முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சரிபாதி பெற்றாரா திரிபாதி ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 08:17

இந்தத் திரிபாதி வேறு யாருமல்ல… …. சென்னை மாநகர ஆணையாளர் ஜலதகுமார் திரிபாதிதான். 

Tripathy_7

 

யாரிடம் சரிபாதி பெற்றார் என்றால், இந்த மாதம் ஓய்வு பெற இருக்கும் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும் கூடுதல் டிஜிபியுமான துக்கையாண்டியிடம்தான்.   துக்கையாண்டி எதற்காக திரிபாதிக்கு சரிபாதி கொடுக்க வேண்டும் ?  இதில்தான் சுவையான தகவலே அடங்கியிருக்கிறது.  இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்பாக, துக்கையாண்டியைப் பற்றி, ஏற்கனவே சவுக்கில் வந்த இரண்டு கட்டுரைகளைப் படித்தீர்களென்றால், துக்கையாண்டி எப்படிப்பட்டவர், எவ்வளவு சிறப்பானவர், என்பது போன்ற விபரங்கள் தெரியும்.

ஆண்டியும் அரசனும்

அன்னமிட்ட கை

படித்து விட்டீர்களா… ஓரளவுக்கு துக்கையாண்டி யார் என்பது புரிந்திருக்கும்.  இந்த மாதம் 30 ஜுன் அன்று, துக்கையாண்டி வயது மூப்பின் காரணமாக பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும்.   அப்படி ஓய்வு பெரும்போது, எல்லா அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் பென்ஷன், ஈட்டுறுதித் தொகை எல்லாம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் துக்கையாண்டி இவற்றையெல்லாம் பெறுவாரா என்பது சந்தேகம்தான்.   ஏன் பெறமாட்டார்… ?  துக்கையாண்டி நேர்மையான அதிகாரியாயிற்றே.. என்று சில காவல்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பக் கூடும்.    துக்கையாண்டி எப்போதுமே நேர்மையானவர் அல்ல.   காவல்துறையில் நேர்மையானவர்கள் என்று பசுத்தோல் போற்றிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சிபி.சிஐடி கூடுதல் டிஜிபி நரேந்திர பால் சிங் போல இவரும் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. அவ்வளவே.

thukkiandi12

துக்கையாண்டி இப்போது என்ன சிக்கலில் சிக்கியிருக்கிறார் தெரியுமா ?  நில அபகரிப்பு வழக்கில்.    எப்படி என்பதை விரிவாகப்பார்போம்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜையா என்பவர், ரவி என்பவரோடு ஒரு நிலத்தை வாங்க ஒப்பந்தம் போடுகிறார்.  அந்த ஒப்பந்தத்துக்காக முன்பணமாக 5 லட்சத்தைத் தருகிறார். அந்த நிலம், சென்னை நீலாங்கரையில் மனை எண் 257.  இதன் மொத்தப் பரப்பளவு 12 ஆயிரம் சதுர அடி.   இந்த வியாபார ஒப்பந்தம், நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 08.09.2008 அன்று பதிவு செய்யப்படுகிறது.  மொத்த விற்பனை மதிப்பு 30 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்படுகிறது.

வியாபார ஒப்பந்தம் போட்ட இந்த ரவி என்பவர், மும்பையைச் சேர்ந்த மகேந்திர குமார் கம்பானி (குஞ்ஞானி அல்ல கம்பானி)  மற்றும் மாலினி மகேந்திர குமார் நவீன் சந்திர கம்பானி ஆகியோரின் ஒரே வாரிசான சந்திரேஷ் கம்பானி ஆகியோரின் அதிகாரப் பத்திரத்தைப் பெற்ற நபர் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது.   இந்தக் கம்பானி தம்பதியர் 1967ம் ஆண்டில் சொக்கலிங்கம் முதலியார் என்பவரின் அதிகாரப் பத்திரம் பெற்ற கணேசன் என்பவரிடமிருந்து 25.02.1967 அன்று வாங்குகிறார்கள்.   கம்பானி தம்பதியர் இறந்து போகும் முன், தங்கள் ஒரே மகனான சந்திரேஷ் கம்பானிக்கு இந்தச் சொத்தை எழுதி வைத்து விடுகின்றனர். இந்த சந்திரேஷ் கம்பானி, ரவியை தன்னுடைய அதிகாரம் பெற்ற முகவராக பத்திரம் பதிவு செய்ததன் அடிப்படையிலேயே ராஜைய்யாவோடு ரவி ஒப்பந்தம் போடுகிறார்.

ஒப்பந்தம் போட்டு முடித்ததும் பத்திரப்பதிவு செய்யும் முன்பாக, அந்தச் சொத்துக்கு வில்லங்கக் சான்று போட்டுப் பார்க்கிறார் ராஜைய்யா.   வில்லங்கச் சான்று போட்டுப் பார்த்த ராஜைய்யாவுக்கு அதிர்ச்சி.   நீலாங்கரை சார்பதிவகத்தில் வழங்கப்பட்ட வில்லங்கச் சான்றைப் பார்த்தால், அந்தச் சொத்து ஏற்கனவே விற்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

மும்பையைச் சேர்ந்த மகேந்திரக் குமார் கம்பானி என்பவரும், அவர் மனைவி மாலினி மகேந்திரக் குமார் நவீன் சந்திரக் கம்பானி என்பவரும் சேர்ந்து 12.04.2007 அன்று மகாலிங்கம் என்பவரின் மனைவி தனலட்சுமி என்பவருக்கு அதிகாரப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்கள்.   இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், மாலினி கம்பானி 07.02.1980 அன்று இறந்து விடுகிறார்.   அவரது கணவர் மகேந்திர குமார் கம்பானி 26.08.1997 அன்று இறந்து விடுகிறார்.  இப்படி இறந்து போன இந்தத் தம்பதியர் தனலட்சுமிக்கு 12.04.2007 அன்று அதிகாரப்பத்திரம் எழுதித் தருகிறார்களாம்.. … எப்படி இருக்கிறது ?

