முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்". அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 79
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012 23:38

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".

final3

 

என் வாழ்வில்
என்னை விட்டு விலகாத 
இரண்டு நினைவுகளில்,
இந்த வரிகளும் ஒன்று..


ஏன் எதற்கென்று ஞாபகமில்லை.

ஒருபொழுது,
கருணாநிதி என்ற சுயநலவாதி
ஏகாந்தம் கலைத்து
மனக்குரங்கு கிளர்நது
ஊர்வலம் போக புறப்பட்டோது,
வஞ்சகம் கொப்பளிக்க கக்கிய
கயமையான கவிதையின் ஒருவரி.

இன்று கருணாநிதி என்ற கருங்கல்,
தன்னிச்சையாக,
எனது வாழ்வையும் எனது மண்ணையும்
மானத்தையும் விற்பனை பொருளாக்கி,
கடை விரித்து
தினம் ஒரு விளம்பரத்துடன்
"டெசோ" என்று ஏலம் கூறி கூவி விற்கும்போது,
அந்த கயமையான கவிதையின் வரிதான்
என் ஞாபகத்திற்கு வந்துபோகிறது.

உள்ளூர பெருத்த கயமை குடியிருக்க,
மேல் பூச்சுடன்
நல்லவன்போல் நடித்து
நடை வண்டியில் நகர்ந்தபோதும்,
பனைமரத்தில் ஒட்டிய அறிவிப்பு தாழாக
கருணாநிதியின் வஞ்சகம் மட்டும்
பல்லிளித்து,
என் மனக்கண்ணுள் நிர்வாணமாக சிரிக்கிறது.

எனது வாழ்வையும் எனது இனத்தையும்,
கொன்று புதைத்துவிட்டு.
குற்ற உணர்வு எதுவுமில்லாமல்
செம்மொழி மாநாடு என்று,
குடும்பதை கூட்டி இழவுக்கு விழாவெடுத்து
ஈழத்தமிழரின் முதலாம் ஆண்டு திவஷம்,
கோவையில் நடத்தி மகிழ்ந்ததை மறப்பேனா?
டெசோ, என்ற பதாதை கட்டி
மூன்றாம் ஆண்டு அஞ்சலி சென்னையில்(?)
இதை மறப்பேனா?

யாரிடம் முறையிடுவது?



செத்த இலட்சம் தமிழனுக்கு
ஒரு நிமிட அஞ்சலி செய்ய வக்கற்று
கயமையுடன்,
சோனியாவின் சுருக்குத்தடத்தில் வீழ்ந்து கிடந்த
சூழ்ச்சிக்காரன்,
ஈழத்தமிழனுக்கு வாழ்வுரிமை 
விழாவெடுக்கிறாராம்?
தமிழினமே கேட்க மாட்டீர்களா??

இன்று நெருங்கி வரும்
நித்திய இருளிலிருந்து தப்பிக்க
எத்தனை நாடகங்கள்.
இது 'காலத்தின் குற்றமல்ல'
"கருவின் குற்றம்''!

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".
அந்த வரி ஊற்றெடுத்த மூல இடம் அறிந்தபோது
அந்த கவிதை முழுவதையும்
ஞாபகத்தில் வைத்திருக்காதது
என் குற்றம் என்று எனக்கு படுகிறது.

மீதி ஞாபகமில்லாவிட்டாலும்
அந்த ஒருவரி
நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தாற்போல் நுழைந்து.
நெஞ்சுக்கூட்டில் நெருடி நிற்கிறது.

rev

அன்று எனக்கு அர்த்தம் புரியவில்லை
இன்று அர்த்தம் புரிந்தபோது
வெப்பத்துடன் ஜீரணிக்க முடியவில்லை.

இள வயதில் ஏன் எதற்கென்று,
எதுவுமே புரியாமல்
கவிதையின் நோக்கம், தாக்கம் உணராமல்
கருணாநிதியின் மீதிருந்த
அதீத ஈர்ப்பு காரணமாக
அந்தவரிகள் பசுமரத்து ஆணியாக
என் நெஞ்சில் நீட்டி படுத்துவிட்டன.

இன்று வெறுப்புடன்
வெளியேற மறுக்கின்றன.

கருணாநிதியை  விட்டு  நானும்
எனது ஒட்டுமொத்த சந்ததிகளும் (செத்தவை போக)
நெடுந்தூரம் விலகி போய்விட்டாலும்,
கயமை நிரம்பிய கருணாநிதி
என் இனத்தின் அக்குளுக்குள் துப்புவதை
என் இனத்தாலும் என்னாலும் சகிக்க முடியவில்லை.

இரண்டாயிரத்து ஒன்பது,
அதிகார மிடுக்குடன்
அனைத்து படுகொலைக்கும் துணை நின்ற பாவி,
அதிகாரம் பறிக்கப்பட்டபோதும்
என்னையும் என் இனத்தையும்
விற்று விபச்சாரிபோல் வாழ்வது எதன் குற்றம்.
கருவின் குற்றமல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்?

நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு விடுவோம் 
என்று பயந்தபோது,
நேற்றைய தினம்
ஈழம் காணாமல் உயிர் போகாது என்றாய்,
ஈழத்துக்காக சாகும்வரை போராடுவேன் என்றாய்,
மறுநாள்
தமிழ் ஈழம் இல்லையென்றாய்,
தீர்மானம் இல்லையென்றாய்,
வாழ்வுரிமை மாநாடு என்றாய்,
மருந்து போடும் மனித நலன் என்றாய்,
டெசோ, என்றாய்,
இன்று பொதுக்கூட்டம் என்கிறாய்.
நாளை என்ன சொல்வாய்?

அன்று
அரை நாள் உண்ணவிரதம் இருந்தாய்,
மனித செயின் என்றாய்,
ஒட்டு மொத்த ராஜினாமா என்றாய்,
மறுநாள்
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு
உதவ முடியாது என்றாய்,
ராஜபக்க்ஷவை கோபப்படுத்தாதீர்கள் என்றாய்,
இன்னொரு நாட்டு பிரச்சினை என்றாய்,
சகோதர யுத்தம் என்று காறி உமிழ்ந்தாய்,
உனக்காவது ஏதாவது புரிகிறதா?
இது கருவின் குற்றமல்லாமல் எதுவின் குற்றம்?

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".
உனக்கு பொருத்தமான வாக்கியம்தான்.
அருமையான இலக்கிய மணம்.
மிகவும் பொருத்தமான உயிர்ப்பான உவமை!
என் வாழ்க்கையில் மறக்க முடியாத சொல்லாடல்.

