மத்தியக் குற்றப்பிரிவு குற்ற எண் 26 / 2009ல் வழக்கு பதியப்படுகிறது.  இதையடுத்து, தலைமறைவான மோகன்ராஜ், கதிரவன் மற்றும் கமலவள்ளி ஆகியோரை கடுமையாக தேடுகிறது காவல்துறை. திருப்பூர் டிஎஸ்பியாக இருந்த ராஜேந்திரன் மற்றும், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் ஐஜி பிரமோத் குமார் உத்தரவின் பேரில், பாசி நிர்வாகிகளிடம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு இடைத்தரகராக செயல்பட்டவர் ஜான் பிரபாகர் என்பவர். இவர் ஒரு பாஸ்போர்ட் வழக்கில் 18 ஆண்டுகளாக சிபிஐயால் தேடப்பட்டு வந்தவர்.  இவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிஐ அறிவித்து பட்டியலில் இவர் பெயரைச் சேர்த்திருந்தது.  ஆனால், ஜான் பிரபாகர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?   15 ஆண்டுகளாக, இந்திய போலந்து வணிக அமைப்பின் (Indo-Polish Chamber of Commerce)ன் தலைவராக இருந்து, சென்னையில், போலந்து திரைப்பட விழாக்களை திறந்து வைத்துக் கொண்டு இருந்தார்.  இந்த நிலையில்தான், பாசி நிதி நிறுவன மோசடி நடந்ததும், பிரமோத் குமாருக்காக ஜான் பிரபாகர் தலையிட்டு, பாசி நிறுவன நிர்வாகிகளிடம் பேரம் பேசுகின்றனர்.

பிரமோத் குமாரின் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், ஜான் பிரபாகர் ஆகியோர், பாசி நிறுவனத்தின் நிர்வாகி கமலவள்ளியை ஒரு கருப்பு கலர் போர்டு என்டவர் காரில் கடத்திச் சென்று ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கின்றனர்.

அங்கே கமலவள்ளிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை ஜான் பிரபாகர் மற்றும், ஐஜி பிரமோத் குமார் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி,  அரை குறை அவரை ஆடைகளோடு படம் பிடித்து, 10 கோடி தருமாறு மிரட்டுகிறார்கள்.  தனது பங்குதாரர் மோகன்ராஜுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அதன் மூலம் தப்பிய கமலவள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

மருத்துவமனையிலும், டிஎஸ்பி ராஜேந்திரன் வந்து மிரட்டுகிறார்.  அவர்கள் சொல்லியபடி, வாக்குமூலம் கொடுத்த கமலவள்ளி, இதுவரை அனுபவித்தது போதும் என்று, திருப்பூர் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வாக்குமூலமாக கொடுக்கிறார்.

இதன் பிறகு, இந்த வழக்கு சிபி.சிஐடி பிரிவுக்கு மாற்றப்படுகிறது.  அதன் பிறகு, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், நீதிமன்ற நடுவர் முன்நிலையில், நடந்த உண்மைகள் அத்தனையையும் வாக்குமூலமாக கொடுக்கிறார். பிரமோத் குமார் உத்தரவின் பேரில் கமலவள்ளி உள்ளிட்டோரை மிரட்டி, பணம் பறித்ததை அப்படியே கூறுகிறார்.

சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டும், அங்கேயும், பிரமோத் குமாரை காப்பாற்ற சிபி.சிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வேலை செய்கிறார்கள். சிபிஐ சிஐடி விசாரணைக்குப் போன இந்த வழக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாமல், அப்படியே கிடப்பில் போடப்படுகிறது.

