முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
உச்சகட்ட சிறுபிள்ளைத்தனம் .. …. … அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 14
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 07 ஜூன் 2012 08:57

புதனன்று காலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் திமுக முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை சிறையில் சந்திக்க கருணாநிதி செல்வதாக இருந்தது.  இதற்காக உரிய அனுமதி கடிதங்களை எழுதிக் கொடுத்து புழல் சிறைக்கு கருணாநிதி கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவசர அவசரமாக வீரபாண்டி ஆறுமுகத்தை, புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.  அதிகாலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காலை 9 மணியளவில், காவல்துறை வாகனம் வீரபாண்டி ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு புழல் சிறையை விட்டுக் கிளம்பியது.

DSCF3485

திமுகவில் இருக்கும் அமைச்சர்களிலேயே மோசமானவர்கள் என்று பட்டியல் எடுத்தால் அதில் முதலில் வருபவர் வீரபாண்டி ஆறுமுகமாகத்தான் இருக்க முடியும். வீரபாண்டி ஆறுமுகத்தின் அடாவடிகளை பட்டியல் போட்டால் இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரையாகி விடும்.   ஏழை உழைப்பாளி மக்கள் குடியிருந்த அங்கம்மாள் காலனி நிலத்தை சூறையாடியது ஒரு சிறப்பான உதாரணம்.   ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சொத்துக்காக கொலை செய்த பாரப்பட்டி சுரேஷுக்கு இவர் கொடுத்த ஆதரவும் மக்கள் யாரும் மறக்க முடியாதது.

தமிழ்நாட்டில் விருப்புரிமைக் கோட்டா என்ற பெயரில் வீட்டு வசதி வாரிய வீடுகளை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கபளீகரம் செய்த விவகாரம் வெளியில் வந்து, அது குறித்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் கருத்து கேட்கச் சென்றபோது, “என்னய்யா… என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு நான் வீடு வாங்கக் கூடாதா… அப்படித்தான் பண்ணுவேன் போய்யா” என்று கேமரா முன்பாகவே சொன்னவர் வீரபாண்டி ஆறுமுகம்.   நிரந்தரமாக சிறையிலேயே இருக்கத் தகுதியான ஒரு நபர் யாரென்றால், அது வீரபாண்டி ஆறுமுகமே.

வீரபாண்டு ஆறுமுகத்தின் மீது வரும் புகார்களை பரிசீலித்து, அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்வதற்கு காவல்துறைக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.  ஆனால், தமிழக காவல்துறை வீரபாண்டியாரை சமீபத்திய கைதின் போது நடத்திய விதம் தமிழக அரசின் சிறுபிள்ளைத்தனத்தையே காட்டுகிறது.    எவ்வளவு மோசமான குற்றவாளியாக இருந்தாலும் வீரபாண்டியாருக்கும் மனித உரிமைகள் உண்டு.

கருணாநிதி பிறந்தநாளுக்கு சென்னைக்கு வந்திருந்த வீரபாண்டி ஆறுமுகம், திங்களன்று காலை அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.   கைது செய்யப்பட்ட வீரபாண்டியாரை சாலை வழியாக சேலம் கொண்டு சென்று, திங்களன்று இரவு நீதித்துறை நடுவர் முன்பு முன்னிறுத்தி, சேலம் சிறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  சேலம் சிறைக் கண்காணிப்பாளர் சேலம் சிறையில் இட நெருக்கடி (!!!???) என்று தெரிவித்த காரணத்தால், அன்று இரவே சேலத்திலிருந்து சென்னைக்கு சாலை வழியாக கொண்டு வந்து, செவ்வாய் அன்று விடியற்காலையில், சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகத்தை நேர்காணல் செய்ய, கருணாநிதி முடிவெடுத்து, செவ்வாயன்று மாலை இதற்கான விண்ணப்பம் மற்றும் இதர நடைமுறைகளை முடித்த பிறகு, புதனன்று காலை புழல் சிறைக்கு கிளம்ப கருணாநிதி எத்தனித்துக் கொண்டிருக்கையில், சென்னையிலிருந்து வேலூர் சிறைக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு வாகனம், காலை 9 மணிக்கே புழல் சிறையை விட்டுக் கிளம்பியிருக்கிறது.

வேலூர் சிறை வரை, சாலையில் பயணிக்க முடியாத காரணத்தால் கருணாநிதி அந்தச் சந்திப்பைக் கைவிட்டார்.

இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி, தனது அறிக்கையில் “ஆட்சிகள் வரும், போகும்; ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஜனநாயகப் போட்டியில் அது முடிவாகும். அது எந்த ஆட்சியாக இருந்தாலும், ஆட்சியிலே இருப்போர், மீண்டும் தாங்கள் மக்களைச் சந்திக்க நேரிடும் என்பதை மறந்து விட்டு பழி வாங்கும் செயலிலே தொடர்ந்து ஈடுபடுவது நல்லதல்ல.

AVN_KARUNA_120812f

குறிப்பாக தற்போது ஆட்சியிலே இருக்கும் அ.தி.மு.க., இப்படிப்பட்ட பழி வாங்கும் செயலிலே கச்சைக் கட்டிக் கொண்டு ஈடுபட்டுள்ளது. கழகத்தில் இருந்த அமைச்சர்கள் மீதும், முன்னணியினர் மீதும் அ.தி.மு.க. அரசு யாரிடமிருந்தோ ஒரு புகாரை எழுதி வாங்கிக் கொண்டு, சட்டப்படியான நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல், அவர்கள் மீது வழக்குத் தொடுத்து கைது செய்து சிறையிலே அடைக்கிறார்கள். அவர்களை நீதிமன்றம் ஜாமீனிலே வெளியே அனுப்பினால், அடுத்த சில மணி நேரத்தில் வேறு ஒருவரிடமிருந்து வேறு ஒரு புகாரைப் பெற்று, அந்தப் புகாரின் கீழே கைது செய்ததாகக் காட்டி சிறையிலே தொடர்ந்து இருக்கச் செய்கிறார்கள். இவ்வாறு இரண்டு மூன்று வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்தால், உடனே அவர்கள் மீது “குண்டர்” சட்டத்தைப் பயன்படுத்தி ஜாமீனிலே வெளியே வரவிடாமல் செய்கிறார்கள்.

