|
சவுக்கு வாசர்கள் நீதிபதி கர்ணன் குறித்த முந்தைய கட்டுரையில், அந்த நீதிமன்ற ஊழியரை ஒரு வழக்கை ஏன் அன்று விசாரணைக்கு கொண்டு வரவில்லை என்று திறந்த நீதிமன்றத்தில், அனைவரின் முன்னிலையில் திட்டியதையும், நீதிக்கே அவமானம் என்ற கட்டுரையில் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் படித்து விட்டு வாருங்கள்.

நீதியரசர் கர்ணன் அப்படி ஏன் கோபப்பட்டார் ? அப்படி என்ன அவசரமான வழக்கு அது ? யாருடைய உயிரைக் காப்பாற்றும் வழக்கு அது என்று சவுக்கு வாசர்கள் பலருக்கு வியப்பாக இருந்திருக்கும். அப்படி நீதியரசர் அவசரப்பட்ட வழக்கு என்னவென்று பார்ப்போம்.
இந்தியாவில் எம்எம்டிசி என்று ஒரு மத்திய அரசு நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வேலை, கனிமங்கள் மற்றும், தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதுதான். இந்த மத்திய அரசு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னால், தங்கம் இறக்குமதி செய்ய ஒரே ஏகபோக நிறுவனமாக இருந்து வந்தது. இந்நிறுவனம் தங்கம் இறக்குமதி செய்தபிறகு, இந்த மத்திய அரசு நிறுவனத்திடமிருந்துதான், லலிதா ஜுவல்லர்ஸ், சரவணா செல்வரத்தினம், நாதெள்ளா சம்பத்து சட்டி கஸானா, ஜாய் ஆலுக்காஸ், ப்ரின்ஸ், ஜிஆர்டி போன்ற நிறுவனங்கள் வாங்கி விற்க வேண்டும்.
இந்த எம்எம்டிசி நிறுவனம், மூன்று வழிகளில் தங்கத்தை விற்பனை செய்கிறது. முதல் வழி நேரடி விற்பனை. இந்த முறையின்படி, தங்கம் வேண்டும் நிறுவனங்கள், பணத்தை எம்எம்டிசியில் முதலீடு செய்ய வேண்டும். எம்எம்டிசி அந்தத் தொகையை வங்கியில் வைப்பு நிதியாக டெபாசிட் செய்யும். அதற்குறிய தங்கத்தை வெளிநாட்டிலிருந்து 90 நாள் கடன் வசதியோடு எம்எம்டிசி வாங்கி, ஆர்டர் செய்த நிறுவனங்களுக்கு வழங்கும். வங்கியில் வைக்கப்பட்ட வைப்பு நிதியில் வரும் வட்டி, தங்கம் வாங்கும் நிறுவனத்துக்கே தரப்படும். வெளிநாட்டிலிருந்து தங்கம் வரவழைப்பதற்கான செலவு, வங்கிச் செலவுகள் ஆகியவற்றை தங்கம் வாங்கும் நிறுவனம் அல்லது நபர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது முறை, ஒரு நிறுவனம் அல்லது நபர் எம்எம்டிசியிடம் தங்கம் வாங்கும்போது, வாங்கும் தங்கத்தின் விலையை விட 110 சதவிகிதத்துக்கான வங்கி உத்தரவாதத்தை (Bank guarantee) அளித்தால், 90 நாள் கடன் வசதியோடு தங்கம் வழங்கப்படும்.
இந்த மூன்றாவது முறை இருக்கிறதே… இதில்தான் அனைத்து தில்லு முல்லுகளும் நடந்துள்ளன. சுரானா கார்பரேஷன் என்ற ஒரு வட இந்திய மார்வாடி நிறுவனம் ஒன்று தமிழகத்தில் உள்ளது. தமிழனின் ரத்தத்தை சுரண்டி, தமிழக பொருளாதாரத்தையே தனது கட்டுக்குள் கொண்டு வந்த மார்வாடி வகையராவில் ஒரு வகையராதான் சுரானா கார்பரேஷன். ஜி.ஆர்.சுரானா, சாந்திலால் சுரானா, விஜய்ராஜ் சுரானா மற்றும் தினேஷ்சந்த் சுரானா ஆகிய நான்கு சகோதரர்கள் சுரானா குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்த சுரானா குழுமம் இரும்பு, கட்டமைப்பு ஆகிய தொழிலோடு தங்க வியாபாரத்தையும் பிரதான தொழிலாக செய்து வருகிறது.
சுரானா குழுமத்தின் தங்க வியாபாரத்தை பார்த்துக் கொள்பவர்கள் சாந்திலால் சுரானா மற்றும் விஜய்ராஜ் சுரானா.
