|
திமுகவினர் மீது தொடரும் வழக்குகளைக் கண்டித்து சமீபத்தில் முகநூலில் சவுக்கு ஒரு கருத்து வெளியிட்டிருந்தது. அந்தக் கருத்து.. …
“மின் கட்டணமும், பேருந்துக் கட்டணமும், பால் விலையும் உயர்ந்தபோது மறியல் செய்து சிறை நிரப்பாத திமுக, வீரபாண்டி ஆறுமுகத்தையும், இதர திமுக ரவுடிகளையும் கைது செய்கையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகிறது. வீரபாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படக் கூடாதென்றால், தமிழகத்தில் வேறு யாரையுமே கைது செய்ய முடியாதே... ? திமுக என்ற கட்சி மக்களுக்கா இருக்கிறதா திமுக ரவுடிகளின் பாதுகாப்புக்கா ?”
அதற்கு நண்பர் யுவகிருஷ்ணா இப்படி ஒரு பதிலை எழுதியிருந்தார்.
“Yuva Krishna” ஆட்சி மாறி ஒன்றரை வருஷம் ஆவப்போவுது. இன்னும் திமுகவையே நொட்டிக்கிட்டு திரியுது நம்ம சவுக்கு. அதிமுக பக்கம் சவுக்கை திருப்பினா சங்கை நொங்கிடுவாங்கன்னு தெரியாத லெவலுக்கு அப்பாவியா என்ன நம்ம சவுக்கு. ம்ம்.. இதெல்லாம் ஒரு பொழைப்பு.. :-( "
சமூக வலைத்தளங்கள் இன்று கணினி அறிவுபெற்றோரின் வாழ்வில், ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக வளர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. க்ரீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு இத்தகைய சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவியாக இருந்தன என்பதை விட, அதை அந்த நாடுகளில் பயன்படுத்துபவர்கள், சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள்.
தமிழ்ச் சூழலில் இத்தகைய சமூக வலைத்தளங்கள் சமூகப் பயன்பாட்டுக்குப் பயன்படுவதை விட, தனிமனித துதிபாடல்கள் அல்லது மோசமான வசைபாடல்களுக்கே பயன்பட்டு வருகிறது என்பது வேதனையான விஷயம். மக்களுக்காக பணியாற்றுவோர், மக்கள் பிரச்சினைகளை எடுத்து போராடுவோர், அவர்களுக்காக வழக்கு போடுவோர், அமைப்புகள் ஆகியவை இத்தளங்களை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பொது நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பதையும் தாண்டி, பலரின் திருமண அழைப்புகளே இது போன்ற தளங்களில் நடத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக தொடர்பு அற்றுப்போன நண்பர்களோடு தொடர்பு கொள்ளவும், பிரிந்தவர் கூடவும் இவ்வலைத்தளங்கள் பயன்படுகின்றன.

தமிழ்ச்சூழலில் இவ்வலைத்தளங்களின் பயன்பாடு மிகவும் வேதனையளிப்பதாகவே இருக்கிறது. சமூக அவலங்களை புகைப்படங்களாகவும், செய்திகளாகவும் மற்றவர்களோடு பகிருபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவதூறு செய்வதையே அன்றாட வேலையாகக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவை ஒருபக்கம் என்றால், சாதிப்பெருமை பேசுவதற்கும் இவ்வலைத்தளங்கள் பெரிய அளவில் பயன்படுகின்றன.
இத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப்படும் பொருட்கள், சாதி, ஈழம், பெண்கள். தலித்துகளுக்கான ஆதரவு நிலைபாடும், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைபாடும் கடுமையாக விவாதிக்கப்படுகின்றன. ஈழம் குறித்த விவாதங்கள், பல்வேறு அரசியல்கட்சிகளின் நிலைபாட்டை குறை சொல்வதாகவும், அமைகின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே. கருத்துப்பரிமாற்றமும், விவாதங்களும் நம்மைப் பண்படுத்துவதற்காகவே… …
ஆனால், ஒரு சிலரின் விவாதங்கள், நாகரீக சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக உள்ளன. பார்ப்பனீயம் சாதிக் கட்டமைவை நிறுவி அதைக் காப்பாற்றியது என்பதும், பார்ப்பனீயம் கண்டிக்கப்பட வேண்டியது என்பதும் மறுக்க முடியாதது. அதே நேரத்தில் ஒருவர் பிறப்பால் பார்ப்பனராக இருந்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை இழித்துப் பேசுவதும், நீ பார்ப்பான் எனச் சாடுவதும், பிறப்பால் தலித்துகளை இழித்துப் பேசுவதற்கு ஒப்பானதே. இது போன்ற பார்ப்பனச் சாடல்கள் இச்சமூக வலைத்தளங்களில் நிரவிக் கிடக்கின்றன. ஒரு மனிதனின் செயல்பாடுகளை வைத்து மட்டுமே அவனை அளவிட முடியும். பிறப்பாலும், தோற்றத்தாலும் அவனை அளவிடத் தொடங்கினோமேயானால், அதற்கு யார்தான் தப்ப முடியும் ?
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்ட ளைக் கல்” என்கிறார் வள்ளுவர்.
சாதி உணர்வையும், சாதித் திமிரையும், சாதிப்பாசத்தையும் நாம் சாடவேண்டுமா என்றால் நிச்சயம் சாடியே தீர வேண்டும். சாதியற்ற சமூகம் அமைய வேண்டும் என்று விரும்புவோர் இதை மறுக்கமாட்டார்கள். ஒருவர் சாதிப்பாசத்தோடோ, மற்ற சாதியின் மீது வெறுப்போடோ நடந்து கொள்கிறார் என்றால், அதை கண்டித்தே தீர வேண்டும். ஆனால் பிறப்பால் ஒருவர் ஒரு சாதியில் பிறந்து விட்டார் என்பதற்காகவே அவரைச் சாடுவது என்பது சாதீய மனோபாவமே ஆகும்.
