முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
தென்னையப் பெத்தா இளநீரு… பிள்ளையப் பெத்தா கண்ணீரு… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 09 ஜூலை 2012 18:46

இந்தப் பாடலை யார் பாடுகிறார்கள் என்று பார்க்கிறீர்களா.. பெரும்பாலான தந்தையர் இந்தப் பாடலைப் பாடாமல் இருக்க மாட்டார்கள். சவுக்கின் தந்தை இருந்திருந்தால், இந்நேரம் “எனக்குன்னு வந்து பொறந்துருக்கு பாரு தறுதல, தறுதல.  வேலையப் பார்றான்னா சவுக்கு எழுதறேன்.. சாணி அள்ளுறேன்னு… தறுதல தறுதல” என்று கண்டிப்பாக திட்டியிருப்பார்.   எல்லா தந்தைகளும் தங்கள் குழந்தைகள் பதின்பருவத்தை அடைகையில் இப்படி திட்டத்தான் செய்வார்கள்.

இப்போது ஒரு முக்கியப் பிரமுகர் இதே போல புலம்பிக் கொண்டு தென்னையப் பெத்தா இளநீரு என்று பாடிக்கொண்டிருக்கிறார். முக்கியப் பிரமுகர் என்றால் சாதாரண பிரமுகர் கிடையாது.   மிக மிக முக்கியப் பிரமுகர். அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை முதலில் படித்து விடுங்கள்.

ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜாங்கிட்

real

படித்து விட்டீர்களா ? இதே ஜாங்கிட் தான் சோக கீதம் இசைத்துக் கொண்டிருப்பவர்.    இவர் சோக கீதம் இசைப்பதன் காரணம் இவரின் புத்திரன் விக்ரம் சங்காராம் ஜாங்கிட் தான்.   இந்த விக்ரம் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐபிஎஸ் தேர்வுக்காக தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.  

470290_227708790661147_1423561823_o

393638_179715508793809_302653276_n

என்ன இஷ்டைலா இருக்கறார்  பாத்தீங்களா ?

 ஜாங்கிட்டின் இளைய மகன் விக்ரம் ஜாங்கிட். இவர் படித்து முடித்து விட்டார். அவர் தந்தை ஜாங்கிட்டுக்கு இவரை எப்படியாவது ஐபிஎஸ் அதிகாரியாக்கி விட வேண்டும் என்று ஒரு தணியாத ஆசை.   ஐபிஎஸ் என்ற பதவியை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது ஜாங்கிட்டுக்கு அல்லவா தெரியும் ?  ஜாங்கிட் சென்னை மாநகரின் கூடுதல் ஆணையாளராக இருந்தபோது, நடந்த ஒரு சம்பவம் சுவையான சம்பவம்.

ஜாங்கிட்டின் மகன் சகாய் ஜாங்கிட், அமெரிக்கா செல்ல வேண்டும். அதற்காக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா வேண்டி விண்ணப்பித்தார். ஏதோ ஒரு காரணத்தால், அமெரிக்க தூதரகம் ஜாங்கிட் மகனுக்கு விசா வழங்க மறுத்து விட்டது.   வந்ததே கோபம் ஜாங்கிட்டுக்கு… என் மகனுக்கா விசா வழங்க மறுக்கிறீர்கள்.  உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த வஜ்ரா வாகனம் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரை வாபஸ் பெற்று விட்டார்.