இதன்பிறகே, நீதிமன்ற உத்தரவின் பேரில், இவ்வழக்கின் புலனாய்வு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகும், சில வட இந்திய அதிகாரிகள் பிரமோத் குமாரை காப்பாற்ற தொடர்ந்து முயன்று வந்தனர். இது குறித்து சவுக்கில் “காப்பாற்றப்படுகிறாரா பிரமோத் குமார்”    என்ற தலைப்பில் நவம்பர் 2011ல் ஏற்கனவே கட்டுரை எழுதப்பட்டுள்ளது, சவுக்கு வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

பிரமோத் குமார் அவ்வளவு செல்வாக்காகத் திகழ்ந்தார்.  தமிழகத்தில் உள்ள வட இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் அத்தனை பேரும், பிரமோத் குமாரை காப்பாற்ற தங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சிகளை எடுத்தனர்.    சிபிஐக்கு இவ்வழக்கின் புலன் விசாரணை மாற்றப்பட்டு, கமலவள்ளி, மோகன்ராஜ், மற்றும் கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டனர்.  அதன் பிறகும், பிரமோத் குமாரை மட்டும் கைது செய்யாமல் இருக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27_08_2011__DHINAKARAN

தானாக சென்று பொறியில் சிக்கும் எலி போல பிரமோத் குமார், முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததுதான் அவருக்கு வினையாக முடிந்தது.  உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததும், சிபிஐக்கு வேறு வழியில்லாமல் போய், பிரமோத் குமாரை கைது செய்ய நேர்ந்தது.

கைது செய்யப்பட்டு, ஐந்து நாள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட போது கூட, பிரமோத் குமார், தான் ஒரு கைதி என்பதை மறந்து விட்டு, சிபிஐ அதிகாரிகளிடம், நான் யார் தெரியுமா ? என்று மிரட்டியிருக்கிறார்.  “என்னை மட்டும் விசாரிக்கிறீர்களே…. நான் மட்டுமா பணம் வாங்கினேன்..  கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் வாங்கினார், லத்திக்கா சரண் வாங்கினார், வன்னியபெருமாள் வாங்கினார், அருண் வாங்கினார், நக்கீரன் காமராஜ் வாங்கினார், ஜாபர் சேட் வாங்கினார்.  அவர்களையெல்லாம் விசாரிக்காமல் என்னை மட்டும் ஏன் விசாரிக்கிறீர்கள்” என்று ஏக சவடால் விட்டுள்ளார்.

சிபிஐ காவல் முடிந்து, பிரமோத் குமார், கோவை சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, கோவை சிறை அதிகாரிகளிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார்.   தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், நெஞ்சு வலிக்கிறது என்றும் மிரட்டியிருக்கிறார்.   உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில், இவருக்கு நெஞ்சு வலியெல்லாம் இல்லை என்று மருத்தவர்கள் கூறி விட்டனர்.  தன்னை கோவை சிறையிலிருந்து, புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் பிரமோத்.  அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சிறை நிர்வாகமே, பிரமோத் குமாரை புழல் சிறைக்கு மாற்றி உத்தரவிட்டு, அதன் படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளளார் பிரமோத்.

புழல் சிறையில் உயர்பாதுகாப்புப் பிரிவு 1ல் அடைக்கப்பட்டுள்ள பிரமோத் குமார், வழக்கமாக கைதிகளை அடைப்பது போல 6 மணிக்குத் தன்னை அடைக்கக் கூடாது என்றும், எட்டு மணிக்குத்தான் அடைக்க வேண்டும் என்றும் அடம் பிடித்து தகராறு செய்திருக்கிறார். சிறை நிர்வாகமும், வேறு வழியின்றி 8 மணிக்கே இவரை அடைத்து வருகிறார்கள்.  இரவு எட்டு மணிக்கு மேல், கோதண்டராமன் என்ற சிறை வார்டர், பிரமோத் குமாருக்கு செல்போன் வழங்குவதாகவும், அதை வைத்து இவர் இரவு முழுவதும் செல்போனில் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புழல் சிறை 2ன் கண்காணிப்பாளராக உள்ள, கருப்பண்ணன் என்ற அதிகாரி, பிரமோத் குமாருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைக் கைதியாக இருந்தாலும், தனது செல்வாக்கு குறையாமல், தன்னை இன்னும் ஐஜி என்றே கருதிக் கொண்டு பிரமோத் குமார் நடந்து கொண்டு வருவதாகத் தெரிகிறது.