ஒரு கவிஞரோ, ஒரு ஓவியரோ, வேறொரு படைப்பாளியோ ஏதாவது தலித்துக்கு எதிராக பொருள்படும்படி ஒரு கருத்து சொல்லிவிட்டால், அவரை கடித்துக் குதறி, அக்கு அக்காக பிரித்து, அவர் பின்புலத்தையும் அவர் குடும்பத்தினரையும் இழுத்து, முகநூலில் நடக்கும் விவாதங்கள் குமட்டலை வரவழைக்கத் தக்கன. சாதி மறுப்பு என்பதும், சாதி ஒழிப்பு என்பதும் பேச்சிலா இருக்கிறது ? செயலில் இருக்க வேண்டாம் ? நேரத்தை செலவழித்து மாங்கு மாங்கென்று நிலைச் செய்திகளும், பின்னூட்டங்களும் போடுவதால் சாதி ஒழிந்து விடப்போகிறதா என்ன ? அப்படியே நாம் விவாதிக்கிறோம் என்றே வைத்துக் கொண்டாலும், அந்த விவாதங்கள் நாகரீகமாக இருக்க வேண்டாமா ?
ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேயே தலித்துகள் கடவுள்களாகி விட மாட்டார்கள். அவர்களும் மனிதர்களே… மற்றவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் அதே வேளையில், தலித்துகள் செய்யும் தவறையும் சுட்டிக் காட்ட வேண்டியது நியாய உணர்வுள்ள அத்தனை பேரின் கடமை. ஆனால் தலித்துகளில் யாராவது ஒருவர் செய்த தவறை முகநூலில் சுட்டிக் காட்டியவர்கள் தொலைந்தார்கள். அதிலும் அவர் பார்ப்பனராக இருந்தால் … … சொல்லவே வேண்டியதில்லை.
ஒரு கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல், அவர் பிறப்பைச் சுட்டிக்காட்டிச் சாடுவது எந்த வகையிலான ஜனநாயகம் ? இவ்வாறு பிறப்பைச் சுட்டிக்காட்டியோ, அல்லது அந்தக் கருத்தை எதிர்கொள்ளாமல் அவர் மீது முற்சாய்வு (Prejudice) குற்றச்சாட்டைச் சொல்லுவதோ, அக்கருத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்பதைத்தானே காட்டுகிறது ?
முகநூலில் இருந்த பெண் கவிஞர் ஒருவர், தற்போதெல்லாம் முகநூலுக்கு வருவதே அச்சமாக இருக்கிறது என்கிறார். அங்கே நடக்கும் குழாயடிச் சண்டைகள் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது என்பதால், தான் முகநூலிலிருந்து விலகியே இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
சமீபத்திய சர்ச்சை லீனா மணிமேகலை என்ற கவிஞர் டாடா நிறுவனத்துக்காக பழங்குடிப் பெண்களுக்காக டாடா நிறுவனம் பாடுபடுவதாக எடுக்கப்பட்ட ஆவணப்படம் பற்றியது. இயற்கை வளங்களை சூறையாடுவதற்குத் தடையாக இருக்கும் பழங்குடி மக்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் டாடா நிறுவனம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்நிறுவனத்தின் கையாளாக லீனா செயல்பட்டிருக்கிறார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. அதற்காக லீனா மணிமேகலை விமர்சனம் செய்யப்படக் கூடியவரா என்றால் நிச்சயம் செய்யப்படக்கூடியவரே. அதற்காக, அவர் மீது பாலியல் ரீதியான அவதூறுகளை அள்ளி வீசுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா ?
இது குறித்து முகநூலில் உள்ள ஒரு நிலைச்செய்தி
“உன் முற்போக்கு ஊளைச் சத்தத்தை விட தன் குழந்தையின் பாலுக்காக நெடுஞ்சாலை புளிமரத்தடியில் தன்னை 20 ரூபாய்க்கு விற்றுக் கொள்கிற ஏழைத் தாய் மேலானவள்”

இதுவா விமர்சனம் ? இதற்கு 93 லைக்குகள் வேறு.. !!! போலிக் கம்யூனிச வேஷம் போட்டுக் கொண்டு கார்ப்பரேட்டுகளின் முகவர்களாகச் செயல்படுபவர்கள் அம்பலப்படுகையில் நாம் ஏன் அவர்களை உதாசீனப்படுத்தி, புறக்கணிக்கக் கூடாது ? அந்தப் புறக்கணிப்பை விடவா அவதூறு வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தி விடும் ? இதுபோன்ற அவதூறுகள் லீனா மணிமேகலையை சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் ஆக்கி விடாதா ?