இந்த நிலையில் என்னுடைய பிறந்த நாளையொட்டி கழகத்தினரிடையே பெரிய எழுச்சி தோன்றியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு மக்களிடையே இருந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமலும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்துள்ளது. குறிப்பாக சேலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்காக, அதே நாளில் சென்னையிலே என் பிறந்த நாள் விழாவிலே கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது இந்த ஆட்சியினர் ஆறாவதாக ஒரு வழக்கைத் தொடுத்து, சென்னையிலே அவரைக் கைது செய்து, சென்னையிலிருந்து காரிலேயே அவரை சேலத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே ரிமாண்ட் செய்த பிறகு, அவரை சேலத்திலேயே சிறையிலே அடைக்காமல், அங்கே சிறையில் இவர் ஒருவரை வைக்க இடம் இல்லை என்றொரு காரணத்தைக் கற்பித்து, அங்கிருந்து மீண்டும் காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையிலே அடைத்திருக்கிறார்கள்.

இவ்வளவிற்கும் அவர் ஒரு இதய நோயாளி. மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச்சையிலே இருப்பவர். அவரை இந்த அளவிற்கு சென்னைக்கும் சேலத்திற்குமாக இழுத்தடித்திருக்கிறார்கள். ஏன் இந்த வெறுப்பு அரசியல்? இது அதிகார துஷ்பிரயோகம் அல்லாமல் வேறு என்ன? இந்த நிலையில் புழல் சிறையிலே இருந்த அவரைப் பார்ப்பதற்காக நான் நேற்றைக்கு முயற்சித்த போது செவ்வாய்க்கிழமையில் அவரைப் பார்க்க முடியாது, புதன்கிழமை தான் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்கள். எனவே இன்று (6-6-2012) காலையில் வீரபாண்டியாரைப் பார்ப்பதற்காக நானும், சட்டமன்ற தி.மு.க. தலைவர், மு.க. ஸ்டாலினும், சட்டப் பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், நாடாளுமன்ற உறுப்பினர்  டி.கே.எஸ். இளங்கோவனும் முறையாக உரிய அதிகாரிகளுக்கு 5-6-2012 அன்றே விண்ணப்பித்திருந்த நிலையிலே - அவரை நாங்கள் பார்க்கக் கூடாது  என்ற எண்ணத்தோடு இன்றையதினம் காலை 7 மணி அளவிலே வீரபாண்டி ஆறுமுகத்தை புழல் சிறையிலேயிருந்து வெளியே அழைத்துச் சென்று விட்டார்கள்.

அவரைச் சேலம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்கிறார்களா, வேலூர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்கிறார்களா என்றே தெரியாத நிலை. எந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியினர் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை. ஏன் இந்த பழி வாங்கும் போக்கு? சேலத்திலே குற்றம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் நேரத்தில், வீரபாண்டி ஆறுமுகம் சென்னையிலே என் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறார்.

அப்படியிருந்தும் அவரை கைது செய்து இப்படியெல்லாம் இழுத்தடிப்பது முறை தானா என்பதை தமிழ்நாட்டு மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகள் ஆளுங்கட்சியைக் குறை கூறுவதும் விமர்சனம் செய்வதும், வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தேவையற்ற விமர்சனங்களுக்கு வழிவகுக்காமல் ஆட்சி நடத்துவதே ஒரு ஆட்சியாளரின் சிறப்பு.

வீரபாண்டியார் விவகாரத்தை எடுத்துக் கொண்டால், அவரை சேலம் சிறையிலேயே அடைத்திருக்க வேண்டும்.  ஒரு கைதியை அவரது உறவினர்கள் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் அடைக்க வேண்டும் என்று பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன.  வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் சிறையில் அடைத்தால், திமுகவினர் அடிக்கடி சிறைக்கு வந்து, சிறை அதிகாரிகளுக்கு தொந்தரவு கொடுக்க நேரிடும் என்று கருதினாலும், புழல் சிறைக்கு எடுத்து வந்த பிறகு ஏன்  மாற்ற வேண்டும் ?

புழல் சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன், சிறைத்துறை கூடுதல் டிஜிபி டோக்ராவுக்கு எழுதிய கடிதத்தில், புழல் சிறையில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இருப்பதால் மற்றொரு முக்கியப் பிரமுகரான வீரபாண்டி ஆறுமுகத்தை வைக்க இடமில்லை என்பதே.  புழல் சிறை மிகச் சிறப்பாக கட்டுமானம் செய்யப்பட்ட சிறை.  வீரபாண்டி ஆறுமுகத்தைப் போல மேலும் 500 முக்கியப் பிரமுகர்களை வைப்பதற்கு புழல் சிறையில் இடமிருக்கிறது.   மேலும், தற்போது புழல் சிறையில் இருக்கும் முக்கியப் பிரமுகர்கள் என்று எடுத்துக் கொண்டால் இரண்டே பேர்தான் இருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் அமைச்சர் கேபிபி.சாமி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார். இவர்களைத் தவிர குறிப்பிடும்படியான முக்கியப் பிரமுகர்கள் புழல் சிறையில் இல்லை.