404477_102757113180160_394530254_n

அமெரிக்க தூதரகம் என்ன சென்னைப் புறநகரில் பாய் வைத்திருக்கும் கசாப்புக் கடையா ?  உடனே இந்திய வெளியுறவுத் துறை செயலரிடம் புகார் கூறப்பட்டது.  வெளியுறவுத் துறை, மத்திய உள்துறைக்கு தகவல் சொல்ல, உள்துறைச் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளரிடம் தகவல் சொல்ல, உடனே வாபஸ் பெறப்பட்ட பாதுகாப்பு அத்தனையும் திரும்ப வழங்கப்பட்டது.   எந்த நாட்டுத் தூதரகமாக இருந்தாலும் அதற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை.  அதிலும் அமெரிக்க தூதரகம் என்றால் கேட்கவே வேண்டாம்.  இப்போது இல்லை.  சில ஆண்டுகளுக்கு முன், சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஒரு போலீஸ் காரரை செல்ப் லோடிங் ரைபிளோடு ஒரு சிறிய கூரை மட்டும் கொடுத்து உட்கார வைத்திருப்பார்கள்.  அதாவது தூதரகத்தை யாராவது கீழிருந்து தாக்கினால், பாலத்தின் மேலிருந்து இவர் சுட்டுக் காப்பாற்ற வேண்டுமாம்.   நமது வாகனங்களின் புகையை சுவாசித்துக் கொண்டிருக்கும் அந்தப் போலீஸ் காரரைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.  தற்போது எடுத்து விட்டார்கள்  போலிருக்கிறது.

அப்படிப்பட்ட அமெரிக்க தூதரகத்துக்கு தண்ணி காட்டுகிறார் என்றால் அது ஐபிஎஸ் என்ற அதிகாரம் தானே… தனக்கு உள்ள இந்த அதிகாரம் தன்னுடைய மகனுக்கும் கிடைக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு ?

தவறில்லைதான். இளைய மகனை ஐபிஎஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்று ஜாங்கிட் செய்த முயற்சிகள் ஒரு புறம் இருக்க விக்ரம் ஜாங்கிட்டோ உல்லாச புரியில், , “சரக்கு வெச்சுருக்கேன், எறக்கி வச்சுருக்கேன்.. கருத்த கோழி மொளகு போட்டு வருத்து வச்சுருக்கேன்” என்று பாடிக் கொண்டு, உல்லாசமாக இருப்பவர்.    

374841_102758299846708_1885902467_n

 

விக்ரம் சஜாங்கிட் தன் இஷ்டம் போல தன் வாழ்க்கையை உல்லாசமாக நடத்திக் கொண்டிருந்தார்.   சரக்கடித்து விட்டு, வண்டி ஓட்டுவார். காவல்துறையினர் எங்கே பிடித்தாலும் தந்தையின் பெயரைச் சொல்லுவார்.   இவர் தந்தையின் பெயரை சொன்ன பிறகு கூட ட்ரங்கென் ட்ரைவ் கேஸ் போட யாருக்காவது தைரியம் வருமா ?  விட்டு விடுவாரா ஜாங்கிட்.  இப்படி உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருந்தவர் வாழ்வில் ஒரு திருப்பம்….

என்ன திருப்பம்… ?   கடந்த சனிக்கிழமை (07.07.2012) அன்று இரவு எப்போதும் போல சரக்கடித்து விட்டு, மகாபலிபுரம் சென்று விட்டு, ஒரு ஹ்யுண்டாய் ஐ20 காரில் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது விபத்து… ….    எதிரே வந்த வாகனத்தோடு இவரது கார் மோதியதாகத்தான் பூர்வாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  எதிரில் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் பலத்த காயம்.  காயம் பட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள்.  டேனியல், கிருஷ்ணன், குமரகுரு மற்றும் கவுஷிக் ஆகியோர் தான்  பலத்த காயத்துக்கு உள்ளானவர்கள்.   அவர்கள் இரவோடு இரவாக செட்டிநாடு மருத்தவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள்.

சரக்கடித்து விட்டு வண்டி ஓட்டிய, நம்ப விக்ரம்  ஜாங்கிட்டுக்கும் அடி பட்டுள்ளது.   அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அறை எண் 401ல் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சரி இப்படி ஒரு விபத்து நடந்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் காவல்துறையினர்.  உடனடியாக வண்டியை ஓரங்கட்டி விட்டு, காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். சுயநினைவோடு இருப்பவர்களிடம் வாக்குமூலம் பெறுவார்கள்.  யாரும் சுயநினைவோடு இல்லையென்றால் சிகிச்சை முடிந்தவுடன் வாக்குமூலம் பெறுவார்கள்.  உடனடியாக சம்பந்தப்பட்ட வாகனம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.  இவையெல்லாவற்றுக்கும் மேலாக, முதலில் எப்ஐஆர் போட வேண்டும்.  இதுதான்  சவுக்குக் தெரிந்த காவல்துறையினரின் நடை முறை.