இந்த அதிகாரப்பத்திரத்தை திருச்சி இணை சார்பதிவாளர், ஆவண எண் 210/2007ல் பதிவு செய்து தருகிறார்.   இந்த கடமை தவறாத இணைச் சார்பதிவாளர், இதைப் பதிவு செய்யும் தனலட்சுமி அவர் கொடுத்த முகவரியில் வசிக்கிறாரா என்பதை சரிபார்க்கவில்லை.  மும்பையில் இருக்கும், கம்பானி தம்பதியர் உண்மையிலேயே தனலட்சுமிக்கு அதிகாரப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்களா, அவர்கள் உயிரோடாவது இருக்கிறார்களா என்பதைக் கூட சரிபார்க்கவில்லை.   நீங்கள் ஏதாவது சொத்து பதிவு செய்ய பதிவாளர் அலுவலகம் சென்றால், என்னென்ன ஆவணம் கேட்கிறார்கள் ?  இதில் ஏன் எவ்வித சரிபார்த்தலும் இல்லாமல், அவசர அவசரமாக பதிவு செய்து கொடுத்தார் அந்த சார்பதிவாளர்.   பின்னால் பார்ப்போம்.

நிலத்தை வாங்க நினைத்த ராஜைய்யா, யார்தான் இந்த தனலட்சுமி என்று கண்டுபிடிப்போம் என்று விசாரித்தால், மேலும் சில தகவல்கள் வருகின்றன.   இதே தனலட்சுமி, அந்தப் பத்திரத்தை பதிவு செய்த அதே நாளில், அதே அலுவலகத்தில் மற்றொரு அதிகாரப்பத்திரத்தை தயார் செய்கிறார்.  மும்பையைச் சேர்ந்த மற்றொரு தம்பதி மோதிலால் கரம்தாஸ் தலால் மற்றும் அவரது மனைவி குணவந்திரி கரம்தாஸ் தலால் ஆகிய இருவரும், சென்னை நீலாங்கரையில் உள்ள ப்ளாட் எண் 277க்கு தனலட்சுமிக்கு அதிகாரப்பத்திரம் வழங்குகிறார்கள். இந்தப் ப்ளாட் எண்ணின் மொத்த சதுர அடி 12 ஆயிரம்.    இந்த ப்ளாட் எண் 277 ஏற்கனவே பதிவு செய்த ப்ளாட் எண் 257க்கு அருகாமையில் உள்ள ப்ளாட். இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 24 ஆயிரம் சதுர அடி.  பத்து க்ரவுண்டுகள்.

இவ்வாறு அதிகாரப் பத்திரம் பெற்ற தனலட்சுமி, அடுத்த மாதமே சுப்புலட்சுமி என்பவருக்கு விற்கிறார்.   அந்தப் பத்திரம், நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 3052/2007ல் பதிவாகிறது.   இந்த நீலாங்கரை சார்பதிவாளரும், எந்த ஆவணங்களையும் சரிபார்க்கவில்லை.   திருச்சியில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப் பத்திரத்தில், தனலட்சுமி தான் குடியிருக்கும் முகவரியாக, பதிவு செய்திருந்தது எண் 30, வாளையார் கோயில் தெரு, டாக்டர் அம்பேத்கர் லே அவுட், திருச்சி.3.   சென்னையில் சுப்புலட்சுமிக்கு விற்பனை செய்கையில் பதிவு செய்திருந்த முகவரி, எண் 7, 2வது தளம், ராமமூர்த்தி அபார்ட்மென்ட்ஸ், விருகம்பாக்கம், சென்னை 92.  நீலாங்கரை சார்பதிவாளராவது இதை சரிபார்த்தாரா என்றால் இல்லை.

இவர் ஏன் சரிபார்க்கவில்லை ?   லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியின் மனைவி சொத்து வாங்கும்போது இதையெல்லாம் சரிபார்க்க முடியுமா ? அதிர்ச்சி அடையாதீர்கள்.    இந்த 10 கிரவுண்டு நிலத்தையும் வாங்கியது தற்போது கூடுதல் டிஜிபியாக உள்ள துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி.    இந்த 10 கிரவுண்டுகளையும் வாங்கிய சுப்புலட்சுமி, 22.04.2008 அன்று நீலாங்கரை சார் பதிவகத்தில், 10 கிரவுண்டுகளையும் தனது மகள் யூபு என்பவருக்கு தானமாக வழங்குகிறார்.    என்ன ஒரு பெருந்தன்மை ?    திருச்சியில் உள்ள சார்பதிவாளரும், நீலாங்கரை சார்பதிவாளரும், துக்கையாண்டியின் இந்த அயோக்கியத்தனங்களுக்கு துணை போகாமல் இருந்தால், அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கு பாய்ந்திருக்கும்.

எப்படி இருக்கிறது ஒரு கூடுதல் டிஜிபியின் சிறப்பான சேவை பார்த்தீர்களா ?

IMG_0005

IMG

IMG_0001

IMG_0002

5

6

7

சரி.. துக்கையாண்டி நில அபகரிப்பு செய்கிறார்.   அவருக்கு உதவியாகவும், பங்குதாரராகவும் ஒருவர் வேண்டாமா ?   வேண்டுமல்லவா ?  அந்தப் பங்குதாரர் யாரென்றால் அவர்தான் காமராஜ்.   குருமாராஜ் என்று சவுக்கு வாசகர்களால் அன்போடு அழைக்கப்படும் நக்கீரன் காமராஜ் இன்று முதல் காண்ட்ராக்டர் காமராஜ் என்று அழைக்கப்படுவார்.

Kamaraj-3

துக்கையாண்டிக்கும், காமராஜுக்குமான உறவு என்பது, துக்கையாண்டி சிபி.சிஐடியில் எஸ்.பியாக இருந்து, ப்ரேமானந்தா வழக்கை விசாரித்தபோதே தொடங்கி விட்டது. அப்போது துக்கையாண்டி கொடுத்த பிரத்யேக படங்களை வைத்து, நக்கீரன் தங்கள் விற்பனையை பல மடங்கு அதிகரித்தது.

