முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இளைஞர்களின் ஆதர்சம்… … … அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 33
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 31 மே 2012 08:34

யார் இந்த இளைஞர்களின் ஆதர்சம் என்று நினைக்காதீர்கள்.  வேறு யார் ?  தமிழினத்தின் தன்னிகரில்லாத, தரணி போற்றும், தன்னலமற்ற, தமிழினத்தின் தவமாய் தவமிருந்து பெற்ற தலைவன் கருணாநிதிதான்.   ஏன் அவர் இளைஞர்களின் ஆதர்சமாக இருக்கக் கூடாது ?  இந்த 87 வயதில், இப்படி பல்டி அடித்து இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறாரே…  என்னைப் போல பல்டி அடிக்க முடியுமா ? அதுவும் ஒரே மணி நேரத்தில் இப்படி பல்டி அடிக்க முடியுமா என்று சவால் விட்டிருக்கிறாரே…. இதை விட இளைஞர்களை ஆகர்ஷிக்க ஒரு தலைவன் என்னதான் செய்ய முடியும் ?

Karunaaaa

இனி… தன்னிகரில்லா தலைவன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து.

கேள்வி   :     ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து கொண்டே பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துகிறீர்களே…

கருணாநிதி :   இந்த போராட்டம் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்துத்தான்.  மத்திய அரசை எதிர்த்து அல்ல.

கேள்வி   :     மத்திய அரசுதானே பெட்ரோல் விலையை நிர்ணயிக்கிறது.

கருணாநிதி :   மத்திய அரசு பெட்ரோல் விலையை நிர்ணயித்தாலும், பெட்ரோலை அது உற்பத்தி செய்யவில்லையே. அப்படி இருக்கையில் இந்த ஆர்ப்பாட்டம் எப்படி மத்திய அரசுக்கு எதிரானதாக இருக்க முடியும் ?

கேள்வி   :     இந்தப் போராட்டம், கச்சா எண்ணை விலையை நிர்ணயம் செய்யும் ஓபெக் நாடுகளான அல்ஜீரியா, அங்கோலா, ஈரான், குவைத்  உள்ளிட்ட நாடுகளை எதிர்த்தா ?

கருணாநிதி  : மாநிலங்களின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதை எப்படி திமுக தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளதோ, அதே போல மத்திய அரசின் அதிகாரமான வெளியுறவு கொள்கையில் திமுக தலையிடாது.

கேள்வி     :   அப்போது இப்போராட்டம் தாறுமாறாக விலையேற்றம் செய்யும் எண்ணை நிறுவனங்களை எதிர்த்தா ?

கருணாநிதி  :  பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் சொத்து.  அந்த நிறுவனங்கள் நலிவடையாமல் பாதுகாப்பதில் திமுக எப்போதும் முன்னின்று வந்துள்ளது.  அந்த நிறுவனங்களுக்கு எதிராக திமுக ஒரு போதும் செயல்படாது.

கேள்வி   :     யாரை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டம் ?

கருணாநிதி :   காவிரிப்படுகையில், நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் எடுக்கப்படும் கச்சா எண்ணை தமிழகத்திற்குச் சொந்தமல்லவா ?  தமிழக எல்லையில் இருக்கும் அந்த நரிமணப் படுகையில் எடுக்கப்படும் கச்சா எண்ணையை தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கத் தவறிய அந்த அம்மையாரை எதிர்த்தே இந்தப் போராட்டம்.

கேள்வி  :     இந்தியாவில் எந்த இடத்தில் கச்சா எண்ணை எடுக்கப்பட்டாலும் அது மத்திய அரசுக்கு சொந்தமல்லவா ?  மாநில அரசு எப்படி அதை எடுக்க முடியும் ?

கருணாநிதி  :  ரிலையன்ஸ் போன்ற ஒரு தனியார் நிறுவனம் கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் கச்சா எண்ணை எடுக்க அனுமதிக்கப்படுகையில், ஒரு மாநில அரசுக்கு அந்த உரிமை கிடையாதா ?  தமிழன் என்றால் இளிச்சவாயனா ?

கேள்வி   :     நீங்கள் ஆட்சியில் இருந்தபோது இதைச் செய்திருக்கலாமே ?

