|
டெசோவின்போது சவுக்கு வருந்தியது இலங்கைத் தமிழர் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என.

முள்ளிவாய்க்காலின்போது மட்டுமல்ல குஜராத் படுகொலைகள்போதோ அல்லது விதர்பா விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதோகூட மனிதநேயர்கள் அதிகம் செய்யமுடியவில்லை.
கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்குகிறது. கட்டிடத்தொழிலாளர்கள் விபத்துக்களில் மரணமடைகின்றனர், அடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர். பல முனைகளிலிருந்தும் அடித்தட்டுமக்கள் மீது இடையறா தாக்குதல். இந்நிலையில் ஆள்வோரின் அராஜகத்தை அல்லது அக்கறையின்மையைத் எதிர்கொள்வதெப்படி?
நிச்சயம் புரட்சி.ஒரு வழிதான். இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகவோ, ஓரிரு கட்டங்களில் வர்க்க ரீதியாகவும் கிளர்ந்தெழுந்து அக்கிரமக்காரக்காரர்களை ஆட்சியிலிருந்து அகற்ற முடிந்திருக்கிறது. ஆனால் இனி அப்படியெல்லாம் செய்வது சாத்தியமா?.
1917 புரட்சிக்குப் பிறகு முதலாளிகள் விழித்துக்கொண்டார்கள். அதனால்தான் இரண்டாம் உலகப்போருக்குப் பின் மார்ஷல் உதவித்திட்டம் என்பதெல்லாம் அமல்படுத்தப்பட்டு பலவீனமடைந்த மேற்கத்திய நாடுகளில் வர்க்கப் புரட்சி தடுக்கப்பட்டது. சீனாவில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்களெனில். சியாங்கே ஷேக் படுமுட்டாள்தனமாக நடந்துகொண்டிருக்காவிட்டால் அவர்கள் மாவோவையும் தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.
மற்றபடி ஆயுதவழியான மாற்றங்களெல்லாம் அமெரிக்க உதவியுடனேயே நடந்திருக்கிறது.
ஆள்வோர் எதிர்ப்பை பலவீனப்படுத்தப் புதிய புதிய யுக்திகளை கண்டுபிடித்துக்கொள்கின்றனர், தவிரவும் அணு ஆயுதங்கள், ராணுவம், போலீசார் என பல்வேறு வழிகளில் தங்கள் வலிமையைக் கூட்டிக்கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் நமக்கு ஓரளவேனும் நம்பிக்கையை அளிக்கக்கூடியது அராபிய வசந்தம்தான். ஓரிரு நாடுகளிலாவது அமைதிவழியில் ஆட்சி மாற்றம். ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாய் மக்கள் வாழ்நிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லையாயினும் ஓரளவேனும் சுதந்திரக்காற்றை மக்கள் சுவாசிக்கமுடிகிறது.
ஆனால் அத்தகைய மாற்றங்களுக்குக் காரணம் மிகக் கொடிய அடக்குமுறை, புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய அரசுகள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு, அப்படி ஒரு நிலை உருவாக நாம் என்ன செய்யமுடியும், செய்யவேண்டும்? எந்த ஒரு முனையிலும் மாற்றத்திற்காக சிறு பத்திரிகைகள் துண்டுப் பிரசுரங்கள், அறைக்கூட்டங்கள், ஃபேஸ் புக் உள்ளிட்ட இணைய தளங்கள் இப்படியாகப் பரப்புரை செய்து ஓரளவேனும் மக்களைத் திரட்டமுடியும் அவ்வாறு உருவாகும் ஆதரவு பெருகும்போது வேறு வழியில்லாமல் வெகு ஜன ஊடகங்களும் செய்திகள் வெளியிடத்துவங்கும்.
அன்னா ஹசாரேயின் போராட்டம் இப்படித்தான் துவங்கியது. ஆனால் பல்வேறு முரண்பாடுகள் காரணமாக அது பிசுபிசுத்துப்போயிற்று. நடுத்தரவர்க்கத்தினரின் சிந்தனையோட்டத்திற்கிசைவாக இருந்ததன் விளைவாகத்தான் அன்னாவிற்குத் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆதரவு கிடைத்தது என்பது ஓரளவு உண்மைதான். ஆயினும் ஒரு கட்டத்தில் பெருமளவு மக்கள் திரண்டிருக்காவிட்டால் தொலைக்காட்சிகள் அவர் பக்கம் திரும்பியிருக்காது. அந்த அளவாவது மக்களைத் திரட்ட என்ன வழி?