 இந்த மூன்றாவது முறை எப்படியென்றால். வெளிநாட்டிலிருந்து தங்கம் வழங்கும் நிறுவனத்துக்காக, எம்எம்டிசி நிறுவனம் கடன் பத்திரம் (Stand-By-Letter-of-Credit SBLC) ஒன்றை உருவாக்கும். எம்எம்டிசியிலிருந்து தங்கம் வாங்குபவர்கள், தங்களுக்கு தங்கம் தேவைப்படும் அளவுக்கான விலையை, எம்எம்டிசியில் செலுத்த வேண்டும். எம்எம்டிசி அத்தொகையை வைப்புத் தொகையாக (Fixed Deposit) வங்கியில் செலுத்தும். இம்முறையில் அதிகபட்சமாக 180 நாட்கள் வரை கடன் வசதி உண்டு. வெளிநாட்டு நிறுவனத்துக்கு எப்போது தங்கத்துக்கான விலையை அளிக்க வேண்டுமோ, அப்போது அந்த வைப்புத்தொகை முழுமையடையும் வகையில் அந்த வைப்புத்தொகை வங்கியில் செலுத்தப்படவேண்டும். உரிய தேதி வந்ததும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு தொகை, வங்கியிலுள்ள வைப்புத் தொகையிலிருந்து எடுத்துத் தரப்படும். இதில் வங்கியில் உள்ள வைப்புத் தொகைக்கான வட்டி, தங்கம் வாங்கும் நபருக்கு வழங்கப்படும்.
இந்த சுரானா குழுமம் எம்எம்டிசி தங்கம் விற்கும் மூன்றாவது முறையில், எம்எம்டிசியில் இருந்து ஏராளமான தங்கத்தை வாங்குகிறது. இந்த முறையின் கீழ் எம்எம்டிசியிலிருந்து தங்கம் வாங்கிய சுரானா நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, சுரானா நிறுவம் எம்எம்டிசிக்கு வழங்க வேண்டிய 18 கோடி ரூபாயை வசூல் செய்யாமல், சுரானா நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று, எம்எம்டிசி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதன் தலைமைப் பொது மேலாளர் குருசாமி, நிதி மற்றும் கணக்குக்கான பொது மேலாளர் குருமூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர் என்பதே குற்றச்சாட்டு.
இந்த இரண்டு குருக்களும், அப்படி என்ன சுரானா நிறுவனத்துக்கு ஆதரவாக செய்து விட்டார்கள் ? எம்எம்டிசி தங்கம் விற்பனை செய்யும் முறையில் மூன்றாவது முறை உள்ளதல்லவா ? அந்த மூன்றாவது முறையின்படி செய்யப்படும் வர்த்தகங்கள் அனைத்தும் “புல்லியன் ட்ரேடிங் சிஸ்டம்” என்ற அடிப்படையிலேயே செய்யப்படவேண்டும். இந்த புல்லியன் ட்ரேடிங் சிஸ்டம் முறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு குருக்களும் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா ? அந்தக் காலத்து கணக்குப் பிள்ளைகள் போல, நோட்டில் எழுதியிருக்கிறார்கள். எதற்கான இந்த குருக்கள் இப்படி நோட்டில் எழுத வேண்டும் என்றால், கணினி மயமாக்கப்பட்ட புல்லியன் ட்ரேடிங் முறையில் செய்தால், அன்றைய தங்க விலை என்னவோ அந்த விலையை மாற்ற முடியாது.

ஆனால், இந்த கணக்குப்பிள்ளைகள் இருவரும், நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதன் மூலம், சுரானா நிறுவனத்துக்கு என்று விலை ஆதாயமாக இருக்கிறதோ, அன்று தங்கம் வழங்கியது போல கணக்கு எழுதி, தங்கத்தை வழங்கியிருக்கிறார்கள். (அவனவன் கம்ப்யூட்டர் காலத்துல, டேலி, அது இதுன்னு பல சாப்ட்வேரை பயன்படுத்திக்கிட்டு இருக்கான்.. இந்த நாதாறிங்க ரெண்டும் திருப்பி மாட்டுவண்டி காலத்துக்கே போயிருக்கு பாத்தீங்களா ?) இதனால் எம்எம்டிசி நிறுவனம் 18 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கிறது. தங்கம் ஆர்டர் செய்யும்போது, ஒரு தோராய விலை நிர்ணயித்து ரசீது வழங்கப்படும். தங்கம் வழங்கும் அன்று, விலை ஏறியிருக்கும் என்பதால், அன்று என்ன விலையோ அந்த விலைக்கே வழங்க வேண்டும். ஆனால், இந்த குருக்கள் இருவரும், தோராய விலை நிர்ணயித்து வழங்கப்பட்ட ரசீதை, தங்கம் வழங்கப்பட்ட அன்று வழங்கிய ரசீது போல, மொள்ளமாறித்தனம் செய்து, சுரானா நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார்கள்.