கருணாநிதி :   கழக ஆட்சியில் நாகப்பட்டினம் நரிமணப்படுகையில் உள்ள கச்சா எண்ணையை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த வேளையில் தேர்தல் வந்ததால் அத்திட்டத்திற்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது.  மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்று இருந்தபோது, தமிழக மக்கள் அறியாமையால் அம்மையாரைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், தம்பி துரை முருகன், கலைஞர் கச்சா எண்ணை திட்டம் என்று அந்தத் திட்டத்துக்கு பெயரே வைத்து விட்டார்.

கேள்வி   :     திமுக தேர்தல் அறிக்கையில் இது பற்றிச் சொல்லவில்லையே ?

கருணாநிதி :   திமுக அரசின் பல திட்டங்களை அந்த அம்மையார் காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலே வெளியிட்டுள்ளளார்.  அதைத் தவிர்ப்பதற்காகவே அத்திட்டத்தைப் பற்றி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. 356 பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசைக் கலைப்பதை திமுக என்றுமே எதிர்த்து வந்திருக்கிறது என்றாலும், தமிழக நலன் கருதி மத்திய அரசு அம்மையாரின் ஆட்சியைக் கலைத்து, என்னை ஆட்சிப் பொறுப்பிலே அமர வைக்குமேயானால், கலைஞர் கச்சா எண்ணை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவோம்.  மேலும், திமுகவின் கொள்கையே, “சொல்வதைச் செய்வோம். சொல்லாததையும் செய்வோம்” என்பதுதானே.

கேள்வி   :     சொல்லாததை எதைச் செய்துள்ளீர்கள் ?

கருணாநிதி  :  ஸ்பெக்ட்ரத்தில் கோடிக் கணக்கில் கொள்ளையடித்ததை சொல்லி விட்டா செய்தோம் ? சொல்லாமல் செய்யவில்லை ? மேலும், செய்த பிறகு கூட சொல்லவில்லையே.. சிபிஐதானே கண்டுபிடித்துச் சொல்லியது ?

கேள்வி   :     பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவீர்களா ?

கருணாநிதி :   கசப்போடு ஆதரவு தருவோம்.

கேள்வி   :     பெட்ரோல் விலையைக் குறைத்தால் ?

கருணாநிதி  :  இனிப்போடு ஆதரவு தருவோம்.

கேள்வி    :    மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தினால் ?

கருணாநிதி :   வருத்தத்தோடு ஆதரவு தருவோம்.

கேள்வி    :    டீசல், சமையல் எரிவாயு விலையை  உயர்த்தினால் ?

கருணாநிதி :   கண்ணீரோடு ஆதரவு தருவோம்.

கேள்வி   :     அப்படியென்றால் மத்திய அரசுக்கு உங்கள் ஆதரவு எப்போதும் தொடருமா ?

கருணாநிதி :   மாநில சுயாட்சிக்கு பங்கம் வந்ததென்றால் திமுக அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.  தமிழக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திமுக அந்த உரிமைகள் பாதிக்கப்பட்டால், ஆதரவை வாபஸ் பெற ஒரு நொடியும் தயங்காது.

கேள்வி   :     முல்லைப் பெரியாறு விவகாரத்திலும், காவிரி விவகாரத்திலும், மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறதே…

கருணாநிதி :   பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் உறுதி அளித்துள்ளார்.

கேள்வி   :     ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவிக்காலம் முடியும் வரை ஆதரவை வாபஸ் பெற மாட்டீர்கள்… ?

கருணாநிதி :   வாபஸ் பெற்றால், அழகிரிக்கு நீங்களா பதில் சொல்வீர்கள்…  தனியாக இருக்கும்போது அழகிரி பேசுவதை நீங்கள் கேட்டிருந்தால் இப்படிக் கேள்வி கேட்க மாட்டீர்கள்.

கேள்வி   :     திடீரென்று டெசோ அமைப்பை தொடங்கியுள்ளீர்களே ?

கருணாநிதி :   யாருமே பாராட்டு விழா நடத்தவில்லையென்றால் நான் என்னதான் செய்வது ?  வீட்டுக்கு வந்தால் குடும்பப் பஞ்சாயத்து.  அறிவாலயம் சென்றாலும் குடும்பப் பஞ்சாயத்து.  கலைஞர் டிவிக்கு சென்றாலும் குடும்பப் பஞ்சாயத்து.  நான் என்னதான் செய்வது ?

கேள்வி   :     ஏற்கனவே இருந்த டெசோ அமைப்பை யாரிடமும் கலந்தாலோசிக்காமல் கலைத்தது நீங்கள்தான் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளாரே.