நாம் ஏற்கெனவே விவாதித்திருக்கும் கூடங்குளம் பற்றியே இப்போது மீண்டும் பேசலாம். ஓராண்டாகிவிட்டது. குறிப்பிடத் தகுந்த அளவு மக்களை அணிதிரட்டி, ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைக்கமுடிந்தது. ஃபுகுஷிமா ஒரு காரணியென்றாலும் உதயகுமார் உள்ளிட்டோரின் விடாமுயற்சியின் விளைவாய்தான் அப்படியொரு மக்கள் அலை எழும்பியது. ஆட்சியாளர்களும் சற்றுத் தடுமாறிப்போனார்கள்.

ஆனால் இன்று என்ன? தேவாலய வளாகத்திற்குள் ஒடுங்கிவிட்டது போராட்டம். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றிருக்கிறது, தீர்ப்புக்காக எல்லோரும் காத்திருக்கின்றனர். ஆனால் பலகோடி ரூபாயைக் கொட்டியிருக்கும் ஒரு திட்டத்திற்கு நீதிமன்றம்க் தடைவிதிக்கும் வாய்ப்பே இல்லை. ஏதோ மக்களின் பாதுகாப்பிற்காக சிலவற்றைச் சொல்லலாம். அவ்வளவுதான்.
கூடங்குள போராட்டத்திற்குத் திருச்சபை வட்டார ஆதரவைத் தாண்டி பெரிதாக நிறுவன ஆதரவு இல்லை. மீனவ மக்கள் திரண்டிருக்கிறார்கள். ஆனால் மீனவரல்லாதோர், கிறித்தவரல்லாதோர்? துவக்கத்தில் அப்பகுதி மக்கள் பெருமளவில் வெகுண்டெழுந்தது போலவே இருந்தது, அது ஏன் பின்னர் குறைந்தது, இழந்த ஆதரவை மீட்டெடுக்க போராட்டக்குழுவினர் என்ன செய்தனர் என்பதெல்லாம் தெளிவாக இல்லை. எப்படியும் இன்றைய சூழலில் ஏதோ ஒரு கட்டத்தில் போராட்டத்தைத் திரும்பப் பெறவேண்டிய கட்டாயம் ஏற்படத்தான் செய்யும்..
போரட்டக்குழுவினர் கூட்டணி அமைத்தனர். சிறிய சிறிய அமைப்புக்களுடனும் கைகோர்த்தனர். பல்வேறு ஆர்வலர்களை அழைத்து வந்தனர். ஆனால் இறுதியில் எஞ்சி நிற்கப்போவது என்ன? குறைந்த பட்ச சலுகைகளையாவது பெற்று, அடுத்த மின் நிலையம் அங்கில்லை யென்றோ, அமைந்தாலும் மிகக்கடுமையான பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படும் என்ற அளவிலாவது அரசிடமிருந்து வாக்குறுதி பெற்றிருந்தாலோ சரி, அந்த அளவில் வெற்றியே.. இப்போதோ நீதிமன்றத்தைமட்டுமே நம்பியிருக்கவேண்டிய சூழல்.
என்ன செய்திருக்கவேண்டுமென்பது ஒரு புறமிருக்க இனி என்ன என்பதுதான் கேள்வி. எப்போது முடித்துக்கொண்டாலும் சரி, அந்நேரத்தில். கைவிடுவதறகான சூழல் குறித்து விளக்கமாக அறிக்கையொன்று வெளியிட்டு, ஓரிருநாட்களாவது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி சிறை செல்ல முன்வரவேண்டும். இல்லை சிறைக்கஞ்சி ஒளிந்துகொண்டிருக்கின்றனர் என்று விஷமப் பிரச்சாரத்திற்கு இச்சமூகப் போராளிகள் பலியாகிவிடலாம். ஆனால் அதைவிட முக்கியம் அணு உலை எதிர்ப்பமைப்பு அனைத்து துறைகளிலும் அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து மக்களிடையே தவறுகளை அம்பலப்படுத்தும் அமைப்பாக மாறவேண்டும். மக்களைத் திரட்டி ஓராண்டு அனைவரது கவனத்தையும் திருப்பியதே மிகப்பெரும் வெற்றிதான். ஆனால் ஏதோ காரணங்களினால் முடித்துகொண்டாலும் இயக்கம் முடிந்துவிடக்கூடாது ஆளும்வர்க்கம் அஞ்சி நடுங்கும் ஒரு சவுக்காகவேண்டும்.
