|
1967ல் சட்டமன்றத் தேர்தலை திமுக சந்தித்த போது, அப்போது இருந்த விலைவாசி உயர்வையொட்டி திமுக வைத்த முழக்கங்கள் “கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா”, ”பக்தவச்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி”, ”காமராஜ் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சி”, ”கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்” என்பது போன்ற முழக்கங்களை வைத்துத்தான் ஆட்சியைப் பிடித்தனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம் என்றனர் திமுகவினர். அறிஞர் அண்ணா “ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்” என்றார். ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்க தேவையான மானியத்தை வழங்க மத்திய அரசு மறுக்கிறது, ஏழைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்றனர். இதற்கு பதிலாக காஷ்மீரில் மானிய விலையில் கோதுமை வழங்கையில், தமிழ்நாட்டுக்கு மானியத்தை மறுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று எதிர்க்கேள்வி கேட்டனர்.
இப்படி அரிசியை வைத்தே ஆட்சியைப் பிடித்தவர்கள் திமுகவினர் என்றால் அது மிகையாகாது. 1967ல் தொடங்கிய அரிசி குறித்த பிரச்சினை ஸ்பெக்ட்ரத்தை போன்ற பூதாகரமான அரிசி ஊழலில் திமுக ஈடுபட்டுள்ளதில் வந்து நிற்கிறது.

2006-2011 திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக அறிவிக்கப்பட்டது ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட அரிசி. 2006ல் ஆட்சிக்கு வந்ததும் ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்பட்ட அரிசி, 2008ல் ஒரு ரூபாயாக விலை குறைக்கப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழே இயங்கி வருபவர்களுக்கு தொடக்கத்தில் ஒரு கிலோ 2 ரூபாய்க்கும், பிறகு ஒரு ரூபாய்க்கும் அரிசியை திமுக அரசு வழங்கி வந்தது.
இந்த ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசி மத்திய அரசின் உணவுத் தொகுப்பிலிருந்து மத்திய அரசின் உணவுக் கழகத்தில் மூலமாக (Food Corporation of India), வழங்கப்படுகிறது. 2006ம் ஆண்டு முதல் 2011 வரை, வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூபாய் 5.65க்கும், வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூபாய் 8.30க்கும் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்குகிறது.

இந்த அரிசியை திமுக அரசு, முதலில் இரண்டு ரூபாய்க்கும், பிறகு ஒரு ரூபாய்க்கும் மானியம் கொடுத்து வழங்கியது. இந்த மானியம் மூலமாக தமிழக அரசுக்கு வருடம்தோறும் நான்காயிரம் கோடி வரை செலவாகிறது.
இந்த கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் ஒரு கோடியே 78 லட்சம் பேருக்கு ரேசன் மூலம் ஒரு ரூபாய் அரிசி வாங்குவதாக தமிழக அரசு கணக்கு காண்பித்து வருகிறது. இதில் 20 சதவீதம் ரேசன் கார்டுகள் போலியானவை என்பதை அப்போதைய உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய கணக்காயரின் அறிக்கைப்படி, மாநிலத்தின் மக்கள் தொகை 7.21 கோடி என்று 2011 மக்கள் தொகை அறிக்கை கூறும்போது, மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையின்படி ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள மொத்த மக்கள்தொகை 8.37 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே 2011 சென்சஸ் கணக்குப்படி, மாநிலத்தில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடியே 67 லட்சத்து 77 ஆயிரம் என்றால், வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 83 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கணக்குப்படியே எடுத்துக் கொண்டாலும் கூட, 28 லட்சத்து 6 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்து வருகின்றன.
இந்த குடும்ப அட்டைகள் அத்தனைக்கும் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வந்துள்ளதாகவே தமிழக அரசு தெரிவித்து வந்துள்ளது. புழக்கத்தில் உள்ள இந்த போலி குடும்ப அட்டைகளுக்கு உரித்தான அரிசி கடத்தப்பட்டே வந்திருக்கிறது. இந்த போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே சிஏஜி அறிக்கை கூறுகிறது.
28 லட்சத்து 6 ஆயிரம் போலி குடும்ப அட்டைகள் இருந்தன என்றால் ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி என்ற விகிதத்தில் ஒரு மாதத்துக்கு 4 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ அரிசி கடத்தப்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் நடந்த இந்த அரிசிக் கடத்தலைச் செய்தது யார் ? ஏன் இந்த அரிசிக் கடத்தலைத் தடுப்பதற்கும், போலி குடும்ப அட்டைகளை ஒழிப்பதற்கும் திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற கேள்விகளுக்கான விடை கிடைத்துள்ளது. அரிசிக் கடத்ததில் ஈடுபடுவது தனது துணைவி என்கிறபோது எப்படி நடவடிக்கை எடுப்பார் கருணாநிதி ?