இதைத்தானே கார்ப்பரேட்டுகள் விரும்புகிறார்கள் ? முற்போக்குச் சக்திகள் ஒன்றுபட்டு விடக் கூடாது என்பதைத்தானே கார்ப்பரேட்டுகள் உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள் ? இந்தியாவையே சூறையாடும் பொது எதிரியான கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பதில் நம் குரல் ஒற்றுமையாக ஒலிக்க வேண்டாமா ? நமக்குள் நடக்கும் குழாயடிச் சண்டைகளை கார்ப்பரேட்டுகள் எவ்வளவு விருப்பத்தோடு ரசிப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இன்றைய தாராளமய பொருளாதார உலகில் கார்ப்பரேட்டுகள் நுழையாத இடமே இல்லை. எது சரி, எது தவறு என்பதற்கான எல்லைகள் மங்கி வருகின்றன. கருப்புப்பணம் எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கிறது. தோழர் அருந்ததி ராய் எழுதியிருந்த முதலாளித்துவம் ஒரு பேய்க்கதை என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“1957இல் ராக்பெல்லர் அறக்கட்டளை இரமோன் மகசேசே விருதை ஆசிய நாட்டின் சமூகத் தலைவர்களுக்கு வழங்குவதற்கென ஏற்படுத்தியது. இரமோன் மகசேசே என்பவர் பிலிப்பைன்சு நாட்டின் அதிபராக இருந்தவர். இவர் ஆசியாவில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்கான செயல்பாடுகளில் அமெரிக்காவின் அடியாளாகச் செயல்பட்டவர். 2008ஆம் ஆண்டு போர்டு அறக்கட்டளை, பல துறைகளில் சிறப்பாகப் பணிபுரிபவர்களுக்கென்று மகசேசே விருது வழங்கத் தொடங்கியது. இந்தியாவில் கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர் ஆகியோரிடையே மகசேசே விருது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எம்.எஸ். சுப்புலட்சுமி, சத்தியஜித்ரே, செயப்பிரகாஷ் நாராயணன், சிறந்த ஊடகவியலாளரான பி. சாய்நாத் முதலானோர்க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மகசேசே பட்டத்தால் கிடைத்ததைவிட, இவர்கள் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய் துள்ளனர்.”
இந்து நாளிதழில் பணியாற்றும் தோழர் பி.சாய்நாத்தின் செயற்பாடுகளைப் பற்றி நம் அனைவருக்கும் நன்கு தெரியும். பெரு முதலாளிகள் ஊடகங்களை எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது குறித்தும், விவசாயிகளின் தற்கொலைகள் குறித்தும், சாய்நாத்தைப் போல யாராவது ஆய்வு செய்து உழைத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். மகசேசே விருது பெற்றார் என்ற ஒரே காரணத்துக்காக நாம் சாய்நாத்தைப் புறக்கணிக்க முடியுமா ? ஆனால் அதே நேரத்தில் சாய்நாத்தும், லீனா மணிமேகலையும் ஒன்றல்ல. ஆகையால் லீனா மணிமேகலை விமர்சனத்துக்கு உட்பட்டவரே.. …. அவரை விமர்சனம் செய்கையில் பண்பைக் கடைபிடிக்காவிட்டால், அந்த விமர்சனம் நீர்த்துப் போவது மட்டுமல்ல… அது விமர்சித்தவர்களையே திருப்பித் தாக்கும்.
இந்த அவதூறுகளையும், வசைச்சொற்களையும் பார்க்கும் போது, நமக்குள் இவ்வளவு குரோதமா … … இவ்வளவு வன்மையா ….. இவ்வளவு அநாகரீகமா … …. என்றே கேட்கத் தோன்றுகிறது.
வன்முறை என்பது மற்றொருவரை தாக்குவது மட்டுமல்ல.. … இது போன்ற வசைச்சொற்களை வன்முறையோடு வீசுவதும் வன்முறையே. தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வன்முறை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்
“So we are examining together this living thing, which is you, life, whatever that is; that means we are looking at this phenomenon of violence, first at the violence in ourselves and then at the outward violence. When we have understood the violence in ourselves then it may not be necessary to look at the outward violence, because what we are inwardly, we project outwardly. By nature, through heredity, through so-called evolution, we have brought about this violence in ourselves. That is a fact: we are violent human beings.”
நமக்குள் இவ்வளவு வன்முறையை வைத்துக் கொண்டு, குஜராத்தின் நரேந்திர மோடியையும், ராஜபக்ஷேவையும், அரச பயங்கரவாதத்தையும் குறை கூற நமக்கு என்ன அருகதை இருக்கிறது ?
நண்பர் யுவகிருஷ்ணாவின் கருத்துக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை சவுக்கு வாசகர்கள் அறிவார்கள். ஈழத்தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதற்கும், இந்தியாவையே சூறையாடியதற்கும் காரணமான கருணாநிதியை இன்னும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர் எப்படிப்பட்ட நபர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். சவுக்கின் நடுநிலைத்தன்மை குறித்தும் அறிவார்கள். திமுகவை இப்படித் தூக்கிப் பிடிக்கும் யுவகிருஷ்ணா, அதிமுக அரசை எதிர்த்து என்ன செய்து விட்டார் ? அதிமுக அரசுக்கு எதிராக நடக்கும் எந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் ? அதிமுக அரசுக்கு எதிராக எத்தனை வழக்குகள் போட்டிருக்கிறார் ? குறைந்தபட்சம் வரும் ஜுலை 4 அன்று திமுக நடத்தும் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்வாரா ?
குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு முகநூலில் நிலைச் செய்திகள் போடுவதையே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்ளும் இவரைப் போன்ற முகநூல் புரட்சியாளர்களுக்கும், கோயிலில் மணியாட்டிக் கொண்டு கடவுளிடம் பேசுவது போல மந்திரம் ஓதும் புரோகிதருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இவர் முகநூலில் நிலைச்செய்தியிடுவதால் பெரிய கடமையாற்றுகிறோம் என்று நினைத்துக் கொள்கிறார். புரோகிதர் மந்திரம் சொல்லி கடவுளோடு பேசுகிறோம் என்று நினைத்துக் கொள்கிறார். இவ்வளவுதான் வேறுபாடு.
|
Comments
அதன் வரலாற்று கூறுகளை "தமிழ்" என்ற வார்த்தையை உச்சரிக்காமலேயே இந்தியாமுழுவதும ் உள்ள அதனுடன் பின்னிப்பிணைந்த பீகாரிகள், செளராஷ்டர்கள், சட்டிஷர்கள், மராட்டியர்கள் போன்றவர்கள் அவர்கள் கோணத்தில் பிரதிபலிக்க வேண்டும்.