உன்னை திருவாரூரில் பிறந்த தெலுங்கன்
என்று பலர் சொல்ல கேட்டதுண்டு.
பச்சையப்பன் கல்லூரியில் இலக்கியம் படித்த என் அக்கா
அவனை மராட்டியன் என்று சொன்ன ஞாபகம்.
சிலர் குஜராத்தி என்று கூறியதுமுண்டு.
ஆனாலும் சிக்கல் இன்னும் சிலரிடம் தொடர்கிறது.

கருணா தமிழன் இல்லை என்பதுமட்டும்
கருணாவுக்கும், தமிழுக்கும் தெரியும்.
எனக்கும் தெரியும்,

உன்னையே நீ கேட்டுக்கொள்
ஏனிந்த ஒளிவு மறைவு
இதுதான் காலத்தின் குற்றமோ
அன்றி கருவின் குற்றமோ?

ஆனாலும்
உனது இரத்தம் தமிழனுக்கு எதிரானது.
என என் அந்தர அத்மா என்றைக்கும்
அறைகூவல் வைத்துக்கொண்டேயிருக்கிறது.
தமிழகமும் இறுதிக்காலத்தில்
அதை நன்கு உணர்ந்து கொண்டது.
அதனால் பிரியாவிடையும் அளித்தது
விரட்டியபோதும் 
நீ அடங்க மறுப்பது எந்தக்குற்றம்?

நீண்ட கால ஓட்டத்தின் பின்
கருணாநிதியின் பயணத்தின் பாதையை
நான் சரியாக அறிந்து கொண்டபோது.
கருணாவின் அசுரத்தனமான சுயநலம்
என் நாட்டையும்-இனத்தையும்,
என் குழந்தைகளையும்,
என் இருப்பிடத்தையும் இல்லாது அழித்திருந்தது.
அது இறந்த காலம்!

அனைத்தையும் இழந்து
நான் எலும்புக்கூடாக ஓட்டமெடுத்தபோது,
இறந்துபோன எனது உறவுகள் பற்றி
மனம் அசைபோடவில்லை,
ஆனால் கருணாநிதியை மட்டும்
என்னால் மறக்க முடியவில்லை!.
இது நிகழ் காலம்!

ஒவ்வொரு அரசியல் இக்கட்டையும்
தனது குடும்பத்தையும்
இட்டுக்கட்டுவதற்காக,
கருணாநிதி எடுத்த பக்கச்சாவிகள் அனைத்துமே (பக்கச்சாவி என்பது அச்சாணி)
ஈழத்தமிழனின் உயிர்களாக மாறியிருக்கிறது.

இன்று
வாரிசுகளும், மனைவிமார்களும்,
தோற்றுவித்த வில்லங்கம் போக்க,
கருணாநிதி கையில் எடுத்திருப்பதும்
எனது ஈழத்து வாழ்வையும், எதிர்காலத்தையும்
என்னும்போது,
எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்.

யார் நீ
எனது மண்ணுக்கும்
எனது வாழ்வுக்கும் மாநாடு கூட்ட
உனக்கு யார் அதிகாரத்தை தந்தது?

2

பச்சோந்தியான கருணாநிதியின் குணத்தை
ஏற்கெனவே நான் அறிந்திருந்தாலும்,
மறைந்த தமிழ்ச்செல்வனின், மரணத்தின்போது
வஞ்சகத்துடன் ஆதார சுருதி கூட்டி
இரங்கல் எழுதிய போதுதான்
நான் அறிந்து கொண்டேன்.

கருணா கவிதை எழுதினாலும்,
திரைப்படத்துக்கு வசனம் எழுதினாலும்,
காலாற (உண்ணாவிரதமல்ல)
கடற்கரைக்கு காற்று வாங்க
தள்ளு வண்டியில் போனாலும்
காரணம் இல்லாமல் இருக்காது
என்ற விஞ்ஞான உண்மை.

நான்
என் அறிவுக்கு எட்டிய மட்டில்
சிந்தித்துப் பார்க்கிறேன்.
கவியரசு கண்ணதாசனை விட,
தண்டோரா வைரமுத்துவை விட,
முக்காலா கவிஞன் வாலியை விட
பாரதி, கம்பனையும் விட,,
பொய்க்கவிதை புனைய வஞ்சகம் வரைய,
கருணாநிதியளவுக்கு எவராலும் முடிந்திருக்கவில்லை

சுயநல சுரப்பி
உயர் அழுத்தம் கொள்ளும்போது,
நூதனமான வழிகளில்
விஞ்ஞானத்தாலும் கண்டுபிடிக்க முடியாத
வித்தையை,
வித விதமாக
வினோதமான விளக்கவுரைகளாக,
விதைத்து அறுவடைசெய்ய
கருணாநிதியைப்போல் இன்னும் எவரும் பிறக்கவில்லை!

கோயபல்ஸை'யும் வென்ற 
கெட்டிக்காரன் கருணாநிதி.

"டெசோ" என்ற இத்துப்போன விஷவித்தை விதைத்து,
செத்துப்போன ஈழத்துக்கு மாநாடு கட்டி
ஈழத்தமிழர் பெயரால்
தப்பிப்பிறந்த மகளுக்கும்,
தறுதலை மகன்களுக்கும்,
வாழ்வுரிமை மாநாடும்,
திமுக, வின் மீழெழுச்சிக்கான ஆய்வரங்கமும், நடத்த
வெட்கமில்லையா கருணாநிதி?

கோடரிக்காம்பு என்பது
உனக்கு எவ்வளவு பொருந்தியிருக்கிறது,
தீட்டிய மரத்தில் கருத்து கூர் பார்த்து
எத்தனை குழந்தைகள் சாக துணை நின்றாய்,
வைத்தியத்துக்கு வந்த என் அன்னை
பார்வதியை திருப்பி அனுப்பினாய்.
இதைவிட ராஜபக்க்ஷ என்ன பெரிதாக செய்துவிட்டான்.
அவை காலத்தின் குற்றமா, கருவின் குற்றமா.

2011 உனது படுதோல்வியின் பின்னாவது
நீ திருந்தியிருப்பாய் என்று
உன் வயதை மதிப்பிட்டு ஏமாந்து போனேன்.
மோனப் பெருவெளியில்
சொற்பமாவது ஞானம் பிறந்திருக்கும் என்று
வீணாகிப்போனேன்,

வாய்க்கரிசியாக வஞ்சகம் செய்தவனை,
ஏமாற்றி சொகுசாக வாழ்பவனை,
மனச்சாட்சியின் எதிர்நிலையை,
எந்த கவிதை வரிகளில்
விதந்துரைக்க முடியும்.