ஆனால் நீங்களோ மற்ற சாமான்யரோ இது போல ஓட்டியிருந்தால் இதைச் செய்யலாம்..  ஆனால் மாட்டியது விக்ரம் ஜாங்கிட்டாயிற்றே…  உடனடியாக ஜாங்கிட்டிடமிருந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் என்பவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது.   ஜாங்கிட் பேசியவுடன் எப்ஐஆர் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.  சம்பந்தப்பட்ட கார், மகாபலிபுரம் காவலர் குடியிருப்பின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 10.30 மணிக்கு இந்த விபத்து பற்றித் தகவல் கிடைத்தது.   விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் TN-10-AH-4666.  இந்த வாகனம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விசாரித்தால், எம்.செந்தில் குமார். த/பெ மாரிமுத்துசாமி, எண்.2642/NA ரிவர் வியூ என்க்ளேவ், ஐபிஎஸ் காலனி, யமுனா சாலை, மணப்பாக்கம், சென்னை என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.    இந்த செந்தில் குமார் யார், அவரும் உயர் அதிகாரியா ? அல்லது சாதாரமாணவரா ?  சாதாரமாணவருக்கு ஐபிஎஸ் காலனியில் என்ன வேலை ?  அல்லது இவர் ஜாங்கிட்டுடைய பினாமியா ? இவர் பெயரில் தமிழ்நாட்டில் எங்கெங்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை சவுக்கு வாசகர்கள் யாராவது பத்திரப் பதிவுத் துறையில் இருந்தால் சேகரித்து அனுப்புங்கள்.    லஞ்ச ஒழிப்புத் துறையின் பார்வைக்கு புகாரோடு அனுப்பி வைப்போம்.   புகார் அனுப்பினால்தான்  நகருவார்கள்.   லஞ்ச ஒழிப்புத் துறை என்பது ஆமையின் வேகத்தில் 10ல் ஒரு பங்கு வேகத்தில் நகரும் ஒரு துறை.   அதனால் நாமே முன் முயற்சி எடுப்போம்.

100_4672

100_4674

விஷயம் உறுதி செய்யப்பட்ட பின், முக்கிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பப் பட்டது.  ஊடகங்களில் செய்தி வந்த பிறகாவது எப்ஐஆர் போடுகிறார்களா என்று பார்ப்போம்.

தனக்கு மிக மிக நெருக்கமான, தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய இரண்டு காவல் ஆய்வாளர்களை இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் முடிப்பதற்காக நியமித்துள்ளார் ஜாங்கிட்.  ஒருவர் ஆரோக்கிய ரவீந்திரன்.  இவர் பள்ளிகரணையில் ஆய்வாளராக உள்ளார்.   மற்றொரு ஆய்வாளர் பெயர் அகஸ்டின் பால் சுதாகர்.  இவர் அயல் பணியாக சென்னை அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரோடு சேர்ந்து கோ ஆர்டினேட் செய்பவர் கிண்டி உதவி ஆணையர் மாணிக்கவேல்.

புலனாய்வுக்கு கூட இப்படி ஒரு குழு அமையவில்லை.  ஆனால் புலனாய்வை முடக்குவதற்கு எப்படி டீம் அமைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா ?

உடனே சவுக்கு வாசகர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும்.  இதிலும் இந்த நபர் தப்பித்து விடுவார்.  அவ்வளவுதான் என்று மனச்சோர்வு ஏற்படும்.   அப்படியெல்லாம் கவலைப்படாதீர்கள்.

வடக்கு மண்டல ஐஜியாக மதுரையிருந்து மாற்றத்தில் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட வரை அழுத்தங்களுக்கு அசைந்து கொடுக்காதவர் என்றே சொல்லப்படுகிறது.  அவர் இந்த வழக்கை சிறப்பாக மேற்பார்வை செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய தண்டனை வாங்கித் தருவார் என்று நம்புவோம்.

kannppan-comishnar_1

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்

சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

 

கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திரு கோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் கருணை போல, காவல்துறை அதிகாரி கண்ணப்பன் கடமையாற்றுவார் என்று நம்புவோம்.