சாலமன் கதையில் வரும் தாய்- குழந்தைப்போல், "ஆ ஊ" என்று வெளிப் பூச்சுக்கு ஆர்ப்பாட்டம் செய்பவளைவிட உள்ளத்தில் உண்மையான அன்பு செய்பவளே அக்குழந்தைக்கு உரியவள் !.
இது ஜோதிர்நாத் பூலே(மராட்டியம் ), லிங்காயத்துக்கள ்(கன்னடம்), அயோத்தி தாசர்(தமிழகம்) ஆகியோர் மூலம் கன்னடரான பெரியார் ஈவேரா மூலம் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
அப்போது மார்டிம் வீலர், போப் கால்டுவெல் போன்ற ஐரோப்பிய மொழியியல் மற்றும் அகழ்வாராய்ச்சி நிபுர்ணர்களின் செல்வாக்கை பிரிட்டிஷ் தனது நிர்வாகத்திற்கு ம், அதன் துணையான கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் பயன்படுத்தின. பிராமண எதிர்ப்பு என்பது, பெரும்பாலான இந்துத்துவ எழுச்சியை பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிராக போகாமல் பாதுகாத்தது.
தற்போது தமிழ்நாட்டின் மீது கவிழ்ந்திருக்கு ம் "சர்வதேசப் பிரச்சனை" என்பது வேறானது. இந்தியா முழுவதும் பைந்தமிழ் நாடு என்பதை "நவ காலனித்துவம்" ஏற்க மறுக்க காரணம், தற்போது புதிதாக உருவாகிவரும் "முஸ்லிம் சகோதரத்துவத்தின ்" "நவ பாகாநிஸம்(ரஷிய) " இதில் முரண்படுவதால்தா ன் !. "தமிழ்" என்பதை இலங்கை குடுமிப்பிடி பிரச்சனையின் குறிகிய வட்டத்திற்குள் கொண்டு வருவதே இதன் நோக்கம்..
..தொடரும்..
You will not get any response from Savukku and his Pseudo secular friends ( Danguvar etc..)
Boss ... more clarification needed please
Yoga has become a worldwide phenomenon and the need for quality yoga teachers is increasing. According to an article in U.S. News & World Report, about 18 million Americans now practice yoga. The average practitioner's yearly expenditure on all things yoga-instruction, mats, props, clothing, weekend workshops, books, CDs, videos-could be conservatively estimated at a ballpark $1,500. That amount times 18 million equals "$27 BILLION". But ONLY 1% INDIANS in this business, 99% are whites. This 1% also 99% are Indian Brahmins(callin g themselves Whites). In this 1% included persons like NITHYANANDA. This business competition could not be accepted by Brahmins like Arthi Rao.
BECAUSE, they interpret Hinduism in a very selfish, cruel and "CORPORATE" manner - they could not accept the truth of "natural or cosmic Law" !
They try to take the help of so called "DALITS" to defend against 99% Indians- because Dalits favour them as Industrial labours, particularly in north India sustaining their slum like living conditions in favour of "PROFIT for these CORPORATE OLIGARCHIES" as UNCONSCIOUS ZOMBIES !.
http://www.yogajournal.com/lifestyle/769
http://www.usatoday.com/money/companies/2004-08-30-yogabiz_x.htm
http://www.dailymotion.com/video/xrg9c9_aarti-rao-denial-nithyananda_news
---------------------------------------
THERE IS NO DALITS, or EVERYBODY IS DALITS !.
RAJAKUMARAPANDI YAN!, You belong to 99%...
FIGHT FOR 99%, DESTROY CORPORATE OLIGARCHY !.
பார்பனர்கள் என்று தலித் வாதிகளாலும் ...இன்ன பிற இடஒதுக்கீடு அனுபவிக்கும் BC,MBC..களாலும்...சொல்லப்படும் அந்தணர்கள் ...உங்களை விட எவ்வளவோ மேல் ..இடஒதுக்கீடு அனுபவிக்காத அவர்களுக்கு .. இடஒதுக்கீடு பெறும் எல்லா சாதியினருமே ..உங்க மொழியில் சொன்னா..தலித்துதான் ..
அவர்களுக்கு மட்டும் தான் .. இடஒதுக்கீடு சலுகை இல்லை ...வேறு எல்லாரும் இடஒதுக்கீடு அனுபவிக்கும் சாதியினர் தானே ...
நீங்க தலித் தலித் என்று எழுதவதை பார்த்தால் ..ஏதோ இவர்கள் மட்டும் தான் RESERVATION பெறுவது போலவும், இவர்களை தவிர வேறு எவரும் இடஒதுக்கீடு பெறாதவர்கள் போல தோற்றம் ஏற்படுகிறதே ...ஏன் சவுக்கு SIR..வேற யாரும் இடஒதுக்கீடு வாங்கலையா என்ன!!!!அப்படி வாங்கினால் அவர்களை(BC,MBC, DNC) DALITH-2 என்று அழைக்கலாம் தானே...
இதையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்து விட்டு ..முரண்டு பிடிக்கும் நீங்கள் தான் வன்முறையாளர் ..