அப்படியே சிறை அதிகாரிகளின்  கூற்றுப்படி விசாரணைக் கைதிகளை வைக்கும் புழல் சிறையில் முக்கியப் பிரமுகர்கள் அதிகம் இருந்தாலும், தண்டனைக் கைதிகளை வைக்கும் சிறை 1ல் வைத்திருக்கலாமே…

இந்தக் காரணம் பொய்யான காரணம் என்பது வெட்ட வெளிச்சம்.  வீரபாண்டி ஆறுமுகத்தை சிறையில் சந்திக்கச் செல்லும் கருணாநிதியை சந்திக்க விடாமல் தடுப்பது மட்டுமே.  ஒரு அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் அதன் அற்பத்தனத்தையும் சிறுபிள்ளைத்தனத்தையுமே காட்டுகிறது.

1996ல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஜெயலலிதாவை அவரது கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட யாருமே சந்திக்க தடை செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஒரு ஜனநாயக நாட்டில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சட்டபூர்வமானதாக இருக்க வேண்டுமே ஒழிய, இது போல எதேச்சதிகாரமான நடவடிக்கைகளாக இருக்கக் கூடாது.

Jayalalitha_3

ஜெயலலிதா அவர்களே…  வீரபாண்டி ஆறுமுகத்தை புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்ற வழங்கப்பட்ட உத்தரவுக்கான முடிவை நீங்கள் எடுத்திருப்பீர்கள் என்று நம்புவதற்கில்லை.  ஒரு முதலமைச்சரான உங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும்.  உங்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக உங்கள் அருகில் இருக்கும் அதிகாரிகள் செய்யும் சிறுபிள்ளைத்தனமான காரியமே இது.  ஆனால், இது போன்ற காரியங்களை நீங்கள் அங்கீகரித்தீர்களேயானால், உங்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று மற்ற அதிகாரிகளும் இது போல அற்பத்தனமான காரியங்களில் ஈடுபட இது தூண்டுகோலாக அமையும். கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தை இது போல அலைக்கழிப்பது, அவருக்கு அனுதாபத்தைக் கூட ஏற்படுத்தும்.

மேன்மேலும் வளர்ந்து அகில இந்திய அளவில் பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு உண்டு.  அப்படிப்பட்ட எண்ணத்தோடு இருக்கும் நீங்கள், இது போன்ற அற்பத்தனமான காரியங்களை அனுமதித்தீர்களேயானால், இருக்கும் ஆதரவையும் நீங்கள் இழக்க நேரிடும்.

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.

கலைஞர் உரை:

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

மு.வ உரை:

மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

 

Comments  

 
+5 #39 ஆர்.தியாகு 2012-06-13 19:34
வெளி நாடுகளைப் போல் இந்தியாவும் குற்றவாளிகள் விடயத்தில் கராராக இருக்க வேண்டும்... இவனுக்கெல்லாம் என்ன மனித உரிமையின் அடிபடையில் நியாயம் பார்ப்பது...!!! இவன் யாருக்கு மனித உரிமையின் அடிபடையில் நியாயம் பார்த்தான்..???? இவனுக்கு மட்டும் இறக்கமோ மனமோ இல்லை ஆனால் இவனுக்காக இரக்கப்பட வேன்டும் மனமிறங்க வேண்டும்.

போ சவுக்கு .... நீதிமன்ற வளாகத்தில் மசால்வடையும் மசால் டீயும் குடித்துவிட்டு.. பல் குத்து... மனித உரிமையை மட்டும் இந்த கொடியவனுக்காக பேசாதே..!!!!
Quote
 
 
+7 #38 Ravi 2012-06-11 19:52
நடுநிலையாக எழுத வேண்டும் என்கிற காரணத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை போல உள்ளது இது. ஜால்ரா அதிகாரிகள் எல்லா ஆட்சியிலும் தொடர்ந்து இந்த கழக கண்மனிகளை மகிழ்விக்க இப்படி அபத்தமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கருணாவுக்கு ஒரு டாபர் சேட் தொடர்ந்து சேவகம் செய்யவில்லையா? வீட்டை கொளுத்தி ஆளைக் கொலை செய்யும் கூட்டத்தலைவனுக் கு இந்த மரியாதை கிடைக்காமல் வேறு என்ன மரியாதை கிடைக்கும்.? இது நியாயமா என்று வீரபாண்டியே கேட்க மாட்டார். காரணம் அவருக்கு தனக்கு என்ன நிலை என்று தெரியும். எல்லாம் நல்லா நடந்து இது மட்டும் தப்பா நடந்தா இதைப்பத்தி பேசலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லையே. சரியான கேள்வி. ஆனால் தவறான ஆளுக்காக தவறான நேரத்தில் கேட்கப்பட்டுள்ள து.
Quote
 
 
+5 #37 nallavan 2012-06-11 13:30
nakka pudingi sagara mathri kelvi ketta paruyaiaa.. adhukku oru SABASH!!!Quoting Bharath Arunachalam:
புதியவன் ராஜ் அவர்களே,
எதற்காக தேவை இல்லாமல் எம் ஜி ஆர்-ஐ இந்த விஷயத்தில் இழுக்கிறீர்கள். 1984 இல் இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது. போராட்டத்திற்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியது. ஆனால் 2008 இல் இந்திய அரசாங்கம் சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து போரை முன் நின்று நடத்தியது. கருணாநிதி மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு, போர் முடிவுக்கு வந்து விட்டது என்று சொல்லி இரண்டு மனைவிகளை கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டார். ஆயிரம் ஆயிரமாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது, அவர் இங்கு மானாட மனைவியுடனும் , மயிலாட துணைவியுடனும் சேர்ந்து பார்த்து கொண்டிருந்தார். தினகரன் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் வெளியே வந்தது எப்படி? தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். கருணாநிதி எந்த நன்மையும் தமிழகத்துக்கு செய்ய வில்லை, அவரால் செய்யவும் முடியாது. சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ் நாட்டை விட்டு ஓடி விட்டால் தமிழகத்துக்கு நல்லது.
Quote
 