அதுவும் பக்கத்து மாநிலங்களுக்குக் கூட இந்த அரிசி கடத்தப்படவில்லை. மாலத்தீவுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது தெரிந்தால் வயிறு எரிகிறதா இல்லையா ? இந்த அரிசிக்கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது, தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட ஹரி அன்ட் கோ என்ற நிறுவனம். ஹரி அன் கோ நிறுவனம் தங்களை கஸ்டம் ஹவுஸ் ஏஜென்டுகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இறக்குமதி ஏற்றுமதியில் ஈடுபடும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் நாடார், கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தகவல்கள் கூறுகின்றன. ராசாத்தி அம்மாள் நடத்தி வந்த ராயல் பர்னிச்சருக்காக வெளி நாடுகளிலிருந்து மரம் இறக்குமதி செய்வதிலும் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஈடுபடும் கடத்தல் விவகாரங்கள் வெளி வராமல் இருப்பதற்காக கஸ்டம்ஸ் துறையில் கமிஷனராக இருந்த சி.ராஜன் என்பவர் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வந்துள்ளார்.

ஐஆர்எஸ் அதிகாரியான ராஜன், 8 லட்ச ரூபாயும் ஒரு பேடும் லஞ்சமாக வாங்குகையில் சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக சமீபத்தில் பிடிபட்டார். வழக்கமாக ஐஆர்எஸ் அதிகாரிகள் ஒரு மண்டலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்படமாட்டார்கள். சென்னையில் பணியாற்றினால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மும்பைக்கோ, வேறு நகரத்துக்கோ மாற்றப்படுவார்கள். ஆனால், ராஜன், மூன்று ஆண்டுகளுக்கு விமான நிலையத்துக்கான கஸ்டம்ஸ் கமிஷனராக இருந்தார். பிறகு, துறைமுகத்துக்கான கஸ்டம்ஸ் கமிஷனராக ஆனார். அந்தப் பதவியில் மூன்று ஆண்டுகள் இருந்த பிறகு, வருவாய்ப் புலனாய்வுத் துறையின் ஆணையராக (Directorate of Revenue Intelligence) மாறினார். இந்த ராஜனும் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜன் சென்னையை விட்டு மாற்றப்படாமல் இருப்பதை ராசாத்தி அம்மாள் உறுதி செய்தார். மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் ராஜனுக்கு அருட்தந்தையாக விளங்கினார். கருணாநிதியின் துணைவியார் விடுத்த கட்டளையை மீறினால் பழனிமாணிக்கம் அமைச்சரா இருக்க முடியுமா ?
ஹரி அன்ட் கோ நிறுவனம் மூலமாக ரேஷன் அரிசி, தொடர்ந்து மாலத்தீவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. எல்லாமே நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்துச்சு.
திடீரென்று ஒரு நாள் தூத்துக்குடி துறைமுகத்தில் உதவி ஆணையராக இருந்த மாதவராஜ் என்பவருக்கு ஒரு ரகசியத் தகவல் வருகிறது. அது என்னவென்றால் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.வி போந்தி 2 (M.V.BONTHE II) என்ற கப்பலில், மாலத்தீவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. தகவல் வந்ததும், ரேஷன் அரிசி போன்ற உணவுப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியான மாவட்ட கலெக்டருக்கு இத்தகவலை அளிக்கிறார். மாவட்ட கலெக்டர் கோ.பிரகாஷ் என்ற ஐஏஎஸ் அதிகாரி, உடனடியாக பறக்கும் படை தாசில்தாரை அக்கப்பலைச் சோதனையிட்டு மாதிரிகளை எடுத்து வருமாறு உத்தரவிடுகிறார். தாசில்தார் கப்பலை சோதனையிட்டு, அக்கப்பலிலும், அக்கப்பலில் ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 லாரிகளிலும், ஹரி அன்ட் கோ கிடங்கிலும் இருந்த மூட்டைகளில் இருந்து அரிசி மாதிரிகளை எடுத்து, தமிழ்நாடு உணவு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் அந்த மாதிரிகளை அனுப்பி, அந்த அரிசி ரேஷன் அரிசியா என்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.
அந்த மாதிரிகளை உணவு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அப்துல் சலாம், ஜோசப், வேணுகோபால், பிரகாஷ் பாபு என்ற நான்கு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த அரிசி மாதிரிகளை சோதனையிட்டு, அறிக்கை அளிக்கின்றனர். அந்த அறிக்கையில், மாதிரி அரிசி இரட்டை அவியல் (Double Boiled) செய்யப்பட்டுள்ளது. பூஞ்சானம் பிடித்துள்ளது. சேமிப்பினால் ஏற்படும் உயிருள்ள நிலையில் உள்ள பூச்சித்தாக்கம் உள்ளது. நீண்ட நாள் கிடங்கில் வைத்துள்ளதால் ஏற்படும் வாடை (Storage Smell) உள்ளது. இக்காரணங்களினால் 2212 மெட்ரிக் டன் அரிசியும் தமிழக பொது வினியோகத் திட்டத்துக்கான அரிசியே என்று சான்றளித்தனர்.


இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ், கஸ்டம்ஸ் கமிஷனருக்கு 25.01.2010 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் எம்.வி.போந்தி கப்பல், ஹரி அன்ட் கோ கிடங்கு, மற்றும் 18 லாரிகளில் இருந்த அத்தனை அரிசியும், ரேஷன் அரிசி என்பதால், 2212 மெட்ரிக் டன் அரிசியையும் கைப்பற்றி, பறக்கும் படை தாசில்தாரிடம் ஒப்படைக்குமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கிறார்.

இதையடுத்து தமிழக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு (Civil Supplies CID) காவல்துறையினரிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டவுடன், அவர்கள் வழக்கு எண் 30/2010ல் ஒரு வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஹரி அன்ட் கோ மதுரை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறுகின்றனர்.
இந்த நேரத்தில்தான் அரிசி தொழிலதிபர் ராசாத்தி அம்மாளுக்குச் சொந்தமானது என்பது தெரிய வருகிறது. உடனே கலெக்டர் பிரகாஷ் களத்தில் இறங்குகிறார். ஒட்டு மொத்த தமிழக நிர்வாகமும் சிக்கிய இந்த அரிசியை விடுவிக்க களத்தில் இறங்குகிறது.
கைப்பற்றப்பட்ட அரிசி, ரேஷன் அரிசி அல்ல அது ஹரி அன்ட் கோ நிறுவனம் ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்து, மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த அரிசி என்று ஆவணங்கள் தயார் செய்யப்படுகின்றன.
சிவில் சப்ளைஸ் சிஐடி மற்றும், உணவு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஆந்திராவுக்குச் சென்றதாகவும், அங்கே பட்டியல்களைச் சரிபார்த்ததில், அந்த அரிசி ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்தது என்பது தெரிய வந்ததாகவும் ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
கலெக்டர் பிரகாஷ், 15.02.2010 அன்று சுங்கத்துறை ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில், தமிழக அரசு அதிகாரிகள், ஆந்திராவுக்குச் சென்று விசாரித்ததில், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி ஆந்திராவிலிருந்து ஹரி அன்ட் கோ கொள்முதல் செய்தது என்றும், கைப்பற்றப்பட்ட அரிசி ரேஷன் அரிசி அல்ல என்பதும் தெரிய வந்துள்ளதாகவும், இதன் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட 2212 டன் அரிசி முழுவதையும் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அத்தனை அரிசியும் மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


2212 டன் அரிசியையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை ஆணையர் ராஜன், 25.01.2010 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக எம்.பி.போத்தி 2 என்ற கப்பலில் வைக்கப்பட்டிருந்த அரிசியை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில் அந்த அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த அரிசி என்பது தெரிய வந்ததாகவும், அதனால் அந்த அரிசியைக் கைப்பற்றியதாகவும்” தெரிவித்துள்ளார். ராஜன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்த இரண்டு முக்கிய விஷயங்கள், ஏற்றுமதி செய்த நிறுவனம் அந்த அரிசியை ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்ததாக தெரிவித்திருந்ததாகவும், பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை இருந்ததாகவும் தெரிவித்திருந்த விஷயமே.
மத்திய அரசு, உள்நாட்டுத் தேவை கருதி பிற நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதை தொடர்ந்து தடை செய்து வந்துள்ளது. 2008 முதல் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டு இருந்த சூழலில், 10 ஜுன் 2010 அன்று, அதிகாரமிக்க மத்திய அமைச்சரவைக் குழு கூடி, மாலத்தீவுகளுக்கு 30 ஆயிரம் டன் அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது. 2010 ஜுன் மாதம் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் ஹரி அன்ட் கோ பாசுமதி அல்லாத அரிசியை ஆந்திராவிலிருந்து ஏற்றுமதி செய்திருந்தால் அது சட்டவிரோதமே.
மற்றொரு விஷயம், 25.01.2010 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுங்கத்துறை ஆணையர் ராஜனே அந்த அரிசி வகைகள் ஆந்திராவிலிருந்து தருவிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், ஹரி அன்ட் கோ, ஆந்திராவிலிருந்து முறையாக அரிசி கொள்முதல் செய்துள்ள விஷயத்தை புதிதாக கண்டுபிடித்தது போல தெரிவித்ததன் காரணம் என்ன என்பதை நேர்மையான அதிகாரி பிரகாஷ் ஐஏஎஸ் மற்றும் அதை ஏற்றுக் கொண்டு அரிசியை விடுவித்த ராஜனும்தான் விளக்க வேண்டும்.
