முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வாழ்த்துக்கள் தோழர்களே… !!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2012 13:06

 

எதற்காக வாழ்த்துக்கள் ?   அந்த விவகாரத்துக்குள் செல்வதற்கு முன்னால், சிரமம் பாராமல் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகளைப் படித்து விடுங்கள்.

வல்லான் வகுத்ததே வாய்க்கால்

மகிழ்ச்சி  … மகிழ்ச்சி

படித்து விட்டீர்களா .. …  மத்திய அமைச்சர் ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி அனுமதி பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில், இக்கல்லூரியின் தாளாளரான ஜெகதரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் உள்ளிட்ட ஏழு பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய பல மூத்த மருத்துவர்கள், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றியது போல மத்திய ஆய்வுக்குழு வரும் அன்று நடித்து, அப்படி ஒரு நாள் நடித்ததற்காக 20 ஆயிரம் பணம் வாங்கியதும்,  பக்கத்து கிராமங்களில் இருந்த பொதுமக்களை அழைத்து, வெளி மற்றும் உள்நோயாளிகள் போல நடிக்க வைத்ததும் சிபிஐ தனது குற்றச்சாட்டுகளில் தெரிவித்து உள்ளது.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, இரண்டு பேட்ச் மருத்துவர்கள் படிப்பை முடித்து விட்டு வெளியேறி விட்டார்கள்.  சவுக்கு வாசகர்கள் இனி மருத்துவரிடம் சென்றால், எங்கே படித்தீர்கள் என்று தயங்காமல் கேளுங்கள்.  ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா அல்லது பாலாஜி மருத்துவக் கல்லூரி என்று சொன்னால், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுங்கள்.  காய்ச்சல் என்று சொன்னால் காது ஆபரேஷன் செய்வதற்கும், இருமல் என்றால் இதய ஆபரேஷன் செய்வதற்கும்வாய்ப்புகள் மிக அதிகம்.

சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதே இந்த வாழ்த்துக்களுக்கான காரணம்.   நமக்கு வேறு யார் வாழ்த்த சொல்ல வேண்டும் ?  நமக்கு நாமே வாழ்த்து சொல்லிக் கொள்ளலாமே…

மத்திய அமைச்சர் ஜெகதரட்சகன் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவியவர்.   சத்யபாமா பொறியியல் கல்லூரி நடத்தும் ஜேப்பியார் போல, அந்தக்காலத்திலேயே கல்வித்தந்தை ஆனவர்.  அதிமுகவிலிருந்து வெளியேறி, வன்னியர்களுக்கென்று தனிக்கட்சி தொடங்கி நடத்திக் கொண்டிருந்தபோதுதான், 2006 என்று நினைவு திமுகவுக்குத் தாவுகிறார்.   கருணாநிதி ஜெகதரட்சகனை திமுகவில் சேர்த்துக் கொண்டது, வன்னியர் வாக்குகளை மட்டும் குறிவைத்தல்ல.  கல்வித் தந்தை ஜெகதரட்சகனிடம் இருந்த அளவிட முடியாத பணமும் ஒரு காரணம்.

324343

2ஜி ஊழலில் கருணாநிதியின் இரு குடும்பங்களுக்கும் வந்த பங்கில் ஒரு பெரும் தொகை, ஜெகதரட்சகனிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  ஜெகதரட்சகனுக்கு ஆண்டுதோறும் வரும் கணக்கிலடங்காத பணத்தில் 2ஜி பணத்தை சம அளவில் கலந்து, அதில் வரும் கலப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கித் தர வேண்டும் என்பதே கட்டளை என்று கூறப்படுகிறது.