கருத்தியல்ரீதியாக திவாலாகிப்போன அரசியல் கட்சிகளுடன் கைகோர்க்காமல் தங்களது நேர்மையை வலியுறுத்தும் வண்ணம் தொடர்ந்து செயல்பட உதயகுமார் தலைமையிலான குழு முன்வரவேண்டும்.
தவிரவும் களத்தில் இறங்கும் எக்குழுவும், நம்பகத்தன்மைக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அன்னா ஹசாரே குழுவின் முன்னணி உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும் அவர்கள் விலகத்தயாரில்லை, அவ்ர்களை விலக்க ஹசாரேயும் தயாரில்லை, ஹசாரே மீது கூட அறக்கட்டளை நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார் எனக் கூறப்பட்டது. விளைவு மக்கள் மத்தியில் அவர்களுக்கிருந்த மதிப்பு சரிந்தது.
எவ்வித் நம்பகத்தன்மையும் இல்லாமல் கட்சிகள் அரசியல் நடத்தமுடியும். ஆறுமணி நேர உண்ணாவிரதமிருக்கலாம், பிறகு என் இதயம் உங்களுக்காகவே துடிக்கிறதெனலாம், ஊரைக்கூட்டி மாநாடு போடலாம், எல்லாவித அட்டூழியங்களையும் செய்துவிட்டு தேசபக்தர்களாக நாடகமாடலாம், வாக்குக்களையும் பெறலாம், மக்களாட்சியின் மகத்துவம் அது.
ஆனால் மிகப் பெரும் சக்திகளுடன் மோதி தங்களுக்கும் ஓர் இடத்தைப் பிடிக்க முயலும் ஆர்வலர் குழுக்கள் மிகக் கவனமாகச் செயல்படவேண்டும். சிறிய சறுக்கலென்றாலும் பெரும் பின்னடைவில் முடியக்கூடும். அந்த அளவில் கூடங்குள நண்பர்கள் தேவையில்லாமல் ஏதாவது ஓர் அம்சத்தினை பூதாகாரப்படுத்த அது தவறு என்று தெரியவரும்போது போராட்டவீச்சு குறைகிறது.
நான் இன்னொன்றையும் நினைத்து வருந்துகிறேன். அவ்வப்போது உதயகுமார் ஆள்வோரை, மிகக் கடுமையாக சாடுகிறார். இப்படிச் செய்வதால் எதிரிகள் மேலும் கோபமுறக்கூடும், பொதுமக்கள் சிலரிடையேகூட அதிருப்தி ஏற்படக்கூடும்.
இலங்கை சோகத்திற்குப் பின் முகநூலிலும் மற்ற பல தளங்களிலும் மிக ஆக்ரோஷமான சொற்கள் உதிர்க்கப்படுகின்றன., கவிஞர் தாமரை முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு சிங்களவரை சபித்து எழுதிய கவிதையை ஆயிரக்கணக்கில் அச்சடித்து நமது உணர்வை காட்டிக்கொள்ளலாம். டெசோ நாடகத்தை அரங்கேற்றிய கருணாநிதியை சகட்டுமேனிக்கு சாடி கார்ட்டூன் போடலாம், சுவரொட்டிகள் ஒட்டிக்கொள்ளலாம். செங்கொடி மூட்டிய தீயில் சிங்களப் பேரினவாதம் கருகட்டும் என முகநூலில் பக்கத்திற்குப் பக்கம் எழுதித்தள்ளலாம். ஆயின் ஆகப்போவது என்ன?
சமூகம் கொந்தளிக்கும்போது நாடி நரம்பு புடைக்கப் பேசி புரட்சியை முன்னெடுக்கலாம். மற்றவைகை சூழலில் நிதானம் தவறும்போது நண்பர்கள் பலரை இழக்கிறோம், நகைப்புக்கும் உள்ளாகிறோம், வெற்றிரைச்சலாகிறது நம் முழக்கங்கள், இறுதியில் கேட்பாரில்லாமல் போய்விடுகிறோம். எது கொந்தளிப்பு, பாரதூர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிலை நெருங்கிவிட்டதா என்பதை சரியாகக் கணிக்கும் முதிர்ச்சி சமூக மாற்றத்தினை விழைவோருக்கு மிக அவசியம்.
எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஆதரிப்போர் தவறுபுரிந்தாலும் தவறு நடந்துவிட்டது என்று ஏற்றுக்கொண்டு சரியான திசையில் செல்லவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லும் திராணி நமக்குவேண்டும்.