அப்படியே இந்தக் கூற்றை உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும், கிருஷ்ணப்பட்டினம் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்கள் ஆந்திராவிலேயே இருக்கையில், எந்த முட்டாளாவது 2212 டன் அரிசியை ஆந்திராவிலிருந்து லாரியில் வரவழைத்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி செய்வானா ?
சுங்கத்துறை ஆணையர் ராஜனால் நிறுத்தி வைக்கப்பட்ட பல்வேறு கன்டெய்னர்கள் மாதக்கணக்கில் துறைமுகத்தில் நின்றதுண்டு. அப்படி இருக்கையில், இந்தக் கப்பலை மட்டும் 20 நாட்களில் துரிதமாக நடவடிக்கை எடுத்து விடுவித்த மர்மம் என்ன என்பதை ராஜன்தான் விளக்க வேண்டும். மேலும், இந்திய கஸ்டம்ஸ் சட்டம், 1967ன் பிரிவுகள் 108 மற்றும் 110ன் படி, இந்த அரிசி கைப்பற்றப் பட்டவுடன், கஸ்டம்ஸ் விசாரணை தனியாக நடந்திருக்க வேண்டும். அந்த விசாரணை எதையுமே ராஜன் நடத்தவில்லை. அது ஏன் என்ற மர்மத்தையும் ராஜன்தான் விளக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் பிரகாஷைப் பொறுத்தவரை அவர் சுங்கத்துறைக்கு அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு எழுதிய கடிதத்திலும் சரி, இவ்விஷயத்தில் மேல் நடவடிக்கையை கைவிட்டு, 12.02.2010 அன்று வெளியிட்ட ஆணையிலும் சரி, ஆந்திராவில் எந்த நிறுவனத்திலிருந்து ஹரி அன்ட் கோ நிறுவனத்தினர் அரிசியை கொள்முதல் செய்தனர் என்ற விபரத்தை குறிப்பிடவே இல்லை. இப்படி அவசர அவசரமாக அரிசியை விடுவித்து ஆணை பிறப்பித்தன் காரணம் என்ன என்பதை பிரகாஷ் ஐஏஎஸ் தான் விளக்க வேண்டும்.



ஏற்கனவே இந்தக் கட்டுரையில் பிரகாஷ் ஐஏஎஸ் நேர்மையானவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு குறிப்பிட்டதற்கான காரணம், பிரகாஷ் ஐஏஎஸ்க்கு ஏப்ரல் 2008ல் சென்னை திருவான்மியூரில் 3829 சதுர அடி வீட்டு மனை “அரசு விருப்புரிமைக் கோட்டாவின்” கீழ் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த மனை “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்” என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருந்தது. பிரகாஷ் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று சான்றளித்தது யார் தெரியுமா ? அவரே அவருக்கு சான்று அளித்துள்ளார். என்ன காரணம் தெரியுமா ? தன்னைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரிக்கு சான்று அளிப்பதற்கு வேறு யாருக்குத் தகுதி இருக்கிறது ? இதனால்தான் பிரகாஷ் ஐஏஎஸ் ஒரு நேர்மையான அதிகாரி.

பிரகாஷ் ஐஏஎஸ்



ஹரி அன்ட் கோ நிறுவனத்தின் நடவடிக்கைகள் அரிசிக் கடத்தலோடு நிற்பதில்லை. ராசாத்தி அம்மாளின் ராயல் பர்னிச்சர்ஸ் நிறுவனத்திற்காக மரங்களை இறக்குமதி செய்ததும் ஹரி அன்ட் கோ தான். இதில் என்ன தில்லு முல்லு தெரியுமா ? வெளிநாட்டிலிருந்து மரம் அல்லது மரச்சாமான்கள் இறக்குமதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டால் அதற்கு விற்பனை வரி கட்ட வேண்டும். வாட் எனப்படும் இந்த விற்பனை வரி 12.5 சதவிகிதமாகும். ஹரி அன்ட் கோ இறக்குமதி செய்யும் மரச்சாமான்கள் மற்றும் மரங்கள் வெளிநாட்டிலிருந்து வரும் வழியிலேயே அதாவது சர்வதேச கடல் எல்லையிலேயே விற்பனை செய்யப்பட்டதாக ஆவணம் தயாரிக்கப்படும். சர்வதேச கடல் எல்லையில் நடக்கும் வியாபாரத்திற்கு தமிழக அரசு வரி விதிக்க இயலாது. இப்படி ஆயிரக்கணக்கான டன் மரங்களும், மரச்சாமான்களும் நடுக்கடலில் வியாபாரம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களோடு சென்னை துறைமுகத்தில் இறக்கப்பட்டு கிடங்கில் வைக்கப்படும். இதை சரிபார்த்து வரி ஏய்ப்பை கண்டு பிடிக்க வேண்டிய சுங்கத்துறை அதிகாரிகள் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த சி.ராஜன் நாடார் இருக்கையில் ராயல் பர்னிச்சர்சுக்கும், ராசாத்தி அம்மாளுக்கும் என்ன கவலை ?