நாளை குஞ்சாமணியும், சூனா வீயன்னா பாண்டியும்
உன்னுடன் இருப்பார்கள் என்பதற்கு
யார் உத்தரவாதம்?
உன்னைத்தவிர உதவிக்கு உனக்கு
எவருமில்லை.
இதுதான் காலத்தின் கோலம்.

-ஊர்க்குருவி-

 

Comments  

 
0 #43 சண்முகம் 2013-04-16 20:38
,இந்த பார்ப்பன சக்திகள் ஈழத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் தமிழர்களையும் அழிக்கும் வேளையில் உங்களை போன்ற சுயநினவ்ற்றவர்க ளின் துணையோடு நிறைவேற்றி வருகிறார்கள் ,ஆனால் ஒன்றுமட்டும் முள்ளிவாய்க்கால ் ,மட்டுமின்றி ,இதுவரை உயிர் இழந்த ஈழ மக்களின் ஆவிகள் கூட உங்களையும் ,அடிமைகள் ,வைகோ ,நெடுமாறன் ,தாபா ,சீமான் ,மணியன் போன்றவர்களி மனிக்கவே மன்னிக்காது எல்லாமே கருனவால்தான் என்றால் அவரை தவிர இவர்கள் எல்லாம் வெத்து வேட்டுக்கள் தானே ?அப்பிடி இருக்கும்போது அவர்களை இன்னும் எதற்கு நம்ப வேண்டும் இப்போது கூட டெசோ வால்தான் மாணவர்கள் போராட்டம் எல்லாம் ,இப்போது திமுக வெளியே வந்து விட்டது காங்கிரஸ் அரசு அரசு கவிழ்ந்து விட்டதா என்ன ?அப்போதும் அதுதான் நடந்து இருக்கும்
Quote
 
 
-1 #42 சண்முகம் 2013-04-16 20:36
சவுக்கு என்கின்ற பெயரில் நல்லவர்களை மட்டும் அடிப்பதுதான் உங்கள் வேலையா ?கவிதை என்கின்ற பெயரிலும் ,கட்டுரை என்கின்ற பெயரிலும் அமிலத்தை உமிழுவது உங்களை போன்றவர்கள் பிழைக்க உதுவமெ தவிர நீங்கள் குறிப்பிட்டுருக ்கிற ஈழ மக்களுக்கு எந்த வகையுளும் பயன் தராது மாறாக துன்பத்தையே விளைவிக்கும் ,முள்ளிவாய்க்கா ல் படுகொலையின் போது எத்தனை நாட்டு ராணுவங்கள் களமாடியது என்பது சிறுகுழந்தைகளுக ்கு கூட தெரியும் ,நீங்கள் குறிப்பிடுகிற கருணா என்ன பாரத பிரதமர ,சினாவின் அதிபர ,தாய்லாந்தின் ,பாகிஸ்தான் நாடுகளின் அதிபரா சொல்லுங்கள் ஜெயாவின் பாணியில் சொல்வதனால் மைனாரிட்டி அரசின் முதல்வர்தானே ,அவரால் இத்தனை நாட்டின் ராணுவத்தையும் தடுத்து நிறுத்த முடியுமா ? ஜெயா மெஜாரிட்டி முதல்வரால் அந்தநாட்டின் அதிபர் கொலைகார சண்டாளன் ராஜபக்ஷே இந்திய வர முடிந்ததை தடுக்க முடிந்ததா ? வைகோவால் முடிந்ததா ?சீமானால் முடிந்ததா ?நெடுமாரானால் முடிந்ததா ?தாபாவால் முடிந்ததா ?முடியவில்லைதானே ?அப்போ கலைஞரால் மட்டும் எப்படி முடியும் ?மாறாக கனிமொழி போன்றவர்கள் ,திருமாவளவன் ,சுபவீ போன்றவர்கள் எல்லாம் பிரதமரையும் ,பாராளுமனரத்தில ும் ,திருமதி சோனியா விடத்திலும் பேசி போர் நிறுத்தம் ஏற்ப்பாடு செய்து அப்போதைய தலைவர் பால்ராஜ் அவர்களுக்கு தெரிய படுத்தி அவர் மாவீரன் அவர்களிடத்தில் சொன்ன போது வைகோ ,தாபா ,நெடுமாறன் போன்றவர்கள் வேண்டாம் வரப்போகிற தேர்தலில் பிஜேபி ஜெயக்கபோகிறது அவர்கள் உதவுவார்கள் என்று போரை தொடர செய்த பெருமை இந்த காகித புலிகளையே சாரும் அங்கே வெல்ல முடியாது என்பது களத்தின் நிஜம் ஆனால் இங்கே உட்க்கார்ந்துக் கொண்டு பார்ப்பன அடிமைகள் ,பெட்டிக்கு கடமையை செய்துகொண்டிருந ்த மேற்கூறிய வெண்ணைகள் மாவீரனின் கருத்துக்கு மாறாக அவரை போர் தொடர செய்து முள்ளிவாய்க்கால ் படுகொலையின் காரண கர்த்தாக்களே இவர்கள்தான் அப்ப்டியுருக்க உங்கள் பொழைப்புக்கு பார்ப்பன குள்ள நரிகளின் ,ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிக்கு உட்பட்டு எல்லாத்தையும் முடித்துவிட்டு ஆதிக்க சக்திகளின் ஊடகங்களின் சதிக்கு பலிகொடுத்துவிட் டு எல்லபழியையும் கருணா மேல் போடுவது சுத்த கள்ளத்தனம் ,களவாணித்தனம்
Quote
 
 
0 #41 Wells 2012-08-20 16:05
Superb !!! I salute your courage and valuable feelings !!! But no use of this story writer...
Quote
 
 
0 #40 k.senthilkumar 2012-08-16 15:03
Dear Savukku,

I read your article on savukku.net
கொள்ளையோ கொள்ளை.. .. ..

It was very nice and perfect - and it should be read by all the people in tamil nadu. ever tamil people should read it.

I was watching this site since your arrest on 2009. i thought of write the article but I cannt Now I plan to write something abount Group II question paper leak - And Also I applied for the exam i am not received a hall ticket it could be rejection from the TNPSC but i have the online confirmation.