//வன்முறை என்பது மற்றொருவரை தாக்குவது மட்டுமல்ல.. … இது போன்ற வசைச்சொற்களை வன்முறையோடு வீசுவதும் வன்முறையே.//
இப்படி சவுக்கு எழுதுவது என் புருவத்தை உயர்த்த வைக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிராக அதன் ஆட்சியாளருக்கு எதிராக அதன் மேல்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக சவுக்கு வீசாத வன் சொற்களா...அதன் பதிவுகளை நான் நல்லாவே படித்திருக்கிறே ன் என் நினைவுகளிலும் இருக்கிறது. அன்பை, வன்முறை இல்லாத அகிம்சையை பற்றி பேச சொன்னால் மணிகணக்காக பேசலாம் எழுத்தால் ஆனால் பிரச்சனை என்று வரும்போதுதான் அதன் வீரியம் எப்படி இருக்கும் என்று தெரியும். நம்ம ஊர் பக்கம் ஒன்று சொல்லுவாங்க முட்ட வைக்கிற கோழிக்குத்தான் தெரியும் அதன் வலி என்று..."சொல்லுதல் யாருக்கு எளியவனாம் ஆனால் சொல்லியபடி செயல் எனபது கடினம்" எனபது வள்ளுவன் வாக்கு செயல்கள் எல்லாம் இடம் கால சுழல் பொறுத்தது...இப்படி சொல்வதால் நான் பாலியல் வன் சொற்களுக்கும், அதிகார சொற்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை...
சவுக்கு எனக்கு பிடிக்கும் ஆனால் சவுக்கின் குறையை சுட்டி காட்டுவது எனது கடமை. இதுபோல கடமையைத்தான் சவுக்கும் விரும்பும். சவுக்கிடம் நான் பேசிருக்கிறேன் அதன் உணர்வு தெரியும்.
ஒரு நேரத்தில் அவரின் எரிச்சல் உச்சத்திற்கு போய் அவர் நண்பர் லிஸ்டில் இருந்தே என்னை நீக்கிவிட்டார் நீக்கினாலும் பராவில்லை அவர் பதிவுகள் என் கண்ணில் மட்டும் பட கூடாது என்று முழுதாய் நீக்கிவிட்டார். அப்படிபட்ட நபர்தான் இப்போது உங்களை வசை பாடுகிறார். குற்றம் உள்ள நெஞ்சுதான் குறு குறுக்கும்..."உன் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ கருத்து சொல்வதற்கான உரிமையை உனக்கு பெற்று தருவதற்காக நான் போராடுவேன்" என்று பிரஞ்சு புரட்சிக்கு வித்திட்ட வால்டேர் சொன்னது. அப்படிபட்டவர் சொன்னதை எல்லாம் யுவா படித்தாரோ இல்லையோ என்று தெரியவில்லை...சீப்பை எடுத்து வைத்தால் பொண்ணு கல்யாணம் நின்னுடும் என்று ஒரு கிறுக்கன் ஐடியா சொன்னானாம். அதுபோலத்தான் இருக்கு எனக்கும் , சவுக்குக்கு கொடுக்கும் ம்ர். மட்ரச் யுவாவின் பதில்...
மிக மோசமான உதாரணம். அந்த மந்திரங்கள் ஒவ்வொண்றும், உலக மக்களின் நண்மையை உத்தேசித்தே என்பது, நெட்டில் தட்டினாலே கிடைக்குமே.
சவுக்கு, ஆராயாமல் இப்படி ஒரு வாக்கியத்தை எல்லாரும் போடுவது போல போட்டால், நீங்களும் கால்டுவெல்லோட நிழலில் இருப்பவர் தாம் என்ற எண்ணம் ஏற்ப்படுகிறது.
ஹார்ட் என்பவரின் ஆராய்ச்சி கட்டுரை (திராவிட கட்சிகள் பிறக்கும் முன்பு தொகுக்கப் பட்டது), தமிழ் நாட்டில் (அப்படி ஒன்று மொழிவாரி மாகாணங்களான பிறகு) வழி வழியாக இருப்பதை பதிவு செய்ய பட்டுள்ளது. திருக்குறள் உட்பட எதிலும் இல்லாத தமிழ்நாடு, தமிழர், இப்படி சாதி தோற்றத்தை ப்ராமணர்களின் வசதிக்காக ச்ருஷ்ட்டித்தார ்கள் என்று கூறுவது முரட்டு தனம்.
ஹார்ட் ஒரு சிரு உதாரணம் தான்.
http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE&feature=related
You belive.. throw "MONEY" on Tamilnadu Tamils, like Hill country Tamils "They suck your cocks"!.
I will tell you you meet 100 Mulliyavaikals...
Like "Kannadasan said", " இரண்டு மனம் வேண்டும், இந்தியனாக ஒரு மனம், தமிழனாக ஒரு மனம்" , ஆனால் இலங்கைத்தமிழனாக என்றுமே வேண்டாம் ஆண்டவனே !.
யொஉ பெலிவெ.. த்ரொந் "மோணேய்" ஒன் டமில்னடு டமில்ச், லிகெ ஹில்ல் சொஉன்ட்ர்ய் டமில்ச் "தெய் சுச்க் யொஉர் சொச்க்ச்"!.
ஈ நில்ல் டெல்ல் யொஉ யொஉ மேட் 100 முல்லியவைகல்ச்...
ளிகெ "கன்னடசன் சைட்", " இரண்டு மனம் வேண்டும், இந்தியனாக ஒரு மனம், தமிழனாக ஒரு மனம்" , ஆனால் இலங்கைத்தமிழனாக என்றுமே வேண்டாம் ஆண்டவனே !.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், 29.06.2012 ஐரோப்பிய GTV தொலைக்காட்சியில ் "இந்தியா முழுவதும் பைந்தமிழர் நாடு என்று அழைக்கப்பட்டதாக வும், அதை மேற்குவங்க ஜோதிபாசு, பீகார் டாக்டர் அம்பேத்கார், பெஷாவர் மற்றும் ஆப்கானிஸ்தானிலு ம் இதை ஆமோதிப்பதாக கூறியிருந்தார்".