 
+13 #36 vallu 2012-06-10 13:24
வீட்டை இழந்து , நிலத்தை இழந்து ,குடும்ப உறுப்பினரை இழந்தவர்களின் கண்ணீருக்கு முன்னால் வீரபாண்டி ஆறுமுகத்தின் அலைகழிப்பு ஒன்றும் பெரிதாக படவில்லை .கண்டிப்பாக அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தாது. ஏதேனும் ஒரு வழியில் தண்டனை கிடைத்தால் சரிதான் . மனிதநேயம்
இவரிடம் உள்ள கருப்பு பணத்தில் பல கிராமங்கள் செழிப்புடன் வாழமுடியும் . சேலம் என்றாலே வீரபாண்டி ஆறுமுகத்தின் கோட்டை என்ற நிலைமை மாற வேண்டும் என்பதே சேலம் மக்களின் விருப்பம் .
Quote
 
 
-3 #35 vettri 2012-06-10 13:10
“ பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே “ என்ற கருத்தின்படி அரசியல் குற்றவாளியான ஆறுமுகத்திற்கும ் நீதி கேட்கும் சவுக்கே நீ வாழ்க!
Quote
 
 
+7 #34 dhinakaran 2012-06-09 19:47
பினாயக் சென்,அன்ன ஹசாரே,மெதா பட்கர்,அருந்ததி ராய் ,உதயகுமார்,பிரஷ ாந்த் பூஷன்...போன்றவர்களுக்கா க பரிந்து பேசுங்கள்!அரசிய ல் அடியாட்களுக்காக வேண்டாம்....
Quote
 
 
+6 #33 Junk guy 2012-06-09 16:11
வீரபாண்டி ஆறுமுகத்தின் லீலைகளை தயை கூர்ந்து ஒரு விரிவான கட்டுரையாக சவுக்கு தனது வாசகர்களுக்கு சமர்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்....
Quote
 
 
+2 #32 nallavan 2012-06-09 16:04
aadi kettka avarukku enna urimai irrukkinradhu. ularuvayaan ulari irrukkinraan. sattam padi avanukku andha urimai illava ilali. apppo thaa kee kolai 3 peru errippu athil valakku onnum illamal pondadhu ellam parthu NEE NALLA SORU THINNU IRRUKKA..... kalagam enraal adutavan kudiyai kedupathu.. nee athil FIRST Quoting Puthiyavanraj:
நல்லவன், 1984 ல் பல லட்சம் இலங்கை தமிழர் படுகொலை செய்யப்பட்ட போது, உயிருடன் கொழுத்தப்பட்ட போது தமிழ் நாட்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். என்ன இதயக்கனி சினிமாபட உச்சக்கட்ட காட்சி போல படையுடன் இலங்கை சென்று இலங்கை தமிழரை காப்பாற்றினாரா? கலைஞரை வசை பாட வேண்டும் என்பதற்காக எல்லை இல்லாமல் உளற வேண்டாம். 3 அப்பாவி கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்துக்கொன்ற கயவர்களை இப்படித்தான் அலைக்கழித்தார்க ளா? அல்லது பழங்குடி இனப்பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் மாட்டியவர்களை இப்படித்தான் நடத்துகிறார்களா ? நீங்களும் சோறு தானே சாப்பிடுகிறீர்க ள்? இது போன்ற கொடூர எண்ணம் கொண்டவர்களைப்பா ர்த்து தான் மறைந்த நீதியரசர் அசோக்குமார் சவுக்கால் அடிப்பது போல கேட்டார் : "உன் இதயத்தில் சதை இருக்கிறதா களிமண் இருக்கிறதா" என்று.
Quote
 
 
+2 #31 rraju 2012-06-09 13:03
சவுக்கின் கட்டுரை ஒரு சிறந்த அலசல். அதைவிட முதல்வரின் மிகத் தெளிவான புகைப்படம் தரமான ஒன்று. அதோடு கூட சரியான திருக்குறளை உதாரணம் காட்டியது சவுக்கின் தமிழ் ஆர்வத்தை சிறப்பாக காட்டுகிறது. சவுக்கின் கருத்து அத்தனையும் சரியென்றாலும் தமிழில் உள்ள ஒரு சிறந்த பழமொழியையும் கருத்தில் கொள்வது நல்லது. அந்தப் பழமொழி “முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்” என்பதுதான். எடுத்துள்ளார்கள ் என்று சொல்லலாம். இவர் அதிகாரத்தில் இருக்கும்போது சட்டத்தை மீறி செய்தாலும் சட்டப்படி நடந்தாக வெளிக்காட்டித்த ான் செய்துள்ளார். இவருடைய மாறுதலும் சிறை நடவடிக்கை என்றாலும், அதை இப்போதைய அரசு சட்டப்படியான நடவடிக்கை என்று சொன்னாலும், யாருக்கு எதை எப்படி செய்தால் சரியானதாக இருக்கும் என்பதற்காக இப்படி செய்துள்ளதாக எடுத்துக்கொள்ளல ாம். ஆக இந்த நடவடிக்கையை, நீங்கள் கொடுத்துள்ள தலைப்பைப்போல, உச்சக் கட்ட சிறுபிள்ளைத்தனம ் என்பது சரியென்றாலும் சிலரிடம் அப்படி நடந்துகொள்வது ஒன்றும் தவறானது அல்ல என்பது எனது கருத்து.
Quote
 