அப்படிச் சொல்லத் தயங்குவதால் தவறுகள் அதிகமாக, இயக்கங்களுக்கே பின்னடைவு ஏற்படலாம், ஆதரிக்கும் நாமும் நம்பகத்தன்மை இழக்கிறோம். இறுதியாக மக்களாட்சி என்பது கேலிக்கூத்தாகிவிட்ட நிலையில், ஏறத்தாழ அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆளும்வர்க்கங்களின் ஏவலாட்களாகப் போய்விட்ட நிலையில் உண்மையான சமூக மாற்றத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் ஆர்வலர்குழுக்களுக்கு மிகப்பெரும் பங்கிருக்கிறது. அவை நட்புசக்திகளைப் பெருக்கிக்கொள்ளவேண்டும், அறம் சார்ந்த நெறிகளிலிருந்தும், சமூகத்தால் நாகரிகம் எனக் கருதப்படும் சிலவகை அணுகுமுறைகளிலிருந்தும் பிறழக்கூடாது.
செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். உறங்க நமக்கு நேரமில்லை. மிகவிழிப்புடன் செயலாற்றவேண்டும்.
கானகன்.
|
Comments
தெற்கு ஆசியாவின் "தலித்திய -பெண்ணிய" அரேபிய வசந்தம்!.
/இதே தமிழ் அகதிகழும், தென்னிந்திய தாழ்த்தப்பட்ட தமிழர்கழும் அன்றும் இன்றும் கைகட்டி, கையேந்தியே தமிழ்நாட்டில் வாழ்கின்றார்கள் ...
இலங்கையிலிருந்த சாதிக்கொடுமை, பொருளாதார பின்னடைவு ஆகியவற்ரிலிருந் து மேல்நாடுகளில் விடுதலை பெற்ர தமிழ்ரகளே கண்மூடித்தனமாக புலிகளிற்கு ஆதரவளித்தார்கள் ... NOW SINGHALA BUDDHIST LIKE Dr.AMBEDKAR!.
//இந்த சாதியம் எப்படி புலிகள் வளர்ச்சி பெற உதவியது எனவும் விளக்கமாக சொல்வது அவசியம் அல்லாவா?//அஜீத்
வேலைவாய்ப்பின்ம ை, வறுமை, சாதியப்பாகுபாடு இவைகளே வட, கிழக்கு தமிழரின் மேல்நாட்டு மோகத்திற்குக் காரணம். அகதிகள் அந்தஸ்த்திற்கு இலங்கையில் இனக்கலவரம் மேல்நாட்டு தமிழர்களிற்கு அவசியமாகின்றது. இந்தநிலமையில் மேல் நாடுகளில் தமிழர் ஒற்றுமையாக ஒருகருத்துடன் செயற்பட புலிகளின் தமிழீழ போராட்டம் கை கொடுக்கின்றது.
சாதி வேறுபாடின்றி, தொழில் வாய்ப்புகளோடு மேற்கு நாடுகளின் சுதந்திரத்தை, செல்வத்தை சகல தமிழர்கழும் அனுபவித்தார்கள் . புலிகழுடன் சேர்ந்தவர்கள் யாவரும் புலிகளின் பெயரால் தங்கள் கைகளில் பணம் குவியும்போது ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் ஒற்ருமையாக சாதி வேறுபாடின்றி சுருட்டிக்கொண் டார்கள். இதனைவிட சில புலிகள் சில நாடுகளின் கையாட்களாகவும் பயங்கரவாதிகளாகவ ும் செயற்பட்டார்கள் .
இலங்கையிலிருந்த சாதிக்கொடுமை, பொருளாதார பின்னடைவு ஆகியவற்ரிலிருந் து மேல்நாடுகளில் விடுதலை பெற்ர தமிழ்ரகளே கண்மூடித்தனமாக புலிகளிற்கு ஆதரவளித்தார்கள் .
இதே தமிழ் அகதிகழும், தென்னிந்திய தாழ்த்தப்பட்ட தமிழர்கழும் அன்றும் இன்றும் கைகட்டி, கையேந்தியே தமிழ்நாட்டில் வாழ்கின்றார்கள் . மகாநாடு எடுப்பது கருணாநிதி குடும்பம். கொடி பிடிப்பது திமுக. ஊழலின் சிகரங்கள். வீதியில் இறங்குவதும் தீமூட்டி தற்கொலை செய்வதும் ஏழைகள்.