அன்றாட தங்க விலையில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப, தங்கம் வாங்கும் நபரிடமிருந்து சரியான தொகையை வசூல் செய்ய வேண்டும். ஆனால் இந்த குருக்கள் இருவரும் சுரானா நிறுவனத்திடமிருந்து அதை வசூல் செய்யவேயில்லை. சரி உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 18 கோடி ரூபாய் கணக்கில் உதைக்குமே.. இதை எப்படி சரிசெய்வார்கள் என்று. இந்த மூன்றாவது முறையின் கீழ் தங்கம் வாங்க எம்எம்டிசி நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு கடன் பத்திரம் வழங்க வேண்டும் அல்லவா ? அந்த கடன் பத்திரத்தில் இந்த 18 கோடியும் அடக்கம் என்பது போல குருக்கள் இருவரும், ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். இந்த அதிகாரிகள் தவறுதலாகக் கூட இப்படிச் செய்திருக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றும். இப்படித் தப்பும் தவறுமாக வேலை செய்யும் அதிகாரிகளை அவர்கள் ஓய்வு பெற்றதும் ஏன் சுரானா நிறுவனம் இயக்குநர்களாக அமர்த்தியது ? எம்எம்டிசி நிறுவனத்தில் அவர்கள் பணியாற்றியபோது, சுரானா நிறுவனத்துக்கு காட்டிய விசுவாசம்தான். குருசாமி சுரானா நிறுவனத்தின் இயக்குநர். குருமூர்த்தி, ஜிஆர்டி தங்க மாளிகையில் இயக்குநர். ஜிஆர்டி நிறுவனம், சுரானா நிறுவனத்தின் நெருங்கிய தொழில் கூட்டாளி. சுரானா சகோதரர்களின் அறிவுறுத்தலின்படியே ஜிஆர்டி நிறுவனம் குருமூர்த்தியை இயக்குநராக சேர்த்துக் கொண்டுள்ளது.
சுரானா நிறுவனத்தின் மற்ற இயக்குநர்கள் யார் தெரியுமா ? எச்.பி.ராஜ்தேவ். இவர் எம்எம்டிசி நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர். வி.என்.சுவாமி. இவர் அலஹாபாத் வங்கியின் முன்னாள் பொது மேலாளர். திலக் ராஜ் ஜெயின். இவர் வருமான வரித்துறையின் முன்னாள் ஆணையர். இந்த திலக் ராஜ் ஜெயின், சுரானா சகோதரர்கள் சார்பாக, தனது வட இந்தியத் தொடர்புகளைப் பயன்படுத்தி, நீதிபதிகளையும், அதிகாரிகளையும் சரிகட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வருமான வரித்துறையில் ஏதாவது சோதனை என்றால், உடனடியாக சுரானா சகோதரர்களுக்கு தகவல் சொல்வதும் இந்த திலக் ராஜ் ஜெயின்தான்.

இந்த விபரங்களையெல்லாம் சிபிஐ ரகசிய விசாரணை நடத்தி முழுவதுமாக சேகரித்தது. சேகரித்து ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததும், குருக்கள் வீடுகள், சுரானா சகோதரர்களின் வீடுகள், ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொண்டது.
இந்தச் சோதனையின் போது, சுரானா சகோதரர்களின் அலுவலகத்தில், 400 கிலோ தங்கமும் 4 கோடி ரொக்கமும் சிக்கியது. சிக்கிய அத்தனையும் சிபிஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. சுரானா சகோதரர்களின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
400 கிலோ தங்கம் சிக்கியதும் மிரண்டனர் சுரானா சகோதரர்கள். என்ன செய்வது என்று புரியாமல் அரண்டனர். சிபிஐ அதிகாரிகளிடம் கெஞ்சினர். விட்டு விடுங்கள் பறிமுதல் செய்யாதீர்கள் என்று மன்றாடினர். உலகத்தில் அத்தனை பேருமா லஞ்சம் வாங்குபவனாக இருப்பான் ? நேர்மையான அதிகாரிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சிபிஐ சோதனை நடந்த மறுநாளே, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர் சுரானா சகோதரர்கள். சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. ஜெயலலிதாவுக்காக பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும் பி.குமார், சுரானா சகோதரர்களுக்காக ஆஜரானார். இரண்டு நாட்கள் வாதம் நடந்தது. இறுதியில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற சுரானா சகோதரர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் சுரானா சகோதரர்கள். இந்த வழக்கு நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞராக இருந்தபோது நான் ஏற்கனவே சுரானா சகோதரர்களுக்காக ஆஜராகியிருக்கிறேன். அதனால் இந்த வழக்கை நான் விசாரிக்க இயலாது என்று அவ்வழக்கை வேறு நீதிபதிக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதியிடம் பரிந்துரை செய்தார். தலைமை நீதிபதி, இவ்வழக்கை நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்பு விசாரணைக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். கர்ணனைப் பற்றி நன்கு தெரிந்தும், இந்த வழக்கை அவரிடம் விசாரணைக்கு அனுப்பும் தலைமை நீதிபதி எப்படிப்பட்ட நபராக இருக்கிறார் என்பதைப் பாருங்கள் !!!!!

இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை என்பதனால்தான், அந்த நீதிமன்ற ஊழியர் லட்சுமணனுக்கு வியாழக்கிழமை மண்டகப்படி நடத்தினார் கர்ணன்.
இந்த வழக்கு, தூக்குக் கொட்டடியில் இருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற அல்ல…
காவல்துறையின் கட்டுப்பாட்டில் சித்திரவதைக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனைக் காப்பாற்றுவதற்கு அல்ல.
காவல்துறையால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லத் திட்டமிடப்பட்டு உயிரை இழக்கப்போகும் ஒரு நக்சலைட்டின் உயிரைக் காப்பாற்ற அல்ல … …
சிறைக் கொடுமைக்கு ஆளாகி, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு கைதியின் உயிரைக் காப்பாற்ற அல்ல.. …
வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படும் ஒரு இளம்பெண்ணைக் காப்பாற்ற அல்ல…
சாதி இந்துக்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு தலித்தைக் காப்பாற்ற அல்ல.
தங்கள் குடிசையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் ஏழை சேரி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அல்ல…
அரசின் நடவடிக்கையால் அழிக்கப்படக் காத்திருக்கும் ஒரு புராதானக் கலைக் கட்டிடத்தை அல்ல..
இந்த வழக்கு, மத்திய அரசையும், மாநில அரசையும் ஏமாற்றி, மத்திய அரசு நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தி, இந்தியப் பொருளாதாரத்தைச் சுரண்டும் ஒரு மார்வாடியின் 400 கிலோ தங்கத்தைத் திருப்பித் தரக்கோரும் வழக்கு. வட இந்தியாவிலிருந்து வந்து குடியேறி, பொருளாதார ரீதியாக இன்று தமிழகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் மார்வாடிக் கும்பலைச் சேர்ந்த ஒரு கொள்ளைக்காரன் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தங்கத்தை திருப்பித் தரக்கோரும் வழக்கு.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏன் போடவில்லை என்பதற்காகத்தான், அந்த நீதிமன்ற ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் புகார் கொடுக்கப்போவதாக மிரட்டினார் மைலார்ட்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் கிருஷ்ணன் வாதாடினார்.
இந்த வழக்கை சுரானா சகோதரர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 397ன் கீழ் தாக்கல் செய்துள்ளனர். இப்பிரிவு என்ன கூறுகிறதென்றால், கீழமை நீதிமன்றத்தில் உள்ள ஒரு நீதிபதி, ஒரு தவறான உத்தரவை பிறப்பித்திருந்தார் என்றால், உயர் நீதிமன்றம் அதைச் சரிசெய்யும் அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.
இந்தப் பிரிவின் கீழ் வாதத்தை எடுத்து வைக்கும் சுரானா தரப்பு என்ன வாதாட வேண்டும் ? சுரானாவின் மனுவை தள்ளுபடி செய்த கீழமை நீதிபதி, இந்தத் தவறை செய்துள்ளார். அவர் இந்தப் பிரிவை ஒதுக்கி விட்டார். இந்தச் சட்டத்தின்படி இது தவறு என்றல்லவா வாதிட வேண்டும் ?
சுரானா தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்றால், சுரானா நிறுவனத்துக்கு 01.04.2010 முதல் 31.03.2011 வரை, தங்கம் இறக்குமதி செய்து கொள்ள லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சுரானா நிறுவனத்தில் 500 தங்க வேலைசெய்யும் கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டின் மொத்த விற்றுமுதல் 8666 கோடி. அதில் லாபம் 67.69 கோடி. தங்கம் ஏற்றுமதி செய்த மொத்த விலை 1509 கோடி. செலுத்திய சுங்க வரி 209.62 கோடி. வருமான வரி 18.77 கோடி. வாட் வரி 137 கோடி என்று கூறினார். (இதுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம் ?)