கருணாநிதி  :  கலைப்பதற்கு நான் மகப்பேறு மருத்துவன் அல்ல.

கேள்வி   :     தனி ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ?

கருணாநிதி :   தனி ஈழத்தை நானும் திமுகவும் எப்போதும் ஆதரித்தே வந்துள்ளோம்.

கேள்வி   :     ஆனால் கடந்த காலத்தில் இலங்கை ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமல் ஒரு தீர்வு ஏற்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்களே…

கருணாநிதி  :  இப்போதும் அதில் மாற்றமில்லை. தனி ஈழத்தின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமல் இலங்கை இருக்க வேண்டும். இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமல் தனி ஈழம் இருக்க வேண்டும்.

கேள்வி   :     புரியவில்லையே…

கருணாநிதி  :  எனக்கும்தான் புரியவில்லை.  நான் உங்களிடம் விளக்கமா கேட்கிறேன் ?

கேள்வி   :     நீங்கள் புலிகளை ஆதரிக்கிறீர்களா ?

கருணாநிதி :   புலிகளை ஆதரிப்பதற்காகத்தான் முதுமலை வன விலங்குகள் சரணாலயத்தையே ஏற்படுத்தினேன்.  கடந்த கழக ஆட்சியின்போது கூட, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு புலிக்குட்டிகள் பிறந்தன என்பதை மறந்து விடாதீர்கள்.

கேள்வி   :     நான் கேட்டது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி.

கருணாநிதி :   நான் புலி எதிர்ப்பாளன் அல்ல.   அந்த அம்மையார் காலத்தில்தான் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது.  பிரபாகரன் என் நண்பர் என்று எப்போதோ சொல்லியிருக்கிறேன்.  புலிகள் இயக்கம் தொடங்கப்படும் முன்பு இயக்கத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தம்பி பிரபாகரன் என்னிடம்தான் கேட்டார்.  நான்தான், புறநானூற்றிலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் கூறி, விடுதலைப் புலிகள் இயக்கம் என்று பெயர் வைக்குமாறு யோசனைக் கூறினேன்.

கேள்வி  :     ஆனால் புலிகள் இயக்க வரலாறு வேறு மாதிரி இருக்கிறதே ?

கருணாநிதி :   தம்பி பிரபாகரனிடமே உங்கள் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி  :     பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லையே ?

கருணாநிதி  :  அந்த தைரியத்தில்தானே நான் இப்படிப் பேசுகிறேன்.

கேள்வி   :     ஆனால் உங்கள் ஆட்சிக் காலத்தில்தானே புலிகள் இயக்கம் மீதான தடை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.

கருணாநிதி :   புலிகள் இயக்கத்தை பாதுகாப்பதற்காகத்தான் தடை நீட்டிக்கப்பட்டது.  தடை இல்லாவிட்டால், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகம் வந்து, நான் கதை வசனம் எழுதிய “பெண் சிங்கம்”, “இளைஞன்” “பொன்னர் சங்கர்” போன்ற படங்களைப் பார்க்க தமிழகம் வந்து, அந்தப் படங்களில் லயித்து தமிழகத்திலேயே தங்கி, தனி ஈழம் அமைக்கும் தங்களின் நோக்கத்திலிருந்து வழுவி விடுவார்கள் என்பதாலேயே அந்தத் தடை நீட்டிக்கப்பட்டது.

(பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோதே, பிரியங்கா வதேராவின் மகளிடமிருந்து கருணாநிதிக்கு தொலைபேசி அழைப்பு என்று உதவியாளர் தெரிவித்ததும், பேட்டியை ரத்து செய்துவிட்டு, தொலைபேசி அழைப்பை ஏற்க விரைந்தார் கருணாநிதி)

 

Comments  

 
+1 #33 Thanikachalam 2012-06-05 10:33
Karunanidhi and Tamileelam: இந்தியாவைத்தவிர பல ஆயிரம் மயில்களுக்கு சுற்றுவட்டாரத்த ில் எந்த வித அண்டைநாடுகளும் இல்லாத இலங்கையில் 15 மயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக கடந்துவரக்கூடிய தமிழர்களை வந்தேறு குடிகள் என்பதும். அதே இலங்கையின் பெரும்பான்மை இனமாக இருக்கும் சிங்களவர்களை விமான வசதி இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குதித்த வந்தேறு குடிகள் என்பதும். அதை பல ஆயிரம் மயில்கள் கடந்து வந்து தற்போது மேற்குலகநாடுகளி ல் சிலாகித்துக் கொண்டிருப்பது, சாதாரண மனித அறிவை நகைப்புக்கிடமாக ்கிறது!.