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு அரசு தரும் மானியம் ஒரு கிலோவுக்கு ரூபாய் 5.65 என்று பார்த்தோம். மற்ற கணக்குகளை விட்டு விடுவோம். மாலத்தீவுக்கு கடத்தப்பட்ட 2212 டன், அதாவது 22 லட்சத்து 12 ஆயிரம் கிலோ அரிசியால் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன என்று கணக்கிட்டால் 1 கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 800 ரூபாய். இது போல மாதந்தோறும் பல லோடு அரிசி மாலத்தீவுக்கு ஹரி அன்ட் கோ நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2006 முதல் 2011 வரை, எத்தனை லோடுகள் போயிருக்கும், எத்தனை லட்சம் டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருக்கும் என்பது ஆண்டவருக்கும், அவர் துணைவியாருக்குமே வெளிச்சம்.
இந்தத் தகவலை அறிந்த உங்களுக்கு கும்பி எரிகிறதா இல்லையா ?
|
Comments
வாக்களிக்க ஆரம்பித்தானோ அன்று முதல் தனக்கு தானே வய்க்கரிசி போட்டுக்கொள்கிற ான்
சலாம் அலைக்கும் மண்ணடி பாகிஸ்தானி.
தக்கியா 1க்கு பதில் ) "காஷ்மீரிகளை" ராணுவம் கற்பழிப்பதாக சொல்லுகிறீர்கள் , கொஞ்சம் விளக்குங்களேன் அதில் காஷ்மீர ஹிந்துக்கள் அடங்குவார்களா அல்லது காஷ்மீர முஸ்லீம்கள் மட்டுமா என்று.
தக்கியா 2க்கு பதில் ) இஸ்லாமியர்களுக் கு திரும்பத் திரும்பக் கற்பழிக்கப்படுத ல் OK யா? எதற்காகக் கேட்கிறேன் என்றால், ஸ்ரீநகரில் ஜனவரி 26 ல் நடந்த பேரணியில் ஐயாயிரம் முஸ்லீம்கள் கலந்துகொண்டனர். அதில் பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணையவேண்டும் என்றே அவர்கள் கூவினார்கள். கற்பழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று கூவவில்லை. 'திறந்த வெளி சிறைச்சாலை'யிலேயே கற்பழிக்கப்படுவ தை விட, நீங்கள் உத்திரப்ரதேசம் போன்ற இடங்களுக்கு சென்று பிறரைக் கற்பழிக்கலாமே? ஏன் காஷ்மீரிலேயே இருக்கிறீர்கள்? ஓசி பசுமதி அரிசிக்கா?
தக்கியா 3க்கு பதில் ) மேலும் இலங்கையில் தமிழர்கள் தங்களைக் கற்பழித்ததாக ஒரு இஸ்லாமிய சகோதரர் சவுக்கில் பதிவு செய்துள்ளார். ஏன் கற்பழிப்பே உங்கள் மனதில் அடிக்கடி தோன்றுகிறது?
தக்கியா 4 க்கு பதில் ) நான் எந்தக் கற்பழிப்பையும் நியாயப் படுத்தவில்லை . நீங்கள்தான் இஸ்லாமியர்கள் காஷ்மீர ஹிந்துக்களைக் கற்பழித்தற்குக் காரணம் அவர்கள் "அவர்கள் தங்கள் குல வழக்கத்தின்படி அங்குள்ள முஸ்லிம்களுக்கு துரோகம் செய்தது" என்று சொல்லி நியாயப்படுத்துக ிறீர்கள்.
தயவு செய்து இனி அப்படி குறிப்பிட வேண்டாம் என்று மிகவும் தாழ்மை உடன் கேட்டு கொள்ளுகிறான்...