 
+9 #30 Bharath Arunachalam 2012-06-09 10:05
புதியவன் ராஜ் அவர்களே,
எதற்காக தேவை இல்லாமல் எம் ஜி ஆர்-ஐ இந்த விஷயத்தில் இழுக்கிறீர்கள். 1984 இல் இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது. போராட்டத்திற்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியது. ஆனால் 2008 இல் இந்திய அரசாங்கம் சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து போரை முன் நின்று நடத்தியது. கருணாநிதி மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு, போர் முடிவுக்கு வந்து விட்டது என்று சொல்லி இரண்டு மனைவிகளை கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டார். ஆயிரம் ஆயிரமாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது, அவர் இங்கு மானாட மனைவியுடனும் , மயிலாட துணைவியுடனும் சேர்ந்து பார்த்து கொண்டிருந்தார். தினகரன் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் வெளியே வந்தது எப்படி? தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். கருணாநிதி எந்த நன்மையும் தமிழகத்துக்கு செய்ய வில்லை, அவரால் செய்யவும் முடியாது. சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ் நாட்டை விட்டு ஓடி விட்டால் தமிழகத்துக்கு நல்லது.
Quote
 
 
0 #29 ஷாலி 2012-06-08 19:49
“ பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே “ என்ற கருத்தின்படி அரசியல் குற்றவாளியான ஆறுமுகத்திற்கும ் நீதி கேட்கும் சவுக்கே நீ வாழ்க!
Quote
 
 
+15 #28 மழை துளி 2012-06-08 17:58
[ஃஉஒடெ நமெ="மஹெஷ்_னெந்"]ரொம்ப இவரால் ப்ப் எகிறி ஆசுபத்திரிக்கு போனோர் ஏராளம்.. இவர் வாழ்கையில் அனுபவிக்கும் அதிகபட்ச தண்டனையே இந்த அலைக்கழிப்பு தான்.. இவர் வாழ்நாளில் செய்திருக்கும் அடாவடிக்கு எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் நீதிதராசு நேராகவே முடியாது.. சேலத்தில் உள்ளதால் சொல்றேன் இவர் மீது யாரும் அனுதாபம் படபோவது இல்ல.. எனக்கு தெரிஞ்சு ஜெ ஆட்சியில் இருக்கும் பொது அதுவும் காலனி தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் போதே அண்ணனிடம் நல்ல பேர் வாங்க அல்லகைகள் அங்க போயி அடாவடி செஞ்சது தான் சிறுபிள்ளைத்தனம ்..[/ஃஉஒடெ]
கரெக்ட் மகேஷ் .. இதை விட புரிதல் யாருக்குமே இருப்பதாய் படவில்லை - சவுக்கு உட்பட ..
எதை சொன்னாலும் குறை சொல்லுவதை விடுங்கள் முதலில் ...சிறுபிள்ளைதனமாய ் இருந்துவிட்டு போகட்டுமே ..
எவ்வளவுதான் வலுவான வழக்கை போட்டாலும் ஒரு முன்னாள் அமைச்சர் அதுவும் ஒரு போக்கிரித்தனமான அமைச்சர் எப்பிடியும் வெளிவந்து விடுவான் ...அலைக்கழிப்பும் உதாசினமாக அந்த ஆளை நடத்துவதும்தான் அதிகபட்ச தண்டனையாக நாம் அளிக்கமுடியும் ...இதை ஏன் குறை கூறுகிறீர்கள் ? கொஞ்சம் மாத்தி யோசிங்க .. இதே ஆளை ஒரே சிறையில் வைத்து ஆடாமல் குலுங்காமல்
மரியாதையுடன் நடத்தின பிறகு வெளியே வந்து என்ன சொல்லுவான் இவன் ? "பாத்தியா ..என்ன பாத்து அம்மாவே பயப்பட்டு பூ மாதிரி என்ன கவனிச்சிகிட்டாங ்க... சும்மா நடுங்குதுல்லா ? " ந்னுதான் சொல்லுவான்...இதைதான் நீங்க எதிர்பாக்கிறீங் களா ? "குற்றம் நிருபிக்கும் வரை அவன்
நிரபராதி"ன்னு என்னமோ பட்டம் வாங்குன மாதிரி பேசிட்டு அலையிற சமூகத்துல இந்த மாதிரி அவமானமும் அலட்சியமும்தான் அவனுக்கு கிடைக்கும் தண்டனை - அவன் ஓரளவுக்கேனும் பொருட்படுத்தும் தண்டனை ...
Quote
 
 
-16 #27 Puthiyavanraj 2012-06-08 15:12
நல்லவன், 1984 ல் பல லட்சம் இலங்கை தமிழர் படுகொலை செய்யப்பட்ட போது, உயிருடன் கொழுத்தப்பட்ட போது தமிழ் நாட்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். என்ன இதயக்கனி சினிமாபட உச்சக்கட்ட காட்சி போல படையுடன் இலங்கை சென்று இலங்கை தமிழரை காப்பாற்றினாரா? கலைஞரை வசை பாட வேண்டும் என்பதற்காக எல்லை இல்லாமல் உளற வேண்டாம். 3 அப்பாவி கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்துக்கொன்ற கயவர்களை இப்படித்தான் அலைக்கழித்தார்க ளா? அல்லது பழங்குடி இனப்பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் மாட்டியவர்களை இப்படித்தான் நடத்துகிறார்களா ? நீங்களும் சோறு தானே சாப்பிடுகிறீர்க ள்? இது போன்ற கொடூர எண்ணம் கொண்டவர்களைப்பா ர்த்து தான் மறைந்த நீதியரசர் அசோக்குமார் சவுக்கால் அடிப்பது போல கேட்டார் : "உன் இதயத்தில் சதை இருக்கிறதா களிமண் இருக்கிறதா" என்று.
Quote
 
 
-6 #26 Puthiyavanraj 2012-06-08 15:02
கருத்துக்கு பதில் கருத்து சொல்லாமல் நல்லவன் என்ற பெயரில் அநாகரீகமாக பேசுபவருக்கு : குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண ்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு என்று சொன்னது மரமண்டைக்கு ஏறவில்லை என்றால் அது யாருடைய தவறு?
Quote
 
 
+29 #25 Raj1 2012-06-08 10:49
சவுக்கிற்கு இது தேவையில்லாத கட்டுரை. இங்கு எந்த அப்பாவியும் பாதிக்க பட வில்லை. மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாகவே இருக்கும். இந்த பக்கத்தையும் நேரத்தையும் வேறு நல்ல காரியத்திற்கு ஒதுக்கியிருக்கல ாம்.
Quote
 