எம்எம்டிசியை சுரானா நிறுவனம் ஏமாற்றியதாகச் சொல்கிறார்கள். ஆனால் கடந்த காலத்தில் எம்எம்டிசி நிறுவனமே 20 கோடி ரூபாயை சுரானா நிறுவனத்துக்கு திருப்பி அளித்துள்ளது. எம்எம்டிசிதான் சுரானா நிறுவனத்துக்கு 8 லட்ச ரூபாய் தர வேண்டியுள்ளது (இது வேறயா ?) சுரானா நிறுவனம் எந்தக் காலத்திலும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதில்லை. (எம்எம்டிசியே உங்க நிறுவனம்தானே.. இதுல ஏமாத்தறதுக்கு என்ன இருக்கு ?) சுரானா நிறுவனம் புள்ளி 5 சதவிகிதம் லாபத்துக்காக மட்டுமே இத்தொழில் செய்கிறது (அப்படி கஷ்டப்பட்டுகிட்டு யார் தொழில் செய்யச் சொன்னது ? வடநாட்டுக்கு ஓட வேண்டியதுதானே ) நாங்கள் எம்எம்டிசியோடு இது வரை நடத்தியுள்ள அத்தனை வியாபாரங்களின் ஆதாரங்களையும் தருகிறோம் (சிபிஐதான் அத்தனையும் பொய்க்கணக்குன்னு சொல்லுதே.. அதே கணக்கை திருப்பித் தந்தா ?)
நாங்கள் எம்எம்டிசிக்கு எந்தத் தொகையும் தரவேண்டியது இல்லை. எம்எம்டிசிக்கு ஏற்பட்ட நஷ்டம் என்று சொல்லப்படும் 18 கோடியை கட்டத் தயாராக இருக்கிறோம். எம்எம்டிசி கணக்குப் பார்த்த பிறகு அந்தத் தொகையை தரட்டும். நாங்கள் தரவேண்டியது இருந்தால் அந்தத் தொகையை பிடித்துக் கொள்ளட்டும். 18 கோடி நஷ்டத்துக்கு 130 கோடி மதிப்புள்ள தங்கத்தை ஏன் பறிமுதல் செய்ய வேண்டும் ? அந்த 400 கிலோ தங்கமும், இங்கே உள்ள வாடிக்கையாளர்களுக்காக வரவழைக்கப்பட்டது. அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும்.
ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை வைத்து, எம்எம்டிசிக்கும், எங்களுக்கும் சமரச ஏற்பாட்டுக்கு உத்தரவிட்டால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம் (பணியில் இருக்கும் நீதிபதிகளையே விலைக்கு வாங்குவார்கள். இதில் ஓய்வு பெற்ற நீதிபதி என்றால் கேட்கவே வேண்டாம்.)
ஒரு முறை 20 கிலோவுக்கு பதிலாக எம்எம்டிசி 40 கிலோ அனுப்பி விட்டது. நாங்கள் நேர்மையாக திருப்பிக் கொடுத்து விட்டோம் (அங்க இருக்கறது எல்லாம் உங்க ஆளுதானே… அப்புறம் ஏன் 40 கிலோ கொடுக்க மாட்டான்)
தயவு செய்து 400 கிலோ தங்கத்தை விடுவியுங்கள். என்ன நிபந்தனை விதித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். (400 கிலோ தங்கத்தை கேட்கக் கூடாது என்பதுதான் நிபந்தனை)
இவ்வாறு வாதாடினார் சுரானாவின் வழக்கறிஞர். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 397க்கும், இவர்கள் வாதாடியதற்கும் என்ன சம்பந்தம் ? கீழமை நீதிபதியின் தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்கிறதா என்பதைத்தானே நீதிமன்றம் ஆராய முடியும் ?
சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகர் வாதாடும்போது, ஒரு வழக்கில் முதன்மையான பிரச்சினை முடிவடையாத நிலையில், பிறப்பிக்கப் படும் இடைக்கால உத்தரவு, முதன்மையான பிரச்சினையை முடித்து வைப்பதாக இருந்தால், அவ்வாறு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதை குறிப்பிட்டார். வழக்கு விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது. 18 கோடி என்பது உத்தேசமான தொகை. முழுமையான விசாரணை முடிந்தபிறகே, எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும் வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ள நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று வாதிட்டார்.
இருவர் வாதாடும்போதும், அவ்வப்போது குறுக்கிட்ட நீதிபதி கர்ணன் பல்வேறு கருத்துரைகளைக் கூறினார்.
சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்து, “மனுதாரரின் பாஸ்போர்ட்டை ஏன் பறிமுதல் செய்தீர்கள்… குற்றப்பத்திரிக்கை எப்போது தாக்கல் செய்வீர்கள்..” என்ற கேட்டார். சிபிஐ வழக்கறிஞர், நீதிமன்றத்தின் அனுமதியோடு பாஸ்போர்ட்டை திருப்பித் தருவதில், சிபிஐக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறினார்.
