|
ஜெயலலிதா அரசு ஓராண்டில் நடத்திய நூறாண்டு சாதனைகளைப் பற்றி தினந்தோறும் நாளேடுகளில் வெளிவரும் முழுப்பக்க வண்ண விளம்பரங்கள், இந்தியாவில் மிகப்பெரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை கொண்டு வந்த வாரன் ஹாஸ்டிங்ஸ், லார்ட் பென்டிங்க், லார்ட் ரிப்பன், லார்ட் டல் ஹவுசி போன்றவர்களை விட, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மிகச் சிறந்த நிர்வாகி என்ற எண்ணத்தை உருவாக்கி வருகின்றன. நாள்தோறும் ஒவ்வொரு துறைகளைப் பற்றியும் வரும் விளம்பரங்கள், ஜெயலலிதா இவ்வளவு திறமையான நிர்வாகியா என்று பார்ப்போர் அனைவரையும் வியக்கவைப்பவை. இந்த விளம்பரங்களைப் பற்றி மற்றொரு நாள் பேசுவோம்.

சரி. ஜெயலலிதா உண்மையிலேயே சிறந்த நிர்வாகியா ? இந்த பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை ஜெயலலிதா ஒரு மாநில அரசின் முதல்வராக இருந்து கொண்டு போக்கியிருக்க முடியுமா ? பெட்ரோல் டீசல் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம் இல்லையா ? எதற்கெடுத்தாலும் திமுககாரன் போல ஜெயலலிதாவை குறை சொல்லலாமா ? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழும்.
எரிபொருள் தட்டுப்பாடு பெட்ரோல் விலையேற்றப்பட்ட புதன் அன்று இரவு முதல் லேசாகத் தொடங்கியது. வியாழனன்று சற்றே முற்றியது. வெள்ளி மாலை முதல், பங்குகளில் கூட்டம் கூடத் தொடங்கியது. சனிக்கிழமையெல்லாம் நெருக்கடி முற்றியது. ஞாயிறன்று அடிதடி தொடங்கியது. திங்கட்கிழமை கைமீறிப் போனது.
பெட்ரோலியப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் (Essential Commodities Act, 1955) வருகிறது. இச்சட்டத்தின் பகுதி 4ல் பத்தி 4.1 கீழ் கண்டவாறு கூறுகிறது.
ESSENTIAL COMMODITIES ACT, 1955
4.1 The Essential Commodities Act, 1955 was enacted to ensure the easy availability of essential commodities to consumers and to protect them from exploitation by unscrupulous traders. The Act provides for the regulation and control of production, distribution and pricing of commodities which are declared as essential for maintaining or increasing supplies or for securing their equitable distribution and availability at fair prices. Exercising powers under the Act, various Ministries/Departments of the Central Government and under the delegated powers, the State Governments/UT Administrations have issued Control Orders for regulating production, distribution, pricing and other aspects of trading in respect of the commodities declared as essential. The enforcement/implementation of the provisions of the Essential Commodities Act, 1955 lies with the State Governments and UT Administrations.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, கள்ளச் சந்தைக்காரர்களால் நுகர்வோர் அலைகழிக்கப்படாமல் அத்தியாவசியப் பொருட்கள், நுகர்வோருக்கு தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இச்சட்டம், அத்தியாவசியப்பொருட்களை, வரைமுறை செய்வதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும், விநியோகம் செய்வதற்கும், விலை நிர்ணயம் செய்வதற்கும், தடையில்லா விநியோகத்திற்காகவும் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி மத்திய அரசின் பல்வேறு துறைகளும், மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், விலை மற்றும் இதர விஷயங்கள் குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், பல்வேறு ஆணைகள் பிறப்பித்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கூறுகளை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களையே சாரும்.
இச்சட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளவை என்னவென்று பார்ப்போம்.
LIST OF COMMODITIES DECLARED ESSENTIAL UNDER THE ESSENTIAL COMMODITIES ACT, 1955
(As on February, 2005)
Declared under Clause (a) of Section 2 of the Act
- Cattle fodder, including oilcakes and other concentrates.
- Coal, including coke and other derivatives.
- Components parts and accessories of automobiles.
- Cotton and woollen textiles.
- Drugs.
- Foodstuffs, including edible oilseeds and oils.
- Iron and Steel, including manufactured products of Iron & Steel.
- Paper, including newsprint, paperboard and strawboard.
- Petroleum and Petroleum products.
- Raw Cotton, either ginned or unginned and cotton seed.
- Raw Jute.
இதில் பெட்ரோலியப் பொருட்கள் வரிசை எண் 9ல் வருகிறது. இப்போது சட்டத்தின் முதல் பகுதிக்கு வருவோம். “அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, கள்ளச் சந்தைக்காரர்களால் நுகர்வோர் அலைகழிக்கப்படாமல் அத்தியாவசியப் பொருட்கள், நுகர்வோருக்கு தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது.”
இச்சட்டத்தின் கடைசி வரியைப் பார்ப்போம். “அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கூறுகளை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களையே சாரும்.”
இப்போது பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டிய பொறுப்பு யாருடையது என்பது புரிகிறதா ? பெட்ரோலியப் பொருட்கள் என்பதால், இது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டைச் சேர்ந்தது என்ற எண்ணத்திலேயே நாம் இருக்கிறோம். கடந்த வாரம் ஏற்பட்ட தட்டுப்பாட்டைப் போக்க வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க மாநில அரசையே சார்ந்தது.