நன்றி.........
his reply is related to involvement of Karunanidhi family not on the whole scam.While your story has lots of lose ends and your keyword to the story is three Nadars while Prabhu Chawla might not be aware of this angle.And regarding your response thar Prabhu Chawla is involved in Radia tapes is useless because the conversation is private.Your story is an allegation without proper evidence to nail the Karuna family.Its a wild conspiracy theory and your story wont even stand on any neutral jury because you are heavily biased against the Kauna family.Your accusation has a strong point on Prakash IAS because he has given self conduct certificate to get Govt benifit.He has changed his complaint.While you accuse pressure from higher level chances are however improbable that it might be an voluntary gesture for the land he got.And one more thing is I see you have a soft corner for terrorism especially your affinity to jihadi groups like Popular front,LTTE,Naxa lite sympathizers,Ba nk robbers.I hope you are not on the bankroll of any of the groups.It might be volunrary but by the logic if your story you are on their payrolls.
தக்கியா 1) நீங்கள் சொன்னபடி காஷ்மீரை இந்தியா பலவந்தமாகப் பிடிக்கவில்லை. பாகிஸ்தான் பலவந்தமாகப் பிடித்தது. எதிர் வினையாக அப்போதைய மன்னர் இந்தியாவிடம் முறையிட்டு இணைந்தார்.
தக்கியா 2) நீங்கள் சொன்னபடி சிம்லா ஒப்பந்தம், மக்களிடம் வாக்கெடுப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை. சிம்லா ஒப்பந்தத்தின் படி இராணுவம் எந்நிலையில் எல்லையில் இருக்கிறதோ அதை விட எந்த நிலையிலும் முன்னேறக் கூடாது, எல்லையின் வெளியேயோ, உள்ளேயோ பாதகமான செயலை செய்யக் கூடாது, அமைதிக்கான செயல்பாடுகள் தொடங்க வேண்டும் என்பதுதான். பாகிஸ்தானிய ராணுவத்தை விரட்டி அடிக்காமல் இந்திரா காந்தி ஒப்புக்கொண்டதற் கே அவரின் கணவர் பெரோஸ் கான் முஸ்லீமாக இருந்தது காரணமாக இருக்கலாம்.
தக்கியா 3) மேலும் முஸ்லீம்கள் காஷ்மீரில் இருந்த 3,95,000 பிராமணர்களை இல்லாமல் செய்துவிட்டனர். இவர்கள் இல்லாமல் எப்படி வாக்கேடுப்பீர்க ள்?
நீ தக்கிய என்று சும்மா கதை விடாதே. குர்ஆனில் உள்ளதாம் இவர் பார்த்தாராம். கோயபல்சின் மகனே. எதையும் ஒழுங்காக தெரிந்து பேசு. இந்திராவின் கணவன் feroz ஒரு பார்சி அவரை ஒரு முஸ்லிம் என்று நீ கூறுவதிலிருந்து உன் யோக்கியதை நன்கு புரிகிறது. பிராமணர்களை முஸ்லிம்கள் வெளியேற்றி விட்டனராம். அவர்கள் தங்கள் குல வழக்கத்தின்படி அங்குள்ள முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ததை மறைத்து வரலாற்றை திரிக்காதே.
உனது காழ்புணர்ச்சி எங்களுக்கு நன்கு புரிகிறது, மத்திய அரசு காஷ்மீரை ஒரு திறந்த வெளி சிறைச்சாலையாக வைத்துள்ளது அங்குள்ள கைதிகளுக்கான அளவு உணவுதான் நீ கூறும் மானிய பிச்சை. இதை வைத்துகொண்டு நீ காஷ்மீரிகளை ராணுவம் கொன்று குவிப்பதையும், விசாரணை என்ற பெயரில் சிறுமிகளையும் கற்பழித்து கொல்லுவதையிம் நியாய படுத்துகிறாய். உனது குரூரம் நன்கு புரிகிறது.
http://www.mediacrooks.com/2010/11/radia-tapes-now-prabhu-chawla-offers.html
http://www.mediacrooks.com/2010/11/radia-tapes-now-prabhu-chawla-offers.html
சவுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்தக் கட்டுரை பொய் என்பதை பிரபு சாவ்லா மாற்று ஆதாரங்களோடு நிரூபிக்கட்டும் .
சாவ்லா இந்த செய்தி பற்றிய கேள்விக்கு
இது பொய்யான தகவல் என்றும் ,உண்மையில்லை என்றும் இன்றைய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
முதுகெலும்பில்ல ாத கூட்டம் இருக்கும் வரை இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.
நமக்கு தான் வெட்கமா அசிங்கமா இருக்கு
காரணம்
1 . இவங்க எல்லாம் இப்படி இருக்குறதுக்கு
தெரிஞ்சோ தெரியாமலோ நாமும் ஒரு காரணம்.
2 . இது எல்லாம் நமக்கு உண்மைன்னு தெரிஞ்சாலும்
இத பத்தி 2 நாள் பேசுவோம், அப்பறம் மறந்துருவோம்
வேற எதும் நடக்காது
3 . "ஆரிசி கேட்டுபோயடுச்சு அதனால அது ரேஷன் அரிசி தான்" -
இத ரிப்போர்ட் குடுக்க அவனுக்கே கூசலையா ?