2ஜி விவகாரம் வெளியான கடந்த இரண்டு வருடங்களாக,  கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் உதவியாளர்கள் ஆகியோர் குறைந்தது 400 தடவைக்கு மேல் டெல்லி சென்று திரும்பியிருப்பார்கள். இவர்கள் யாரும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யப்போவதில்லை. பிசினெஸ் கிளாஸ்தான்.   இன்றைய நிலவரப்படி பிசினெஸ் கிளாஸில் சென்னையிலிருந்து டெல்லிக்கு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ?  35 ஆயிரம்.  ஒரு வருடத்திற்குள் பெரிய அளவில் விலை மாற்றம் இல்லை.  அப்படியே வைத்துக் கொண்டாலும் சராசரியாக 30 ஆயிரம் ஆகியிருக்கும்.  இதைத் தவிரவும், இக்குடும்பத்தினர் டெல்லிக்குச் சென்றால், அங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவர்களைத் தங்க  வைப்பது, அவர்களுக்கு சொகுசு கார்களை ஏற்பாடு செய்வது ஆகிய அனைத்துச் செலவுகளையும் செய்வது ஜெகதரட்சகன்தான்.   வாய்கிழிய இவ்வளவு பேசும் கருணாநிதி, பாக்கெட்டிலிருந்து 10 பைசாவை எடுக்க மாட்டார் என்பது அவரோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.  அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது.  என்னால்தானே இவ்வளவு  சம்பாதிக்கிறாய். செலவு செய் என்பதே அதன் காரணம்.

இவ்வாறு கடந்த  இரண்டாண்டுகளாக போக்குவரத்து மற்றும் இதர செலவுகளைத் தவிர்த்து, ஜெகதரட்சகன் கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கேட்ட ஒரு பெரிய தொகையையும் கொடுத்திருக்கிறார் என்பதே திமுக வட்டாரத் தகவல்.  ஜெகதரட்சகனின் சொத்துக்கள் இரண்டே ஆண்டுகளில் எப்படி அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதே, இந்த கல்வித் தந்தை எப்படி ஊழல் சொத்துக்களை குவித்திருக்கிறார் என்பதற்கு ஒரு அற்புதமான உதாரணம்.

AssetcomparisonofMinistersV13_Page_02

2009ல் 5.9 கோடியாக இருந்த ஜெகதரட்சகனின் சொத்து, இரண்டே ஆண்டுகளில் 2011ல் 64.5 கோடியாக, அதாவது 1092 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது.   இரண்டு ஆண்டுகளில் ஒரு நபரின் சொத்து எப்படி இத்தனை வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மன்மோகன் சிங் கண்டுகொள்ளவில்லை.   இந்த வளர்ச்சிக்கு காரணம், ஜெகதரட்சகனின் பாரத் பல்கலைகழகம். இந்தப் பல்கலைகழகத்தில் வழங்கப்படும் கல்வி வகைகளை மட்டும் பாருங்கள்.

 Programs_Offered_Page_1

Programs_Offered_Page_2

இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து விளையும் கருப்புப் பணம்தான், கருணாநிதி குடும்பத்திற்கு செலவு செய்வதற்கும், நமக்கு தேர்தல் நேரத்தில் வழங்க லஞ்சமாகவும் திருப்பித் தரப்படுகிறது.

ஜெகதரட்சகனுக்கு இருக்கும் பணத்தினாலும், செல்வாக்கினாலும், சிபிஐ அதிகாரிகளையும், நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விலைக்கு வாங்கி, இந்த வழக்கு குழிதோண்டி புதைக்கப்பட்டு, அந்தக் கல்லறையில் எப்போதோ புல் முளைத்திருக்கும்.   அந்த அளவு இந்த வழக்கில் பணம் தாராளமாக கரை புரண்டோடியது.  அரசியல் குறுக்கீடுகளும் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது.