மேலும் இப்பெட்ரோலியப் பொருட்களுக்கு மாநில அரசு வரி விதித்து அதன் மூலம் வரி வருவாய் ஈட்டி வருகிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்த அத்தியாவசியப் பொருட்கள் தடைச்சட்டத்தின் படி, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தச் சட்டம் மட்டுமல்ல தோழர்களே.. மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு சட்டம் இயற்றியுள்ளது. The Petroleum Products (Maintenance of Production, Storage and Supply) Order, 1999 என்று அழைக்கப்படும் இச்சட்டம், என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது என்பதை இச்சட்டத்தின் தொடக்கம் கூறுகிறது.
In exercise of the powers conferred by section 3 of the Essential Commodities Act, 1955, (10 of 1955), in Order to regulate production, storage and supply of petroleum products in the interest of sustaining public life, economy and protecting consumers interest.
பொதுமக்களின் நலன்கருதியும், பொதுவாழ்வு நலன் கருதியும், பொருளாதார நலன் கருதியும், நுகர்வோர் நலன் கருதியும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, இந்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆணையின் பிரிவு 6 என்ன கூறுகிறது தெரியுமா ?
6. Regulation of retail supply of petroleum products - (1) Where under any agreement between a dealer and an oil marketing company, a petroleum product is to be supplied at a retail outlet, and the central Government is of the opinion that such petroleum product may not be available at the retail outlet for any reason whatsoever, either wholly or partially to meet the demand of the general public, it may, by order in writing, direct any other oil marketing company to deliver, for such period as may be specified in the order or such period by which the original supplying company is able to restore the supply , such petroleum product at such retail outlet and thereupon it shall be the duty of the oil marketing company specified in the order to deliver, and of the dealer to receive and sell the petroleum product so ordered to be delivered against price and other charges.
”பெட்ரோலியப் பொருட்களை ஒரு டீலருக்கு வழங்க வேண்டிய ஒரு எண்ணை நிறுவனம், ஏதாவதொரு காரணத்திற்காக, பொது மக்களின் தேவைக்கு ஏற்ப வழங்க இயலாவிட்டால், அந்த எண்ணை நிறுவனத்தை தேவையான கால அளவுக்கு, வழங்குமாறு எழுத்து பூர்வமான உத்தரவு மூலம், தேவையான பொருட்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வுத்தரவைப் பெற்ற சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனம், சம்பந்தப்பட்ட டீலருக்கு அந்த பெட்ரோலியப் பொருட்களை வழங்கியே தீர வேண்டும்.” இந்தச் சட்டத்தில் உள்ள அதிகாரம், மாநில அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சரி. இப்போது, இப்பெட்ரோலியப் பொருட்களின் சீரான விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மற்றும் கடமை மாநில அரசினுடையது என்பதைப் பார்த்தோம்.
மாநில அரசு என்ன செய்தது என்பதைப் பார்ப்போம். தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது கடந்த 24.05.2012 முதல் தமிழகத்தில் இருந்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து, ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிந்ததே நேற்றுதான் (29.05.2012). இத்தகவல் தெரிந்ததும் அதிகாரிகளை வறுத்தெடுத்த ஜெயலலிதா, உடனடியாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

அதிகாரிகள் கூட்டம் நேற்று காலை நடைபெற்ற உடனேயே துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பங்குகள் நேற்று மாலை முதல் திறக்கப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.
துரிதமாக நடவடிக்கை எடுத்ததெல்லாம் சரி. கடந்த ஒரு வாரமாக என்ன செய்து கொண்டிருந்தது அரசு ? கடந்த வெள்ளியன்றே (25.05.2012) ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிந்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஜெயலலிதாவுக்கு தகவலே நேற்றுதான் தெரிந்தது என்பதே உண்மையாக இருக்க முடியும்.
அப்படி நேற்றுதான் ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிந்தது என்றால், உளவுத்துறை தினந்தோறும் அனுப்பும் அறிக்கைகள் எதையும் ஜெயலலிதா பார்ப்பதில்லை. உளவுத்துறை தலைவரை சந்தித்து நாட்டு நடப்புகளை பேசுவதில்லை. செய்தித்தாள்களை படிப்பதில்லை என்று தெரிய வருகிறது. உளவுத்துறை அறிக்கையை படிக்காவிட்டாலும், செய்தித்தாள்களைப் படித்தாலே தெரிந்திருக்குமே …. …. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த “ஊடக வியாபாரி டைம்ஸ் ஆப் இந்தியாவை”ப் படித்தால் கூட தெரிந்திருக்குமே… ஆக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, நாள்தோறும் வரும் உளவுத்துறை அறிக்கைகளைப் படிக்காமல், உளவுத்துறை தலைவரையும் சந்திக்காமல், செய்தித்தாள்களைப் படிக்காமல், தொலைக்காட்சிகளைப் பார்க்காமல், வெறும் ஜெயா டிவியை மட்டும் பார்த்துக் கொண்டு, நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடி வழிகிறது, மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள், இன்னும் மைனாரிட்டி திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தியை மட்டுமே ஜெயலலிதா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற முடிவைத் தவிர வேறு என்ன முடிவுக்கு வர முடியும் ?