 
-10 #24 V.Baskaran USA 2012-06-08 10:13
கைது செய்யபட்டவர் எப்படிபட்டவராக இருந்தாலும், ஜெ ஆட்சி முடிந்து திமுக வந்தால் இவரை கைது செய்து இப்படி இழுத்துச்சென்றா ல் தாங்குவாரா? இது மம்மிக்கு தேவையில்லாதது. 4 வருடம் என்பது எவ்வளவு சீக்கிரம் போய்விடும் தெரியுமா? எவனோ ஜோசியம் சொன்னான் என்று ரொம்ப ஆடுவது நல்லதல்ல.
Quote
 
 
-2 #23 nallavan 2012-06-08 09:45
3 peru erriyum podhum bus attithu udaikkum podhum nee "SORU" thana thinna. ilangai tamilan alyium podhu nee "SORU" than thinna . sadist viyapari....Quoting Puthiyavanraj:
பல வாசகர்கள், அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ்ட் மனப்பான்மையுடன் கருத்து எழுதி இருக்கிறார்கள். சட்டம், நீதி பற்றி கவலை இல்லை தனக்கு பிடிக்காதவரை துன்புறுத்த வேண்டும் என்ற ஆணவத்திற்கு வெண்சாமரம் வீசுகிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் குற்றம் சாட்டப்பட்டவர். குற்றம் நிரூபிக்கப்படும ் வரை குற்றம் சாட்டப்பட்டவரை நிரபராதியாக தான் நடத்த வேண்டும் என்பது சவுக்கிற்கு தெரியாதது அல்ல. எனினும் தீர்ப்பு வழங்கும் நீதிபதி போல அவரை குற்றவாளி போல சொல்லி இருக்கிறீர்கள். குற்றவாளி யாராக இருந்தாலும் திமுகவினரோ அண்ணாதிமுகவினரோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஒருவரை ஒரு வழக்கில் கைது செய்து அதில் ஜாமின் கிடைத்தால், சிறையில் இருந்து வெளியில் வரும்போது இன்னொரு வழக்கில கைது செய்வது பற்றி சவுக்கு நியாயமாக எழுத வேண்டும்.
Quote
 
 
+34 #22 mahesh_new 2012-06-08 08:27
ரொம்ப மட்டமான வக்காலத்து.. வீ.பாண்டியர் இன்னும் ஒரு 15 வருஷம் இருப்பாரா ? அதற்குள் இவர் மேலே உள்ள வழக்குகளுக்கு எத்தனைக்கு விசாரனை முடியும்.. எத்தனைக்கு குற்றபத்திரிக்க ை தாக்கல் செய்ய முடியும்.. எத்தனைக்கு தண்டனை..எத்தனைக்கு மேல்முறையீடு..அப்புறம் ஜெவை போல வாயிதா படலம்..இதையெல்லாம் தாண்டி தண்டனை கொடுத்தா அதை அனுபவிக்க இவர் இருக்க மாட்டார்.. அதெல்லாம் விட இன்னும் நாலு வருஷத்தில ஆட்சி மாறினா எல்லா வழக்கும் புஸ் ஆயிடும்.. இப்படி ஒரு சிஸ்டத்தை வச்சிக்கிட்டு எப்படி பொதுமக்கள் தப்பு செய்யும் அரசியல் வாதிகளை சட்டத்தின் வழியாக தண்டனை வாங்கிகொடுக்க முடியும் .. இதய நோயாளியாமாம்.. சேலத்தையே நடுநடுங்கவைத்தவ ர்.. இவரால் BP எகிறி ஆசுபத்திரிக்கு போனோர் ஏராளம்.. இவர் வாழ்கையில் அனுபவிக்கும் அதிகபட்ச தண்டனையே இந்த அலைக்கழிப்பு தான்.. இவர் வாழ்நாளில் செய்திருக்கும் அடாவடிக்கு எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் நீதிதராசு நேராகவே முடியாது.. சேலத்தில் உள்ளதால் சொல்றேன் இவர் மீது யாரும் அனுதாபம் படபோவது இல்ல.. எனக்கு தெரிஞ்சு ஜெ ஆட்சியில் இருக்கும் பொது அதுவும் காலனி தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் போதே அண்ணனிடம் நல்ல பேர் வாங்க அல்லகைகள் அங்க போயி அடாவடி செஞ்சது தான் சிறுபிள்ளைத்தனம ்..
Quote
 
 
+36 #21 kothandapani 2012-06-07 21:46
மனித உரிமைகள் என்பது மனித ஜென்மங்களுக்கு மட்டுமே காட்டப்பட வேண்டியது. ஆட்சியில் இல்லாத போதும் அராஜகம் செய்யும் இவர் ஆட்சியில் என்ன ஆட்டமெல்லாம் போட்ட்ரயுப்பர் என்று எண்ணவே பயமாக உள்ளது. போலிசை என்ன பாடு படுத்தி இருப்பார் ...இப்போது அவர்கள் இவரை படுதுகின்றர்கள் . இவரை போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்கினால் , உண்மையிலே போலீசாரால் அலைகளிகபடும் அப்பாவிகளின் குரலும் வலு இழந்துவிடும். இப்போது முதலை கண்ணீர் விடும் கருணா , நேரா அன்று புழல் சென்று சாமியை பார்த்து விட்டு வந்திருக்கலேமே.
Quote
 