தமிழ் என்னும் மாயை தமிழ்நாட்டில், தமிழீழமென்னும் மாயை மேல்நாட்டில். பிழைப்பதோ புலிகள். அழிவததோ ஏழைகள்.- thurai on August 17, 2012 10:54 am.
ஊடகத்துறை மற்றும் சினிமாத்துறையை சார்ந்தவர்களுக் கு சவுக்கு தளத்தின் வாயிலாக ஒரு கோரிக்கை.
இன்றுவரை நீங்கள் கொடுக்கும் ஆதரவு மகத்தானது. அரசியல்வாதிகள் செய்யாததை நீங்கள் செய்து காட்டியிருக்கிற ீர்கள்.
பத்திரிக்கைகளில ் எழுதுவதற்கும், தொலைக்காட்சி நிகழ்சிகளில் தொடர்ந்து அதிக அளவில் பங்கெடுக்கவும், சினிமாவில் பணி செய்யவும் தாரளமாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் விதைக்கும் நூறு விதைகளில் சில விதைகளாவது ஆலமரம் போல் வளர்ந்து இந்த சமுகத்திற்கு நிழல்தரும். தமிழ்நாட்டுத் தமிழனைவிட திறமையானவர்கள் இலங்கை தமிழர்கள். அதனால் நீங்கள் போடும் எந்த முதலீட்டுக்கும் மோசம் வராது.
வாய்ப்புக் கொடுக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய தலையாய கடமை... பாலுமகேந்திரா போன்று வரவேண்டுமென சொல்லிக்கொடுக்க ாதீர்கள். ஏனெனில் அவர்களும் பின்பு சினிமாவோடு நின்று விடுவார்கள். அவர்கள் களம் பெரிதாக இருக்க வேண்டும்.பாலு மகேந்திரா செய்ய தவறிய கடமைகளை இன்றைய தலைமுறை செய்ய வேண்டும். எமைஏ போன்ற இளைய தலைமுறையினருக்க ு இருக்கும் இன உணர்வு மற்ற கலைஞர்களுக்கும் வர வேண்டும். இன்றைய தலைமுறைக்கு இருக்கும் காயம் ஆறாதது. அதனால் கண்டிப்பாக நாம் வெல்வோம்.
~ பத்மநாபன்
ஊர்க்குருவி மற்றும் வனவாசன் அவர்களே,
கோடி தமிழர்கள் முயன்றும் மாற்றமுடியாத இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் இலங்கை சம்பந்தப்பட்ட கொள்கையை சோ இராமசாமியோ, எம் கே நாராயணனோ நினைத்த மாத்திரத்தில் மாற்ற முடிகிறதே எப்படி? கடந்த ஒரு வாரகாலமாக இலங்கை அதிபரோடு அலறி மாளிகையிலும் தாஜ் சமுத்ராவிலும் விருந்து சாப்பிட்டுவிட்ட ு சிங்கள அரசின் முழு நேர பணியாளனாக தமிழர்களுக்கு எதிராக இந்தியாவில் பணி செய்கிறாரே தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியசாமி எப்படி? பல்லாயிரக்கணக்க ான தமிழர்கள் பலியாகிக் கொண்டிருந்தபோது எல்லாரும் விடுதலைப்புலிகள ் என்ற ரீதியில் வட இந்திய ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பியதே எப்படி? எதற்காக இலங்கை அரசிற்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் பல்லக்கு தூக்குகிறார்கள் ? சிவசங்கர் மேனன், எம்கே நாராயணன், நிருபமா ராவ் போன்றோர் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட இலங்கை அரசு அவர்களை கவனித்த விதத்தில் கவனித்ததே காரணமாக இருக்கும். அவர்களை சிங்களன் நன்கு பயன்படுத்திக்கொ ண்டான் என்பதே உண்மை.
//தொடர்ச்சி//
அதற்குத்தான் சொல்கிறேன். உலகளவில் பரவிக்கிடக்கும் தமிழர்களை இணைக்கும் பாலத்தை தமிழக அரசின் வாயிலாக அமைக்க வேண்டும். வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இதை முன்னெடுக்க முடியாது. அப்படி செய்தால் அது விடுதலைப்புலிகள ின் முயற்சியாகத்தான ் உலகம் விமர்சிக்கும். இப்போதிருக்கும் குழப்பத்திற்கு மேலாக வேறு எந்த குழப்பத்தையும் இனி யாராலும் செய்ய முடியாது. உலக அளவில் தமிழன் தன்னுடைய அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறான ் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். மலேசியா, தென்னாப்பரிக்கா மற்றும் மொரிஷியசிலிருக் கும் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெறும் தோற்றத்தில் மட்டுமே வைத்திருக்கிறார ்கள். இது புலம்பெயர்ந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் பொருந்தும். ஜூவிஷ் மற்றும் சீக்கிய மக்களிடம் இருக்கும் ஒற்றுமை தமிழர்களிடத்தில ் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தெலுங்கு பேசும் மக்களிடத்திலிரு க்கும் ஒற்றுமை தமிழர்களிடத்தில ் இல்லை.