ஒரு காவல்துறை உயர் அதிகாரி சவுக்கிடம் சொல்லியிருக்கிறார். 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை ஐஜியாக ராமானுஜம் இருந்தார். அப்போது, அவருக்கு கீழ் பணியாற்றிய ஒரு அதிகாரிக்கு வேலை என்ன தெரியுமா ? காலை நான்கு மணிக்கு, அண்ணா சாலையில் அனைத்து நாளிதழ்களையும் பிரித்து ஏஜென்டுகள் எடுத்துச் செல்வார்கள். அந்த அதிகாரி காலை நான்கு மணிக்கு அத்தனை செய்தித்தாள்களையும் வாங்கி, முக்கிய செய்திகளை குறிப்பெடுத்து, நான்கரை மணிக்கு, ஐஜி ராமானுஜத்திடம் சொல்ல வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கு ராமானுஜம் கருணாநிதியை தொலைபேசியில் அழைத்து, அந்தத் தகவல்களைச் சொல்லுவார். அதைக் கேட்ட கருணாநிதி, அந்த தொலைபேசியிலேயே அந்தச் செய்திகள் தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பிப்பார். காலை பத்து மணிக்கு வேலை நாள் தொடங்கியதும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து, ‘என்னய்யா… பேப்பர்ல உன் டிப்பார்ட்மென்ட் பத்தி இப்படி வந்துருக்கு’ என்று கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி, பேப்பரைக் கூட படிக்காமல், என்ன சொல்கிறார் என்பது புரியாமல் மேலும் ஏச்சு வாங்கிக்கட்டிக் கொள்வாராம். இது போல கருணாநிதியிடம் ஏச்சு வாங்கிய அதிகாரிகள், காலை ஐந்து மணிக்கு அவரைப் போலவே அனைத்து நாளிதழ்களையும் படித்துத் தயாராக இருப்பார்களாம்.
தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீபாலைப் போல திறமைசாலி கிடையாது என்று சொல்லுவார்கள். அந்த ஸ்ரீபாலே சிறந்த நிர்வாகி என்று பாராட்டியவர் கருணாநிதி. ஒரு முறை ஸ்ரீபாலிடம், ஒரு நபரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அந்த நபரைப் பற்றிய முழுமையான விபரங்களை கொடுக்காமல், பாதி விபரங்களைக் கொடுத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. மற்றொரு அதிகாரியிடம் மீதிப் பாதி விபரங்களைக் கொடுத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். அந்த நபர் யாரென்று ஸ்ரீபால் கண்டுபிடித்து விட்டாலும், யாரைப்பற்றி விசாரிக்கச் சொல்கிறோம் என்பது தெரியக் கூடாது என்பதற்காக சாமர்த்தியமாக விசாரிக்கச் சொன்ன கருணாநிதியின் அறிவைப் புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். இதுதான் கருணாநிதி.
சரி. ஜெயலலிதா மட்டுமே இந்த எரிபொருள் தட்டுப்பாட்டுச் சிக்கலுக்கு பொறுப்பா என்றால் இல்லை. ஜெயலலிதாவை விட கூடுதல் பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்றால், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிக்கும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் எம்.பி.நிர்மலாவுக்குமே. ஜெயலலிதா எப்படிப்பட்ட முதல்வர் என்பது, மற்ற அனைவரையும் விட தேபேந்திரநாத் சாரங்கிக்கு நன்கு தெரியும். அவர் அறிக்கைகளைக் கூட படிப்பதில்லை என்பதும் சாரங்கிக்கு நன்கு தெரியும்.
அப்படி இருக்கையில், உளவுத்துறை அறிக்கைகளை படிக்கும் சாரங்கியல்லவா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ? தன்னுடைய பதவிக்காலம் டிசம்பர் 2012ல் முடிவடைகிறது. அதன் பிறகு ஆறு மாதத்துக்கு மேல் பதவி நீட்டிப்புக் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால் மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவர் பதவிக்குச் சென்றால் ஐந்து வருடத்துக்கு நல்ல பதவியில் நீடிக்கலாம் என்பது புரிந்து தன்னை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கேட்கத் தெரிந்த சாரங்கிக்கு இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஏன் தோன்றவில்லை ? ஜெயலலிதாவே சொல்ல வேண்டியதில்லை. தலைமைச் செயலாளர் என்ற முறையில் சாரங்கி உத்தரவு பிறப்பித்தால் மற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கமாட்டார்களா என்ன ?
தனக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அந்தப் பதவியை கடந்த ஆறு மாதமாக காலியாக வைத்திருந்து, அது தொடர்பான கோப்பை எங்குமே நகர விடாமல், எப்படியாவது அந்தப் பதவியை அடையத் துடிக்கும் சாரங்கிக்கு, கொளுத்தும் வெயிலில் பெட்ரோலுக்காக வண்டியைத் தள்ளிக் கொண்டு அலையும் பொதுமக்களின் சிரமம் புரியாமல் போனது ஏன் ?
முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியோடு வாரமிருமுறை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் சரக்கடிக்கும் சாரங்கிக்கு, மனைவியையும், குழந்தைகளையும் வைத்துக் கொண்டு, பெட்ரோல் இல்லாமல் சாலையில் வண்டியைத் தள்ளிச் செல்லும் சென்னைவாசியின் வேதனை புரியாமல் போனது ஏன் ?
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குழந்தையை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு, வெயில் தாங்காமல் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வியர்வை வழிய, வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்லும் குடும்பத்தலைவர்களைப் பார்த்த போது, இந்த அரசின் மீது வந்த கோபம் கொஞ்சம் நஞ்சமல்ல தோழர்களே….
வரும் ஆத்திரத்திற்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் செயலர் எம்.பி.நிர்மலாவையும், தலைமைச் செயலாளர் சாரங்கியையும், மீண்டும் இதே போல ஒரு பெட்ரோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, ஒரே ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கிடைக்குமாறு செய்து, இந்தியன் ஆயில் பங்க் சீருடையான நீல நிற உடையை அணிவித்து 48 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்க்க வைக்க வேண்டும் போல இருக்கிறது.