நீதிபதி கர்ணன் “மறு ஆய்வு குறித்த 397 பிரிவு மறு ஆய்வுக்கான வரம்பை குறுகலாகத்தான் வைத்துள்ளது. நீங்கள் வாதிட வேண்டியது, கீழமை நீதிபதியின் உத்தரவு சரியா தவறா என்பது பற்றித்தான். தற்போது வழக்கின் புலனாய்வு ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால், எம்எம்டிசிக்கு எவ்வளவு நஷ்டம் என்பதை புலனாய்வு அதிகாரி இன்றும் அளவிட்டிருக்க மாட்டார்.


சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கை
உங்கள் தங்கம் எங்கே போய் விடப்போகிறது. சிபிஐ என்பது ஒரு பொறுப்பு வாய்ந்த மத்திய அரசு அமைப்பு. அவர்களிடம் தங்கம் பத்திரமாகத்தான் இருக்கும். மேலும் தங்கம் அழுகக்கூடிய பொருள் அல்ல. பிறகு ஏன் கவலைப்படுகிறீர்கள்… …. தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருப்பதால், உங்களுக்கு சிபிஐ திருப்பித் தரும்போது அதிக விலைதானே கிடைக்கும்.
புலனாய்வு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அதுவும் ஆரம்பக் கட்டத்தில் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் ?” என்று சராமாரியாகக் கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டே சென்றார். நீதிபதி கர்ணன் இப்படியெல்லாம் சராமாரிக் கேள்விகளை அள்ளி வீசியதும், சுரானாவின் வழக்கறிஞர் ஒரு கட்டத்தில் கோபமடைந்து, நியாயமாக தொழில் நடத்துபவர்களுக்கு இதுதான் கதியா என்று உரத்த குரலில் கேட்டார்.
நீதிபதி கர்ணனும் எரிச்சலடைந்து, “உங்கள் தொழிலை நீங்கள் ஒழுங்காக நடத்தினீர்கள் என்றால் எதற்காக சிபிஐ உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப் போகிறது ? நேர்மையான நபராக இருந்தால் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியதுதானே.. எதற்காக நீதிமன்றம் வருகிறீர்கள்” என்று அவரும் உரத்த குரலிலேயே பதில் சொன்னார்.
சுரானா தரப்பு வழக்கறிஞர் ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வாதிடுகிறார் என்று உங்களுக்கு வியப்பாக இருந்திருக்கும். அவர் அப்படி சட்டம் தெரியாத நபர் அல்ல. நன்றாகவே சட்டம் தெரிந்தவர். பிறகு ஏன் அப்படி வாதாடுகிறார் ? ஏன் என்றால், சுரானா நிறுவனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்துக்கும் எந்தவிதமான ஆவணமும் சுரானா நிறுவனத்திடம் இல்லை. இறக்குமதி செய்திருந்தால், அதற்கான கிளியரன்ஸ் உத்தரவு வேண்டும். விமானத்தில் தங்கம் வந்திறங்கியதற்கான என்ட்ரி பில்கள் வேண்டும். 400 கிலோ தங்கம் இறக்குமதி செய்து இருப்பில் வைத்திருப்பதற்கு, மத்திய வணிக அமைச்சகத்தின் ஆணை வேண்டும். எந்த நாட்டிலிருந்து வந்தது, அதற்கு உரிய வரிகள் கட்டப்பட்டனவா என்பதற்கான ஆவணங்களும் வேண்டும்.
இவை எதுவுமே சுரானா நிறுவனத்திடம் இல்லை. சட்டத்தின் பார்வையில் அந்த 400 கிலோ தங்கமும் கடத்தி வரப்பட்டதே. எந்த விதமான ஆவணமும் இல்லாமல் இப்படி பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தை விடுவிக்க வேண்டும் என்றுதான் சுரானா சகோதரர்கள் தலை கீழாக நிற்கிறார்கள்.
இந்தத் தங்கம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படாமல் போனால், சுரானா நிறுவனத்துக்கு 130 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். சுரானா சகோதரர்கள் இப்படித் துடிப்பதற்கு மற்றொரு காரணம், இந்தத் தங்கம் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளது என்று நிரூபணம் ஆனால், தங்கம் இறக்குமதி செய்யும் சுரானா சகோதரர்களின் லைசென்சும் ரத்து செய்யப்படும். கிட்டத்தட்ட தொழிலே நசிந்து போய் விடும். மேலும் ஆவணம் இல்லாமல் தங்கம் வந்திருப்பதால், அந்தத் தங்கம் முழுமையும் அரசுக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காகத்தான் சுரானா நிறுவனத்தினர் இப்படித் துடிக்கிறார்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கர்ணன், சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்டார். “சரி.. ஒரு வேளை, இந்த நீதிமன்றம், இந்த மனுவை அனுமதித்து, மனுதாரர் தனது பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தால் அது வழக்கின் புலனாய்வை பாதிக்குமா ?” என்று கேட்டார்.