 

இப்படிப்பட்ட சூழலில் ஜாங்கிட் இந்தப் பாடலைப் பாடுவது பொருத்தம் தானே ?

411843_290883874343638_1956928458_o

375490_185477944884232_578468105_n

 

இதுவும் உங்க காரா சார்.. மொத்தம் எத்தனை கார் சார் வச்சுருக்கீங்க ?

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க

இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

 

Comments  

 
0 #34 shiva si 2012-07-25 15:52
It is unfortunate that hones and efficient police office like Mr. Jangid IPS is being dragged into a false controversy by some people. We have seen him working from his ASP days. Only mistake he did that he took very tough action against some corrupt offers particularly when he was DIG Chengalpet Range and Commissioner of Police, Chennai Suburban Police. Because of his honesty and boldness, he has made some enemies who are taking revenge now.
For Example, everyone know that it was a simple accident. Four College student boys were travelling and a lorry hit them. This was the accident. We made enquiries at Mahablipuram police station and accident place. It is so unfortunate that false rumours were created about it. One or two corrupt officers affected by Jangid may take revenge against him but not against his children. Let us have some level of humanity in taking revenge also. Every policeman known how Jangid is simple and honest. False information and implarliamentar y words can be used against anyone. Let us have some limit.
Quote
 
 
0 #33 chandru 2012-07-20 13:38
Pls check this link Mr.Savukku,

http://www.facebook.com/anbalaganfb/posts/10150950885483303
Quote
 
 
0 #32 tansacs 2012-07-16 15:53
Sir,vanakkam,we working at TANSACS.(Tamilnadu State Aids Control Society).we counsellors and lab-technicians working past 10 years as consolidation.we are doing service well in HIV/Aids awareness,couns elling and testing,we serve good to our Hiv infected people we prove them they are also a human in society,nearly 3000 staffs are servicing in this society.on 2006 in "AMMA" period nearly 2500 candidates were selected and appointed in Govt medical colleges,GH,PHC ,Blood bank,Pvt hospitals.we 75% above 37 age with married with dependable parents and children.30% age group is above 40.60% were ladies.Now TANSACS threatening us that the candidates who are not having educational and technical qualification were to thrown out.We suffer a lot,already we signed agreement for one year contractual every year,we handling lot of registers reports and duties..we done well in our service the data will show that,now if were terminated where we will go,they shows the G.O.116 which is eligible for only govt employee,wherea s we are the contractual employee how it eligible us?, nearly 1000 of lives depend us,all the candidates were recruited in "AMMA" period,now please investigate this issue and publish this for our sake us.We beg your burden! You have to save our lifes help us...... Nanri!!
Quote
 
 
+2 #31 chandru 2012-07-15 14:56
Quoting samaniyan:
Jangid is a corrupt bastrd we know.He dummied lathika saran and acted as a Commr of Police. he wanted to kill netrikann MANI using a lorry on the GST road. Mani escaped with grivous injuries but did not take further action fearing Jangid. Now on the confession of DSP kumar in CBI in Tindivanam murder case the CBI is ready to arrest him. but Jangid is using all his skills and throughthe North Indian lobby he is evading this arrest. We all know Jangid dislikes Amma but within the CM Cell too Jangid has his own sources to get all type of feelers. There are lots of uniformed guys enimical to jangid inclusive of Sylendra Babu IPS and Rajesh Dass IPS & Pon manickavel IPS. These 2 IPS officials never harm the subordinates whereas jangid sucks their blood and makes money out of it. Within the AIADMK circle jangid is close to OPS and also Natham party/shcok minister, but they are unable to take Jangid close to the CM. Many might not have heard about a Poonamalle trafiic Investigation Inspector formerly of Chennai Sub Urban who was placed under suspension by jangid as former Commr Chennai Sub Urban. The reason for the suspension was the Inspecotr saw jangid in a compramisisng position during his rest hours along with a woman SI who is more beautiful than even Tamil actress. jangid IPS has veen shares in MARG properties and other Real estate ventures. Probably after the KD brothers and karuna probably bastard jangid might be in the TOP 10 richest persons in Tamilnadu.



what is the name of this woman SI?
Quote
 
 
-1 #30 bad boy 2012-07-14 23:15
he got two eb connection service connection number 261-018-673, 261-018-574.please check 261-018-518. is address door no.31, river view colony
Quote
 
 
+4 #29 singam 2012-07-13 09:55
Hi Savukku.