இதைதான் இந்திய நிர்வாகமும், சுயநலமாக ஆட்சியில் அமர்ந்திருக்கும ் இலங்கை சிங்கள பெளத்தர்கள் என்ற சுயநலமிகளும் ஏற்றுக்கொள்ளவில ்லை. இதுதான் 2009 படுகொலைக்கு காரணம்.
ஆனால் இலங்கைத்தமிழர்க ளும் இந்த சுயநலத்தின் பங்குதாரர்களே!. கன்னடம், மலையாளம், போன்று "தமிழ்" அடையாளம் பரிணமிக்கமுடியா த காரணம், சிங்கள - இலங்கைத்தமிழ் குடிமிப்பிடி சண்டையை "தமிழினப் பிரச்சனையாக" சித்தரிப்பதுதான ். இந்தியாவில் சிங்களவர்கள் இல்லை, அவர்கள் தரப்பு வாதத்தை "வெளிநாடு" என்ற ரீதியிதான் இந்தியாவில் புரிந்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும் !
ஐம்பது வருடம் கோமாவில் கிடந்து கண் முழித்த
மனிதர் எப்படி பேசுவாரோ அப்படி பேசுகிறார்.இது தப்பில்லை.
கடைசியில் அந்தணர்களை,அரசன ுக்கு அடுத்ததாக வைத்துவிட்டார்.இதை அவாள்கள் எப்படி ஜீரணிப்பார்களோ?
இருந்தாலும் வருண வரிசையை மாற்றுவதற்கு எந்த தமிழனுக்கும் உரிமையில்லை.என்பதை பொதுத்தமிழன் அறிவாராக!
என்னுடைய தனிப்பட்ட கைப்பேசி எண்ணை தன்னுடைய பின்னூட்டங்களில ் தந்து தன்னுடைய அல்லக்கை பொறுக்கி வாசகர்கள் என் மீது ஆபாசமாக வசைபாட களம் அமைத்துத் தந்த சவுக்கு இன்று அகிம்சை பேச ஆரம்பித்திருக்க ிறது. பின்னே, வன்முறை பேசினால் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிட மாட்டார்களா.. இப்போ என்ன கலைஞரா ஆட்சியில் இருக்கிறார்?
சவுக்கு டாட்டு நொட்டு போன்றவர்கள் அம்மணமாக அம்பலப்படுவதற்க ாகவே அம்மா ஆட்சிக்கு வந்ததை எண்ணி மகிழ்கிறேன் :-)[/ஃஉஒடெ]
மிக கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி, தங்களின் தரத்தை உலகறிய செய்துவிட்டீர்க ள் யுவ கிருஷ்ணா...,
தங்களது சமீபத்திய இடுகைகூட (ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.லுச்க்ய்லோகொன்ல ினெ.சொம்/) உங்களின் மனம் அறிய செய்கிறது...,
Quoting தார் குச்சி:
- i don't see anything wrong here. தமிழ் திரைப்பட பாடல்களில் வரும் வர்ணிப்புகளை விட இது ஒன்றும் நாகரிகம் தாழ்ந்து விடவில்லை
தனது தனிப்பட்ட கைப்பேசி இலக்கத்தை பின்னூட்டங்களில ் இட்டதைப்பற்றி அவர் சவுக்கை குறை கூறுவது மிகவும் பிழையானது. ஏனெனில் கைப்பேசி இலக்கத்தை பின்னூட்டங்களில ் இட்டு மற்றவர்களை வம்புக்கு இழுத்தது அவரேதான்.
இப்போது தமிழ் இணைய நடவடிக்கைகளில் பொதுவாக காணப்படுகின்ற ஒரு பிரச்சினையை சவுக்கு கட்டுரைபடுத்திய ிருப்பது நல்ல விடயம். அதேவேளை ஒரு தனி நபரின் நடவடிக்கைகளை குறிப்பிட்டு அவருக்கு தேவை இல்லாத முக்கியத்துவத்த ை சவுக்கு வழங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.
பணம் சம்பாதிப்பதற்கு ஆயிரம் வழி இருக்கு , ஆயிரம் தொழில் இருக்கு உங்களுக்கு ஏன் இந்த பிழைப்பு .( என்னானே தெரியல இப்ப எல்லாம் கருணாநிதியின் புகழ் யாராவது பாடினாலே பணத்திற்காக இருக்குமோ நு நெனைக்க தோணுது , ஜெ ஜெ புகழ் பாடுபவர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன் )
///தன்னுடைய அல்லக்கை பொறுக்கி வாசகர்கள் என் மீது ஆபாசமாக வசைபாட களம் அமைத்துத் தந்த சவுக்கு இன்று அகிம்சை பேச ஆரம்பித்திருக்க ிறது. ///
என்ன பேச்சு இது உங்களுக்கு பிழைப்பே எழுத்து தான் வாசகர்களை பொருக்கி நு சொன்னா எப்படி .