சிபிஐ வழக்கறிஞர், நிச்சயம் பாதிக்கும். நான்கு மாதங்கள் அவகாசம் கொடுத்தால் சரி இறுதி அறிக்கை தாக்கல் செய்து விடுகிறோம் என்று கூறினார்.
சரி. தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன் என்று கூறி, வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி கர்ணன். இவ்வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
நீதிபதி கர்ணன், இவ்வழக்கு விசாரணையின்போது பேசியவற்றை பார்த்தால் முகாந்திரமே இல்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என்று தள்ளுபடி செய்துவிடுவார் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் இவ்வளவும் பேசி விட்டு, கடைசியில் கேட்ட கேள்வியைப் பாருங்கள் ….
ஓபனிங் நல்லாத்தான் இருக்கு. ஃபினிஷிங் எப்படி என்பதை நீதிபதி கர்ணன் தீர்ப்பு வழங்கும்போதுதான் பார்க்க முடியும்.
|
Comments
எம் எம் டி சி நட்டத்துல போனாலும் நீங்க அத கேட்ககூடாது.. எங்களைபோல இளிச்சவாயனுங்க எதுக்கு இருக்கோம்? நாங்க வரி கட்டிகிட்டே இருப்போம்.. அத எடுத்து அந்த நஷ்டத்த சரிபன்னிகிட்டே இருப்பாங்க.. அரசாங்கமும் நம்ம குருக்கள் மாதிரி ஆளுங்கள வச்சு திருடிகிட்டே இருக்கும்..
இதுல யார நொந்துக்கறது? சுரானாவையா? குருக்களைய? கர்ணனைய ?
எல்லாம் நம்ம விதி..
ஆனா இதுவரைக்கும் இந்த செய்திய மத்த பத்திரிக்கையுல படிக்கல.
ஒரு வேல சுரானா & கோ சுடர்மணி ஜட்டிகள் விளம்பரத்த பத்திரிகை காரங்களுக்கு குடுதுருப்பான்க ளோ?
Copied Savukku follwed by the news channel (Ulaka Tholaikatchi Varalatril , Muthal Murai aga ) and news Paper..
Hats-off Savukku...
சவுக்கு சார், கனிமங்கள், மெட்டல் விஷயத்தில் அதன் மூலம் மற்றும் சுரங்கங்களை பகுதிகளை சேர்ந்தவர்கள் கோலோச்சுவது தவிர்க்க முடியாதது. உதாரணத்திற்கு, கிரானைட் தொழிலில் ஆந்திரா ரெட்டிகள்.
நீங்கள் "மார்வாடிகள்" என்று குறிப்பிடுவது பெரும்பாலும், சென்னை சவுக்கார் பேட்டையை சேர்ந்த "ராஜஸ்தான்" மாநிலத்தை சேர்ந்த வியாபார சமூகத்தினர்.
இவர்கள் 50 வருடங்களுக்கு மேலாக சென்னையில் வைரம், இரும்பு, பித்தளை, தாமிரம், ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் ஆகியவற்றை பெருமளவில் வட இந்தியாவிலிருந் து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களை தமிழர்கள் என்ற ரீதியில் நாம் எதிர்ப்பது மிக "சிறுபிள்ளைத்தனம ான" ஒரு செயல்.
இதை 30 வருடங்களுக்கு முன்பு நான் முயற்சி செய்தேன், நான் கண்டுக்கொண்டது, தி.மு.கா. வின் ஆணிவேரே இவர்கள் கையில்தான் உள்ளது. குறிப்பாக, மு.க.அழகிரி இவர்களின் செல்லப்பிள்ளை. மார்வாடிகள் கெட்டவர்கள் அல்ல, ஆனால் எல்லாவிதமான "ஊழல் வியாபாரமும்" செய்து முடித்து விட்டார்களவர்கள ை "கிளாஸிக்கல்" வழியில் ஒன்றுமே செய்ய முடியாது.
இவர்கள் "டாடாவைப்போல" பிஸினஸ் சமூகத்தினர். வட இந்தியாவில் மற்ற சமூகத்தினரும் உள்ளனர். ஆகையால் "நியாயம்" என்பது வட நாட்டிலிருந்தே பிறக்க வேண்டும் !.