மேற்குலக “ருவாண்டா” கல்வியறிவின் மகிமையை வியக்க வைக்கிறது. பிரச்சனையின் கரு வேறு ஏதோ இருக்க அவலை நினைத்து வெறும் உரலை இடிப்பது போலுள்ளது !. — http://www.thehindu.com/multimedia/dynamic/01103/04TH_THANJAVUR_1103574f.jpg

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3490259.ece
Quote
 
 
+1 #32 dhinakaran 2012-06-05 06:52
தலைவனின் பதிலில் உடன்பிறப்புக்கள ் மெய் சிலிர்த்துப்போவ ார்கள்.ஒரு தனிப்பட்ட கட்சியின் அதிகாரத்திலிருந ்து நடுவன் அரசு விடுபட்டபோதே இடதுசாரிகளும் மானிலக்கட்சிகளு ம் மத்தியில் கூட்டாட்சி முறையில் மாற்றங்களை நிகழ்த்தி உருப்படியான இந்தியாவை உருவாக்கி இருக்கலாம்.ஆனால் மானிலக்கட்சிகள் ஊழலில் பஙுகு பெறுவதையும் குடும்பத்தினரை அமைச்சர் ஆக்குவதற்குமே வாய்ப்பை பயன்படுத்தின!நூ று கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நாட்டை முன்னெற்ற முடியாது என்ற தெளிவில் இருக்கிறார்கள்.குடும்பத்தையாவத ு உலகபணக்காரனாக்க ிவிட்டுச்செல்வோ ம் என முடிவுசெய்து செயல்படுகிறார்க ள்.
Quote
 
 
0 #31 Manonmani 2012-06-04 12:38
கரன்சி கருணானிதி: http://www.thehindu.com/multimedia/dynamic/01102/04THKARUNA_1102738e.jpg

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3487462.ece
Quote
 
 
+2 #30 Haribaskaran 2012-06-03 13:25
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு

ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
Quote
 
 
-4 #29 Gowtham Thangaraj 2012-06-03 13:07
எதிரிகளே ஆனாலும், பிறந்தநாள் அன்று அவரை இகழ்ந்து பேசுவது/விமர்சிப்பது எத்தனை மோசமான வக்கிரமான மனநிலை :(
Quote
 
 
+3 #28 Rk. Guru 2012-06-03 06:42
கருணாநிதி 1924 ஆண்டு பிறந்தார் (இதில் ' ர் ' பயன்படுத்துவது தமிழ் எழுத்து அவமானபடுகிறது. "ன்" போடுங்கள் என்கிறது. ஆனால் என்னால் முடியவில்லை என்ன செய்வது அந்த ஆள் மேல், தமிழ் மேல் ஏதோ விட்ட குறை தொட்ட குறை கண்ணுக்கு தெரியாத அளவுக்கு கொஞ்சம் இருக்கிறது) அவருக்கு 88 முடிந்து 89 வயது தொடங்குகிறது நீங்கள் 87 வயது என்று போட்டிருக்கிறீர ்கள்.

இது ஒரு பெரிய விசயமா என்றால் பெரிய விசயமாகத்தான் இருக்கவேண்டும் சீக்கிரம் வயது ஏறாத.. சீக்கிரம் போய் சேராதா.. என்ற ஆதங்கம்தான்...தந்தை பெரியார் 90 வயது கடந்து வாழ்ந்தார் ஆனால் 100 வயதை தொடவில்லையே.. "ஐயோ, பெரியார் 100 வயதை தாண்டி வாழ்ந்திருக்கலா மே..." என்ற எண்ணம் இன்னும் என்னுள்ளே உள்ளது. ஆனால் கருணாநிதி ஒவ்வொரு வயதை கடக்கும்போதும் எம் தமிழிழ விடுதலை தள்ளிதான் போகிறது.
Quote
 
 
+1 #27 Kishore 2012-06-02 10:53
எந்த அரசியல்வாதியாவத ு தற்கொலை செய்ததுண்டா?
Quote
 