Dear சவுக்கு
இவருக்கு பொருத்தமா ஒரு திருக்குறளை கருணாநிதி உரையோடு போடவும்
எனக்கு 7- 8 வயது இருந்தபோது, என் தாத்தா கிராமத்தில் பரத்தெரு ஒன்று இருந்தது உண்மைதான் அவர்களுக்கு தனியான தட்டில் சாப்பாடு போட்டது உண்மைதான். ஆனால் பரத்தெரு வீடுகளுக்கு என்னை தூக்கி சென்று அங்கே நான் விளையாடுவதை என் ஆத்தா தடுக்கவில்லை. 1970 களில் 10 வயதானபோது தாத்தா வீட்டில் முற்றத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட, முக்கியமான "மன" மாற்றம், சமபந்தி போஜனம் எல்லாம் "இயற்கையாகவே" ஏற்ப்பட்டாகிவிட ்டது. ஆனால் அடுத்த 5 வருடங்களில் என் வயதை ஒத்த தலித்? நண்பர்கள் நட்பாக இருக்க வயதுக்கு இளைய சில அமைப்புகளில் சேர்ந்தவர்கள் என்னை டேய் என்றனர்.
சென்னையில் என் அப்பா வீடு வாங்கி என் கல்லூரி நண்பர்களான தற்போதைய தலித் தலைவர்(அப்போது 20 வயது) அவருடைய நண்பர் தற்போதைய நீதிபதி ஆகியோருடன் என் வீட்டில் அழைத்து எப்படி பழகினேன் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஒருவர் என் வீட்டருகில் வாடகை வீட்டில் குடிபெயர்ந்தார் பிறகு, படிப்படியாக என் சொத்துக்கள் அழிந்து அவர்களுடைய "BANK BALANCE" பன்மடங்காக அதிகரிக்க, என்னை உத்காரவைத்துகூட பேசாமல் தீண்டத்தகாதவனாக ஆக்கினார்கள். சுலபமாக நசுக்கும் அளவுக்கு பலவீனம் அடைந்த என்னைப்போன்றவர் கள்தான் தலித் எதிரிகள்.
ஆனால் உள்ளே பூணுல் வெளியே கோட் டையுடன் "மேற்கத்திய சர்ச்" பாணியில் உள்ள அலுவலகத்தில் "டேய் நாயே" என்று கூறி சம்பளம் கொடுப்பவர் "கார்ப்பரேட் முதலாளி" மதிப்புக்குறிய ஆண்டே!.
FIGHT FOR 99%, DESTROY CORPORATE OLIGARCHY !.
1. ஜாதி மறுப்பில் நம் அணுகுமுறை சரியானதா?
2. வலைத்தளத்தை தமிழர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்களா?
3. வன்முறையை வலைத்தளத்திலும் நாம் வளர்க்கின்றோமா?
4. பன்னாட்டு நிறுவனங்கள் மறைமுகமாக நம்மை எந்த அளவுக்கு ஆள்கின்றனர்?
5. நம்மில் எத்தனைப் பேர் தெரிந்தோ தெரியாமலோ இந்த பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக செயலபட்டுக் கொண்டிருக்கிறோம ்.?
6. வலைத்தளத்தில் மட்டுமே தம் வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் எத்தனை பேர் செயல்வீரர்களாகத ் தயாராகிறார்கள்?
7. "விர்சுவல் வேர்ல்ட்" ல் மட்டும் வாழும் கருத்துக் கந்தசாமிகளின் நிஜ முகம் என்ன?
இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதிவே போடலாம்.
சவுக்கு கேட்ட கேள்விகள் எல்லொருக்குமானத ு.
ஆனால் கடைசியில் அவர் யுவகிருஷ்ணா என்கிற ஒரு தனி நபரை குறிப்பிட்டு சொல்லி இந்த பதிவே அவருக்காக போடப்பட்டது போல முடித்திருக்க வேண்டாம்.
உண்மையில் சவுக்கு யுவகிருஷணாவை ஒரு குறியீடாகத்தான் பயன் படுத்தியிருப்பா ர் என்று நினைக்கிறேன். அது தேவையில்லாதது.
யுவக்கிருஷனா ஒரு தனி மனிதர். அவருக்குத் தன்னுடைய சார்பு நிலைப்பாட்டிற்க ு முழு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் கருத்துக்களை தெரியப்படுத்த முழு உரிமையுண்டு. அவர் இந்த வலைத்தளத்தின் மூலம் மட்டுமே புகழ் பெற விரும்பி கடுமையாக உழைப்பவர் போலும்.
அவரை நீங்கள் பொருட்டாக மதித்து அவருடைய நோக்கத்தை பூர்த்தி செய்துவிட்டீர்க ள்.
அவர் உங்களைப் போன்ற போராளி இல்லை.
ஜுலை 4ம் தேதி அவர் சிறைக்கெல்லாம் செல்லமாட்டார்.
அவர் வெறும் கருத்தாளர் மட்டுமே.
இருந்துவிட்டு போகட்டுமே..!
இந்த வலைத்தளத்தில் இவர் போல சுமார் 10 கோடி பேர்கள் இருக்கிறார்கள். கணினியை அணைக்கும் போது இவர்களூம் மறைந்து போவார்கள். மறக்கப்படுவார்க ள்.
அனால் களமிறிங்கி போராடுவோர் மறக்கப்படுவதில் லை.
தொடருங்கள் உங்கள் பயணத்தை...!!!
வாழ்த்துக்கள்.
savukku - you are such a hypocrite!
இந்த வரிகளின் அவசியம் என்ன என்பது புரியாத புதிர். வேண்டுமானால் சவுக்கின் "அல்லக்கை"களான (thanks yuvakrishna) டங்குவாருக்கும் வால்டருக்கும் வேண்டுமானால் காதில் இன்பத்தேன் பாயும் போலும்.
yes danguvaar - start your music I'm listening.
what a farce.