ஏனைய ஊழல் வழக்குகளைப் போலவே இந்த வழக்கிலும், ஜெகதரட்சகனின் மகன் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. இந்த வழக்கிலிருந்து ஒரு விடுவிப்பு மனு (Discharge petition) போட்டோ, அல்லது இக்குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய (Quash petition) போட்டோ, ஜெகதரட்சகன் தப்பிக்கக் கூடும்.  அவருக்கு பாண்டிச்சேரி நீதிபதியும் உதவி செய்யக் கூடும்.  ஆனால், இந்த வழக்கு, பெரிய மருத்துவர்கள் என்று முகமூடி போட்டுக் கொண்டு வலம் வரும் பெரிய மனிதர்கள், 20 ஆயிரம் பணத்துக்காக, பேராசிரியர்களாக நடித்த அவலத்தையும், மருத்துவக் கல்லூரி என்ற பெயரில், போலி மருத்துவர்களை தயார் செய்து சமூகத்தில் உலவ விடும் நபர்களையும், கல்வி என்ற பெயரில் நடைபெறும் மோசடியையும்,  சந்திக்குக் கொண்டு வரும்.     ஜெகதரட்சகனுக்கு சிறிது காலத்துக்காவது தலைவலியை ஏற்படுத்தும்.

நம்முடைய தொடர்ந்த முயற்சிகளால், இந்த வழக்கை புதைக்கப்பட எடுக்கப்பட்ட முயற்சிகளை தடுப்பதில், நம்மால் முடிந்த சில நடவடிக்கைகள் மூலமாக தடுத்திருக்கிறோம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.  ஜெகதரட்சகன் போன்ற பண முதலைகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், என்று யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்குவார்கள்.  பணம் பத்தும் செய்யும் என்றால் இவர்கள் பத்தாயிரம் செய்ய வைப்பார்கள். இதையும் தாண்டி, இவ்வளவு பெரிய பண முதலைகளை சட்டத்தின் முன் நிறுத்த நாம் உதவியாக இருந்திருக்கிறோம் என்பதில் நமக்குப் பெருமைதானே… ?

அரசியல் அழுத்தங்களையும், லஞ்ச அழுத்தங்களையும், மிரட்டல்களையும், சமாளித்து இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகளையும் இந்நேரத்தில் பாராட்டுவது நமது கடமை.  நாடே ஊழல் போதையில் உழன்று கொண்டிருக்கும் நேரத்தில், நம்பிக்கை அளிக்கக் கூடிய சில அதிகாரிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் ?  முகம் தெரியாத அது போன்ற அதிகாரிகளே, நாம் நமது பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கம்.   அது போன்ற அதிகாரிகளே, நமக்கு நம்பிக்கை அளித்து சோர்வடையாமல் காப்பாற்றுகிறார்கள்.  அந்த அதிகாரிகளே, ஜனநாயகத்தை இறந்து போகாமல் அரணாக காத்து நிற்கிறார்கள்.

அந்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களைச் சொல்வதோடு, நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதில் தவறில்லைதானே ?

 

Comments  

 
0 #27 பறையன் 2013-01-10 11:43
அதிகாரிகளையும் சவுக்கு தளத்தையும் வாழ்த்துகிறேன்
Quote
 
 
+3 #26 aswin 2012-06-22 20:25
மற்ற பல்கலைகழகங்களில ் பட்டம் பெற முடியாத மாணவர்கள் ஜெகதரட்சகனின் பாரத் பல்கலைகழகத்தில் கடைசி வருடத்தில் சேர்ந்து (பணம் கொடுத்து தான் பா...) மிக எளிதாக பட்டம் பெறுவது பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் பட்டம் பெற முடியாத (பொறியாளர்களுக் கு??? ) நன்கு தெரியும்.... :-) ஜெகத(ரட்சகனின்) சேவை தொடர வாழ்த்துவோம்....பேருக்கு ஒன்னும் கொரச்சல் இல்ல...
Quote
 
 
-2 #25 swetha123456 2012-06-21 14:59
Swetha Aunty
Good one. thanks
Quote
 
 
+2 #24 rafeek 2012-06-21 02:22
hand off savukku .. keeep doing and keep on doing . then i request pls u join a facebook as soon .... then u reach multi crores of peoples...

cheers ...

jai hind
Quote
 
 
+6 #23 ஷாலி 2012-06-19 19:57
நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் சவுக்கே நீ வாழ்க!