Hats off man great job.
why cant you write about the employees are working at Bonds( 2 year agreement 3 year agreement)
you know most of the companies in india are getting bond from emploees and particularly girl employee are treated very badly.
weather these types of bonds are legall?
if you wrote about this it will million of employees life.
Quote
 
 
+10 #28 samaniyan 2012-07-12 18:24
Jangid is a corrupt bastrd we know.He dummied lathika saran and acted as a Commr of Police. he wanted to kill netrikann MANI using a lorry on the GST road. Mani escaped with grivous injuries but did not take further action fearing Jangid. Now on the confession of DSP kumar in CBI in Tindivanam murder case the CBI is ready to arrest him. but Jangid is using all his skills and throughthe North Indian lobby he is evading this arrest. We all know Jangid dislikes Amma but within the CM Cell too Jangid has his own sources to get all type of feelers. There are lots of uniformed guys enimical to jangid inclusive of Sylendra Babu IPS and Rajesh Dass IPS & Pon manickavel IPS. These 2 IPS officials never harm the subordinates whereas jangid sucks their blood and makes money out of it. Within the AIADMK circle jangid is close to OPS and also Natham party/shcok minister, but they are unable to take Jangid close to the CM. Many might not have heard about a Poonamalle trafiic Investigation Inspector formerly of Chennai Sub Urban who was placed under suspension by jangid as former Commr Chennai Sub Urban. The reason for the suspension was the Inspecotr saw jangid in a compramisisng position during his rest hours along with a woman SI who is more beautiful than even Tamil actress. jangid IPS has veen shares in MARG properties and other Real estate ventures. Probably after the KD brothers and karuna probably bastard jangid might be in the TOP 10 richest persons in Tamilnadu.
Quote
 
 
+3 #27 arunyog 2012-07-12 15:46
முகப்பேர் ஏர் ஹோஸ்டஸ் மர்டரின் பின்புலத்தில் அண்ணாரின் பங்கு என்ன

என்பதை விளக்குங்கள்
Quote
 
 
+3 #26 nanban 2012-07-12 08:14
காஞ்சிபுரத்தில் அனைத்து கடைகள் முன்னாடியும் ஜெயலலிதா பேனர் வைத்து வியாபாரத்தை கேடுகின்றார்கள் .

முக்கிய செய்தி என்னனா அதுல ஜெயலலிதா படமே இல்லை.!

இதை எல்லாம் தட்டி கேட்க யாரும் வர மாட்டாங்கல....?
Quote
 
 
+5 #25 ஆர்.தியாகு 2012-07-11 19:22
என்ன ஜாங்கிட் கேட்டவரா..?

இவருக்கும் சட்டை மற்றும் பேன்ட் முழுவதும் பாக்கெட்டா..?

பத்ரிக்கைகாரன் எல்லாம் இவர நல்லவனு சொல்லி புகழ்ந்து எழுதினானே..!

சோலை அய்யர் வீட்டு வாசல்ல இந்த ஆளூ உட்கார்ந்து கொண்டிருந்த போதே நெனச்சேன்..