Now what I want I plan to stop upcoming exam - the selection could be based all their marks the obtained from 10th on wards - like cutoff in anna university

Selection should be like:

1. 50% of marks taken from SSLC
2. 50% of marks from HSC
3. 50% marks from their degree
4. 50% marks from TNPSC exam - main exam [including both tamil and GS]
5. 10% marks from personal interview

Then Only we can stop the wrong selection otherwise it will grow like anything.

-senthilk
Quote
 
 
0 #39 M.GOPALAKRISHNAN 2012-08-15 17:58
Hai, Good
Very Nice Story
Quote
 
 
0 #38 mohan ramachandran 2012-08-15 12:04
The traitor
Quote
 
 
+1 #37 Krish, Nagercoil 2012-08-15 10:25
Dear Savukku Sir,
Write about Nadaka Nadiki Corrupted Jaya and Mannarkudi Mafia rather than wasting your time on Sarkaria famous corrupted crook Karuna and family. Please write about corrupted Jaya and ministers.
Quote
 
 
-1 #36 Padman 2012-08-15 02:37
திரு சவுக்கு அவர்களே,

எனக்கு இன்னும் விளங்கவில்லை... எதற்காக நாம் இன்னும் கருணாவை திட்டிக்கொண்டிர ுக்கிறோம்? துரோகியென முழுமையாக தெரிந்துவிட்டது . பிறகு எதற்கு அவரை நாம் பொருட்படுத்த வேண்டும்.

இனி அவர் போடும் எந்த நாடகத்தையும் மக்கள் நம்பமாட்டார்கள் .

திரும்ப திரும்ப கருணாநிதியால்தா ல் வீழ்ந்தோம் என சொல்லிக்கொண்டு அடுத்து என்ன செய்வது என திட்டமிடாமல் இருப்பது வீழ்ந்து கிடக்கும் சமூகத்திற்கு நல்லதன்று.

சிங்களன் தமிழர்களின் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவது இன்னும் நிலமையை மோசமடைய செய்யுமே தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்ல ை.

மத்தியிலிருக்கு ம் இந்திய அரசின் துணையில்லாமல் தமிழகத்திலிருந் து ஒரு துரும்பைக்கூட நம்மால் இலங்கையில் நகர்த்த முடியாது.

மத்தியில் பி ஜே பி ஆட்சிக்கு வந்தாலும் சரி... காங்கிரசே தொடர்ந்தாலும் சரி... இல்லை முன்றாவது அணி ஆட்சி அமைத்தாலும் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அவர்களிடம் பதவிக்காக சோரம் போகுமே தவிர ஒரு புண்ணாக்கும் நடக்காது.

ஒரு பண்பட்ட சமுகமாக இருப்பின் இனியும் நாம் பழைய பஞ்சாங்கத்தை படிப்பதை நிறுத்திவிட்டு இனி என்ன செய்ய வேண்டுமென திட்டமிடுதலே சிறப்பான அணுகுமுறையாகும் .

புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில ் அறிவும், போராட துணிவும் இன்னும் இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ தமிழகமே தமிழர்களின் முகமாக மாறிவிட்டது. இனி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழகத்தில் அரசியல், கலை மற்றும் இலக்கிய ரீதியாக ஒருங்கிணைத்து அவர்களுக்கு நாம் இங்கு களமமைத்து கொடுத்தாலே போதும் மீதி வேலையை அவர்கள் பார்த்துக்கொள்வ ார்கள்.
புலி நரியாக மாற வேண்டாம். நரி வேடம் போடலாமல்லவா? யதார்த்தை புரிந்துகொண்ட நடப்பது கோழைத்தனமன்று!

இனி இலங்கை அரசும், இந்திய அரசும் பல விதங்களில் முறுக்கிக்கொண்ட ு நிற்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். பிறகு எல்லாமே தமிழர்களைத்தேடி தானாக வரும்.

புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்க தமிழக அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும். இது பல கதவுகளை திறக்குமென்பது உண்மை.

~ பத்மநாபன்
Quote
 
 
0 #35 seren 2012-08-14 14:46
இதையெல்லம் கருனனிதி படிபார மாட்டரா? இந்த உலகதுல என்ன நடக்குதுனு அவருக்கு தெரியுமா தெரியதா?
Quote
 
 
+2 #34 mam 2012-08-14 09:39
கருனா நீதி ஒரு டெவிட்ய பயன் குச்ச்போ
ஒக்க நெரம் எல்ல டெடிய பயயன்ம
Quote
 
 
+8 #33 M RAMASWAMY 2012-08-14 09:32
கருணா என்ற நயவஞ்சகன், இன்னும் எத்தனைக் காலம் ஏமாற்றுவான் தமிழனை
Quote
 
 
+9 #32 Kasi 2012-08-14 01:25
ராஜபக்சே, கனிமொழி, ட் ற் பாலு முதலானோர் இலங்கை சென்ற போது கொடுத்த அன்பளிப்பு பத்தல கிழவனுக்கு. அதான் மாநாடு வெச்சு மிரட்டுறான். ராஜபக்சே ஒரு முட்டாள். போன வாரம் ஒரு பெட்டி கொடுத்திருந்தா இந்த மாநாட்டையே "போர் நிறுத்தம் வந்துவிட்டது" என்று உண்ணா விரதத்தை முடித்தது போல "ஈழம் கிடைத்து விட்டது" என்று மாநாட்டையே இழுத்து மூடியிருபான்.

இது இப்படியிருக்க சுனா பாண்டி ஈழ தமிழர் பிரச்சனைக்காக கிழவன் ஐநா போகணும்னு பேசுறான்.
எலேய் முதல்ல டில்லி போய் பிரச்சனைய சோனியா கிட்ட சொல்ல தைரியம் இருக்கான்னு உன் தலைவர் கிட்ட கேளு அப்புறம் வானம் ஏறி வைகுண்டம் போகலாம்.
Quote
 
 
-7 #31 மனோன்மணி 2012-08-14 01:12
இலங்கையில் தற்போதுள்ள தமிழ் கட்சிகளில் பெரிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இன்றும் அரசியல் செய்துகொண்டு உள்ளவர்கள், விடுதலைப் புலிகள், மற்றும் பிற இயக்கங்களின் துப்பாக்கிகளில் இருந்து ‘எப்படியோ’ தமது உயிர்களைக் காத்துக் கொண்டவர்கள். இவர்களது தலைவர்களே சுட்டுக் கொல்லப்பட்டபோது , இவர்கள் உயிர் தப்பியிருப்பது, அந்ததந்த நேரத்தில் யாருடைய கை ஓங்கி உள்ளதோ, அந்த தரப்பை சார்த்து இருந்ததால்தான்.