 
+5 #26 Sunita 2012-06-02 10:44
சூடு, சொரனை, வெட்கம், மானம், ரோஷம், கோபம் என்பதெல்லாம் தடித்த தோலுடய இந்த கரு(நாகம்) பயலுக்கு எங்கே உரைக்கபோகுது. இந்த இனப்பய, தமிழ் இன துரொகி ஒழிந்தால் தான் தமிழ் நாடு உருபுடும்.
Quote
 
 
+1 #25 debin 2012-06-01 19:02
கலைஞர் கஞ்சா எண்ணை திட்டத்தை ஆரம்பியுன்கல்... தக்காலி ஒரு பய நிதானத்தோடு இருக்ககூடாது.... லூசுப்பய...
Quote
 
 
0 #24 maha 2012-06-01 15:01
ஸதிஷ் சிங்கபூர் !! இந்த அபத்தமான வாதத்தை உன்களை பொன்றோர் எப்போது விடுவீர்கள்? திமுகவின் தவறுகளை விமர்சித்தால் ,அம்மா அனுதாபி . கான்கிரஸ் ஊழலை கண்டித்தால் , பிஜெபி காரன் . எனக்கு தெரிந்து சவுக்கு , கருணா ,ஜெயா இருவரை பட்றியும் , கட்டுரைகள் எழு திக்கொண்டுதான் இருக்கிறது .
Quote
 
 
0 #23 Kani 2012-06-01 10:29
கேள்வி : டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தினால் ?

கருணாநிதி : கண்ணீரோடு ஆதரவு தருவோம்.
Quote
 
 
-1 #22 Kani 2012-06-01 10:28
கேள்வி : பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால ் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவீர்களா ?

கருணாநிதி : கசப்போடு ஆதரவு தருவோம்.

கேள்வி : பெட்ரோல் விலையைக் குறைத்தால் ?

கருணாநிதி : இனிப்போடு ஆதரவு தருவோம்.

கேள்வி : மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தினால் ?

கருணாநிதி : வருத்தத்தோடு ஆதரவு தருவோம்.

கேள்வி : டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தினால் ?

கருணாநிதி : கண்ணீரோடு ஆதரவு தருவோம்.
Quote
 
 
+1 #21 கி மனோகரன் 2012-06-01 10:04
Decency, Dignity and Decorum த்துடன் ஒரு கேள்வி விடுபட்டுள்ளது.
கேள்வி: உங்கள் வேட்டி, ஜட்டி ஆகியவைகளை மத்திய அரசு உருவிக்கொண்டால் என்ன செய்வீர்கள்?

பதில்: ஐயகோ!, நெஞ்சு பதைக்க, பதைக்க "ஆதரவுக் கொடுப்போம்" !

கேள்வி: சூப்பர் ஐடியா! எங்கிருந்து உருவினீர்கள் ?

கேள்வி: இலங்கைத் தமிழர்களிடமிருந ்துதான்!.
தொப்புள்கொடி உறவுகளான "வன்னி மக்களை" 2009 ல் ஆண், பெண், முதியவர், சிறுவர், சிறுமியர் என்று வித்தியாசம் பாராமல் நிர்வாணமாக மூன்று லட்சம் மக்களை வரிசையில் நிற்கவைத்து படம்பிடித்து, பரிசோதனை செய்து, பலநூறு Tetra Byte டுகளாக டிஜிட்டலில் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் கொடியினை,- புலிக்கொடியினை உலகம் முழுவதும் பிடித்துக்கொண்ட ு திரிந்த அதே கைகளினால் "தூக்கிப் பிடிக்கவில்லையா ?", அந்த "ஐடியாவைத்தான்" தொப்புள்கொடி மூலம் சிரஞ்ச்சியை வைத்து உறிஞ்சி எடுத்துவிட்டேன் !.
Quote
 
 
+1 #20 kaangirasu 2012-06-01 09:39
மக்களே! நல்லா பார்த்துகுங்க!! இதுக்கெல்லாம் நான் பொருப்பாக முடியாது..நாங்க நாங்க தான்.. நீங்க நீங்க தான்.. நாஆங்க நாஆங்க தாஆன்ன்.. நீஈங்க நீஈங்க தாஆன்.. போங்க டாஸ்மாக் தொறந்தாச்சு..புது புது சரக்கெல்லாம் வருதாம்..அத விட்டுட்டு என்னமோ பெட்ரோல் டீசல் அப்புடின்னு பினாத்திகிட்டு.. நாங்க பிற்பட்ட தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் ஏற்றத்திற்கு பாடுபடும் ஒரே இயக்கம்.. ஆரிய மாயயில் இருந்து விடுபட ஒர்ரஏ வழி டாஸ்மாக் தான்.. சரக்க அடிச்சிட்டு மானும் மயிலும் ஆடுறத பார்துட்டு செம்மொழி சேவை தின்னுட்டு ச்சாரி பண்ணிட்டு கவுந்தடிச்சி படுங்க மாண்புமிகு மானங்கெட்ட தமிழா!
Quote
 