அட போங்கடாப்பா... சலிச்சு எடுத்தா ஒருத்தன் தேரமாட்டான் போலயிருக்கே..!!
Quote
 
 
-16 #24 nilavan 2012-07-11 17:54
ஜான்கிட் நேர்மையனவர். அவரை காயப்படுத வேன்டாம்.
Quote
 
 
+2 #23 mahesh_new 2012-07-11 17:48
நமக்கு வந்தால் அது தக்காளி சட்னி ஜாங்கிட் மகனுக்கு என்றால் அது இரத்தம்.. புஸ்...
Quote
 
 
+1 #22 jaya 2012-07-11 16:43
சவுக்கு. ஜாபர் உன்கையில் மாட்டி டங்குவாரு அந்துபோனான் .. இப்ப இவனா? இவனெல்லாம் எதுக்கு போலீஸ் வேலைக்கு வரான்? இவன் வந்தான். சரி. இவனுக்கு என்ன ஆசை பாருங்க.? தருதளியை போலீஸ் வேலைக்கு செர்கனும்னால் இவன் கோன்ச்டபுல் வேலைக்கு கூட லாயக்கு இல்ல.
Quote
 
 
+4 #21 Kalkiyin Nandhaki 2012-07-11 15:17
அது என்ன ஜாங்கிட் கைல ஐ-போன் (iPhone)- னா... ரெம்ப லேட்டஸ்ட் மாடல்-லா தெரியுது... விலை எப்படியும் 40,000 த்தை தொடுமே..
Quote
 
 
+5 #20 Syed Ahmed 2012-07-11 15:00
மணி மீது ஜாங்கிட் எத்தனை பொய் வழக்கு போட்டாலும் சளைக்காமல் ஜெயிலில் இருந்து கூட தன் நெற்றிகண் பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி அதில் காக்கி கார்னர் பகுதியை தொடர்ந்து வெளியிட்டு உயர் காக்கிகளை நடுங்க வைத்தார். மணி மகனின் கடிதம் மற்றும் தங்கள் சவுக்கு கட்டுரையை படித்த பின் தான் மணிக்கு ஜாங்கிட்ஆல் ஏற்பட்ட இன்னல்கள் புரிகிறது. காக்கி கார்னர் பகுதி வெளி வந்த போது அதற்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் இருந்தது. ஜாங்கிட் தீ மு க ஆட்சியில் இருந்த போதே காக்கி கர்னரால் உயர் போலீசை மிரட்டி உருட்டிய இச்சுவையான பகுதியை ஜாங்கிட் போன்ற கேடிகள் ஆட்சியில் இல்லாதபோது நெற்றிகண் நிறுத்திய மர்மம் என்னவோ? இதனால் நெற்றிகண் கண்டிப்பாக பல ஆயிரம் ரசிகர்களை இழந்டிருக்ககூடு ம். ஜாங்கிட், அருண் போன்ற காவல் பொறுகிகளை சுளுக்கு எடுக்கவும் நல்ல மனம் கொண்ட உயர் போலிசுகளை தட்டிகொடுக்கவும ் நெற்றிகண் தொடர்ந்து இந்த காக்கி கார்னர் பகுதியை தைரியமாக வெளியிட்டு கணினி துறையில் சவுக்கு போலிசுக்கு சாட்டை அடி கொடுபதுபோல் பத்திரிகை துறையில் நெற்றிகண் காக்கி கார்னர் மூலம் ஈரல் கெட்ட காவல் அதிகாரிகளை குடலை உருவி மாலையாக போட்டு கொள்ள வேண்டும். உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் என்ற பாட்டை சவுக்கை போல் ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் நெற்றிகண் மறந்து விட கூடாது. இது சவுக்கு வாசகர்களின் நேயர் விருப்பம்.
Quote
Quote
 
 
+2 #19 syed ibu 2012-07-11 13:35
சவுக்கு அவர்களே, சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரை சேர்ந்த தையல் தொழிலாளி ஹுமாயூன். நேற்று அதிகாலையில் கானாத்தூர் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்திகளில் உண்மை இருப்பதாக தெரியவில்லையே இதை பற்றி சவுக்குகின் கட்டுரை வரும் என்று நம்பிக்கையில் உள்ளேன.
Quote
 
 
0 #18 Nalam Virumbhi 2012-07-11 10:42
Dear Savukku,

Can you take this to CM cells notice. I have seen action being taken . அஞஜல் முகவரி is "cmcell at tn dot gov dot in"
Quote
 