இன்றைய இலங்கை தமிழ் ‘தேசிய’ தலைவர்களில் ஒருவரது மகள் மத்திய அரசு கோட்டாவில் டில்லியில் மருத்துவம் படிக்கிறார்(சுர ேஷ் பிரேமசந்திரன்)- சீட்டு வாங்கி கொடுத்த ஏமாளி இந்திய வம்சாவழி வரதராஜ பெருமாள், அன்புமணி ராமதாஸ் மூலமாக- PALMYRAH: Thus three of the four Provincial ministers including the CM were of Indian lineage. Varatharaja Perumal’s puppet regime was fast becoming a dud - http://dbsjeyaraj.com/dbsj/archives/8591

மற்றொரு தலைவரது இருதய சிகிச்சைக்கு, பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்றுக்கொள்ளும ் மருத்துவ மனையை ஏற்பாடு செய்து கொடுத்தது மத்திய அரசு. இன்னொரு தலைவரின் கொழும்பு வர்த்தக சாம்ராஜ்யம், இலங்கை அரசின் கன்ட்ராக்ட்டுகள ை நம்பி உள்ளது.

இந்த தலைவர்கள், விடுதலைப்புலிகள ் பலமாக இருந்தபோது, புலிக்கொடியின் கீழ் நின்று முழக்கம் செய்தார்கள். இப்போது இலங்கை அரசின் கை ஓங்கியுள்ளது. சிங்கக் கொடியை கையில் ஆட்டியபடி உள்ளார்கள்.

கடல் கடந்து மாநாட்டுக்கு இவர்கள் வரவேண்டும் என்றால், கருணாநிதி ஒன்று, தமிழகத்தில் ஆட்சியை கையில் வைத்திருக்க வேண்டும். அல்லது, ஒரு துப்பாக்கியை கையில் வைத்திருக்க வேண்டும்.

இந்த இரண்டுக்கும் மட்டுமே பிஸ்கெட் போட்டு பழக்கப்பட்டவர்க ள் மாநாட்டுக்கு வரவில்லை என்பது, கருணாநிதியின் தவறல்ல.

http://dbsjeyaraj.com/dbsj/archives/9439
Quote
 
 
+9 #30 ராமகிருஷ்ணன் 2012-08-13 20:24
நாளை நாற்ப்பது தொகுதியிலும் இவர்களை வீழ்த்தும்போதுத ான், எம் நெஞ்சம் மகிழும்.....
Quote
 
 
+19 #29 ஆர்.தியாகு 2012-08-13 16:23
[ஃஉஒடெ நமெ="குமரெசன்123"]டேய் கருணாநிதி நீயும் உன் குடும்பமும் செத்தாலே ஈழம் கிடைத்த மரிதிரிதாண்டா புரிஞ்சிக்கோடா... போடா... மானமுள்ள தமிழன் என்றால் 2 குடும்பத்தோடும் தற்கொலை செய்து உன் தமிழ் பற்றை உறுதி செய்...தற்கொலை செய்ய பெங்களுருக்கு செல்வி வீட்டுக்கு போகாதே... கோபாலபுரத்திலோ அல்லது சிஐடி காலனியிலோ தற்கொலை செய்டா நாய்மவனே[/ஃஉஒடெ]



மன்னிக்கவும் !! மானமுள்ள தமிழன் அல்ல..!!
மானமுள்ள தெலுங்கன் :-)
Quote
 
 
+21 #28 ஆர்.தியாகு 2012-08-13 16:14
எதை எடுத்து அடித்தாலும் உரைக்காதவனுக்கு
உறையிலிருக்கும் சவுக்கை எடுத்து அடித்தால் உரைக்குமா..?


அடுத்த வீட்டு சிறுவனை கேட்டால் சொல்வான் -
மஞ்சள் துண்டுப்போட்டு
பழுத்த முகத்தின் மேல் கருப்பு கண்ணாடி அணிந்திருக்குமா ம்!!! வஞ்சகம் !!!


இவன் பெற்றடுத்தது
பிள்ளையாரா..? முருகனா..?
வார பத்திரிக்கைகள்
ஞானபழப் பிரச்சனை மாதிரி
ஞாபகமாய் இதழ்விடாமல் எழுதுகிறது!


சனியனுக்கு காக்கை
எமனுக்கு எருமை
இவனுக்கு வீல் சேர்..!

நடுவீதியில்
தமிழர்கள் சுற்றி நிற்க...
இவன் சன்னதிகளை ஒட்டுத்துணியில் லாமல்
தூக்கில் தொங்கவிடும் - ஒரு புரட்சி என் தமிழனிடம் வரும் வந்தே தீரும்!!!
Quote
 
 
0 #27 Dash Raj 2012-08-13 15:56
By holding TESO conf, the new alliance will be formed in the centre. See http://www.rediff.com/news/column/dmk-s-rally-political-alignment-changing-at-the-centre/20120813.htm ;-)
Quote
 
 
-25 #26 puthiyavanraj 2012-08-13 12:59
நீதிபதிகளே தமிழக அரசின் வாதங்களை ஏற்காமல், ஒரு ஞாயிற்றுக்கிழமை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு , நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். ஆனாலும் போராளி போன்றவர்கள், ஏதோ நீதிபதிகளை விட தாங்கள் மேதைகள் என்பது போல எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
Quote
 
 
+17 #25 குளித்தலை குமரேசன் 2012-08-13 12:11
கலைஞர் மு.கருணாநிதி அடிப்படையில் ஒரு "PUB DADDY". அவர் TESO மாநட்டுக்கு அலங்கார பந்தலைப் பாருங்க.
"ஓடியாங்கோ, ஓடியாங்கோ..உங்களை ராஜா மாதிரி வச்சிக்கிறோம்(ப சையிருக்கும் வரை).. ஈழ அரண்மனை கட்டியிருக்கிறோ ம், நீங்கள் அகதி அந்தஸ்து கேட்ட நாடுகளை விட அலங்காரமானது. உள்ளே வாங்கோ....குஜாலா இருக்கலாம்.