ஜெயலலிதா அவர்களே…. கனவு காணவும், ஆசைப்படவும் எல்லோருக்கும் உரிமை உண்டு. பிரதமராகலாம் என்று கனவு காணும் நீங்கள் முதலில் மாநிலத்தை ஒழுங்காக நிர்வகியுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தலைமைச் செயலகத்திலிருந்து, போயஸ் தோட்டம் செல்லும் வழியில் உள்ள கட்அவுட்டுகளையும், பேனர்களையும் கண்டு புளகாங்கிதம் அடையும் உங்களுக்கு, அதே சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ஏன் இவ்வளவு கூட்டம் என்று கேட்கத் தோன்றவில்லையே ?
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
கலைஞர் உரை:
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.
மு.வ உரை:
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.
தமிழகத்தில் முதலமைச்சர்தான் சரியில்லை என்று பார்த்தால், அறிவுரை கூற வேண்டிய அமைச்சர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். அதிகாரிகள் சோம்பேறிகளாகவும், சுயநலமிகளாகவும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே விலையேற்றத்தால் கடும் அவதியில் இருக்கும் மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் இந்த அரசை என்னவென்று சொல்வது ?
|
Comments
There are corrupt judges in supreme court too. Every citizen has a right to make a comment on the functioning of the supreme court. Having said that, I was not commenting on the judgement of the supreme court on the samacheer kalvi issue. I was just pointing out how narcissistic Karunanidhi was. Are you really serious that the workers who have been dismissed don't belong to DMK? You don't seem to know the basic truth that everyone knows. I think that you read just Murasoli for your news. Can you deny the fact that Karunanidhi erected a set to impress Sonia and Manmohan by spending taxpayers' money unnecessarily?
It was Jayalalithaa who constructed the Vandalur- Walajabad flyover(the project was conceived in 2007)? Karunanidhi constructed flyovers not to improve the infrastructure but to swindle money. Most of the flyovers he constructed in Chennai were unnecessary. How do you think a person who came to Chennai with a yellow bag became so rich?
You don't seem to understand basic economics. You don't want the TN government to raise the taxes. But, you want the government to subsidize everything including milk, transportation, and electricity. Where do you think will the money come from? Do you know that a state government cannot print money? Again, if Karunanidhi had increased the prices gradually, things would not have been this bad. Karunanidhi is only concerned about his family's finances. He doesn't give a damn about the state's finances. That is way the fiscal position was so poor when he was voted out in 2011.
You are someone who said that Karunanidhi had invested the money that had been looted in 2G to help the people of Tamil Nadu. How can anyone reason with you? I challenge you that you cannot defend Karunanidhi on any issue.
I am also disappointed by the fact that you keep quiet on the recent CAG report criticizing DMK Government. Regarding infrastructure, Jayalalithaa completed the Knowledge Township project at Sholinganallur. She initiated the IT expressway project linking Madhya Kailash to Mamallapuram. Jayalalithaa is responsible for the growth of IT sector in Tamilnadu. During the previous AIADMK rule around 3.8 lakhs of waste land had been reclaimed and put to agricultural use. On the other hand Karunanidhi never gave the 2 acres of land he said he would. The sanitation coverage was increased from 15% in 2001 to 57% in 2006. I can go on and on and on. Desalination project was actually Jayalalithaa's idea. However, Karunanidhi blocked that project through Raja, who was the Minister of Environment, by not giving environmental clearance. Did he actually construct a new assembly building? I thought that he had just erected a set. Is heart of the city a right place to construct an assembly complex? It shows how his mind works. Jayalalithaa dismissed 13000 workers because they are DMK workers. You cannot expect the TN Goverment to pay the workers of a political party. In the name of Samacheer Kalvi Karunanidhi wanted the children of Tamilnadu to read his daughter's poem (accused in a case) and the history of his family.
Vijayakaantha has also said a lot of things about Karunanidhi and his family. I don't want to waste my time talking about him.
I was not dodging. I simply did not think that I had to defend each and every action of Jayalalithaa. What is your response to the recent CAG report which was highly critical of DMK's mismanagement of state's finances?
In 2001 the expenditure on roads and brides was around Rs. 562 crores. Jayalalithaa increased it to around Rs. 3,000 crores by the time she left office in 2006. The maintenace expenditure on road network had been increased from Rs 120 crores in 2001 to Rs 800 crores in 2006. When you drink a glass of water please keep in mind that Jayalalithaa solved Chennai's water problem by successfully completing "New Veeranam" Project. Are Valluvar Kottam and Thiruvalluvar statue infrastructure projects?
If DMK had managed the state finances well, Jayalalithaa would not have had to raise the prices of transportation, milk, and electricity. It is not Government's job to provide jobs.
You have dodged the question regarding Audit objection to Jaya's financial mismanagement of Rs. 11000 crores also you are silent on her extravagant life style at government cost like going on a special flight to attend to Narendra Modi's swearing in ceremony and now also she went on special flight to Delhi. Jaya 's record on infrastructure is pathetic and you claim she borrowed for infrastructure. Can you give any example of her contribution to infrastructure or capital expenditure like construction of New Assembly hall, fly-overs, state of the art contribution like Valluvar Kottam or 133 feet Thiruvalluvar statue at Kanyakumari. Think in a calm manner when you travel e.g. on Anna Flyover which is 40 years young and strong constructed by Kalaingar. Deficit or loans, record of both Kalaingar or Jaya is same. Only difference is Kalaignar does not make people suffer by increasing the taxes, bus fares, electricty fare, imposing recruitment ban bringing gloom to the future of the youth like Jaya.