 
+28 #19 Tamil2 2012-06-01 02:06
"கருணாநிதி : வாபஸ் பெற்றால், அழகிரிக்கு நீங்களா பதில் சொல்வீர்கள்… தனியாக இருக்கும்போது அழகிரி பேசுவதை நீங்கள் கேட்டிருந்தால் இப்படிக் கேள்வி கேட்க மாட்டீர்கள்."
அருமை!!!!!!!!!! !!!!!!!!!!!!!
Quote
 
 
+24 #18 ஊர்க்குருவி. 2012-05-31 23:00
எவ்வளவுதான் திட்டினாலும், எத்தனை நையாண்டி செய்தாலும், எவ்வளவு தரக்குறைவாக விமர்சனம் செய்தாலும், கோபப்பட கருணா கொஞ்சமேனும் மனிதப்பிறப்பாக இருக்கவேண்டும். தோலில் கொஞ்சமேனும் சுரணை "ரோசம்" பிறப்பில் சுரந்திருக்கவேண ்டும். எதையும் தாங்கிக்கொண்டு மோசமான கழிசடையாக சோனியாவின் சேலை தலைப்பை விட்டு வெளியேறாத கருணா, சோனியா எட்டி உதைத்தாலும், ராசாத்தி விவாகரத்து செய்வேன் என்று மிரட்டினாலும் ஆதரவை விலக்கிக்கொள்ளம ாட்டார். ஏனென்றால் அவரது குடும்பத்துக்கு இன்றைய கால்கட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் என்றல்ல,, மத்திய ஆட்சியின் ஆதரவு தனக்கு இருப்பதுபோல் காட்டிக்கொள்ளவே ண்டிய சிறுமை நிலை.
Quote
 
 
+29 #17 Jesreel Anandapaul 2012-05-31 22:07
இதை நான் ஜோக் என்ரு பார்க்கவீலலை உன்மயான பதிலும் இப்படித்தான் இருக்கும்.
Quote
 
 
+31 #16 kallairaaj 2012-05-31 19:21
இந்த கேள்விகளை அவரிடம் கேட்டு இருந்தால், அவர் இப்படி தான் பதில் சொல்லுவார்...
வெகு நாட்கள் கழித்து வாய் விட்டு சிரித்தேன் .. நன்றி சவுக்கு ..
Quote
 
 
+7 #15 Padman 2012-05-31 19:17
முதியவரை திட்ட மனமில்லை... !!! என்ன கடைசி காலத்தில் இப்படி தொல்லை கொடுப்பது நல்லா இல்லை.
Quote
 
 
+11 #14 kaangirasu 2012-05-31 17:40
நான் கூட அவசரப்பட்டு 18 பைசா பெட்ரோல் விலை குறைத்த பின் பெருசு என்னாலதான் அப்புடின்னு அறிக்கை விடும்னு பின்னூட்டம் போட்டேன். பட் நம்ம பெருசு அடிச்சாரு பாரு அந்தர் பல்டி... நான் அப்புடி சொல்லவே இல்லைன்னு... அடின்னா இது தான் அடி.. தமிழன் நடு மண்டை மேல..அடி ஒவ்வொன்னும் ஒன்றறை டண் வெய்ட்டுடா.. ஒவ்வொரு முறையும் வாங்கியும் வலிக்காத மாதிரியே நடிக்கிறானே.. தமிழன்...அவன் ரொம்ப நல்ல்ல்ல்லவன்.
Quote
 
 
+19 #13 Raja N 2012-05-31 17:20
//கேள்வி : சொல்லாததை எதைச் செய்துள்ளீர்கள் ?