2ஜி ஊழல் என்பது, நாம் அனைவரும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு பெரிய மாயச்சுழல்.  2ஜி ஊழலில் மொத்தம் எவ்வளவு தொகைதான் சம்பந்தப்பட்டுள்ளது என்பதையும், எவ்வளவுதான் கருணாநிதி குடும்பத்தாரும், ஆ.ராசாவும் சம்பாதித்தார்கள் என்பதையும் நம்மால் என்றுமே தெரிந்து கொள்ள முடியாது. வண்டியில் தள்ளிச் சென்று துணிகளை விற்கும் ஒரு சாதாரண மனிதனாக இருந்த சாதிக் பாட்சா எப்படி மிகப்பெரிய தொழில் அதிபர் ஆனார் ?  (சவுக்கு கட்டுரை படியுங்கள்).  இது போல 2ஜி ஊழலில் உள்ள ஏகப்பட்ட பணம் எங்கே சென்றது என்றே நமக்குத் தெரியாது. மே 2007ல் ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆனதுமே இத்துறையில் எவ்வளவு பணம் கொட்டப் போகிறது என்பதை நன்கு அறிந்து கொண்டார்.  கருணாநிதி குடும்பத்துக்கு பெரும் பங்கை கொடுத்தாலும், தனக்கென்று பணம் வேண்டுமல்லவா ?   அவ்வாறு ராசா சேர்த்துக் கொண்ட தொழில் கூட்டாளிகள்தான் சாதிக் போன்றவர்கள்.

ராசாவோடு சேர்ந்து தொழிலதிபரான மற்றொருவர்தான் காண்ட்ராக்டர் காமராஜ்.    22 ஜனவரி 2008 அன்று காமராஜ், அய்ந்திரம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார்.  இந்த நிறுவனத்தில் காமராஜோடு சேர்ந்து பங்குதாரராக இருந்தவர் பி.எஸ்.சுமதி என்பவர்.  இவர் யாரென்ற விபரங்கள் தெரியவில்லை.   சாதிக் தொடங்கிய நிறுவனங்கள் மற்றும் காமராஜ் தொடங்கிய நிறுவனங்களின் உண்மையான நோக்கமே, 2ஜி ஊழலில் வந்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதே.    சாதிக்குடைய நிறுவனங்கள் குறுகிய காலத்தில் எப்படி பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்தனவோ, அதே போல கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம்தான் அய்ந்திரம் கட்டுமான நிறுவனமும்.  

Form_32_kamaraj_Page_1

Form_32_kamaraj_Page_2

இந்த நிறுவனம் பெரிய அளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதற்கான விபரங்கள் தெரியவில்லை என்றாலும், ராசாவின் செயலாளராக இருந்த அகிலன் ராமநாதனுக்காக திருச்சியில் இரண்டரை லட்சம் சதுர அடியில் ஒரு பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது என்கின்றன தகவல்கள்.  ஒரு சதுர அடி 850 ரூபாய் என்ற விலையில் 2.5 லட்சம் சதுர அடிக்கு, 35 கோடியே 50 லட்சம் பெற்றுள்ளது இந்த நிறுவனம் என்கின்றன தகவல்கள்.  அதே போல, திருச்சியில், இளங்கோவன் என்ற ஒரு கல்லூரியை ஒரு சதுர அடி 950 ரூபாய் என்ற விலையில், ஒன்றரை லட்சம் சதுர அடி கட்டிடத்தை கட்டித் தந்து 14 கோடியே 25 லட்சம் ரூபாய் லாபம் பார்த்துள்ளதாகத் தெரிகிறது.

Kamaraj_share_holding_pattern

இது தவிரவும், காமராஜ் திருச்சி பொதுப்பணித்துறையில் முதல் வகுப்பு ஒப்பந்ததாரராக பதிவு செய்துள்ளார். இதற்கான ஒப்பந்தக் கடிதம், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் தங்ககப்பிரகாசம் என்பவரால் வழங்கப்பட்டுள்ளது.    முதல் வகுப்பு ஒப்பந்ததாரர் என்றால், 75 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள அரசுக் கட்டுமானப் பணிகளைப் பெறுவது.   காமராஜ் கருணாநிதியோடு எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.   கருணாநிதிக்கும், திமுகவுக்கும் ஆதரவாக நக்கீரன் இதழில் எப்படியெல்லாம் எழுதினார் என்பதும் சவக்கு வாசகர்களுக்கு நன்கு தெரியும்.  

a2-4

a

பொதுப்பணித்துறையை தன்னுடைய பொறுப்பில் கருணாநிதி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த நிலையில், காமராஜ் முதல் வகுப்பு ஒப்பந்ததாரராக பொதுப்பணித்துறையில் பதிவு செய்திருந்தது மானமுள்ளவன் செய்யும் செயலா ?   இப்படி ஒரு செயலைச் செய்த காமராஜ், அவருடைய வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், அவர் மனைவி ஜெயசுதா, நீரா ராடியாவின் சென்னை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் என்று ஒரு செய்தி வெளியிட்டதற்காக அந்நிறுவனத்தின் பத்திரிக்கை நிருபர் ஒருவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து, அதைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.   காமராஜெல்லாம் மானத்தைப் பற்றி யோசிக்கலாமா ?   
Kamaraj_resignation

Kamaraj_resignation_accepted

இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தொழில் நடத்தி வந்த அய்ந்திரம் கட்டுமான நிறுவனம் சம்பாதித்த லாபத்துக்கு இதுவரை தமிழக அரசுக்கு மட்டும் 50 லட்ச ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.  தன்னுடைய தொழிலை சிறப்பாக நடத்தி வந்த காண்ட்ராக்டர் காமராஜ், தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு தடையாக வந்தது, சிபிஐ விசாரணை.  2009 இறுதி முதலே சூடு பிடிக்கத் தொடங்கிய 2ஜி ஊழல், ஜுன் 2010ல் நீரா ராடியா டேப்புகள் வெளியானபோது மிகவும் பரபரப்படைந்தது.  ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்று மொத்த நஷ்டத்தை நிர்ணயம் செய்த சிஏஜி அறிக்கை 10 நவம்பர் 2010 அன்று வெளியான பிறகு, நாடெங்கும் எழுந்த கடும் எதிர்ப்புக்களைத் தொடர்ந்து ராசா ராஜினாமா செய்தார்.   நவம்பர் 25 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, நீதிபதிகள் ராசாவை விசாரிக்காத சிபிஐக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.   இனி விசாரணையில் சிக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை ஆனது ராசாவுக்கு.

அந்த நேரத்தில், 1 டிசம்பர் 2010 அன்று காமராஜ், தான் தொடங்கிய அய்ந்திரம் கட்டுமான நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்கிறார்.   அவர் ராஜினாமாவை மற்ற இயக்குநர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். இதுதான் காண்ட்ராக்டர் காமராஜின் கதை.