சமீபகாலமாக ஆந்திராவில் ஒரு சிபிஐ சிறப்பு நீதிபதியே ரெட்டி சகோதரகளின் ஜாமீனுக்கு சுமார் 100 கோடி விலை பேசியதாக தகவல். உருப்படுமா இந்த நாடு??
நல்ல வேளையாக ஒரு சில நல்ல அதிகாரிகளின் உதவியில் இந்த நீதிபதி கைது செய்யப்பட்டு விட்டார்.
எனவே நம்ம நீதியரசருக்கும் கொஞ்சம் பயம் இருக்கும். எனவே இந்த வழக்கில் சுரானா பார்ட்டிகள் தோற்று போகவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் உங்களைப் போல விழிப்புடன் சிலர் இருப்பதாலும் இவர்கள் தோற்ப்பார்கள் என்று நம்ப வாய்ப்பிருக்கிற து.
“ஈழம் வேண்டும் என்று சொன்னால், இலங்கையில் தங்கியிருக்கும் அரவது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், வேண்டாம் என்று சொல்கிறார் கலைஞர் கருணாநிதி என்றும் சொல்ல முடியாது. காரணம், இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் தலைவர் இரா.சம்பந்தன் குடும்பத்துடன் வசிப்பதே, சென்னையில்தான்.
This man Parthiban Shanmugam in 1980s get caught for forgery as a Medical Doctor and opened clinic in Madras when he had only +2 qualification and sentenced by a Madras court- now working for some Malayalees film organization from US.
http://www.kickstarter.com/projects/1813935558/refuge-pugalidam
http://www.facebook.com/parthiban.shanmugam
மாக்கன் கூற்று சரி. அனால், பல நீதியரசர்கள் உள்ளே கம்பி என்ன போயிருக்கும் பொது, இந்த நிதியரசர் மட்டும் தப்பா சொல்லிட்டா..... கம்பி என்ன தான் வேண்டும் என்பது தெரியாமல் இருக்க மாட்டார். கண்டிப்பாக நல்ல தீர்ப்புதான் எழுதுவார். சிபிஐ ஆப்பு அடித்துவிடும் என்பது இவருக்கு தெரியாமல் இருக்காது.
அவன்கண் ஆய்ந்து விடல்.” வள்ளுவன் சொன்னதுபோல்
கொடை வள்ளல் கர்ணனிடம் இந்த வழக்கை ஒப்படைத்தால்தான ் தமக்கும் தாராளமாக கிடக்கும் என்று “தல” இக்பால் நினைத்தது சரிதான்.400 கிலோ தங்கம்,130 கோடி ரூபாய் மதிப்பு.
ஆற்றோடு வெள்ளம் போகும்போது ஐயா குடி அம்மா குடி..என்று ஆளாளுக்கு பங்கு பிரிக்க ஆரம்பிச்சிட்டாங ்கே!
இவர்கள் எல்லாம் பணம் தின்னும் பிணங்கள்.இயேசு கூறினதுபோல் “வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள்”
எவ்வளவுதான் தின்பார்கள்..கடைசியில் மண்தான்
According to one of the men arrested, transporting the cash to Hyderabad from Mr Reddy's home in Karnataka was tough because by-elections were being held in Andhra Pradesh at the time, and there were lots of checks on vehicles moving in and out of the state from Karnataka.
So the realtor in Hyderabad was commissioned to pay Pattabhi Rama Rao a part of the 20 crores that was meant to be paid for the bribe, commission another expenses for managing people at the court''.
His highness, Karnan would also count the row, if he bails out the gold from Surana.
antha 400kg thagatha apadiyae antha karnanuku kavasa kundalam seiya payan pathikoga....
IF U EARN MONEY, OK
PLS U THINK JUST LIKE U EAT ONLY THREE TIMES OR FIVE TIMES UNDERSTAND MR. JUDGE. IN U R LIFE 30 OR 50 YEARS ONLY. U AND YOUR FAMILY LIVE 500 YEARS OR 2000 YEARS
FIRST THINK THINK . OR ONE DAY U DONT EAT ANYTHING ALSO WATER
FIRST KNOW THE HUMAN LIFE
க(ர்)ண்ண கட்ட விட்டுட்டாங்களே ?
Savukku is like Nira Radia in experience and knowledge but he works for common man and Justice.
அப்படியே இந்த ராமஜெயம் கைது பற்றி கொஞ்சம் ஒரு கட்டுரை எழுதிடுங்க சவுக்கு....
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....
"செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா" அப்படின்னு பாரதத்தில் வரும். இந்த கர்ணன் எந்த கடனை தீர்க்க இப்படி செய்றார்னு நீயே தெளிவா சொல்லிடு சவுக்கு.
RSS feed for comments to this post