ஆனால் இரண்டு பேட்ச் வெள்ளை கோட்டு படித்து?விட்டு வெளிவந்து விட்டார்களே, அதை நினைத்தால் பயமாக இருக்கிறது
Quote
 
 
+2 #22 GOPALASAMY 2012-06-19 13:54
PLEASE WRITE ABOUT ALL "KALVI THANTHAIKAL".
NOW IT IS NOT 30 LAKHS. MAY BE ONE CRORE!!
PLEASE WRITE ONE ARTICLE ABOUT JOBLESS ENGINEERS OF TAMIL NADU.
Quote
 
 
+4 #21 Jagan T 2012-06-19 12:18
வாழ்த்துக்கள் சவுக்கு.
Quote
 
 
-5 #20 anniyan 2012-06-19 09:29
ஏன் மாறக்கூடாது என்றால், பயங்கரவாதியாக மாறுவது என்பது ஒரு சிந்தனை சக்திக் குறைவு. ஏதோ ஒருவிதத்தில் நடந்த தவறினால் உந்தப்பட்டு, வேறொரு தவறு செய்யத் துடிக்கும் விவேகமற்ற மனப்போக்கு. பல கெட்டவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள ் என்பதற்காக சில நல்லவர்களுக்கும ் சேர்த்து தண்டனை கொடுக்கத்துடிக் கும் மனம். "அன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லாதப்ப யாரும் பஸ்ல உட்கார இடம் குடுக்கல, அதனால இப்போ இந்தப் பாட்டிக்கு நான் ஏன் எழுந்து இடம் கொடுக்கணும்?" என்பது போன்ற ஒரு குழப்ப மனநிலை.

இது போன்று சிந்தனை செய்த லெனின், ஸ்டாலின், போல்பாட், மாவோ போன்றோர் மட்டும் ஒரு கோடி மக்களை இதுவரை கொன்றிருக்கிறார ்கள். பண்பட்ட மனத்தில் எளியோரின் வாழ்வு விளையும். புண்பட்ட மனதில் வீழிச்சியே விளையும்.

பண்பட்ட மனம் உதாரணத்துக்கு அம்பேத்கார், மார்டீன் லூதர் கிங், அல்லது நம் சவுக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயங்கரவாதியாக மாறவில்லை, அதனால்தான் அவர்களால் நன்மை செய்ய முடிந்தது.

Quoting Rk. Guru:
எல்லாவற்றிலும் ஊழல், கலபடம், ஏமாற்று, பொய், பித்தலாட்டம் கடமையை செய்வதற்கு கூட லஞ்சம் எப்போதுதான் தோழா "மாற்றம்" என்று சொல்வது வரும்.

இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் காத்துகொண்டிருக ்க வேண்டும். நம் அடிப்படை உரிமைகள் கூட போராடித்தான் பெறவேண்டி இருக்கு. என் நியாயமான் உரிமைகள் மறுக்கப்படும்போ து அநீதி இழைக்கப்படும்போ து நான் ஏன் நக்சலைட்டாகவும் , மாவோஸ்ட்டாகவும் மாறகூடாது.?
Quote
 
 
+1 #19 True Tamilan 2012-06-19 03:37
தமிழ் என் உயிர்.தமிழனுக்காக என் மூச்சு என்ரு.பேசும் கருனானிதியும். ஜெயலலிதாவும் அப்துல் கலாம்
ஏன் ஜனாதிபதி ஆக கூடாது என போராடுகின்ரனர்.ஏன் அவர் உன்மை தமிழன் என்பதாலா? .My fellow tamilians kindly watch these incidents?.this is going to be history.A great opportunity is denied to a great leader due to corrupted politicians.Let us understand and boycott anti tamilians in next election
Quote
 
 
+7 #18 vilambi 2012-06-18 23:00
எத்தனை செருப்பால் அடித்தாலும் இதைப் போன்ற நாய்கள் திருந்தாது,,,
Quote
 
 
+5 #17 zen 2012-06-18 20:05
These guys are controlling the human population by their products(Engine ers/Doctors),most of the educational institutes are having the buildings only.They don't have the stuffed staffs for teaching.
Quote
 
 
+11 #16 ஊர்க்குருவி. 2012-06-18 19:38
மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி, அம்மா என்று சொல்லிக்கொடுத்த ாள் தாய் குழந்தை அம்மா என்றது. அம்மாவுக்கு அர்த்தம் சொல்லிக்கொடுத்த ான் தந்தை குழந்தை நெகிழ்ந்து அன்பையும் தாய்மையையும் உணர்ந்தது.