திராவிட இயக்கத்திற்கும் தமிழ்நாட்டுக்கு ம் சம்பந்தம் கிடையாது. அது மாகாராஸ்ரா, கர்நாடாக புலே மற்றும் லிங்காயத்துகளால ் உருவானது. பிரிடிஷுக்கு எதிராக போன சித்பவனம் பிராமணர்களுக்கு ம், ஆரிய சமாஜுக்கும் ஏற்ப்பட்ட முரண்பாட்டுடன் சேர்ந்து பிரிட்டிஷுக்கு ஆதரவாக கன்னடரான ஈ.வே.ராமாசாமியால் தமிழகத்துக்கு வந்தது. 1947 சுதந்திரத்திற்க ு பிறகு ஏற்ப்பட்ட வெற்றிடத்தால் தமிழகத்தின் சாதாரண மக்கள் அதற்கு பெரும் ஆதரவு அளித்தார்கள்.
இதில் கலைஞர் மு.கருணாநிதி எங்கிருந்து "இடை சொருகினார்"?

அறிஞர் அண்ணா சினிமா உலகத்தை பயன்படுத்த முயன்றபோது அவரின் பலவினத்தை பயன்படுத்தி, எல்லிஸ் ஆர். டங்கனுக்கு மாமா வேலை பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதி சாதாரண மக்கள் கூட்டம் வந்திருப்பது "ஜனரஞ்ச்சகத்துக் குதான்" என்ற ரீதியில் உள்நுழைந்தார்.

ஜவகர்லால் நேரு மொழிவாரி மாகாணத்தை பிரித்தபோது "அதிலுள்ள" பதவியின் மீது கண்வையடா தாண்டவக்கோனே என்று அப்போதே திட்டம் வகுத்தார். குடும்பத்தில் மாறி விளையாடும் செக்ஸ் பிரச்சனை, செக்சுக்கு அடிமையாகாதவர் யாரையும் அவர் தன்னருகில் வைத்துக்கொண்டது கிடையாது!.

இது "கருவின் குற்றம்தான்" !.
Quote
 
 
-3 #24 Joker Poker 2012-08-13 10:34
Veerbahu's speech:

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2012/08/13&PageLabel=5&EntityId=Ar00504&ViewMode=HTML
Quote
 
 
-3 #23 Joker 2012-08-13 10:16
Friends, please read for yourself -

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2012/08/13&PageLabel=5&EntityId=Ar00500&ViewMode=HTML
Quote
 
 
-4 #22 gopi hk 2012-08-13 09:24
orukkula silaper irupanga...avungalukku velai yennana..
Ivargalai patriyo,ivargal ain Mundam(Thalai illatha) patriyo yevanavathu,yet havathu Unmaiyai sollidakoodathu ..
udane varum paarunga kovam...
"inge irukira yellorum nallavangala?
maanam,rosam ullavangala?
tamil-ku yenna seithargal..?-nu kelvi mela kelvi keetu Arivujeevigala thangalai paavithu kolvaargal...
Yenaku Ivargal keetgindra keelvi yellam Namma Karthi,saravana n naditha 'Paruthi veeran' padathula vara tea kadai uraiyadal than ninaivukku varuthu..
Sevvalai:-Yengenne ketkuran nan sonna,paarunga ippo orula ulla KANDA KANDA NAAI yellam puthimathi solluthu "nu...
Antha mathiri than nan mele kurippita silaper..
thayavu seythu inge vanthu pinnotam poda ungalukku yevaalavu urimai ullatho athai,thavaraga payapaduthathir gal yenpathe yen veendugol..
Quote
 
 
+41 #21 போராளி 2012-08-13 03:37
சவுக்கு, பத்மன் கூற்று முற்றிலும் தவறு. அவர் இது போல் கருத்து கூறுவதற்கு காரணம் திமுகவின் திட்டமிட்ட நாடகங்களே. திமுக முதலில் மாநாடு நடத்த அனுமதி கேட்டது விழுப்புரத்தில் .அதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டு விட்டது. அதுவே பெரிய அதிர்ச்சி திமுகவுக்கு.எப்படி டெசோ மாநாடு நடத்த அதிமுக அரசு அனுமதித்தனர் அதுவும் மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து என்று புரியாமல் விழி பிதுங்கினர். அனுமதி கிடைக்காது இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் விழுப்புரத்தில் நடத்த அனுமதி கிடைத்தது திமுகவுக்கு அதிர்ச்சிதான்.அரசியல் லாபத்துக்காக இந்த மாநாட்டை திமுக நடத்துவதால்,விழ ுப்புரத்தில் தேர்வு செய்த இடம் பல ஏக்கர் என்பதால் அந்த அளவுக்கு கூட்டம் சேராது என்பதை புரிந்து கொண்ட முக ஒரு சிறிய இடத்தை அதுவும் சென்னையில் தேர்ந்தெடுத்தால ் நிச்சயம் அனுமதி கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டுதான் இதிலும் அரசியல் நடத்த, மக்கள் நெரிசல் நிறைந்த,போக்குவ ரத்துக்கு இடையூறு ஏற்பத்தும், ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில் ஒய்எம்சிஏ மைதானத்தை தேர்ந்தெடுத்தார ். அந்த மைதானம் அதிக பட்சம் 10,000 மக்கள் மட்டுமே கூடும் அளவு. திமுக சார்பில் லட்சம் மக்கள் திரள முரசொலி மற்றும் மற்ற திமுக ஆதரவு பத்திரிக்கைகளில ் விளம்பரம் செய்யப்பட்டது. போலீசிடம் கடைசி வரை உணமையான தகவல்களை திமுகவினர் தெரிவிக்கவில்லை . எவ்வளவு மக்கள் கலந்து கொள்வார்கள், எவ்வளவு வாகனம் வரும் என்று சொல்லவில்லை. கடைசியாக போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது சென்னையை தவிர எங்கு வேண்டுமானாலும் டேசொவை நடத்தி கொள்ளுங்கள் என்று நீதிமன்றத்திலே கூறிவிட்டனர். இந்த விசயத்தில் ஜெயாவை குறை கூறுவது ஏற்றுக்கொள்ளமுட ியாது. ஆனால் இதே திமுகதான் போன ஆட்சியில் இலங்கை தமிழர்கள் பற்றி பேச பல கட்டுபாடுகள், தடைகள், கைதுகள் செய்தது. அதுபோன்று இப்போது எதுவும் நடக்கவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீதிமன்றம் முதலில் கூறியது போலீசார் முடிவெடுக்கலாம் என்றுதான். அதன் பின்னர் என்னதான் நீதிமன்றத்தின் மூலம் அனுமதி கிடைத்தாலும் அதுவும் சட்டத்தின் ஆட்சிதான். அந்த சட்டத்திற்கு உட்பட்டு போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்ததால் ஜெயாவுக்குதான் நன்றி சொல்லவேண்டும். இதுவே திமுக ஆட்சியாக இருந்தால் இத்தாலி காரிக்கு கட்டுப்பட்டு சட்டம் வளைக்கப்பட்டு பல கைதுகள் அரங்கேறி இருக்கும்.
Quote
 
 
-24 #20 Pandaram 2012-08-13 02:20
உமிழ்நீர் கொண்டு காரி துப்பினாலும்,

எரிசொல்லாய் எழுதுகோல் கக்கினாலும்,

தமிழோடு தான் சேரும் தமிழ்.

(வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நூலை கலைஞர் வெளியிட்டார்.)
Quote
 
 
-8 #19 Padman 2012-08-12 22:21
சவுக்கு அவர்களே,

கருணாவை குறை சொல்லும் நாம் ஜெ அரசையும் இந்த விஷயத்தில் கடுமையாக சாட வேண்டும். டெசோ மாநாடு நோக்கம் எதுவாக இருந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுவதும், சிதம்பரத்தின் சித்து வேலையையும் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். இவர்கள் செய்யும் இந்த சேட்டைகள் அனைத்தும் இலங்கையில் எதிரொலிக்கிறது என்பது முற்றிலும் உண்மை. அனைத்தும் சிங்கள ஊடகங்களும் கருணாவை திட்டி எழுதும் அதே நேரத்தில் ஜெ, சிதம்பரம் மற்றும் சு.சாமியை பாராட்டி எழுதுகிறது. இந்த விஷயத்தில் நாம் தமிழகத்தில் நமக்குள்ளே அடித்துக் கொண்டிருப்பது சிங்களுக்குத்தா ன் அசட்டு துணிச்சலை கொடுத்துக்கொண்ட ிருக்கிறது. தயவு செய்து இலங்கை விஷயத்தில் அரசியல் பார்க்காமல் அடுத்த நிலைக்கு செல்ல என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய இங்கிருக்கும் ஊடகங்கள்தான் முயல வேண்டும். ஜெ வையும் சரி, கருணாவையும் சரி... அல்லது எதிர்க் கட்சியில் அமர்ந்திருக்கும ் புள்ளிவிவரப் புள்ளியையும் சரி... நம்புவதென்பது விழலுக்கு நீர் பாய்ச்சுவதற்கு சமம்.

கருணா ஒரு செத்த பாம்பு. இன்னும் எதற்கு அடித்ததையே அடிக்க வேண்டும். இனிமேல் தமிழினத்தலைவர் என அவர் சொல்வது வஞ்சப்புகழ்ச்சி யாகத்தான் மக்களால் பார்க்கப்படும்.
Quote
 
 
+24 #18 kumaresan123 2012-08-12 22:06
டேய் கருணாநிதி நீயும் உன் குடும்பமும் செத்தாலே ஈழம் கிடைத்த மரிதிரிதாண்டா புரிஞ்சிக்கோடா... போடா... மானமுள்ள தமிழன் என்றால் 2 குடும்பத்தோடும் தற்கொலை செய்து உன் தமிழ் பற்றை உறுதி செய்...தற்கொலை செய்ய பெங்களுருக்கு செல்வி வீட்டுக்கு போகாதே... கோபாலபுரத்திலோ அல்லது சிஐடி காலனியிலோ தற்கொலை செய்டா நாய்மவனே
Quote
 
 
+15 #17 kumaresan123 2012-08-12 22:00
தயவு செய்து கவிதை வடிவில் எதை எழுதினாலும் எனக்கு கோபம் வருகிறது.ஏனென்றால் கவிஞர் கவிதாயினி என்ற பெயரில்தான் இந்த தமிழகத்தை கேடு கெட்ட நாடாக்கிய கரும்பாம்பும் அவனது மகள் கனிந்த மாழியும் (நாய்மொழி) உள்ளனர்.
Quote
 
 
-3 #16 Mayavi 2012-08-12 21:40
Quoting V.ARUMUGAM:
My dear Savukku:
Whatever is published in Savukku, should reach all the tamils and common public.To achieve this, what sort of action is taken? Orelse as a supporter what should I do. Kindly let me know. Atleast these articles should reach the bottom level cadres of DMK, so that we may be able to bring the awareness in the cadres which is the need of the hour.

Very simple sir. Take a print out and then make a dozen xerox copies ans start distributing them. You only have to ensure that it is distributed among those who can read and understand proper Tamil.
Quote
 
 
+15 #15 Ravi 2012-08-12 21:37
தமிழகத்தின் சாபம் கருணாநிதி - தமிழ்
இனத்தின் இழிவு கருணாநிதி.

தமிழ் மொழியின் கழிவு கருணாநிதி - எம்
கலாச்சாரத்தின் சீர் அழிவு கருணாநிதி.

இவன் காலத்தின் குற்றமல்ல..இவன் கருவின்
குற்றம்தான்....
Quote
 
 
0 #14 Madurai puli 2012-08-12 19:06
Please also publish the TESO resolutions.

Some very good resolutions passed by the conference including UN monitoring and intervention.
Quote
 
 
+18 #13 ஷாலி 2012-08-12 18:32
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு என்பார்கள்..ஆனால் இங்கு ஊர்க்குருவியின் கவிதை கருணா எனும் கருநாகம் கக்கிய விஷத்தின் விபரீதங்களை விலாவரியாக விவரிக்கிறது.உண்மையை உரைக்கிறது.

தனது அரசியல் சதுரங்க சொக்கட்டான் ஆட்டத்தின் பகடையாக ஈழத்தமிழர்களை வைத்து காலம் முழுவதும் விளையாடி இறுதியில் சோனியா ராணியின் வெட்டுக்கு விட்டுக்கொடுத்த ார்.

ஆனாலும் அடங்காத அவரின் ஈழ இழவுதாகம் இன்னும் தொடர்கிறது.டெசோ என்றால் என்ன? ( TESO-Tigers Eradicating Soniya Organization) சோனியாவின் புலி அழிப்பு அணியின் தளபதியாக களமாடி வென்றார் கருணாநிதி.