இப்போது துக்கையாண்டிக்கும் காமராஜுக்குமான உறவு என்ன என்பது புரிகிறதா ?  துக்கையாண்டி நிலத்தை அபகரிப்பார்.  காமராஜ் அதில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வார்.   சரியான ஜோடிதான் அல்லவா ?

சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.   திரிபாதி பெற்றாரா திரிபாதி என்று ஏன் சொல்ல வேண்டும் ?    துக்கையாண்டியின் மனைவி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நாள் 23 ஏப்ரல் 2012.    இது வரை இந்த வழக்கில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா ?  60 நாட்களாக திரிபாதி என்ன செய்து கொண்டிருக்கிறார் ?  துக்கையாண்டி 30 ஜுன் 2012ல் ஓய்வு பெற உள்ளார்.   ஓய்வு பெறுகையில் அவருக்கு ஓய்வு காலப் பயன்களாக எப்படியும் 15 லட்ச ரூபாய் வரும்.   அவர் பணியில் இருக்கும் போது நடவடிக்கை எடுத்தால் அந்த 15 லட்ச ரூபாயும் வராது.   ஓய்வூதியமும் வராது.   ஓய்வு பெற்ற பிறகு நடவடிக்கை எடுத்தால், ஓய்வூதியத்தை பெற முடியும்.

மேலும், இரண்டு மாதமாக துக்கையாண்டி மீதும், அவர் மனைவி மற்றும் மகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், எதற்காக அமைதியாக இருக்கிறார் ?  இது மட்டுமல்ல.  சவுக்குக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கை மட்டுமே.   இது ஏப்ரல் மாதத்தில் பதியப்பட்டது.   மே மாதம், துக்கையாண்டியின் மனைவி மீதும், மகள் யூபு மீதும், மற்றொரு மகள் யாமினி மீதும், மேலும் இரண்டு எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  இவை எதிலுமே நடவடிக்கை எடுக்காமல் திரிபாதியை தடுப்பது எது ?  இந்த முதல் எப்ஐஆரை ரத்து செய்யும்படி, துக்கையாண்டியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.   இந்த வழக்கின் எப்ஐஆரை உயர்நீதிமன்றம் ரத்து செய்யும் வரை காத்திருக்கப் போகிறாரா திரிபாதி ? இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து செய்திகள் துளி கூட கசியாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் திரிபதி என்றால், துக்கையாண்டி மீது அவருக்கு அப்படி என்ன அக்கறை -?

இந்த வழக்கில் புலனாய்வு மேற்கொண்டு, திருச்சி சார் பதிவாளரையும், நீலாங்கரை சார்பதிவாளரையும் விசாரித்தாலே, இந்த வழக்கில் துக்கையாண்டியின் பங்கு என்ன என்பது துல்லியமாகத் தெரியும்.   நில அபகரிப்பில் ஈடுபட்ட துக்கையாண்டியின் மனைவி மற்றும் மகளை விட, லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டு, பதிவுத் துறை சார் பதிவாளர்களை மிரட்டிய துக்கையாண்டியே பெரிய குற்றவாளி.   இந்தத் துக்கையாண்டி இணை இயக்குநராக அமர்ந்து கொண்டு, ஐநூறும், ஆயிரமும் வாங்கும் விஏஓக்களையும், மின்சாரத்துறை ஊழியர்களையும் கைது செய்ய உத்தரவிட்டுக் கொண்டிருந்தார் என்பதை உங்களால் சகித்துக் கொள்ள முடிகிறதா ?   சென்னை பனையூரில் இரண்டரை க்ரவுண்டில் வீடு வைத்திருக்கும் துக்கையாண்டி, போலி பத்திரம் தயார் செய்து 10 க்ரவுண்டுகளை அபகரித்திருக்கிறாரே… இவரை விடவா 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ தவறு செய்து விட்டார் ?

கடந்த திமுக ஆட்சியில் துக்கையாண்டி லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராகவும், கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றினார்.  அப்படிப் பணியாற்றிய காலத்தில், துக்கையாண்டி முழு நேரமும் ஆற்றிய பணி, உச்ச நீதிமன்ற தடையுத்தறவு நீக்கப்பட்ட பிறகு, ஜெயலலிதா மீது உள்ள பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கை தீவிரப்படுத்தியதுதான். இப்படிப்பட்ட அதிகாரிகளை கருணாநிதியாவது மன்னிப்பார்.  ஜெயலலிதா ஒரு காலும் மன்னிக்க மாடடார்.     இந்தக் காரணத்தினால்தான் ஜெயலலிதா, கடந்த ஒரு ஆண்டாக துக்கையாண்டிக்கு எந்தப் பதவியும் வழங்காமல், கட்டாயக் காத்திருப்பில் வைத்திருக்கிறார்.   ஜெயலலிதாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால், திரிபாதியை கன்னியாக்குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வாட்ச்மேனாக ஆக்கி விடுவார் என்பது திரிபாதிக்கு நன்கு தெரியும்.

ஜெயலலிதாவுக்குத் தெரிந்தால் தப்பிக்கவே முடியாது என்பது நன்கு தெரிந்தும் துக்கையாண்டி மீது நடவடிக்கை எடுக்காமல் திரிபாதி அமைதி காப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் ?

kkk

அவர் சரிபாதி வாங்கி விட்டார் அல்லது வாங்கத் திட்டமிட்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

 

Comments  

 
0 #40 zia 2012-07-05 13:46
துக்கயாண்டிதிரு டன் பிடி பட்டான்.. நல்ல வேலை சவுக்கு...
Quote
 
 
0 #39 senthils 2012-07-02 10:11
இந்தா புடிச்சிடாங்க ல !
Quote
 
 
+1 #38 திரு.டன் 2012-07-02 09:09
பத்த வச்சிட்டீங்களே பரட்டை.....சரிபாதி பெறவில்லை திரிபாதி....துக்கையாண்டிக்க ு டெர்மினேஷ்ன் ஆடர் கொடுத்துட்டாரே.
Quote
 
 
+1 #37 Eleventh Sense 2012-07-01 07:14
அநேகமாக ரிடையர் ஆகவிடாமல் தூக்கப்பட்ட டாப் பதவிக்காரர் நம்ம தூக்கையாகதான் இருக்க முடியும்..................
தூக்கப்பட்ட துக்கைக்கு............, தூக்க காரணமாக இருந்த சவுக்கு சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். உப்பை தின்ன துக்கை...., இப்போ தண்ணி குடிக்கும் நேரம்.