தமிழகத்தை அதிக காலம் ஆண்டவன் கருநாநிதி,. தனது உடன்பிறப்புக்கள ுக்கு திருட, ஊழல் செய்ய, ஏமாற்ற, கலாச்சார பிறழ்வு உண்டாக கற்றுக்கொடுத்தா ன். தனது வாரிசுகளுக்கு கொலை, சுத்துமாத்து, திருட்டு அள்ளிவைப்பு, ஏமாற்று அனைத்தையும் கற்றுக்கொடுத்து நாக்கையே ஆயுதமாக்கி வாழ பழக்கிக்கொடுத்த ான்.

பள்ளிக்கு போகாதவன் கல்வி(கலவி) தந்தை ஆகியிருக்கிறான் , திருடன் மந்திரி ஆகியிருக்கிறான் , கொலைகாரன் நீதியமச்சராகியி ருக்கிறான். அனைத்துக்கும் மூலம் எழுவாய் கிழவன் காண்டாமிருகம் கருநாநிதி. அவனை அடக்காதவரைக்கும ் அவன் அழியாதவரைக்கும் ரீக்கடை நடத்திய ஜெகத ரட்சகன் போன்றோர், கலவித்தந்தையாகவ ும்,, ஏழைகளின் குடிசைகளை தீயிட்டு கொழுத்தி துணைவிக்கும் இணைவிக்கும் சொத்து பாலஸ்தானம் செய்த வீரபாண்டி ஆறுமுகம் போன்ற கிரிமினல்கள் பெரிய மனிதர்களாகவும், நேரு, பொன்முடி போன்ற காவாலிகள் விஐபிக்களாகவும் தமிழ் துரோகி பிரணாப் போன்ற விலங்குகள் குடியரசு தலைவராகவும் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பர்.
Quote
 
 
+9 #15 Ravi 2012-06-18 19:11
நிச்சயமாக நீங்கள் உங்களை பாராட்டிக் கொள்ளலாம். உங்களின் அலுக்காத சளைக்காத உழைப்புக்கு கிடைத்த சிறிய ஆறுதல் பரிசாக இதை கொள்வோம்..:)
Quote
 
 
-24 #14 samsudeen 2012-06-18 15:57
இந்த ஜகத் ரட்சகன் ஒரு பார்பனரா? இப்படி எழுதரீங்க?
Quote
 
 
+22 #13 rbalaji 2012-06-18 12:51
வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர்
Quote
 
 
+4 #12 Nellai Advocate 2012-06-18 12:06
Quoting Rk. Guru:
எல்லாவற்றிலும் ஊழல், கலபடம், ஏமாற்று, பொய், பித்தலாட்டம் கடமையை செய்வதற்கு கூட லஞ்சம் எப்போதுதான் தோழா "மாற்றம்" என்று சொல்வது வரும்.

இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் காத்துகொண்டிருக ்க வேண்டும். நம் அடிப்படை உரிமைகள் கூட போராடித்தான் பெறவேண்டி இருக்கு. என் நியாயமான் உரிமைகள் மறுக்கப்படும்போ து அநீதி இழைக்கப்படும்போ து நான் ஏன் நக்சலைட்டாகவும் , மாவோஸ்ட்டாகவும் மாறகூடாது.?