இது காலத்தின் குற்றமும் அல்ல கருவின் குற்றமுமல்ல கருநாகத்திற்க்க ு பாலுட்டி சீராட்டி வளர்த்தெடுத்த பச்சை தமிழனின் குற்றம்.
Quote
 
 
+8 #12 வேந்தன் மள்ளன் 2012-08-12 18:08
கருணாநிதி தமிழன் அல்ல.... தமிழினம் காப்பதற்கு.... அவர் ஒரு வந்தேறி தெலுங்கர்... இதை அறியாதவரை கருணாநிதியை யாராலும் தமிழர் அரசியலில் இருந்து அகற்ற முடியாது... தமிழ் மண்ணை தமிழரே ஆள வேண்டும் எனும் குரல் என்று எட்டுத்திக்கும் ஒலிக்கிறதோ அன்றுதான் தமிழினத்திற்கான விடிவு... உடனே ராமதாசு, காட்டிக்கொடுத்த திருமாவளவன் என இவர்களா தமிழர்கள்..?? என்றெல்லாம் முட்டாள்கள் பிதற்றுவார்கள் ... முதலில் "தமிழ் மண்ணை தமிழரே ஆள வேண்டும்" எனும் கருத்தியலை வலிமைப்படுத்துங ்கள்.... அதன் பின் தகுதி வாய்ந்த தமிழனின் தலைமை பற்றி பேசுவோம்...காலம் தானே அப்படியொருவனை வெளிக்கொண்டு வரும்... இது உலகாண்ட பாண்டியர்கள் மீண்டு எழும் காலம்... குமரிக்கண்டத்தி ல் தொடங்கி உலகமெல்லாம் கடல்வழி சென்று அங்கெல்லாம் பாண்டிய அரசுகளை அமைத்து அங்கிருந்த மக்களையும் ஆண்ட தமிழர்கள்(பாண்ட ியர்கள் ) உலகெல்லாம் வீழ்ச்சியுற்று, கடைசியில் தொடங்கிய இடத்திற்கே வந்து வீழ்ந்து 400 ஆண்டுகள் ஆகின்றன... காலமே நம்மை வீழ்த்தியது என்றால் அது மிகையன்று... கடவுளர்களாய் வாழும் பாண்டியர்கள் மீண்டு எழ வேண்டிய சூழலை அக்காலமே கொண்டுவருகிறது.. ஆம்.. தமிழினம் காக்க மீண்டெழும் பாண்டியரின் காலம் இது...
Quote
 
 
+5 #11 Raju 2012-08-12 16:42
Dai, who are you " Tamil Nation", pl change your name to "Sonia Nation". You have no right to use "Tamil" .
Quote
 
 
-25 #10 puthiyavanraj 2012-08-12 15:58
current news :

சென்னை: டெசோ மாநாட்டுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்த தடை உத்தரவை முறியடிக்க மிக நுணுக்கமான வாதங்களை உயர்நீதிமன்றத்த ில் முன்வைத்து மிகத் திறமையாக வாதாடி தமிழக அரசின் வாதங்களை தவிடுபொடியாக்கி யுள்ளனர் திமுக சார்பில் ஆஜரான வக்கீல்கள்.

அதிமுக அரசுக்கு டெசோ மாநாட்டின் மூலம் மேலும் ஒரு மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது.
Quote
 
 
+19 #9 பா 2012-08-12 14:26
கருவின் குற்றம்!! இதற்குப் பேசாமல் முத்து வேலர் அன்றைய தினம் இரவுக் காட்சிக்குச் சென்றிருக்கலாம் .
Quote
 
 
-24 #8 Tamil Nation 2012-08-12 11:55
எனது வாழ்வுக்கும் மாநாடு கூட்ட
உனக்கு யார் அதிகாரத்தை தந்தது?
- சவ்க்க்கு உன்னகு யார் அதிகாரத்தை தந்தது? இப்படி யலுதுவதுக்கு...னே யார்? உன்னுடிஅய் பின்புலம் யன்ன?
Quote
 
 
-66 #7 Tamil Nation 2012-08-12 10:51
full of stupidity.... before you question anyone, you see your back first, then start crises others...Tell me how much you are getting from JJ everyday?
Quote
 
 
+38 #6 SUTHIRAN 2012-08-12 10:42
இந்தக் கருணா நிதி என்ற துரோகி தான் தின்னும் சோறில் உப்புப் போட்டுத் தின்னிருந்தால் கொஞ்சமாவது சூடு , சொரணை, வெட்கம் மற்றும் தான் செய்த துரோகத்திற்காக சிறிதளவேனும் குற்ற உணர்ச்சியும் இருந்திருக்கும் ! ஆனால் இவர் தான் சோற்றில் பீயைக் கலந்து அல்லவா தினமும் உண்ணுகிறார் ! எப்படி இருக்கும் சூடு சொரணை, வெட்கம் , மானம் மற்றும் குற்ற உணர்ச்சி ?
Quote
 
 
+14 #5 V.ARUMUGAM 2012-08-12 08:36
My dear Savukku:
Whatever is published in Savukku, should reach all the tamils and common public.To achieve this, what sort of action is taken? Orelse as a supporter what should I do. Kindly let me know. Atleast these articles should reach the bottom level cadres of DMK, so that we may be able to bring the awareness in the cadres which is the need of the hour.
Quote
 
 
+23 #4 Padman 2012-08-12 07:08
கண்ணீர் சிதறல்கள்!!!
Quote
 
 
+32 #3 அழகன் 2012-08-12 05:33
சவுக்கு...உன்னை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை...வாழ்த்துக்கள்...1,76,000 கோடி வாழ்த்துக்கள்...அன்பு
Quote
 
 
+28 #2 Vaigaichelvan 2012-08-12 05:09
நெற்றிப்பொட்டில ் ஆணி அடித்தது போன்ற வரிகள்.. உறைக்குமா.. உறைப்பவருக்கு....
Quote
 
 
+44 #1 Anandth 2012-08-12 02:08
ஆனாலும்
உனது இரத்தம் தமிழனுக்கு எதிரானது.
என என் அந்தர அத்மா என்றைக்கும்
அறைகூவல் வைத்துக்கொண்டேய ிருக்கிறது.
தமிழகமும் இறுதிக்காலத்தில
அதை நன்கு உணர்ந்து கொண்டது.
அதனால் பிரியாவிடையும் அளித்தது/////பிரியா விடை அல்ல , நிரந்தர விடை தான்

இதை படிக்கும் இலங்கையில் இருக்கும் தமிழர்களே , ஏதோ எங்களால் முடிந்தது இவரை மிக கேவலமாக தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினோம் .சிலர் உயிர்த்யாகம் செய்தார்கள்

இப்போது செயலில் இறங்கவேண்டியது நீங்கள் தான் .உங்கள் பெயரில் தான் நாடகம் நடத்திக்கொண்டு இருக்கிறார் .எதிரிகளை பிறகு கவனியுங்கள் முதலில் துரோகிகளுக்கு செருப்படி குடுங்க .
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 299 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5886
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week48613
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month251345
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12773464