அடுத்ததாக, தமிழக அமைச்சரவையில் இதற்கான இரு கேபினெட் இலாகா ஒத்துக்கச்சொல்ல ி கேட்பது பற்றி. நான் கேட்பதாலோ அல்லது சவுக்கு கேட்பதாலோ இது நடந்துவிடப்போவத ில்லை. இது வினையாக உங்களுக்குத் தெரிந்தாலும் அது பற்றி சாதக பாதக அம்சங்களை ஆராயலாமே? எதற்க்காக நாம் ஆரப்பத்திலேயே எதிர்ப்பு சொல்ல வேண்டும்? பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுக்க ும் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில ் உலக அளவில் தமிழர்களின் இப்போதைய நிலை பற்றி எந்த ஒரு செய்தியையும் பகிர்ந்துகொள்வத ில்லை. அப்புறம் எப்படி மாற்றம் வரும்? உலகளவில் ஒரு கருத்தரங்கம் நடத்த கோடிக்கணக்கில் செலவாகும். சவுக்கோ, வைக்கோவோ இதை செய்ய முடியாது? அரசு மனதுவைத்தால் முடியும். இலங்கைத்தமிழர்க ள் என்றாலே அவர்கள் விடுதலைப்புலிகள ் என்ற எண்ணம் மாறவேண்டும்.
வாஷிங்டன் போஸ்டிலோ அல்லது நியார்க் டைம்சிலோ ஏதாவது இலங்கைக்கு எதிராக செய்தி வந்தால் அந்த எழுத்தாளர்களுக் கு எதிராக சிங்களவர்கள் எழுதும் கருத்தைபார்த்தா ல் சிங்களன் எந்த அளவிற்கு உலகளவில் விழிப்பாக இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
~ பத்மநாபன்
நியமிக்களாம் ஆனால் அது ஈழத்துக்கு உதவும் என்பதைவிட உபத்திரவிக்கும் என்றே பத்மநாபன் அவர்களின் மேலான கவனத்திற்கு பணிவுடன் வைக்கிறேன்.
ஈழத்தமிழர்களுக் கு உதவவேண்டும் என்ற கொள்கையுடைய கட்சி ஒன்று தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மேற்சொன்ன துறை சார்ந்து வேண்டுமானால் ஒரு அதிகார சபையை நியமிக்க சிந்திக்கலாம்! ?, . முற்று முழு இலாபம் கருதி செயற்படும் எதிர்மறையான கொள்கையுடைய திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியில் அந்த துறைக்கு ஒரு அமைச்சரை நியமித்தால் வேறு வினையே தேவையில்லை. ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை இந்திய கட்சிகள் ஊடகங்கள் எந்தளவு ஆழமாக புரிந்திருக்கின ்றன என்பதும் கேள்விக்குறியான து. உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன் 13வது திருத்த சட்டமூலம் என்பதை கருணாநிதியின் மகள் கனிமொழி 30 வது சட்டமூலம் என்று கூரியிருந்தார். டெசோ அரங்கின்போது ஈழம் என்றால் இலங்கை என்றும் நிருபர்களுக்கு விளக்கியிருந்தா ர், சென்ற மாதம் குமுதத்தில் வெளிவந்த கட்டுரையில் கதிர்காமம் முருகன் கோவில் கண்டியில் இருப்பதாக குறிப்பிடப்பட்ட ிருந்தது. கண்டி நகரம் இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கும் ஒரு ஊர், கதிர்காமம் கண்டியிலிருந்து 400 கி மீ தாண்டி இலங்கையின் தென் பகுதியில் வேறு ஒரு பிரதேசத்தில் அமைந்திருக்கும் இடம். "வட்டக்கச்சி" என்ற இடம் கிளிநொட்டியில் உள்ள ஒரு சிற்றூர் அதையும் குமுதம் யாழ்ப்பாணத்துடன ் பிழையான வகையில் தொடுத்திருந்தது .