Hello Puthiyavan Raj,
It is wrong to look at the absolute value of the debt. The debt to GDP ratio was better in 2006 than in 2001. As you wanted to look at the absolute values let us do that. In 2011 Karunanidhi made a record by increasing the total debt to over Rs. 100000 crores. Whichever way you look at it Jayalalithaa is lot better than Karunanidhi when it comes to managing state's finances. An important thing to note here is that Jayalalithaa borrowed money for capital expenditure (infrastructure etc.) while Karunanidhi borrowed money to give colour television sets.
In 2001, when Kalaignar left office, the deficit was Rs. 32000 crores J became CM in 2001 and after 5 years of super administration, she increased the deficit to Rs. 57,000 crores. Audit slapped hard on her efficiency stating Rs. 11000 crores was lost on financial mismanagement during her rule from 2002 to 2004. J government spent severak crores more by giving full page advertisement assailing the audit report. She is the only CM who flew to Ahmedabad in separate plane to attend the swearing in ceremony of Narendra Modi costing government several crores. When Central govt. pleaded for saving petrol, she travelled more than 300 km on 1000 car convoy from Chennai for some funtion.
மீண்டும் சசி இன்,
அதிகார துஸ்பிரயோகம். நில அபகரிப்பு செய்தவர் கைதின் நீர்மை,
அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு பாதகம்,
மணல் கொள்ளை நீடிப்பு,
மின்சார இருட்டடிப்பு,
போலிஸ் என்கவுண்டர், சட்ட ஒழுங்கு சீர் கேடு
சாலை, மாசு கட்டுப்பாடு என ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் முன்னேற்றம் தான் இந்த ஜெ ஆட்சியின் ஓராண்டு சாதனையாக இருக்கிறது.
தினமும் ஒன்றரை பக்கம் வரும் வண்ண விளம்பரங்கள ், வெந்த புண்ணை, உப்புத் தாளால் தேய்க்கிறது. ஜனாதிபதி போட்டியில் வேட்பாளரை முன்னிறுத்துவது , தன்னை மத்தியிலும் முன்னிலை படுத்தி, பிரதம வேடபாளாராக தகுதி பெற ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, மத்தியில் ஒரு அதிகார மையத்தை உருவாக்க (முக மாதிரி) வழி தேடுகிறார். அம்மா மற்றுமொரு மாயாதேவியாகவே வடக்கு கணிக்கிறது.
விலை எட்ரபடுவது பெரும் முதலாலிகள் கொல்லை லாபம் பார்பதர்க்ககே ,மக்கள் விலை ஏட்ட்ரபட்ட பொருள் பெட்ரொல் ,பால்,எதுவாயினு ம் ,அதை முன்டிஅடிதது வாஙக முற்படாமல் ,முடிந்தவரை 2 அல்லது 1 வாரம் தவிர்துகொன்டாளே ,முதலாளீகளுக்கு நஷ்டம் ஏற்படும் ,உடன் ஆரசு தலை இட்டு விலை குறைப்பு ஏற்படும் - அடுத்து பால் விலை ஏறப்போகிரது , அப்பொது ellorum try panni paarkalam ,paal kettu pogum ,udanadiyaaga mudallaligalai nashtathilirunt hu kaaka , arasu nadavadikkai edukkum , vilai kuraikkapdaum - Makkal payan peruvragal , muyarchithu parungalaen
மாநில அரசு அதிகாரிகளை தண்டிப்பதாலோ அல்லது கண்டிப்பதாலோ இது போன்ற பிரச்சனைகள் தீருமா?. அதே போல் தன்னிச்சையாக நல்ல முடிவுகளை எடுக்க அரசு அதிகாரிகளை கழக அரசுகள் ஒருபோதும் அனுமதித்தது கிடையாது. உதாரணத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சி தலைவரை மாற்ற யார் காரணம்? கிரானைட் அதிபரா அல்லது ஆஸ்ரா கர்கா? இது உண்மையெனில் குறை சொல்ல வேண்டியது நம் அரசியல் சாசனத்தையும் மத்திய அரசையும்தான்.
மாநிலத்தில் பணிபுரியும் மத்திய தேர்வானயத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பணி பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷன் போல இவர்களை சுதந்திரமான ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்து வருடா வருடம் பணி மதிப்பீடு செய்ய வேண்டும். நியாயமான காரணங்களுக்கு மட்டுமே பணி மாற்றம் இருக்க வேண்டும். இதுபோல் ஒரு அமைப்பு இருந்தால் டீ கடை மந்திரிக்கெல்லா ம் டீலிங் பேச ஐ ஏ எஸ் அதிகாரிகள் போக மாட்டார்கள். அரசு அதிகாரிகளை கெடுப்பது நம் அரசியல்வாதிகள்த ான். நான் பழகிய வரையில் மத்திய தேர்வானயத்தால் தேர்ந்தெடுக்கப் பட்ட அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு இலட்சியத்துடனே பணியில் சேருகிறார்கள். அவர்களை நாசமாக்குவது நமது திடீர் மந்திரிகள்தான்.
ஜெ அரசு நன்றாக நடக்கிறது என நான் சொல்லவில்லை. இதேபோல் இவர் அரசு தொடர்ந்து செயல்படுமாயின் நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும ் அடுத்த முதல்வர் ஜெ கிடையாது. நம்பிக்கையுடம் நாம் கவுண்டவுன் ஆரம்பிக்கலாம்!! !