 
+31 #20 nellai advocate 2012-06-07 21:11
"தமிழ்நாட்டில் விருப்புரிமைக் கோட்டா என்ற பெயரில் வீட்டு வசதி வாரிய வீடுகளை அரசியல்வாதிகளும ், அதிகாரிகளும் கபளீகரம் செய்த விவகாரம் வெளியில் வந்து, அது குறித்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் கருத்து கேட்கச் சென்றபோது, “என்னய்யா… என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு நான் வீடு வாங்கக் கூடாதா… அப்படித்தான் பண்ணுவேன் போய்யா” என்று கேமரா முன்பாகவே சொன்னவர் வீரபாண்டி ஆறுமுகம். நிரந்தரமாக சிறையிலேயே இருக்கத் தகுதியான ஒரு நபர் யாரென்றால், அது வீரபாண்டி ஆறுமுகமே"he deserves this.
Quote
 
 
-19 #19 Puthiyavanraj 2012-06-07 21:10
பல வாசகர்கள், அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ்ட் மனப்பான்மையுடன் கருத்து எழுதி இருக்கிறார்கள். சட்டம், நீதி பற்றி கவலை இல்லை தனக்கு பிடிக்காதவரை துன்புறுத்த வேண்டும் என்ற ஆணவத்திற்கு வெண்சாமரம் வீசுகிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் குற்றம் சாட்டப்பட்டவர். குற்றம் நிரூபிக்கப்படும ் வரை குற்றம் சாட்டப்பட்டவரை நிரபராதியாக தான் நடத்த வேண்டும் என்பது சவுக்கிற்கு தெரியாதது அல்ல. எனினும் தீர்ப்பு வழங்கும் நீதிபதி போல அவரை குற்றவாளி போல சொல்லி இருக்கிறீர்கள். குற்றவாளி யாராக இருந்தாலும் திமுகவினரோ அண்ணாதிமுகவினரோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஒருவரை ஒரு வழக்கில் கைது செய்து அதில் ஜாமின் கிடைத்தால், சிறையில் இருந்து வெளியில் வரும்போது இன்னொரு வழக்கில கைது செய்வது பற்றி சவுக்கு நியாயமாக எழுத வேண்டும்.
Quote
 
 
+23 #18 nellai advocate 2012-06-07 21:08
"திமுகவில் இருக்கும் அமைச்சர்களிலேயே மோசமானவர்கள் என்று பட்டியல் எடுத்தால் அதில் முதலில் வருபவர் வீரபாண்டி ஆறுமுகமாகத்தான் இருக்க முடியும். வீரபாண்டி ஆறுமுகத்தின் அடாவடிகளை பட்டியல் போட்டால் இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரையாகி விடும். ஏழை உழைப்பாளி மக்கள் குடியிருந்த அங்கம்மாள் காலனி நிலத்தை சூறையாடியது ஒரு சிறப்பான உதாரணம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சொத்துக்காக கொலை செய்த பாரப்பட்டி சுரேஷுக்கு இவர் கொடுத்த ஆதரவும் மக்கள் யாரும் மறக்க முடியாதது".
then why should we feel for that Veerapandi?
Quote
 
 
-1 #17 venky 2012-06-07 18:15
it is only people's money that is wasted like this. there are many better things that can be attended to in this time by the government.
We should know to ignore people which is the biggest punishment that a humab being can get in his / her lifetime which will make him/her realize for all the sins that were committed.
Quote
 
 
+36 #16 jegan usa 2012-06-07 16:45
இவரை சாகும் வரை அழைகளிதலும் தகும் , கூடவே கருணாநிதியையும் அழைத்து கொள்ளுங்கள் புண்ணியமா போகும்.
Quote
 
 
+9 #15 freebalu 2012-06-07 16:26
சவுக்கு has lost the sting it had once, when the DMK was in power. Now it appears to be just another blog. Sorry to say this..
Quote
 
 
0 #14 vinodh senthooram 2012-06-07 16:26
savukku is the most democratic tamil paper online. Jeya,Karuna are one of the very few politicians in the world who are masters in throwing xxxx at eachother
Quote
 
 
-2 #13 A.Justin Diraviam 2012-06-07 16:16
You are the right person to judge everybody in this world. All your words are really true.
Quote
 
 
+11 #12 Nageswaran 2012-06-07 15:58
பாம்புக்கும் பாவம் பார்க்கும் மனம் சவுக்குக்கு மட்டுமே உண்டு.
Quote
 
 
+26 #11 M.S.Sivaghugan 2012-06-07 13:53
நான் என்னுடைய கருத்திலே மிக தெளிவாக கூறி இருந்தேன் வீரபாண்டி எஸ் ஆறுமுகம் என்பவர் தண்டிக்கப்பட வேண்டியவர்.அதற்காக அவர் மட்டும் தான் கொடூரமானவர் என்று சரியல்ல.மிகவும் அழகாக எழுதி உள்ளீர் .இவருக்கு என்ன விமானமா கொடுக்க முடியும் என்று? சரியான கேள்வி.அனாலும் காரில் செல்வது எவருடைய வரிபணத்தின் டீசல் செலவு?மேலும் இவர் அங்கம்மாள் காலனியை எரித்தது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றால் வாச்சாத்தி கொடுமையே சரி என்று கூறிய அன்றிய வனத்துறை அமைச்சர் இன்றைய வருவாய் துறை அமைச்சராக இல்லையா ? இது இடத்திற்காக என்றால் அது சந்தன கட்டைக்காக ?இறுதியாக கூறுகிறேன் வீரபாண்டியார் தண்டிக்கப்பட வேண்டியவர்.
Quote
 
 
+16 #10 syed ibu 2012-06-07 13:31
சவுக்குட்ட பிடித்த விசயமே எதிரியாகவே இருந்தாலும் அவ்ருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என நினைப்பது தான்,
Quote
 