சவுக்கின் சாதனை தொடரட்டும்.
Quote
 
 
+4 #36 TEAMSAVUKKU 2012-07-01 01:40
As an auditor according to this kindly note they should have paid the following.

1. Income tax – consider 10% margin for Rs 49,75,00,000.00 is Rs 4,95,50,000.00. then 30% tax will be about Rs1,50,00,000.00
2. VAT / Sales tax at the rate of 4% for 70% material that is 2.8% will be about Rs 1,40,00,000.00
3. Educational chess at 2% of Sales Tax is Rs 2,80,000.00.
4. Service tax at the rate of 4 % will be about Rs 2,00,000,00.00

So 1,50,00,000.00 + 1,40,00,000.00 + 2,80,000.00 + 2,00,00,000.00 = 4,92,80,000.00

Now it is your duty to Check with the departments and expose if the above payments have been swindled.
Quote
 
 
+1 #35 NJ Tamilan 2012-06-30 07:43
I changed my gmail status to the following:
http://savukku.net/ - "Tamil Wiki Leaks" Savukku Shankar is rocking; Chief Vigilance Officer K. Thukkaiandi has been suspended, hours before his retirement. சரிபாதி பெற்றாரா திரிபாதி ? http://savukku.net/home1/1585-2012-06-22-03-38-44.html
Quote
 
 
0 #34 Madhu 2012-06-30 01:22
Thukkaiandi got suspended today....!!!
Quote
 
 
0 #33 vignaani 2012-06-29 20:25
துக்கையாண்டி சச்பென்டெட். சவுக்கு பணி சிறக்கட்டும்.
29/06/2012
Quote
 
 
0 #32 Dhanasekaran 2012-06-29 19:42
வாழ்த்துக்கள் சவுக்கு துக்கையான்டி பனி இடை நீக்கம் செய்ய பட்டு விட்டார்
Quote
 
 
0 #31 Jagan T 2012-06-29 19:01
துக்கையாண்டி திடீர் சஸ்பெண்ட்!
தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபியும்,அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியுமான துக்கையாண்டி ஐபிஎஸ் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ார்.
- வாழ்த்துக்கள் சவுக்கு.
Quote
 
 
0 #30 sixer 2012-06-29 18:35
Action was taken savukku... :D

http://www.maalaimalar.com/2012/06/29133959/corruption-complaint-additiona.html
Quote
 
 
+1 #29 பரங்கியன் 2012-06-29 18:32
சவுக்கு,
எங்கய்யா இருக்கே மவராசா..உன்ன என்ன சொல்லி பாராட்டுனாலும் தகுமய்யா...மத்த பத்திர்க்கைல வந்துச்சோ இல்லையோ தெரியல ஆனா நீதான்ய்யா இத ஆரம்பிச்சேன்னு சொல்லாம்.எழுதனோதோட இல்லாம இந்த துக்கையாண்டி மேல கம்ளெண்ட்-டும் கொடுத்து அந்தாளு ரிட்டையர்டு ஆவறதுக்கு முன்னாடி பெரிய ஆப்பா வச்சி அந்தாள சஸ்பெண்ட் ஆக வச்சிட்டே....செம தில்லுய்யா உனக்கு...
Quote
 
 
0 #28 kg 2012-06-29 17:35
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=497137

Action taken on this guy
Quote
 
 
0 #27 kharthikg 2012-06-29 17:28
இன்று ஓய்வுபெறும் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டி திடீர் சஸ்பெண்ட் - Well done Savukku.
Quote
 
 
0 #26 kharthikg 2012-06-29 17:27
இன்று ஓய்வுபெறும் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டி திடீர் சஸ்பெண்ட்!!
Quote
 
 
0 #25 gjjp 2012-06-29 15:28
thukkaiaandi suspended today
congrats savukku
Quote
 
 
0 #24 Sa 2012-06-29 14:29
சென்னை: தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபியும்,அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியுமான துக்கையாண்டி ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ார்.

தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபியும்,அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியுமான துக்கையாண்டி ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ார்.

துக்கையாண்டிக்க ு எதிரான சில கடுமையான குற்றச்சாட்டுக் கள் குறித்த விசாரணை நிலுவையில் இருப்பதால்,1969 ம் ஆண்டின் அகில இந்திய சேவைகளுக்கான - All India services- (ஒழுங்கு மற்றும் முறையீடு) சட்ட விதி 3 ன் துணை விதி (1) ன் கீழ் அளிக்கப்பட்டுள் ள அதிகாரத்தின் கீழ் துக்கையாண்டியை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்வதாகவும், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்ட ுள்ளது.

வெளியே செல்ல முன் அனுமதி தேவை

அத்துடன் சஸ்பெண்ட் காலத்தில் துக்கையாண்டி சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றும், அவர் தற்போது உள்ள காவல்துறை தலைமையகத்தை விட்டு முன் அனுமதியின்றி வெளியே செல்லக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .
Quote
 
 
0 #23 Sa 2012-06-29 14:28
கூடுதல் போலீஸ் டிஜிபி துக்கையாண்டி திடீர் சஸ்பெண்ட்!
Quote
 
 
0 #22 leelakris 2012-06-29 14:21
சென்னை : விரைவு போக்கு‌வரத்து கழக கண்காணிப்பு அதிகாரியாக உள்ள துக்கையாண்டியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளத ு. துக்கையாண்டி மீது பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் அவர் சென்னையை விட்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள ்ளது.
Quote
 
 
0 #21 savukkureader 2012-06-26 10:20
Look,
TN has a serious problem, from Vigilence office, Police Dept, Politicians, Taluk office, Registrar's office, EB office, RTO office, and almost all govermental agencies are corrupt.
Not even 1% of TN population will even know about savukku let alone read it. So in order to take this to the public a website where anonymous corruption details can be posted. The reason I mention anonymous is because of retaliation from the government and the officials.
Quote
 