The recent CAG report describes how Karunanidhi's Government screwed up the state's finances. When you get a time, I suggest that you read it.
It is a big joke that Karunanidhi is a better administrator than Jayalalithaa. I can say with confidence that even Karunanidhi won't believe it.
http://www.tn.gov.in/budget/archives/white.html
http://www.tn.gov.in/budget/budgetspeech_e_2012_2013.pdf
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3426366.ece
அய்யா பத்து, கருணாநிதி ஒரு பிரச்சன வந்தா எப்புடி செயல்படுவார்னு சவுக்கு சொல்லுது - இது மக்களுக்கும் தெரியும். உங்க தலவிக்கு ஜால்ரா போடுற மீடியா மட்டும் தான் வேணும். உண்மய சொல்றவனுக்க இருக்கப்புடாது - அளிச்சு புடனும். தலவனுக்கு உள்ள ஒரு பம்பு நிருபருங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லனும். உங்க தலவி எப்புடி?
நாய குளுப்பாட்டி நாடு வீட்ல வச்சாலும் , அது வீதில இருக்குறத பொறுக்க தான் போவும்......
யார் கிட்ட என்ன (தொலில்) திறம / கொணம் இருக்கோ அத தான் எதிர்பாக்க முடியும்.
பால் கிடைக்காமல் பண்ணால், மக்கள் விலை ஏற்றத்தை மறந்தே விடுவார்கள்....
எரிபொருள் விநியோகம் குறித்த அதிகாரம் மாநில அரசின் கையில் உள்ளது என்பதைத்தான் இக்கட்டுரையில் சட்டப் பிரிவுகளோடு விளக்கப்பட்டுள் ளது.
ஜெயலலிதா அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு நினைத்திருந்து இவ்வாறு செய்திருந்தால், தொட்டதற்கெல்லாம ் மத்திய அரசை குறை கூறும் ஜெயலலிதா சும்மா இருந்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ?
கொச்சியிலிருந்த ு கப்பல் வருவதற்கு தாமதமானால் கூட, அரசு வாகனங்களுக்கு வழங்கும் எரிபொருளின் அளவை பாதியாகக் குறைத்து, சென்னை பெட்ரோல் பங்குகளுக்கு வழங்கி நிலைமையை சீர் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறினார் ஜெயலலிதா.
எரிபொருள் கையிருப்பு குறித்து மாநில அரசுக்கு தகவல் இல்லையென்றாலும் , கடந்த வியாழக்கிழமை முதல், சென்னையில் நிகழ்ந்து வரும் தட்டுப்பாடு குறித்துக் கூடவா உளவுத்துறை அறிக்கை அளித்திருக்காது ?
நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய நேரத்தில் நேற்று காலை என்ன நடந்தது தெரியுமா ? அளவைகளை சோதனையிடும் அதிகாரிகளை பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பியது இந்த அரசு. அவர்கள் சென்று சோதனையிட்டு விட்டு, பங்க் காலியாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
கருணாநிதி ஜெயலலிதாவை விட சிறந்த நிர்வாகி என்பதில் துளியும் மாற்றுக் கருத்து இல்லை. செய்திகளை மட்டுமே வைத்து ஆட்சி செய்ய முடியும் என்று சொல்லவில்லை. செய்திகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்களே கூறியது போல, இத்தட்டுப்பாடு பற்றிய தகவல் முன்னமே தெரியும் என்றால், தெரிந்தும் சும்மா இருந்தது இன்னும் மோசமல்லவா ?
வஞ்ச புகழ்ச்சி மாதிரி இருக்கு? கழுதை மேய்க்கிற பையனுக்கு இவ்ளோ அறிவா-ன்ற கத தான்...
இந்த கட்டுரை ஒரு தலை பட்சமாக தெரிகிறது. இந்த எரிபொருள் விலையேற்றத்தால் நம்மை ஆளும் அகிலாண்டேஸ்வரி என்ன முடிவு எடுத்திருக்கிறா ர்கள் என்பது நமக்குத் தெரியும். கம்யுனிஸ்ட் கட்சிகள் யாரை குறை சொன்னார்கள் என்பதும் தெரியும். இந்த தட்டுப்பாடு தமிழகத்தில் மட்டுமே நிலவியது என்பதை நினைவில் கொள்க. திமுகவை அனைவரும் குறை சொன்னவுடன் அதை திசைதிருப்ப மத்திய அரசே இங்கு இதை செய்திருக்க வாய்ப்புகள் இருப்பது பற்றி நீங்கள் எதுவும் விரிவாக எழுதவில்லை.
மேலும் ஜெ அவர்கள் கடைசியாகத்தான் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை தெரிந்துகொண்டார ் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. கொச்சியிலிருந்த ு எரிபொருள் எடுத்துவந்த கப்பல் ஜெ சொன்ன ஒரே நாளில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு சென்னை வந்து சேர முடியாது. குறைந்தது நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகியிருக்கும்.
அதுமட்டுமில்லாம ல் எரிபொருள் விநியோக கட்டுப்பாடு தமிழக அரசிடம் இல்லை. மத்திய அரசின் நிறுவனங்கள் தங்களின் எரிபொருள் கையிருப்பு மற்றும் தேவை போன்ற தகவல்களை மாநில அரசுக்கு தினசரி உளவுத்துறைபோல் கொடுக்கிறதா என பார்க்க வேண்டும். இதில் முன்கூட்டிய எச்சரிக்கை கிடைக்காமல் போக மத்திய அரசிடம் வசதிகள் இல்லையா இல்லை வேண்டுமென்றே செய்தார்களா என்பதைப் பற்றி உங்கள் கட்டுரை விவரிக்கவில்லை.