 
+52 #9 Raghu 2012-06-07 12:13
வீட்டை இழந்து , நிலத்தை இழந்து ,குடும்ப உறுப்பினரை இழந்தவர்களின் கண்ணீருக்கு முன்னால் வீரபாண்டி ஆறுமுகத்தின் அலைகழிப்பு ஒன்றும் பெரிதாக படவில்லை .கண்டிப்பாக அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தாது. ஏதேனும் ஒரு வழியில் தண்டனை கிடைத்தால் சரிதான் . மனிதநேயம்
இவரிடம் உள்ள கருப்பு பணத்தில் பல கிராமங்கள் செழிப்புடன் வாழமுடியும் . சேலம் என்றாலே வீரபாண்டி ஆறுமுகத்தின் கோட்டை என்ற நிலைமை மாற வேண்டும் என்பதே சேலம் மக்களின் விருப்பம் .
தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எத்தனை முறை அதிகரிகள் மீது அதிகார துஷ்பிரயோகம் பண்ணீருப்பார் . இப்போது அவர்கள் திருப்பி செய்கிறார்கள் . நாட்டுள்ள பெட்ரோல் விலைஉயர்வு , விலைவாசி .....இப்படி எவ்ளோவோ பிரச்னை இருக்கு ...சவுக்கு இந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிறப்பு கட்டுரை(உச்சகட் ட சிறுபிள்ளைத்தனம ் .. …. …) தேவை தானா?.

>>சவுக்கு ஏன் கருணாநிதியின் பிறந்தநாள் குறித்து கட்டுரை வெளியிடவில்லை?

# ஜப்பான் ரகு
Quote
 
 
+8 #8 Vijay123 2012-06-07 12:12
இதெல்லாம் ஒரு பொழப்பு...இவனுங்க திருந்தவே மாட்டாங்க.
Quote
 
 
-6 #7 nallavan 2012-06-07 12:11
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களு க்கு மிகப் பெரிய வரவேற்பு மக்களிடையே இருந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமலும், :lol: :lol: :lol: ---Meiyaluma nnu oru katturai varudhu adhai padikkum palakkam unda.. ???? padikaravan ellam kenayan nnu nenaippu savuku kku!!!!!!!!!
Quote
 
 
+10 #6 thamilkanal 2012-06-07 11:50
:roll: அதென்ன கலைஞர் உரை?
Quote
 
 
+46 #5 வேளாண் துறை ஊழியன் 2012-06-07 10:39
மனிதர்களுக்கு தான் மனித உரிமை உண்டு. கொடூர மிருகங்களை மனித உரிமை கேட்டகிரியில் சேர்க்க கூடாது
Quote
 
 
+40 #4 sundarraj 2012-06-07 10:29
அதென்ன வீரபாண்டியார்? அவருடைய பெயர் வீரபாண்டி ஆறுமுகம். சவுக்கு திமுக வின் உடன் பிறப்பா?
Quote
 
 
+26 #3 ஊர்க்குருவி 2012-06-07 10:22
நுணலும் தன் வாயால் கெடும். ஜெயலலிதாவும், கருணாவும் தங்கள் செயல்கள் மூலமாக ஒதுக்கப்படட்டும ே. காலம் என்றாலும் அப்படி ஒரு தீர்மானத்தை நிகழ்த்தட்டுமே. ஒரு நல்ல குடிமகன் சிறையில் அல்லாடப்பட்டால் சவுக்கு உங்கள் நியாயம் ஏற்றுக்கொள்ளக்க ூடியதே நீங்கள் குறிப்பிட்டதுபோ ல வீரபாண்டி ஆறுமுகம் தொடர்ந்து சிறையில் இருக்கவேண்டிய ஒரு அழுக்குப்பிடித் த அராஜக ஜென்மம் அப்படிப்பட்டவர் கள் இப்படித்தான் அலைக்களிக்கப்பட வேண்டும். இந்தியாவில் சட்டத்தால் நிகழ்த்தப்பட முடியாத ஒரு நிகழ்வை கட்சிகளின் பகைமையாவது வழங்கட்டுமே! இந்த செய்தியை படிக்கும் அங்கம்மாள் குடியிருப்பு ஏழைகள் மனமகிழ்ச்சி அடைவது மகிழ்வான செய்திதானே, கருணாநிதி அழுவதுபோல வீரபாண்டியை புழலில் இருந்து சேலம்வரை காரில் அழைத்து செல்லாமல் ஒரு சமூகவிரோதியை விமானத்திலா அழைத்துச்செல்ல முடியும்? கருணாநிதியின் கைத்தடிகள் அனைவரும் திருடர்களாகவே இருக்கின்றனர் "திருடர்களின் தலைவன் கருணாவுக்கு 89வது பிறந்த விழா தேவைதானா? பண நோட்டு கிரீடமும் பணமாலையும் தரிக்கும் மனநிலையில் இருக்கும் ஒரு மனிதன் எப்படி இருப்பான். வீரபாண்டி தண்டிக்கப்படவேண ்டிய ஒரு மிருகம் இந்தியாவில் அரசியலை தாண்டி எதுவும் நடைபெறப்போவதில் லை இப்படியாவது இவர்கள் சிறுப்பினைப்பட் டால் அது ஆண்டவனின் நற் தீர்ப்பே.
Quote
 
 
-9 #2 M.S.Sivaghugan 2012-06-07 10:07
மிகவும் மோசமான முன்னாள் அமைச்சர்களில் வீரபாண்டியர் என்பது உண்மை.அதற்காக ஜெயலலிதா இதற்கு பொறுப்பு ஆகியிருக்க முடியாது என்பது கற்பனை வாதம்.அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு மூத்த முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை என்றால் முதல்வர் இருப்பது எதற்காக? அவர் வாழ் நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டியவர் தான்.ஆனால் ஒரே இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே ஒரு நல்ல அரசின் நிர்வாக திறமை. அது நம் முதல்வருக்கு இல்லை என்பது உள்ளகை நெல்லிக்கனி போன்றது
Quote
 
 
+3 #1 Senthil Kasi 2012-06-07 10:06
Precisely the point.. Savukku.. Well said..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 39 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1965
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week24337
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month237156
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12759275