 
+14 #20 Ravi 2012-06-25 11:56
மிகவும் முக்கியமான கட்டுரை மற்றும் தகவல்கள். இந்த தகவல்களை திரட்ட பலரும் உங்களுக்கு உதவியிருக்கின்ற னர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த அரசு உடனே திரு(ட்டு)வாளர் . துக்கையாண்டியின ் மீது நடவடிக்கை எடுத்து அவரை துக்க ஆண்டியாக ஆக்குவார்கள் என்று நம்புகிறேன். இந்த ஓய்வு ஊதியம் மற்றும் பணிக் கொடையான 15 லட்சமெல்லாம் நம்ம சொட்டையாண்டிக்க ு ஒரு பெரிய தொகையில்லை என்றாலும் பேராசையின் உருவமான இவருக்கு இதை குறைந்த பட்ச தண்டனையாக கொள்ளலாம்.
மீண்டும் ஒரு முறை சரியான ஆதாரங்களுடன் ஒரு சாதாரண (பணி நீக்கம் செய்யப்பட்டவர்) மனிதனால் இத்தகைய ஊழலை வெளிக்கொனற முடியுமென்றால் இந்த காவல்துறை என்ன புடுங்குகிறது? நீதித்துறை கிழிக்கிறதா? நாக்கை புடுங்கிட்டு சாவனும்.
Quote
 
 
+6 #19 PAATHIKAPATTAVAN 2012-06-25 07:09
MOLESTING INCIDENT HAPPENS AT RAMAPURAM SIGNAL AT 24TH JUNE 13.00 PM. I FORGET TO MENTION THE TIMING IN MY PREVIOUS COMMENT. ME AND MY FRIEND PRAYING GOD TO PUNISH THAT DRUNKED POLICE CONSTABLE GUNASEKARAN.
Quote
 
 
+6 #18 PAATHIKAPATTAVAN 2012-06-25 07:04
NOT ONLY POLICE OFFICERS, POLICE CONSTABLE ALSO CHEATING INSULTING AND HURTING PUBLIC. ONE OF THE DRUNKEN POLICE CONSTABLE NAMED GUNASEKARAN WHO WAS CHECKING THE VEHCILE NEAR RAMAPURAM SIGNAL TRY TO MOLESTED (ALMOST MOLESTED) MY FRIEND WHO WAS BOARDING ALONG WITH ME IN THE BIKE. HE DID THIS BECAUSE SHE TOLD THAT SHE IS A DAUGHTER OF EX-SERVICEMEN AND GOING TO SEE HIM IN POONAMALLEE HOSPITAL. I THINK WHAT IS GOING ON IN TAMIL NADU. THAT DRUNKEN POLICE MAN BEHAVING LIKE A DON. SO NO LAW AND ORDER IN TAMILNADU RIGHT NOW? WHO WILL ASK THIS? I HEARD ABOUT THIS SITE FROM MY FRIEND SO SAVUKKU SIR PLEASE AVOID THESE KIND OF INCIDENTS HAPPEN IN FUTURE. I KNOW NO PUNISHMENT WILL BE GIVEN TO THAT POLICE CONSTABLE AS HE IS A DON. ONCE ALREADY I SEEN THE SAME POLICEMAN WAS FIGHTING IN MIDDLE OF THE ROAD NEAR CEMENT ROAD SIGNAL. SO PUBLIC WHO ARE VISITING THIS SITE AND READING THIS COMMENT PLEASE REQUEST SAVUKKU LIKE PEOPLE TO AVOID THESE KIND OF INCIDENTS IN FUTURE. MY FRIEND IS NOT INTERESTED TO SHOW HER FACE IN PUBLIC AND GIVE COMPLAINT. SO ONLY COMMENTS WILL REACH THIS TO THE CONCERNED OFFICER WHO CAN PUNISH THAT DRUNKEN POLICE CONSTABLE. THANKS TO ALL.
Quote
 
 
+8 #17 guhan 2012-06-23 23:37
savukku concentrating in state affairs only. come to chennai custom house. probe C.RAJAN'S roll in led tv concealment case and how innocent officers affected by him.still his followers are active in custom house, diverting the blame on lower officers. his followers are a.manimaran d.c., ksvv prasad j.c,
Quote
 
 
0 #16 பச்சமுத்து 2012-06-23 14:43
தேசிய ஒற்றுமை என்று இளையதலைமுறையினர ுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது இதில் விடுதலைப்புலிகள ும், பிரச்சனையும் தமிழ் நாட்டிலிருந்துத ான் வளர்த்துவிடப்பட ்டது என்று கற்பிக்கப்படுகி றது.

18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் "காலனித்துவ மற்றும் தொழிற்புரட்சி" வெற்றிக்களை "ஐரோப்பிய அடையாளம் eurocentrism " என்று "CONSOLIDATE" செய்யப்பட்டது. இதை விஞ்ஞான ரீதியாக செய்தவர் ஜெர்மனியின் "Wilhelm Friedrich Hegel(1770 – 1831) ".
ஐரோப்பிய யூத-கிரிஸ்தவ பின்னணியிலிருந் து வேறுபடுத்தி, இந்த "அடையாளத்தை" உறுதிப்படுத்தவே "PAGANISM தேடப்பட்டு", அது இந்தியாவை, சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அறிவித்து, ஐரோப்பியர்களின் "MATERIAL ரீதியிலான" அணுகுமுறையால் "வெள்ளைத்தோல் அல்லாத" இந்தியர்களை அவர்களின் நிர்வாக வசதிக்கு "திராவிடர்கள்" என்று அடையாளப்படுத்தி னார்கள். ஆனால் "திராவிடம்" என்பது தங்கள் தவறான "கையாள்கையால்" பிறந்த குழந்தை என்பதால் பரிவுகாட்டினார் கள் அதாவது, வெள்ளைக்காரர்கள ின் "தேவடியாப்பசங்கள ்". அதனால் மு.கருணாநிதியின் குடும்பத்தினர் நிரந்தர தலைவர்கள் ஆகமுடிந்தது!