fact..
Quote
 
 
+50 #11 ஜெகதரட்சகன் 2012-06-18 08:49
இருக்கிற பைல்ஸ் கம்ப்லைண்டே தாங்கமுடியல, இதுல வேற அதே இடத்துல ஆப்பு அடிச்சுட்டு உங்கள நீங்களே பாராட்டுகிடுவிங ்களா. அப்படி நான் என்னய்யா தப்பு செய்தேன்,டாக்டர ுக்கு படிக்கனும்முன்ன ு நினச்ச பசங்களுக்கு சீட் கொடுத்தேன். இது தப்பா. நாட்டுல ஜனத்தொகை பெருகி போச்சு, சரி நம்மளால முடிஞ்ச ஒரு சின்ன உதவி, இந்த மாதிரி அரை குறை டாக்டர்களை ரெடிபண்ணி கொஞ்சம் ஜனதொகைய கொறைக்கலாம்னு பார்த்த விடமாட்டாங்க போல. 30 லட்சம்டா, 30 லட்சம்டா, 3 நாளு கண்ணு முழிச்சு பார்லிமெண்டுல பேசுனா கூட தரமாட்டாங்க, இவங்களா வந்து நான் டாக்டருக்கு படிக்க போறேன், இந்தாங்க 30 லட்சம் கொடுக்குறாங்க, இல்ல நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்குறாங்க, அத வேண்டாமுன்னு சொல்ல நான் என்ன இலிச்சவாயனா. என்னை கல்வி தந்தை என்ன, கல்விகடவுள்ளுனே எனக்கு நானே விளம்பரம் பண்ணிக்குவேன், அத கேட்க நீங்க யாருடா, வேண்ணா யென்ட காசா குடுத்து படிக்கவர்ற வங்கிட்ட சொல்லி உங்களால முடிஞ்சத செய்யுங்க. ஓ பாரத மாதவே, ஒரு இந்திய குடிமகன் இன்னொரு இந்திய குடிமகன டாக்டருக்கு படிக்கவைப்பது தப்பா. அல்லோ ம்ர்.சவுக்கு நீங்க பதிவுல்லாம் நல்லா போடுறிங்க, உங்களுக்கு மினிஸ்டரில இடம்பாக்குறேன். நான் அர்ஜெண்டா பூ மீதி திருவிழாவுக்கு போக வேண்டி இருப்பதால், அடுத்து அடுத்து நீங்க என்னை பற்றி போட போற பதிவுல மீட்பண்ணுவோம். அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன். குஞ்சாயீ குஞ்சாயீ குஞ்சாயீ. ஸ்டார்ட் தி மியூசிக்.
Quote
 
 
+12 #10 jagankovai 2012-06-18 02:07
சவுக்கு,'' தவறூ என்பது தவறீ செய்வது" தப்பு'' என்பது தெரிந்து செய்வது" தவறூ..செய்தவன் திருந்தியாகனும் '' தப்பு செய்தவன் வறூந்தியாகனும்"
Quote
 
 
+14 #9 danguvaaru andhurum 2012-06-18 00:08
முதல் பந்து ‘6’ (ஷ்ரீபதி)....
இரண்டாவது பந்தும் ‘6’ (ஜெகத்ரக்ஷகன்)...

முன்றாவது பந்தும் ‘6’ ஆகுமா (ஜெகத்குரு)??
Quote
 
 
+18 #8 Padman 2012-06-17 21:15
வாழ்த்துக்கள் சவுக்கு.

அது எப்படி சவுக்கு.... கருணாவை சுற்றியிருப்பவர ்கள் எல்லாருமே இப்படி இருக்கிறார்கள்?

கருணாவுக்கும் சரி கருணாவை சுற்றியிருப்பவர ்களுக்கும் சரி... தொடர்ந்து மானம் கப்பலேரிகிட்டு இருக்கு... அப்படியிருக்கும ்போது திருக்குறளுக்கு குறளோவியம் என்ற பெயரில் உரை வேற...