 
+6 #17 சவுக்கு 2012-07-11 08:31
திரு பிள்ளை அவர்கள் சவுக்கை newsavukku@gmai l.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
Quote
 
 
0 #16 PILLAI 2012-07-11 00:34
savukku concentrating in state affairs only. come to chennai custom house. probe C.RAJAN'S roll in led tv concealment case and how innocent officers affected by him.still his followers are active in custom house, diverting the blame on lower officers. his followers are a.manimaran d.c., k.s.v.venomous prasad j.c,
Quote
 
 
+10 #15 PILLAI 2012-07-11 00:32
Savukku consentratin only in state polytics. Come to Chennai Custom House. Probe C.RAJAN'S role in SONY LED Television concealment case and how innosent officers are affected by him.Still his followers are aktive in custom house, dyverting the blame on lower level officers. His followers A.Manimaran D.C., K.S.V.V Prasad J.C, thanks to S.S.PALANI MANIKKAM minister,S.SANGARAVADVELU AND RATHAKRISHNAN.
Quote
 
 
+18 #14 ஷாலி 2012-07-10 17:19
சவுக்கு ஒரு முக்கியமான பாட்டை போடாம விட்டுட்டிங்க!

“ எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதையில் நடக்காமல் தந்தை ஜாங்கிட் வழியிலே நடப்பான்...காரை இடிப்பான்...”

ஜாங்கிட் போன்ற நபர்களுக்கு தறுதலைகளை பிள்ளையாக கொடுத்து நிம்மதியை பறிப்பது இறைவனின் விளையாட்டு.

மக்களைப்பார்த்த ாவது அவர் தன்னை மாற்றிக்கொண்டால ் அவருக்கு நல்லது.பதவியை வைத்து ஆட்டத்தை தொடர்ந்தால்...
அவுட்டாகி விடுவார்.
Quote
 
 
+20 #13 MURUGAN K 2012-07-10 17:15
நீர் நினைப்பதை போல் ஜாங்கிட் மகன் கைது செய்ய படுவான் என எனக்கு தோனவில்லை, ஜாங்கிட்டுகு இதெல்லானம் சாதரனம், பகல் கனவு காணாதே சவுக்கு.....
Quote
 
 
+33 #12 Rk. Guru 2012-07-10 12:56
ஜாங்கிட் என்றால் சவுக்குக்கு ஜாங்கிரி சாப்பிடுவது போல...அப்பனுக்கு தப்பாத புள்ள "ஜாங்கிரி புள்ள டோங்கிரி"....
Quote
 
 
+16 #11 M RAMASWAMY 2012-07-10 12:41
கொடுவா மீசை, அருவா பார்வை. ஜாங்கிட் பல் புடுங்கப்பட்ட பாம்பாச்சே. பாதிக்கப்பட்டவர ்களிடம் பேச்சு வார்த்தை ஆரம்பமாகியிருக் குமே.
Quote
 
 
+33 #10 Karthikprabhakaran 2012-07-10 11:35
ஹலோ சவுக்கு, சட்டம் தெரியாம பேசக் கூடாது.இப்ப எல்லாம் வட்டச் செயலாளர் வண்டு முருகன் பையனக் கூட போலீஸ் அரெஸ்ட் பண்ண முடியாது.இந்த நிலைமைல ஜாங்கிட் பையன அரெஸ்ட் பண்ண சொல்றது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் /மனித உரிமை மீறல்.
Quote
 
 
+11 #9 singam 2012-07-10 09:48
brother savuuku,

dont write against police and ruling govt then one fine morning you may put in behind bars.
then how can we get these type of news???

i appriciate your guts man.
you are a real hero.
Hats off.
Quote
 
 
+14 #8 jegan usa 2012-07-10 09:11
உங்களது தூய பணிக்கு என் மனம் ஆர்ந்த பாராட்டுகள் .
Quote
 
 
+15 #7 Padman 2012-07-10 08:32
அறிவு அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். கெட்டதையே பார்த்து பார்த்து நம் நாட்டின் மீதே ஆத்திரம் வருகிறது. கொஞ்சமாச்சும் நமக்கு பிடிமானம் வேண்டும். இது போல் இருக்கும் நல்ல தலைவர்களை எல்லார்க்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.
Quote
 