விடுதலைப்புலிகள ் மீது ஆரம்பத்தில் பரிவு காட்டியதும், பிறகு "ஐரோப்பிய அடையாளத்தின் இருப்பிற்கு" பிரச்சனை என்று வந்தபோது கைவிட்ட "சர்வதேச பரிமாணம்" இதுதான்!.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை சமுதாயம் "விடுதலைப்புலிகள ்" என்பதற்கு எதிராக தன்னுடைய அனைத்து கட்டமைப்புகளையு ம் உருவாக்கியுள்ளத ு. மே 2009 க்குப் பிறகு, விடுதலைப்புலிகள ் என்பது இல்லாமல் போகவே, தற்போதைய "இலங்கை கட்டமைப்பின் " லுக்கு விதலைப்புலிகள் போன்றதொரு வலிமையான எதிர்ப்பு தேவைப்படுகிறது.
உண்மையில், "ஐரோப்பிய அடையாளம்" என்பதற்கு, தமிழநாடு எந்பது, இந்திய அடையாளத்திலிருந ்து விலகி இலங்கைப் பிரச்சனையின் இந்த வ்எற்றிடத்தை நிறப்பும் ஒரு அரசியல் கருவியாக மாறினால், ஐரோப்பியர்களின் இனவெறிக் கொள்கையான, "கருத்த தோலுடையவர்கள்" பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்ற தங்கள் ஆப்பிரிக்கா, கடாபி லிபியா போன்றவற்றின் மீதான கொள்கைகளை நியாயப்படுத்த முடியும் என்று எண்ணுகிறார்கள்! .
Quote
 
 
0 #15 பச்சமுத்து 2012-06-23 14:42
இலங்கை தமிழ்ப்பகுதியில ் சிங்கள-தமிழ் தேசிய ஒற்றுமை என்று இளையதலைமுறையினர ுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது இதில் விடுதலைப்புலிகள ும், பிரச்சனையும் தமிழ் நாட்டிலிருந்துத ான் வளர்த்துவிடப்பட ்டது என்று கற்பிக்கப்படுகி றது.

18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் "காலனித்துவ மற்றும் தொழிற்புரட்சி" வெற்றிக்களை "ஐரோப்பிய அடையாளம் eurocentrism " என்று "CONSOLIDATE" செய்யப்பட்டது. இதை விஞ்ஞான ரீதியாக செய்தவர் ஜெர்மனியின் "Wilhelm Friedrich Hegel(1770 – 1831) ".
ஐரோப்பிய யூத-கிரிஸ்தவ பின்னணியிலிருந் து வேறுபடுத்தி, இந்த "அடையாளத்தை" உறுதிப்படுத்தவே "PAGANISM தேடப்பட்டு", அது இந்தியாவை, சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அறிவித்து, ஐரோப்பியர்களின் "MATERIAL ரீதியிலான" அணுகுமுறையால் "வெள்ளைத்தோல் அல்லாத" இந்தியர்களை அவர்களின் நிர்வாக வசதிக்கு "திராவிடர்கள்" என்று அடையாளப்படுத்தி னார்கள். ஆனால் "திராவிடம்" என்பது தங்கள் தவறான "கையாள்கையால்" பிறந்த குழந்தை என்பதால் பரிவுகாட்டினார் கள் அதாவது, வெள்ளைக்காரர்கள ின் "தேவடியாப்பசங்கள ்". அதனால் மு.கருணாநிதியின் குடும்பத்தினர் நிரந்தர தலைவர்கள் ஆகமுடிந்தது!

விடுதலைப்புலிகள ் மீது ஆரம்பத்தில் பரிவு காட்டியதும், பிறகு "ஐரோப்பிய அடையாளத்தின் இருப்பிற்கு" பிரச்சனை என்று வந்தபோது கைவிட்ட "சர்வதேச பரிமாணம்" இதுதான்!.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை சமுதாயம் "விடுதலைப்புலிகள ்" என்பதற்கு எதிராக தன்னுடைய அனைத்து கட்டமைப்புகளையு ம் உருவாக்கியுள்ளத ு. மே 2009 க்குப் பிறகு, விடுதலைப்புலிகள ் என்பது இல்லாமல் போகவே, தற்போதைய "இலங்கை கட்டமைப்பின் " லுக்கு விதலைப்புலிகள் போன்றதொரு வலிமையான எதிர்ப்பு தேவைப்படுகிறது.
உண்மையில், "ஐரோப்பிய அடையாளம்" என்பதற்கு, தமிழநாடு எந்பது, இந்திய அடையாளத்திலிருந ்து விலகி இலங்கைப் பிரச்சனையின் இந்த வ்எற்றிடத்தை நிறப்பும் ஒரு அரசியல் கருவியாக மாறினால், ஐரோப்பியர்களின் இனவெறிக் கொள்கையான, "கருத்த தோலுடையவர்கள்" பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்ற தங்கள் ஆப்பிரிக்கா, கடாபி லிபியா போன்றவற்றின் மீதான கொள்கைகளை நியாயப்படுத்த முடியும் என்று எண்ணுகிறார்கள்! .
Quote
 
 
+12 #14 Jagan T 2012-06-23 11:27
கருமம் பிடித்த இந்த குருமாராஜ், ஒரு கேவலமான புரோக்க்கரா இருந்துட்டு மான நஷ்ட வழக்கு போடரானா? பன்னாடை.
திமுகவினரை நில அபகரிப்பு வழக்கில் உள்ளே போடும்போது இந்த திருட்டு அதிகாரிகாலியும் கைது செய்ய வேண்டியதுதானே.
Quote
 
 
+6 #13 Eleventh Sense 2012-06-22 22:25
1. அந்தப் பங்குதாரர் யாரென்றால் அவர்தான் காமராஜ். குருமாராஜ் என்று சவுக்கு வாசகர்களால் அன்போடு அழைக்கப்படும் நக்கீரன் காமராஜ் இன்று முதல் காண்ட்ராக்டர் காமராஜ் என்று அழைக்கப்படுவார் .
2. நில அபகரிப்பில் ஈடுபட்ட துக்கையாண்டியின ் மனைவி மற்றும் மகளை விட, லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டு, பதிவுத் துறை சார் பதிவாளர்களை மிரட்டிய துக்கையாண்டியே பெரிய குற்றவாளி. இந்தத் துக்கையாண்டி இணை இயக்குநராக அமர்ந்து கொண்டு, ஐநூறும், ஆயிரமும் வாங்கும் விஏஓக்களையும், மின்சாரத்துறை ஊழியர்களையும் கைது செய்ய உத்தரவிட்டுக் கொண்டிருந்தார் என்பதை உங்களால் சகித்துக் கொள்ள முடிகிறதா ?
3. ஜெயலலிதாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால், திரிபாதியை கன்னியாக்குமரிய ில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வாட்ச்மேனாக ஆக்கி விடுவார் என்பது திரிபாதிக்கு நன்கு தெரியும்.