நீங்கள்தான் ஏதோ பெப்சி உமா ரேஞ்சுக்கு உங்களை கற்பனை செய்துகொண்டு "இதுதான் என் போன் நம்பர். தைரியம் இருந்தால் வாதாடுங்கள்" என்று அப்போ எழுதியது. இப்போ "ஐயோ, சூடா இருக்குன்னு தெரியாம இதமா இருக்கும்னு ஆப்பை சொருகிகிட்டேனே இதுக்குக்கு காரணம் சவுக்குதாநே"ன்னு பேசறீங்க.
Quoting யுவகிருஷ்ணா:
என்னுடைய தனிப்பட்ட கைப்பேசி எண்ணை தன்னுடைய பின்னூட்டங்களில ் தந்து தன்னுடைய அல்லக்கை பொறுக்கி வாசகர்கள் என் மீது ஆபாசமாக வசைபாட களம் அமைத்துத் தந்த சவுக்கு இன்று அகிம்சை பேச ஆரம்பித்திருக்க ிறது. பின்னே, வன்முறை பேசினால் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிட மாட்டார்களா.. இப்போ என்ன கலைஞரா ஆட்சியில் இருக்கிறார்?
சவுக்கு டாட்டு நொட்டு போன்றவர்கள் அம்மணமாக அம்பலப்படுவதற்க ாகவே அம்மா ஆட்சிக்கு வந்ததை எண்ணி மகிழ்கிறேன் :-)[/ஃஉஒடெ]
என்னங்க யுவா, எரியுதா? தப்பு பண்ணிட்டு கதை வசனம் பேசும் "கொலைங்கரை" (துரோகியை) விட ஜெயா என்னும் எதிரி எவ்வளவோ மேல். நாங்க அம்மணமா இருக்கோம்னு நீங்க சொல்றது காமெடி யுவா. உங்க மஞ்சள் துண்டு துரோகி, எங்கள் தமிழினத்தையே அம்மணமாக்கி சோனியா முன் நிறுத்த துடிக்கிறார். அவருக்கு நீங்கள் கூஜா தூக்கும் பிழைப்பை விட எங்கள் அம்மணம் பெரிதல்ல. எதிரி என்றுமே எதிரில் இருப்பான், ஜெயா போல. துரோகி என்றுமே பின்னால் இருப்பார் கொலைங்கரை போல.... ஆபாசத்தை பேச உங்களுக்கு தகுதி இருக்கா யுவா? வசவு வார்த்தைகள் இல்லாது உங்களால் பேச முடியுமா? கொலைஞர் எப்படி கெட்டவார்த்தை தெளிப்பாரென்று உங்களுக்கு தெரியுமா? உம்மை போல சவுக்கை நினைக்க உனக்கே சிரிப்பாக இல்லை? ஈழ அகதிகளுக்காக போராடும் அவர் எங்கே, அந்த அகதிகளின் வாழ்க்கையை சூநியமாக்கிய உங்கள் தொல்லைவன் (நீ தலைவன்னே படி மச்சி) எங்கே..... இன்னும் பேசுவேன்.... காலம் வரும்.
தன் சாதி,அல்லது சாதிக்காரர்கள் எது செய்தாலும் தூக்குவது,
மாற்று சாதி,மாற்று கருத்துள்ளவனை மானபங்கம் செய்வது,
இதுதான் நடந்துகொண்டு வருகிறது.
காய்தல் உவத்தல் இன்றி கருத்துக்களை சொல்பவர்கள் இக்கூட்டத்திலிர ுந்து விலகி ஓடவேண்டியுள்ளது .
சவுக்கு! ..... வாழ்ந்தாலும் ஏசும் ,தாழ்ந்தாலும் ஏசும்,...வானத்துக்கு கீழே
மக்கள் மட்டுமல்ல மாக்களும் வாழ்கிறார்கள்.பின்னூட்ட கருத்து யாரிடமிருந்து வருகிறது என்று உனக்கு தெரியாது.
ஆகவே, “கடமையை செய்! பலனை எதிர் பாராதே!”....கண்ணன் சொன்னது.”ஏழைக்கு எது செய்தீரோ அதை எனக்கே செய்தீர்.”-இயேசு கூறியது.
”பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுபவர்கள் மீது வானில் உள்ளவனும் இரக்கம் காட்டுவான்.”
முகம்மது நபி கூறியது.
இதில் எதை ஏற்று நடந்தாலும் வெற்றி உனக்கே! தொடரட்டும் உனது பணி! நல்லவேளை இதுவரை நான் முக நூலில் சேரவில்லை,கரி பூசிக்கொள்ளவில் லை.
என்னுடைய தனிப்பட்ட கைப்பேசி எண்ணை தன்னுடைய பின்னூட்டங்களில ் தந்து தன்னுடைய அல்லக்கை பொறுக்கி வாசகர்கள் என் மீது ஆபாசமாக வசைபாட களம் அமைத்துத் தந்த சவுக்கு இன்று அகிம்சை பேச ஆரம்பித்திருக்க ிறது. பின்னே, வன்முறை பேசினால் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிட மாட்டார்களா.. இப்போ என்ன கலைஞரா ஆட்சியில் இருக்கிறார்?
சவுக்கு டாட்டு நொட்டு போன்றவர்கள் அம்மணமாக அம்பலப்படுவதற்க ாகவே அம்மா ஆட்சிக்கு வந்ததை எண்ணி மகிழ்கிறேன்
கே.ஜி.ஜவர்லால்
இதயம் பேத்துகிறது.
...read this article once again and read all savukku articles regularly Vijay...
நாலு பேருக்கு நல்லது செய்யிரப்போ பத்து பASADSAகள் பதிலுக்கு ஏதாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பாய்ங்க... நீ நடத்து சவுக்கு...
RSS feed for comments to this post