"மயிர் நீப்பின் உயிர்வாழா கவரி மான் அன்னார் உயிர் நீப்பின் மானம் வரின்" என்ற குறளை நினைச்சா என்னென்னமோ எழுதத் தோணுது.
Quote
 
 
+15 #7 jegan usa 2012-06-17 19:04
வாழ்த்துக்கள் சவுக்கு சார்..
Quote
 
 
+22 #6 anniyan 2012-06-17 16:29
சி.பி. ஐ யை பாராட்டலாம்..
குவோற்றோச்சியை விட்டதற்கு இன்னொருமுறை பாராட்டாலாம்..
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் செய்த புலன் விசாரணைக்கு ஒருதரம் பாராட்டலாம்..
கனிமொழிக்கு ஜாமீன் கோரினால் எதிர்த்து வாதாட மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்து, வெளியில் விட்டதற்கு ஒருமுறை பாராட்டலாம்..
டெல்லியில் சீக்கியர்களைப் படுகொலை செய்த சம்பவத்தை பிசுபிசுக்க வைத்ததற்கு ஒருமுறை பாராட்டலாம்..
சாத்வியை பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சு மருந்துகளை ஏற்றியதற்கு, ஒருமுறை பாராட்டலாம்:
http://ennapadampanchajanya.blogspot.in/2011/03/innocent-sadhvi-pragya-in-guantanamo.html

ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் ஆதாரங்களை அழித்து தப்பிக்கும் அளவுக்கு ஒரு வருடம் தாமதமாக விசாரணை ஆரம்பித்ததற்கு மேலும் ஒருதரம் பாராட்டலாம்..

By the way, listen to these Srilankan radio and enjoy :

http://www.tamilolli.com/?p=20323
http://www.tamilolli.com/?p=20332

(note : Srilankan Muslims are Tamil people only)
Quote
 
 
+9 #5 Arun B 2012-06-17 15:43
Excellent Savukku-ji...congrats...

Please do share the same info(URL) to Subramanian Swamy via twitter...I believe he can take this forward to the national level for sure!

Congrats again!
Quote
 
 
+26 #4 Rk. Guru 2012-06-17 15:00
எல்லாவற்றிலும் ஊழல், கலபடம், ஏமாற்று, பொய், பித்தலாட்டம் கடமையை செய்வதற்கு கூட லஞ்சம் எப்போதுதான் தோழா "மாற்றம்" என்று சொல்வது வரும்.

இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் காத்துகொண்டிருக ்க வேண்டும். நம் அடிப்படை உரிமைகள் கூட போராடித்தான் பெறவேண்டி இருக்கு. என் நியாயமான் உரிமைகள் மறுக்கப்படும்போ து அநீதி இழைக்கப்படும்போ து நான் ஏன் நக்சலைட்டாகவும் , மாவோஸ்ட்டாகவும் மாறகூடாது.?
Quote
 
 
+37 #3 பரங்கியன் 2012-06-17 14:58
வாழ்த்துக்கள் சவுக்கு,
உங்களுக்கு நீங்களே வாழ்த்துச் சொல்ல வேண்டியதில்லை...உமக்கு வாழ்த்துச் சொல்ல எம்மை போன்ற நூற்றுக்கணக்கான வாசகர்கள் இருக்கிறோம்...தொடரட்டும் உமது முயற்சி
Quote
 
 
+36 #2 Eleventh Sense 2012-06-17 14:42
வாழ்த்துக்கள் சவுக்கு.............
பணத்தால் சாதிக்க முடிந்ததை, தன மூர்க்க குணத்தால் இழந்தவர்கள் எவ்வளோவோ பேர்........
இதனை பணத்தை வைத்து தன் ஆயுளில் ஒரு நாள் கூட்ட முடியுமா இந்த ஜெகத் பட்சகனால்?
காலம் சொல்லும் பதில் மிக மோசமானது சவுக்கு...............
நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொல்லிகொள்வோமே............
தகுதி நமக்கு உண்டு, அதை கொண்டாடும் இறுமாப்போடு உங்கள் தோள் சேர்கிறோம் நாங்கள்.
மீண்டும் வாழ்த்துக்கள்................
Quote
 
 
+24 #1 SARUBALA 2012-06-17 13:45
வாழ்த்துக்கள் சவுக்கு சார்............
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 64 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3153
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week71709
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month284528
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12806647