ஒரு ஐபிஎஸ் அதிகாரி, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று, அவளை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, இந்தத் தகவலை அந்தப் பெண்ணும் மற்றவர்களும் புகாராகக் கொடுத்தும், இரண்டு ஆண்டுகளாக பிரமோத் குமாரை சஸ்பெண்ட் செய்யாமல், 20 ஆயிரம் காவலர்கள் அவருக்குக் கீழ் பணியாற்றும் வகையில், அவரை ஆயுதப்படை ஐஜியாக நியமித்து அழகு பார்த்து வரும், தமிழக டிஜிபி ராமானுஜம், நேர்மையான அதிகாரியா ?

ராமானுஜம் நினைத்திருந்தால், பிரமோத் குமாரை ஒரே நாளில் சஸ்பென்ட் செய்திருக்க வேண்டாமா ?  இப்படிப்பட்ட நபரை, ஆயுதப்படை ஐஜியாக நியமித்து, அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கி, சிபிஐ அவரைக் கைது செய்யும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அளவில்தான் இருக்கிறது தமிழக காவல்துறை.

இத்தனை ஆதாரங்கள் இருந்தும், இப்படிப்பட்ட ஒரு நபர் மீது நடவடிக்கை எடுக்க எத்தனை நாள் ஆகிறது பாருங்கள் ?  இதே தவறை ஒரு சாதாரண நபர் செய்திருந்தால், தமிழக காவல்துறையும் இந்த அதிகாரிகளும் இப்படி வேடிக்கைப் பார்த்துக்    கொண்டிருப்பார்களா ?

தவறு செய்த ஒரு நபர் மீது நடவடிக்கை எடுக்க வைக்க எத்தனை நாள் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள்.

 

Comments  

 
+3 #16 Robinhood 2012-07-04 19:59
பொருக்கிய செருப்பால அடித்து சுட்டுதல்லனும். யிதுவரை நடவடிக்கை எடுக்காத வுயரதிகரிகல் மெலயும் நடவடிக்கை யெடுக்கனும். கர்ப்பழிப்பு செய்தவன அதுவும் ஒரு அதிகாரியா இருந்து இப்படி செய்தவன அவனுடய.................அருத்துபோடனும்.
Quote
 
 
+2 #15 Seren 2012-05-20 15:42
Oru nalla police kooda intha tamilnatula illaya?
ivanuga policela join pannurathuku pathila vera tholil senju polaikalam. Ivanga pondatti pillaigalleam vetka padanum.
Quote
 
 
+2 #14 Komalavalli 2012-05-18 19:46
இது எளியாரை வலியார் வென்றால்.... என்று போகிறது. திருடனின் எஜமானன் போலிஸ்காரன், கேஸ் இல்லையென்றால் வள்ர்த்த பிராணியையே உள்ளெ தள்ளி விடுவான்.
இலங்கைத்தமிழர்க ள் பிரிட்டனின் அன்பான வளர்ப்புப் பிராணிகள் போன்றவர்கள். சில சமயம், பிரிட்டிஷ் சிவில் அதிகாரிகளுக்கும ் இலங்கைத்தமிழர்க ளுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் பின்லேடன் போன்று தன் வளர்ப்புப்பிராண ியை சுத்தமாக அழித்தொழிக்க "ஆழமான" வெறுப்புக் கொண்டிருந்ததும் பிரிட்டிஷ்தான். வளர்ர்ப்புப் பிராணி எத்தகைய அநியாயமான "தமிழ்" பெயரால் ஏற்ப்படுத்தியுள ்ளது என்பதை புரிந்துக் கொள்க.
"A Swedish study that found the UK issued more arms-export licenses for Sri Lanka during 2001-2008 than any country in Europe"- Frontline club debate 16.05.2012- Frances Harrison, BBC correspondent.
Quote
 
 
+4 #13 DR ASHOK 2012-05-18 09:44
porukki police...........................these IPS PEOPLE ARE RICHEST PERSONS IN TAMILNADU.
Quote
 