4 . நம்மோட கையாலாகாத தனம் நமக்கே புரியுது (எதையுமே தட்டி கேட்ட்க முடியலையே )
Pls keep up the good work.
Dear Vinod,
Unfortunately, it has been a common practice to insult Brahmin caste people by naming the caste, if alleged person is a brahmin by Birth.
Same could happen to a Dalit too.
I had seen people blaming brahmins thinking that P. Chidambaram is a brahmin, while he is Nattukkottai Chettiyaar.
Rather than having prejudice about castes within, it is better to talk openly about caste so that we can have better understanding, solid researchable data, analyze that can lead to conclusions if not solutions.
with regards
Anniyan
தக்கியா செய்வதை சவுக்கு தளத்தில் தவிருங்கள். இது ஒரு ஆரோக்கியமான தளமாக இருக்கட்டும். ( தக்கியா என்பது என்ன என்று தெரியாத வாசகர்களுக்கு : முஸ்லீம் அல்லாதவர்களை ஏமாற்ற அல்லது தோற்கடிக்க பொய் சொல்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளார். அது தக்கியா என குர் ஆனில் வழங்கப்படுகிறது . மற்றபடி முஸ்லீம்களுக்கு ள் பொய் சொல்லுதல் பெரும் பாவம் என்றே அல்லாஹ் சொல்லுகிறார்)
தக்கியா 1) நீங்கள் சொன்னபடி காஷ்மீரை இந்தியா பலவந்தமாகப் பிடிக்கவில்லை. பாகிஸ்தான் பலவந்தமாகப் பிடித்தது. எதிர் வினையாக அப்போதைய மன்னர் இந்தியாவிடம் முறையிட்டு இணைந்தார்.
தக்கியா 2) நீங்கள் சொன்னபடி சிம்லா ஒப்பந்தம், மக்களிடம் வாக்கெடுப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை. சிம்லா ஒப்பந்தத்தின் படி இராணுவம் எந்நிலையில் எல்லையில் இருக்கிறதோ அதை விட எந்த நிலையிலும் முன்னேறக் கூடாது, எல்லையின் வெளியேயோ, உள்ளேயோ பாதகமான செயலை செய்யக் கூடாது, அமைதிக்கான செயல்பாடுகள் தொடங்க வேண்டும் என்பதுதான். பாகிஸ்தானிய ராணுவத்தை விரட்டி அடிக்காமல் இந்திரா காந்தி ஒப்புக்கொண்டதற் கே அவரின் கணவர் பெரோஸ் கான் முஸ்லீமாக இருந்தது காரணமாக இருக்கலாம். உலக முஸ்லீம் நாடுகள் சாமர்த்தியமாக இந்தியாவை தாக்கும்படி அமெரிக்காவை கேட்டுக்கொண்டு இலங்கை கடல் எல்லையில் மிகப்பெரிய அணு ஆயுதப் போர்க்கப்பலை அமெரிக்கா நிற்க வைத்ததாக இருக்கலாம். அந்தப் பாவத்துக்கு அமெரிக்கா 2001 ல் ஆப்பு அடித்துக்கொண்டத ு.
தக்கியா 3) மேலும் முஸ்லீம்கள் காஷ்மீரில் இருந்த 3,95,000 பிராமணர்களை இல்லாமல் செய்துவிட்டனர். இவர்கள் இல்லாமல் எப்படி வாக்கேடுப்பீர்க ள்?
அன்புடன்,
தமிழினியன்.
இன்றைக்கு கருணாநிதி செத்துப்போன ஒரு விரியன் பாம்பு,, அந்த நிலையிலும் கருணாநிதியின் வாயிலிருந்து வருவதெல்லாம் வஞ்சகமும், புள்ளி விபர நியாயப்படுத்தல் களுமே,. இந்தக்கருத்து கருணாநிதிக்கு மட்டுமல்லாது தமிழகத்தின் பல கட்சிகளுக்கு பொருந்தினாலும். ஸ்பெக்ரம் ஊழலின்போது கனிமொழிக்கும் ஆ ராசாவுக்கும் முறையற்ற தொடர்பு இருந்ததாக வோஷிங்ரன் போஸ்ற் பத்திரிகை முதல் பாமரர்கள் பலரும் கொமண்ட் செய்திருந்தனர் அதில் எவ்வளவு உண்மையென்பது தெரியாவிட்டாலும ் கருணாநிதியின் அரசியலில் ஈழபடுகொலையின்போ திலிருந்து ஸ்பெக்ரம் முடிந்தாலும் விமர்சனங்கள் முற்றிக்கொண்டுத ான் இருக்கின்றன. இவ்வளவையும் கேட்டுக்கொண்டு அரசியல் செஊய்ம் கருணா எப்படியான மனிதனாக இருப்பார்இனியாவ து கருணாநிதி தனது நரித்தனத்தை ஏற்றுக்கொண்டு மௌனமாக இருந்து மக்களை சினப்படுத்தாமல் இருந்தாலே சாகும் காலத்திலாவது நாலுபேராவது நல்லபடி பேச சந்தற்பம் கிடைக்கலாம். அரிசிக்கடத்தல்ப ற்றிய இந்த கட்டுரை எவ்வளவு உண்மையைச்சொன்னா லும் பிறக்குடத்தில் வார்த்த நீராகவே அரசியல் வியாதிகளுக்கு இருக்கும். இதை இந்தியாவில் மாற்றவும் முடியாது என்றே படுகிறது!