கருணாநிதி போல ஒரு சிறந்த நிர்வாகி உலகிலேயே இல்லை என்பதுபோல நீங்கள் எழுதியிருப்பது வியப்பாக இருக்கிறது. செய்திதாள்கள் மட்டுமே படித்து அதை வைத்து ஆட்சி செய்ய முடியாது. நீங்களே மற்ற பத்திரிகைகளின் தரம் பற்றி விரிவாக பல கட்டுரைகள் எழுதியிருக்கிறீ ர்கள். அப்படியிருக்கும ்போது எதை வைத்து நீங்கள் இதை வலியுறுத்துகிறீ ர்கள் என விளங்கவில்லை. மேலும் பத்திரிக்கைகளுக ்கு செய்தி வருமுன்பே ஒரு அரசுக்கு செய்தி வந்து சேரவேண்டும். அந்த விதத்தில் இந்த தட்டுப்பாடு பற்றிய தகவல் முன்பே இவர்களுக்குத் தெரியும்.
கருணாநிதி பற்றி நீங்கள் சொன்ன சிறந்த நிர்வாகி என்ற பாராட்டுபத்திரத ்தை திரும்பப் பெற வேண்டும்.
அவருக்கா ஞானம் வந்து, உத்தரவு போட்டால் தான் உண்டு.
மந்திரிகள் எல்லாம், அவருக்கு ராசியான எண் கூட்டுத்தொகையாக வருவதற்கு சேர்த்துகிட்ட ஞானசூன்யங்கள்.
என்ன செய்யிறது, நம்ம தலையெழுத்து இப்படி. இதை விட்டா, அது. அதை விட்டா இது.
ஏகப்பட்ட சட்டங்களையெல்லா ம் புட்டு புட்டு வைக்கிறியே... எங்கள் புரட்டு தலைவியை ‘வெளியே’ கொண்டு வர ஏதாச்சும் இது மாதிரி பாயிண்ட் விடப்புடாதா? தனக்கே பிரச்சனை இருக்கும் போது எப்புடி ரோட்ல போறவனையெல்லாம் பத்தி கவலை பட முடியும்?
ஒளவுதுறை சேதி சசிக்கு போவுது. பத்திரிக்கை டீக்கடையில வேல வெட்டி இல்லாம இருப்பவங்க படிப்பாங்க. எனக்கு சோலி நிறய இருக்கு.
அப்புறம் ஜெ-டிவிய மனுசன் பாப்பானா? நிகழ்சிய தயாரிக்கிற ஜால்ராவே மறுபடியும் ஓட்டி பாக்க மாட்டான். அப்ப நான் மட்டும் என்ன இளிச்ச வாயா?
ஆனா, ஒன்னு நிசம். 16 கோடி ரூவா செலவு பன்னி, இந்தியா முளுக்க சுய விளம்பரம் பண்ணத மக்கள் எல்லாரும் நம்பிட்டாங்க; அடுத்த எலிக்ஷன்லயும் நம்ம ஆச்சி தான் (ஒளவு தொற ரிப்போர்டு தேன்!).
இந்த ராஜ்ஜியத்தில் அடிம அமச்சர்கள், கூஜா தூக்கிகள், ஏவல்துறை, ஜால்ரா அதிகாரிகள் சகிதம் கேவலமா போய்கிட்டே இருக்கு…… விடிவு காலம் கிடயாதா?
இவர் துணிச்சலான முடிவு எடுக்ககூடியவரா ? - சத்தியமாக இல்லை .அடுத்தவனை பாதிக்கின்ற முடிவை துணிச்சலாக எடுப்பது ஒரு பிரச்சனை இல்லை .தன்னை பாதிக்கும் என்றாலும் அதைப்பற்றி கவலை படாமல் முடிவு எடுக்கணும் .நல்லதுக்காக .அதை இவர் மட்டும் அல்ல அவரும் செய்ததில்லை .
எந்த தகுதியும் திறமையும் இல்லாமல் இவர்களால் எப்படி மாறி மாறி ஆட்ச்சியில் உக்கார முடிந்தது ?ஓட்டு வங்கி .வேறு ஒரு காரணமும் இல்லை .அதர பழசுகள் மண்டைய போட்டால் ஒழிய இதற்க்கு ஒரு முடிவு கிடைக்காது .இவர்கள் இருவரின் முதல் கடமை நீ ஏன் இதை சரியாக செய்யவில்லை நு கேட்டா அவர்கள் செய்தார்களா நான் செய்ய நு கேக்குறாங்க .இல்லன அவர்கள் தான் சீர்கேட்டுக்கு காரணம் நு சொல்றாங்க .மாறி மாறி குறை சொல்வதை தவற வேறு ஒன்றையும் உருப்படியாக செய்யாதவர்கள் .நம்ம நாசமாப்போன முன்னோர்களும் சரி அதான் நம்ம அப்பன் தாத்தன் மாறுக , நீ ஏன்டா படிக்கல நு கேப்பானுக ,நாம பக்கத்து வீட்டுக்காரனும் பெயில் ஆனத சொன்னாலோ இல்ல ஆசிரியர் சரியில்ல நு சொன்னாலோ தூக்கிபோட்டு மிதிப்பாணுக .ஆனா ஆட்சில இருக்குறவனுக மட்டும் மாறி மாறி குறை சொன்னா பல்ல பொளந்துகிட்டு ரசிப்பாணுக.அவனுகளுக்கு எதுக்கு கோபபடனும் எதுக்கு படகூடதுனு கூட தெரியல .மடப்பயலுக .