 
+47 #6 Arivu 2012-07-10 01:28
சவுக்குக்கு!
சமுதாய அவலங்களை நீங்கள் துணிவுடன் எதிர்ப்பது எங்களுக்கு தெம்பு ஊட்டுகிறது. கோபாலபுரத்திலிர ுந்து கோபன் ஹேகன் வரை, போயஸிலிருந்து போபால் வரை நடக்கும் அவலங்களை உங்களின் ஊடாக நாங்களும் அறிந்துகொள்கிறோ ம். ஆனாலும் ஒரு சில நேர்மையான அதிகாரிகாளையும் , அரசியல் வாதிகளையும் பாராட்டாமல் அல்லது அங்கீகரிக்காமல் விட்டால் அதுவும் நம்மால் விளைந்த ஒரு அவலமாகவே கொள்ளலாம்.

உதாரணத்துக்கு ஆர். நல்லக்கண்ணு போன்ற அரசியல் தலைவரை நாம் அதிகம் தூக்கி பிடிக்காத காரணத்தினாலே நாமும் தவறு செய்கிறோமென்று நான் உணர்கிறேன். ஈழம் முதல் அணு உலை தொடர்ந்து , மணல் கொள்ளை எதிர்ப்பு, முல்லை பெரியாறு வரை அவர் தான் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டிற்க ு எதிராக் தன் குரலை பதிவு செய்திருக்கிறார ்(நான் அறிந்த வரை). அவரை பற்றி நீங்கள் ஒரு கட்டுரை தீட்ட வேண்டும் விருப்பப்படுகிற ேன்.ஒரு வேளை நீங்கள் ஏற்கனவே தீட்டியிருப்பின ் , மீள் பதிவிட வேன்டுகோள் வைக்கிறேன்.
Quote
 
 
+14 #5 Nellai Advocate 2012-07-09 21:50
we still don't know how to over come these things.really disgusting.
Quote
 
 
+66 #4 சவுக்கு 2012-07-09 21:42
தோழர்களே, கட்டுரையில் ஒரு தவறு. விபத்துக்கு காரணம், ஜாங்கிட்டின் இளைய மகன் விக்ரம் ஜாங்கிட். மூத்த மகன் சஹாய் ஜாங்கிட் என்று தவறுதலாக எழுதப்பட்டு விட்டது. இந்த வழக்கு தொடர்பாக விபரங்கள் சேகரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது. இத்தவறினால் சஹாய் ஜாங்கிட்டிற்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தால ், வருந்துகிறோம்.
Quote
 
 
+43 #3 Ravi 2012-07-09 21:31
ஜாங்கிட்டின் ஊழலுக்கு தண்டனை கிடைத்தால் நாம் மகிழ்ச்சி கொள்வோம். அதை விடுத்து அவரது புத்திர சிகாமணி தண்ணீயடித்துவிட ்டு இன்று பல இளைஞ்ர்கள் செய்யும் அதே தவற்றை செய்துவிட்டு அடிப்பட்டு கிடப்பதில் நமக்கு சந்தோஷமில்லை. அந்த தவறை ஜாங்கிட் மறைக்க முயலுவது அயோக்கியத்தனம். கண்ணப்பன் நியாயமாக நடப்பார் என்று நம்புவோம். குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்கப்பா...
Quote
 
 
-19 #2 Arivu 2012-07-09 21:11
இவ்வளவு தைரியமா புகைப்படத்தோட வெளியிட்டதுக்கு , கடைசியிலே சவுக்க டின்னு கட்ட போறாங்கன்னு நினைக்கிறேன் !
Quote
 
 
+57 #1 அழகன் 2012-07-09 19:10
அன்புள்ள சவுக்கு, ஜாங்கிட் போல் மனிதாபிமானம் இல்லாத போலீஸ் அதிகாரிகள் முகத்திரை கிழித்த தங்களை எப்படி பாராடுவது என்று தெரியவில்லை.......
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 56 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1127
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week45127
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month267387
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13183754