உணர்வு மயமாக முள்ளிவாய்க்கால ் செய்தியையும் கடைசியாக நடந்த யுத்தத்தையும் வைத்து ஈழ பிரிவினை வரலாற்றை கணக்குப்போடமுடி யாது. நிறைய வேதனையான நீண்ட கிளை வரலாறுகள் ஈழ மக்களுக்கு உண்டு, அவை நெடுமாறன், வைகோ, சீமான் போன்றோரும் அறிந்திருக்க நியாயமில்லை. எனவே அங்கே அரசியலை நுழைக்காமல் தலையீடற்ற எந்த பிரதி இலாபமுமில்லாத ஆதரவை தமிழக ஆரசு மற்றும் கட்சிகள் வழங்கினாலே போதும் மீதியை புலம்பெயர் தமிழர்களும் ஈழ மக்களும் பார்த்துக்கொள்ள ுவார்கள். ஈழ மக்கள் எதிர்பார்ப்பதும ் அதைத்தான். http://pagalavantamil.blogspot.com/2010/02/blog-post_3779.html
ஆனால் வே.பிரபாகரன் கேஸ், அமெரிக்க,ஐரோப்ப ிய ஒழுங்கமைப்பு சார்பாக, 1990 களுக்குப்பிறகு ஏற்ப்பட்ட பலவீனமான சூழலில், அதை நியாயப்படுத்தி தெற்காசியாவில், தங்களின் உள்வீட்டு ஸ்சூஃப்ஃப்ளே லை கூறாமல், ஆயுதப்போராட்டமா க அடாவடி செய்தது(98% தமிழர்கள் உள்ள இலங்கைவ்டக்கு, கிழக்கில் சிங்களவர்களால் என்னப்பிரச்சனை?).
இதை அதே ஸ்சூஃப்ஃப்ளே லில் ஈடுப்பட்ட "சிங்கள காடையர்கள்", உலக சுழலை பயன்படுத்தி மிகப்பெரிய "பயங்கரவாதப் போராட்டமாக" தங்கள்சார்பாக எதிர்த்தரப்பினை வெட்டியெறிந்து விட்டனர்.
இது ஒரு "கேன்சரை" வெட்டிஎரிந்ததற் கு சமமாக கூறப்பட்டாலும், இதில் பல்வேறு வகையில் வன்முறையாக தொழிற்பட்ட, "இலங்கை தமிழ், சிங்கள", "உளவியல்களால்" நியாயப்படுத்த முடியவில்லை. இதை நியாயப்படுத்துவ தற்கு, அநியாயம் இந்தியாவிலிருந் து, குறிப்பாக தமிழகத்திலிருந் து வந்ததாக கூற எத்தனிக்கிறது.
இலங்கை தமிழ்ப்பகுதியிள ிருந்து வெளியேறாத, மற்றும் வன்முறையில் அரசியல் ரீதியாக அல்லாமல் ஸூற்வீவாள் ரீதியாக ஈடுப்பட்ட ஜாதிகளான நளவர், பள்ளர், பறையர், பரவா போன்றவர்கள் டாக்டர் அம்பேத்கார் போன்று "சிங்கள் புத்தமதத்திற்கு " இழுக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்படுகிறார ்கள். இது இந்தியாவிலுள்ள "தலித்திய - பெண்ணிய" அமைப்புகளுடன் இணையும் போது ஒருவித "அரேபிய வசந்தம்" போன்று தங்களை நியாயப்படுத்தலா ம் என்று "இலங்கையர்கள்" எண்ணுகின்றனர் !.
இன உணர்வுடன் போராட எல்லோரும் ஓரளவுக்கு முன்வருகிறார்கள ் ஆனால் யாரும் ஜெயிலுக்கு போக தயாரில்லை.
இன உணர்வுக்காக போராடிய நெல்சன் மண்டேலவைபோல் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். காந்தி, என் கொள்கைக்கு பொருத்தம் இல்லாதவர்தான் ஆனால் அவரின் போராடும் வலிமை எனக்கு பிடித்த ஒன்று...நம் இன உணர்வு முழுமையாக பல வருடம் சிறைவாசம் அனுபவித்தாலும் பின்வாங்காமல் சரியான தலைமையுடன் போராடினால் வெற்றி நிச்சயம்தான் தோழர்...அதற்கு உங்களை போன்றோரின் தலைமைதான் தேவை...