சரி நேர்மையான ஊடகங்கள் இருக்கா - அதுவும் சத்தியமாக இல்லை .அப்படி இருந்திருந்தால் குறைகள் பெருமளவில் சுட்டிகாட்டபட்ட ிருக்கும் .
ஆனா சவுக்கு இந்த பெட்ரோல் பிரச்சனைல மக்கள் சண்டை போட்டத ஒழுக்கம் கெட்டவனுக நு சொன்னேல அத ஏத்துக்க முடியாது .அரை மணி நேரம் லேட் ஆ போனா வேலை பாக்குற இடத்துல என்ன என்ன பேசுவானுக நு உனக்கு தெரியாதா என்ன ? அவனுக கோபபட்ரதுல தப்பு இல்ல .காட்ற இடம் தான் தப்பு .அது அறியாமை .அதை போக்க நினைக்கனுமே தவற அவனுகள குறை சொல்றது ஞாயம் இல்லை
பொருட்கள், நுகர்வோருக்கு தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டத ு. இச்சட்டம்,///
தமிழகத்திலும் சரி முழு இந்தியாவிலும் சரி இருக்கும் அரசியல் தலைவர்கள் (ஆட்சிசெய்பவர்க ள்) எவர் சட்டத்துக்கு மதிப்புக்கொடுத் து ஆட்சியை செய்துகொண்டிருக ்கிரார்கள். ஆனால் அதிகாரத்தை மட்டும் பூதாகாரப்படுத்த ி மக்களை கொத்தடிமையாக வைத்து ஆட்சி புரிவதையே கவுரவமாக நினைத்து மனம் மகிழ்ந்து கொண்டிருக்கின்ற னர்.
பெற்றோல் தட்டுப்பாட்டின் போதும் அதுவே நிகழ்ந்திருக்கி றது. ஜெயலலிதா இயல்பிலேயே தன்னை தவிர மற்றவர்களை மனிதர்களாக்வே பார்க்க கூச்சப்படுபவர். பத்திரிகைகள் ஊடகங்கள் தன்னை பாராட்டி எழுத்துவதை தவிர நெக்கற்றிவ்வாக செய்தி வெளியிட்டால் காரணம் அறியாமல் கொதி நிலைக்கு செல்லும் மனோநிலை கொண்டவர். ஜெயலைதாவின் மனநிலை இதுவென்றால் இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்கள் ஊழல் ஒன்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதுவரை வேறு எதுக்கும் கொடுக்கவில்லை. ஊழல்கள் வெளியில் தெரிந்துவிட்டால ் அதை மூடி மறைப்பதற்கே சகல அரசு இயந்திரமும் திருப்பி விடப்பட்டு அந்த வேலையே அரச வேலையாக ஆண்டுகளை கடத்துகிறது.
நிலக்கரி ஊழல் பற்றிய கேள்விக்கு தன்மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட ால் பொது வாழ்விலிருந்து விலகுவதாக பாரத நாட்டின் பிரதமர் என்ற ஸ்தானத்தில் இருக்கும் மன்மோகன் சிங்கம் என்ற ஆத்மா கூறியிருக்கிறது . (குற்றம் நிரூபிக்கப்பட்ட ால் திஹாருக்கு அனுப்புங்கள் என்று கூறவில்லை) காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஊழல்கள் எங்கிருந்து பிறந்தாலும் அனைத்தையும் கண்டுகொள்ளாமல் மூடி மறைத்தது மன் சிங்கம்தான் என்று இந்தியா தாண்டி சர்வதேச அளவில் பேசப்படுகிறது.
இன்று பத்திரிகை ஊடகங்கள் வெகுஜன அமைப்புக்கள் அனைத்தும் முதலில் முக்கிய பொறுப்பிலிருக்க ும் அதிகாரிகளை கண்காணித்து தோலுரித்தாலே தவிர நேரடியாக ஆட்சியாளர்களை திருத்திவிட முடியாது.
சவுக்கு,
அம்மையார் போகும் வழி எங்கும், அவர் கடந்து செல்லவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பாகவே
காவல் துறையினர், ரோடில் நடந்து செல்வோரையும் தடை செய்து விடுகின்றனர்,
நேற்று என் கண்ணால் கண்டது
" கிழக்கு கடற்கரை சாலையில்
அம்மையார் செல்லும் முன் காவல் துறையினர்
பெட்ரோல் பங்க் இல் இருக்கும் அனைவரையும் அனுப்பி விட்டு
ஒரு மணி நேரம் கழித்து வர சொல்லி அனுப்பி விட்டார்கள்,"
பின்பு எப்படி அவர்களின் கண்ணுக்கு தெரியும்?
//பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குழந்தையை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு, வெயில் தாங்காமல் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வியர்வை வழிய, வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்லும் குடும்பத்தலைவர் களைப் பார்த்த போது, இந்த அரசின் மீது வந்த கோபம் கொஞ்சம் நஞ்சமல்ல தோழர்களே….///
"எங்கு அநியாயத்தை கண்டு நீ கொதிக்கிராயோ அங்கு நியும் நானும் தோழனே" நீதான்யா எம் தோழர். சேகுவாரா சொன்ன உண்மை தோழர்.
RSS feed for comments to this post