ஆனாலும் நையாண்டி ஓவர்தான் சவுக்கு..................

ஆனாலும் நையாண்டி ஓவர்தான் சவுக்கு..................
ஒப்பந்தக்காரர் குருமாராஜ் கைவசம் நிறைய ஆர்டர் வர இருக்கிறது......... கழக தோழர்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்க.........(ஆண்டிமுது ராசாவின் கிரீன் ஹவுஸ் பிளாட்கள் எல்லாம் காலி மனைகள் தானே)
வாட்ச்மேன் வேலைக்கு இப்ப துக்கையாண்டி பணி ஓய்வு பெற்றதும் அவரை நியமித்து கொள்ளலாம்.
Quote
 
 
+3 #12 rajaa 2012-06-22 21:41
வாழ்த்துக்கள் சவுக்கு..
Quote
 
 
+7 #11 sirippousingaram 2012-06-22 21:01
ஆக திரிபாதிக்கு வச்சிட்டீங்க பெரிய ஆப்பு
Quote
 
 
+19 #10 ஷாலி 2012-06-22 17:04
பிரேமானந்தா வழக்கில், அவரிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக
அவரை இரவில் தூங்கவிடாமல் அலைகழித்து வாக்குமூலம் பெற்று பேர் வாங்கியவர் நம்ம துக்கையாண்டி.

இப்ப துக்கையாண்டி பணி ஓய்வு பெற்றாலும் அவரை சவுக்கு தூங்கவிடாமல் செய்துவிட்டது.பதவி இருக்கும்போது கணவனும் மனைவியும் ஊரை வளைத்துப்போட்டு ஆட்டம் ஆடினால் கடைசி காலத்திலேயே நிம்மதியா தூங்க முடியாதுதான்.

இந்த ஜகஜால கில்லாடி திரிபாதிக்கும், கரும(ம்)ராஜ் க்கும் அம்மா ஆப்பு வச்சுட்டா புண்ணியமா போயிரும். அம்மா செய்வீங்களா?.......சவுக்குக்கு! அடிச்சு நொறுக்கு!!
Quote
 
 
+22 #9 Jeavudeen 2012-06-22 16:21
சவுக்கு, இது போல் LPG வினியோகத்தில் Distributors செய்யும் அடாவடியை எழுதவும். என்னிடம் நிறைய details உள்ளது. சவுக்கு கண்டிப்பாக எழுதவும்.
Quote
 
 
+17 #8 SARUBALA 2012-06-22 13:16
காமராஜ் இன்னும் ஏன் கைது செய்யப்பட வில்லை??????? உங்களுக்கு தெரியுமா சவுக்கு சார்.......
Quote
 
 
+22 #7 Suresh Balaji 2012-06-22 12:38
ஜெயலலிதாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால், திரிபாதியை கன்னியாக்குமரிய ில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வாட்ச்மேனாக ஆக்கி விடுவார் என்பது திரிபாதிக்கு நன்கு தெரியும்.

:லொல்: :லொல்: :லொல்:

Super Savukku.... :lol:
Quote
 
 
+21 #6 A savukku Admirer 2012-06-22 12:18
மதிபிற்குரிய சவுக்கு ஆசிரியர் அவர்களுக்கு, இதே போன்று கடலூர் நகர சார் பதிவாளார் பதிவு மோசடி புரிந்து இதே போன்று காவல் துறையில் புகார் செய்யப்பட்டு , முதல் தகவல் அறிக்கை கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மோசடி நபரும் இதே போன்று முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டுமென்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . சவுக்கைப்போல புலன் விசாரண்ஃஐ செய்ய இயல்வில்லை. ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விவரங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன ். இது குறித்து அனைத்து ஆவண ஆதாரங்களையும் பார்த்தால் இப்படியெல்லாம் கூடவா துணீந்து ஏமாற்றுவார்கள் அன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
Quote
 
 
+13 #5 jagankovai 2012-06-22 10:46
சவுக்கு உஙக சவுக்கடி தொடர வாழ்த்துக்கள்.....
Quote
 
 
+20 #4 பின்னை.சங்கர் 2012-06-22 10:30
நல்ல புலனாய்வு கட்டுரை அண்ணா. ஆனால் எந்த செய்தியை வெளிக்கொண்டு வந்தாலும்,அரசு நிர்வாகம் எருமை மாட்டின் மீது மழை பொழிந்தது போல் உள்ளதே என்ன செய்வது?
Quote
 
 
+12 #3 Jagadesan 2012-06-22 10:19
'இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், மாலினி கம்பானி 07.02.1980 அன்று இறந்து விடுகிறார். அவரது கணவர் மகேந்திர குமார் கம்பானி 26.08.1997 அன்று இறந்து விடுகிறார். இப்படி இறந்து போன இந்தத் தம்பதியர் தனலட்சுமிக்கு 12.04.2007 அன்று அதிகாரப்பத்திரம ் எழுதித் தருகிறார்களாம்.. … எப்படி இருக்கிறது ?'
- நல்லா இருக்குது.
Quote
 
 
+60 #2 பன்னிக்குட்டிராமசாமி 2012-06-22 10:07
ஏன்டா சொரி புடிச்ச மொன்ன நாயிங்களா, உங்களவிட ஒடம்பவித்து பொழைக்கிறவ எவ்வளவோ தேவலாம். எங்கயோ கொழுத்து வேல செஞ்சுட்டுருந்த கம்முனாட்டி எல்லாம் இன்னைக்கு தொழில் அதிபருகள். ஏண்டா...... எப்ப பாத்தாலும் எருமச் சாணிய மூஞ்சில அப்புண மாதிரியே வச்சுக்கிட்டு , நீ செய்ற வேலையாடா இது, இதுல வேற ................ துறையின் இணை இயக்குநராகவும், .................கூடுதல் இயக்குநராகவும் பணி, டே மானங்கெட்ட காமராஜ், தீஞ்ச மண்டையா, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டாடா. பத்து பைசா பீல கிடந்தாலும் நாக்க போட்டு நக்கி எடுக்கிற புத்தி உங்கள விட்டு போனாதாண்டா இந்த நாடு உருப்படும்.
Quote
 
 
+40 #1 அழகன் 2012-06-22 09:56
வெல்டன் சவுக்கு..உன்னை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை...அன்பு
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 125 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8557
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week29756
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month232488
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12754607