 
+6 #12 SUTHIRAN 2012-05-17 05:52
இந்த பிரமோத்குமார் மஞ்சள் துண்டுத் தாத்தாவின் இணைவி ராஜாத்தீக்கு கப்பம் கட்டியதால் தான் சென்ற ஆட்சியில் கைது செய்யப்படாமல் அர்ச்சனா ராமசுந்தரம் போன்ற உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் தப்பித்து வந்தார் ! ஆனால் அ தி மு க ஆட்சியில் மன்னார்குடிக் கும்பல் தலைவியும் உ பி சகோதரியுமான சசிக்குமா கப்பம் கட்டியுள்ளார்? பின் ஏன் அவருக்கு புழலில் இவ்வளவு ராஜ மரியாதை? சவுக்கு இதை நோண்டித் துருவி முழு விவஹாரத்தையும் விவரமாக எழுதுங்களேன்!
Quote
 
 
+5 #11 Ravi 2012-05-16 21:48
இப்படி தொடர்ந்து நீதி மறுக்கப்படுவதே பின்னாளில் பெறும் வன்முறைக்கு வித்திடுகிறது. நான் ஏற்கனவே பலமுறை சொல்லி வருவது போல உயர் போலீஸ் அதிகாரிகள் வெள்ளைக்காரன் காலத்தில் என்ன சலுகைகளை அனுபவித்து வந்தார்களோ அதை தொடர்ந்து அனுபவிப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன்ர். வெள்ளைக்காரன் காலத்தில் எஸ்.பி பதவி முதல் மேல் நோக்கி அனைத்து பதவிகளிலும் பலகாலம் வெள்ளையரே இருந்தனர். அவர்கள் செய்யும் தவறை இந்தியர்யாரும் விசாரிக்க முடியாது. மேலும் அவர்கள் வேறு ஒரு நாட்டில் இருப்பதால் அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டனர். தங்களை விசாரிக்க இந்திய கோர்ட்டுக்கே அதிகாரம் இல்லை என்று வாதிட்ட வழியில் வந்த இந்த இந்திய காவல் துறை அதிகாரிகள் இப்படித்தான் செயல்படுவார்கள் . இவர்கள் பயிற்சி பெறும் மிசெளரி பயிற்ச்சி கல்லூரியிலேயே இவர்களை ஏதோ வானத்தில் இருந்து வந்தவர்களைப் போலத்தான் நடத்தப்படுகின்ற னர். அந்த கல்லூரியில் பயிலும் போதே இவர்களூக்குள் ஒரு நெட்வொர்க் வேறு உருவாகி விடுகிறது. பல நல்ல காரணங்களுக்காக அதை நிர்வாகமே ஊக்குவிக்கிறது. ஆனால் நம் பிரமோத்குமார் போன்றவர்கள் அந்த பேட்ச்மெட் விசுவாசத்தை பலவேறு வழிகளில் தவறாக உபயோக்கிறார்கள் . முதலில் காவல் துறையில் இருக்கும் இந்த வெள்ளைக்கார மனோபாவத்தை ஒழித்து இந்த அதிகாரிகளை கொஞ்சம் தரைக்கு இறங்கி வர செய்ய வேண்டும். அதை அடைய நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தல் அந்த மாற்றத்தை நாம் அடைவோமா என்பதே சந்தேகம். ஏனென்றால் சட்டத்தை இயற்றுபவன் கெட்டுவிட்டான். சட்டத்தை செயல்படுத்துபவன ் கெட்டு விட்டான். சட்டத்தை காப்பாற்றி நீதி வழங்குபவன் கெட்டுவிட்டான். இந்த நிலையில் மிச்சம் என்ன உண்டு..?
ரவி - இங்கிலாந்து.
Quote
 
 
+28 #10 Guna sekar 2012-05-16 18:36
நல்ல மனிதர்கள் - மனம் வெதும்பி சொல்கிறேன் - வாழ்வதற்கு இந்தியா ஏற்ற நாடு அல்ல.
Quote
 
 
+17 #9 கிராமத்தான் 2012-05-16 17:49
இந்த நாட்டில் யார் தான் இந்த குற்றவாளியை தண்டிக்க தகுதியானவர்? யாருக்கு அதிகாரம் உள்ளது? அப்பாவி மக்களை மட்டும் கொடுமைபடுத்தும் அயோக்கியர்களே... உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையே? கடமை தவறும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பட்டியலில் தான் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று ஊடகங்களின் வழியாக பொய்பிரசாரம் செய்பவர்களே - உங்களின் மீசையை சரைத்து எடுத்து விட்டு பின் தொழிலை தொடருங்கள். இப்போதும் அனைத்து தமிழ் ஊடகங்களும் மனசாட்சியோடு, கொள்கையில்(கொள் ளையில் அல்ல!) உண்மையை சவுக்கு போல மக்களுக்கு எடுத்துச் சென்றாலே போதும்; விலை போகாமல் கடமையை செய்து மக்களை கொடுமையிலிருந்த ு காப்பாற்றுவார்க ளா?
Quote
 