விளங்கிடும், அழகிரி போன்ற படிக்காத முட்டாள்கள் தான் அமைச்சரா இருந்து, ஒன்னும் பன்னமாட்டேன்ரான ுக.
இதுல IAS வேறயா!!
தமிழ்ப்பிரியன்!
ஆந்திராவில் இருந்து அந்தமானுக்கு போடும் அரிசியை எவனாவது தூத்துக்குடி எடுத்துப் போவானா என்பது மட்டுமே இவர்களின் திருட்டை ஊர்ஜிதம் செய்யும் கேள்வி.
படிக்கப் படிக்க குமட்டுகிறது இந்த அதிகாரிகளின் செயல். அதைவிடக் கொடுமை "அரிசி கெட்டுபோகும் நிலையில், மட்டமாக இருப்பதால் அது ரேஷன் அரிசி" என்று பட்டவர்த்தனமாக ஆராய்ச்சியாளர்க ள் உறுதி செய்வதுதான்.
காஷ்மீரில் முஸ்லீம்களுக்கு மிகக் குறைந்த விலையில் பாசுமதி அரிசியும், கோதுமையும் அரசாங்கம் வழங்குவது முப்பது வருடங்களாக நிகழும் தவறு. அத்தனையும் தின்றுவிட்டு இந்தியா ஒழிக என்று இன்னும் சத்தமாக கோஷம் போடுகிறார்கள் அந்த முஸ்லீம்கள்.[/ஃஉஒடெ]
கஷ்மிரை பலவந்தமாக பிடித்து வைத்து, காஷ்மிரிகளை அடக்கியாள நினைக்கும் மத்திய அரசு அவர்களது நியாயமான கோரிக்கையான "கருத்து கணிப்பை" அதுவும் ஷிம்லா ஒப்பந்ததில் ஒத்துக்கொண்டபடி நடத்த மறுப்பது ஏன்? பாசுமதியை இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கு கொடுப்பதன் மூலமாகவொ விடுதலை உணர்வை அணைத்து விட முடியாது. காஷ்மீர் மக்களின் விருபத்திற்கு மாறாக இந்தியாவோடு இணைக்கப்பட்ட ஒரு பகுதி.
நம்ம கும்பி எரிந்தால் அப்படியே ஈரத்துணியை போட்டுகிட்டு சும்மா இருக்க முடியாது. தவறு செய்த இவங்க கு_டியை ('ண்' போட்டாலும் சரி இல்லை '_' ஐ நீக்கினாலும் சரி... எல்லாம் சரியே) சிறையில் உட்கார வைக்க வேண்டும். அதுக்கும் சேர்த்து வழி சொல்லுங்க சவுக்கு.
ஆந்திராவில் இருந்து அந்தமானுக்கு போடும் அரிசியை எவனாவது தூத்துக்குடி எடுத்துப் போவானா என்பது மட்டுமே இவர்களின் திருட்டை ஊர்ஜிதம் செய்யும் கேள்வி.
படிக்கப் படிக்க குமட்டுகிறது இந்த அதிகாரிகளின் செயல். அதைவிடக் கொடுமை "அரிசி கெட்டுபோகும் நிலையில், மட்டமாக இருப்பதால் அது ரேஷன் அரிசி" என்று பட்டவர்த்தனமாக ஆராய்ச்சியாளர்க ள் உறுதி செய்வதுதான்.
காஷ்மீரில் முஸ்லீம்களுக்கு மிகக் குறைந்த விலையில் பாசுமதி அரிசியும், கோதுமையும் அரசாங்கம் வழங்குவது முப்பது வருடங்களாக நிகழும் தவறு. அத்தனையும் தின்றுவிட்டு இந்தியா ஒழிக என்று இன்னும் சத்தமாக கோஷம் போடுகிறார்கள் அந்த முஸ்லீம்கள்.
RSS feed for comments to this post