கொடிகாத்த குமரன் போலிஸ் அடித்தும் கொடியை கிழே போடாமல் நாட்டிற்காக உயிர் துறந்தான் என்ற பல இந்திய் போராட்ட கதைகள் எல்லாம் படித்த இளஞ்சர்கள் ஏன் இப்படி களைந்து ஓடினார்கள்..அப்படி என்ன போலீஸ்காரன் தூக்கு கயிறைய நம் கழுத்தில் மாட்டிட போறான். போராடும் முடிவு என்ற ஒன்றை எடுத்த பிறகு என்ன ஆனாலும் பின்வாங்காமல் போராடிதான் பார்க்கவேண்டும் ...இது ஒரு மெல்ல பற்றும் தீப்பொறி.
I have one suggestion,
1. Nuclear power is more dangerous. Therefore we will campaign for ban of nuclear physics subjects in tamilnadu. Nobody from tamilnadu will study physics, chemistry and maths.
2. The power generation from coal also involves more pollution. Any way, at one point of time we are going to talk against this also. Therefore no body from tamilnadu should involve in coal mining activities.
3. The other option is water power generation. Tamilnadu, on its own has very negligible amount of chances to enhance this opportunity. Therefore it is waste of time to get involve in this field.
4. The power generation from solar field is a good option.But the intensity of power will not be as good as that of the other three.
5. Using petroleum products also results in pollution of the atmosphere.
Therefore the ultimate solution is:
We will stop using electricity.
Scientists like you(?) know every thing. No need to tell about all these things. Are you planning to go in this direction?
You are correctly said it. I am a ardent supporter of Anna hazare. Bab dev is number on corrupted poli samiyar like Our Corrupted Jaya and Karuna and co. What to do it is our fate we are ruled by corrupted Jayalalitha. Please write about corrupted koliveri Jayalalitha. I pray to almighty to give YOU strong heart and protection from Corrupted Jayalalitha and Thirudan Karunanithi and Co.
ஒரு பண்பட்ட சமுகமாக இருப்பின் இனியும் நாம் பழைய பஞ்சாங்கத்தை படிப்பதை நிறுத்திவிட்டு இனி என்ன செய்ய வேண்டுமென திட்டமிடுதலே சிறப்பான அணுகுமுறையாகும் .
புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில ் அறிவும், போராட துணிவும் இன்னும் இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ தமிழகமே தமிழர்களின் முகமாக மாறிவிட்டது. இனி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழகத்தில் அரசியல், கலை மற்றும் இலக்கிய ரீதியாக ஒருங்கிணைத்து அவர்களுக்கு நாம் இங்கு களமமைத்து கொடுத்தாலே போதும் மீதி வேலையை அவர்கள் பார்த்துக்கொள்வ ார்கள்.
இனி இலங்கை அரசும், இந்திய அரசும் பல விதங்களில் முறுக்கிக்கொண்ட ு நிற்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி உலக அளவில் சிதறி கிடக்கும் சிங்கபூர், மலேசியா, பர்மா, தென் ஆப்ரிக்கா, மொரிஷியஸ், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து செயல்பட தனியாக ஒரு அமைச்சரை அமைச்சரவையில் தமிழக அரசு சேர்க்க வேண்டும். இதன் வழியாக எங்கு தமிழர்கள் எங்கு பாதிப்படைந்தாலு ம் நம்மால் அரசு சார்பாக குரல் கொடுக்க முடியும். குறைந்தபட்சம் தமிழர்கள் வாழும் நாடுகளாவது தமிழர்களுகு எதிரான கொடுமைகளை தடுக்க முன்வர வழிவகை செய்யலாம்.
இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்க ஆதரிக்க என்ன காரணம் என்பதை உலக தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இயக்கத்திற்கு நிதி கொடுத்துவிட்டோம ் இனி தலைவர் பார்த்துக்கொள்வ ார் என அவர்மீது அளவிற்கதிகமான சுமையை ஏற்றியது நம்மக்களே. முள்ளிவாய்க்காள ுக்கு பிறகு ஏற்பட்ட உலக தமிழர்களின் எழுற்சி குறையக்கூடாது. இனியும் கருணாநிதி உதவிசெய்வார்... ஜெ உதவுவார்... என நாம் இருந்துவிடக்கூட ாது. இப்போதைக்கு தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஊடகங்களை நன்கு பயன்படுத்தி அணையாத வேள்வியை உருவாக்குவது தலையாய பணிகளில் ஒன்று. நீர்த்துபோகாத எந்த போராட்டமும் ஒருநாள் வெற்றியை கண்டிப்பாக ருசிக்கும்.
~ பத்மநாபன்
RSS feed for comments to this post