 
+8 #8 jegan usa 2012-05-16 17:21
இந்தியாவில் தவறுகளின் அளவு தவறு செய்பவர்களை கொண்டே மதிப்பீடபடுகிறத ு .
Quote
 
 
+10 #7 கனிமொழி கபடநிதி 2012-05-16 17:13
இவனுங்க சோத்தை திங்கறாணுங்களா இல்லை மலத்தையா?
Quote
 
 
+9 #6 Force Vasan 2012-05-16 14:47
ஆள்பவர்களுக்கு இந்த மாதிரியான காவலர்கள் தான் தேவை. கருணாநிதி ஜாபர்சேட் போன்ற வேண்டப்பட்டவர்க ளுக்கு செய்வார், ஜெயாவோ, காவல்துறையினர் அனவருக்கும் முதல் மரியாதை செய்வார். குற்றம் புரிபவர்களுக்கு காக்கிச்சட்டைகள ை பகைக்க முடியாது. அது போலவே குற்றவாளிகள் இல்லாமல் போலிஸ் பொழைப்பு நடக்காது. மக்கள் நிலைதான் எப்போதும் மிகப் பெரிய? அல்லது !
Quote
 
 
+1 #5 fool 2012-05-16 14:19
only solution to stamped this kind people is maiost nad naxals...
Quote
 
 
+11 #4 Kishore 2012-05-16 12:31
மாவோயிஸ்டுகளும் , தீவிரவாதிகளும், ஏன் இப்படி பட்ட அயோக்கியர்களை கடத்துவதில்லை? மரண பயம் இல்லாதவரை இவர்கள் ஒரு நாளும் திருந்த போவதில்லை. நம்ம ஆண்டி முத்து ராசாவுக்கு என்ன ஆனது? 2ஜி கதையும் முடிந்து விட்டது? அவர்கள் நாட்டை மக்களை, சுரன்டி சேர்த்த சொத்தை சுகமாக அனுபவிக்க போகிறார்கள். நாமும், இதைவிட பெரிய ஊழல் வராதா, வாய் கிழிய பேசுவதற்க்கு என்று காத்து கொண்டிருப்போம்! !! வாழ்க ஜனநாயகம்.
Quote
 
 
+18 #3 Arun76 2012-05-16 11:25
இதுவே யாராவது உள்பாவாடைய திருடி இருந்தா.. இந்நேரம் இந்த நேர்மையான ஆபிசர்ஸ் என்கவ்ண்டர் செஞ்சு நாங்க யாரு தெரியும்ல? அப்படி இப்படின்னு கலர் கலரா போஸ் குடுதுருப்பானுங ்க.. பாங்க்ல கொள்ளை அடிச்சவனுக்கு என்கவுண்டர்நா.. ஒரு பொன்னையும் கடத்தி கெடுத்து பணத்தையும் திருடுன இவனுக்கு என்ன தண்டன குடுக்கலாம்?
இந்த பொறுக்கிக்கும் உதவி செய்ய ஆளுங்க இருக்காங்களா என்ன? இவனுக்கெல்லாம் உதவி செய்யற அவன் எவ்வளவு பெரிய கேடியா இருக்கணும்..
Quote
 
 
0 #2 Thyagu 2012-05-16 10:30
http://arrkay.blogspot.in/2012/05/blog-post_9346.html

See the Same post in the Above mentioned URL.....
Quote
 
 
+29 #1 Raja Saga 2012-05-15 21:27
ஐ.பி.எஸ் ஜாதி, தனது ஜாதிக்காரனை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்யும். அது மாநில ஐ.பி.எஸ், மத்திய ஐ.பி.எஸ் என்று பிரித்துப்பார்க ்காது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 188 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9051
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week53051
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month275311
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13191678