கருணாநிதி : ஸ்பெக்ட்ரத்தில் கோடிக் கணக்கில் கொள்ளையடித்ததை சொல்லி விட்டா செய்தோம் ? சொல்லாமல் செய்யவில்லை ? மேலும், செய்த பிறகு கூட சொல்லவில்லையே.. சிபிஐதானே கண்டுபிடித்துச் சொல்லியது ?//////

Ultimate Savukku :)
Quote
 
 
+8 #12 daffa 2012-05-31 16:29
நாடு கவுன்டா மனீ இல்லமல் தவிகிரது நி பொகலம்
Quote
 
 
+11 #11 M RAMASWAMY 2012-05-31 15:51
மஞ்ச துண்டு மீண்டும் தான் இத்தாலிய ராணியின் அடிமை என்பதை பல்டி அடித்து நீரூபித்துள்ளார ்.
Quote
 
 
+8 #10 gvass 2012-05-31 15:05
அருமயான கட்டுரை.தமில் நாட்டை குட்டி சுவரக்கிய கருனனிதி ஒலிக
Quote
 
 
+2 #9 Gothabhaya 2012-05-31 14:59
ஈழவா வகுப்பை சேர்ந்த நாஞ்சில் கி மனோகரன் அவர்கள் இறந்தபோதும் சென்னையில் ம.தி.மு.க பிரமுகர்கள் என்றே பத்திரிகையில் வந்தது. தஞ்ச்சாவுரை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும ் "காசில் கண் வையடா தாண்டவக்கோனே" என்றுதான் "முரசொலி டமாரமடிக்கும்". அழகிரி தெலுங்கு நாயக்கன், யாழ்ப்பாண வெள்ளாளரும், இசை வெள்ளாளரும் ஒன்று என்பதெல்லாம் "சந்தர்ப்ப வாதமே தவிர", "Best adopted Chameleon survive longer" என்பதே தவிர "LOGIC" எதுவும் கிடையாது.

ஒட்டு மொத்தமாக இசை வெள்ளாளர்களை(no t cause much pain) அரசியலிலிருந்து அகற்றுவதன் முலம், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தரும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்களை "வெள்ளை வேனில்" ஏற்றுவதன் மூலம் இந்தியர்கள் நிம்மதியாக வாழலாம் !.
Quote
 
 
+15 #8 R Nagarajan 2012-05-31 14:47
பிரபாகரன் நண்பன் என்பது வேறு.. புலிகள் எதிர்ப்பு என்பது வேறு..காங் எதிர்ப்பு என்பது வேறு சோனியா ஆதரவு என்பது வேறு.. மாநில சுயாட்சி என்பது வேறு.. கர்நாடக காவிரி தண்ணீர் என்பது வேறு.. போபர்ஸ் என்பது வேறு ஸ்பெக்டிரம் என்பது வேறு...ஆட்சியில் இருக்கும் போது பேசுவது வேறு.. ஆட்சியில் இல்லாத போது பேசுவது என்பது வேறு... நர்ன் வேறு .. நீ வேறு....
Quote
 
 
-61 #7 Sathish-Singapore 2012-05-31 14:25
ஒன்ரு தெளிவா தெரியுது ... சவுக்கு ஒரு அ.தி.மு.க விசுவாசி, ஜெயா விசிரின்னு.. கருணாநிதி போராட்டம் திமுக வின் எதிர்ப்பை தெரிவிப்பதுதான் .. ஆதரவை வாபசு பெருவது இல்லை.
Quote
 
 
+4 #6 arunyog 2012-05-31 14:24
திராவிட கட்சிகளால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளி ல் ஒளிப்பரப்பாகவும
நெடுந்தொடர்களில ் கதை இருக்காது,
லாஜிக் இருக்கது, கண்டினியுட்டி இருக்கது,
மொத்தத்தில் அபத்தங்களீன் அணிவகுப்பாக
இருக்கும். அதுதான் இன்றைய திரவிட அரசியல்
Quote
 
 
+16 #5 Ji M 2012-05-31 12:15
இதுக்கு மேலயுமா மு.க பதவியில் நீடிக்க வேண்டும் ? :P
Quote
 
 
+9 #4 Prabu 2012-05-31 12:07
அருமை
Quote
 
 
+13 #3 Nageswaran 2012-05-31 11:56
உங்கள் தைரியம் உன்மையாக பாராட்டத்தகுந்த து
Quote
 
 
+9 #2 ARUNKUMAR M 2012-05-31 11:29
கருனானிதி பாவம் :லொல்: எவ்லோ அடிச்சாலும் தாஙகரார்
Quote
 
 
+24 #1 நல்லூரான் 2012-05-31 08:51
ஹா ஹா ஹா...
சவுககு, முடியல...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 35 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2431
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week49246
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month262065
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12784184